ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அழியாமல் இருக்க ஆராவமுதம் -சரீரம் அழியாமல் இருக்கவே அமுதம் -உப்புச் சாறு –
ஆரா வின்னமு துண்ணத் தருவன் நான்-பெரியாழ்வார் -3-2-11-
என்னரங்கத்தின் இன்னமுதர் -நாச்சியார் –11-2-
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே -13-4-
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ –பெருமாள் –8-1-
எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ –8-3-
அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் களிக்குமாறே –17-
ஆவியே அமுதே –திருமாலை -35-
மைந்தனே மதுரவாறே –36
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே-கண்ணி -1-
சீரார் திரு வேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே –பெரிய திருமொழி -1-10-3-
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்க்கு ஆரமுதம் ஆனான் தன்னை –2-10-4-
விண்ணவர்கட்கு அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
குரு மணி என்னாரமுதம் -3-10-2-
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆரா வமுதே அடியேற்கு அருளாயே –4-7-8-
தன்னடியார் மனத்து என்றும் தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை –கண்டது தென்னரங்கத்தே –5-6-3-
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-
திரு மூழிக் களத்து விளக்கே இனியாய தொண்டரோம் பேருக்கு இன்னமுதாய கனியே –7-1-6-
மலர் மங்கை நாயகனை ஆரா இன்னமுதத்தைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரார் கருமுகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை யாரமுதத்தினைப் பைந்துழாய் மாலை ஆலியில்
கண்டு மகிழ்ந்து போய் ஞான முன்னியைக் காண்டும் நாங்கூரிலே-10-1-3-
துளக்கமில் சுடரை அவுணனுடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே-10-1-4-
வானை ஆரமுதம் தந்த வள்ளலை தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டியருளும் அமரர் தம் கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே-10-1-5-
பார் கெழு பவ்வத் தார் அமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே –10-9-9-
முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை–திரு நெடும் தாண்டகம் –14
விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தோர்க்கு ஓர் ஆர் அமுதே –திருவாய் –1-6-5-
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -2-5-4-
ஆராவமுதமாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவே செம்பவளம் கண் பாதம் கை கமலம் பேரார நீள் முடி நாண் பின்னும் இழை பலவே–2-5-5-
கூறுதலொன் றாராக் குடக் கூத்த வம்மானை — 2-5-11-
எழுமைக்கும் எனதாவிக்கு இன்னமுதத்தினை –3-6-7-
அமரர்கட்க்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை –3-7-5-
ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவி யம் புள்ளுடையாய் சுடர் நேமியாய் –3-8-7-
தண் சிரீ வர மங்கை மேய பத்துடன் வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா வமுதே –5-7-11-
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின் பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!–5-8-1-
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக் குடந்தை
ஊராய்! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-
தீர இரும்புண்ட நீரது போலே என்னாருயிரை
ஆரப் பருக எனக்கே ஆராவமுதானாயே–10-10-5-
எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்–10-10-6-
அன்பாவாய் ஆரா வமுதமாவாய் அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய்-நான்முகன் திருவந்தாதி -59
தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு ஆரா வமுதம் அங்கு எய்தி
அதினின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே —
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்
அறிதற நின்ற இராமானுசன் எனக்காரமுதே
மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப் பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழலன்றிச் சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே. ( திருவரங்கக் கலம்பகம், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் )
சேரா தனவுள வோ? பெருஞ்செல்வர்க்குவே தம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயமாயிரம் பெய் துளவத்
தாரார் முடியா யிரங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆரா அமுதக் கவி யாயிர மவ் வரியனுக்கே!—கம்பர் பாடிய சடகோபர் அந்தாதி
—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply