ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -59–திருக் குழல் ஓசை வர்ணனை -திரு வேணு கானம்-

த்வத் வபுர் நவ கலாய கோமலம் ப்ரேம தோஹ நம சேஷ மோஹநம்
ப்ரஹ்ம தத்துவ பர சின் முதாத்மகம் வீஷ்ய சம்மு முஹுரந்வஹம் ஸ்த்ரிய –1-

காயாம்பூ போன்ற நிறமுள்ள தங்கள் திருமேனி அனைவரையும் ஆநந்திக்கச் செய்தது –
தங்களது நிரதிசய ஆனந்த ப்ரஹ்ம திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கோபிமார்கள்
மிகுந்த மோஹத்தை அடைந்தனர் –

மன்மதோன் மதித மானசா க்ரமாத் த்வத் விலோக நரதாஸ் தத ஸ் தத
கோபிகாஸ் தவ ந சேஹிரே ஹரே காந நோப கதி மப்யஹர் முகே –2-

தாங்களைக் காண்பதிலேயே விருப்பம் கொண்ட கோபிமார் மன்மதனால் தாக்கப்பட்ட
மனதை உடையவர்களாய் இருந்தார்கள் –
ஆகையால் காலையில் காட்டுக்கு மாடுகளை மேய்க்கப் கூடச் செல்லவில்லை –

நிர் கதே பவதி தத்த த்ருஷ்டய ஸ் த்வத் கதேந மனசா ம்ருகேஷணா
வேணு நாதம் உப கர்ண்ய தூரதஸ் த்வத் விலாஸ கதயா அபி ரேமிரே –3–

தங்கள் மாடு மேய்க்கச் சென்ற போது தாங்கள் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் –
தங்கள் திரு வடிவை மனதில் வைத்து வெகு தூரத்தில் இருந்து கேட்க்கும்
தங்கள் குழல் ஓசையைக் கேட்டு மகிழ்ந்தனர் –
தங்கள் விளையாட்டுக்களைப் பற்றிய கதைகளை பேசியே ஆனந்தித்தனர் –

காந நாந்த மிதவான் பவா நபி ஸ்நிக்த பாத பதலே மநோர மே
வ்யத்ய யாக லித பாத மாஸ்தித ப்ரத்யு பூரயத வேணு நாலிகாம் –4–

கானகம் சென்ற உடன் அழகு நிரம்பிய மரத்தடியில் திருவடிகளை மாற்றி நின்று
திருப் புல்லாங்குழலை ஊதினீர்கள் –

மார பாணது தகே சரீ குலம் நிர்விகார பஸூ பக்ஷி மண்டலம்
த்ரா வணம் சத்ருஷதா மபி ப்ரபோ தாவகம் வ்யஜநி வேணு கூஜிதம் –5-

தங்கள் திருக் குழலின் இனிமையான ஓசை வானில் உள்ள அப்சரஸ் கூட்டங்களை மயங்கச் செய்தது –
பசுக்கள் பறவைகள் முதலியவை செயல் அற்று நின்றன –
கற்களையும் உருகச் செய்தது –

வேணுர் அந்தர தரலாங்கு லீத லம் தால சஞ்சலித பாத பல்லவம்
தத் ஸ்திதம் தவ பரோக்ஷ மப்யஹோ சம் விசிந்த்ய முமுஹுர் வ்ரஜாங்க நா –6–

கோபிகைகள் தொலைவில் இருந்தாலும் திருக் குழலின் மீது விளையாடும் தங்கள் விரல்களையும்
தாளம் இடும் தங்கள் திருப் பாதங்களையும் நினைத்து மெய் மறந்தனர் –

நிர் வி சங்க பவ தங்க தர்ஸி நீ கேசரீ கக ம்ருகாந் பஸூ நபி
த்வத் பத பிரணயி காந நம் ச தா தன்ய தன்யமிதி நன்வ மா நயன் –7-

தங்களைப் பார்க்கும் தேவப் பெண்டிரையும் மிருகங்களையும் பசுக்களையும் தங்கள்
சம்பந்தம் பெற்ற கானகத்தையும் மிக்க பேறு பெற்றவை என்று கோபிமார் எண்ணினார்கள் –

ஆபி பேய மதராம்ருதம் கதா வேணு புக்த ரஸ சேஷ மேகதா
தூரதோ பத க்ருதம் துரா சயேத் யாகுலா முஹு ரிமா சமா முஹன் –8-

திருப் புல்லாங்குழல் அனுபவித்த தங்கள் அதர அம்ருதத்தின் மிச்சத்தை ஒரு தடவையாவது அனுபவிப்போமோ –
வெகு தூரத்தில் உள்ள கிடைக்காத இதைப் பற்றிய ஆசையே போதும் என்று ஏங்கித் தவித்தனர் –

ப்ரத்யஹம் ச புநரித்த மங்க நாஸ் சித்த யோநி ஜெனிதா தனுக்ரஹாத்
பத்த ராக விவசாஸ் த்வயி ப்ரபோ நித்ய மாபுரிஹ க்ருத்ய மூடதாம் –9–

இவ்வாறு தினமும் மன்மதனால் கோபிகைகள் மனம் கலக்கம் உற்றது – தங்கள் இடம் வைத்த
அன்பால் அவர்கள் தினமும் செய்யும் காரியங்களையும் அறியாதவர்களாக ஆனார்கள் –

ராக ஸ் தாவஜ் ஜாயதே ஹி ஸ்வ பாவாந்
மோக்ஷ உபாயோ யத்நத ஸ்யாந்த வா ஸ்யாத்
தாஸாம் த்வேகம் தத் த்வயம் லப்த மாஸீத்
பாக்யம் பாக்யம் பாஹி மாம் மாருதேச –10-

உலகில் எல்லாருக்கும் இயற்கையாவே ஆசை உண்டாகிறது -முயற்சியினால் மோக்ஷம்
உண்டாகலாம் அல்லது உண்டாகாமல் இருக்கலாம்
ஆனால் கோபிகைகளுக்கு இவ்விரண்டும் ஒன்றாகவே கிடைத்து விட்டது –
என்னே பாக்யம் -ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: