ஸ்ரீ மத் பாகவதம் -முதல் ஸ்கந்தம் -மூன்றாவது அத்யாயம் —-ஸ்ரீ கிருஷ்ணனே ஸ்ருஷ்ட்டி கர்த்தா–சகல அவதாரங்களும் செய்பவனும் அவனே —

ஸூ த உவாச
ஜக்ருஹே புருஷம் ரூபம் பகவான் மஹத் ஆதிபிஸ் ஸம்பூதம் ஷோடச குலம் ஆதவ் லோகே சிஷ்ருஷயா -1-3-1-

யஸ்யாம்பஸி சயா நஸ்ய யோக நித்ராம் விதன் வதஸ் நாபி ஹ்ரதாம்புஜா தாஸீத் ப்ரஹ்மா விஸ்வ ஸ்ருஜாம் பதிஸ் -1-3-2-
உறங்குவான் போல் யோகு -திரு நாபியில் நான்முகனைப் படைத்தான்-

யஸ்யா வயவசம் ஸ்தாநைஸ் கல்பிதோ லோக விஸ்தரஸ் தத்வை பகவதோ ரூபம் விஸூத்தம் சத்த்வம் ஊர்ஜிதம் -1-3-3-
திவ்ய மங்கள விக்ரஹம் -திருமேனி ஏகம் பிரபஞ்சமாக –

பஸ்யந்த் யதோ ரூபம் அதப்ர சஷுஷா சஹஸ்ர பாதோரு புஜான நாத்புதம்
சஹஸ்ர மூர்த ஸ்ரவணாஷி நாசிகம் சஹஸ்ர மௌல்யம் பர குண்டலோல் ல சத் -1-3-4-

ஏதன் நாநாவ தாராணம் நிதாநம் பீஜ மவ்யயம் யஸ்யாம் ஸாம்சேன ஸ்ருஜ்யந்தே தேவ திர்யங் நராதயஸ் -1-3-5-

ச ஏவ பிரதமம் தேவ கௌமாரம் சர்க்கம் ஆஸ்தித சசார துஸ் சரம் ப்ரஹ்மா ப்ரஹ்ம சர்யம் அகண்டிதம் -1-3-6-

த்விதீயம் து பவா யாஸ்ய ரஸா தல கதாம் மஹீம் உத்த ரிஷ்யன் உபா தத்த யஜ்ஜேசஸ் ஸுவ்கரம் வபுஸ் -1-3-7-
ஸ்ரீ வராஹ நாயனராய் உத்தாரணம்

த்ருதீயம் ருஷி சர்க்கம் ச தேவர்ஷித்வம் உபேத்ய ச தந்த்ரம் சாத்வத மா சஷ்ட நைஷ் கர்ம்யம் கர்மணாம் யதஸ் -1-3-8-
நாரதர் தேவ ரிஷி

துர்யே தர்மே கலா சர்கே நர நாராயண வ்ருஷீ பூத் வாத்மோப சமோ பேதம் அகரோத் துஸ் சரம் தபஸ் -1-3-9-
நர நாராயண அவதாரம் நான்காவதாக தர்ம தேவதை திருக்குமாரர்கள் –

பஞ்சம கபிலோ நாம சித்தேச கால விப்லுதம் ப்ரோவோ சா ஸூரயே சாங்க்யம் தத்துவ க்ராம வி நிர்ணயம் -1-3-10-

ஷஷ்டே அத்ரேர பத்யத்வம் வ்ருத ப்ராப்தோ அநஸூயயா ஆன்வீஷிகீ மலர்காய ப்ரஹ்லாத திப்ய ஊசிவான் -1-3-11-
ஆறாவது –

தத சப்தம ஆகூத் யாம் ருசேர் யஜ்ஜோ அப்ய ஜாயதே ச யாமாத்யை ஸூரகணைஸ் அபாத் ஸ்வாயம்பு வாந்தரம் -1-3-12-
ஏழாவது பிரஜாபதி ஆகுதி –

அஷ்டமே மேரு தேவ்யாம் து நாபேர் ஜாத உரு க்ரமஸ் தர்சயன் வர்த்ம தீராணாம் ஸர்வாஸ்ரம நமஸ் க்ருதம் -1-3-13-
எட்டாவது நாபி தேவன் மேரு தேவி திருக்குமாரர் ரிஷப தேவன்

ருஷிபிர் யாசிதோ பேஜே நவமம் பார்திவம் வபுஸ் துக் தேமாம் ஒவ்ஷதீர் விப்ரா தே நாயம் ச உஸத் தமஸ் -1-3-14-
ஒன்பதாவது ப்ருது-

ரூபம் ச ஜக்ருஹே மாத்ஸ்யம் சாஷுஷோ ததி சம்ப்லவே நாவ்யா ரோப்ய மஹீ மய்யாம் அபாத் வை வஸ்வதம் மனும் -1-3-15-
ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம்

ஸூரா ஸூராணாம் உததிம் மத் நதாம் மந்த ராசலம் தத்ரே கமட ரூபேண ப்ருஷ்ட ஏகாதசே விபு ச -1-3-16-
ஸ்ரீ கூர்மம்

தான் வந்தரம் த்வாத சமம் த்ரயோ தசமம் ஏவ ச அபாய யத் ஸூரான் அன்யான் மோஹின்யா மோஹயன் ஸ்த்ரியா -1-3-17-
அம்ருத மதனம்-தன்வந்திரி

சதுர்தசம் நாரஸிம்ஹம் பிப்ரத் தைத்யேந்த்ர மூர்ஜிதம் ததார கரஜைர் வக்ஷஸி ஏரகாம் கடக்ருத் யதா -1-3-18-
ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம்

பஞ்ச தசம் வாமநகம் க்ருத்வா காத் அத்வரம் பலே பத த்ரயம் யாச மான ப்ரத் யாதித் ஸூ த்ரி விஷ்டபம் -1-3-19–
பதினைந்தாவது வாமனன்

அவதாரே ஷோடச மே பஸ்யன் ப்ரஹ்ம த்ருஹோ நிருபான் த்ரி சப்த க்ருத்வ குபிதோ நி க்ஷத்ராம் அகரோன் மஹீம் -1-3-20-
பதினாறாவது மூ எழு கால் போக்கிய புனிதன்

தத சப்த தஸே ஜாத ஸத்ய வத்யாம் பரா சராத் சக்ரே வேத தரோஸ் சாகா த்ருஷ்ட்வா -1-3-21-
பதினேழாவது -வேத வியாசர் -பராசர சத்யவதி -வேதங்களை பிரித்து அருளி

நர தேவத்வம் ஆபன்ன ஸூர கார்ய சிகீர் ஷயா சமுத்ர நிக்ரஹா தீனி சக்ரே வீர்யாண் யத பரம் -1-3-22-
பெருமாள் -கடலை அடைத்து அதி மானுஷ சேஷ்டிதங்கள் –

ஏகோ ந விம்சே விம்சதிமே வ்ருஷ்ணிஷு ப்ராப்ய ஜன்ம நீ ராம கிருஷ்ண விதி புவோ பகவான் அஹரத் பரம் -1-3-23-
பத்தொன்பது இருபது -பூ பாரம் நீக்க நம்பி மூத்தபிரானும் கிருஷ்ணனும்

தத கலவ் ஸம்ப்ர வ்ருத்தே சம்மோஹாய ஸூ ரத் விஷாம் புத்தோ நாம் நாஞ் ஜன ஸூ த கீகடேஷு பவிஷ்யதி -1-3-24-
போத் கயாவில் அஞ்சன மைந்தன் புத்த அவதாரம் கலியுக ஆரம்பம்

அதாசவ் யுக ஸந்த்யாயாம் தஸ்யு ப்ராயேஷு ராஜஸூ ஜனித்த விஷ்ணு யசசோ நாம்நா கல்கிர் ஜகத் பதி -1-3-25-
கல்கி அவதாரம்

அவதாரா ஹி அசங்க்யேயா ஹரே சத்துவ நிதேர் த்விஜா யதா விதாசினா குல்யா சரஸ் ஸ்யுஸ் சஹஸ்ரச -1-3-26-

ருஷயோ மனவோ தேவா மனு புத்ரா மஹவ்ஜஸ கலா சர்வே ஹரேர் ஏவ சப்ரஜா பதயஸ் ஸ்ததா -1-3-27-

ஏதே ஸாம்ச கலா பும்ஸ கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம் இந்த்ராரி வ்யாகுலம் லோகம் ம்ருட யந்தி யுகே யுகே -1-3-28-
சம்பவாமி யுகே யுகே -தர்ம ஸம்ஸ்தாபநார்த்தம்

ஜன்ம குஹ்யம் பகவதோ ய ஏதத் ப்ரயதோ நர சாயம் ப்ராதர் க்ருணன் பக்த்யா துக்க க்ராமாத் விமுச்யதே -1-3-29-
ஜென்ம ரஹஸ்யம் அறிந்தவன் சம்சார துரிதங்கள் நிவர்த்தனம் அடைகிறான்

ஏதத் ரூபம் பகவதோ ஹ்ய ரூபஸ்ய சிதாத் மன மாயா குணை விரசிதம் மஹதா திபிர் ஆத்மனி -1-3-30-
ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறக்கிறான்

யதா நபஸி மேகொவ்கோ ரேணுர்வா பார்திவோ அநிலே ஏவம் த்ரஷ்டரி த்ருஸ் யத்வம் ஆரோபிதம் அபுத்திபி -1-3-31-
தூசியைக் காற்று தள்ளி வீச காற்றில் தூசி என்று அறியாதவர் சொல்லுவது போல் ப்ரஹ்மத்தின் உண்மை அறிகிறார் அல்லர்

அத பரம் யத் அவ்யக்தம் அவ்யூட குண வ்யூஹிதம் அத்ருஷ்டா ஸ்ருத வஸ்துத் வாத் ச ஜீவோ யத் பநர்பவ -1-3-32-
அரூபமும் அவனது ரூபங்களில் ஒன்றே

யத்ரே மே சத சத் ரூபே ப்ரதி ஷித்தேஸ்வ சம்விதா அவித்யயா ஆத்மனி க்ருதே இதி தத் ப்ரஹ்ம தர்சனம் -1-3-33-

யத் யேஷா பரதா தேவீ மாயா வை சாரதீ மதி சம்பந்த ஏவேதி விது மஹிம்னி ஸ்வே மஹீ யதே -1-3-34-

ஏவம் ஜன்மானி கர்மாணி ஹ்யகர்து அஜநஸ் ய ச வர்ண யந்தி ஸ்ம கவயோ வேத குஹ்யானி ஹ்ருத் பதே -1-3-35-

ச வா இதம் விஸ்வம் அமோக லீல ஸ்ருஜதி அவத் யத்தி ந சஜ்ஜதே அஸ்மின் பூதேஷு
சாந்தர் ஹித ஆத்மா தந்த்ர ஷாட் வர்கிகம் ஜிக்ரதி ஷட் குணே ச –1-3-36-
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவனது அதீனம் -உள் புகுந்து நியமித்தாலும் தோஷம் தட்டாதவன்

சாஸ்ய கஸ்சித் நிபுணென தாது அவைதி ஐந்து குமநீஷ ஊதி நாமாணி ரூபாணி
மனோவ ஸோபி சந்தன் வதோ நட சர்யாமி வாஜ்ஞ -1-3-37-

ச வேத தாது பதவீம் பரஸ்ய துரந்த வீர்யஸ்ய ரதாங்க பானே யோ அமாயயா சந்த
தயானு வ்ருத்த்யா பஜேத தத் பாத சரோஜ கந்தம் -1-3-38-

அதேஹ தன்யா பகவந்த இத்தம் யத் வாஸூ தேவே அகில லோக நாதே குர்வந்தி சர்வ ஆத்மகம்
ஆத்ம பாவம் ந யத்ர பூய பரிவர்த உக்ர -1-3-39-

இதம் பாகவதம் நாமம் புராணம் ப்ரஹ்ம சம்மிதம் உத்தம ஸ்லோக சரிதம் சகார பகவான் ருஷி
நிஸ் ஸ்ரேயசாய லோகஸ்ய தன்யம் ஸ்வஸ் த்யயனம் மஹத் -1-3-40-

தத் இதம் க்ராஹயா மாச ஸூதம் ஆத்ம வதாம் வரம் சர்வ வேத இதிஹாசா நாம் சாரம் சாரம் சமுத் த்ருதம் -1-3-41-

ச து சம்ஸ்ராவயா மாச மஹாராஜம் பரீக்ஷிதம் ப்ராயோபவிஷ்டம் கங்காயாம் பரீதம் பரம ருஷீபீ -1-3-42-

கிருஷ்னே ஸ்வதா மோ பகதே தர்ம ஞானாதிபி ஸஹ கலவ் நஷ்ட த்ருஸாம் ஏஷ புராணார் கோ அது நோதித -1-3-43-

தத்ர கீர்த யதோ விப்ரா விப்ரர்ஷேர் பூரி தேஜஸா அஹம் சாத்ய கமம் தத்ர நிவிஷ்ட தத் அனுக்ரஹாத்
ஸோ அஹம் வ ஸ்ராவ யிஷ்யாமி யதா தீதம் யதா மதி –1-3-44-

பிரதம ஸ்கந்தம் த்ருதீய அத்யாயம் சம்பூர்ணம்

—————–

பகவானின் அவதாரங்கள்.

ஸத் அஸத் இரண்டுமே பகவானின் மாயையால் ஏற்படுபவை –
எப்படி என்றால் கயிறை பாம்பாகப் பார்க்கிறோம்.. கயிறு ஸத். பாம்பு அஸத். கயிறும் மாயையின் தோற்றமே.
ஏனென்றால் எல்லாமே ப்ரஹ்மமே என்ற நிலையில் பார்த்தால் கயிறு என்பது ஒரு புறத்தோற்றம்
இது எதனால் வருகிறது என்றால் நம் அஜ்ஞானத்தால். இதுதான் அவித்யா என்று குறிப்பிடப்படுகிறது.
அவித்யா என்பது ஒவ்வொரு ஜீவனுடைய அஜ்ஞானம் என்று வைத்தால் எல்லா ஜீவராசிகளுடையவும் அவித்யா தான் மாயா .
இது ஈஸ்வரனுக்கு கட்டுப்பட்டது.

‘தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா,’(ப.கீ. 7.14)
“இந்த என்னுடைய த்ரிகுணமான மாயையை கடப்பது கடினம் “என்கிறார்.
ஏன் என்னுடைய மாயை என்று கூறவேண்டும்? அதாவது நம் கர்ம வினை நீங்கும் வரை எது உண்மை எது பொய்
என்பது மறைக்கப்பட்டுள்ளது நம் அஜ்ஞானத்தால். இது முக்குணங்களால் ஏற்படுவது.
தேஹாபிமானம் உள்ளவரை பகவத் ஞானம் ஏற்படாதாகையால் அவன் தன்னை மாயையால் மறைத்துக்கொண்டிருக்கிறான். எதுவரை?
நாம் அவனை அறியும் வரை. அவன் அரணிக் கட்டையில் மறைந்த அக்னியைப் போல் நம்முள் மறைந்திருக்கிறான்.
அரணிக் கட்டையை கடைவதுபோல் நம் புத்தியை பக்தியால் கடைந்தால் அவன் வெளிப்படுவான்.

இனி பகவானின் அவதாரங்களைப் பற்றி சூதர் சொல்வதைப் பார்க்கலாம்.

பகவான் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்ய திருவுளம் கொண்டு, பதினாறு கலைகள் உள்ள உருவத்தை எடுத்துக்கொண்டார்.
இந்த பதினாறு கலைகளாவன, பத்து இந்த்ரியங்கள், ஐந்து பூதங்கள் மனம்.
இதை மூன்றாவது ஸ்கந்தத்தில் கபிலவதார வர்ணனையில் விரிவாகக் காணலாம் .
பகவானின் இந்த ரூபத்தை யோகிகள் ஞானக்கண்ணால் காண்கின்றனர்.
‘சஹஸ்ர சீர்ஷா புருஷ: , சஹாஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்,’ என்று புருஷ ஸூக்தத்தில் வர்ணிக்கப் படுவது இதுதான்.
வற்றாத ஏரியிலிருந்து ஆயிரக் கணக்கான ஊற்றுக்கள் உற்பத்தியாவது போல நாராயணனிடம் இருந்து
கணக்கிலா அவதாரங்கள் தோன்றுகின்றன.
எங்கெங்கு நல்ல பண்புகள் செயல்கள் காணப்படுகின்றனவோ அவை எல்லாம் பகவானின் அவதாரங்களே

அவற்றுள் இருபத்து நான்கு முக்கியமாகக் கூறப்படுகின்றன. அவையாவன-
வராஹ,
நாரத,
நர,
நாராயண,
கபில ,

தத்தாத்ரேய,
யஜ்ஞ,
ரிஷப,
ப்ருது ,
மத்ஸ்ய ,

கூர்ம,
தன்வந்தரி,
மோகினி,
நரசிம்ஹ,
வாமன ,

பரசுராம,
வியாச,
ரகுராம,
பலராம,
கிருஷ்ண,

புத்த,
கல்கி என்பதாகும்.

ரிஷிகள் .மனுக்கள், தேவர்கள், மனுவின் புத்திரர்கள் எல்லோரும் ஹரியின் அம்சமாவர்.
ஆனால் கிருஷ்ணாவதார பூர்ணாவதாரம்.
சுகர் சொல்கிறார், ‘க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்.’.

பாகவதம் புராணார்க்க: என்று சொல்லப்படுகிறது. அர்கக என்றால் சூரியன்.
கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கியபின் கலியின் இருளைப் போக்க வந்த சூரியன் பாகவத புராணம் .

இது ரிஷிகள் கேட்ட ஆறாவது கேள்வியான
“ கிருஷ்ணர் சென்றவுடன் தர்மம் எதை ஆதாரமாகக் கொண்டுள்ளது” என்றதற்கு பதிலாக அமைந்துள்ளது.
பாகவதபுராணம் தோன்றிய சம்பவத்தை அடுத்த அத்தியாயம் வர்ணிக்கிறது.
இப்போது இந்த அத்தியாயத்தில் உள்ள வேதாந்த உண்மைகளைப் பார்ப்போம்.

1.ஸத் அல்லது பிரம்மம் ஒன்றுதான் முதலில் இருந்தது அது பலவாக ஆக சங்கல்பித்தது என்ற உபநிஷத் வாக்கியம்.
2.நாராயணனே பரப்ரம்மம்.
3.பக்தி மூலம்தான் ஞானம் வரும். ஞானத்தின் மூலம் முக்தி கிடைக்கும்.
4.எல்லா செயல்களும் .எண்ணங்களும் அவனுக்கே அர்ப்பணிக்க வேண்டியவை.
5.பகவான்தான் உண்மை. அவனே எல்லாமாகத் தோன்றுகிறான்.
அஜாயமானோ பஹுதா விஜாயதே- புருஷ ஸூக்தம். பிறப்பில்லாதவன் பலவாகப் பிறக்கிறான்.
அதனால் எல்லாமே அவன் அம்சம். அவன் அவதாரங்கள் கணக்கில்லாதவை
6.பாகவத புராணம் வேதம் உபநிஷத் இதிகாசங்கள் இவைகளின் சாரம்.

கலி யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் பாகவத புராணத்துக்குள்ளேயே நித்ய வாசம் செய்து அருளுகிறார் –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: