ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -12-

பன்னிரண்டாம் அத்யாயம் பிரசங்கம் என்பதைப் பற்றியதே
இரண்டு காரியங்களுக்கும் உபயோகப்படுவதை உத்தேசித்து ஒரே தடவை தந்திரமாக அனுஷ்ட்டிக்கும் கர்மம்
இரண்டுக்கும் உபயோகப்பட்டு உபகரிக்கிறது என்று முன் அத்தியாயத்தில் கூறப் பட்டது –
இரண்டு கர்மங்களையும் உத்தேசிக்காமல் ஒரே கர்மத்தை மட்டும் உத்தேசித்துச் செய்ய அதே இடத்தில்
செய்யப்படும் மற்ற ஒரு கர்மத்துக்கும் இதற்கு என்று எண்ணிச் செய்யாமல் போனாலும்-
தானாக -ப்ராசங்கிகமாக உபயோகப்படுவதை ப்ரஸங்கம் என்பர் –

இரண்டையும் உத்தேசித்து ஒரே தடவை அனுஷ்டிப்பது தந்திரம்
ஒன்றையே உத்தேசித்துச் செய்து மற்ற ஒன்றுக்கு தானாகவே -அத்தை உத்தேசித்து
செய்யப்படா விட்டாலும் -உபயோகப்படுவது பிரசங்கம்
வீட்டு வாசல் திண்ணையில் வீட்டுத் திண்ணையின் பிரகாசத்துக்காக வைக்கப்பட்ட தீபம்
வீதியில் போவார்களுக்கும் வெளிச்சம் தருவது போல் –
ஸோம யாகத்துக்கு உத்தேசமாக அமைத்த வேதி இஷ்டி ஹவிஸ்ஸுக்களுக்கும் வேதியாகும்

பெருமாள் எங்கும் ஜ்யோதிஸ்ஸாக வியாபித்து இருக்கிறார் -உள்ளும் வெளியிலும் வியாபித்து இருக்கிறார்
நாம் மனம் கண் கொண்டு பொருள்களைப் பார்க்கிறோம் –
நாம் பார்க்கும் பொருள்களுக்கும் உள்ளும் புறமும் பெருமாள் வியாபித்து உள்ளார்
பெருமாளைப் பார்க்க வேண்டும் என்ற உத்தேச்யம் இல்லா விட்டாலும் மற்றப் பொருள்களைப் பார்க்கையில்
தாமாகவே ஜ்வலிக்கும் பெருமாளையும் ப்ராசங்கிகமாக வாவது பாவியேன் பார்க்கக் கூடாதோ
ப்ராசங்கிகமாகக் கூடப் பார்க்காமல் சார தமமான அவரை நீக்கி அசார தமமான மற்றப் பொருள்களையே
பார்க்கிறேனே என்று இங்கே பிரசங்க அத்யாய ஸூ ஸனத்தில் திரு உள்ளம்
எங்கும் பிரகாசிக்கும் பெருமாளைப் பார்க்காமல் இருப்பது என்பது தான் கடினம் -பார்ப்பது மிகவும் எளிது –
வேணும் என்று அவரைப் பார்க்கக் கூடாது என்று கண்ணை மூடிக் கொண்டு குருடரைப் போல் இருந்தால் ஒழிய
அவரைக் காணாமல் இருக்க முடியாது

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் -எண்ணினும் வரும் -என் இனி வேண்டுவம் –
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் விரியும் எம்பிரானையே -என்ற பாசுரம் திரு உள்ளத்தில் ஓடுகிறது
கண்ணுள்ளே நிற்பதைக் காட்டுவது அந்தர் அதிகரண விஷய வாக்கியம் –

அந்தர் ஆதித்யனிலும் அந்தஸ் ஸஷுஸ்ஸிலும் இருக்கிற அந்த புருஷன் மண் முதலிய
பிரபஞ்சமாக விரிந்து எங்கும் -பிரகாசிப்பவன்
அந்தர் பஹிச் ச தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்த்தித -என்ற ஸ்ருதியையும் நினைத்து
அந்தர் பஹி –என்று தொடங்கி
தத் சர்வம் என்பதை
சகல வஸ்து ஷூ-என்றும்
ஸ்த்தித -என்ற ஸ்ருதி பதத்தை
சந்தம் என்றும் வைக்கிறார் –

மன்மதனுக்கும் மன்மதனான அழகுக் கடலான பெருமாள் -சேதனன் -எப்பொழுதாவது
எந்த வியாஜத்தால் ஆவது -என்னைக் காண ஆசைப்படானோ
துளி ஆசைப்பட்டால் உடனே காட்சி தருவோம் என்று மிக்க ஆசையோடு காத்துக் கொண்டு இருக்கிறான் –
தித்ருஷா த்ருஸ்யத்வாத் –என்று ரத்னாவளி
எண்ணினும் வரும் -என்ற ஸுவ்லப்ய மிகுதியில் நான் எண்ண வேணுமே
தித்ருஷா -காண ஆசை -துளி இருந்தால் எதிரிலே புலப்பட சஜ்ஜமே
எங்கும் உளன் கண்ணன் என்று அல்லவோ அவா உள்ள சிசுவான ப்ரஹ்லாதன் உறுதிச் சொல்
ஹரி ஸர்வத்ர த்ருஸ்யதே -என்ற
அவர் ப்ரதஜ்ஜை சத்யம் என்று காட்ட வல்லவோ ஸ்தம்பத்தைப் பிளந்து கொண்டு வெளி வந்து
பெருமாள் எங்கும் பிரகாசிக்கிறார் –
நான் தான் குருடன்
நான் தான் காண நசை அற்றவன்
அல்ப ரூபங்களில் காமத்தால் மன்மத வசமாகி -அழகுக் கடலை -ஸாஷாத் மன்மதனைக் கண் எடுத்தும்
பாராமல் இருக்கிறேன் -என்று ஆத்ம நிந்தை –

அந்தர் பஹி சகல வஸ்து ஷூ சந்தம் ஈசம் –
அந்த புரஸ் ஸ்திதமிவ அஹம் அவீஷமாணா
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் சததம் பவாமி –
ஹந்த த்வத் அக்ர கமனச்ய யதீந்திர நார்ஹ–12-

சகல வஸ்து ஷூ-எல்லாப் பொருள்களிலும்
அந்தர் -உள்ளேயும்
பஹி -வெளியிலும்
சந்தம் -இருக்கிற
ஈசம் -ஈஸ்வரனை
அந்த -குருடன்
புரஸ் ஸ்திதமிவ -எதிரே நிற்பவனை -பார்க்காதது போல்
அஹம் அவீஷமாணா-நான் பார்க்காமல்
சததம்-எப்பொழுதும்
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் -மன்மதனுக்கு வசப்பட்ட மனம் உடையவனாகவே
பவாமி -இருக்கிறேன்
யதீந்திர-மனத்தை அடக்கிய யதிகளுக்கு அக்ர கண்யரே
ஹந்த -ஐயோ
த்வத் அக்ர கமனச்ய -உமது எதிரில் செல்ல
அஹம் -நான்
நார்ஹ-யோக்யன் அல்லன்

சகல வஸ்து ஷூ
எல்லா வஸ்துக்களிலும்
நிர் அவயவங்களுக்குள் அந்தர் வியாப்தி இல்லை என்று சொல்லுவரேல் அவர்களோடு கலகம் செய்யோம் –
ஸகல என்பது அவயவம் உள்ள என்பதையும் சொல்லும் –
நிர் அவயவப் பொருள் நிஷ் கலம்
நிர் அவயவத்தில் அந்தர் வியாப்தி இருந்தாலும் இல்லாது இருந்தாலும் அதனால் என்ன –
ஒருவருக்கும் உத்வேகம் வேண்டா –

அந்தர் பஹி
உள்ளும் வெளியிலும்
நெஞ்சத்தினுள் கோயில் கொண்டவனை மனத்தினால் தரிசிக்கலாம்
மனஸா து விசுத்தேந
த்ருச்யதே த்வக்ர்யயா புத்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி
உள்ளே வித்யுல்லேகேவ பாஸ்வரா -என்று மின்னும் சர்வ சரீரியான பரமாத்மா
பிரதான பிரதிதந்தரமாக யதிராஜன் பிரகாசப்படுத்திய சர்வ சரீரத்வத்தை இங்கே
பன்னிரண்டு அத்தியாயங்கள் முடிக்கையில் ஸூ சிக்கிறார் –
யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு அநூத்தமே ஷு உத்தமே ஷு வா -என்றபடி
ஜ்வலிக்கும் விஸ்வ வியாப்த தேஜஸ்ஸூ –

சகல வஸ்து ஷூ
எல்லா வஸ்துக்களிலும்
அவன் உள்ளே உயிராய் இருந்து தான் எப்பொருளும் வஸ்து வாகும்-உளதாகும்
ப்ரஹ்மாத் மகமாய் இல்லா விடில் வஸ்து வாகாது
அவன் ஆத்மாவாய் உள்ளே இருந்து முழுவதும் வியாபித்து அதை உளதாக்க வேணும்
இதை ஸூ சிக்கவே வஸ்து என்கிறார் –

சந்தம்
ஸ்வதஸ் ஸத் -அந்நயாதீன சத்தை யுடையது -அதுவே –
சந் மூலா -என்று ஸத் வித்யை –
எல்லாப் பொருள்களுக்கும் உயிராய் மூலமாய் ஆயதனமாய் ப்ரதிஷ்டையாய் –
ஓதப்பட்ட ஸத் என்ற உபநிஷத் ப்ரஸித்தப் பொருள் –
ஸஹைவ சந்தம் ந விஜா நந்தி தேவா —கூடவே அருகில் -எதிரில் -இருப்பதை
தேவர்கள் -இந்திரியங்கள் -அறிகிறது இல்லை –

ஈசம் –
ஸமான வ்ருஷே புருஷோ நிமக்ந அநீசயா சோசதி முஹ்யமான -ஜூஷ்டம் யதா
பஸ்யத் யன்ய மீசம் -என்ற
ஸ்ருதியில் ஓதப்பட்ட நெஞ்சில் உள்ள ஈஸ்வரப் பொருள்
அந்த ஸ்ருதியை திரு உள்ளத்தில் கொண்டு இங்கு ஈசம் என்கிறார் –
நாம் ஈஸ்வர தரிசனத்துக்கு ப்ரஹ்ம புரத்தில் அவர் ராஜ தானியில் அவர்
அரண்மனைக்குப் போக வேண்டி இருக்கும் –
அவர் நம் நெஞ்சுக்குள்ளே கோயில் கொண்டுள்ளார்
ஸ்ரீ சங்கரர் ஹ்ருதய ஆலயர் -என்று ஹார்த்தப் பெருமாளை வர்ணிக்கிறார் –
என் நெஞ்சம் கோயில் கொண்டான் – என்று அவர் அனுபவம்
வட தளமும் வைகுந்தமும் மதிள் த்வராபதியும் இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால்
இட வகை கொண்டனையே -என்றும்
பனிக்கடலுள் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக் கடலுள்
வாழ வல்ல மாய மணாளா நம்பி -என்றும்
அன்றோ விஷ்ணுவையே நெஞ்சில் கொண்ட விஷ்ணு சித்தர் முதலிய அபி யுக்தர்களின்
ஹார்த்த அனுபவ ரஸம் இருக்கும் படி –

புரஸ் ஸ்திதமிவ சந்தம்
எதிரே நிற்பது போல் நிறைந்து நிற்கும் பொருள்

அந்தஸ் அஹம் அவீஷமாணா
கண் இல்லாதவன் -பிறவிக் குருடன் -கண்ணுக்கு எதிரே உள்ளதையும் பார்க்க மாட்டான் –
அவா இருந்தால் பெருமாள் சஷுர் விஷயம் ஆவார் –
ஆசை அற்று இருப்பது சூன்யத் தன்மை
அத்யயநம் ஆகிற சஷுஸ்ஸால் பார்க்கலாம் -மாம்சக் கண்ணால் பார்க்க முடியாது –
ந மாம்ஸ சஷுரபி வீக்ஷதே தம் -என்ற ஸ்ருதியில் உள்ள
வீக்ஷ -தாதுவை பிரயோகிக்கிறார் –

கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ்
வலுவில் நெஞ்சில் நிற்கும் மன்மத மன்மதனான பெருமாளைக் கண் எடுத்துக் பார்க்காமல்
நெஞ்சில் ஈசனாக வைத்து அவன் வசமாக நெஞ்சம் இருக்கும் போது ஈசன் அணுகைக்கு இடம் ஏது
த்வை ராஜ்ஜியம் உண்டோ –

சததம் பவாமி –
எக்காலத்திலும் மன்மதன் ராஜ்யத்துக்கு ஒய்வு இல்லை
அவனே என் ஹ்ருதயத்திலே அந்தர்யாமியான ஈசன் –

ஹந்த
இது கொடுமை -அநியாயம்

த்வத் அக்ர கமனச்ய
தேவரீர் திரு வீதி எழுந்து அருளும் உத்ஸவங்களிலும் -அத்யாபக கோஷ்டிகளிலும் –
யதீஸ்வரர் ஸம்ஸ்ரிதன் போல் முன் செல்ல –

யதீந்திர
இந்திரிய ஜெயம் உள்ள ஸம் யதிகளுக்குள் முதல்வரே –

நார்ஹ-
யோக்யன் அல்லன்
மத நகத நைர் ந க்லிஸ் யந்தே யதீஸ்வர ஸம்ஸ்ரயா -என்பர்
ஜைமினி -12 அத்யாயம் கடைசி அதிகரணத்தில்
ரித்விக்குக்காக யாகத்தை நடத்தி வைக்க விப்ரர் மட்டும் தான் அர்ஹர் –
மற்ற த்விஜர்கள் அர்ஹர் அல்லர் என்று தீர்மானம் –
த்ரயோ வர்ணா –என்று பூர்வ பக்ஷ வார்த்திகம்
விப்ரர் தான் அர்ஹர் -மற்றவர் அர்ஹர் அல்லர் என்று ஸித்தாந்தம்
இங்கு அஹம் நார்ஹ -என்ற முடிவு

இங்கே 12 ஸ்லோகம் முடிவில் இப்படி வர்ணிப்பது ரசிக்கத் தக்கது –
ஆத்ம யாகத்தைச் செய்து வைக்கும் ரித்விக்குப் பதவிக்கு நான் அர்ஹன் அல்லன்
என்றும் ஸூசனம் —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: