ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –103–வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று -இத்யாதி –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி சர்வ கரணங்களும் தம் பக்கலிலே ப்ரவண மாகைக்கு உறுப்பாக ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய ஔ தார்யத்தாலே
உமக்கு உபகரித்த அம்சத்தை சொல்லீர் -என்ன-
என்னுடைய கர்மத்தை கழித்து – அழகிய ஜ்ஞானத்தை விசதமாகத் தந்து அருளினார் -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே
தம்முடைய சர்வ கரணங்களையும் ஸ்ரீ எம்பெருமானார் தம் விஷயத்தில் அதி பிரவணராகும்படி ( ஸ்ரீ யதி பிரவணர் -என்றுமாம் )-பண்ணி –
அநிதர சாதாரணமாகத் தம்முடைய ஔ தார்யத்தை தம்மிடையே வர்ப்பித்து அருளினார் -என்று சொல்லி வித்தரானவாறே –
ஆக இப்படி சர்வ கரணங்களும் தம் விஷயத்திலே யதி ப்ரவணராம் படி ஈடு படுகைக்கு உடலாக அவருடைய ஔ தார்யத்தாலே
இன்னமும் உமக்கு உபகரித்தமை ஏதாகிலும் உண்டோ என்ன –
இதிலே –
அத்யந்த கோபோவிஷ்டமாய் -அத்விதீயமான ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தை கொண்டாடி -ஸ்வ ஆஸ்ரிதரான தேவதைகளுடைய ஸ்தானங்களை
ஆக்கிரமித்து -லோகத்தை எல்லாம் பாதிக்கைக்காக கட்க ஹஸ்தனாய் தனிக் கோல் செலுத்திக் கொண்டு திரிகிற
ஹிரண்யாசுரனுடைய ஸ்வ ரூபமான சரீரத்தை துரும்பைக் கிழிக்குமா போலே அநாயாசேன கிழித்துப் பொகட்ட
ஸ்ரீ சர்வேச்வரனுடைய திவ்ய கீர்த்தியை தம்முடைய திரு உள்ளத்திலே ஸ்ரீ எம்பெருமானார் –
என்னுடைய -—ஆத்யாத்மிகாதி துக்கங்களை வாசனையோடு ஒட்டி விட்டு -கரதலாமலகமாக -தத்வ ஹித புருஷார்த்த-
யாதாம்ய ஞானத்தை கொடுத்து அருளினார் என்கிறார் –
(இதனாலே தான் நரசிம்ம- கீதாச்சார்யர்-நாராதர் -மூவர் உடைய பெருமையும் ஸ்வாமியிடம் காண்கிறோம் )

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும் தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக
உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் .

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய் வினை நோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

பத உரை –

வளர்ந்த -எல்லை கடந்து மிகுந்த
வெம்கொபம் -கொடிய கோபம் கொண்ட
ஓன்று மடங்கல் ஆய் -ஒப்பற்ற சிங்க உருவாக்கி
அன்று -அக்காலத்திலே
வாள் அவுணன் -வாள் ஏந்திய -ஹிரண்ய -அசுரனுடைய
கிளர்ந்த -பருத்து வளர்ந்த
பொன் ஆகம் -பொன் நிறம் வாய்ந்த உடலை
கீண்டவன் -கிழித்த ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளுடைய
கீர்த்திப் பயிர் -புகழாகிற பயிர்
யெழுந்து -மேலும் ஓங்கி வளர்ந்து
விளைந்திடும் -பலித்திடும்
சிந்தை -உள்ளம் படைத்த
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
என் தன் -என்னுடைய
மெய் வினை -சரீரத்தின் தொடர்பினாலாய கர்மங்களின் பயனான
நோய் -துன்பங்களை
களைந்து -போக்கி
கையில் கனி என்ன -கையில் உள்ள கனி என்னலாம் படி
நல் ஞானம் -நல்ல அறிவை
அளித்தனன் -தந்து அருளினார் –

முனைத்த சீற்றம் விண் சுடப்போய்-ஸ்ரீ பெரிய திரு மொழி – 1-7 7- – என்கிற படியே அநு கூலரான
தேவர்களும் உட்பட வெருவி நின்று பரிதபிக்கும்படி -அத்யந்த அபிவிருத்தமாய் அதி க்ரூரமான-ஸ்ரீ நரசிம்ஹமாய் –
சிறுக்கன் மேலே அவன் முழுகின வன்று –
வயிறழல வாளுருவி வந்தான் -என்கிறபடியே சாயுதனாய்க் கொண்டு எதிர்ந்த ஹிரன்யாசுரனுடைய மிடியற வளர்ந்த
ஸ்வர்ண வர்ணமான சரீரத்தை
அஞ்ச வெயிறி லகவாய் மடித்ததென்-ஸ்ரீ முதல் திருவந்தாதி – 93- என்கிறபடியே
மொறாந்த முகத்தையும் நா மடிக் கொண்ட உதட்டையும் -குத்த முறுக்கின கையையும் கண்டு –
விளைந்த பய அக்நியாலே பரிதப்தமாய் பதம் செய்தவாறே –
வாடின கோரையை கிழித்தால் போலே அநாயாசேன கிழித்து பொகட்டவனுடைய திவ்ய கீர்த்தி யாகிய பயிர்
உயர் நிலத்தில் -உள் நிலத்தில் – பயிர் ஓங்கி வளருமா போலே யெழுந்து சபலமாம் படியான
திரு உள்ளத்தை உடையராய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் –
என்னுடைய சரீர அனுபந்தி கர்ம பலமான துக்கங்களைப் போக்கிக் கரதலாமலகம் போலே சுலபமாய் -ஸூவ்யக்தமுமாய் -இருக்கும்படி
விலஷணமான ஜ்ஞானத்தை தந்து அருளினார் –
இது இறே கீழ்ச் சொன்ன ப்ராவண்யத்துக்கு அடியாக ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு பண்ணின உபகாரம் என்று கருத்து –

மடங்கல்-சிம்ஹம்
கிளர்ந்த பொன்னாகம் -என்றது மாற்று எழும்பின பொன் போன்ற சரீரம் என்னவுமாம்-

கர்மம் குறைய ஞானம் வளரும் -ஞானம் வர கர்மம் குறையும் -நம்மால் செய்ய முடியாது -அவர் கிருபையால் இரண்டையும் செய்து அருளினார்
கையில் கனி -உள்ளங்கை நெல்லிக்கனி நுட்பமாக அறியும் படி ஞானம் -தெளிந்த யாதாம்யா ஞானம் -தத்வ ஹிதம் புருஷார்த்தங்கள் மூன்றையும்
ஆராதனை பெருமாள் ஸ்ரீ அழகிய சிம்ஹப் பெருமாள் -சேராதத்தை சேர்க்க –அமுதனார் -ஞானம் -சேர்த்து -சேர்ந்த கர்மம் விலக்கி-
இது சர்வம் சமஞ்சயம் -ப்ரஹ்லாதன் அனுக்ரஹம் -ஞானம் கொடுத்து -ஹிரண்யன் அழித்து- கர்மங்கள் அழித்து –
எனக்கு செய்தது சாஹாச செயல் –கீர்த்தி என்னும் பயில் வளர்ந்த நிலம் ஸ்வாமி திரு உள்ளம் –
வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட கீர்த்தி தானே ஸ்ரீ ஸ்வாமி திரு உள்ளம்
கீர்த்தியும் -சீற்றமும் -விண் முழுதும் பரவி ஸ்வாமி திரு உள்ளத்தில் –நீசனான நான் வாழ -ஊரே வாழும்
மெய் வினை -சரீர வினை -கர்மங்களை போக்கி
நல் ஞானம் -சரம பர்வ விஷய ஞானம்
வளர்ந்த வெங்கோபம் -கொண்ட சீற்றம் —அத்யந்த அபி வருத்தம் பயங்கரம் அஸஹ்யமாய் -மொராந்த மோகம் -அட்டகாச சிரிப்பு ,
நா மடி கொண்ட உதட்டையும் குத்த முறுக்கின கையையும் கோரைக் கிழங்கு போலே கிழித்து
ஸ்ரீ நரசிம்மன் இருந்ததே ஒரு முஹூர்த்தம் -பண்ணிக் காட்டியதை உபதேசிக்க -ஸ்ரீ கீதாச்சார்யன் –
மனுஷ்யத்வம் சிங்கமும் -வலிமை -சொல்லும் சாமர்த்தியம் -கிருத யுகம் த்வாபர யுகம் –சீயம் ஆயர் கொழுந்து -ஆச்சார்யத்வம் நாரதத்வம் –
இப்படி சேராச் சேர்க்கைகள் உண்டே -நல் ஞானம் -மெய் ஞானம் – கீண்டவன் -கிழிந்தவன்-பாட பேதங்கள் –

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன் கிளர்ந்த -பொன்னாகம் கிழித்தவன்
அன்று வாளவுணன் கிளர்ந்த -பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து- விளைந்திடும் சிந்தை யிராமானுசன்
யிராமானுசன் என் தன் மெய்வினை நோய்-களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே -என்று இப்படி பிரித்து கொள்ளலாமே

ஆள் அரி –ஆண் அரி இல்லை -லோகத்து ஆள் போலே இல்லாமல் இரண்டு ஆகாரம் கலந்த ஆள் என்றவாறு
திருமேனியே வளர்ந்த -வெங்கோபம் வளர்ந்த என்றுமாம் -கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் –நஞ்சை வயலில் செழித்து வளர்ந்த –என்றபடி –
சினத்தினால் மனத்துக்கு இனியான்-ஓன்று மடங்கலாய் வெம்கோபம் கீர்த்தி –வெங்கோபம் கீர்த்தி இங்கு ஆண்டாள் பாசுரம் ஒட்டியே –
ஆகாசம் -அம்பரம் -செவ்வி மாதிரம் எட்டும் தோள்கள் திசைகள் –மிருகம் சேவி மேல் தூக்கி ஆபத்து வரும் பொழுது இருக்குமே
பரத்வம் உபாகரத்வம் – வியாப்தி ஏக தேசம் – கோப பிரசாதங்கள் சேர்த்து -திவ்ய கீர்த்தி -பிரமனை விஞ்சிய பரமன் அன்றோ –
சேராச் சேர்த்தி -ஓலைப் புறத்தில் மட்டும் கண்டு அறியாமல் பிரத்யக்ஷமாக காட்டி அருளி -சரணாகதர்களுக்கு தனம் -இவர் சினம் தானே –

வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்றாய் –
அஸ்மின் ஷனே மகா சப்த ஸ்தம்பேஸ் சம்ஸ்ருயதே ப்ர்சம் – சம்வர்த்தாச -நிசன்காத -ரவவத் ச்புடிதாந்த்ரம்-
தேன சபதே மஹதா தைத்ய ஸ்ரோத்ரா விகாதினா -சர்வே நிபாதிதா பூமவ் சின்ன மூலா இவத்ருமா –
பிப்யந்தி சகலா தேவா மேநிரைவை ஜகத் ஷயம்-தாம் ச்தூணாம் – சதாபித்வா வி நிஷ்க்ராந்தோ மஹா ஹரி –
சகார ஸூ மஹா நாதம் லயாச நிபயஸ்வனம் -தேன நாதேன மஹதா தாரகா பதிதா புவி நரசிம்ஹா வபுராஸ்தாய-
தத்ரை வாவிர பூத்தரி – அநேக கோடி ஸூ ரய அக்நி தேஜஸா மகாதாவ்ருத முகே பஞ்சா நப்ரக்ய சரீரே மானுஷா க்ருதி –
தம்ஷ்ட்ராக ராள வதன ஸ்த்ர்யா ஷஸ்த்ரி சடோத்ர்த -என்றும் –

அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் –என்றும் –
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் -மூ வுலகும் பிறவும் அனைத்து –என்றும் –
மஞ்ச வாள் அரியாய் -என்றும் –
எரித்த பைம் கண் இலங்கு பேழ் வாய் -என்றும் சொல்லுகிறபடியே –
மனுஷர்களோடு தேவர்களும் வாசி யற-அனைவரும் வெருவி விபரிதவிக்கும் படி –அத்யந்த அபி வ்ர்த்தமாய் –
அத்யந்த பயங்கரமாய் -அத்யந்த க்ரூரமாய் –அத்யந்த அசஹ்யமாய் இருந்துள்ள சீற்றத்தை உடையதாய் அத்விதீயமான
அனல் உமிழா நிற்கிற மூன்று கண்களையும்-மோறாந்த முகத்தையும் நாலு திக்குக்கும் ஏறிட்ட உதட்டையும் –
மேல் ஒரு வடிவையும் கீழ் ஒரு வடிவையும்-உடைத்தான ஸ்ரீ நரசிம்ஹமாய் –

மடங்கல் -சிம்ஹம் –

அன்று –
தேவ திர்யங் மனுஷ்யேஷூ ச்தாவரேஷ்வபி ஜந்துஷூ வ்யாபதிஷ்டதி சர்வத்ர பூதேஷ்வபி மகத் ஸூ ச இதி பிரஹ்லாத வசனம்
ஸ்ருத்வா தைத்ய பதிஸ் ததா உவாச ரோஷதாம் ராஷ பர்த்சயன் ஸ்வசூதம் முஹூ அசவ்சர்வதகோ விஷ்ணு ரபிசேத்பரம
புமான் ப்ரத்யஷம் தர்சச்வாத்ய பஹூபி கிம்ப்ரலாபிதை இத்யுக்த்வா சஹசாதைத்ய பிரசாதாத் ஸ்தம்பமாத்மான தாடாயாமா சஹச்தேன
ப்ரஹ்லாத இதமப்ரவீத் -அஸ்மின் தர்சயமே விஷ்ணும் யதிசர்வக தோபவேத் -அந்ய தாத்வம் வதிஷ்யாமி மித்யாவாக்ய ப்ரலாபினம் -என்றும் –
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப -என்றும் சொல்லுகிறபடியே –
தன் படிகளை அடைய வெளி இட்ட சிறுக்கன் மேலே அவன் முறுகி தூணை தன் காலால் உதைத்த அன்று –

வாள் அவுணன் கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் –
இத்யுக்த்வா சஹசா கட்க மாதாயதிதி ஜேஸ்வர -என்றும் –
(ஸ்ரீ ஆழ்வார்கள் காலால் உத்தைத்தான் என்று சொல்லா மாட்டார்களே -முஷ்டியாலும் கதையாலும் – என்பர் –
திருவடி ஸ்பர்சம் பெற்றால் ஹிரண்யன் பிரகலாதன் உடைய ஸ்வபாவம் பெற்று விடுவானே -திண் கழல் அன்றோ )-
வயிறு அழல வாளுருவி வந்தானை – என்றும் சொல்லுகிறபடியே –
கட்க ஹஸ்தனாய் கொண்டு எதிர்ந்த-ஹிரண்யாசுரனுடைய -இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் பாதித்து –
அவர்களுடைய ஸ்தானங்கள் அடங்கலும் ஆக்கிரமித்து -அவர்களுடைய ஹவிர்பாகங்களை பலாத்காரேன பறித்துக் கொண்டு
பஷிக்கையாலே மிடியற வளர்ந்து –நிறம் பெற்று ஸ்வர்ணம் போல் இருக்கிற சரீரத்தை –

எவ்வும் வெவ் வேல் பொன் பெயரோனே தலனின்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் -என்றும் –
அவுணன் உடல் -என்றும் –
இடந்திட்ட இரணியன் நெஞ்சை இருபிளவாக முன் கீண்டாய் -என்றும் -சொல்லுகிறபடியே
கூரிய நகங்களாலே -அநாயாசேன ஆட்டின்-குடலை கிழித்தால் போலே இரு பிளவாக கிழித்து பொகட்டவனுடைய —

கிளர்ந்த பொன்னாகம் என்றது
மாற்று எழும்பின பொன் போன்ற சரீரம் -என்னவுமாம் –

வளர்ந்த –கீந்தனன் –
சீற்றமில்லாதான் என்று பாடப் பெறும் சீதை மணாளனாம் எம்பெருமானும் -ஒரு கால் மிக்க சீற்றம் கொண்டான் –
ஜிதக்ரோதன் -கோபத்தை வென்றவன் -போர் களத்திலே அநு கூலர்களான தேவர்களும் கூட
அஞ்சும்படி கோபத்திற்கு உட்பட்டவன் ஆனான் –
உயிரையும் உடலையும் -இக்கரையும் அக்கரையுமாக பிரித்த பாபியான ராவணனை நேரே கண்டும் கோபம் கொண்டிராத ராம பிரான் –
அந்த ராவணனால் புண் படுத்தப் பட்ட பக்தனாகிய அனுமானைக் கண்டதும் -கோபத்துக்கு உள்ளானான் அன்றோ –
தன் திறத்து புரியும் அபராதங்களைப் பொறுப்பவனாயினும்-தன் அடியார் திறத்து புரியும்-அபராதத்தை பொறுக்கிலாதவன் –
ஸ்ரீ எம்பெருமான் என்பது இதனால் நன்கு வெளிப்படுகின்றது அன்றோ –

ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளும் இது போல் இரணியன் எண்ணிறந்த அபராதங்களை தம் திறத்து புரிந்ததை பொறுப்பினும்-
தம் அடியான் ப்ரஹலாதன் திறத்து அவன் புரியும் அபராதத்தை பொறுக்க கிலாது –
வரம்பின்றி –வளர்ந்த வெம் கோபத்திற்கு உட்பட்டார் –
இரணியனும் ஏனைய அசுரர்களும் மாத்திரமின்றி -அநு கூலர்களான தேவர்களும் அஞ்சி நடுங்கும்படி கோபம்
பெருகினமையின் அது வரம்பின்றி வளர்ந்தது என்க –
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் –ஸ்ரீ பெரிய திருமொழி – 1-7 7- –
என்று ஸ்ரீ திரு மங்கை மன்னன் விண்ணகமும் சுடும்படி சீற்றம் முனைந்து இருந்ததாக அருளிச் செய்தது இங்கு அனுசந்திக்கத் தக்கது .
அநு கூலர்கள் உட்பட தபிக்கும்படி இருத்தலின் கோபம் வெங்கியதாயிற்று –

புறப்பட்டது சீயம் விண்ணை முட்டும் வளர்ந்தது-மடங்கல் வளர்ந்த வெம்கொபம்-திரு மேனியும் கோபமும் வளர்ந்ததாம்

மடங்கல் ஒன்றாய் –
ஒரு மடங்கலாய் -என்று மாற்றுக
பெருமை-ஒப்பற்றமை -நரம் கலந்த சிங்கம் –உலகில்வேறு ஓன்று இல்லாமையின் இது ஒப்பற்றதாயிற்று –

அன்று வாள் அவுணன் கிளர்ந்தபொன்னாகம் கிழித்தவன் –
அன்று -ப்ரஹலாதனைப் பெற்ற தகப்பன் அடர்த்த அன்று –
வாள் அவுணன்-வாளை உடைய அவுணன் –
மடங்கலைக் கண்டதும் -வாளை உறையிலிருந்து உருவி மடங்கலோடு போரிட வந்த அவுணன் -என்றபடி
வயிறழல வாள் உருவி வந்தானை -ஸ்ரீ முதல் திருவந்தாதி -95 – என்றார் பொய்கை ஆழ்வாரும்

கீர்த்தி –
திவ்ய கீர்த்தி யாகிற சஹச்ர சீர்ஷா புருஷ சஹஸ்ராஷஸ் சஹச்ர பாத் -சபூமிம் விச்வதொவ்ர்த்வா –
அத்யதிஷ்டத்த்வ சாங்குலம் -புருஷ ஏவேதம் சர்வம் யத்பூதம் யச்ச பவ்யம் உதாம்ர்த்தத்வச்யே சான யதஹ் நே
நாதி ரோஹதி -ஏதாவா நஸ்ய மஹிமா-என்றும் –
யச்ச கிஜ்ஜிஜ் ஜத்யச்மிந்தர் ஸ்யதே ஸ்ரூய தேபிவா அந்தர் பஹிஸ் சதத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும் –
வேதாஹமேதம் புருஷம் மகாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் தமேவ வித்வா நம்ரத
இஹபவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்றும் –
ஸ்ரீ வேத புருஷனால் பிரதிபாதிக்கப் பட்ட அப்ரதிம பிரபாவம் – என்றபடி –

பயிர் எழுந்து விளைந்திடும் சிந்தை –
ஸூ ஷேத்ரத்தில் விரை விரைத்தால் ஓங்கி வளர்ந்து சம்ர்த்தியாய் பல பர்யந்தமாக விளையுமா போலே –
ஸ்ரீ அழகிய சிங்கருடைய கீர்த்தி யாகிற பயிர் நித்ய அபிவ்ர்த்தமாய் -லோகம் எல்லாம் வியாபித்து -பல பர்யந்தம் ஆகும்படிக்கு ஈடான
வீரத்தை உடைத்தான திரு உள்ளத்தை உடைய –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

இவருக்கு ஸ்ரீ அழகிய சிங்கர் திரு ஆராதனம் ஆகையாலே இப்படி அருளிச் செய்கிறார் –

என் தன் மெய் வினை நோய் களைந்து –
கர்ம பிரம்மம் பரம் வித்தி -என்றும்
பிரக்ர்த்தே கிரியமாணா நி குணை கர்மாணி சர்வச -என்றும் சொல்லுகிறபடி
அநாதி அவித்யா கர்ம வாசன ருசி பிரக்ர்தி சம்பத்தாலே -பத்தும் பத்தாக பண்ணப்பட்ட துஷ் கர்ம பலமான
துக்கங்களை நிவர்திப்பித்து –

கையிலே கனி யன்னவே –நல் ஞானம் அளித்தனன் –
சர்வ குஹ்ய தமம் பூயா ஸ்ருணுமே பரமம் வச இஷ்டோசி மே த்ரட இதி ததோ வஹ்யாமி தே ஹிதம் – என்கிறபடியே –
கீழ் சொன்ன ப்ராவண்யத்து உடலான தத்வ ஹித புருஷார்த்த தத் யாதாம்ய-ஞானத்தை
கையிலே கனி போலே சுலபமாய் ஸூவ்யக்தமாய் இருக்கும்படி உபதேசித்து-அருளினார் என்றது ஆய்த்து –

கிளர்ந்த பொன்னாகம் கீண்டவன்
பொன்னிறம் கொண்டது அவன் சரீரம் -அடது பற்றியே அவன் ஹிரண்யன் -எனப்படுகிறான்
பொன் பெயரோன் மார்பிடந்த -முதல் திருவந்தாதி -23 -என்பர் ஸ்ரீ பொய்கையாரும்
தடை இன்றி மேலும் மேலும் வளர்ந்து வந்த அவனது ஆகம் சிங்கத்தின் எயிறு இலக வாய் மடுத்து நிற்கும் நிலை
கண்ட அச்சம் என்னும் நெருப்பினாலே வாட்டப் பெற்று பதமானவாறே நாரைக் கிழிப்பது போலே எளிதில் கிழித்தனன் -என்க –

கீர்த்திப் பயிர் யெழுந்து விளைந்திடும் சிந்தை இராமானுசன்
ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளுடைய இந்தக் கீர்திகள் -ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளம் ஆகிற நன்செய்யுள் பயிராகி –
ஓங்கி வளர்ந்து விளைகின்றனவாம் –
ஸ்ரீசிங்கப் பிரான் கீர்த்திகள் பெருமை -பரத்வம்
ஆபத்திலே பக்தனுக்கு தோன்றி உதவுதல் –
எல்லாப் பொருள்களிலும் உட்புக்கு நியமிக்கும் அந்தராத்மாவாய் உள்ள தன்மை –
சீற்றம் -அந்நிலையிலேயே அருளுதல் -முதலியவை பல பல – அவைகளை எல்லாம் தம் திரு உள்ளத்திலே
நினைந்து நினைந்து நாள் தோறும் பேணுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் –

அவர் நெஞ்சுப் பெறும் செய்யுள் பேணப்படும் கீர்த்திப் பயிர்கள் பெரியனவாய் யெழுந்து விளைந்து விடுகின்றன –
ஸ்ரீ சிங்கப் பிரானுடைய குண அனுசந்தானத்தின்-விளைவு தான் எனக்கு அளித்த நல் ஞானம் என்பது ஸ்ரீ அமுதனார் கருத்து .
ஸ்ரீ எம்பெருமானார் சிந்தையிலே விளையும் கீர்த்திப் பயிர்களிலே சிலவற்றை இந்தப் பாசுரத்திலே ஸ்ரீ அமுதனார் காட்டுகிறார் .
முதலாவதாக காட்டுவது –வளர்ந்த வெம் கோபம் -என்பது –
ஸ்ரீ சிங்கப் பிரான் சீற்றம் அடியார்கட்கு தினம் தோறும் சிந்தித்ததற்கு உரியது –அதுவே நமக்கு வுய்வுபாயமுமாகும்
மேவி எரி வுருவமாகி இரணியனது ஆகம் தெரி உகிரால் கீண்டான் சினம் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 42-
என்னும் ஸ்ரீ பேயாழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும்
அருளன்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கம் அவனுக்கு உண்டான சினம் உத்தேச்யம் –
அச் சினத்தை தெரி -அனுசந்தி -என்று ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அதனுக்கு அருளிச் செய்த வ்யாக்யானத்தையும் காண்க –

பிரகலாதனுடைய பகைவனான இரணியன் பக்கல் உண்டான சினம் அடியார்களது மனத்தை மிகவும் ஈடுபடுத்த வல்லது .
ஏனைய குழந்தைகளுக்கு போல் அல்லாமல் நரசிம்ஹப் பெருமாள் வெளிப்படும் பொழுதே
பிரபல பாலரிஷ்டமாய் இரணியன் கையிலே வாளை வுருவி எடுத்துக் கொண்டு குழந்தையை முடிப்பதற்கு முடிகினான் கோபத்தினாலே –
அதை நினைத்தால் தற்காலத்தில் நடப்பது போல் தோற்றுகிறது அடியார்கட்கு -என்ன ஆகும் -ஐயோ என்று வயிறு எரிகிறது –
நல்ல வேளை குழந்தை விழித்து கொள்கிறது -விழியினால் அனலை சொரிகிறது –
வாள் வுருவி வந்தவனும் அஞ்சும் படியாக –பூவினும் மெல்லியதும் அழகியதுமான திருச் சக்கரம் ஏந்தும் கையினாலே –
செய்ய திருவடியிலே மடியிலே -அவனைப் பிடித்து வைத்து -அழகிய நகங்களினாலே அவனை அழித்து விடுகிறது அக் குழந்தை –
அழித்த பிறகும் கூட அதன் சீற்றம் மாற வில்லை –
எயிறு -பல் -தெரிய வாயை மடுத்துக் கொண்டு இன்னமும் இருக்கிறதே இக் குழந்தை -என்ன காரணம் -என்று
அவதரித்த கோலத்துடன் நேரே காட்சி தரும் ஸ்ரீ நரசிம்ஹ பெருமாளையே நோக்கி வினவுகிறார் ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –
அவரது அனுபவம் இதோ இந்தப் பாடலில் வெளியாகிறது –

வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய் மடுத்த தென்னீ-பொறி உகிரால்
பூவடியை யீடளித்த பொன் ஆழிக் கையா நின்
சேவடி மே லீடழியச் செற்று- – 63- இரணியனை முடித்த பின்னும் சீற்றம் மாறாது ஒழிவதே –

சங்கல்ப்பதாலேயோ திரு வாழி யாலேயோ -அவனை முடித்தால் ஆகாதோ
ஆத்திரம் தீர நகத்தினால் முடித்ததோடு அமையாமல் பிணத்தைப் பார்த்ததும்
நா மடித்து கோபத்தைக் காட்டுவதே -இஃது என்ன கோபமோ -என்று ஈடுபடுகிறார் ஸ்ரீ பொய்கையார் .

தன் திறத்து மட்டும் அபசாரப் பட்டு இருப்பின் -அவனை முடித்ததும் சீற்றம் மாறி இருக்கும் .
அடியானாகிய பிரகலாதன் இடத்தில் அபசாரப் பட்டமையால் -அவனை முடித்த பின்பும் சீற்றம் அடங்கின பாடு இல்லை –
என்று உணர்க –
இதனால் ஆத்திரம் அடங்க மாட்டாத அளவில் அடியார் இடம் எம்பெருமானுக்கு உள்ள பரிவுடைமை புலனாகிறது –
இந்த பொய்கையார் பாசுர வ்யாக்யானத்தில் –
சரணா கதிக்கு தஞ்சமான தனமாவது ஆஸ்ரித அர்த்தமாக ஹிரண்யனைப் பற்றப் பண்ணும் சீற்றம் –என்னும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து இருப்பதுய் இங்கு அனுசந்திக்கத் தக்கது .

இங்கனம் ஸ்ரீ பொய்கை யாழ்வார் ஈடுபட்ட சீற்றத்தை ஸ்ரீ எம்பெருமானாரும் தம் திரு உள்ளத்தே இருத்தி
வளர்ந்த வெம் கோபம் -கீர்த்திப் பயிரை விளைந்திடச் செய்தார் -என்க .

மடங்கலானதும் ஒரு கீர்த்தி
பிரமன் கொடுத்த வரத்திற்கு ஏற்ப -அவன் படைப்புக்குள் அடங்கும் பிராணிகளில் ஒன்றாகாது –
தனிப்பட்ட நரம் கலந்த சிங்கமானது –பிரமன் வரத்தை மெய்யாக்கின கீர்த்தி படைத்தது அன்றோ –
பிரமன் படைப்புக்குள் ஆகாதாயினும் பொருந்தின அழகிய சிங்கமானது பிரமனுக்கும்
மேற்பட்ட பரமன் இவன் என்னும் கீர்த்தியை பறை சாற்றுகின்ற தன்றோ –

அன்று மடங்கலானதும் –
எங்கும் உளன் என்னும் பிரகலாதனை மெய்யனாக்கிக் காப்பாற்றியதனாலும்
எங்கும் வியாபித்து இருப்பதை ப்ரத்யட்ஷமாக காட்டியதனாலும்
அவனது கீர்த்தியை புலப்படுத்துவதாகும் .
வாள் அவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்ததும் –
அடியார் அச்சத்தை அகற்றி அவனது எல்லை இல்லா வல்லமையை விளக்கி வலிமை வாய்ந்த அடியார் பகையையும்
அழித்து தரும் ஆற்றலை காட்டுவதனால் கீர்த்தி வாய்ந்ததாகும் .

இவை ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்தில் பயிராய் வளர்ந்து விளைகின்றன –
அதாவது
இந்த குண அனுசந்தானங்கள் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் பலித்து – அவரைச் சார்ந்த எனக்கும் பயன்படுகின்றன –
சரணா கதற்கு தஞ்சமான தனமாக அனுசந்தித்த சீற்றம் -என் மெய் வினை நோயாம் இரணியனை களைவதற்கும் பயன்படுவதாயிற்று –
இங்கனம் அடியார்களைக் காக்கும் திறம் -பரத்வம் -முதலிய பிறவும்
சரண்யனுக்கு வேண்டிய குணங்களாய் அனுசந்திக்கப்பட்டு அச்சம் இன்றி நிறை வுடன் தெள்ளிய அறிவினராய்
வாழும்படி பலித்து -அவரைச் சார்ந்த எனக்கும் நல் ஞானமாய் பயன்படுகின்றன .

என் தன் மெய் வினை நோய் —கனி என்னவே
மெய் -சரீரம் -மாறுபட்டு அளித்தால் பற்றி விபரீத இலக்கணை
மெய் வினை -சரீர சம்பந்தத்தால் வரும் கர்மம்
அக் கர்மத்தின் பலனான துன்பங்கள் மெய் வினை நோய் எனப்படுகின்றன –
நல் ஞானம் –
ஸ்ரீ நரசிம்ஹனே -வன் பகை மாற்றித் தெள்ளறிவுடன் வாழ்விப்பவன் -என்பது ஞானம்
அங்கனம் வாழ்பவரே நமக்கு நல்லன நீக்கி நல்லன நல்குவர் என்னும் துணிவு நல் ஞானம் -என்க
இத்தகைய நல்ல ஞானம் மிக எளிதாக விளங்கும்படி கை இலங்கு நெல்லிக் கனி போலே தந்து அருளினார் -என்கிறார்
என்னவே -கரணங்களும் ஈடுபடும்படியான ஆர்வம் விளையுமாறு-கர்மங்களை நீக்கிக் பண்ணின உபகாரம்
இது என்பது கருத்து ஆயிற்று —

உபபத்யச – உபலப்த்யச்ச ச -கர்மாவும் அநாதி -ஈஸ்வரன் திரு உள்ளத்தில் ப்ரீதி அப்ரீதி ரூபத்துடன் ஒட்டி கொண்டு இருக்கும்
ஞானம் அவித்யையால் மூட பட்டு மீண்டும் கர்மம் சேர்கிறான்-
உடைக்க -காமாதி தோஷ கரம்- ஸ்வாமி திருவடிகளில் பற்றி ஒழிக்க வேண்டும்
உமி களைந்து அரிசி கொடுப்பது போல அஞ்ஞானம் போக்கி ஞானம் கொடுத்தார்-

ஸ்ரீ நரசிம்கர்-ஸ்ரீ அழகிய சிங்கர் சேராத இரண்டை சேர்த்தார்-
ஸ்ரீ நரசிம்கரையும் ஸ்ரீ கீதாச்சர்யரும் கலந்தது ஸ்ரீ ஸ்வாமி
ஸ்ரீ நரசிங்கர் பண்ணினதை -ஸ்ரீ கீதாசார்யன் போல உபதேசித்து–எடுத்து சொல்லும் தன்மை-
இரண்டையும் அருளினவர் ஸ்ரீ ஸ்வாமி-
உகிரே ஸ்வாமி /பஞ்ச ஆயுதங்களும் சேர்ந்து தானே ஸ்ரீ ஸ்வாமி

ஞானம்-ஸ்ரீ நரசிம்ஹர் பற்றிய ஞானம் –
நல் ஞானம்—அவரை திரு உள்ளத்தில் கொண்ட ஸ்ரீ ஸ்வாமி பற்றிய ஞானம்-
ஏற்றி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பவர் தவம் –

——————-

ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
வடி யுகிரால் ஈர்ந்தான் இரணியானதாகம் –பொய்கையார் –17-
தழும்பு இருந்த பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரொன் மார்பிடந்த —23-
கீண்டானை –25-
பூரி ஒரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி அரியுருவும் ஆளுருவுமாகி –எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை–31-
முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் –36-
மேல் அசுரர் கோன் வீழக் கண்டுகந்தான் குன்று –40-
களியில் பொருந்தாதவனைப் பொரலுற்று அரியாய் இருந்தான் திரு நாமம் எண்–51-
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரித்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை ஓரரியாய் நீ இடந்த தூன்—90-
வயிறு அழல வாள் உருவி வந்தானை பொறி யுகிரால் நின் சேவடி மேல் ஈடழியச் செற்று—93-
கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்து –பூதத்தார் —18-
மாலை அரி உருவன் பாத மலர் அணிந்து காலை தொழுது எழுமின் கைகோலி–47-
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை உரம் கருதி மூர்க்கத்தவனை
நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே –பூதத்தார் -84-
பற்றிப் பொருந்தாதான் மார்விடந்து –94-
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -95-
இரணியானதாகம் அவை செய்தரி யுருவமானான் –பேயார்-31-
மேவி யரியுருவமாகி இரணியனதாகம் தெரி யுகிரால் கீண்டாம் சினம் —42-
செற்றதுவும் சேரா இரணியனை –49-
அங்கற்கு இடர் இன்றி யந்திப் பொழுதத்து மணக்க இரணியனதாகத்தை பொங்கி அரியுருவமாய் பிளந்த எம்மானாவானே —65-
புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த விரணியனதாகம் –பிளந்த திருமால் திருவடியே வந்தித்தது என்நெஞ்சமே –95-
தொகுத்த வரத்தனனாய் தோலாதான் மார்வம் வ
மாறாய தானவனை வள்ளு
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியாய் யன்றே –19-
இவையா அரி பொங்கிக் காட்டும் அழகு –21-
அழகியான தானே யரி யுருவம் தானே —22-
வானிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன் ஊநிறத்துகிர் தலம் அழுத்தினாய் –திருச்சந்த –23-
சிங்கமாய தேவ தேவ —24-
வரத்தினால் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தளத்தை ஊன்றினாய்–25-
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே -62-
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –அமலனாதி –8-
அந்தியம் போதில் அரியுருவாகி அறியாய் அழித்தவனை–திருப்பல்லாண்டு -6-
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் –பெரியாழ்வார் –1–2–5-
கோளரியின்னுருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -1–5–2-
அளந்திட்ட தூணை அவன் தட்ட அங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி –1-6–9-
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய் –2–7–7-
முன் நரசிங்கமதாகிய அவுணன் முக்கியத்தை முடிப்பான் —3–6–5-
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உதிரம் அளைந்த கையோடு
இருந்தானை அல்லவா கண்டார் உளர் —4- -1–1-
நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார் உழக்கிய பாத தூளி படுத்தலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –4–4–6-
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான்
தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வேனே –4–4–9-
வாள் எயிற்றுச் சீயமுமாய் –அவுணனை இடந்தானே –4–8–8-
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க யூன்றிச்
சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க வாய் அலறத் தெழித்தான் கோயில் — 4–9–8-
நாதனே நரசிங்கமதானாய் –5–1–9-
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் -5–2–4-
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்–நாச்சியார் -8–5-
அப்பொன் பெயரோன் தடம் நெஞ்சம் கீண்ட பிரானார் –திருவிருத்தம் –46-
அன்று அங்கை வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்–பெரிய திருவந்தாதி -35-
வழித் தங்கு வால் வினையை மாற்றானோ நெஞ்சே தழிஇக் கொண்டு போர் அவுணன் தன்னைச் சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால் –57-
போரார் நெடு வேலோன் பொன் பெயரொன் ஆகத்தைக் கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
ஆரா எழுந்தான் அரியுருவாய்–சிறிய திரு மடல் –
ஆயிரம் கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் –தோள் வலியால் கைக் கொண்ட தானவனை பின்னோர் அரியுருவாகி
எரி விழித்து –தான் மேல் கிடத்தி அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த வீரனை –பெரிய திருமடல்
எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ் வாணுதலே –திருவாய் –2—4–1-
உன்னைத் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட எண் முன்னைக் கோளரியே—2–6–6-
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே —2—8–9-
அவன் ஒரு மூர்த்தியாய் –சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக் கீழ் புக நின்ற செங்கண் மால் –3–6–6-
கிளர் ஒளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்து எழுந்து கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த –4–8–7-
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே –7–2–5-
அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறு—7–4–6-
அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை மல்லல் அரியுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே—–7–5–8-
புக்க வரியுருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னை —-7–6–11-
கோளரியை –7–10–3-
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கையுகிராண்ட வெங்கடலே–8-1-3-
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் –9–3–7-
வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –9–4–4-
மிகுந்தானவன் மார்வகலாம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய யுருவே —9–4–7-
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் —9–10–6-
வன் நெஞ்சத்து இரணியனை மார்விடந்த வாட்டாற்றான் –10–6–4-
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று —10–6–10-
அவுணன் ஆர் உயிரை யுண்ட கூற்றினை –திருக் குறும் தாண் –2-
மறம் கொள் ஆளரி உருவென வெருவர ஒருவனது அகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பனி தர —-1–2–4-
மன்னவன் பொன்னிறத் துரவோன் ஊன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து —-1- -4–8-
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் —1–5–7-
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக் கீழ் செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1–7–1-
அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த –1–7–2-
அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் —1—7–3-
எவ்வும் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த –1–7–4-
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த –1–7–5-
எயிற்றொடி தெவ்வுரு வென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்த வம்மான் —-1–7–6-
மூ உலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச வாள் அரியாய் இருந்த —1–7–7-
நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கோர் ஆளரியாய் —1–7–8-
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணன் உடலம் பிளந்திட்டாய் –கலியன் –1–10–5-
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப –
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே —2–3–8-
அவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய் கீண்டான் –2–4–2-
தங்காததோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்து —2–4–4-
அடிப் பணியாதவனைப் பணியால் அமரில்–நெஞ்சிடந்தான்–2- 4–7-
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனை —2–5–7-
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை –2–5–8-
அன்று அவுணர் கோனைப் பட வெகுண்டு —2–5–10-
எரியன கேசரி வாள் எயிற்றொடு இரணியனாக மிரண்டு கூறா அரியுருவாம் இவர் –2–8–1-
திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள் புண் படப் போழ்ந்த பிரான் –2–9–6-
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்வகம் இரு பிளவாக்
கூறு கொண்டவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவன் –3–1–4-
பொங்கி யமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ –சிங்க உருவில் வருவான் –3–3–8-
பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் –3–4–4-
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு —3–9–1-
திண்ணியதோர் அரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரோடு தானவர்கள் திசைப்ப
இரணியனை நண்ணியவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் —-3–9–2-
ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்ற
வாடாத வள்ளுகிரால் பிளந்தவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழுமிடம் –3–10–4-
ஓடாத வாளரியின் யுருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மால் –4–1–7-
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்துதிரத்தை அளையும்—4–2–7-
முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் –அசுரர் தம் பெருமானை அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார்—4—10–8-
வெய்யனாய் யுலகு ஏழுடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவா –கையில் நீளுகிர் படையது வாய்த்தவனே —5–3–3-
தரியாது யன்று இரணியனைப் பிளந்தவனை —5–6–4-
வெங்கண் வாள் எயிற்றோர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது –அங்கனே ஓக்க அரியுருவானான்–5–7–5-
வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத்தானை–நக்கரி யுருவமாகி
நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் –5–9–5-
முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ் பட வீழ்ந்த புனிதனூர்—6–5–2-
பைம் கண் ஆளரி யுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் -6-6-4-
வேரோர் அரி யுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல உய்த்தார்க்கு –6–6–5-
ஓடா வரியாய் இரணியனை ஊனிடந்த—6–8—4-
ஓடா வாள் அரியின் உருவாய் மருவி என் தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா —7–2–2-
பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை –7–3–9-
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் —7–4–5-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழல் ஆழி வலத்தானை—7–6–1-
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய்ப் பரி யோன் மார்வகம் பற்றி பிளந்து —7–7–5-
சினமேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியதாகம் கீண்டு –7–8–5-
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு —8–3–6-
சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய் –8–4–4-
உளைந்த வரியும் மானிடமும் உடனாயத் தோன்றி ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன்
வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் –8–10–10-
பரிய இரணியானதாகம் அணி யுகிரால் அரி யுருவாய்க் கீண்டான் –9–4–4-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த –9–9–4-
துளக்கமில் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனை —10–1–4-
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் –10–6–3-
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா எனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்திட்டு
அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் –10–6–4-
பொருந்தலனாகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்த வன்று —10–9–8-
அங்கு ஓர் ஆளரியாய் அவுணனைப் பங்கமா இரு கூறு செய்தவன் –11–1–5-
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்களவிழ வளை யுகிர் ஆளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது
சென்று ஓர் உகிரால் பிள எழவிட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11–4–4-
கூடா இரணியனைகே கூர் உகிரால் மார்விடந்த ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை —11–7–4-
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் –பெரிய திருமொழி – 1-7 7- –

கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை யிராமானுசன்

————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: