ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த -ஸ்ரீ மா முனிகள் விஷய-ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

—————

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் யாயிடினும்
அக்கணத்தே நம் இறைவராவாரே -மிக்க புகழ்
காரார் பொழில் கோயில் கந்தாடை அண்ணன் என்னும்
பேராளனை அடைந்த பேர் -தனியன் –

ஸ்ரீ வரத நாராயண குரு -என்னும் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு –
சிஷ்யருக்கு ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த தனியன்
ஸ்ரீ பெரிய கோயிலே நிரூபணம் கோயிலில் வாழும் வைஷ்ணவர் என்றபடி –
ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ முதலியாண்டான் பாதுகை அம்சம் போல் ஸ்ரீ அண்ணன் ஸ்ரீ மா முனிகளுக்கு பாதுகை ரத்னம்
ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே நம்முடைய அண்ணன் என்று அபிமானித்து அருளிச் செய்த திரு நாமம்

ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஸாஸ்த்ரம் -யார் அறிவார் -யார் அனுஷ்ட்டிப்பார் -ஓர் ஒருவர் உண்டாகில் –
அனுஷ்டான பர்யந்தம் மா முனிகள் இடம் தானே காணலாம்
ஆச்சார்யன் தனது சிஷ்யனை தனது ஆச்சார்யருடைய சிஷ்யனாகவே நினைத்து உபதேசிக்க வேண்டும் –
ச ப்ரஹ்மச்சாரிகள் என்ற நினைவு கொண்டு -மா முனிகள் அனுஷ்ட்டித்து காட்டியதும் இதுவே உதாஹரணம் –
ஆகவே அவரை ஆஸ்ரயித்தவர்களே தமக்கு இறைவர் ஆவார் என்று அருளிச் செய்கிறார் –

———-

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே –1-

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யரைப் பற்றும் பொழுது
அவரது ஆச்சார்யரைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமே
குரு பரம்பரையும் அனுசந்தேயம்
சீர்மையும் செம்மையும் -உடைய சொற்கள் –
இனிமையாகவும் -உண்மையாயும் -எக்காலத்துக்கும் பிரயோஜனமாயும் இருக்குமே
சீரூற்ற -சொற்களுக்கும் திருவாய் மொழிப்பிள்ளைக்கும் விசேஷணம்
திருவாய் மொழியையே நிரூபகமாகக் கொண்ட சீர்மை உண்டே –
மேலே அவரது வடிவு அழகு ஈடுபாடு
செம் முகமும் –
தாருற்ற மார்பும் -தாமரை மணி மாலை திருத்துழாய் மாலை
தளிரேய் பதங்களும்
தன் மனத்துப் பூரித்து வாழும் மணவாள மா முனி -ஸதா
தியானத்துக்கு –சிஷ்யரானவர் ஆச்சார்யர் உடைய சீர் வடிவை ஆசையுடன் நோக்குபவர் அன்றோ
தனது வாக்கின் படியே அனுஷ்ட்டித்து காட்டி அருளுபவர்
பொன்னடிகள் -பூணுபவர்க்கு ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் இருக்குமே பொன் -மா முனிகள் திருவடித்தாமரைகள்
பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உண்டே —
திருக்கமல பாதம் -திருப்பாதம் -கமல பாதம் போல் அன்றோ இவரதுவும்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே-ஆகிஞ்சன்யனான -அநந்ய கதியான தமியேன் ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தேன்

————-

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை பாதங்களே
உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே
கற்றனன் கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப்
பெற்றனன் இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே –2–

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை ஆச்சார்யர் – தம்முடைய ஆச்சார்யர் இடமும்
சிஷ்யர் ப்ரீதியுடன் இருப்பதையே விரும்புவார்
உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே கற்றனன் -ஸமஸ்த வேதங்களும் அருளிச் செயல்களும்
ஸஹஸ்ர மாதா பிதாக்கள் போல் பிரதி பத்தி பண்ண வேண்டுமே
கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப் பெற்றனன் -தனது பேறாகவே பொழியும் கார் முகில் –
காரேய் கருணை யதிராசருடைய புனர் அவதாரம் அன்றோ
இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே-பேற்றுக்கு உபாயம் ஆச்சார்யர் அபிமானமே -இதுவே உத்தாரகம்

———————-

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் பெருமை என்றும்
துறவாத சிந்தை எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே —3–

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் -வரம் கொடுப்பவர்களில் ராஜர் -தியாகராஜர் -சம்ப்ரதாயம் வளர்த்த வள்ளல்
விந்த்யா ஆடாவியில் பெரிய பிராட்டியார் உடன் வந்து ரக்ஷித்து
ஆ முதல்வன் இவன் என்று ஆளவந்தார் கடாக்ஷித்து பிராரத்தபடி ராமானுஜரை ஆக்கி அருளி
ஆறு வார்த்தை அருளி சங்கை தீர்த்து தர்சனத்துக்கு ஆக்கி அருளி
வாதத்தில் எஜ்ஜ மூர்த்தியை -வென்று அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆக்கிய பெருமை –
பெருமை என்றும் துறவாத சிந்தை எதிராசன் –காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப்
பூண்ட அன்பாளன் அன்றோ நம் இராமானுசன் -திருவாராதன பெருமாள் இவரே
துய்ய பதங்கள் நெஞ்சில் மறவாத சீலன் மணவாள மா முனி -யதீந்த்ர பிரவணர் இவர் ஒருவரே –
மா மலர்த்தாள் -மா முனிகள் திருவடிகள் தானே மா மலர்த்தாள்களாய் இருக்கும்
பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே -இவற்றை அறிந்தும் ஆஸ்ரயிக்காத
யார் ஒருவர் இருந்தால் அவர் மஹா பாதகர் தானே

—————-

பாதகம் உள்ளவை தாமே ஒழித்துப் பரிந்து அவர்க்குச்
சாதகமானதும் ஈதென்று கொண்டு சரண் கொடுக்கும்
மா தகவோன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பாதுகையை முடி மேல் சரணாகக் கொண்டு பற்றினார்க்கே –4–

திருப் பாதுகையே தனது ஸ்பர்சத்தாலே பிரதிபந்தகங்களை ஒழித்து -பரிந்து ஒழித்து –
சாதகமும் ஈதே என்று தன் தாளும் அருளுவாரே
தகவு -மா -தகவு -பிரதிபலன் எதிர்பார்க்காமல் தன் பேறாக -நிர்ஹேதுகமாக –
மா விசேஷணம் -தகவுக்கும் -முனிகளுக்கும் -தாள்களுக்கும் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – இவரும் பாதுகா ஸ்தானீயம் அன்றோ –
பொன்னடியாம் செங்கமலப் பொதுக்களை உன்னிச் சிரத்தால் திண்டில்
அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் -அன்றோ

—————–

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம்
முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே –5–

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம் -மோக்ஷ பிரதனாக இல்லாமல் இருந்தாலும்
திவ்ய மங்கள வடிவு அழகு விட ஒண்ணாதே
கேசவன் -நன்மை -கெடும் இடம் எல்லாம் கேசவா என்ன -நாம் அறியாத நன்மைகளையே தானே அருளுபவர் அன்றோ –
நன்மை -தமர்களுக்கு விசேஷணம் -ததீய சேஷத்வம் அறிந்து -இதுவே நல் தவம்
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -ஆச்சார்ய கைங்கர்யமே போது போக்கு -ஆச்சார்ய திருவடிகளே ப்ராப்யம்
இவர் கண்களுக்கு விருந்தாய் இருப்பாரே –கோளரியை வேறாக ஏத்தி இருப்பரை வெல்லும் மற்று அவரை சாத்தி இருப்பார் தவம்
பொன் மேனி கண்டேன் -கோல மேனி காண வாராய் -இங்கு தான் பெண்ணாகவும் கோலமாகவும்
திருவாலே பொன்னாக பிரகாசிக்கும் கரிய முகில் புரையும் திரு மேனி அவனது
பொன் மேனி அவயவ சோபை -கோல மேனி -சமுதாய சோபை –இரண்டுமே இங்கு –
முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை -திவ்ய மங்கள விக்ரஹ சிந்தனையே
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே-கோடி கோடி யுகங்களாக –
கோடி -மூலை -க்ஷணம் காலமாகவாவது சிந்தித்தாலே அத்விதீயமாவோமே

———————

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு
நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து நன்கு தன்பால்
தொல்லருள் ஞானம் விளைத்து ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே
வல்லவன் கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு-கர்மங்கள் ஆகிற காடு –
அநாதி பிறவிச் சூழலில் திக்கித் தடுமாறி -ஆர்ஜித்தவற்றை
அக்னியில் இட்டால் போல் -அழித்து –தீயினில் தூசாகும் -அதுக்கும் மேலே
நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து -நிர்ஹேதுக கடாக்ஷ வர்ஷம் -குளிர்வித்து
நன்கு தன் பால் தொல்லருள் ஞானம் விளைத்து -நிலத்தில் விலைக்கும் -தொல் ஞானம் -அருள் ஞானம் –
பூர்வாச்சார்யர் வர்ஷித்த அர்த்த விசேஷங்களைத் தொகுத்து –
அனைத்தும் சேர்ந்த மடு அன்றோ இவர் -இதுவே தொல் ஞானம்
இவற்றை நிர்ஹேதுகமாக தமது பேறாக அருளியதே அருள் ஞானம்
ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே வல்லவன்-பரமபத அனுபவம் -ஞான கார்யமான அனுபவ ஜனித்த ப்ரீதி காரித
அசேஷ சேஷ வ்ருத்திகளும் பண்ணும் படி அருள வல்லவர் அன்றோ
கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே-இவருக்கு நிரூபகமே கோயில் மணவாள மா முனி
எந்தை எதிராசருக்கு அரங்கன் ஈந்த வரம் -இந்த திருவரங்கத்தில் இனிது இரும் என்ற திரு முக வார்த்தை
தம் தமக்கும் என்று கொண்டு இருந்தாரே –
த்வயம் அர்த்த அனுசந்தான ஸஹ அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூகம் ஆஸ்வ -வரம் -நியமனம் -இவருக்கும் தானே
உபகார ஸ்ம்ருதியாலே இவரை மங்களா சாசனம் பண்ணுகிறார் –

—————-

வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில்
காழ்த்திடும் செல்ல முதல் முக்குறும்பும் கரிசறவே
பாழ்த்திடும் என் தன் அதி கோர பாவங்கள் பற்றறவே –7–

வாக்கு -செயல் -மனம் முக்கரணங்கள் ஒருப்பட்ட மஹாத்மாக்கள் -ஆர்ஜவ குணம் –
ஐந்தாதவது பாசுரம் மனம் ஈடுபட்டு -மணவாள மா முனி மூர்த்தி தனை எக் கோடி காலமும் சிந்தை செய்வார்
ஆறாவது பாசுரம் வாக்கு ஈடுபட்டு -இதிலும் -வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள் –
அடுத்து காயிக ஈடுபாடு -இதில் -தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில் –
சிரம் அனைத்துக்கும் உப லக்ஷணம் -தண்டன் இட்டு வணங்கி
இவை மூன்றும் முக்குறும்பு போக்கவே
தன -அபிஜன -வித்யா கர்வங்கள் போக்கவே -எளிதில் போக்க முடியாதே –
நம் ஸ்ரீ வத்ஸாங்கர் -கூரத்தாழ்வான் போலே ஆகவே-
அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருப்பதால் உடையவரால் அபிமானிக்கப் பட்டு ஆழ்வான் –
அவர் அபிமானத்தாலே முக்குறும்பு அறுக்கப் பட்டவர் –
ஆச்சார்ய அபிமானத்தாலே நமது பிரதிபந்தகங்கள் போக்கப் பெறுவோம் -அதி கோர பாவங்கள் பற்றறவே-

————————-

வாழ்த்துவன் என்றாரே -நாமக்கோ வாழ்த்த ஸாமர்த்யம் இல்லையே –
நீசர்களாய் இருக்கிறோமே என்னாகும் அவன் புகழுக்கு என்று இருக்கவே
சிந்திக்கவே பெறப் போகும் அனைத்தையும் இங்கு காட்டி அருளுகிறார் –

பாவங்கள் பற்றறும் பாசங்கள் பற்றறும் பற்றி வைகும்
கோவங்கள் பற்றறும் குற்றங்கள் பற்றறும் கோடி சன்ம
தாவங்கள் பற்றறும் தண்ண ரங்கன் புகழ் சாந்த குண
தீவன் கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே –8-

பாவங்கள் பற்றறும் -பிரதிபந்தங்கள் போக்கி அருளுவார்
பாசங்கள் பற்றறும் -விஷயாந்தரங்களின் பற்று போக்கி அருளுவார் -இவை அன்றோ பாபங்களுக்கு வேர்ப்பற்றுகள் –
பற்றி வைகும் கோவங்கள் பற்றறும் –ராக த்வேஷங்கள் -காமம் கோபம் இத்யாதிகளை போக்கி அருளுவார்
குற்றங்கள் பற்றறும் -இவற்றால் வரும் குற்றங்களையும் போக்கி அருளுவார்
கோடி சன்ம தாவங்கள் பற்றறும் -தாப த்ரயங்கள் போக்கி அருளுவார் –
தண்ண ரங்கன் புகழ் சாந்த குண தீவன் -ஈடு கேட்டு அருளினான் இவர் திரு வாயாலே –
அரங்கன் புகழ் சாந்த குண தீவன்-இவரை ஆஸ்ரயித்தே பெரிய பெருமாள் ஆனார் –
அனைத்து ஆச்சார்யர்கள் வியாக்யானங்களும் இவர் இடம் சேர்ந்து உள்ளனவே -ஆகவே ரசிக்கும்
கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே-சிந்தித்த -மாத்திரமே சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்

——————-

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால்
வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து மெய்ம்மா மறையோர்
புந்திக்குள் மேவும் வர யோகி தம்மைப் புகைந்து சிலர்
சிந்திக்கிலுமே விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே –9–

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் -இஹ லோகம் பயம் கெடவும் –
கைங்கர்யம் -குண அனுபவ போது போக்கு நிச்சலுமாகக் கிடைக்குமா -என்றும்
அங்கு சென்று நித்ய கைங்கர்யம்பெறுவது என்றோ என்னும் பயமும் இருக்குமே
சென்னி தன்னால் வந்தித்து -சிந்தனைக்கு மேலே காயிக விருத்தியும்
நிச்சலும் வாயாரா வாழ்த்து -வாயார ஸ்தோத்ரங்களைச் சொல்லியும்
மெய்ம்மா மறையோர் -கற்றதன் பலனை அனுஷ்டித்துக் காட்டுபவர்கள் -நன்மையால் மிக்க நான் மறையோர்
ஆச்சார்யர் உகந்த விஷயம் என்றே பகவத் விஷயத்தில் இழிவார்கள் அன்றோ –
மதுரகவி ஆழ்வார் -அனந்தாழ்வான் போல்வார் நிஷ்டைகள் –
புந்திக்குள் மேவும் வர யோகி -இப்படி உள்ளார் சிந்தைக்குள் அன்றோ மா முனிகள்
தம்மைப் புகைந்து சிலர் சிந்திக்கிலுமே -இப்படிப்பட்ட அவரை த்வேஷிப்பார் ஓர் ஒருவர் இருந்தாலும்
விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே–அவர்கள் உஜ்ஜீவனத்துக்காக -அவர்களையும் கூட விடாதவர் அன்றோ -மா முனிகள்
மித்ர பாவேந -வேண்டாவே -நிதிப்பார்க்கும் -நாலூரானுக்கு இரங்கி அருளிய கூரத்தாழ்வான் போல் அன்றோ நம் ஸ்வாமி –
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -கூரத்தாழ்வான் –அவர் தேவிகள் குறைத்து ஆண்டாள் பிராட்டி –
நாலூரானுக்கும் -பட்டர் இடம் அபசாரம் பண்ணிய அரசன் -ராக்ஷஸிகள் பக்கல் கிருபை பண்ணி அருளியது போல் இங்கு மா முனிகளும்

——————–

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் வாதியர்க்கு
நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும்
தம் சேவை தன்னை இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே –10-

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்-அவர் திரு உள்ளம் போல் விசால திரு உள்ளம் கொண்ட அடியார்கள்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் -மேகம் சூழ்ந்த திருவரங்கத்தில்
வாதியர்க்கு – வீணான வாதிகளுக்கு -கால ஷேபத்துக்கு அருளிச்செயல்களே இருந்தாலும் – –
மாயா வாதிகள் வந்தால் சிஷ்யர்களை இட்டே வெல்லும் சீர்மை -வேடலப்பர் இட்டு வென்ற
நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும் தம் சேவை தன்னை -எம்பெருமானாரை நேரில் சேவிக்காத
இழவு தீர சேவை சாதித்து தர்சன நிர்வாஹம் பண்ணி அருளும் மா முனிகளை
இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே-இகழ்வார் கல்லார் -பாட பேதம் -அறிவில்லாதவர் –
இவர்களுக்கும் கூட கிருபை -அடைந்தர்வர்கட்க்கு எல்லாம் அன்பராய் இருக்கிறாரே –

———————–

இட்டர்கள் வாழ எதிராசர் வாழ இரு நிலத்தே
சிட்டர்கள் வாழ நம் தேசிகர் வாழச் செகத்தில் உள்ள
துட்டர்கள் மாள மணவாள மா முனி தோன்றினனே
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே –11-

இட்டர்கள் வாழ -மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் -நித்யம் –
இதுக்கு பிரயோஜனம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ
எதிராசர் வாழ -எம்பெருமானார் அதுக்கு வாழ வேண்டுமே
இரு நிலத்தே சிட்டர்கள் வாழ -ஆச்சார்ய அபிமானம் என்று இருப்பார்கள் வாழ
நம் தேசிகர் வாழ- நமது ஆச்சார்யர்கள் வாழ்வதாவது அவர் காலக்ஷேபங்களைக் கேட்டு அனுஷ்டித்த பின்பே
செகத்தில் உள்ள துட்டர்கள் மாள-மாறன் கலையே உணவாகப் பெற்றார் நமது ஸ்வாமி –
துஷ்டர்கள் தாங்களே மாண்டு போவார்கள் நம் ஸ்வாமி பிரபாவம் கேட்ட மாத்திரத்தாலே –
திருவாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் அரண் போல் ஸ்வாமியுடைய காலஷேபமே ரக்ஷை நமக்கு –
நடையாடும் மதிள் போல் -நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த அன்றோ திருவாய் மொழி
ஸ்வாமி ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகளையே வாய் வெருவி க்கொண்டு இருப்பாரே
மணவாள மா முனி தோன்றினனே-காண வாராய் என்று இருப்பார் கண்டு மகிழ்வதே பரம பிரயோஜனம் –
அவனுக்குப் போலே ஸ்வாமிக்கும் –
ஆகவே சாது பரித்ராணாம் முதலில் சொல்லி துஷ்ட நிரஸனம் பின்பு –
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே-திரு -அஷ்டாக்ஷரம் த்வயமும் இருக்கு என்று அறியாதவர்

—————-

யாவரும் உய்ய மணவாள யோகி தயாளு என்னப்
பூ மகள் மண் மகள் புண்ணியமாய் இந்த பூதலத்தே
தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு
வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-

பகவத் திரு அவதாரத்தைப் போல் என்றார் கீழே
இதில் அவன் அவதாரத்தை விட நம் ஸ்வாமி, திரு அவதாரத்தின் சீர்மை இதில்
யாவரும் உய்ய -ஸமஸ்த ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக
மணவாள யோகி தயாளு என்னப்-காரேய் கருணை ராமானுஜர் போல் தயையே வடிவாகக் கொண்டு
பூ மகள் புண்ணியமாய் மண் மகள் புண்ணியமாய் -உபய நாச்சியார் கடாக்ஷமே ஹேதுவாக —
சேதன ஸமூஹங்களை பரமபுருஷன் திருவடிகளிலே சேர்த்து அருளுவதற்காகவே
சகலரையும் திருத்தித் திரு மகள் கேள்வனுக்கே ஆள் படுத்தி அருளவே -பூ பாரம் தீர்த்து அருளவே –
ஒரு மடையாக நம் ஸ்வாமியைக் கடாக்ஷித்து அருளி –
இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் -இருள் தரும் மா ஞாலமான இதில் நம் ஸ்வாமி
திரு அவதாரம் பண்ணி இருக்கா விட்டால்
சடகோபர் திரு வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே -அருளிச் செயல்களே போது போக்காக
இருக்க ஸ்வாமி ஈட்டைப் பெருக்கி அருளினார் அன்றோ –
சூழ் விசும்புக்குப் போவதற்கு முன்பு நம்மாழ்வார்
நந்திபுர விண்ணகர -திரு விண்ணகர அனுபவத்துக்குப் போவதற்கு முன்பு கலியன்
திருப்பேர் நகர் பல சுருதி -தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11-
கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டு இவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10-
ஸ்வாமித்வம் -காட்டும் திவ்யதேச பதிகங்கள் -இவை போன்ற சாம்யங்களை அனுபவித்து போது போக்கப்
பெற்றுக் கொண்டு இருப்பது ஸ்வாமி காட்டி அருளியதாலேயே தானே –
மாறன் கலையே உணவாகப் பெற்ற நம் ஸ்வாமி –

————

வாசி யறிந்த வதரியில் நாரணார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் இவ்வையகம் சீருறவே–13-

வாசி யறிந்த வதரியில் நாரணார் -திருமந்திரம் அருளிச் செய்த பிரதம ஆச்சார்யர்
தானே சிஷ்யனுமுமாய் இருந்து அருளினாலும் திருந்தாத ஜனங்கள் உஜ்ஜீவிக்க –
திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானார் இதன் கேட்டு அறிந்து ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ரஹஸ்யம் வாசி அறிந்தவர் அன்றோ –
பெரிய பெருமாள் அருளிச் செய்த தனியனை முதல் முதலில் சொல்லி அருளியவர் இவர் தானே
தஞ்சமாய் இருக்கும் வார்த்தை கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பூர்வ அர்த்தம் அருளிச் செய்து பிற் பகுதியை
இரண்டு ஆற்றுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கம் சென்று அறிந்து கொள்ள உபதேசித்தார்
இவர்கள் வந்து சேரும் பொழுது ஈட்டு சாத்துமுறை ஆகப் போகும் நாளில் -அரங்கநாதன் –
முழுவதையும் அருளிச் செய்த வ்ருத்தாந்தம் யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவத்தில் உண்டே –
இவரே ஆச்சார்யர் என்று காட்டிக் கொடுக்கவே இங்கு அனுப்பி வைத்தான் —
இவர் பெருமை அறிந்த நாரணார் —
மனம் கொள் தேசுடை எந்தை மணவாள மா முனி -திரு உள்ளத்தில் எழுந்து அருளிய தேஜஸ்ஸூ —
சீர் தழைப்பச்-பெருமையை உலகோர் அறியும்படி
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் -ஸ்வாமியை ஆச்சார்யராகக் கண்டு அருளிச் செய்தார் அன்றோ –
இவ்வையகம் சீருறவே-அத்தாலே-இந்த லீலா விபூதி சீர் பெற்று நித்ய விபூதியில் சிறந்து விளங்கிற்றே
இப்பிரபந்த சாரமே இந்த தனியன் தானே –
தீ -தொல் அருள் ஞானம் -முக்கோல் தரித்த நம் ஸ்வாமி –பாட்டுத் தோறும் அருளிச் செய்து —
நிகமித்து அருளுகிறார் நம் கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: