ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ கோதா சதுஸ்லோகி–

ஸ்ரீ ஸ்வாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் ஶ்ரீஅனந்தாழ்வான்.
இவர், கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -மேல்கோட்டை அருகில்) எனும்
அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர்.

தனியன் –

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்|
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

ஶ்ரீமத்ராமாநுஜாசார்ய ஶ்ரீபாதாம் போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அனந்தார்யமஹம் பஜே||

சக்ரே கோதா சதுஸ்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-

வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட “கோதா சதுஸ்லோகி” என்னும் துதியை அருளிச் செய்த
குருவாகிய திருமலை அனந்தாண்பிள்ளையைப் போற்றித் தொழுகிறேன்

——————————————————————————————————-

நித்யா பூஷா நிகம ஶிரஸாம் நிஸ் ஸமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா: கசவிலு லிதை: காமுகோ மால்ய ரத்நை: |
ஸூக்த்யா யஸ்யா: ஶ்ருதி ஸூபகயா ஸூப்ரபாதா தரித்ரீ
ஸைஷா தேவீ ஸகல ஜனனீ ஸிஞ்சதாம் மாமபாங்கை: ||–ஸ்லோகம் -1-

யஸ்யா-எந்த பிராட்டியினுடைய

நித்யா பூஷா நிகம சிரஸாம் –
உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்
யதுக்த்ய ஸ்த்ரயீகண்டே யாந்தி மங்கள ஸூத்திரம் -போலே

நிஸ் சமோத்துங்க வார்த்தா –
ஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூக்திகள்-

காந்தோ யஸ்யா –
யாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –

கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை –
இவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –

ஸூக்த்யா யஸ்யா சுருதி ஸூபகயா –
வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்தி
திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகள் –

ஸூ ப்ரபாதா தரித்ரீ-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகள்

சைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாமபாங்கை–
இத்தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து
சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்-

எந்த நாச்சியாரது இணையற்ற மேலான அருளிச்செயலானது (திருப்பாவை) வேதத்தின் உச்சியான வேதாந்தத்திற்கு
நித்ய பூஷணமாய் ஆகிறதோ, எந்த நாச்சியாரது காதலன் (பரந்தாமன்) அவள் குழலினின்று களைந்த அழகிய பூமாலையில்
மிக்க ஆசையுடையவனாயுள்ளானோ, எந்த நாச்சியாரின் ச்ருதிகள் போன்ற போன்ற மங்களமான திருவாக்கிலே பூமி
நல்ல விடிவாகிறதோ அப்படிப்பட்ட லோக மாதாவான இந்த கோதா நாச்சியார் அடியேனைத் தமது கடாக்ஷமாகிற
அமுத மழையால் நனையச் செய்ய வேண்டும்

————————————————————————————————

மாதா சேத் துலஸீ பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹாந்
ப்ராத சேத் யதி ஶேகர ப்ரியதம ஸ்ரீரங்க தாமா யதி |
ஜ்ஞாதார ஸ்தனயாஸ் த்வதுக்தி ஸரஸ ஸ்தன்யேன ஸம்வர்த்திதா:
கோதா தேவி கதம் த்வம் அந்யஸூலபா ஸாதாரணா ஸ்ரீரஸி ||—ஸ்லோகம் -2-

மாதா சேத்துலசி-
த்வ மாதா துளசி –
மே ஸூ தா -வேயர் பயந்த விளக்கு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-

பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-
ஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்
பிராமண பாகவத உத்தமர் மஹான் –

ப்ராத சேத் யதி சேகர –
நம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே
பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே –

ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா –
அத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

ஜ்ஞாதார-
தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள் –

ஸ்தனயாஸ்-
உமது மக்கள்
வாய் சொல் அமுதத்தையே தாய்ப்பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்

தவ உக்தி ரச-
ரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸ்தன்யேன –
ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த தட முலைகள்
இவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –

சம்வர்த்திதா –
இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –

கோதா தேவி கதம் த்வமன்ய ஸூலபா சாதாரணா ஸ்ரீ ரசி-
ஒப்பில்லாத பெருமை படைத்த நீர்
உம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு
எப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –
கோதை தமிழ் ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீயை இழந்தவர்கள்
அன்றிக்கே
மற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-

ஶ்ரீகோதா தேவியே! உனது தாய் துளசிச் செடியாகும். உனது தந்தை ஆழ்வாராகிய ஶ்ரீவிஷ்ணுசித்தர் ஆவார்.
உனது அண்ணனோ யதிராஜராகிய ஶ்ரீராமாநுஜர் ஆவார். உனக்கு மிகவும் பிரியமானவர் ஶ்ரீரங்கநாதர் ஆவார்.
உனது பிள்ளைகள் உனது வாய் சொல் (ஶ்ரீகோதை அன்னையின் பாசுரங்கள்) அமுதத்தையே
முலைப் பாலாக பருகி வளர்ந்த ஞானவான்கள்.
அன்னையே! நீ எங்ஙனம் சாமான்யமான ஜனங்களுக்கு கிட்ட தகுந்த நிதியாக ஆவாய்?

—————————————————————————————————-

கல்பாதௌ ஹரிணாஸ்வயம் ஜனஹிதம் த்ருஷ்ட்வைவ ஸர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிரஸூ நார்ப்பணம் |
ஸர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிஶம் ஸ்ரீதந்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாம் உதாராம் ஸ்துமே: ||–ஸ்லோகம் – 3–

கல்பாதௌ –
நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்

ஹரிணாஸ்வயம் –
பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்
ஸ்ரீ வராஹ நாயனாராக
மானமிலா பன்றியாய்
தன் காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட
அவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று
பிரசித்த மானவற்றை சொல்லுகிறது –

ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –
உலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –

ஸ்வஸ்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிர ஸூ நார்ப்பணம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் –நயாமி பரமாம் கதிம் –
பரிவதில் ஈசனைப்பாடி –புரிவதுவும் புகை பூவே
அவன் பேரைப் பாடி
பூவை இட்டு
வணங்குதல்
புஷ்பம் பத்ரம் பலம் தோயம்
யேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது
ஆராதனைக்கு எளியவன் –

சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்
சர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –

ஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–
ஜாதாம் -வந்து திருவவதரித்தபடி
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –
பண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –

உதாராம் கோதாம்-
பாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி
மாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்
பங்கயக் கண்ணானைப் பாட
கோவிந்தா உன் தன்னைப் பாடி பறை கொண்டு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யம்
ஸ்துமே-ஸ்துதித்துப் பாடுவோம்– தொழுது வணங்குவோம்-

கல்பத்தின் ஆதியில் பகவானால் உலகில்லோர்கள் யாவருடைய உஜ்ஜீவனத்தை மனதிற் கொண்டு
தன்னையேத்திப் பாடுதல், ஆச்ரயித்தல், பூவிட்டு அர்ச்சித்தல் சொல்லப்பட்டது கேட்ட பூமிப் பிராட்டி இவற்றை
உலக மக்கள் யாவரும் எப்போதும் அறியும்படி செய்வதற்காக ஶ்ரீவில்லிபுத்தூரிலே பரம வைதிகரான
ஶ்ரீவிஷ்ணு சித்தரான பெரியாழ்வார் திருமகளாக வந்து பிறந்த பரம உதாரகுணமுடைய
ஶ்ரீகோதா தேவியை நமஸ்கரிக்கிறேன்

—————————————————————————————————-

ஆகூ தஸ்ய பரிஷ்க்ரியாம் அநுபமாம் ஆசேஸநம் சக்ஷூஷோ:
ஆனந்தஸ்ய பரம் பராம் அநுகுணாம் ஆராம ஶைலேஶிது: |
தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித ஸ்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத ஸமேதிதாத்ம விபதாம் கோதாம் உதாராம் ஸ்துமே: ||–ஸ்லோகம் – 4-

ஆகூ தஸ்ய –
அவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்

பரிஷ்க்ரியாம் அநுபமாம் ஆசேஸ நம் சஷூஷோ
அனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்
கண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –

ஆனந்தஸ்ய பரம்பராம நுகுணாம் ஆராம சை
அணி மா மலர்ச் சோலை நின்ற
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-

தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா மால்யாமோத
மத்ய -என்று திரு மார்பு –
திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை
விரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
இவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து
ஸூக ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –

சமேதாத்ம விபதாம் கோதாமுதாராம் ஸ்துமே
அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-

சோலைமலை மணாளனுடைய அபிப்ராயம் நிறைந்த செயல்களுக்கு இணையற்ற அழகூட்டு மவளாயும்,
காணும் கண்களுக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டுபண்ணுமவளாணும், அவனுக்கு எவ்விதத்திலும் தக்கவளாய்,
நிரந்தர ஆனந்த வெள்ளமூட்டும்படி, அவன் நன்மார்பின் மேலும், சுடர்முடி மேலும்,
தான் சூடிக்களைந்த கஸ்தூரி, பூமாலைகளின் பெருகும் நன்மணத்தினால், அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்யும்
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-
திருமாலிருஞ்சோலை, திருவேங்கட மலை என இரண்டையும் “ஆராமசைலம்” என்றும் கூறுவர்

———————————————————————————————-

இத்தால்
ஜனனியான தாய் மகிழ்வுற
அது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம் –

ஸ்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே
விஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம் –

மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே
விஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம் –

ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–

——————————————————————————————–————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: