ஸ்ரீ திரு அரங்கம்- மங்களா சாஸன -பரமான ஸ்ரீ அருளிச் செயல்கள்–

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ திரு அரங்கம்
மூலவர் ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ அழகிய மணவாளன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் தெற்கு
உற்சவர் ஸ்ரீ நம் பெருமாள்
தாயார் ஸ்ரீ ரங்கநாயகி-ஸ்ரீ பெரிய பிராட்டியார் =
தீர்த்தம் ஸ்ரீ சந்திரபுஷ்கரணி
விமானம் ஸ்ரீ ப்ராணாவாக்ருதி விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருச்சி
நாமாவளி ஸ்ரீ ரங்க நாயகீ-ஸ்ரீ பெரிய பிராட்டியார் – ஸமேத ஸ்ரீ ரங்க நாதாய நமஹ

——————–

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்

திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2 7-2 –
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7 8-
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்–2-9-11-
தென்னரங்கம் மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்–3-3-2-

போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8 1-
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –
திருமுகமாய் செங்கமலம் திருநிறமாய் கரும் குவளை பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8-3-
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4 8-4 –
திருவரங்கம் என்பதுவே என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8 6-
காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே – 4-8 7-
வண்டு எம்பெருமான் குணம் பாடி மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8 8-
தென்றல் உலா மதிள் அரங்கம் என்பதுவே -4 8-9 –
திருவாளன் திருப்பதி மேல் திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன–4-8-10-

உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 2-
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே – 4-9 3-
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே -4 9-5 –
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே – 4-9 6-
அரவணையின் வாய்ச் சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே -4 9-7 –
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரமபுற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண அரங்கமே -4-9-8 –
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்–புனல் அரங்கமே -4-9 9-
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே 4-9 10-
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ்-4-9-11-

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே- 4-10-1-
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4 10-2 –
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 3-
நமன் தமர் பற்றலுற்ற வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 10-4 –
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10-5-
என்னைக் குறிக் கொண்டு என்றும் அண்ணலே நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 6-
அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே – 4-10 7-
மதுரைப் பிறந்த மா மாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 8-
நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -4-10-9 –
அரங்கத்து அரவணைப் பள்ளியானை வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை–4-10-10-

————-

ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–11-1-
எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் –11-2-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-
மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்–என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே—11-4-
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான் இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-
திருவரங்கச் செல்வனார் எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார் எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7-
மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–11-9-
செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்–11-10-

————-

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்

திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும் கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும் மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-
அரங்கத்து உரகம் ஏறி கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும் ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை கண்ணார கண்டு உகக்கும்
காதல் தன்னால் குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் –1-11-

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை
மெய் அடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-
என் அரங்கனுக்கு அடியார்களாய் நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-
தென் அரங்கனாம் மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-
அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-
அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-
அரங்கன் எம்மானுக்கே மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-
அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம் எல்லையில் அடிமை திறத்தினில் என்றும்
மேவு மனத்தானாம் கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன் சொல்லின் இன் தமிழ் மாலை-2-10-

ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன் மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1-
ஆலியா அழையா அரங்கா! என்று மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–3-4-
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5-
தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர் எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே–3-6-
அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—3-7-
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —3-8-
அங்கை ஆழி அரங்கன் அடியிணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்-3-9-

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!–8-10-

—————

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்

அரங்கனே — நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார் குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர் வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50-
பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல் அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார் அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-
வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால் பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே –53-
குங்குமக் குழம்பினோடு அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –55-
அரங்க வாணனே கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-
பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள் என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119–

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்—யான் அறிந்தவாறு –நான்முகன் திருவந்தாதி -3-
அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில் அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே வெள்ளத்து அரவணையின் மேல்—30-
நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள் நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தானாவான்–36-
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை விரும்புவதே விள்ளேன் மனம்–60–

————

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்

மூவுலகுண்டுமிழ்ந்தமுதல்வ! நின்நாமம் கற்ற ஆவலிப்புடைமைகண்டாய் அரங்கமாநகருளானே–திருமாலை – 1-
இச்சுவைதவிரயான்போய் இந்திரலோகமாளும் அச்சுவைபெறினும்வேண்டேன் அரங்கமாநகருளானே! –2-
பேதைபாலகனதாகும் பிணிபசிமூப்புத்துன்பம் ஆதலால்பிறவிவேண்டேன் அரங்கமாநகருளானே! -3-
இத்தனையடியரானார்க்கு இரங்கும்நம்மரங்கனாய பித்தனைப்பெற்றுமந்தோ! பிறவியுள்பிணங்குமாறே.–4-
தண்டுழாய்மாலைமார்பன் தமர்களாய்ப்பாடியாடி தொண்டுபூண்டமுதமுண்ணாத் தொழும்பர் சோறுகக்குமாறே! -5-
அறஞ்சுவராகிநின்ற அரங்கனார்க்காட்செய்யாதே புறஞ்சுவர்கோலஞ்செய்து புள்கவ்வக்கிடக்கின்றீரே.–6-
தலையறுப்புண்டும்சாவேன் சத்தியங்காண்மின்ஐயா சிலையினாலிலங்கைசெற்ற தேவனே தேவனாவான்.–7-
குறிப்பெனக்கடையுமாகில் கூடுமேல்தலையைஆங்கே அறுப்பதேகருமங்கண்டாய் அரங்கமாநகருளானே!–8-
அவனல்லால்தெய்வமில்லை கற்றினம்மேய்த்தவெந்தை கழலிணைபணிமின்நீரே.–9-
நாட்டினான்தெய்வமெங்கும் நல்லதோரருள்தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும்வண்ணம் -10-
திருவரங்கமென்னா கருவிலேதிருவிலாதீர்! காலத்தைக்கழிக்கின்றீரே.–11-
அவனதூரரங்கமென்னாது அயர்த்து வீழ்ந்தளியமாந்தர் கவலையுள்படுகின்றாரென்று அதனுக்கேகவல்கின்றேனே–12-
அறிவிலாமனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பராகில் பொறியில்வாழ் நரகமெல்லாம் புல்லெழுந்தொழியுமன்றே.–13-
அண்டர்கோனமரும்சோலை அணிதிருவரங்கமென்னா மிண்டர்பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே–14-
ஒருவனென்றுணர்ந்தபின்னை ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூரரங்கமன்றே–15-
போதரேயென்றுசொல்லிப் புந்தியுள்புகுந்து தன்பால் ஆதரம்பெருகவைத்த அழகனூரரங்கமன்றே–16-
அரங்கமாகோயில் கொண்ட கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணை களிக்குமாறே!-17-
கண்ணணைக்கண்டகண்கள் பனியரும்புதிருமாலோ! என்செய்கேன்பாவியேனே?–18-
கடல்நிறக்கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு உடலெனக்குருகுமாலோ? என்செய்கேன்? உலகத்தீரே!–19-
பாயுநீரரங்கந்தன்னுள் பாம்பணைப்பள்ளிகொண்ட மாயனார்திருநன்மார்பும் மரகதவுருவும்தோளும்
தூய தாமரைக்கண்களும் துவரிதழ்பவளவாயும் ஆயசீர்முடியும்தேசும் அடியரோர்க்ககலலாமே?–20-
அருவரையனையகோயில் மணியனார்கிடந்தவாற்றை மனத்தினால்நினைக்கலாமே?–21-
மனத்துளானை வணங்கிநாமிருப்பதல்லால் பேசத்தானாவதுண்டோ? பேதைநெஞ்சே! நீ சொல்லாய்.–22-
பூம்பொழிலரங்கந்தன்னுள் எங்கள் மாலிறைவனீசன் கிடந்ததோர்கிடக்கைகண்டும் எங்ஙனம்மறந்துவாழ்கேன்? ஏழையேனேழையேனே–23-
விரிபொழிலரங்கந்தன்னுள் கள்வனார்கிடந்தவாறும் கமலநன்முகமும்கண்டும் 00கள்ளமேகாதல்செய்து உன்கள்ளத்தேகழிக்கின் றாயே.–24-
நம்பீ! கடல்வண்ணா! கதறுகின்றேன் அளித்தெனக்கருள்செய்கண்டாய் அரங்கமாநகருளானே!–25-
காதலால்நெஞ்சமன்பு கலந்திலேன், அதுதன்னாலே ஏதிலேனரங்கர்க்குஎல்லே! என்செய்வான் தோன்றினேனே.–26-
மரங்கள்போல்வலியநெஞ்சம் வஞ்சனேன், நெஞ்சுதன்னால் அரங்கனார்க்காட்செய்யாதே அளியத்தேனயர்க்கின்றேனே.–27–
எம்பிராற்காட்செய்யாதே என்செய்வான் தோன்றினேனே?–28–
காரொளிவண்ணனே! கண்ணனே! கதறுகின்றேன் ஆருளர்? களைகணம்மா! அரங்கமாநகருளானே!–29-
பொன்னிசூழ்திருவரங்கா * எனக்கினிக்கதியென் சொல்லாய்? என்னையாளுடைய கோவே! –30-
அவத்தமே பிறவிதந்தாய் அரங்கமாநகருளானே! –31-
மூர்க்கனேன்வந்துநின்றேன் மூர்க்கனேன்மூர்க்கனேனே–32-
ஐயனே! அரங்கனே! உன்னருளென்னுமாசை தன்னால் பொய்யனேன் வந்துநின்றேன் பொய்யனேன் பொய்யனேனே–33–
உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்தறிதியென்று வெள்கிப்போயென்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.–34–
பாவியேனுன்னையல்லால் பாவியேன் பாவியேனே.–35–
உன்னை யன்றே அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி! அரங்கமாநகருளானே!–36-
எந்திறத்தெம்பிரானார் அளியன்நம்பையல் என்னார் அம்மவோ! கொடியவாறே–37-
காம்புறத்தலைசிரைத்து உன்கடைத்தலையிருந்து வாழும் சோம்பரை உகத்திபோலும் சூழ்புனலரங்கத்தானே!–38-
மொய்கழற்கன்புசெய்யும் அடியரையுகத்திபோலும் அரங்கமாநகருளானே! –39-
ஈட்டியவினையரேலும் அருவினைப்பயனதுய்யார் அரங்கமாநகருளானே! – 40-
போனகம்செய்த சேடம் தருவரேல், புனிதமன்றே. –41-
நின்னோடு மொக்க வழிபடஅருளினாய்போல் மதிள் திருவரங்கத்தானே!–42-
நுமர்களைப்பழிப்பராகில் நொடிப்பதோரளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர்போலும் அரங்கமாநகருளானே!–43–
விண்ணுளார்வியப்பவந்து ஆனைக்கன்றருளையீந்த கண்ணறா உன்னையென்னோ? களைகணாக்கருதுமாறே–44-
தொண்டரடிப்பொடிசொல் இளையபுன்கவிதையேலும் எம்பிறார்கினியவாறே.–45-

கதிரவன்குணதிசைக் சிகரம்வந்தணைந்தான்–அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே–திருப்பள்ளியெழுச்சி – 1-
அழுங்கியவானையினருந்துயர்கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–2-
அடலொளிதிகழ்தருதிகிரியந்தடக்கை அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–3-
அயோத்தியெம்மரசே! அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–4-
இலங்கையர்கோன்வழிபாடுசெய்கோயில் எம்பெருமான்! பள்ளியெழுந்தருளாயே.–5-
அருவரையனையநின்கோயில்முன்னிவரோ அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–6-
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–7-
அம்பரதலத்தில்நின்றகல்கின்றதிருள்போய் அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–8-
ஆதலிலவர்க்குநாளோலக்கமருள அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. –9-
சூழ்புனலரங்கா! தொடையொத்ததுளவமும்கூடையும்பொலிந்து தோன்றியதோள்தொண்டரடிப்பொடியென்னு
மடியனை அளியனென்றருளியுன்னடியார்க் காட்படுத்தாய்! பள்ளிஎழுந்தருளாயே–10-

————–

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்

அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-
அரங்கத்தம்மான் அரைச் சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-
அரங்கத்து அரவின் அணையான் அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–
அரங்கத்தம்மான் திரு வயிற்று உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-
அரங்கத் தம்மான் திரு ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-
அரங்க நகர் மேய வப்பன் அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6–
அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–
அரங்கத்து அமலன் முகத்துக் கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–
அரங்கத் தரவினணையான் கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-
அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–

————

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்

பள்ளியாவது பாற்கடலரங்கம்–எந்தை பிரானவன் பெருகுமிடம் தெள்ளியார்வணங்கும்மலைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே!-1-8-2-
அரங்கத்து உறையும் இன் துணைவன்னொடும் போய் எழிலாலி புகுவர் கொலோ?–3-7-6-

எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்– தென்னரங்கமே –5-4-1-
பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால்–தென்னரங்கமே –5-4-2-
மாவலி கையில் நீர் கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்–தென்னரங்கமே –5-4-3-
வாளரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால்–தென்னரங்கமே -5-4-4-
மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால் –தென்னரங்கமே -5-4-5-
வன் பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால்–தென்னரங்கமே -5-4-6-
மல்லரும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்–தென்னரங்கமே –5-4-7-
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த் தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்–தென்னரங்கமே –5-4-8-
சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம் மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்–தென்னரங்கமே–5-4-9-
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்–5-4-10-

திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-
மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே -5-5-2-
நந்தன் பெற்ற ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே -5-5-3-
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்–மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே –5-5-4-
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்–வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-5-
எம்பெருமான் திருவரங்கம் என்னும்–மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே –5-5-6-
ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7-
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே -5-5-8-
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்—-5-5-9-
திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை–5-5-10-

எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2-
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால் ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-3-
இரணியனைப் பிளந்தவனைப் பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள் யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-
மறையோர் மந்த்ரத்தின் ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5-
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே–5-6-6-
உலகு அளப்பான் அடி நிமிர்த்த வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும் அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8-
மரகதத்தின் அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே -5-6-9-
யரங்கத்து யம்மானைக் காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர் நாமருவு தமிழ் மாலை -5-6-10-

அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-1-
பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே -5-7-2-
ஒரு நாள் அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-3-
ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-4-
வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-5-
அலைகடல் நடுவே ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-6-
அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -5-7-8-
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-9-
வரங்க மா நகர் அமர்ந்தானை மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்–5-7-10-

ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-
ஒண் பொருள் எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -5-8-3-
நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-4-
நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே-5-8-5-
என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-
உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-7-
உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-8-
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே -5-8-9-
அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை
எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் –5-8-10–

தாராளன் தண் ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளரேத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்! -6-6-9-

அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழிலங்கை மலங்கச் சென்று
சரங்களாண்ட தண் தாமரைக் கண்ணனுக் கன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே.–7-3-4-

துரங்கம் வாய் கீண்டுகந்தானது தொன்மை யூர் அரங்கமே யென்பது இவள் தனக்கு ஆசையே. –8-2-7-

பொன்னி சூழரங்க நகருள் முனைவனை மூ வுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை
சினைவளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான் கனைகழல் காணுங் கொலோ? –9-9-2-

பெண்ணானோம் பெண்மையோம் நிற்க அவன் மேய அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.–11-3-7-

அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு –11-8-8-

திருவரங்கம் மேய செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானை
தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே. –திருக்குறுந்தாண்டகம் – 7

ஆவியை அரங்க மாலை அழுக்குடம் பெச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் –திருக்குறுந்தாண்டகம் – 12

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணிணை களிக்குமாறே–திருக்குறுந்தாண்டகம் – 13

உலகமேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்று
மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? –திருக்குறுந்தாண்டகம் – 19

எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
மடமானை இது செய்தார் தம்மை மெய்யே கட்டுவிச்சி சொல்லென்னச் சொன்னாள் நங்காய்!
கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே? –திருநெடுந்தாண்டகம் – 11

அணியரங்க மாடுதுமோ? தோழீ! என்னும் எஞ்சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இருநிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ! பாவமே–திருநெடுந்தாண்டகம் – 12

அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே. –திருநெடுந்தாண்டகம் – 14

எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேனென்னும்
இதுவன்றோ நிறை யழிந்தார் நிற்குமாறே! –திருநெடுந்தாண்டகம் – 18

அணியரங்க மாடுதுமோ? தோழீ! என்னும் பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக் கேளாள் -திருநெடுந்தாண்டகம் – 19

எவ்வளவுண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு இதுவன்றோ எழிலாலி என்றார் தாமே–திருநெடுந்தாண்டகம் – 22

திருவரங்கம் நம்மூரென்னக் கள்ளூரும் பைந்துழாய் மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது
புள்ளூரும் கள்வா! நீ போகேலென்பன் என்றாலும் இது நமக்கோர் புலவிதானே–திருநெடுந்தாண்டகம் – 23

பொரு கயல் கண் நீரரும்பப் புலவி தந்து புனலரங்கம் ஊரென்று போயினாரே–திருநெடுந்தாண்டகம் – 24

பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலினூடே புனலரங்கமூரென்று போயினாரே–திருநெடுந்தாண்டகம் – 25

பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை –சிறிய திருமடல் – 71

மன்னு மரங்கத்து எம் மா மணியை – வல்லவாழ் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை –பெரிய திருமடல் – 118

—————–

ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்

புள்நந்துழாமே பொரு நீர்த் திருவரங்கா! அருளாய்
எண்ணந் துழாவுமிடத்து உளவோ பண்டு மின்னன்னவே?–திருவிருத்தம் – 28

செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்தெஞ்செய்கின்றாயே? –7-2-1-

எஞ்செய்கின்றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க விருக்கும்
எஞ்செய்கேன்? எறி நீர்த் திருவரங்கத்தாய் என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும் –எங்கொலோ முடிகின்ற திவட்கே?-7-2-2-
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்? இவள் திறத்தென் செய்திட்டாயே?–7-2-3-
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்தெஞ் சிந்தித்தாயே?–7-2-4-
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத் துள்ளாய்! என்னும் வந்திக்கும் — தையலை மையல் செய்தானே!–7-2-5-
மையல் செய்தென்னை மனம்கவர்ந்தானே என்னும் மாமாயனே! என்னும்
செய்யவாய் மணியே! என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத் துள்ளாய்! என்னும் –7-2-6-
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என்னும் என் தீர்த்தனே! என்னும்
கோல மா மழைக் கண் பனி மல்க விருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே.–7-2-7-
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என் செய்கேன் என் திருமகட்கே?–7-2-8-
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. –7-2-9-
வடிவுடை வானோர் தலைவனே! என்னும் வண் திருவரங்கனே! என்னும்
அடி யடையாதாள் போல் இவளணுகி யடைந்தனள் முகில் வண்ணனடியே.–7-2-10-
முகில் வண்ணனடியை யடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்
முகில் வண்ணனடி மேல் சொன்ன சொல் மாலை –7-2-11-

—————

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்

அன்று கரு வரங்கத்துட் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்கமே யான் திசை.–முதல்திருவந்தாதி – 6

————–

ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும் நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் – இரண்டாம் திருவந்தாதி – 28
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே —இரண்டாம் திருவந்தாதி – 46
தமருள்ளம் தஞ்சை தலை யரங்கம் தண்கால் தமருள்ளும் தண் பொருப்பு வேலை – இரண்டாம் திருவந்தாதி – 70
நேரில்லாத் தோன்றல் அவனளந்த நீணிலந் தானத்தனைக்கும் நேர். –இரண்டாம் திருவந்தாதி – 79

—————-

ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம் கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – -மூன்றாம் திருவந்தாதி – 61

தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.–மூன்றாம் திருவந்தாதி – 62

————-

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2 7-2 –

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7 8-

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 11- –

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டமே முத்தம் தா – 3-3 2-

மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8 1-

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த உறைப்பனூர்
மறைப்பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –

மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உரு மகத்து வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்
திருமுகமாய் செங்கமலம் திருநிறமாய் கரும் குவளை
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8-3-

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4 8-4 –

பெருவரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை
உருவரங்க பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தானூர்
குருவு அரும்ப கொங்கு அலற குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே
ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8 6-

கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ் தெறிய
பிழக்கு உடைய வசுரர்களை பிணம் படுத்த பெறுமானூர்
தழுப் பரிய சந்தனங்கள் தடவரை வா ஈர்த்து கொண்டு
தெழிப் படைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே – 4-8 7-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8 8-

குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி
மன்றூடு தென்றல் உலா மதிள் அரங்கம் என்பதுவே -4 8-9 –

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல்
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 8-10 –

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 2-

கருளுடைய பொழில் மருதம் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும்
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான்
இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே – 4-9 3-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

ஆமையாய் கங்கையாய் ஆழ கடலாய் அவனியாய் அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே -4 9-5 –

மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே – 4-9 6-

குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச்
சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே -4 9-7 –

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரமபுற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண அரங்கமே -4- 9-8 –

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

செரு ஆளும் புள் ஆளன் மண் ஆளன் செரு செய்யும் நந்தகம் என்னும்
ஒரு வாளன் மறை யாளன் ஓடாத படை ஆளன் விழுக்கை ஆளன்
இரவாளன் பகலாளன் என்னை ஆளன் ஏழுலகப் பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே 4-9 10-

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படைவுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே – 4-9 -11-

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை யாவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே- 4-10-1-

சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினானே
நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4 10-2 –

எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது
நில்லுமின் என்ன வுபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே
சொல்லலாம் போதே உன்னாமம் எல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொள் என்றும்
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 3-

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 10-4 –

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10-5-

தண்ணன இல்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணோடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமுமாகி நின்றாய்
எண்ணலாம் போதே உன்னாமம் எல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 6-

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சல் இல் என்னுடை இன்னமுதே ஏழ் உலகும் உடையாய் என்னப்பா
வஞ்ச வுருவில் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே – 4-10 7-

நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புக என்று மோதும் போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 8-

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -4-10-9 –

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 10-

——–

ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்

தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–11-1-

எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே–11-2-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே—11-4-

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–11-9-

செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-

—————–

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

பொய் சிலை குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவீர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1-

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-

உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–3-4-

தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5-

எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே–3-6-

எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—3-7-

பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —3-8-

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10-

—————-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –-திருச்சந்த விருத்தம்-21-

கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-

வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50-

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே –53-

இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –55-

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119–

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –நான்முகன் திருவந்தாதி -3-

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60–

——————

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்

காவலிற்புலனைவைத்துக் கலிதன்னைக்கடக்கப்பாய்ந்து *
நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர்தலைகள்மீதே *
மூவுலகுண்டுமிழ்ந்தமுதல்வ! நின்நாமம் கற்ற *
ஆவலிப்புடைமைகண்டாய் அரங்கமாநகருளானே! –திருமாலை – 1

பச்சைமாமலைபோல்மேனி பவளவாய்கமலச்செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்கொழுந்தே! என்னும் *
இச்சுவைதவிரயான்போய் இந்திரலோகமாளும் *
அச்சுவைபெறினும்வேண்டேன் அரங்கமாநகருளானே! –திருமாலை – 2

வேதநூல்பிராயம்நூறு மனிசர்தாம்புகுவரேலும் *
பாதியுமுறங்கிப்போகும் நின்றதில்பதினையாண்டு *
பேதைபாலகனதாகும் பிணிபசிமூப்புத்துன்பம் *
ஆதலால்பிறவிவேண்டேன் அரங்கமாநகருளானே! –திருமாலை – 3

மொய்த்தவல்வினையுள்நின்று மூன்றெழுத்துடையபேரால் *
கத்திரபந்துமன்றே பராங்கதிகண்டுகொண்டான் *
இத்தனையடியரானார்க்கு இரங்கும்நம்மரங்கனாய
பித்தனைப்பெற்றுமந்தோ! பிறவியுள்பிணங்குமாறே.–திருமாலை – 4

பெண்டிராற்சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபூண்டு *
உண்டிராக்கிடக்கும்போது உடலுக்கேகரைந்துநைந்து *
தண்டுழாய்மாலைமார்பன் தமர்களாய்ப்பாடியாடி *
தொண்டுபூண்டமுதமுண்ணாத் தொழும்பர் சோறுகக்குமாறே! –திருமாலை – 5

மறஞ்சுவர்மதிளெடுத்து மறுமைக்கேவெறுமைபூண்டு *
புறஞ்சுவரோட்டைமாடம் புரளும்போதறியமாட்டீர் *
அறஞ்சுவராகிநின்ற அரங்கனார்க்காட்செய்யாதே *
புறஞ்சுவர்கோலஞ்செய்து புள்கவ்வக்கிடக்கின்றீரே.–திருமாலை – 6

புலையறமாகிநின்ற புத்தொடுசமணமெல்லாம் *
கலையறக்கற்றமாந்தர் காண்பரோகேட்பரோதாம்? *
தலையறுப்புண்டும்சாவேன் சத்தியங்காண்மின்ஐயா *
சிலையினாலிலங்கைசெற்ற தேவனே தேவனாவான்.–திருமாலை – 7

வெறுப்பொடுசமணர்முண்டர் விதியில்சாக்கியர்கள் * நின்பால்
பொறுப்பரியனகள்பேசில் போவதேநோயதாகி *
குறிப்பெனக்கடையுமாகில் கூடுமேல்தலையைஆங்கே *
அறுப்பதேகருமங்கண்டாய் அரங்கமாநகருளானே!–திருமாலை – 8

மற்றுமோர்தெய்வமுண்டே? மதியிலாமானிடங்காள் *
உற்றபோதன்றிநீங்கள் ஒருவனென்றுணரமாட்டீர் *
அற்றமேலொன்றறீயீர் அவனல்லால்தெய்வமில்லை *
கற்றினம்மேய்த்தவெந்தை கழலிணைபணிமின்நீரே.–திருமாலை – 9

நாட்டினான்தெய்வமெங்கும் நல்லதோரருள்தன்னாலே *
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும்வண்ணம் *
கேட்டிரேநம்பிமீர்காள்! கெருடவாகனனும்நிற்க *
சேட்டைதன்மடியகத்துச் செல்வம்பார்த்திருக்கின்றீரே.–திருமாலை – 10

ஒருவில்லாலோங்குமுந்நீரடைத்து உலகங்களுய்ய *
செருவிலேயரக்கர்கோனைச்செற்ற நம்சேவகனார் *
மருவியபெரியகோயில் மதிள்திருவரங்கமென்னா *
கருவிலேதிருவிலாதீர்! காலத்தைக்கழிக்கின்றீரே.–திருமாலை – 11

நமனும்முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க *
நரகமேசுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி *
அவனதூரரங்கமென்னாது அயர்த்து வீழ்ந்தளியமாந்தர் *
கவலையுள்படுகின்றாரென்று அதனுக்கேகவல்கின்றேனே.–திருமாலை – 12

எறியுநீர்வெறி கொள்வேலை மாநிலத்துயிர்களெல்லாம் *
வெறிகொள்பூந்துளவமாலை விண்ணவர்கோனையேத்த *
அறிவிலாமனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பராகில் *
பொறியில்வாழ் நரகமெல்லாம் புல்லெழுந்தொழியுமன்றே.–திருமாலை – 13

வண்டினமுரலும்சோலை மயிலினமாலும்சோலை *
கொண்டல்மீதணவும்சோலை குயிலினம்கூவும்சோலை *
அண்டர்கோனமரும்சோலை அணிதிருவரங்கமென்னா *
மிண்டர்பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே. 00திருமாலை – 14

மெய்யர்க்கேமெய்யனாகும் விதியிலாவென்னைப்போல *
பொய்யர்க்கே பொய்யனாகும்புட்கொடியுடையகோமான் *
உய்யப்போமுணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்தபின்னை *
ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூரரங்கமன்றே. –திருமாலை – 15

சூதனாய்க்கள்வனாகித் தூர்த்தரோடிசைந்தகாலம் *
மாதரார்கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்துவேனை *
போதரேயென்றுசொல்லிப் புந்தியுள்புகுந்து * தன்பால்
ஆதரம்பெருகவைத்த அழகனூரரங்கமன்றே.–திருமாலை – 16

விரும்பிநின்றேத்த மாட்டேன் விதியிலேன்மதியொன்றில்லை *
இரும்புபோல்வலியநெஞ்சம் இறையிறையுருகும் வண்ணம் *
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில் கொண்ட *
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணை களிக்குமாறே!00திருமாலை – 17

இனிதிரைத்திவலைமோத எறியும் தண்பரவைமீதே *
தனிகிடந்தரசுசெய்யும் தாமரைக்கண்ணனெம்மான் *
கனியிருந்தனையசெவ்வாய்க் கண்ணணைக்கண்டகண்கள் *
பனியரும்புதிருமாலோ! என்செய்கேன்பாவியேனே?–திருமாலை – 18

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி *
வடதிசைபின்புகாட்டித் தென்திசையிலங்கை நோக்கி *
கடல்நிறக்கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு *
உடலெனக்குருகுமாலோ? என்செய்கேன்? உலகத்தீரே! –திருமாலை – 19

பாயுநீரரங்கந்தன்னுள் பாம்பணைப்பள்ளிகொண்ட *
மாயனார்திருநன்மார்பும் மரகதவுருவும்தோளும் *
தூய தாமரைக்கண்களும் துவரிதழ்பவளவாயும் *
ஆயசீர்முடியும்தேசும் அடியரோர்க்ககலலாமே?—திருமாலை – 20

பணிவினால்மனமதொன்றிப் பவளவாயரங்கனார்க்கு *
துணிவினால்வாழமாட்டாத் தொல்லைநெஞ்சே! நீ சொல்லாய் *
அணியனார்செம்பொனாய அருவரையனையகோயில் *
மணியனார்கிடந்தவாற்றை மனத்தினால்நினைக்கலாமே?–திருமாலை – 21

பேசிற்றேபேசலல்லால் பெருமையொன்றுணரலாகாது *
ஆசற்றார் தங்கட்கல்லால் அறியலாவானுமல்லன் *
மாசற்றார்மனத்துளானை வணங்கிநாமிருப்பதல்லால் *
பேசத்தானாவதுண்டோ? பேதைநெஞ்சே! நீ சொல்லாய்.–திருமாலை – 22

கங்கயிற்புனிதமாய காவிரிநடுவுபாட்டு *
பொங்கு நீர்பரந்துபாயும் பூம்பொழிலரங்கந்தன்னுள் *
எங்கள் மாலிறைவனீசன் கிடந்ததோர்கிடக்கைகண்டும் *
எங்ஙனம்மறந்துவாழ்கேன்? ஏழையேனேழையேனே. –திருமாலை – 23

வெள்ளநீர்பரந்துபாயும் விரிபொழிலரங்கந்தன்னுள் *
கள்வனார்கிடந்தவாறும் கமலநன்முகமும்கண்டும் *
உள்ளமே! வலியைபோலும் ஒருவனென்றுணரமாட்டாய் *
கள்ளமேகாதல்செய்து உன்கள்ளத்தேகழிக்கின் றாயே.–திருமாலை – 24

குளித்துமூன் றனலையோம்பும் குறிகொளந்தணமைதன்னை *
ஒளித்திட்டேன், என்கணில்லை நின்கணும்பத்தனல்லேன் *
களிப்பதென்கொண்டு? நம்பீ! கடல்வண்ணா! கதறுகின்றேன் *
அளித்தெனக்கருள்செய்கண்டாய் அரங்கமாநகருளானே! –திருமாலை – 25

போதெல்லாம்போதுகொண்டு உன்பொன்னடி புனையமாட்டேன் *
தீதிலாமொழிகள் கொண்டு உன்திருக்குணம்செப்பமாட்டேன் *
காதலால்நெஞ்சமன்பு கலந்திலேன், அதுதன்னாலே *
ஏதிலேனரங்கர்க்குஎல்லே! என்செய்வான் தோன்றினேனே.—திருமாலை – 26

குரங்குகள்மலையைநூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோ டி *
தரங்கநீரடைக்க லுற்ற சலமிலாவணிலும்போலேன் *
மரங்கள்போல்வலியநெஞ்சம் வஞ்சனேன், நெஞ்சுதன்னால் *
அரங்கனார்க்காட்செய்யாதே அளியத்தேனயர்க்கின்றேனே.–திருமாலை – 27

உம்பராலறியலாகா ஒளியுளார், ஆனைக்காகி *
செம்புலாலுண்டுவாழும் முதலைமேல்சீறிவந்தார் *
நம்பரமாயதுண்டே? நாய்களோம் சிறுமையோரா *
எம்பிராற்காட்செய்யாதே என்செய்வான் தோன்றினேனே?–திருமாலை – 28

ஊரிலேன்காணியில்லை உறவுமற்றொருவரில்லை *
பாரில்நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி! *
காரொளிவண்ணனே! கண்ணனே! கதறுகின்றேன் *
ஆருளர்? களைகணம்மா! அரங்கமாநகருளானே!–திருமாலை – 29

மனத்திலோர்தூய்மையில்லை வாயிலோரின்சொலில்லை *
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளிவிளிவன்வாளா *
புனத்துழாய்மாலையானே! பொன்னிசூழ்திருவரங்கா *
எனக்கினிக்கதியென் சொல்லாய்? என்னையாளுடைய கோவே! –திருமாலை – 30

தவத்துளார்தம்மிலல்லேன் தனம்படத்தாரிலல்லேன் *
உவர்த்த நீர்போல என்றன்உற்றவர்க்கொன்றுமல்லேன் *
துவர்த்தசெவ்வாயினார்க்கே துவக்கறத்துரிசனானேன் *
அவத்தமே பிறவிதந்தாய் அரங்கமாநகருளானே! –திருமாலை – 31

ஆர்த்துவண்டலம்பும்சோலை அணிதிருவரங்கந்தன்னுள் *
கார்த்திரளனைய மேனிக் கண்ணனே! உன்னைக்காணும் *
மார்க்கமொ றறியமாட்டா மனிசரில்துரிசனாய *
மூர்க்கனேன்வந்துநின்றேன் மூர்க்கனேன்மூர்க்கனேனே.—திருமாலை – 32

மெய்யெல்லாம் போகவிட்டு விரிகுழலாரில்பட்டு *
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன்வந்துநின்றேன் *
ஐயனே! அரங்கனே! உன்னருளென்னுமாசை தன்னால் *
பொய்யனேன் வந்துநின்றேன் பொய்யனேன் பொய்யனேனே.–திருமாலை – 33

உள்ளத்தேயுறையும் மாலை உள்ளுவானுணர்வொன்றில்லா *
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கேகோலம்பூண்டு *
உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்தறிதியென்று *
வெள்கிப்போயென்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.–திருமாலை – 34

தாவியன்றுலகமெல்லாம் தலைவிளாக்கொண்டவெந்தாய் *
சேவியேனுன்னையல்லால் சிக்கெனச்செங்கண்மாலே *
ஆவியே! அமுதே! என்தனாருயிரனையவெந்தாய் *
பாவியேனுன்னையல்லால் பாவியேன் பாவியேனே.–திருமாலை – 35

மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! மதுரவாறே! *
உழைக்கன்றே போல நோக்கம்முடையவர் வலையுள்பட்டு *
உழைக்கின்றேற்கு என்னை நோக்காதொழிவதே! * உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி! அரங்கமாநகருளானே! –திருமாலை – 36

தெளிவிலாக்கலங்கல் நீர்சூழ் திருவரங்கங்கத்துள்ளோங்கும் *
ஒளியுளார்தாமேயன்றே தந்தையும்தாயுமாவார் *
எளியதோரருளுமன்றே எந்திறத்தெம்பிரானார் *
அளியன்நம்பையல் என்னார் அம்மவோ! கொடியவாறே! –திருமாலை – 37

மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிகவுணர்ந்து *
ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலனகத்தடக்கி *
காம்புறத்தலைசிரைத்து உன்கடைத்தலையிருந்து * வாழும்
சோம்பரை உகத்திபோலும் சூழ்புனலரங்கத்தானே! –திருமாலை – 38

அடிமையில்குடிமையில்லா அயல்சதுப்பேதிமாரில் *
குடிமையில்கடைமைபட்ட குக்கரில்பிறப்பரேலும் *
முடியினில்துளபம்வைத்தாய்! மொய்கழற்கன்புசெய்யும் *
அடியரையுகத்திபோலும் அரங்கமாநகருளானே! –திருமாலை – 39

திருமறுமார்வ! நின்னைச்சிந்தையுள் திகழவைத்து *
மருவியமனத்தராகில் மாநிலத்துயிர்களெல்லாம் *
வெருவரக்கொன்று சுட்டிட்டு ஈட்டியவினையரேலும் *
அருவினைப்பயனதுய்யார் அரங்கமாநகருளானே! –திருமாலை – 40

வானுளாரறியலாகா வானவா என்பராகில் *
தேனுலாந்துளபமாலைச் சென்னியாய் என்பராகில் *
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும் *
போனகம்செய்த சேடம் தருவரேல், புனிதமன்றே. –திருமாலை – 41

பழுதிலாவொழுகலாற்றுப் பலசதுப்பேதிமார்கள்! *
இழிகுலத்தவர்களேலும் எம்மடியார்களாகில் *
தொழுமினீர் கொடுமின்கொள்மின் என்று நின்னோடு மொக்க *
வழிபடஅருளினாய்போல் மதிள் திருவரங்கத்தானே!–திருமாலை – 42

அமரவோரங்கமாறும் வேதமோர்நான்குமோதி *
தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும் *
நுமர்களைப்பழிப்பராகில் நொடிப்பதோரளவில் * ஆங்கே
அவர்கள்தாம் புலையர்போலும் அரங்கமாநகருளானே!–திருமாலை – 43

பெண்ணுலாம் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் *
எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார்வெள்கிநிற்ப *
விண்ணுளார்வியப்பவந்து ஆனைக்கன்றருளையீந்த
கண்ணறா * உன்னையென்னோ? களைகணாக்கருதுமாறே. –திருமாலை – 44

வளவெழும் தவளமாட மதுரை மாநகரந்தன்னுள் *
கவளமால்யானை கொன்ற கண்ணனை அரங்கமாலை *
துவளத்தொண்டாயதொல்சீர்த் தொண்டரடிப்பொடிசொல் *
இளையபுன்கவிதையேலும் எம்பிறார்கினியவாறே. –திருமாலை – 45

கதிரவன்குணதிசைக் சிகரம்வந்தணைந்தான்
கனவிருளகன்றது காலையம்பொழுதாய் *
மதுவிரிந்தொழுகினமாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்துவந்தீண்டி *
எதிர்திசைநிறைந்தனரிவரொடும்புகுந்த
இருங்களிற்றீட்டமும்பிடியொடுமுரசும் *
அதிர்தலிலலைகடல்போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 1

கொழுங்கொடிமுல்லையின்கொழுமலரணவிக்
கூர்ந்ததுகுணதிசைமாருதமிதுவோ *
எழுந்தனமலரணைப் பள்ளிகொள்ளன்னம்
ஈன்பனிநனைந்ததமிருஞ்சிறகுதறி
விழுங்கியமுதலையின்பிலம்புரைபேழ்வாய்
வெள்ளெயிறுறவதன்விடத்தனுக்கனுங்கி *
அழுங்கியவானையினருந்துயர்கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 2

சுடரொளிபரந்தனசூழ்திசையெல்லாம்
துன்னியதாரகைமின்னொளிசுருங்கி *
படரொளிபசுத்தனன்பனிமதியிவனோ
பாயிறுளகன்றது, பைம்பொழில்கமுகின் *
மடலிடைக்கீறிவண்பாளைகள்நாற
வைகறைகூர்ந்ததுமாருதமிதுவோ *
அடலொளிதிகழ்தருதிகிரியந்தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 3

மேட்டிளமேதிகள்தளைவிடுமாயர்கள்
வேய்ங்குழலோசையும்விடைமணிக்குரலும் *
ஈட்டியவிசைதிசைபரந்தனவயலுள்
இருந்தினசுரும்பினம், இலங்கையர்குலத்தை *
வாட்டியவரிசிலைவானவரேறே!
மாமுனிவேள்வியைக்காத்து * அவபிரதம்
ஆட்டியவடுதிறல்அயோத்தியெம்மரசே!
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 4

புலம்பினபுட்களும்பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல்புகுந்ததுபுலரி *
கலந்ததுகுணதிசைகனைகடலரவம்
களிவண்டுமிழற்றியகலம்பகம்புனைந்த *
அலங்கலந்தொடையல்கொண்டடியிணைபணிவான்
அமரர்கள் புகுந்தனராதலிலம்மா! *
இலங்கையர்கோன்வழிபாடுசெய்கோயில்
எம்பெருமான்! பள்ளியெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 5

இரவியர்மணிநெடுந்தேரொடுமிவரோ!
இறையவர்பதினொருவிடையருமிவரோ *
மருவியமயிலினனறுமுகனிவனோ
மருதரும்வசுக்களும்வந்துவந்தீண்டி *
புரவியோடாடலும்பாடலும் தேரும்
குமரதண்டம்புகுந்தீண்டியவெள்ளம் *
அருவரையனையநின்கோயில்முன்னிவரோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 6

அந்தரத்தமரர்கள்கூட்டங்களிவையோ
அருந்தவமுனிவரும்மருதருமிவரோ *
இந்திரனானையும்தானும்வந்திவனோ
எம்பெருமானுன்கோயிலின்வாசல் *
சுந்தரர்நெருக்கவிச்சாதரர்நூக்க
இயக்கரும்மயங்கினர்திருவடிதொழுவான் *
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 7

வம்பவிழ்வானவர்வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண்கண்ணாடிமுதலா *
எம்பெருமான் படிமக்கலம்காண்டற்கு
ஏற்பனவாயினகொண்டுநன்முனிவர் *
தும்புருநாரதர்புகுந்தனரிவரோ
தோன்றினனிரவியும்துலங்கொளிபரப்பி *
அம்பரதலத்தில்நின்றகல்கின்றதிருள்போய்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.–திருப்பள்ளியெழுச்சி – 8

ஏதமில்தண்ணுமையெக்கம்மத்தளி
யாழ்குழல்முழவமோடிசைதிசைகெழுமி *
கீதங்கள்பாடினர்கின்னரர்கெருடர்கள்
கந்தருவரவர்கங்குலுளெல்லாம் *
மாதவர்வானவர்சாரணரியக்கர்
சித்தரும்மயங்கினர்திருவடிதொழுவான் *
ஆதலிலவர்க்குநாளோலக்கமருள
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. –திருப்பள்ளியெழுச்சி – 9

கடிமலர்க்கமலங்கள்மலர்ந்தனவிவையோ
கதிரவன்கனைகடல்முளைத்தனன்னிவனோ *
துடியிடையார்சுரிகுழல்பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர்சூழ்புனலரங்கா! *
தொடையொத்ததுளவமும்கூடையும்பொலிந்து
தோன்றியதோள்தொண்டரடிப்பொடியென்னு
மடியனை * அளியனென்றருளியுன்னடியார்க்
காட்படுத்தாய்! பள்ளிஎழுந்தருளாயே. –திருப்பள்ளியெழுச்சி – 10

————–

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6–

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–

——————-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்

பள்ளியாவது பாற்கடலரங்கம் இரங்கவன் பேய் முலை
பிள்ளையாய் உயிருண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணனென்றெண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே! –1-8-2-

எந்துணையென்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன்துணையாய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன்துணை வானவர்க்காய் வரம்செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவன்னொடும் போய் எழிலாலி புகுவர் கொலோ?.–3-7-6-

உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-

வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே –5-4-2-

பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3-

விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட
வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால்
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே -5-4-4-

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே -5-4-5-

கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால்
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே -5-4-6-

கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-

சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே–5-4-9-

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-

கலையாளா வகலல்குல் கனவளையும் கை யாளா என் செய்கேன் நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே -5-5-2-

மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே -5-5-3-

தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கை
யேயாரச் சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
பேய் மாய முலை உண்டு இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே –5-5-4-

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-5-

தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே –5-5-6-

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7-

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே -5-5-8-

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே -5-5-9-

சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே-5-5-10-

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-3-

வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலியுருவில் திரிசகடம்
தளர்ந்து திற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5-

தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசையுருவை யசைவித்த
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே–5-6-6-

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத் தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8-

பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே -5-6-9-

ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே –5-6-10-

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-1-

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே -5-7-2-

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறந்கிருள் நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-3-

மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மாசுணம் அதனோடும் அளவி
பாயிரும் பௌவம் பகடு விண்டலறப் படுதிரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-4-

எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-5-

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-6-

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-

ஊழி யாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடுசரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -5-7-8-

பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால் பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச்
சேயனாய் அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-9-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே -5-7-10-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -5-8-3-

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-4-

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே-5-8-5-

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-

ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-7-

வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-8-

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே -5-8-9-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –5-8-10-

தாராளன் தண் ணரங்க வாளன் பூ மேல்
தனியாளன் முனியாளரேத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன்
பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்!
பாராளர் இவரிவரென்று அழுந்தை யேற்ற
படை மன்னருடல் துணியப் பரி மா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணி மாடம் சேர்மின்களே.–6-6-9-

உரங்களால் இயன்ற மன்னர் மாளப்
பாரதத்து ஒரு தேரை வர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்து அவர்க்கு இன்னருள் செய்யும்
எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி
ஆழி சூழிலங்கை மலங்கச் சென்று
சரங்களாண்ட தண் தாமரைக் கண்ணனுக் கன்றி
என் மனம் தாழ்ந்து நில்லாதே.–7-3-4-

தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும்
இரங்குமோ? எத்தனை நாளிருந்து எள்கினாள்?
துரங்கம் வாய் கீண்டுகந்தானது தொன்மை யூர்
அரங்கமே யென்பது இவள் தனக்கு ஆசையே. –8-2-7-

புனைவளர் பூம் பொழிலார் பொன்னி சூழரங்க நகருள்
முனைவனை மூ வுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை
சினைவளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான்
கனைகழல் காணுங் கொலோ? கயல் கண்ணி யெம் காரிகையே.–9-9-2-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கைவளைகள்
என்னோ கழன்ற இவை யென்ன மாயங்கள்?
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க அவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.–11-3-7-

அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா
துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு
மணியே! மணி மாணிக்கமே! மதுசூதா!
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ! –11-8-8-

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை வியந் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானை
தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே. –திருக்குறுந்தாண்டகம் – 7

ஆவியை அரங்க மாலை அழுக்குடம் பெச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்தவாறென்று அஞ்சினேற்கு அஞ்சலென்று *
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுளே தோன்றினாரே.–திருக்குறுந்தாண்டகம் – 12

இரும்பனன்றுண்ட நீரும் போதரும் கொள்க என்றன்
அரும்பிணி பாவமெல்லாம் அகன்றன என்னை விட்டு
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணிணை களிக்குமாறே–திருக்குறுந்தாண்டகம் – 13

பிண்டியார் மண்டை யேந்திப் பிறர் மனை திரி தந்துண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்று
மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? –திருக்குறுந்தாண்டகம் – 19

பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்
பனிநெடுங் கண்ணீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்
எள்துணைப் போது என் குடங்காலிருக்க கில்லாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
மடமானை இது செய்தார் தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல்லென்னச் சொன்னாள் நங்காய்!
கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே? –திருநெடுந்தாண்டகம் – 11

நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம்பேணாள்
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ! என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா! என்னும்
அஞ்சிறைய புட் கொடியே ஆடும் பாடும்
அணியரங்க மாடுதுமோ? தோழீ! என்னும்
எஞ்சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இருநிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ! பாவமே–திருநெடுந்தாண்டகம் – 12

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண்காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே. –திருநெடுந்தாண்டகம் – 14

கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
கைத்தலமும் அடியிணையும் கமலவண்ணம்
பார்வண்ண மட மங்கை பித்தர் பித்தர்
பனிமலர் மேற்பாவைக்குப் பாவம் செய்தேன்
ஏர்வண்ண வென் பேதை என் சொல் கேளாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேனென்னும்
இதுவன்றோ நிறை யழிந்தார் நிற்குமாறே! –திருநெடுந்தாண்டகம் – 18

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன்
மொய் யகலத்துள்ளிருப்பாள் அஃதும் கண்டு
அற்றாள் தன் நிறை யழிந்தாள் ஆவிக்கின்றாள்
அணியரங்க மாடுதுமோ? தோழீ! என்னும்
பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக் கேளாள்
பேர்ப் பாடித் தண் குடந்தை நகரும் பாடி
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே.–திருநெடுந்தாண்டகம் – 19

நைவளமொன் றாராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழணைய இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை யிரண்டும் நான்கு தோளும்
எவ்வளவுண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு
இதுவன்றோ எழிலாலி என்றார் தாமே–திருநெடுந்தாண்டகம் – 22

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து என்
ஒளிவளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்திச்
சேலுகளும் திருவரங்கம் நம்மூரென்னக்
கள்ளூரும் பைந்துழாய் மாலையானைக்
கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது
புள்ளூரும் கள்வா! நீ போகேலென்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவிதானே–திருநெடுந்தாண்டகம் – 23

இருகையில் சங்கிவை நில்லா எல்லே பாவம்!
இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி யுண்ட
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம்
பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒருகையில் சங்கு ஒருகை மற்றாழி யேந்தி
உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண் நீரரும்பப் புலவி தந்து
புனலரங்கம் ஊரென்று போயினாரே–திருநெடுந்தாண்டகம் – 24

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்
கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே
தாழ்ந்திலங்கும் மகரம் சேர் குழையும் காட்டி
என்னலனும் என் நிறைவும் என் சிந்தையும்
என்வளையும் கொண்டு என்னை யாளும் கொண்டு
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலினூடே
புனலரங்கமூரென்று போயினாரே–திருநெடுந்தாண்டகம் – 25

பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை –சிறிய திருமடல் – 71

மன்னு மரங்கத்து எம் மா மணியை – வல்லவாழ் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை –பெரிய திருமடல் – 118

——————

ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்

தண்ணந்துழாய் வளை கொள்வது யாமிழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை யுலாவும் வள்வாயலகால்
புள்நந்துழாமே பொரு நீர்த் திருவரங்கா! அருளாய்
எண்ணந் துழாவுமிடத்து உளவோ பண்டு மின்னன்னவே?–திருவிருத்தம் – 28

கங்குலும் பகலும் கண் துயிலறியாள் கண்ண நீர் கைகளா லிறைக்கும்
சங்கு சக்கரங்களென்று கை கூப்பும் தாமரைக் கண்ணென்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு? என்னும் இரு நிலம் கை துழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்தெஞ்செய்கின்றாயே? –7-2-1-

எஞ்செய்கின்றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க விருக்கும்
எஞ்செய்கேன்? எறி நீர்த் திருவரங்கத்தாய் என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே! முகப்படாயென்னும் முகில்வண்ணா! தகுவதோ? என்னும்
முஞ்செய் திவ்வுலக முண்டுமிழந் தளந்தாய் எங்கொலோ முடிகின்ற திவட்கே?-7-2-2-

வட்கிலளிறையும் மணி வண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும்
உட்குடைய சுரருயிரெல்லா முண்ட ஒருவனே! என்னும் உள்ளுருகும்
கட்கிலீ! உன்னைக் காணுமாறருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும்
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்? இவள் திறத்தென் செய்திட்டாயே?–7-2-3-

இட்டகா லிட்ட கையளா யிருக்கும் எழுந் துலாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதலென்று மூர்ச்சிக்கும் கடல் வண்ணா! கடியை காணென்னும்
வட்டவாய் நேமி வலங்கையா! என்னும் வந்திடா யென்றென்றே மயங்கும்
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்தெஞ் சிந்தித்தாயே?–7-2-4-

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத் துள்ளாய்! என்னும் வந்திக்கும்
ஆங்கே மழைக் கண்ணீர் மல்க வந்திடா யென்றென்றே மயங்கும்
அந்திப்போத வுணனுட லிடந்தானே! அலை கடல் கடைந்த வாரமுதே
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே!–7-2-5-

மையல் செய்தென்னை மனம்கவர்ந்தானே என்னும் மாமாயனே! என்னும்
செய்யவாய் மணியே! என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத் துள்ளாய்! என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல்! என்னும்
பைகொள் பாம்பணையாய்! இவள் திறத்தருளாய் பாவியேன் செயற்பாலதுவே.–7-2-6-

பால துன்பங்க ளின்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக்கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல் வண்ணா! கண்ணணே! என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என்னும் என் தீர்த்தனே! என்னும்
கோல மா மழைக் கண் பனி மல்க விருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே.–7-2-7-

கொழுந்து வானவர்கட்கு! என்னும் குன்றேந்திக் கோ நிரை காத்தவன்! என்னும்
அழுந்தொழும் ஆவியனல வெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும்
எழுந்து மேல் நோக்கி யிமைப்பில ளிருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும்
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என் செய்கேன் என் திருமகட்கே?–7-2-8-

என் திருமகள் சேர் மார்வனே! என்னு மென்னுடையாவியே! என்னும்
நின் திருவெயிற்றா லிடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே! என்னும்
அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய் மகளன்பனே! என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. –7-2-9-

முடிவிவள் தனக்கொன்ற றிகிலே னென்னும் மூவுலகாளியே! என்னும்
கடி கமழ் கொன்றைச் சடையனே! என்னும் நான்முகக் கடவுளே! என்னும்
வடிவுடை வானோர் தலைவனே! என்னும் வண் திருவரங்கனே! என்னும்
அடி யடையாதாள் போல் இவளணுகி யடைந்தனள் முகில் வண்ணனடியே.–7-2-10-

முகில் வண்ணனடியை யடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்
முகில் வண்ணனடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்திப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்திமையவர் சூழ விருப்பர் பேரின்பவெள்ளத்தே. –7-2-11-

——-

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்

ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ? ஏழைகாள்! – அன்று
கரு வரங்கத்துட் கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்கமே யான் திசை.–முதல்திருவந்தாதி – 6

————–

ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் – எனைப்பலரும்
தேவாதி தேவனெனப் படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன். –இரண்டாம் திருவந்தாதி – 28

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்றது
அணி திகழுஞ்சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால். —இரண்டாம் திருவந்தாதி – 46

தமருள்ளம் தஞ்சை தலை யரங்கம் தண்கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை – தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிட் குடந்தை யென்பரே
ஏவல்ல வெந்தைக் கிடம்.–இரண்டாம் திருவந்தாதி – 70

பின்னின்று தாயிரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம் மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவனளந்த
நீணிலந் தானத்தனைக்கும் நேர். –இரண்டாம் திருவந்தாதி – 79

——————

ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61

விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.–மூன்றாம் திருவந்தாதி – 62

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: