இந்த தசகம் முழுவதும் (ஸ்ரீ க்ருஷ்ணா) என்பதைச் சேர்த்தே சொல்ல வேண்டும்.
ஸ்ரீ பாகவதத்திலுள்ள கோபிகா கீதம் போல் பாட வேண்டும்.
தவ விலோகநாத்(க்ருஷ்ணா)கோபிகாஜநா:
ப்ரமதஸங்குலா: (க்ருஷ்ணா)பங்கஜேக்ஷண |
அம்ருததாரயா(க்ருஷ்ணா) ஸம்ப்லுதா இவ
ஸ்திமிததாம் தது(க்ருஷ்ணா)ஸ்த்வத்புரோகதா: || 1||
தங்களை நேரில் கண்ட கோபியர்கள் அளவற்ற சந்தோஷத்தினால் திகைத்து நின்றனர்.
அமிர்த மழையால் நனைக்கப் பட்டவர்கள் போல் அசைவற்று நின்றனர்.
ததநு காசந(க்ருஷ்ணா) த்வத்கராம்புஜம்
ஸபதி க்ருஹ்ணதீ(க்ருஷ்ணா) நிர்விஶங்கிதம் |
கநபயோதரே(க்ருஷ்ணா) ஸந்நிதாய ஸா
புலகஸம்வ்ருதா(க்ருஷ்ணா) தஸ்துஷீ சிரம் || 2||
ஒரு கோபிகை, மயிர்க்கூச்சலுடன், உமது கையை எடுத்து, தனது மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள்.
தவ விபோ(அ)பரா(க்ருஷ்ணா) கோமலம் புஜம்
நிஜகலாந்தரே(க்ருஷ்ணா) பர்யவேஷ்டயத் |
கலஸமுத்கதம்(க்ருஷ்ணா) ப்ராணமாருதம்
ப்ரதிநிருந்ததீவ(க்ருஷ்ணா)அதிஹர்ஷுலா || 3||
மற்றொருவள், உமது கையை எடுத்து, தன் மூச்சே நின்றுவிடும்படி தனது கழுத்தில் இறுகச் சுற்றிக் கொண்டாள்.
அபகதத்ரபா(க்ருஷ்ணா) காபி காமிநீ
தவ முகாம்புஜாத்(க்ருஷ்ணா) பூகசர்விதம் |
ப்ரதிக்ருஹய்ய தத்(க்ருஷ்ணா)வக்த்ரபங்கஜே
நிதததீ கதா(க்ருஷ்ணா) பூர்ணகாமதாம் || 4||
இன்னொரு கோபிகை, வெட்கத்தை விட்டு, உமது வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று,
அதை உண்டு, அனைத்தையும் அடைந்து விட்டதாய் நினைத்தாள்.
விகருணோ வநே(க்ருஷ்ணா) ஸம்விஹாய மாம்
அபகதோ(அ)ஸி கா(க்ருஷ்ணா) த்வாமிஹ ஸ்ப்ருஶேத் |
இதி ஸரோஷயா(க்ருஷ்ணா) தாவதேகயா
ஸஜலலோசநம்(க்ருஷ்ணா) வீக்ஷிதோ பவாந் || 5||
இரக்கமில்லாமல் என்னைக் காட்டில் விட்டுவிட்டுச் சென்ற உன்னை யாரும் தொடமாட்டார்கள் என்று
ஒரு கோபிகை கண்ணில் நீர் வழிய கோபத்துடன் கூறினாள்.
இதி முதா(அ)(அ)குலைர்(க்ருஷ்ணா)வல்லவீஜநை:
ஸமமுபாகதோ(க்ருஷ்ணா) யாமுநே தடே |
ம்ருதுகுசாம்பரை: (க்ருஷ்ணா)கல்பிதாஸநே
குஸ்ருணபாஸுரே(க்ருஷ்ணா) பர்யஶோபதா: || 6||
ஆனந்தப் பரவசர்களாகி அக்கோபியர்கள், யமுனைக்கரையில் தமது மேலாக்கினால்
ஆசனம் செய்தார்கள். தாங்களும் அதில் அமர்ந்தீர்கள்.
கதிவிதா க்ருபா(க்ருஷ்ணா) கே(அ)பி ஸர்வதோ
த்ருததயோதயா: (க்ருஷ்ணா)கேசிதாஶ்ரிதே |
கதிசிதீத்ருஶா(க்ருஷ்ணா) மாத்ருஶேஷ்வபீதி
அபிஹிதோ பவாந்(க்ருஷ்ணா) வல்லவீஜநை: || 7||
கருணை எத்தனை விதம்? சிலர் அனைவரிடத்திலும், சிலர் தன்னை அண்டியவர்களிடத்திலும் கருணை காட்டுகிறார்கள்.
சிலர், வீடு வாசலை விட்டு அண்டியவர்களிடத்திலும்கூட கருணையற்று இருக்கிறார்கள் என்று உம்மைப் பார்த்து கோபியர் கூறினர்.
அயி குமாரிகா(ராதே) நைவ ஶங்க்யதாம்
கடிநதா மயி(ராதே) ப்ரேமகாதரே |
மயி து சேதஸோ(ராதே) வோ(அ)நுவ்ருத்தயே
க்ருதமிதம் மயா(க்ருஷ்ணா)இத்யூசிவாந் பவாந் || 8||
பெண்களே! கல்நெஞ்சம் படைத்தவன் என்று என்னை சந்தேகப்படாதீர்கள். உங்கள் அதிக அன்பினால் பயந்து,
உங்களுடைய மனம் என்னையே நாடவேண்டும் என்று நான் மறைந்து சென்றேன் என்று அவர்களிடம் கூறினீர்கள்.
அயி நிஶம்யதாம்(ராதே) ஜீவவல்லபா:
ப்ரியதமோ ஜன: (ராதே) நேத்ருஶோ மம |
ததிஹ ரம்யதாம்(ராதே) ரம்யயாமிநீஷு
அநுபரோதமிதி(க்ருஷ்ணா)ஆலபோ விபோ || 9||
உயிரினும் மேலான கோபியர்களே! உங்களைவிட என்னிடம் அன்பு கொண்டவர் எவரும் கிடையாது.
ஆகையால், நிலவொளி வீசும் இந்த இரவில், என்னுடன் தடையின்றி விளையாடுங்கள் என்று கூறினீர்.
இதி கிராதிகம்(க்ருஷ்ணா) மோதமேதுரை:
வ்ரஜவதூஜநை: (க்ருஷ்ணா)ஸாகமாரமந் |
கலிதகௌதுகோ(க்ருஷ்ணா) ராஸகேலநே
குருபுரீபதே(க்ருஷ்ணா) பாஹி மாம் கதாத் || 10||
தங்கள் வார்த்தையால் மிகுந்த ஆனந்தம் அடைந்த கோபியர்களுடன் யமுனைக்கரையில் விளையாடினீர்கள்.
குருவாயூரப்பா! தாங்கள் என்னை நோய்க் கூட்டத்திலிருந்து காத்து அருள வேண்டும்.
—————–——————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்