தத்ரு சிரே கில தத் க்ஷணமஷ தஸ் த நிதஜ் ரும்பி த கம்பி ததிக் தடா
ஸூ ஷ மயா பவ தங்க துலாம் கதா வ்ரஜ பதோ பரி வாரித ராஸ் த்வயா –1-
அப்பொழுது கோகுலத்திற்கு மேல் எங்கும் கருமேகங்கள் சூழ்ந்தன. அந்த மேகங்கள் தங்களது
திருமேனியைப் போல் காணப் பட்டன. வானில் தொடர்ந்து உண்டான இடி முழக்கத்தால் அனைத்து
திசைகளும் நடுங்கின. -இவை யனைத்தையும் தாங்கள் பார்த்தீர்கள் அல்லவா?
விபுல கரக மிஸ்ரைஸ் தோயதாரா நிபாதைர் திசிதி ஸி பஸூ பாநாம் மண்டலே தண்ட்ய மாநே
குபித ஹரி க்ருதாந்ந பாஹி பாஹீ தி தேஷாம் வசன மஜித ஸ்ர் ருண்வந் மாபி பீ தேத்ய பாணீ –2-
எவராலும் வெல்லப்பட முடியாத பகவானே! பெரிய பெரிய ஆலங்கட்டியுடன் எங்கும் இடைவிடாது மழை கொட்டியது.
அதனால் துன்பமடைந்த கோபர்கள், கிருஷ்ணா! இந்திரனுடைய சினத்திலிருந்து எங்களைக் காப்பாற்று ! காப்பாற்று!’
என்று அலற, அவர்களது கூக்குரலைக் கேட்ட தாங்கள் பயப்படாதீர்கள்’ என்று அவர்களிடம் கூறினீர்கள்.
குல இஹ கலு கோத்ரோ தைவதம் கோத்ர சத்ரோர் விஹிதி மிஹ ச ருந்த்யாத் கோ நு வ சம்சயோ அஸ்மின்
இதி ஸஹ சித வாதீ தேவ கோவர்த்த நாத்ரிம் த்வரித முத மு மூலோ மூலதோ பால தோர்ப்யாம் –3-
இந்த நம் கோகுலத்திற்கு (பசுக் கூட்டங்களையும், நம்மையும் காப்பாற்றும் ) தெய்வம் –
இந்த கோவர்த்தன மலை தான். மலைகளுக்குப் பகைவனான இந்திரனிடமிருந்து தோன்றும் நாசத்தை
இந்தத் தெய்வம் கட்டாயம் தடுக்கும். இதில் உங்களுக்கு ஏன் சந்தேகம்?’ என்று சிரித்துக் கொண்டே
கூறிய தாங்கள், கோவர்த்தன மலையைத் தங்களது இளங்கைகளால் அடியோடு பிடுங்கித் தூக்கினீர்கள்.
தத நு கிரி வரஸ்ய ப்ரோத்த்ருதஸ் யாஸ்ய தாவத் ஸிகதிலம் ருது தேசே தூரதோ வாரி தாபே
பரிகர பரி மிஸ்ரான் தேநு கோபா நதஸ்தா துப நித தத தத்தா ஹஸ்த பத்மே ந சைலம் –4-
அப்படி மேலே தூக்கப்பட்ட மலையின் கீழ்ப்பகுதியில் மணற்பாங்காகவும், மெதுவாகவும், பரவலாகவும் இருந்த
இடத்தில் கோபர்களைத் தங்களது உடைமைகளுடனும், பசுக்களுடனும் தங்கச் செய்து, தாங்கள் தங்களது
தாமரைக் கையால் மலையைத் தாங்கி நின்றீர்கள். மலை இருந்த இடத்தில் திட்டாக இருந்ததால்
மழை வெள்ளம் தொலைவிலேயே தடுக்கப்பட்டு விட்டது.
பவதி வித்ருத சைலே பாலிகா பிர் வயஸ்யைரபி விஹித விலாஸம் கேலிலா பாதி லோலே
ஸவித மிலிததே நூரே கஹஸ் தேந கண்டூ யதி சதி பஸூ பாலாஸ் தோஷ மை ஷந்த சர்வே -5-
தாங்கள் ஒரு கையால் மலையைத் தூக்கிக் கொண்டும், மற்றொரு கையால் அருகில் வந்த பசுக்களை
சொறிந்து கொடுத்துக் கொண்டும், இடைப்பெண்களுடனும், நண்பர்களுடனும் அபிநயத்துடன்
கேலிப் பேச்சுகள் பேசிக் கொண்டும் இருந்ததைக் கண்ட கோபர்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டனர்.
அதி மஹான் கிரி ரேஷ து வாமகே கர சரோ ருஹி தம் தரதே சிரம்
கிமித மத்புத மத்ரி பலம் ந்விதித் வத வலோகிபி ராகதி கோப கை –6-
இம்மலையோ மிகப் பெரியதாக உள்ளது. கிருஷ்ணனோ தாமரைப் போன்ற தனது இடது கையினால்
அதை நெடுநேரமாகத் தாங்கி நிற்கிறான். இது என்ன வியப்பு! ஒருக்கால் இது மலையின்
மகிமையாக இருக்குமோ!’ என்று தங்களைப் பார்த்து கோபர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
அஹ ஹ தார்ஷ்ட்ய மமுஷ்ய வடோர் கிரிம் வ்யதி தபா ஹுரசா வவ ரோபயேத்
இதி ஹரிஸ் த்வயி பத்தவி கர்ஹனோ திவஸ ஸப்தக முக்ரம வர்ஷயத் –7-
இதைக் கண்ட இந்திரன், ‘இந்தச் சிறுவனுக்குத் தான் எவ்வளவு துணிவு?
இவன் கை சோர்வுற்று (நிச்சயம்) மலையைக் கீழே போட்டு விடுவான் என்று கர்வத்தால் நினைத்துத்
தங்களிடத்தில் வெறுப்பு கொண்டு ஏழு நாட்கள் கடுமையாக மழை பெய்யச் செய்தான்
அசலதி த்வயி தேவ பதாத் பரம் கலித ஸர்வ ஜலே ச க நோத் கரே
அபஹ்ருதே மருதா மருதாம் பதிஸ் த்வத் அபி சங்கிததீ சமுபாத்ரவத் — 8-
தேவ தேவனே! தாங்கள் (அவ் வேழு நாட்களும் ) – நின்ற இடத்திலிருந்து ஓர் அடி கூட நகராது இருக்கையில்
மழையெல்லாம் கொட்டித் தீர்ந்த மேகக் கூட்டங்கள் காற்றினால் – விரட்டி யடிக்கப் பட்டன.
அப்பொழுது வானவர் கோனான இந்திரன் தங்களிடம் பயந்து அங்கிருந்து ஓடி விட்டான்.
சம முபே யுஷி வர்ஷ பரே ததா பஸூ பதே நு குலே ச விநிர் கதே
புவி விபோ சமு பாஹித பூ தர ப்ரமுதிதை பஸூ பை பரி ரேபி ஷே –9-
விபுவே! அந்த பெருத்த அடை மழை ஓய்ந்ததும் கோபர்களும், பசுக் கூட்டங்களும் – உணர்ந்து (அங்கிருந்து)
வெளியே வந்தனர். தாங்கள் அம் மலையை முன்பு போல் இருந்த இடத்திலேயே கீரிடம் வைத்தீர்கள்.
இதைக் கண்ட கோபர்கள் பெரு மகிழ்ச்சி கொண்டு தங்களைக் கட்டி அணைத்துக் கொண்டனர்.
தரணி மேவ புரா த்ருதவாநஸி ஷிதி தரோத் தரணே தவ கஸ் ஸ்ரம
இதி நுதஸ் த்ரித ஸை கமலா பதே குரு புராலய பாலய மாம் கதாத் –10-
திருமகள் கேள்வனே! முன்பொரு சமயம் (வராஹ அவதாரத்தில்) தாங்கள் இப் பூமியையே தூக்கி இருக்கிறீர்கள்.
(அப்படியிருக்க) இச் சிறிய மலையைத் தூக்குவதில் தங்களுக்கு என்ன கஷ்டம்?” என்று
தேவர்களனைவரும் தங்களைத் துதித்தனர்.
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply