ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -8-

பசுவன் மூர்க்கோ பவேத்
வித்யா விஹீன பசு
ஞாநேந ஹீந பசுபிர் ஸமான
நான் பசு விருத்தி உடையவன் -பசு ப்ரக்ருதி என்றார் கீழ்
ஆகையால் நான் மூர்க்கன் என்று அனுமானம் செய்கிறார் இதில்
பசு ப்ரக்ருதியாய் இருப்பவர் மூர்க்கராக தானே இருக்க வேண்டும்
மூர்கத்தவம் என்னும் பசு தர்மத்தை தமக்கு அனுமானத்தால் அதிதேசம் செய்து கொள்கிறார் –

8 வது அத்தியாயத்தில் அதிதேச விசேஷங்கள் நிரூபிக்கப் படுகின்றன
அப்படியே இங்கும் பசு தர்மம் தமக்கு அதிதேசம் செய்து கொள்ளப் படுகிறது –

மாஸம் அக்னி ஹோத்ரம் ஜுஹோதி -என்னும் இடத்தில் அக்னி ஹோத்ரம் என்னும் பெயரின் சாம்யத்தால்
நித்ய அக்னி ஹோத்ர தர்மங்களை மாச அக்னி ஹோத்ரம் என்னும் கர்மத்தில் அதி தேசம் செய்வர்
நாமதேயத்தைக் கொண்டு -ஆக்ஜையைக் கொண்டு அதற்கு உரிய தர்மங்களை அதி தேசம் செய்வர்
எனக்கோ சரணாகதன் என்ற ஆக்ஜை பெயரில் மட்டும் தான் -அந்தப் பெயரைக் கொண்டு பிரபன்னருக்கு
உள்ள தர்மங்கள் எல்லாம் என் இடம் இருக்க வேண்டும் என்று அனுமானித்து
அதி தேசம் செய்து ஏமாந்து போகிறார்கள்
எனக்கு உம் சரணாகதன் என்ற நாமதேயம் இருந்தாலும் நான் உண்மையில் பசு பிரகிருதி
பசு தர்மமான மூர்க்கத்தனம் தான் என்னிடம் அதி தேசம் செய்யப்பட வேண்டும் என்று நைகிறார் இதில்

அக்ர்ய பிராய நியாயத்தையும் இங்கே ஸூ சிக்கிறார்
அக்ர்யரான ஸ்ரேஷ்டர் உடன் கூடி இருப்பதால் இவரும் ஸ்ரேஷ்டராக இருக்க வேண்டும்
என்று கொள்வதே இந்த நியாயம்
குரு பீடம் அலங்கரிக்கும் ஸ்ரேஷ்டர்களான பரம்பரையில் நான் இருப்பத்தையே கொண்டு
என்னையும் ஸ்ரேஷ்ட அக்ர்யராக நினைத்து விடுகிறார்கள்
உண்மையில் நான் பசுக் கூட்டத்தோடு பசுவாகவே இருக்கத் தக்கவன்
பசுவைப் போன்று மூர்க்கரோடு மூர்க்கராய் இருக்கத் தக்கவன் என்கிறார் இதில்

துக்காவஹா அஹம் அநிசம் தவ துஷ்ட சேஷ்ட –
சப்தாதி போக நிரத –சரணா கதாக்க்ய
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே –
மித்த்யா சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –8-

யதிராஜ-யதி ராஜனே
அஹம் -நான்
அநிசம்-அல்லும் பகலும்
துஷ்ட சேஷ்ட-துஷ்ட வியாபாரங்களைச் செய்பவனாகவும்
துக்காவஹா தவ -உமக்குத் துக்கத்தைத் தருபவனாகவும்
சரணா கதாக்க்ய-சரணாகதன் என்று பெயர் வைத்துக் கொண்டு
சப்தாதி போக நிரத –விஷயாந்தர போகத்தையே மிக்க ருசியுடன் அனுபவித்துக் கொண்டு
சிஷ்ட ஜநௌக மத்யே-சாதுக்களாய் உயர்ந்த சீலம் உள்ள பெரியோர்களின் திரளின் நடுவில்
த்வத் பாத பக்த இவ -உமது திருவடிகளில் பக்தியை போலவே
மித்த்யா சராமி -பொய்யாக வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறேன்
ஆகையால்
அஸ்மி மூர்க்க -ஞான ஹீனன் -பொல்லாதவன் -ஆகிறேன் –

அநிசம்
ஓயாமல் –
மாத்திரைப்போதும் ஓர் இடை வீடின்றி எப்பொழுதும் –
நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும்

துக்காவஹ தவ
உமது திரு உள்ளம் நோவும்படி செய்பவன்
மக்கள் போன்றவர் ஆவார் சிஷ்ய ஜனங்கள்
சிஷ்ய ஜனங்களால் ஸுகம் பெற வேண்டி இருக்க என்னால் சுகமே இல்லாத தோடு
ஓயாத் துக்கமே விளைந்து கொண்டு இருக்கிறது –
பர தர்மோ பயாவஹ –
நான் எனது ஆச்சார்ய ஸ்தானம் ஆஸ்ரமம் இவர்களுக்குத் தக்க தர்மங்களை உள்ளபடி
ஆசரித்தால் அல்லவோ உமக்கு இன்பம் உண்டாகும்

துஷ்ட சேஷ்ட –
கொடிய சேஷ்டங்களை ஆசாரங்களை உடையவனாகவே உள்ளேன்

மித்த்யா சராமி
மித்ய ஆசாரமே உடையவராகக் கூறிக் கொள்கிறார்
கர்மேந்திரியாணி ஸம் யம்யய ஆஸ்தா மனஸா ஸ்மரன்-இந்த்ரிய அர்த்தான் விமூடாத்மா மித்யாசார ச உச்யதே –
கர்ம இந்திரியங்களை ஒடுக்கி எந்த மூடாத்மா இந்திரியங்களை மைனஸ்ஸால் ஸ்மரித்துக் கொண்டே இருக்கிறானோ
அவனே மித்யாசாரன் என்று கொல்லப்படுவான் -கீதாச்சார்யர் –
மனத்தில் தோஷங்களை நினைத்த படியோடே நிற்காமல் -சேஷ்டை-செய்கள்களிலும் அப்படியே இருப்பதால்
கீதையில் சொல்லப்பட்ட மித்யாசாரனுக்கும் மேல் பட்ட விலஷண அதிகாரி விசேஷம் என்று ஆத்ம நிந்தை

சப்தாதி போக நிரத –
புலன் விஷயங்களின் அனுபவத்திலேயே விசேஷ ருசி உடையவனாய்
சுகம் அத்யா பயா மாச நிவ்ருத்தி நிரதம் முனிம் -விஷய நிவ்ருத்தியில் ஸூகர் நிரதராய் இருந்தது பற்றி
அவருக்கு ஸ்ரீ பாகவதம் வியாசர் அத்யாபநம் செய்தார்
ஏன் ஆஸ்ரமத்துக்கு நிவ்ருத்தி ரதியே ஸ்வரூபம்-ஆத்ம ரதியாயே இருக்க வேணுமே
பராசர்ய ப்ரஹ்ம ஸூத்ரங்கள் -ஸ்ரீ பாஷ்ய ஸூஹ்ருத அம்ருதம் என்னும் வசஸ் ஸூ தையை
அன்வஹம் பானம் செய்வர்கில் ரதி இல்லை –

சரணா கதாக்க்ய
சரணாகதி ஸப்த பாக் -என்று கூரநாதன் சாதித்த படி பேர் மட்டும் சரணாகதன்
அந்தப் பெயருக்கு உரிய ப்ரபந்ந தர்மங்களில் அன்வயம் இல்லை –
ஆயினும் என்னிடத்தில் அதற்கு உரிய தர்மங்களின் அதி தேசம் செய்கிறார்கள் சிஷ்யர்கள் –
அந்தப் பெயருக்கு உரிய தர்மங்கள் என்னிடம் பாதிதம்

த்வத் பாத பக்த இவ
உம் திருவடிகளில் பக்தி உடையவன் போல் அநு கரணம் மட்டும்
போலி பக்தனே அல்லது உண்மை பக்தன் அல்லவே

சிஷ்ட ஜநௌக மத்யே –
உத்தமமான சீலம் உடைய ஸத்வ உத்தமரான அரும் பெரியோர்கள் கூட்டத்தின் நடுவில்
என்னைப் பெரியவராக நினைத்து என்னைச் சூழ்ந்து இருக்கும் உண்மையான பெரியோர்களுக்குக் கணக்கு இல்லை
இத்தனை ஸாத்விகப் பெரியோர்கள் நடுவில் இப்படி நான் இருக்கிறேனே என்று ஆத்ம நிந்தா ரூபா நைச்யம்

மித்த்யா சராமி
உள் ஒன்றாகவும் வெளி ஒன்றாகவும் பொய்யாகவே ஆசரிக்கிறேன்
மனத்தில் ஒரு விதமாக சங்கல்பித்து அதற்கு வேறு பாடாக நடப்பவன் மித்யா சாரன் எனப்படுவான் -கீதா பாஷ்யம்
எங்கும் மாயை -மித்யாத்வம் என்பது உள்ளதை வேறாகக் காட்டுவதே என்று முடியும் -தாத்பர்ய சந்திரிகை
பிறர் மித்யா வாதிகள்
நான் மித்யா சாரன்

ததோஸ்மி மூர்க்க
ஆகையால் நான் மூர்க்கனே
மித்யாசாரா வி மூடாத்மா -என்றார் கீதாச்சார்யர்
மித்யாசரனாய் இருப்பதால் கீதா ஸ்லோகம் படி நான் மூர்க்கன் என்பது திண்ணம்
பசு வ்ருத்தனாய் இருப்பதாலும் நான் மூர்க்கனே
தாஸோஸ்மி என்று அநு சந்திக்க ப்ராப்தமாய் இருக்க மூரக்கோஸ்மி -என்று உண்மை முடிந்தது

பலம் நியமம் கர்த்தா
இவற்றுக்கு ப்ரக்ருதியைப் போல் விக்ருதியில் அதி தேசம் இல்லை
ஆசார்யரான மூல ப்ரக்ருதிக்கு உள்ள பலம் எனக்கு சித்திக்க மாட்டாது
ஞானீ த்வாத்மைவ மே மதம் -என்று பெருமாளுக்கு உயிரான பிரியம் என்று புகழப் பட்ட
ஞானி யாவாரோ என் போன்றார்
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: