ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –101-மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித் துயக்கும் பிறவியில்– இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானாருடைய போக்யதையிலே நெஞ்சு வைத்தவாறே
முன்பு இவ் விஷயத்தில் தாம் பண்ணின பாவனத்வ அனுசந்தானம் அவத்யமாய்த் தோற்றுகையாலே-
நான் தேவரீருடைய பாவனத்வத்தை பேசினதானவிது தேவரீர் போக்யதையை அனுசந்தித்து இருக்குமவர்களுக்கு
அவத்யம் என்று சத்துக்கள் சொல்லுவார்கள்-என்கிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே
ஸ்ரீ எம்பெருமானாருடைய போக்யதையிலே –அருவினையேன் வன் நெஞ்சு –என்னும்படியான தம்முடைய திரு உள்ளமானது –
ஈடு பட்ட படியைச் சொல்லி –
இப்பாட்டுக்கு கீழ் பல-இடங்களிலும் –
தீதில் இராமானுசன் -என்றும் –
தூயவன் -என்றும் –
எங்கள் இராமானுசன் -என்றும்-
தாம் அனுபவித்த பாவநத்வத்தை ஸ்மரித்து -இந்த போக்யதைக்கும் -அந்த பாவனத்வத்துக்கும் – நெடு வாசி உண்டாகையாலும் –
இப்படி இருந்துள்ள இவ்விஷயத்துக்கு அது அவத்யமாய் தலைக் கட்டுவதாலையாலும்
அப்போது அத்தை தப்பைச் சொன்னோம் -அத்தாலே அவர்க்கு என் பக்கல்-ப்ரீதி மட்டமாய் போகிறதோ என்று திரு உள்ளம் புண்பட்டு –
இதிலே –
பந்தாயா விஷயா சங்கி -என்னும்படியான மனசை உடையனான -தீரக் கழிய செய்த துஷ் கர்மத்தாலே –
ஜன்ம பரம்பரைகளில் தட்டி திரியா நிற்கிற என்னை
அந்த துஷ் கர்ம பலமான ஜன்ம பரம்பரையாகிற துக்கத்தைப் போக்கி உஜ்ஜீவிக்கும் படி கைக் கொண்டு
கிருபை பண்ணியருளின ஸ்ரீ எம்பெருமானாரே என்று –
தேவரீர் உடைய பாவநத்வத்தை கீழ் பல இடங்களிலும் நான் சொன்ன இது –தேவரீரை அனுசந்தித்து நீர்ப் பண்டம் போலே
சிதிலமாய் போமவர்களுக்கு அவத்யமாய் என்று ஞானாதிகரானவர்கள் சர்வ காலமும் சொல்லுவார்கள் என்று
ஸ்ரீ எம்பெருமானாரைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இங்கனம் ஸ்ரீ எம்பெருமானார் உடைய போக்யதையிலே நெஞ்சு படிந்ததும் -முன்பு தாம் அவர் திறத்து பண்ணின –
பாவனர் -தூய்மை படுத்துமவர் -என்னும் பாவனை குற்றமாகப் பட –
ஸ்ரீ எம்பெருமானாரை நோக்கி தேவரீரது போக்யதையிலே ஈடுபட்டு இருப்பவர்களுக்கு
நான் -பாவனர் -என்னும் பாவனையுடன் பேசினது குற்றமாக தோன்றும் என்று – நல்லவர்கள் சொல்லுவார்கள் என்கிறார்

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- –

பத உரை –
மயக்கும் -அறிவு கேட்டினை உண்டு பண்ணும்
இரு வினை -புண்யம் பாபம் என்னும் இருவகைப் பட்ட கர்மங்கள் ஆகிற
வல்லியின் -பாசத்தாலே
பூண்டு -கட்டப்பட்டு
மதி மயங்கி -அறிவு கலங்கி
துயக்கும் -மனத் திரிவை உண்டு பண்ணும்
பிறவியில் -பிறப்பிலே
தோன்றிய என்னை -பிறந்த என்னை
துயர் -துன்பங்களை அகற்றி -போக்கி
உயக் கொண்டு -உய்யும்படி ஏற்றுக் கொண்டு
நல்கும் -விருப்பத்துடன் இருக்கும்
இராமானுச என்றது இது -ஸ்ரீ எம்பெருமானாரே என்று சொன்னதான இது
நைந்து -தேவரீர் இடம் ஏற்பட்ட ஈடுபாட்டினால் நைவுற்று
என்றும் -எப்பொழுதும்
நயக்குமவர்க்கு -விருப்பம் உடையவர்களாய் இருப்பவர்களுக்கு
இழுக்கு என்பர் -குற்றமாம் என்று சொல்லுவார்கள்
நல்லவர்-நல்லவர்கள் –

வியாக்யானம்-
அறிவு கேட்டை விளைக்குமதாய் -புண்ய பாப ரூபத்தாலே இருவகைப் பட்டு இருந்துள்ள கர்மமாகிற பாசத்தாலே –
கட்டுண்டு அறிவு கலங்கி -மனை திரிவை விளைப்பதான -ஜன்மத்திலே-வந்து ஜனித்த என்னை –
கர்ம பலமான துக்கங்களைப் போக்கி
(கர்மங்களை போக்கி என்று சொன்னால் இங்கே இருக்க முடியாதே -அதனால் துக்கங்களை போக்கி என்று காட்டி அருளுகிறார் )-
உஜ்ஜீவிக்கும்படி கைக் கொண்டு -என்னளவிலே ஸ்நேஹத்தைப் பண்ணி -அருளினவரே -என்று
தேவரீர் உடைய பாவனத்தை பேசினாதான இது -தேவரீரை அனுசந்தித்து சிதிலராய்
சர்வ காலமும் விருப்பத்தை பண்ணுமவர்களுக்கு –தண்மை என்று சொல்வார்கள் -சத்துக்களானவர்கள் .

நல்லவர் என்று தேவரீருக்கு ஸ்நேஹிகளானவர்கள்-என்னவுமாம்
(சொல்லும் சத்துக்கள் ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் -நைந்து இருப்பவர்கள் பலரும் உண்டே )

இரு வினை வல்லியைப் பூண்டு -என்று பாடம் ஆயிற்றாகில் –
இருவகைப் பட்ட கர்மம் ஆகிற படத்தை கழுத்துப் புக்க வாயோடு போலே கழற்ற ஒண்ணாதபடி ஸ்வார்ஜனத்தால்
ஏறிட்டு கொண்டேன் -என்று பொருளாக கடவது .(வாயோடு –வாயில் ஒட்டிக் கொண்ட -பானை பகுதி என்றவாறு)

மயக்குகை -மதி மயங்க பண்ணுகை
துயக்குகையாவது -மனம் திரிவைப் பண்ணுகை
துயக்கு -மனம் திரிவு
நயக்குகை -விரும்புகை

மயக்கும் இரு வினை -என்று தொடங்கி-உயக்கொண்டு நல்குமிராமானுஷ -என்கிறதிது-
உன்னை உன்னி நைந்து என்றும் நயக்குமவர்கு இழுக்கு என்பர் நல்லவர் -என்று அந்வயம் –

அதவா
உயக் கொண்டு நல்கும் இராமானுசன் என்றதிது-உன்னை அனுசந்தித்து விரும்பும்
ஸ்வபாவராய் இருப்பார்க்கு தண்மை என்று சொல்லா நிற்ப்பர்கள் சத்துக்கள்
இதில் அசஹதையாலே சர்வகாலமும் சிதிலராய்க் கொண்டு -என்னவுமாம் ..

கருமுகை மாலையை சும்மாடு ஆக்கி அன்றோ அருளிச் செய்தேன் -தப்பைச் செய்தேன் என்கிறார்

வில்லியில் பூண்டு -பஷத்தில்
உய்ய ஒரே வழி ஸ்ரீ உடையவர் திருவடி பாவானத்வம் தானே சொல்லும் –-இது ஸ்ரீ கூரத் ஆழ்வான் போல்வாருக்கும் இழுக்காக முடியுமே-

சரம நிலையில் இது சரம நிலை-போக்யத்துக்கே ஸ்ரீ ஸ்வாமி திருவடி பற்றுவது-இந்த நிலை வருவதற்கு 101 பாசுரம் வேண்டி இருக்கிறது–
நைந்து -அனுபவத்தால் நைந்து என்றும் பாவானத்வம் சொன்னதால் நைந்தும் என்றுமாம் –
பாவானத்வம் அனுபவம் தாண்டி போக்யத்வம் அனுபவிக்கும் நிலை வந்த பின் அது அவத்யமாகவே தான் இருக்கும்
உன்னை நினைந்து நைந்து –திருக்குணங்கள் விட திரு மேனி என்றே காட்டு –
என்று நைந்து –என்றும் நைந்து-
எழுத்துக்கு கணக்கால் குறைத்து -சர்வ காலமும் போக்யமாக அனுபவித்து முடிக்காமல் இருக்கும் நல்லோர்-

மயக்கும் இருவினை வல்லியில் பூண்டு –
தத்வ ஹித புருஷார்த்த -தத் யாதாதம்ய ஞான விரோதிகளாய் -வைஷயிக வ்யாமோகத்தை உண்டாக்க கடவதாய் –
பொன் விலங்கு போலவும் இரும்பு விலங்கு போலவும் ப்ராப்தி பிரதிபந்தங்களாய் கொண்டு –
புண்ய பாப ரூபத்தாலே இருவகைப் பட்டு இருக்கிற கர்மமாகிற பாசத்தாலே கட்டுண்டு –
கழுத்திலே புக்க வாயோடு போலே கழிக்க ஒண்ணாதபடி காணும் ஆத்மாவை
(ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருமாலை வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளை அப்படியே இங்கே எடுத்துக் காட்டி –
வாயோடு –வாயில் ஒட்டிக் கொண்ட -பானை பகுதி என்றவாறு-) இக் கர்மாவானது ஆவரித்து கொண்டு இருக்கும் படி –

மயக்குகை யாவது
மதி மயங்கப் பண்ணுகை –

இரு வினை வல்லியைப் பூண்டு -என்கிற பாடமான போது –
இரு வகைப் பட்ட கர்மமாகிற பாசத்தை ஸ்வார்ஜநத்தாலே ஏறிட்டு கொண்டு என்று பொருளாகக் கடவது –

மதி மயங்கி துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை –
அஞ்ஞானே நாவ்ர்தம் ஜ்ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ –-என்கிறபடியே –
அத்தாலே மதி எல்லாம் உள் கலங்கி -மனம் திரிவாகிற சம்சயத்தை பிறப்பிக்குமதான ஜன்ம பரம்பரைகளிலே
தோள் மாறிப் பிறந்து சர்வ லோக சாஷிகமாக சம்சரித்து போந்த என்னை

துயக்கு -மனம் திரிந்து -அதாவது சம்சயம் —
மயங்குகை -கலங்குகை –

மயக்கும் இருவினை வல்லியில் பூண்டு
வல்லியின் -வல்லியினால்
பூண்டு -செயப்பாட்டு வினை எச்சம்
வல்லியைப் பூண்டு என்றும் பாடம் உண்டு -அப்பொழுது தானாகவே கர்ம பாசத்தை தன்பால் ஏறிட்டு கொண்டு
என்று பொருள் ஆகிறது .
தானே தனக்கு நன்மையைத் தேடிக் கொள்பவன் போலே தானே தன்னை கர்ம பாசத்தால் கட்டிக் கொண்டு –
அதனைக் கழற்ற வழி தெரியாது தீமையை ஏறிட்டு கொண்டபடி –

உண்டு கழிக்க விரும்பினவன் -உண்ணும் போது கழுத்தில் புகுந்த வாயோடு கீழ் இழியவோ அன்றி
மேல் வரவோ மாட்டாமையால் -அதனை கழற்ற ஒண்ணாது -கஷ்டத்தை தானே ஏறிட்டு கொள்வது போன்றது இது என்பர் ஆசார்யர்கள் .
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு -ஸ்ரீ திரு மாலை —5 –என்னும் இடத்து ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
பூண்டு என்றது –
கழுத்தில் புக்க வாயோடு போலே தன்னால் கழற்ற ஒண்ணாது இருக்கை – என்று வியாக்யானம் செய்து இருப்பது காண்க .
அதனை அடி ஒற்றி ஸ்ரீ மண வாள மா முனிகள் இங்கே –
இருவகைப்பட்ட கர்மமாகிற பாசத்தை கழுத்துக்கு புக்க வாயோடு போலே கழற்ற ஒண்ணாதபடி ஸ்வார்ஜநத்தால்-
தான் தேடிக் கொள்வதால் -ஏறிட்டுக் கொண்டேன் என்று பொருளாக கடவது -என்று உரைத்தார் ..

மயக்கும் இருவினை -சப்தாதி விஷயமான சிற்றின்பங்களை பேரின்பங்களாக காட்டி மயங்கச் செய்வன-
புண்ய பாப ரூபமான கர்மங்கள் -என்றபடி .
மதி மயங்கி -மயக்கும் வினைகளால் கட்டுண்ட படியால் மதி மயங்கிற்று -என்க.
மதி மயக்கம் -புத்தி கலக்கம்
தயக்கம் பிறவி -மனம் திரிவுறும்படி செய்யும் பிறப்பு .
மனம் திரிவுறுதலாவது – ஒன்றிலே மனம் துணிந்து -நிலை நில்லாமை -அதாவது ஐயப்பாடு

துயர் அகற்றி உய்யக் கொண்டு நல்கும் –
கர்ப்ப ஜன்மாத்யவஸ்தா ஸூ துக்கமத்யந்த துச்சகம் -என்கிறபடியே கேட்ட போதே நடுங்கும்படியான –
கர்ப்ப ஜென்மாதி துக்கத்தை வாசனையோடு ஒட்டி –
ஆத்மா நாத்மா விவேகத்தையும் –
த்யாஜ்ய உபாதேய விவேகத்தையும் –
ஸ்வ பர சம்பந்த விவேகத்தையும் -அடைவே உண்டாக்கி -உஜ்ஜீவிக்கும்படி கைக் கொண்டு
என்னளவிலே அநிதரசாதாரனமான ஸ்நேஹத்தை பண்ணி யருளின

இராமானுசா என்றது –
ஸ்ரீ எம்பெருமானாரே என்று பரம பாவநராக நான் சொன்ன இது –

துயரகற்றி -கர்ம பலன்களாக வரும் துன்பங்களைப் போக்கி
உயக் கொண்டு நல்கும் இராமானுச என்றது இது –
உய –உய்ய -உஜ்ஜீவிக்கும்படியாக
கொண்டு -கைக் கொண்டு
தன்னைச் சேர்ந்தவனாக ஏற்றுக் கொண்டு -என்றபடி
நல்குதல்-அன்பு புரிதல்
கொண்டதற்கு வேறு எதுவுமே ஹேது அன்று -அன்புடைமையே ஹேது .-என்றது ஆயிற்று .
கர்ம சம்பந்த்தினாலாய துயரை அகற்றிக் கொண்டது என்பது –
பொல்லா ஒழுக்கினாலாகிய அழுக்கை நீக்கித் தன்னுடையவனாக ஆக்கிக் கொண்டமையை -கூறினபடி –
இதனால் ஸ்ரீ எம்பெருமானாருடைய பாவனத்வத்தை -தூய்மை படுத்தும் இயல்பை -சொன்னதாயிற்று .
தூயவன் தீதில் இராமானுசன் மாயும் என்னாவியை வந்து எடுத்தான் – 42- என்றும்
புன்மையினேன் இடைத் தான் புகுந்து தீர்த்தான் இருவினை -52 – என்றும்
பல கால் ஸ்ரீ எம்பெருமானாருடைய பாவனத்வத்தை இவர் தானே அனுசந்தித்தையும் நினைவு கூர்ந்து
அவை அனைத்தையும் சேரப் பிடித்து –என்றது இது -என்கிறார் .

உன்னை உன்னி நயக்குமவர்க்கு –
குரு ரேவ பர ப்ரஹ்ம குருரேவ பரம் தனம் -குருரேவ பர காம -குருரேவ பராயணம் –
த்யாயேஜ் ஜபேன் நமேத் பக்த்யா பஜே தப்யர்ச்ச யேத்முதா–உபாயோபேய பாவேன தமேவ
சரணம் வ்ரஜேத் –யஸ்ய தேவோ பராபக்திர் யதா தேவோ ததா குரவ்-என்கிறபடியே
கரண த்ரயத்தாலும்-தேவரீர் பக்கல் த்ரட அத்யாவச்யத்தை பெற்று தேவரீரை அனுசந்தித்து அதி ப்ரீதராய் இருக்குமவர்களுக்கு –

நயக்குகை -விரும்புகை –

இது இழுக்கு –
நால் தோள் அமுதே -ஆரா அமுதே -என்னுமா போலே -ஸ்ரீ இராமானுசன் எனக்கு ஆராமுதே – அடியேற்கு இன்று தித்திக்கும் –
என்னும்படியான நிரவதிக அதிசய ரசத்தை யாவதத்மா பாவியாக அனுபவித்து பிரீதனாய் இருக்க வேண்டி இருக்க –
அப்படிச் செய்யாதே சம்சார நிவர்த்தகத்வ மாத்ர உபகாரத்தை சொன்ன இது அவத்யம் என்று –

நல்லவர் என்றும் நைந்தே –
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதார விந்த யுகளம் – பஜதாம் குருணாம்–கூராதிநாத குருகேச முகாத்யுபும்சாம் -என்கிறபடியே
தேவருடைய போக்யதையை-சர்வ காலமும் அனுபவித்துக் கொண்டு போந்து நீர்ப்பண்டம் போலே சிதிலராய் இருந்த
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான் முதலான முதலிகள் –

என்பர் –
சொல்லுவார்கள் –

அன்றிக்கே –
உன்னை உன்னி நைந்து என்றும் நயக்குமவர்க்கு-இது இழுக்கு என்பர் நல்லவர் -என்று அன்வயிக்க்கவுமாம் –
அப்போது தேவரீரை அனுசந்தித்து சிதிலராய்-சர்வ காலமும் விருப்பத்தை பண்ணுமவர்களுக்கு தண்மை
என்றும் சொல்லுவார்கள் சத்துக்களானவர்கள் -என்றபடி –
நல்லவர் என்றது –
தேவரீருக்கு ஸ்நேகி யானவர் என்றுமாம் -தேவரீர் உடைய போக்யதையை அனுசந்தித்து-
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்யதே வநியமே நமதன்வயானாம் -என்றும் –
அத்ர பரத்ரா சாபி நித்யம் யதீய-சரணவ் சரணம் மதீயம் -என்றும் –
ஸ்ரீ ராமானுஜச்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -என்றும் -சொல்லுகிற படியே-
தேவரீரை சர்வ பந்துவாக அனுசந்தித்து இருக்குமவர்களுக்கு –கநிஷ்டன் ஜ்யேஷ்டா அனுவர்த்தனம்-பண்ணாது ஒழிந்தால்
அவனுக்கு அது குற்றமாய் தலைக் கட்டுமா போலே -அவர்களைப் பின் சென்று கொண்டு-இருக்குமவர்களுக்கு-

உன்னி உன்னி நயக்குமவர்க்கு –என்றும் நைந்து
உன்னு உன்னி நைந்து என்றும் நயக்குமவர்க்கு -என்று இயையும்.
உன்னுதல்-நினைத்தால்

உன்னை –
நீண்ட பொன் மேனியும்-பற்பம் எனத் திகழ் பைம் கழலும் பல்லவம் ஏய் விரலும்
பைந் துவராடை பதிந்த மருங்கு அழகும் முப்புரி நூலோடு மேவிய மொய் யகலமும் முன் கையில் ஏந்திய முக்கோல் தன் அழகும்
துளசி மணி மாலையும் -தாமரை மணி மாலையும் -இழக்கும் கழுத்து அழகும் –
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்த முறுவல் நிலா அழகும்
கற்பகம் ஏய்ந்து கருணை பொழிந்திடும் கண் முகங்களின் அழகும் காரிசுதன் கழல் சூடிய முடி யழகும்-
வாயந்துள்ள தேவரீரை -எப்பொழுதும் இதயத்தில் உள்ளதாம்படி யான போக்யதை நிறைந்த தேவரீரை-என்றபடி .

உன்னி நைந்து –
நினைந்து நைந்து -ஸ்ரீ திருவாய்மொழி -1-5 2- என்றபடி நெஞ்சு நினைந்து உடலம் நெக்குண்டு போனபடி

என்றும் நயக்குமவர்க்கு –
போக்யதையின் மிகுதியால் அப்பொழுதைக்கு அப்பொழுது இனித்து இருத்தலின் நயக்குமவர் எப்பொழுதும் நயக்கின்ற்றனர் -என்க .

நயக்குமவர்க்கு இழுக்கு –
போக்யதையில் ஈடுபட்டவர்களுக்கு பாவனத்வத்தை பற்றிப் பேசுவது இழுக்காகாகத் தோற்றும் -என்றபடி
எடுத்த எடுப்பில் தோன்றுவது போக்யதை
தூய்மை எய்திய பின்னர்த் தெரிந்து கொள்வது பாவனத்வம்
போக்யதை காரணம் இன்றி அனுசந்திக்கப் படுவது
பாவனத்வம் -தூய்மைப் படுத்தும் காரணத்தை முன்னிட்டு அனுசந்திக்கப் படுவது
சாணிச் சாறு தூய்மைப் படுத்துவது -ஆதலின் அது தூயது ஆயின் அதனிடம் போக்யதை இல்லை –
அமுதம் இனியது போக்யதை வாய்ந்தது ஆயின் அதனிடம் பாவனத்வம் இல்லை
ஸ்ரீ எம்பெருமானார் இடமோ பாவனத்வம் -போக்யத்வம் -இரண்டுமே உள்ளன
ஆயினும் இவற்றுள் அமுதம் போலே இனியர் என்றே அனுபவிப்பது நன்று-
சாணிச்சாறு போலே பாவனர் என்று அனுபவிப்பது ஏதமே என்பது -நயக்குமவர்கள் கருத்தாகும் –

ஸ்ரீ நம் ஆழ்வார் -இனிய ஸ்ரீ எம்பெருமானை -கைவல்ய நிஷ்டர்கள் போக்யதை முன்னிட்டு பாராமே
அறவனை ஆழிப்படை அந்தணனை -திரு வாய் மொழி 1-7 1- -என்று தூய்மை படுத்துபவனாக
பார்ப்பதைக் குறை கூறியது – போன்றது இஃது என்க –

என்பர் நல்லவர் –
நல்லவர் -சத்துக்கள் -அன்புடையோர் -என்னலுமாம்
இனி
என்றும் நசிந்து என்பர் நல்லவர் -என்று இயைந்து உரைத்தலுமாம் –
அப்பொழுது உயக் கொண்டு நல்கும் இராமானுச -என்ற இதனை சஹிக்க மாட்டாமையாலே-
எல்லாக் காலத்திலும் நைந்து கொண்டே உன்னை நயக்குமவர்க்கு இழுக்கு என்பர்-நல்லவர் -என்றபடி

——————–

அறவனை ஆழிப்படை அந்தணனை -திரு வாய் மொழி 1-7 1-

தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்–1-5-2-

நினைந்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன்,’ என்றார் முதற்பாட்டில்-
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் என்றார் இரண்டாம் பாட்டில்-

சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

கையுள் நன்முகம் வைக்கும் நையும்–5-5-8-

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு -திரு மாலை — -5–

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னை

சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத்
தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்–1-5-10-

இருமை வினை கடிவாரே–1-6-9-
கடிவார் தீய வினைகள் -1-6-10–
பிறவித் துயரற–1-7-1-
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே -1-7-3-
ஓவாத் துயர் பிறவி -2-8-5-
ஈவிலாத தீ வினைகள் ஏத்தசனை செய்தனன் கொல்-4-7-3-

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்து ஏங்க,
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகியற்கை?–4-9-1-

சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?–4-9-2-

புற மறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும் முறை முறை யாக்கை–5-1-6-

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து -1-1-1-
தீவாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர் போல் மேவா வெந்நரகத்திட–6-2-8-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: