ஸ்ரீ முதல் திருவந்தாதி -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

அவன் குற்றம் பொறுக்கைக்காகவே வந்து நின்றான் – நமக்கு ஒரு க்ருத்யமும் இல்லை –
இனி  நீ ஆபி முக்யத்தைப் பண்ணி அவனை அனுபவித்து இருக்கப் பார்
என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று  முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு  –41-

அவனுடைய திறமான புறனுரை யுண்டு-அவன் மாஸூச என்று சொன்ன சொல்லு
அத்தை அநு சந்தித்து ஸ்தி தோஸ்மி -என்கிறபடியே-ஸூகமே இருக்கப் பாராய் -என்கிறார்
திறனுரை -மித்ர பாவேன-மாதவன் என்றதே கொண்டு –தீது அவம் கெடுக்கும் அமுதம் -திருவாய்மொழி -2-7-3-
குற்றங்களை பத்தும் பத்துமாகச் செய்தாலும்
அதி மாத்ர வத்சலனானவன் -செய்தாரேல் நன்றே செய்தார் -என்னும் படி குணமாக்க கொள்ளும் –

——-

அவள் -பாபா நாம் வா ஸூ பா நாம் வா -யுத்த -116-44-என்றால்
இவன் -தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத்  -யுத்த -18-3-என்னத் தட்டு உண்டோ –

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் —-42-

 

மூவர் பக்கலிலும்  ஏறிட்டு அனந்தாழ்வான் நிர்வஹிக்கும் படி

இதுக்கு பட்டர் அருளிச் செய்யும் படி

ஒரு நிலா சந்தனம் பூ தென்றல் இவை போலே உபகரண கோடியாய்ப் புக்கு அன்வயிப்பார்கள் அவர்கள் –
இவர்களோடு கலக்கும் போது அவளுக்குத் தன திரு முலைத் தடங்களிலே நெருக்கி அணைத்தாப் போலே இருக்கும்
ஓர் அவயவியையே அனுபவித்தானாய் இருக்கை

இங்கு போக்யதா அதிசயத்தாலே -கிண்ணகத்தில் இழிவாரைப் போலே -குற்றத்தை பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும்
பொறை விளையும் தரையான ஸ்ரீ பூமி பிராட்டியாரும் -குற்றம் கிளராத படி திரு உள்ளத்தை திரை கொள்ளும்
கோப குல அவதீரணையான நப்பின்னை பிராட்டியாரும்-திரண்டு அவகாஹிக்க வேண்டும் என்றதாயிற்று-

இத்தால் மூவர்க்கும் உண்டான ஐக ரஸ்யம் சொன்னபடி –

——

மனமாசு  தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் ——-43–

இவன் தனக்கு வகுத்த இது செய்யா நின்றால்-அவன் தனக்கு வகுத்தது செய்யானோ
இவனுக்கு அடிமை செய்கை ஸ்வரூபம் ஆனாப் போலே0அவனுக்கு அடிமை கொள்ளுகை ஸ்வரூபமாய் இருக்கும் –

குடிக்கிற வேப்பங்குடி நீர் இருக்கிற படி-அந்தரிஷகத ஸ்ரீ மான் -என்னுமா போலே பக்திக்கு உறுப்பான சம தமாதிகளும் உண்டாம் –

———-

இவர்கள் தங்கள் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சமையவே
அவனும் இவர்களுக்கு ஈடாகத் தன்னைச் சமைத்துக் கொடுக்கும்-என்கிறார் –

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் ——44–

தனக்கு சத்தா பிரயுக்தமான நாராயணாதி நாமங்களை ஒழிய
இவன் உகந்திட்ட இதுவே தனக்குத் திரு நாமமாக நினைத்து இருக்கும்

ஸ்ரஷ்டாவாய் நியாமகனாய் இருக்கிறவன்
ஸ்ருஜ்யனுமாய் நியாம்யனுமாய்
இவர்கள் சத்தாதிகளும் நாமரூபங்களும் தன் அதீனமானாப் போலே தனக்கு சர்வமும் ஆஸ்ரித ஆதீனம்
சென்றால் குடையாம் -என்று இவன் அவனுக்கு இருக்குமா போலே அவன் இவனுக்கு இருக்கும்
அவனது பிரணயித்வம்–ஆஸ்ரித பரதந்த்ரம் இவனது ஸ்வரூபம் –

—————–

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு ——–45-

புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களைக்

கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலேஎனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று
தனக்கும் கூட ஹிதம் அறியாதே சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ
சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

——-

கீழே ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லிற்று –
இதில் ருத்ரனுடைய அறிவு கேடு சொல்லுகிறது  –

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் ——–46-

இவனுடைய கர்ம வச்யத்வமும் தான் பண்ணின கார்யம் தனக்குப் பரிஹரிக்கப் போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈச்வரத்வ சங்கை இல்லை -என்கிறது -அவன் தலை அறுப்புண்டு ஆற்றாமைப் பட்டு நின்றான்
இவன் தலை அறுத்துப் பாதகியாய் திரிந்தான்
அவர்கள் இவருடைய வ்யசனத்தையும் போக்கினான் ஆய்த்து சர்வேஸ்வரன் –

———————

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —–47–

கூரிய மெய்ஞ்ஞானம் -ஸூ பாஸ்ரயமாயும் உபாய உபேயமாயும் அனுசந்திக்கை -இத்தால் –
விரோதியான முதலையைப் போக்கி தன்னைக் காட்டிக் கொடுத்தால் போலே

இவர்கள் உடைய பிரதிபந்தகங்களைப் போக்கித் தன்னைக் காட்டிக் கொடுக்கும் -என்கிறது  –

———————-

அவன் தானே தாம் இருந்த விடத்தே தன்னைக் கொடு வந்து தரும் ஸ்வ பாவனாய் இருந்தான்
ஆனபின்பு நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார் கிடாய்
என்கிறார் –

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றியோர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்ந்து ——48–

சேவடி தானே இருந்த இடத்தில் வந்தால் -இறாவாமையே வேண்டுவது –ப்ரீதி பூர்வகமாய்க் கிட்டும்படி வாசனை பண்ணு –
விரோதிகளைப் போக்குவானும் திருவடிகளைத் தருவானும் ப்ரீதன் ஆவானும் அவன் ஆனால்
அனுபவித்து மகிழ மாட்டாயோ –

—————–

பிரகிருதி பிராக்ருதங்களில் விரக்தி பிறந்து அவனை ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது
ஒரு படி கண்டதாய்த் தலைக் கட்ட முடியாது என்கிறார் –

மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது ——49–

கரண களேபரத்தைக் கொடுத்து-இவன் இசைவு கொண்டு-சம்சார சம்பந்தம் அறுத்து
அடிமை கொள்ளுகைக்கு இடம் பார்த்து நிற்கிறவன் –
பிரக்ருதியே யுகப்பார்க்கு முகம் காட்டும் பர புருஷன் அல்லன்

———————–

புறம்புள்ள அந்ய பரதை போய் அவன் பக்கலிலே சிநேக யுக்தராய்க் கொண்டு
அவனைக் காண்கை சால எளிது என்கிறார் –

அரிய புலன் ஐந்தடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது ——50-

ஒரு செய்யில் பாயும் நீர் இரண்டு செய்யில் பாய்ந்தால் இரண்டுக்கும் போராது ஒழியும் இத்தனை இறே-

ஏதேனுமாக ஒன்றைக் கொடுக்கக் கடவோம் என்று இருக்குமவன்
பக்கலிலே தான் அர்த்தியாய்க் கொண்டு சென்று நிற்குமவன் ஆய்த்து –
ஆகையாலே அவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே ஒரு அருமை தட்டாது என்கிறார் –

ஸ்நேஹ உத்தரமான பிரகாரத்தாலே -அபிமத விஷயத்தை அணைக்குமா போலே போக ரூபமாக ஆஸ்ரயிக்கில்-

அப்ரதி ஷேதம் யுடையார்க்கு அர்த்தியாய் வரும் என்றவாறு

————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: