ஸ்ரீ முதல் திருவந்தாதி -31-40–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

அவனுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை அனுசந்தித்தால் வேறே யொன்றை நினைக்கப் போமோ -என்கிறார் –

புரியொருகை பற்றியோர் பொன்னாழி ஏந்தி
அரியுருவும் ஆளுறுவுமாகி எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை –31-

பொன்னாழி ஏந்தி என்கையாலே ஹிரண்யன் திரு ஆழியில் படாமையால் அழகுக்குக் கட்டின பத்திரம் ஆய் விட்டது –
அரியுருவும் ஆளுறுவுமாகி -அவ் வாழ்வார்களைக் கொண்டு கார்யம் கொள்ள ஒண்ணாத   படி யானவாறே
அதுக்கே ஈடான வடிவைக் கொண்டான்
தமப்பன் பகையாக சிறுக்கனுக்கு உதவின குணம் புறம்பு ஒன்றை எண்ண ஒட்டுமோ

————

அவன் சேஷீ நாம் சேஷம் -என்கிற இந்த ஜ்ஞானம் உடையவர்களுக்கு
அந்த சாஸ்த்ரங்களில் சொல்லுகிற தேசத்தை சென்று ப்ராபிக்கலாம் கிடீர்-

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் -32–

ஆயிர வாய் நாகத் தணையான் நகர் -முக்த ப்ராப்ய வஸ்து இருக்கிறபடி
பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியேயாய் இருக்கிறது –
அங்கு உள்ளார் எல்லார் அடிமைக்கும் உப லஷணம்-
இத்தால் ஒருவனே எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும்
என்கிற இடமும் -ஒரு தேச விசேஷம் உண்டு என்னும் இடமும் -அத்தேசமே ப்ராப்யம் என்னும் இடமும் சொல்லுகிறது

—————-

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என் -33–

ஜன்ம தேசத்தையே கொடுத்து விட்டான்-அந்தரங்கர்க்கு கிட்ட மாளிகை சமைக்குமா போலே –
பகர மறை பயந்த –இருப்பிடம் கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை இறே ஜ்ஞான பிரதானம் பண்ணாத அன்று
செல்வப் பிள்ளைகளை மாளிகைக்கே வைத்து ஒதுவிப்பாரைப் போலே-
நெஞ்சு விஷயாதிகளைப் பற்றிக் கிடக்க-வாயாலே சொல்லுவது கையாலே எண்ணுவதாகிற
இவ்விருத்திகளால் என்ன கார்யம் உண்டு
எம்பெருமானை அகலுகையே பலித்ததாய் விடுமத்தனை-சந்த்யையாலே எல்லா அனுஷ்டானங்களையும் நினைக்கிறது  –

————

புந்தியால் சிந்தியாது பெற்றாள் அவள் போலே காணும் –
என்-இதுவும் ஒரு எத்திறம் போலே இருக்கிறது

என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே -34–

நீ செய்யும் செயலுக்கு அடைவு உண்டாகில் இறே உன்னை ஆஸ்ரயித்தார் உடைய  செயலுக்கு அடைவு உள்ளது –
ஜகத்தில் பிரளயம் தீர்த்தவனுக்குப் பிரளயம் விளைக்க வந்து முடிந்தாள்-
ஔபாதிகம் இன்றிக்கே-ஸ்வா பாவிகமாக ஸ்நேஹித்தவளை நினைக்கிறார்
விஷத்துக்கு அம்ருதமாக முலை தந்தவாறு இது என்ன ஆச்சர்யம் –
சர்வேஸ்வரனாய் அகடிதங்களைக் கடிப்பிக்க வல்லவனுக்கு அஞ்சுகிற   யசோதைப் பிராட்டி ஸ்நேஹமும்
ஒரு ஸ்நேஹமே -என்கிறார் –

————–

ஆறிய வன்பில் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி யடைதற் கன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண் -35–

ராவணன் பண்ணின மிகைச் செயலானது கால க்ரமத்தாலே  போந்து தெளிந்து சிசூபாலனாய்க் கொண்டு
சர்வாதிகனான உன் திருவடிகளைப் பெறுகைக்கு உபாயமாய்த்து இல்லையோ –
அவனுடைய பிராதி கூல்யத்திலும் வலிதோ என் பக்கல் குற்றம்
ப்ராதி கூல்யம் ஆநு கூல்யமாகப் பலித்தால்-ஆநு கூல்ய ஆபாசம் ஆநு கூல்யமாகத் தட்டுண்டோ –
இவளுடைய ஸ்நேஹத்தைக் கண்டவாறே அல்லாத தம் போல்வார் ஸ்நேஹம் பிராதி கூல்ய சமமாய் தோற்றி
அத்தைப் பொறுத்து அருள வேணும் என்று அவனை க்ஷமை கொள்கிறார் –
நெடியோய் -ஆனுகூல்ய லேசமுடையார் திறத்து நீ இருக்கும் இருப்பு எல்லை காணப் போமோ —

—————-

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை –36-

நீ மண் இரந்து கொண்ட வகை–தன்னது என்று தர உகக்குமாகில் –நாம் இன்று பெற்றோமானால் ஆகாதோ என்று –
அநபாயினியான பிராட்டியை ஸ்ரீ ஜனக ராஜன் தரக் கொள்ளுமா போலே –
இரப்புத் தோற்ற நின்ற
ஸுலப்யத்தையும் வடிவு அழகையும் காட்டி நான் எனக்கு என்று இருக்கும் மிறுகுதலை மீட்டு
உனக்கே ஆளாம் படி சேர்த்துக் கொள்ளுகைக்காக வன்றோ என்றபடி –

————–

என்றும் தன்னை இரப்பாளனாக்கி நித்ய சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திரு மலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் -37–

பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று அத்யவசித்த பின்பு
தொட்டதும் தீண்டினதும் கைங்கர்யமாம் இத்தனை இறே-
வேதியர்கள் -வேத தாத்பர்யமான ப்ரணவார்த்தம் கை புகுந்தவர்கள் –
சென்று இறைஞ்சும்–கல்விக்கு பிரயோஜனம் ஆகிறது அந்த தேசத்தே போய்க் கிட்டுகை போலே காணும் –
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தூதின ஸ்ரீ கிருஷ்ணன் வர்த்திக்கிற ஊர்  ஆஸ்ரித பஷபாதி –
ஆஸ்ரித சம்ரஷணம் பண்ணுகைக்கு ஏகாந்த மான தேசம் என்றாய்த்து ஸ்ரீ திரு மலையை உகக்கிறது –
பெரிய திரு நாளுக்குப் போமா போலே சர்வோ திக்கமாக எடுத்து விட்டுச் சென்று ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ திருமலை

————–

ஒரு தேசம் ப்ராப்யம் என்று பிரதிபத்தி பிறந்த பின்னை அங்கு உள்ளது எல்லாம் உத்தேச்யமாய் இருக்கக் கடவது இறே –
பரம பதத்தில் உள்ளார் அடைய உத்தேச்யர் ஆமா போலே

ஊரும் வரியரவ மொண்  குறவர் மால் யானை
பேர வெறிந்த   பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் –38-

திருமலையோடு
அங்கு ஊருகிற சர்ப்பத்தோடு
சஞ்சரிக்கிற யானையோடு
அத்தை எறிகிற குறவரோடு
அதுக்கு சாதனமான மணியோடு
இதுக்கு அஞ்சி அது போய்ப் புகுகிற் புற்றோடு
வாசி அற இவர்க்கு எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து-எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –
மேலசுரர்-நித்யஸூரிகள்-அஹ மஹ மிகயா எங்களது எங்களது என்று கொண்டு விரும்பி வர்த்திக்கும் தேசம் ஆய்த்து –

————-

அல்லாத இடங்கள் போல் அன்றிக்கே
இவ்விடம் அவன் விரும்பி நித்ய வாஸம் பண்ணுகிற  தேசம்  -என்கிறார் –

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது-39–

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து அருளின் போதை அழகும்
கோவர்த்த உத்தரணம் பண்ணின போதை அழகும்
கம்சனை அழித்த வெற்றியால் வந்த   அழகும்
திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின அழகும்
எல்லாம் திரு வேங்கடமுடையான் பக்கலிலே காணலாம் –
ஸமஸ்த அவதாரங்களில் உள்ள தன் சேஷ்டிதங்கள் அடங்கலும் பிரகாசிக்கும் படி உகப்புடனே
என்றும் ஓக்க மிகவும் நின்று அருளிற்று திருமலையிலே கிடீர் –

———–

இங்குற்றை நித்ய வாசம் தனக்கு அவன் பிரயோஜனமாக நினைத்து இருப்பது
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி யுகக்குமத்தை கிடீர் – என்கிறார் –

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த  வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று -40—

ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் போல் கூர்மையில் நம்பிக்கை வைத்து அச்சம் இல்லாமல் இருப்பவர்கள் ஆய்த்து
சிறுக்கன் உடைய-விரோதியைப் போக்கப் பெற்றோம் என்று உகந்தவனதான ஸ்ரீ திரு மலை
இன்னம் ஆஸ்ரிதர்க்கு விரோதம் வருமாகில் தீர்க்க வேணும் என்று அவன் வந்து நிற்கிற ஸ்ரீ திருமலை –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: