கோபீ ஜநாய கதிதம் நியமா வசாநே
மாரோத் சவம் த்வமத சாதியிதும் ப்ரவ்ருத்த
சாந்த்ரேண ஸாந்த்ர மஹஸா சிசி ரீக்ருதாஸே
ப்ரா பூரயோ முரலிகாம் யமுனா வநாந்தே –1-
காத்யாயினி பூஜை முடிவில் தாங்கள் முன்பே கோபியர் இடம் கூறிய படியே
நில ஒளியில் யமுனைக் கரையில் குழலூதினீர்கள் –
ப்ராயஸ் ததா3ஹ்வாந விதவ்4 நியோக்தும் ப்ரக்3ருஹ்ய வேணும் ப்ரதிபந்ந தூ3த்யம்
ந்யேவஷயத் குட்மலிதே ஸரிலம் பி3ம்பா3த4ேர ஸூசித சித்தராக (-ஸ்ரீ யாதவாப்யுதயம்–8-45)
தூது செய்யும் திறங்கொண்ட தன் குழலைக் கை யெடுத்துக் காதலரை அழைத்து வரும் காரியத்தில் விடுக்கத்
தன் காதலினை வெளிப் படுத்தும் கருத்துடனே செம் பவள அதரத்தை அழகுடனே அக் குழலில் வைத்தனனே !
தூது செய்யும் தன் புல்லாங்குழலை எடுத்து அவர் களை அழைக்கும் நோக்குைடையவனாகி தன் சித்தத்திலே உள்ள
ராகத்தை (காதலை ) தெரிவிப்பது போல் ராகமுள்ளதான ( சிவந்ததான) திருப்பவளத்தை மூடிக் கொண்டு அதில் அப்புல்லாங்குழலை அமத்தினான்.
ஸம் மூர்ச நாபி ருதி தஸ்வர மண்டலாபி
ஸம் மூர்ச யந்த மகிலம் புவனாந்தராலம்
த்வத் வேணு நாத முப கர்ண்ய விபோ தருண்யஸ்
தத் சாத்ருசம் கமபி சித்த விமோஹ மாபு –2-
தங்கள் புல்லாங்குழலில் இருந்து கிளம்பிய ஏழு ஸ்வரங்களால் உண்டான நாதம்
உலகம் முழுவதையும் மயங்கச் செய்தது –
அதைக் கேட்ட கோபியர்களும் சொல்ல ஒண்ணாத மதி மயக்கம் கொண்டனர்-
தா கேஹ க்ருத்ய நிரதாஸ் தனய ப்ரஸக்தா
காந்தோப சேவந பராஸ் ச ஸரோரு ஹாஷ்யா
சர்வம் விஸ்ருஜ்ய முரளீ ரவ மோஹி தாஸ்தே
காந்தார தேச மயி காந்த த நோ சமேதா –3-
வீட்டு வேளையில் ஈடு பட்டுக் கொண்டும் குழந்தைகளை கவனித்துக் கொண்டும்
கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டும் இருந்த கோபிமார்கள்
தங்கள் குழலோசையைக் கேட்டதும் மனம் மயங்கி எல்லாவற்றையும் விட்டு விட்டு
உம்மைத் தேடி ஓடி வந்தார்கள் –
காஸ் சிந்நி ஜாங்க பரி பூஷண மாத தா நா
வேணு ப்ரணாத முப கர்ண்ய க்ருதார்த்த பூஷா
த்வாம் ஆகதா நநு ததைவ விபூஷி தாப்ய
ஸ்தா ஏவ ஸம் ருரு சிரே தவ லோச நாய–4-
சில கோபியர் பாதி நகைகளைப் போட்டுக் கொண்டும் பாதி அலங்கரித்துக் கொண்டும் ஓடி வந்தார்கள் –
நன்கு அலங்கரித்துக் கொண்டவர்களை விட பாதி அலங்கரித்துக் கொண்டு வந்தவர்களே
தங்களுக்கு மிக அழகாக த் தெரிந்தனர் –
ஹாரம் நிதம்ப புவி காசந தாரயந்தீ
காஞ்சீம் ச கண்ட புவி தேவ சமாகதா த்வாம்
ஹாரித்வ மாத்ம ஜக நஸ்ய முகுந்த துப்யம்
வ்யக்தம் ப பாஷ இவம் முக்த முகீ விசேஷாத் –5-
ஒரு பெண் தன் கழுத்தில் ஒட்டியாணத்தையும் இடுப்பில் ஹாரத்தையும் மாற்றி அணிந்து கொண்டு வந்தாள்
அவள் தங்களோடு பேசியது மனதை மயக்கும் தன் இடை அழகைக் கூறுவது போல் தோன்றியது –
காசித் குஸே புனர ஸஞ்ஜித கஞ்சு லீகா
வ்யாமோஹத பரவ தூபி ர லஷ்ய மாணா
த்வா மாயயவ் நிருபம ப்ரணயாதி பார
ராஜ்யாபிஷேக விதயே காலஸீத ரேவ –6-
மற்ற ஒரு பெண் அதிக அன்பினால் ரவிக்கை அணிய மறந்து மற்றவர்களுக்குத் தெரியாமல்
ஓடி வந்தாள் –அவள் ஓடி வந்து தங்களுக்கு அன்பு ஆகிற பாரத்தை அபிஷேகம் செய்ய
இரு குடங்களை எடுத்து வந்தது போலத் தோன்றியது –
காஸ் சித் க்ருஹாத் கில நிரேதும பார யந்த்யஸ்
த்வாமேவ தேவ ஹ்ருதயே ஸூ த்ருடம் வி பாவ்ய
தேஹம் விதூய பரசீத் ஸூ க ரூப மேகம்
த்வாமா விசன் பரமிமா நநு தன்ய தன்யா –7-
கணவர்களாலும் வீட்டில் உள்ள வர்களாலும் தடுக்கப்பட்ட சில பெண்கள் தங்களை
மனதால் தியானம் செய்தார்கள் –
அவர்கள் உடலை விட்டு ஆனந்த வடிவமான உம்மை அடைந்தனர் –
அவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆனார்கள் –
ஜாராத்மநா ந பரமாத்ம தயா ஸ்ம ரந்த்யோ
நார்யோ கதா பரம ஹம்ஸ கதிம் ஷணேந
தம் த்வாம் ப்ரகாஸ பரமாத்ம த நும் கதஞ்சித்
சித்தே வஹந்தம் ருதமஸ்ரம மஸ்நு வீய –8-
அந்தப் பெண்கள் எவரும் தங்களைப் பரமாத்மா என நினைத்து வரவில்லை –
காதலனாகவே நினைத்து வந்தனர் –
ஆயினும் துறவிகள் அடையக் கூடிய முக்தியை நொடியில் அடைந்தனர் –
அடியேனும் அதே போல் பரமாத்ம ஸ்வரூபமான தங்களை
மனதில் தியானம் செய்து மோக்ஷத்தை அடைவேனோ –
அப்யாகதாபி ரபிதோ வ்ரஜ ஸூ ந்தரீபிர்
முக்தஸ் மிதார்த் ரவதந கருணா வ லோகீ
நிஸ் ஸீம காந்தி ஜலதிஸ் த்வம வேஷ்ய மானோ
விஸ்வை கஹ் ருத்ய ஹர மே பவநேச ரோகா ந் –9–
கருணா கடாக்ஷத்தாலும் மந்தஹாசத்தாலும் அழகாய் விளங்கும் தங்களைக் கோபிமார்கள்
பார்த்துக் கொண்டே இருந்தார்கள்
உலகோர் கண்ணையும் நெஞ்சையும் கவரும் தாங்கள் அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply