ஆலோக்ய சைலோத் தரணாதி ரூபம் ப்ரபாவ முச்சைஸ் தவ கோப லோகா
விஸ்வேஸ்வரம் த்வாம் அபி மத்ய விஸ்வ நந்தம் பவஜ் ஜாதக மன்வ ப்ருஸ் சந் –1-
மலையைத் தூக்கியது முதலிய தங்கள் மஹிமையைப் பார்த்த கோபர்கள் தங்களை
உலகிற்கு எல்லாம் நாயகன் என்று உணர்ந்தனர் –
நந்தகோபன் இடம் தங்கள் ஜாதகத்தின் பலனைக் கேட்டார்கள் –
கர்கோதி தோ நிர் கதி தோ நிஜாய வர்காய தாதே ந தவ ப்ரபாவ
பூர்வாதி கஸ் த்வய் யநுராக ஏஷா மை திஷ்ட தாவத் பஹு மாந பார –2-
அவர்கள் இடம் நந்தகோபர் முன்பு கர்க்க முனிவர் கூறியவற்றைச் சொன்னார் –
அவர்கள் தங்கள் மேல் அன்பும் பாசமும் கொண்டனர் –
ததோ அவ மாநோதி ததத்த்வ போத ஸூராதி ராஜ ஸஹ திவ்ய கவ்யா
உபேத்ய துஷ்டாவ ச நஷ்ட கர்வ ஸ் ப்ருஷ்ட்வா பதாப்ஜம் மணி மௌலிநா தே –3-
தோல்வி அடைந்த இந்திரன் கர்வத்தை விட்டு தங்களைப் புகழ்ந்து ஸ்துதித்து
காமதேனுவைத் தங்களுக்குப் பரிசாக அளித்தான்
ஸ்நேஹஸ் நுதைஸ் த்வாம் ஸூ ரபி பயோபிர்
கோவிந்த நாமாங்கித மப்ய ஷிஞ்சித்
ஐராவதோ பாஹ்ருத திவ்ய கங்கா
பாதோபிர் இந்த்ரோ அபி ச ஜாத ஹர்ஷ –4-
காமதேனு என்ற அந்தப்பசு பாலைச் சுரந்து தங்களுக்கு கோவிந்தன் என்ற
திரு நாமம் சூட்டி திரு அபிஷேகம் செய்தது –
இந்திரனும் ஐராவதம் கொண்டு வந்த கங்கா தீர்த்தம் கொண்டு திரு அபிஷேகம் செய்தான் –
தங்கள் திருவடித் தாமரைகளில் தலை வைத்து வணங்கினான் –
ஜகத் த்ரயே ஸே த்வயி கோகுலே ஸே ததா அபி ஷிக்தே சதி கோப வாட
நாகே அபி வைகுண்ட பதே அப்ய லப்யாம் ஸ்ரி யம் ப்ரபேதே பவத ப்ரபாவாத் –5-
தங்களுக்கு கோவிந்தன் என்ற பட்டாபிஷேகம் செய்ததும் திரு ஆயர்பாடியில்
ஸ்ரீ வைகுண்டத்திலும் சுவர்க்கத்தில் கிடைக்காத ஐஸ்வர்யம் நிறைந்தது –
கதா சிதந்தர்ய முநம் ப்ரபாதே ஸ்நாயன் பிதா வாருண பூருஷே ண
நீதஸ் தமா நேது மகா புரீம் த்வம் தாம் வாருணீம் காரண மர்த்ய ரூப –6-
ஒரு நாள் தங்கள் தந்தை ஏகாதசி விரதம் இருந்து துவாதசி விடியல் காலை என்று
நினைத்து இரவில் யமுனையில் நீராடினார்
வருணனின் வேலையாளாந ஒரு அசுரன் அவரை இழுத்துச் சென்றான்
உலகம் நன்மைக்காக திரு அவதாரம் செய்த தாங்கள் உடனே வருண லோகம் சென்றான் –
ச ஸம் பிரமம் தேந ஜலதி பேந பிர பூஜிதஸ் த்வம் ப்ரதி க்ருஹ்ய தாதம்
உபாகதஸ் தத் க்ஷண மாத்ம கேஹம் பிதா அவதத் தச் சரிதம் நிஜேப்ய –7-
தங்களைக் கண்ட வருணன் பக்தியுடன் தொழுது தங்களுக்கு பூஜை செய்தான் –
அதே நொடியில் தாங்கள் நந்த கோபரை
அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றீர்கள்–நந்த கோபரும் தன் சுற்றத்தார் இடம்
அதைப் பற்றிக் கூறினார் —
ஹரிம் விநிஸ் சித்ய பவந்த மேதான் பகத் பதா லோகந பத்த த்ருஷ்ணா ந்
நிரீஷ்ய விஷ்ணோ பரமம் பதம் தத் துராப மன்யைஸ் த்வ மதீத்ரு சஸ்தான் –8-
ஆயர்கள் தங்களை ஸ்ரீ ஹரியே என்று நிச்சயித்து தங்கள் இருப்பிடமான ஸ்ரீ வைகுண்டத்தை
காண விரும்பினார்கள்
எங்கும் நிறைந்து இருக்கும் தாங்கள் அவர்களுக்கு ஸ்ரீ வைகுண்டத்தைக் காண்பித்து அருளினீர்களே –
ஸ்புரத் பரா நந்த ரஸ ப்ரவாஹ ப்ர பூர்ண கைவல்ய மஹா பயோதவ்
சிரம் நிமக் நா கலு கோப ஸங்காஸ் த்வயைவ பூமன் புனருத்த்ரு தாஸ்தே –9-
ஸ்ரீ வைகுண்டத்தைக் கண்ட கோபர்கள் ஆனந்த நிலையை அடைந்து கைவல்யம் ஆகிற
மோக்ஷம் என்கிற சமுத்திரத்தில் மூழ்கினார்கள்
அவர்களை மீண்டும் உலக நிலைக்கு உணர்வு வரச் செய்து அழைத்து -வந்தீர்கள் –
கர பத ரவ தேவம் தேவ குத்ராவதாரே நிஜ பத மந வாப்யம் தர்சிதம் பக்தி பாஜாம்
ததிஹ பஸூ பரூ பீ த்வம் ஹி ஸாஷாத் பராத்ம பவன புர நிவாஸின் பாஹி மாமா மயேப்ய –10-
யாராலும் அடைய முடியாத ஸ்ரீ வைகுண்ட லோகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டி அருளினீர்கள் –
எந்த அவதாரத்தில் இல்லாத இடையன் வேஷம்
பூண்ட இந்த அவதாரத்தில் ப்ரத்யக்ஷமாக காட்டி அருளினீர்களே –
அடியேனை ஸ்ரீ குருவாயூரப்பா ரக்ஷித்து அருள வேணும் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply