ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -13-

13-அத்யாயம் முதல் 16 அத்யாயம் வரை உள்ள நான்கு அத்தியாயங்கள் தேவதை உபாஸன காண்டம் -என்றும்
ஸங்கர்ஷண காண்டம் என்றும் சொல்வார்கள்
இந்த நான்கும் எம்பெருமானார் காலத்திலேயே அகப்பட வில்லை என்று தெரிகிறது
தத்வடீ கையில் தேவதா காண்டம் அகப்படவில்லை -அதன் விஷயங்கள் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது –
நாநா வா தேவதா -என்று அந்த காண்டத்தில் ஸூ த்ரம் இருப்பதாக பிறர் பாஷ்யத்தில் இருந்து தெரிகிறது –

அந்த தேவதா உபாஸன காண்ட விவரங்கள் தெரியாததாலும்
ஈஸ்வர ஸரீரமான மற்ற தேவதைகளை உபாஸிக்க
முமுஷுக்களுக்கு அதிகாரம் இல்லை யாதலாலும் –
ஆச்சார்யன் என்னும் தேவதையையே உபாசிக்கும் படி
தேவம் இவ ஆச்சார்யம் உபாஸீத –
ஆச்சார்ய தேவோ பவ –
யஸ்ய தேவா பர பக்தி யதா தேவ ததா குரவ்-தஸ்யை தே கதி தா ஹ்யர்த்தா ப்ரகாசந்தே மஹாத்மான -என்றும் –
ஆசார்யாதிஹ தேவதாம் ஸமதி காமன்யாம் ந மன்யமஹே-என்று
ஈஸ்வரனைப் போலே ஆச்சார்ய தேவதையும் உபாஸிப்பது முமுஸுக்களின் கடைமை யாகையாலும்
இந்த ஸ்துதி முக்கியமான ஆச்சார்ய தேவதை ஸ்துதி யாகையாலும்
13 -முதல் -16 வரை நான்கு ஸ்லோகங்களால் எம்பெருமானார் உபாசனையாகவும்

17 வது ஸ்லோகத்தால் பெரிய பெருமாள் இடம் வேதாந்தங்களில் சொல்லப்பட்ட சகல குணங்களின்
சமன்வயத்தைப் பேசி
சாரீரக சமன்வய அத்தியாயத்தை ஸூ சிப்பித்து

18 -அத்தியாயத்தில் -லோக வத்து லீலா கைவல்யம் என்று தொடங்கி இரண்டாவது அத்தியாயத்தில்
காட்டிய பகவானுடைய தயையால் தான் தன் பாபங்கள் க்ஷமிக்கப் பட அவை நசிக்க வேணும் என்றும்
எம்பெருமானாருடைய பிரார்த்தனைக்கு இணங்கி பெரிய பெருமாள் நம்மை நம்முடைய பாபங்களில் இருந்து
மோக்ஷம் என்னும் உத்தமமான க்ஷேமத்தை அளிப்பார் ஆகையால்
அவர் தயைக்கும் பெருமாள் தயைக்கும் உபாய பாவத்தில் விரோதம் இல்லை என்று அவிரோதத்தையும்

19 வது ஸ்லோகத்தில் எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயிக்க ஸ்தானம்
தம் ஆச்சார்யரான ஸ்ரீ சைலேசருடைய தயையே என்றும்

இருபதில் தம்மையும் தமது சரணாகதி ஸ்துதியையும் எம்பெருமானார் அங்கீ கரித்து
அருள வேணும் என்றும் பலத்தைப் பிரார்த்தித்து அந்த பலத்தோடே
ஸ்துதியைத் தலைக் கட்டுகிறார் –

தாபத் த்ரயீ ஜனித துக்க நிபாதி நோபி-
தேஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தன்னிவ்ருத்தௌ
ஏகச்ய காரண மஹோ மம பாவமேவ நாத –
த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –13-

தாபத் த்ரயீ ஜனித துக்க நிபாதி நோபி-ஆத்யாத்மிகம் ஆதி தைவிகம் ஆதி பவ்திகம் -ஆகிய மூன்று வித
தாபங்களால் உண்டாகும் துக்கத்தில் விழுந்து வருந்தினாலும்
தேஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தன்னிவ்ருத்தௌ-எனக்கு சரீரம் இருப்பதிலேயே ஆசை –
அதை விடுவதில் ஆசை இல்லை
ஏகச்ய காரண மஹோ மம பாவமேவ நாத -ஐயோ இதற்குக் ஹேது என் பாபமே தான்
த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –என் நாதனே -யதிராஜரே – தேவரீரே அந்தப் பாபத்தை
விரைவில் போக்கி அருள வேணும் –

தாபத் த்ரயீ ஜனித துக்க நிபாதி நோபி-மம –
மூன்றுவித தாபங்களால் உண்டாகும் துக்கங்களில் தள்ளப்பட்டு அதில் அழுந்தி இருந்தாலும்
தாபத்ரயா துரை ரம்ருவத்வாய ச ஏவ ஜிஜ் ஞாஸ்ய-
மூன்று வித தாபங்களால் வருந்தும் ஆதுர்களால் மோக்ஷத்திற்காக ஸர்வேஸ்வரனான பகவானே
விரும்பி விசாரித்து அறிந்து உபாஸிக்கத் தக்கவன் -ஸ்ரீ பாஷ்ய ஆரம்ப ஸ்ரீ ஸூக்தியை இங்கே நினைக்கிறது ஸ்பஷ்டம்
துக்கம் கழிய வேண்டும் என்கிற ஆசை ப்ரஹ்ம ஜிஜ்ஞாசையில் கொண்டு போய் விடும் –
துக்க த்ரயா பிகாதாத் ஜிஜ்ஞாஸா -என்பர் –

தேஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தன்னிவ்ருத்தௌ
தேகம் இருக்க வேண்டும் என்னும் ஆசையில் குறை இல்லை -துக்கம் மட்டும் தொலைந்து தீர வேண்டும் –
ஆனாலும் தேகம் இருக்க வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது -தேகம் தொலைவதில் ஆசை இல்லை
தேகம் தொலைந்தால் அல்லது துக்கம் தொலையாதே என்றாய் நன்றாக அனுபவ பூர்வகமாக உணரவில்லை –
மகவன் மர்த்யம் வா இதம் சரீரம் ம்ருத்யு நைவ ததாத்தம் நஹ வை ச ஸரீரஸ்ய சத ப்ரிய அப்ரிய
யோரபஹதி ரஸ்தி-என்று பிரஜாபதி இந்திரனுக்கு உபதேசித்தத்தை நினைக்கிறார்
பிராகிருத தேகம் தானே சர்வ துக்கங்களுக்கு எல்லாம் மூலம் –
தேகமும் வேண்டும் துக்கமும் கூடாது என்று இரண்டையும் கொள்ளுவது எப்படிக் கூடும்

ஏகச்ய
இந்தத் துக்கம் தொலைய வேணும்
ஆனாலும் தேகம் மட்டும் இருக்க வேணும் என்கிற இந்த ஆசைக்கு

காரண மஹோ மம பாவமேவ
ஐயோ என் பாவமே தான் ஹேது

நாத -த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –
யதிராஜனே என் தெய்வமே-தேவரீர் தான் இத்தைப் போக்கி அருள வேணும்
என் பாபத்தைப் போக்கி எனக்குத் தேகத்திலும் வைராக்யம் உண்டாக்கி அருளி அனுக்ரஹிக்க வேணும் –
குரு சரணத்தின் சகாயம் இல்லாமல் இந்திரியங்களை ஜெயிக்க முடியாது என்று ஸ்ரீ கீதை சொல்லுமே
விஜித ஹ்ருஷீக வாஜிபிர தாந்த மனஸ் துரகம் -என்று உள்ளதே –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: