ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -66–ஸ்ரீ கோபீ ஜன ஆஹ்லாதனம் –

உபயாதா நாம் ஸூத் ருசாம் குஸூ மாயுத பாண பாத விவசா நாம்
அபி வாஞ்சிதம் விதா தும் க்ருத மதிரபி தா ஜகாத வாம மிவ –1-

தங்கள் அருகே நின்ற கோபிமார்கள் மயங்கி நின்றார்கள் –
அவர்கள் விருப்பத்தைப் பற்றித் தெரிந்து இருந்தும் நேர் மாறாகப் பேசினீர்கள் –

கக நகதம் முனி நிவஹம் ஸ்ரா வயிதும் ஐகித குல வதூ தர்மம்
தர்ம்யம் கலு தே வசனம் கர்ம து நோ நிர்மலஸ்ய விஸ் வாஸ் யம் –2-

வானத்தில் கூடி இருக்கும் முனிவர்களும் -உலக மக்களும் கேட்பதற்காக குடும்பப் பெண்களின்
தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு எடுத்துக் கூறினீர்கள் –
தர்மம் நிறைந்த அச் சொற்களைக் கடைப்பிடிக்க வேண்டும் –
உம்முடைய செய்கைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது –

ஆகர்ண்ய தே பிரதீ பாம் வாணீ மே ணீ த்ருஸ பரம் தீநா
மா மா கருணா ஸிந்தோ பரித்ய ஜேத்யதி சிரம் விலே புஸ் தா –3-

நேர் மாறான தங்கள் வார்த்தைகளைக் கேட்ட கோபியர் மிகுந்த சோகம் அடைந்தனர் –
கருணைக் கடலே அடியோங்களைப் புறக் கணிக்காதீர்கள் என்று புலம்பினார்கள் –

தாஸாம் ருதி தைர் லபிதை கருணா குல மாநஸோ முராரே த்வம்
தாபிஸ் சமம் ப்ரவ்ருத்தோ யமுனா புலி நேஷு காம ரபி ரந்தும் –4-

முரனைக் கொன்றவன் அவர்கள் புலம்பிக் கொண்டு அழுவதைப் பார்த்த தாங்கள்
கருணை கொண்டீர்கள் –
யமுனைக் கரையில் மணல் குன்றுகளில் அவர்களுடன் விளையாடினீர்கள் –

சந்த்ர கரஸ் யந்தல ஸத் ஸூ ந்தர யமுநா தடாந்த வீதீ ஷு
கோபீ ஜனோத் தரீயை ராபாதித ஸம்ஸ்தரோ ந்யஷீ தஸ் த்வம் –5-

நில ஒளி வீசும் யமுனைக் கரையில் மணல் குன்றுகளில் கோபிகள் மேல் ஆடையினால்
தங்களுக்கு ஆசனம் அமைத்தார்கள் -அதில் தங்கள் அமர்ந்தீர்கள் –

ஸூ மதுர நர்மாலபநை கர ஸம் க்ரஹனைஸ் ச சும்ப நோல்லாஸை
காடா லிங்கந சங்கைஸ் த்வ மங்க நா லோக மா குலீ சக்ரு ஷே –6-

கைகளைப் பிடித்தும் முத்தம் இட்டும் கட்டி அணைத்தும் இனிமையைப் பேசியும்
அந்த கோபிகைகள் மனங்களை மயக்கி அவர்களை மகிழ்வித்தீர்கள் –

வாஸோ ஹரணதி நே யத்வா ஸோ ஹரணம் ப்ரதி ஸ்ருதம் தாஸாம்
ததபி விபோ ரஸ விவஸஸ் வாந்தா நாம் காந்த ஸூப்ருவாமத தா –7-

முன்பு ஆடைகளைக் கவர்ந்த போது தங்கள் கொடுத்த வாக்கின் படி தங்கள் செய்கையால்
மனம் கலங்கிய அந்தப் பெண்களின் ஆடைகளை மீண்டும் கவர்ந்தீர்கள் –

கந்த லித கர்ம லேஸம் குந்தம் ருதுஸ் மேர வக்த்ர பாதோ ஜம்
நந்த ஸூ த த்வாம் த்ரி ஜகத் ஸூ ந்தர முப கூஹ்ய நந்திதா பாலா –8-

நந்தனின் புத்திரனே குந்த மலர் போல் மந்தஹாசம் செய்தீர் -தாமரை போன்ற தங்கள் திரு முகம்
சிறு வியர்வைத் துளிகளால் நிறைந்து இருந்தது – மூ உலகிலும் அழகு வாய்ந்த தங்களை
அப் பெண்கள் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள் –

விரஹேஷ் வங்கா ரமய ஸ்ருங்கார மயஸ் ச சங்க மே ஹி த்வம்
நிதார மங்கா ரமயஸ் தத்ர புனஸ் சங்கமே அபி சித்ரமிதம் –9-

தங்களைப் பிரியும் போது நெருப்பைப் போல் தாபம் அளிப்பவராயும் – சேரும் போது
ஸ்ருங்காரமாகவும் இருப்பீர்கள்
ஆனால் இப்போதோ சேர்க்கையிலும் அளவில்லாத ஆனந்தம் அளிப்பவராய் இருக்கிறீர்கள் -ஆச்சர்யம் –

ராதா துங்க பயோதர சாது பரீ ரம்ப லோலு பாத்மா நம்
ஆராதயே பவந்தம் பவன புராதீச சமய சகல கதான் –10-

உயர்ந்த கொங்கைகளை யுடைய ராதையைத் தழுவ எண்ணம் கொண்ட தங்களையே தொழுகிறேன்
அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: