ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -62–ஸ்ரீ கோவர்தன பலி-

கதாசித் கோபாலான் விஹித மக சம்பா ரவி பாவான்
நிரீஷ்ய த்வம் ஸு வ்ரே மகவமத முத்த்வம் சிது மநா
விஜா நந்நப் யே தான் விநயம் ருது நந்தாதி ப ஸூ பா
நப்ருச்ச கோவா அயம் ஜனக பவதா முத் யம இதி –1-

ஒரு முறை இடையர்கள் இந்திரனைப் பூஜிக்க பொருள்களைச் சேகரித்துக் கொண்டு இருந்தார்கள் –
தாங்கள் இந்திரனின் கர்வத்தை அடக்க திரு உள்ளம் கொண்டீர்கள்
தங்கள் தந்தையிடம் இந்த ஏற்பாடுகள் எதற்கு என்று அறியாதவர் போல் கேட்டீர்கள் –

பபா ஷே நந்தஸ் த்வாம் ஸூத நநு விதேயோ மகவதோ
மகோ வர்ஷே வர்ஷே ஸூக யதி ச வர்ஷே ண ப்ருதிவீம்
ந்ருணாம் வர்ஷா யத்தம் நிகில முப ஜீவ்யம் மஹி தலே
விசேஷாதஸ் மாகம் த்ருண சலில ஜீவா ஹி பஸவ –2-

நந்தனும் -மகனே இந்திரன் மழை பொழியச் செய்து நம் பூமியை செழிப்பாக வைக்கிறார் –
அதனால் அவருக்கு ஒவ் ஒரு வருஷமும் பூஜை செய்ய வேண்டும் –
அனைவரின் பிழைப்பும் மழை மூலம் ஏற்படுகிறது –
பசுக்களும் நீரையும் புல்லையும் நம்பி இருக்கின்றன -என்று கூறினார் –

இதி ஸ்ருத்வா வாசம் பிதுரயி பவாநாஹ ஸரஸம்
திகே தந்நோ ஸத்யம் மக வஜ நிதா வ்ருஷ்டிரிதி யத்
அத்ருஷ்டம் ஜீவாநாம் ஸ்ருஜதி கலு வ்ருஷ்டிம் சமுசிதாம்
மஹாரண்யே வ்ருஷா கிமவ பலி மிந்த்ராய தததே –3-

தந்தையின் சொல் கேட்டு -இந்திரனால் மலை கிடைக்கிறது என்பது உண்மை அல்ல –
நாம் முன் ஜென்மத்தில் செய்த தர்மத்தால் மழை பெய்கிறது -காட்டில் உள்ள மரங்கள்
இந்திரனுக்கு என்ன பூஜை செய்கின்றன என்று சாமர்த்தியத்தால் பதில் சொன்னீர் –

இதம் தாவத் ஸத்யம் யதிஹ பசவோ ந குல தனம்
ததா ஜீவ்யா யாஸவ் பலி ரசல பர்த்ரே சமுசித
ஸூ ரேப்யோ அப்யுத் க்ருஷ்டா நநு தரணி தேவா ஷிதி தலே
ததஸ்தே அப்யா ராத்யா இதி ஜகதித த்வம் நிஜ ஐநா ன் –4–

இந்தப் பசுக்கள் நம் இடையர்கள் சொத்து -அவர்களுக்கு புல்லும் நீரையும் கொடுப்பது கோவர்த்தன மலை –
அதனால் கோவர்த்தன மலைக்கும் தேவர்களை விடச் சிறந்த முனிவர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்
என்று கூறினீர் –

பவத் வாஸம் ஸ்ருத்வா பஹு மதி யுதாஸ் தே அபி பஸூ பா
த்வி ஜேந்த்ரா தர்சந்தோ பலி மதது ருச்சை ஷிதி ப்ருதே
வ்யது ப்ரா தக்ஷிண்யம் ஸூ ப்ருஸ மந மந்நாத ரயுதா
ஸ்தவ மாதஸ் சைலாத்மா பலி மகில மா பீரபுரத –5–

அதைக் கேட்ட இடையர்கள் முனிவர்களையும் கோவர்த்தன மலையையும் பூஜித்தனர் –
பிறகு மலையை வளம் வந்து நமஸ்கரித்தனர்
அனைத்து பூஜைகளையும் தாங்களே மலை வடிவில் ஏற்றுக் கொண்டீர் –

அவோசஸ் சைவம் தான் கிமஹ விததம் மேனி கதிதம்
கிரீந்த்ரோ நன்வேஷ ஸ்வ பலி முப புங்க்தே ஸ் வ வபுஷா
அயம் கோத்ரோ கோத்ரத் விஷி ச குபிதே ரஷிது மலம்
ஸமஸ்தா நித் யுக்தா ஜஹ்ரு ஷுரகிலா கோகுல ஜூஷ –6

இடையர்கள் இடம் நான் சொன்னது போல் இம்மலை பூஜையை ஏற்றுக் கொண்டது -அதனால் இந்திரன்
கோபித்துக் கொண்டாலும் இம்மலையே நம் எல்லாரையும் ரக்ஷிக்கும் என்று கூறினீர்கள் –

பரி ப்ரீதா யாதா கலு பவது பேதா வ்ரஜ ஜூ ஷோ
வ்ரஜம் யாவத் தாவன் நிஜ மக வி பங்கம் நிச மயன்
பவந்தம் ஜாநன் நப்யதி கரஜசா அ அ க்ராந்த ஹ்ருதயோ
ந ஸே ஹே தேவேந்திரஸ் த்வது பரசி தாத் மோன் நதி ரபி –7-

அனைவரும் மகிச்சியுடன் வீடு சென்றனர் -தனக்குச் சேர வேண்டிய பூஜையில் இடையூறு
ஏற்டபட்டதைக் கேட்ட இந்திரன் கோபம் கொண்டான்
தங்களைப் பற்றியும் தங்களால் கிடைத்த பதவியைப் பற்றியும் அறிந்து இருந்தும்
மிகுந்த அஹங்காரத்தால் கோபம் அடைந்தான் —

மனுஷ்யத்வம் யாதோ மது பிதபி தேவேஷ் வவி நயம்
விதத்தே சேன் நஷ்டஸ் த்ரித சஸ தஸாம் கோ அபி மஹி மா
ததஸ் ச த்வம் சிஷ்யே பஸூ பஹத கஸ்ய ஸ்ரியமிதி
ப்ரவ்ருத்தஸ் த்வாம் ஜேதும் ச கில மக வா துர் மத நிதி –8-

நாராயணனே மானுஷ அவதாரம் எடுத்து இவ்வாறு செய்வது தேவர்களுக்கு ஒரு குறை அல்லவா –
இடையர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்கிறேன் என்று இந்திரன் ஆர்பரித்தான் –

த்வதா வாஸம் ஹந்தும் ப்ரலய ஜலதா நம் பர புவி
ப்ரஹிண் வந்பி ப்ராண குலிச மயம ப்ரே பகம ந
ப்ரதஸ்தே அந்யை ரந்தர் தஹ நமரு தாத்யை விம்ஹசிதோ
பவன் மாயா நைவ த்ரி புவன பதே மோஹ யதி கம் –9-

ஐரா வதம் என்ற யானையின் மீது ஏறிக் கொண்டு வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு
பிரளய காலத்து மேகங்களை உருவாக்கி இடையர்கள் இருப்பிடத்தை அழிக்கப் புறப்பட்டான்
பின் தொடர்ந்த அக்னி வாயு முதலிய மற்ற தேவர்கள் மனதிற்கும் பரிகசித்தார்கள் –
மூ உலகிற்கும் நாயகனே உமது மாயையை யாரால் வெல்ல முடியும் –

ஸூ ரேந்த்ர க்ருத் தஸ் சேத் த்விஜ கருணயா சைல க்ருபயா
அப்ய நாதங்கோ அஸ்மாகம் நியத இதி விச்வாஸ்ய பஸூ பான்
அஹோ கிந் நாயாதோ கிரி பிதி தி சஞ்சிந்த்ய நிவஸன்
மருத் கேஹா தீச பிரணுத முர வைரின் மம கதான் –10-

இந்திரனால் நமக்கு ஒரு கெடுதலும் நேராது -முனிவர்களும் கோவர்த்தன மலையும் நிச்சயம்
நம்மை ரக்ஷிப்பார்கள் என்று இடையர்களுக்கு சமாதானம் கூறினீர்கள் –
இந்திரன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தீர்
முரனை நிரசித்த ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: