ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ யதீந்த்ர பிரவணர் வைபவம் —

ஸ்ரீ மணவாள மாமுனிகள்-

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்

ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீ மத் யதீந்திர பிரவணம் ஸ்ரீ லோகாச்சார்ய முனிம் பஜே

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது பரமார்த்த தர்ம தேஜோ நிதானம்
பூமா தஸ்மின் பவதி குசலி ஹோ பிபோ மா ஸஹாய
திவ்யார்த் தஸ்மை திசத்து விபவத் தேசிகோ தேசிகானாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களானி

மாசற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

திரு மூலமே நமக்கு மூலம்
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ ?
பூம் கமழும் தாதர் மகிழ் மார்பன் தான் இவனோ ?
தூத்தூர வந்த நெடுமாலோ
மணவாள மா முனி எந்தை இம் மூவரிலும் யார் ?–ஸ்வாமி ஆய் அருளியது

பழைய பெருமைகளை மீண்டும் ஒளிர, ஸ்ரீ வைஷ்ணவம் என்னும் ஆலமரம் தழைக்க
ராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினார் ஸ்ரீ மணவாள மாமுனிகள் .

ஓராண் வழியில் இறுதி ஆச்சாரியாராக விளங்கி, வைணவ சம்ப்ரதாயங்கள் மேலோங்கிட உழைத்தார் .
அவர் அவதாரம் ஐப்பசி மாதம் மூல நக்ஷத்ரம்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் –
பெற்றோர் தாதரண்ணன் +ஸ்ரீ ரங்கநாச்சியார்
காலம் 1370 AD-1443 AD–சாதாரண வருஷம்-
கலி யுகம் 41 72-சக வருஷம் 1292-சாதாரண வருஷம் -ஐப்பசி -26 நாள் -சுக்லபஷம் -வியாழன்
சதுர்த்தி -மூலம் நஷத்ரம் திரு அவதாரம்

இயற்பெயர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
பிறந்த இடம் சிக்கில் கிடாரம்
அவதாரம் ஆதிசேஷன்
ஆச்சாரியன் திரு வாய் மொழிப் பிள்ளை

குரோதன சம்வச்தரம்- 16 வயசில் மகர மாசம் க்ருகதாச்ரமம் –1386 AD
சன்யாச -45 -விஜய நாம சம்வச்த்ரம் -பெரிய திரு மண்டபம் –1415 AD
ஆனந்த சம்வச்தரம் -மிதுன மாசம் பூர்ணிமா -மூலம் -ஈடு காலஷேமம் முடிந்து -65 வயசில்

யதீந்திர ப்ராவண்யமும் தீ பக்தி வைராக்ய குணார்ணத்வமும் –
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்ததாக அருளுகிறார் –

சாம்ய பத்தி-கும்ப -மாசி-மாசம்-
கிருஷ்ண பஷம் த்வாதசி சரவணம் சனி கிழமை
ருதிரோதடரி சம்வச்தரம் 1444 AD

1323-1371 நம் பெருமாள் ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து போக
48 வருஷம் கழித்து திரும்பி நம் பெருமாள் திரும்பி
1370 மணவாள மா முனிகள் திரு அவதாரம்
கவலை இல்லை இனி என்று வந்தானாம்

அஷ்ட திக் கஜங்கள்
1-வானமாமலை ஜீயர்
2-கோயில் கந்தாடை அண்ணன்
3-பட்டர்பிரான் ஜீயர்
4-திருவேங்கட ஜீயர்
5-பிரதிவாதி பயங்கரம் அண்ணன்
6-எறும்பியப்பா
7-அப்புள்ளார்
8-அப்புள்ளை

சிறப்புப் பெயர்கள்
யதீந்த்ர ப்ரவணர்
வரவர முனி
சௌமய ஜாமாத்ரு முனி
பெரிய ஜீயர்
விசத வாக் சிரோமணி

இயற்றிய நூல்கள் – சமஸ்க்ருதம்
யதிராஜ விம்சதி
தேவராஜா மங்களம்
ஸ்ரீ காஞ்சி தேவராஜமங்களம்

யதீந்த்ர ப்ரவண பிரபாவம் -மா முனிகள் ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கிடாம்பி திருமலை நாயனார் இடம் கேட்டு அருளினார்
அவர் தனியனை-ஸ்ரீ வரதாச்சார்யர் -என்று குறிப்பிட்டு தென்கலை குரு பரம்பரையில் உண்டு

திரு மண் பெட்டி சொம்பு – இரண்டு திரு மேனி -வீற்று இருந்த திரு மேனிதிரு அரங்கம்
நின்று இருந்த திரு மேனி ஆழ்வார் திரு நகரி

பல்லவராய மண்டபம்-ஸ்வாமி மண வாளமா முனிகள் சந்நிதி ஸ்ரீ ரெங்கம்
திரு பரியட்டம் திரு மாலை சாத்துபடி
பொன் அடியாம் செம் கமலம்-மா முனிகள் திரு அடி பிரசாதம்
ரகஸ்யம் விளைந்த மண் இன்றும் சேவிக்கலாம் கால ஷேப கூடத்தில்
தொட்டி பிரசாதம்-தயிர் சாதம் உப்பு இன்றி

வேதத்தின் உட் பொருள் நிற்கப் -பாடி என் நெஞ்சுள் -நிறுத்தினான் மதுரகவி ஆழ்வார்
வேதப்பொருளே என் வேங்கடவா –
பொருள் அவன்
உள் பொருள் பாகவதர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் –
திருவடி நிலை என்பதால் எம்பெருமானார் ஆழ்வாரினும் வேறுபட்டு இல்லை
அவரது புநர் அவதாரம் என்பதால் பெரிய ஜீயரும் எம்பெருமானாரினும் வேறுபட்டு இல்லை –
ஆக மூவருமே உள் பொருள் -உத்தாரக ஆச்சார்யர்கள்
பகவான் புறப் பொருள் –
புறப்பொருள் மதிளரங்க மணவாளன்
உள் பொருள் மணவாள மா முனிகள்
அரங்கன் உடைய உலகளந்த பொன்னடி புறப்பொருளின் சாரம்
மா முனிகளின் பொன்னடியாம் செங்கமலம் உட் பொருளின் சாரம் –

எறும்பி அப்பா -வர வர முநி -சதகம் 63
ஆத்மா நாத்மப்ரமிதி விரஹாத் பத்யுரத் யந்ததூர
கோரே தாபத்ரி தய குஹரே கூர்ணமா நோஜ நோயம்
பதச்சாயாம் வர வர முனே ப்ராபிதோயத் ப்ரசாதாத்
தஸ்மை தேயம் ததி ஹகிமிவ ஸ்ரீ நி தேர் வர்த்ததே தே
பதச்சாயா -உள் பொருளின் முடிவு நிலமான மா முனிகள் திருவடியே உபாயம் -நிழல் உபேயமும் –

விஷ்ணு சேஷி ததீய ஸூப குண நிலையோ விக்ரஹ ஸ்ரீ சடாரி
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் –
என்றபடி எம்பெருமான் நல்குணம் மிக திரு மேனியே ஆழ்வார்
அவர் இணைத் தாமரையே ஸ்ரீ ராமானுஜர்
அவர் திறத்து அத்யந்த பாரதந்த்ர்யம் அனுசந்தித்து நிழல் போலே யதீந்திர ப்ரவணர்
திருவடி நிழலாகி உபேயமாகிரார்
இதனாலே ஸ்ரீ ரம்ய ஜாமத்ரு முனிவருக்கு தனியன் சமர்ப்பித்து முதலிலும் முடிவிலும் அனுசந்திக்க
ஸ்ரீ ரெங்கராஜ திவ்யாஞ்ஞை –
அந்த கட்டளையின் பலனே நாம் இன்று முடிவுப் பொருளாய் அனுசந்திக்கும்
ஜீயர் திருவடிகளே சரணம் -என்பதாகும்

திடமான அத்யாவசாயம் நாமும் பெற வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் -என்று
மா முனிகளை சரணம் பற்றுவோம்

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ்வு இப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே –

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மண் உலகம் வாழ மணவாள மா முனியே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்

நாமார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள்
தாமாக வென்னைத் தனித்து அழைத்து நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து

சேற்றுக்கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொலும் நல்ல அந்தணர் வாழ்வு இப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே

கிருபயா பரயாச ரங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாசயன்
லுலுபே ஸ்வயம் ஏவ சேதஸா வரயோகி ப்ரவரச்ய சிஷ்யதாம் -ஸ்ரீ சைல அஷ்டகம்

பிற்றை நாள் –
மாறன் மறைப் பொருளை கேக்க மணவாள மா முனியை ஏறும் அணை தனில் இருத்தி -ஸ்ரீ சைல அஷ்டகம் -1-

ரங்கீ வத்சரம் ஏகம் ஏவம் அஸ்ருணோத் வ்யக்தம் யதோக்த க்ரமாத் -ஸ்ரீ சைல அஷ்டகம் -2

ஸ்ரோதும் திராவிட வேத பூரி விவ்ருதம் சௌம்யோ பயந்தூர் முனே
உத்கண்டா அஸ்தி ம்மை நமா நயத தம் தர்ஷயாச்ராயம் மண்டபம்
ஆவிச்யார்ச்சாக மூசிவா நிதி மூதா -ஸ்ரீ சைல அஷ்டகம் -2

நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில் செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –அப்பிள்ளார் -சம்பிரதாய சந்த்ரிகை

தெருளுடைய வ்யாக்கியை ஐந்தி னோடும் கூடி -சம்ப்ரதாய சந்திரிகை -9-

ஸ்ருதி பிரக்ரியை
ஸ்ரீ பாஞ்சராத்ர பிரக்ரியை
ஸ்ரீ இராமாயண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாரத பிரக்ரியை
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாகவத பிரக்ரியை
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ கீதா பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ ஸ்ருத பிரகாசா பிரக்ரியை
பதார்த்தம் -வாக்யார்த்தம் -மகா வாக்யார்த்தம் -சமபிவ்யாஹார்த்தம் -த்வயனர்த்தம் –
அர்த்த ரசம் பாவ ரசம் ஒண்பொருள் உட்பொருள்

போத மணவாள மா முனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -அரையர் கொண்டாட்டம்

ஆனி மாசம் திரு மூல நஷத்ரம் பௌர்ணமி திதி ஞாயிற்றுக் கிழமை
ஆனந்த வருடத்திலே கீழ்மை யாண்டில் அழகான வருடத்தில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌர்ணமியின் நாளிட்டுப் பொருந்தி
ஆனந்தமயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்த —
வைத்தே வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –
சமாப்தௌ கிரந்தச்ய பிரதித விவித உபாய நசயே
பரம் சஜ்ஜீபூதே வரவரமுனே ரங்க்ரிசவிதே
ஹடாத்பால கச்சித்குத இதி நிரஸ்தோப்யுகத
ஐ கௌ ரங்கே சாக்யே பரிணத சதுர்ஹாய ந இதம் –ஸ்ரீ சைகள அஷ்டகம் -5-

ஸ்ரீ சைலே சேதி பத்யம் ககபதி நிலயே மண்டபே தத் சமாப்தௌ
உக்த்வாத் யேதவ்யம் ஏதன் நிகில நிஜக்ரு ஹேஷ்வாதி சத்தத்த தாதௌ -ஸ்ரீ சைல அஷ்டகம் -6

ஸ்ரீ சைலே சேதிபத்யம் ஸ்வயமிதி பகவான் ஆதி சத் ரங்கநாத -ஸ்ரீ சைல அஷ்டகம் -7

தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோறு உரைக்க நேசமுற அரங்கர் நியமித்தார் -ஸ்ரீ சைல வைபவம் -7-

ஸ்ரீ பன்நகாதீச முனே பத்யம் ரெங்கேச பாஷிதம்
அஷ்டோத்தர சதஸ்தா நேஷ்வ நுசந்தான மாசரேத்
இத்யாஞ்ஞா பத்ரிகா விஷ்வக்சேநேன பிரதிபாதிதா
ததாரப்ய மகாத் பிச்ச பட்யதே சந்நிதே புரா

வதரியாச்சிராமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கி
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியோங்கள் தேற வென்ன
சதிராக சீர் சைல மந்த்ரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவிர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –என்றும்

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியை கேளா நிற்ப
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாத்த நின்ற சமயம் தன்னில்
பொன்னி தன்னில் நீராடிப் புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்ப
சந்நிதியில் நின்று அரங்கர் தாமே அந்தத்
தனியன் உரை செய்து தலைக் கட்டினாரே -சம்ப்ரதாய சந்த்ரிகை -4/5-

வாசி அறிந்த வதரியில் நாரணனார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டுரைத்தான் இவ்வையகம் சீருறவே-கோயில் கந்தாடை அண்ணன் –
மணவாள மா முனி கண்ணி நுண் சிறுத் தாம்பு -13-
திருமந்தரம் வெளி இட்டு அருளின ஸ்ரீ பத்ரி நாராயணனே இத்தையும் வெளி இட்டு அருளினார்

ஹடான் தஸ்மின் ஷணே கச்சித் வர்ணே சம்ப்ராப்ய பத்ரிகாம்
வாதூல வரதாச்சார்யா தர்ம பத்ன்யா கரே ததௌ–பஹூ முகமாக இத்தநியனை பிரகாசிப்பித்தது அருளுவதே

———————————————————————————

ஸ்ரீ அழகர் கோயில் அனுபவம்

ஸ்ரீ சைல ஸூந்தரே சச்ய கைங்கர்ய நிரதோயதி
அமன்யத குரோஸ் ஸ்வஸ்ய பத்ய சம்பவ மார்யத

ஜிஹ்வாக் ரேதவ வஷ்யாமி ஸ்த்தித்வா வத ஸூ பாவ நம்
பத்யம் த்வதார்யா விஷயம் முனே ரஸ்ய மமா ஆஜ்ஞ்ஞாய

தன்யோச்மீதி ச சேனே சதே சிகோஸ்வதத ஸ்வயம்
வஹன் சிரசி தேவஸ்ய பாதௌ பரம பாவனௌ
———————————————————–
ஸ்ரீ திருவேங்கடமுடையான் அனுபவம்

உபதிஷ்டம் மயா ஸ்வப்னே திவ்யம் பத்யமிதம் ஸூ பம்
வரயோகி நமாஸ்ரித்ய பவத ஸ்யாத் பரம் பதம்
இத்யுக்த்வா தம் வ்ருஷாத்ரீச ஸ்ரீ பாதாத் ரேணு மேவச
தத்த்வாஸூ பரேஷா யாமாச கச்ச யோகிவரம் ஸூ சிம்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ
த்ரிஷூ பக்திஸ்சதா கார்யா சா ஹி பிரதம சாதனம் -ஸ்ரீ மா முனிகள்

பட்டர்பிரான் முதலாய பதின்மர் கலைப் பழிச்சலிலும்
சிட்டர்களாய் தினம் தோறும் திரு மணிடு வேளையிலும்
இட்டமுற உணும் பொழுதத்து ஒண் கரநீர் ஏற்கையிலும்
அட்ட திக்கும் விளங்குரைத்தார் ஆரியர்கள் அனைவருமே -ஸ்ரீ சைல வைபவம் -3

மணமுடைய மந்த்ரமா மதிக் கொள்ளீர் தனியனையே -ஸ்ரீ பரவஸ்து பிரான் பட்டர் ஜீயர்
த்வயம் -நம் ஆழ்வார் த்வயம் -எம்பெருமானார் த்வயம் -பெரிய ஜீயர் த்வயம்
சடரிபுரேக ஏவ கமலாபதி திவ்ய கவி
மதுரகவிர் யதா ச சட ஜின்முனி முக்யகவி
யதிகுல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூ தாக விராட்
வரவர யோகி நோ வரத ராஜ கவிஸ் ச ததா -ஸ்ரீ எறும்பி அப்பா

கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன்
தேவில் சிறந்த திருமாற்கு தக்க தெய்வ கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
கண்ணனை பாட நம் ஆழ்வாரே
நம் ஆழ்வாரைப் பாட மதுர கவி ஆழ்வாரே
ராமானுஜரை பாட அமுதனார்
மா முனிகளை பாட எறும்பி அப்பாவே

நாயனார் திருக்குமாரர் –எம்மையன் இராமானுசன் -என்று திருவாய் மொழிப் பிள்ளை திரு நாமம் சாத்தி அருளினார் –
(பின்பு இவருக்கு இரண்டு திரு குமாரர்கள் -அழகிய மணவாள பெருமாள் நயினார் -பெரியாழ்வார் -என்ற திருநாமங்கள் இருவருக்கும்

இன்றோ வெதிராசர் இவ்வுலகில் தோன்றிய நாள்
இன்றோ கலியிருள் நீங்கு நாள் இன்றோ தான்
வேதியர்கள் வாழ விரை மகிழோன் தான் வாழ
வாதியவர்கள் வாழ் வடங்கு நாள் –திருவாய்மொழிப் பிள்ளை முதல் இரண்டு வரிகளையும்
மணவாள மா முனிகள் இறுதி இரண்டு வரிகளையும் சாதித்து அருளியது –

நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில்
நலமான வாவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர்பக்க நாளா நாளில்
செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளைச் செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நம் கண்
மணவாள மா முனி வழங்கினாரே —

ஆனந்த வருடத்தில் கீழ்மை யாண்டில்
அழகான ஆனிதனின் மூல நாளில்
பா நுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையின் ஆளியிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாத்த
வானவரும் நீரிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே-

பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடை யண்ணன் எறும்பி அப்பா
ஏராரும் அப்பிள்ளை அப்பிள்ளார் வாதி பயங்கரர் என்பேர்
ஆர்ந்த திக்கயம் சூழ் வர யோகியைச் சிந்தியுமே-

சொன்ன வண்ணன் செய்த பெருமாள் சந்நிதியில் அடியார்க்கு உபய வேதாந்தம் சாதித்து அருளியதால்
இன்றும் அங்கே ஞான முத்திரை யுடனும் த்ரிதண்டத்துடனும் சேவை சாதிக்கிறார்

வானமா மலை ஜீயர் -பிரியாது ஆட்செய்து
கந்தாடை அண்ணன் -உடையவருக்கு முதலியாண்டான் போலே பாதுகா ஸ்தாநீயர்
எறும்பி அப்பா -வடுக நம்பி போலே அத்யந்த அபிமதராய்
பிரதிவாத பயங்கர அண்ணா -கூரத் ஆழ்வான் போலே ப்ரதிபஷ நிரசனம் ஸ்ரீ பாஷ்யம் உசாத்துணை
அப்பிள்ளை -சேனை முதலியார் அண்ணன் -சடகோப தாசர் -திருப்பாண் ஆழ்வார் தாசர் -அருளிச் செயலுக்கு உசாத்துணை
அப்பிள்ளார் -அமுதுபடி சேவை
பட்டர்பிரான் ஜீயர் ஸ்ரீ பதாச்சாய ஆபன்னார்
ஜீயர் நாயனார் இளவரசராய் திருக் குறுகிப் பிரான் பிள்ளான் போலே அத்ய ஆதரணீயராய் இருப்பார்-

ருதிரோத்காரி சம்வத்சரம் மாசி மாத கும்ப ராசி சனிக் கிழமை கிருஷ்ண பஷம் த்வாதசி –
திருவோணம் நஷத்ரம் -ஸ்ரீ வைகுண்டம் மீண்டு எழுந்து அருளினார்-

ஸ்ரீ யதீந்த்ரரும் ஸ்ரீ யதீந்த்ர பிரவணரும்–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

1–வ்யாக்யான -கிரந்த –தாநாத் –வியாக்கியான கிரந்தங்கள் அருளிச் செய்வதிலே பிரதான நோக்கு –
ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீப சாரங்கள் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
மா முனிகள் வ்யாக்யான கிரந்தங்கள் பிரசித்தம்
கத்ய த்ரயம் வேதாந்த ஸங்க்ரஹம் போலே யதிராஜ சப்ததி -உபதேச ரத்னமாலை இத்யாதிகள்

2–பரிவதன கதா கந்த வைதேசிகத்வாத்–பரிவதனமாவது பரிவாதம் நிந்தை –
பரிகாசமோ நிந்தையோ அணு அளவும் இல்லாமல் பரம பவித்ரமான திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் அன்றோ இவர்களது

3–நாநா சாஸ்த்ரார்த்த ப்ருந்த ப்ரசுர பணிதிபி –ப்ராஞ்ஞா ஹ்ருத் ரஞ்சகத்வாத் —
தொட்ட தொட்ட இடம் எங்கும் சாஸ்த்ரார்த்த திரள்களே மலிந்த ஸ்ரீ ஸூக்திகள் -பண்டிதர்கள் உள்ளத்தை உகப்பிக்கும்

4–பூர்வாச்சார்ய யுக்தி ராகாத் -ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் தொடங்கும் பொழுதே –
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாச்சார்யாஸ் சஞ்சிஷிபு
தன் மத அநுசாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ் யந்தே-என்று
பூர்வாச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகளில் தமக்கு உள்ள அபிநிவேச அதிசயத்தை காட்டி அருளியது போலவே
மா முனிகளும் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு –முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம் -என்றும்
தம்முடைய வியாக்கியான கிரந்தங்களை பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்தி மயமாகவே அருளிச் செய்கிறார்

5–சடரிபு முநிராட் ஸூக்தி சம்வர்த்தகத்வாத்
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுசன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப் போற்றித் தொழு நல்ல அந்தணர் வாழ இப்பூதலத்தே
மாற்றாற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

6–பீடாதி ச ப்ரதிஷ்டாபந க்ருதி கரணாத்
ஸ்வாமி -74-ஸிம்ஹாஸனாபதிகள் ஸ்தாபித்து தர்சன நிர்வாஹம்
லஷ்மீ நாதாக்ய சிந்தவ் சடாரி புஜலத-இத்யாதிகளை உண்டே
மா முனிகளும் –
திறமாக திக் கஜங்கள் இட்டு அருளும் பெருமாள் -அஷ்ட திக் ஆச்சார்யர்கள் ஸ்தாபித்து தர்சன நிர்வாஹம்

7–திவ்ய தேச அபிமானாத்
மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும் நாள்
ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரீம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ் –
ஸ்ரீ ரெங்கேச ஜெய த்வஜோ விஜயதே ராமாநுஜோயம் முநி
மா முனிகளும்
அடைவுடனே திருப்பதிகள் நடந்த வேர்வை ஆறவோ
அதவா
திவ்ய தேச ஸ்ரேணியில் சேராது இருந்த திரு நாராயணபுரத்துக்கு ஒரு நாயகமாய் -சமர்ப்பித்தும்
மா முனிகள் ராஜ மன்னார் சந்நிதிக்கு -தீர்ப்பாரை யாம் இனி -சமர்ப்பித்தும்
திவ்ய தேசமாக அபிமானித்ததும் உண்டே –

8–பணி ராஜ அவதாரவாத்
ஸ்வாமி சேஷ அவதாரம் என்று பிரசித்தம்
வர வர முனி சதகத்தில் -துக்தோதந்வத் தவள மதுரம் சுத்த சத்வ ஏக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதிதராம் யாம்
பணீந்திர அவதாரம் -என்றும் -பல சரித்திர பிரசித்தங்கள் படியும் ஸூவ்யக்தம்

9–ஸ்ரீ ரெங்க ஸ்ரீ விவர்த்த நாத் –
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
அரங்க நகர் வாழ இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

10–ஸ்ரேஷ்ட சிஷ்யத்வாத்
அப்பனுக்கு சங்காழி கொடுத்தான் வாழியே
எதிராஜசம்பத் குமாரர்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம் -தனியன் பெற்றார் மா முனிகள்

ஆக இத் தன்மைகளால் -யதீந்த்ர பிரவணஸ் சாஷாத் யதீந்த்ரோ பாஷ்ய க்ருத த்ருவம்-

—————————————————

ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்தருள் செய்த நம் திருவாய் மொழிப்பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு எவ் வுயிர்களையும் வுய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே-

குருநாதன் எங்கள் மணவாள யோகி குணக் கடலைப்
பல நாளும் மண்டிப் பருகிக் கழித்து இந்தப் பாரின் உள்ளே
உலகாரியன் முனி மேகம் இந்நாள் என்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே –

” செய்ய தாமரைத் தாளினை வாழியே ,சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே சுந்தரத் திரு தோளினைவாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே”

“ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மண வாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: