ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –
வடிவே அன்று அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது –

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

ஒரு நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே ஒரு திருவடிகளானது நின்றாப் போலே நின்று –
பூமிப் பரப்பை அடங்க மறைத்துக் கொண்டது –
கையிலே நீர் விழுந்தவாறே அலாப்ய லாபம் போலே வளர்ந்த தோளானது திக்குகள் எல்லாம் அளந்தன –
இன்று இத்தைக் கேட்கைக்கு அன்று எங்கே போனேனோ –-
உன் திருவடிகளிலே ந்யஸ்த பரர் ஆனவர்கள் இச் செயலை அனுசந்தித்து -இனி நமக்கு ஒரு கர்த்தவ்யம் இல்லை என்று
கொண்டு நிர்ப்பரராய் -மார்பிலே கை வைத்துக் கொடு கிடந்தது உறங்குகைக்காக செய்த செயல் இறே-
ஒரு சர்வ சக்தி பக்கலிலே தங்கள் பரத்தை ஏறிட்டுத் தாங்கள் நிர்ப்பரராய் இருப்பர்கள்-
அநந்தரம் அவன் தூது போயும் -சாரத்தியம் பண்ணியும் -தான் அர்த்தியாயும் -இப்படி இவர்கள் கார்யம் நிர்வஹியா நிற்கும்
ஆனபின்பு அவர்களுக்கு ஒரு குறை இல்லை-

—————

நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே
நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது-

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

முறை அறிந்து பற்றினேன் அல்லேன் -விரோதி நிரசன சமர்த்தன் என்று பற்றினேன்-நம் பிரதி பஷத்துக்கும்
மாறு என்று சொல்லி வணங்கினேன் –
நப்பின்னைப் பிராட்டி யோட்டைக் கலவிக்கு பிரதிபந்தகமான எருது ஏழையும் அடர்த்தாப் போலே
என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி எனக்குத் தன்னைத் தருவானும் தானாகப் பற்றினேன் –
இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஒரு புருஷார்த்தம் அறியவும் பெற்றிலேன் -அத்தாலே இப்புருஷார்த்தைப் பெற்று
அனுபவிக்கப் பெறாமல் இழந்து போனேன் -இதுக்கு அடி என் அறிவு கேடு ஐயோ அறிவு கேடு என் படுத்தாது தான் –

——————

இத்தால் எம்பெருமானே -சர்வாதிகன் என்னும் இடமும் -அல்லாத ஈஸ்வரர்கள் பிறர்க்கும் தஞ்சம் அல்லர்கள் –
தங்களுக்கும் தஞ்சம் அல்லர்கள் -என்னும் இடமும் சொல்லுகிறது-

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

இவ்விடத்தில் நம் பிள்ளை அருளிச் செய்வதோர் வார்த்தை யுண்டு -அதாகிறது
நஞ்சீயர் ஒரு நாள் என்கையிலே மாம் பழத்தைத் தந்து -இத்தைக் கொடு போய் நம்பி திரு வழுதி நாடு தாசர்க்கு
கொடுத்து வாரும் -என்று போக விட -அப்போது இப் பாட்டு நம்பி பணியா நிற்க கேட்ட வார்த்தை –
ஏழு கோக்களை வதித்தவன் பிராயச் சித்தியாய் ஒருவன் வாசலிலே நின்றான் என்னக் கேட்டிலோம்-
ஒருவன் பிராணன் உடன் இருந்தவன் தலையை அறுத்து -அத்தாலே பாதகியாத் திரிய -அவனுடைய ப்ரஹ்ம ஹத்யையும்
தன்னுடைய ஸ்பர்சத்தாலே போக்கினான் இவன் –இது இறே இவனுக்கும் அவர்களுக்கும் யுண்டான நெடு வாசி இருக்கிறபடி -என்றார்
தலையை அறுத்துப் பாதகியான அவனோ ஈஸ்வரன் -சாபத்தைப் போக்கினவனோ -தலை அறுப்புண்டு சோச்யன் ஆனவனோ
பார்த்துக் கொள்ளும் அத்தனை –

——————-

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கூடக் கார்யம் செய்யக் கடவ நீ -உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் -என்கிறார் –

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையின்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

கதையின் திருமொழி யாய் நின்ற திருமாலே – உபநிஷத் சித்தமான ஏதேனுமாக ஒரு வித்யா விசேஷங்களில் யுண்டான
சப்தங்கள் ஸ்ரீ யப்பதிக்கு வாசகமாயாய்த்து இருப்பது –
அர்த்தத்துக்கு போதகமான சப்தம் -அவனையும் அவளையும் காட்டக் கடவதாய் இருக்கும் –
அர்த்தம் அவனே சப்தம் இவளே யாய்த்து இருப்பது-
இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரும்ஹணங்களாலே பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியான உன்னை இப்படி சப்த த்வாரா காண்கை அன்றிக்கே
ஒரு தேச விசேஷத்திலே வந்து பரிபூர்ணமாக -சதா பஸ்யந்தி -என்று அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதிக்கு போக்கு விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று முழு மிடறு செய்து பேசுகிற பரிபூர்ண சப்தங்களாலே கண்டு
அனுபவிக்கும் படி -திரு உள்ளமாய் அருள வேணும் –

————

இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன –
அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் -பெற்ற அம்சம் உன் பக்கல் ருசி -என்கிறார் –

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

நிர்விசேஷ சின்மாத்ரம் என்றாப் போலே சிலவற்றை உத்தேச்யமாக நினையாதே திரு மேனியே ப்ராப்யம் என்று இருக்கப் பெற்றேன் –
திரு மேனி கண்டேன் -பொன் மேனி கண்டேன் என்னும் சொல்லை சேஷபூதர் ஆகையாலே பணிந்தேன் -என்கிறார்-
அன்பாய்த் துணிந்தேன்-ஞான கார்யம் அல்ல -அபி நிவேசத்தாலே துணிந்தேன் –
பெருமாள் புக்கு அருளினால்-பின்னும் முன்னும் நின்று வைத்த அனைத்தையும் பின்பும் பிறகுவாளியையும் கண்டு யேத்துகையில் துணிந்தேன்
திருமலை நம்பி பக்கலிலே வாசனை பண்ணி இருப்பார் – ஸ்ரீ பராங்குச தாசர் என்று ஒருவர் உண்டு -அவர் நம்பி பணித்தத்தாகச் சொல்லும்படி –
புகலிடம் என்கிறது -அவதரித்துப் போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய் -அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்கிறபடியே அவர்கள்
நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் என்னுமதிலே அத்யவசித்தேன் -என்கிறார் -என்றுமாம் –

————-

பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தால் பெற்ற அளவு அமையும் -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும்
அனர்த்தத்தை அனுசந்தித்து -இதிலே ருசி யுண்டாகாது இருக்கும் அத்தனையே வேண்டுவது என்கிறார் –
ப்ராப்திக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் அடி -சம்சார தோஷ தர்சனத்தைப் பண்ணுகை- ஏத்துகையிலே துணிகையே யன்று-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நாகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பகவத் பிரசாதம் யுடையார்க்கு இறே பிரத்யஷிக்கிற தோஷமும் தோஷமாய்த் தோற்றுவது-
தன்னைக் காட்டினவோபாதி இது தன்னையும் தானே காட்ட வேணும் –
எம்பெருமான் தன்னையும் பற்றுவித்து புறம்பையும் விடுவிக்குமா போலே –
இத் தோஷ தர்சனமும் தன்னையும் விடுவித்து எம்பெருமானையும் பற்றுவிக்கும் –
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அவன் உளனாய் இருக்க -அநிஷ்டத்திலே இவன் இஷ்டம் பண்ண
அத்தைத் தவிர்த்து சாஷாதிஷ்டம் தருவானாய் நின்றான் –
நம்மாழ்வார் இமையோர் தலைவனான படியை முந்துறக் கண்டார்
அதுக்கு எதிர்தட்டான பொய் நின்ற ஞானம் தொடக்கமான வற்றை-பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
விடுவிக்க வேணும் -என்கிறார் –

————-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் வடிவு–67 –என்றும் பாடமாம்

நித்தியமான ஆத்ம வஸ்துவைத் தொற்றிக் கிடக்கிற புண்ய பாப ரூப கர்மங்களைப் போக்குவித்துப் பின்னையும்
மறுவலிட்டு வாராதபடிக்கு ஈடாகப் போக்கும் மிடுக்கை யுடையவனைக் கண்டு கொண்டேன் –
சேதனன் ஆகையாலே இரண்டு இடத்திலும் இவனுக்கு ஸ்வபாவ ஜ்ஞானமே வேண்டுவது -அஞ்சுகைக்கும் அச்சம் கெடுகைக்கும்-
துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும் துரத்தி விட்டுப்
பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் -துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும்
செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

—————-

இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவியாதே உப்புச் சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது –
இத்தால் நின்ற நின்ற நிலைகள் தோறும் இஷ்ட பிராப்தியும் -அநிஷ்ட நிவாரணமும் பண்ணிக் கொடுக்கும் படி சொல்லுகிறது –
தந்தாமாலே இழக்கில் இழக்கும் அத்தனை -அவன் பக்கல் தட்டில்லை –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி மிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

நம் வேர்ப் பற்றிலே நலிய நினைத்து வந்த மிடுக்கை யுடைய குவலயா பீடத்தின் யுடைய கொம்பைச் சலித்த சேஷீ-
தன்னுடைய விரோதியைப் போக்கி எழுதிக் கொண்ட படி யாதல் –
நாட்டுக்கு ஒரு சேஷியைத் தந்தான் -என்னுதல் -இச் செயலாலே எல்லாரையும் எழுதிக் கொண்டவன் –
இப்படிப்பட்ட அவன் கிடீர் கடல் கடைந்தான் –

————

அவன் பக்கல் தம்முடைய அபேஷிதம் பெற்றுப் போகிறார் தேவர்களேயோ-
நாம் காண ஜகத்துக்கு ரஷகராய் ஜீவிக்கிற ராஜாக்களும் எல்லாம் ஜகத் காரண பூதனானவன் திருவடிகளை
ஆஸ்ரயித்து அன்றோ தந்தாமுடைய பதங்கள் பெற்றுத் திரிகிறது என்கிறார்-

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பூ வேகும்–பாட பேதம்-பூக்கள் தள்ளும் படியான செவ்வியை யுடைய கமலத்தை நாபியிலே உடையவன்
பூ மேவும் -என்ற பாடமாய்த்தால் போக்யதை பொருந்தி இருக்கிற படி

—————–

ஆஸ்ரித விஷயத்தில் பிச்சிருந்த படி சொல்லுகிறது
அம்ருதம் ஆசைப் பட்டார்க்கு அத்தைக் கொடுக்கும்
ராஜ்யம் ஆசைப் பட்டார்க்கு ராஜ்யத்தைக் கொடுக்கும் –
தன்னை ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் -என்கிறது-
தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து –
அருளின திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி ஓக்க விரும்பி
அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

தமருள்ளும் – இதில் முற்பட்டது ஆஸ்ரிதருடைய ஹ்ருதயம் ஆகையாலே உத்தேச்யம் இது -இத்தால்
அவ்வோ இடங்கள் போலும் அன்றிக்கே இவர்கள் ஹ்ருதயங்களிலே ஒரு வாசி தோற்றப் பரிமாறும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் யுடைய ஹ்ருதயங்கள் –
தஞ்சை –தஞ்சை மா மணிக் கோயில் –
தலை யரங்கம் –திருப்பதிகளில் பிரதானமாய் -பரமபதத்தோடே ஒக்க எண்ணலாம் படியான பெரிய கோயில் –
தமருள்ளும் தண் பொருப்பு – நின்ற வேங்கடம் நீணிலத்துள்ளது -திருவாய்-9-3-8-என்று தங்களுக்கு வைப்பாக
அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை –ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சர்வ ஸ்வமான தேசம் இறே –
வேலை –எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் –ப்ரஹ்மாதிகளுக்கே யாய் இருக்கையாலே விசேஷணம் இட்டிலர்-
தமருள்ளும் மா மல்லை –ஆஸ்ரிதனுக்காகத் தரைக்கிடை கிடக்கிற திருக் கடல் மலை –
கோவல் –திருக் கோவலூர் எங்கள் மூவரோடும் ஓக்க நெருக்கின இடம் -தங்கள் நெருக்கு உகந்த இடம் இறே –
மதிள் குடந்தை –அரணை யுடைத்தான திருக் குடந்தை -திரு மழிசைப் பிரான் உகந்த இடம் –
என்பரே ஏவல்ல வெந்தைக்கு இடம் -எய்க்கைக்கு வல்லனான என் ஸ்வாமி—தசாரதாத் மஜனுக்கு
சக்கரவர்த்தி திருமகனுக்கு இடம் என்று சொல்லுவார்கள்
மிடுக்காலே பிரதிகூலரை அழியச் செய்தவன் -அனுகூலரை எழுதிக் கொண்ட இடங்கள் –
இப்படி சக்திமானாய் இருக்கிறவன் இவர்களை அனுகூலித்து மீட்கைக்காக வந்து இருக்கிற தேசங்கள் இவை

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: