ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -10-

மீமாம்ஸையில் பத்தாவது அத்யாயம் பாத அத்யாயம்
மூலமான ப்ரக்ருதியில் உள்ள தர்மங்கள் விக்ருதியில் பொருந்தக் கூடாமல் போனால்
அந்த தர்மங்கள் பாதிக்கப் பட்டு அவை வராமல் நிவர்த்திக்கும்
தர்மங்களைப் பாதிப்பதும் பாதத்தால் தர்ம நிவ்ருத்தியும் அந்த அத்தியாயத்தில் விஷயம்
தர்மங்களை அதர்மம் பாதிக்கும்
அதர்மோ தர்ம நாஸன -என்றார் திருவடி ராவணன் இடம் அவன் சதஸ்ஸில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி என்பதில் ப்ரபன்னருக்கு நிவ்ருத்தி தர்மம் ஆகும்
நான் பலவிதமான கொடிய அபசாரங்களால் தர்மங்களைப் பாதிக்கிறேன்
அவஸ்ய கர்தவ்யங்களான தர்மங்களைச் செய்யாமல் நிவர்த்திப்பதால் எனக்கு நிவ்ருத்தி உண்டு என்று காட்டி
இந்த இரண்டு விதங்களால் பாத அத்யாய விஷயங்களை இந்த
பத்தாவது ஸ்லோகத்தில் ஒருவாறு ஸூ சிக்கிறார்
அவ் வத்யாயத்தில் உபபாதித்த படி இல்லாவிடினும்
ஒருவாறு தர்மங்கள் பாதமும் நிவ்ருத்தியும் தம்மிடம் உள என்று பேசும் ரஸம் ரசிக்க மநோ ஹரம் –

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா –
யோஹம் சராமி சத்தம் த்ரிவித அபசாரான்
சோஹம் தவாப்ரியகர ப்ரியக்ருத்வ தேவம் –
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க–10-

யதிராஜ-யதிராஜனே
ஹா ஹந்த ஹந்த -ஆ ஆ ஐயோ ஐயோ
ய அஹம் -யாது ஒரு நான்
மநஸா க்ரியயா ச வாசா -மனத்தாலும் செய்கையாலும் சொல்லாலும்
சத்தம்-சர்வ காலத்திலும்
த்ரிவித அபசாரான்-மூன்று வித அபசாரங்களையும்
சராமி -ஆசரிக்கிறேனோ
சோஹம் -அந்த நானே
தவ அப்ரியகர ஏவ -உனக்கு அப்ரியமானதையே செய்து கொண்டு
ப்ரிய க்ருத்வ தேவ-பிரியத்தையே செய்பவன் போல் நடித்துக் கொண்டு
காலம் நயாமி -கால ஷேபம் செய்து வருகிறேன்
ததோஸ்மி மூர்க்க-ஆகையால் யான் மூர்க்கனே ஆவேன் –

யதிராஜ-
தானே குற்றம் செய்து இருந்தாலும் தன் குற்றத்துக்கு ராஜ தண்டனையை ராஜன் இடம் சென்று
தானே கோறி சுத்தி பெற வேண்டும்
ராஜபி க்ருத தண்டாஸ் தத -என்ற மனு ஸ்லோகத்தை பெருமாள் வாலியிடம் உதாஹரித்துக் காட்டினார்
ராஜ தந்தத்தால் குற்றம் நீங்கி சுத்தி பெறலாம்
அதனால் யதிராஜன் இடம் சென்று அவரை முறையிடுகிறார் –

ஹா ஹந்த ஹந்த
ஹா ஹந்த ஹந்த பவத சரணாரவிந்த த்வந்த்வம் கதா நுப விதா விஷயோ மமாஷ் னோ -என்று ஆழ்வான்
அதி மானுஷ ஸ்தவத்தில் கதறியதை நினைக்கிறார்
மரங்கள் புல் பூண்டுகள் -அன்று சராசரங்கள் -எல்லாம் தமஸ் நீங்கப் பெற்று நற்பாலுக்கு உய்ந்த
சமயத்தையும் இழந்த எனக்கு என்று கொலோ உன் தாமரை அடியிணை கண்ணுக்கு விஷயம் ஆவது
என்று ஆழ்வான் ஆ ஆ மோசம் போனேனே மோசம் போனேனே என்று கதறினார்
இங்கே ஜகத் குரு பீடத்தில் இருக்கும் நான் இப்படி அபசார சீலனாக இருக்கிறேனே என்று கதறுகிறார்
கஷ்டம் கஷ்ட தரம் கஷ்ட தமம்-என்று பிள்ளை லோகம் ஜீயர் உரை –

மநஸா
மனத்தினாலும் –
கரண த்ரயங்களின் ஸாரூப்யம் ஆர்ஜவம்
கரண த்ரய ஸாரூப்யம் இதி ஸுக்ய ரஸாயனம்
மூன்று கரணங்களும் கெடுதலிலேயே பிரவர்த்திப்பது என்கிற ஒரே விதமான ஸாரூப்யம் என்னிடம் உள்ளது –

க்ரியயா ச
என்னும் அதோடு நிற்கிறது இல்லை
செய்யவும் செய்கிறேன் -செய்யக் கூசுவது இல்லை

வாசா ச –
ஜகத் குருவாகப் பிறருக்கு உபதேசம் செய்யும் வாங்கினாலும் தீதே பேசுகிறேன்
வெளிக்கு ஆகிலும் ஸாது வேஷம் போடக்கூடாதோ -வாயாலும் பாபமே பேசுகிறேன்
அருந் முகான் யதீன் ஸாலா வ்ருகேப்ய ப்ராயச்சம் -பகவன் நாமங்களை உச்சரியாமல் இருக்கும்
யதிகளை ஓநாய்களுக்குத் தின்னக் கொடுத்தேன் -என்று ப்ரதர்தன வித்யையில் இந்த்ரன் கூறினான் –
க்ருஹஸ்தர் ஏதாவது ஸம்ஸாரிக வார்த்தைகள் பேசினால் பேசட்டும்
ஸந்யாஸிகள் வம்பு பேசுவது மிகவும் கொடியது என்பதே அந்த ஸ்ருதியின் கருத்து –

யோஹம்
ஸோஹம் என்று பெருமாளை வர்ணிக்கத் தொடங்கிய வேதம் இப்படி அப்படி என்று வர்ணிக்க முடியாமல்
யோ ஸி ஸோ ஸி – நீர் யாரோ அவர் தான் நீர் என்றது
எனது தீமை வர்ணனைக்கு உள் அடங்காது -நான் யாவனோ அவன் தான் நான் -எனக்கு உவமை இல்லை
பெருமாள் குணங்கள் எண்ணில் அடங்காததால் அவரை வர்ணிக்க முடியாது
எனது தோஷங்கள் எண்ணற்றவை யாதலாலும் குணம் சூன்யம் ஆனதாலும் என்னையும் வர்ணிக்க முடியாது
வர்ணனைக்கு இயலாத நான் –

த்ரிவித அபசாரான்-
மூன்று விதமான கொடிய அபசாரங்களையும்
அபசாரங்கள் தர்மத்தைப் பாதிப்பவை
நிவ்ருத்தி தர்ம நிஷ்டராய் இருந்தாலும் பாகவத அபசாரம் இருந்தால் முக்தி பலத்துக்கு பிரதிபந்தகம் ஏற்படுவது
நிச்சயம் என்கிறார் ஸூ த்ரகாரர் சாதன அத்தியாயத்தின் முடிவு ஸூ த்ரத்தில்
த்ரஸ்ய ப்ரஹ்ம விதா கஸ
அநக தத்வ வின் நிக்ரஹ -என்றபடி பாகவத அபசாரத்துக்கு நடுங்க வேண்டும்
நான் ஒன்றுக்கும் பயப்படுவது இல்லையே –

சராமி சத்தம் சோஹம்
ஓயாமல் எக்காலமும் அனுஷ்ட்டிக்கிறேனோ
ரமணீய சரணராய் இருக்க வேண்டும் -கபூய சரணராய் இருக்கலாகாது -என்பர்
அப சரணமே என் சரணம்
அப்படி அப சரணத்தையே சரணமாக சீலமாக யுடைய நான் –

தவ அப்ரிய கர
உமது திரு உள்ளம் நோவச் செய்து கொண்டு
பத்தாவது அத்யாயம் இரண்டாவது பாதம் -11-அதிகரணத்தில் -தர்ச பூர்ண மாசத்தில் நைச்வான ரேஷ்டியில்
ஒரு வயசு பசு மாட்டை தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும் – என்று விதிக்கப் பட்டு இருப்பதில்
தக்ஷிணையைக் கொடுத்து யாகத்தில் ஊழியமாக ரித்விக்கை கிரயம் வாங்க வேண்டியதாலே
ரித்விக்குத் தான் இந்த தக்ஷிணை கொடுக்க வேண்டும் என்று பூர்வ பக்ஷம்
ரித்விக்கான ஆச்சார்யர் புரோஹிதன் த்வேஷ்யன் ஆக மாட்டான்
ரித்விகா சார்யவ் நாபி சரிதவ்யவ் -என்று ஸாஸ்த்ரம் இருப்பது ப்ரஸித்தம் அல்லவா
ஆகையால் த்வேஷ்யனாய் இருப்பவன் யாதாம் ஒருவனுக்கு அந்த தக்ஷிணையை அத்ருஷ்டத்தின்
பொருட்டு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள்
நான் ஆச்சார்யராக உமக்கே அப்ரியனாய் இருக்கிறேன் -த்வேஷ்யன் ஆகிறேன் –
உம்முடைய திவ்ய ஆஜ்ஜையை உல்லங்கநம் செய்து உமக்குத் த்ரோஹியாகிறேன் -என்று நிந்தை –

ப்ரியக்ருத்வ தேவம் -காலம் நயாமி
உமது திரு உள்ளப்படி நடந்து உம்மை உகப்பிக்குமவனைப் போல் காலத்தைக் கழிக்கிறேன்
இது தான் உண்மையில் நான்செய்யும் கால ஷேபம் -என்று ஆத்ம நிந்தை

ததோஸ்மி மூர்க்க
ஆகையால் நான் மூர்க்கனே
இப்படி ஊ ஹா போஹங்கள் செய்து தாம் மூர்க்கர் என்று தீர்மானித்துக் கொள்கிறார் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: