ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் –

ஸ்ரீ கர்ப்ப உத்சவம் ஸ்ரீ ஜனன உத்சவம் -இரண்டு வகை கொண்டாட்டம்
பாக்ய நகரம் -Hydrabad -Secundrabad -பழைய பெயர் –
இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் -ஸ்ரீ ஸீதா பிராட்டி திருக்கல்யாணம்
தேவை இடாதவரை பிரதிஷ்டை பண்ண ராமானுஜர் –
கர்ம யோக சாஸ்திரம் -ஞான யோக சாஸ்திரம் -வளர்ந்து -பக்தி என்னும் பெரும் வெள்ளம் ஸ்ரீ ராமாயணம் –
மந்த்ர சாஸ்திரம் -பலா அதி பலா -அகஸ்தியர் ஆதித்ய ஹ்ருதயம்
சரணாகதி சாஸ்திரம்
கவி குல குரு -துளஸீ தாசர்
ஸ்ரவணாதிகளால் அனுபவ -ஜெனித -பிரீதி -காரித -கைங்கர்யம் -நிலைத்து நிற்கும்
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் வசிஷ்டோபி மஹா தேஜா —
வேதம் வாக்கியம் போல் -ஸூத்த மனசால் -கேட்டு –
ஸ்ரீ ராமாயணத்தில் பக்தி -அழுக்கைப் போக்கி தூய வெள்ளம் பெற்று காணலாமே
ராஜீவ லோசனன் -ஸூ குமாரன் -புஷ்ப்ப ஹாஸ -அனுபவிக்காமல் யாக ரக்ஷணம் இவரைக் கொண்டு செய்யாமல் –
ஆழ்வாராதிகள் தானே அவனையே ப்ராப்யமாக அனுபவிப்பார்கள்

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ -ஸ்ரீ பாதுகா பட்டாபிஷேகம்
சத்ருக்கனன் அ நக -ஆயில்யம் நக்ஷத்ரம் -பரதேன் -நித்ய சத்ரு-ப்ரீதி புரஸ்தர –
ராமதாம் அநு கச்சதி மே த்ருஷ்ட்டி -தசரதன்
இரங்கி-இன்னருள் சுரந்து -குஹ ஸஹ்யம் -ஆபதாம் –தாதாரம் சர்வ சம்பதாம் –
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி தனது பேறாக -அமலன் நிமலன் விமலன் -நின்மலன்

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
மூல மந்த்ரம் -ஸ்ரீ ராம நாம பிரபாவம் –வாலி வதம் –
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்த்ரம்
தம்மையே தமக்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை
ராமம் என்னும் செம்மை சேர் நாமம் தன்னை
மந்த்ரம் பதம் மருந்து நாமம் -விருந்தும் மருந்தும் –
ராம ராம இதி மதுரம் மதுர அக்ஷரம் -இனிமை தூய்மை -கூஜந்தம்-ஆருஹ்ய கவிதா சாகம்
மூலம் ஆதி காரணம் ஆதாரம் முதன்மை பெற்றது -வேர் போல் –
முன்னும் இராமனாய் தானாய் -பின்னும் ராமனாய் -தானான அவதாரம்
கிருஷ்ணம் நாமமே குளறிக் கொன்றீர்–மிருத ஸஞ்ஜீவினி -காகுத்தனும் வாரானால்
பெரும் பதம் தத் விஷ்ணோ பரமம் பதம் பெற்றுக் கொடுக்கும்

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
களி நடம் கண்டேன்
களி நடம் புரியக் கண்டேன்
த்ருஷ்டா சீதா கண்டேன் சீதை -என்றவர் -நல் பெரும் தவத்ததள் ஆய நங்கைகையைக் கண்டேன் அல்லேன் –
மூன்றும் சேர்ந்து நாட்டியம் -இலங்கை வெற்பில் –
இற் பிறப்பு என்பது ஒன்றும் –
இரும் பொறை என்பது ஒன்றும் –
கற்பு என்று பெயர் ஒன்றும் –
திரு மேனி- பண்பு- கதை -வனம்- மந்த்ரம்- காவ்யம்- திருவடி -ஸூ ந்தரன் -ஸூந்தரி –
காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

கிளி மொழியாள் வலியச் சிறை புகுந்தாள்
வாலில் நெருப்பு -பெருமாளின் ஆலிங்கனம் -யாம் பெரும் பரிசு -ஸீதா மஹாத்ம்யம் –

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
நின் அடியிணை அடைந்தேன் –

அபய பிரதான சாரம் -இதுக்காக அன்றோ ஸ்ரீ ராமாயணம்
சரணாகதி சாஸ்திரம்
ஆஜகாம முஹூர்த்தேந யத்ர ராம ச லஷ்மணா
சர்வ லோக சரண்யாயா ராகவாயா மஹாத்மணே -விபீஷணன் -எளிமையும் மேன்மையும்
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் –மேன்மையும்
எளிமையும் சொல்லி -தொடங்கி
நிவேதயதா மாம் க்ஷிப்ரம் –
நிர்வேதம் ஏற்படுத்தாமல் -மனசு உடையும் படி வெறுப்பு ஏற்படாத படி –நிவேதயத -உங்கள் ஸ்வரூப அனுரூபமாக -சத்தை பெற
நிரதாம் வேதயதே -திரு உள்ளத்தில் படும் படி
அக்கரை அநர்த்தக் கடலில் இருந்து இக்கரை வந்து இளைப்பாறி ஆகாசத்தில் பெருமாள் அங்கீகாரம் கிடைக்காமல் தரிக்க மாட்டாமல்
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -மாம் நிவேதியத
க்ஷிப்ரம் -உடனே –
விரையும் கார்யம் தூங்கேல் தூங்கும் கார்யம் விரையேல்
சஞ்சலம் -மனம்
வந்து ஒல்லைக் கூடுமினோ
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடைமை -கடகர் அன்றோ விரைய வேண்டும் -சிஷ்யரை விரைவாக வர –
ராமன் முன்பே என்னை அங்கீ கரித்து அருளி ராவணனை எதிர்பார்த்து உள்ளாரே –
கைகள் கூப்பும் -கால்கள் சேரும் -சாஷ்டாங்க பிரணாமத்துக்கு ஸூசகமாக நால்வர் உடன் –
இளையவர்க்கு அவித்த மௌலி அடியேனுக்கும் சூட்டி அருள -ஆவியை பிரித்த அவன் தம்பி நாயேன் –

அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம:
விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் ||– வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்

ஹிரண்ய வதைப் படலம் -கம்ப நாட்டாழ்வார் –
பிளந்தது தூணும் செங்கண் சீயம் -சிங்கப்பிரான் -மேட்டு அழகிய ஸிங்கர் –

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -5-8-3-

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-4-

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே-5-8-5-

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-

ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-7-

வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-8-

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே -5-8-9-

த்வயார்த்தம் விரித்து உரைக்கும் பதிகம் இது
பிராட்டி விஷயீ காரம் தொடங்கி-மான் மட நோக்கி –
ஒன்பதாம் பாசுரம் பெருமாள் -உலகம் அளந்த பொன்னடி அடைந்து உய்ந்தேன் –
1-விஷயீ காரத்தை சொல்லி
2-கைங்கர்யத்தை சொல்லி
3-அதுக்கு விரோதியாய் வருமதில் இந்த்ரிய வஸ்யதையைத் தவிர்த்து தர வேண்டுமேன்று சொல்லி
4-அதுக்கடியான பாபமடியாக வந்த யம வஸ்யதையை பரிஹரிக்க வேணும் என்று சொல்லி
5-அதுக்கடியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று சொல்லி
6-கருத்து அறிந்து செய்யும் அளவு அன்றிக்கே உன் பரிவாலே செய்ய வேணும் என்று சொல்லி
7-சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்டு நோவு படுகிற என்னையும் மீட்டு
தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தாலே உன் திருவடிகளை தந்து அருள வேணும் என்று சொல்லி
8-தேச கால விப்ரகர்ஷம் கிடக்கச் செய்தே கார்யம் செய்த சக்தி மத்தையை0 அந்தமில் பேரின்பத்
தடியரோடே வைக்காக அன்றோ தேவரீர் இங்கே வந்து கண் வளர்ந்து அருளுகிறது என்று சொல்லி
9-உன்னை அல்லது அறியாத தொண்டைமான் சக்கரவர்த்திக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினால் போலே
எனக்கும் ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்க வேணும் என்று சொல்லி சரணம் புகுகிறார் –

மாழை மான் மட நோக்கி -என்று தொடங்கி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்று தலைக் கட்டுகையாலே
ஒன்பது பாட்டிலும் ஏகார்த்தத்தைப் பற்றவே சரணாகதியாய் இருக்கிறது

பால் குடிக்க நோய் தீருமா போலே
இவருடைய பாசுரத்தைச் சொல்ல
ப்ராப்தி பிரதிபந்தகங்கள் தன்னடையே விட்டுப் போம்

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ சீதாபிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: