ஸ்ரீ முதல் திருவந்தாதி -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

பெரிய மேன்மையை யுடையனாய் இருந்து வைத்து அவை ஒன்றும் பாராதே ஆஸ்ரிதர்க்காகத்
தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவன் கிடீர் என்கிறார்  –

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-

திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும்
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்–சர்வேஸ்வரன் -ஆகிறான்-
இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே
உன்னைக் கொடு

——-

ஆஸ்ரித பக்ஷ பாதம் போலே ஆஸ்ரித பவ்யத்தையும் –

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு —22-

இது ஜகத் பிரசித்தம் அன்றோ-நான் சொல்லுகிறேன் என்று இருக்க வேண்டா
சிஸூ பாலனும் கூட அறியானோ –
இவன் எட்டுப் பட்ட  போதாக -கையிலே அகப்படுவது ஒரு அறு தாம்பாலே –
நல்லதொரு தாம்பு தேடும் காட்டில் இவன் தப்புமே -அதுக்காக அதனைக் கொண்டு பந்தித்தாள் ஆயிற்று –
கயிற்றை நீட்ட ஒண்ணாது-உரலைச் சிறுக்க ஒண்ணாது-இவன் உடம்பிலே இடம் காணும் இத்தனை இறே –

———–

ஒரு தழும்பு ஆகில் அன்றோ மறைக்கலாவது -உன் உடம்பு அடங்கலும்
ஆஸ்ரித கார்யம் செய்கையால் வந்த தழும்பு அன்றோ -என்கிறார் –

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

விரல் தழும்பு -கால் தழும்பு -கை தழும்பு -இவற்றை எங்கனே உன்னால் மறைக்கும் படி -என்கை-

————

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா
தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை —24–

பெண் பிள்ளைகள் அளவிலே கை வைக்கும் தனையும் இவனுக்கு இதுவே யாத்ரை
அது ஒரு நாள் ஆகிறது-இது ஒரு நாள் ஆகிறது -என்று அருளிச் செய்தார்-பட்டர்-
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் -திருவாய்மொழி -1-8-5-
களவு காணும் முகூர்த்தத்திலே பிறக்கையாலே –
அவனுக்கும் கட்டின அவளே அவிழ்க்க வேணும்-ஸ்வ யத்னத்தாலே அவிழ்க்க ஒண்ணாதே
கட்டுண்டு இருக்கிற போது ஓதம் கிளர்ந்த கடல் போலே வாய்த்து-வடிவழகு இருக்கிறபடி
ஒரு கடலைத் தேக்கி வைத்தாப் போலே இருக்கை –
உரை -ந மே மோகம் வசோ பவேத் -என்னும் நீயே சொல்லிக் காண்-வடிவோடு கூடின வார்த்தையும் கேட்க வேணும் –

————–

அவன் ஓவாதே அழுகிற படியைக் கண்டு-இவரும் அவ்விருப்பிலே ஈடுபடுகிறார்
ஓவாதே ஏத்தவும் தொடங்கினார்-அவனுக்கு நினைவும் பேச்சும்
வெண்ணெயிலே ஆனாப் போலே ஆழ்வார்க்கும் நினைவும் பேச்சும் இவன் பக்கலிலே யான படி –

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும்  —-25-

ஆர்த்தரைக் கண்டவாறே-படுக்கை அடிக் கொதித்த படி –
யேத்தி எழும்  -இவ் வபதாநத்தை ஸ்தோத்ரம் பண்ணி உஜ்ஜீவியா நிற்கும் –

—————–

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்-ஆத்ம ப்ராப்தி காமர் -பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –
திருமலையானது -இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்
இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன-அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ –
அஸ்ப்ருஷ்ட பாப கந்தரான நித்ய ஸூரிகளுடைய திரு உள்ளம் ஆகிற விளக்கை அவன் சீலாதி குண அனுபவத்தின்
ஸ்ரத்தையை வர்த்திப்பித்துக் கொண்டு ப்ரேரியாய் நிற்கும் திருமலை

————-

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை –27-

கீழும் மேலும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமாய் இருக்க நடுவே ராமாவதாரத்தை அனுபவிக்கிறார்
இவை எல்லாம் கார்க்கோடு பற்றியான் கை கிடீர் செய்தது என்கிறார்
கார்க்கோடு பற்றியான் கை–காரின் தன்மையை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைப் பற்றினவன் உடைய கை கிடீர்
கோஷத்துக்கும் ஸ்ரமஹரதைக்கும் மேகத்தோடு ஒக்கச் சொல்லுகிறது
அன்றிக்கே
திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இருந்த போது மேகத்தைப் பற்றி இருந்த சங்கம் போலே இருந்தது -என்றுமாம்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் பிடிக்கவும் பொறாத மிருதுவான கையைக் கொண்டு கிடீர் இத் தொழில்கள் எல்லாம் செய்தது-

——————-

திருமலையிலே எழுந்து அருளி நிற்கிற திருவேங்கடமுடையான் திரு மேனியில்
அழகும் ஐஸ்வர்யமும் சீலாதி குணங்களும் நிழல் இட்டுத் தோற்றா நின்றது கிடீர் -என்கிறார் –

கைய  வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை –28-

ப்ரஹ்மா உன்னுடைய திரு மேனியைப் பற்றி லப்த சத்தாகனாய் இரா நின்றான்
ஈஸ்வர அபிமானியான ருத்ரன் உன் திருமேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபன் ஆகா நின்றான்

————-

சர்வேஸ்வரனாய் இருந்தான் என்று பிற்காலியாதே
நெஞ்சே அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய்
இத்தை அழகிதாக புத்தி பண்ணு என்கிறார்  –

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி -29-

தெளி -அவன் தம்மை மாஸூச  -என்னத் தாம் தம் திரு உள்ளத்தை மாஸூச-என்கிறார்
வாசலைத் திறந்து வைப்பாரைப் போலே பெறுகைக்கு அங்குப் போக வேண்டா-இசைவே வேண்டுவது
அவனே வராவிடில் சமாதிக தரித்ரானவனைப் பெற உபாயம் உண்டா-
வாசனையாலே அம்மே என்பாரைப் போலே அழைத்தது  இத்தனை  –

———–

சம்பந்த ஜ்ஞானம் உண்டாக நெஞ்சு தானே அவனை யாராய்ந்து பற்றும்
கண் அழிவற்ற பக்தியை யுடையாருக்கு அவன் தானே வந்து கிட்டும் அளவும்
க்ரம ப்ராப்தி பார்த்து இருக்க ஒண்ணாது கிடீர் என்கிறார் –

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து-30-

ஒரு திரள் பசு நின்றால் அதிலே ஒரு கன்றை விட்டால் கன்றானது திரளில் மற்றைப் பசுக்களைப் பாராதே
தன் தாய் முலையைச் சென்று பற்றுமா போலே ஆபாச ஆஸ்ரயணீயரை விட்டு அவனையே பற்றும்-
செந்நிறீஇ-இந்திரியங்களை தாம் வெல்லப் பாராதே எம்பெருமான் பக்கலிலே மூட்டி விஷயங்களை ஜெயிக்கப் பார்க்கை-

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: