ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -4-

ஆழ்வான் பிள்ளான் முதலிய புராண புருஷர்களுடைய கரண த்ரயங்களும்
எம்பெருமானார் திருவடி த்வந்தத்தில் ஈடுபட்டு இருந்தன –
அவர்கள் திருவடிகளில் எனக்கு நிரந்தர பக்தியை அருள வேண்டும் என்கிறார் –

வேதாந்தங்களில் தத்க்ரது நியாயம் உண்டு –
ப்ரஹ்ம க்ரதுவாக யாவதாயுஷம் ப்ரஹ்மத்தைத் தியானிக்க வேண்டும் –
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அய நாய வித்யதே
திரு நாரணன் தாள் சிந்தித்து உய்ய வேண்டும்

முன் ஸ்லோகத்தில் என்ன என்னமோ பிரார்த்தித்தீரே
நீர் பிரார்த்திப்பது ப்ரஹ்ம க்ரது என்னும் ப்ரஹ்ம உபாசன ஸித்திக்காகவோ அல்லது
நீராக உத்தேசிக்கும் வேறு புருஷார்த்துக்காகவா என்ற கேள்வி வரக் கூறுகிறார் –
மீமாம்ஸை நான்காவது அத்தியாயத்தில் சில கிரியைகள் க்ரத் வர்த்தமா -யாக ஸ்வரூபத்தை ஸித்திக்காகவா –
அல்லது கோறும் அடுத்த பலத்துக்காகவா -என்று விசாரம் –
ப்ரஹ்ம பிராப்தி பரம புருஷார்த்தம் -பரம பிரயோஜனம் என்பது உண்மையே
அது ப்ரஹ்ம க்ரதுவினால் ஸித்திப்பதே
ப்ரஹ்ம த்யானம் ப்ரஹ்ம க்ரது தத் க்ரத்வர்த்தம் -அடியார்கள் சேவை -புருஷார்த்த காஷ்டை என்று
இங்கே 4 வது அத்யாய விஷயத்தை ஒருவாறு ஸூ சிப்பதில் திரு உள்ளம்

த்ரிகரணங்களாலும் உம்மையே ஆழ்வான் முதலிய பெரியோர்கள் உபாசித்தார்கள் –
என் கரண த்ரயங்களும் உம் திருவடிகளில் லயிக்கும் படி அனுக்ரஹிக்க வேண்டும்
என்று இங்கே பிரார்த்திக்கிறார்
அந்வய மூலமாகவும் வ்யதிரேக மூலமாகவும் பிரார்த்திக்கிறார்
உமது திருவடிகள் விஷயத்தில் இன்புற்று சக்தமாய் இருக்க வேண்டும் என்பது அந்வயம் –
மற்ற எதையும் கண் எடுத்துப் பார்க்கக் கூடாது என்பது வியதிரேகம்
மூன்று பாதங்களில் அந்வயத்தையும்
நான்காம் பாதத்தில் வியதிரேகத்தையும் கூறுகிறார் –

நித்யம் யதீந்திர தவ திவ்ய வபு சம்ருதௌ மே-
சக்தம் மநோ பவது வாக் குண கீர்த்தநேசௌ-
க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய –
வ்ருத்யந்த்தரேஸ்து விமுகம் கரணத்ரயம் ச–4-

யதீந்திர-யதித் தலை நாதனே
நித்யம் -ஒழிவில் காலம் எல்லாம்
தவ திவ்ய வபு ஸ்ம்ருதௌ -உன் திருமேனியின் நினைவில்
மே-சக்தம் மநோ பவது -அடியேன் மனம் ஆசை கொண்டு இருக்க வேண்டும்
அசௌ வாக் –இந்த என் வாக்கு
குண கீர்த்தநே– உமது குண கீர்த்தனத்திலேயே
ஸததம் ஸக்தம் பவது-ஆ சக்தமாய் இருக்க வேண்டும்
க்ருத்யம் கர த்வயஸ்ய -இரு கைகளின் செய்கையும்
ச தாஸ்ய கரணம் து ஸக்தம் பவது-சேஷ வ்ருத்தியிலேயே இன்புற வேண்டும்
கரணத்ரயம் ச-முக்கரணங்களும்
வ்ருத்யந்த்தரே அஸ்து விமுகம் -மற்ற வியாபாரங்களில் கண் எடுத்துக் கூடப் பார்க்காமல் இருக்க வேண்டும் –

நித்யம்
நித்தியமாக ஆச்சார்ய உபாஸனத்தை விரும்புவோம்
இது கோறும் புருஷார்த்த காஷ்டையைத் தரும் காம்ய கர்மமாய் இருக்க வேண்டும்
என்று வைச்சித்ர்ய ரஸம் ரசிக்கத் தக்கது –
காம்யம் நித்யம் ஆகிறது என்று விரோதா பர்யாய அலங்காரமும் த்வநிக்கிறது –

யதீந்திர
யதித் தலை நாத
யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹத -என்று ஆழ்வான் பாடிய படி
நீர் நித்யம் அச்யுதன் திருவடிகளில் ஸக்தர் –
உம்முடைய திருமேனியின் ஸ்மரணத்தில் எமக்கு நித்ய வியாமோஹம் வேண்டும்
எத்தனை ஆச்சார்யர்கள் பின் வந்தாலும் நீரே குரு பரம்பரையின் நடு நாயகம்

நித்யம் யதீந்த்ர-
நித்ய காலமும் -கால தத்வம் உள்ளதனையும் நீரே எதித்தலை நாதர் என்று
நித்யம் யதீந்த்ர என்று சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும் –

தவ திவ்ய வபு சம்ருதௌ
அப்ரதீ காலம்பனருக்கு அர்ச்சிராதி கதி உண்டு என்பர் –
உம திவ்ய சரண ஆலம்பனராய் இருக்க அதுவும் லபிக்கும்
இங்கு யோகத்தை -நிரந்தர பாவனையைப் -பிரார்த்திப்பதால் மனஸ்ஸூ வாக்குக்கு முன் வந்து விட்டது –

மே-சக்தம் மநோ பவது
மனஸ்ஸூக்கு வ்யாமோஹம் நீங்காமல் இருக்க வேண்டும் –

வாக் அசௌ
இது என் வாக்கு
என் பொல்லா வாக்கு
தோஷ கீர்த்தனத்தையே செய்து கொண்டு பாபத்தில் சாக்தமான என் வாக்கு என்று ஓர் கருத்து
இப்போது உம் குண கீர்த்தனத்திலே சக்தமாக ஸ்துதி பாடிக் கொண்டு இருக்கும் இந்த என் வாக்கு –

குண கீர்த்தநே
தவ-என்பதை இங்கேயும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
முதல் அடியில் உள்ள திவ்ய -பதத்தின் -ஸ்மரணத்தைக் கொண்டு இங்கும்
உம்முடைய திவ்ய குணங்களைக் கீர்த்தனம் செய்வதில் -என்றும் பொருள் கொள்ளலாம்
தைவீ சம்பத்து என்று ஸ்ரீ கீதையில் வர்ணித்த குணங்கள் திவ்ய குணங்கள்
கீர்த்தநம் -என்கிற பதத்தால் பகவத் குண கீர்த்தநம் போல் பரம சுத்தியையும் அனுபவத்தையும் தருவது
என்று பகவத் துல்யமான கௌரவத்தை ஸூசிக்கிறார்

அசௌ வாக் –
என்று சொல்வது இந்த என் நாக்கு என்று அபிநயத்தோடு கூடக் காட்டுவதையும் குறிக்கும்

ஸூ தரிடம் ஸ்ரீ பாகவதம் ஸ்ரவணம் செய்த ஸுவ்நக மகரிஷி-2 ஸ்கந்தம் 3 அத்தியாயத்தில்
ஜிஹ்வா அசதீ –ஸூதந சோபகாயத்யுருகாயா காதா -என்றது
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி -என்று கொத்தப்பிராட்டி
வி சக்ர மாணஸ் த்ரேதாருகாய -என்று வேதம் டிண்டிமம் போல் உத் கோஷத்தை ஸூசித்தது
உரு காயன் என்பது அநேகம் பேர் களால் உச்ச ஸ்வரத்தில் ஆரவாரத்தோடு பாடப் படுபவனைச் சொல்லும்
உலகம் முழுவதும் தன் திருவடி முத்ரை பதியும் படி திருவடியை ஒத்தித் தந்தவர் த்ரிவிக்ரமர்
உலகம் முழுவதும் அவர் திருவடியின் ஸ்வம் என்று உலகம் எங்கும் எப்பொருளிலும் முத்ரை வைத்துக் காட்டியது
த்ரிவிக்ரமன் யஸஸ் விஷயமான காதைகளை ஓங்கி மகிழ்ந்து பரம ஆதரத்துடன் பாடாத நாக்கு
அஸதீ -இல்லது என்றே சொல்ல வேணும் –
ஸூத மஹரிஷியே அந்த நாக்கு ஸதீ உள்ளதாகக் காணப்படுகிறதே என்று சிலர் ஆபேஷித்தால்
அது ஸதீ உளதேல் -தார் துரிகா ஏவ ஸூத அது தவளை நாக்கே -மனுஷ்ய நாக்கு அல்ல என்று
அறுதி இடலாம் என்று அந்த ஸ்லோகத்தின் ரஸம் –
இந்த என் நாக்கு உன் குண கீர்த்தனத்தில் ஸக்தா பவது -எப்பொழுதும் பற்று உடையதாய் இருந்து
அதிலேயே வ்யாபரிக்க வேணும் –

க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய
இரண்டு கைகளின் செய்கை முழுவதும் உனக்குப் பணிவிடை செய்வதிலேயே மன்னி இருக்க வேண்டும்
இங்கு து -ஏவ என்று பொருள்
ச என்று முன் இரண்டு அடிகளில் கூறின மநோ வாக்குகள் போக மிகுந்தத்தைக் கூட்டுவது –

ஸ்ரீ மத் பாகவதம் -9 ஸ்கந்தத்தில் அம்பரீஷ உபாக்யானத்தில் அம்பரீஷருடைய பகவ நிஷ்டையை
ச வை மந கிருஷ்ண பதார விந்தயோ வஸாம்சி வைகுண்ட குண அநு வர்ணேந கரௌ
ஹரேர் மந்திர மார்ஜுன திஷு -என்று தொடங்கி
மநோ வாக் காயங்கள் மூன்றும் பகவானிடம் மன்னி வழு விலா அடிமை செய்தன என்றும்
தசம ஸ்கந்தம் 80 அத்யாயம் குசேலர் உபாக்யானத்தில்
ச வாக் யயா தஸ்ய குணான் க்ருணீத கரௌ ச தத் கர்ம கரௌ மனஸ் ச ஸ்மரேத் வசந்தம்
ஸ்திர ஜங்கமேஷு என்று வாக் காய மனங்களின் முக்கிய க்ருத்யங்கள் எவை என்று வர்ணித்ததையும்
இங்கே ஸ்வாமி நினைத்ததாகக் கொள்ளலாம்

அங்கும் இங்கும் பதங்களின் ஒற்றுமையும் பொருள்களின் ஒற்றுமையும் காணலாம்
அம்பரீஷ உபாக்யானத்தில் இம்மூன்று கரணங்களின் க்ரமத்தை அநு சரித்துள்ளது
மநோ வாக் காயங்கள் என்று சொல்லும் நிர்தேசத்துக்குப் பொருந்தும்
மநோ பூர்வ வாக் உத்தர -என்கிற கிரமத்தையும் இங்கு அநுசரிப்பதாகும் –
சா வாக் என்று குசேல உபாக்யானத்தில் -இங்கு அ சவ் வாக் என்று மாற்றியது
தம்முடைய இந்த நாக்கு என்று அபி நயித்துக் காட்டி அருளவே
அங்கு சா அது என்று பரோக்ஷ நிர்தேசம்

கரௌ ச தத் கர்ம கரௌ-என்று பாகவத ஸ்லோகத்தில் மிக்க ரசம் உண்டு
பகவத் கர்மங்களைக் கரணம் செய்யும் கரங்களே ஜீவன் தன உயிர் உடன் இருப்பவன் கரங்களே ஆகும்
இல்லையேல் சவ்நகர் 2 ஸ்கந்தத்தில் முன் கூறிய பிரகரணத்தில் -சாவவ் கரௌ -அவை பிணங்களின் கரங்களே –
உயிர் உள்ளவன் கரங்கள் அல்ல என்று நிந்தனைக்கு விஷயங்கள் ஆகும்
இந்த ரசத்தை க்ருத்யம் ச தாஸ்ய கரணம் -என்பதால் வியஞ்சனம் செய்கிறார் –
அது எங்கனம் என்னில்
தாஸ்ய கரணம் தான் க்ருத்யமாகும் -இல்லையேல் அது செய்கையே ஆகாது -என்று
வியாப்தியையும் க்ருத்யம் என்பதற்கு லக்ஷணத்தையும் காட்டுவது என்பது ஸ்பஷ்டம் –
என் செய்கை முழுவதும் உம் தாஸ்ய க்ருத்யமாகவே இருக்க வேணும்
இங்கே கரண சப்த்தத்தை புனருக்தம் போலே பிரயோகித்து இருப்பதால் தாஸ்ய கரணம் தான் க்ருத்யம் தான்
என்று அறுதி இடுவதோடு அடுத்து நான்காம் பாதத்தில் உள்ள கரண த்ரயம் என்ற பதத்தில்
கரண பாதத்தை பொறி இந்திரியம் என்னும் பொருளில் பிரயோகித்து
பகவான் ஆச்சார்யர் இவர்களுக்கு தாஸ்ய கரணம் செய்தால் தான் கரணங்கள் என்னும்
இந்திரியங்கள் கரணங்கள் ஆகும் -இல்லையேல் இவை துஷ் கரணங்கள் -அல்லது வி கரணங்கள்
அல்லது அகரணங்கள் ஆகும் என்பதையும் வியஞ்சனம் செய்கிறார்

வ்ருத்யந்த்தரேஸ்து விமுகம் கரணத்ரயம் ச-
முன் மூன்று பாதங்களாலும் மநோ வாக் காயங்கள் உளது என்று கூறும் யோக்யதையைப் பெறுவதற்கு
யதிராஜன் விஷயமாகவே நித்யமும் விநியோகிக்கப் பட வேணும் என்பதை அன்வய முறையில் காட்டி அருளி
அத்தை த்ருடீ கரிக்க வியதிரேக முறையில் நான்காம் அடியில் ஒரே பதத்தால்
மூன்றையும் சேர்த்து ஸங்க்ரஹித்து அருளுகிறார்
யத் சத்வே யத் சத்வம் -என்பது அன்வய முறை
யத பாவே யத பாவ -என்பது வியதிரேக முறை

யதிராஜ பக்தி நிஷ்டையில் நித்யமும் அன்வயம் இருந்தால் இவை மூன்றில் ஓன்று ஒன்றும் உளதாகும்
என்று முதல் மூன்று பாதங்களிலும் காட்டிய அந்வய முறை
அந்த நிஷ்டை இல்லையேல் இவை மூன்றும் இல்லனவே யாகும் என்று இந்த
நான்காம் பாதத்தில் காட்டுவது வியதிரேக முறை –
விருத் யந்த்ரத்தை வி முகத்வத்தை பிரார்த்திப்பதால் எம்பெருமானார் விஷயத்திலேயே இங்கு கூறும்
மனோ வ்ருத்தி வாக் வ்ருத்தி காய வ்ருத்தி மூன்றும் அபிமுகமாக இருக்க வேண்டும் என்றும்

யோக சித்த வ்ருத்தி நிரோத-என்கிற யோக ஸூ த்ரத்தில் கூறிய லக்ஷணம் படி
எம்பெருமானாரை உபாசனம் செய்யும் யோகம் ஆகும் இது என்று ஸூசிக்கிறார்
அமானித்வம் அதம்பித்வம் முதலிய இருபது ப்ரஹ்ம ஞான சாதனங்களை ஸ்ரீ கீதை -13 அத்யாயம்
கணக்கிடுகையில் -ஆச்சார்ய உபாஸனம் என்று ஆச்சார்ய விஷயமான உபாஸனத்தையும்
சாதனமாக பரிகணநம் செய்தார்
தேவம் இவ ஆச்சார்யம் உபா ஸீத என்று -இரண்டு தேவர்களையும் -பகவான் ஆகிற தேவரையும்
ஆச்சார்யரான தேவரையும் உபாஸிக்க வேண்டியதில் பகவானைப் போலவே
ஆச்சார்யரையும் உபாஸிக்க வேணும் என்று ஸ்ருதி விதித்தது –

ஸ்வேதர உபநிஷத்தில் முடிவில் கடைசி மந்திரத்துக்கு முன் மந்த்ரத்தல்
தபஸ் ப்ரபாவாத் தேவ ப்ரஸாதாத் -என்று பக்தி யோகம் என்னும் தவத்தின் வலிமையாலும்
தேவனுடைய கடாக்ஷத்தாலும் ஸ்வே தாஸ்வதரர் ப்ரஹ்ம ஸாஷாத் காரம் பெற்று
ப்ரஹ்ம வித்வனாகி மோக்ஷ சித்தியைப் பெற்றார் என்று கூறி விட்டு
தேவ ப்ரஸாதம் என்பதற்கு குரு தேவன் ப்ரஹ்மம் ஆகிய தேவன் இரண்டு தேவர்கள் இடத்திலும்
துல்யமாய் பக்தி செய்ய வேணும் என்றும்
ஆச்சார்யன் இடத்தில் தேவன் இடத்தில் போல் அத்யுத் க்ருஷ்டமான பக்தி நிஷ்டையை அனுஷ்டித்து
அவன் பிரஸாதத்தைப் பெற்றால் அம் மஹானுக்கு உபதேசிக்கப்பட்ட எல்லா விஷயங்களும்
உள்ளங்கை நெல்லிக்கனி போல் பிரகாசிக்கும் என்றும் முடிவு மந்திரத்தில் இது பரம சாரம் என்றும்
உபநிஷத் உப சம்ஹாரம் செய்தது –

யஸ்ய தேவே பரா பக்தி யதா தேவே குரவ் ததா பரா பக்தி தஸ்ய மஹாத்மன ஹி ஏதே கதிதா
அர்த்தா ப்ரகாஸந்தே என்று -என்று உபநிஷத் பதங்கள் உள்ளபடியே அந்வயிப்பதே உசிதம் என்று பெரியோர் அருளிச் செய்வர்
இந்த அன்வயத்தில் முன் கூறிய தேவ சப்தத்துக்கு ஆச்சார்ய தேவரும் பொருள் கிடைப்பதால்
ஞான சித்திக்கும் மோக்ஷ சித்திக்கும் இருவர் கடாக்ஷமும் வேண்டும் என்பதும்
தேவே குரவ் -என்று ஸாமா நாதி கரணமாக அபேத அந்வயத்தாலே குருவை தேவனோடு அபின்னமாக
நினைக்க வேணும் என்றும் கிடைக்கிறது
ஆச்சார்ய பரம்பரையில் நித்யமும் நடு நாயகரான யதிராஜர் என்னும் நம் சித்தாந்த தீர்த்த காரரை உபாசித்து
ப்ரஹ்ம உபாஸனத்துக்கு உபஷ் டம்பகம் ஆகுமே ஒழிய விரோதம் ஆகாது

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: