ஸ்ரீ அருளிச் செயல்களில் -என் ஆனாய் -பத பிரயோகங்கள் –

யானை –
தென்னானாய் வடவானாய் குட பாலானாய் குண பால மத யானாய் –என்றும்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -என்றும்
சோலை மலைக் களிறே -என்றும் சொல்வார்களே –
குஞ்ஜரம் வா அத்ரி குஞ்ஜே -என்றார் ஸ்ரீ பட்டர் –

1- யானை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் பொழுது எல்லாம் அபூர்வ வஸ்துவாகவே -பரமானந்தமாகவே -இருக்கும்–
இவனும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே –
பண்டு இவரைக் கண்டது எவ் ஊரில் -என்றும் சொல்லப் பண்ணுவன்

2-ஆனை உடைய காலைப் பற்றியே ஏற வேண்டும் -இவன் திருவடிகளைப் பற்றியே அடைய வேண்டும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்பர் –

3- தன்னைக் கட்ட கையிற்றை தானே எடுத்துக் கொடுக்கும்-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் –
பக்தியாகிய கயிற்றை அவனே தந்து அருள்வான் -மதி நலம் அருளினான் –

4-நீராட்டிய உடனே அழுக்கோடு சேரும் -சுத்த சத்வ மயன் -பரம பவித்ரன் -இருந்தும் வாத்சல்யத்தாலே
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் உடைய நம் போல்வாருடன் சேர்வான் –

5-பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் -பிராட்டியின் புருஷகாரம் இன்றி இவனும் வசப்படான் –

6-பாகனுடைய அனுமதி இன்றி தனது பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
என்றபடி பாகவதர்களை முன்னிட்டு புகாதாராய் அங்கீ கரித்து அருளான் –

7-யானையின் பாஷை பாகனுக்கு தெரியும் -எம்பெருமான் பாஷை திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும்
ஸ்ரீ காஞ்சி பூர்ண மிஸ்ரேண ப்ரீதா சர்வ அபி பாஷிணே-

8-யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் பாகன் இட்ட வழக்காய் இருக்கும் -இவனும்
கனி கண்ணன் போகின்றான் –காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா –
உன் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொள் -என்றும்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு என்றும் சொல்வாருக்கு சர்வாத்மநா விதேயன் இறே–

9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும் –
இவன் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தால் பல கோடி பக்த வர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம் –

10-யானைக்கு கை நீளம் -இவனுக்கும் அலம் புரிந்த நெடும் தடக்கை -நீண்ட அந்தக் கருமுகிலை எம்மான் தன்னை –

11-யானை இறந்த பின்பும் உதவும் -இவனும் தீர்த்தம் பிரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளிய பின்பும்
இதிஹாச புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாக தனது சரிதைகளை உணர்த்தி உதவுகிறான் –

12-யானைக்கு ஒரு கையே உள்ளது -இவனுக்கும் கொடுக்கும் கை மட்டுமே கொள்ளும் கை இல்லை இறே

13-பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் யானை -இவனும் அர்ச்சக பரிசாரகர்களுக்கும் தன்னை நிர்வஹிக்கும்
வித்வான்களுக்கும் ஜீவன உஜ்ஜீவன ப்ரதன்-எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

————

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்–பெரியாழ்வார் திருமொழி -1-2-6-

தந்த களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலை–1-2-8-

தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகம்
என்பவர் தாம் மடிய செரு வதிரச் செல்லும்
ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே! ஆடுக ஆடுகவே – 1-5 4-

துடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும் மதப்புனல் சோர வாரணம் பைய நின்ற்றூர்வது போலே
உடன் கூடி கிண் கிணி ஆரவாரிப்ப வுடை மணி பறை கறங்க
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ -1 7-1 –

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்தது ஒரு வேழத்தின் கரும் கன்று போல்
தெள் புழுதி யாடி திருவிக்ரமன் சிறு புகர் விட வியர்த்து
ஒண் போது அலர் கமல சிறுக் கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ -1 7-9 –

மதுரைப் பிறந்த மா மாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 8-

——————-

வேழ போதக மன்னவன் தாலோ-பெருமாள் திருமொழி –7-1-

கைம்மாவின் நடை அன்ன மென்னடையும் கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே– 9-6–

—————-

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே –1-10-6-

உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கருங்களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை–2-10-6-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்–4-8-1-

அண்டர் கோன் என் ஆனை என்றும் –4-8-3-

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே -4-9-2-

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
— யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-

மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று-7-4-1-

கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே-10-4-9-

—————-

என் ஆனாய் –-தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய் -திரு நெடும் தாண்டகம்-10-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் -திரு நெடும் தாண்டகம்-15

——————-

திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே -திருவாய்மொழி–3-9-1-

————————————————

பண் தரும் மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: