மத நா துர சேதஸோ அன்வஹம் பவத் அங்கரி த்வய தாஸ்ய காம்யயா
யமுனா தட ஸீம் நி ஸை கதீம் தர லாஷ்யோ கிரி ஜாம் சமார்சி சன் –1-
மன்மதனால் கோபிகளின் மனம் சஞ்சலம் உற்றது -தங்களுக்கே சேவை செய்ய விரும்பி
யமுனா நதிக்கரையில் கூடி மணலால் பார்வதி தேவியைப் போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர் –
தவ நாம கதா ரதா சமம் ஸூத்ருஸ ப்ராத ரூபா கதா நதீம்
உபஹார சதைர பூஜயன் தயிதோ நந்த ஸூ தோ பவே திதி –2-
கோபிகள் தங்கள் திரு நாமத்தையும் தங்கள் கதைகளையும் கூறிக் கொண்டு யமுனா நதிக்கு வந்தார்கள் –
பிறகு நந்தகோபன் திருக்குமாரரான தாங்களே கணவனாக வர வேண்டும் என்று பூஜித்து வேண்டினர் –
இதி மாஸம் உபாஹித வ்ரதாஸ் தர லாஷீரபி வீஷ்ய தா பவான்
கருணாம் ருது லோ நதீ தடம் சமயா ஸீ த் ததனுக்ர ஹேச் சயா –3-
இவ்வாறு ஒரு மாதம் விரதம் இருந்தார்கள் – தங்கள் அவர்கள் இடம் கருணை கொண்டு
அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றீர்கள் –
நியமா வசிதவ் நிஜாம் பரம் தட ஸீ மன்ய வமுஸ்ய தாஸ் ததா
யமுனா ஜல கேல நாகுலா புரதஸ் த்வா மவலோக்ய லஜ்ஜிதா –4–
வரதம் முடிந்ததும் கோபிகைகள் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் மேல்
வைத்து விட்டு யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள் –
அப்போது தங்களைக் கண்டு வெட்கப்பட்டனர் –
த்ரபயா நமிதா நநாஸ் வதோ வனிதாஸ் வம்பர ஜால மந்திகே
நிஹிதம் பரி க்ருஹ்ய பூருஹோ விடபம் த்வம் தரஸா அதி ரூடவான் –5-
வெட்கத்துடன் தலை குனிந்து நின்ற அந்த கோபிகளின் ஆடைகளை எடுத்துக் கொண்டு
தாங்கள் அருகில் உள்ள மரத்தின் மேல் ஏறினீர்கள் –
இஹ தாவது பேத்ய நீயதாம் வசனம் வ ஸூத்ருஸோ யதா யுதம்
இதி நர்மம்ருது ஸ்மி தே த்வயி ப்ருவதி வ்யாமு முஹே வதூ ஜனை –6-
பெண்களே இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கோள் -என்று
புன் சிரிப்புடன் கூறினீர்கள் –
கோபிகள் வெட்கத்தினால் வெளியே வர முடியாமல் திகைத்தனர் –
அயி ஜீவ சிரம் கிசோர நஸ்தவ தா ஸீரவ ஸீ கரோஷி கிம்
ப்ரதி சாம் பரமம் புஜே ஷணே த்யுதி தஸ் த்வம் ஸ்மிதமேவ தத்தவான் –7-
செந்தாமரைக் கண்ணனே தங்களுக்கு சேவை செய்ய வந்த அடியோங்களை
இப்படி ஸ்ரமம் படுத்தலாமா –
எங்கள் ஆடையைக் கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிய கோபிகளுக்கு
மந்தஹாசத்தையே பதிலாகத் தந்தீர்கள் –
அதி ருஹ்ய தடம் க்ருதாஞ்ஐலீ பரி ஸூத்தா ஸ்வக தீர் நிரீஷ்ய தா
வசநான்ய கிலா ன் யநுக்ரஹம் புனரேவம் கி ரமப்யதா முதா–8-
அவர்கள் கரை ஏறி கை கூப்பி வணங்கினார்கள் -அதனால் ஆடை இல்லாமல்
குளித்த பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள் –
தங்களையே சரண் அடைந்ததால் அவர்களுக்கு ஆடைகளையும் அளித்து
உபதேசமும் செய்து அருளினீர்கள் –
விதிதம் தநு வோ மநீஷிதம் வதிதாரஸ் த்வி ஹ யோக்யமுத்தரம்
யமுனா புலிநே ச சந்திரிகா க்ஷண தா இத்ய பலாஸ் த்வ மூசி வான் –9–
உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன் -நதியின் மணல் குன்றுகளின் நிலா வெளிச்சத்துடன்
கூடிய இரவில் உங்களுக்கு வேண்டுவது கிடைக்கும் என்று அருளினீர் –
உப கர்ண்ய பவன் முகஸ்யுதம் மது நிஷ்யந்தி வஸோ ம்ருகீத் ருச
ப்ரண யாதயி வீஷ்ய தே வத நாப் ஜம் சநகைர் க்ருஹம் கதா –10-
தேனினும் இனிய தங்கள் சொற்களைக் கேட்ட கோபியர்கள் தங்கள் தாமரை
திரு முகத்தைத் திரும்பிப் பார்த்த படியே மெதுவே வீடு சென்றார்கள் –
இதி நன்வ நுக் ருஹ்ய வல்ல வீர்விபி நாந்தே ஷு புரேவ ஸஞ்சரன்
கருணா ஸி ஸி ரோ ஹரே ஹர த்வரயா மே சகலா மயா வலிம் –11-
இவ்வாறு அப் பெண்களுக்கு அனுக்ரஹம் செய்து காட்டில் திரிந்து மகிழ்ந்தீர் –
கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை சீக்கிரம் ரக்ஷித்து அருள வேண்டும் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply