ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -1-10–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

ஸ்ரீ கௌமோதிகியின் அம்சம்
இவர் மங்களா சாசனம் –கோயில் திருமலை திருக்கடல்மலை திருக்கோவலூர்-

திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே-குருக்கத்திப் பூவில் –
சித்தார்த்தி சம்வஸ்தரம்-ஐப்பசி மாசம் -சுக்ல நவமி -புதன் கிழமை -அவிட்ட நஷத்ரம்-
ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –

துலாத நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே பு ல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம் சஜம் –

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-

மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இறே

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லைப்
பூதத்தார் பொன்னம் கழல்–திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன்

பூதம் -சத்தை பெற்றவர் -எம்பெருமான் திருக் கல்யாண குணங்களை அனுபவித்தே சத்தை பெற்றவர்
கடல் வண்ணன் பூதம் -திருவாய் மொழி -5-2-1–
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இறே -அத்தை இட்டு -கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -கடல் மலை தல சயனது உறைவார் -என்று இறே நிரூபகம்
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது

————

அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் -இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் -அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

குருகைக் காவலப்பன் பக்கலிலே பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –
எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் -த்ருப்தனாய் போனான் –
அதாகிறது -ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –
சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே ஜகத்தும் ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –
அவர் -பொய்கை ஆழ்வார் -பதிம் விச்வச்ய-என்றார் -இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –

பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் -அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபித்துக் கொண்டு பேசினார் பொய்கையார் –
இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ்விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக ப்ரத்யக் வஸ்துவான
ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

அவர் ஞான விஷயத்தை தகளியாக்கினார்
இவர் ஞான விசேஷத்தை தகளி ஆக்குகிறார்-

————

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரச்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-

பரபக்தி யங்குர ரூபமான அன்பே தகளி என்றும் –அத்தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் -நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி
விழும்படியான பரஞான அவஸ்தையை விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –

அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கவா அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–
சூடுதற்கவா -என்று பர பக்தி–பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் –

————–

இப்படிப்பட்ட பக்தியை யுடையவராய் -அவன் திரு நாமத்தை அக்ரமமாக வாகிலும் சொல்லிக் கூப்பிடுமவர்களுக்கு
சர்வேஸ்வரன் கொடுக்கும் தரம் இருக்கும்படி -நித்ய சம்சாரியானவனை -நித்ய ஸூரிகளோடே ஒரு கோவை யாக்கும் -என்கிறார்-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

நன்கு உணர்ந்து-உறவை அறிந்து பேரைச் சொல்ல வேணும் -அதாகிறது –
ஈஸ்வர ஸ்வரூபம் இருக்கும்படியையும் ஸ்வ ஸ்வரூபம் இருக்கும்படியையும் -அழகிதாக அனுசந்திதித்து –
தானத்தால் –பக்தியினுடைய ஸ்தானத்திலே –பக்திக்கு அனந்தரமான ஸ்தானம் ஆகையாவது விவசராய்க் கூப்பிடுகை –
அவர்களைக் கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டத்திலே அங்கு உள்ளார்க்கு பூஷணமாக-நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாம்படி பண்ணும்
இங்கே அடைவு கெட திரு நாமம் சொன்னவர்களை அங்கே-அடைவு கெட்டுக் கூப்பிடும் கோஷ்டியிலே வைக்கும்

———–

ஆபிமுக்யம் பண்ணி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்-இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என்-

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

கடைக்குட்டி அநிருத்த ஆழ்வான் ஆகிற திருப் பாற் கடலிலே ஆஸ்ரயித்தவன் பரமபதம் பெறும் என்றது இறே
ஆகையால் அவற்றிலே எங்கேனும் ஓர் இடத்திலே ஆஸ்ரயித்தால் அநந்தரம் பேறு சித்தம் -என்னும் இடம் தோற்றுகிறது-

———-

அன்பே தகளி என்று தொடங்கி -தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளியும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை-ஒரு புஷ்பமாக ரூபித்து -இதழும் -அல்லியும்-தளமாய் -இருபத்தொரு –
தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார்-அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்-

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-

பைங்கமலம் -பரந்த பூ ஹ்ருதய கமலத்தைக் கொண்டு பணிந்தேன் –மற்றுள்ள கமலங்களுக்கு ஒப்புண்டு போலே காணும்
இந்த ரூபத்தில் முத்தை நினைக்கிறது ஸ்நேஹத்தை–மணியும் வைரமுமாக நினைக்கிறது அபி நிவேசத்தை
நாடாத மலர் நாடி -திருவாய் -1-4-9- என்னக் கடவது இறே
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய் -4-3-2-
அவளுடைய சந்நிதியிலே அபுஷ்கலமான சமாஸ்ரயணமும் புஷ்கலமாம் இறே-
நெஞ்சை நகரமாக ரூபிக்கையாலே-நகரம் ஆகில் -முத்து மாணிக்கம் முதலான விலக்ஷண வஸ்துவை உடைத்தாய் இருக்கும் என்று
பக்த்யாவஸ்தா பேதமான ஸ்நேஹாதிகளை முத்து மாணிக்யாதிகளாக ரூபிக்கிறது –
நெஞ்சை நகரமாக நிரூபிக்கிறது -கலங்கா பெரு நகரத்தில் பண்ணும் விருப்பத்தைத் தன் நெஞ்சிலே பண்ணிக் கொண்டு
அவன் ரஸோத்தரமாக வர்த்திக்கும் என்று தோற்றுகைக்காக –

————–

பக்தியைத் தீபமாகப் பேசினார் -நகரம் கோயிலாகப் பேசினார் -இதில் பக்தி தன்னைச் சொல்லுகிறார் –
அவனுடைய உத்கர்ஷம் சிறிது அறியும் அத்தனை அல்லது-சௌலப்யம் ஒருவரும் அறிவார் இல்லை

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து-5-

நீரோத மேனி நெடுமாலே –அழகுக்கு எல்லை காணிலும் வ்யா மோஹத்துக்கு எல்லையைக் காணப் போகாது-

———–

இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள்
அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் –
அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் –
அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்-

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

————

நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் –
பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

உகப்பைக் கொண்டே ஓர் –தேவைக்காக ஒண்ணாது –ஓர் –ஆஸ்ரயிக்கப் பார் -என்றபடி-

————

ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரதிபந்தகம் உண்டானாலோ என்ன
பூதனையை முடித்தாப் போலே நீ ஆஸ்ரயிக்க -அவன் தானே விரோதியைப் போக்கும் என்கிறார் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

அவளும் முலை கொடா விடில் தரியாதாளாய் வந்தாள்–இவனும் முலை யுண்ணா விடில் தரியாதானாய் யுண்டான்-
பொய் உகப்பு பாதகமாம் படி சொல்லுகிறது –
உனக்கு மித்ர பாவமும் அமைந்து இருக்கச் செய்தே அவளை முடித்து உன்னை தந்தது
ஆஸ்ரிதர் பக்கல் உண்டான ஓரம் இறே

————-

பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பூமியை அளந்தது இந் நீர்மைக்கு ஒக்குமோ -அவளுடைய நீர்மைக்கு பூமி சத்ருசமோ –
உன்னுடைய அளந்த வியாபாரம் தான் ஒக்குமோ-

————-

யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண வி றே எடுப்பது –
அந்த ச்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து
இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை இனி ஒரு காலமும் வாராத படி
தேவர் நோக்கி யருள வேணும்

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

ரஷை அவனுக்கு ஸ்வரூபம் ஆனால் போலே ரஷ்யத்துக்கு அடிமை செய்வது ஸ்வ பாவம் –
காவலன் ஆவதின் கார்யம் காக்கை -சேஷத்வத்தின் கார்யம் சேஷ வ்ருத்தி-
உன்னை சமாஸ்ரயணீயனாக யுடையேன் ஆகையாலே ஆஸ்ரயிக்கும் கரணங்களையும் த்ரவ்யங்களையும் புஷ்கலமாக உடையேன் ஆனேன் –
ப்ராப்த விஷயத்தை நினைக்கையாலே பரிபூர்ண சமாஸ்ரயணம் பண்ணினேன் ஆனேன் –
அனுசந்திக்கப் படுகிற விஷயம் நீ யாகையாலே எனக்கு ஒரு குறை இல்லை
அடியேன் பட்ட கடை – உனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான் அநாதி காலம்
அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே தலை மடுத்துப் பட்ட தண்மையை இனி வாராத படி தேவரீர் காத்து அருள வேணும் –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: