பல அத்யாயம் விம்சதி லக்ஷண மீமாம்ஸையில் இறுதி அத்யாயம்
சாதனமும் பலமும் ஒருவாறு ஓத்தே இருக்கும் -ஒன்றும் ஆகும் –
சித்த லக்ஷணம் ஆகிற ப்ரஹ்மமே பலமும் ஆகிறது –
ஆகையால் பலமான பர ப்ரஹ்ம ஸ்வரூபமே சாதன அத்தியாயத்தின் நடுவில்
உபய லிங்க அதிகரணம் முதல் சில அதிகரணங்களிலே விசாரிக்கப் படுகிறது என்று
அதிகரண சாராவளியில் காட்டப் பட்டுள்ளது
முக்தி பலத்தைக் கீர்த்தனம் செய்து முக்தி பல அதிகரணத்தோடு சாதன அத்யாயம் முடிந்தது –
ஆ வ்ருத்திர் அஸக்ருத் உபதேசாத் -என்று அன்வஹம் த்யானம் செய்யும் பக்தி உபாயத்தோடு
பல அத்யாயம் தொடங்கிற்று
முதல் பாதம் முன் பாகத்தில் சாதனமான பக்தியின் ஸ்வரூபத்தை விசாரித்தது –
சாதனமான பக்தியும் மிகுந்த ஸூ கமாய் இருப்பதால் பல கோடியில் சேருவதால் சாதனத்தையும்
விசாரித்தது என்று ஸ்ருத ப்ரகாசிகை காட்டிற்று –
பலத்திற்காக சாதனமா -அல்லது சாதனமே பலமா என்கிற விசாரம் கேவலம் ஸ்ரம பலமே யல்லாது
முடிவு ஏற்படுவது கஷ்டம் என்றது சங்கல்ப ஸூர்ய உதயம்
பலார்த்தம் தத் கிம் வா பலமிதி விதர்க்க ஸ்ரம பல
பலா நாம் நேதா ய பலமிதி ச சாரீரக மித -என்று சதுஸ்லோகீ ஸ்லோக மங்கள ஸ்லோகம் –
பத்தொன்பதாம் ஸ்லோகத்திலேயே போக பலத்தையும் ஸூ சித்து விட்டதாகவும் சொல்லலாம் –
நித்ய சேஷித்வ யோகாத் -என்றபடி பெருமாளுக்கு சேஷித்வமே நித்யம் என்பது போல்
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் –என்று ஆழ்வார் திருவடிகளே எக்காலத்திலும் சரணம் என்றது
எமக்கு எம்பெருமானார் விஷயத்திலும் துல்யமே–
இந்த ஸ்துதி முடிவிலும் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்பது
அநந்ய சரணோ பவதீதி -என்று அறுதி இட்டு ஸ்துதியை முடிக்கும் அழகு ரசிக்கத் தக்கது –
ஸ்துதியின் கடைசி பக்கத்திலேயே உம் திருவடிகளே சரணம் என்று சொல்லி விட்டார் –
ஸ்துதியை முடித்து விட்டு ஸ்துதிக்கு வெளியில் சொல்லிக் கொள்ளும் படி விட்டு விடவில்லை –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்னும் ஸ்ரீ வைஷ்ணவ முத்ரை ஸ்தோத்திரத்தின்
கடைசி பாகத்திலேயே அமைந்து விட்டது –
பெருமாள் திருவடி சேவா பலமான மோக்ஷ பலமும் முன் ஸ்லோகத்திலேயே கூறப்பட்டு உள்ளது –
இந்த ஸ்துதிக்கு பலம் ஸ்துத்யரான எம்பெருமானாருடைய அங்கீ காரம் –
அது இந்த ஸ்துதிக்கு ஸாஷாத்தான பலம் –அந்த பலத்தை இங்கே கூறுகிறார் –
மது மதந விஞ்ஞாபன மிதம் -என்று ஸ்தோத்ர ரத்ன முடிவில் உள்ளத்தையும்
ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா –என்கிற கடைசி வார்த்தையும் இங்கே அநுஸந்திப்பதும் ஸ்பஷ்டம் –
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய – என்று அங்கே பிரார்த்தித்தபடியே இங்கும்
ஸ்ரீ சைல நாதர் -என்கிற ஒரு நாதர் திரு நாமத்தைச் சொல்லி
அவர் கொடுத்த தானத்தை நீர் யதார்த்தம் ஆக்க வேண்டும் என்று முன் ஸ்லோகத்தில் கூறினார் –
அவர் செய்த தானத்தை நீர் விக்னம் வாராமல் பறி பாலனம் செய்ய வேண்டும்
என்று முன் ஸ்லோக பிரார்த்தனை –
உம் திருவடி சேவையை தானம் செய்தார்
அந்த தானம் அழியாமல் நீர் பரி பாலனம் செய்ய வேண்டும் -என்று அங்கே பிரார்த்தித்தது –
தான பாலனங்களுக்குள் பாலனமே உயர்ந்தது என்பர் –
விஜ்ஞாபனம் யதித மத்ய து மா மகீநம் –
அங்கீ குருஷ்வ யதிராஜ தயாம்புராசே
அஜ்ஞ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச –
தஸ்மாத் அநந்ய சரணோ பவதி இதி மத்வா –20-
யதிராஜ தயாம்புராசே-கருணைக் கடலான யதிராஜரே
அத்ய -இன்று
மா மகீநம்-அடியேனுடையதான
இதம் விஜ்ஞாபனம் -இந்த ஸ்துதி -விண்ணப்பம் என்று உம் திருவடிகளில் நித்ய சேவா பிரார்த்தனை –
யத் -யாது ஓன்று உண்டோ
அதை
அஜ்ஞ அயம் -இவன் அறிவில்லாதவன் -ஸம்யக் ஞானம் இல்லாதவன்
ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச -ஆத்ம குண லேசமும் அடியோடு இல்லாதவன் -சம்பந்த குண லேசமும் இல்லாதவன்
தஸ்மாத்-ஆகையால்
அநந்ய சரணோ பவதி இதி -வேறே கதி இல்லாதவனாய் இருக்கிறான்
இதி -என்று எண்ணி
மத்வா –என்னை
அங்கீ குருஷ்வ-திரு உள்ளம் பற்றி அருள வேணும்
விஜ்ஞாபனம்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டி ஸ்ரீ கண்ணனுக்கு -விஞ்ஞா பயதி தே கிஞ்சித் – என்று
ஏழு ஸ்லோகங்களை விஞ்ஞாபனம் செய்தார் –
அங்கே ஸப்த பதியான விவாஹ பிரார்த்தனைக்கு ஏற்ப ஏழு ஸ்லோகங்கள்
இங்கே விம்சதி லக்ஷண மீமாம்ஸாதி பலமான மோக்ஷத்துக்கு ஏற்ப இருபது ஸ்லோகங்களால் விஞ்ஞாபனம் –
உம் திருவடி சேவை நித்யமாக நிர்விக்னமாக இருக்கும் படி காத்து அருள வேணும் –
யதிதம்
ஏதோ விது ஒரு கணக்கிலும் சேரத் தக்கது அல்ல
ஏதோ ஒரு முறையானது
அத்ய
நித்யமும் பாடி இன்று இன்று என்று சொல்லும் படி இருக்க வேண்டும்
மா மகீநம் –
விஞ்ஞாபநம் வனகிரீஸ்வர ஸத்ய ரூபாம் அங்கீ குருஷ்வ கருணார்ணவ மா மகீநம் –
ஸ்ரீ ரெங்க தாமநி யதா புர சேஷ போகம் ராமாநுஜார்ய வசக பரி வர்க்திஷீய -என்று
ஸ்ரீ ஸூ ந்தர பாஹு ஸ்தவ முடிவு ஸ்லோகம் அனுசரிப்பது ஸ்பஷ்டம் –
என்னுடைய ஸ்துதியை -ஏதோ என்று சொல்லும்படியான இந்த ஸ்துதியை -பெரியோர் அனுக்ரஹத்தால்
வந்தது என்று அவர்கள் சிரஸ்ஸில் பாரத்தைப் போட இஷ்டம் இல்லை –
எல்லாக் குறைகளும் என்னுடையவைகளாகவே இருக்கட்டும்
என்னைச் சேர்ந்தவர் பாடும் இந்த ஸ்துதியை -இந்த ஸ்துதி மூலம் அவர்கள் செய்யும் விஞ்ஞாபனத்தையும்
அங்கீ கரித்து அவர்கள் எல்லாரையும் நித்தியமாக உம் திருவடி சேவையைத் தந்து காத்து அருள வேணும் –
அங்கீ குருஷ்வ
திரு உள்ளம் பற்ற வேண்டும்
குருஷ்வ மாம் அநு சரம்
யதிராஜ
யதி சக்ரவர்த்தியே
ராஜா ப்ரக்ருதி ரஜ்ஞநாத் -உம் பிரஜைகளை ரஜ்ஞநம் செய்ய வேண்டியது உம் யதிராஜர் என்ற
திரு நாமத்துக்கு ஏற்றது –
தயாம்புராசே
தயை நீர்க்கடல்
உப்புக்கடல் அல்ல
பேர் அருளாளன் பேர் அருளும் உம் சாலைக் கிணற்று ஜலத்தைப் பருகிப் பெருகுகிறது என்று
தத்வ டீகை மங்களத்தில் அபி யுக்தர் அருளிச் செய்தார் –
ஸப்ததியிலும் – காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி -என்றார் –
அஜ்ஞ அயம்
அஞ்ஜோ ஜந்துர நீ சோயம் ஆத்ம ந ஸூக துக்கயோ -என்ற
பிரமாணத்தை நினைக்கிறார்
கர்ம பாரவஸ்யதயை அடைந்து அதனால் ஸம்ஸார பதவியில் பிரமித்து வருந்துகிறான்
இவன் தன்னையே ரஷித்துக் கொள்ள சக்தி இல்லாதவன்
இவன் அஞ்ஞனான ஐந்து -பசு ப்ராயன்
பெருமாள் உமக்கு வஸ்யராய் இருப்பதாலும்
உமது கருணை கடலை ஒத்து இருப்பதாலும்
உம் திருவடியைப் பற்றும் அஞ்ஞனான என் போன்ற ஆஸ்ரிதர்களைப் பெருமாள் திருவடிகளில்
சேர்த்துக் கரை ஏற்றினால் ஒழிய உம்முடைய தயா பூர்ண மனம் திருப்தி அடையாதது ஆகையால்
நீர் என் பிரார்த்தனையை அங்கீ கரித்து அருள வேணும் –
ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச –
ஞானம் தான் இல்லை
ஆத்ம குணம் தினை யாகிலும் இருக்கல் ஆகாதோ
அதுவும் அடியோடு இல்லை
வர்ஜித -விவர்ஜித –
தஸ்மாத்
நற் குணம் ஒன்றுமே இல்லை -ஞானமும் இல்லை –
ஆஸ்ரிதேத்ய ஆன்ரு சம்ஸ்யத
ஆன்ரு சம்ஸயம் பரோ தர்ம
ஆஸ்ரிதனைக் கைவிட்டால் ந்ருசம்சதா தோஷம் வரும்
கருணைக் கடலாய் இருப்பார்க்கு ந்ருசம்சதை அணுகலாமோ
அஞ்ஞத்வமும் ஆத்ம குண லேச விவர்ஜித்வமும் வேறே புகல் ஒன்றும் இல்லை என்பதை ஸ்தாபிக்கின்றன –
மீமாம்ஸா ஸூ த்ரங்கள் நியாய ஸூ த்ரங்கள் தஸ்மாத் என்று ஹேதுக்களால் நிகமனமாக சாதித்து வருகின்றன
இயம் பூயோ பூய புநரபி ச பூய புநரபி
ஸ்புடம் விஜ்ஞாப்சாமித்யக் அகதி அபுதஸ் அநந்ய சரண
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர் அஸ்மீ த்யநவதே
தயாயாஸ் தே பாத்ரம் வந கிரி பதே ஸூந்தர புஜ -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -–132–
இந்த ஸ்லோகத்தை இங்கே அனுசரிப்பது ஸ்பஷ்டம்
ஸ்துதி ஆரம்பம் -2 ஸ்லோகம் ஆழ்வான் நினைவுடன் தொடங்கி ஆழ்வான் ஸ்மரணத்தோடே நிகமிக்கிறார்
அநந்ய சரணோ பவதி
தன்னிடம் குணம் ஒன்றும் இல்லை -ஞானமும் இல்லை
கருணைக் கடலான எம்பெருமானார் தயையை சரணம் பற்றுவதைத் தவிர வேறே கதி இல்லை
அவர் உடன் சம்பந்தத்தைத் தேடி அவரது அருளை –
கடாக்ஷத்தைப் பெறுவது தவிர வேறே புகல் இல்லை
இதி மத்வா –
என்று நினைத்து
ப்ரணத இதி தயாளு என்றபடி தாம் இருக்கும் இடம் –
சரணம் –
வீடு -வந்து பூமியில் நிபதினான காயினை சரணாகத்தான் என்று தம் நினைவாலே நினைத்து
கிருபையால் பரிபாலனம் பண்ணி அருளினார்
என்னுடைய துர் வ்ருத்தத்தை -துர் நடத்தையை
அசிந்த்யித்வ
நினையாமல் -அக்ருத்ரிமமாய் -வேஷம் இல்லாமல் முழு உண்மையாக உம் திருவடிகளில்
உயர்வற உயர்ந்த நிரதிசய ப்ரீதியை யுடைய ஆத்மாவான நாதமுனிகளை உத்தேசித்து
தேவரீர் பிரசாதம் செய்து அருள வேண்டும் -அங்கீ கரிக்க வேண்டும் என்று ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் முடிந்தது
அங்கெ ஸ்ரீ ராமனிடம் ஸ்ரீ நாதமுனிகளுக்கு அக்ருத்ரிமமான பக்தி இருந்தது என்றும்
காகாதி பக்தி எல்லாம் வேஷமே என்றும் ஸூசிதம்
காகம் இடத்தில் போல் பக்தி என்னிடம் க்ருத்ரிமமாய் இருந்தாலும் என்னைச் சரணாகதனாகவே
நீர் திரு உள்ளம் பற்றி என்னை ரக்ஷித்து அருள வேணும் என்று நிகமனம் செய்து அருளுகிறார் –
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–