Archive for June, 2020

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ மா முனிகள் வாழித் திரு நாம பாசுர வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் —

June 19, 2020

ஸ்ரீ மதே ரம்ய ஜா மாத்ரு முநயே விததே நம
யஸ் சுருதி ஸ்ம்ருதிஸ் சர்வ சித்தீ நாம் அந்தராய நிவாரணி –

ஸ்ரீ சைல தயா பாத்திரம் என்று தொடங்கி அருளிச் செய்த சேனை முதலியார் நாயனார்
ஜீயருடைய கல்யாண குணங்களில் தோற்று அடிமை புக்க படியை பிரகாசிப்பிக்கிறாராய் நின்றார் –
அவர் தம் அடியரான இவரும்-அக்குணங்களுக்கும் ஸுவ்ந்தர்யாதி களுக்கும் ஆஸ்ரயமான
திவ்ய மங்கள விக்ரகத்தில் ஈடுபட்டு பாதாதி கேசாந்தமாக அனுபவித்து தம்முடைய பரிவின் மிகுதியால்
மங்களா சாசனம் பண்ணின படியை அடைவே அருளிச் செய்கிறார் இதில்
செய்ய தாமரை பாடின சீர் அண்ணன் என்று இறே இவருக்கு நிரூபகம்
இப்படி மங்களா சாசனம் பண்ணுகிறவர் தம்முடைய சேஷத்வ அனுகுணமாக
உன் பொன்னடி வாழ்க என்னுமா போலே
பொன்னடியாம் செங்கமலப் போதுகளுக்கு முந்துற மங்களா சாசனம் பண்ணுகையில் ப்ரவ்ருத்தர் ஆகிறார்

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே —

பாதாதி கேசம் பரிவுடன் மங்களாசாசனம் செய்து அருளுகிறார் செய்ய தாமரை பாடிய சீர் அண்ணன்

செய்ய தாமரை தாளிணை வாழியே
பொன்னடியாம் செங்கமலப் போதுகள் அன்றோ இவர் திருவடி இணை –
பிரஜை முலையிலே வாய் வைக்கும்
நாண் மலராம் அடித் தாமரை
இவை யாய்த்து-உன் இணைத் தாமரை கட்கு அன்புருகி நிற்குமது -என்கிறபடி இதுவும் ஸ்வரூபமாய் இருக்கும்
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்துகை இறே நிலை நின்ற ஸ்வரூபம்
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -ஏத்துவதே நிலை நின்ற ஸ்வரூபம்

செய்ய தாமரை தாளிணை வாழியே
இவர் அடியைத் தொடரும் படி இவருக்கு -ராக மௌமனஸ்ய-பத ஸுவ் ப்ராத்ரங்கள் உண்டாயிற்று
அழகும் நிறமும் கொண்டு ஸேவ்யமாய் போக்யமாய் உபாய பூர்த்தியை உடைய திருவடிகள் அன்றோ
ராகம் -சிகப்பு
பதம் -திருவடிகள்
ஸுவ் ப்ராத்ரம் –அவற்றின் சேர்த்தி –

அதாவது
அழகியதாய்ச் சிவந்த செவ்வித் தாமரைப் பூ போலே தர்ச நீயமாய் போக்யமுமாய்த் தாமரைப் பூவை நிறைத்து
வைத்தால் போலே சேர்த்தி அழகையும் உடைத்தாய் உபாய பூர்த்தியையும் உடைத்தாய் யாய்த்து திருவடிகள் இருப்பது
இணை அடிகளின் இணை இல்லா அழகுக்கு ஏற்ற அன்பு கூர்ந்த மங்களா சாசனம்

உந் மீலத் பத்ம கர்பேத் யாதி
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த சீதக் கமலத்தை நீரேறவோட்டி -என்றும்
சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே என்றும் இறே அடி அறிவார் வார்த்தை
இப்படி இதனுடைய ஸுவ்ந்தர்யத்தையும் போக்யதா பிரகர்ஷத்தையும் அனுபவித்த இவர் மங்களா சாசனம்
பண்ணி அல்லது நிற்க மாட்டாரே -உன் சேவடி செவ்வி திருக்காப்பு -என்னுமா போலே
அன்றியே
செய்ய -என்கிற இத்தால் திருவடிகளுடைய செவ்வியைச் சொல்லிற்றாய் ஆஸ்ரிதர் அளவும் வந்து
செல்லுகிற வாத்சல்யத்தை உடைத்து என்கை –
இது அந்நாராய சக்கரவர்த்திக்கு ப்ரத்யக்ஷம் -முதல் அடியிலே இறே எழுந்து ரஷித்து அருளிற்று
வந்து அருளி என்னை எடுத்த மலர்த் தாள்கள் வாழியே என்கிறபடி தம்மையும் முந்துற வந்து விஷயீ கரித்து திருவடிகள் யாயிற்று
திருக்கமல பாதம் வந்து
அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி -என்னக் கடவது இறே
இவர் இப்படி தம்மை விஷயீ கரித்த செய்ய தாமரைத் தாள்களைக் கொண்டு சென்னித் தரிக்குமது அளவாக இருக்கிற
பொற் காலானது நம் சென்னித் திடரிலே ஏறும்படி வைத்து அருளுவதே என்று அவற்றினுடைய
பாவனத்வத்தையும் போக்யத்வங்களையும் அனுபவித்தகு அவற்றுக்கு தம்மோடு உள்ள சம்பந்தத்தால் ஒரு அவத்யமும் வாராது
ஒழிய வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் ஆகவுமாம்
ஆகையால் இவருக்கு ப்ராப்ய பிராப்பகங்கள் இரண்டும் அடி தானேயாய் இருக்கை-

———-

இனித் திருவடிகளுக்கு இவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையால் மேலே திரு வரையோடே சேர்த்து சிவந்து நிற்பதான
திருப்பரிவட்டத்தில் அழகில் சென்று அச்சேர்த்திக்கு மங்களா சாசனம் -மங்களத்தை ஆசாசிக்கிறார் -சேலை வாழி என்று –
கால் வாசியிலே நில்லாமல் அரை வாசி தேடுமவர் இறே
சேலை வாழி திரு நாபி வாழியே
திருவரையில் பாங்காக ஆஜங்கம்-முழங்கால்-தழைத்து உடுத்த திருப்பரிவட்டத்தில் அழகில் திரு உள்ளம் சென்று
மங்களா சாசனம்
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி என்று திருவரையில் உடை அழகும் பரபாகமாய் இறே இருப்பது –
சந்திரனைச் சூழ்ந்த பரிவேஷம் போலே யாயிற்றுத் திருவரைக்கு திருப்பரியட்டத்தோடே சேர்த்தி
ஸூதா நிதி மிவஸ்வைர ஸ்வீ க்ருதோதக்ர விக்ரஹம் -என்னக் கடவது இறே–
சந்திரனைச் சுற்றி ஓளி வட்டம் போலே சுற்றும் ஓளி வட்டம் சூழ்ந்து ஜோதி எங்கும் பரந்து உள்ளது
ஈனமில்லாத இள நாயிறாரும் எழிலும் செக்கர் வானமும் ஒத்த துவராடையும் -என்றும்
ஆதாம்ர விமல அம்பரம் -என்றும் அத்யாச்சர்யமாய் இறே இருப்பது
இத்தால் பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்தமை தோற்றுகிறது

அதுக்கு மேலே கண்டவர்களைக் கால் தாழப் பண்ண வற்றான திரு நாபி அழகிலே போந்து
அவ்வழகுக்கு போற்றி என்கிறார் -திரு நாபி -வாழியே என்று
திருப் பரியட்டத்தோடே சேர்ந்து இறே திரு நாபி இருப்பது
அந்தி போல் நிறத்தாடை என்ற அநந்தரம் உந்தி மேலதன்றோ-என்று
ஸ்ரீ ஆழ்வார் ஈடுபட்டது போலே ஸுவ்ந்தர்ய சாகரம் இட்டளப் பட்டு சுழித்தால் போலே இருக்கிற
திரு நாபியின் வைலக்ஷண்யத்தைக் கண்டு சேலை வாழி திரு நாபி வாழியே என்கிறார்
அது தான் அல்லாத அவயவங்கள் காட்டில் அழகியதாய் -அழகு ஆற்றில் திகழ் சுழி போலே இறே உந்திச் சுழி இருப்பது
ஸுவ்ந்தர்ய சாகரம் இட்டளப்பட்டு சுழித்தால் போலே இருக்கிற இதனுடைய வை லக்ஷண்யம் கண்ட இவருக்கு
வாழ்த்தி அல்லது நிற்கப் போகாதே -இது தான்
மடவார்களின் உந்திச் சூழலில் சுழலும் மனசை மீட்டு தன்னிடத்தில் ஆழங்கால் படுத்த வல்ல வற்றாயும் இருக்குமே-

துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
திரு நாபிக்கு மேலாய் விசாலமாய் விமலமாய் ஸூந்தரமாய் இருக்கும் திரு மார்பையும்
அத்துடன் சேர்ந்த திரு யஜ்ஜோபவீதத்தையும் கண்டு காப்பிடுகிறார் –
திரு மார்புக்குத் தூய்மை யாவது –
ஹ்ருத்யேந உத்வஹத் ஹரீம்-என்று-நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமானைக் கொண்டு இருப்பது –
அத்தாலே ஹ்ருதயம் ஸுவ்ம்ய ரூபமாய் இருக்குமே
அவ்வளவும் அன்றியிலே-
இவர் திரு உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு
அரவிந்தப் பாவையும் தானும் சேர்த்தியுடனே யாய்த்து அவன் எழுந்து அருளி இருப்பது
விசேஷித்து வக்ஷஸ்தலசம் மாதவ ஸ்தானம் ஆகையால்
உள்ளொடு புறம்போடே வாசியற மாதவன் உறையும் இடமாய்த்து
கேசவாதி பன்னிரு திரு நாமங்களில் மாதவன் இடம் அன்றோ திரு மார்பு
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி என்றபடி
திருவுக்கு இடமாய்த்து பெருமானின் திரு மார்பு
திருமாலுக்கு இடமாய்த்து ஆச்சார்யரின் திரு மார்பு
மங்களம் மாதாவாராம் மனஸ் பத்மாய மங்களம்
ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முனி மாநச வாசிந ஸ்ரீ நிவாஸாய -என்றும் சொல்லக் கடவது இறே
ஆஸ்ரிதர்களின் உஜ்ஜீவனத்தையே நினைக்கும் திரு மார்பு –

அவன் தான் அநந்ய ப்ரயோஜனருடைய ஹ்ருதயங்களிலும் ஆச்சார்ய பரதந்திரருடைய ஹ்ருதயங்களிலுமாயிற்று
அத்யாதரத்துடனே எழுந்து அருளி இருப்பது –
விண்ணாட்டில் சால விரும்பும் வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு
தன்னாரியன் பொருட்டாச் சங்கல்பம் செய்பவர் நெஞ்சு எந்நாளும் மாலுக்கு இடம் -என்னக் கடவது இறே
அந்த அநந்ய ப்ரயோஜனத்தையும் ஆச்சார்ய பாரதந்தர்யத்தையும் யாய்த்து இங்குத் தூய்மையாக சொல்லுகிறது –
அதுக்கும் மேலே
அழகாரும் எதிராசர்க்கு அன்பு உடையான் என்னும்படி
இவர் திரு உள்ளம் யதீந்த்ர ப்ராவண்யத்தை யுடைத்தாய் இருக்கையாலே
இன்று அவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே -என்கிறபடி
பரம ஹம்சரான எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கிற மானஸ பத்மாசனத்தையும் உடைத்தாய் இருக்கும் –

ராகாதி தூஷிதமான சித்தத்தில் அவன் அநாஸ் பதியாய் இருக்குமா போலே அங்க ராக ரஞ்சிதமான இவருடைய
ஹ்ருதயத்திலும் ஆஸ் பதியாய் அன்று இரான் ஆய்த்து
இப்படிபை இவன் எழுந்து அருளி இருக்கையாலே ஸுவ்ம்ய ஜாமாத்ரு முனியுடைய ஹ்ருதயம்
அத்யந்த ஸுவ்ம்ய ரூபமாய் இருக்கும் என்கை
ஆகையால் -நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு என்கிறபடி இருவருமான சேர்த்திக்கு
இருப்பிடமான திரு மார்பை துய்ய மார்பும் புரி நூலும் வாழி என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் ஆகவுமாம்

இவர் மானஸ வாசியாய் இருக்கிறவனும்
புலம் புரி நூலவன் இறே
அலர் மேல் மங்கை உறை மார்பன் ஆகையால் அம் மா ஒருத்திக்கு இடமுடைத்தாய்த்து அம்மார்பு
இம்மார்பு இருவருக்கும் இடமுடைத்தாய்த்து இருக்கும்
திரு மாற்கு அரவு –இத்யாதி
மங்களம் பன்னகேந்த்ராயா –
அநந்தனாம் அவரே மணவாள மா முனி -என்னக் கடவது இறே

அதவா
துய்ய மார்வும்
ஸூபேந மநசாத் யாதம்-என்கிறபடியே ஆஸ்ரிதர்களுடைய அபராதங்களைப் பொறுத்து அவர்களுக்கு
எப்போதும் ஓக்க நன்மையைச் சிந்திக்கிற ஸுவ்ஹார்யத்தை யுடைத்தாகை-
உரசா தாரயாமாச -என்றும்
நல் நெஞ்சம் அன்னம்-என்றும் சொல்லுகிறபடியே இவை இரண்டும் தானேயாய் இருக்கை
துய்ய மார்வும்
ஏராரும் செய்ய வடிவு என்னுமா போலே இங்கும் யாவத் போகத்தைப் பற்றிச் சொல்லவுமாம்
மந்தர கிரி மதித்த மஹார்ணவ உத்கீர்ண பேந பிண்ட பண்டார ஸூந்தர ஸூகுமார திவ்ய விக்ரஹ என்று இறே இருப்பது
ஆக இவற்றால் சொல்லிற்று யாய்த்து
பாஹ்ய அப்யந்தர ஸூஸி-என்கை

இனித் திரு மார்போடு சேர்ந்து இறே திரு யஜ்ஜோபவீதம் இருப்பது
தாமரைத் தார் இடம் கொண்ட மார்வும் வண் புரி நூலும்
அப்படி யோடே சேர்ந்த திரு யஜ்ஜோபவீதம்–படி -விக்ரஹம்
துய்ய மார்வும் புரி நூலும்
துஷார கரகர நிகர விசத தர விமல உபவீத பரி சோபித விசால வக்ஷஸ்தல -என்கிறபடியே
சந்திரனுக்கு கிரணங்கள் தேஜஸ் கரமானால் போலே யாய்த்து திரு மார்புக்கு திரு யஜ்ஜோபவீதம் இருப்பது
சோபிதம் யஜ்ஜ ஸூத்ரேண -என்னக் கடவது இறே —
முந்நூல் மெய் நூல் -திரு மார்புடன் உள்ள சேர்த்தி அழகுக்கு பல்லாண்டு

அன்றிக்கே
இம் முந் நூலான மெய் நூலால் இறே பொய் நூல்களையும் கள்ள நூல்களையும் கருமம் அன்று என்று கழிப்பது –
வகுளதர தவள மாலா வஷஸ்தலம் வேத பாஹ்ய ப்ரவர சமய வாதச் சேதநம் –என்னக் கடவது இறே
தம்முடைய ப்ரஹ்ம ஸூத் ரத்தாலே இறே இவனுடைய காம ஸூத் ரங்களைக் கழிப்பது
ராஜேந்திர சோழனிலே பாஹ்யருடைய சங்கத்தால் சிகா யஜ்ஜோபவீதங்களைக் கழித்த ப்ராஹ்மண புத்ரன்
ஆழ்வானைக் கண்டு மீண்டும் அவற்றைத் தரித்து வர அவன் பிதாவானவன்
ஆழ்வானைக் கண்டாய் ஆகாதே என்றான் இறே

சுந்தரத் திருத் தோளிணை வாழியே
இனி திரு மார்போடு சேர்ந்த திருத் தோள்களுக்கு அரண் செய்கிறார்
திருத் தோளிணை வாழியே –

மல்லாண்ட திண் தோளுக்கு பல்லாண்டு என்னுமா போலே -ஸூந்தர தோளிணை
புஜ த்வய வித்ருத விசத தர சங்க சக்ர லாஞ்சனங்களை உடைத்தாய் யாய்த்து திருத் தோள்கள் இருப்பது
தோளார் சுடர்த் திகிரி சங்குடைய ஸூந்தரன் இறே
சிங்கார மாலைத் திரு தோள்களும் அதிலே திகழும் சங்கு ஆழியும்-என்று அநு பாவ்யமாய் இறே இருப்பது
தோளிணை
எப்போதும் கை கழலா நேமியான்–என்கிறபடியே இவருக்கு திருத் தோள்களானவை எப்பொழுதும்
சங்கு ஆழி இலங்கு புயமாய் இருக்கையாலே வலத்து உறையும் சுடர் ஆழியும் பாஞ்ச சன்னியமும்
இங்கும் உண்டாய் இருக்கை –
அன்றிக்கே
திருத் தோள்கள் தான் பகவல் லாஞ்சனத்தில் ப்ரமாணமுமாய்
அபவித்ரரை ஸூப வித்ரர் ஆக்கியும்
துர் விருத்தரை விருத்தவான்கள் ஆக்கியும் போருமதாய் இருக்கும்

மந்தரம் நாட்டி மதுரக் கொழுஞ்சாறு கொண்ட ஸூந்தர தோளுடையான்-என்று
ஆண்டாள் அழகரின் திருத் தோள்களில் ஈடுபாடு
மறைப்பால் கடைந்து மெய்ப்பொருள் உணர்த்தி தத்வப் பொருள் காட்டும் மா முனிகள்
தோளிணையில் இவர் ஈடுபாடு-
தோள் கண்டார் தோளே கண்டார் என்னும்படி கண்டவர் தம் மனம் கவரும்
காண் தகு தோள் அண்ணல் அன்றோ மா முனிகள்

அநந்தரம் திருத் தோள்களில் ஏக தேசமான திருக் கையையும் –
அதிலே தரித்த த்ரி தண்டத்தையும் கண்டு அதுக்குத் தாம் கடகாக நிற்கிறார்
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
அவ்வோ காலங்களில் ஸாஸ்த்ர ப்ரமாணங்களால் உபய விபூதி நாயகனான சர்வ ரக்ஷகனையும்
ரஷிக்கும் திருத் தோள்கள் –
வெறும் கை தானே போருமாய்த்து ஆகர்ஷிக்கைக்கு -அதிலே த்ரி தண்டமுமானால் அழகு இரட்டிக்கச் சொல்ல வேண்டாமே –
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் என்னுமா போலே
காரும் சுரபியும் போலே விளங்கு கைத் தாமரையில் சேர்ந்து இருந்த தண்டும்-என்று இறே சேர்த்தி இருப்பது
இக்கை கண்ட இவரை கை விட்டு இருக்க மாட்டாரே
அன்றிக்கே
முந்தை மறை தமிழ் விளக்கும் முத்திரக் கை வாழியே என்கிறபடி தனது தொண்டைக் குலம் சூழ இருக்க
அவர்களுக்கு தமிழ் வேதமான திருவாய் மொழியினுடைய அர்த்தத்தை ஹஸ்த முத்திரையால்
உபதேசித்து அருளுவதும் அநு பாவ்யமாய் இறே இருக்கும் இவருக்கு –
உந் நித்ர பத்ம ஸூபகாம் உபதேச முத்ராம் என்ற உபதேச முத்திரையுடன் கூடிய திருக்கையும்
பாஷண்டிகளுக்கு வஜ்ர தண்டமாயும்–வேதாந்த சார ஸூக தரிசன தீப தண்டமாயும் இருக்கும்
தத்வ த்ரயத்தை விளக்கும் திரி தண்டம் திருக்கையில் ஏந்தி அருளும் அழகுக்கு பல்லாண்டு –
எழில் ஞான முத்திரை வாழியே -என்று சொல்லக் கடவது இறே
ஏந்திய
பூ ஏந்தினால் போலே இருக்கை
கையில் ஏந்திய முக்கோலும் வாழியே
நின் கையில் வேல் போற்றி என்னுமா போலே
அன்றிக்கே
கமல கரதல வித்ருத த்ரிதண்ட தர்சன த்ருத ஸமஸ்த பாஷண்ட ஸூ தூர பரி ஹ்ருத நிஜா வசத-என்று
ஒருக் கோலார் தொடக்கமானவரை எல்லாம் ஓட்டுமதாய் இருக்கும் –

கருணை பொங்கிய கண்ணினை வாழியே
கண் காணக் கை விட்டார்-
கார் போலும் செங்கை யுறை முக்கோலும் வாழியே
கருணை குடி கொண்டு அருளும் கண்ணினை வாழியே -என்று திருக் கைக்கு அனந்த பாவியாய்ப்
பேசுவது திருக் கண்களை இறே
திருக் கைகளால் ஸ்பரிசித்து அருளின பின்பு இறே திருக் கண்களால் கடாக்ஷித்து ரக்ஷித்து அருளுவது

கருணை பொங்கிய கண்ணினை
கருணைக் கடலான இவருடைய கிருபை பெருகும் ஆனைத் தாள்கள் இருக்கிற படி
நிரந்தர கருணை அம்ருத தரங்கிணி பிரார்த்ரிதா பாங்கைர் அநு கூலம் அபி ஷிஞ்ச-என்றார் இறே
இவரைப் போன்ற கண் உடையார் ஒருவரும் இல்லையே
இவருடைய கண் இறே எல்லாருக்கும் களை கண்
கண் அருளால் இறே எல்லாரையும் ரஷித்து அருளுவது

கண்ணிணை
கருணை பொழியும் திருக்கண்கள் –
அலர்ந்த தாமரைப் பூவில் இரண்டு வண்டுகள் அமர்ந்து இருப்பது போல்
திருக் கண்களானவை திரு முக மண்டலத்துக்கும் கண் காட்டிகளாய் இருக்கிற படி –
புன் முறுவலோடு கூடின தாமரை போன்ற முகத்தில் திரு உள்ளத்தில் பொங்கும்
கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள் –
இதற்கு தோற்று ஜிதந்தே புண்டரீகாஷா -என்கிறார்-
நேத்ரேன ஞானேனா -ஸ்வரூப வை லக்ஷண்யமும் ஞான வைலக்ஷண்யமும் சொல்லிற்று ஆயிற்று
ஸ்மயமாந முகாம் போஜாம் தயா மாந த்ருகஞ்சலம்–என்கிறபடி இறே சேர்த்தி இருப்பது
திருக் கண்களை அருளிச் செய்தது உத்தம அங்கத்திலே அழகுக்கு எல்லாம் உப லக்ஷணம்
வாழி செவ்வாய் -என்றும்
வார் காதும் திரு நாம மணி நுதலும் வாழியே என்றும் அவற்றையும் திரு நாமாந்தரங்களிலே காணலாய் இருக்கும்
அத்தாலே அவை இரண்டையும் மங்களா சாசனம் பண்ணி அருளினார்
இவர் ஜீயர் திருக் கண் மலரில் யாய்த்து ஜிதம் என்று தம்மை எழுதிக் கொடுத்தது –

பொய்யிலாத மணவாள மா முனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே
இவ்வளவும் ஸூ ரூப வை லக்ஷண்யம் அனுபவித்து மங்களா சாசனம் பண்ணின இவர்
இனி ஸ்வரூப குணமான ஞான வைலக்ஷண்யத்தையும் அனுபவித்து மங்களா சாசனம்
பண்ணுபவராக அதிலே இழிகிறார்
கட் கண் என்றும் உட் கண் என்றும்
நேத்ரேண ஞாநேந -என்றும் ஞான சஷுஸ் ஸூக் கள் இரண்டுக்கும் தர்சனத்தவம் ஒத்து இருக்கையாலே
ஒரு சேர்த்தி உண்டு இறே

அத்தாலே
பொய்யிலாத மணவாள மா முனி புந்தி–என்று ஞானத்தைப் பேசுகிறார்
புலன் -புந்தி -ஞானம்
பொய்யிலாத
இவர் விஷயத்தில் சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் யதார்த்தமாக உண்டு என்கை –
இனிச் சொல்ல மாட்டாதார் குறையே உள்ளது –
அன்றிக்கே
ஆஸ்ரிதரானவர்களுக்கு அசைத்தவாதி தோஷங்கள் வாராமல் நோக்கிப் போருமவர் என்றுமாம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிநாதாம்–கடாஷத்தாலே தோஷங்களைப் போக்கி அருளுபவர்
செறிந்தவர் தமேதத்தை மாற்றுபவராய் இருப்பாரே-

மணவாள மா முனி
ரக்ஷகர் இன்றிக்கே ஒழிந்தாலும் வடிவில் போக்யதையும் திரு நாம வைலஷண்யமும் விட ஒண்ணாததாய் இருக்கை
பொய்யிலாமை புந்திக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது ராமானுஜன் மெய் மதிக் கடல் –என்கிறபடி
அதி விலக்ஷண ஞானம் -உண்மை நன் ஞானமான யதார்த்த ஞானத்தை உடையவர் என்கை –

அதாவது
மெய் ஞானமும் இன்றியே -வினையியல் பிறப்பு அழுந்தி என்கிறபடி
சம்சார ஆர்னவ மக்நரானவர்களை ஞானக் கையால் யுத்தரித்துப் போருமவர் என்கை –
சேதனர் படும் ஆபத்தைக் கண்டால் கையாளும் காலாலும் இறே இவர் எடுத்து ரக்ஷிப்பது-
ஞானக்கை தந்து வந்து அருளி எடுத்த புந்தி வாழியே
ஞான பிரதானர்களாய் இறே இவர்கள் இருப்பது
தீ பக்த்யாதி குண ஆர்ணவம் என்றும்
புந்தி வாழி -என்றும் அருளிச் செய்து போருகையாலே
ஞானம் சார பூத குணமாகையாலே அத்தை பிரதானமாகச் சொல்லக் கடவது
தத்ர சத்வம் நிர்மலத்வாத் ப்ரகாசகம் –என்கிறபடியே சுத்த சத்வமயமான விக்ரஹ மாகையாலே
உள்ளில் பிரகாஸித்வம் என்ன-உள்ளில் உள்ளவற்றை பிரகாசிப்பிக்கக் கடவது இறே
புந்தி என்று ஞான மாத்ரத்தைச் சொன்னது பக்தியாதிகளுக்கும் உப லக்ஷணம்
மங்களம் நிர்மல ஞான பக்தி வைராக்ய ராசியே -என்னக் கடவது இறே

வாழி –
மங்களா சாசனம் பண்ணி அருளினார்
ஞான பக்த்யாதிகள் இறே ஆத்ம அலங்காரம் என்பது
ஞான பக்த்யாதி பூஷிதம்-என்பது போலே
அன்றிக்கே
ஆச்சார்யனுக்கு அடையாளம் அறிவும் அனுஷ்டானம் என்றும்
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையவனான குரு -என்றும் இறே
ஆச்சார்ய லக்ஷணம் அருளிச் செய்வது
ஆகையால் ஆஸ்ரிதருடைய அஞ்ஞானத்தைப் போக்கி சம்பந்த ஞானத்தை விளைவித்து
கைங்கர்ய பர்யந்தமாக நடத்திக் கொண்டு போவது எல்லாம் தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே-என்கை –

மணவாள மா முனி புந்தி -என்கையாலே
இவருடைய ஞானம் அல்லாதாருடைய ஞானத்தைக் காட்டில் அத்யந்த விலக்ஷணமாய்
தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ர்யம்-அலகு அலகாய் காண வல்லதாய்- ஆழ்ந்த பொருள்களை உபதேசித்து அருளியவர்
நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -தாமரையாள் கேள்வன் ஒருவனையே-ஸ்ரீ யபதியை விஷயமாக உடைத்தாய் உடைய ஞானம்
அது தான் ததீய சேஷத்வம் ஆகிற சரம அவதியான எல்லை நிலத்தில் நிலை நின்று போவதாய் இருக்குமே
தத்வ த்ரயங்களோடு ஸ்ரீ வசன பூஷணம் கண்ட சகல ஸாஸ்த்ர ஆச்சார்யர் என்னக் கடவது இறே
நித்ய ஸ்ரீ நித்ய மங்களமாகச் செல்ல மங்களா சாசனம்

ஆக
இவை எல்லாவற்றாலும்
ஸ்ரீ கீதையை அருளிச் செய்த கண்ணன் என்னும்படி நிறை ஞானத்து ஒரு மூர்த்தியான
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனுடன் விகல்பிக்கலாம் படி ஞான நீதியாய் இருக்கும் இவருடைய ஞானமானது
கலி தோஷம் தட்டாமல் நித்ய மங்களமாய்ச் செல்ல வேண்டும் என்று வாழ்த்தி அருளினார் -என்கை
கலி தோஷத்தால் இறே சேதனருடைய ஞானம் அல்பீ பவித்துப் போவது-
இவர் பல்லவ ராயருக்கே கலி கண்டித்த திறல் வாழியே என்னக் கடவது இறே
கலி கன்றியான் அருளால் உயர்ந்தவர் இறே இவர் தான் –

இனி இவர் இப்படித் தம் ஞான அனுஷ்டானங்களால் ஞான விபாகமற சகல சேதனர்களையும்
ரஷித்துக் கொண்டு போவதால் வந்த புகழைச் சொல்கிறது
ஞாலம் உண்ட புகழ் போல் இருபத்தொரு புகழாய்த்து இது
தன் புகழ் நயவாருடைய புகழ் போற்றி இருக்கிற படி
அதாவது
ஞான வைபவத்த்தாலே வந்த புகழானது -தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்ததே -என்கிறபடியே –
நிரவதிக தேஜோ ரூபமாய் அப்ரதிஹதமாய் வாழ வேணும் என்கை –
புகழ் வாழி -என்ற அநந்தரம் -வாழி –
என்று இரட்டிப்பாய் இருப்பதற்கு பிரயோஜனம் பல்லாண்டு பல்லாண்டு என்கிறார் ஆகவுமாம்
அன்றிக்கே
நீள் புவியில் தன் புகழை நிறுத்துமவன் வாழியே–என்று கீழ்ச் சொன்ன யசஸ்ஸூக்கு ஆதாரமாய்
அநுக்தமான ஆத்ம குண வைலக்ஷண்யமும் அனவ்ரத பாவியாய்ச் செல்ல வேணும் என்று ஆசாசிக்கிறார் ஆகவுமாம்
அடியே தொடங்கி இதுவே இறே இவருக்கு யாத்திரை

இத்தால்
சரம பர்வமான ஜீயர் விஷயத்தில் மங்களா சாசனம் அநு கூலரானவர்க்கு அனவ்ரத கர்தவ்யம் என்று
அருளிச் செய்து தலைக்கட்டி அருளினார் ஆயிற்று

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ் வாழி
முந்நூல் உறை மார்பு முக்கோல் அங்கை வாழி
திண் தோள் வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாமம் மருவு நுதல் வாழி
பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே

மணவாள மா முனிகள் திருவடிகள் வாழியே
துவராடை வாழியே
இடை வாழியே
திரு நாபி வாழியே
யஜ்ஜோபவீதம் விளங்கும் திரு மார்பு வாழியே
முக்கோல் ஏந்திய திருக்கைகள் வாழியே
திருத்தோள்கள் வாழியே
பவளச் செவ்வாய் வாழியே
திருக்கண்கள் வாழியே
ராமானுஜ திவ்ய ஊர்த்வ புண்ட்ரம் வாழியே
திரு நெற்றி வாழியே
பொன் அரங்கின் மணவாள மா முனி வாழியே

—————————

ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்த்து

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –28-உபாசகனின் ஒழுக்கங்கள் /

June 18, 2020

நமஸ்தே கமலா வாஸே நமஸ் த்ரயந்த வாஸிநி
த்வத் ப்ரஸாதேந விதிவச் ச்ருதோ மந்த்ர சமாதிநா –1-
பிரதிபத்திச்ச சகலா ஸ்வரூபம் ச யதாஸ்திதம்
ஆஹோராத்ரிகம் ஆசாரம் இதா நீம் வக்தும் அர்ஹஸி -2-

ஸ்ரீ
ஏகோ நாராயண ஸ்ரீமான் அநாதி புஷ்கரேஷண
ஞான ஐஸ்வர்யா மஹா சக்தி வீர்ய தேஜோ மஹோததி –3-
ஆத்மா ச சர்வ பூதாநாம் ஹம்ஸோ நாராயணோ வசீ
தஸ்ய சாமர்த்ய ரூப அஹமேகா தத் தர்ம தர்மிநீ–4-
சாஹம் ஸ்ருஷ்ட்யாதிகாந் பாவாந் விதாதநா புந புந
ஆராதிதா ஸதீ ஸர்வாம்ஸ் தாரயாமி பவார்ணவாத்-5-

அவனுடைய சாமர்த்தியமும் குணங்களுமாக நான் -சம்சாரம் தாண்டி அக்கரைக்கு போகும் வழி காட்டுகிறேன் –

ததாமி விவிதான் போகான் தர்மேண பரிதோஷிதா
சத்தர்ம பர சமஸ்தாநா மமபி சத்த்வாதிகா தநு -6-
ஆசார ரூபோ தர்ம அசாவாசாரஸ் தஸ்ய லக்ஷணம்
தமாசாரம் ப்ரவஷ்யாமி ய சத்பிரநு பால்யதே -7-
ஹித்வா யோக மயீம் நித்ரா முத்தாயா பர ராத்ரத
பிரபத்யேத ஹ்ருஷீ கேசம் சரண்யம் ஸ்ரீ பதிம் ஹரிம்-8-
ப்ரபத்தேச்ச ஸ்வரூபம் தே பூர்வமுக்தம் ஸூ ரேஸ்வர
பூயச்ச ச்ருணு வஷ்யாமி ச யதா ஸ்யாத் ஸ்திரா த்வயி -9-
ஆசம்ய ப்ரயதோ பூத்வா ஸ்ம்ருத்வாஸ்த்ரம் ஜ்வலாநாக்ருதி
தத் ப்ரவிஸ்ய விநிஷ்க்ராந்த பூதோ பூத்வாஸ்த்ர தேஜஸா –10-

பிரபத்தியில் மஹா விசுவாசம் வேண்டும் -பின் க்ரீம் அஸ்த்ராய பட் அஸ்திர மந்த்ரம் கொண்டு
உள் புறத் தூய்மைப் படுத்திக் கொண்டு யாதாம்ய ஞானம் பெற வேண்டும்

ப்ரபத்திம் தாம் ப்ரயுஞ்ஜீத ஸ்வாங்கை பஞ்ச பிரந் விதாம்
பிராதி கூல்யம் பரித்யக்தம் ஆனு கூல்யம் ச சம்ஸ்ரிதம் -11-
மயா சர்வேஷு பூதேஷு யதா சக்தி யதா மதி
அலஸஸ்ய அல்ப் ஸக்தேச்ச யதா வஸ்வா விஜாநத -12-
உபாய க்ரியமாணாஸ்தே நைவ ஸ்யுஸ்தாரகா மம
அத அஹம் க்ருபனோ தீநோ நிர்லேபச் சாப்ய கிஞ்சன -13-
லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸோ திவ்யோ காருண்ய ரூபயா
ரக்ஷக சர்வ சித்தாந்தே வேதாந்ததே அபி ச கீயதே -14-
யந்மே அஸ்தி துஸ்த்யஜம் கிஞ்சித் புத்ரா தார க்ரியாதகம்
ஸமஸ்த மாத்மநா ந்யஸ்தம் ஸ்ரீ பதே தவ பாதயோ-15-
சரணம் பவ தேவேச நாத லஷ்மீ பதே மம
சக்ருதேவம் ப்ரபந்நஸ்ய க்ருத்யம் நைவாந்ய திஷ்யதே -16-

அநு கூல்ய சங்கல்பாதி பஞ்ச அங்கங்களுடன் சரணம் அடைந்தவனுக்கு மேலே செய்ய வேண்டியவை ஒன்றும் இல்லையே

உபாய அபாய முக்தஸ்ய வர்த்தமாநஸ்ய மத்யத
நரஸ்ய புத்திர் தவ்ர்பல்யாத் உபாயாந்தரம் இஷ்யதே -17-
அத பரம் சதாசாரம் ப்ரோஸ்யமாநம் நிபோத மே
ஆஸம் சாந சமுதிஷ்டேத் சர்வ பூத ஸூகோதயம்–18-
பவந்து சர்வ பூதாநி சாத்விகே விமலே பதி
பஜந்தாம் ஸ்ரீ பதிம் ஸாத்வத் விசந்து பரமம் பதம் -19-
இத்யாசாஸ்ய பிரியம் சம்யக் பூதேப்யோ மநசா கிரா
சரீர சோதநம் க்ருத்வா தர்ம சாஸ்த்ர விதாநதா-20-
ஸுவ்சம் ச விதிவத் க்ருத்வா பஷயே த்ருந்ததாவநம்
அதா சம்ய விதாதேந பவித்ரை சாஸ்த்ர சோதிதை -21-
ப்லாவயித்வாப் யுபாஸீத ஸந்த்யாம் த்ரை லோக்ய பாவ நீம்
மந்வயீ த்ரிவிதா சக்திர் ஸூர்ய சோமா அக்னி ரூபேண -22-

சூர்யன் அக்னி சோமன் ஆகிய மூன்று வடிவில் காணப்படும் எனது சக்தியே –

சுத்தயே சர்வ பூதாநாம் சந்த்யா தேவீ ப்ரவர்த்ததே
உபஸ்தாய விவஸ்மந்த வந்தஸ்தம் புருஷோத்தமம் -23-
குர்யாத் அக்னிவிதம் சம்யக் உபாதான மதாசரேத்
சதி வித்தே ந குர்வீதே உபாதானம் து விசஷண-24-
சப்த வித்தாகமா தர்ம்யா தாயோ லாப க்ரியா ஜய
பிரயோக கர்மா யோகச்ச சத் ப்ரதிக்ரஹ ஏவ ச -25-

செல்வம் சேர்க்க ஏழு நியாய வலிகள் -தாய பிராப்தி -லாபம் -செயல்கள் -விற்பது வாங்குவது -ஜெயம் –
அறிவு பிரயோகம் -கர்மயோகம் -நேர்மையான அன்பளிப்பு

ஸ்நானம் க்ருத்வா விதா நேந த்ரிவிதம் ஸாஸ்த்ர சோதிதம்
பூத சுத்தம் விதாயாத யாகமாந்தரம் ஆசரேத் -26-
ஸ்வயம் உத்பாதிதைர் ஸ்பீதைர் லப்தை சிஷ்யாதி தஸ்ததா
போகைர் யஜேதே மாம் விஷ்ணு பூமவ் வா ஸாஸ்த்ர பூர்வகம் -27-
அஷ்டாங்கேந விதாநேந ஹி அனுயாகாவசாநகை
ஸ்வாத்யாயம் ஆசரேத் சம்யக் பராஹ்ணே விசஷணே-28-

எங்களுக்கு அர்ப்பணித்து வேத அத்யயனம் செய்வானாக –

திவ்ய சாஸ்த்ராண் யதீயீத நிகமாம்ச்சைவ வைதிகான்
சர்வாநனுசரேத் சம்யக் சித்தாந்தாநாத்ம ஸித்தயே -29-
அலோலுபேந சித்தேந ராக த்வேஷ விவர்ஜித
ந நிந்தேந் மனசா வாசா சாஸ்த்ராண் யுச்ச வசாந்யபி -30-
தாவாந் மாத்ரார்த்த மாதத்யாத் யாவதா ஹி அர்த்த ஆத்மந
பூதாநாம் ஸ்ரேயசே சர்வே சர்வ சாஸ்த்ராணி தந்வதி -31-
தாம் தாம வஸ்தாம் ஸம்ப்ராப்ய தாநி ஸ்ரேயோ விதன்வதே
ஆதவ் மத்யே ச ஸர்வேஷாம் சாஸ்த்ராணாம் அந்திமே ததா -32-
ஸ்ரீ மான் நாராயண போக்தோ விதயைவ தயா தயா
அஹம் நாராயணஸ்தாபி சர்வஞ்ஞா சர்வ தர்சிநீ -33-
நிதா நஞ்ஞா பிஷக்கல்பா தத் தத் குர்வாதி ரூபிணீ
ப்ரவர்த்தயாமி சாஸ்த்ராணி தாநி தாநி ததா ததா -34-
அதிகாரானு ரூபேண பிரமாணாநி ததா ததா
அத்யந்த ஹேயம் ந க்வாபி ஸாஸ்த்ரம் கிஞ்சந வித்யதே -35-

சாகைகளைச் சேர்ந்த ஆச்சார்யர்கள் மூலம் உபதேசிக்கிறேன்
எந்த சாஸ்திரங்களையும் இகழக் கூடாது

ஸர்வத்ர ஸூலபம் ஸ்ரேய ஸ்வல்பம் வா யதி வா பஹு
தத கார்யோ ந வித்வேஷா யாவதர்த்தம் உபாஸ்ரயேத்–36-
சமயம் ந விசேத் தத்ர நைவ தீஷாம் கதாசன
தத ஸந்த்யாம் உபாஸீத பச்சிமாம் சார்த்த பாஸ்கராம் -37-
விதாயாக்ந் யர்த்த கார்யம் து யோகம் யூஞ்சீத வை தத
ஸூவி விக்தே கசவ் தேசே நிஸ் சலாகே மநோ ரமே -38-
ம்ருத்வாஸ் தரண சங்கீர்ணோ சேலாஜி நகு சோத்தரே
அந்தர் பஹிச்ச சம் சுத்தே யமாதி பரி சோதித-39-

சாஸ்திரங்களின் மேல் த்வேஷம் காட்டாமல் -தனது வர்ணாஸ்ரம தர்மம் -சந்தியாவந்தனம் போன்ற
நித்ய கர்மங்களை சாஸ்திரப்படி செய்ய வேண்டும்
யம நியமாதி த்யானம் -தர்ப்பம் மேல் அமர்ந்து சுத்தமான இடத்தில் அக்னி கார்யங்களைச் செய்ய வேண்டும் –

த்யானம் முறை விளக்கம் -அடுத்த ஐந்து ஸ்லோகங்கள் –

ஆசனம் சக்ரமாஸ்தாய பத்மம் ஸ்வஸ்திக மேவ வா
யத்ர வா ரமதே புத்திர் நாடீ மார்க்காந் நிபீட யந்-40-

விஜித்ய பவன க்ராமம் ப்ரத்யஹார ஜிதேந்த்ரிய
தாரணா ஸூ ஸ்ரமம் க்ருத்வா மாம் த்யாயேத் ஸூ ஸமாஹிதா -41-

அநவ் பம்யாம நிர்தேஸ்யாம விகல்பாம் நிரஞ்சனாம்
ஸர்வத்ர ஸூலபாம் லஷ்மீம் சர்வ ப்ரத்யயாம் கதாம் -42-

சாகாராமதவா யோகீ வரா பயகராம் பராம்
பத்ம கார்போ பமாம் பத்மம் பத்ம ஹஸ்தாம் ஸூ லக்ஷணாம்–43-

யத்வா நாராயண அங்கஸ்தாம் ஸமாஸ்ரயம் உபாகதாம்
சிதா நந்த மயீம் தேவீம் தாத்ருசம் ச ஸ்ரீயபதிம் -44-

பஹுதா யோக மார்க்காஸ் தே வேதி தவ்யாஸ் ஸூரேஸ்வர
தேஷ் வேகம் தர்ம மாஸ்தாயா பக்தி ஸ்ரத்தா ச யத்ர தே –45-

சம்யக் நித்யாநமுத் பாத்ய சமுதிம் சமு பாஸ்ரயேத்
த்யாதா த்யாநம் ததா த்யேயம் த்ரயம் யத்ர விலீயதே–46-
ஏகைவாஹம் ததா பாஸே பூர்ணா ஹந்தா சநாதநீ
ஏகத்யமனு சம் ப்ராப்தே மயி சம்விந் மஹோ ததவ்–47-

நாந்யத் ப்ரகாஸதே கிஞ்சி தஹ மேவ ததா பரா
யோகாச் ஸ்ராந்தோ ஜபம் குர்யாத் தஸ்ராந்தோ யோகமாசரேத் –48-

தஸ்ய ஷிப்ரம் ப்ரஸீதமி ஜப யோகாபி யோகிந
நீத் வைவம் பிரதமம் யாமம் ஜெப யோகாதிநா ஸூ தீ –49-

யோகஸ்த ஏவ தந்தீரஸ்ததோ யாம த்வயம் ஸ்வபேத்
உத்தாய பர ராத்ரே து பூர்வோக்த மனு சஞ்சரேத்–50-

இதி வ்யாமிஸ்ர க்ருத்யம் தத் ப்ரோக்தம் பல ஸூதந
அச்சித்ரான் பஞ்ச காலாம்ஸ்து பகவத் கர்மணா நயேத்—51

தீஷித பஞ்சகாலஞ்சோ லஷ்மீ மந்த்ர பராயணா
அந்தரம் நாநயோ கிஞ்சித் திஷ்டாயாம் பல ஸூதந–52–
லஷ்மீ மந்த்ர உச்சாரணம் பஞ்ச கால பாராயண உபாசனுக்கு போலே பலத்தில் துல்யம்

உபாவேதவ் மதவ் விசத்தோ மாம் தனுஷயே
சக்ர பத்ம தரோ நித்யம் பவேத் லஷ்மீ பாராயண -53-

ஸ்வ தார நிரதச்ச ஸ்யாத் ப்ரஹ்மசாரீ சதா பவேத்
மத மந்த்ரம் அபி அசேத் நித்யம் மத் ஸிதோ மத் பாராயண -54-

சர்வ அநுச்சா வசாஞ் சப்தாம்ஸ் தத் பாவேந விபாவயேத்
அக்நீ ஷோம விபாகஞ்ச க்ரியா பூதி விபாகாவித் –55-

ஸ்தூல ஸூஷ்ம பரத்வாநாம் வேதிதா ச யதார்த்ததா
அங்கோ பாங்காதி தந்த்ரஞ்ஜோ முத்ரா பேத விதாநவித் –56-

அந்தர்யாக பஹிர் யாக ஜெப ஹோம விசஷண
புரச் சரண பேதஞ்ஞ சித்தி சாதன தத்தவித்–57-

சம்ஜ்ஞா மூர்த்திர் விதாநஜ்ஞஸ் தத் சாதன விதாநவித்
சாரீர ஆதாரார தத்வஞ்ஜோ யோக தத்வ விசஷண–58-

ஏவம் பிரகார சாஸ்த்ரார்த்தா வேதீ தீரோ விசஷண
அஹிம்ஸ்நோ தமதாநஸ்தோ மாம் பஜேத ஸ்ரியம் நர -59-

உபாசகன் என்னையே சப்த ப்ரஹ்மமாக அறிந்து
அக்னி சோமன் இவற்றின் பேதங்களையும் -க்ரியா சக்தி பூதா சக்தி பேதங்களையும்
ஸ்தூல சக்தி ஸூஷ்ம சக்தி பேதங்களையும்
தந்திரங்களையும் அங்கங்களையும் முத்திரைகளையும்
அந்தர்யாகம் பஹிர்யாகம் ஜபம் ஹோமம் இவற்றையும்
உபேயம் உபாயம் இவற்றையும் ஆதார சக்ரம் யோக தத்வம் சாஸ்திரங்களையும் அறிகிறானோ
அஹிம்சை சாந்தி கருணை கடைப்பிடிக்கிறானோ அவனே ஸ்ரீ யாகிய என்னை விரும்பி வழி படுகிறான்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணமும் சங்க இலக்கியங்களும் –

June 16, 2020

ஸ்ரீ கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம்,
சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது.
ஏழாம் காண்டமாகிய “உத்திர காண்டம்” என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய “ஒட்டக்கூத்தர்” இயற்றினார் என்பர்.
கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,500 பாடல்களையும் கொண்டவை-

1-பாலகாண்டம் 24 படலங்கள்
2-அயோத்தியா காண்டம் 13 படலங்கள்
3-ஆரண்ய காண்டம் 13 படலங்கள்
4-கிட்கிந்தா காண்டம் 17 படலங்கள்
5-சுந்தர காண்டம் 14 படலங்கள்
6-யுத்த காண்டம் 42 படலங்கள்

————-

புறநானூறும் இராமாயணமும்

மக்கள் இடையே வழக்கத்தில் இருந்த சில இராமாயணக் கதை நிகழ்ச்சிகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
புறநானூற்றில் வரும் ஒரு குறிப்புக் கருதத்தக்கது.

குரங்குகள் அணிந்த நகைகள்
மிகுந்த ஆற்றல் உடைய இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றான்.
அப்போது வலிமையுடைய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான்.
விண் வழியே கொண்டு செல்லும்போது அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே
போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன.
எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை.
அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன.
இதைப்போல், இளஞ்சேட் சென்னி என்ற வள்ளலிடம் இசைக் கலைஞன் பரிசாகப் பெற்ற விலை மதிக்க முடியாத
பொன் நகைகளை, அவனது வறுமை மிக்க உறவினரும் சுற்றத்தாரும் அணிந்து கொள்ளும் முறை தெரியாமல்
உடம்பில் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர்.
இது வறுமைத் துன்பத்தையே கண்டு வந்த கலைஞனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பைத் தந்தது என்று
அவன் கூறுவதாக ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் புறநானூற்றில் பாடியுள்ளார்.
இராமாயண நிகழ்ச்சி சங்கப் பாடலில் இவ்வாறு உவமையாகப் பாடப்பட்டுள்ளது.
தெரிந்த ஒன்றைக் காட்டித் தெரியாததை விளக்குவதே உவமையின் முதன்மையான பயன்பாடு.
எனவே, இராமாயணக் கதை, அன்று மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாக இருந்திருக்கிறது.

கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு–(புறம். 378)

கடும் = கடுமை; தெறல் = சினத்தல் / அழித்தல்; வலி = வலிமை; அரக்கன் = இராவணன்; வௌவிய = கவர்ந்த;
ஞான்று = அப்போது; மதர் அணி = மதிப்புமிக்க அணிகள்; இழை = அணிகலன்கள்;
செம்முகப் பெருங்கிளை = சிவந்த முகத்தை உடைய குரங்கின் கூட்டம்; பொலிந்து = நகைகளை அணிந்து பொலிவு பெறுதல்.

அகநானூறும் இராமாயணமும்

மேலே குறிப்பிட்டதைப் போன்று அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இராமாயணக் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.

பறவைகளின் ஒலியும் இராமனும்
காதலில் ஈடுபட்டிருக்கும் தலைவி ஒருத்தியைப் பற்றி ஊரார் பழி தூற்றிக் கொண்டிருந்தனர்.
இதற்கு அலர் தூற்றுதல் என்று பெயர். ஒருநாள் அத்தலைவன் வந்து அத் தலைவியையே மணம் செய்து கொண்டான்.
அன்றே ஊரார் பழி தூற்றுவதை நிறுத்திக்கொண்டனர். இதனால் அத்தலைவியைப் பற்றி ஊர் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்த
பழிப்பேச்சின் ஓசை உடனடியாக நின்றுவிட்டது. இதற்குப் புலவர் ஓர் உவமையை அழகாகக் கூறியுள்ளார்.
இலங்கைப் படையெடுப்பின்போது இராமன் ‘தொன்முதுகோடி’ எனப்படும் தனுஷ்கோடியில் வந்து தங்கி இருந்தான்.
அவ்வாறு தங்கி இருந்த இடம் பறவைகள் ஓயாது ஆரவாரம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தின் நிழல்.
இராமன் இலங்கைப் படையெடுப்பு தொடர்பாகத் தன் தோழர்களோடு கலந்து உரையாடிக் கொண்டிருந்தான்.
பறவைகளின் ஓசை தடங்கலாக இருந்தது. தன் கையை உயர்த்திக் காட்டினான்.
உடனே அத்தனை பறவைகளும் அமைதி கொண்டு அடங்கிவிட்டன.
இதைப்போல, தலைவன் தலைவியை மணமுடித்துக் கைப்பிடித்த உடனேயே, அதுவரை ஊரெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த
பழிப்பேச்சுகள் அடங்கின என்று தோழி கூறுவதாக அந்தப் பாடலில் புலவர்
இராமாயண நிகழ்ச்சியை உவமையாகக் கையாண்டுள்ளார்.

அப்பாடல் வரிகள் இதோ:
வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே–(அகம். 70)

(வெல்வேல் = வெற்றி பொருந்திய வேல்; கவுரியர் = பாண்டியர்; தொன்முது கோடி = பழமையான தனுஷ்கோடி எனும் ஊர்;
இரும் = பெரிய; பௌவம் = கடல்; இரங்கு = ஒலிக்கும்; முன்துறை = துறைமுகம்; வெல்போர் = வெற்றி பொருந்திய போர்;
அருமறை = மந்திர ஆலோசனை / போருக்கு முன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம்; அவித்த = அடங்கிய;
வீழ் = விழுது; ஆலம் = ஆலமரம்; அவிந்தன்று = அடங்கியது; அழுங்கல் = ஆரவாரம்)

மேலே கூறப்பெற்ற இரண்டு நிகழ்ச்சிகளுமே வான்மீகி இராமாயணத்திலோ,
கம்பராமாயணத்திலோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

———–

3.2.3 சிலம்பும் இராமாயணமும்

இராம அவதாரம் பற்றிய புராணக் கதையைச் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.
இராமாயணக் கதை சுருக்கமாகச் சிலப்பதிகாரத்தில் இரு இடங்களில் பேசப்படுகிறது.

ஊர்காண் காதை
தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ–(சிலம்பு. ஊர்காண் காதை. 46-49)

(தாதை = தந்தை / தயரதன்; மாது = பெண் / சீதை; வேதமுதல்வன் = நான்முகன் / பிரம்மன்;
வேதமுதல்வன் பயந்தோன் = பிரம்மனைப் பெற்றெடுத்த திருமால்; நெடுமொழி = பழங்கதை.)

இராமன் தன் தந்தையாகிய தயரதன் ஆணையின் பேரில் மனைவியுடன் காட்டினை அடைந்தான் (வனவாசம் சென்றான்).
அந்தக் காட்டில் வாழும் வாழ்க்கையிலும் மனைவியை இழந்து பெருந்துன்பம் அடைந்தான்.
பிரம்மனை ஈன்ற திருமாலுக்கே இந்த நிலை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாரும் அறிந்த கதையல்லவா?
இப்பகுதி, கோவலனுக்குச் சொல்லப்படும் ஆறுதல் மொழியாக இடம்பெற்று உள்ளது.

ஆய்ச்சியர் குரவை
திருமாலைப் போற்றி இடைக்குல மக்கள் பாடும் ஆய்ச்சியர் குரவையிலும்
அவனது இராம அவதாரம் பற்றிய குறிப்பு வருகிறது.

மூஉலகம் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோ அரணும் போர் மடியத் தொல்இலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே (சிலம்பு- ஆய்ச்சியர் குரவை)

(மூஉலகு = மூன்று உலகம் / மேலுலகம், கீழ் உலகம், பூமி ; ஈரடி = கால்கள்; நிரம்பா வகை = குறைவுபடும்படி;
சேப்ப = சிவக்க; சோ அரண் = சோ என்ற மதில்; சீர் = புகழ்.)

திருமாலின் பத்து அவதாரங்களுள் வாமன அவதாரமும் ஒன்று. வாமன அவதாரத்தில் மாவலி மன்னன்
தானமாகத் தந்த மூன்றடி மண்ணையும் அளந்து பெறுவதற்காக வாமனன் பேருருக் கொண்டான்.
மூன்று உலகத்தையும் இரண்டு அடிகளால் அளந்தான். அத்தகைய திருவடிகள் சிவக்க,
இராமன் தன் தம்பியோடு, காட்டிற்குச் சென்றான். சோ என்னும் அரணையும் தொன்மையுடைய
இலங்கையையும் அழித்தவன் அவனே. அத்தகையவனுடைய புகழைக் கேட்காத
செவிதான் என்ன செவியோ என்று ஆய்ச்சியர் குரவைப் பாடல் விவரிக்கிறது.

சிலம்பு தரும் செய்தி
சங்க இலக்கியங்கள் கூறும் இராமாயணச் செய்தி வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறாதது.
ஆனால் சிலப்பதிகாரம் கூறும் செய்தி வான்மீகி இராமாயணத்தை அடி ஒற்றியது.
மேலும் திருமால் அவதாரமாக இராமன் கருதப் பெற்றதையும் விவரிப்பது.

பிற்கால இராமாயணங்கள்

கம்பருக்கு முன் தமிழ்நாட்டில் நிலவிய இராமாயணம் பற்றிய செய்திகளை இதுவரை தெரிந்து கொண்டோம்.
இவையே தமிழ் இலக்கியத் தொடக்க காலத்தில் உள்ள செய்திகளாக அறிய முடிகிறது.
பின்னாளில் பல்லவர் காலத்தில் ஆழ்வார்கள் இராம அவதாரத்தின் பல்வேறு செய்திகளைப் பாடி இருக்கிறார்கள்.
இவை யாவும் கம்பருக்கு முன் உள்ள இராமாயண இலக்கியங்களாக அறிய முடிகிறது.

கம்பருக்குப் பின்னரும் தமிழில் இராமாயணங்கள் தோன்றி உள்ளன. அவை வருமாறு.
தக்க ராமாயணம்
குயில் ராமாயணம்
ராமாயண அகவல்
கோகில ராமாயணம்
இராமாயண கீர்த்தனை

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கம்ப ராமாயணம் -ஸ்ரீ ஸூந்தர காண்டம்-6–பொழில் இறுத்த படலம்-

June 16, 2020

விடைபெற்ற அனுமனின் உள்ள நிலை
நெறிக் கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான்,
பொறிக் குல மலர்ப் பொழிலிடைக் கடிது போவான்,
‘சிறுத் தொழில் முடித்து அகல்தல் தீது’ எனல், தெரிந்தான்;
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான். 1

‘ஈனம் உறு பற்றலரை எற்றி, எயில் மூதூர்
மீன நிலையத்தின் உக வீசி, விழி மானை
மானவன் மலர்க் கழலில் வைத்தும்இலென் என்றால்,
ஆனபொழுது, எப் பரிசின், நான் அடியன் ஆவேன்? 2

‘வஞ்சனை அரக்கனை நெருக்கி, நெடு வாலால்
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே,
வெஞ் சிறையில் வைத்தும்இலென்; வென்றும்இலென்; என்றால்,
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ? 3

‘கண்ட நிருதக் கடல் கலக்கினென், வலத்தின்
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின்
மண்டவுதரத்தவள் மலர்க் குழல் பிடித்து,
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ? 4–மண்டவுதரத்தவள்–மண்டோதரி

மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது அன்று
ஒட்டி இவ்வரக்கரை யுலைத்து உரிமை எல்லாம்
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர்
மூட்டும் வகை யாது கொல் என்று முயல்கின்றான் –5-

இப் பொழிலினைக் கடிது இறுக்குவென் இறுத்தால்
அப் பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர்
வெப்புறு சினத்தர் எதிர்த்து மேல் வருவர் வந்தால்
துப்புறு முருக்கி யுயிர் உண்பல் இது சூது ஆல்–6-

வந்தவர்கள் வந்தவர்கள் மீளகிலர் மடிந்தால்
வெந்திறல் அரக்கனும் விலக்கு அரு வலத்தால்
முந்தும் எனின் அன்னவன் முடித்தலை இடித்து என்
சிந்தையுறு கோபமும் அவித்து இனிது செல்வேன் -7-

அசோக வனத்தை அனுமன் அழித்தல்
என்று நினையா, இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்;
அன்று, உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்;
துன்று கடி காவினை, அடிக்கொடு துகைத்தான். 8

முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த;
மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த;
இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த;
ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த. 9

வேரொடு மறிந்த சில; வெந்த சில; விண்ணில்
காரொடு செறிந்த சில; காலினொடு வேலைத்
தூரொடு பறிந்த சில; தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்த சில; உக்க, சில நெக்க; 10

சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் போர்
ஆனன நுகரக் குளரும் ஆன; அடி பற்றா
மேல் நிமிர விட்டன, விசும்பின் வழி மீப் போய்,
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த. 11

அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம்
குலைந்து உக விடிந்தன குலக் கிரிகளோடு
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து
உலைந்து விழு மீனினொடு வெண் மலர் உதிர்ந்த –12-

முடக்கும் நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும் வகை வீசின களித்த திசை யானை
மடப் பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியன ஒத்தன எயிற்றினிடை ஞால்வ –13-

விஞ்சை உலகத்தினும் இயக்கர் மலை மேலும்
துஞ்சல் இல் வானவர் துரக்க நகர்த்தும்
பஞ்சவடி வஞ்சியர் கண் மொய்த்தனர் பறித்தார்
நஞ்சம் அனையானுடைய சோலையில் நறும் பூ –14-

பொன் திணி மணி பரு மரம் திசைகள் போவ
மின் திரிய ஒத்தன வெயில் கதிரும் ஒத்த
ஒன்றினொடும் ஒன்றிடை புடைத்து உதிர ஊழில்
தம் திரள் ஒடுக்கி விழு தாரகையும் ஒத்த – 15-

புள்ளினொடு வண்டும் மிஞ்றும் கடி கொள் பூவும்
கள்ளும் முகையும் தளிர்களோடு இனிய காயும்
வெள்ளம் நெடு வேலையிடை மீன் இனம் விழுங்கித
துள்ளின மரம் பட நெரிந்தன துடித்த –16-

தூவிய மலர்த் தொகை சுமந்து திசை தோறும்
பூவின மணம் நாறுவ புலால் கமழ்கிலாத
தேவியர்களோடு உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனில் ஆய திரை ஆர் கலிகள் அம்மா –17-

இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும்
தொடர்ந்தன துரந்தன படிந்து நெறி தூரக்
கடந்து செலவு என்பது கடந்த இரு காலால்
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் —18-

வேனில் விளையாடு சுடரோன் ஓளி விம்மும்
வானினிடை வீசிய வரும் பணை மரத்தால்
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடியாய
வானம் இடியால் ஓடியும் மால் வரைகள் மான –19-

எண்ணில் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே
தண்ணம் மழை போல் இடை தழைத்தது சலத்தால்
அண்ணல் அனுமன் அடல் இராவணனது அந்நாள்
விண்ணின் ஒரு சோலை யுளதாம் என விதித்தான் –20-

தேனுறை துளிப்ப நிறை புள் பல சிலம்பப்
பூ நிறை மணித்தரு விசும்பினிடை போய்
மேல் முறை நெருக்க ஓளி வாளோடு வில் வீச
வானிடை நடாய நெடு மானம் எனலான–21-

சாகம் நெடு பணை தழைத்தன தனிப்போர்
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வன நாநா
மாகம் நெடு வானிடை இழிந்து புனல் வாரும்
மேகம் எனலாய நெடு மா கடலின் வீழ்வ –22-

ஊனம் அற்றிட மண்ணின் உதித்தவர்
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என
தானம் கற்பக தண் தரு விண் தலம்
போன புக்கன முன் உறை பொன்னகர் –23-

இராவணன் கொண்டு வந்தவ கற்பகம் மீண்டும் ஸ்வர்க்கம் போனதாம் –
அஷ்ட வசுக்கள் பீஷ்மர் போலே பிறந்து போனமை போலே

மணி கொள் குட்டிமம் மட்டித்து மண்டபம்
துணி படுத்தி அயல் வாவிகள் துர்த்து ஒளிர்
திணி சுவர்த்தலம் சிந்தி செயற்கு அரும்
பணி படுத்து உயர் குன்றம் படுத்தரோ -24-குட்டிமம் -திண்ணை –

வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராயப்
பாங்கர் செண்பக பத்தி பறித்து அயன்
மாங்கனிப் பணை மட்டித்து மாற்றியே — 25-

சந்தநங்கள் தகர்ந்தன தாள் பட
இந்தனங்கள் வெந்து எரி சிந்திட
முன்பு அநங்கன் வசந்தம் முகம் கெட
நந்தனங்கள் கலங்கி நடுங்கவே –26-

காமரம் களி வண்டு கலங்கிட
மா மரங்கள் மடிந்தன மண்ணொடு
தாமரங்க அரங்கு தகர்ந்து உகப்
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே–27-

குழையும் கொம்பும் கொடியும் குயில் குலம்
விழையும் தண் தளிர் சூழலும் மென் மலர்ப்
புழையும் வாசப் புதும்பும் புலன் கொள் தேன்
மழையும் வேண்டும் மயிலும் மடிந்தவே – 28-

பவள மாக் கொடி வீசின பல் மழை
துவளும் மின் எனச் சுற்றிடச் சூழ் வரை
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன
கவளம் யானையின் ஓடையின் காந்தவே –29-

பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம்
இற எடுத்த இடி குரல் ஓசையும்
அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின்
புற நிலத்தினும் கைமிகப் போயிதே-30-அறவன் -திருவடி

பாடலம் படர் கோங்கோடும் பன்னிசைப்
பாடல் அம் பனி வண்டொடு பல் திரைப்
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன
பாடு அலம் பெறப் புள்ளினம் பாறவே-31-பாடலம்–பாதிரி மரங்கள்

வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன
விண்டு அலம் புக நீங்கிய வெண் புனல்
விண் தலம் புக நீள் மரம் வீழ்ந்தவே -32-விண்டு -விஷ்ணு

தாமரைத் தடம் பொய்கை செம் சந்தனம்
தாம் அரைத்தன ஒத்த துகைத்தலின்
காமரம் களி வண்டொடும் கள்ளோடும்
கா மரக் கடல் பூக்கடல் கண்டவே -33-

சிந்துவாரம் திசை தொறும் சென்றன
சிந்து வரா அம் புரை திரை சேர்ந்தன
தம் துவாரம் புதவோடு தாள் அறத்
தந்து ஆரம் துகள் படச் சாய்ந்தவே –34

சிந்துவாராம் -நொச்சி மரங்கள் –
துவாரம் புதவோடு தாள் அறத் தந்து ஆரம் துகள் படச் சாய்ந்தவே-வாசல்கள் கதவும் தாழ்பாள்களும்
முறிந்து போம்படி சந்தன மரங்கள் தூக்கி எறியப்பட்டு துகளாகும் படி விழுந்தன –

நந்த வானத்து நாள் மலர் நாறின
நந்த வானத்து நாள்மலர் நாறின
சிந்து அவ்வானம் திரிந்து உகச் செம்மணி
சிந்த வால் நந்து இரிந்த திரைக்கடல் -35-
நந்த வானத்து நாள் மலர் நாறின -நறுமணம் மிக்க நந்தவனத்து அன்று அலர்ந்த பூக்கள் திருவடி வீசியதால்
நந்த–மிகுதியாக
வானத்து நாள்மலர் நாறின -ஆகாசத்தில் நக்ஷத்ரங்கள் போல் விளங்கின
சிந்து -புளிய மரங்கள்
அவ்வானம் திரிந்து உகச் –ஆகாசத்தில் சுழன்று சமுத்ரத்தில் விழ
திரைக்கடல் செம்மணி -அலைகளை உடைய கடலிலே கர்ப்பத்தில் உள்ள அழகிய முத்துக்களை
சிந்த வால் நந்து -வெண் நிறம் உள்ள சங்கங்கள்
இரிந்த -நிலை கெட்டு ஓடின

புல்லும் பொன் பணை பண் மணிப் பொன் மரம்
கொள்ளும் இப்பொழுதே என்னும் கொள்கையால்
எல்லி இட்டு விளக்கிய இந்திரன்
வில்லும் ஒத்தன விண்ணுற வீசின 36-

மயக்கு இல் பொன் குலம் வல்லிகள் வாரி நேர்
இயக்குற திசை தொறும் எறிந்தன
வெயில் கதிர் கற்றை அற்று உற வீழ்ந்தன
புயல் கடல்தலை புக்கன போல்வன –37-

ஆனைத் தானமும் ஆடல் அரங்கமும்
பானைத் தானமும் பாய் பரி பந்தியும்
ஏனைத் தார் அணித் தேரோடும் இற்றன
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே –38-

பெரிய மா மரமும், பெருங் குன்றமும்,
விரிய வீசலின், மின் நெடும் பொன் மதில்
நெரிய, மாடம் நெருப்பு எழ, நீறு எழ,
இரியல் போன, இலங்கையும் எங்கணும். 39

‘”தொண்டை அம் கனி வாய்ச் சீதை துயக்கினால் என்னைச் சுட்டாய்;
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீசக்
கண்டனை நின்றாய்” என்று, காணுமேல், அரக்கன் காய்தல்
உண்டு’ என வெருவினான்போல், ஒளித்தனன், உடுவின் கோமான். 40

காசு அறு மணியும், பொன்னும், காந்தமும், கஞல்வது ஆய
மாசு அறு மரங்கள் ஆகக் குயிற்றிய மதனச் சோலை,
ஆசைகள்தோறும், ஐயன் கைகளால் அள்ளி அள்ளி
வீசிய, விளக்கலாலே, விளங்கின உலகம் எல்லாம். 41

கதறின வெருவி, உள்ளம் கலங்கின, விலங்கு; கண்கள்
குதறின பறவை, வேலை குளித்தன; குளித்திலாத
பதறின; பதைத்த; வானில் பறந்தன; பறந்து பார் வீழ்ந்து
உதறின, சிறையை; மீள ஒடுக்கின உலந்து போன. 42

தோட்டோடும் துதைந்த தெய்வ மரம் தொறும் தொடுத்த புள் அம்
கூட்டோடும் துறக்கும் புக்க குன்று எனக் குலவும் திண் தோள்
சேடு அகல் பரிதி மார்பன் சீறி தீண்டல் தன்னால்
மீட்டவன் கருணை செய்தால் பெரும் பதம் விளம்பலாமோ –43

சீதை சிறை இருந்த மரம் மட்டும் அழியாது திகழ்தல்
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை,
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும்,
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம் முறை, ஐயன் வைகும் ஆல் என, நின்றது அம்மா! 44

கதிரவன் தோன்றுதல்
உறு சுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு
அறிகுறியாக விட்டாள்; ஆதலான், வறியள் அந்தோ!
செறி குழல் சீதைக்கு அன்று, ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி,
எறி கடல் ஈவது என்ன, எழுந்தனன், இரவி என்பான். 45

வனத்தின் பொழில் அழித்து நின்ற அனுமனின் நிலை
தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து, ஒரு தமியன் நின்றான்,
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்;
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான்;
ஊழியின் இறுதிக் காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான். 46-

அனுமனைக் கண்டு அஞ்சிய அரக்கியர் வினாவும், சீதையின் மறுமொழியும்
இன்னன நிகழும் வேலை, அரக்கியர் எழுந்து பொங்கி,
பொன்மலை என்ன நின்ற புனிதனைப் புகன்று நோக்கி,
‘அன்னை! ஈது என்னை மேனி? யார்கொல்?’ என்று, அச்சம் உற்றார்,
நன்னுதல் தன்னை நோக்கி, ‘அறிதியோ நங்கை?’ என்றார். 47

‘தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்,
தூயவர் துணிதல் உண்டோ , நும்முடைச் சூழல் எல்லாம்?
ஆய மான் எய்த, அம்மான், இளையவன், “அரக்கர் செய்த
மாயம்” என்று உரைக்கவேயும், மெய்என மையல் கொண்டேன். 48-

அனுமன் வேள்வி மண்டபத்தை அழித்தல்
என்றனள்; அரக்கிமார்கள் வயிறு அலைத்து, இரியல்போகி,
குன்றமும், உலகும், வானும், கடல்களும், குலையப் போனார்;
நின்றது ஓர் சயித்தம் கண்டான்; ‘நீக்குவன் இதனை’ என்னா,
தன் தடக் கைகள் நீட்டிப் பற்றினன், தாதை ஒப்பான். 49-

கண் கொள அரிது மீது கால் கொள அரிது திண் கால்
எண் கொள் அரிது இராவும் இருள் கொள் அரிது மாகம்
விண் கொள் நிவந்த மேரு வெள்குற வெதும்பி
புண் கொள வுயர்ந்தது இப்பார் பொறை கொள அரிது போல் ஆம் –50-

பொங்கு ஓளி நெடு நாள் ஈட்டிப் புதிய பால் பொழிவது ஒக்கும்
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன
அம் கை பத்து இரட்டியான் தன் ஆணையால் அழகு மாளப்
பங்கயத்து ஒருவன் தானே பசும் பொன்னால் படைத்தது அம்மா –51-

தூண் எலாம் சுடரும் காசு சுற்று எலாம் முத்தம் ஸ்வர்ணம்
பேணல் ஆம் மணியின் பத்தி பிடரி எல்லாம் ஒளிகள் விம்மச்
சேண் எலாம் விரியும் காற்றைச் சேய் ஓளிச் செல்வதற்கேயும்
பூணல் ஆம் எம்மனோரால் புகழலாம் புதுமைத் தன்றே –52-

வெள்ளி யம் கிரியைப் பண்டு வெந்தொழில் அரக்கன் வேரொடு
அள்ளினன் என்னக் கேட்டான் அத் தொழிற்கு இழிவு தோன்றப்
புள்ளி மா மேரு என்னும் பொன் மலை எடுப்பான் போல்
வள்ளுகிர்த் தடக்கை தன்னால் மண்நின்றும் வாங்கினான் அண்ணல் -53-

விட்டனன், இலங்கைதன்மேல்; விண் உற விரிந்த மாடம்
பட்டன, பொடிகள் ஆன; பகுத்தன பாங்கு நின்ற;
சுட்டன பொறிகள் வீழத் துளங்கினர், அரக்கர்தாமும்;
கெட்டனர் வீரர், அம்மா!-பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்? 54

சோலை காக்கும் பருவத் தேவர் இராவணனிடம் செய்தி தெரிவித்தல்
நீர் இடு துகிலர்; அச்ச நெருப்பு இடு நெஞ்சர்; நெக்குப்
பீரிடும் உருவர்; தெற்றிப் பிணங்கிடு தாளர்; பேழ் வாய்,
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர்; ஓடி உற்றார்;-
பார் இடு பழுவச் சோலை பாலிக்கும் பருவத் தேவர். 55

அரி படு சீற்றத்தான் அருகு சென்று அடியில் வீழ்ந்தார்
கரி படு திசையில் நீண்ட காவலர் காவல் ஆற்றோம்
கிரி படு குலவத் திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச
எரி படு துகிலின் எய்தின் இற்றது கடி கா என்றார் — 56-

சொல்லிட எளியது என்றால் சோலையைக் காலால் கையால்
புல்லோடு துகளும் இன்றிப் பொடிபட நூறிப் பொன்னால்
வில்லிடு நேரம் தன்னை வேரொடு வாங்கி வீசச்
சில் இடம் ஒழியச் செல்வ இலங்கையும் சிதைந்தது என்றார் –57-

இராவணன் இகழ்ந்து நகுதலும், காவலர் அனுமன் செய்லை வியந்து கூறலும்
‘ஆடகத் தருவின் சோலை பொடி படுத்து, அரக்கர் காக்கும்
தேட அரு வேரம் வாங்கி, இலங்கையும் சிதைத்தது அம்மா!
கோடரம் ஒன்றே! நன்று இது! இராக்கதர் கொற்றம்! சொற்றல்
மூடரும் மொழியார்’ என்ன மன்னனும் முறுவல் செய்தான். 58

தேவர்கள், பின்னும், ‘மன்ன! அதன் உருச் சுமக்கும் திண்மைப்
பூவலயத்தை அன்றோ புகழ்வது! புலவர் போற்றும்
மூவரின் ஒருவன் என்று புகல்கினும், முடிவு இலாத
ஏவம், அக் குரங்கை, ஐய! காணுதி இன்னே’ என்றார். 59

அனுமனின் ஆரவாரம்
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட,
எண் திசை சுமந்த மாவும், தேவரும் இரியல்போக,
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர,
‘அண்டமும் பிளந்து விண்டது ஆம்’ என, அனுமன் ஆர்த்தான். 60

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கம்ப ராமாயணம் -ஸ்ரீ ஸூந்தர காண்டம்–5. சூடாமணிப் படலம்–

June 16, 2020

சீதையை இராமனிடம் சேர்க்க எண்ணிய அனுமனின் விண்ணப்பம்
‘உண்டு துணை என்ன எளிதோ உலகின்? அம்மா!
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள்;
அண்ட முதல் நாயகனது ஆவி அனை யாளைக்
கொண்டு அகல்வதே கருமம்’ என்று உணர்வு கொண்டான். 1

கேட்டி யடியேன் உரை முனிந்து அருளேல் கேளான்
வீட்டி இடுமேல் அவனை வேறல் வினை அன்றால்
ஈட்டி என் பால் இராமன் எதிர் நின்னை
காட்டி அடி தாழ்வென் இது காண்டு இது காலம் -2-இதுவே ஏற்ற சமயம்

‘பொன் திணி பொலங்கொடி! என் மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க; துயர் விட்டாய்,
இன் துயில் விளைக்க; ஓர் இமைப்பின், இறை வைகும்
குன்றிடை, உனைக் கொடு குதிப்பென்; இடை கொள்ளேன். 3

‘அறிந்து, இடை, அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்,
முறிந்து உதிர நூறி, என் மனச் சினம் முடிப்பேன்;
நெறிந்த குழல்! நின் நிலைமை கண்டும், நெடியோன் பால்,
வெறுங் கை பெயரேன் – ஒருவராலும் விளியாதேன். 4-

இலங்கையோடும் ஏகுதி கொல் எனினும் இடந்து என்
வலம் கொள் ஒரு கைத் தலத்தில் வைத்து எதிர் தடுப்பான்
விலங்கினரை நூரி வரி வெஞ்சிலையின் ஓதம்
பொலம் கொள் கழல்கள் தாழ்குவன் இது தன்னை பொருள் அன்று ஆல்-5-இச்சிறு தொழில் ஒரு பொருள் அன்று

‘அருந்ததி! உரைத்தி-அழகற்கு அருகு சென்று, “உன்
மருந்து அனைய தேவி, நெடு வஞ்சர் சிறை வைப்பில்,
பெருந் துயரினோடும், ஒரு வீடு பெறுகில்லாள்,
இருந்தனள்” எனப் பகரின், என் அடிமை என் ஆம்? 6-சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை சேஷ பூதனுக்கு ஸ்வரூப லாபமும் ப்ராப்யமும்

புண் தொடர் அகற்றிய புயத்தினோடு புக்கேன்
விண்டவர் பலத்தையும் விரித்துரை செய்கேனோ
கொண்டு வருகிறிலேன் என் உயிர்க்கு உறுதி கொண்டேன்
கண்டு வருகிறிலேன் எனக் கழறுகேனோ–7-

இருக்கும் மதிள் சூழ் கடி இலங்கையை அமைப்பின்
உருக்கி எரியால் அரக்கரையும் ஒன்றாம்
உருக்கி நிருத்த குலம் முடித்து வினை முற்றிப்
பொருக்க அகல்க எனினும் அது இன்று புரிகிறேன் –8-

இந்து நுதல் நின்னொடு இணை எய்தி இகல் வீரன்
சிந்தை உறு வெந்துயர் தவிர்ந்து தெளிவோடும்
அந்தமில் அரக்கர் குலம் அற்று அவிய நூறி
நந்தலில் புவிக்கண் இடர் பின் களைதல் நன்று ஆல் –9-

வேறு இனி விளம்ப உள்ளது அன்று விதியால் இப்
பேறு பெற என் கண் அருள் தந்து அருளு பின்பு போய்
ஆறு துயரம் அம் சொல் இள வஞ்சி அடியன் அன்றோ
ஏறு கடிது என்று தொழுது இன்னடி பணிந்தான் –10-

அனுமனின் வேண்டுகோளைச் சீதை மறுத்தல்
ஏய நல் மொழி எய்த விளம்பிய
தாயை முன்னிய கன்று அனையான் தனக்கு,
‘ஆய தன்மை அரியது அன்றால்’ என,
தூய மென்சொல் இனையன சொல்லுவாள்; 11

‘அரியது அன்று; நின் ஆற்றலுக்கு ஏற்றதே!
தெரிய எண்ணினை; செய்வதும் செய்தியே;
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு, அது, என்
பெரிய பேதைமைச் சில் மதிப் பெண்மையால். 12–

வேலையின் இடையே வந்து வெய்யவர்
கோழி வெஞ்சரம் நின்னோடும் கோத்த போது
ஆலம் அன்னவர்க்கு அல்ல எற்கு அல்ல ஆற
சாலவும் தடுமாறும் தனிமையோய் –13-

அன்றியும் பிறிது உளது ஓன்று ஆரியன்
வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறு இனி
நன்றி என் பதம் வஞ்சித்த நாய்களின்
இன்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ –14-

கொண்ட போரின் என் கொற்றவன் வில் தொழில்
அண்டர் எவரும் நோக்க என் ஆக்கையைக்
கண்ட போர் அரக்கன் விழி காகங்கள்
உண்ட போது அன்றி யான் உளன் ஆவேனோ –15

வெற்றி நாணுடை வில்லியர் வில் தொழில்
முற்ற நாணில் அரக்கர் மூக்கோடு
அற்ற நாணினர் ஆயின போது அன்றிப்
பெற்ற நானுமும் பெற்றது ஆகுமோ –16-

பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரை ஆகிலதேஎனின்,
இற்பிறப்பும், ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்? 17

‘அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன். 18

வேறும் உண்டு உரை; கேள் அது; மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால், இடை
ஆறும் ஐம் பொறி நின்னையும், “ஆண்” எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ? 19-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

‘தீண்டினான் எனின், இத்தனை சேண் பகல்
ஈண்டுமோ உயிர் மெய்யின்? “இமைப்பின்முன்
மாண்டு தீர்வென்” என்றே, நிலம் வன் கையால்
கீண்டு கொண்டு, எழுந்து ஏகினன், கீழ்மையால். 20

‘”மேவு சிந்தை இல் மாதரை மெய் தொடின்,
தேவு வன் தலை சிந்துக நீ” என,
பூவில் வந்த புராதனனே புகல்
சாவம் உண்டு; எனது ஆர் உயிர் தந்ததால். 21-

பிரமனை ஸ்துதிக்க வந்த புஞ்ஜிகஸ்தலை அப்சரஸ் ஸ்திரீயை வலியக் கற்பு அழித்ததற்காக
சாபம் வால்மீகி யுத்த காண்டம் -13-சர்க்கத்தில்

‘அன்ன சாவம் உளது என, ஆண்மையான்,
மின்னும் மௌலியன், மெய்ம்மையன், வீடணன்
கன்னி, என்வயின் வைத்த கருணையாள்,
சொன்னது உண்டு, துணுக்கம் அகற்றுவான். 22-வீடணன் கன்னி-மகளாகிய திரிசடை

‘ஆயது உண்மையின், நானும் – அது அன்று எனின்,
மாய்வென் மன்ற;-அறம் வழுவாது என்றும்,
நாயகன் வலி எண்ணியும், நானுடைத்
தூய்மை காட்டவும், இத்துணை தூங்கினேன். 23-

ஆண்டு நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலை நின்றது
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால்–24-பர்ணசாலை யுடன் நிலத்தோடு பேர்த்து எடுத்து வந்தமை-

தீர்விலேன் இனி இது ஒரு பகலும் சிலை
வீரன் மேனியை மானும் இவ்வீங்கு நீர்
நாரா நாண் மலர்ப் பொய்கையை நண்ணுவேன்
சோருமாருயிர் காக்கும் துணிவினால் -25-தயரதன் பெற்ற மணித் தடாகம் அன்றோ-

ஆதலால் அது காரியம் அன்று ஐய
வேத நாயகன் பால் இனி மீண்டனை
போதல் கார்யம் என்றனள் பூவை அக்
கோதிலானனும் இனையன கூறினான் –26-

அனுமன் சீதையைப் புகழ்ந்து, ‘இராமனிடம் யாது கூறவேண்டும்’ என வினவல்
‘நன்று! நன்று! இவ் உலகுடை நாயகன்
தன் துணைப் பெருந்தேவி தவத் தொழில்’
என்று சிந்தை களித்து, உவந்து, ஏத்தினான் –
நின்ற சங்கை இடரொடு நீங்கினான். 27

‘இருளும் ஞாலம் இராவணனால்; இது
தெருளும், நீ இனிச் சில் பகல் தங்குறின்;
மருளும் மன்னவற்கு, யான் சொலும் வாசகம்
அருளுவாய்’ என்று, அடியின் இறைஞ்சினான். 28

அனுமனிடம் சீதை மனம் கசந்து சொன்ன செய்திகள்
‘இன்னும், ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னை நோக்கிப் பகர்ந்தது, நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்ககிலேன்; அந்த
மன்னன் ஆணை; இதனை மனக் கொள் நீ. 29–இது முதல் பத்து கவிகள் சீதா பிராட்டி திருவடிக்கு செய்திகள்-

‘”ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர்
தாரம்தான் அலளேனும், தயா எனும்
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும், தன்
வீரம் காத்தலை வேண்டு” என்று வேண்டுவாய். 30

‘ஏத்தும் வென்றி இளையவற்கு, ஈது ஒரு
வார்த்தை கூறுதி: “மன் அருளால் எனைக்
காத்து இருந்த தனக்கே கடன், இடை
கோத்த வெஞ் சிறை வீடு” என்று கூறுவாய். 31

‘”திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்;
இங்கு வந்திலனேஎனின், யாணர் நீர்க்
கங்கை யாற்றங்கரை, அடியேற்கும், தன்
செங் கையால் கடன் செய்க” என்று செப்புவாய். 32

மாமியர்க்குச் சொன்ன செய்தி
‘”சிறக்கும் மாமியர் மூவர்க்கும், சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள்” எனும் இன்ன சொல்,
அறத்தின் நாயகன் பால்; அருள் இன்மையால்
மறக்கும் ஆயினும், நீ மறவேல், ஐயா! 33

மீண்டும் இராமனுக்குச் செய்தி சொல்லுதல்
‘வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
“இந்த, இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன்” என்ற, செவ் வரம்
தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய். 34-

ஈண்டு நான் இருந்து இன்னுயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்டலாவ தோர் தீ வினை தீர வரம்
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய் -35-

அரசு வீற்று இருந்து ஆளவும் ஆய் மணிப்
புரசை யானையின் வீதியில் போகவும்
வீசு கோலங்கள் காண வீதியிலே
உரை செய்து என்னை என் ஊழ் வினை யுன்னுவேன்-36-புரசை -யான் கழுத்தில் இடு கயிறு

தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றறும்
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே
என்னை நோக்கி எங்கனம் எய்துமோ –37-

அனுமன் சீதையைத் தேற்றுதல்
இத் திறம் அனையவள் இயம்ப, ‘இன்னமும்,
தத்துறல் ஒழிந்திலை, தையல் நீ!’ எனா,
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை,
ஒத்தன, தெரிவுற உணர்த்தினான்அரோ: 39–இது முதல் மேல் -35-கவிகளால் திருவடியின் இன்னுரைகள் –

‘வீவாய், நீ இவண்; மெய் அஃதே?
ஓய்வான், இன் உயிர், உய்வானாம்!
போய், வான் அந்நகர் புக்கு அன்றோ?
வேய்வான் மௌலியும்? மெய் அன்றோ? 40-எதிர் மறை அணியில் இதுவும் அடுத்ததும் –

கைத்தோடும் சிறை கற்போயை
வைத்தோன் இன்னுயிர் வாழ்வானாம்
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்
இத்தோடே ஓப்பது யாது உண்டே –41-

நல்லோய் நின்னை நலிந்தோரைக்
கொல்லோம் எம்முயிர் கொண்டு அங்கே
எல்லோமும் செல எங்கோனும்
வில்லோடும் செல வேண்டாயோ –42-

நீந்தா இன்னலில் நீந்தாமே
தேய்ந்து ஆறாத பெரும் செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால் எம்மின் உயார்ந்தார் யார் -43-

நன்றாய் நல் வினை நல்லோரைத்
தின்றார் தம் குடல் பேய் தின்னக்
கொன்றால் அல்லது கொள்ளேன்
என்றார்க்கு இவை ஏலாவோ–44

மாட்டாதார் சிறை வைத்தோயை
மீட்டாம் என்கில் மீள்வாம் யேல்
நாட்டார் நல்லவர் நன்னூலும்
கேட்டார் இவ்வுரை கேட்பரோ –45 –

பூண்டாள் கற்புடையாள் பொய்யாள்,
தீண்டா வஞ்சகர் தீண்டாமுன்,
மாண்டாள்” என்று, மனம் தேறி
மீண்டால், வீரம் விளங்காதோ? 46

‘கெட்டேன்! நீ உயிர் கேதத்தால்
விட்டாய் என்றிடின், வெவ் அம்பால்,
ஒட்டாரோடு, உலகு ஓர் ஏழும்
சுட்டாலும், தொலையா அன்றோ? 47-

முன்னே கொல்பவன் மூ உலகும்
பொன்னே ஓங்கிய போர் வில்லான்
என்னே நின்நிலை ஈது என்றால்
பின்னே செம்மை பிடிப்பானோ –48-

கோள் ஆனார் உயிர் கோளோடு
மூளா வெஞ்சினம் முற்றாகா
மீளா வேள் அயல் வேறு உண்டோ
மாளாதோ புவி வானோடும் –49-

தாழித் தண் கடல் தம்மோடும்
ஏழுக்கு ஏழு உலகுக்கு எல்லாம் அன்று
ஆழிக் கையவன் அம்பு அம்மா
ஊழித் தீ என உண்ணாவோ –50-ஆழிக் கை –ஆஜ்ஞா சக்கரமும் சக்கர ரேகையுமாம்

படுத்தான் வானவர் பற்றாரைத்
தடுத்தான் தீ வினை தக்கோரை
எடுத்தான் நல் வினை எந்நாளும்
கொடுத்தான் என்ற இசை கொள்ளாயோ –51-துஷ்ட நிக்ரகமும் இஷ்ட பரிபாலனமும் தர்ம ஸம்ஸ்தாபனமும் –

சில நாள் நீ இடர் தீராய்
இன்னா வைகலென் எல்லாரும்
நல் நாள் காணுதல் நன்று அன்றோ
உன்னால் நல் அறம் உண்டானால் –52-

புளிக்கும் கண்டனர் புண் நீருள்
குளிக்கும் பேய் குடையும் தோறும்
ஒளிக்கும் தேவர் உள்ளம்
களிக்கும் நல் வினை காணாயோ–53-

ஊழியின் இறுதியின் உரு எறிந்து எனக்
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி
தாழி இரும் குருதியின் தரங்க வேலைகள்
ஏழும் ஒன்றாக நின்று இரைப்பக் காண்டியால்–54–

சூல் இரு பெரு வயிறு அலைத்து சோர்வு வுறும்
ஆலி யம் கண்ணியர் அறுத்து நீத்தன
வாலியும் கடப்பரு வனப்ப வானுயர்
தாலி யம் பெரு மலை தயங்கக் காண்டியால்–55-

விண்ணின் நீளிய நெடும் கழுதும் வெஞ்சிறை
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும்
புண்ணின நீர்ப் புணரியில் படிந்து பூவையர்
கண்ணின் நீர் ஆற்றில் குளிப்பக் காண்டியால் –56-

கரம் பயல் முரசு இனம் கறங்க கை தொடர்
நரம்பினும் இமிழ் இசை நவில நாடகம்
அரம்பையர் ஆடிய அரங்கின ஆண் தொழில்
குரங்குகள் முறை முறை குனிப்பக் காண்டியால் –57-

புரை யுறு புன் தொழில் யரக்கர் புண் பொழி
திரை யுறு குருதி ஆறு ஈரப்பச் செல்வன
வரை யுறு பிணம் பெரு பிறக்கம் மண்டின
கரை யுறு நெடும் கடல் தூர்ப்பக் காண்டியால்–58-

வினையுடை யரக்கராம் இருந்தை வெந்துக
சனகி என்ற ஒரு தழல் நடுவண் தங்கலால்
அனகன் கை அம்பு எனும் அளவில் ஊதையால்
கனக நீடு இலங்கை நின்று உருகக் காண்டியால் –59-இருந்தை கரி – ஊதை -பெரும் காற்று-

தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின
பாக்யம் அனைய நின் பழிப்பில் மேனியை
நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால்
காக்கைகள் கவர்ந்து உண்ணக் காண்டியால்–60-

மேலுற இராவணற்கு அழிந்து விலகிய
நீலுறு திசைக்கரி திரிந்து நிற்பன
வாழுற வனையவன் தலையை வவ்வலில்
காலுறு கணை கடிந்திடுவ காண்டியால் –61-

நீர்த்தெழு கணை மழை வழங்க நீல வான்
வேர்த்தது என்று இடையிடை வீசும் தூசு போல்
போர்த்து எழு பொலம் கொடி இலங்கை பூமியோடு
ஆர்த்து எழு கழுது இரைத்தாடக் காண்டியால் -62-தூசு -வஸ்திரம் -கழுது -பேய்கள் –

நீல நிர அரக்கர் தம் குருதி நீத்த நீர்
வேலை மிக்கு ஆற்றோடு மீள வேலை சூழ்
ஞாலம் முற்றும் கடை யுகத்தும் நச்சு அறா
காலனும் வெறுத்து உயிர் காலக் காண்டியால் –63-

அணங்கு இள மகளிரோடு அரக்கர் ஆடுறு
மணம் கிளர் கற்பகச் சோலை வாவி வாய்ப்
பிணங்குறு வால் முறைப் பிடித்து மாலைய
கணம் கொடு குரக்கினம் குளிப்பக் காண்டியால் –64-

செப்புறல் என் பல தெய்வ வாளிகள்
இப்புறத்து அரக்கரை முருக்கி ஏகின
முப்புறத்து உலகையும் முடிக்க மூட்டலால்
அப்புறத்து அரக்கரும் அவியக் காண்டியால் –65-

ஈண்டு ஒரு திங்கள் இவ்விடரின் வைகுதல்
வேண்டுவது அன்று நான் விரைவின் வீரனைக்
கண்டாலே குறைவு பின் காலம் வேண்டுமோ
ஆண் தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ -66-அறிவிப்பே அமையும் ரக்ஷணத்துக்கு –

ஆவி யுண்டு என்னும் ஈது யுண்டு உன் ஆர் யுயிர்ச்
சேவகன் திரு உருத் தீண்டத் தீதிலாப்
பூவிலை தளிர் இலை பொரிந்து வெந்துலாக்
காவிலை கொடியிலை நெடிய கான் எலாம் -67-பெருமாளுடைய விரக தாபத் தீயினால்

சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ
மேகம் வந்து இடித்து வந்து உருமு வீழ்கினும்
ஆகமும் புயங்களும் அழுந்த ஐந்தலை
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ –68-

மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரோடு புலன்கள் தள்ளுறும்
பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள அவை எண்ணவும் ஈட்டவோ –69-

இந்நிலை யுடையவன் தரிக்கும் என்றியேல்
மெய்ந்நிலை யுணர்ந்த உழி மிடைந்தது ஈது எனின்
பொய்ந்நிலை காண்டி யான் புகன்ற யாவும் யுன்
கைந்நிலை நெல்லி யம் கனியில் காட்டுகேன் –70-

தீர்த்தனும் கவி குலத்து இறையும் தேவி நின்
வார்த்தை கேட்டு உவப்பதன் முன் மாக் கடல்
தூர்த்தன இலங்கையை சூழும் மாக் குரங்கு
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ -71-

எண்ணரும் பெரும் படை நாளை இந் நகர்
நண்ணிய பொழுது அது நடுவண் நான்கை நீ
விண்ணுறக் கருளன் மேல் விளங்கும் விஷ்ணுவின்
கண்ணனை என் நெடு நெரினில் காண்டியால் –72-

அங்கதன் தோள்மிசை, இளவல், அம் மலை
பொங்கு வெங்கதிர் எனப் பொலிய, போர்ப்படை
இங்கு வந்து இறுக்கும்; நீ இடரும் ஐயமும்
சங்கையும் நீங்குதி; தனிமை நீங்குவாய். 73

‘குரா வரும் குழலி! நீ குறித்த நாளினே,
விராவு அரு நெடுஞ் சிறை மீட்கிலான்எனின்,
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு,
இராவணன் அவன்; இவன் இராமன்’ என்றனன். 74

அனுமன் உரையால் சீதை தேறி கூறல்
ஆக இம் மொழி ஆசு இல கேட்டு, அறிவுற்றாள்;
ஓகை கொண்ட் களிக்கும் மனத்தள், உயர்ந்தாள்;
‘போகை நன்று இவன்’ என்பது, புந்தியின் வைத்தாள்;
தோகையும், சில வாசகம் இன்னன சொன்னாள்: 75

‘சேறி, ஐய! விரைந்தனை; தீயவை எல்லாம்
வேறி; யான் இனி ஒன்றும் விளம்பலென்; மேலோய்!
கூறுகின்றன, முன் குறி உற்றன, கோமாற்கு
ஏறும்’ என்று, இவை சொல்லினள் இன்சொல் இசைப்பாள்: 76

நாகம் ஒன்றிய நல்வரையின் தலை மேல் நாள்
ஆகம் வந்து எனை அள் உகிர் வாளில் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால்
வேக வெம்படை விட்டது மெல்ல விரிப்பாய் –77-

அங்கு அது அஞ்சி நடுங்கி அயன் பதி அண்மி
இங்கு நின் வரவு என்ன எனக் கணல்வு எய்த
மங்கை பங்கனோடு எண் திசையும் செல மற்றோர்
தங்கள் தங்கள் இடங்கள் மறுத்தமை தைப்பாய் -78-அவர் திரு உள்ளத்தே பொருந்தச் சொல்வாய்

இந்திரன் தரு மைந்தன் உரும் துயர் யாவும்
அந்தரத்தில் நின்றவர் கண்டு இனி அந்தோ
எந்தை தன் சரண் அன்றி ஒரு தஞ்சமும் இன்றால்
வந்தவன் சரண் என வீழ்க என உற்றதும் வைப்பாய் –79-

ஐய நின் சரணம் சரண் என்றவன் அஞ்சி
வையம் வந்து வணங்கிட வல்லன் மகிழ்ந்தே
வெய்யவன் கண் இரண்டோடு போக்கு என விட்ட
தெய்வ வெம்படை யுற்றுள தன்மை தெரிப்பாய்–80-

எந்தை நின் சரணம் சரண் என்ற இதனனால்
முந்து நுன் குறையும் பொறை தந்தனன் முந்து உன்
சந்தம் ஓன்று கொடித் திரள் கண்கள் தமக்கே
வந்தோர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் -81-
கொடித் திரள் -காக்கை கூட்டங்கள் அனைத்தும் ஒரு கரு விழி இழந்தன

வேகம் விண்டு சயந்தன் வணங்கி விசும்பில்
போக அண்டர்கள் கண்டு அலர் கொண்டு பொழிந்தார்
நாகம் நம்பன் இளங்கிளை நன்கு உணராத
பாகு தங்கிய வென்றியின் இந்த சொல் பணிப்பாய் –82-

என் ஓர் இன்னுயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன்
மன்ன என்றாலும் மாசறு கைகயன் மாது என்
அன்னை தன் பெயராக என அன்பினோடு அந்நாள்
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய் –83

சீதை சூடாமணியை அனுமனிடம் கொடுத்தல்
என்று உரைத்த, ‘இனிது இத்தனை பேர் அடையாளம்;
ஒன்று உணர்த்துவது இல்’ என எண்ணி உணர்ந்தாள்,
தன் திருத் துகிலில் பொதிவுற்றது, தானே
வென்றது அச் சுடர், மேலொடு கீழ் உற மெய்யால், -84-
இது பின் காலத்தில் உபயோகமாகும் என்று நினைத்து தன் துகிலில் முடிந்து வைத்த சூடாமணி –

வாங்கினாள், தன் மலர்க்கையில்; மன்னனை முன்னா,
ஏங்கினாள்; அவ் அனுமனும், ‘என்கொல் இது?’ என்னா,
வீங்கினான்; வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித்
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும். 85

‘மஞ்சு அலங்கு ஒளியோனும், இம் மா நகர் வந்தான்,
அஞ்சலன்’ என, வெங் கண் அரக்கர் அயிர்த்தார்;
சஞ்சலம் புரி சக்கர வாகமுடன், தாழ்
கஞ்சமும், மலர்வுற்றன; காந்தின காந்தம். 86

கூந்தல் மென் மழை கொள் முகில்மேல் எழு கோளின்
வேந்தன் அன்னது, மெல்லியல்தன் திருமேனி
சேந்தது, அந்தம் இல் சேவகன் சேவடி என்னக்
காந்துகின்றது, காட்டினள்; மாருதி கண்டான். 87

சூடையின்மணி கண் மணி ஒப்பது, தொல் நாள்
ஆடையின்கண் இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை, நல்லோய்!
கோடி’ என்று கொடுத்தனள், மெய்ப் புகழ் கொண்டாள். 88-

சூடாமணி பெற்ற அனுமன் விடைபெற்றுச் செல்லுதல்
தொழுது வாங்கினன்; சுற்றிய தூசினன், முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து,
அழுது, மும்மை வலம் கொடு இறைஞ்சினன்; அன்போடு,
எழுது பாவையும், ஏத்தினள்; ஏகினன் இப்பால். 89

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கம்ப ராமாயணம் -ஸ்ரீ ஸூந்தர காண்டம்–4–ஸ்ரீ உரு காட்டு படலம்–

June 16, 2020

அனுமன் விஞ்சையால் அரக்கியர் உறங்குதல்

‘காண்டற்கு ஒத்த காலமும் ஈதே; தெறு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார்;
வேண்டத் துஞ்சார்’ என்று, ஒரு விஞ்ஞை வினை செய்தான்;
மாண்டு அற்றாராம் என்றிட, எல்லாம் மயர்வு உற்றார். 1–விஞ்சை -மாய வித்யை-

——-

தூங்காத காவலர் தூங்குதல் கண்ட சீதையின் புலம்பல்

துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள்; துயர் ஆற்றாள்;
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள், நெகுகின்றாள்;
அஞ்சா நின்றாள், பல் நெடு நாளும் அழிவுற்றாள்,
எஞ்சா அன்பால், இன்ன பகர்ந்து, ஆங்கு, இடர் உற்றாள். 2–

——–

இது முதல் ஏழு கவிகள் ஸ்ரீ பிராட்டியின் புலம்பல்

கரு மேகம் நெடும் கடல் கார் அனையான்
தருமே தனியேன் எனது ஆர் உயிர் தான்
உருமே ஏறு உறழ் வெம் சிலை நாண் ஒலி தான்
வருமே யுரையாய் வலியார் வலியே-3-

ஏறு உறழ் வெம் சிலை நாண் ஒலி தான்
வருமே–பேர் இடி முழக்கத்தை ஒத்த பகைவருக்கு பயங்கரமான வில் நாண் ஒலி இங்கு வருமோ
யுரையாய் வலியார் வலியே–தண்டிக்கப்படாமல் அனுபவித்தே தீர வேண்டும்படியான என் விதியே சொல்வாயாக

————–

கல்லா மதியே கதிர் வாள் நிலவே
செல்லா இரவே சிறுகா இருளே
எல்லாம் எனையே முனீவீர் நினையா
வில் ஆளனை யாதும் விளித்திலீரோ–4-

அவனது வில் வன்மைக்கு அஞ்சி அவனை சிறிதும் வருத்தாமல் அபலையான
என்னை மட்டும் வருத்து கிறீர்களே கூட்டரவாக

————–

தழல் வீச உலா வரு வாடை தழீஇ
அழல்வீர் எனது ஆவி அறிந்திலீரோ
நிழல் வீரை அனாருடனே நீர் நெடு நாள்
உழல்வீர் கொடியீர் உரையாடிலீரோ –5-

நிழல் வீரை அனாருடனே-தேக காந்தியால் கடலை ஒத்தவருக்கு
கொடியீர் உரையாடிலீரோ–பூங்கொடிகளே என் குறையைச் சொல்ல மாட்டீர்களோ
எனது ஆவி அறிந்திலீரோ-பிராண நாயகன் இன்னார் என்று உங்கட்க்குத் தெரியாதோ –

————–

வாராது ஓழியான் எனும் வண்மையினால்
ஓராயிர கோடி இடர்க்கு உடையேன்
தீரா ஒரு நாள் வலி சேவகனே
நாராயணனே தனி நாயகனே –6-இதனாலே உயிர் நீங்காது இருக்கிறேன் –

—————–

தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர நீ
வருவேன் சில நாளினில் மா நகர் வாய்
இரு என்றனை இன்னருள் தான் இது
வேல் ஒரு என் தனி ஆவியை உண்ணுதியோ-7-

உனது கட்டளைக்கு இசையாமல் உன்னுடன் வந்தாலே இப்படி கருணை காட்டாது ஒழிகிறாயோ-என்றவாறு

—————

பேணும் உணர்வே உயிரே பெரு நாள்
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனைக்
காணும் துணையும் கழிவீர் அலீர் நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ-8-

—————–

முடியா முடி மன்னன் முடிந்ததுவும்
படி ஏழும் நெடும் துயர் பா விடவும்
மடியா நெறி வந்து வனம் புகுதும்
கொடியார் வரும் என்று குலாவுவதோ -9-

இங்கு வந்து துயரைத் தணிப்பார் என்று மகிழ்ந்து வாழ்வது தகுமோ

———–

சீதை உயிர் விடத் துணிதல்
என்று என்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள்;
‘ஒன்று என் உயிர் உண்டு எனின், உண்டு இடர்; யான்
பொன்றும் பொழுதே, புகழ் பூணும்’ எனா, 10-

—————

‘பொறை இருந்து ஆற்றி, என் உயிரும் போற்றினேன்,
அறை இருங் கழலவற் காணும் ஆசையால்;
நிறை இரும் பல் பகல், நிருதர் நீள் நகர்ச்
சிறை இருந்தேனை, அப் புனிதன் தீண்டுமோ? 11-

உன்னினர் பிறர் என உணர்ந்தும் அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்
மன்னுயிர் காத்து இரும் காலம் வைகினேன்
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார் யார் கொலோ –12-

சொல் பிரியா பாலி சுமந்து தூங்குவேன்
நல் பிறப்புடையும் நாணும் நன்று ஒரோ
கற்புடை மடந்தையர் கதை யுளோர்களில்
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் -13–

பிறர் மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்
புறன் அலர் உற அவன் போது போக்கி யான்
அறன் அல்லது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுவேன் –14-

எப் பொழுது, இப் பெரும் பழியின் எய்தினேன்,
அப் பொழுதே, உயிர் துறக்கும் ஆணையேன்;
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத, யான்,
துப்பு அழிந்து உய்வது, துறக்கம் துன்னவோ? 15–

அன்பு அழி சிந்தையர் ஆய ஆடவர்
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர்
துன்பு அழி பெரும் புகழ் குலத்தில் தோன்றினேனே
என் பழி துடைப்பவர் என்னின் யாவர் –16-

வஞ்சனை மானின் பின் மன்னைப் போக்கி என்
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் என
நஞ்சு அனையான் அகம் புகுந்த நான்கை யான்
உயஞ்சனன் இருத்தலும் உலகம் கொள்ளுமோ –17-

வல் இயல் மறவர் தம் வடுவில் தீர்பவர்
வெல்லினும் வெல்க போர் விளிந்து வீடுக
வல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்
சொல்லிய என் பழி அவரைச் சுற்றுமோ –18-

வருந்தலின் மானம் மா வனைய மாட்சியர்
பெரும் தவ மடந்தையர் முன்பு பேதையேன்
கரும் தனி முகிலினை பிரிந்து கள்வரூர்
இருந்தவள் இவள் என ஏச நிற்பனோ –19-

அற்புதன், அரக்கர்தம் வருக்கம் ஆசு அற,
வில் பணி கொண்டு, அருஞ் சிறையின் மீட்ட நாள்,
“இல் புகத் தக்கலை” என்னில், யானுடைக்
கற்பினை, எப் பரிசு இழைத்துக் காட்டுகேன்? 20

மாதவிப் பொதும்பர் புக்க சீதையின் முன், அனுமன் தோன்றுதல்
‘ஆதலான், இறத்தலே அறத்தின் ஆறு’ எனா,
‘சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்;
ஈது அலாது இடமும் வேறு இல்லை’ என்று, ஒரு
போது உலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள். 21

கண்டனன் அனுமனும்; கருத்தும் எண்ணினான்;
கொண்டனன் துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,
‘அண்டர் நாயகன் அருள் தூதன் யான்’ எனா,
தொண்டை வாய் மயிலினைத் தொழுது, தோன்றினான். 22

‘இராமன் தூதன் யான்’ என அனுமன் மொழிதல்

‘அடைந்தனென் அடியனேன், இராமன் ஆணையால்;
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பு இலர்; தவத்தை மேவலால்,
மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன். 23–

ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும்
ஆண் தகை அறிந்திலன் அதற்குக் காரணம்
வேண்டுமே யரக்கர் தம் வர்க்கம் வேரோடு
மாண்டில வீதலான் மாறு வேறு உண்டோ — 24–

ஐயுறல்; உளது அடையாளம்; ஆரியன்
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள;
கைஉறு நெல்லியங் கனியின் காண்டியால்;
நெய் உறு விளக்கு அனாய்! நினையல் வேறு’ என்றான். 25

அனுமனைக் கண்டு தெளிந்த சீதை அவனைப் பற்றி வினவல்

என்று அவன் இறைஞ்ச நோக்கி, இரக்கமும் முனிவும் எய்தி,
‘நின்றவன் நிருதன் அல்லன்; நெறி நின்று; பொறிகள் ஐந்தும்
வென்றவன்; அல்லனாகில், விண்ணவன் ஆக வேண்டும்;
நன்று உணர்வு உரையன்; தூயன்; நவை இலன் போலும்!’ என்னா, 26

‘அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக; கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ ?’ 27

என நினைத்து, எய்த நோக்கி, ‘இரங்கும் என் உள்ளம்; கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்;
நினைவுடைச் சொற்கள் கண்ணீர் நிலம் புக, புலம்பா நின்றான்;
வினவுதற்கு உரியன்’ என்னா, ‘வீர! நீ யாவன்?’ என்றாள். 28

அனுமன் தன் வரலாறு கூறல்

ஆய சொல் தலைமேல் கொண்ட அங்கையன், ‘அன்னை! நின்னைத்
தூயவன் பிரிந்த பின்பு தேடிய துணைவன், தொல்லைக்
காய் கதிர்ச் செல்வன் மைந்தன், கவிக்குலம் அவற்றுக்கு எல்லாம்
நாயகன், சுக்கிரீவன் என்றுஉளன், நவையின் தீர்ந்தான். 29

‘மற்று, அவன் முன்னோன் வாலி; இராவணன் வலி தன் வாலின்
இற்று உகக் கட்டி, எட்டுத் திசையினும் எழுந்து பாய்ந்த
வெற்றியன்; தேவர் வேண்ட, வேலையை, விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய, அமுது எழ கடைந்த தோளான். 30

‘அன்னவன் தன்னை, உம் கோன், அம்பு ஒன்றால் ஆவி வாங்கி,
பின்னவற்கு அரசு நல்கி, துணை எனப் பிடித்தான்; எங்கள்
மன்னவன் தனக்கு, நாயேன், மந்திரத்து உள்ளேன்; வானின்
நல் நெடுங் காலின் மைந்தன்; நாமமும் அனுமன் என்பேன். 31

எழுபது வெள்ளம் கொண்ட எண்ணென யுலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப வேலை தனித் தனி கடக்கும் தாள
குழுவின யும் கோன் செய்யக் குறித்தது குறிப்பின் உன்னி
வழு இலை செய்தற்கு ஒத்த வா நரம் வானின் நீண்ட –32-

வெள்ளம் -பல அஷவ்கினி-
யானை ஓன்று தேர் ஓன்று குதிரை மூன்று காலாள் ஐந்து கொண்டது ஒரு பத்தி
மூன்று பத்தி சேனா முகம்
மூன்று சேனா முகம் குல்மம்
மூன்று குல்மம் கணம்
மூன்று கணம் வாகினி
மூன்று வாகினி பிரதனை
மூன்று பிரதனை சமூ
மூன்று சமூ அநீகிநீ
பத்து அநீகிநீ அஷவ்கினீ

——–

துப்புறு பரவை ஏழும் சூழ்ந்த பார் ஏழும் ஆழ்ந்த
ஒப்புறு நாகர் நாடும் உம்பரின் இம்பர் காறு
இப்புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து
அப்புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன –33-

புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள், பொதிந்து தூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகலக் குறியினாலே,
வென்றி யான் அடியேன் தன்னை வேறு கொண்டு இருந்து கூறி,
“தென் திசைச் சேறி” என்றான்; அவன் அருள் சிதைவது ஆமோ? 34–

தூசில் பொதிந்து –ஆடையில் முடிந்து

கொற்றவர்க்கு ஆண்டுக் காட்டிக் கொடுத்த போது அடுத்த தன்மை
பெற்றியின் உணர்தல் பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ
இற்றை நாள் அளவும் அன்னா அன்று நீ இழித்து நீத்த
மற்றை நல் அணிகள் கான் உன் மங்கலம் காத்த மனனோ–35–

திரு ஆபரணங்களைக் கொண்டதாலேயே பெருமாள் உயிர் பிரியாமல் உள்ளார்-என்பதையே –
உன் திரு மாங்கல்யம் காத்த -என்று அருளிச் செய்கிறார் –

ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி மைந்தன்
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை
மேயின படர்ந்து தீரா அனையவன் விடுத்தான் என்னைப்
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு என்றனன் ப்;பழியை வென்றான் –36-

——–

அனுமன் இராமனின் வடிவழகை விவரித்தல்

எய்து அவன் உரைத்தலோடும், எழுந்து, பேர் உவகை ஏற,
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க,
‘உய்தல் வந்து உற்றதோ?’ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள்,
‘ஐய! சொல், ஐயன் மேனி எப்படிக்கு அறிதி?’ என்றாள். 37

‘படி உரைத்து, எடுத்துக் காட்டும் படித்து அன்று, படிவம்; பண்பில்
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும், முன்னர்;
துடிஇடை! அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி’ என்னா,
அடிமுதல் முடியின் காறும், அறிவுற அனுமன் சொல்வான். 38-

மேலே -20-பாசுரங்களால் பெருமாள் வடிவு அழகை காட்டி அருளுகிறார் –

‘”சேயிதழ்த் தாமரை” என்று, சேண் உளோர்
ஏயினர்; அதன் துணை எளியது இல்லையால்,
நாயகன் திருஅடி குறித்து நாட்டுறின்;
பாய் திரைப் பவளமும் குவளைப் பண்பிற்றால்! 39

‘தளம் கெழு கற்பக முகிழும், தண் துறை
இளங் கொடிப் பவளமும் கிடக்க; என் அவை?
துளங்கு ஒளி விரற்கு எதிர், உதிக்கும் சூரியன்
இளங் கதிர் ஒக்கினும் ஒக்கும்-ஏந்திழாய்! 40–திருவடி விரல்கள் அனுபவம் – இதுவும் அடுத்ததும்-

‘சிறியவும் பெரியவும் ஆகி, திங்களோ,
மறு இல பத்து உளஅல்ல; மற்று இனி;
எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில;
அறிகிலென், உகிர்க்கு, யான், உவமம் ஆவன. 41 –

பொருந்தில நிலனொடு போந்து கானிடை
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு
இருந்தது நின்றது புவனம் யாவையும்
ஒருங்குடன் புணர்வது உரைக்கற்பாலதோ –42- திரு புறவடியின் சிறப்பு

தங்கு அணைப் பணிலமும் வளையும் தாங்கு அரா
வீங்கு அணைப் பள்ளியான் எனினும் வேறு இனிப்
பூங்கணைக் கால்க்கு ஒரு பரிசு தான் பொரும்
கணைக்கு ஆம் ஆவமோ ஆவ தன்னையே–43-

பொரும் கணைக்கு ஆம் ஆவம் -அம்புகளுக்கு இருப்பிடமான அம்புறாத்துணி -கணைக்காலுக்கு ஒப்பு ஆகுமோ

அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்து அனையன பெயரும் பெற்று உடை
மரம் கிளர் மத கரி கரமும் நாணின
குறங்கினுக்கு உவமை இவ்வுலகினில் கூடுமோ –44-

திருத்தொடைகள் அனுபவம் -கருடனின் பிடரியை ஒத்தன -திக்கஜங்களின் துதிக்கை நாணின-

வலம் சுழித்து ஒழுகும் நீர் வழங்கு கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலம் சுழித்து எழு மணி யுந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு அவனை யாண்டு அரோ–45–திரு உந்தியின் சிறப்பு – இலஞ்சி-மகிழம் பூ

பொருவரு மரகதப் பொலம் கொள் மால் வரை
வெருவுற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவற நோற்றனள் என்னில் பின்னை அத்
திருவினில் திருவாளர் யாவர் தெய்வமே -46-திரு மார்பின் சிறப்பு -விலங்கல்-மலை போன்ற சலியாத பெருமாளுடைய திருமார்பு

நீடுறு கீழ்த் திசை நின்ற யானையின்
கோடு உறு கரம் என, சிறிது கூறலாம்,
தோடு உறு மலர் எனச் சுரும்பு சுற்று அறாத்
தாள் தொடு தடக் கை; வேறு உவமை சாலுமே? 47–தாள் தொடு தடக் கை-ஆஜானு பாஹு

ஐராவதம் -புண்டரீகம் -வாமனம்-குமுதம் -அஞ்சனம் -புஷ்பதநதம்–ஸார்வ பவ்மம்–சுப பிரதீகம் –
இவை அஷ்ட திக் கஜங்கள் –

‘பச்சிலைத் தாமரை பகல் கண்டால் எனக்
கைச் செறி முகிழ் உகிர், கனகன் என்பவன்
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில்
நிச்சயம்; அன்று எனின், ஐயம் நீக்குமே? 48–திருக்கை நகங்களின் சிறப்பு -கனகன்-ஹிரண்யன் –

திரண்டில ஓளி இல திருவின் சேர்வில
முரண் தரு மேரு வில் முரிய மூரி நாண்
புரண்டில புகழ் இல பொருப்பு என்று போன்று
இரண்டில புயங்களுக்கு உவமம் ஏற்குமோ -49-திருத் தோள்களின் சிறப்பு

கடல் படு பணிலமும் கன்னிப் பூகமும்
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் மெல்லியோர்
உடன் பட ஒண்ணுமோ உரகப் பள்ளியான்
இடத்து உறை சங்கம் ஓன்று இருக்க எங்களால் -50-திருக் கழுத்தின் சிறப்பு -கன்னிப் பூகமும்-இளைய பாக்கு மரமும்

அண்ணல் தன் திரு முகம் கமலம் ஆம் எனின்,
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்?
தண் மதி ஆம் என உரைக்கத் தக்கதோ,
வெண் மதி பொலிந்து அது மெலிந்து தேயுமால்? 51

‘”ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செவ் வாய்
நாரம் உண்டு அலர்ந்த, செங் கேழ் நளினம்” என்று உரைக்க நாணும்;
ஈரம் உண்டு, அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும்,
மூரல் வெண் முறுவல் பூவாப் பவளமோ, மொழியற்பாற்றே? 52–ஆரம்-சந்தனக் குழம்பு-

‘முத்தம் கொல்லோ? முழு நிலவின் முறியின் திறனோ? முறை அமுதச்
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த கொல்லோ? துறை அறத்தின்
வித்து முளைத்த அங்குரம் கொல்? வேறே சில கொல்? மெய்ம் முகிழ்த்த
தொத்தின் தொகை கொல்? யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன்? 53–

எள்ளா நிலத்து இந்திர நீலத்து எழுந்த கொழுந்தும் மரகதத்தின்
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ
தள்ளா ஓதி கோபத்தைக் கவ்வ வந்து சார்ந்ததுவும்
கொள்ள வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ -54-

ஓதி கோபத்தைக் கவ்வ வந்து -இந்திர கோபத்தை கவ்வும் பச்சோந்தி –
பனிக்கச் சுரத்துக் கரன் முதலோர் கவந்தப் படையும் பல் பேயும்
தனிக் கைச் சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும்
இனிக் கட்டு அழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர் இரண்டும்
குனிக்கக் குனிந்த புருவத்துக்கு உவமம் நீயே கோடி யால் –55-
கரன் -சுமாலியின் மகள்-இராவணன் தாயான கேகேசியின் தங்கை -இராவணன் தந்தை விஸ்ரவ முனிவரை
கொழுநனாக அடைந்த கும்பீ நாசியின் குமாரன் -இராவணனுக்கு தம்பி முறைமை

வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம்
ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவு உற்றால்
இரு நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ்ப்
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றிப் பெற்றித்தாகப் பெறும் மன்னோ -56-அஷ்டமீ சந்திரனே எப்பொழுதும் போலே அபூத உவமை

நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்
பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ? 57

‘புல்லல் ஏற்ற திருமகளும், பூவும், பொருந்தப் புவி ஏழும்
எல்லை ஏற்ற நெடுஞ் செல்வம் எதிர்ந்த ஞான்றும், அஃது இன்றி
அல்லல் ஏற்ற கானகத்தும், அழியா நடையை, இழிவான
மல்லல் ஏற்றின் உளது என்றால், மத்த யானை வருந்தாதோ?’ 58–
புல்லல் ஏற்ற-தன்னிடம் வந்து சேர்தலை விரும்பும் -அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றது அம்மா –

இன்ன மொழிய, அம் மொழி கேட்டு, எரியின் இட்ட மெழுகு என்ன,
தன்னை அறியாது அயர்வாளை, தரையின் வணங்கி, ‘நாயகனார்
சொன்ன குறி உண்டு; அடையாளச் சொல்லும் உளவால், அவை, தோகை
அன்ன நடையாய், கேட்க!’ என, அறிவன் அறைவான் ஆயினான். 59–
சொன்ன குறி -முன்பு சொன்ன அடையாளம் -ஸ்வர்ண திரு ஆழி என்றுமாம்

இராமன் உரைத்த அடையாள மொழிகளைச் சீதைக்கு அனுமன் கூறுதல்
”நடத்தல் அரிது ஆகும் நெறி; நாள்கள் சில; தாயர்க்கு
அடுத்த பணி செய்து இவண் இருத்தி” என, அச் சொற்கு,
உடுத்த துகிலோடும், உயிர் உக்க உடலோடும்,
எடுத்த முனிவோடும், அயல் நின்றதும் இசைப்பாய். 60

‘”நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி, நிறை செல்வம்
பூண்டு, அதனை நீங்கி, நெறி போதலுறு நாளின்,
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்,
யாண்டையது கான்?” என, இசைத்ததும் இசைப்பாய். 61–ஆரை-மதிள்

‘”எள் அரிய தேர் தரு சுமந்திரன்! இசைப்பாய்,
வள்ளல் மொழி வாசகம்; மனத் துயர் மறந்தாள்;
கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள” என்னும்,
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி, பெயர்த்தும். 62

இராமபிரானது திரு ஆழியைப் பெற்ற சீதையின் மகிழ்ச்சி
‘”மீட்டும் உரை வேண்டுவன இல்லை” என, மெய்ப் பேர்
தீட்டியது; தீட்ட அரிய செய்கையது; செவ்வே,
நீட்டு இது” என, நேர்ந்தனன்’ எனா, நெடிய கையால்,
காட்டினன் ஓர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். 63-

மைத்தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி போலவே இங்கும்-

திரு ஆழியைக் கண்ட ஸ்ரீ பிராட்டி உதவிய தன்மையை மேலே ஆறு பாசுரங்கள் காட்டும்
இறந்தவர் பிறந்த பயன் எய்தினர் கொல் என்கோ?
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ?
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்ததுகொல் என்கோ?
திறம் தெரிவது என்னைகொல், இ(ந்)நல் நுதலி செய்கை? 64

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்;
பழந் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்;
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்;
உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள். 65

வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந் தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? 66-

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி போலவே இங்கும்

மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர்
நீக்கி, நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்
நோக்கும்; நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்;
மேக்கு நிமிர் விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். 67

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது, ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம்; மெய்யே!
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில், வேதிகை செய் தெய்வ மணி கொல்லோ? 68-ஸ்பர்ச பேதி -ரஸந் குளிகை அன்றோ திரு ஆழி –

இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது; வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது; வாழி மணி ஆழி! 69

இத் தகையள் ஆகி, உயிர் ஏமுற விளங்கும்,
முத்த நகையாள், விழியில் ஆலி முலை முன்றில்
தத்தி உக, மென் குதலை தள்ள, ‘உயிர் தந்தாய்!
உத்தம!’ எனா, இனைய வாசகம் உரைத்தாள்: 70

‘மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய்,
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமை தானும் நல்கினை, இசையோடு’ என்றாள். 71

‘பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி’ என்றாள். 72-சிரஞ்சீவியாக இருக்க வாழ்த்துகிறாள்

இராம இலக்குவரைப் பற்றிச் சீதை வினவ, அனுமன் விடை கூறல்
மீண்டு உரை விளம்பலுற்றாள், ‘விழுமிய குணத்தோய்! வீரன்
யாண்டையான், இளவலோடும்? எவ் வழி எய்திற்று உன்னை?
ஆண்தகை, அடியேன் தன்மை யார் சொல, அறிந்தது?’ என்றாள்;
தூண் திரள் தடந் தோளானும், உற்றது சொல்லலுற்றான்: 73

‘உழைக் குலத் தீய மாய உருவு கொண்டு, உறுதல் செய்தான்,
மழைக் கரு நிறத்து மாய அரக்கன், மாரீசன் என்பான்;
இழைத் தட மார்பத்து அண்ணல் எய்ய, போய், வையம் சேர்வான்
அழைத்தது அவ் ஓசை; உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால். 74-இது முதல் -20-பாசுரங்கள் திருவடியின் பதில்
இழை–திவ்ய மங்கள விக்ரஹமே திரு ஆபரணம் -திருப் பூணூலுமாம்

‘”இக் குரல் இளவல் கேளாது ஒழிக” என, இறைவன் இட்டான்
மெய்க் குரல் சாபம்; பின்னை, விளைந்தது விதியின் வெம்மை;
“பொய்க் குரல் இன்று, பொல்லாப் பொருள் பின்பு பயக்கும்” என்பான்,
கைக் குரல் வரி வில்லானும், இளையவன் வரவு கண்டான். 75

‘கண்ட பின், இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த
புண்டரிகக் கணானும், உற்றது புகலக் கேட்டான்;
வண்டு உறை சாலை வந்தான், நின் திரு வடிவு காணான்,
உண்டு உயிர், இருந்தான்; இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ? 76

‘தேண்டி நேர் கண்டேன்; வாழி! தீது இலன் எம் கோன்; ஆகம்
பூண்ட மெய் உயிரே போக, அப் பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை; அழிவு உண்டாமோ?
ஈண்டு நீ இருந்தாய்; ஆண்டு, அங்கு, எவ் உயிர் விடும் இராமன்? 77-பொங்கும் பிரிவால் பல்லாண்டு பாடுகிறார் திருவடி

‘அந் நிலை ஆய அண்ணல், ஆண்டு நின்று, அன்னை! நின்னைத்
துன் இருங் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி,
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்,
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான். 78

‘வந்து, அவன் மேனி நோக்கி, வான் உயர் துயரின் வைகி,
“எந்தை! நீ உற்ற தன்மை இயம்பு” என, இலங்கை வேந்தன்,
சுந்தரி! நின்னைச் செய்த வஞ்சனை சொல்லச் சொல்ல,
வெந்தன உலகம் என்ன, நிமிர்ந்தது சீற்ற வெந் தீ. 79

‘சீறி, “இவ் உலகம் மூன்றும் தீந்து உக, சின வாய் அம்பால்
நூறுவென்” என்று, கை வில் நோக்கிய காலை, நோக்கி,
“ஊறு ஒரு சிறியோன் செய்ய, முனிதியோ உலகை? உள்ளம்
ஆறுதி” என்று, தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி, 80

‘”எவ் வழி ஏகியுற்றான்? யாண்டையான்? உறையுள் யாது?
செவ்வியோய், கூறுக!” என்ன, செப்புவான் உற்ற செவ்வி,
வெவ்விய விதியின் கொட்பால், வீடினன் கழுகின் வேந்தன்,
எவ்விய வரி விற் செங் கை இருவரும், இடரின் வீழ்ந்தார். 81

‘அயர்த்தவர், அரிதின் தேறி, ஆண் தொழில் தாதைக்கு, ஆண்டு,
செயத் தகு கடன்மை யாவும், தேவரும் மருளச் செய்தார்;
“கயத் தொழில் அரக்கன் தன்னை நாடி, நாம் காண்டும்” என்னா,
புயல் தொடு குடுமிக் குன்றும், கானமும், கடிது போனார். 82 –

அவ்வழி நின்னைக் காணாது அயர்த்தவர் அரிதின் தேறிச்
செவ்வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய
வெம் அழல் உற்ற மெல் என் மெழுகு என அழியும் மெய்யன்
இவ்வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கல் உற்றான் –83-பன்னி உரைத்தவற்றை மேல் நான்கு கவிகளில்

கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார்
பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய்
நல் மத்தை நாகத்து அயல் சூடிய நம்பனே போல்
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் –84-
மத்தை -ஊமத்தம்பூவை
தனக்கும் தன் தன்மை அறிவரியான் அன்றோ

போதாயின போது உன தண் புனல் ஆடல் பொய்யோ
சீதா பவளக் கொடி யன்ன அவள் தேடி என் கண் தா
தருகிற்றிலை யேல் நெருப்பு ஆதி என்னாக்
கோதாவரியைச் சினம் கொண்டனன் கொண்டல் ஓப்பான் –85-

குன்றே கடிது ஓடினை கோமளக் கொம்பர் அன்ன
என் தேவியியைக் காட்டுதி காட்டிலை என்னில் இவ் வம்பு
ஓன்றே அமையும் உன்னுடைக் குலம் உள்ள எல்லாம்
இன்றே பிளவா எரியாக் கரியாக்க என்றான் -86-மதி மயங்கி மலையை ஓடி வந்து காட்டச் சொல்கிறார் பெருமாள்

பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என் கண் என்னா
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பன் இன்றே
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் -87–

வேறுற்ற மனத்தவன் இன்னதோர் விம்மல் நோவ
ஆறுற்ற நெஞ்சில் தனது ஆர் உயிர் ஆய தம்பி
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால்
தேறுற்று உயிர் பெற்ற இயல்பும் சில சொல்லல் உற்றான் 88-

வந்தான் இளையானொடு, வான் உயர் தேரின் வைகும்
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும்
சந்து ஆர் தடங் குன்றினில்; தன் உயிர்க் காதலோனும்,
செந் தாமரைக் கண்ணனும், நட்டனர் தேவர் உய்ய. 89

‘உண்டாயதும், உற்றதும், முற்றும் உணர்த்தி, உள்ளம்
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற, போழ்தின்,
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை, யாங்கள் காட்ட,
கண்டான், உயர் போதமும் வேதமும் காண்கிலாதான். 90-

தணிகின்ற நம் சொல் தொடர் தன்மை அத் தன்மை தன்னை
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின் கண்
அணி கண்டுழிய அமுதம் தெளித்தாலும் ஆறாப்
பிணி கொண்டது பண்டு அது உண்டாயினும் பேர்ப்பது அன்றால்-91-ஆபரணங்களளைக் கண்டதும் பெரும் துக்கம்

அயர்வு உற்று அரிதின் தெளிந்து அம் மலைக்கு அப்புறத்தோர்
உயர் பொற் கிரி யுற்று யுளன் வாலி என்று ஓங்கல் ஓப்பான்
துயர் உற்ற இராவணன் வாலிடைப் பண்டு தூங்க
மயர்வுற்ற பொருவோடு மால் கடல் தாவி வந்தான் –92—ஆயானை–மேல் கவியோடு இயையும்

ஆயானை, ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின்
தூயான்வயின், அவ் அரசு ஈந்தவன், “சுற்று சேனை
மேயான் வருவான்” என விட்டனன்; மேவுகாறும்
ஏயான், இருந்தான், இடைத் திங்கள் இரண்டு இரண்டும். 93

‘பின் கூடிய சேனை பெருந் திசை பின்ன ஆக,
வில் கூடு நுதல் திரு! நின்னிடை மேவ ஏவி,
தெற்கு ஊடுருவக் கடிது ஏவினன் என்னை’ என்ன,
முன் கூடின கூறினன், காலம் ஓர் மூன்றும் வல்லான். 94

இராமனது நிலை எண்ணிய சீதையின் மன நிலை
அன்பினன் இவ் உரை உணர்த்த, ஆரியன்
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள்,
என்பு உற உருகினள்; இரங்கி ஏங்கினள்;
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள். 95

கடல் கடந்தது பற்றி சீதை வினவ அனுமன் விடையளித்தல்
நையுறு சிந்தையள், நயன் வாரியின்
தொய்யல் வெஞ் சுழியிடைச் சுழிக்கும் மேனியள்,
‘ஐய! நீ அளப்ப அரும் அளக்கர் நீந்திலை
எய்தியது எப் பரிசு? இயம்புவாய்!’ என்றாள். 96

‘சுருங்குஇடை! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்குடை உணர்வினோர், ஓய்வு இல் மாயையின்
பெருங் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங் கடல் கடந்தனென், காலினால்’ என்றான். 97–மமமாயா துரத்யயா -ஸ்ரீ ராமபிரான் திருவடி பலத்தால் கடந்தேன் –

‘இத் துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை;
தத்தினை கடல்; அது, தவத்தின் ஆயதோ?
சித்தியின் இயன்றதோ? செப்புவாய்’ என்றாள்-
முத்தினும், நிலவினும், முறுவல் முற்றினாள். 98

அனுமன் கடல் கடந்த தன் பேர் உருவைக் காட்டுதல்
சுட்டினன், நின்றனன் – தொழுத கையினன்;
விட்டு உயர் தோளினன்; விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரு நெடு முகடு எய்தி, நீளுமேல்
முட்டும் என்று, உருவொடு வளைந்த மூர்த்தியான். 99–

இனி மேல் ஆறு கவிகள் திருவடியின் விஸ்வரூப மகிமை
செவ்வழிப் பெருமை என்று உரைக்கும் செம்மை தான்
செவ்வழிப் பூதமோர் ஐந்தின் மேலதோ
அவ்வழித் தன்று எனில் அனுமன் பாலதோ
எவ்வழித் தாகும் என்று என்னும் ஈட்டதோ — 100-

ஒத்து உயர் கனகம் வான் கிரியின் ஓங்கிய
மெய்த்துறு மரம் தொறும் மின்மினிக் குலம்
மொய்த்தது உள வாம் என முன்னும் பின்னரும்
தொத்தின தாரகை மயிரின் சுற்று எலாம்-101–மேரு மலை திருவடி திருமேனிக்கு உவமை

கண் தலம் அறிவோடு கடந்த காட்சியன்
விண் தலம் இரு புடை விளங்கும் மெய்ம்மை அக்
குண்டலம் இரண்டும் அக்கோளின் மாச் சுடர்
மண்டலம் இரண்டுடன் மாறு கொண்டன -102-குண்டல மணிகள் சூர்ய சந்த்ர மண்டலங்களை வென்றன-

ஏண் இலது ஒரு குரங்கு ஈது’ என்று எண்ணலா
ஆணியை, அனுமனை, அமைய நோக்குவான்,
‘சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று’ எனா,
நாண் உறும் – உலகு எலாம் அளந்த நாயகன். 103–

எண் திசை மருங்கினும், உலகம் யாவினும்,
தண்டல் இல் உயிர் எலாம் தன்னை நோக்கின;
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும்
கண்டனன், தானும், தன் கமலக் கண்களால். 104

எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துற அழுத்தலின், இலங்கை ஆழ் கடல்
விழுந்தது; நிலமிசை விரிந்த வெண் திரை
தழைந்தன; புரண்டன மீனம் தாம் எலாம். 105

பேர் உருவை ஒடுக்குமாறு அனுமனைச் சீதை வேண்டுதல்
வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள்,
கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்;
‘துஞ்சினர் அரக்கர்’ என்று உவக்கும் சூழ்ச்சியாள்,
‘அஞ்சினேன் இவ் உரு; அடக்குவாய்’ என்றாள். 106

முழுவதும் இவ் உருக் காண முற்றிய
குழு இலது உலகு; இனி, குறுகுவாய்’ என்றாள்,-
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களைத்
தழுவினளாம் என, தளிர்க்கும் சிந்தையாள். 107

எளிய உருவு காட்டிய அனுமனைச் சீதை பாராட்டுதல்
ஆண்தகை அனுமனும், ‘அருளது ஆம்’ எனா,
மீண்டனன், விசும்பு எனும் பதத்தை மீச் செல்வான்,
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான்;
தூண்டல் இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள். 108

‘இடந்தாய் உலகை மலையோடும், எடுத்தாய் விசும்பை, இவை சுமக்கும்
படம் தாழ் அரவை ஒரு கரத்தான் பறித்தாய், எனினும், பயன் இன்றால்;
நடந்தாய் இடையே என்றாலும், நாண் ஆம் நினக்கு; நளிர் கடலைக்
கடந்தாய் என்றல் என் ஆகும்?-காற்றே அனைய கடுமையாய்! 109–இது முதல் ஐந்து கவிகள் பிராட்டி திருவடியை புகழ்தல்-

ஆழி நெடுங் கை ஆண் தகை தன் அருளும், புகழும், அழிவு இன்றி,
ஊழி பலவும் நிலை நிறுத்தற்கு, ஒருவன் நீயே உளை ஆனாய்;-
பாழி நெடுந் தோள் வீரா!-நின் பெருமைக்கு ஏற்ப, பகை இலங்கை
ஏழு கடற்கும் அப் புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ? 110–

அறிவும் ஈதே யுரு ஈதே ஆற்றல் ஈதே யாரும் புலத்தின்
செறிவும் ஈதே செயல் ஈதே தேற்றம் ஈதே தேற்றத்தின்
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால்
வெறியர் அன்றோ குணங்களால் விரிஞ்சன் முதலா மேலானோர் -111-

மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி, வீரற்குப்
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி,
உன்னாநின்றே உடைகின்றேன், ஒழிந்தேன் ஐயம்; உயிர் உயிர்த்தேன்;
என்னே? நிருதர் என் ஆவர், நீயே எம் கோன் துணை என்றால்? 112

‘மாண்டேன் எனினும் பழுது அன்றே; இன்றே, மாயச் சிறை நின்றும்
மீண்டேன்; என்னை ஒறுத்தாரைக் குலங்களோடும் வேர் அறுத்தேன்,
பூண்டேன் எம் கோன் பொலங் கழலும்; புகழே அன்றி, புன் பழியும்
தீண்டேன்’ என்று, மனம் மகிழ்ந்தாள், திருவின் முகத்துத் திரு ஆனாள். 113

அனுமனின் பணிமொழி
அண்ணற் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான், ‘அருந்ததியே!
வண்ணக் கடலினிடைக் கிடந்த மணலின் பலரால்; வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத் தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர் தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவல் கூவல் பணி செய்வேன். 114

வானரப் படையின் சிறப்பை அனுமன் எடுத்துரைத்தல்
‘வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை? இவ் வேலைப்
பள்ளம், ஒரு கை நீர் அள்ளிக் குடிக்க, சாலும் பான்மையதோ?
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ,
உள்ள துணையும் உளது ஆவது? அறிந்த பின்னும் உளது ஆமோ? 115

‘வாலி இளவல், அவன் மைந்தன், மயிந்தன், துமிந்தன், வயக் குமுதன்,
நீலன், இடபன், குமுதாக்கன், பனசன், சரபன், நெடுஞ் சாம்பன்,
காலன் அனைய துன்மருடன், காம்பன், கயவன், கவயாக்கன்,
ஞாலம் அறியும் நளன், சங்கன், விந்தன், துவிந்தன், மதன் என்பான்; 116

‘தம்பன், தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன், சதவலி என்று
இம்பர் உலகொடு எவ் உலகும் எடுக்கும் மிடுக்கர், இராமன் கை
அம்பின் உதவும் படைத் தலைவர்; அவரை நோக்கின், இவ் அரக்கர்,
வம்பின் முலையாய்! உறை இடவும் போதார்; கணக்கு வரம்பு உண்டோ ?’ 117

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த -ஸ்ரீ மா முனிகள் விஷய-ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு–

June 11, 2020

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

—————

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் யாயிடினும்
அக்கணத்தே நம் இறைவராவாரே -மிக்க புகழ்
காரார் பொழில் கோயில் கந்தாடை அண்ணன் என்னும்
பேராளனை அடைந்த பேர் -தனியன் –

ஸ்ரீ வரத நாராயண குரு -என்னும் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு –
சிஷ்யருக்கு ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த தனியன்
ஸ்ரீ பெரிய கோயிலே நிரூபணம் கோயிலில் வாழும் வைஷ்ணவர் என்றபடி –
ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ முதலியாண்டான் பாதுகை அம்சம் போல் ஸ்ரீ அண்ணன் ஸ்ரீ மா முனிகளுக்கு பாதுகை ரத்னம்
ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே நம்முடைய அண்ணன் என்று அபிமானித்து அருளிச் செய்த திரு நாமம்

ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஸாஸ்த்ரம் -யார் அறிவார் -யார் அனுஷ்ட்டிப்பார் -ஓர் ஒருவர் உண்டாகில் –
அனுஷ்டான பர்யந்தம் மா முனிகள் இடம் தானே காணலாம்
ஆச்சார்யன் தனது சிஷ்யனை தனது ஆச்சார்யருடைய சிஷ்யனாகவே நினைத்து உபதேசிக்க வேண்டும் –
ச ப்ரஹ்மச்சாரிகள் என்ற நினைவு கொண்டு -மா முனிகள் அனுஷ்ட்டித்து காட்டியதும் இதுவே உதாஹரணம் –
ஆகவே அவரை ஆஸ்ரயித்தவர்களே தமக்கு இறைவர் ஆவார் என்று அருளிச் செய்கிறார் –

———-

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே –1-

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யரைப் பற்றும் பொழுது
அவரது ஆச்சார்யரைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமே
குரு பரம்பரையும் அனுசந்தேயம்
சீர்மையும் செம்மையும் -உடைய சொற்கள் –
இனிமையாகவும் -உண்மையாயும் -எக்காலத்துக்கும் பிரயோஜனமாயும் இருக்குமே
சீரூற்ற -சொற்களுக்கும் திருவாய் மொழிப்பிள்ளைக்கும் விசேஷணம்
திருவாய் மொழியையே நிரூபகமாகக் கொண்ட சீர்மை உண்டே –
மேலே அவரது வடிவு அழகு ஈடுபாடு
செம் முகமும் –
தாருற்ற மார்பும் -தாமரை மணி மாலை திருத்துழாய் மாலை
தளிரேய் பதங்களும்
தன் மனத்துப் பூரித்து வாழும் மணவாள மா முனி -ஸதா
தியானத்துக்கு –சிஷ்யரானவர் ஆச்சார்யர் உடைய சீர் வடிவை ஆசையுடன் நோக்குபவர் அன்றோ
தனது வாக்கின் படியே அனுஷ்ட்டித்து காட்டி அருளுபவர்
பொன்னடிகள் -பூணுபவர்க்கு ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் இருக்குமே பொன் -மா முனிகள் திருவடித்தாமரைகள்
பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உண்டே —
திருக்கமல பாதம் -திருப்பாதம் -கமல பாதம் போல் அன்றோ இவரதுவும்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே-ஆகிஞ்சன்யனான -அநந்ய கதியான தமியேன் ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தேன்

————-

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை பாதங்களே
உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே
கற்றனன் கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப்
பெற்றனன் இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே –2–

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை ஆச்சார்யர் – தம்முடைய ஆச்சார்யர் இடமும்
சிஷ்யர் ப்ரீதியுடன் இருப்பதையே விரும்புவார்
உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே கற்றனன் -ஸமஸ்த வேதங்களும் அருளிச் செயல்களும்
ஸஹஸ்ர மாதா பிதாக்கள் போல் பிரதி பத்தி பண்ண வேண்டுமே
கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப் பெற்றனன் -தனது பேறாகவே பொழியும் கார் முகில் –
காரேய் கருணை யதிராசருடைய புனர் அவதாரம் அன்றோ
இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே-பேற்றுக்கு உபாயம் ஆச்சார்யர் அபிமானமே -இதுவே உத்தாரகம்

———————-

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் பெருமை என்றும்
துறவாத சிந்தை எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே —3–

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் -வரம் கொடுப்பவர்களில் ராஜர் -தியாகராஜர் -சம்ப்ரதாயம் வளர்த்த வள்ளல்
விந்த்யா ஆடாவியில் பெரிய பிராட்டியார் உடன் வந்து ரக்ஷித்து
ஆ முதல்வன் இவன் என்று ஆளவந்தார் கடாக்ஷித்து பிராரத்தபடி ராமானுஜரை ஆக்கி அருளி
ஆறு வார்த்தை அருளி சங்கை தீர்த்து தர்சனத்துக்கு ஆக்கி அருளி
வாதத்தில் எஜ்ஜ மூர்த்தியை -வென்று அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆக்கிய பெருமை –
பெருமை என்றும் துறவாத சிந்தை எதிராசன் –காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப்
பூண்ட அன்பாளன் அன்றோ நம் இராமானுசன் -திருவாராதன பெருமாள் இவரே
துய்ய பதங்கள் நெஞ்சில் மறவாத சீலன் மணவாள மா முனி -யதீந்த்ர பிரவணர் இவர் ஒருவரே –
மா மலர்த்தாள் -மா முனிகள் திருவடிகள் தானே மா மலர்த்தாள்களாய் இருக்கும்
பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே -இவற்றை அறிந்தும் ஆஸ்ரயிக்காத
யார் ஒருவர் இருந்தால் அவர் மஹா பாதகர் தானே

—————-

பாதகம் உள்ளவை தாமே ஒழித்துப் பரிந்து அவர்க்குச்
சாதகமானதும் ஈதென்று கொண்டு சரண் கொடுக்கும்
மா தகவோன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பாதுகையை முடி மேல் சரணாகக் கொண்டு பற்றினார்க்கே –4–

திருப் பாதுகையே தனது ஸ்பர்சத்தாலே பிரதிபந்தகங்களை ஒழித்து -பரிந்து ஒழித்து –
சாதகமும் ஈதே என்று தன் தாளும் அருளுவாரே
தகவு -மா -தகவு -பிரதிபலன் எதிர்பார்க்காமல் தன் பேறாக -நிர்ஹேதுகமாக –
மா விசேஷணம் -தகவுக்கும் -முனிகளுக்கும் -தாள்களுக்கும் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – இவரும் பாதுகா ஸ்தானீயம் அன்றோ –
பொன்னடியாம் செங்கமலப் பொதுக்களை உன்னிச் சிரத்தால் திண்டில்
அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் -அன்றோ

—————–

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம்
முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே –5–

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம் -மோக்ஷ பிரதனாக இல்லாமல் இருந்தாலும்
திவ்ய மங்கள வடிவு அழகு விட ஒண்ணாதே
கேசவன் -நன்மை -கெடும் இடம் எல்லாம் கேசவா என்ன -நாம் அறியாத நன்மைகளையே தானே அருளுபவர் அன்றோ –
நன்மை -தமர்களுக்கு விசேஷணம் -ததீய சேஷத்வம் அறிந்து -இதுவே நல் தவம்
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -ஆச்சார்ய கைங்கர்யமே போது போக்கு -ஆச்சார்ய திருவடிகளே ப்ராப்யம்
இவர் கண்களுக்கு விருந்தாய் இருப்பாரே –கோளரியை வேறாக ஏத்தி இருப்பரை வெல்லும் மற்று அவரை சாத்தி இருப்பார் தவம்
பொன் மேனி கண்டேன் -கோல மேனி காண வாராய் -இங்கு தான் பெண்ணாகவும் கோலமாகவும்
திருவாலே பொன்னாக பிரகாசிக்கும் கரிய முகில் புரையும் திரு மேனி அவனது
பொன் மேனி அவயவ சோபை -கோல மேனி -சமுதாய சோபை –இரண்டுமே இங்கு –
முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை -திவ்ய மங்கள விக்ரஹ சிந்தனையே
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே-கோடி கோடி யுகங்களாக –
கோடி -மூலை -க்ஷணம் காலமாகவாவது சிந்தித்தாலே அத்விதீயமாவோமே

———————

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு
நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து நன்கு தன்பால்
தொல்லருள் ஞானம் விளைத்து ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே
வல்லவன் கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு-கர்மங்கள் ஆகிற காடு –
அநாதி பிறவிச் சூழலில் திக்கித் தடுமாறி -ஆர்ஜித்தவற்றை
அக்னியில் இட்டால் போல் -அழித்து –தீயினில் தூசாகும் -அதுக்கும் மேலே
நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து -நிர்ஹேதுக கடாக்ஷ வர்ஷம் -குளிர்வித்து
நன்கு தன் பால் தொல்லருள் ஞானம் விளைத்து -நிலத்தில் விலைக்கும் -தொல் ஞானம் -அருள் ஞானம் –
பூர்வாச்சார்யர் வர்ஷித்த அர்த்த விசேஷங்களைத் தொகுத்து –
அனைத்தும் சேர்ந்த மடு அன்றோ இவர் -இதுவே தொல் ஞானம்
இவற்றை நிர்ஹேதுகமாக தமது பேறாக அருளியதே அருள் ஞானம்
ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே வல்லவன்-பரமபத அனுபவம் -ஞான கார்யமான அனுபவ ஜனித்த ப்ரீதி காரித
அசேஷ சேஷ வ்ருத்திகளும் பண்ணும் படி அருள வல்லவர் அன்றோ
கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே-இவருக்கு நிரூபகமே கோயில் மணவாள மா முனி
எந்தை எதிராசருக்கு அரங்கன் ஈந்த வரம் -இந்த திருவரங்கத்தில் இனிது இரும் என்ற திரு முக வார்த்தை
தம் தமக்கும் என்று கொண்டு இருந்தாரே –
த்வயம் அர்த்த அனுசந்தான ஸஹ அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூகம் ஆஸ்வ -வரம் -நியமனம் -இவருக்கும் தானே
உபகார ஸ்ம்ருதியாலே இவரை மங்களா சாசனம் பண்ணுகிறார் –

—————-

வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில்
காழ்த்திடும் செல்ல முதல் முக்குறும்பும் கரிசறவே
பாழ்த்திடும் என் தன் அதி கோர பாவங்கள் பற்றறவே –7–

வாக்கு -செயல் -மனம் முக்கரணங்கள் ஒருப்பட்ட மஹாத்மாக்கள் -ஆர்ஜவ குணம் –
ஐந்தாதவது பாசுரம் மனம் ஈடுபட்டு -மணவாள மா முனி மூர்த்தி தனை எக் கோடி காலமும் சிந்தை செய்வார்
ஆறாவது பாசுரம் வாக்கு ஈடுபட்டு -இதிலும் -வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள் –
அடுத்து காயிக ஈடுபாடு -இதில் -தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில் –
சிரம் அனைத்துக்கும் உப லக்ஷணம் -தண்டன் இட்டு வணங்கி
இவை மூன்றும் முக்குறும்பு போக்கவே
தன -அபிஜன -வித்யா கர்வங்கள் போக்கவே -எளிதில் போக்க முடியாதே –
நம் ஸ்ரீ வத்ஸாங்கர் -கூரத்தாழ்வான் போலே ஆகவே-
அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருப்பதால் உடையவரால் அபிமானிக்கப் பட்டு ஆழ்வான் –
அவர் அபிமானத்தாலே முக்குறும்பு அறுக்கப் பட்டவர் –
ஆச்சார்ய அபிமானத்தாலே நமது பிரதிபந்தகங்கள் போக்கப் பெறுவோம் -அதி கோர பாவங்கள் பற்றறவே-

————————-

வாழ்த்துவன் என்றாரே -நாமக்கோ வாழ்த்த ஸாமர்த்யம் இல்லையே –
நீசர்களாய் இருக்கிறோமே என்னாகும் அவன் புகழுக்கு என்று இருக்கவே
சிந்திக்கவே பெறப் போகும் அனைத்தையும் இங்கு காட்டி அருளுகிறார் –

பாவங்கள் பற்றறும் பாசங்கள் பற்றறும் பற்றி வைகும்
கோவங்கள் பற்றறும் குற்றங்கள் பற்றறும் கோடி சன்ம
தாவங்கள் பற்றறும் தண்ண ரங்கன் புகழ் சாந்த குண
தீவன் கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே –8-

பாவங்கள் பற்றறும் -பிரதிபந்தங்கள் போக்கி அருளுவார்
பாசங்கள் பற்றறும் -விஷயாந்தரங்களின் பற்று போக்கி அருளுவார் -இவை அன்றோ பாபங்களுக்கு வேர்ப்பற்றுகள் –
பற்றி வைகும் கோவங்கள் பற்றறும் –ராக த்வேஷங்கள் -காமம் கோபம் இத்யாதிகளை போக்கி அருளுவார்
குற்றங்கள் பற்றறும் -இவற்றால் வரும் குற்றங்களையும் போக்கி அருளுவார்
கோடி சன்ம தாவங்கள் பற்றறும் -தாப த்ரயங்கள் போக்கி அருளுவார் –
தண்ண ரங்கன் புகழ் சாந்த குண தீவன் -ஈடு கேட்டு அருளினான் இவர் திரு வாயாலே –
அரங்கன் புகழ் சாந்த குண தீவன்-இவரை ஆஸ்ரயித்தே பெரிய பெருமாள் ஆனார் –
அனைத்து ஆச்சார்யர்கள் வியாக்யானங்களும் இவர் இடம் சேர்ந்து உள்ளனவே -ஆகவே ரசிக்கும்
கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே-சிந்தித்த -மாத்திரமே சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்

——————-

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால்
வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து மெய்ம்மா மறையோர்
புந்திக்குள் மேவும் வர யோகி தம்மைப் புகைந்து சிலர்
சிந்திக்கிலுமே விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே –9–

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் -இஹ லோகம் பயம் கெடவும் –
கைங்கர்யம் -குண அனுபவ போது போக்கு நிச்சலுமாகக் கிடைக்குமா -என்றும்
அங்கு சென்று நித்ய கைங்கர்யம்பெறுவது என்றோ என்னும் பயமும் இருக்குமே
சென்னி தன்னால் வந்தித்து -சிந்தனைக்கு மேலே காயிக விருத்தியும்
நிச்சலும் வாயாரா வாழ்த்து -வாயார ஸ்தோத்ரங்களைச் சொல்லியும்
மெய்ம்மா மறையோர் -கற்றதன் பலனை அனுஷ்டித்துக் காட்டுபவர்கள் -நன்மையால் மிக்க நான் மறையோர்
ஆச்சார்யர் உகந்த விஷயம் என்றே பகவத் விஷயத்தில் இழிவார்கள் அன்றோ –
மதுரகவி ஆழ்வார் -அனந்தாழ்வான் போல்வார் நிஷ்டைகள் –
புந்திக்குள் மேவும் வர யோகி -இப்படி உள்ளார் சிந்தைக்குள் அன்றோ மா முனிகள்
தம்மைப் புகைந்து சிலர் சிந்திக்கிலுமே -இப்படிப்பட்ட அவரை த்வேஷிப்பார் ஓர் ஒருவர் இருந்தாலும்
விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே–அவர்கள் உஜ்ஜீவனத்துக்காக -அவர்களையும் கூட விடாதவர் அன்றோ -மா முனிகள்
மித்ர பாவேந -வேண்டாவே -நிதிப்பார்க்கும் -நாலூரானுக்கு இரங்கி அருளிய கூரத்தாழ்வான் போல் அன்றோ நம் ஸ்வாமி –
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -கூரத்தாழ்வான் –அவர் தேவிகள் குறைத்து ஆண்டாள் பிராட்டி –
நாலூரானுக்கும் -பட்டர் இடம் அபசாரம் பண்ணிய அரசன் -ராக்ஷஸிகள் பக்கல் கிருபை பண்ணி அருளியது போல் இங்கு மா முனிகளும்

——————–

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் வாதியர்க்கு
நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும்
தம் சேவை தன்னை இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே –10-

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்-அவர் திரு உள்ளம் போல் விசால திரு உள்ளம் கொண்ட அடியார்கள்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் -மேகம் சூழ்ந்த திருவரங்கத்தில்
வாதியர்க்கு – வீணான வாதிகளுக்கு -கால ஷேபத்துக்கு அருளிச்செயல்களே இருந்தாலும் – –
மாயா வாதிகள் வந்தால் சிஷ்யர்களை இட்டே வெல்லும் சீர்மை -வேடலப்பர் இட்டு வென்ற
நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும் தம் சேவை தன்னை -எம்பெருமானாரை நேரில் சேவிக்காத
இழவு தீர சேவை சாதித்து தர்சன நிர்வாஹம் பண்ணி அருளும் மா முனிகளை
இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே-இகழ்வார் கல்லார் -பாட பேதம் -அறிவில்லாதவர் –
இவர்களுக்கும் கூட கிருபை -அடைந்தர்வர்கட்க்கு எல்லாம் அன்பராய் இருக்கிறாரே –

———————–

இட்டர்கள் வாழ எதிராசர் வாழ இரு நிலத்தே
சிட்டர்கள் வாழ நம் தேசிகர் வாழச் செகத்தில் உள்ள
துட்டர்கள் மாள மணவாள மா முனி தோன்றினனே
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே –11-

இட்டர்கள் வாழ -மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் -நித்யம் –
இதுக்கு பிரயோஜனம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ
எதிராசர் வாழ -எம்பெருமானார் அதுக்கு வாழ வேண்டுமே
இரு நிலத்தே சிட்டர்கள் வாழ -ஆச்சார்ய அபிமானம் என்று இருப்பார்கள் வாழ
நம் தேசிகர் வாழ- நமது ஆச்சார்யர்கள் வாழ்வதாவது அவர் காலக்ஷேபங்களைக் கேட்டு அனுஷ்டித்த பின்பே
செகத்தில் உள்ள துட்டர்கள் மாள-மாறன் கலையே உணவாகப் பெற்றார் நமது ஸ்வாமி –
துஷ்டர்கள் தாங்களே மாண்டு போவார்கள் நம் ஸ்வாமி பிரபாவம் கேட்ட மாத்திரத்தாலே –
திருவாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் அரண் போல் ஸ்வாமியுடைய காலஷேபமே ரக்ஷை நமக்கு –
நடையாடும் மதிள் போல் -நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த அன்றோ திருவாய் மொழி
ஸ்வாமி ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகளையே வாய் வெருவி க்கொண்டு இருப்பாரே
மணவாள மா முனி தோன்றினனே-காண வாராய் என்று இருப்பார் கண்டு மகிழ்வதே பரம பிரயோஜனம் –
அவனுக்குப் போலே ஸ்வாமிக்கும் –
ஆகவே சாது பரித்ராணாம் முதலில் சொல்லி துஷ்ட நிரஸனம் பின்பு –
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே-திரு -அஷ்டாக்ஷரம் த்வயமும் இருக்கு என்று அறியாதவர்

—————-

யாவரும் உய்ய மணவாள யோகி தயாளு என்னப்
பூ மகள் மண் மகள் புண்ணியமாய் இந்த பூதலத்தே
தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு
வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-

பகவத் திரு அவதாரத்தைப் போல் என்றார் கீழே
இதில் அவன் அவதாரத்தை விட நம் ஸ்வாமி, திரு அவதாரத்தின் சீர்மை இதில்
யாவரும் உய்ய -ஸமஸ்த ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக
மணவாள யோகி தயாளு என்னப்-காரேய் கருணை ராமானுஜர் போல் தயையே வடிவாகக் கொண்டு
பூ மகள் புண்ணியமாய் மண் மகள் புண்ணியமாய் -உபய நாச்சியார் கடாக்ஷமே ஹேதுவாக —
சேதன ஸமூஹங்களை பரமபுருஷன் திருவடிகளிலே சேர்த்து அருளுவதற்காகவே
சகலரையும் திருத்தித் திரு மகள் கேள்வனுக்கே ஆள் படுத்தி அருளவே -பூ பாரம் தீர்த்து அருளவே –
ஒரு மடையாக நம் ஸ்வாமியைக் கடாக்ஷித்து அருளி –
இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் -இருள் தரும் மா ஞாலமான இதில் நம் ஸ்வாமி
திரு அவதாரம் பண்ணி இருக்கா விட்டால்
சடகோபர் திரு வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே -அருளிச் செயல்களே போது போக்காக
இருக்க ஸ்வாமி ஈட்டைப் பெருக்கி அருளினார் அன்றோ –
சூழ் விசும்புக்குப் போவதற்கு முன்பு நம்மாழ்வார்
நந்திபுர விண்ணகர -திரு விண்ணகர அனுபவத்துக்குப் போவதற்கு முன்பு கலியன்
திருப்பேர் நகர் பல சுருதி -தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11-
கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டு இவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10-
ஸ்வாமித்வம் -காட்டும் திவ்யதேச பதிகங்கள் -இவை போன்ற சாம்யங்களை அனுபவித்து போது போக்கப்
பெற்றுக் கொண்டு இருப்பது ஸ்வாமி காட்டி அருளியதாலேயே தானே –
மாறன் கலையே உணவாகப் பெற்ற நம் ஸ்வாமி –

————

வாசி யறிந்த வதரியில் நாரணார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் இவ்வையகம் சீருறவே–13-

வாசி யறிந்த வதரியில் நாரணார் -திருமந்திரம் அருளிச் செய்த பிரதம ஆச்சார்யர்
தானே சிஷ்யனுமுமாய் இருந்து அருளினாலும் திருந்தாத ஜனங்கள் உஜ்ஜீவிக்க –
திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானார் இதன் கேட்டு அறிந்து ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ரஹஸ்யம் வாசி அறிந்தவர் அன்றோ –
பெரிய பெருமாள் அருளிச் செய்த தனியனை முதல் முதலில் சொல்லி அருளியவர் இவர் தானே
தஞ்சமாய் இருக்கும் வார்த்தை கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பூர்வ அர்த்தம் அருளிச் செய்து பிற் பகுதியை
இரண்டு ஆற்றுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கம் சென்று அறிந்து கொள்ள உபதேசித்தார்
இவர்கள் வந்து சேரும் பொழுது ஈட்டு சாத்துமுறை ஆகப் போகும் நாளில் -அரங்கநாதன் –
முழுவதையும் அருளிச் செய்த வ்ருத்தாந்தம் யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவத்தில் உண்டே –
இவரே ஆச்சார்யர் என்று காட்டிக் கொடுக்கவே இங்கு அனுப்பி வைத்தான் —
இவர் பெருமை அறிந்த நாரணார் —
மனம் கொள் தேசுடை எந்தை மணவாள மா முனி -திரு உள்ளத்தில் எழுந்து அருளிய தேஜஸ்ஸூ —
சீர் தழைப்பச்-பெருமையை உலகோர் அறியும்படி
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் -ஸ்வாமியை ஆச்சார்யராகக் கண்டு அருளிச் செய்தார் அன்றோ –
இவ்வையகம் சீருறவே-அத்தாலே-இந்த லீலா விபூதி சீர் பெற்று நித்ய விபூதியில் சிறந்து விளங்கிற்றே
இப்பிரபந்த சாரமே இந்த தனியன் தானே –
தீ -தொல் அருள் ஞானம் -முக்கோல் தரித்த நம் ஸ்வாமி –பாட்டுத் தோறும் அருளிச் செய்து —
நிகமித்து அருளுகிறார் நம் கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ அழகிய மணவாள மா முனிகள் வைபவம் –ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–

June 10, 2020

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

———————————————————————

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
அவனியிலே இரு நூறு ஆண்டு இரும் நீர் என்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்
பரமபதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி
நிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருஷம் தன்னில்
தனித் துலா மூல நாள் தான் வந்தாரே—1-

நற்குரோதன வருட மகரமாத
நலமாகக் கன்னிகையை மனம் புணர்ந்து
விக்கிரம வற்சரக்கில் வீட்டிருந்து
வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
புக்கத்தில் பெண் பிள்ளை போலே சென்று
புவனியுள்ள ஸ்தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
துரிய நிலை பெற்று உலகை உயக் கொண்டாரே –2-

செய நாமமான திருவாண்டு தன்னில்
ஸ்ரீ ரங்க ராஜருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திருவீதி வாரா நிற்கத்
தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமாணைனார்
தன முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லி
சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே
சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-

வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர்சைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவீர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4-

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–

நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக் நாலாம் நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
தமிழ் மறையை வர முனிவன் வரக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில்
அத்தியனத் திருநாள் அரங்க நாதர்
தாவமற வீற்று இருந்து தருவாய் என்று
தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8–

அருளினதே முதலாக அரங்கருக்கும்
அன்று முதல் யரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப்
புண் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
மது கேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே –9-

நாமார் மெருஞ்சீர் கொள் மண்டபத்து நம் பெருமாள்
தாமாக வந்து தனித்து அழைத்து –நீ மாறன்
செந்தமிழின் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் -44-தளங்கள் –ஸ்ரீ பராசர பட்டர்–

June 8, 2020

1–ஸ்ரீ பர வாஸூதேவன் -1-138-/ ஸ்ரீ வ்யூஹ வாஸூ தேவன் -139-146-

2–ஸ்ரீ சங்கர்ஷணன் -123-124-/-129-133-
3–ஸ்ரீ ப்ரத்யும்னன் –125-126-./-133–134-
4–ஸ்ரீ அநிருத்தன் -127-128-/-135-138-
5–ஸ்ரீ விஷ்ணு –147–170-
6–ஷாட் குண்யன்–171-187-

7–ஸ்ரீ ஹம்ஸ அவதாரம் –188–194-
8–ஸ்ரீ பத்ம நாபன் –195–199-
9–ஸ்ரீ நரஸிம்ஹன்–200–210-
10-ஸ்ரீ மத்ஸயம்–211-225–
11-ஸ்ரீ உபநிஷத்தில் திரு நாமங்கள்–226-246–
12-ஸ்ரீ நாராயண பரமான திரு நாமங்கள்–247–271-

13–ஸ்ரீ விஸ்வ ரூப ஸ்வரூபி –272–300-
14–ஸ்ரீ வடபத்ரசாயி –301–313-
15–ஸ்ரீ பராசுராமர் –314 –321-
16–ஸ்ரீ கூர்ம அவதாரம் –322–332-

17–ஸ்ரீ வாஸூ தேவ –333–344-
18–ஸ்ரீ திவ்ய மங்கள விக்ரஹம்–345-350–
19–அவனது ஐஸ்வர்ய பரமான திரு நாமங்கள் –351-360-
20–ஸ்ரீ லஷ்மீ பதி –361-384–
21–ஸ்ரீ துருவன் –385-389–

22–ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் –390–421-
23–ஸ்ரீ கல்கி அவதாரம் –422–435-
24–ஸ்ரீ பர ப்ரஹ்ம முயற்சி –436-452-
25–ஸ்ரீ நர அவதாரம் –453–456-

26–அம்ருத மதன பரமான திரு நாமங்கள் –457–470 —
27—தர்ம ஸ்வரூபி –471–528-
28–ஸ்ரீ கபிலர் –529–543-
29–சுத்த சத்வம் –544–562-
30–ஸ்ரீ நாராயணனுடைய கல்யாண குணங்கள் –563–574-

31–ஸ்ரீ வியாசர் –575-607-
32–ஸ்ரீ ஸூப தன்மை –608-625-
33–ஸ்ரீ அர்ச்சா பரமான திரு நாமங்கள் -626-643-
34–ஸ்ரீ புண்ய ஷேத்ரங்கள் -644-660-
35–ஸ்ரீ பர ப்ரஹ்ம சக்தி பரமான திரு நாமங்கள் -661-696-

36–ஸ்ரீ கிருஷ்ணர் –697-786-
37–ஸ்ரீ புத்தாவதாரம் -787-810-
38–ஸாஸ்த்ர வஸ்யர் அனுக்ரஹம் –811–827-
39–வைபவ பாரமான திரு நாமங்கள் -828–837-

40–அணிமாதி அஷ்ட மஹா சித்திகள் -838–870-
41–முக்தி ப்ரதன்–871–911-
42–ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் –912–945-
43–ஜகத் வியாபார பிரயோஜனம் –946-992-
44–ஸ்ரீ திவ்யாயுத தாரி –993–1000-

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஹேதி புங்கவ ஸ்தவம் –ஸ்ரீ நடாதூர் அம்மாள் -ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்-

June 6, 2020

ஸ்ரீ நடாதூர் அம்மாள் -பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான், ஸ்ரீ கும்பகோணத்தில் சில காலம் தங்கியிருந்தார்.
அப்போது ஸ்ரீ குடந்தையைச் சேர்ந்த கந்தளன் என்ற வேதியருக்குப் பிசாசு பிடித்து விட்டதாகச் சொல்லி அவரது உறவினர்கள்
ஸ்ரீ நடாதூர் அம்மாளிடம் அழைத்து வந்தார்கள்.
கந்தளனின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த ஸ்ரீ நடாதூர் அம்மாள், அவரது உறவினர்களிடம்,
“இவரைப் பிடித்த பிசாசு எது தெரியுமா? அவர் மனத்தில் தோன்றிய பேராசை என்னும் தீய குணமே!
அந்தப் பேராசை அளவுக்கு மீறிச் சென்ற நிலையில், தன்னிலை மறந்து பித்துப் பிடித்தவர் போல் இவர் செயல்படுகிறார்!” என்று கூறினார்.

“இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?” என்று உறவினர்கள் கேட்க,
“ஸ்ரீ திருமால் கையில் சுதர்சனச் சக்கரமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தான் காலச் சுழற்சிக்கு அதிபதி.
அந்த ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அருள் இருந்தால், முற்காலத்தில் இவர் எப்படி நல்ல மனநிலையில் இருந்தாரோ,
அதே நிலையை அடையலாம்!” என்று சொன்ன ஸ்ரீ நடாதூர் அம்மாள், ஸ்ரீ குடந்தை ஸ்ரீ சக்ரபாணிப் பெருமாள் கோயிலுக்குக்
கந்தளனை அழைத்துச் சென்றார். ஸ்ரீ சக்ரபாணிப் பெருமாளைக் குறித்து முப்பத்தி இரண்டு வரிகள் கொண்ட
‘ஸ்ரீ ஹேதி புங்கவ ஸ்தவம்’ என்ற துதியை இயற்றினார்.
அந்தத் துதியின் ஒவ்வொரு வரியும் ‘ஜய’ என்ற சொல்லுடன் தொடங்கும் விதமாக அமைத்தார்.

1.ஜய! ஹேதீச! லக்ஷ்மீச பாஹ்வலங்கார பூத! – திருமாலின் கரத்துக்கு ஆபரணமாய்த் திகழும் ஆயுதங்களின் தலைவனே!
2.ஜய! பஞ்சாயுதீமுக்ய! நிர்தக்த காசீபுர! – திருமாலின் ஐந்து ஆயுதங்களுள் முதன்மையானவனே! காசீ நகரத்தை எரித்தவனே!
3.ஜய! விஷ்ணு ஹ்ருத்தத்த்வ ஸஞ்ஜாத சக்ர ஸ்வரூப! – திருமாலின் இதயத்திலிருந்து கனிந்து வந்தவனே!
4.ஜய! விஷ்ணு மூர்த்திஷு ஸர்வாஸு விக்க்யாத சிஹ்ந! – திருமாலின் திருமேனிக்கு அடையாளமாகத் திகழ்பவனே!
5.ஜய! விஷ்ணு தாஸ்ய தாந க்ஷம ஸ்ரீஷடாக்ஷர! – உனது ஆறெழுத்து மந்திரத்தால் அடியவர்களை விஷ்ணுவின் தாஸர்களாக ஆக்குபவனே!
6.ஜய! ஸம்ஸ்பர்ச நிர்தக்த ஸர்வாகவாராம் நிதே! – உனது ஸ்பரிசம் ஏற்பட்ட மாத்திரத்தில் அனைத்துப் பாபங்களையும் போக்குபவனே!
7.ஜய! கர்ப்ப ஸம்ஸ்பர்ச ஜாத காஷ்டாகுமார! – கர்ப்பத்திலிருந்து கரிக்கட்டையாகத் தோன்றிய பரீக்ஷித்தைக் காத்தளித்தவனே!
8.ஜய! விப்ரசித்த்யாஸுரீ கல்பநா கல்ப ஸூர்ய! – ப்ரஹ்லாதனை அச்சுறுத்திய விப்ரசித்தியின் ஜாலத்தைத் தவிடுபொடி ஆக்கியவனே!
9.ஜய! தாபேந யஸ்த்வாம் வஹந் கர்மயோக்ய:! – உன்னைத் தோளில் தரிப்பவர்களுக்கு வைதிகக் கர்மங்கள் செய்யும் அதிகாரத்தைத் தருபவனே!
10.ஜய! ஹரிஸ்த்வாம் ததத் ஸவ்யபாணௌ யுத்தயோக்ய: -உன்னை இடக்கையில் ஏந்துகையில் திருமால் போருக்குத் தயாராகிறார்!
11.ஜய! தேவாச்ச மஸ்தேஷு த்வாம் ததுர்தேவ பூதா:! – தேவர்கள் எந்தச் செயலைத் தொடங்கும் முன்பும் உன்னை வணங்குவர்!
12.ஜய! பாஸா விருந்தன் பாஸாம் பதிம் ராத்ரிமாதா:! – உன் ஒளியால் சூரியனை மறைத்து, இருட்டை உண்டாக்கியவனே!
13.ஜய! ஸர்வைநஸாம் தாரணம் யத்வி சிஹ்நம் தவ! – உனது சின்னம் தோளில் இருந்தால் அனைத்துப் பாபங்களும் தொலையும்!
14.ஜய! க்ருஷ்ணார்ஜுநாபீஷ்ட விப்ரக்ரியா தேஜஸா! – அந்தணனின் மகன்களை மீட்கச் சென்ற கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் வழியில் ஒளி தந்தவனே!
15.ஜய! யஸ்ய மூர்த்திர்பவத் சிஹ்நிதா தஸ்ய முக்தி:! – உனது சின்னத்தைத் தோளில் பொறித்துக் கொண்டவர்கள், மோட்சம் அடைவதற்குத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.
16.ஜய! யே அநங்கிதாஸ்தே பத்யமாநா பாசஹஸ்தை:! – உனது சின்னம் இல்லாதவர்கள் யமனின் பாசக் கயிற்றால் பீடிக்கப்படுகிறார்கள்.
17.ஜய! ஸம்ஸ்கார முக்க்யார்ய பாச்சாத்ய துக்தாபிஷேக! – சங்கசக்ர லாஞ்சனம் நிறைவடைந்த பின் பால் திருமஞ்சனம் கண்டருள்பவனே!
18.ஜய! சங்காஸி கௌமோதகீ சார்ங்க ஸுப்ராத்ருபாவ! – பெருமாளின் மற்ற ஆயுதங்களுடன் சகோதர உறவோடு பழகுபவனே!
19.ஜய! மாலேஸ்ஸுமாலேச்ச நக்ரஸ்ய க்ருத்தாஸ்ய கண்ட! – ராவணனின் பாட்டன்களாகிய மாலி, சுமாலி, கஜேந்திரனைப்
பீடித்த முதலை உள்ளிட்டோரின் கழுத்தைக் கொய்தவனே!
20.ஜய! ரக்ஷோஸுராணாம் தநூபாத்த ரக்தார்த்ர மால! – அசுர-ராட்சசர்களின் ரத்தக்கறை படிந்த மாலையை அணிந்தவனே!
21.ஜய! வித்ராவிதோ த்வேஷக்ருத் பௌண்ட்ரகஸ் தேஜஸா தே!- கண்ணனை வெறுத்த பௌண்ட்ரக வாசுதேவனை அழித்தவனே!
22.ஜய! வித்வேஷிணீ தாஹமாஸாதிதா கோட்டவீ ஸா! – பாணாஸுர யுத்தத்தின் போது இடையூறு செய்த பாணாஸுரனின் தாயான கோட்டவியை அழித்தவனே!
23.ஜய! ஹரிஸ்த்வம்பரீஷம் ஹி ரக்ஷந் பவந்தம் வ்யதாத்! – திருமால் அம்பரீஷனை ரக்ஷிப்பதற்கு உதவி செய்தவனே!
24.ஜய! தூர்வாஸஸம் த்வம் பராஜிக்யிஷே தஸ்ய ஹேதோ! – திருமால் துர்வாஸரை வெற்றி கொள்ளக் காரணமாய் இருந்தவனே!
25.ஜய! வேதாச்ச தைவம் பரம் மந்வதே த்வாம் வஹந்தம்! – உன்னை ஏந்தியவனே பரம்பொருள் என்று வேதங்கள் சொல்கின்றன.
26.ஜய! ஹேதீஷு ஸத்ஸ்வேவ ஹந்தா ரிபூணாம் த்வமேவ! – திருமால் எந்த ஆயுதத்தை எடுத்தாலும் அது நீயாகவே ஆகிறாய்.
27.ஜய! தேவஹேதிசிஹ்நேஷு ஸர்வேஷு முக்யோ பவாந்! – ஆயுதச்சின்னங்கள் அனைத்தினுள்ளும் முதன்மையானது உன்னுடைய சக்கரச் சின்னமே!
28.ஜய! விஷ்ணு பக்தேஷு தாஸ்யப்ரதாநம் த்வயைவாங்கநம்! – உனது சின்னத்தை ஏற்பதால், விஷ்ணுபக்தன் தொண்டு செய்வதற்கான தகுதியைப் பெறுகிறான்!
29.ஜய! லீலாவிஹாரே சோத்ஸவே சரஸ்யக்ரணீஸ்த்வம்! – திருமாலின் உற்சவங்களிலெல்லாம் முன்னே செல்பவன் நீயன்றோ?
30.ஜய! தைவாஸுரே ஸங்கரே ரக்தபுக் நிர்பயஸ்த்வம்! – தேவாசுர யுத்தத்தில் பயமின்றிப் போரிட்டுத் தீய சக்திகளின் ரத்தத்தைப் பருகுபவனே!
31.ஜய! தர்சயாத்மபாஸா விரோதீந்யகாநி த்வம் நுத – உன்னை வணங்குபவர்களின் விரோதிகளான பாபங்கள் அனைத்தையும் போக்குபவனே!
32.ஜய! தேஹி விஷ்ணுலோகம் ஏவம் விதே பக்திஹீநே!

பக்தியில்லாத அடியேனுக்கும் ஸ்ரீ விஷ்ணு லோகத்தை அருள்வாயாக! உனக்கு ஜெயம் உண்டாகட்டும்!
“ஸ்ரீ ஸுதர்சன ஸ்தோத்ரம் இதம் வரதார்யேண நிர்மிதம்
படந் ஸித்யதி வை ஸத்யோ ந பயம் தஸ்ய ஹி க்வசித் ”
இந்தத் துதியைப் படிப்பவர்களுக்கு ஸ்ரீ சக்ரபாணிப் பெருமாள் அருளால், அனைத்து வெற்றிகளும் உண்டாகும்.
அவர்களின் அனைத்து பயங்களும் விலகும்.

(வரலாற்றில், ஸ்ரீ சக்கரத்தாழ்வாரைக் குறித்து எழுந்த முதல் ஸ்தோத்திரம் இதுவே என்பது குறிப்பிடத் தக்கது.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தனிக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ குடந்தையில் இத்துதி தோன்றியது. 32 முறை ‘ஜய’ என்ற சொல்
இடம் பெற்றுள்ள இந்தத் துதியைச் சொல்லும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்து ஜயங்களும் உண்டாகும்.)

இத்துதியை ஸ்ரீ நடாதூர் அம்மாள் நிறைவு செய்த போது, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் எதிர்த்திசையில் சுற்றினார்.
அவரது சுழற்சிக்கேற்றபடி காலம் இயங்குவதால், அவர் நேர்த் திசையில் சுற்றினால் காலம் முன் நோக்கியும்,
எதிர்த்திசையில் சுற்றினால் காலம் பின் நோக்கியும் செல்லும். இப்போது அவர் எதிர்த்திசையில் சுற்றியதால்,
கடந்த காலத்தில் இருந்த நல்ல மனநிலையை அடைந்தார் கந்தளன்.
அவரைப் பிடித்த பேராசை என்னும் பிசாசு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.

இவ்வாறு காலத்தை நிர்வகிக்கும் காலச் சக்கரமாகிய ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பதால்,
ஸ்ரீ திருமால் ‘அஹஸ் ஸம்வர்த்தக:’ என்றழைக்கப்படுகிறார்.
‘அஹ:’ என்பதற்கு நாள் என்று பொருள். ‘ஸம்வர்த்தக:’ என்றால் சுழற்றுபவர் என்று பொருள்.
நாட்களைச் சுழற்றுவதால், அதாவது காலச் சுழற்சியை உண்டாக்குவதால், ஸ்ரீ திருமாலுக்கு ‘அஹஸ் ஸம்வர்த்தக:’ என்று திருநாமம்.
அதுவே ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்தின் 234-வது திருநாமம்.
வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் அமைய விரும்புவோர் “அஹஸ் ஸம்வர்த்தகாய நமஹ” என்ற இத் திருநாமத்தைத் தினமும் சொல்லலாம்.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ ஹேதி புங்கவ – ஸ்ரீ ஹேதி ராஜ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்