ஸ்ரீ முதல் திருவந்தாதி -51-60–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

நெஞ்சே -அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நமக்கு இனிதாக நாம்
இவ்வாயாலே திரு நாமத்தைச் சொல்லவே
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் விரோதியைப் போக்கித் தன்னை அவனுக்குக் கொடுத்தாப் போலே
நம் விரோதியையையும் போக்கி நமக்குத் தன்னைக் கொடு வந்து தரும் கிடாய் என்கிறார் –

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான்    திருநாமம் எண்——-51–

அவனுடைய திரு நாமத்தை அனுசந்தி
நமக்கு வேண்டுவது அச் சிறுக்கனோபாதி திரு நாமத்தை எண்ணுகை –
பின்னை நம் கையிலும் பிறர் கையிலும் நம்மை விட்டுக் கொடான்
எண்ண வொட்டாதவன் பாடு   அறிதியிறே-

————-

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

திருமால் -வேண்டிற்று எல்லாம் பெறுகைக்கு அடி-

அபிமதங்களைக் கடிப்பிக்கும் கடகையான பெரிய பிராட்டியாரோடே கூடி இருக்கிற சர்வேஸ்வரன்

—————————–

கார்ய காலத்திலே வந்து – பிரயோஜனங்களைக் கொண்டு போகை யன்றிக்கே –
கைங்கர்யமே ஸ்வ பாவமாக உடையராய் இருக்குமவர்கள் அவன் பக்கல் பரிமாறும்படி சொல்லுகிறது –
எல்லா நேர்த்தியும் நேர்ந்து -தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களைச் சொல்லிற்று கீழ்
இதில் தங்களை எல்லாம் அழிய மாறியும் அங்குத்தைக்கு உறுப்பாம் அவர்களைச் சொல்லுகிறது –

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53-

கைங்கர்யம் ஸ்வ புத்த்யதீனம் அன்று -என்கிறது-இருப்பு அபேஷிதமான போதைக்கு சிம்ஹாசனமாய் இருக்கும் –

நிற்கை திரு உள்ளமான போது பாதுகையாய் இருக்கும்-திருக் கண் வளர்ந்து அருளும் போதைக்கு
பள்ளி மெத்தையாய் இருக்கும்-ஒரு மிதுனத்துக்கு இளைய பெருமாளைப் போலே அந்தரங்க சேவை –

பிராட்டியும் தானும் கூடத் துகைக்கையால் ஒரு சேதனன் என்று அவர்கள் கூச வேண்டாத படி
தன்னைத் தாழ விட்டுக் கொண்டு இருக்கும் படி –

———————————–

அப்படுக்கையும் தள்ளிப் பொகட்டுத் தன் விபூதி அழியாத படிக்கு ஈடாக
இங்கே வந்து சந்நிதி பண்ணி இவற்றை ரஷிக்கும் ஸ்வ பாவன் என்கிறார் –
எம்பெருமான் சேஷித்வத்தைக் குறைத்து   பரிமாறும்படி   அவன் ஸ்வரூபம் –

அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம்  புள்வாய்
குரவை குட முலை மற்  குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–

காளியன் ஆகிற  அரவத்தை விட்டு
குவலயா பீடத்தை இறுத்து
பசுக்களை மேய்த்து
குருந்தத்தை ஒசித்து
புள்ளைக் கீண்டு
குரவையைக் கோத்து
குடமாடி
பேய் முலை உண்டு
மல்லரை முடித்து
கோவர்த்தனத்தை குடையாக எடுத்து
இது எல்லாம் செய்தான் -அவன் –அப்படுக்கையும் அங்கு உள்ளார் பரிமாற்றத்தையும் விட்டு வந்து கிடீர்
ஆஸ்ரிதர்க்காக இப்பாடு படுகிறது -இங்கே வந்து அவதரித்துக் களை பிடுங்கித் தன் விபூதியை நோக்கும் படியை அனுபவிக்கிறார் –

இது நிரல் நிரை என்று தமிழர் சொல்லும் லக்ஷணம் –

—————–

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –
செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் -பேர் ஆராயில் குவலயா பீடம் தொடக்கமானவை பட்டது படும்

—————————–

பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-

கடற்கரையிலே குடில்;  கட்டி இருக்கும் காட்டில் கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ
அபரிச்சேத்யம் என்று அறியில் அறியலாம்

பேரே வரப் பிதற்றல் -கன்று நின்ற இடத்தே தாய் வருமா போலே வாசிதமாக-திரு நாமம் வாயிலே வரும் படி

அக்ரமமாகச் சொல்லிக் கூப்பிடும் அத்தனை

அவன் தானே வரும்படி மறை காட்டும் இத்தனை போக்கி ஒருவரால் அறிந்ததே விடப் போமோ
என்கிறார் –

————————

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-

நயிக்கப் படுகின்ற திரு மந்த்ரத்துக்கு நிர்வசன ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு
அவனுக்கு வாசகமான திரு மந்த்ரத்தை அப்யசித்தேன்-அநந்தரம் அனுகூல வ்ருத்தியையும் பண்ணினேன்  –

திரு நாமம் ஆஸ்ரயித்து-அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் –

அயல் நின்ற வல்வினையென்று திரு நாமம் சொல்லாத போது தமக்கு உள்ள வியசனம்-

————————–

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-

நாம் திரு மந்த்ரம் தன்னில் வாசனை பண்ணுகிறது பழுதின்றி மாலடியிலே   கை தொழுகைக்காக –
விச்சேத சங்கை வாராத படி சர்வேஸ்வரன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணுகைக்காக

ஆன பின்பு நமக்கு ஆறி இருக்க அவசரம் இல்லை கடுகச் சென்று கிட்டு –

—————————–

போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய்
விரோதியைப் போக்குகைக்கு வேணுமாகில் தசரதாத் மஜனை சரணம் புகு என்கிறார் –

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-

அம்பின் கூர்மையை விஸ்வசித்து இருக்கும் அத்தனை
இத்தால் தன்னைப் பற்றி இருப்பார்க்கு பிராட்டியோடு ஒக்கப் பரிந்து கார்யம் செய்யும் என்னும் இடத்தையும்
அப்பிராட்டி அம்பு எய்யும் அன்று இவனுக்கு க்ருத்யாம்சம்   உள்ளது என்னும் இடத்தையும்
நம் அபேஷிதங்கள் செய்விக்கைக்கு அவள் புருஷகாரம் என்கையும்
அவன் வஸ்துவை எனக்கு என்பார் ராவணன் பட்டது படுவார் என்னும் இடத்தையும்-சொல்லுகிறது-

கீழே இந்திரிய ஜெயம்  பண்ணு என்றது-தொழு என்றது-திரு நாமம் சொல் என்றது நினை என்றது
என்றதாகப் பல படிகளை சொல்லிற்று –
இதுக்கு கீழ் எல்லாம் ஷட்க த்ரயத்தில் வார்த்தை போலே ஸ்வரூபம் விசதமாகைக்குச் சொன்ன நிலை
இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே-உணர்ந்த வன்று அவனல்லது இல்லை –

———————–

இவர்கள் கீழ்ப் பட்டதும்
இப்போது படுகிறதும்
மேல் படக் கடவதும்
எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஜ்ஞான சக்திகளை உடையவன் ஆகையாலே
அவனே உபாயமாம் இத்தனை இறே –

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–

இத்தால் சிறியாரோடு பெரியாரோடு வாசியற தம் தம்முடைய ரக்ஷணம் தங்கள் அறிய மாட்டார்கள் –
இவனே சர்வர்க்கும் ரக்ஷண பிரகாரம் அறியுமாவான் என்றதாய்த்து –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: