ஸ்ரீ எம்பெருமானே –தாய் தந்தை -சிறியன் பெரியன் -நம்பி பிரான் –ஸ்ரீ உ. வே .வேளுக்குடி ஸ்வாமிகள் —

ஸ்ரீ எம்பெருமானே –தாய் தந்தை

பெற்ற தாய் பிறப்பித்த தந்தை -காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு –குடல் துவக்கு –
பெற்ற தாய் -உத்பாதகர் -வளர்த்த தாய் -போஷகர் -பிரியம் தாய் -ஹிதம் -தந்தை
பெரி யார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு-
திருத்தி நல் வழிக்கு கொண்டு -வாத்சல்யம் -க்ஷமை –
மாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ – -ஆச்சார்ய தேவோ பவ -அதிதி தேவோ பவ-
ஏஷ ஆதேச -ஏஷ உபதேசம் –ஆணையாகவும் உபதேசமாகவும் -உபநிஷத் –
முதல்படி தாயே தெய்வம் –
தெய்வமே தாய் அடுத்து –

அன்னையாய் அத்தனாய் -கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை
மாதா பிதா இத்யாதி –

நிறைவான நித்தியமான எல்லாப்பிறவியிலும் அனைவருக்கும் குற்றம் அற்ற நிர்துஷ்டர்
த்வம் மாதா சர்வ லோகா நாம் தேவ தேவன் ஹரி பிதா
மாதா நாராயாணா பிதா நாராயணா ஸூ ஹ் ருத் நாராயணா
ராமம் தசரதம் வித்தி
பிராதா ச பிதா ச மாதா ச பந்து ச –மம ராகவா –
பாவஜ்ஜேன–க்ருதஜ்ஜேன-உன்னை தந்தையாக வைத்து தண்ணீர் பந்தல் பெருமாளும் சொல்லும்படி

பிதா லோகஸ்ய சர அசரஸ்ய –லோகத்ரய -அர்ஜுனன்
நீயே பராத்பரன் –
லோக பாரம் நீக்கவே -விஸ்வரூபம்
பொறுத்து அருள் -பிதேவ புத்ரஸ்ய -திருத்திப் பணி கொள்ள வேண்டும்
இத்தையே கத்ய த்ரயத்தில் உடையவர் எடுத்துக் காட்டி
சர்வம் ஸஹ –

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் –தேவபிரானையே தந்தை தாயாக அடைந்த சடகோபன்
உடைய நங்கையாறும் காரி மாறனுமே காட்டிக் கொடுத்த தாய் தந்தை அன்றோ
என் அப்பன் –என்னைப் பெற்றவளாய் –தன் ஒப்பார் இல் அப்பன் –
பெற்று விட்டுப் போட்டு விட்டுப் போகும் தாய் தந்தை இல்லையே

என்னைப் பெற்ற தாய் -பக்த வத்சல்யன் -ப்ரஹ்மா ஸ்தோத்ரம் -பண்ணி திரு நின்றவூர் –
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
குலம் தரும் –பெற்ற தாயினும் ஆயின செய்யும்
பிதா ச -நவ வித சம்பந்தம்
எம்மானும் என்னைப் பெற்று அகன்ற பின் அம்மானும் ஆகி நின்ற
தாயே தந்தை என்றும்–தாரமே கிளை மக்கள் –நோயே பட்டு ஒழிந்தேன்-நல்கி என்னைக் கொண்டு அருளே
ஸ்வா பாவிக -சம்பந்தம் -நிருபாதிக -ஒழிக்க ஒழியாத ஒன்பது வித சம்பந்தம்
ஒன்றும் –இவன் நிற்க மற்ற தெய்வம் நாடுதிரே
தேவும் எப்பொருளும் படைத்து பூவில் நான்முகனைப் படைத்த தேவன் –

நாராயணா ப்ரஹ்மா ஜாயதே -நான்முகனை நாராயணன் படைத்தான்
உண்டது உருக்காட்டாதே -தேசாந்திர கதனான புத்ரன் பக்கலிலே திரு உள்ளம்
நிர்வாண ம் பேஷஜாம் பிஜக் -வைத்ய நாராயணன்
உண்ணும் சோறு -தாரகம் போஷகம் போக்யம் அவனே
பெற்று
வளர்த்து
ஹிதம்
பிரியம்
வாத்சல்யம்
உள்ளேயே உறைந்து –மடி மாங்காய் இத்யாதி
ஆரா அமுதம் அவனே -மருந்தும் பொருளும் அமுதமும் அவனே

யாதானும் பற்றி நீங்கும் விரதம் -கொண்டு விலகினாலும் விடாமல்
மண்ணவராய் உலகு ஆண்டு பின் தன்னை அடையப் பண்ணுவிக்கிறான்
பூர்த்தியையும் ஸ்வா தந்த்ரத்தையும் குறைத்துக் கொண்டு நமது கை பார்த்து -அர்ச்சாவதாரம்
வாத்சல்யையான மாதா பிள்ளைக்கு-பேகணியாமல் மண் தின்ன விட்டு பிரதி ஓவ்ஷதம் இடுமா போல் —
ருசிக்கு ஈடாக கொடுத்து -வெறுப்பு வந்த பின்பு தனது தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மான் அன்றோ –

வித்யை தாயாகப் பெற்று பாலும் அமுதமாகிய திருமால் திரு நாமம் கொடுத்து வளர்த்த ஆச்சார்யனே அனைத்துமாக –
திரு மந்த்ரம் -த்வயத்தில் வளர்ந்து த்வய ஏக நிஷ்டராயே இருக்க வேண்டுமே
அன்னையாய் அத்தனாய் என்னை –
அத்தனாய் அன்னையாய் –எத்தினால் இடர் -திருமழிசைப் பிரான் –

இல்லை எனக்கு எதிர் -எம்பெருமானார் உத்தாரக ஆச்சார்யராக இருக்க -யார் நிகர் நமக்கே

சர்வவித பந்துவாக அவனை ப்ரஹ்லாதன் கொண்டது போலே அடியேனும் கொண்டேனே –
இனி என் குறை எனக்கு -இல்லை எனக்கு நிகர் -என்கிறார்

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர்ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதேயினி–பெரிய திருவந்தாதி —70-

—————

ஸ்ரீ எம்பெருமானே -சிறியன் பெரியன் –

தஸ்மிந் த்ருஷ்டே பர அவரே -பரன் -அவரன் -ஹ்ருதய க்ரந்திகள் அவிழும் -சங்கைகள் வெட்டப்படும் –
கர்மங்கள் அழியும் -அவனைச் சேவித்தால்
சிறியன் -பெரியன் -இரண்டுமே பரனே -பரத்வத்தை மறைத்து எளியவனாக ஸுவ்லப்யம் என்றபடி
ஜீவ பரமாத்மா –
ஞான பக்தி மிக்கு ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்ற பின்பு பெரிய நிலையை அடைந்த ஜீவனே –
மூன்று அர்த்தங்கள் உண்டே

சிறு மா மானிடவராய் என்னை ஆண்டார் இங்கே திரியும் பெரியவர் –
இளம் வயது மூர்த்தி சிறியவர் -ஞான பக்தி கீர்த்திகளில் பெரியவர் –
பிரஹலாதன் துருவன் ஆண்டாள் போலவும்
எம்பார் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை போலவும்
பட்டர் -சர்வஞ்ஞ பட்டர் வந்தார் விருத்தாந்தம் –
பிடி மணல் போல் பரத்வ -எளிமைக்குத் தக்க குணங்கள் -கொண்டே அனுபவிக்க வேண்டும்
முரணாக இல்லாமல் ஒன்றுக்கு ஓன்று உதவும் அன்றோ
நின்ன முகம் கண் உளவாகில் நீ இங்கே இவனை நோக்கிப் போ-பாலகன் என்று பரிபவம் செய்யேல் —
சிறுமையின் வார்த்தை தன்னை மஹா பலி இடம் சென்று கேள்

வாமனன் திரிவிக்ரமன் -சுருக்குவாரை இன்றி சுருங்கினாய் -பெருக்குவாரை இன்று பெருகினாய்
கீதாச்சார்யன் -விஸ்வரூப தர்சனம் -மீண்டும் ஸ்வேந ரூபம்
அவதாரம் பொழுது சதுர் புஜம் -அஷ்டமி -திதி –ஆவணி ரோஹிணி -நடு நிசி பொழுது-அத்புதம் பாலகம் –
ஸ்ரீ ஜெயந்தி முஹூர்த்தம் -விஷமே அம்ருதமாகும் –
வசு தேவம் ஐஷத –சங்க கதா -உப ஸம்ஹர -அலௌகிகம் -மாற்றிக் கொண்டானே
திருவனந்த புரப் பெருமாள் -தன்னைச் சுருக்கிக் காட்டிக் கொண்டு அருளுகிறார் நமக்காக -மூன்று வாசல்கள் –
திவாகர முனிவர் -மூன்று ஊருக்கும் சேவை -அநந்தன் -ஆதி சேஷனும் அநந்தன் –
அந்தமுடையவராக தனது மடியில் வைத்துக் கொண்ட பெரியவன் –

அஷ்டமகா சித்திகள் -அணிமா இத்யாதிகள் –
திருவடி -பெரியவனாகி பறந்து -மைனாக -சரசா -உருவம் பெருக்கி -சடக்கென சுருக்கி
வாய்க்குள் நுழைந்து திரும்ப -இலங்கை நுழையும் பொழுது சுருக்கிக் கொண்டு –
ஸ்ரீ ராம கணையாழி பலமும் தனக்குள்ள சித்தி யோகமும்

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற –மாயன் அன்று ஓதிய வாக்கு
சேயன் மிகப் பெரியன் -எட்ட முடியாமல் -யதோ வாசோ நிவர்த்தந்தே –
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -பேசினார் பிறவி நீத்தார்
அணியன் சிறியன்-புரிந்து கொள்ளும்படி அருகில் எளிமையாக -யாரும் ஒரு ஓர் நிலைமையன் என அறி வெளிய எம்பெருமான் –
தயை ஏக சிந்து தானே ஆக்கிக் காட்டி அருளுகிறார் -ஆளவந்தார் – மாம் மூடா

ஆயனாய் இருந்து எளியவனாய் அருகில் சிறியவனாய் -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –
வசிஷ்டாதிகள் காண முடியாதவன் இடைச்சிகளுக்கு கட்டவும் அடிக்கவும் மஞ்சள் அரைக்க முதுகு காட்டி –
தொல்லை இன்பத்து இறுதி காணும்படி
கட்டுண்டான் ஆகிலும் -வாங்க விற்க அர்ஹனாய் இருந்தாலும் எண்ணற்க்கு அரியன் -சாழலே
துவரைக் கோனாய் நின்ற நிலையில் சேயனாய் மிகப் பெரியவனாய் –த்வராகா தீசனாய் -பஞ்ச த்வாராகா
டாகூர் -கோமதி பேட் நாத த்வராகா
அடுத்த வார்த்தை மாயன் -ஆச்சர்யம் -எளிமையா பெருமையா துவரைக் கோனாய் நின்ற நிலை அறிய முடியாதபடி
ஜராசந்தன் -பயந்தால் போல் துவாரகா ரண ஸோடு ராய் -நாடகம் -டா கூர் துவாரகா –
நின்ற மாயன் -ஒவ் ஒன்றிலும் கூட்டி பொருள்
காட்டக் கண்ட ஆழ்வார் மாயம் என்ன மாயமே -சொல்லும்படி அன்றோ
மாம் சரணம் வ்ரஜ -கையாளாய் சாரதியாய் -அணியன் சிறியன் —
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –சேயனாகவும் மிகப் பெரியவனாகவும் –
அஹங்காரமும் செருக்கும் அவனுக்குத் தானே கூடும்
அன்று ஓதிய வாக்கைக் கல்லாதார் -உலகில் ஏதிலராம் மெய் ஞானம் இல்லாமல்

இத்தையே திரு மங்கை ஆழ்வார்
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

சேயன் அணியன் சிறியன் பெரியன் –என்பது சிலர்பேசக் கேட்டு இருந்தே அடிமைத் தொழில் பூண்டாயே நெஞ்சே
முடியாது -தள்ளி இருக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதன்
அருகில் உள்ளவன் அர்ச்சா -மதிப்பு ஏற்படாமல் -உள்ளூர் வித்வானுக்கு மதிப்பு இருக்காதே
அவதாரம் பற்ற -சிறியன்
வ்யூஹம் -ப்ரஹ்மாதிகளுக்கு -பெரியவன்
நேரே குழப்ப இதே சொற்கள்
நெஞ்சம் நாம் தப்பினோம் என்கிறார்
நமக்காக எளிமைப்படுத்தி உள்ளார் -அவஜாநந்தி மாம் மூடா
அணோர் அணீயான்–சிறிய ஜீவனுக்குள் இன்னும் சிறியவனாகப் புகுந்து
மஹதோ மஹீயான்
ஐந்தோ நிஹதோ குஹாயாம்-நிஹித
அந்தர் பஹிஸ்ய சத் சர்வம்
உண்மையை பற்று அற்று பார்ப்பவன் இரைட்டைகளைக் கடந்து -சிறிய ஜீவன் பெரியவன் அருளால் அடைகிறான்
பெரியவனாகி அவனுக்கு சாம்யம் -பக்தி ஞானம் இவற்றால் பெரியவன்
சிறிய ஜீவனே பெரியவன் ஆகிறான்
மம சாதரம்யம்-பரமம் சாம்யம் உபைதி

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய் வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கை தலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே–4-7-1-

சிறியேனுடை சிந்தையுள்-நீ புகுந்த பின்பு

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75

செவியின் வழி புகுந்து என் உள்ளாய் -நான் பெரியன் –நீ பெரியன் என்பதை யார் அறிவார்

வாசுதேவன் எல்லாம் சொல்பவன் மஹாத்மா துர்லபம்
ஞானி து ஆதமைவ மே மதம் -அவனுக்கும் ஆத்மா ஆகிறார்

—————

ஸ்ரீ எம்பெருமானே –தாய் தந்தை -சிறியன் பெரியன் -நம்பி பிரான் —

த்வம் ஏவ சர்வ வித பந்து
தாயாய் தந்தையாய் –மற்றுமாய் -முற்றுமாய் –
ஆயர் புத்ரன் அல்லன் -அரும் தெய்வம் -சிறியனாயும் பெரியனாயும்
தன்னை யதாவாக உணர்த்தியும் மறக்கவும் செய்வான் –

வெயில் காப்பான் வினதை சிறுவன் மேலாப்பின் கீழ் வருவான் -பெரியவன்
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்ணும் பொழுது சிறியவன்
குன்று குடையாக பிடித்தான் குணம் பெரியவன் குணம்
அனைத்தும் அவரே பெரியவன்
அனைவருக்கும் அவரே சிறியவன்
மண்ணோர் விண்ணோர்க்கும் கண்ணாவான்
சமோஹம் சர்வ பூதானாம்

நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்
நம்பிக்கும் கொம்பினைக் காணும் தோறும் அஃதே
மிதுனமும் பூர்ணம் –
குணங்கள்-சர்வம் பூர்ணம் –
ஸூந்தர பரி பூர்ணன் -வடிவு அழகிய நம்பி
எங்கும் நிறைந்தவர் வியாபி -கரந்து
செல்வம் குணங்கள் அனைத்தும் நிறைந்து -எல்லாவற்றாலும் நிறைந்து
விஸ்வம் -அணைத்தாலும் நிறைந்து
விஷ்ணும்-அவரே எங்கும் நிறைந்து இருப்பவர்

பிரான்
உபகாரத்வம் -உதவுபவர் -சகல பல ப்ரதோ விஷ்ணு
வேண்டிற்று எல்லாம் தரும் கோது இலா மணி வண்ணன்
நம்பியான படியால் பிரான் –
அவஸ்யம் ஆஸ்ரயணீயன்

நம்பன் -என்று நம்பலாம்
திரு நறையூர் நம்பி
திருக் குறுங்குடி நம்பி
திருக் குருகூர் நம்பி
திருக் கோஷ்ட்டியூர் நம்பி -பெரிய நம்பி -பெரிய திருமலை நம்பி திருக் கச்சி நம்பி -வடுக நம்பி
குணங்கள் உள்ள நம்பியால் நிறைந்த -ஞான பக்தி வைராக்யம் ப்ரேமம் இவற்றால் நிறைந்தவர்கள்

செல்வ நாரணன் சொல் கேட்டலும் -அல்லும் பகலும் இடைவீடு இன்றியே —
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே -நம்பி வந்தேன் வினை எச்சம்
நம்பத் தக்கவன்
பூர்ணன்
நம்மை பெற்று அனுபவிக்க நம்பி காலம் அவகாசம் எதிர் பார்த்து நம்பியே கொடுத்துக் கொண்டு இருக்கும் பித்தன்
ஆஸ்திகர் -நாஸ்திகர் -ஆஸ்திக நாஸ்திகர் -மூ வகை உண்டே
நம்பிக்கை இல்லாத சுக்ரீவ மஹாராஜருக்கும் நம்பிக்கை ஊட்டும் நம்பி அன்றோ பெருமாள்
மித்ர பாவம் –நத்யஜேயம் கதஞ்சன —

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம் பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே –

நம்பியை தென் குறுங்குடி நின்ற நின்ற அச்
செம் பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியயை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ -1-10-9-

குண பூர்ணன் நம்பியை மறப்பேனோ
ஸந்நிஹிதன் தென் குறுங்குடி நின்ற நின்ற மறப்பேனோ
வடிவு அழகிய நம்பி -அழகு இல்லை என்று மறப்பேனோ
உம்பர் வானவர் ஆதி-அம் சோதியயை -பெருமை இல்லை என்று மறப்பேனோ
எம்பிரானை-என்று மறப்பேனோ
உபகாரத்வம் -என்ன என்றால் அழகான ஆழமான -தவிக்க புலம்ப விட்டு -பக்தி வளர்த்து -கை விட மாட்டார் –
நீங்கள் என்ன சொன்னாலும் -எனக்கே கஷ்டம் கொடுத்தாலும் -விஸ்வாசம் மாறாமல் அவனே நம்பி என்று
நமக்கும் உபதேசம் பண்ணும்படி செய்து அருளிய உபகாரத்வம்
இப்படிப்பட்ட ஆழ்வாராதிகளையும் ஆச்சார்யர்களையும் நாம் நம்ப வேண்டுமே –

சரணமாகும் தன தாள் அடைந்ததற்கு எல்லாம் –நம்பி
மரணமானால் நமக்குக் கொடுக்கும் பிரான் -பிரான்

நம்பனை ஞாலம் படைத்தவனை திரு மார்பனை -3-7-8-

ச பித்ரா ச -அனைத்து உலகும் திரிந்து ஓடி -கிருபையா பரிபாலயதா -கிருபையே பிராட்டி –
நம்பனை திரு மார்பனை -இவளாலே பூர்ணன்

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே -நரசிசிங்க மதானாய் உம்பர் கோன் உலகம் ஏழும் அளந்தாய் –5-1-9-
திருக்கோஷ்ட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார் உழக்கிய 4-4-6-
கிறுக்கன் வார்த்தை -ப்ரம்மா வரம் அனைத்தையும் சாத்தியமாக்கும் -மாலைப்பொழுதில் -வரத்துக்கு உள்பட்டு –
எம்பார் -மூன்று பரீஷைகளிலும் தப்பினான் பெருமாள் -கஜேந்திரன் -பிரகலாதன் -திரௌபதி-

கிடந்த நம்பி குடந்தை மேவி–அழகால் –
கேழலாய் உலகை இடந்த நம்பி
எங்கள் நம்பி -உபகாரங்களால் பூர்ணன்
எறிஞர் அரண் அழிய கடந்த நம்பி கடியார் இலங்கை
ஆற்றலால் வீரத்தால் —
உலகை ஈரடியால் நடந்த நம்பி -அத்புத செயலால் -நம்பி சொல்லில் நமோ நாராயணமே நாமம்

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்

ஸ்வரூப ரூப குணங்களால் நிறைந்தவர்
ரூப ஒவ்தார்ய குணங்கள்
அமலன் ஆதி பிரான் –
உபகார பரம்பரைகள்
உதவிக்கைம்மாறு ஒன்றும் இலேன்

பக்தானாம் -இருப்பதை எல்லாம் நமக்கு கொடுப்பவன்
உயர் நலம் உடையவன் நம்பி
மயர்வற மதி நலம் அருளினன் பிரான்

ஞானப்பிரான் அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஞான ஆனந்த ஸ்வரூபம் -ஆனந்தோ ப்ரஹ்ம திவ்யம் -நம்பி -தேவம் கொடுக்கும் பிரான் –
பெற்றுக் கொள்ளத் தான் நாமும் விலக்காமல் இருக்க வேண்டும்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணன் நம்பி –
அருளாய் என்று -பிரான்
இடரில் முகில் வண்ணன் -நம்முடைய நம் பெருமாள்

பகவத் அனுசந்தானத்தால் பூர்ணர்
ஞான பக்தி வைராக்யங்களால் பூர்ணர்
பெருமாள் விருப்பம் சங்கல்பம் நம்மை அவன் இடம் சேர்த்ததால் பூர்ணர்
கமலா பதி சங்கல்பம் நிறைவேற்றிய பூர்ணர் -பெரிய நம்பி
குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூர்
குறுங்குடி நம்பி தந்தையாயும் தாயையும் -ஹிதம் முதல் பிரியம் அப்புறம்
இவரோ அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்
பெரியவனான நம்பி எளியவன் பகவான்
சிறியவரான ஆச்சார்யர்கள் பெரியவராகி நம்மை உத்தரிக்கிறார்கள்

சாஸ்த்ர ஜன்ய ஞானம் -முதல் படி
யோக ஜன்ய ஞானம்
ஆச்சார்ய உபதேச ஜன்ய ஞானம் -இறுதி படி
இங்கு தான் பிரான் முதலில் பின்பு நம்பி ஆகாரம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள்
அவனோ இவராகவே வந்து அபகரித்து அருளுகிறார்
வடுக நம்பி -ஆச்சார்ய அபிமானம் பக்தி கைங்கர்யத்தால் பூர்ணர்
உன்னை ஒழிய மற்ற தெய்வம் அறியாத வடுக நம்பி நிலையை ஈந்து அருள்
திருக் கோஷ்ட்டியூர் நம்பியும் வடுகா கூப்பிட வந்து வைஷ்ணவ நம்பி பெயருக்கு ஆசைப்பட்டவர்
அறியக் கற்று வல்லவர் வைஷ்ணவர் ஆவார் –

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே -பெரிய திருமொழி–7-2-3-

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ–-பெரிய திருமொழி-7-2-4-

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே -பெரிய திருமொழி-–7-3-3-

————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: