ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -67–ஸ்ரீ– கிருஷ்ண திரு தானம் -ததா புன ப்ரத்யஷீ பூய கோபிகா ப்ரீணனம்

ஸ்புரத் பரா நந்த ரஸாத் மகே ந த்வயா சமா சாதி தபோ கலீ லா
அஸீ மமா நந்த பரம் ப்ரபந்நா மஹாந்த மாபுர் மத மம்பு ஜாஷ்ய –1–

பரமானந்த ரூபியான தங்களுடன் காதல் லீலைகளில் மூழ்கி இருந்த கோபியர்கள்
அளவற்ற ஆனந்தம் அடைந்ததால் மிகுந்த கர்வம் கொண்டார்கள் –

நி லீ யதே அசவ் மயி மய்ய மாயம் ரமா பதிர் விஸ்வ மநோபி ராம
இதி ஸ்ம ஸர்வா கலிதாபி மாநா நிரீஷ்ய கோவிந்த் திரோ ஹிதோ அபூ –2-

உலகிலேயே அழகான கண்ணன் என்னிடம் மட்டுமே அன்பு பூண்டு இருந்தான் என்று
ஒவ்வொரு கோபியரும் நினைத்தார்கள் –
அதனால் மிகவும் கர்வம் கொண்டவர் ஆனார்கள் –அத்தை அறிந்த கோவிந்தனான
தேவரீர் அந்த நொடியிலே மறைந்து போனீர்கள் –

ராதா பிதாம் தாவத ஜாத கர்வா மதி ப்ரியாம் கோப வதூம் முராரே
பவா நு பாதாய கதோ விதூரம் தயா ஸஹ ஸ்வைர விஹார காரீ –3-

ராதை என்ற கோபி மட்டும் கர்வம் இல்லாமல் தங்கள் இடம் மிகுந்த அன்பு கொண்டாள் –
அவளை மட்டும் அழைத்துக் கொண்டு வேலு தூரம் சென்று அவளுடன் லீலா ரசம் அனுபவித்தீர் –

திரோ ஹிதே அத த்வயி ஜாத தாபா சமம் சமேதா கமலாய தாஷ்ய
வநே வநே த்வாம் பரி மார்க யந்த்யோ விஷாத மாபுர் பக வன்ன பாரம் –4-

தாங்கள் மறைந்ததால் கோபியர் மிகவும் துயரம் அடைந்தனர் -அனைவரும் ஓன்று கூடி
கானகம் முழுவதும் தங்களைத் தேடினார்கள் –
தாங்கள் கிடைக்காததால் வருத்தம் அடைந்தனர் –

ஹா சூத ஹா சம்பக கர்ணி கார ஹா மல்லிகே மாலதி பால வல்ய
கிம் வீஷீ தோ நோ ஹ்ருதயைக சோர இத்யாதி தாஸ் த்வத் பிரவணா வி லேபு –5-

மா மரமே -செண்பக மரமே -கர்ணி கார மரமே – மல்லிகைக் கொடியே -மாலதியே –
எங்கள் கண்ணனைக் கண்டீர்களா என்று மரங்களையும் கொடிகளையும் கேட்டு
கவலையுடன் புலம்பினார்கள் –

நிரீ ஷிதோ அயம் சகி பங்க ஜாஷ புரோ மமேத்யா குல மால பந்தீ
த்வாம் பாவ நாச ஷு ஷி வீஷ்ய காசித் தாபம் ஸகீ நாம் த்வி குணீ சகார –6-

கோபிகை ஒருத்தி கற்பனையில் தங்களைக் கண்டு மற்ற கோபியர் இடம் கண்ணனை
நான் எதிரில் பார்த்தேன் என்று கூற
அத்தைக் கேட்ட மற்ற கோபியர்கள் அதிகம் துன்பம் அடைந்தார்கள் –

த்வதாத் மிகாஸ்தா யமுனா தடாந்தே தவானு சக்ரு கில சேஷ்டிதாநி
வி சித்ய பூயோ அபி ததைவ மாநாத் த்வயா விமுக்தாம் தத்ரு ஸூஸ் ச ராதாம் –7-

அவர்கள் எல்லாரும் எப்பொழுதும் தங்களையே நினைத்து தங்கள் சேஷ்டிதங்களைப்
பற்றியே பேசி வந்தார்கள் –
அப்போது ராதையைத் தனியே கண்டனர் – அவளும் கர்வம் கொண்டதால்
அவளையும் விட்டு மாயையால் மறைந்தீர்கள் –

தத சமம் தா விபநே சமந்தாத்தமோ வாதாரவதி மார்க யந்த்ய
புனர் விமிஸ்ரா யமுனா தடாந்தே ப்ருசம் விலே புஸ் ச ஜகுர் குணாம்ஸ் தே –8-

அனைவரும் ராதையுடன் கூட இருட்டும் வரை கானகத்தில் தேடிமார்கள் –
மனம் கலங்கி மீண்டும் யமுனைக் கரைக்கு வந்து புலம்பினார்கள்
தங்களுடைய கல்யாண குணங்களை பாடினார்கள் –

ததா வ்யதா சங்குல மானஸா நாம் வ்ரஜாங்க நாநாம் கருணைக ஸிந்தோ

ஜகத் த்ரயீ மோஹன மோஹ நாத்மா த்வம் ப்ராது ராஸீ ரயி மந்த ஹாஸீ –9-

கருணைக் கடலே துன்பம் அடைந்த மனத்தை உடைய கோபியரின் முன் மன்மதனையும்
மயங்கச் செய்யும் அழகுடன்
மூ உலகங்களையும் மயக்கும் மந்த ஹாஸத்துடனும் தங்கள் தோன்றினீர்கள் –

சந் நிக்த சந் தர்சன மாத்ம காந்தம் த்வாம் வீஷ்ய தன்வய ஸஹஸா ததா நீம்
கிம் கிம் ந சக்ரு பிரமதாதி பாராத் ச த்வம் கதாத் பாலய மாருதேச –10-

தங்களை நேரில் கண்ட அப்பெண்கள் மகிழ்ச்சியை வித விதமாக வெளிப்படுத்தினார்கள் –
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: