ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் ஸ்ரீ கிரீடா வல்லபன்-ஸ்ரீ கிருஷ்ண அவதார லீலை –

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா -ஸ்ரீ தசாவதார ஸ்லோகம் –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப் பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

————————————————————————————————-

ஸ்ரீ கிரீடா வல்லபன் -அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் -லீலைகளுக்காகவே அவதாரம்
அவதாரமே லீலை
கோகுல லீலை
பிருந்தாவன லீலை
வடமதுரை லீலை
விவாக லீலை
ஸ்ரீத்வராகா லீலை
மஹா பாரத லீலை
யது குல திலகம்

——————-

வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அவன் -கிறிக் கொண்டு -உள்ளம் புகுந்து –
விசித்ரமான லீலைகள் -அநேக லீலைகள் –
கீதா சாஸ்திரம் யுத்த களத்திலே அருளிச் செய்த லீலை
ஓர் நகையுடன் உண்மை உரைக்க அடி சேர்ந்த விஜயனுக்கு -லோகத்துக்காக கீத உபநிஷத் –
ரதி-சாரதி –
மோக்ஷ பிரதத்வத்திலும் லீலை -ததி பாண்டவனுக்கும் தயிர் தாழிக்கும்
சரணாகதி சரம ஸ்லோகமும் லீலையாக அருளி
பவந்தி லீலா -ஆளவந்தார்
பூதனாவுக்கும் மோக்ஷம் பால்யத்திலே
கண்டா கர்ணனுக்கும்
கைலாசம் புத்ர வரம் -கள்வா
கிருஷ்ணாஸ்ரய -நாதன் -பாண்டவ தூதன் -பார்த்த சாரதி – மாம் -அஹம் –
ஜன்ம கர்ம மே திவ்யம்

—————

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –1-1-1-

ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –

—————

திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1-1-3-

இவனுடைய லஷணம் இருந்தபடியால் திருவோணத்தான் ஆன சர்வேஸ்வரனுடைய லோகம் எல்லாம்
இவன் ஆளும் என்பாராய்-இப்படி பிரீதி வ்யஹாரம் பண்ணினார்கள்

—————–

வையம் ஏழும் கண்டால் பிள்ளை வாயுளே 1-1-6-

பிள்ளை உடைய வாயுள்ளே சகல லோகங்களையும் கண்டாள் என்கை –
அதுக்கடி -அர்ஜுனனுக்கு திவ்ய சஷூசை கொடுத்து விஸ்வரூபம் காட்டினாப் போலே –
இவளுக்கும் திவ்ய சஷூசை கொடுத்து தன் வைபவத்தை காட்டுகை -இறே

————–

வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே-1-1-7-

இவள் கண்ட அநந்தரம்-அருகு நின்றவர்களுக்கும் காட்ட –
அவனும் தன் வைபவம் எல்லாரும் அறிக்கைக்காக அவர்களுக்கும்
திவ்ய சஷூஸ்சை கொடுத்து காட்ட கூடும் -இறே
ஸ்ரீ நந்தகோபன் மகன் அல்லன் -பெறுதற்கு அரிய சர்வேஸ்வரன் –
பரம்பின கல்யாண குணங்களை -உடையனாய் -நீர்மை உடையனான -சிறு பிள்ளை –
ஆச்சர்ய சக்தன் என்று இப்படி சொல்லி மிகவும் ப்ரீதிகளானார்கள் ஸ்திரீகள்

—————

திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை-1-1-10-

அசாதாரண விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகிற –
நாராயண சப்த வாச்யனாய் -கல்யாண குண பூர்ணனானவன் திருவவதரித்த பிரகாரம்-

திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று துடங்கி
திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்று தலைக் கட்டுகையாலே
திரு வவதரித்து அருளின பிரகாரத்தை தக்க உலோபளாலநங்களோடே அனுபவித்து ஹர்ஷ்டராய் அருளி செய்தார் –

———-

பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

திருக் கையாலே பிடித்து திருப்பவளத்தில் வைத்து ஆஸ்வசித்து புஜிக்கும்-
தேனே மலரும் திருப் பாதம் -என்று சொல்லக் கேட்டு இருக்கையாலே
திருவடிகள் தன்னின் போக்யதை தன்னை பரீஷிக்கைக்காக -பருவத்துக்கு
அநு குணமான வியாபாரம் செய்வாரைப் போலே செய்தான் -ஆதல்

————–

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-

மங்களா சாசன பரர் ஆகையாலே -விரோதிகள் அறிந்து அபசரிக்கைக்கு அவகாசம்
இல்லாதபடி திருவவதரித்த நாளை மறைத்து அருளி செய்கிறார் –

————-

வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-

காந்தி மிக்க ஆபரணங்களை உடைய பெண்காள்
தன்னோடு விளையாட வந்த -தன்னோராயிரம் பிள்ளைகளான-தானும் மதலையாய் இருக்கச் செய்தே –
அத்தனை பேரும் ஒருதலை – தான் ஒரு தலையாக நின்று -பலாத்கரித்து -கொம்பு முகிழ்த்த இள யானை போலே
தானே பிரதானனாய் விளையாடும் -இப்படி திரியா நிற்க செய்தே -ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில்
ச விநயமாக வர்த்திக்கும் பிள்ளைத் தனத்தை உடையவன்-

—————-

மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-

திரு ஆழியும் -கருதும் இடம் பொருது வந்து கையில் நிற்கவும் வேண்டாதே -கை விடாதே இருந்து –
தன்னோசையாலே எதிரிகளை அழிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -நிரந்தரமாக
வர்த்தியா நின்றுள்ள கையும் -ஆழ்வார்களுமான சேர்த்தியை ஒரோ தசைகளிலே இவன் தான்
இவளுக்கும் காட்டக் கூடும் இறே

————–

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-

ஸ்ரீ நந்தகோபர் மகனுக்கு -இவர் அடி அறிந்தவர் ஆகையாலே -மகனாக கொண்டு -என்கிறார் –
அவள் -தன் மகன் -என்று இறே நினைத்து இருப்பது –
அண்டத்தையும் அண்டாந்த வர்த்திகளான சேதன அசேதனங்களையும் திரு வயிற்றிலே
ஒரு புடையிலே அடங்கும் படி விழுங்கினவன் –

—————

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

ஸ்வர்காதி லோகங்களை இருப்பிடமாக உடைய இந்திராதி தேவர்களுக்கு
ஆசூர பிரக்ருதிகளால் வரும் துக்கம் போம்படியாக முன்னே பூமியை இருப்பிடமாக
உடைய ஸ்ரீ வசுதேவருக்கு புத்ரனாய் வந்து அவதரித்து -தன்னை பற்ற சிறைப் பட்டு இருக்கிற
ஸ்ரீ வசுதேவர் துக்கத்தை தீர்த்து -பின்னம் தேவர்கள் துக்கம் தீர்க்கைக்கு முன்னம் இங்கே அவதரித்தானாய் ஆய்த்து-
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -என்னக் கடவது இறே-

————–

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

சக்கரவர்த்தி திருமகனைப் போலே -பருவம் நிரம்பின பின்பு -விரோதிகளை நிரசித்து –
லோகத்தை உஜ்ஜீவிப்பிக்கை அன்றிக்கே -பருவம் நிரம்புவதுக்கு முன்னே –
திண் கொள் அசுரரை தேய -வளருகையாலே -லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படியாக –
பூதன சகட யமளார்ஜுனாதிகளை தொட்டில் பருவம் பிடித்து இறே நிரசித்து சென்றது –
லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற –
திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே –
கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி -என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

———–

மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு -1–4–10-

கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-
அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து -இவன் பக்கல் ஸ்நேகத்தாலே
விகசிதமான கண்ணை உடையவள் என்னுதல் –

—————–

மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான –
நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

——————–

இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து – 2-1 4-

மத்ய ராத்ரே கிலாதாரே ஜாயமானே ஜனார்தனே -என்கிறபடியே கம்சன் முதலான
துஷ்ப்ரக்ருதிகள் கண் படாதபடி -அருகு நின்றாரை தெரியாத இருளிலே வந்து அவதரித்து –
எப்போது பிறப்பது -என்று ஹிம்சிக்கைக்காக உருவின வாளை வைத்து உறையில் இருக்கிறவன் –
கண்ணால் கண்டால் விடான் இறே-
ஜானாதுமாவதானந்தே கம்சோயம் திதி ஜன்மஜ -என்றாள் இறே தேவகி பிராட்டி –
போய் -வீங்கு இருள்வாய் அன்று அன்னை புலம்ப போய் -என்கிறபடியே அந்த செறிந்த இருளிலே பெற்ற
தாயானவள் விரஹா ஆதரதையாலே காலைக் கட்டிக் கொண்டு கிடந்தது கதரா நிற்க திரு ஆய்ப்பாடியிலே போய் –

—————-

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –2-3-3-

இருந்ததே குடியாக உஜ்ஜீவிக்கும்படி -இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து -அது தானே உனக்கு மிகவும்
தேஜஸ்சாம்படி இருப்பானாய்-வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

————–

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய்
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்–2-7-2-

அழகு ஒரு தட்டும் தான் ஒரு தட்டும் படியான கண்களின் அழகை உடையவன்
சர்வ லோகங்களும் உன்னுடைய அவதாரத்தாலே லப்த சத்தாகமாய் -உஜ்ஜீவிக்கும்படி வந்து பிறந்தவனே
கஸ்ரீய ஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வா -என்கிறபடியே உன்னை
தனக்கு சம்பத்தாக உடையாளாய் இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே
அவள் உகப்புக்காக சம்சார சேதனரை ரஷித்து அருளும்படி ஸ்ரீ கோவிலிலே கண் வளர்ந்து அருளினவனே

—————–

அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை–3-2-1-

கண்டவர்கள் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருண்டு இருக்கிற திரு மேனியை உடையவனே –
அஞ்சனம் -மை மைப்படி மேனி இறே
கன்றுகளின் பின்னே போகிற போதை நடையின் த்வநியையும் -திரு மேனியின் குறு வெயிர்ப்பும்
அலைந்த திருக் குழல்களும் -திருக் கையில் பிடித்த பொற் கோலுமான ஆயர் குலத்தை உடையவனாய் –
அவர்களுக்கு முன்னோடி கார்யம் பார்க்கும் தலைவன் ஆனவனை –
அன்றிக்கே –
வேரிலே வெக்கை தட்டினால் -கொழுந்து முற்பட வாடுமா போலே
அவர்களுக்கு நோவு வந்தால் -முதல் தன் முகம் வாடும்படி இருக்கையாலே
கொழுந்து -என்கிறதாகவுமாம் -ஆயர் கொழுந்தாய்-என்றார் இறே ஆழ்வார்

———–

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

இழந்தவள் இழவு தீர்ந்தால் போலே என்னுடைய இழவு தீர்க்க வேணும் என்கிறார் –
தேவகிப் பிராட்டிக்கு அஷ்ட கர்ப்பம் இறே ஸ்ரீ கிருஷ்ணன் –
கால நேமியோடே சம்பந்தம் உடையராய் -ஹிரண்ய சாபத்தாலே பாதாளத்திலே
வர்திப்பார் ஆறு ராஷசரை யோக நித்ரையால் பிரவேசிப்பிக்க -தேவகியார் வயிற்றிலே பிறந்த ஆறு ராஷசரை
கல்லிடை மோத – கம்சனால் நிரசிக்கப்பட -ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோகிணியார் வயிற்றினில் அவதரிப்பித்து –
தாம் எட்டாம் கர்ப்பமாய் இறே வந்து அவதரித்தது
இழந்தவள் தன் வயிற்றில் அவள் முன்பு இழந்த இழவு தீர சிக்கன வந்து பிறந்து நின்றாய்
திரு மால் இரும் சோலை எந்தாய் –அங்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -இங்கு ஸ்வாமித்வம்
தேவகி பிராட்டியார் வயிற்றில் ஸ்ரீ கிருஷ்ண எழுந்து அருளி இருந்த இருப்பு போலே இறே
பூடுறை ஸ்ரீ கோயிலில் ஸ்ரீ அழகர் எழுந்து அருளி இருந்த இருப்பும் இவர்க்கு-

——————————-

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –1-1-1-
திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1-1-3-
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6-
வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே-1-1-7-
திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை-1-1-10-
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-
வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-
மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-
வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-
மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு -1–4–10-
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து – 2-1 4-
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –2-3-3-
கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய்
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்–2-7-2-
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை–3-2-1-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் பாசுரப்படி ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நாரணன் நம்பி திரு வோணத்தான்
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் சித்தம் பிரியாத திருவின் வடிவு ஒக்கும் தேவகி தன் வயிற்றில்
சிக்கனே இருட்டில் வசுதேவன் தம் மகனாய் வந்து பிறந்த அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
உருவு கரிய ஒளி மணி வண்ணன் கோவலர் குட்டன் நந்தன் மதலை மைத் தடம் கண்ணி யசோதை
வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தாய் போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து
திண் கொள் அசுரரை தேய தந்த களிறு போல் தானே விளையாடும் ஆய்ச்சி மகனாக வளரும்
சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் பேதை குழவி
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலங்கள்
ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம் உய்ய இவ் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய்

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: