ஸ்ரீ கோதா ஸ்லோகங்கள் —

“ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||” [“கோதாஸ்துதி” _ஸ்லோ.1) வேதாந்த தேசிகர் அருளியது.]

(ஶ்ரீவிஷ்ணுசித்தர் என்னும் வேயர் குலக்கொடியாம், நந்தவனத்தில் வளர்ந்த அழகு மிக்க கற்பகத்தருவினைச் சுற்றிப்
படர்கின்ற பெண்கொடியாகவும், திருவரங்கநாதனான அரிச்சந்தன மரத்தைத் தழுவும் அழகு மிக்க பொறுமையுடன் கூடிய
பூமிப் பிராட்டியாகவும், இனிமையான மற்றுமொரு ஸ்ரீதேவியாகவும் விளங்கும் கோதையை அல்லாமல்,
மற்றொரு தெய்வம் சரணடையாது அவளையே அடைந்தேன்.)

———–

ஏகாரச் செல்வியாகிய ஶ்ரீ கோதை ஆண்டாள் புகழ் பாடும் நூல்கள் கீழ்வருமாறு:
கோதா சதுஸ் ஸ்லோகி – ஶ்ரீஅனந்தாழ்வான்;
கோதா ஸ்துதி – ஶ்ரீவேதாந்த தேசிகர்;
ஶ்ரீகோதா உபமான அஷ்டகம் − ஶ்ரீ வேதப்பிரான் பட்டர்;

கோதை வெண்பா,ஶ்ரீஆண்டாள் அந்தாதி, சூடிக்கொடுத்த நாச்சியார் மாலை (கோதா ஸ்துதி தமிழ்ப்பனுவல்),
ஶ்ரீஆண்டாள் அஞ்சுமணிமாலை – மதுரகவி ஶ்ரீநிவாசஐயங்கார்;

ஆமுக்த மால்யதா (தெலுங்கு) − ஶ்ரீகிருஷ்ணதேவராயர்;
ஶ்ரீநாச்சாரு பரிணயம் (தெலுங்கு) − பாஷ்கர சேஷாசலம்;
ஶ்ரீஆண்டாள் சந்திரகலா மாலை, ஶ்ரீஆண்டாள் பிள்ளைத் தமிழ் – வில்லி;
அபிநவ கோதா ஸ்துதி − காஞ்சீபுரம் மகாவித்வான் பி.ப.அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமி;

ஶ்ரீஆண்டாள் கும்மி – அழகிய சொக்கநாத பிள்ளை;
கோதை மாலை, திருப்பாவை மாலை – ரெ.திருமலை ஐயங்கார்;
மார்கழி நோன்பு (அ) ஶ்ரீஆண்டாள் திருமணம் – திருமலை நல்லான்;
கோதா வைபவம் – எக்கிராள கிருஷ்ணமாச்சார்யா;
புதுவைச் சிலேடை வெண்பா,ஶ்ரீவில்லிபுத்தூர் தல புராணம் – கூத்திப் பாறை முத்து கிருஷ்ண ராமாநுச தாஸர்;

சூடிக்கொடுத்த நாச்சியார் பிரபந்தம் – வடிவழகிய நம்பி தாஸர்;
கோதா பரிணய சம்பு, ஶ்ரீஆண்டாள் அஷ்டோத்திர சத நாமாவளி – கேசவாச்சாரியார்;

சூடிக்கொடுத்த நாச்சியார் மாலை (கோதா ஸ்துதி தமிழ்ப்பனுவல்), ஶ்ரீஆண்டாள் குறவஞ்சி நாடகம்,
ஶ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல புராணம், ஶ்ரீவரமங்கை சதகம் – வரகவி அப்புவய்யங்கார்(எ) ஶ்ரீநரசிம்மாச்சாரியர்;

ஶ்ரீகோதா நக்ஷத்ர மாலிகை – சடகோப இராமாநுசர்;
ஶ்ரீஆண்டாள் ஆடி உத்ஸவ நாடகம் − கணபதி ஐயர்;
ஶ்ரீவில்லிபுத்தூர் மான்மியம் − ஶ்ரீஅலங்கார தேவராஜ ஸ்வாமி;
கோதா சுப்ரபாதம், கோதா ஸ்தவம் − கிடாம்பி கோவிந்த ஐயங்கார்;
கோதா பஞ்ச ரத்னம், கோதா அஷ்டகம்,கோதா மதுர ஸ்தோத்திரம்,கோதா கோபால ஸ்தோத்திரம் − திருவேங்கடத்தம்மாள்;

———–

தேடிக் கிடையாத் திரவியத்தைத்
தெவிட்டாத அமுதைத் திருமாலைப்
பாடிப் பரவும் பசுங்கிளியைப்
பவ வெம்பிணி தீர்த்திடும் மருந்தை
ஆடிப்பூரத் தவதரித்த அகில
நிகமாகம விளக்கைச்
சூடிக் கொடுத்த சுடர் கொடியைத்
தொழுது வினைக்கு விடை கொடுப்போம்!” –வரகவி அப்புவைய்யங்கார் என்கிற ஶ்ரீநரசிம்மாச்சாரியார்-

———-

ஆண்டாள் பாட்டு-01 :: அழகெல்லாம் ஆண்டாளின்-ராகம் – புன்னகவராளி-தாளம் – ஆதி

அழகெல்லாம் ஆண்டாளின் அழகாகுமா…அவள்
அசைந்து வரும் நடைக்கு இணையகுமா (அழகெல்லாம்)
அடியார் துயரன்றோ அவள் ஏக்கம்
அதை துடைப்பதன்றொ அவள் நோக்கம் (அழகெல்லாம்)
பால்வடியும் முகத்தைப் பார்க்க பசிதீரும்
பக்கத்தில் மன்னாருடன் பரவசத்தைக் கொடுக்கும்
வேதம் நிறைந்த வில்லிபுத்தூரில்
விஷ்ணுசித்தன் மகளாய் விளையாடி வளர்ந்தவள் (அழகெல்லாம்)
தினமும் ஒரு கோலம் [மார்கழியில்] உள்ளத்தை உருக்கும்
கைதனில் வண்ணக்கிளி வடிவழகைப் பெருக்கும்
அல்லும் பகலும் அவளை நினைந்தால்
அல்லல்கள் யாவும் இல்லையென்றே ஆகும் (அழகெல்லாம்)

————-

ஆண்டாள் பாட்டு-02 :: அனைவரும் கூடி
அனைவரும் கூடி ஆண்டாள் தேவிக்கு மங்களம் பாடி மகிழ்ந்திடுவோம்
மங்கள கோதை ரெங்கமன்னாருடன் அன்பு பொங்கிடும் மங்களமே
பல்லாண்டு பாடி பக்தியினாலே உள்ளமே பரவசமாகாதா
தேவர்கள் புகழ ஆழ்வார் மகிழ ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாள்
மங்கள தீபங்கள் அலங்காரமாகவே ஜோதிப் பிரகாசமாய் விளங்கிய
சூடிக் கொடுத்த ஆண்டாள் தேவிக்கு ஜெய ஜெய ஆரத்தி எடுப்போமே (அனைவரும்)

—————–

ஆண்டாள் பாட்டு-03 :: பார் பார் பார்–ராகம் – மாண்டு–தாளம் – ஆதி

பார் பார் பார் இந்த ஆண்டாளைப் பார்
பக்கத்தில் மன்னார் கருடனைப்பார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் மகளாம் கோதையைப் பார் (பார்)
கையினில் கிளியாம் கருணையின் முகமாம் காதினில் வைரம் ஜொலிப்பதைப் பார்
கோதை முகத்தைப் பார் பூமாதேவியை பார் ஆனந்தமாம் பரமானந்தமாம் (பார்)

ஆடிப்பூரத்தில் உதித்தவளாம் இங்கு அனைவரும் வந்து சேவிக்கலாம்
வடபத்ர சயனரை சேவிப்போமே வாழ்வில் இன்பம் பெறுவோமே (பார்)

—————-

ஆண்டாள் பாட்டு-04 :: மார்கழி மாதம்–ராகம்: அமீர் கல்யாணி

மார்கழி மாதத் திருப்பாவை ஊரெங்கும் மால் மணப் புகழோசை (2)
பாரளந்த மன்னன் ஏற்றமிகு புகழ்பாடி
பாருக்கெல்லாம் தந்த அருள்மாலை (மார்கழி)
பறையென்னும் கைங்கர்யம் பெறுவதற்கு
பண்ணவேண்டும் வழிகள் இன்னதென்று
பெரியோர் வகுத்த முறை கொண்டு கோதை தந்த
பேரின்ப வீடையும் பேற்றினைத் தருமே (மார்கழி)

————

ஆண்டாள் பாட்டு-05 :: ஆண்டாள் கல்யாண
ஆண்டாள் கல்யாண காட்சியைக் காணவே அந்தணர் பலரும் வந்தார்
ஆசையுடன் பல தேசங்கள் வாழ்ந்திடும் அரசரும் பார்க்க வந்தார்
வேங்கடமாமலை வாசனும் வேகமாய் வில்லிபுத்தூரில் வந்தார்
வேதியர் போலே வேஷம் பூண்டார் விரும்பியே மனமுவந்தார்
மாவிருஞ்சோலை வாழ் மாயனும் கேட்டுடன் மையலாய் மனம் தளர்ந்தார்
மாது கோதையை மணம் புரிவேனென்று மகிழ்வுடன் வந்திருந்தார்
திருத்தங்கலப்பனும் கேட்டுடன் கோதை மேல் தீரா மையல் கொண்டார்
தேவி கோதையைக் கல்யாணம் செய்வேனென்று திருவுள்ள்ந்தனில் நினைந்தார்
வாடா மலரை பூவைச் சூடிக் கொடுத்த திருவடபத்திரர் நினைந்தார்
ஆடி பூரத்தில் உதித்தவள் தனக்கென்று ஆசையாய்ப் படுத்திருந்தார்
பகிரங்கமாகவே பணீயரங்கேசனை பாராமலே கோதை
பரபரப்பாகவே தோழியர் கூட்டுடன் பகர்ந்தனளப்போதே

—————-

ஆண்டாள் பாட்டு-06 :: மல்லி வளர்னாடியாய்
மல்லி வளர்னாடியாய் வா வா வா
மலர் துழவில் தோன்றினாய் வா வா வா
பாடக மெல்லடியினாய் வா வா வா
பாதரசத் தாளினாய் வா வா வா
பட்டணிந்த இடையினாய் வா வா வா
மட்ட விழும் குழலினாய் வா வா வா
பக்தி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
முத்து மணி மாலையாய் வா வா வா
குவளை மலர் கண்ணினாய் வா வா வா
தவளை மலர் நகையினாய் வா வா வா
ஒளி படைத்த உடலினாய் வா வா வா
கிளி பிடித்த கையினாய் வா வா வா
கோதை என்னும் பெயரினாய் வா வா வா
கோவிந்தன் உயிரினாய் வா வா வா
வடிவெடுத்து அருளினாய் வா வா வா
அடியார்களை காக்கவே வா வா வா

—————

ஆண்டாள் பாட்டு-07 :: கோதை பிறந்த
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
ஜோதி மணிமாடம் தோன்றிடும் ஊர்
நீதியால் நல்ல பக்தர்கள் வாழ்ந்திடும்
வேதக்கோன் நித்தம் வசித்திடும் ஊர்

பாதகம் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும்
கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாதவரை
வையம் சுமப்பதும் வம்பன்றோ

மென்னடையன்னம் பறந்து விளையாடும் வில்லிபுத்தூரின் மகிமை சொல்ல
பன்னகமாய் பல நாவு படைத்துள்ள அன்னவனாலேயும் ஆகாது

வண்டுகள் பாடும் பொழிலழகும் – நல்ல தொண்டர்கள் வாழும் எழில் மிகவும்
கெண்டைகள் ஓடும் வயலழகும் – அதைக் கண்டு வணங்கித் துதிப்போமடி

மின்னார் தட மதில் சூழ்ந்தழகைச் சொல்லி மேனகையார் பலர் சேர்ந்தழகாய்
பொன்னார் மணிகள் அணிந்த கோதை முன்பு நன்றாக கும்மியடிங்கோடி

——————-

ஆண்டாள் பாட்டு-08 :: மங்களம் கோதையார்க்கும் மன்னார்க்கும்
மங்களம் கோதையார்க்கும் மன்னார்க்கும் மங்களம்
வங்கக்கடல் உலகில் வளரும் திவ்ய ஸ்தலங்களுக்கும் மங்களம்
மலர்யது பூமிகட்கும் வடபத்ரசயனருக்கும் மங்களம்
பாரிஜாத விரஜயர்க்கும் பட்டர்பிரான் மாமுனிக்கும் மங்களம்
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஆத்மகுரு பரம்பரைக்கும் மங்களம்
திருவேங்கட தாசன் சொல்லும் செந்தமிழ் கீர்த்தனங்களுக்கும் மங்களம்

—————

ஆண்டாள் பாட்டு-09 :: லாலி ஆடினாள்
லாலி ஆடினாள் லட்சுமி லாலி ஆடினாள்
ஸ்ரீ ஆண்டாள் இன்று இங்கு லாலி ஆடினாள்
ஸ்ரீரங்கபதியில் ஆதிசேஷனரவணையில்
ரெங்கநாதன் சகிதமாக மந்தகாச வதன்மோடு (லாலி)
வ்ருஷபாத்ரி திருப்பதியில் வேங்கடேசன் சகிதமாக
அபய ஹஸ்த அலங்கார அலமேலு மங்கையாக (லாலி)
ப்ரஹலாதனின் முறையை கேட்டு தூணைப்பிளந்து
காட்சி தந்த நரசிம்ம ரூபனான லட்சுமி நரசிம்மரோடு (லாலி)
காஞ்சி மாநகரிலே கருட வாகனத்திலே
வரதராஜ பெருமாளுடன் பெருந்தேவி தாயாராக (லாலி)
சரயு நதிக் கரையினிலே அயோத்தி மாநகரிலே
ஸ்ரீராம சந்திரனோடு சீதா தேவியாக (லாலி)
திருவிண்னகர திருத்தலத்தில் கல்யாண உற்சவத்தில்
ஒப்பில்லா அப்பனோடு பூமிதேவி தாயார் (லாலி)
திருவள்ளூர் திருத்தலத்தில் வீக்ஷாரண்ய க்ஷேத்தரத்தில்
வீரராகவ பெருமாளுடன் கனகவல்லி தாயாராக (லாலி)
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் திருமகளாய்
சூடிக் கொடுத்த சுடர் கொடியாய் ரங்கமன்னார் சகிதமாக லாலி ஆடினாள்…

—————–

ஆண்டாள் பாட்டு-10 :: வில்லிபுத்தூர் வளர் கோதை
வில்லிபுத்தூர் வளர் கோதை

விஷ்ணுசித்தன் மகள் பாவை (இரண்டு முறை)
துளப திருமண் மீதிலே பூ மகளாய் வந்துதித்தாய் (வில்லி)

மாந்தர்கள் பேதமை நீங்கவே இந்த மாநிலத்தில் வந்துமே
மாதவன் தன்னையே மனதினில் எண்ணியே மணமுடித்தாள் மாதரசி (வில்லி)

மானிடவர்க்கென்று பேசிடில் நானும் மாள்வேன் என்று சொல்லியே
நாரணன் தன்னையே நாடியே பாடியே நற்றமிழ்கோர் ஒப்புமுண்டோ (வில்லி)

கோவிந்தன் தன்னையே நாடியே கோபிமார்கள் யமுனை ஆடியே
பாவனை தன்னையே பாமாலை பாடியே பக்தி செய்தாள் பைங்கிளியே..(வில்லி)

—————

ஆண்டாள் பாட்டு-11 :: கனவிலும் நினைவிலும்–ராகம்: பிலஹரி–தாளம்: ஆதி

பல்லவி
கனவிலும் நினைவிலும் பஜனை செய்ய
கருணை செய்தருள் ஸ்ரீ கோதா தேவியே (கனவிலும்)
அனுபல்லவி
கண்ணணை நினைந்து நோன்பிருந்தாயே (இரண்டு முறை)
சூடிக் கொடுத்தவளே சுடர்க் கொடியே (சேர்த்து இரண்டு முறை) (கனவிலும்)
சரணம்
பெரியாழ்வார் பெற்ற திருமகளே
பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாயே (சேர்த்து இரண்டு முறை)
வில்லிபுத்தூர் நகரம் செழிக்க வந்தாயே (இரண்டு முறை)
ஒரு நூற்றூ நாற்பத்து மூன்றும் உரைத்தாயே (கனவிலும்)

—————-

ஆண்டாள் பாட்டு-12 :: தேவி நீயே துணை–ராகம்: கீரவாணி–தாளம்: ஆதி
பல்லவி
தேவி நீயே துணை – ஸ்ரீ சுடர்கொடியே
வில்லிபுத்தூர் வாழ் கோத தேவியே (தேவி…)
அனுபல்லவி
தேவாதி தேவன் ஸ்ரீ ரெங்கநாதன்
சித்தம்கவர் புவன சுந்தரி ஸ்ரீ (தேவி…)
சரணம்
பெரியாழ்வாரின் மாதவமே – திருப்பாவை முப்பதும் எமக்குரைத்தாயே
வாரணமாயிரம் பாடிய கோதையே – நல்ல வரமளிக்கும் திவ்ய மங்களச் செல்வியே (தேவி…)

————

ஆண்டாள் பாட்டு-13 :: (கோலாட்டம்) உறியில் வெண்ணெய் திருடி
உறியில் வெண்ணெய் திருடி, உரலோடு கட்டுண்டு
மரமாகி நின்றவர்க்கு முக்த்தியும்/வதமும் கொடுத்து
கோவர்த்தனமதனை, குடையாய் பிடித்த
கோபால கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்
நித்ய சுப மங்களம்

பட்டு ரவிக்கையும் பவளதவளமும்
பதிமுத்துமாலையும், மூக்குத்தியும் சார்த்தி
நடனமாய் ஆண்டாள், மார்கழி நீராடி
நளினம் பெருகியே, திருவீதி தன்னில் வாராள் (வருகிறாள்)
மங்களம் மங்களம், மன்னார் கோதை உனக்கு மங்களம் மங்களம்

நாடு நகரிலுள்ள ஜீவன்களை தேடி
பாடி அழகில் திருப்பாவைதனைப் பாடி
ஆடிப்பூரமதனில் வந்து அரங்கர்க்கு மாலை
சூடிக் கொடுத்த தாயே கோதா உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம் மங்களம் மங்களம்

—————–

ஆண்டாள் பாட்டு-14 :: ஆண்டாள் கோதை வந்தாளே
ஆண்டாள் கோதை வந்தாளே அனைவருக்கும் அருள் தந்தாளே
ரெங்கமன்னாரை மணந்தாளே ராஜாங்க கோலம் கொண்டாளே (ஆண்டாள்)
ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தாளே சிறப்புடன் நாளும் வளர்ந்தாளே
பெரியாழ்வாரும் மகிழ்ந்தாரே பல்லாண்டு பாடி துதித்தாரே (ஆண்டாள்)
துளபம் மாலை அணிந்தாளே கண்ணனும் கண்டு மகிழ்ந்தாரே
திவ்ய தரிசனம் கண்டாளே ஜகமெங்கும் ஒளியாய் நின்றாளே (ஆண்டாள்)
அன்பே அமுதே ஆரணங்கே அடியார்க்கிரங்கி அருள்புரிவாய்
துன்பங்கள் அனைத்தும் தீர்ப்பவளே திருவே அருளே பூமகளே (ஆண்டாள்)

——————

ஆண்டாள் பாட்டு-15 :: கோதை நாயகியே–ராகம்: பிலஹரி–தாளம்: ஆதி
பல்லவி
கோதை நாயகியே – அம்மா கோதை நாயகியே
அனுபல்லவி
திருவில்லிபுத்தூர் தனில் பெரியாழ்வார் கண்டெடுத்த
திருமகளே ஸ்ரீ மகாலட்சுமியே (கோதை நாயகியே…)
சரணம்
நீ சூடிய மாலை தன்னை கண்ணனும் சூடிக்கொண்டான் (இரண்டு முறை)
பாடிய பாவைக்கு நாயகனாய் ஆகி நின்றான் – உன்
கனவிலே தோன்றி திருக்கரம் பற்றினான் – கருடாழ்வார்
துணையோடு ரங்கமன்னார் மாலை சூட்ட (கோதை நாயகியே…)

————–

ஆண்டாள் பாட்டு-16 :: பச்சைக் கிளியே
பச்சைக் கிளியே பச்சைக் கிளியே பறந்துமே ஓடி அந்த
பணி அரங்கராஜனை நீ அழைத்துமே வாடி
தென்னரங்கேசனுடைய திருவடி போற்றி
தேவி கோதை அழைத்தாள் என்று திடமுடன் பேசி…(பச்சைக் கிளியே)
தேன் பெருகும் சோலை சூழ்ந்த தென்னரங்கனை…
தேவி கோதை அழைத்தாள் என்று திகழ்ந்து நீ பேசி…(பச்சைக் கிளியே)
வண்டாடும் மாலையணிந்த மாலரங்கனை
வல்லி கோதை அழைத்தாள் என்று வணங்கிட நீ பேசி…(பச்சைக் கிளியே)
பாம்பணை மேல் பள்ளி கொண்ட பணியரங்கனை
பாவை கோதை அழைத்தாள் என்று பணிந்து நீ பேசி…(பச்சைக் கிளியே)

—————

ஆண்டாள் பாட்டு-17 :: ஸ்ரீவில்லிபுத்தூர் விஷேஷம்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
ஜோதி மணிமாடம் தோன்றிடும் ஊர்
நீதியால் நல்ல பக்தர்கள் வாழ்ந்திடும்
வேதக்கோன் நித்தம் வசித்திடும் ஊர்

பாதகம் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும்
கோதைத்தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாதவரை
வையம் சுமப்பது வம்பன்றோ

மென்னடையன்னம் பறந்து விளையாடும் வில்லிபுத்தூரின் மகிமை சொல்ல
பன்னகமாய் பல நாவு படைத்துள்ள அன்னவனாலேயும் ஆகாது
வண்டுகள் பாடும் பொழிலழகும் நல்ல தொண்டர்கள் வாழும் எழில் மிகவும்
கெண்டைகள் ஓடும் வயலழகும் – அதைக் கண்டு வணங்கித் துதிப்போமடி
மின்னார் தடமதில் சூழ்ந்தழகைச் சொல்லி மேனகையார் பலர் சேர்ந்தழகாய்
பொன்னார் மணிகள் அணிந்த கோதை முன்பு நன்றாக கும்மியடியுங்க்கோடி

—————

ஆண்டாள் பாட்டு-18 :: சுட்டிச்சுழி நெற்றிச்சரம்
சுட்டிச்சுழி நெற்றிச்சரம் ஜடை அலங்காரத்தோடு
அம்மா உந்தன் தரிசனம் காண வேண்டும்
கட்டித் தங்க காசுமாலை கருநீல கல்ஹாரம்
அணிந்தவளே உன்னைக் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

பச்சை பசுங்கிளியேந்தி சந்திர ப்ரபைதனில்
வரும் பவனியை நானும் காண வேண்டும்
அச்சமெல்லாம் தீர்த்து வைத்து ஆனந்தம்
நல்கிடும் அன்னையே உன்னை நான் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

நித்தம் மாலை சூடித்தந்து நீலவண்ணக் கரங்களை
அடைந்தவளே உன்னைக் காண வேண்டும்
சித்தம் கவர் பாவை தந்த செங்கமல நாயகி – உன்
சேவை தன்னை நானும் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

சொல்லிலே வெள்ளமென நல்வாக்கு பெறுகிட
சௌந்தர்ய அன்னை உன்னை காண வேண்டும்
வில்லிபுத்தூர் விளங்கிட வேதங்கள் துலங்கிட
விளங்கிடும் அன்னை உன்னைக் காண வேண்டும் (சுட்டிச்சுழி)

————–

ஆண்டாள் பாட்டு-19 :: கிளி கண்ணி
இன்பமளிப்பவளே எழிலூறும் கோதை வள்ளி
என்னரும் தெய்வமடி – கிளியே எண்ணி துதிப்போமடி
பட்டர்பிரான் பெற்றெடுத்த பாவை அழகுடைய பெண்ணாகி நின்றாளடி – பேதையே
பேசும் நல் தெய்வமடி
ஜோதி மதி முகமும் சொர்ண மணி முடியும்
காதில் அணி துலங்க – சகியே காட்சி அளிப்பாளடி
பூங்குயில் பண்ணிசைக்க புதுவை அணிபுரத்து வேங்கடம் கண்டேனடி – கோதையே
வேண்டியதை தருவாளடி

—————–

ஆண்டாள் பாட்டு-20 :: லக்ஷ்மி கல்யாண
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
வசுதேவ தவபாலா அசுரர்குல காலா
சசிவதன ருக்மணி சத்யபாமா லோலா… (லக்ஷ்மி)
சாரங்கராஜன் உம்மை சரணமென்று பணிந்து
பார் புகழும் க்ருப சரித்திரம் பாட உமை நினைந்து… (லக்ஷ்மி)
கொப்போடு வாழைமரம் கொண்டு வந்து நிறுத்தி
சோப்புடைய பந்தலில் மேல்கட்டு கட்டி (லக்ஷ்மி)
மேல்கட்டு கட்டியதில் வெடிபூக்கள் சிதற
தெடில் பூக்கள் தொங்கவிட்டு தோரணங்கள் ஆட (லக்ஷ்மி)
தங்கவளை தளதளவென சரிகைபட்டு மின்ன
முன் முகத்தில் சுட்டி மின்ன மூக்குத்திகள் அசைய (லக்ஷ்மி)
முத்து முத்தாய் கோலமிட்டு குத்து விளக்கேற்றி
தவழ்ந்த கிருஷ்ணன் விளையாட, தங்கப்பாய் விரித்து (லக்ஷ்மி)
ராமாயணக் கதையை நாடி நான் கூற
நான்முகனும் சரஸ்வதியும் மகிழ்ந்து வரம் தார (லக்ஷ்மி)

—————-

ஆண்டாள் பாட்டு-21 :: வரம் தருவாய் ஸ்ரீ வர மங்கையே–ராகம்: கல்யாணி–தாளம்: ஆதி

பல்லவி

வரம் தருவாய் ஸ்ரீவரமங்கையே
என் வாழ்வெல்லாம் உன்னையே வாழ்த்தி வணங்கிடவே (வரம்)

அனுபல்லவி

மறந்தும் நான் தீவினை கறைபடாதிருக்கவும்
(உன்) மலர்பதம் தொழுதே
மகிழ்ச்சியில் திளைக்கவும் (வரம்)

சரணம்

திருமலையில் நீ அலர்மேல் மங்கையாக
திருத்தங்காலில் நீ செங்கமலத்தாயாராக (இரண்டு வரிகளும் இரண்டு முறை)
திருவில்லிபுத்தூரில் நீ ஆண்டாளக
திருவரங்கத்தில் நீ ரெங்க நாயகியாக (வரம்)

———-

ஆண்டாள் பாட்டு-22 :: ரங்கமன்னார் கிருபை வேண்டும்
ரங்கமன்னார் கிருபை வேண்டும்… அவன் திருவருள் பெற வேண்டும்
வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)

அவலப் பிறப்பொழிய வேண்டும் – அதற்கு வித்தம்? அவமாயை? அகல வேண்டும்
வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)
தொல்லுககில் நரரும் எல்லா உயிரும் சுகவாழ்வு வாழ வேண்டும்
வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)

காமம் முதல் பகையும் குரங்கு மனமும் செத்து?
உலகிலெல்லோரும் உய்ய வேண்டும் வேறென்ன வேண்டும்… (ரங்கமன்னார்…)

———–

ஆண்டாள் பாட்டு-23 :: ஆண்டாள் சரித்திரம்-ராகம்: ஆரபி

சூடிக் கொடுத்த எங்கள் சுடர் கொடி திருமண சோபன வைபவம் காண்போம் – அவள்
பாடிக் கொடுத்த திருப்பாவை தனையும் அந்த பரமன் திருவடிகள் பாடுவோம்.. (இரண்டு முறை…இரண்டாவது முறை மெதுவாக)

ராகம்: குந்தலவராளி

நீலத்திருமேனியன் நெடுமாலை அடைந்திட நிலமடந்தை உள்ளம் கொண்டாள்
சீலத்திலே சிறந்த ஸ்ரீவிஷ்ணுசித்தரின்
செல்வ திருமகளாய் வந்தாள்..அ..ஆ (இரண்டு முறை…இரண்டாவது முறை மெதுவாக)

ராகம்: ஆனந்த பைரவி

ஸ்ரீவில்லிபுத்தூரில்…வடபத்ரஸயனனின் சேவகராம் பெரியாழ்வார்…
கோவில் அருகிலிலே துளஸிவனம் தனிலே
குழந்தை என அவளை கண்டார் (இரண்டு முறை…இரண்டாவது முறை மெதுவாக)

ராகம்: ஸாமா

சீதையை கண்டெடுத்த ஜனகனை போலவே சிந்தையிலே நிறைவு கொண்டார்
கோதை என பெயர் சூட்டியே அவளையும் கொள்ளை யன்புடன் வளர்த்து வந்தார் (இரண்டு முறை)

ஹம்ஸாநந்தி

பாமாலை கொடுத்தவள்..பரிமளரங்கனை பாடி பரவசமடைந்தாள்
பூமாலைகள் சூட்டு பூகணனங்கள்? போற்றி வழிபடவும் செய்தாள் (இரண்டு முறை)

ராகம்: ரஞ்சனி

தந்தை தொடுக்கும் மலர் மாலைகள் அனைத்தையும்
தான் முதலில் சூடிக் கொண்டாள்
அந்த மாலைகளை ஆலயத்திறைவனாம்
அரங்கனுக்கே அர்ப்பணம் செய்தாள் (இரண்டு முறை)

பாகேஸ்வரி

ஓங்கி உலகளந்த உத்தமனை பாடி
உள்ளன்புடன் வழிபட்டாள்
“வேங்கடவற்கென்னை விதி” என்ன இறைவனை
வேண்டியவள் துதி செய்தாள் (இரண்டு முறை)

ராகம்: ஸிந்து பைரவி

சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமல்
சாற்றியவண் புகழ்பாடி, வங்கக் கடல் கடைந்த வேங்கட நாதனை
வாய் மணக்க துதி செய்தாள் (இரண்டு முறை)

ராகம்: ஸாரங்கா

அனவரதமும் அந்த அரங்கனை அன்பினாலே அவனை ஆண்டாள்
கனவிலும் நினைவிலும் காவேரி ரங்கனே கணவன் என உறுதி கொண்டாள் (இரண்டு முறை)

ராகம்: காபி

ஆயனும் தனக்காக அவதரித்த கோதையின் அன்பினுக்கே அடிமை ஆனார்
நேயமுடன் அவளை நேரில் வதுவை கொள்ள நீலமாலவன் உள்ளம் கொண்டார் (இரண்டு முறை)

ராகம்: கல்யாண வஸந்தம்

வாரணங்கள் சூழி வரிசங்கம் முழங்க வாஸுதேவன் அவனும் வந்தான்
தோரண பந்தலில் தோழியருடன் கூட்க் தோகை மயில் அவளும் வந்தாள்

ராகம்: ரேவதி

மறையவர்கள் ஓத மற்றையோர் மகிழ்ந்து மங்கள மடந்தையர் பாடிட…ஆ
குறையொன்றுமில்லாத கோவிந்த ரங்கனும் கோதையின் கைத்தலம் கொண்டான் (இரண்டு முறை, இரண்டாவது முறை உயர்த்தி)

ராகம்: மத்யமாவதி

தேவரும் முனிவரும் திருமண வைபவம் தரிசனம் செய்து மகிழ்ந்தார்
பாவை நோன்பிருந்து பூமிதேவி ரங்கனை பதியென அடைந்து மகிழ்தாள்…அ..ஆ (இரண்டு முறை(

உடனே…

திருவாடிப் பூரத்து ஜகத்துதிதாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளாய் வாழியே
பெரும்புதூர் மாமனுக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயிரரங்கற்கே கன்னியுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே
வண் புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே..

—————-

ஆண்டாள் பாட்டு-24 :: ஆண்டாள் பாத சரம்
ஆண்டாள் பாத சரம் விலை மதிக்க பரமனால் முடியாது
அதைப் பணித்திடப்பவுன் ஏது?
பாருலகில் அதன் பெருமை பகர்வார் இப்போது
திருக்கை வளையல் அழகு செய்ய முடியாது
இந்த ஜெகத்தினிலேயது
அருள் கொடுக்கும் ஹஸ்தமது ஜொலிக்கும் சேவிக்கும் போது
கூந்தல் அழகைச் சொல்ல குவலயத்தில் முடியாது
அதைக் குறிப்பிடப்படாது
பின்னல் சடை வண்ணம் போலே பூலோகத்தினில் ஏது?

ஆண்டாளருளிச் செய்த திருமொழியைக் கேளும்
அந்தத் திருப்பாவையை நாளும் பாடிப் பறை கொள்வதற்கும் பாருலகில் எல்லோரும்
அந்தணர்கள் வேதியர்கள் அரம்பையர்கள் சூழ இந்த அகிலமெல்லாம் வாழ
ஆண்டாள் நீராடினாளே அடியார்கள் சூழ

நீராடும் நாள் முதலாய் முக்காலம் உனைத்தேடி முக்காலம் உன் பதம் பாடி
உன் முன்னழகை பார்த்தோம் அம்மா முச்சந்தினில் கூடி முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் கூடி
ஆண்டாள் சன்னதியை நாடி சேவிக்கக் காத்திருக்கிறார் சேதனர்கள் கோடி
வானுலகத் தேவரெல்லாம் வாசலில் காத்திருக்க ஆண்டாள் – கருணையுள்ளம் பெருக்க
சேவை காட்ட வேண்டுமென்று சிந்தை அதிகரிக்க
கண்ணன் போலும் ராமன் போலும் கள்ளழகர் போலும்
ஆண்டாள் – வடபத்திரர் போலும் வந்து சேவை காட்டினாலே வானுலகர் எல்லோர்க்கும்

———–

ஆண்டாள் பாட்டு-25 :: கோதாய் உனக்கு மங்களம்
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
நாடி நரையிலுள்ள ஜீவன்களைத் தேடி(இரண்டு முறை)
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
பாடிய அழகியதோர் திருப்பாவை தனைப்பாடி
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்

ஆடி உத்ஸவத்தில் கார்த்திகை கொடியற
தம்பதி இருவரும் பதினார் வண்டி ரதம்தனில் வர
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
ஆடிப்பூரம் தனிலே வந்தரங்கர்க்கு மாலை
சூடிக் கொடுத்த தாயே சொன்னேன் உன் புகழை

கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்
ஆழ்வார் குமரி? நாச்சியார் உனக்கு மங்களம்
கோதாய் உனக்கு மங்களம்
நித்ய கல்யாணி ஆண்டாள் உனக்கு மங்களம்

—————–

ஆண்டாள் பாட்டு-26 :: கோதாதேவியே! அநந்த கல்யாண
ராகம்: கல்யாணி
பல்லவி
கோதாதேவியே! அநந்த கல்யாண குணநிதியே அருளமுதவாநிதியே
மத்யமகாலம்
கோதிலா உன் திருவாக்கில் ப்ரவாஹம்
கலைவாணி எனவரும் கவிதா ரஸம் தந்த (கோதாதேவியே)
அநுபல்லவி
சேதநர் உய்ந்திடவே ஜகந்தனில் அவதரித்த
தேனமுதத் திருமொழி தீந்தமிழ்ச் சுவைதந்த (கோதாதேவியே)
சரணம்
சோபிதமாம் உனது சிவந்த அதராம்ருதம்
சோனை எனும் நதி தாண்டிவா?
தேவி! உன் அங்க சௌந்தர்ய குசதடமோ?
துங்கபத்ரை எனும் நதி தடமோ?

மத்யகோலம்

அப்ராக்ருதாநந்த விரஜை நதியோ – உன் அருளிச்செயல் (தந்த) கற்கண்டிதுவோ?
இப்புவியிற் தானும் ஸுபநர்மசைவியனும் அத்புத வெள்ளமது அச்சுத ——- அதுவோ? (கோதாதேவியே)

————–

ஆண்டாள் பாட்டு-27 :: வெள்ளிக் கிழமையில் ஆண்டாள் வைபோகம்
ராகம்: ஆனந்த பைரவி
பல்லவி
வெள்ளிக் கிழமையில் ஆண்டாள் வைபோகம்
வேடிக்கை என்ன சொல்வேன் (இரண்டு முறை)
அனுபல்லவி
திருவாடிப்பூரத்திலே திருத்துழாய் வனத்திலே – ஸ்ரீ விஷ்ணுசித்த்ர் குலத்திலே
வில்லிபுத்தூர் ஸ்தலத்திலே…. (வெள்ளி..)
சரணம்
தங்க குறட்டிலே ரெங்கமன்னாருடன்
பெண்கள் இருபுறமும் மங்களம் பாட
எங்குமுள்ள அடியார்கள் இன்புற்றிருக்கவே
இங்கு வந்தவதரித்த கோதை நாயகியே

————–

ஆண்டாள் பாட்டு-28 :: கோதா! உன் மஹிமை
ராகம்: அடானா
தாளம்: ஆதி
பல்லவி
கோதா! உன் மஹிமை பேசவும் தரமா ரங்க நாதப்ரியே ! தேவி ! க்ருபாநிதியே
அனுபல்லவி
மாதா, உன் திருமொழியாம் ப்ரேம பக்தியினால்
மாதவன் கண்ணனையே காதற்கவி பாடும்

மத்யம காலம்
மதுரவசனாம்ருத கானரஸம் தந்த
மங்கையே! ஜகம் உய்ய அவதரித்த (கோதா!)
சரணம்
ஆயகலை அறிந்துணர்ந்த உன் தாதை நல்லாழ்வார்கள்
நாயகனை நினைத்துருகும் நாயகி பாவம் கொண்டார்
ஆராய்ந்துணரவும் முடியுமோ! ஆணினம் ஆனதாலே
நாயகியே நீயுணர்ந்த ப்ரேம ரஸம்

மத்யம காலம்
பக்தி பெருகும் ஸார பேரின்ப காதற் பாவனை ப்ரணய ஊடற் கூடலும்
யுக்தியாய் மடலூறும் தன்மையும்
பாவையே! நீ அறிந்த ப்ரேம ரஸாநுபவம் (கோதா!)

————

ஆண்டாள் பாட்டு-29 :: அன்னை கோதாதேவி அருள் பெற்ற வெங்கட குரு
அன்னை கோதா தேவி அருள் பெற்ற வெங்கட குரு
அருளின கோதாஸ்துதி வைபவமதனை
பன்னிசை பாடிய பரமானந்தம் பெருகும்
பாரினில் புகழ் ஓங்கும் பவபிணி நீங்கும்
தென்னரங்கேசரும், தேவி ரெங்கநாயகியும்
திருவுள்ளம் உகந்து தரும் திருவருள் பெருகும்
இன்னல் அகன்றிடும் அரங்கன் இணையடி பணிந்திட
இகபரசுகமே… எங்கும் நிறை சுப மங்களமே..
மங்களம், மங்களம், மங்களம்…
மன்னார் கோதைக்கு மங்களம் மங்களம்….

————-

ஸ்ரீ கோதா கோபால ஸ்தோத்ரம் –ஸ்ரீ மதி திருவேங்கடம் அம்மாள்

யது வம்ச ஸமுத்பூதம் த்விஜ வம்ச
வஸூ தேவ ச ஸத்புத்ரம் விஷ்ணுசித்தர் ச புத்ரீ
தேவகி கர்ப்ப ஸம்பூதம் துளஸீ கர்ப்ப ஸம்பூதம் காண உத்பவம்
யதுநாம் குலதீபம் பட்டார்ய குல தீபிகாம்
கார்க்காச்சார்யா விஷ்ணு சித்த மதம் அவரோ ரிஷி இவர் ஆழ்வார் வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் எல்லாம் கண்ணன்
நீல ஜீமுத இந்திர நீல மணிப்ரபாம் இவள் யுவா குமார ரூபஞ்ச யுவதிசய குமாரிணி
மஞ்சு மஞ்சீரா பாதாம் நூபுரம் ஸ்நிக்த பீதாம்பரம் ரத்னா சிகப்பு வஸ்திரம்
சிங்க நடை அன்ன நடை
ஹரிசந்தன குங்குமப்பூ
மணிரத்ன விபூஷணம் திவ்ய மங்கல்ய பூஷணம்
யாஷிடி சாட்டை இவள் கிளி கையில்
சந்த்ர சூர்யா முகாம்புஜாம் சந்த்ர இவ
இந்தீவர கரு விழியாள் -அவனுக்கு செங்கண் சினந்து
கிரீடம் -பின்னல் இவளுக்கு
த்ரிபங்கி லலிதா இருவருக்கும்
சர்வ லோக விதாதா -அவனையும் சேர்ந்து தாங்குபவள் இவள் விஸ்வம் பரா இவள்
சரணாகத கோப்தா அவன் -வத்சலாம் இவள்
திவ்ய ஸிம்ஹாஸனம் ஆரூடம் திவ்ய அலங்கார சோபினாம் அன்யோன்ய காஷினாம்
த்ரைலோக்ய திவ்விய தம்பதி அன்யோன்யா சத்ருசம்
ஏகாசனம் அடியேனுடன் அருளி -திருவடி பண்ணாங்க மூவரையும் வணங்கி
வழு விலா அடிமை செய்ய நாமும் பிரார்த்தனை செய்வோம்

————-

ஸ்ரீ கோதா பஞ்ச ரத்னம் ஸ்ரீ
கமலாதாய நயனாம் -நத கரணாம்-வைகுந்தம் என்னும் தோனி
சசி வதனாம் மம சரணாம்
பய ஹரணாம்
வர பூஸூர தனயாம் -நிலத்தேவர் விஷ்ணு சித்தர் திருமகள்
நூதன நகரம் பஜ
நானே தான் ஆயிடுக -சேஷ பூதர் ஹ்ருதய தாமரை

இரண்டாம் ரத்னம் யதி சேகர ஸஹஜாம் சகோதரி
பர உபகார தூய்மை
ப்ரஹ்மாதிகள் தொழும் -பர்ஜன்ய தேவதைக்கு ஆணை ஆழி மழை பாசுரம்
கிளியையும் வணங்கி கோதாவையும் வணங்குவோம்

ரெங்க மன்னர் -ஸூ மணி நீல -கருணை ரசம் பொங்கும்
கண்கள் கடாக்ஷம் இது என்ன மாய மயக்குகள்
ஜன போஷணம்

சரணாகத ஜன ரக்ஷணம்
பிருந்தாவனம் -அயோத்யை இருக்க ஆசைப்படுகிறீர்
யமுனைக்கரையில் ஆசை
அநு காரம்
கழலாத வளைகள்
பந்தார்விரலி -சீரார் வளை
நீங்காத செல்வம் நிறைய

அத்புத சரிதாம் -கேசவ நம்பியைக் கால் பிடித்து

———-

திருப்பாவையில்
மார்கழி ( 3 முறை ), திங்கள் ( 4 முறை )
பறை (11 முறை ) நீராட்டம் (6 முறை )
திருவடி (6 முறை), பாடி (18 முறை )
நாராயணன் (3 முறை ),ஓங்கி உலகளந்த (3 முறை), கோவிந்தன் (3 முறை),
கேசவன் (2 முறை ), மாதவன் (2 முறை ),
மாயன் (2 முறை ), மணிவண்ணன் ( 2 முறை ),
நப்பின்னை (4 முறை ) ,நந்தகோபன் (5 முறை ),
யசோதை (2 முறை ),செல்வம் (7 முறை ),
ஆராய்ந்து (2 முறை), செங்கண் (3 முறை),
புள் (4 முறை ), முலை ( 4 முறை),
மாரி ( 2 முறை), மழை ( 2 முறை),
பால் (6 முறை ), கோயில் ( 4 முறை),
விளக்கு ( 5 முறை ), தாமரை ( 3 முறை ),
மலர் ( 3 முறை ), தூயோமாய் (3 முறை),
கண்ணி ( 3 முறை ), கறவை (3 முறை ),
போற்றி ( 7 முறை ), பிள்ளாய் ( 2 முறை ),
பிள்ளை ( 3 முறை ), எழுந்திராய் (19 முறை), எம்பாவாய் (30 முறை ) பிரயோகங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருமாலின் இடக்கைச் சங்கு ( 5 முறை ),
திருமாலின் திருக்கண் ( 4 முறை ),
திருமாலின் திருவாய்
( 3 முறை ), திருமாலின் திருவடி
( 3 முறை ), திருமால் அவதரித்த ஆயர்குலம் ( 5 முறை ) பிரயோகங்கள் செய்யப்பட்டுள்ளன.

செந்தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்தாக அமைவது “ழ”கரமாகும்.
இந்த ழ கரத்தை தனது திருப்பாவை மூன்றாம் பாசுரமான “ஆழி மழைக் கண்ணா” எனும்
ஒரே பாசுரத்தில் 11முறை பயன்படுத்தியுள்ள பான்மை “பாடவல்ல நாச்சியார்” ஶ்ரீகோதை ஆண்டாளுக்கே பொருந்தும்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

One Response to “ஸ்ரீ கோதா ஸ்லோகங்கள் —”

  1. Booma madhusudanan Says:

    அடியேன் பூமா மதுசூதனன், இங்கே தாங்கள் குறிப்பிட்டுள்ள கோதா ஸ்லோகங்கள் யாவும் எங்கே கிடைக்கும்? தரை கூர்ந்து தெரிவிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். அடியேன் பூமா மதுசூதனன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: