Archive for June, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானத்தில் இருந்து சில அமுத துளிகள் –

June 30, 2020

அவதாரிகை —

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சர்வ ரஷகனாய் இருக்கிற –
சர்வேஸ்வரனை ரஷ்யமாக நினைத்து திருவவதார விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணினார்
திருப்பல்லாண்டிலே-

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–பல்லாண்டு பாடுதும் -என்றும்
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -என்றும்
ஸ்ரீ நரசிம்ஹ ப்ராதுர்பாவத்துக்கும் ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி இருக்கச் செய்தேயும்

மாயப் பொரு படை வாணனை -என்றும்
ஐந்தலைய -இத்யாதிகளால் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு பிரசுரமாக மங்களா சாசனம் பண்ணுகையாலும்

இவ்வதாரத்துக்கு ஹேதுவாக படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டு அருளின ஸ்ரீ பெரிய பெருமாள்
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் எழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்-என்றும்
வையம் யுண்டு ஆலிலை மேவு மாயன் மணி நீண் முடிப் பைகொள் நாகத் தணையான்-பெரிய திருமொழி -5-4-2-என்றும்
ஸ்ரீ கோயிலில் நின்றும் திரு மாளிகைகளில் புகுந்து ஸ்ரீ வடபெரும் கோயிலுடையானாக கண் வளர்ந்து அருளுகையாலும்

பயின்றது அரங்கம் திருக்கோட்டி -என்று ஸ்ரீ கோயிலில் நின்றும் தங்கு வேட்டையாக எழுந்து அருளி ஸ்ரீ திருக் கோட்டியூரிலே
உரக மெல்லணையனாய்க் -பெரியாழ்வார் -4-4-4- கண் வளர்ந்து அருளுகையாலும்
அணி கோட்டியூர் அபிமானத் துங்கன் செல்வனைப் போலே இத்யாதி படியே
இவ் வாழ்வாருக்கு மங்களா சாசனத்துக்கு சஹகாரியான ஸ்ரீ செல்வ நம்பியுடன் ஸ்ரீ திருக் கோட்டியூர் ப்ரஸ்துதம் ஆகையாலும்

ஸ்ரீ திருக் கோட்டியூரானே-பெரிய திருமொழி -9-10-1-என்றும்
கன்று கொன்று விளங்கனி எரிந்து -பெரிய திருமொழி -9-10-7-என்றும்
அவனே இவன் என்று ஆழ்வார்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமாக ஸ்ரீ திருக் கோட்டியூரை அருளிச் செய்கையாலும்
செந்நாள் தோற்றி சிலை குனித்த திரு மதுரையில் காட்டிலும் ஸ்ரீ திருக் கோட்டியூர் உத்தேச்யம் ஆகையாலும்

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரச் செய்தேயும்
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் மடிய வஞ்சனையில் வளர்ந்த மணி வண்ணன் -பெரியாழ்வார் -4-3-2-என்று
ஈஸ்வரத்வம் நடையாடுகையாலும்

மற்ற அவதாரங்களுக்கு காலமும் நன்றாய் தாமும் ராஜ குலத்தில் அவதரிக்கையாலும்
பந்துக்களும் ராஜாக்களுமாய் பலவான்களுமாய் ஆகையாலும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு காலமும் த்வாபர அந்தமாய்
பந்துக்களும் சாதுக்களான ஆயராய்
முளைப்பது எல்லாம் தீப்பூண்டு களாகையாலே
மங்களா சாசனம் வேண்டுவது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கே ஆகையாலும்
அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சாவதாரமாக நின்றவிடத்தில் அர்ச்சாவதாரம் அர்ச்சக பராதீன
சமஸ்த வ்யாபாரமாய்ப் போருகையாலே
மங்களா சாசனம் மிகவும் வேண்டுவது அர்ச்சாவதாரம் ஆகையாலும்
சென்னியோங்கு அளவும் இவர்க்கு அர்ச்சாவதார பர்யந்தமாக மங்களா சாசனம் நடக்கும் இறே-

——————————————————————

முதல் பாட்டு -அவதாரிகை –
ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே அர்ச்சாவதார பர்யந்தமாக
மங்களா சாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால் –

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே –1-1-1-

கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாணகுண பூரணன் -என்கிறார்
பிறந்தினில்
இன் -இல்-பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போல் பொல்லாங்கு இல்லாதபடியாலே
திரு வாய்ப்பாடியிலே பிறப்பை இனிய இல்லிலே பிறந்தான் என்கிறார்
திருக் கோட்டியூரிலே வ்யாவ்ருத்தி சொல்ல மாட்டாரே

————–

இரண்டாம்பாட்டு -அவதாரிகை –
இவ்வளவிலே யன்றி தம் திரு உள்ளத்துக்குப் பொருந்த
திருவாய்ப்பாடியில் உள்ளார் ப்ரியம் கண்டபடியாலே ஸ்லாகிக்கிறார்-

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே–1-1-2-

ஆயிற்று ஆய்ப்பாடியே
இப்படி திருவாய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியில் உள்ளாரில்
ஒருத்தரும் விக்ருதர் ஆகாமல் இருந்தார் இல்லை –

———–

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே–1-1-3-

உகவாதார் காணாத படி மறைக்கையாலும்
ஸ்ரீ ராமாவதாரம் போலே வளர்ந்த பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகை யன்றி
அப்போதே பேணிப் போருகையாலும்-பேணிச் சீருடைப் பிள்ளை
திருவோணம் ஸ்ரீ வைஷ்ணவ நஷத்ரம் ஆகையால் திருவோணத்தான் உலகு என்று
உபய விபூதியையும் ஆளும் -என்கிறார்கள்

————-

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-

இத்திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
செந்நெலாலே நிறைந்த வயலாலே சூழப் பட்ட திருக் கோஷ்டியூரிலே நித்ய வாசம் பண்ணுகிற
திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி என்று தொடங்கி
மன்னு நாரணன் நம்பி -என்று நியமிக்கையாலே
சாதாரண அசாதாரண வ்யாவ்ருத்தமான வாக்ய த்வய குண பூர்த்தியை
மன்னு நாரணன் நம்பி -என்று அருளிச் செய்கிறார்-

—————-

பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1-

பிடித்துச் சுவைத்து உண்ணும் –
திருக் கையாலே திருவடிகளைப் பிடித்து –
தேனே மலரும் திருப்பாதம் -திருவாய்மொழி -1-5-5-என்று
தன் திருவடிகளிலே விழுந்தவர்கள் சொல்லக் கேட்கையாலே
இது பரீஷிக்க வேணும் -என்று திருப்பவளத்திலே வைத்தான்

பாதக் கமலங்கள் காணீரே –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய -திருவாய் மொழி -4-6-8-வேண்டுகையாலே
இவர் காட்டக் காணும் வேணும் இறே
வேதப் பயன் கொள்ள வல்லார் -பெரியாழ்வார் -2-8-10-இவர் இறே
திருவடித் தாமரைகளை வந்து காணுங்கோள்-என்கிறார்
அறிவுடையார் காட்டக் காணும் வேணும் இறே-

பவள வாயீர் வந்து காணீரே –
என்று பின்பும் அருளிச் செய்கையால் ப்ரபத்தியின் மேல் ஏறின பக்தியையும் பவ்யதையும்
யுடையவர்கள் நின்ற நின்ற நிலைக்குள்ளே யுள்ளே புகுந்து தர்சிக்க யோக்யர் -என்கிறார் –

ஒண் நுதலீர் வந்து காணீரே –1-2-2-
ஒண் நுதல் -என்கையாலே பிரபத்தி பிரகாசகமான தாந்தியை யுடையவள் என்றபடி-

காரிகையீர் வந்து காணீரே –1-2-3-
காரிகையீர் -என்கையாலே பக்தி பாரவச்யம் யுடையாரை அனுபவிக்க அழைக்கிறார் –

குவிமுலையீர் வந்து காணீரே –1-2-5-
குவி முலையீர் -என்று பக்தி வர்த்தகர் ஆகிறவர்களை அழைக்கிறார் –

ஒளி இழையீர் வந்து காணீரே –1-2-8-
ஒளி இழை-என்றது ஆத்ம பூஷணம்

ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-
ஒளி வளை–என்று பிரகாசகமான அனன்யார்ஹ சிஹ்னம் –

சேயிழையீர் வந்து காணீரே –1-2-10-
சேயிழை -என்று பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்-

சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-
சுரி குழல் -தாந்த ரூப பிரபத்தி –

கனம் குழையீர் வந்து காணீரே –1-2-12-
கனம் குழை -என்றது -காதுப் பணியாய்-ஸ்ரோத்தாக்களைச் சொல்லுகிறது –

காரிகையீர் வந்து காணீரே –1-2-13-
காரிகையீர் -என்று -பக்தி பாரவச்யம் யுடையாரை அழைக்கிறார்-

சேயிழையீர் வந்து காணீரே –1-2-14-
சேயிழை -பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்-

மொய்குழலீர் வந்து காணீரே –1-2-15-
மொய் குழலீர் -கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியாய் பிரார்த்தனா ரூபையான பிரபத்திகள் –

கன வளையீர் வந்து காணீரே -1-2-16–
கன வளை -ஸ்ப்ருஹா வஹமுமாய் -மமதா விசிஷ்டமுமான அனன்யார்ஹ சிஹ்னம் –

பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-
பூண் முலை -என்றது பக்தி பிரகாசகமான ஆத்மபூஷணம் –
அதாவது பராவர குருக்கள் பிரகாசிப்பித்தது இறே-

நேரிழையீர் வந்து காணீரே–1-2-19-
நேரிழை-என்கையாலே -சம்ச்லேஷத்திலும் கழற்ற வேண்டாத ஆபரணங்கள்
அதாவது–அத்யந்த ஸூஷ்ம ரூப ஜ்ஞானமான ஆத்மபூஷணம் –

குவி முலையீர் வந்து காணீரே —1-2-20-
குவி முலை
பூர்வதத்
காணீர் காணீர் -இருபது பிரகாரமும்
முடிச் சோதி -திருவாய் -3-1- பிரகாரம் போலே இருக்கச் செய்தேயும்
பாதாதி கேசமாக அனுசந்தித்து
ப்ராப்ய அனுரூபம் ஸ்வரூபமாகவும்
ஸ்வரூப அனுரூபம் பிராப்யமாகவும்
அனுசந்தித்து இறே
இவை யுடையவர்களை அழைத்து இரு கால் காணீர் காணீர் -என்றது
அவனுடைய உபேய பாவமும்
உபாய பாவமும்
அறியுமவர்களை என்னவுமாம் –
இப்படிக் காட்டக் கண்டால் இறே மங்களா சாசன பரிபாகம் ஆவது -பரிகாரமாவது-

தென் புதுவைப் பட்டன்விருப்பால் உரைத்த விருபதொடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவார் தாமே–1-2-21-
உரைப்பார்-இவருடைய அபிமானத்தாலே சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே
என்கிற தேசத்திலே போய் அவர்களோடு மங்களா சாசனம் பண்ணப் பெறுவார்-

————

பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ –1-3-1-
வையம் அளந்தானே -இரப்பு பெற்றவாறே -பூரித்து -திரி விக்ரமன் ஆனானிறே-
அளந்த போதை ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி ஸ்மரணத்தாலே இறே ப்ரஹ்மா வரவிட்டதும் –

தேவகி சிங்கமே தாலேலோ –1-3-4-
தேவகி புத்திரன் என்கிற பிரசத்தியாலே -சொல்லுகிறார்
இது தான் ஸ்ருதி சோதிதமுமாயும் இறே இருப்பது –
ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிற இது இறே ஏற்றம் –

தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ –1-3-7-
குடந்தைக் கிடந்தானே
உபய விபூதியையும் நிர்வஹிப்பது திருதிய விபூதியிலே கண் வளர்ந்து போலே காணும் –

அழலே தாலேலோ அரங்கத்து அனையானே தாலேலோ –1-3-9-
அவதார கந்தமான -உரக மெல்லணை யானான அரங்கத் தரவணை யான் -இறே
தேனார் திருவரங்கம் தென்கோட்டி -மூன்றாம் திருவந்தாதி -62-என்னக் கடவது இறே –

புதுவை பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே –1-3-10-
இடர் இல்லை -என்னாதே-இல்லை இடர் -என்கிறார்
த்ருஷ்டா சீதா -என்னுமா போலே
இடராவது -இவர் அபிமானத்திலே ஒதுங்காமை இறே
தானே போகையாலே இல்லை என்கிறார் —

————–

தன் முகத்து-1-4- -பிரவேசம் –
விண் தனில் மன்னிய மா மதீ-என்று -மங்களா சாசன பரராய்
சூழ்ந்து இருந்து ஏத்துகிறவர்களையும் அழைக்கிறார் –

மா மதீ -என்றால் மதியை யுடையவர்களை காட்டுமோ என்னில்
விஜ்ஞானம் யஞ்ஜம் தநுதே-
தத் குணசாரத்வாத் தத் வ்யபதேச – என்கிற ந்யாயத்தாலே காட்டும் இறே –
மங்களா சாசன பரராய் இருக்கும் திருவடியும் பெருமாள் திரு உள்ளம் கன்றாமைக்காக
இவ்வஸ்துவை யுண்டாக்கிப் பரிய வேணும் என்று திரு உள்ளத்திலே ஓடுகிறது அன்றோ கார்யம்
கடுக அழைத்து அருளீர் என்றான் இறே
மங்களா சாசனம் தான் அவன் யாதொன்றில் உற்ற காலத்து-அங்கு ரசிக்கவும் வேணுமே
அது கார்யம் அன்றாகில் விலக்கவும் வேணும்
கார்யம் அன்று என்ன ஒண்ணாதே-இது அவதாரத்தில் மெய்ப்பாடு ஆகையாலே

மன்னிய மா மதியைப் பிடித்துத் தா -என்று அவன் சொல்லி ஆசரிக்கையாலே
ஆச்சார்ய முகத்தாலே ஆர்க்கும் ஜ்ஞானம் யுண்டாக வேணும் -என்று காட்டுகிறது என்னவுமாம்
ஆச்சார்யன் தானும் மன்னிய மா மதி யுடையவர்களையும் அழைத்துக் காட்டும் இறே –

என் மகன் கோவிந்தன் கூத்தினை யிள மா மதீ
நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ –1-4-1-

கதிர் ஜ்ஞான மூர்த்தியினாய் -திருவாய் -6-2-8-
உனக்கு ஓன்று உணர்த்துவான் நான் -திருவாய் -6-2-5-
என்னுமா போலே நித்ய விபூதியிலும் திருதிய விபூதியிலும்-உண்டான ஜ்ஞான விசேஷங்கள்
தமக்கு விதேயம் ஆகையாலே அவற்றை அழைத்து இவனுக்கு உணர்த்துகிறார் –

மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-2-
மா மதீ-முற்பட இள மதி என்று இப்போது மா மதீ என்கையாலே காலக்ருத பரிணாமம் தோற்றுகிறது-

விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா –1-4-6-
மா மதீ -என்றது பக்தியை-ஜ்ஞான சப்த வாச்யையுமாய் இறே பக்தி தான் இருப்பது
பிள்ளை உறங்கா வல்லி தாசரை மகா மதிகள் என்று இறே எம்பார் போல்வார் அருளிச் செய்வது
விரைந்தோடு வாருங்கோள்-மா மதீ -என்றது ஜாதி ஏக வசனம்-

மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-7-
இவனுடைய வ்யாமோஹத்தை பாராதே நீ
ஆஜ்ஞா பரிபாலனம் பண்ணுகிற கர்த்ருத்வத்தாலே தாழ்ந்து வருகிறோம் -எண்ணாதே
அவன் வ்யாமோஹத்துக்கு ஈடாக -நம்மை அழைக்கப் பெற்றோம் என்று மகிழ்ந்து கடுக ஓடி வா –

நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1-4-8-
நெடுமால் -உன்னளவே இல்லை காண்-அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தால் வந்த வ்யாமோஹம்
அந்த வ்யாமோஹத்துக்கு ஈடாக கடுக வா –

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய-1-4-9-
தாழியில் வெண்ணெய் -என்றது தேக குணத்தால் வந்த தன்னேற்றம்
சிறு மா மனிசர் –திருவாய் -8-10-3-என்னுமா போலே-அன்ன பானாதிகளாலே தரிக்கிற தேஹத்தால் வந்த சிறுமை
பெருமையாம்படி ஆத்ம குணத்தால் ஸூ ரிகளோடு ஒக்க வந்த மகத்வம்
விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -73-என்கிற மகத்வத்தையும் உடையவர்கள் இறே –
வெண்ணெய் -என்கிறது -வெண்ணெய் இருந்த பாத்ரம் இறே தாழி யாகிறது —
சம்சாரிகள் உடைய ஆத்மகுணம் தேக குணத்தை பின் செல்லும் முமுஷூக்களுடைய தேக குணம் ஆத்ம குணத்தை பின் செல்லும் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களும் முமுஷூக்களாய் இருந்தார்களே யாகிலும்
இவர்களுடைய ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லும்
தாழியில் வெண்ணெய் -என்றது ஆத்மகுணம் தேக குணத்தை பின் செல்லுகிற ஆழ்வார்களை —
இவர்கள் விரும்புகை இறே சாஷாத் வ்யாமோஹம் ஆவது-

வாழ வுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-9-
வாழுகையாவது-நீ இப்போ நிற்கிற நிலை தன்னிலே -கரிஷ்யே வசனம் தவ –கீதை -18-73- என்கை இறே –
த்யஜ த்யஜ்ய -என்ற உன் முற்பட்ட நிலையை குலைத்து-அவன் மீண்டும் அதிலே நிறுத்தினால் அது பழைய நிலையாமோ
தவ -வசனம் -என்றபோதே மற்று ஒன்றிலே நிறுத்திலும் நிற்க வேணும் இறே பழைய நிலையில் -மாஸூச என்ன ஒண்ணாதே
வாழ வுறுதியேல்- வாச வர்த்தியாய் வாழ வேணும் என்று இருந்தாய் ஆகில்
மா மதி இத்யாதி –அறிவுடையார்க்கு எல்லாம் வேணும் காண் இந்த பாரதந்த்ர்யத்தாலே வந்த மகிழ்ச்சி –

——————

மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கரசே கண்ணபுரத்தமுதே
அமுதே என்னவலம் களைவாய் –1-5-8-
ஜ்ஞான சங்கோசம் பிறவாமல் ரஷகத்வத்தை மாறாடி நடத்துகையாலே அமுதே -என்னவலம் களைவாய் -என்கிறார்
இவருக்கு அவலம் யுண்டாவது அவன் நியாமகன் ஆகாது ஒழியில் இறே
இவர் அவனை நியமித்து இவை முதலான திவ்ய தேசங்களிலே நித்ய சந்நிதி பண்ண வேணும் -என்று
நிறுத்தினார் போலே காணும்-

———-

மாணிக்கக் கிண்கிணி பிரவேசம் –1-6-
சப்பாணி -என்கிற வ்யாஜத்தாலே ஆகிஞ்சன்யத்தை வெளியிட்டு லோகத்தை ரஷிக்கிறார் –

பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி –1-6-1-
சப்பாணி -என்று அஞ்சலியை பிரகாசிப்பிக்கிறது
இரு கால் -சப்பாணி -என்கையாலே
உபாய பாவத்திலும்
உபேய பாவத்திலும்
ஆகிஞ்சன்யம் வேணும் என்று அவனைக் கொண்டு பிரகாசிப்பிக்கிறார் –
காணி -என்கையாலே பலரும் என்னது என்று தோன்ற அபிமானித்து பிறருக்கும் வழங்கிக் கொண்டு போரிலும்
இந்த விபூதி -அவனுடைய காணி -என்கிறது – அது தன்னை இறே இவன் இரந்து கொண்டதும் –

ஆழி அம்கையனே கொட்டாய் சப்பாணி –1-6-3-
இவன் சப்பாணி கொட்டும் போது-இவன் திரு உள்ளத்தில் கருத்தை அறிந்து
திருக்கையில் ஆழ்வார்களுக்கும் நீங்க நின்று=இவர் தம்மைப் போலே உகப்பார்கள் இறே
அருகாழி யாகவுமாம் –

அளந்திட்ட தூணை யவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளந்திட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி –1-6-9-

சிங்க யுருவாய் –
ஊர்த்த்வ நரசிம்ஹமாய் வளர்ந்திட்டு –
ஸ்ரீ கஜேந்த்திரன் -நாராயணா வாராய் என்றான் இறே
வ்யாப்தியிலும் விசேஷ்ய பர்யந்தமான அஸ்தித்வம் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
அது பாராமல் -மணி வண்ணா நாகணையாய் -சிறிய திரு மடல் -50-என்றவோபாதி இறே
இவர் நாராயணா என்றதும்
இங்கே அங்கன் அன்றிக்கே
அஸ்தித்வ நாஸ்தித்வ விகல்பம் தோன்றுகையாலே எங்கும் உளன் –திருவாய் மொழி -2-8-6-என்று
வ்யாப்தியைக் கணிசித்து அதுக்கு ஒரு ஹேது வேண்டுகையாலே கண்ணன் என்ற
பாகவதனைக் காய்ந்த பொறாமையாலே இறே
முன்பு தன்னளவிலே நாஸ்திக்யத்தால் அவன் பண்ணின பிரதிகூல்யம் எல்லாம் பொறுத்துப் போந்தவன் இப்போது
அவன் புடைத்த அவ்விடம் தன்னிலே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிற்றும்-
இத்தால் அங்கு -என்கையாலே -தேசாந்திர வ்யாவ்ருத்தியும்
அப்பொழுது -என்கையாலே காலாந்தர வ்யாவ்ருத்தியும்
அவன் வீய -என்கையாலே தேகாந்தர வ்யாவ்ருத்தியும்
தோற்றினாப் போலே
அவன் தட்ட ஆங்கே -என்ற போதே அவை எல்லாம் தோற்றிற்று இறே –
திவ்ய ஆயதங்களையும் நிறுத்தித் தோன்றின பிரகாசத்தாலே இறே வாள் உகிர் -என்கிறது –

————

தொடர் சங்கிலி பிரவேசம் –1-7-
தளர் நடை -என்கிற வ்யாஜத்தாலே
அனுகூல ப்ரீதியும் பிரதிகூல நிரசனமும் -இவ்விரண்டும் அதிகார அனுகுணமாக நடக்கவே சித்திக்கும்
என்னும் இடத்தை அவனைக் கொண்டே வெளியிடுகிறார்
அவனுடைய ஆசாரம் -பக்தி மூலமாகவும் பீதி மூலமாகவும் அவகாஹாந ஹேதுவாய் இருக்கும் இறே-
பிரமாண அனுகுணமாக ஏதேனுமோர் அதிகரிக்கும் –

சீரால் விரித்தன வுரைக்க வல்லார் மாயன் மணி வண்ணன் தாள் பணியும்
மக்களைப் பெறுவர்களே –1-7-11-

சீரால் விரித்தன –
சீரால் விரிக்கை யாவது -குணாஸ்ரய தர்சனமும் -குண பிரகாச ஹேதுவும்-குண பிரகாச பிரயோஜனமும் -இறே
உரைக்க வல்லார் –
இவர் விரித்த பிரகாரம் அறியாது இருந்தார்களே யாகிலும்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி
இவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே அனுசந்திக்குமவர்களும்-

பணியும் -என்ற வர்த்தமானம் -உத்தமனில் வர்த்தமானம் ஆதல் –
உத்தர வாக்யத்தில் பிரார்த்தனை யாதலால் இறே-

மக்களைப் பெறுவர்களே-
புத்ரர்களைப் பெறுவர்கள்-
அவர்கள் ஆகிறார் -சிஷ்யவத் புத்ரர்கள் ஆதல் –
தாசவத் புத்ரர்கள் ஆதல் –
சிஷ்ய தாசர்கள் ஆதல் –
இது தான் சப்த உச்சாரண மாத்ரத்தால் கூடுமோ என்னில் –
இவர் அபிமானத்திலே ஒதுங்கி –
இவர் அருளிச் செய்ததை ஓதி –
ஒதுவித்துப் போருமவர்களுக்கும் -கூடும்
எங்கனே என்னில்
இவர்களாலே திருந்தின சிஷ்யர்கள் யுடைய நினைவாலே –
ஸூ கதாதம் –
இவனைப் பெற்ற வயிறு யுடையாள் -பெரியாழ்வார் -2-2-6-
நந்தன் பெற்றனன் -பெருமாள் திருமொழி -7-3-
கூரத்தாழ்வார் நங்கையார் திருவடி சார்ந்த வாறே பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு
கூடுகிற அளவில் தம்முடைய புத்ரரான ஆழ்வான் யுடைய
ஸ்ரீவைஷ்ணவத்தைக் கண்டு
இதனுடைய எடுப்பு இருந்தமை கண்டோமுக்கு
ஆழ்வானுக்கு அந்ய சேஷத்வம் வர ஒண்ணாது என்று ஆவர்த்திக்கை தவிர்ந்தார் இறே-

———-

பொன்னியல்-1-8- பிரவேசம் –

கீழே இவருடைய அபிமானத்திலே ஒதுங்கி-அதிகாரியானவன் நல்வழி நடக்கவே
அனுகூல ப்ரீதியும் பிரதிகூல நிரசனமும் சித்திக்கும் -என்கிறார் –
பிரதிகூல நிரசனம் தான் -தேஜோவதமும் -பிராண வதமுமாயும் இறே இருப்பது
சாஷாத் பிரதிகூலமாவது -தேக இந்த்ரியங்களும் தானும் இறே –
தேக இந்த்ரியங்களை தேஜோ வதம் பண்ணுகையாவது-அதிகார அனுகுணமாக நியமித்து -சிறைப்படுத்தி நியாம்யம் ஆக்குகை –
நிரசிக்கையாவது -எம்பாரை போலே இறே -தானே தனக்கும் சத்ருவை இருக்கும் இறே –
கர்மத்தால் அன்றிக்கே-காலத்தால் அன்றிக்கே-தேசத்தால் அன்றிக்கே-இந்த்ரியங்களால் அன்றிக்கே
நானே செய்தேன் -என்றான் இறே –
இனி மேல் அச்சோ -என்கிற வ்யாஜத்தாலே–அயோக வ்யச்சேதமும்-அப்ரதிஷேதம் -முதலான
ஆத்ம குணங்கள் யுண்டாகில் இறே–அவனைக் கூடலவாது -என்னும் அர்த்தத்தை வெளியிடுகிறார் –

————–

பொத்த உரலைக் கவிழ்த்து-அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய-1-9-7-

இத்தால் ஸூஷியுடையருமாய் -இதர அபிமானம் அற்றவர்களுக்கு
அபேஷா நிரபேஷமாக திருவடிகள் சேரும் என்று காட்டுகிறது
பொத்த யுரலால் -இதர அபிமானம் சிறிது கிடந்தாலும்
ஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போகய பூதராவார் என்கிறது-

தித்தித்த பாலும் –
காய்ச்சி உறி ஏற்றி உறைதல் வாய்ப்பாலும் அவனுக்கு போக்யமாய் இருக்கும் இறே-
இத்தால் -ஒருவனை நாம் திருத்தி ஆந்தராளிகன் ஆக்கினோம் என்னும் அபிமானம் கிடந்தாலும்
ஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போக்யர் ஆவார்கள் இறே
நாழிவளோ-திரு விருத்தம் -71-என்றும்
செய்த சூழ்ச்சியை யாருக்கு உரைக்கேன் -பெரிய திருமொழி -3-7-4-என்றும்
இவ் வபிமானம் இறே அவனுக்கு அங்கீகார ஹேது
ஸ்வ அபிமானம் அற்ற அளவன்றிக்கே -வைகுண்ட பிரிய தர்சிகளாய் இருப்பாரை -வெண்ணெய்-என்கிறது –
எல்லா உலகுமோர் துற்றாற்றா-திருவாய் -2-8-8-என்கிற திரு வயிறு நிறைவதும்
திரு உள்ளம் பிரசன்னம் ஆவதும் இவ்வதிகாரம் கண்டால் இறே –
சதுர்த்தியில் ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தமான பார தந்த்ர்யம் தோன்றா நிற்கச் செய்தேயும்
அந்ய சேஷ பூதரை இறே சேஷம் என்கிறது –
சேஷ பூதனை -முமுஷூ வானவனை இறே வெண்ணெய் என்னாலாவது –
தித்தித்தபால் -என்கிறது
ஸ்வ அபிமானமும் இதர அபிமானமும் அற்ற பிரபன்னரை இறே –
பொத்த உரல் என்றது -பிரபன்னன் தன்னை -அசித் என்று இறே இருப்பது –

குழலால் இசைபாடி வாய்த்த மறையோர் வணங்க -இமையவர் ஏத்த வந்து–1-9-8- –
குழலால் இசை பாடி -என்றத்தாலே
ஆச்சார்ய வசன பாரதந்த்ர்யமே வாய்த்த மறையாக -மங்களா சாசன பர்யந்தமாக கைங்கர்யம் செய்யுமவர்கள் –

விட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே –1-9-10-

விட்டு சித்தன் பரோபகாரமாக வுபகரித்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
வாய்த்த மக்களையும்
நன் மக்களையும் பெற்று
அவர்கள் மங்களா சாசனம் பண்ணக் கண்டு மகிழ்வர் -என்கிறார்

விஷ்ணு சித்தன் என்றது -அரவத்தமளிப்படியே
வல்லவர் -என்றது -சாபிப்ப்ராயமாக -என்றபடி
வாய்த்த மக்கள் -என்றது -புத்ரர்களை
நன் மக்கள் என்றது -சிஷ்யர்களை –
பிரத்யயத்திலே சிஷ்யர்களுக்கு ப்ராப்தி யுண்டானவோபாதி-பிரக்ருதியிலே புத்ரர்களுக்கும் பிராப்தி யுண்டு இறே
புத்ரான் -சந்த்யஞ்ய -என்றது காரண கார்ய பாவ சம்பந்தத்தாலே இறே-அது தான் அறிந்த மாத்ரம் இறே
இங்கு கார்ய காரண பாவ சம்பந்தம் ஆகையாலே இறே உபாதேயமாம் இறே
தாத்வர்த்தத்தால் வந்த ரஷ்யத்வம் சதுர்த்தி தோற்றினால் இறே தோற்றுவது –

———-

அரவணை–2-2- பிரவேசம் –

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்-என்று அல்வழக்கு ஒன்றும் இல்லாதே அறுதியிட்டது தேசமாக்கி
தத்தேசிகனை அவதார கந்தமாக வஸ்து நிர்த்தேசம் செய்து
நாவகார்யம் சொல் இல்லாதவர்களை தேசிகராக்கி
கார்ய பூதனானவன் அவதரித்த ஊரில் கொண்டாட்டம் ஒக்க நின்று கண்டால் போலே
மிகவும் உகந்து மங்களா சாசனம் செய்து
அவதரித்தவனுடைய திவ்ய அவயவங்களை பாதாதி கேசாந்தமாக நிரவத்யமான வளவன்றிக்கே
இதுவே பரம புருஷார்த்தம் என்று வஸ்து நிர்த்தேசம் செய்து
தாமும் மிகவும் உகந்து தம் போல்வார்க்கும் காணீர் –காணீர் -என்று -காட்டி அருளி
இவனுக்கு ஆஞ்ஞா ரூபமாகவும் அனுஜ்ஞ்ஞா ரூபமாகவும்
ப்ராப்தி நிபந்தனமான அபிமான ரூபமாகவும்
உபய விபூதியில் உள்ளாரும் உபகரித்த பிரகாரங்களை அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற அவர்கள் வரவிட்ட வற்றையும்
அவர்கள் கொடுவந்த வற்றையும் மேன்மையும் நீர்மையுமான மெய்ப்பாடு தோன்ற அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து-

அவன் அங்கீ கரித்த பின்பு
தொட்டிலேற்றித்
தாலாட்டி
ஜ்ஞானத்துக்கு ஆஸ்ரயத்தில் காட்டிலும் ஜஞேய ப்ராதான்யத்தைக் கற்ப்பித்து
அவற்றுக்கு ஜஞேய சீமை இவ்விஷயமாக்கி விஷயீ கரித்த ஜ்ஞானத்தை –
விஜ்ஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற ந்யாயத்தாலே ஜ்ஞாதாக்கள் ஆக்கி
இள மா மதீ -1-5-1-என்றும் –
விண்டனில் மன்னிய மா மதீ -1-5-6-என்றும்
உபய விபூதியில் உள்ளாரையும் உப லஷண நியாயத்தாலே இவன்
புழுதி அளைவது தொடக்கமான வ்யாபாரங்களைக் கண்டு
தாமும் மிகவும் உகந்து தம் போல்வாரையும் அழைத்துக் காட்டி
நோக்கின கண் கொண்டு போக வல்லீர்கள் ஆகில் போங்கோள்-என்று
முன்பு பச்சை வரவிட்டுத் தாங்கள் வாராதவர்களையும் வந்து கண்டு போங்கோள் -என்று
உய்ய உலகு படைத்து -என்று ஜகத் காரண பிரகாசகமான பரமபதம் முதலாக கீழே அருளிச் செய்த திவ்ய தேசங்களையும்
இதில் அருளிச் செய்த திருக் குறுங்குடி முதலான திவ்ய தேசங்களிலும் சந்நிஹிதனாய் நின்றவனும்
நாநாவான அவதாரங்களும் அபதாநங்களுமாக பிரகாசித்தவனும்
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -கீதை -15-15-என்கிறபடியே
சகல வேத சாஸ்திர இதிஹாச புராணாதிகளாலும் அறியப்படுமவன் நான் -என்றவனை -கீழே
நாராயணா அழேல் அழேல் -என்றவர் ஆகையால் –
நான் மறையின் பொருளே -1-6-3-
ஏலு மறைப் பொருளே -1-6-9-
எங்கள் குடிக்கு அரசே -1-6-10-என்று வாசகத்துக்கு வாச்யமும் -வாச்யத்துக்கு வாசகமுமாக அறுதியிட்டு அவனை
செய்யவள் நின்னகலம் சேமம் எனக்கருதி –ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை -1-6-1- என்கையாலே
லோகத்தில் உள்ளாருக்கு பீதி பக்தி பிராப்தி மூலமான ஆசாரங்கள் பிரமாண அனுகுனமாகத் தோன்றும்படி யாகவும்
சொல் வழுவாத ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தோன்றும்படியாகவும்
செங்கீரை என்கிற வ்யாஜ்யம் முதலாக
சப்பாணி
தளர்நடை
அச்சோ அச்சோ
புறம் புல்கல்
அப்பூச்சி என்கிற வியாபார விசேஷங்களைப் பிரார்த்தித்து
அவன் இவை செய்யச் செய்ய அவற்றுக்குத் திருவடிகள் நோம் -என்றும்
தளர் நடையில் விழுந்து எழுந்து இருக்கையாலே திரு மேனி நோம் -என்றும்
அச்சோ புறம் புல்குகளாலே தம்முடைய திரு மேனியை வன்மை என்று நினைத்து
அத்தாலும் திரு மார்பு நோம் என்று அஞ்சி
நாம் பிரார்த்தித்து என்ன கார்யம் செய்தோம் -என்று அனுதபிக்கிற அளவில்
தன் நிவ்ருத்த அர்த்தமாக தன் திருத் தோள்களையும் ஆழ்வார்களையும் காட்ட
அவையும் பயா அபாய ஹேது வாகையாலே அவற்றை அமைத்து திரு மேனியில் வாட்டத்தை நினைத்து
படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் இத்தனை என்று உறங்குகிறவனை எழுப்பி
அநச்னன்-என்கிற பிரதிஜ்ஞ்ஞையைக் குலைத்து
அஸ்நாமி -என்கிறபடியே அமுது செய்ய வேணும் -என்கிறார் –

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்-2-2-2-
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான்
வைத்த நெய்யால் -சாஷாத் முத்தரையும்
காய்ந்த பாலால் -சொல்லுவதே ஓத்தின் சுருக்கு -என்றும்
நாம நிஷ்டோசம் யஹம் ஹரே -என்றும் இருக்கிறவர்களையும்
வடிதயிரால் -சதுர்த்தி உகாரங்களிலே தெளிந்து -தந் நிஷ்டராய் –
மகாரத்திலே ப்ர்க்ருத்யாத்ம விவேக யோக்யரானவர்களையும் –
நறு வெண்ணெயால் -செவ்வி குன்றாமல் இவ்வடைவிலே ப்ரக்ருத்யாத்ம விவேகம் பிறந்து
அஹங்கார மமகார நிவ்ருத்தமான ஆத்ம குணங்களால் பூரணராய் மோஷ சாபேஷராய்-இருக்கிறவர்களையும் சொல்லுகிறது –

யமர்ந்து என் முலை யுணாயே —2-2-5-
உன் இஷ்டத்திலே போக்குவரத்து சீகர கதி யானாலும்
அழைக்க வரும் போது மந்த கதியாக வேணும் காண் –
இனி இவர்க்கு முலைப்பால் ஆவது
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமாய் –
மங்களா சாசன பர்யந்தமான பக்தி ரூபா பன்ன ஜ்ஞான ப்ரவாஹம் இறே
பக்தி உழவன் ஆனவனுக்கு தாரகாதிகள் எல்லாம் இது தானே இ றே-

இருடீ கேசா முலை யுணாயே-2-2-6-
இந்த்ரியங்கள் வ்யக்தி அந்தரங்களிலே செல்லாதபடி சௌந்தர்யாதிகளாலே அபஹரிக்க வல்லவனே –
இடையாலே
ஒன்றையும் பொறாத வைராக்யமும் –
இடை நோக்குவது
முலைகள் விம்மி பெருத்தல் ஆகையாலே மிக்க பக்தியையும்
விரி குழல் -என்கையாலே –
நாநா வானப் பிரபத்திகளை ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் -ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்
மேல் நுழைந்த வண்டு -என்கையாலே இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்
இன்னிசை -என்கையாலே
ஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்
இவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது
திரு மாளிகையிலே ஆகையாலே இத்தை உகந்து அருளி
இனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-

சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே —2-2-11-
பாட வல்லார் தாமே சென்ற சிந்தை பெறுவார்
சீர் –
ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
செங்கண் –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த ஐஸ்வர்யம் -ஆதல்
பெருமை யாதல்
வ்யாமோஹம் ஆதல் –

ஜல சம்ருதி மாறாத செங்கழு நீரைச் சொல்லுகையாலே
மங்களாசாசன குணத்திலே ஒருப்பட்ட ஸூமநாக்களையும்-
நிகழ் நாறும் -என்கையாலே -அவர்களுடைய பிரசித்தியையும் சொல்லுகிறது –

——

போய்ப்பாடுடைய-2-3- பிரவேசம் –

கீழே -தாயார் வாய்ச் சொல் கருமம் கண்டாய் -என்றும்
தீமை செய்து அங்கம் எல்லாம் புழுதியாக யளைய வேண்டா -என்றும்
பலவிடங்களிலும் சொல்லிற்று கேட்கிறார் இல்லை -என்று இருக்கையாலும் –
ஆஸ்ரித பரதந்த்ரனான அவதாரத்திலே மெய்ப்பாடு தோன்றும் போதும்
ஆஸ்ரித வசனம் கேட்க வேணும் என்னும் தாத்பர்யம் தோன்ற வேணும் என்று
ஸ்ரவண இந்த்ரியத்திலே சம்ஸ்கார ஸூஷி யுண்டாக அவன் ஆசரித்து காட்டுகையாலே
இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான நிரபேஷ பிரகாசகம் ஒருபடிப் பட்டு இருக்கும் –
அவன் இப்படி ஆசரித்தான் என்றால் -இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான சாபேஷராய் இருக்கும்
தேக இந்த்ரியங்கள் ஜன்ம சித்தமாக யுண்டாய் இருக்கச் செய்தேயும்
த்ருஷ்டாத்ருஷ்ட ரூபமான பதார்த்தங்களை ஜன்ம சித்தமான அந்த இந்த்ரியங்களாலே குறிக் கொண்டு கிரஹிக்கும் போதும்
பிரமாணிகரான பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்
பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களுக்கு சேர்ந்த வர்த்தமான ஆச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்
இவ் வனுஷ்டானம் தான் இல்லை யாகிலும் திராவிட வேதத்துக்கு கருத்து அறியும் மூதுவர் நிர்ணயித்த வாச்ய வாசக சம்ப்ரதாயத்தாலே
வ்யாபகத்வாரா வாசக வாச்யங்களை பிரதம மத்யம நிகமன பர்யந்தமாக
அர்த்த தர்சனம் பண்ணுவிக்க வல்லவர்களுடைய அனுதாப வசனங்களாலும்
அனுதாப ஹேது வானால் இறே செவி வழியே கலை இலங்குவது
ஸ்ரோதாச -அனுதாப ஹேதுவான அர்த்த் க்ரஹண சப்த மாத்ரங்களை வருந்தியும் குறிக் கொண்டு க்ரஹிக்கைகாக இறே
அந்த ஸ்ரவண இந்த்ரியத்துக்கு சம்ஸ்கார ஸூஷி யுண்டாக்கிற்று என்று –
அத்தை நினைத்து
அந்த ஸூஷியை பலகாலும் தொட்டுப் பார்க்க வேணும் இறே
உன் செவியில் புண்ணைக் குறிக் கொண்டு இரு-என்று இ றே லோக உக்தியும் –

வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் –2-3-5-
விஷ்ணு சப்தம் சாதாரண வ்யாவ்ருத்தமான படி தோன்ற நீ இங்கே வாராய் என்று பிடித்து திரி இடுகிறாள்
கேசவனை -விட்டுவே -என்கிறாள்
கரும் குழலாலே -பிரசச்த கேசன் -என்றது பின்நாட்டின படி-

————————————————————————————–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார்-பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல் பதிகம் -2-9–/ ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் — வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே – பதிகம்-10-6-/களவு காணும் பருவமாய் இருக்கிற படியை அனுசந்திக்கும் பதிகம்-10-7–

June 30, 2020

ஸ்ரீ திருவரங்கத்தில் பகல் பத்து முதல் நாள் திருப்பல்லாண்டு தொடங்கி –
இந்த பண்டு அவன் செய்த க்ரீடை பதிகம் வரை முதல் நாள் அரையர் சேவை உண்டு

அவதாரிகை
கீழ் பூ சூட்டி -காப்பிட்டு -தனக்கு வசவர்த்தியாக்கி -தன் அருகே இவனை உறக்கி -நிர்ப்பரையாய் –
மாதாவான யசோதை பிராட்டி தானும் உறங்கி -உணர்ந்து -தன்னுடைய கரஹகார்யா பரவசையாய் வ்யாபரியா நிற்க
இவனும் உணர்ந்து போய் -ஊரில் இல்லங்களிலே புக்கு –
அங்குண்டான வெண்ணெய்களை விழுங்கி –
அவை இருந்த பாத்ரங்களை உருட்டி -உடைத்து –
காய்ச்சி வைத்த பாலை சாய்த்து பருகி –
அவர்கள் சமைத்து வைத்த பணியாரங்கள் முதலானவற்றை நிச்சேஷமாக எடுத்து ஜீவித்து –
சிறு பெண்ணை அழைத்து -அவள் கையில் வளையலை கழற்றிக் கொண்டு போய் –
அத்தை கொடுத்து நாவல் பழம் கொண்டு –
இப்படி தீம்புகள் செய்கையாலே -அவ்வவ க்ரஹங்களில் உள்ளார்கள் தனித்தனியே வந்து முறைப்பாட்டு –
உன் பிள்ளையை இங்கே அழைத்துக் கொள்ளாய் -என்ற பிரகாரத்தையும் –

இவளும் இவர்கள் சொன்ன அனந்தரத்திலே இவனை இங்கே அழைத்துக் கொள்கைக்காக
பல காலும் இவனை ஸ்தோத்ரம் பண்ணுவது –
உன்னை பிறர் சொலும் பரிபவம் எனக்கு பொறுக்க போகிறது இல்லை -வாராய் -என்பதாய்-இப்புடைகளிலே
பலவற்றையும் சொல்லி இவனை அழைத்த பிரகாரத்தையும்
தத் அவஸ்தா பன்னராய் கொண்டு பேசி
முன்பு அவன் செய்த க்ரீடைகள் எல்லாவற்றையும் அனுபவித்து ஹ்ர்ஷ்டராகிறார் -இத்திருமொழியில்

——————————————————–
முதல் பாட்டு –
ஊரில் ஸ்திரீகளில் சிலர் தங்கள் கிருஹங்களிலே இவன் செய்த தீம்புகளை
தாயாரான ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு வந்து சொல்லி
அவனை நீ இங்கு அழைக்க வேணும் என்ற படியை சொல்லுகிறது

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான் மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 – –

அண்ணற்கு அண்ணான் -தமையான பல ராமனுக்கு சேஷ்டித்தால் ஒத்து இராதவனாய் -தூரஸ்தன்
பிரான் -உபகாரகன் -இது வெறுத்து சொல்லும் வார்த்தை அபகாரகன் -என்று -விபரீத லக்ஷணையால் பொருள் –

வெண்ணெய் விழுங்கி —
கடைந்து எடுத்த தாழிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை நிச்சேஷமாக களவிலே விழுங்கி –
அவ்வளவும் இன்றிக்கே –
வெறும் கலத்தை வெற்ப்பிடை இட்டு
அது இருந்த பாத்தரத்தை கல்லிலே இட்டு உடைத்து
வெண்ணெய் தான் விழுங்கினான் ஆகிறான் -வெறும் கலங்களை வெற்ப்பிடை இட்டு உடைக்குமோ –

இத்தால் இவனுக்கு பிரயோஜனம் என் என்ன –
அதனோசை கேட்கும் –
அது உடைகிற போதை ஓசை கேட்கை ஆய்த்து இவனுக்கு பிரயோஜனம் –
அதுக்காக செய்யும் என்ன –
ஆனால் உங்கள் க்ரஹங்களை இவனுக்கு புகுர அவகாசம் இல்லாத படி அடைத்து நோக்கிக் கொள்ளும் கொள்-என்ன –

கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்ககில்ளோம்-
கிருஷ்ணான உபகாரகன் கற்ற க்ரித்ரிம வித்யையை நாங்கள் காக்க மாட்டுகிறிலோம்
எல்லாருடைய களவும் காக்கலாம் -இவனுடைய களவு எங்களால் காக்கப் போகாது என்கை-
பிரான் என்கிறது வ்யதிரேக உக்தி -சர்வஸ்வ அபஹாரி என்கிறபடி –
உந்தம் க்ரஹங்களை நீங்கள் காக்க மாட்டி கோள் ஆகில் ஆர் காப்பார் என்ன –

உன் மகனை காவாய் –
உன்னுடைய பிள்ளையை நீ காத்து கொள்ளுவுதி யாகில் எல்லாம் காவல் படும்
நீ அத்தை செய்யாய் என்றவாறே
சிறு பிள்ளைகள் தீம்புகளை செய்யார்களோ –
அவன் அறியாமல் ஏதேனும் சில செய்தது உண்டாகில் நீங்களும் சற்று பொறுக்க வேண்டாவோ –
இப்படி அலர் தூற்றலாமோ என்ன –

புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை –
புண்ணிலே புளியை குறந்திட்டால் கரிக்குமா போலே துஸ்ஸகமான தீமைகளை செய்யா நின்றால் எங்கனே பொறுப்பது –
நீங்கள் ஓரகத்தில் உள்ளார் அன்றோ இப்படி சொல்லுகிறிகோள்
உங்கள் ஓரகத்திலும் இப்படி நின்று இவன் தீம்புகளை செய்கிறான் ஆகாதே என்ன –
எங்கள் அகம் ஒன்றிலும் அன்று –

புரை புரையால் இவை செய்ய வல்ல –
அகம் தோறும் இப்படி இருந்துள்ள தீமைகளை செய்ய வல்லவன் காண் இவன் என்கிறார்கள் –
புரையாவது -க்ரஹம்-வீப்சையால் அகம் தோறும் என்றபடி -ஆல்-அசை

அண்ணல் கண்ணான் –
அண்ணல் என்றது ஸ்வாமி வாசகம்
அண்ணல் கண்ணான் என்றது ஸ்வாமித்வ சூசுகமான கண்ணை உடையவன் என்றபடி –
இத்தால் இவ்விடத்தில் ஸ்வாமி என்றது -க்ரித்ரிமர்க்கு தலைவன் என்றபடியாய்
இதுக்கு பிரகாசமான கண்ணை உடையவன் என்றது ஆய்த்து –
அன்றிக்கே –
அண்ணற்கு என்றது அண்ணனுக்கு என்றபடியாய்
அண்ணான் என்றது -அண்ணியன் ஆகாதவன் என்றபடியாய்
இப்படி தீம்புகளை செய்கையாலே
தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான் -என்கிறபடியே
சாதுவாய் திரியும் நம்பி மூத்த பிரானுக்கும் தனக்கும் ஒரு சேர்த்தி இல்லாதவன் என்னவுமாம் –

ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் –
இப்படி அத்விதீயனான பிள்ளையை பெற்ற பூர்த்தியை உடையவளே
உன் மகனைக் கூவாய் –
இப்படி தீம்புகளை செய்து திரியாமே உன் மகனை உன் பக்கலிலே அழைத்து கொள்ளாய்-

————————————————-

இரண்டாம் பாட்டு
இப்படி இவர்கள் சொன்ன அநந்தரம் ஸ்ரீ யசோதை பிராட்டி தன் புத்ரனானவனை
அழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது –

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசலகத்தார்
பரிபவம் பேச தரிக்க கில்லேன் பாவியேன் உனக்கு இங்கே போதராயே -2 9-2 –

வாமன நம்பீ –
குறள் பிரமச்சாரியாய் கொண்டு -அபிமதம் பெற்று பூரணன் ஆனவனே
நங்காய் -உன் மகனை புகழ்ந்து அழைக்கிறாய் அல்லது அச்சம் உறும்படி கடிந்து
பேசுகிறது இல்லையே -என்று என்னை பொடிகிற நங்காய்
பரிபவம் பேச -கள்ளன் தீம்பன் என்றால் போலே உன்னை பரிபவித்துப் பேச
பாவியேனுக்கு—உன் மேல் ஊரார் தூரேற்றக் கேட்க்கும் படியான பாபத்தைப் பண்ணின
என் மனக் கவலை தீரும்படி

வருக வருக வருக இங்கே –
அங்கே இருந்து தீம்புகளை செய்து -கண்டார் வாயாலே பரிபவம் கேளாதே –
இங்கே வா என்கிறாள் -வருக என்றது வா என்றபடி –
அவன் கடுக வருகைக்காக பல காலும் சொல்லுகிறாள் –
இப்படி அழைத்த இடத்திலும் வாராமையாலே –

வாமன நம்பீ வருக இங்கே –
நீ வாமன நம்பீ அன்றோ -ஆஸ்ரித ரஷணம் செய்யும் குண பூர்த்தியை உடைய நீ இங்கே வாராய் -என்கிறாள் –
அவ்வளவிலும் வாராமையாலே –

கரிய இத்யாதி –
கறுத்த திருக் குழலையும் -சிவந்த திருப் பவளத்தையும் -உபமான ரஹிதமாய் கொண்டு
இரண்டுக்கும் நடுவே விளங்கா நின்ற திரு முகத்தை உடையவனாய் –
மாதா பிதாக்கள் சொல்லிற்று செய்யும் குண பூர்த்தியை உடைய காகுத்தன் அன்றோ நீ –
இங்கே வாராய் என்ன –
முறைப்பட்டு வந்து நின்றவர்களில் ஒருத்தி -அஞ்ச உரப்பாள் யசோதை -என்கிறபடியே
நீ நியமியாமல் கொள் கொம்பு கொடுத்து அன்றோ -இப்படி இவன் தீம்பிலே தகண் ஏற வேண்டிற்று –
இப்போது இவனை புகழ்ந்து கொண்டு -அழைக்கிறாய் இத்தனை போக்கி நியமித்து
ஒரு வார்த்தை சொல்லுகிறது இல்லையே என்ன –

அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் -என்கிறாள் –
பிள்ளை பெற்று சிநேகித்து வளர்த்து போரும் பூர்த்தியை உடையவளே –
இவன் எனக்கு இன்று பெறுவதற்கு அரியவன் அன்றோ –
இப்படி இருக்கிறவனை நான் கருக நியமிக்க மாட்டேன் -என்கை
இப்படி இவள் சொன்னதற்கு உத்தரம் சொல்லி -மீளவும் தன பிள்ளையானவனைக்
குறித்து பரிபவம் பொறுக்க மாட்டாமையால் வந்த தன் க்லேசத்தை சொல்லி அழைக்கிறாள்-

அஞ்சன வண்ணா –
கண்டவர்கள் கண் குளிரும்படி -அஞ்சனம் போன்ற திரு நிறத்தை உடையவனே

அசலகத்தார் பரிபவம் பேச தரிக்க கில்லேன் –
அசலகத்தார் ஆனவர்கள் -கள்ளன்-தீம்பன் -என்றால் போலே உன்னை பரிபவங்கள் சொல்லக் கேட்டு
பொறுக்க மாட்டுகிறிலேன்
பாவியேனுக்கு இங்கே போதராயே
இச் சொலவுகள் கேட்க்கும் படியான பாபத்தை பண்ணின எனக்கு இந்த க்லேசம் தீரும்படி இங்கே வாராய்-

—————————————–

மூன்றாம் பாட்டு –
முன்புத்தை அவர்களை ஒழிய -வேறு சிலர் வந்து தங்கள் க்ரஹத்திலே அவன் செய்த
தீம்புகளை சொல்லி -இப்படி அருகிருந்தாரை அநியாயம் செய்யலாமோ –
உன் பிள்ளையை உன் பக்கலிலே அழைத்துக் கொள்ளாய் என்ற
பிரகாரத்தை சொலுகிறது –

திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிச்சி உடைத்திட்டு போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ யசோதாய்
வருக என்று உன் மகன் தன்னை கூவாய் வாழ ஒட்டான் மது சூதனனே -2 9-3 – –

தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன் –
தீம்புகள் செய்யும் வகைகிளில் சிறிதேனும் தேங்குதல் இல்லாதவனாய் –
அது தன்னையே தனக்கு தேஜஸ்ஸாக உடையனாய் இரா நின்றான்
உறிச்சி-உறிஞ்சி
வாழ ஒட்டான் மது சூதனனே –
முன்பு விரோதியான மதுவை நிரசித்தவன் -இப்போது தானே விரோதியாய் நின்று –
எங்கள் குடி வாழ்ந்து இருக்க ஒட்டுகிறிலன்

திரு உடைப் பிள்ளை –
ஐஸ்வர்யத்தால் குறைவற்றவன் என்கை -இத்தால்
ஸ்வ க்ரஹத்தில் ஜீவனம் அற்று வயிறு வாழாமல் செய்கிறான் அன்றே
செல்வக் கிளர்ப்பாலே செய்கிற தீம்புகள் இறே இவை என்கை

தான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் –
தான் தீம்பு செய்யும் பிரகாரங்களில் -தன் பிறப்பையும் ஐஸ்வர்யத்தையும் பார்த்து –
நாம் இத்தை செய்யும்படி என்-என்று தேங்குதல் அல்பமும் உடையவன் அல்லன் –
தடை அற செய்யா நிற்கும் என்கை
தேசுடையன் –
தேக்கம் இல்லாத அளவேயோ -இது தன்னையே தனக்கு தேஜசாய் உடையனாய் இரா நிற்கும்
இத்தால் –
பிறர் சொலும் பழிச் சொல்லுக்கு அஞ்சான் என்கை –
இப்படி நீங்கள் சொல்லுகைக்கு இவன் தான் செய்தவை என் என்ன –

செய்தவற்றில் ஒன்றை சொல்லுகிறாள் -உருக -இத்யாதி
உருக்குவதாக வைத்த பாத்ரத்தோடே-வெண்ணெயை உறிஞ்சி -பாத்ரத்தையும் உடைத்து –
தான் அல்லாதாரைப் போலே இவ்வருகே போந்து நில்லா நின்றான் –
அருகு இத்யாதி –
உன் அயலிலே குடி இருந்த எங்களை -உன் பிள்ளையை கொண்டு வேண்டிற்று செய்கிறது
இது தான் நியாயமோ

யசோதாய் வருக என்று உன் மகன் தன்னை கூவாய் –
உன்னுடைய பிள்ளையானவனை-இங்கே நின்று இன்னமும் தீம்புகளை செய்யாமல் உன் அருகே வா
என்று அழைத்துக் கொள்ளாய் –
வாழ ஒட்டான் மது சூதனனே –
நீ இது செய்யாய் ஆகில் எங்களை அவன் குடி செய்து குடி வாழ்ந்து இருக்க ஒட்டான் காண்-என்கை
மது சூதனன் -என்றது முன்பு விரோதி நிரசனம் செய்து போந்தவன் இப்போது
தான் விரோதியாய் நின்று நலியா நின்றான் என்கிற வெறுப்பாலே –

———————————————

நான்காம் பாட்டு –
வருக என்று உன் மகன் தன்னை கூவாய் -என்றவாறே
இவள் அவனை ஸ்துதி பூர்வகமாக அழைக்க –
அவனும் ப்ரீதனாய் ஓடி வந்து –
அகத்திலே புகுர –
இவள் எதிரே சென்று எடுத்துக் கொண்ட படியை சொல்லுகிறது

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம்புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே -2 9-4 – –

தெண் திரை சூழ்—நிர்மலமான அலைகளை உடைய புனலாலே சூழப்பட்ட
இங்கே போதராயே -இங்கே அம்மம் உண்ண வா என்று பஹுமாநித்து அழைக்க
அம்மம் -என்பது முலைப்பாலுக்கும் அன்னத்துக்கும் பர்யாய நாமம் -அடைய வளைந்தான்
கொண்டல் இத்யாதி –
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவனே
அங்கு நின்று இங்கே போதராயே
போதராய் -என்றது வாராய் என்றபடி
கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
கொண்டல் வண்ணன் வெண்ணெய் உண்ட வாயன் -என்னும்படி
ஸ்ரீ கோவிலிலே வசிக்கிற பிள்ளை யானவனே இங்கே போதராயே

தெண் திரை இத்யாதி –
தெளிந்த திரைகளை உடைத்தான புனலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருப் பேரிலே கண் வளர்ந்த ஸ்ரீ மானான
நாராயணனே -இங்கே அம்மம் உண்ணப் போதராயே –
உண்டு இத்யாதி –
இப்படி ஸ்துதி பூர்வகமாக அவள் அழைத்தவாறே -கிட்டே வந்து அம்மம் உண்டு வந்தேன் காண் –
என்று சொல்லி ஓடி வந்து அகத்திலே புகுந்து –
தாயாரான இவளும் இவன் வந்த வரத்தையும் முகத்தில் பிரசன்னத்தையும் கண்டு
ப்ரீதையாய் எதிரே சென்று எடுத்து கொள்ள
கண்ண பிரான் அவன் கற்ற கல்வி இருந்தபடியே -என்று ப்ரீதர் ஆகிறார்

அன்றிக்கே –
ஆய்ச்சி தானும் கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ள என்றது –
பிறர் சொல்லுமா போலே தன் செயலை தானே சொன்னபடியாய்-அம்மம் உண்ண வர வேண்டும் என்று அழைத்தால் –
அருகே வந்து நின்று -வேணும் வேண்டா -என்ன அமைந்து இருக்க –
உண்டு வந்தேன் அம்மம் என்ற படியும் -ஓடி வந்து உள்ளே புகுந்த படியும் –
அந்த உக்தி வர்த்திகளைக் கொண்டு வித்தையாய் –
தாயாரான தானும் -முன் தான் செய்த தீம்புகளை மறந்து -எதிரே வந்து எடுத்துக் கொள்ளும்படியாக பண்ணின படியும் –
இவை எல்லாம் அனுசந்தித்து -கண்ண பிரான் கற்ற கல்வி தானே -என்று
ஒருவன் கற்ற கல்வி இருந்தபடியே-இப்பருவத்தில் இத்தனை விரகு எல்லாம் இவன் அறிவதே –
என்று தன்னில் ஸ்லாகித்து ப்ரீதையாகிறாள் என்று யோஜிக்கவுமாம்
இப்படி ஆனபோது பூர்வோத்தார்தங்கள் சேர்ந்து கிடக்கும் –

————————————-

ஐந்தாம் பாட்டு –
இப்படி க்ரஹத்தில் வந்து புகுந்து -இவளை உகப்பித்து நின்று -அவன் முன்பு போலே அசலகங்களிலே
போய் தீம்புகளை செய்ய -அதிலே ஒருத்தி வந்து தன் அகத்திலே அவன் செய்த தீம்புகளை சொல்லி
முறைபட்டு -உன் மகனை இங்கே அழைத்துக் கொள்ளாய் என்ற படியை சொல்லுகிறது –

பாலைக் கறந்து அடுப்பேற வைத்து பல் வளை யாள் என் மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9- 5-

பாலைக் கறந்து –
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களினால் உண்டான பாலை எல்லாம் கறந்து –
அடுப்பேற வைத்து –
அந்த பாலை எல்லாம் காய்ச்சுகைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றி வைத்து
பல் வளை யாள் என் மகள் இருப்ப
பல் வளைகளையும் உடையாளான என் மகள் இதுக்கு காவலாக இரா நிற்க
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று –
உன் அகத்துக்கு மேலையான அகத்திலே இது காய்ச்சுகைக்கு நெருப்பு எடுத்து கொள்வதாகப் போய்
இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
ஷண காலம் அங்கே அவர்களோடே வார்த்தை சொல்லி நின்றேன்
இதுவே அவகாசமாக
சாளக்ராமம் இத்யாதி –
ஸ்ரீ சாளக்ராமத்தில் நித்யவாசம் செய்கிற பூரணன்
அபூர்ணனைப் போலே அத்தனை பாத்ரங்களையும் மறித்து பருகி -தான் –
அல்லாதாரைப் போலே இடைய போந்து நில்லா நின்றான்
ஆலைக் கரும்பு இத்யாதி –
ஆடுகைக்கு பக்குவமான கரும்பு போலே இனிதாய் இருக்கிற மொழியையும் பூர்த்தியையும் உடையவளே
உன் மகனைக் கூவாய் –
உன் பிள்ளை யானவனை -அங்கு நின்று தீமை செய்யாதே உன் பக்கலிலே வரும்படி விரைந்து அழையாய்

—————————————————

ஆறாம் பாட்டு
அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -என்றவாறே தன் மகனை
இவள் அழைத்த படியை சொல்லுகிறது

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

போதரு -என்கிற இது போதர் என்று கிடக்கிறது
போதர் கண்டாய் இங்கே –
அங்கே நின்று தீம்பு செய்யாதே இங்கே போரு கிடாய் –
போதர் என்ற இது போதரு என்றபடி
போதர் கண்டாய்
இவள் கடுக வருகைக்காக மீளவும் ஒருக்கால் சொல்லுகிறாள் –
இப்படி இவள் அழைக்கச் செய்தே -அவன் வர மாட்டேன் என்ன –
போதரேன் என்னாதே போதர் கண்டாய் –
வாரேன் என்னாதே வா கிடாய் என்கிறாள்
என் செய்யத்தான் நீ இப்படி நிர்பந்தித்து அழைக்கிறது என்ன –

ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –
அசலகத்தானவர்கள் உன் விஷயமாக வாசாமகோசரமான தோஷங்களை தங்களிலே சொல்லி –
அவ்வளவும் அன்றிக்கே –
என் பக்கலிலே வந்து என் செவியால் கேட்கவும் வாக்கால் சொல்லவும் ஒண்ணாதவற்றை
சொல்ல நான் கேட்டு இருக்க மாட்டேன்

கோதுகுலமுடைய குட்டனே ஒ
எல்லாரும் கொண்டாடும்படி சீரை யுடைய பிள்ளாய்
இப்படி இருந்துள்ள நீ எல்லாரும் பழிக்கும்படி ஆவதே என்று விஷண்ணையாய் ஒ என்கிறாள்-
குன்று எடுத்தாய் –
கோக்களையும் கோப குலத்தையும் கோவர்த்தன கிரியையும் எடுத்து ரஷித்தவனே
குடமாடு கூத்தா –
கோ ச்ம்ரத்தியால் வந்த ஐஸ்வர்ய செருக்குக்கு போக்கு வீடாக
குடக்கூத்து ஆடினவனே-குடம் எடுத்து ஆடின கூத்தை உடையவன் -என்றபடி –
இவ்விரன்டாலும் இக்குலத்துக்கு ரஷகனாய் -இக்குலத்தில் பிறப்பால் வந்த
ஐஸ்வர்யமே உனக்கு ஐஸ்வர்யம் என்று நினைத்து இருக்குமவன் அன்றோ
நீ இதுக்கு ஈடாக வர்த்திக்க வேணும் காண் – என்கை –

வேதப் பொருளே –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே சகல வேத பிரதிபாத்யன் ஆனவனே
என் வேம்கடவா –
அப்படி சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே -கண்ணாலே காணலாம்படி
வானோர்க்கும் வைப்பான திரு மலையிலே இரண்டு விபூதியில் உள்ளாரையும்
ஒரு துறையிலே அனுபவித்து கொண்டு என்னுடையவன் என்னும்படி நிற்கிறவனே
வித்தகனே
இப்படி நிற்கையாலே விஸ்மயநீயன் ஆனவனே
இங்கே போதராயே –
உன்னுடைய குணஹானி சொல்லுவார் வர்த்திக்கிற இடத்தில் நின்றும்
உன் குணமே பேசா நிற்கும் நான் இருக்கிற இடத்தில் வாராய் –

————————————–

ஏழாம் பாட்டு –
வித்தகனே இங்கே போதராயே -என்று இவள் அழைத்த இடத்தில் வாராமல் –
வேறு ஓர் அகத்தில் போய் புக்கு -அவர்கள் வ்ரதார்தமாக சமைத்து வைத்த
பதார்த்தங்களை அடைய ஜீவிக்கையாலே -ஒருத்தி வந்து அத்தைச் சொல்லி
முறைப்பட்டு -உன் மகனை அழைத்து கொள்ளாய் என்ற படியைச் சொல்லுகிறது-

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்கார நறு நெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே – 2-9 7-

செந்நெல் இத்யாதி –
உர நிலத்திலே -ஸார ஷேத்ரம் -பழுதற விளைந்து சிவந்து சுத்தமான செந்நெல் அரிசியும் –
அப்படிப்பட்ட நிலத்தில் விளைந்த சிறு பயறு நெரித்து உண்டாக்கின பருப்பும் –
பாக தோஷம் வாராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச் செய்த கறுப்புக் கட்டியும் –
நல்ல பசுவின் பாலாய் -நால் ஒன்றாம்படி காய்ச்சித் தோய்த்து செவ்வி குன்றாமல் கடைந்து உருக்கின நெய்யும்
நல்ல பசுக்களில் கறந்த பாலும் ஆகிற இவற்றினாலே –

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் –
பன்னிரண்டு திருவோணம் வ்ரதாங்கமாக பாயாசபூபங்கள் சமைத்தேன் –
பண்டு இப்பிள்ளை பரிசு அறிவன்
முன்பும் இப்பிள்ளை பிரகாரம் அறிவன்
அதாவது -திருவோண வ்ரதத்துக்கு என்று ஆரம்பித்து -இவை சமைத்த போதே –
இவனும் தீம்பிலே ஆரம்பித்து -தேவார்ச்சனம் செய்வதற்கு முன்பே இவற்றை வாரி ஜீவித்து விடும் -என்கை –
இப்போதும் அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –
இத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி –
அதிலும் த்ருப்தி பிரவ்பாமல் -இன்னமும் வேண்டி இருப்பன் நான் என்று சொல்லி –
போந்து நின்றான் –
அந்ய பரரைப் போலே அங்கு நின்றும் விடப் போந்து நில்லா நின்றான் –

உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –
யசோதை பிராட்டீ-அங்கு நின்று தீமை செய்யாமல் -உன்னுடைய பிள்ளையை
உன் பக்கலிலே அழைத்துக் கொள்ளாய் –
இவையும் சிலவே –
பிள்ளை பெற்றார்க்கு பிள்ளை தீம்பு செய்யாமல் பேணி வளர்க்க வேண்டாவோ –
இவையும் சில பிள்ளை வளர்க்கையோ –

—————————————–

எட்டாம் பாட்டு –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –என்றவாறே
தன் மகனை அவள் அழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- – –

கேசவனே இங்கே போதராயே –
பிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை
அழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்
இப்படி இவள் அழைத்த இடத்தில் –
நான் இப்போது வர மாட்டேன் -என்ன –

கில்லேன் என்னாது இங்கே போதராயே –
மாட்டேன் என்னாதே இங்கே வாராய் -என்கிறாள்
நான் இங்கு சற்று போது இருந்து விளையாடி வருகிறேன் -என்ன –

நேசம் இத்யாதி –
விளையாடும் போதைக்கு உனக்கு வேறு இடம் இல்லையோ –
உன் பக்கல் சிநேகம் இல்லாதார் அகத்தில் இருந்து நீ விளையாடாதே இங்கே வாராய்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும் –
இவ்வளவேயோ -இடைச்சிகளுக்கு அடிச்சிகளாய் போருகிறவர்களும்
இடையருக்கு அடியாராய் போருகிறவர்களும்
உனக்கு சொல்லுகிற தூஷணங்களுக்கு ஓர் அவதி இல்லை காண் –
அவர்கள் நின்ற இடத்தில் நில்லாதே போராய் –
இப்படி சொன்ன இடத்திலும் அவன் வாராமையாலே

தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்- என்று இரக்கிறாள்
பெற்ற தாய் வசனம் கொள்ளுகை பிள்ளைகளுக்கு தர்மம் காண்
நீ தான் பிறந்த போதே -மாதா வசன பரிபாலனம் பண்ணினவன் அன்றோ –
சதுர்புஜ ரூபோப சமஹரனத்தை-திரு உள்ளம் பற்றி அருளி செய்கிறார் –
தாமோதரா –
கயிற்றை விட்டு வயிற்றிலே கட்டலாம்படி எனக்கு தான் முன்பு பவ்யனாய் இருந்தவனும் அன்றோ –
இங்கே போதராயே –
ஆன பின்பு என் சொல்லை மாறாதே-திரச்கரியாமல்- இங்கே வாராய் –

————————————–

ஒன்பதாம் பாட்டு –
தாமோதரா இங்கே வாராய்-என்று அழைத்த இடத்திலும் வாராதே -வேறே ஒரு க்ரஹத்தில்
போய் புக்கு -அவர்கள் சமைத்து வைத்த -அபூபாதிகளை அடைய வாரி ஜீவிக்கை முதலான
தீம்புகளை செய்ய -அவ்வகத்துக்கு கடவள் ஆனவள் வந்து முறைப்பட்டு
உன் பிள்ளையை இங்கே அழைத்து கொள்வாய் -என்றபடியை சொல்கிறது –

கன்னல் இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளில் உண்டை கலத்திலிட்டு
என்னகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்தி போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே -2 9-9 – –

பெறுத்தி -நான் பெறும்படி பண்ணி -இது வ்யதிரேக உக்தி -அதாவது அவற்றில் எனக்கு
ஒன்றும் சேஷியாதபடி தானே களவு கண்டான் -என்கை

கன்னல் -கருப்புக்கட்டி -இது மேல் சொல்லுகிறவை எல்லாவற்றிலும் அன்வயித்து கிடக்கிறது
கருப்பு வட்டோடு சமைத்தவை -வட்டிலும் காட்டிலும் ரசிக்கும் இறே
இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளிளுண்டை-
இலட்டுகம் ஆவது -ஓர் பூப விசேஷம்
அத்தோடே சீடையும் கார் எள்ளோடு வாரின எள்ளுண்டையும்
கலத்திலிட்டு –
அவற்றுக்கு அனுரூபமான பாத்ரங்களிலே இட்டு
என்னகம் என்று நான் வைத்துப் போந்தேன் –
என்னகம் அன்றோ இங்கு புகுவார் இல்லையே என்று வைத்து நான் புறம் போந்தேன்

இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் –
நான் போந்ததே அவகாசமாக இவன் சென்று புக்கு அவற்றை நான் பெறும்படி பண்ணிப் போந்தான்
என்று வ்யதிரேகமாக சொல்லுகிறாள்
அதாவது
அவற்றில் எனக்கு ஒன்றும் லபியாதபடி தானே ஜீவித்து போந்தான் என்கை –

பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி –
அது போராமல் மீண்டும் அகத்திலே புக்கு -உறியைப் பார்த்து
பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணெயும் உண்டோ என்று ஆராயா நின்றான் –

உன் மகன் இத்யாதி –
யசோதை பிராட்டீ -உன்னுடைய பிள்ளை யானவனை அங்கு நின்றும் தீமை செய்யாதே உன் அருகே
அழைத்துக் கொள்ளாய்
இவையும் சிலவே –
இப்படி இவனை தீம்பிலே கை வளர விட்டு இருக்கிற இவையும் ஒரு பிள்ளை வளர்க்கையோ –
அன்றிக்கே –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் என்று
குண பூர்த்தியை உடைய யசோதாய் -அவனும் உன்னைப் போலே குண பூர்த்தி
உடையனாம்படி உன் அருகே அழைத்து கொள்ளாய் என்றவாறே
என்னுடைய குண பூர்த்தியும் அவனுடைய தோஷங்களும் சொல்லிக் கதறுகையோ உங்களுக்கு உள்ளது –
சிறு பிள்ளைகள் படலை திறந்து -திறந்த -குரம்பைகளிலே புக்கு -கண்டவற்றை
பொறுக்கி வாயிலே இடக் கடவது அன்றோ -உங்கள் பிள்ளைகள் தானோ உங்களுக்கு
வச வர்த்திகளாய் திரிகிறன என்று இவள் இவர்களை வெறுத்து விமுகையாக –
அவள் செய்தவற்றுக்கு மேலே இவையும் சிலவே என்று இவள் இன்னாப்பாலே சொல்லுகிறாள் ஆகவுமாம்-

————————————–

பத்தாம் பாட்டு –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் -என்று
ஒருத்தி சொல்லி வாய் மாறுவதற்கு முன்னே வேறு ஒருத்தி வந்து
தன்னுடைய க்ரஹத்தில் இவன் செய்த தீமைகளை முறைப்பட்ட படியை சொல்லுகிறது –

சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிகின்றானே -2 9-10 – –

அரசிப்படுதி -கோபியா நின்றாய்
சூழல் உடையன் -பற்பல வஞ்சக செயல்களை உடையனாய் இரா நின்றான்
சொல்லிலரசிப் படுதி நங்காய் –
முன்பே ஒருத்தி சொன்னதுக்கு மேலே -புண்ணின் மேல் புண்ணாக -இவளும் ஒருத்தி வந்து –
தன் மகன் குறைகளை சொல்லப் புக்கவாறே -இதுவும் ஒரு சிலுகோ-என்று தாயான யசோதை பிராட்டி
குபிதையாக -நங்காய் -உன் பிள்ளை செய்த வற்றை சொல்லில் நீ கோபியா நின்றாய் –

சூழல் உடையன் உன் பிள்ளை தானே –
உன் பிள்ளையானவன் தானே -துஸ்ஸஹமாய் உனக்கு வந்து சொல்லி அல்லது நிற்க
ஒண்ணாத படியான சூழல்களை உடையனாய் இரா நின்றான் –
சூழல் ஆவது -சூழ்ச்சி -அதாவது நானாவான கரித்ரிம வகைகள்
அவற்றில் இவனுக்கு இல்லாதது இல்லை காண் என்ன –
இப்படி சொல்லுகைக்கு அவன் இப்போது துச்சகமாய் செய்தது தான் ஏது-அத்தை சொல் என்ன –
சொல்கிறாள் மேல் –

இல்லம் புகுந்து என் மகளைக் கூவி –
என் அகத்திலே புகுந்து -என் மகளைப் பேரைச் சொல்லி அழைத்து
கையில் வளையை கழற்றிக் கொண்டு –
அவள் கையில் அடையாள வளையை கழற்றிக் கொண்டு போய் –
கொல்லை இத்யாதி –
கொல்லையில் நின்றும் கொடு வந்து -அங்கே நாவற் பழம் விற்கிறாள் ஒருத்திக்கு அவ் வளையைக் கொடுத்து

நல்லன நாவற் பழங்கள் கொண்டு –
தனக்கேற அழகிதான நாவற் பழம் கொண்டு -போரும் போராது என்று சொல்லுகிற அளவில் –
நான் கண்டு -இவ்வளை உனக்கு வந்தபடி என் -என்று அவளைக் கேட்க –
அவள்-இவன் தந்தான் -என்ன –
நீயோ இவளுக்கு வளை கழற்றி கொண்டு கொடுத்தாய் -என்ன

நான் அல்லன் என்று சிரிக்கின்றானே –
நான் அல்லேன் காண் -என் கையில் வளை கண்டாயோ -நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ –
உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறதைக் கேட்டாயோ -வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ
கண்டாயாகில் உன் வளையை அங்கே பறித்து கொள்ளா விட்டது என் -என்றாப் போலே
எனக்கு மறு நாக்கு எடுக்க இடம் இல்லாதபடி சில வார்த்தைகளைச் சொல்லி நின்று சிரியா நின்றான்
இதில் காட்டில் உண்டோ துஸ்ஸகமான தீம்பு -என்கை –

—————————————————-

நிகமத்தில் இத்திரு மொழி கற்றார் நமக்கு ப்ராப்யர் ஆவார் என்கிறார் –

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 11- –

வண்டு இத்யாதி
வண்டுகள் ஆனவை மது பானத்தால் களித்து பாடுகிற கோஷத்தை உடைத்தான பொழில்களாலும்
பொழில்களுக்கு தாரகமாக பெருகி வாரா நின்றுள்ள புனலை உடைத்தான காவிரியாலும் சூழப்பட்டு
திரு மதிள்களும் – திருக் கோபுரங்களும் -திரு வீதிகளும் -மாட மாளிகைகளுமான -இவற்றோட சேர்த்தியால் வந்த
அழகை உடைத்தாய் இருந்துள்ள -ஸ்ரீ திருவரங்கப் பெரு நகரிலே நித்யவாசம் பண்ணும் வைபவத்தை உடையனானவன்
முன்பு -விபவ அவதாரத்திலே -செய்த லீலா சேஷ்டிதங்கள் எல்லாவற்றையும்

பட்டர் பிரான் இத்யாதி –
சர்வ வ்யாபகனான விஷ்ணுவை மனசிலே உடையராய் -ப்ராஹ்மன உத்தமரான
ஸ்ரீ பெரியாழ்வார் பாடின பாடலான இவற்றைக் கொண்டு
பாடிக் குனிக்க வல்லார் –
ப்ரீதி ப்ரேரிதராய் பாடி -உடம்பு இருந்த இடத்திலே இராதே -விகர்தராய் ஆட வல்லவர்களாய்
கோவிந்தன் இத்யாதி –
இந்த சேஷ்டிதங்கள் எல்லாம் செய்த கோவிந்தனுக்கே அடியார்களாய்–தங்களுடைய சந்நிதி விசேஷத்தாலே
எட்டு திக்கிலும் உண்டான அந்தகாரம் போம்படி பிரகாசராய் கொண்டு -நிற்கும் அவர்களுடைய
இணை அடி என் தலை மேலனவே
சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகள் ஆனவை என் தலை மேலே சர்வ காலமும் வர்த்திக்கும் அவைகள் என்கிறார் –

இத்தால்
ஓத வல்ல பிராக்கள் நமை ஆளுடையார்கள் பண்டே -என்னுமா போலே
இத்தை அப்யசித்தவர்கள் உடைய வைபவத்தையும்-அவர்கள் பக்கல்
தமக்கு உண்டான கௌரவ பிரதிபத்தியும் அருளி செய்தார் ஆய்த்து-

—————————————————-

எங்கானும் -பிரவேசம் –

சப்பாணி கொட்டி விளையாடும் பருவத்தை அனுபவித்தார் கீழ் –
அதுக்கு அனந்தரமாக வெண்ணெயும் தயிரையும் களவு கண்டு
அமுது செய்த படியை -பரிவுடைய யசோதை பிராட்டி பாசுரத்தாலே
அனுபவிக்க வென்று –
வார்த்தை மறந்து –
தாம் அதிலே ஈடுபட்டு
அவனுடைய –
சர்வேஸ்வரத்தையும்-
பராபிபவன சாமர்த்யத்தையும்
வேண்டப்பாட்டையும் –
சர்வ பிரகாரத்தால் உண்டான உத்கர்ஷத்தையும் –
அடைய அனுபவித்து –
அப்படிப்பட்ட மேன்மை உடையவன் -இன்று
இங்கனே -ஓர் அபலையாலே
கட்டுண்டு –
அடியுண்டு –
நோவு படுவதே -என்று
இவன் சௌலப்யத்தை அனுசந்தித்து –
இனியராகிறார் –

———————————————-

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1-

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே-
எங்கேனும் ஓர் இடத்திலே தான்
இத்தோடு ஒத்து இருப்பதோர் ஆச்சர்யம் உண்டோ –

இப்படி பட்ட ஆச்சர்யம் தான் என் என்னில் –
நர நாரணனாய் யுலகத் தற நூல் சிங்காமை விரித்தவன் –
நர நாராயண ரூபியாய்க் கொண்டு லோகத்திலே அற நூல் உண்டு –
ஹிதானுசாசனம் பண்ணப் போந்த வேதம் –
அது சிங்காதபடியாக-அது சங்குசிதம் ஆகாமே
விஸ்த்ருதமாம் படி பண்ணிணவனே –
உபதேசத்தாலும்
அனுஷ்டானத்தாலுமாக
விஸ்த்ருதமாம் படி பண்ணினான் –

எம்பெருமான் –
தான் ஹிதகாமனாய் இருக்கும் இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவனே –

அதுவன்றியும் –
அத்தை ஒழியவேயும் –

செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது-
சந்திர சூரியர்களும்
பூமியும்
திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும்
மலைகளும்
அக்னியும்
இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக
ஸ்லாக்கியமான மிடற்றை –
இவை புகும் அளவும் –

அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –
விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர்
இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு
அமுது செய்து
ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு
அடியுண்டு
ஒரு பிரதிகிரியை அற்றுப்
போக மாட்டாதே -இருக்கிறான் –
காரேழ் -திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே –

——————————————————–

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –10-6-2-

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
அத்விதீயமான மலையை மத்தாகக் கொண்டு –
வாசூகி யினுடைய உடலை அங்கே கடை கயறாகச் சுற்றி –
கோஷத்தை உடைத்தான் பெரும் கடலை கடைந்தான் –

நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் –
முன்பு நின்ற நிலையிலே நின்று
வில்லில் உண்டான உண்டைகளை நடத்தி
வலிய கூன் நிமிரும்படி செய்த சர்வேஸ்வரன் –

அதுவன்றியும் –
அதுக்கு மேலே –

முன் -நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி அன்றுண்டவன் காண்மின்-
அங்கே இங்கே சில பிறிகதிர் படாமே
அழகியதாக தன்னுள்ளே அடங்குகை யாகிற நிரவதிக சம்பத்தை உடைத்தாய்
மகரங்களை உடைத்தான கடல் ஏழும்
மலை ஏழும்
உலகு ஏழும்
இவை ஒன்றும் தப்பாத படி யாக ஆதரித்து
தன திரு வயிற்றிலே வைத்தவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –
அந்த பிரளய காலத்து
அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம்
இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு
அமுது செய்தான் –

—————————————————————-

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-3-

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்
உலப்பில் வலியராய் கொண்டு எழுந்த மதுகைடபரோடே
வைரம் விளைந்தது என்று எண்ணி

விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் –
விண்ணோர் விளைந்திட்டு பரவ –
மிக்க பலத்தை உடையராய்க் கொண்டு
பெரிய கிளற்றியோடே தோன்றின மதுகைடபர்களோடே
நினை நின்ற சாத்ரவ மானது விளைந்தது என்று
புத்தி பண்ணி -தேவர்கள் நடுங்கி வந்து
திருவடிகளில் தொழுது ஏத்த –
அவர்களுக்காக அந்த மதுகைடபர்கள்
ஆயுஸ்ஸை கழித்த சர்வேஸ்வரன் –

முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
சத்ரு பஷமானது முடியும்படி வளைந்த வில்லை
கையிலே உடைய பெரிய மிடுக்கன்
வன்மையையும் ஒளியையும் உடைத்தான எயிற்றை உடையனாய்
மலை போலே இருக்கிற வடிவை உடையனான
ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை
வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர்
பெரு மிடுக்கனான ஹிரண்யனை நிரசித்தவன் கிடீர் –

அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான் –

————————————————————————

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-4-

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் –
தேவர்கள் அசுரர்களால் நெருக்குண்டு
போரத் தளர்ந்து வந்து
நீ எமக்கு ரஷகனாக வேணும் -என்ன
ரஷகனாய் –

முரணாயவனை உகிரால் பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் –
பெரு மிடுக்கனான ஹிரண்யனை
திரு உகிராலே பிளந்து
தேவர்களுக்கு கிருபை பண்ணி –
அவர்கள் விரோதி போக்கப் பெற்றோம் இறே என்று உகந்த
சர்வேஸ்வரன் –

அதுக்கு நிபந்தனம் என் என்னில் –
திருமால்
ஸ்ரீ யபதியாகை –

விரி நீருலகை –
கடல் சூழ்ந்த பூமியை –

வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை –
மேன் மேல் என்று வளரா நின்றுள்ள
நிரவதிக சம்பத்தை உடைய
பெரு மிடுக்கனான மகா பலியை –

மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய் –
பூமியை கொள்ளுகைக்காக
தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு
க்ருத்ரிமித்து லோகத்தை அளந்தவன் கிடீர் –
மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் –

அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
ஓர் அபலை இட்ட சிறை
விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான் –

————————————————————

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் –
வாமன வேஷத்தோடு வந்து தோற்றி
பரப்புடைத்தான ஆகாசம் எங்கும்
இடம் அடையும் படி வளர்ந்தான் –

அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம் –
தன் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்கும் சேஷ பூதருக்கு
அனுபவித்தால் அல்லது நசியாத பாபங்கள் எல்லாம்

தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன் –
அவர்களை ஸ்பர்சியாத படி யாக மநோ ரதித்து
விரோதியைப் போக்கிக் கொடுத்து
அவ்வளவே அன்றிக்கே
நித்ய சூரிகள் அளவும் செல்லும்படியாக வைத்த உபகாரகன் –

வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று
யமனுடையார் நம்முடையாரை ஆராயக் கடவர் அல்லர் –
அதுக்கு நிபந்தனம் என் என்னில்
வேண்டாமை
அல்லாதாரை இவன் ஆராயக் கடவன்
என்று இட்ட நாமே இத்தைக் கழித்துக் கொடுத்தோம் -என்று
இப்படியாலே

உலகேழ் ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே
நடத்தினவன் கிடீர்
இன்று
தன் ஆஞ்ஞை அழிந்து
ஓர் அபலை கையிலே கட்டுண்டு
அடி யுண்கிறான் –

——————————————————————-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் –
சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப் பட்ட
ஐஹிக சுகமாகிற பிரயோஜனங்களை
வாசனையோடு கழித்து
திருவடிகளிலே விழுந்து ஏத்த வல்லவர்களுக்கு
கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்து முடிய ஒண்ணாத படியான
பாபங்களை யடையக்

ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் –
கழித்து —
அவர்கள் தாங்களே -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
என்னப் பண்ண வல்ல சர்வேஸ்வரன் –

அதுக்கு நிபந்தனம் –
திருமால் –
ஸ்ரீ யபதியாகையாலே –

அதுவன்றியும் முன்=

தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால் -அழித்திட்டவன் காண்மின்-
பெரிய ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு
மிக்க கிளர்த்தியோடே
நான் எதிரி என்று பொருவதாக முன்னே வந்து நின்ற மன்னன் உண்டு –
சஹஸ்ர பாஹ் வர்ஜுனன் –
அவனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும்
அழகுக்குப் பிடித்த மழுவாலே துணித்துப் பொகட்டவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –
இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான் –

———————————————————

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே—10-6-7-

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் -துடைத்திட்ட வரைத்-
முன்பு இது அடங்கலும் பிரளயம் கொண்டு
உப சம்ஹ்ருதயமாய்க் கிடக்க
இவற்றுக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
சிருஷ்டித்து
அவை வழி படுகைக்கு உடலாக
அது பலித்து
திருவடிகளிலே விழுந்து யேத்துமவர்கள் உடைய
பாபம் என்று பேர் பெற்றவை அடையப் போக்கி –

தனக்காக வென்னத் –
அவர்களை அடையத் தான் இட்ட வழக்காக என்ன –

தெளியா வரக்கர் திறல் போயவிய –
ஈஸ்வர அபிப்ராயம் இது வாகாதே என்று தெளிய மாட்டாதே
துஷ்ப்ரக்ருதிகளான ராஷசர் மிடுக்கு அழியும் படியாக-

மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை –
நெருக்கிக் கொண்டு தோற்றின
ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு
மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி
கடலை அணை செய்தவன் கிடீர் –

அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர்
இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –

——————————————

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
நெறித்து
மிருதுவான
மயிர் முடியை உடையளாய்
விலஷணமான ஆபரணங்களாலே அலங்க்ருதையான
பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்
பிரசித்தியை உடைத்தாய்
மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –
இவ்வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே
உடையனாய் -என்கிறது
அல் -என்று இருளாய் -இருண்ட வில் என்னவுமாம்

இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு செறித்திட்டு-
இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
அந்த வில்லை முறித்து
அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து
யுவ ராஜாவாய்
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி

லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின்-
இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக
ராவணன் உடைய முடியோடு
தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான் –

——————————————

சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது
திரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-9-

சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி –
சுருண்டு
சிவந்த நிறத்தை உடைத்தாய் –
கேழ் -என்று நிறம்
உளை மயிரை உடைத்தாய்க் கொண்டு
களித்து வருகிற கேசி முடியும்படியாக
அத்தை விடாதே சென்று கிட்டி

எய்தாது-திரிந்திட்டு –
ஒரு காலும் வந்து கிட்டாதே அங்கே இங்கே திரிந்து –

இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் –
அவகாசம் கொடாதே
அபவ்யமாய் திரிகிற அதனுடைய வாயை
இரு பிளவாம்படி பண்ணின சர்வேஸ்வரன் –

முன நாள்-
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு-அரிந்திட்டவன் காண்மின்-
கட்டுடைத்தான வில்லாலே
மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக
மராமரங்கள் ஏழையும் எய்து –
மலை போலே இருக்கிற வடிவை உடையளாய் இருக்கச் செய்தேயும்
பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி
வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே
வைரூப்யத்தை விளைத்து விட்டது –
அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே –

—————————————————————————–

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே —10-6-10-

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் –
களவோடு கண்டு பிடித்து கட்டினவாறே
பலரும் பார்க்க வருவார்களே
அவர்கள் முகத்தை பார்த்து
லஜ்ஜிக்குமது ஏக தேசமும் இல்லை –

வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய் –
இது ஒன்றையும் ஆயிற்று எப்போதும் நினைத்து இருப்பது –

அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல் –
உறிகளிலே இடைச்சிகள் சேமித்து வைத்த
பால் தயிர் நெய் வெண்ணெய் –
இவற்றை அமுது செய்து
அவர்கள் உரலோடு சேர்த்துக் கட்ட
கட்டுண்டவன் மேலே சொல்லிற்று –

நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார் –
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –
ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –
நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து
ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார் –

———————————————————

மானம் -பிரவேசம் –

வெண்ணெய் களவு காணும் பருவத்தைத் தப்பி –
வெண்ணெயும் பெண்களையும் களவு காணும் பருவமாய் இருக்கிற படியை அனுசந்தித்து
யசோதைப் பிராட்டி யானவள் விளைவது அறியாமையாலே
இது எவ்வளவாய் புகுகிறதோ -என்று அஞ்சி இருக்க
இவனாலே நோவு பட்டு
ஊரில் உள்ளார் அடங்கலும்
அது போயிற்று இது போயிற்று -என்று இங்கனே முறைப்பட
அவளும் -அவர்களுமாக
பரிமாறின அப் பெரிய குழாங்களை
தாம் அனுபவிக்கிறார் –

———————————————————

ஒருத்தியைப் பார்த்து வார்த்தை சொல்கிறார் இதில் –

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை ஊனமுடையன செய்யப் பெறாய் என்று -இரப்பன் –
எங்கேனும் ஓர் இடத்தில் -ஸூரு ஸூரு -என்னக் கேட்டால்
பின்னைக் கொண்டு ஜீவியார்கள் மானத்தாலே –
ஆகையால் பிறர் உடைய பெண்களை சம்போக சிஹ்னங்களை விளைத்து
விடப் பெறாய் என்று -இங்கனே இரப்பன்

உரப்பகில்லேன் -நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன்
பொடியில் தீம்பிலே இரட்டிக்குமே –
காலைப் பிடித்து இரப்பன் –
பொடிகிறிலேன்-
நான் சொல்லிற்று செய்தல்
தமப்பனார் சொல்லிற்றைச் செய்தல்
செய்யாத பருவம் இறே உன் பருவம் –
நானும் சொல்லிற்றிலேன்
தமப்பனாரும் அருளிச் செய்திலர் –

நங்கைகாள் நான் என் செய்கேன் –
நீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே –
நான் இனிச் செய்வது என் –

தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –
ஸூசக மாத்ரமே அன்றிக்கே
காரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம் –

——————————————————————————————–

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து
ஹித சிந்தனை பண்ணுவாரைப் போலே –
கடைந்த –
இவை அடைய பாழிலே போக்க ஒண்ணாதே –
போகா நிற்கச் செய்தே நடு வழியிலே கண்டு
இது எவ்வளவாய் விளையைக் கடவதோ -என்று அஞ்சிப் போனேன் –

மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை –
ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய
செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய
இது செய்யக் கடவார் இல்லை –

மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த-பாலும் பதின் குடம் கண்டிலேன்-
வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து
அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –
கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே
கடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –

பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –
கோ தனர் ஆகையாலே
உபஜீவ்யம் கவ்யமாய் இருக்கும் இறே
அத்தை இழந்தால் பின்னைப் பொறுக்க மாட்டார்கள் இறே –

———————————————————-

தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ —10-7-3-

தெள்ளியவாய்ச் சிறியான் –
கண்ணுக்கு இருக்கிறபடியும்
செயல் இருக்கிற படியும் காண் –

நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு –
மேலே தடாத் தன்னிலே வெள்ளி மலை போலே
சேமித்து வைத்த வெண்ணெயை வாரி அமுது செய்து

கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு –
இவனை இங்கனே இது சொல்லும்படி -என்னும்படி யாகத்தான்
அறியாதாரைப் போலே கிடந்தது உறங்கா நின்றான் –
நீங்கள் எல்லாம் இத்தை வந்து பாருங்கோள்-
இவன் மறைக்கப் பார்த்தாலும் பிரயோஜனம் இல்லை –
கை எல்லாம் நெய்யாய் இருக்க –

பிள்ளை பரமன்று –
இவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை –
வெண்ணெயே அன்றிக்கே –

இவ் வேழ் உலகும் கொள்ளும் –
இவ் வேழ் உலகும் கொள்ளும் –

இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது –
அவன் இப்பது அமுது செய்தான் ஆகில்
நீ இப்பாடு படுகிறது என் -என்ன –
பேதையேன் என் செய்கேனோ –
அவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என்
என்று அன்றோ அஞ்சுகிறது நான் –

——————————————————-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்ற –
அஞ்சனம் பற்றின வேல் போலே யாயிற்று
கண்ணில் கருமையும் புகரும் இருக்கிறபடி –
அவ்வளவு அல்லாத ஆத்ம குணத்தை உடையவள் பெற்ற –

வளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான் –
சங்கு வர்ணனாய் இறே நம்பி மூத்த பிரான் இருப்பது –
தன் தமையன் தீம்பாலே குறையற்றான் ஒருவன் இறே –
அவன் முற்காலத்திலே இங்கே விளையாடித் திரியும் போது
நாங்கள் இப்பாடு பட்டு அறியோம் –

பொய்ந்நம்பி –
பொய்யால் குறைவற்று இருக்கிறவன் –

புள்ளுவன் –
கண்ணி வைப்பாரைப் போலே
கடைகிற போதே துடங்கி
இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று -கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ராம கிருஷ்ணர்கள்
-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –

கள்வம் பொதியறை –
களவிட்டு வைக்கைக்கு ஒரு கொள்கலம் –

போகின்றவா தவழ்ந்திட்டு –
இக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே
தவழா நிற்கும் –

இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை –
நிரபேஷனான இவன்
இவனாக
இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –

என் செய்கேன் என் செய்கேனோ –
இவர்கள் கீழே எங்கனே நான்
இவ்வூரில் குடி இருக்கும் படி –

—————————————————–

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5-

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் –
சொன்ன படியே தலைக் கட்டிற்று-
இவர்கள் தமப்பனார் புகுந்திலர் –
நானும் இங்கே இருந்திலேன் –

தோழிமார் ஆரும் இல்லை –
கூட்டிக் கொடுக்கைக்கு தோழி மாரும் இல்லை –

சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி –
இவன் தான் பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம்
பார்த்துக் கொடு திரியும் –

பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப்
அவர்களோடு சென்று கிட்டி
பந்தைப் பறித்தும்
பரியட்டங்களைக் கிழித்தும் –

படிறன் படிறு செய்யும் —
பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –

நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –
பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –

————————————————————

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ—-10-7-6-

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் –
தாய்மாரும்
தாய்மாரோடு ஒரு கோவையாய் இருப்பாரும்
உகக்கும் பாசுரம் –
மண் மகள் நாதனோ –
மா மலராள் நாயகனோ-என்று ஆயிற்று உகப்பது –
அன்றிக்கே –
ப்ரணய தாரையிலே அவர்களுக்கு தேசிகன் ஆனவன் கிடீர்
இவளைப் இப்படிப் படுத்தினான் -என்னவுமாம் –

அதுக்கு மேலே
நந்தன் பெற்ற மதலை-
பிறப்பால் உண்டான ஏற்றம்

அண்ணல்-
எல்லாரையும் எழுதிக் கொண்டு இருக்குமவன் –

இலைக் குழலூதி —

நஞ்சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை
ராத்ரியிலே வந்த பின்னை –

கண் மலர் சோர்ந்து -முலை வந்து விம்மிக்-
சம்போக அநந்தரம்

கமலச் செவ்வாய் வெளுப்ப
தாமரை போலே இருக்கிற அதரமானது
வெளுத்த -என்றபடி –

என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –
இவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன் –

—————————————————–

ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-

ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
தான் ஆயிரம் கண் உடையவன் ஆகையாலே
இதர விசஜாதியனாய்
தான் தேவ யோநியிலே பிறந்தவனாய்
அத்தாலே துர்மானியாய் இருக்கிறவனுக்கு
இடையவர் உத்சவமாகப் போத்தி

பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
நல்ல பாஜனங்களிலே சோற்றை எடுத்து
சகடத்தாலே கொடு வந்து தள்ள –

போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் -மாயன் –
அத்தை அடங்கலும்
கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் –

அதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –
அத்தை அடங்கலும் அமுது செய்தானாய்
அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று –

—————————————————–

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே—10-7-8-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
நின்ற நின்ற அவஸ்தைகள் தோறும் சேஷியாத படி பண்ணினான் ஆயிற்று –
தோய்த்து அட்டின தயிரையும் –
புத்துருக்கு நெய்யையும் –
நெய் வாங்குகைக்கு யோக்யமான பாலையையும் –
சேஷியாத படி அமுது செய்யும் என்று

ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் –
ஆய்ச்சியர் எல்லாரும் கூப்பிடச் செய்தேயும்

நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்-
நான் இதற்கு ஈடுபட்டு
இவனை ஆக்ரஹியாதே –

சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்-
பிரானே சோத்தம்-
இங்கனே செய்யல் ஆகாது காண்-என்றும் இரவா நிற்பன் –

என் செய்ய –
உன் மகனான பின்பு நிக்ரஹிக்க லாகாதோ -என்ன –
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே —–
இவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு
என்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன் –

——————————————

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல்
ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே —10-7-9-

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில் ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன் –
கனம் உடைமையும்
மிடுக்கும் உடைய இப்பிள்ளை
ஏழா மாசத்திலே குளிப்பாட்டி
செவ்வியை உடைய மாலையைச் சூட்டி
வளர்த்தி வைத்துப் போந்தேன்-
யமுனையிலே நீராட –

சேடன் திரு மறு மார்பன் கிடந்தது –
அத்யந்த சைசவத்தை உடையவன் –
இவன் செய்யும் செயல்கள் அடைய
சர்வேஸ்வரன் உடன் ஒக்கும் –

திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே –
திருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச்
சாடித்
துகளாக்கின பின்பு
இவனைப் பொடிய அஞ்சுவன் –

———————————————————-

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை
நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ —10-7-10-

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
பஞ்சு போலே மிருதுவான அடியை உடையராய் இருக்கிற
பிள்ளைகள் ஆயிர நாழி நெய்யை உண்கிற இடத்தில்
பாதியும் சேஷியாத படி யாயிற்று புஜித்தது-

கஞ்சன் கடியன் –
கம்சன் ஆனவன் சாலக் கொடியவன் –

கறவெட்டு நாளில் –
கற வென்று இறைக்குப் பெயர்
எட்டு நாளில் இறை இடையர் பால் இருக்கக்
கடவதாய் இருக்கும் இறே-

என்கை வலத்தாது மில்லை –
எனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –
அன்றிக்கே
என் கையில் பலமில்லை -என்னவுமாம் –

நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ –
என் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் –
நான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி –

————————————————–

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர் இடையர் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –10-7-11-

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை –
சொல்ல ஒண்ணாத படி யான தீம்புகளை விளைக்கக் கடவதோ –
ஒரு குடியிலேபிறந்த பெண் பிள்ளைகளை செய்யும் தீம்பு –

பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து –
தாமரைப் பொய்கையிலே சென்று
ஒளிந்து இருந்து –

அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு –
அவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு –

அரவு ஏர் இடையர் இரப்ப-
அரவு போலே நுண்ணிய இடையை உடைய
ஸ்திரீகள் இரக்க-

மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –
வேணுமாகில் இங்கனே
ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள்-
என்று இருந்தாய் –

——————————-

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-12-

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு –
பயம் ஏக தேசம் கூட இல்லை -இப்பிள்ளைக்கு –

ஆண்மையும் சேவகமும் –
ஆண் பிள்ளைத் தனமும்
சேவகப்பாடுமே யாயிற்று -உள்ளது –

உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்-
உச்சி மோந்து வளர்த்து எடுத்தேனுக்கு
ஒன்றும் உரைத்திலன் தான்
இன்று போய் –

பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு –
திருவடிகளால் உண்டான ஸ்பர்சத்தாலே
தழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப்
பெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –

ஆயிர வாய் -நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
ஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய்
தான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி
வந்தாய் போலே இருந்தது –

—————————————————-

தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-

தம்பர மல்லன –
ஒரோ கார்யங்க ளிலே இழிவார் தம்தாமால் செய்து
தலைக் கட்டலாம் கார்யங்க ளிலே அன்றோ இழிவது –

வாண்மைகளைத் –
ஒரோ ஒன்றையே தலை காண ஒண்ணாதபடி இருக்கை –

தனியே நின்று –
நம்பி மூத்த பிரானோடே கூட நின்று செய்தான் ஆகில்
கண் எச்சில் வாராத படி
அவன் தலையிலே ஏறிடலாம் –

தாம் செய்வரோ –
தம்தாமையும் பார்க்க வேண்டாவோ –

எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் –
உன்னைப் பெற்ற இதுவே அமையாதோ
வயிறு எரிச்சலுக்கு வேண்டுவது –
நீ ஒரு செயலைச் செய்ய வேணுமோ –

அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை –
உபரிதன லோகங்கள் அதிரும்படியான
த்வனியை உடைத்தாய்
அகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி
நெருப்புப் போலே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற –

வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
வ்ருஷபங்களோடு கூட
நித்ய வசந்தமான சோலைக்குள்ளே
பிணங்கி வந்தாய் போலே இருந்தது -என்கிறாள் –

————————————————-

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14-

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச –
ஆகர்ஷகமான நடையை உடையளாய்
ஆத்ம குணோபேதையாய் இருக்கிற –
யசோதைப் பிராட்டி யானவள் வயிற்றிலே அடித்துக் கொள்ள –

அருவரை போல் மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை –
மலை கால் கொண்டு நடந்தால் போலேயாய்
கண்டார் கண்கள் பிணிப்படும் படி இருக்கிற ஆனையை
முடித்து பொகட்ட மிடுக்கனை –

மா கடல் சூழ் கன்னி நன் மா மதில் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி –
கடலை அகழாக உடைத்தாய்
அரணாகப் போரும்படியான மதிளை உடைத்தான
திருமங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் –

இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –
இத்திரு மொழியை வல்லவர்களுக்கு யசோதைப் பிராட்டியார் உடைய
அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார்-சப்பாணி பதிகம் -1-7–/ ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் — சப்பாணி பதிகம்-10-5–

June 30, 2020

அவதாரிகை-
கீழில் திருமொழி யிலே
சப்பாணி கொட்டுகை யாகிற அவனுடைய பால சேஷ்டிதத்தை -தத் காலத்திலேயே யசோதை பிராட்டி
அனுபவித்தாப் போலே -பிற் பாடராய் இருக்கிற தாமும் -அதிலே ஆதார அதிசயத்தாலே –
அவளுடைய பாவ யுக்தராய் கொண்டு -பேசி அனுபவித்தாராய் நின்றார் –
அவன் தளர் நடை நடக்கை ஆகிற சேஷ்டிதத்தை தத் காலம் போலே -அனுபவித்து இனியர் ஆகிறார் இதில் –

துடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும் மதப்புனல் சோர வாரணம் பைய நின்ற்றூர்வது போலே
உடன் கூடி கிண் கிணி ஆரவாரிப்ப வுடை மணி பறை கறங்க
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ -1 7-1 –

தளர் நடை ஆவது -திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் அன்றிக்கே –
நடை கற்கும் பருவம் ஆகையாலே தவறி தவறி நடக்கும் நடைமதாதி அதிசயத்தாலே –

கம்பத்தை முறித்து -காலில் துடரை இழுத்து கொண்டு -நடக்கையாலே –
காலில் கிடந்த சங்கிலித் துடரானது -சலார் பிலார் என்று சப்திக்க –
துடர் என்று விலங்கு-ஆனை விலங்கு சங்கிலியாய் இறே இருப்பது -சலார் பிலார் என்கிறது சப்த அநு காரம் –
தூங்கு இத்யாதி -முதுகில் கட்டின பொன் கயிற்றால் தூங்குகிற மணியானது த்வநிக்க-
பொன் மணி -என்கிற இடத்தில் -பொன் என்கிற இத்தால் -பொற் கயிற்றை சொல்லுகிறது –
படு இத்யாதி -உண்டாக்கப் பட்ட மூன்று வகையான மத ஜலம் அருவி குதித்தால் போலே வடிய –
மும் மதப் புனலாவது -மதத்தாலே கபால த்வ்யமும் மேட்ர ஸ்தானமுமாகிற த்ரயத்தில் நின்று வடிகிற ஜலம்-

வாரணம் இத்யாதி -ஆனையானது அந்த மத பாரவச்யத்தாலே -அலசமாய் கொண்டு -மெள்ள நடக்குமா போலே –
உடன் இத்யாதி -சேவடிக் கிண் கிணி-என்றபடி -திருவடிகளில் சாத்தின சதங்கைகள் யானவை –
தன்னிலே கூடி சப்திக்க –
அன்றிக்கே –
திருவரையில் சாத்தின சதங்கை வடமானது -நழுவி விழுந்து -திருவடிகளோடு சேர்ந்து –
இழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள் தன்னிலே கூடி சப்திக்க என்னவுமாம் –

உடை இத்யாதி -திருவரையில் கட்டின மணியானது பறை போல் சப்திக்க –
தடம் தாள் இத்யாதி -பருவத்துக்கு ஈடாய் -விகாச யுக்தமாய் -பரஸ்பரதர்சமாய் -இருக்கிற திருவடிகளைக் கொண்டு –
சாரங்க பாணி -ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையிலே உடையவன் -இது ஈஸ்வர சிக்னங்களுக்கு எல்லாம்
உப லஷணம்-அவதரிக்கிற போதே ஈஸ்வர சிக்னங்கள் தோன்றும் படியாக இறே அவதரித்தது –

———————————

செக்கர் இடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பறை முளைப் போல்
நக்க செந்துவர்வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடம் உடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – 1-7 2-

செக்கர் வானத்து இடையிலே சாகாரத்திலே தோன்றும்படி உன்நேயமான பால சந்தார்ங்குரம் போலே –
ஸ்மிதம் செய்கையாலே -மிக சிவந்து இருந்துள்ள திரு அதரமாகிற உயர்ந்த நிலத்தின் மேலே
குளிர்ந்து வெளுத்து இருக்கிற திரு முத்தின் அங்குரத்தினுடைய தேஜசானது பிரகாசிக்க –
அக்கு வடம் உடுத்து -சங்கு மணி வடத்தை திருவரையிலே தரித்து
ஆமைத்தாலி பூண்ட -கூர்ம ஆகாரமான ஆபரணத்தை திருக் கழுத்திலே சாத்திக் கொண்டவனாய்
அனந்த சயனன் -அவதாரத்தின் உடைய மூலத்தை நினைத்து சொல்கிறது –
நாக பர்யங்க முத்சர்ஜ்ப ஹ்யாகத -என்னக் கடவது இறே
தகுதியான நீல ரத்னம் போன்ற திரு நிறத்தை உடையவன் -ஸ்ரீ வாசு தேவர் திருமகன் –
தளர் நடை நடவானோ –

—————————————

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசு இலையும் பீதகச் சிற்றாடையோடும்
மின்னில் பொலிந்ததோர் கார் முகில் போல கழுத்தினில் காறையோடும்
தன்னில் பொலிந்த இடுடீகேசன் தளர் நடை நடவானோ – 1-7 3-

மின்கொடியும் அத்தோடு சேர்ந்ததோர் அகளங்க சந்திர மண்டலமும் அத்தை சூழ்ந்த பரிவேஷமும் போலே –
திருவரையில் சாத்தின பொன் பின்னாலும் -அதிலே கோவைபட்டு பிரகாசிக்கிற வெள்ளி அரசிலைப் பணியும் –
இவற்றுக்கு மேலே சாத்தின பொன்னின் சிற்றாடையும் ஆகிற இவற்றோடும் –
மின்னாலே விளங்கப் பட்டதொரு -காள மேகம் போலே -திருக் கழுத்தில் -சாத்தின காறையோடும் –
இவ் ஒப்பனைகள் மிகை யாம்படி தன் அழகாலே சமர்தனாய் இருப்பனாய்-அவ் வழகாலே கண்டவர்கள்
உடைய இந்திரியங்களை தன் வசமாக கொள்ளுமவன் தளர் நடை நடவானோ –

——————————————

கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி கண கண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்க்குத் தன் திருவாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலை கண் மீதே தளர் நடை நடவானோ -1 7-4 –

கன்னல் இத்யாதி -கரும்பு சாறு குடம் இந்த பதங்கள் சேர்ந்து -கருப்பம் சாற்றுகுடம் -என்று கிடக்கிறது –
இல்லி திறந்தால் பொசிந்து புறப்படுமா போலே -திருப் பவளத்தில் ஜலம் ஆனது ஊறி வடிய –
கண கண என சிரித்து ப்ரீதனாய்க் கொண்டு –
கண கண என்றது -விட்டு சிரிக்கிற போதை சப்த அநு காரம் –

முன் இத்யாதி -முன்னே வந்து நின்று -தன்னுடைய அதராச்வாதத்தை தாரா நிற்கும் –
முத்தம் -அதரம்
என் இத்யாதி -எனக்கு பவ்யனாய் -காள மேகம் போன்ற வடிவை உடையனாய் -அந்த பவ்யதைக்கு
ஊற்று வாயான ஸ்ரீ லஷ்மி சம்பந்தத்தை உடையவன் –

தன்னை இத்யாதி -தன்னை பிள்ளையாக பெற்ற பாக்யத்தை உடைய எனக்கு தன்னுடைய
வாகம்ர்தத்தை தந்து -என்னைத் தழைப்பியா நின்றான் –
இங்கே -வாய் அமுதம் தந்து தளர்ப்பிக்கின்றான் -என்று வர்தமானமாக சொல்லுகையாலே –
முன்பு -முத்தம் தரும் என்றது -எப்போதும் தன் விஷயத்தில் அவன் செய்து போரும்
ஸ்வபாவ கதனம் பண்ணினபடி –
தன் எற்றி-இத்யாதி -தன்னோடு எதிர்ந்த சத்ருக்கள் ஆனவர்களுடைய தலைகள் மேலே தளர் நடை நடவானோ

————————————

முன்னலோர் வெள்ளிப் பெரு மலை குட்டன் மோடு மோடு விரைந்தோடே
பின்னை தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல்
பன்னி உலகம் பரவி யோவாப் புகழ் பல தேவன் என்னும்
தன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ -1 7-5 –

உலகம் எனபது -உயர்ந்தோர் மாட்டே -தொல்காப்பிய சூத்தரம் –
உலகம் பன்னி பரவி -உயர்ந்தவர்கள் ஆராய்ந்து துதித்து –
முன்னே விலஷணமாய்-அத்வீதியமாய் -பெரிதாய் இருந்துள்ள -வெள்ளி மலை ஈன்ற
குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோடே
பின்னை இத்யாதி -அந்தக் குட்டியின் பின்னே -தன் செருக்காலே அத்தை பிடிக்கைக்காக தொடர்ந்து –
அஞ்சன கிரி ஈன்றதொரு குட்டி தன் சைசவ அநு குணமாக காலுக்கு கால் பேர்ந்து அடி இட்டு
செல்லுமா போலே –
பன்னி இத்யாதி -லோகம் எல்லாம் கூடி -தங்கள் ஞான சக்திகள் உள்ள அளவெல்லாம் கொண்டு
ஆராய்ந்து ஸ்துத்திதாலும் முடி காண ஒண்ணாத புகழை உடையவனாய் –
பல தேவன் என்னும் பெயரை உடையனான தன்னுடைய தமையனாவன் செருக்கி முன்னே ஓட –
அவன் பின்னே அவனை கூட வேணும் என்று தன் சைசவ அநு குணமாக
த்வரித்து நடக்குமவன் தளர் நடை நடவானோ –

—————————————–

ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த
இருகாலும் கொண்டு அங்கு அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கருகார் கடல் வண்ணன் காமர்தாதை தளர் நடை நடவானோ -1 7-6 –

ஒரு கால் இத்யாதி -ஒரு திருவடிகளிலே ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -ஒரு திருவடிகளிலே திரு ஆழி
ஆழ்வானுமாக உள்ளடி களிலே ரேகா ரூபேண பொறித்து சமைந்த இரண்டு திருவடிகளையும் கொண்டு –
அங்கு அங்கு இத்யாதி -அடி இட்ட அவ்வவ ஸ்தலங்களிலே தூலிகை கொண்டு
எழுதினால் போல் அடையாளம் படும்படி நடந்து –

பெருகா இத்யாதி -இந்த நடை அழகையும் வடிவு அழகையும் கண்டு மேன்மேல் என்று
பெருகா நின்ற -ஆனந்த சாகரத்துக்கு மேலே -பின்னையும் உத்தரோத்தரம் –
ஆனந்தத்தை உண்டாக்கி –
கரு கார் இத்யாதி -இருண்டு குளிர்ந்து இருக்கிற கடல் போன்ற நிறத்தை உடையவன் –
கருமை -இருட்சி
கார் -குளிர்த்தி
அன்றிக்கே
கருமை -பெருமையாய்
கார் -இருட்சியாகவுமாம்
அன்றிக்கே
கார் என்று மேகமுமாய் –
காள மேகம் போலேயும் கடல் போலேயும் இருக்கிற திரு நிறத்தை உடையவன் என்னவுமாம் –

காமர் தாதை இத்யாதி -அழகால் நாட்டை வெருட்டி திரிகிற காமனுக்கு -உத்பாதகன் ஆனவன் –
காமனைப் பயந்த காளை-இறே
பிரசவாந்தஞ்ச யவ்வனம் -என்னும் படி அன்றிக்கே
காமனைப் பயந்த பின்பு கீழ் நோக்கி பிராயம் புகும் ஆய்த்து-

காமர் தாதை இன்ப வெள்ளத்தின் மேல் -பின்னையும் பெய்து பெய்து –
தளர் நடை நடவானோ -என்று அந்வயம்-

———————————–

படர் பங்கயமலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி இற்று இற்று வீழ நின்று
கடும் சேக் கழுத்தின் மணிக் குரல் போலுடை மணி கண கண என
தடம் தாள் இணை கொண்டு சாரங்கபாணி தளர் நடை நடவானோ – 1 7-7-

படர் இத்யாதி -பெருத்து இருந்துள்ள தாமரை பூவானது -முகுளிதமாய் இருக்கை அன்றிக்கே –
வாய் நெகிழ்ந்த அளவிலே குளிர்த்தியை உடைத்தான அகவாயில் மதுவானது
சிறுக துளித்து -விழுமா போலே –

இடம் கொண்ட இத்யாதி -இடம் உடைத்தாய் -சிவந்து இருந்துள்ள -திருப் பவளத்தில்
ஜலமானது -நிரந்தரமாக ஊறி முறிந்து விழும்படி நின்று –

கடும் சேக் கழுத்தின் -இத்யாதி -கடிதான சேவின் கழுத்தில் -கட்டின மணி உடைய
த்வனி போலே -திருவரையில் கட்டின மணியானது -கண கண என்று சப்திக்கும்படி –

தடம் தாள் இத்யாதி -சவிகாசமாய் பரஸ்பர சதர்சமான திருவடிகளைக் கொண்டு
சாரங்க பாணியானவன் தளர் நடை நடவானோ

———————————

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

பக்கம் இத்யாதி -கருத்த நிறத்தை உடைத்தாய் -சிறுத்தி இருந்துள்ள மலையினுடைய
பார்ச்வத்திலே நிம்நோன் நதமான அருவிகள் ஒளி விடுமா போலே –
பகர் -ஒளி
அக்கு இத்யாதி -திருவரையில் சாத்தின வளை மணி வடமானது -தாழ்ந்தும் உ
மக்கள் இத்யாதி -லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –
தக்க இத்யாதி -தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர்
திருமகன் தளர் நடை நடவானோ –

———————————————

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்தது ஒரு வேழத்தின் கரும் கன்று போல்
தெள் புழுதி யாடி திருவிக்ரமன் சிறு புகர் விட வியர்த்து
ஒண் போது அலர் கமல சிறுக் கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ -1 7-9 –

வெண் புழுதி இத்யாதி -வெளுத்த புழுதியை மேலே ஏறிட்டு கொண்டு அளைந்த
ஒரு ஆனைக் கன்று போலே
தெள் இத்யாதி -தெள்ளிய புழுதியை திருமேனியிலே ஏறிட்டு கொண்டு
திருவிக்ரமன் -ஆஸ்ரிதனான இந்த்ரன் அபேஷிதம் செய்க்கைக்காக –
திருவடிகளின் மார்த்த்வம் பாராதே லோகத்தை அளந்தவன்
சிறு புகர் பட வியர்த்து -ஏறிட்டு கொண்ட புழுதி ஸ்வேத பிந்துக்களாலே
நனைந்த இடங்களிலே திருமேனி சிறிது புகர்த்து தோன்றும்படி வியர்த்து
ஒண் போது இத்யாதி -அழகியதாய் -தனைக்கடைத்த காலத்திலே அலர்ந்த தாமரை பூ போலே
இருக்கிற சிறியதான திருவடிகள் மிதித்த இடத்திலே -ஓன்று உறுத்தி நோவாதபடி யாக
தண் இத்யாதி -குளிர்ந்த பூக்களை உடைத்தான மெத்தை மேலே தளர் நடை நடவானோ –
தவிசு -மெத்தை –

—————————————

திரை நீர் சந்திர மண்டலம் போல் செம்கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-

சண்ணம் -குஹ்ய அவயவம்
திரை நீர் இத்யாதி -திரைக் கிளப்பத்தை உடைத்தான சமுத்திர மத்யத்திலே சலித்து தோற்றுகிற
சந்திர மண்டலம் போலே –
செம்கண் மால் இத்யாதி -சிவந்த திருக் கண்களையும் அதுக்கு பரபாகமான கருத்த
நிறத்தையும் உடையவனாய் -பிரசச்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –
தன் இத்யாதி -தன்னுடைய அழகியதாய் -நீர்மையை உடைத்தான திரு முக மண்டலத்தில் –
விளங்குகிற திரு சுட்டியானது -எங்கும் ஒக்க பிரகாசித்து -இடம் வலம் கொண்டு அசைய –
பெருநீர் இத்யாதி -தீர்த்தங்களில் பிரசித்தமாய் -ப்ரவாஹா ஜலம் மாறாமல் –
அலை எரிகிற கங்கையிலும் காட்டிலும் -பெரியதாய் அத்வீதியமான தீர்த்த பலத்தை
தரும் ஜலத்தை உடைத்தான சிறுச் சண்ணம் ஆனது துளிக்க துளிக்க தளர் நடை நடவானோ –

————————————-

அவதாரிகை
நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தொடர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே – 1-7 11- –

ஆயர் இத்யாதி -கோப குலத்தில் வந்து ஆவிர்பவித்த -ராஜ குலத்தில் ஆவிர்பவித்த வித்தமை –
அடி அறிவார் அறியும் இத்தனை இறே-இது இறே எல்லாரும் அறிந்தது –
அஞ்சன வண்ணன் தன்னை -கண்டவர் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருக்கிற
திரு நிறத்தை உடையவனை –
தாயர் இத்யாதி -பெற்ற தாயான யசோதையும் -அவளோபாதி ஸ்நேஹிகள் ஆனவர்களும்
ப்ரீதராம் படியாகவும் -தொட்டில் பருவத்திலே பூதன சகடாதிகள் நிரஸ்தர் ஆனமை அறிந்த –
கம்சாதிகளான சத்ருக்கள் தலை எடுத்து நடக்க வல்லன் ஆனமை கண்டு -என் செய்ய புகுகிறோம் –
என்று பீதராய் அவசன்னராம்படி யாகவும் தளர்நடை நடந்த பிரகாரத்தை –

வேயர் இத்யாதி -வேயர் தங்கள் குலத்து உதித்தவர் ஆகையாலே –
அக்குடியில் உள்ள எல்லோரும் தம்முடைய வைபவத்தை சொல்லி புகழும்படியான ஸ்ரீ பெரியாழ்வார் –
சீரால் இத்யாதி -சீர்மையோடே விஸ்தரித்து சொன்ன -இவற்றை ஏதேனும் ஒருபடி சொல்ல வல்லவர்கள் –

மாயன் இத்யாதி -ஆச்சர்யமான குணங்களை உடையவனாய் -நீல ரத்னம் போன்ற வடிவை
உடையவன் ஆனவனுடைய திருவடிகளிலே ஸ்வ சேஷத்வ அநு ரூபமான வ்ருத்தி
விசேஷத்தை பண்ணும் -சத்புத்ரர்களைப் பெறுவர்-
மக்கள் -என்று அவி விசேஷமாக சொல்லுகையாலே -வித்தையாலும் ஜன்மத்தாலும் வரும் –
உபய வித புத்ரர்களையும் சொல்லுகிறது –

—————————————

பூங்கோதை -பிரவேசம் –

முலையில் வாசி அறிந்து உண்ணும்
பிள்ளைப் பருவத்தை அனுபவித்து
இனியரனார் -கீழ்
அதுக்கு அநந்தரம்
லீலையிலே இழிந்து
சப்பாணி கொட்டும் பருவத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –

————————————————

பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-

பூங்கோதை ஆய்ச்சி –
செவ்வி மாலையாலே அலங்க்ருதமான மயிர் முடியை உடைய
யசோதை பிராட்டி கடைகிற வெண்ணெயை –
ஒப்பித்து நின்றாயிற்று தயிர் கடைவது
வாச நறும் குழல் ஆய்ச்சியர் -என்னக் கடவது இறே –

கடை வெண்ணெய் புக்கு உண்ண –
கடைந்து திரட்டிச் சேமித்து வைத்தால் களவு காண்கை அன்றிக்கே
கடைகிற போதே நிழலிலே ஒதுங்கி
களவு கண்டாயிற்று அமுது செய்வது –

ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு –
அவளுக்கு தயிர் கடைகையில் அன்றே அந்ய பரதை-
இவனை நோக்குகையிலே இறே
ஆகையாலே அவள் கண்டு பிடித்து
கட்டி
அடிக்க
அடி உண்டு –

ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஒங்கோத வண்ணனே சப்பாணி
பிரதம பரிபவம் ஆகையாலே முந்துற ஏங்கி
அநந்தரம்
அது ஆறிச் சீராட்டி
பின்னை லீலையோடே தலைக் கட்டும்
தேங்கின கடல் போலே யாயிற்று அப்போது இருக்கும் இருப்பு
விரலோடு இத்யாதி -முதல் திருவந்தாதி -24

யொளி மணி வண்ணனே சப்பாணி –
அவ்வளவே அன்றிக்கே புகரை உடைத்தான
மணி போலே இருக்கிறவனே –

சப்பாணி –
வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே
சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

————————————————

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்
டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம்
ஆயர் அழக வடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி-10-5-2

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்டு
பெற்று வளர்த்த தன்னோடு ஒத்த பிராப்தியை உடையவர்கள் –
அமூர்த்தமான நெஞ்சு -கண்ணுக்கு தோற்றும் படி துடியா நின்றது –
சரீரத்வாரா தோற்றும் இறே-
தயிரையும் நெய்யையும் உண்டு –

ஏய் எம்பிராக்கள் –
தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே
இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே
தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய்
அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே –
தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய்
செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது –

இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக –
பரப்பை உடைத்தான பூமியில் எங்களிடை
ஜாதியில் உள்ளாரில் மிக்க அழகை உடையவனே –

வடிகள் அரவிந்த வாயவனே கொட்டாய் சப்பாணி-
திருவடிகளும் திரு அதரமும் செவ்வித் தாமரை போல் இருக்கிறவனே
அன்றிக்கே
அடிகள் அரவிந்த வாயவனே -என்ற பாடம் ஆகில்
திருவடிகள் தாமரையாய் இருக்கிறவன் -என்கிறது
எம்பிராக்கள் -என்பான் என்-அழகா -வாயவன் -என்று ஏக வசனமாய் இருக்க என்னில்
பத்துடை அடியவர்க்கு எளியவன் –அரும் பெறல் அடிகள் -என்றால் போலே-

மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
அதுக்கு பரபாகமான நிறத்தை உடையவனே
சப்பாணி கொட்ட வேணும் –

————————————————

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —10-5-3-

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தயிரையும் நெய்யையும் மோரையும் சேர வைப்பார்கள் –
பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –
இங்கனே தாவா மோரை உருட்டி
பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று-

தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் –
அப்பெரிய செயலைச் செய்யா -பின்னை தவழா நிற்பார் –
முன்பு எல்லாம் கிடந்தது உறங்கி
அவர்கள் பேர நின்ற அநந்தரம் –
இவனை இங்கனே சொல்லும்படி எங்கனே -என்னும்படி தவழா நிற்கும் –

தாமோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த –
நீ எல்லாம் செய்து -மறைக்கப் பார்க்கிலும்
உன்னை ஒழிய இச் செயலை செய்வார் உண்டோ
என்று இடைச்சிகள் தாம்பாலே
மோதரக் கையாலே கட்ட -என்னுதல் –
அன்றிக்கே
அலங்க்ருதமான கையால் கட்ட –
தாமோதரக் கையால்-என்று பிரித்து மோதரத்தை
மோதிரம் என்று வ்யவஹரித்தது இத்தனை
படாகை கணறு -என்கிற இவற்றை பிடாகை கிணறு -என்கிறாப் போலே –

தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி –
உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே
தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –
எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

———————————————–

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-4-

பெற்றார் தளை கழலப் பேர்ந்து –
மாதா பிதாக்கள் காலில் விலங்கு கழலும்படி வந்து
அவதரித்து –
பேருகை யாவது -முன்பு இருந்த இருப்பின்றும் போருகை –
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -இத்யாதி –

அங்கு அயல் இடத்து -உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட –
அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே
லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற
மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –

கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே
கன்றுகள் மேய்க்குமவனே –

————————————————

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5-

சோத்தென நின்னைத் தொழுவன் –
சோத்தம் என்று வாயாலே சொல்லா நின்று கொண்டு
உன்னைத் தொழுவன் –

எதுக்காக என்னில் –
வரம் தரப் —
என்னுடைய பிரார்த்திதங்களை நீ தருகைக்காக –

பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன ஆய்ச்சியர் அப்பம் தருவர் –
பருவம் நிரம்பாத அளவில் உபகரித்தவனே
உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –

அவர்க்காகச் -சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி –
அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் –

தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி —
கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால்
சப்பாணி கொட்ட வேணும் –

———————————————–

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நானவலப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி —10-5-6-

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு-நானவலப்பம் தருவன்-
ஓர் அப்பம் தந்தோம் என்று கை வாங்கி இருக்க ஒண்ணாது –
உன் வயிற்றுக்குப் போரும்படி
நான் அவல் அப்பம் தருவன் –

கருவிளைப் பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே –
கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் –
ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு
ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க
வளர்ந்த செருக்கை உடையவனே –

கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி –
ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ
சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

———————————————-

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி -10-5-7-

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத் –
வாயை அங்காந்து கொண்டு வந்த பகாசூரன் வாயைக் கிழித்து
அடியே துடங்கி தலை யளவும் தர்ச நீயமாய் பூத்து நின்ற
குருந்தை வேரோடு பறித்து –

துள்ளி விளையாடித்-
சசம்பிரம ந்ருத்தம் பண்ணி
லீலா ரசம் அனுபவித்து –

தூங்குறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் –
தூங்கா நின்றுள்ள உறியிலே
சேமித்து வைத்த வெண்ணெயை அள்ளி அமுது செய்த கையில்
முடை நாற்றத்தோடு கூட
உன்னுடைய செயலிலே மோஹிக்கிற
என்னுடைய முலைக் கண்களைப் பால் சுரக்கைக்காக நெருடுகிற –

பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி –
பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே
உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே –

பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி —
அன்று பூதனை தன்னை முடித்து உன்னை
நோக்கித் தந்த நீ
இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ –

———————————————————

யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-

யாயும் பிறரும் அறியாத யாமத்து –
பெற்ற தாயும்
மற்று உள்ளவாள் ஒருவரும்
இவர்கள் ஒருவரும் அறியாத நடுச் சாமத்திலே –

மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்-
வஞ்சனத்தை உடையளாய் இருக்கச் செய்தேயும்
யசோதை பிராட்டி பரிவு தோற்ற ஏத்திக் கொண்டு வருமா போலே
பூதனையானவள் ஜல்ப்பித்துக் கொண்டு வந்து முலையைக் கொடுக்க –

பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட –
பேய் என்று அவளை புத்தி பண்ணி
முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு
அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே –

வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
உகவாதாரை அழியச் செய்வுதி
உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ –

————————————————–

கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை
மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9-

கள்ளக் குழவியாய்க் –
பிள்ளைப் பருவத்திலே க்ருத்ரிமத்தை யுடையையாய் –

காலால் சகடத்தை தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை –
முலை வரவு தாழ்த்தது என்று
திருவடிகளை நீட்டின வ்யாஜ்யத்தாலே நலியக் கோலி
மேலிட்ட சகடத்தை பொடியாம்படி தள்ளி உதைத்து –
யசோதை பிராட்டி வடிவு உடையளாய் வந்து தோற்றின
பூதனையை –

மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட -வள்ளலே-
அவள் வரும் அளவும் ஆறி இருந்து
கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு
அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே –

கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ –

——————————————-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன் –
கார் காலத்திலே
கழுத்தே கட்டளையாக
நீரைப் பருகின காள மேகம் போலே
சர்வாதிகாரமாம் படி பிரபந்தத்தைப் பண்ணின மகோ தாரராய் –
திருமங்கையில் உள்ளாருக்கு நிர்வாஹகருமான –

பேராளன் –
நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா
அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே
கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே
பேராளன் -என்கிறார் –

பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட சீராளா –
இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே
நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது –
பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று –

செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்தாராளா -கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி-
இவை எல்லாம் ஐஸ்வர்ய சூசகமாய் இருக்கிறது –
இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது
தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே
பிறருக்கும் பலமாய் இருக்கிறது –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார்-அம்மம் உண்ண–அழைக்கும் பதிகம் —2-2-/ அம்மம் தர அஞ்சுவன் பதிகம் -3-1- / ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –என் அம்மம் சேமம் உண்ணாயே பதிகம்-10-4–

June 30, 2020

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாபதேசம்
அரவணை பிரவேசம் –

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்-என்று அல்வழக்கு ஒன்றும் இல்லாதே
அறுதியிட்டது தேசமாக்கி-தத் தேசிகனை அவதார கந்தமாக வஸ்து நிர்த்தேசம் செய்து
நாவ கார்யம் சொல் இல்லாதவர்களை தேசிகராக்கி
கார்ய பூதனானவன் அவதரித்த ஊரில் கொண்டாட்டம் ஒக்க நின்று கண்டால் போலே
மிகவும் உகந்து மங்களா சாசனம் செய்து
அவதரித்தவனுடைய திவ்ய அவயவங்களை பாதாதி கேசாந்தமாக நிரவத்யமான வளவன்றிக்கே
இதுவே பரம புருஷார்த்தம் என்று வஸ்து நிர்த்தேசம் செய்து
தாமும் மிகவும் உகந்து தம் போல்வார்க்கும் காணீர் –காணீர் -என்று -காட்டி அருளி
இவனுக்கு ஆஞ்ஞா ரூபமாகவும் அனுஜ்ஞ்ஞா ரூபமாகவும்
ப்ராப்தி நிபந்தனமான அபிமான ரூபமாகவும்
உபய விபூதியில் உள்ளாரும் உபகரித்த பிரகாரங்களை அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற
அவர்கள் வரவிட்ட வற்றையும்
அவர்கள் கொடுவந்த வற்றையும்
மேன்மையும் நீர்மையுமான மெய்ப்பாடு தோன்ற அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து-

அவன் அங்கீ கரித்த பின்பு
தொட்டிலேற்றித்
தாலாட்டி
ஜ்ஞானத்துக்கு ஆஸ்ரயத்தில் காட்டிலும் ஜஞேய ப்ராதான்யத்தைக் கற்ப்பித்து
அவற்றுக்கு ஜஞேய சீமை இவ்விஷயமாக்கி விஷயீ கரித்த ஜ்ஞானத்தை –
விஜ்ஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற ந்யாயத்தாலே ஜ்ஞாதாக்கள் ஆக்கி
இள மா மதீ -1-5-1-என்றும் –
விண்டனில் மன்னிய மா மதீ -1-5-6-என்றும்
உபய விபூதியில் உள்ளாரையும் உப லஷண நியாயத்தாலே இவன்
புழுதி அளைவது தொடக்கமான வ்யாபாரங்களைக் கண்டு
தாமும் மிகவும் உகந்து தம் போல்வாரையும் அழைத்துக் காட்டி

நோக்கின கண் கொண்டு போக வல்லீர்கள் ஆகில் போங்கோள்-என்று
முன்பு பச்சை வரவிட்டுத் தாங்கள் வாராதவர்களையும் வந்து கண்டு போங்கோள் -என்று
உய்ய உலகு படைத்து -என்று ஜகத் காரண பிரகாசகமான பரமபதம் முதலாக
கீழே அருளிச் செய்த திவ்ய தேசங்களையும்
இதில் அருளிச் செய்த திருக் குறுங்குடி முதலான திவ்ய தேசங்களிலும் சந்நிஹிதனாய் நின்றவனும்
நாநாவான அவதாரங்களும் அபதாநங்களுமாக பிரகாசித்தவனும்
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -கீதை -15-15-என்கிறபடியே
சகல வேத சாஸ்திர இதிஹாச புராணாதிகளாலும் அறியப்படுமவன் நான் -என்றவனை -கீழே

நாராயணா அழேல் அழேல் -என்றவர் ஆகையால் –
நான் மறையின் பொருளே -1-6-3-
ஏலு மறைப் பொருளே -1-6-9-
எங்கள் குடிக்கு அரசே -1-6-10-என்று வாசகத்துக்கு வாச்யமும் -வாச்யத்துக்கு வாசகமுமாக அறுதியிட்டு அவனை
செய்யவள் நின்னகலம் சேமம் எனக்கருதி –ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை -1-6-1- என்கையாலே
லோகத்தில் உள்ளாருக்கு பீதி பக்தி பிராப்தி மூலமான ஆசாரங்கள் பிரமாண அனுகுனமாகத் தோன்றும்படி யாகவும்
சொல் வழுவாத ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தோன்றும்படியாகவும்
செங்கீரை என்கிற வ்யாஜ்யம் முதலாக
சப்பாணி
தளர்நடை
அச்சோ அச்சோ
புறம் புல்கல்
அப்பூச்சி என்கிற வியாபார விசேஷங்களைப் பிரார்த்தித்து

அவன் இவை செய்யச் செய்ய அவற்றுக்குத் திருவடிகள் நோம் -என்றும்
தளர் நடையில் விழுந்து எழுந்து இருக்கையாலே திரு மேனி நோம் -என்றும்
அச்சோ புறம் புல்குகளாலே தம்முடைய திரு மேனியை வன்மை என்று நினைத்து
அத்தாலும் திரு மார்பு நோம் என்று அஞ்சி
நாம் பிரார்த்தித்து என்ன கார்யம் செய்தோம் -என்று அனுதபிக்கிற அளவில்

தன் நிவ்ருத்த அர்த்தமாக தன் திருத் தோள்களையும் ஆழ்வார்களையும் காட்ட
அவையும் பயா அபாய ஹேது வாகையாலே அவற்றை அமைத்து திரு மேனியில் வாட்டத்தை நினைத்து
படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் இத்தனை என்று உறங்குகிறவனை எழுப்பி
அநச்னன்-என்கிற பிரதிஜ்ஞ்ஞையைக் குலைத்து
அஸ்நாமி -என்கிறபடியே அமுது செய்ய வேணும் -என்கிறார் –

————————————————————————————

ஸ்ரீ மணவாள மா முனிகள்

அவதாரிகை –
ஆழ்வார்கள் எல்லாரும் ஸ்ரீ கிருஷ்ண அவதார ப்ரவணராய் இருந்தார்களே ஆகிலும் –
அவர்கள் எல்லாரையும் போல் அன்றிக்கே –
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அதி ப்ரவணராய் –
அவ்வதார ரச அனுபவத்துக்காக கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்கிறபடியே
அவ்வதார ரசம் உள்ளது எல்லாம் அனுபவிக்கிறவர் ஆகையாலே –

முதல் திருமொழியிலே அவன் அவதரித்த சமயத்தில் -அங்குள்ளார் செய்த உபலாவன விசேஷங்களையும் –

அநந்தரம்-1-2-
யசோதை பிராட்டி அவனுடைய பாதாதி கேசாந்தமான அவயவங்களில் உண்டான அழகை
ப்ரத்யேகம் பிரத்யேகமாக தான் அனுபவித்து –
அனுபுபூஷுக்களையும் தான் அழைத்துக் காட்டின படியையும் –

அநந்தரம் -1-3-
அவள் அவனைத் தொட்டிலிலே ஏற்றித் தாலாட்டின படியையும் –
பிற்காலமாய் இருக்க தத் காலம் போலே பாவனா பிரகர்ஷத்தாலே யசோதாதிகளுடைய
ப்ராப்தியையும் சிநேகத்தையும் உடையராய் கொண்டு -தாம் அனுபவித்து –

அநந்தரம் –
அவன் அம்புலியை அழைக்கை-1-4-
செங்கீரை ஆடுகை -1-5-
சப்பாணி கொட்டுகை -1-6-
தளர் நடை நடைக்கை -1-7-

அச்சோ என்றும் -1-8-
புறம் புல்குவான் என்றும் -1-9-
யசோதை பிராட்டி அபேஷிக்க
முன்னும் பின்னும் வந்து அணைக்கை ஆகிற பால சேஷ்டிதங்களை-
தத் பாவ யுக்தராய் கொண்டு அடைவே அனுபவித்துக் கொண்டு வந்து –

கீழ்த் திரு மொழியிலே -2-1-
அவன் திரு ஆய்ப்பாடியில் உள்ளோரோடு அப்பூச்சி காட்டி விளையாடின சேஷ்டிதத்தையும் –
தத் காலத்திலேயே அவள் அனுபவித்து பேசினால் போலே தாமும் அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டரானார் –

இனி -2-2-
அவன் லீலா வ்யாபாரச்ராந்தனாய் -முலை உண்கையும் மறந்து -நெடும் போதாக கிடந்தது உறங்குகையாலே –
உண்ணாப் பிள்ளையை தாய் அறியும் -என்கிறபடியே யசோதை பிராட்டி அத்தை அறிந்து –
அம்மம் உண்ணத் துயில் எழாயே-என்று அவனை எழுப்பி –
நெடும் போதாக முலை உண்ணாமையை அவனுக்கு அறிவித்து –
நெறித்து பாய்கிற தன முலைகளை உண்ண வேண்டும் என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் -விடாதே நிர்பந்தித்து முலை ஊட்டின பிரகாரத்தை
தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு –
தத் பாவ யுக்தராய் கொண்டு -அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்து
பேசி ஹ்ர்ஷ்டராகிறார் இத் திரு மொழியில் –

—————————————-

அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே -2 2-1 –

அரவணையாய் ஆயரேறே–
திரு வநந்த ஆழ்வான் படுக்கை வாய்ப்ப்பாலே கண் வளர்ந்த வாசனையோ
ஆயர் ஏறான இடத்திலும் பள்ளி கொள்ள வேண்டுகிறது

மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமானவற்றை பிரகிருதியாக உடைய
திரு அனந்தாழ்வானைப் படுக்கையாய் உடையனாய் இருந்து வைத்து –
நாக பர்யங்கம் உத்சர்ஜ்ய ஹ்யாகத -என்கிறபடியே அப்படுக்கையை விட்டு -போந்து -அவதீரணனாய்-
ஆயருக்கு பிரதானன் ஆனவனே -அப்படுக்கை வாய்ப்பாலே பள்ளி கொண்டு போந்த வாசனையோ –
ஆயர் ஏறான இடத்திலும் படுக்கை விட்டு எழுந்து இராதே பள்ளி கொள்ளுகிறது –
அவன் தான் இதர சஜாதீயனாய் அவதரித்தால்-
சென்றால் குடையாம் -என்கிறபடி -சந்தானுவர்த்தயாய் அடிமை செய்யக் கடவ –
திரு வனந்தாழ்வானும் அவனுடைய அவஸ்த அனுகுணமாக பள்ளி கொள்வதொரு திருப் படுக்கையான
வடிவைக் கொள்ளக் கூடும் இறே -ஆகையால்-அங்கு உள்ள சுகம் எல்லாம் இங்கும் உண்டாய் இருக்கும் இறே
கண் வளர்ந்து அருளுகிறவனுக்கு-

அம்மம் உண்ணத் துயில் எழாயே –
சோறு -என்றாலும்
பிரசாதம் -என்றாலும்
அறியான் என்று நினைத்து -அம்மம் உண்ணத் துயில் எழாயே என்கிறார் –
முலை உண்ண- என்னாதே- அம்மம் உண்ண -என்றது
சைசவ அனுகுணமாக அவள் சொல்லும் பாசுரம் அது ஆகையாலே
துயில் -நித்தரை
எழுகையாவது-அது குலைந்து எழுந்து இருக்கை-
எழாய்-என்கிற இது எழுந்து இருக்க வேணும் என்கிற பிரார்த்தனை-

இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ –
பகல் யுண்டத்தை மறந்தார் போலே காணும்
பகல் உண்ணாதார் இரவும் உண்ணார்களோ
எழுப்பின அளவிலும் எழுந்து இராமையாலே -கன்ற எழுப்ப ஒண்ணாது -என்று விட்டேன்
இன்றும் போய் உச்சிப் பட்டது என்கிறார் விடிந்த மாத்ரத்தையே கொண்டு –

நீ ராத்திரி உண்ணாதே உறங்கி -அவ்வளவும் இன்றிக்கே இன்றும் போது உச்சிப் பட்டது –
ராத்திரி அலைத்தலாலே கிடந்தது உறங்கினால் -விடிந்து ஆற்றானாகிலும் உண்ண வேண்டாவோ –
விடிந்த அளவேயோ போது உச்சிப் பட்டது காண்
ஆலும் ஓவு மாகிற அவ்யயம் இரண்டும் விஷாதாதிசய சூசகம்

வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாயத் –
உண்ண வேண்டா -என்னும் போதும் எழுந்து இருந்து வந்து
வேண்டா என்ன வேண்டாவோ -என்ற அளவிலே
எழுந்து இருந்து வருகிறவனைக் கண்டு
வயிறு தளர்ந்து முகம் வாடிற்று -என்று எடுத்து அணைத்துக் கொண்ட அளவிலே
அழகிய முலைகள் நெறித்துப் பாயத் தொடங்கிற்று –
வனப்பு -அழகும் பெருமையும்-

நீ எழுந்து இருந்து அம்மம் உண்ண வேண்டும் என்று வரவும் கண்டிலேன் –
அபேஷை இல்லை என்ன ஒண்ணாதபடி வயிறு தளர்ந்து இரா நின்றாய்
முலைகள் ஆனவை உன் பக்கல் சிநேகத்தால் நெறிந்து-பால் உள் அடங்காமல் வடிந்து பரக்க-
உனக்கு பசி உண்டாய் இருக்க -இப்பால் இப்படி வடிந்து போக -உண்ணாது ஒழிவதே -என்று கருத்து –

திருவுடைய வாய் மடுத்துத் –
பிராட்டிக்கு அசாதரணமான வாய் என்னுதல்-
திருவாய்ப்பாடியில் சுருட்டார் மென் குழல் -3-1-7-என்கிறபடியே குழல் அழகு படைத்தார்க்கு எல்லாம்
அம்ருத பானம் பண்ணும்படி சாதாரணமான வாய் -என்னுதல்
அழகிய வாய் -என்னுதல்
திரு-அழகு

அழகிய திருப் பவளத்தை மடுத்து -திரு-அழகு –
இவ்வண முலையிலே உன்னுடைய திரு உடைய வாயை அபிநிவேசம் தோற்ற மடுத்து –

திளைத்து உதைத்துப் பருகிடாயே –
முலையிலே வாய் வைத்து
முழுசி
வயிற்றிலே உதைத்து
அமுது செய்ய வேணும் என்று பிரார்த்திக்கிறார்-

முலை உண்ணுகிற ஹர்ஷம் தோற்ற கர்வித்து கால்களாலே
என் உடம்பிலே உதைத்து கொண்டு -இருந்து உண்டிடாய் –
பருகுதல்-பானம் பண்ணுதல் –

————————————-

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உணாயே- 2-2 2- –

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
நறு வெண்ணெய்-பழுதற உருக்கி வைத்த நெய்யும்
செறிவுறக் காய்ந்த பாலும்
பனி நீர் அறும்படி நன்றாகத் தோய்த்த தயிரும் -சாய்த்தால் வடிவத்தை இருக்கிற தயிர் என்னவுமாம் –
நறு வெண்ணெயும் -செவ்வி குன்றாமல் கடையும் பக்வம் அறிந்து கடைந்து வைத்த நறு வெண்ணெயும்-

பழுதற உருக்கி வைத்த நெய்யும் -செறிவுறக் காய்ந்த பாலும் –
நீர் உள்ள்து வடித்து கட்டியாய் இருக்கிற தயிரும் -செவ்வையிலே கடைந்து எடுத்த நறுவிய வெண்ணையும்

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
ஒன்றும் பெற்று அறியேன் -என்னுதல்
இவை வைத்த பாத்ரங்களில் சிறிதும் பெற்று அறியேன் என்னுதல்

அன்றிக்கே –
இத்தனையும் என்றது -ஏக தேசமும் என்றபடியாய்-இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்-
இப்படி என்னை களவேற்றுவதே-என்னைப் பிடித்தல் அடித்தல் செய்ய வன்றோ நீ இவ்வார்த்தை
சொல்லிற்று என்று குபிதனாக –

ஆரோ கொண்டு போனார் -என்று அறிகிலேன் -என்றவாறே –
எம்பிரான் -என்ற போதை முக விகாரத்தாலும்
நீ பிறந்த பின்னைப் பெற்று அறியேன் -என்றதாலும்
என்னைக் குறித்து அன்றோ நீ இவை இவை எல்லாம் சொல்லுகிறது -என்று கோபத்தோடு போகப் புக்கவனை
வா -என்று அழைத்த வாறே
என்னைப் பிடித்து அடித்தல் செய்ய வன்றோ நீ அழைக்கிறாய்
நான் எது செய்தேன் -என்ன –

எத்தனையும் செய்யப் பெற்றாய்-
உனக்கு வேண்டினது எல்லாம் செய்யக் கடவை -என்ன
இப்போது சொல்லுகிறாய் உன் வார்த்தை அன்றோ -என்ன

ஏதும் செய்யேன் கதம் படாதே –
நான் யுன்னை அடித்தல் கோபித்தல் செய்யேன்
நீ கோபியாதே வா -என்ன -என்றவாறே-
நான் உன்னைப் பிடித்தல் அடித்தல் ஒன்றும் செய்யக் கடவேன் அல்லேன் –
நீ கோபிக்க வேண்டா -கதம்-கோபம்

முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே
முத்துப் போலே இருக்கிற திரு முத்து தோன்ற மந்த ஸ்மிதம் செய்து நின்ற அளவிலே
சென்று எடுத்துக் கொண்டு
இவனை சிஷிப்பதாக நினைத்தவை எல்லாம் மறந்து
அந்த முறுவலோடு வந்து
முத்துப் போலே ஒளி விடா நிற்கும் முறுவலை செய்து –
அதாவது -கோபத்தை தவிர்ந்து ஸ்மிதம் பண்ணி கொண்டு -என்கை

மூக்காலே முழுசி
முலை மார்புகளிலே முகத்தாலும் மூக்காலும் உரோசி முலை யுண்ணாய் -என்கிறார்-
முலைக் கீழை -முழுசி -முட்டி -மூக்காலே உரோசி இருந்து
முலையை அமுது செய்யாய் –

இத்தால்
வைத்த நெய்யால் -சாஷாத் முத்தரையும்
காய்ந்த பாலால் -சொல்லுவதே ஓத்தின் சுருக்கு -என்றும்
நாம நிஷ்டோசம் யஹம் ஹரே -என்றும் இருக்கிறவர்களையும்
வடி தயிரால் -சதுர்த்தி உகாரங்களிலே தெளிந்து -தந் நிஷ்டராய் –
மகாரத்திலே ப்ர்க்ருத்யாத்ம விவேக யோக்யரானவர்களையும் –
நறு வெண்ணெயால் -செவ்வி குன்றாமல் இவ்வடைவிலே ப்ரக்ருத்யாத்ம விவேகம் பிறந்து
அஹங்கார மமகார நிவ்ருத்தமான ஆத்ம குணங்களால் பூரணராய்
மோஷ சாபேஷராய்-இருக்கிறவர்களையும் சொல்லுகிறது –

—————————————————————————-

தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்க கில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன் திறத்தர் அல்லர் உன்னை நான் ஓன்று உரப்ப மாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே -2-2-3 –

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் வந்து நின் மேல் பூசல் செய்ய –
தெருவிலே விளையாடுகிற பிள்ளைகள் முதலானோர் பலரும் -உன் மகன் எங்களை அடித்தான் -என்று முறைப்படுவதாக
பிள்ளைகளையும் கொண்டு வந்து தீம்பேற்றிக் காட்டின அளவிலே
ஆய்ச்சி நான் ஒன்றும் செய்திலேன்
இவர்கள் தாங்களாக்கும் இவை எல்லாம் செய்தார்கள் -என்று இவர் பீதனாய் அழப் புகுந்தவாறே
இவள் அமுது கொடு வந்தவர்களை அழுகை மாற்றுதல்
இவனை சிஷித்தல் செய்யாதே
தன்னைத் தானே நலிந்து கொள்ளப் புக்கவாறே
அவர்கள் தாய்மார் வந்தவர்கள் -இது என் என்று விலக்கப் புக்கவாறே
இந் நேரிலே தம் தாம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ -என்றது கேட்டு
அவர்கள் போனவாறே இவனைப் பிடித்து நலிவதாகத் தேடி -இவன் அழுகையைக் கண்டு
உன் மேல் எல்லாரும் தீம்பேற்றி அலர் தூற்ற -அதுவே யாத்ரையாக –

ஊரில் பிள்ளைகளோடே விளையாடப் புக்கால் எல்லாரையும் போல் அன்றிக்கே –
நீ அவர்களை அடித்து குத்தி விளையாடா நின்றாய் -இப்படி செய்யலாமோ -தம் தம் பிள்ளைகள் அழுது சென்றால் –
அவர்கள் தாய்மாரானவர்கள் பொறுக்க மாட்டார்கள் –
வந்து நின் மேல் பூசல் செய்ய -அவர்கள் தாங்கள்-தங்கள் பிள்ளைகளையும் பிடித்து கொடுவந்து உன் மேலே
சிலுகு -சண்டை -இட்டு பிணங்க

வாழ வல்ல வாசுதேவா -உந்தையார் உன் திறத்தரல்லர்-
பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ-என்று கோபித்து –
வாழ வல்ல -அதிலே ஒரு சுற்றும் இளைப்பு இன்றிக்கே -பிரியப்பட்டு -இதுவே போகமாக இருக்க வல்ல –
வாசுதேவா -வாசுதேவன் புத்திரன் ஆனவனே -பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ
அத்தை மறந்து

நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –
நந்த கோபனுக்கு என்றே வாய்த்த பிள்ளாய் -என்று கோபித்து
உந்தையரான ஸ்ரீ நந்தகோபர் உன் திறத்தல்லர் -உன்னை சிஷித்து வளர்க்க மாட்டார்-
உன்னுடைய தமப்பன் ஆனவர் உன்னிடையாட்டம் இட்டு எண்ணார்-என்றபடி –
ஸ்ரீ நந்த கோபர்க்கு வாய்த்த பிள்ளாய் -அணி -அழகு –
இவன் தீம்பிலே உளைந்து சொல்லுகிற வார்த்தை

உன்னை நான் ஓன்று இரப்ப மாட்டேன் –
நானும் உன்னை அதிரக் கோபித்து -நியமிக்க மாட்டேன் –
தீம்பனான உன்னை -அபலையான நான் -ஒரு வழியாலும் தீர நியமிக்க மாட்டேன் –

அத்தையும் மறைத்து -இவனை எடுத்து
சுரந்த முலையை -நான் தர -நீ உண்ணாய்-என்று பிரார்த்திக்க வேண்டி நில்லா நின்றது இறே-
அவை எல்லாம் கிடக்க -இப்போது நான் சுரந்த முலையை அமுது செய்யாய் –

—————————————

கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
பஞ்சி அன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர்கோவே ஆயர் கூட்டத்து அளவு அன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை உணாயே -2-2-4-

பஞ்சி என்கிற இது பஞ்சு என்பதற்கு போலி –

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு-
பிறப்பதற்கு முன்னே கொலை கருதிப் பார்த்து இருக்கிறவன்
திருவாய்ப்பாடியிலே வளருகிறான் -என்று கேட்டால் கொலை கருதி விடாது இரான் இறே
இனி -இதுக்காவான் இவன் -என்று தன் நெஞ்சில் தோன்றின க்ருத்ரிம வியாபாரங்கள் எல்லாத்துக்கும் தானே
சப்தமிட்டுப் புணர்ந்து சகடாசூரனைக் கற்பித்து வரவிட வருகையாலே -கள்ளச் சகடு -என்கிறார் –
பூதனையிலும் களவு மிகுத்து இருக்கும் காணும் -ஆவேசம் ஆகையாலே சகடாசுரனுக்கு-
உன் மேலே கறுவதலை உடையனான கம்சனாலே உன்னை நலிகைக்காக –
கற்ப்பிக்கப் பட்ட க்ர்த்ரிமமான சகடமானது -அசூரா விஷ்டமாய் வருகையாலே -கள்ளச் சகடு -என்கிறது –

கலக்கழியப்பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது -நொந்திடும் என்று-அஞ்சினேன் காண்
கலக்கழிய –
தளர்ந்தும் முறிந்தும் உடல் வேறாக பிளந்து வீய -என்கிறபடியே கட்டுக் குலைந்து உரு மாய்ந்து போம்படியாக
பஞ்சி இத்யாதி –
பஞ்சு போன்ற மிருதுவான திருவடிகளாலே உதைத்த போது -திருவடிகள் நோம் -என்று பயப்பட்டேன் காண் –
சாடு கட்டுக் குலைந்து அச்சு தெறித்து போம்படி பஞ்சிலும் காட்டிலும் அதி மார்த்வமான
திருவடிகளால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண்-

அமரர் கோவே -தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே –
அமரர் கோவே –
அமரருடைய பாக்யத்தாலே இறே நீ பிழைத்தது -என்னுதல்-
அன்றிக்கே
பிரதிகூலித்து கிட்டினார் முடியும்படியான முஹூர்த்த விசேஷத்திலே நீ பிறக்கையாலே -என்னுதல் –
இப்படி பய நிவர்த்தகங்களைக் கண்டாலும் பயம் மாறாது இறே இவருக்கு –
உன்னைக் கொண்டு தங்கள் விரோதியைப் போக்கி –
வாழ இருக்கிற அவர்கள் பாக்யத்தால் இறே -உனக்கு ஒரு நோவு வராமல் இருந்தது -என்கை –

ஆயர் கூட்டத்து அளவன்றாலோ-
பஞ்ச லஷம் குடி இருப்பிலும் திரண்ட பிள்ளைகள் அளவன்றாகில்
ஒ ஒ உன்னை எங்கனே நியமித்து வளர்ப்பேன்
ஆயருடைய திரள் அஞ்சின அளவல்ல காண் -நான் அஞ்சின படி –
ஆல் ஒ என்றவை விஷாத சூசகமான அவ்யயங்கள்

இங்கனே இவர் ஈடுபட புகுந்தவாறே -நம் கையில் கம்சன் பட்டது அறியீரோ -என்ன
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை யுணாயே-
கம்சன் பட்டது உன் பக்கல் பண்ணின வஞ்சனை ஆகிய பாப வலை சூழ்ந்து அன்றோ பட்டது
நீ வலைப்படுத்தாய் -என்கிறது வ்யாஜம் மாதரம் அன்றோ –
அன்றைக்கு நீ பிழைத்தது என் பாக்கியம் அன்றோ -என்னுதல் –
அன்றிக்கே
நீ வஞ்சனை செய்து சிறைப்படுத்திக் கொல்ல-அவன் பிராணன் இழந்த படியால் -நான் பிராணன் பெற்றேன்
என்று தேறி முலை யுண்ணாய் என்கிறார்-
உன் திறத்திலே வஞ்சனைகளை செய்த கம்சனை -நீ அவன் திறத்தில் செய்த வஞ்சனையாலே
தப்பாதபடி அகப்படுத்தி முடித்தவனே
முலை உணாயே -இப்போது முலையை அமுது செய்ய வேணும் –

—————————————————————————–

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2 -2-5 – –

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் –
ஜன்மாந்தர வாசனையாலும்
அசத் சஹ வாசங்களாலும்
துஷ்ட மந்த்ரிகள் வார்த்தை கேட்கையாலும்
சாதுவான அக்ரூரர் வார்த்தை கேலாமையாலும்
ராஜ குலத்தில் பிறந்து இருக்கச் செய்தேயும் தனக்கு என்று ஓர் அறிவு இல்லாமையாலும்
சகல பிராணி விருத்தமான அசன் மார்க்க நிரூபகன் ஆகையாலும்
இவை எல்லாத்துக்கும் ஹேதுவான கர்ப்ப தோஷத்தாலும் -தீய புந்திக் கஞ்சன் -என்கிறார் –

தீய புந்தியாவது –
அஹங்கார மமகார நிபந்தனமாக
தன்னைத் தானே முடிக்க விசாரித்து அத்யவசித்து இருக்கை-
இப்படிப்பட்ட புத்தியை யுடையவன் நிர் நிபந்தனமாக உன் மேல் அதி குபிதசலித ஹ்ருதயனாய்
விபரீத தர்மங்களான மாயா ரூபிகளை பரிகாரமாக யுடையவனாய்

தீய புந்திக் கஞ்சன் -துர் புத்தியான கம்சன் -பிள்ளைக் கொல்லி இறே-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாபிஷ்டன் இறே –
உன் மேல் சினமுடையன் -தேவகி உடைய அஷ்டம கர்ப்பம் உனக்கு சத்ரு -என்று
அசரீரி வாக்யத்தாலே கேட்டு இருக்கையாலும் –
பின்பு துர்க்கை சொல்லிப் போந்த வார்த்தையாலும் –
நமக்கு சத்ரு வானவன் கை தப்பிப் போய் நம்மால் கிட்ட ஒண்ணாத ஸ்தலத்திலே புகுந்தான் –
இவனை ஒரு வழியாலே ஹிம்சித்தாய் விடும்படி என் -என்று இருக்கையாலும் –
உன்னுடைய மேலே மிகவும் குரோதம் உடையவன் –

எப்போதோ இடம் -என்று சோர்வு பார்த்து மாயா ரூபிகளை வரவிட்டு
அவர்களுடைய சூட்சி யாகிற வலையிலே அகப்படில் நான் உயிர் வாழ்ந்து இரேன்-முடிவன் –
சோர்வு பார்த்து-மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா-
தனியே புறப்படுகை –
உன்னாலே இறே சாதுவான வாசுதேவன் முதலானாரையும் அவன் நலிகிறது
உன்னைக் கண்டால் அவன் வர விட்ட மாயா ரூபிகள் விடுவார்களோ –

சோர்வு பார்த்து -அவிழ்ச்சி பார்த்து -அதாவது நீ அசஹாயனாய் திரியும் அவசரம் பார்த்து -என்கை-
மாயம் தன்னால் வலைப் படுக்கில் -உன்னை நலிகைக்காக மாயா ரூபிகளான ஆசூர பிரகிருதிகளை
திர்யக்காகவும் ஸ்தாவரமாகவும் உள்ள வடிவுகளை கொண்டு நீ வியாபாரிக்கும்
ஸ்தலங்களில் நிற்கும் படி பண்ணியும் -நீ அறியாமல் வஞ்சனத்தால் நழுவாதபடி பிடித்து கொள்ளில் –
வாழ கில்லேன் -நான் பின்னை ஜீவித்து இருக்க ஷமை அல்லேன் -முடிந்தே விடுவேன் –
வாசுதேவா -உன்னாலே இறே சாதுவான அவரும் சிறைப்பட வேண்டிற்று

தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா-
கீழே -தேவகி சிங்கமே -என்று சொல்லி வைத்து
இப்போது தன்னை மாதாவாக சொல்லும் போது
பித்ருத்வம் நோபலஷயே -அயோத்யா -58-31-
உந்தை யாவன் என்று உரைப்ப -பெருமாள் திரு மொழி -7-3-
நந்த கோபன் மைந்தன்
நந்த கோபன் பெற்றனன் –
எங்கு இங்கிதத்தாலே காட்டினானாக வேணும் இறே
பிறந்த அன்றே மாத்ரு வசனம் கார்யம் -என்று கொண்ட யுனக்கு
என் வார்த்தையும் கார்யம் என்று கைக் கொள்ள வேணும் காண்-
பலரும் அறியும்படி பல காலும் சொன்னேன்
லீலா ரசத்தை நச்சியும் போகாதே கொள்-
உத்தேச்யதையாலும் பரிவாலும் தாய்மார் வாக்கால் சொல்லுவது பிள்ளைகளுக்கு அவசிய கரணீயம் காண் -என்கை-
சாற்றிச் சொன்னேன் போக வேண்டா -இது தன்னை குன்னாம் குருச்சியாக -ரகஸ்யமாக -அன்றிக்கே
எல்லாரும் அறியும் படி பிரசித்தமாக சொன்னேன் -லீலா அர்த்தமாகவும் நீ தனித்து ஓர் இடத்தில் போக வேண்டா

ஆயர்பாடிக்கு அணி விளக்கே –
என் அளவேயோ
இவ் ஊரில் உள்ள எல்லாரும் உன்னையே காணும்படி அழகிதான தீபம் போலேயான
சௌந்த்ர்யாதி குணங்களாலே பிரகாசிதன் ஆனவனே –
விளக்குக்கு அழகு தூண்டாமையும் நந்தாமையும் –
இப்படி இருப்பதொரு விளக்கு யுண்டோ என்னில்
ப்ரதீதியில் ப்ரத்யஷ மாத்ரத்தாலே யுண்டு என்னவுமாம் –
அனுமானம் ப்ரத்யஷ சாபேஷம் ஆனாலும் ப்ரத்யஷம் அனுமானம் சாபேஷம் ஆகாது
ஆயிருக்க இரண்டும் ஸ்மாரக தர்சனத்தாலே ஏக ஆஸ்ரயத்திலே காண்கையாலே
இவை நிரூபியாமல் கண்ட மாத்ரமே கொண்டு -அணி விளக்கு -என்னுதல்
அன்றியிலே
அபூதம் என்னுதல் –

ஆயர்பாடிக்கு அணி விளக்கே -திரு வாய்ப்பாடிக்கு ஒரு மங்கள தீபம் ஆனவனே –
அணி-அழகு
இத்தால்-எனக்கே அன்று -உனக்கு ஒரு தீங்கு வரில் -இவ்வூராக இருள் மூடி விடும் கிடாய் -என்கை

யமர்ந்து என் முலை யுணாயே —
உன் இஷ்டத்திலே போக்குவரத்து சீகர கதி யானாலும்
அழைக்க வரும் போது மந்த கதியாக வேணும் காண் –
ஆனபின்பு பரபரப்பை விட்டு பிரதிஷ்டனாய் வந்து உனக்கு என்று சுரந்து இருக்கிற முலையை
அமுது செய்ய வேணும் –

இனி இவர்க்கு முலைப்பால் ஆவது
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமாய் –
மங்களா சாசன பர்யந்தமான பக்தி ரூபா பன்ன ஜ்ஞான ப்ரவாஹம் இறே
பக்தி உழவன் ஆனவனுக்கு தாரகாதிகள் எல்லாம் இது தானே இறே-

————————————————————————–

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –

மின்னனைய நுண்ணிடையார் –
மின்கொடி ஒரு வகை ஒப்பாயிற்று ஆகிலும் -அது போராமை இறே நுண்ணிடையார் என்கிறது –

மின்னோடு ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்-
மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே சூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –

விரி குழல் மேல் நுழைந்த வண்டு –
விரி குழல் -என்கையால் -நீண்டு பரந்து இருண்டு சுருண்டு நெய்தது-என்றால் போலே
சொல்லுகிற எல்லா வற்றுக்கும் உப லஷணம்
விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –
குழல் மேல் வந்து படிந்து உள்ளே முழுகின வண்டுகள் மது பானம் செய்த செருக்கால் –

இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
இனிதான இசைகளைப் பாடா நிற்கிற ஸ்ரீ வில்லிபுத்தூரை-
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே –
ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே-
பரம சாம்யாபந்யருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே –

இனிது அமர்ந்தாய் –
பரமபதத்திலும் காட்டிலும் மிகவும் விரும்பி அந்த இசையைக் கேட்டு
இனிது அமர்ந்து இறே- வட பெரும் கோயில் யுடையான் கண் வளர்ந்து அருளுகிறது –
நித்ய நிர்தோஷ
ஸ்வயம் பிரகாச
அபௌருஷேய
ஏகாரத்த நிர்ணயமான
சகல வேதங்களையும் மங்களா சாசன பர்யந்தமாக நிர்ணயித்து
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் -என்று பிரசித்தரான இவர்
வேறு ஒரு வ்யக்தியில் சேர்க்கவும் அரிதாய்
அசாதாரணங்களான-விஷ்ணு வாசுதேவன் -நாராயணன் -என்னும் திரு நாமங்கள் யுண்டாய் இருக்க
வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் -என்று வஸ்து நிர்த்தேசம் செய்தார் இறே
இது இறே பிரமாணிகருக்கும் சாஷாத் கர பரருக்கும் உத்தேச்யம் –

யுன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த –
உன்னைக் கண்ட பாக்யாதிகர் -ஸூக தாதம் -என்னும்படி யான வ்யாசாதிகள் உடைய உபாசன மாத்ரங்கள் அன்றிக்கே
இதுவே இறே ஒரு படியாய் இரா நின்றதீ -என்று விஸ்மிதராய்
இவனைப் பெற்ற வயிறு யுடையாள்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ-என்று
பலகாலும் சொல்லும்படியான வார்த்தையால் வந்த பிரசித்தியை யுன்டாக்கித் தந்த –

நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால் வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் –
நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும் உண்டு இறே –
அவ்வளவு அன்றிக்கே லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் –
இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை –
எனக்கு உண்டாக்கித் தந்த

இருடீ கேசா முலை யுணாயே-
இந்த்ரியங்கள் வ்யக்தி அந்தரங்களிலே செல்லாதபடி சௌந்தர்யாதிகளாலே அபஹரிக்க வல்லவனே –
இருடீகேசா -கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாதபடி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –
முலை உணாயே-

இடையாலே
ஒன்றையும் பொறாத வைராக்யமும் –
இடை நோக்குவது
முலைகள் விம்மி பெருத்தல் ஆகையாலே மிக்க பக்தியையும்
விரி குழல் -என்கையாலே –
நாநா வானப் பிரபத்திகளை ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் -ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்
மேல் நுழைந்த வண்டு -என்கையாலே இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்
இன்னிசை -என்கையாலே
ஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்
இவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது திரு மாளிகையிலே ஆகையாலே இத்தை உகந்து அருளி
இனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-

—————————————————————————

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்கி நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 7- –

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
புத்ர சாபேஷராய் வர்த்திக்கிற ஸ்திரீகள் உன்னைக் கண்டால் அபஹ்ருத சித்தைகளாய்-
நாம் இப்படி ஒரு பிள்ளை பெறப் பெறுகிறோம் இல்லையே நமக்கு இது கூடுமோ என்கிற ஆசையோடு –
ஸ்வ பர்த்தாக்களுக்கு பார்யைகளாய் வர்த்திப்பராய் உன்னைக் கண்டவர்கள் –
உன்னைப் போலே இருக்கும் பிள்ளைகளை பெற வேணும் என்னும் ஆசையாலே கால் வாங்கி
போக மாட்டாதபடியாய் விட்டார்கள் –

கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
தம்தாமுடைய உத்தியோகங்களை மறந்து நில்லா நின்றார்கள் –

வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக் கொண்டு போவான் வந்து நின்றார்-
வேறு யுவதிகளாய் இருப்பார் வண்டு முழுகி முழுசும்படியான செவ்வி மாறாத மாலைகளாலே
அலங்க்ருதமான குழல்களையும் யுடையார் சிலர்
தம் தாமுடைய அபிமதங்களாலே ஸ்பர்சிப்பதாக நினைத்து
தங்கள் கண்களாலே சமுதாய சோபா தர்சனம் செய்து அணைத்து எடுத்து
வாக் அம்ருத சாபேஷைகளாய் கொண்டு போவதாக வந்து நில்லா நின்றார்கள் –
நீயும் அவர்களோடு போவதாக பார்த்து ஒருப்படா நின்றாய் –

வண்டுலாம் பூம் குழலினார் கண் இணையால் கலக்கி நோக்கி-பெருக்காற்றிலே இழிய மாட்டாமையால்
கரையிலே நின்று சஞ்சரிப்பாரைப் போலே
மதுவின் சமர்த்தியாலே உள்ளே அவஹாகிக்க மாட்டா வண்டுகள் ஆனவை மேலே நின்று சஞ்சரிக்கும் படி –
பூவாலே அலங்க்ர்தமான குழலை உடையவர்கள் –
தன்னுடைய கண்களால் உன்னுடைய சமுதாய சோப தர்சனம் செய்து –
கலக்க நோக்குகையாவது -ஓர் அவயவத்தில் உற்று நிற்கை அன்றிக்கே திருமேனியை எங்கும் ஒக்க பார்க்கை –

கீழ் -பெண்டிர் வாழ்வார் -என்று
பக்வைகளாய் பர்த்ர் பரதந்த்ரைதகளாய்-புத்திர சாபேஷைகளானவர்களை சொல்லிற்று –
இங்கு வண்டுலாம் பூம் குழலினார் என்று –
ப்ராப்த யவ்வனைகளாய்-போக சாபேஷைகளானவர்களை சொல்லுகிறது –
உன் வாக் அமிர்தம் புசிக்க வேண்டி -உன்னை எடுத்து கொண்டு போவதாக வந்து நின்றார்கள்-

கோவிந்தா நீ முலை யுணாயே –
நீ கோவிந்தன் ஆகையாலே அவர்களோடு போகவும் வேணும்
போம் போது- யுண்டு போகவும் வேணும் காண்-என்று பிரார்த்திக்கிறார் –
கோவிந்தா -சர்வ சுலபனாணவனே -உன் ஸுவ்லப்யத்துக்கு இது சேராது -நீ முலை உணாயே –

————————————————–

இருமலை போல் எதிர்ந்த மள்ளர் இருவர் அங்கம் எரி செய்தாய் உன்
திரு மலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே -2 2-8 – –

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய்-
ஷீராப்தியில் வந்து நலிவதாகக் கோலி
இரண்டு பெரிய மலை போலே கிளர்ந்து வந்த
மது கைடபர்கள் என்கிற இரண்டு மல்லரை
திரு வநந்த ஆழ்வானாலே உரு மாயும் படி எரித்துப் பொகட்டாய்-என்னுதல்-
கம்சனுடைய மல்லர் உன்னைக் கண்ட பய அக்னியாலே எரித்து விழும்படி செய்தாய் -என்னுதல் –
வடிவின் பெருமையாலும் -திண்மையாலும் இரண்டு மலை போலே வந்து
அறப் பொருவதாக எதிர்த்த சாணூர முஷ்டிகர் ஆகிற இரண்டு மல்லருடைய சரீரம் ஆனது
பய அக்னியால் தக்தமாம் விழும் படி பண்ணினவனே-

உன் திரு மலிந்து திகழ் மார்வு தேக்க –
திரு மலிந்து தேர்க்கும் உன் மார்வு திகழ –
மலிகை யாவது -க்ராம நிர்வாஹன் முதலாக
பஞ்சாசத் கோடி விச்தீர்ண அண்டாதிபதி பர்யந்தமான அளவன்றிக்கே
த்ரிபாத் விபூதியில் யுள்ளாரிலும் வ்யாவ்ருத்தையாய்
சர்வ பூதாநாம் ஈஸ்வரி -என்கிற சர்வாதிக்யத்தை யுடைய
பெரிய பிராட்டியாராலே நிரூபிக்கப் பட்ட உன் மார்பு திகழ –
இத்தால் -அவன் ஸ்ரீ யபதி -என்ன வேணுமே
மலிதல் -கிளப்பும்
தேர்க்கை -நிரூபகம்
திகழ்தல் -ஸ்ரீ யபதி -என்னும் விளக்கம்

உன் இத்யாதி -உன்னுடைய அழகு மிக்கு விளங்கா நின்று உள்ள மார்பானது
மலிதல் -மிகுதி —
திகழ்ச்சி -விளக்கம்
அன்றிக்கே-திரு என்று பிராட்டியை சொல்லுகிறதே -அவள் எழுந்து அருளி இருக்கையாலே
மிகவும் விளங்கா நின்று உள்ள உன்னுடைய மார்வு என்னவுமாம் –

தேக்க -தேங்க -முலைப்பாலாலே நிறையும்படியாக –
அன்றிக்கே
தேக்க -என்ற பாடம் ஆயிற்றாகில் -உன் மார்பில் முலைப்பால் தேங்க -என்கிறது –

என்னல்குல் ஏறி-
என் ஒக்கலையிலே வந்து ஏறி –என் மடியிலே வந்து ஏறி –

ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
ஒரு முலையைத் திருப் பவளத்திலே வைத்து-ஒரு முலையை திருக்கையிலே பற்றி நெருடிக் கொண்டு

இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே-
இரண்டு முலையையும் மாறி மாறி பால் வரவின் மிகுதி திருப் பவளத்தில் அடங்காமையாலே-விட்டு விட்டு என்னுதல்-
உடலை முறுக்கி ஏங்கி ஏங்கி என்னுதல்
அமர விருந்து யுண்ண வேணும் –
மிகுதி -திருப் பவளத்தில் அடங்காமையால் நடு நடுவே இளைத்து இளைத்து -அமர இருந்து –
அமுது செய்ய வேணும் –

———————————–

புழுதி அளைந்த ஆயாசத்தாலே வந்த வேர்ப்பு முகத்திலே காண வந்து
அமுது செய்ய வேணும் -என்கிறார் –

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வெயர்ப்ப தீமை செய்தீம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக வளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே -2 2-9 – –

போதகத்தில்-நிறத்தாலும் -மணத்தாலும் -செவ்வியாலும் -விகாசத்தாலும் அழகியதாய் இருக்கும் –
தாமரைப் பூவின் இடத்தில் -போது -புஷ்பம் -அகம் -இடம்
அணி இத்யாதி -நீர்மையாலும் -ஒளியாலும் -அழகாய் உடைத்தான முத்துக்கள் ஆனவை சிதறினால் போலே

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல் செங்கமல முகம் வியர்ப்பத் –
அழகிதாக மலர்ந்த தாமரைப் பூவினுள்ளே
செவ்வி மாறாத மது வெள்ளத்தை வண்டுகள் யுண்டு களித்து சிதறின மது திவலை முத்து போலே –
அச் செங்கமலம் போலே இருக்கிற திரு முகத்திலே வேர்ப்பு துளிகள் அரும்ப -என்னுதல்-
அங்கமலச் செங்கமல முகத்தில் ஒளியை யுடைத்தான முத்துக்கள் சிந்தினால் போலே வேர்ப்ப அரும்ப -என்னுதல்
அப்போது -கமலம் -என்று ஜலத்துக்கு பேராம்
அம் -என்று அழகு-

சிவந்து மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திரு முகமானது குறு வெயர்ப்பு அரும்பும்படியாக –

தீமை செய்து இம் முற்றத்தூடே அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா-
இப்போது முற்றத்தோடு அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா –
இப்போது திரு மேனி எல்லாம் புழுதியாக முற்றத்தின் நடுவே இருந்து அளைய வேண்டா-
இம்முற்றத்துள்ளே நின்று தீம்புகளை செய்து -உடம்பு எல்லாம் புழுதியாக இருந்து புழுதி அளைய வேண்டா –

வம்ம-
ஆச்சர்யம் -என்னுதல்
இவன் சேஷ்டித தர்சனத்தால் வந்த ஆசார்ய உக்தி ஆதல் –
ஸ்வாமி -என்னுதல் –

விம்ம அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை யுணாயே
அங்கு அமரர்க்கு விம்ம அமுதம் அளித்த அமரர் கோவானவனே
விம்மல் -நிறைதல் –
விம்ம-நிரந்தரமாக –
துர்வாச சாபோபஹதராய் அசுரர்கள் கையில் ஈடுபட்டு சாவாமைக்கு மருந்து பெறுகைக்கு
உன்னை வந்து ஆஸ்ரயித்த தேவர்களுக்கு -அத்தசையில் வயிறு நிரம்ப அம்ர்தத்தை இடுகையாலே
அவர்களுக்கு நிர்வாஹனானவனே-

முலை உணாயே –
அப்போது அவர்கள் அபேஷைக்கு அது செய்தால் போலே -இப்போது என்னுடைய
அபேஷைக்காக நீ முலை உன்ன வேணும் என்கை-

————————————————-

ஓட ஓட கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்து இட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி
ஓடி ஓடி போய் விடாதே உத்தமா நீ முலை உணாதே -2 2-10 – –

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே பாடிப் பாடி –
ஓசைக் கிண்கிணிகள் ஓடவோட ஆட ஒலிக்கும் பாணியாலே
பாணி -த்வனி –
கிண்கிணி ஒலிக்கும் பாணி தாளமாகப் பாடிப் பாடி –
அதனுக்கு ஏற்ற கூத்தை அசைந்து அசைந்து ஆடி –

ஓட ஓட இத்யாதி –
நடக்கும் போது மெத்தென நடக்கை அன்றிக்கே -பால்யத்துக்கு ஈடான செருக்காலே பதறி ஓட ஓட –
பாத சதங்கைகளான கிண் கிணிகள் த்வனிக்கும் -த்வநியாகிற சப்தத்தாலே
பாடிப்பாடி -அதனுக்கு ஏற்ற கூத்தை -அசைந்து அசைந்து இட்டு –
ஆடி ஆடி -அந்த பாட்டுக்கு தகுதியான ந்ர்த்தத்தை
திரு மேனி இடம் வலம் கொண்டு -அசைந்து அசைந்திட்டு நடக்கிற நடையாலே-ஆடி ஆடி –
கூத்தன் கோவலன் -இறே-நடக்கிற நடை எல்லாம் வல்லார் ஆடினால் போலே இறே இருப்பது –
ஆகையால் விரைந்து நடந்து வரும் போது -திருவடிகளில் சதங்கைகளின் உடைய ஓசைகள்
தானே பாட்டாய்-நடக்கிற நடை எல்லாம் ஆட்டமாய் இருக்கும் ஆய்த்து –
அன்றிகே –
கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசை தாளமாய் -வாயாலே பாடிப் பாடி -அதனுக்கு ஏற்ற
கூத்தை அசைந்து அசைந்திட்டு ஆடி ஆடி என்று பொருளாகவுமாம்

வருகின்றாயைப்
வருகிற யுன்னை –

பற்பநாபன் என்று இருந்தேன் –
கீழே பற்பநாபா சப்பாணி -1-7-5-என்றத்தை நினைத்து
பற்ப நாபன் என்று இருந்தேன் -என்கிறார் –
ஜகத் காரண வஸ்துவான மேன்மையை நினைந்து இருந்தேன் –
அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்றும்படி பிள்ளைத்தனத்தால் வந்த நீர்மை மாத்ரம் அன்றிக்கே
அதிமாத்ரமான இந்த லீலா ரசம் எல்லாம் வேணுமோ -வாராய் -என்ன –

வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் –
இப்படி என்னை நோக்கி வாரா நின்றுள்ள
உன்னை -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -என்கிறபடியே வேறு ஒரு ஆபரணம் வேண்டாதே –
திரு நாபி கமலம் தானே ஒரு ஆபரணம் ஆம்படி இருப்பான் ஒருவன் அன்றோ –
இவனுக்கு வேறு ஒரு ஆட்டும் பாட்டும் வேணுமோ –
சதங்கை ஓசையும் நடை அழகும் தானே பாட்டும் ஆட்டுமாய் இருந்தபடி என்-என்று
ஆச்சர்யப்பட்டு இருந்தேன் -என்னுதல்
அழிந்து கிடந்ததை உண்டாக்கும் அவனன்றோ -நம்முடைய சத்தியை தருகைக்காக வருகிறான் என்று
இருந்தேன் -என்னுதல்-

ஆடியாடி யசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே –
ஒடப்புகுந்தான் –
தாமும் அடிப்பதாக செல்ல ஓடி ஓடி போகிறதைக் கண்டு
போகாதே கொள்ளாய்-நீ உத்தமன் அன்றோ -முலை யுண்ண வாராய் -என்கிறார் –
புருஷோத்தமத்வம் ஆவது -ஆஸ்ரித பாரதந்த்ர்யம் போலே காணும்
இத்தால் அப்ராப்ய மனசா சஹ -என்று வேதங்களுக்கு எட்டாமல் போனால் போலே
பரம வைதிக அக்ரேசரராய் இருக்கிற இவர்க்கும் எட்டாமல் போகலாமோ என்று தோற்றுகிறது-

ஓடி ஓடி இத்யாதி -இவள் சொன்னதின் கருத்து அறியாதே -இவள் நம்முடைய நீர்மையை சொல்லாமல் –
ஸுவ்ந்தர்ய பிரகாசமான மேன்மையை சொல்லுவதே -என்று -மீண்டு ஓடிப் போக தொடங்குகையாலே-
இப்படி ஆடி ஆடி கொண்டு என் கைக்கு எட்டாதபடி -ஓடி ஓடி போய் விடாதே -நீ புருஷோத்தமன் ஆகையாலே –
ஆஸ்ரித பரதந்த்ரனான பின்பு -என் வசத்திலே வந்து -என் முலையை உண்ண வேணும் -என்கிறாள் –

ஓசை கிண்கிணிகள் ஓடவோட ஆடியாடி ஒலிக்கும் பாணியாலே
பாடிப் பாடி அதனுக்கு ஏற்ற கூத்தை யசைந்து யசைந்திட்டு
ஆடியாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே -என்று அந்வயம் –

———————————————————————–

நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்றசிந்தை பெறுவார் தாமே -2 2-11 – –

வாரணிந்த கொங்கை யாச்சி –
ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை
பரிசாரகர் ஆனவர்கள் கட்டி இலச்சினை இட்டு கொண்டு திரிவாரைப் போலே இறே
கிருஷ்ணனுக்கு அபிமதமான முலைகள் கச்சிட்டு சேமித்து வைத்து -என்னும் இடம் தோன்ற
வாரணிந்த கொங்கை யாச்சி -என்கிறார்
புத்ரவத் ஸ்நேஹம் நடக்கும் போது ராஜவத் உபசாரமும் வேணும் இறே
வார் -கச்சு –

ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை பரிசாரகரானவர்கள் கட்டி
இலச்சினை இட்டுக் கொண்டு திரியுமா போலே -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு போக்யமான முலைகள் பிறர்
கண் படாதபடி கச்சாலே சேமித்துக் கொண்டு திரிகையாலே -வாராலே அலங்க்ர்தமான முலையை
உடையவளான ஆய்ச்சி என்று ஸ்லாகித்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –

மாதவா யுண் என்ற மாற்றம் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே அவாப்த சமஸ்த காமன் ஆனவனை இறே
முலை யுண்ண வா -என்று ஆச்சி அழைத்ததும் –அவள் அளித்த பிரகாரங்களை-

மாதவா உண் என்ற மாற்றம் -ஸ்ரீ யபதி யாகையாலே -அவாப்த சமஸ்த காமனான அவனை –
அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு ஈடாக முலை உண் என்ற சப்தத்தை –

நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர் –
நீருக்கு அலங்காரமாக மலர்ந்த செங்கழு நீரில் மிக்க பரிமளம் ஒருபடிப்பட தோன்றுகிற
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகராய்-

பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார் –
பூமியில் யுண்டான ராஜாக்களுக்கு எல்லாம் பிரதானனான
ஸ்ரீ வல்லபன் -செல்வ நம்பி -முதலானோர் கொண்டாடும் படியுமாய்
அநாதி சித்தமான மங்களா சாசன பிரசித்தியையும் யுடையவர் –
பட்டர் பிரான் –
சத்ய வாதிகளான ப்ராஹ்மன உத்தமர்க்கு உபகாரகர் ஆனவர்
பாடல் வல்லார் –
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும்
இவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே பாட வல்லார்-

பூமியில் ராஜாக்களுக்கு பிரதானனான பாண்டியனும் –
ஞாதாக்களில் பிரதானரான செல்வ நம்பி தொடக்கமானவர்கள் அன்றிக்கே
பூமி எங்கும் கொண்டாடும்படி வ்யாப்தமாய் -வந்தேறி அன்றிக்கே -ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான
புகழை உடையராய் ப்ராஹ்மன உத்தமரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த பாடலை அப்யசிக்க வல்லவர்கள் –

சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே —
பாட வல்லார் தாமே சென்ற சிந்தை பெறுவார்
சீர் –
ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
செங்கண் –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த ஐஸ்வர்யம் -ஆதல்
பெருமை யாதல்
வ்யாமோஹம் ஆதல் –

ஆத்ம குணங்களாலே அலங்க்ர்தனாய்-அவயவ சோபைக்கு பிரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையனாய் –
இவை இரண்டையும் ஆஸ்ரிதர் அனுபவிக்கும்படி அவர்கள் பக்கல் வ்யாமோகத்தை உடையவனாய் -இருக்குமவன் விஷயத்தில் –
அன்றிக்கே –
சீர் இத்யாதிக்கு -ஆஸ்ரித பாரதந்த்ரம் ஆகிற குணத்தாலே அலங்க்ர்தனாய் -இந்நீர்மைக்கும் மேன்மைக்கும்
ப்ரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையவனாய் -சர்வ ஸ்மாத்பரனாய் -இருக்குமவன்
விஷயத்திலே என்று பொருளாகவுமாம்
சென்ற இத்யாதி -பாடல் வல்லார் தாம் செங்கண் மால் பக்கலிலே ஒருபடி படச் சென்ற மனசை உடையவர் ஆவர்

ஜல சம்ருதி மாறாத செங்கழு நீரைச் சொல்லுகையாலே
மங்களாசாசன குணத்திலே ஒருப்பட்ட ஸூமநாக்களையும்-
நிகழ் நாறும் -என்கையாலே -அவர்களுடைய பிரசித்தியையும் சொல்லுகிறது –

————————————————————————————-

அவதாரிகை –3-1-
திரு ஆய்ப்பாடியிலே ப்ராப்த யவனைகளாய் லீலா பரைகளாய் திரிகிற –
பெண்கள் திறத்திலே அவன் -துச்சஹமான தீம்புகளை செய்து -தணலை நலிகிற பிரகாரத்தை –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
தாமும் அவர்களைப் போலே பேசி –
அவனுடைய அந்த லீலா அனுபவ ரசத்தை அனுபவித்தாராய் நின்றார் கீழ் –2-10-

மாதர் ஸ்நேஹத்தாலே பலகாலும் அவனை அம்மம் உண்ண அழைத்தும் –
அம்மமூட்டியும் போரும் ஸ்ரீ யசோதை பிராட்டி –
அவனுடைய பருவத்தின் இளமையையும் –
அதுக்கு அநுரூபம் அல்லாதபடியான – அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் கண்டு –
அவனை -தன்னுடைய பிள்ளை -என்று நினைந்து இருக்கை தவிர்ந்து –
அநியாம்யனாய் அப்ரதிஹத லீலா ரச பரனான சர்வேஸ்வரன் -என்று அனுசநதித்து –
அவனைக் குறித்து அவை தன்னைச் சொல்லி –
உனக்கு அம்மம் தர அஞ்சுவன் -என்று பல காலும் பேசின பாசுரத்தை –
தத் அவஸ்தா பன்னராய் கொண்டு –
தாமும் அப்படி பேசி –
அந்த ரசத்தை அனுபவிக்கிறார்
இத் திருமொழியில் –

——————————————————-

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்
பொன் ஏய் நெய்யோடு பால் அமுதுண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 – –

அன்னே -அம்மே என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை
தன்னேர் இத்யாதி –
கிருஷ்ணன் திரு ஆய்ப்பாடியிலே வந்து அவதரித்த போது அவனோடு ஒக்க ஆயிரம் பிள்ளைகள்
சேரப் பிறந்தார்கள் -என்று சொல்லுவதொரு பிரசித்தி உண்டு இறே
பிறப்பாலும் வளர்ப்பாலும் வயஸ்சாலும் வளர்த்தியாலும் -அந்யோந்யம் உண்டான ஸ்நேகத்தாலும் –
தன்னோடு ஒக்க சொல்லலாம்படி இருப்பார் ஆயிரம் பிள்ளைகளோடு ஆய்த்து தளர் நடை இட்டு வருவது –
பால்யாத் பிரபர்த்தி சுச்நிக்த – என்று பால்யம் தொடங்கி ஸ்ரீ பெருமாளை
ஒழிய தரிக்க மாட்டாத ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே -இவர்களும் பால்யமே தொடங்கி
இவனை ஒழிய தரிக்க மாட்டாத சிநேகத்தை உடையராய் -எப்போதும் ஒக்க கூடித் திரிகையாலே
இவர்களோடு கூடியே தளர் நடை இட்டு வருமவனே -என்று சம்புத்தி

பொன் ஏய் நெய்யோடு பால் அமுதுண்டு –
செவ்வி குன்றாமல் உருக்கி துஞ்சினது ஆகையாலே பொன்னோடு ஒத்த நிறத்தை உடைத்தான
நெய்யோடு -ரச்ச்யமான பால் அமுதை உண்டு –

ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
புள்ளுவம் ஆவது -மெய் போல் இருக்கும் பொய் —
உண்டு இருக்க செய்தே -உண்டிலேன் -என்கையாலே -அசத்யவாதி -என்று தோற்றும் இறே –
ஒரு புள்ளுவன் -என்றது -களவுக்கு அத்வதீயன் -என்றபடி
பொய்யே தவழும் –
தளர் நடை இட்டுத் திரிகிறவன் -அதுக்கு ஷமர் அல்லாதாரைப் போலே –
தவழுகிறதும் -க்ரித்ரிமம் என்று தோற்றும் இறே -ஆகை இறே பொய்யே தவழும் -என்ற இது –
இதுவும் பொய்யே தவழும் ஒரு புள்ளுவனே-என்று சம்புத்தி

மின்னேர் இத்யாதி –
பெற்ற தாய் வருகையாலே மின்னொடு ஒத்த நுண்ணிய இடையும் வஞ்சனத்தையும்
உடையளான பேய்ச்சி யானவள் முடியும் படி -அவள் முலையிலே திருப் பவளத்தை வைத்துண்ட உபகாரகன் ஆனவனே
இவ்விடத்தில் உபகாரம் ஆவது –
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரான தன்னை முடிக்க வந்தவளை நிரசித்து -தன்னை நோக்கி தந்த இது இறே

அன்னே
அதாவது -அம்மே -என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை
உன்னை அறிந்து கொண்டேன் –
முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை
உனக்கு தாரகாதிகளாகவும் நினைத்து இருந்தேன் -உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன்
நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
இப்படி இருக்கிற உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
தவழுகை பொய் என்றவோபாதி அம்மம் என்கிற இவன் சொலவும் பொய் என்று தோற்றா நிற்கச் செய்தேயும்
அவன் சொலவை அனுசரித்து சொல்கிறாள்

—————————————

பொன் போல் மஞ்சனமாட்டி யமுதூட்டிப் போனேன் வரும் அளவு இப்பால்
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 – –

பொன் இத்யாதி
திருமேனி அழகு விளங்கும்படியாக திரு மஞ்சனம் செய்து –
என் இளம் கொங்கை அமுதூட்டி-என்கிறபடியே அமுது செய்யப் பண்ணி –
யமுனை நீராடப் போனேன் -என்கிறபடியே
யமுனை யாகிற ஆற்றிலே குளிப்பதாக போன நான் வருவதற்கு முன்னே –

வல் பாரச் சகடம் இறச் சாடி –
வலியதாய் கனவிதாய் இருக்கிற சகடமானது கட்டுக் குலைந்து முறியும் படியாக –
முலை வரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்த திருவடிகளாலே உதைத்து –
வடக்கில் அகம் புக்கு இருந்து -இவ்வகத்துக்கு வட அருகில் அகத்திலே புக்கு இருந்து –
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை –
மின் போலே நுண்ணியதான இடையை உடையளாய்-நவ யவ்னையாய் இருப்பாள் ஒருத்தியை

வேற்று உருவம் செய்து வைத்த –
சம்போக சிஹ்னங்களாலே விகர்த வேஷையாம்படி பண்ணி வைத்த
அன்பா
கண்டது ஒன்றிலே மேல் விழும்படியான சிநேகத்தை உடையவனே
இத்தால்
தீம்பன் -என்ற படி –
உன்னை அறிந்து கொண்டேன் –
இவன் நம்மோடு சஜாதீயன் அல்லன் -வ்யாவர்த்தன் என்று உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன் –
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————–

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3- –

கும்மாய இத்யாதி –
குழைய சமைத்து வைத்த -பருப்போடு வெண்ணெயையும் சேர விழுங்கி
குடத்தயிர் இத்யாதி –
குடத்திலே நிறைந்த தயிரை-அத்தோடு சாய்த்து -அமுது செய்தது –
பொய் இத்யாதி –
தங்கள் வேஷம் அது அன்றிகே இருக்க செய்தே -பொய்யே ஆஸ்ரயமான மருதுகளாய் நின்ற
அசுரர்களை மறிய விழுந்து முறியும்படி பண்ணி
இன்று நீ வந்தாய் –
இப்போது ஒன்றும் செய்யாதவரைப் போலே நீ வந்தாய்
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ –
இந்த ஆச்சர்யங்களை செய்ய வல்லவனாய்-பிள்ளைத் தனத்தால் பூர்ணம் ஆனவனே

உன் என் மகனே என்பர் நின்றார் –
இப்படி இருக்கிற உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்-என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் –
நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –
எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் -உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்

——————————————————–

மையார் கண் மட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்தவர் பின் போய்க்
கொய்யார் பூம் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்தக்குள் கேட்டேன்
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-4 – –

கொய்யார் பூம் துகிலாவது -புடைவைகளின் கொய்ச்சகம்
மையார் இத்யாதி –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமான கண்களையும் –
ஆத்ம குணங்களில் பிரதானமான மடப்பத்தையும் -குடிப் பிறப்பையும் உடையரான பெண்களை –
மையன்மை செய்து –
உன் பக்கலிலே ஸ்நேகிதிகளாய் -தாய்மார் முதலானாருக்கு வசவர்த்திநிகள் ஆகாதபடி
உன்னுடைய ஸௌந்தர்யாதிகளால் பிச்சேற்றி –
அவர் பின் போய் –
அவர்களுடையே பின்னே போய்
கொய்யார் பூம் துகில் பற்றி –
கொய்தல் ஆர்ந்து இருந்து உள்ள அழகிய பரியட்டங்களை பிடித்து –
இத்தால் –
அவர்கள் பரியட்டங்களின் கொய்சகங்களைப் பிடித்து கொண்டு -அவர்கள் பின்னே போய் -என்கை

தனி நின்று குற்றம் பலபல செய்தாய் –
ஏகாந்த ஸ்தலத்திலே நின்று -அவஸ்யமான வியாபாரங்களை அபரிகங்யமாம்படி செய்தாய்
ஆவது என் -நான் ஒரு குற்றமும் செய்திலன் -நீ மாற்றுக் கண்டாயோ என்ன –
பொய்யா -இத்யாதி –
க்ரித்ரிமனே -உன்னைப் பொல்லாங்கு பலவற்றையும் பிறர் சொல்லும் அவைகள்
ஒரு புஸ்தகம் நிறைய எழுத தக்கவை கேட்டேன்
அவர்கள் சொல்லுவதும் நீ கேட்டதுமேயோ சத்யம் -நான் சொன்னதன்றோ சத்யம் -என்ன
ஐயா இது என்ன தெளிவு தான் என்று கொண்டாடுகிறாள்
அன்றிக்கே
ஐயா என்று க்ரித்மர்க்கு எல்லாம் ஸ்வாமி யானவனே என்கிறாள் ஆதல்
உன்னை அறிந்து கொண்டேன்
உன்னை அதி லோகமான வுக்தி சேஷ்டிதங்களை உடையவன் என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————–

முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் யினோடு தயிரும் விழுங்கிக்
கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த காலத்தோடு சாய்த்துப் பருகி
மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மி விம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 5- –

கப்பால்-தோளாலே
முப்போதும் இத்யாதி –
எப்போதும் கறப்பன கடைவனவாய் செல்லும் போலே காணும் திரு ஆய்ப்பாடி –
சிறு காலையும் உச்சியும் அந்தியும் ஆகிற மூன்று பொழுதும் கடைந்து திரண்ட
வெண்ணெய் யோடே-அக்காலங்கள் எல்லாவற்றிலும் உண்டான செறிய தோய்த்த தயிரையும் விழுங்கி –
கப்பால் இத்யாதி –
தோளாலே இடையர் காவில் கொண்டு வந்த பால்களை -கொண்டு வந்த பாத்ரத்தோடே சாய்த்துப் பருகி
மெய்ப்பால் இத்யாதி –
உடம்பில் முலைப்பால் தாரகமாக உண்டு- அது பெறாத போது அழும் பிள்ளைகளைப் போலே
என் இளம் கொங்கை அமுது உண்கைக்கு நீ பொருமிப் பொருமி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் –
இந்த அதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய பெரியோனே -உன்னை
மனுஷ்ய ஜாதி அல்லன் -என்று அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி
ஆன பின்பு உனக்கு அஞ்சம் தர அஞ்சுவன்

——————————————-

கரும்பார் நீள் வயல் காய் கதிர் செந் நெலைக் கன்று ஆநிரை மண்டி தின்ன
விரும்பா கன்று ஓன்று கொண்டு விளம் கனி வீழ எறிந்த பிரானே
கரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும்
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 6- –

கரும்பு இத்யாதி –
பரந்த வயலிலே கரும்பு போலே எழுந்து பசும் காயான கதிரை உடைய செந் நெல்லை
கற்றாநிரை –
கன்றுகளோடு கூடின பசு நிரையானது –
மண்டித்தின்ன –
விரும்பி மேல் விழுந்து -தின்னா நிற்கச் செய்தே

விரும்பா கன்று ஓன்று கொண்டு –
தானும் தின்பாரைப் போலே பாவியா நிற்க செய்தே -தின்கையில் விருப்பம் இல்லாததொரு கன்றைக் கொண்டு –
விளம் கனி வீழ எறிந்த பிரானே –
ஆகர்ஷமாம்படி பழுத்து நின்ற விளாவினுடைய பழங்கள் சிதறி விழும்படி எறிந்த உபகாரகனே –
ஓர் அசுரன் கன்றாய் வந்து நிற்க -ஓர் அசுரன் விளைவாய் வந்து நிற்க –
இத்தை அறிந்து -ஒன்றை இட்டு ஒன்றை எறிந்து -இரண்டையும் நிரசித்து பொகட்ட -உபகாரத்தை சொல்லுகிறது –

கரும்பார் இத்யாதி –
எப்போதும் ஒக்க பூ மாறாமையாலே வண்டுகளானவை நெருங்கப் படிந்து –
கிடக்கும்படி இருப்பதாய் -மிருதுவாய் இருந்து உள்ள குழலை உடையளாய்-
நவ யவ்னையாய் இருப்பாள் ஒருத்திக்கு

சூழ் வலை வைத்து திரியும் அரம்பா –
வாசுதேவன் வலை -என்றும் –
தாமரைத் தடம் கண் விழிகளினகவலை -என்றும் –
காரத் தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு –என்றும் சொல்லுகிறபடியே
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் திருக் கண்கள் ஆகிற வலையை
எப்போதும் ஒக்க அவள் விஷயத்தில் வைத்து -அகப்படும் அளவும் –
அந்ய பரரைப் போலே சஞ்சரிக்கிற தீம்பன் ஆனவன்

உன்னை அறிந்து கொண்டேன் –
ஏவம் பூதனானவனை நன்றாக அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————-

மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லான் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-7 – –

மருட்டார் இத்யாதி –
கேட்டவர்களை மற்று ஓன்று அறியாதபடி மருளப் பண்ணுதலால் மிக்கு இருப்பதாய்
அவர்கள் செவியைப் பற்றி வாங்கும்படியாய் மிருதுவான த்வனியை உடைத்தான வேய்ங்குழலைக் கொண்டு –
போகத்துக்கு ஏகாந்தமான பொழிலிலே போய்ப் புக்கு திருப் பவளத்திலே வைத்தூதி
அவ்வாயர் இத்யாதி –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் -என்று பெண்களை காத்துக் கொண்டு திரியும் -அவ்விடையருடைய ஊரில்
சுருட்டார் இத்யாதி –
சுருண்டு பூவாலே அலங்க்ருதமாய் -மிருதுவாய் இருந்துள்ள குழலை உடைய பெண்கள்
ஆனவர்கள் குழலோசையாலே ப்ரேரிதராய் வந்து உன்னை சூழ நின்று தொழ –
அத்தால் வந்த தேஜசை உடையனாய் நின்றவனே –

பொருள் தாயம் இத்யாதி –
என்னுடைய நாதனானவனே-இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய
இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன -எறிவார்களோடு ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்
இப்படி தீம்பனானவனே-உன்னை நன்றாக அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

————————————

வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதவன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –

வாளா இத்யாதி
நீ தீம்பு செய்யாது இருக்கிலும் -உன் மினுக்கம் பொறாதவர்கள் வெறுமனே ஆகிலும்
உன்னை காண வேண்டார்கள் -அதுக்கு மேலே –
பிறர் மக்களை மையன்மை செய்து –
பிறருடைய பெண்களை உன்னுடைய இங்கிதாதிகளாலே அறிவு கேட்டை விளைவித்து
தோளால் இட்டவரோடு திளைத்து
தோளாலே அணைத்திட்டு அவர்களோடே நின்று விளையாடி
நீ சொல்லப்படாதன செய்தாய் –
வாக்கால் சொல்ல ஒண்ணாத வற்றை நீ செய்தாய்

கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி
இடைக்குலத்தில் உள்ளவர்கள் இப் பழி கேட்க பொறார்கள்
கெட்டேன் வாழ்வு இல்லை –
கெட்டேன் இவ் ஊரில் எனக்கு ஒரு வாழ்வு இல்லை
அதாவது இவ் ஊரில் வர்த்திக்கப் போகாது என்கை
கெட்டேன் என்றது -விஷாதி அதிசயத்தாலே கை நெரித்து சொல்லுகிற வார்த்தை

நந்தன் காளாய்
பசும் புல்லுசாவம் மிதியாதே ஸ்ரீ நந்தகோபர் பிள்ளையான நீ இப்படி செய்யக் கடவையோ
அன்றிக்கே –
அவர் உன்னை நியமித்து வளர்க்காமை இறே நீ இப்படி தீம்பனாய் ஆய்த்து என்னுதல்-
உன்னை அறிந்து கொண்டேன் –
பருவம் இதுவே இருக்க -செய்கிற செயல்கள் இது வாகையாலே உன்னை
நாட்டார் படி இல்லை -என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்

——————————————————-

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-9 – –

தாய்மார் இத்யாதி –
பெண்களை அகம் பார்க்க வைத்து -தாய்மாரானவர்கள் மோர் விற்க போகா நிற்ப்பார்கள் –
இடையர்க்கு ஐஸ்வர்யம் மிக உண்டானாலும் இடைச்சிகள் மோர் விற்று ஜீவிக்கும் அது இறே
தங்களுக்கு தகுதியான ஜீவனமாக நினைத்து இருப்பது -மோர் தான் விற்கை அரிதாய் இருக்கும் இறே
திரு ஆய்ப்பாடியில் பஞ்ச லஷம் குடியிலும் கறப்பன கடைவன குறைவு அற்று இருக்கையாலே
அசலூர்களிலே போய் விற்க வேண்டுகையாலே -இக்கால விளம்பம் இவனுக்கு அவகாச ஹேதுவாய் இறே இருப்பது

தமப்பன்மார் இத்யாதி –
தாய்மார் போனால் தமப்பன்மார் தான் இருந்தாலும் இவனுக்கு நினைத்தபடி செய்யப் போகாதது இறே –
அதுவும் இல்லாதபடி தமப்பன்மார் ஆனவர்கள் கற்றா ஆநிரையின் பின்னே போகா நிற்ப்பார்கள் –
அவை மேச்சல் உள்ள இடங்களிலே தூரப் போகையும்-
இவர்கள் வரத்தை நியமியாமல் அவற்றின் பின்னே போகையும் –
அவை மேய்ந்து வயிறு நிறைந்தால் அல்லது மீளாது ஒழிகையும்-
அவை மீண்டால் அவற்றின் பின்னே இவர்கள் வருகையுமாம் இறே இருப்பது –
ஆகையால் இந்த கால விளம்பமும் இவனுக்கு அவகாசம் இறே

நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர் படவே கொண்டு போதி –
நீ திரு ஆய்ப்பாடியிலே யுவதிகளான பெண்களை உன் நினைவுக்கு வாய்க்கும்படி கொண்டு போதி
அதாவது –
உனக்கு அபிமதமான ஸ்தலங்களிலே கொண்டு போகா நின்றாய் -என்றபடி –
தாய்மார் தகப்பன்மார் போகையாலும்-கால விளம்பம் உண்டாகையாலும் –
அவ்வகம் தானே அபிமத ஸ்தலமாய் இருக்க செய்தேயும் –
ப்ராமாதிகமாக ஆரேனும் வரக் கூடும் -என்று இறே ஸ்த்லாந்தரம் தேடித் போக வேண்டுகிறது –

காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து –
உன் குணத்திலும் தோஷத்தை ஆவிஷ்கரிக்கும் அவர்களாய்-உன் பக்கல் த்வேஷ பரராயே போரும்
சிசுபாலாதிகளுக்கு -சொல்லி பரிபவிக்கைக்கு – இடம் பெற்றோம் -என்று சர்வ காலமும்
உகக்கும்படியானவற்றை செய்து
கண்டார் கழறத் திரியும் மாயா –
காய்வார் அன்றிக்கே -உனக்கு நல்லவர்களாய் நீ செய்கிற வியாபாரங்களை கண்டவர்கள்
நீ செய்கிற தீம்பு பொறாமல் நியமிக்கும்படி திரியா நிற்கிற ஆயனே –
குல மரியாதை தன்னையும் பார்கிறிலையே என்கை –
உன்னை அறிந்து கொண்டேன் –
நீ இப்படி திரிந்தாய் ஆகிலும் உன்னுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை கண்ட பின்பு –
உன்னை மனுஷ்ய சஜாதீயன் அல்லன் -என்று அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி –
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————

தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –

தொத்தார் இத்யாதி
கொத்தாய் சேர்ந்து உள்ள பூக்களாலே அலங்க்ர்தமான குழலை உடையளாய் –
திரு ஆய்ப்பாடியில் உள்ள பெண்களில் காட்டிலும் -இன்னாள்-என்று குறிக்க படுவாள் ஒருத்தியை –
சோலைத் தடம் கொண்டு புக்கு –
இடம் உடைத்தான சோலையிலே கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து –
முத்து வடத்தாலே அலங்க்ர்தமான முலைகளிலே சம்ச்லேஷித்து
இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய் –
ராத்திரி மூன்று யாமம் அற்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை –
உன் செயல் இதுவாகையாலே வேண்டுவார்க்கு வேண்டுவது சொல்லுவர் உன்னை –
உனக்கு தோஷம் சொல்லுவார்க்கு எல்லாம் இடம் ஆம்படி செய்யா நின்றாய் -என்கை

உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன் –
இப்படி இருக்கிற உன்னை கோபிக்க என்றால் நான் ஏக தேசமும் ஷமை ஆகிறேன் அல்லேன் –
பிள்ளைகள் தீம்பு கண்டால் தாய்மார் சிஷியார்களோ –
உன்னுடைய முகம் கன்றும் -என்னும் அத்தாலே அது என்னால் செய்யப் போகிறது இல்லை
அத்தா
என்னுடைய நாதனை
உன்னை அறிந்து கொண்டேன் –
உன்னுடைய அதிமானுஷம் கண்ட பின்னை -அநியாம்யன் -என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

——————————————————-

நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

காரார் மேனித் நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே -3-1 11- –

காரார் இத்யாதி –
மேகத்தோடு சேர்ந்த திருமேனியின் நிறத்தை உடையனாய் -எனக்கு உபகாரகன் ஆனவனை –
கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி-
நறு நாற்றம் கமழா நின்று உள்ள அழகிய குழலை உடைய ளான யசோதை பிராட்டி
ஆரா இத்யாதி –
ஒருகாலும் தெகுட்டாததாய்-இனிதாய் இருந்துள்ள -என் இளம் கொங்கை அமுது
உண்ண முன்பும் தந்து மேலும் தருவாளாய் இருந்த நான் உன்னை அறிந்து கொண்ட பின்பு
உனக்கு அம்மம் தாரேன் அஞ்சுவன் -என்று சொன்ன சொலவை
பாரார் இத்யாதி –
விசேஷஞ்சரோடு அவிசேஷஞ்சரோடு வாசி அற-இருந்தார் இருந்த இடம் எங்கும் –
கொண்டாடுகையாலே பூமி எங்கும் நிறைந்து இருப்பதாய் -ஸ்வாபாவிகமான புகழை உடையராய் –
ஸ்ரீ திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான
ஏரார் இத்யாதி –
இயல் அழகால் மிக்கு -அதுக்கு மேலே இனிய இசையோடு கூடி இருந்து -உள்ள சந்தர்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்கள்
இருடீகேசன் அடியாரே –
இந்திரியங்களை பட்டி புகாமல் ஸ்வரூப அநுரூபமாக நடக்கும்படி நியமிக்கும் அவனுக்கு
நித்ய கிங்கராய் பெறுவர்-

————————————————————–

சந்த மலர்-10-4- -பிரவேசம் –

ஸ்ரீ ராமாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு இறே-ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –
த்வேஷத்துக்கு எல்லையானார்க்கும் இசைய வேண்டும்படி இருக்கிற
ஸ்ரீ ராமாவதாரத்தில் விஜயத்துக்கு தோற்றவர்கள் பாசுரத்தாலே
அனுபவித்தார் கீழ் –
ராகத்துக்கு எல்லையான யசோதைப் பிராட்டி பாசுரத்தாலே
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை
அனுபவிக்கிறார் இதில் –

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-

சந்த மலர்க் குழல் தாழத் தான்-
செவ்விப் பூக்களாலே அலங்கரித்து வைப்பார்கள் இறே திருக் குழல்களை –
சந்தம் -என்று அழகாயிற்று –
வெறும் புறத்திலே ஆகர்ஷகமான குழல் –

தாழ –
பூவாலே அலங்க்ருதமாய்
பேணாமையாலே அலைந்து வர-

உகந்தோடித் –
ஆதரித்து அபி நிவேசத்தாலே ஓடி –

தனியே வந்து –
பலதேவன் என்னும் தன தம்பியோடத் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் திரு மொழி -1-8-5-
என்கிறபடியே இருவரும் கூட வாயிற்று முலை உண்ண வருவது –
கூடவரில் இருவருக்கும் ஒரோ முலையாம் என்று தனியே வந்து –

என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து –
அவை தனக்கு போகமாய் இருக்கிறபடி –
பாலாலே நிரம்பின முலையை -தடத்தை என்னாதே –
தடம் தன்னை -என்கிறதால் பாலால் நிரம்பியவை என்றதாய்த்து –

நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே –
குணைர் தசரதோபம –
பரம பதத்தில் உள்ள ஸ்வாபாவிக குணங்களும்
அவதரித்து ஆர்ஜித்த குணங்களும்
கூடினால் சக்கரவர்த்தியோடு உபமானமாக மட்டமாய் நிற்கும் இத்தனை -என்று
இத்தை ஜீயர் அருளிச் செய்ய –
பரம புருஷனுக்கு ஓர் இடத்தே பிறந்து ஒரு குணம் தேட வேண்டுமோ -என்றார்
சுந்தர பாண்டிய தேவர் –
நாம் ஓடுகிற நரம்பு இவன் அறிந்திலன் -என்றத்தை விட்டு
பரம புருஷன் என்ற போதை அழகு இருந்தபடி என் -என்றாராம்
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் இல்லாதார்
பகவத் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் அர்த்தவாதம் என்று இருப்பார்கள் –
அது உடையவர்கள் பகவத் பிரபாவத்துக்கு அவதி இல்லாமையாலே
சொன்னவை சில சொன்ன அத்தனை -சொல்லாததுவே பெரிது -என்று இருப்பார்கள் –
சத்யே நாதி வததி-இறே –

நந்தன் பெறப்பெற்ற நம்பி –
ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி –
இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே –
பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது
தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் –
பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே
அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் –

நானுகந்து உண்ணும் அமுதே -எந்தை பெருமானே உண்ணாய்-
தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி –
என் குல நாதனே –
நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள் –

என் அம்மம் சேமம் உண்ணாயே –
என்னுடைய அம்மம் ஆகிற சேமத்தை –
சேமம் எடுத்தது -என்னக் கடவது இறே –
ராஜாக்களுக்கு காவலோடே வரும் சோறாயிற்று சேமம் ஆகிறது –

—————————————————–

வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே–10-4-2-

வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
மரக் கலங்களோடு கூடி
ஓதம் கிளர்ந்த கடல் போன்ற வடிவை உடையவனே –
வடிவு அழகுக்கு போலி தேடப் புக்கால்
அங்கும் இங்கும் கதிர் பொறுக்க வேண்டும்படியான
பூர்த்தியை உடையவனே

செங்கண்-
அவயவ சோபையோ தான் சொல்லி முடியலாய் இருக்கிறது –
நெடிய திருவே –
சர்வாதிக வஸ்துவை -திரு -என்று போலே காணும் சொல்லுவது –

செங்கமலம் புரை வாயா –
எல்லா அவயவமும் அப்படியேயாய் இருப்பது –

கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன் –
நீயோ பாவஞ்ஞனாய்
தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே
நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் –

எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே –
எங்கே புக்கிருந்து
உன் பக்கல் நிரபேஷரானார் உடன் –
சாபேஷையாய் நான் பார்த்து இருக்க –
என்ன விளையாட்டு விளையாடுகிறது –

—————————————————–

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய்—10-4-3-

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ –
சம்பத்தால் மிக்கு
வடிவு அழகிலும் உன்னோடு ஒத்த
தன்னேராயிரம் பிள்ளைகளோடு
தெருவிலே இருந்து விளையாடுகிற விளையாட்டுக்கு அவதி இல்லாதவனே
முலை உண்ணுகையும் விட்டு இறே அத்தை விரும்புகிறது
போகத்தையும் விட்டு லீலையை விரும்புமவன் நீ –

செய்கின்ற தீமைகள் கண்டிட்டு-
விளையாடுகிற படியை ஒளித்து கண்டு நின்றாள் போலே –

உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற –
உன் ஸ்வம் அடைய அன்றோ பாழ் போகிறது –
தீம் பால் -இனிய பால்

மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் –
அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா
முலை சுரக்கப் பண்ணாமல்
மடியிலே இருந்தாயிற்று உண்பது –
இது அடைய தரையிலே போகாமே
உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய் –

————————————————————

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4-

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார் மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா –
நாட்டிலே வர்த்திக்கிற ஸ்திரீகள்
மற்று உண்டான மனுஷ்யர்கள்
இவர்கள் கண்ணுக்கு பிள்ளை பெறுகைக்கு நோற்கும்
தபஸ்ஸூ தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிறவனே –

மதக் களிறன்னாய்-செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
சிவந்த ஆகாசம் இருக்கிறபடி கண்டாயே –
அதுக்கு பரபாகமான பிறை இருக்கிற படி கண்டாயே
அப்பிறை யை வாங்கி உன் சிவந்த கையிலே தருவேன் –

ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –
என் ஒக்கலையிலே இழியாது இருந்து
ஆதரித்து இனிதாக
அம்மம் உண்ண வாராய் –

———————————————————-

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே —10-4-5-

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் –
மையின் தன்மையை உடைத்தாய்
கண்ணுக்கு குளிர்ந்து
இருண்ட குழலை உடைய முக்த்தனே –
பெரிய மருதுகளின் நடுவே நடந்தாய் –

வித்தகனே-
பெரியவற்றை எல்லாம் செய்கைக்கு ஈடான
ஆச்சர்ய சக்தியை உடையவனே –

விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா –
இனி இதுசெய்யான் -என்னும்படி
படுக்கையிலே கிடந்தது
அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும்
விகிர்தமான செயலை உடையவனே –

இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா –
நெடும் போது உண்டாயிற்று
முலைக் கடுப்போடு இருக்கிறது –
இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது –

உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே –
உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –
வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ-

——————————————–

பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை
கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் —10-4-6-

பிள்ளைகள் செய்வன செய்யாய் –
உன் பருவத்தில் பிள்ளைகள் செய்வன
அன்று நீ செய்வது –

பேசில் பெரிதும் வலியை-
கண் எச்சில் ஆனவற்றை செய்யா நிற்புதி-
கண் எச்சிலாம் என்று சொல்லாது ஒழியும் இத்தனை –

கள்ள மனத்தில் உடையைக்-
சொல்லில் பெரிய மிடுக்கை உடைய உன் நெஞ்சில் நினைக்குமவை இன்னது என்று தெரியாது –

காணவே தீமைகள் செய்தி –
விலக்குவார்க்கும் கண்டு கொண்டு நிற்க வேண்டும்
தீமைகள் செய்யா நிற்புதி
கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி –

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற –
அத்தீமை காண என் ஹிருதயம் உருகி
முலை வழியே பாலாய் புறப்படா நின்றது –

பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் –
கண்கள் சிவப்பது
மூரி நிமிர்வது
கொட்டாவி கொள்வது
அழுவது -ஆகாதே –

——————————————

தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே —10-4-7-

தன் மகனாக –
யசோதை பிராட்டியாக வந்தாள் ஆயிற்று –

வன் பேய்ச்சி –
இவனைக் கண்ட விடத்திலும் நெகிழாத
நெஞ்சில் வன்மையை உடையவள் –

தான் முலை யுண்ணக் கொடுக்க –
பரிவோடே கொடுக்கிறாள் என்று தோற்றும் படி கொடுக்க –

வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ –
தானும் தாய் என்று பிரமியாதே
அவள் அபிசந்தியைப் புத்தி பண்ணி
அப்பருவத்திலே பெரிய ஆண் பிள்ளையாய்
அவள் பிராணன்களை முலை வழியே உண்டு
அவளை முடித்து இப்படிப் பட்ட செயல்களாலே
பூரணன் ஆனவனே –

நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா –
இப்படி பூதனை கையிலே அகப்பட்ட உன்னை
ஆராக நினைத்தாய் –
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய நப்பின்னை பிராட்டிக்கும்
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும்
வல்லபன் ஆனவனே –

என் மகனே –
அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும்
இவள் மகன் ஆனதுவும் –

அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –
அம்மம் என்று -புஜிக்கப் படும் எல்லாவற்றுக்கும் பெயர் –

—————————————————–

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் —10-4-8-

உந்தம் அடிகள் முனிவர்-
தாயாரைக் கண்டால் தீமையிலே ஓன்று பத்தாக பணைக்கும்-
ஸ்ரீ நந்த கோபர்க்காயிற்று அஞ்சுவது
அத்தாலே அவனுக்கு அச்சம் உறுத்துக்கைக்காக
யசோதை பிராட்டி சொல்லும் பாசுரம் ஆயிற்று –
உங்கள் முதலியார் சீறுவர் கிடீர் –

உன்னை நான் என் கையில் கோலால் -நொந்திட மோதவும் கில்லேன்-
தீம்பிலே கை வளருகிற உன்னை
நோக்க இருக்கிற நான் –
கண்டாய் இறே இதன் பேர்
இப்போதே சிவட்கு என்ன அடிக்கலாம் இறே
அது மாட்டு கிறிலேன் –

அடிக்க வேண்டும்படி செய்த தீமை தான் என்ன –
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது –
உபய விபூதியோபாதியும் பரப்புப் போருமாயிற்று
இவன் தன்னை ஒழிய வேயும் கண் எச்சிலாம் படி யாயிற்று
அவை வந்து புகுரும் போது இருப்பது –

இங்கு காண்கின்றார் உண்டோ -என்ன -வேண்டா
வானிடைத் தெய்வங்கள் காண –
எத்தனை தேவதைகள் ஆகாசத்தில் பார்த்து நிற்கக் கடவது –

அந்தியம்போது அங்கு நில்லேல்
அசுரர்களுக்கு பலம் வர்த்திக்கும் போது அங்கு நில்லாதே கொள் –
அங்கு
இவன் இவனின -என்று உன்னோடு சேர்த்து சொல்லலாம் படி அங்கு நில்லாதே கொள் –

ஆழி யங்கையனே வாராய் —
இவற்றை ஒழியவேயும்
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –
என்னும்படி யாயிற்று இருப்பது –

————————————————-

பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே—-10-4-9-

பெற்றம் தலைவன் என் கோமான் –
பசுக்களுக்கு பிரதானன் ஆனவனே –
மேல் விழுந்து முலை உண்ண ஏத்துகிறாள் –
எனக்கு ஸ்வாமி யானவனே –
இத்தால் ஐஸ்வர்யம் சொல்லுகிறது –

பேர் அருளாளன் மதலாய்-
அருளால் குறைவற்றவன் மகன் அன்றோ நீ
அவன் படி உனக்கும் உண்டாக வேண்டாவோ –

சுற்றக் குழாத்து இளங்கோவே
பந்து வர்க்கத்துக்கு எல்லாம்
யுவராஜா வானவனே –

தோன்றிய தொல் புகழாளா-
எங்கும் ஒக்க பிரசித்தமான
ஸ்வா பாவிக மான புகழின் உடைய வார்த்தைப் பாட்டையும் உடையவனே –

கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே –
கன்றின் உடைய திரள்
ஓன்று இரண்டு போராது –
கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது
ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –

எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே –
உனக்கு விடாய் இல்லாமையோ –
உனக்கு முலை தாராது ஒழியும் போது
நான் தரிப்பனாயோ –

——————————————————

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே —10-4-10-

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி –
இவள் முலை கொடுத்து அல்லது தரியாதாப் போலே
கவி பாடி அல்லது தரியாதாராய் பாடின கவி யாயிற்று –
மிக்க எழிலை உடைத்தான தோளை உடைய ஆழ்வார் –

செம்மைப் பனுவல் நூல் கொண்டு-
சாஸ்த்ரங்களில் பரக்கச் சொல்லுகிற லஷணங்களில் ஒன்றும் குறையாமல் செய்ததுமாய்-
இது தான் இவ்வருகு உள்ளாருக்கு சாஸ்த்ரமாய் எழுதிக் கொள்ளலாய் இருக்கிற இவற்றைக் கொண்டு
பனுவல் -என்றும் -நூல் -என்றும் -சாஸ்திரம் ஆகையாலே சொல்லிற்று –

செங்கண் நெடியவன் தன்னை
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –

அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –

மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –
அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு
வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே
அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம் –

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அனுபவிக்கும் ஸ்ரீ பெரியாழ்வார் —

June 28, 2020

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன–30-

அங்கு –
திருவாய்ப்பாடியிலே –

அப்பறை கொண்டவாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-அடிமை கொண்ட படியை –

யணி புதுவை –
சம்சாரத்துக்கு நாயகக் கல்லான ஸ்ரீ வில்லி புத்தூர் –

திருவாய்ப்பாடியிலே
ஸ்ரீ நந்தகோபர் கோயிலிலே
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே
திவ்ய ஸ்தானத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே
இருந்த இருப்பிலே
ஆண்டாள் பெரியாழ்வார் வடபெரும் கோயிலுடையான் உள்ளதால் அணி புதுவை
பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டுச் செய்த ஆபரணம் போலே

பைங்கமலத் தண் தெரியல் –
பிராமணருக்கு–தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –

தண் தெரியல் –
நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
தண் அம் துழாய அழல் போலே -வட பெரும் கோயில் உடையானுடைய மாலை போலே
கொதித்து கிடவாது -பெரியாழ்வார் -கழுத்து மாலை –
பிரித்தவன் மாலை போலே அன்றே சேர்த்தவர் மாலை
குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் –
அவன் நிரந்குச ஸ்வா தந்த்ரன் இறே

பட்டர் பிரான் கோதை சொன்ன –
ஆண்டாள் அநுகார பிரகரத்தாலே அனுபவித்துச் சொன்ன —பராசர புத்திரன் -என்று ஆப்திக்கு சொன்னால் போலே
பெரியாழ்வார் மகள் ஆகையாலே–சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –
தமிழ் -நிகண்டு இனிமையும் நீர்மையும் தமிழ் யென்னலுமாம்

முதலில் நந்தகோபன் குமரன் -கண்ணன் பித்ரு பரதந்த்ரன்
இறுதியில் தன்னை -பட்டர் பிரான் கோதை -பித்ரு பரதந்த்ரையாக அருளுகிறாள்
திவ்ய தம்பதிகளுக்கு பகவத் பாகவத பாரதந்த்ர்யத்தில் ஈடுபாடு இத்தால் தெரிவிக்க படுகிறது –

—————-

ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு—

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

————————-

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா

———————————

பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை–1-10-

மலைகளைக் கொடு வந்து சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள்
ஸூ சம்ருத்தமாய்க் கொண்டு தோன்றா நின்றுள்ள ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளாருக்கு
நிர்வாஹரான பெரியாழ்வார் திருமகளார்-

——–

வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன் கோதை–2-10-

வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் திரு மகள்-

———-

பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை–3-10-

இவ்விஷயத்தில் இவ்வளவான அவகாஹா நத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –

—————-

பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை–5-11-

ஸ்வர பிரதானமான நாலு வேதங்களும் வைத்து இருப்பவர்கள் -ஸ்ரீ வில்லி புத்தூருக்கு
நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள்

————–

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை 6-11-

ஆப்திக்கு ப்ராஹ்மணராலே ஸ்துதிக்கப் பட்டு இருக்கிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு
நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள்

———-

வண் புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை–7-10-

விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –

————-

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை–8-10-

பகவத் போகத்தில் ஒன்றும் தப்பாத படி எல்லா வகையாலும் அனுபவித்த பெரியாழ்வார் வயிற்றில்
பிறப்பாய்த்து இவ்வாசைக்கு ஊற்று
விபவம் உண்டான வன்று தொடக்கி போகத்தில் அன்வயித்தவர் இறே பெரியாழ்வார்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – என்று தொடங்கி அனுபவித்தவர் இறே-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே––ஸ்ரீ திருவாய் மொழி–6-6-11-

ஸ்ரீ நித்ய ஸூரிகள் அநுபவிக்கின்ற இன்பத்தினை -போகத்தை-இங்கேயே அனுபவித்து –
அந்த அனுபவ பரிவாஹ ரூபமாக அன்றோ இவரது அருளிச் செயல்கள் –

————-

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று
ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து –விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8–
அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்
சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது
சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது
தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்
பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –

வல்ல பரிசு வருவிப்பரேல்
ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்
ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப்பண்ணவுமாம்-வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து
திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம்
திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க வுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டுபதிகம்
வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆ ரை மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே
அன்றிக்கே
நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்
வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி
அது காண்டுமே
அவ் வழியாலே பெறக் கடவோம்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்குவைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே
அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

—————————-

செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்–11-10-

மெய்ம்மைப் பெரு வார்த்தை –
யதார்த்தமுமாய் –-மெய்மை –சீரியதுமாய் —பெரு —ஸூ லபமுமான –வார்த்தை என்பதால் –
மூன்றும் சேர்ந்த வார்த்தை யாய்த்து -அதாவது –
உன் கார்யத்துக்குனான் உளேன் -நீ ஒன்றுக்கும் கரையாதே -உன் சர்வ பரத்தையும் என் தலையிலே
சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு -என்று
திருத் தேர் தட்டிலே அருளிச் செய்த வார்த்தை
பிள்ளை அர்ஜுனனுக்கு அன்றோ சொல்லிற்று இவர்க்கு என் என்னில் அவன் சர்வ சமனாகையாலே-
என் கார்யம் என்னால் செய்ய ஒண்ணாது -என்று இருப்பார் எல்லாருக்குமாக அடியிலே சொன்ன வார்த்தை இறே
ஆகையாலே இவர் கேட்டிருக்கக் குறை இல்லை –

விட்டு சித்தர் கேட்டிருப்பார்
அவ்வார்த்தையை கேட்ட பின்பு
உபாயத்வேன விலங்கின துரும்பு நறுக்கி அறியார்
பிராப்யத்வேன வேண்டிற்று எல்லாம் செய்வர் –

————————-

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை–12-10-

ஸ்ரீமத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்

————-

வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை–13-10-

இவளுடைய விருப்பத்தில் ஊற்றமாய்த்துச் சொல்லித் தலைக் கட்டப் பார்க்கிறது
இவ்வளவான பிராவண்ய அதிசயத்துக்கு எல்லாம் வாய்த்தலை பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து-

—————–

பாரின் மேல் -விருந்தா வனத்தே கண்டமை – விட்டு சித்தன் கோதை சொல்–14-10–

ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய்
அது தன்னிலும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை -(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )
காட்சிக்கு கைம்முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று
முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –

————–

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

அன்னம் என்று ஸ்ரீ பெரியாழ்வாரையே அருளிச் செய்கிறார் –
மென்னடை–என்று மெல்லிய திரு உள்ளம் – பொங்கும் பரிவையே சொன்னவாறு –

விவேக முகராய் நூல் உரைத்து
அள்ளலில் ரதி இன்றி
அணங்கின் நடையைப் பின் சென்று
குடை நீழலிலே கவரி அசையச்
சங்கமவை முரல
வரி வண்டு இசை பாட
மானஸ பத்மாசனத்திலே இருந்து
விதியினால் இடரில் அந்தரமின்றி
இன்பம் படக் குடிச் சீர்மை யிலே யாதல்
பற்றற்ற பரம ஹம்ஸராதலான
நயாசலன் மெய்நாவன்
நாத யாமுன போல்வாரை
அன்னம் என்னும் —–151-

1-அதாவது
விவேக முகராய்-
ஹம்சோ யதா ஷீர மிவாம்புமிஸ்ரம்-என்கிறபடியே –
ஹம்சமானது நீர ஷீர விபாகம் பண்ணுமா போலே –
சார அசார விவேக உன்முகராய்

2-நூல் உரைத்து –
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த–பெரிய திருமொழி -11-4-8 -என்று
ஹம்ச ரூபியாய் சாஸ்திர பிரதானம் பண்ணினால் போலே –
ஸ்ரோதாக்களைக் குறித்து சாஸ்த்ரங்களை உபதேசித்து

2-அள்ளலில் ரதி இன்றி
நபத்நாதி ரதிம் ஹம்ச கதாசித் கர்த்த மாம்பசி- என்கிறபடியே –
ஹம்சமானது கர்தம ஜலத்தில் பொருந்தாது போலே –
வன் சேற்று அள்ளல்–பொய் நிலத்து அழுந்தார்—திருவிருத்தம் -100-என்கிறபடி
சம்சாரகர் தமத்தில் பொருத்தம் உடையர் அன்றிக்கே –

4-அணங்கின் நடையைப் பின் சென்று –
அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று -பெரிய திருமொழி -6-5-5-என்கிறபடி
ஹம்சமானது ஸ்திரீகளின் நடையை கண்டு தானும் அப்படி நடக்குகைக்காக பின் செல்லுமா போலே –
அன்ன நடைய வணங்கு-பெரிய திருமடல் -7–என்று ஹம்ச கதியான பிராட்டி உடைய
அனந்யார்ஹ சேஷத்வாதிகளையும் புருஷகார பாவமாகிற நடையை அனுகரித்து –
( ஹம்ஸ மாதங்க காமிநி அன்றோ பிராட்டி -ஷட் பாவங்களில் கடி மா மலர்ப்பாவை யுடன் சாம்யம் உண்டே )

5-குடை நீழலிலே கவரி அசைய சங்கமவை முரல வரி வண்டு இசை பாட மானஸ பத்மாசனத்திலே இருந்து —
அன்ன மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் வீற்று இருக்கும் –பெரிய திருமொழி -9-1-5 -என்றும் –
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்று இருக்கும் -பெரிய திருமொழி -9-1-5-என்றும் –
சங்கமவை முரல செங்கமல மலரை ஏறி–பெரிய திருமொழி -7-8-2- -என்றும் –
வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடன் நாடும் –பெரிய திருமொழி -7-5-9-என்றும் –
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல்-பெரிய திருமொழி –என்றும் சொல்லுகிற ஹம்சமானது
மேலே எழுந்த தாமரை இலை குடையாகவும் –
பக்வ பலமான செந்நெலின் அசைவு கவரியாகவும் –
சங்குகளின் தொனி ஜய கோஷமுமாகவும் –
வண்டுகளின் மிடற்றோசை பாட்டாகவும் -பெற்று
மானஸ சர பத்மம் ஆசனமாக இருக்குமா போலே-

அக் கமலத்திலை போலும் திரு மேனி அடிகள் –திருவாய் -9-7-3-என்று பத்ம பத்ர நிபஸ்யாமளமான திருமேனியை
சம்சார துக்கார்த்த துக்க அர்க்க-( துக்கமான சூர்யன் என்றுமாம் )தாபம் வராத படி தங்களுக்கு ஒதுங்க நிழலாய் உடையவராய் –
அஹம் அன்னம் தைத்ரியம் -என்னும் படி பரி பக்குவ ஜ்ஞானரானவர்கள் அனுகூல வ்ருத்தி செய்ய
சுத்த ஸ்வாபவர் ஸ்துத்திக — சாராக்ராஹிகள் சாம கானம் பண்ண –( எண் திசையும் இயம்பும் மதுரகவி ஆழ்வார் போல்வார் )
குரு பதாம் புஜம் த்யாயேத் -என்கிற படி ஆச்சார்ய சரண யுகங்களை அனவரதம்
நெஞ்சுக்குள்ளே கொண்டு இருக்கும் சிஷ்யர்கள் உடைய
ப்ரஹ்ம குருவுக்கு இருப்பிடமான
போதில் கமல வென் நெஞ்சம்–பெரியாழ்வார் -5-2-8- -என்கிற
மானஸ பத்மத்தை வஸ்தவ்யமாய் உடையராய் —

6-விதியினால் இடரில் அந்தரமின்றி இன்பம் பட குடி சீர்மை யிலே
இத்யாதி
விதியினால் பெடை மணக்கும் அன்னங்காள் –திருவாய் -1-4-3- -என்றும் –
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள் –திருவாய் -6-1-4- -என்றும் –
அந்தரம் ஒன்றும் இன்றி -6-8-10–என்றும் –
மிக இன்பம் பட மேவும் -9-7-10–என்றும்
சொல்லுகிற படி சாஸ்த்ரோக்தமான பிரகாரத்திலே –

சாம்சாரிக சகல துரிதங்களும் தட்டாத படியும் –
ஒரு விச்சேதமும் வாராத படியும் –
மென் மேலும் ஆனந்தம் அபி விருத்தம் ஆகும் படியும்
குடி சீர்மையில் அன்னங்காள்–திரு விருத்தம் -29–என்கிற படியே
பார்யா புத்ரர்களாதியோடு இருந்து பகவத் அனுபவம் பண்ணுகிற
நளிர்ந்த சீலன் நயாசலன்–பெரியாழ்வார் -4-4-8–என்று சொல்லப் பட்ட செல்வ நம்பி
மெய்நாவான் மெய்யடியான் விட்டு சித்தன்–பெரியாழ்வார் -4-9-1- -என்கிற பெரியாழ்வாரைப் போலேயும் ,

பற்று அற்றார்கள் -பெருமாள் -1-4-என்றும்
சிற்றயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார் அற்ற பற்றார் -திருச்சந்த -52-என்றும்
சொல்லுகிறபடி சம்சாரிக சகல சங்கமும் அற்று ,
உத்தம ஆஸ்ர்ரமிகளாய்
பரம ஹம்ச சப்த வாஸ்யரான
நாத முனிகள், யாமுன முனிகள் போல்வாரையும் –

இந்த -6-குண சாம்யத்தை இட்டு அன்னம் என்று சொல்லும் என்கை —

————————————

பேர் அணிந்த வில்லிபுத்தூர் ஆனி தன்னில்
பெருந் சோதி தனில் தோன்றும் பெருமானே
முன் சீர் அணிந்த பாண்டியன் தன் நெஞ்சு தன்னில்
துயக்கற மால் பரத்துவத்தைத் திருமாச்செப்பி
வாரணமேல் மதுரை வலம் வரவே
வானில் கருடவாகனனாய்த் தோன்ற
வாழ்த்தும் ஏரணி பல்லாண்டு முதல் பாட்டு
நானூற்று எழுபத்து ஒன்று இரண்டும் எனக்கு உதவு நீயே—ஸ்ரீ வேதாந்த தேசிகர் —

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஆழ்வார்கள் திரு அவதார விவரணம்–

June 28, 2020

ஸ்ரீ ஆழ்வார்கள் திரு அவதார விவரணம்–

ஆழ்வார்கள் அம்சம் பாசுரங்கள் இயற்றிய நூல்கள்
பொய்கையாழ்வார் பஞ்சசன்யம் 100 முதல் திருவந்தாதி
பூதத்தாழ்வார் கதை 100 2-ம் திருவந்தாதி
பேயாழ்வார் நந்தகம் (வாள்) 100 3-ம் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் சக்கரம் 216 திருச்சந்தவிருத்தம் 120-நான்முகன்திருவந்தாதி 96
மதுரகவியாழ்வார் வைநதேயர் 216 கண்ணின் நுண் சிறுத்தாம்பு
நம்மாழ்வார் நாம்சம் 1296 திருவாய்மொழி
குலசேகரர் கௌஸ்துபம் 105 பெருமாள்திருவாய்மொழி
பெரியாழ்வார் கருடன் 473 திருப்பல்லாண்டு, பெரியாழ்வார்திருமொழி.
ஆண்டாள் பூமி 173 திருப்பாவை 30, திருமொழி 140
தொண்டரடி பொடியாழ்வார் வைஜயந்தி (எ) வனமாலை-55-திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமறை திருமலை திருப்புகழ்ச்சி
திருப்பாணர் வத்சம் 10 அமலான் ஆதிபிரான்
திருமங்கை சாரங்கம் (வில்) 1361 ஆறு அங்கங்கள்

திவ்விய பிரபயதத்தை அருளியதால் – திராவிடாச்சாரியர்கள் எனப்படுவர்.
இரும் தமிழ் புலவர்கள் , ஆதிபக்தர்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுவர்.
முற்காலத்து ஆழ்வார்கள் – பொய்கையாழ்வார் , பேய் ஆழ்வார் , திருமழிசை ஆழ்வார்.
இடைக்காலத்து ஆழ்வார்கள் – நம்மாழ்வார் , மதுரகவியாழ்வார் , குலசேகர ஆழ்வார், பட்டர்பிரான் என்ற பெரியாழ்வார் , கோதை நாச்சியார் என்ற ஆண்டாள்
பிற்காலத்து ஆழ்வார்கள் – தொண்டரடிப் பொடியாழ்வார் , திருப்பாணாழ்வார், கலியன் என்ற திருமங்கை ஆழ்வார்.
முதலாழ்வார்கள் எனப்படுவோர் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

———————-

பொய்கையாழ்வார்

பிறப்பிடம் – கச்சி (காஞ்சி) நகரிலுள்ள திருவெ:.கா
அவதரித்த மலர் – தாமரை
நட்சத்திரம் – ஐப்பசி திருவோணம்.
அம்சம் – பஞ்சசன்யம் (சங்கு)
இஷ்டதெய்வம் – திருப்பதி ஏழுமலையான்
அருளிய திருநாமம் – ‘வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே”
அருளியது – முதல் திருவந்தாதி
வையம் தகழியா வார் கடலே நெய்யாக எனத் தொடங்கும்

——————–

பூதத்தாழ்வார்

பிறப்பு – தொண்டைநாட்டிலுள்ள திருக்கடல்மல்லை(மாமல்லபுரம்)
அவதரித்த மலர் – குருக்கத்தி மலர்
நட்சத்திரம் – ஐப்பசி அவிட்டம்.
அம்சம் – கௌமோதகி எனும் கதாயுதம்.
இஷ்டதெய்வம் – ஸ்ரீரங்கம் திருவரங்கர்.
அருளிய திருநாமம் – ‘பொன்புரையும் திருவரங்கப் புகழுரைத்தான் வாழியே”
அருளியது – 2 -ம் திருவந்தாதி
“ அன்பே தகழியா , ஆர்வமே நெய்யாக” எனத் தொடங்கும்

———————

பேயாழ்வார்

பிறப்பு – மயிலாப்பூர்
அவதரித்த மலர் – செவ்வல்லிப்பூ
நட்சத்திரம் – ஐப்பசி சதயம்.
அம்சம் – நந்தகம் (வாள்)
இவரின் வேறுபெயர் – மஹதாஹ்வயர் (திருமழிசையாழ்வாரை திருத்தியதால்)
இஷ்டதெய்வம் – திருக்கோவிலூர் இடைகழியில் உள்ள திருமால்
அருளிய திருநாமம் – ‘நேமிசங்கண் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே”
‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” – பேயாழ்வார்.
அருளியது – 3 -ம் திருவந்தாதி
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் எனத் தொடங்கும் .
முதல் மூன்று ஆழ்வார்கள் சந்தித்த இடம் – திருக்கோவிலூர் இடைகழி.

———————

திருமழிசையாழ்வார்(புகழ்மழிசை ஐயன்)

பிறப்பு -திருமழிசை
அம்சம் – தயீருவாடியீ (சக்கர அம்சம் )
சிவ வாக்கியர் என்ற பெயருடன் சைவ சமயத்தில் இருந்தார். பேயாழ்வார் மூலம் வைணவத்திற்கு மாறினார்.
அருளியது – நான்முகன் திருவந்தாதி , திருச்சந்த விருத்தம்
எல்லாம் திருமால் என எண்ணுகிறார்

—————————

நம்மாழ்வார்(அருள் மாறன்)

பிறப்பு -18 திருப்பதிகளையுடைய பாண்டி நாட்டில் தாமிரபரணி கரையில் ஆழ்வார் திருநகரியில் (திருக்குருகூர்)
நட்சத்திரம் – வைகாசி விசாகம்
அம்சம் – திருக்குறுங்குடி நம்பியின் அம்சமும், ஸ்ரீகௌஸ்துபம் எனும் இரத்தினாம்சமும், ஸேனை முதலியோரது அம்சம்
சிறப்புப் பெயர்கள் – மாறன் , சடகோபன் , பராங்குசன் , வகுளபூஷணன்
இவர் பாடிய பாசுரங்களை நான்காவது ஆயிரம் என்பர்
இவர் பாடிய மொத்த பாசுரங்கள் – 1296
உலகப் பற்றினை விட்டு இறைவனை சரண் அடையதால் அனைத்தும் பெறுவது எளியது என்றார்

சடம் எனும் வாயுவை ஓட்டி ஒழித்ததினால் ‘சடகோபன்” என பெயர் பெற்றார்.
இவர் 16 வயது வரை மௌனமாய் இருந்தார். ஸேனை முதலியார் இவருக்கு திருவிலச்சினை செய்து, உபதேசம் செய்து வைஷ்ணவராக்கினார்.
இவர் எழுதிய நூல்கள் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. இந்நான்கும் ‘நான்கு வேதங்கள்” எனப்படுகின்றன.
‘பொய்யில் பாடல்” என அழைக்கப்படுவது – திருவாய்மொழி.

இவர் அவதரிக்கும் போதே இறைவனிடம் பேரன்பு கொண்டதால் இவர் இறைவன் மீது கொண்டுள்ள பக்தியை ‘ஸஹஜபக்தி” எனக் கூறுவர்.
இஷ்டதெய்வம் – கிருஷ்ணன்.
இவர் ‘கிருஷ்ண த்ருஷ்ணாத த்வம்” என்று கொண்டாடப்பட்டவர்.
‘ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவர்” எனப் போற்றப்படுபவர் – நம்மாழ்வார்.

——————

குலசேகராழ்வார்(சேரலர்கோன்)

தந்தையார் – சேரநாட்டில் கோழிக்கோடு(திருவஞ்சிக்களம்) எனும் இராஜதானியில் அரசுபுரிந்த திரடவிருதன்.
பிறப்பு – மாசி புனர்பூச நட்சத்திரம்
அம்சம் – ஸ்ரீகௌஸ்துப மணி
இயற்பெயர் – கௌஸ்துபாமசரர், சேரலர்கோன்.
சிறப்பு பெயர்கள் – கொல்லிகாவலன், கூடல்நாயகன், கூடலர்கோன், கோழிக்கோன்குலசேகரன்.
இவர் வடமொழியில் பாடியது – முகுந்தமாலை.
இவர் இராமபிரானை வழிபட்டவர்.
இவர் பாடிய பிரபந்தம் – பெருமாள் திருமொழி.
பெருமாள் திருமொழியில் கூறப்படும் பொருள்கள் :

முதல் மூன்று திருமொழிகள் ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றியது
4-ம் திருமொழி திருவேங்கடத்தைப் பற்றியது
5-ம் திருமொழி விற்றுவக்கோட்டையைப் பற்றியது
6-ம் திருமொழி ஆய்ச்சியர் ஊடலைப் பற்றியது
7-ம் திருமொழி தேவகியின் புலம்பலைப் பற்றியது
8-ம் திருமொழி நாமரின் தாலாட்டைப் பற்றியது
9-ம் திருமொழி தசரதன் புலம்பலைப் பற்றியது
10-ம் திருமொழி இராமாயணக் கதைச் சுருக்கம்

————————–

பெரியாழ்வார் (துய்யபட்டநாதன் (அ) பட்டர்பிரான்)

பிறப்பிடம் – ஸ்ரீவில்லிபுத்தூர்
குலம் – வேயர் குலம்
நட்சத்திரம் – ஆனி சுவாதி
அம்சம் – கருடாம்சம்
இயற்பெயர் – விஷ்ணு சித்தர்.
வடபெருங்கோயிலுடையானுக்கு திருமாலை கட்டி சமர்பித்து வந்தார்.
இவர் அருளியது – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி.
நாராயணர் இவர் கனவில் கூறியபடி, மதுரை பாண்டியன் அவைக்களம் சார்ந்து திருமாலே பரம்பொருள் என நிறுவிக் கிழியை இறுத்தார்.
நாலாயிர திவ்விய பிரபயதத்தில் முதல் பாடல் இவருடையது
வரலாற்று குறிப்புகள் உள்ளடங்கிய பாடல்களை பாடியவர் – பெரியாழ்வார்

————————

தொண்டரடிபொடியாழ்வார் (அன்பர் தாளி தூளி)

பிறப்பு – சோழநாட்டில் கும்பகோணம் திருமண்டங்குடி
நட்சத்திரம் – மார்கழி கேட்டை
அம்சம் – திருமாலது வைஜயந்தி எனும் வனமாலை
குலம் – பிராமணர்
ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டார்.
இயற்பெயர் – விப்ர நாராயணர்.
இயற்றிய நூல்கள் – திருமாலை, திருப்பள்ளியெழுச்சி,

——————

திருப்பாணாழ்வார் (நற்பாணன்)

பிறப்பு – சோழநாட்டு உறையூர்
நட்சத்திரம் – கார்த்திகை மாத ரோகிணி
அம்சம் – ஸ்ரீவத்ஸத்தின்(திருமறு) அம்சம்
அந்தணனது நெற்பயிர்கதிரில் பிறந்ததால் முதலாழ்வார்களை போல ‘அயோனிஜர்” எனப்பட்டார்.
இவர் ஒரு கான ஞானி. இவரை ஸோகஸாரங்கமாமுனிகள் தோளில் ஏற்றி ஸ்ரீரங்கம் பெருமாள் முன்விட்டார்.
இவர் ‘அமலான் ஆதிப்பிரான்” எனும் பாசுரம் பாடி இறைவனோடு ஐக்கியமானார்.
இவர் பாடல் பெரும்பாலும் அரங்கநாதனைப் பற்றியதாகும்

———————–

திருமங்கையாழ்வார்(நற்கலியன்)

பிறந்த இடம் – சோழநாட்டு திருவாழிதிருநகரி எனும் திவ்விய தேசத்துக்கு அருகேயுள்ள திருக்குறையலூர்
பிறபெயர்கள் – நீலன், பரகாலன், கலியன், மங்கைவேந்தன், ஆலிநாடான், நாலுகவிபெருமாள்.
பிறப்பு – சேனைத் தலைவன் மகனாய் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம்
அம்சம் -திருச்சாரங்கத்தின்(வில்) அம்சம்.
மனைவி – குமுதவல்லி
வயலாலி மணவாளனிடம் மந்திர உபதேசம் பெற்றவர்.
பெரியபெருமாள்(ஸ்ரீரங்கம்) சந்நிதியில் திருப்பணி செய்தவர்.
இவர் எழுதியவை – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்
திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய, பெரிய திருமடல், என்ற ஆறு பிரபந்தங்கள்(இவை
‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு அங்கங்கள்” என கூறப்படுகின்றன)
திருவரங்க கோவிலின் சுற்று சுவர் கட்டியவர்

————————–

ஆண்டாள்

இயற்பெயர் – சுரும்பார் குழல் கோதை.
சிறப்புப் பெயர்கள் – கோதை , சூடிக்கொடுத்த நாச்சியார். பிறப்பு – திருவில்லிப்புத்துர்
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்
பாடியது – நாச்சியார் திருமொழி , திருப்பாவை
“அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி” எனக் கொண்டாடப்படுபவர் – ஆண்டாள்.

————————-

மதுரகவியாழ்வார்

பிறப்பு – பாண்டிய நாடு திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரருகே திருக்கோளுர்
நட்சத்திரம் – சித்திரை மாத சித்திரை
அம்சம் – கணநாதரான குமுதரது அம்சம்
சூரியோதத்திற்கு அருணோதயம் போன்று நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன் மதுரகவியாழ்வார் பிறந்தார்.
பாடிய பிரபந்தம் – ‘கண்ணின் நுண் சிறுத்தாம்பு” (நம்மாழ்வார் பற்றி பாடியது)

———————-

நாதமுனிகள்

நம்மாழ்வாரால் அருளப்பட்டவர்.
விசிஷ்டாத்வைதம் அழியும்போது அதனை நன்கு பரப்பினார்.
நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களை தொகுத்தவர்.
இவரின் பேரனான ஆளவந்தார் பரப்பிய சித்தாந்தத்தின் பெயர் – எம்பெருமானார் தர்சனம்.
———————-

எம்பெருமானார்

இயற்பெயர் – திருவனந்தாழ்வான்.
பிறப்பு – ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை மாத திருவாதிரையில் பிறந்தார்.
பெற்றோர் – ஆஸரிகேசவபெருமாள் – பூமிபிராட்டி
‘பஞ்சாயுதங்களின் அவதாரம்” என திருவரங்கத்தமுதனாரால் அழைக்கப்பட்டவர்- எம்பெருமானார்
பஞ்சாயுதங்களாவன : சுதர்சனம், நந்தகம், கதை, சாரங்கம், பாஞ்சசன்யம்.
விஷ்வக்சேனருடைய அவதாரம், திரி தண்டம் செங்கோலின் அவதாரம் என வேதாந்ததேசிகனாரால் அழைக்கப்பட்டவர் – எம்பெருமானார்.
தொண்டனூரில் ஜைனர்களுடன் வாதம் செய்தார் எனக் கூறும் நூல் – குருபரம்பராப்பிரபாவம்.
பன்னிரு ஆழ்வார்களின் வைபவங்களை விரிவாக ‘குருபரம்பராப்பிரபாவம்” முதலிய நூல்களில் காணலாம்.
பெருமாளை எப்போதும் நினைந்து வாழும் 12 ஆழ்வார்களும் ‘நித்தியஸரிகள்”
என்று திவ்வியஸரிய சரிதம், குருபரம்பராப்பிரபாவம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
புராணங்களைத் தழுவி நிற்கும் நூல்கள் – திவ்வியஸரிய சரிதம், குருபரம்பராப்பிரபாவம்
எம்பெருமானாரை திருவனந்தாழ்வான் அவதாரம் என உரைக்கும் சான்றுகள் – குருபரம்பராப்பிரபாவம், திவ்வியசூரியசரிதம்.

———————-

நாலாயிர திவ்வியபிரபந்த நூலின் அனைத்து பாசுரங்களுக்கும் உரை எழுதியவர் – பெரியவாச்சான்பிள்ளை.
நம்மாழ்வார் பாசுரங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் – வடக்குதிருவீதிபிள்ளை
மணவாள மா முனிகளாக அவதாரம் செய்தவர் – எம்பெருமானார்
திருவனந்தாழ்வான், முதலில் எம்பெருமானாராய் அவதரித்து பின்பு மணவாளமாமுனிகளாய் அவதாரம் செய்தார் என
‘வரவரமுனிசதகம்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளவர் – எரும்பியப்பர்.
நம்மாழ்வார் அருளியவை “நான்கு வேதங்கள்” என்றும்,
திருமங்கையாழ்வார் அருளியவை ‘ஆறு அங்கங்கள்” என்றும்,
பிற ஆழ்வார்கள் அருளியவை ‘உபாங்கங்கள்” (உதவிபுரியும் நூல்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.
தேசிகன் எழுதியது ‘ஸ்ரீமத்ரஹஸ்யத்ரஸாரம்”. இதன் வியாக்யானம்(விளக்கம்) ‘ஸாராஸ்வாதிநீ”
இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவை வேதக் கருத்துக்களை தெளிவாக தெரிவிக்க வந்தமையால்
அவை ‘ வேதோப ப்ரும்மஹணங்கள்” எனப்படும்.
நாதமுனிகள் முதல் எம்பெருமானார் நடுவாய், மணவாளமாமுனிகள் ஈறாக உள்ள குருபரம்பரையை சேர்ந்த மஹான்கள் –
பூர்வாச்சாரியார்கள் எனப்படுவர்.

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாரதத்தில்-செப்பு மொழி பதினெட்டு –

June 27, 2020

ஆயிரம் முதலிய பதினெண் பாஷையில்
பூரியர் ஒரு வழி புகுந்தது ஆம் என ஒரே இல
கிளவிகள் ஒன்றோடு ஒப்பில சோர்வு இல்
விளிம்பு புள் துவன்றுகின்றது -ஸ்ரீ கம்ப நாட்டாழ்வான் –பம்பை படலம் -14-

1-சீனம் –
2-கௌதம் –
3-கடாரம் –
4-காதின் குசலம் -கோசலம் –
5-கலிங்கம் –
6-கங்கம் –
7-கன்னடம் –
8-கொல்லம் –
9-கொங்கனம்-
10-குடகம் –
11-மகதம்-
12-சவகம் –
13-சிங்களம் –
14-சோனகம் –
15-தமிழ் –
16-தெலுங்கு –
17-துளு –
18-வங்கம்-

———-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகன் –

June 27, 2020

ஸ்ரீ சீதா ராம ஜெயம்

திருப்பல்லாண்டு
1- இராக்கதர் வாழ் இலங்கை பாழ் ஆளாகப் படை பொருதான் -3 –

பெரியாழ்வார் திருமொழி-
2- பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை -இரந்திட்ட கைமேல் எறி திரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலை கலங்க சரம் தொட்ட கையான் — 1-6 7- –

3- குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீணீ ரிலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கையான் – – 1-6 8- –

4- கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன் கானடை அங்கண்ணன் — –2-1-8-

5- வல்லாளிலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளன் – – 2-1 10- –

6- சிலை ஓன்று இறுத்தான் -2 -3 -7 –

7- நின்ற மராமரம் சாய்த்தான் –2 -4 -2 –

8- பொற்றிகழ் சித்ரகூடப் பொருப்பினில் உற்ற வடிவிலொரு கண்ணும் கொண்ட
வக்கற்றைக் குழலன் —2 -6 -7 –

9- மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழ
தன்னிகர் ஒன்றில்லா சிலைகால் வளைத்திட்ட மின்னுமுடியன் –2 -6 -8 –

10- தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னலன்காரன் — 2- 6- 9- –

11 – கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டான் — – -2 -7 -5-

12- என் வில்வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து
முது பெண் உயிர் உண்டான் – 3- 9- 2-

13 – மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றமிலாத சீதை மணாளன் – -3 -9 -4

14- முடி ஒன்றி மூ வுலகங்களுமாண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தான் —3- 9- 6- –

15- தார்கிளந்தம் பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொற் கொண்டு போகி
நுடங்கிடை சூர்பணகாவை செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தான் — -3- 9- 8-

16- காரார் கடலை அடைதிட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடு
ஒன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராமுதன் – – 3–9 -10 – –

17-செறிந்த மணிமுடிச் சனகன் சிலை இறுத்து சீதையை கொணர்ந்தது
அறிந்து அரசுகளை கட்ட அரும் தவத்தோன் இடை விளங்க
செறிந்த சிலைகொடு தவத்தை சிதைத்தான் -3 -10 -1 – –

18 – எல்லியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கார்க்க விருந்தான் – – -3- 10- 2-

19- கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய்
மன்னவனும் மறாது ஒழிய குலக்குமரா காடுறையப் போ என்று
விடைகொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அன்கேகினான் -3- 10- 3- –

20 – கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த
தோழமை கொண்டான் – – -3 -10 -4 –

21- கானமருங் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழில் சாரல் சித்ரகூடத்து இருக்க
பரத நம்பி பணிய நின்றான் — -10 -5 –

22- சித்ரகூடத்து இருப்ப சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய
அனைத்து உலகும் திரிந்தோடி வித்தகனே யிராமா ஒ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்தான் –3–10 -6 –

23- பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட -சிலை பிடித்து
எம்பிரான் ஏக பின்னே யங்கு இலக்குமணன் பிரிய நின்றான் – – —3 -10 -7 –

24- அடையாளம் மொழிந்த அத்தகு சீர் அயோத்தியர் கோன் — -3- 10- 8- –

25- திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே
வில்லிறுத்தான் — 3- 1- 9-

26- கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் எதிரில்
பெருமை இராமன் — 4- 1- 1-

27 – நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை யிராமன் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக்
கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன்
தன் வேள்வியில் காண நின்றன் -4 -1 -2

28- சிலையால் மராமரம் எய்த தேவன் –தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று
தடவரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்று இருந்தான் –4 -1 -3 –

29- அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ்
படுத்து குல விளக்காய் நின்ற கோன் — -4 -2 -1

30- வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத
மூக்கும் போக்குவித்தான் -4 -2 -2 –

31- கனங்குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம்
கழுவேற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் – -4 -3 -7 –

32- எரி சிதறும் சரத்தால் இலங்கையனைத் தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து
வாய்க்கோட்டம் தவிர்ந்துகந்த அரையன் – – 4- 3- 8-

33 – தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் சாரதி – – 4- 7- 1-

34- கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தான் – -4 -8 -4 –

35 – பெரும் வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை
உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தான் — 4- 8- 5-

36 – கீழுலகில் அசுரர்களைக் கிழங்கு இருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய
கருவழித்த அழிப்பன் — 4- 8- 6-

37- கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களை பிணம் படுத்த பெருமான் -4 -8 -7

38- பருவரங்களவை பற்றி படையாலித்து எழுந்தானை
செருவரங்க பொறாது அழித்த திருவாளன் —4 -8 -10

39 – மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ
செரு உடைய திசைக்கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் -4 -9 1-

40- மன்னுடைய விபீடணற்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி
மலர் கண் வைத்தான் –4-9 -2-

——————————–

ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஔவையார் நூல்கள்–1. ஆத்திசூடி / 2. கொன்றை வேந்தன் /3. மூதுரை / 4. நல்வழி–

June 27, 2020

கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.

————–

2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

————-

3. மூதுரை-

கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு. 3

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா . 5

உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ – கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் . 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் – கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா – கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம். 13

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் – பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம். 15

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. 17

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? – சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால். 18

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன். 19

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு. 20

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். 21

எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே – விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம். 23

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு. 26

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் – மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். 27

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து;) ஆதலால் – தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று. 28

மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம். 29

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

————

4. நல்வழி

கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி. 2

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5

உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. 7

ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து . 9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும் 11

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது. 11

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு, 12

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல். 13

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும். 14

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்? 17

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும். 20

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான். 21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். 22

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை. 24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம். 26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை – சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி . 30

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல். 34

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே – தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. 35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் – ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் – செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். 40

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஔவையார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பகவத் கீதை- ஸ்ரீ பாரதியாரின் முன்னுரை

June 27, 2020

1.

புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான்.
ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது (கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்)

இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம்.
புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தௌஒவாக மாசுமறுவின்றி வைத்திருத்தல்,
தௌஒந்த புத்தியே மேற்படி சுலோகத்திலே புத்தி சொல்லப்படுகிறது.
அறிவைத் தௌஒவாக நிறத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை நினைப்புகளும் அவற்றுக்குக்காதாரமான
பாவ நினைப்புகளுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.

“நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்” என்று இயேசு கிறிஸ்து
சொல்லியதும் இதே கருத்துக் கொண்டுதான்.

‘குழந்தைகளைப் போலாய் விடுங்கள்’ என்றால், உங்களுடைய லௌகிக அனுபவங்களை யெல்லாம் மறந்து விடுங்கள்;
நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்து விடுங்கள்; மறுபடி சிசுக்களைக் போலவே தாய்ப்பால் குடிக்கவும்,
மலழைச் சொற்கள் பேசவுந் தொடங்குங்கள்’ என்பது கொள்கையன்று.
‘ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போல நிஷ்களங்கமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்’ என்பது கருத்து.

ஹிருதயம் தௌஒந்தாலன்றி புத்தி தௌஒயாது. ஹிருதயத்தில் பரிபூரணமான சுத்த நிலையேற்படும் வரை,
புத்தி இடையிடேயே தௌஒந்தாலும், மீட்டு மீட்டும் குழம்பிப் போய்விடும்.

ஹிருதயம் சுத்தமானால், தௌஒந்த புத்தி தோன்றும். பகவான் சொல்லுகிறார் :- ‘அந்த அறிவுத் தௌஒவிலே நிலைபெற்று நில்,
அர்ஜுனா’ என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும் அது நற்செய்கையாகும். நீ ஒன்றும் செய்யாதே
மனம் போனபடியிருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து உனக்கு இஷ்டப்படி
எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும், உனக்குப் புத்தி தௌஒந்து விட்டதன்றோ?
புத்தி தௌஒவுற்ற இடத்தே, உனக்குத் தீயன செய்தல் ஸாத்தியப் படாது.
ஆதலால், நீ நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம் வேலை செய்யலாம்.

இனி, இங்ஙனம் உரை கொள்ளாதபடி, நற்செய்கை, தீச்செய்கை, அதாவது எல்லாவிதமான செய்கையையுந் துறந்து விட்டு,
‘அர்ஜுனா, நீ எப்போதும், தூங்கிக்கொண்டேயிரு’ என்று கடவுள் உபதேசம் பண்ணியதாகக் கருதுதல்
வெறும் மடமையைத் தவிர வேறொன்றுமில்லை.

ஏனென்றால், கடவுளே மேலே மூன்றாம் அத்தியாத்தில் பின்வருமாறு சொல்லுகிறார் :-
‘மேலும், எவனும் ஒரு க்ஷணமேனும் செய்கையின்றிருந்தல் இயலாது, எல்லா உயிர்களும், இயற்கையில்
தோன்றும் குணங்களால் தமது வசமின்றியே தொழிலில் பூட்டப்படுகின்றன’ என.

ஆதலால், மனிதன் தொழில் செய்துதான் தீரவேண்டும். எப்போதும் தூங்கக் கும்பகர்ணனாலே கூட இயலாது.
அவனுக்கும் கூட ஆறு மாத காலம் விழிப்பு உண்டு. ஆனால், நீ தொழில் செய்யுமிடத்தே,
அதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு மனமுடைந்து, ஓயாமல் துன்பப்பட்டுக் கொண்டே தொழில் செய்யும்
உலகத்தாரைப் போல தொழில் செய்யாதே.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் : ‘அர்ஜுனா, உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரமுண்டு,
பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதுமில்லை’ என.

ஆதலால், கடவுள் சொல்லுகிறார் :- ‘கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை
எவன் செய்கிறானோ, அவனே துறவி, அவனே யோகி’ என்று.

அறிவுத் தௌஒவைத் தவறவிடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.
நீ சும்மா இருந்தாலும், அப்போது உன் மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்து கொண்டேயிருக்கும்.
உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று. மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம்.
ஜபம் தொழில் இல்லையா? படிப்பு தொழில் இல்லையா? மனனம் தொழில் இல்லையா? சாஸ்திரங்களெல்லாம், கவிதைகளெல்லாம்,
நாடகங்களெல்லாம், சட்டங்களெல்லாம், வேதங்களெல்லாம், புராணங்களெல்லாம், கதைககௌல்லாம், காவியங்களெல்லாம்
தொழில்கள் அல்லவா? இவையெல்லாம் உடம்பாற் செய்வதன்றி மனத்தாற் செய்யப் படுவன அன்றோ?

அறிவுத் தௌஒவைக் கலங்க விடாதே.

அப்பால், யோகம் பண்ணு. எதன் பொருட்டெனில், யோகமே செய்கையில் திறகையாவது? என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார்.

தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்.

யோகமாவது சமத்துவம். ‘ஸமத்வம் யோக உச்யதே’ அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது
மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும்
சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி.

நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும்.
அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.

‘யோகஸ்த: குரு கர்மாணி’ என்று கடவுள் சொல்லுகிறார். ‘யோகத்தில் நின்று தொழில்களைச் செய்’ என.

யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவுபோல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால்,
ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தௌஒவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு
தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது.

எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான்.

———–

2.

வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப் பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது,
‘இஃதெல்லாம் கடவுள்’ என்று. இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும்
ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்.

நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல்.
மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.

‘ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது
முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய
வேண்டும்?’ என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கோட்கிறோம், ‘முக்தியாவது யாது?’

எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி.
அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால்,
துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்யை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும்,
அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை’ என்பதை அறிந்துகொண்டு செய்.
அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம்.
எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும்,
எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும்,
எல்லாச் செயல்களும் – எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.)
‘ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது.
அதாவது :- ‘இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது’ என்று பொருள்படும்.

இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில்,
‘இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்’ என்று சொல்லுகிறார்.

எனவே எல்லாம் கடவுள் மயமாய், எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில்,
எவனும் கவலைப்படுதலும், துயர்ப்படுதலும் அறியாமையன்றோ?

‘எல்லாம் சிவன் செயல்’ என்றால், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்?
‘இட்டமுடன்’ என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன்
செத்துவிட்டானோ?’

நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன.
நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே ”ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” –
அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு,
சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன?
நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும் போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே.
நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை,
மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா
நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்?”

————-

3.

கடவுள் சொல்லுகிறார் :- ”லோபமும் பயமும் சினமும் அழிந்து, என் மயமாய், என்னைச் சார்ந்தோராய், ஞானத் தவத்தால்
தூய்மை பெற்றோர் பலர் எனது தன்மை எய்தியுள்ளார்” (கீதை 4-ஆம் அத்தியாயம், 10-ம் சுலோகம்)
இந்த சுலோகத்தில் ஒருவன் இகலோகத்திலேயே ஜீவன் முக்தி பெற்று ஈசுவரத் தன்மையடைதற்குரிய உபாயம் பகவானால் குறிப்படப்பட்டுருக்கிறது.
”ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணமாகக் கொண்டு என்னுடன் லயித்திரு.
நீ எனது தன்னை பெறுவாய்” என்று கடவுள் சொல்லுகிறார்.

எல்லாச் செயல்களையும் கடவுளக்கென்று சமர்ப்பித்து விட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ
அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலை மீது நீர் போலே. (கீதை, 5-ஆம் அத்தியாயம், 10ஆம் சுலோகம்)

சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு! பாவத்தை செய்யாமலிருக்கும் வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே!
உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கின்றான் கடவுள். ஈசனைக் கருதி, அவன் செயலென்றும்,
அவன் பொருட்டாகாச் செயல்படுவதென்றும் நன்கு தௌஒவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது.
தாமரையிலை மீது நீர் தங்காமல் நழுவி ஓடிவிடுவது போல் உங்கள் மதியைப் பாவம்
கவர்ந்து நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய்விடும்.

———-

4.

”மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை.
கர்மப்பயனை அவன் எய்துவதுமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.” (கீதை, 5-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்)

எனவே, அவன் செய்கைகளில் எவ்விதப் பொறாமையும் சஞ்சலமும் எய்த வேண்டா. தன் செயல்களுக்கு இடையூறாக
நிற்குமென்ற எண்ணத்தால், அவன் பிற உயிர்களுடன் முரண்படுதலும் வேண்டா.

”கல்வியும் விநயமுமுடைய அந்தணனிடத்திலும், மாட்டினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும்,
அதையுண்ணும் சண்டாளனிடத்திலும் அறிஞர் சமமான பார்வையுடையோர்” (5-ஆம் அத்தியாயம், 18-ஆம் சுலோகம்)
என்று பகவான் சொல்லுகிறார்.

எனவே, கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமேயன்றி
எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித
வேற்றுயும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லக்ஷணமென்று சொல்லுகிறார்.

எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான்?
‘ஸர்வமிதம் ப்ரஹ்ம, பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்’,
இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம்.
அவ்வித மான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார்.
வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.

————–

5.

பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி
தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம்.
மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது.
அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோக்ஷ மார்க்கத்துக்கு விரோதமென்று பல வாதிகள் கருதலாயினர்.
அவர்களைத் தௌஒவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா
அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் ‘தொழில் செய்’ ‘தொழில் செய்’ என்று போதிக்கின்றார்.
இதனின்றும், அதனை வெறுமே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.

இங்குத் தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச்
செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது.

பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி – இது தான் முக்கியமான பாடம்.
தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே?
எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே.
அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு,
மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலுங் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு.
‘ஸம்சயாத்மா விநச்யதி’ – ‘ஐயமுற்றோன் அழிவான்’ என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.

“ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம்.
ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக.” இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிடவேண்டும்.
இந்த விஷயத்தை பகவத் கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீட்டும் மீட்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல்,
கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும்
அரித்துக்கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும்.
அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.

————

6.

“பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கு யாதொன்றுமில்லை;
கலியுங்கெடும், கண்டு கொண்மின்” என்று நம்மாழ்வார் திருவாய் மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில்
நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம்.
பக்தியாவது, “ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்” என்ற உறுதியான நம்பிக்கை.

“வையகத்துக் கில்லை மனமே, யுனக்கு நலஞ் செய்யக் கருதியது செப்புவேன் – பொய்யில்லை,
எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லா லழியுந் துயர்”

இவ்விஷயத்தைக் குறித்து ஸ்ரீ பகவான் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறான் :-

“எல்லா ரகஸ்யங்களிலும் மேலான பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீட்டுமொருமுறை சொல்லுகிறேன்,
கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டனானதால், உனக்கு நன்மை சொல்லுகிறேன்” (கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்)

“உன் மனத்தை எனக்கு ஆக்கிவிடு. என் பக்தனாயிரு. எனக்குப் பூஜை செய். என்னைக் கும்பிரு. நீ என்னையே எய்துவாய்.
இஃதுண்மை. உனக்குப் பிரதிக்கினை செய்து கொடுக்கிறேன். நீ எனக்குப் பிரியமானவன்.” (கீதை 18-ஆம் அத்தியாயம், 65-ஆம் சுலோகம்)

“எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு.
நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன். துயரப் படாதே.” (கீதை18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்)

நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கி விடுவதுபோல, சம்ஸார வெள்ளத்தில் விழுந்த
ஒவ்வொருவனும் இரண்டு கைகளையும்தூக்கிக்கொண்டு
(அதாவது, எவ்விதப் பொறுப்புமின்றி எல்லாப் பொறுப்புகளும் ஈசனுக்கென்று துறந்துவிட்டு) கடவுளைச் சரண்புக வேண்டும்
என்று ஸ்ரீ ராமாநுஜாசாரியர் உபதேசம் புரிந்தனர்.

பிரகலாதன் சரித்திரத்திலும், திரௌபதி துகிலிரியும் கதையிலும் இந்த உண்மையே கூறப்பட்டுக்கிறது.

இடுப்பு வஸ்திரத்தில் அவள் வைத்திருந்த இடது கையையும் விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி முடிமீது குவித்துக் கொண்ட பிறகுதான்,
கண்ணபிரான் அருளால் திரௌபதிக்கு மானபங்கம் நேராமல், அவளுடைய ஆடை மேன்மேலும் வளர்ச்சி பெறத் துச்சாதனன் கைசோர்ந்து வீழ்ந்தான்.
இக்கருத்தைப் பிள்ளைப்
பெருமாளையங்கார் –
“மெய்த்தவளச் சங்கெடுத்தான் மேகலை விட்டங்கைதலை வைத்தவளச்சங் கெடுத்தான் வாழ்வு”
என்ற வரிகளில் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
“உண்மையாகிய வெண் சங்கைத் தரித்தவன் பாஞ்சாலி தன் கைகளை மேகலையினின்றும் எடுத்த
முடிமீது வைத்த போதில் அவளுடைய அச்சத்தைக் கெடுத்தவன் ஆகிய திருமாலுக்கு வாழ்விடம்
(திருவேங்கடமலை) என்பது அவ்வரிகளின் பொருளாம்.

“சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச் சிவாய வே”
என்று நாவுக்கரசரின் உறுதி சான்ற சொற்களும் பரமபக்தியின் இலக்கணத்தைக் குறிப்பவனவாம்.
“தம்மை ஒரு சுற்றாணுடன் சேர்த்துக் கட்டிக் கடலுக்குள் வீழ்த்திய போதிலும் தமக்கு நம்புவதற்குரிய துணை
நமச்சிவாய (சிவனைப் பணிகிறேன்) என்ற மந்திரமல்லது வேறில்லை என்று திருநாவுக்கரசர் சொல்லுகிறார்.

இனி, இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகக் கருதுதல் அவசியமென்கையில், அப்போது கடவுளை நம்புவதெதன் பொருட்டு?
கடவுள் நம்மை அச்சந்தீர்த்துக் காப்பானென்று எதிர்ப்பார்ப்பது எதன் பொருட்டு? நமக்குத் தீங்கு நேர்ந்தாலும், நன்மை நேர்ந்தாலும்,
வாழ்வு நேர்ந்தாலும், மரணம் நேர்ந்தாலும் – எல்லாம் கடவுள் செயலாகையிலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருத வேண்டுமென்று
பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்குக் கடவுள் துணை எதன் பொருட்டு? நம்மைக் கற்றாணுடன் வலியக் கட்டி யாரேனும் கடலுள் வீழ்த்தினால்,
நாம் இதுவும் கடவுள் செயலென்று கருதி அப்படியே மூழ்கி இறந்து விடுதல் பொருந்துமன்றி, நமச்சிவாய, நமச்சிவாய என்று கூறி
நம்மைக் காத்துக்கொள்ள ஏன் முயல வேண்டும்? என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். இந்த ஆக்ஷேபம் தவறானது. யாங்ஙனமெனில், சொல்லுகிறேன்.
முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நன்மை தீமைகளைச் சமமாகக் கருதி நாம் மனச்சஞ்லத்தை விட்டுக் கடவுளை நம்பினால்,
அப்போது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மனஞ்சோர்ந்து
கடவுளிடம் நம்பிக்கையை இழந்து விடாமல் இருப்போமாயின், அப்போது நமக்குள் ஈசனே வந்து குடிபுகிறான்.
அப்பால் நமக்குத் துன்பங்களே நேர்வதில்லை. ஆபத்துக்கள் நம்மை அணுகா.
மரணம் நம்மை அணுகாது. எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும், தாமாகவே நம்மை விட்டு நழுவிவிடுகின்றன.
இந்த உலகத்திலே நாம் விண்ணவரின் வாழ்க்கை பெற்று நித்தியானந்தத்தை அனுபவிக்கிறோம்.

மேலும், எல்லாவற்றையும் ஞானி சமமாகக் கருதவேண்டுமென்ற இடத்தில், அவன் மனித வாழ்க்கைக்குரிய
விதிகளையெல்லாம் அறவே மறந்து போய்ப் பித்தனாய் விடவேண்டுமென்பது கருத்தன்று.

ஒரு குழந்தையைக் கொல்லுவதும், சிவ பூஜை செய்வதும் – இரண்டும் கடவுளுக்கு ஒரே மாதிரிதான். அவன் எல்லா இயக்கங்களும்,
எல்லாச் செயல்களும் தன்வடிவமாக உடையவன், எனினும், மனித வதிப்படி சிசு ஹத்தி பாவமென்பதையும்,
சிவபூஜை புண்ணியமென்பதையும் கண்ணபிரான் மறுக்கவில்லை. மனிதன் எல்லாந் துன்பங்களினின்றும் விடுபட்டும்,
என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகின்றான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது.
கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும்.
ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்ட மேனும் நஷ்ட மேனும் விளைவிக்கக் கூடாது.
உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேணவேண்டும்.
நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்திய பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும்
பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கின்றார்.

மேலும், நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே
நன்மையையுந் தீமையையும் நிகராகக் கருதவேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லாது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு
மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத க்ஷயரோகத்தி஑ல் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையுந் தெரியாமல்
புத்தி மண்ணாய் விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும் வரை ஒருவன்
காதலின்பத்துக்கும் க்ஷயரோகத் துன்பத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல் சாத்தியமன்று.
ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு.
க்ஷயரோகம் நேரும்போது சாமன்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந்நோயை வலிதாகவும் கருதி,
ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க்கிரையாகிக் கொண்டு, க்ஷயரோகி என்று தனக்கொரு
பட்டஞ் சூட்டிக்கொண்டு வருந்து மடிவதுபோல் ஞானி செய்யமாட்டான். ஞானி அத்தகைய நோய்,
ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித்
தன் ஞானத் தீயால் எரித்துத் தள்ளிவிடுவான்.

“ஞானக் நிஸ் ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே” – ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது.
கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான்.
அசு வாயிலாவேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான்.
ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோ மாதலின்.

அவனன்றி ஓரணுவு மசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான். தீங்கு செய்யவல்லான் அல்லன்.
ஏன்? நாம் அவனை முழுவதும் நம்பிவிட்டோ மாதலின்.

“கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” இதுவே பக்தி.

அந்தக் கடவுள் எத்தன்மையுடையான்? எல்லா அறிவும், எல்லா இயக்கமும், எல்லாப் பொருளும்,
எல்லா வடிவமும் எல்லாம் தானேயாகி நிற்பான்.

அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? எதற்கும் துயரப்படாதிருத்தல். எதற்கும் கலவைப்படாதிருத்தல். எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல்.

“ஸம்சயாத்மா விநச்யதி” – ஐயமுடையோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான்.

———

7.

குந்தியின் மகனே, சீதம், உஷ்ணம், இன்பம், துன்பம் என்பனவற்றைத் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் வந்து
போகும் இயல்புடையன. அநித்யமாயின; அவற்றைப் பொறுத்துக் கொள், பாரதா!” (பகவத் கீதை,2-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்)

“ஆண்காளையே! இவை எந்த மனிதனைத் துன்புறுத்தமாட்டாவோ, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கருதும்
அந்தத் தீரன் சாகாதிருக்கத் தகுவான்” (மேற்படி 15-ஆம் சுலோகம்)

இஃதே பகவத் கீதையின் சிகரம்.

சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம்.

அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம்.

இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.

இறந்து போன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவியவாகளாகவே கருதப் படல்வேண்டும்.
நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்திய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல்
சாத்தியமென்று மேற்கூரிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதிததிருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பபிட்டிருக்கிறார்.
குளிர் – வெம்மை, இன்பம் – துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருமையால் சாசுவதமல்ல.
அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும்
சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா.
அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடை கொள்கை.
இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத்
கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்திரம்.

—————

8.

‘அமிர்த சாஸ்திரம்’ – அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாஸ்திரமாகிய பகவத் கீதையைச் சிலர்
கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே,
இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே
தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே,
இத்ததை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்ததை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும்
பேசப்படுவதென்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.

துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.

க்ஷத்திரய அரசர் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலில் விசேஷ நோக்கம்.
பூ மண்டலத்தாரனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை.
இதில் ஐயமில்லை. எனினும், இந்த நூல் க்ஷத்திரிய மன்னருக்கு விசேஷமாக உரியது.
இது அவர்களுக்குள்ளேயே அதிகமாக வழங்கி வந்தது வேதங்கள், எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயினும்,
பிராமணர்களுக்கு விசேஷமாக உரியனவோ அதுபோலே புராணங்கள் க்ஷத்திரியர்களுக்கு உரியன.

மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா.

ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட
மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது. இஃது, இந்நூல் ஞான சாஸ்திர்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல்,
காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும்.

ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே
வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

“முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே,
‘தஸ்மாத் யுத்யஸ்வ பாரத’- ‘ஆதலால், பாரதா, போர் செய்’, என்ற பல்லவி வந்துகொண்டேயிருக்கின்றதன்றோ? என்று
கூறிச் சிலர் ஆக்ஷேபிக்கலாம். அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச் சொன்னேன்.
அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன். துரியோதனாதிகள் – காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை,
துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

————-

9.

இந்த ரகசியம் உனக்கு எங்ஙனம் தெரிந்ததென்று கேட்பீர்களாயின், சொல்கிறேன்.

கண்ணனை நோக்கி அர்ஜுனன் சொல்லுகிறான்:

“நீ வாயு:, நீ சந்திரன்; நீ வருணன்; நீ அனைத்திற்கும் பிதா; பிதாமகன்” (கீதை 11-ஆம் அத்தியாயம், 39-ஆம் சுலோகம் )

கண்ணன் சொல்லுகிறான்: ‘மறுபடியும், பெருந்தோளுடையாய், எனது பரம வசனத்தைக் கேட்பாய்.
என் அன்புக்குரிய நினக்கு நலத்தைக் கருதி அதனைச் சொல்லுகிறேன்.’ (கீதை 10-ஆம் அத்தியாயம், முதல் சுலோகம்)

‘நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே
மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப்பாவங்களினின்றும் விடுபடுகிறான்’ – (கீதை 10-ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)

எனவே, கீதையில் கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும் ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும் துரியோதனாதியர் காமக் குரோதிகளென்பதும்
சாஸ்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில் ஊகித்துக் கொள்ளத்தக்கனவாம்.

‘பிரபோத சந்திரிகை’ என்ற ஒரு நாடக நூல் இருக்கிறது. அதில் விவேகன் என்ற ராஜன் உலோகாயதன், பௌத்தன்
முதலியவர்களுடனே யுத்தம் செய்து வென்றதாகக் கூறப்பட்டிருக்கிறது. வேதாந்த சாஸ்திரப் பயிற்சியில்லாத ஒரு குழந்தை
அந்த நூலைப் பார்த்துவிட்டு, அதாவது, முன்பின் பாராமலே நடுவிலே மாத்திரம் பார்த்துவிட்டு,
மேற்படி யுத்தம் எந்த வருஷத்தில் நடந்ததென்றும், அதில் இரு திறத்திலும் எத்தனை உயிர்கள் மடிந்தவென்றும் கேட்கப் புகுவதுபோல்,
சிலர் துரியோதனாதியரைக் கொல்லும் புறப் பொருளிலே கீதையின் உபதேசத்தைக் கொள்ளுகின்றனர்.

ஹிந்துக்களாலே ஹிந்து தர்மத்தின் மூன்று ஆதார நீதிகளாகக் கருதப்படும் பிரஸ்தான திரவியங்களாகிய
உபநிஷத், பகவத் கீதை, வேதாந்த சூத்திரம் – என்பவற்றுள் கீதை இரண்டாவதென்பதை இந்தச் சில மூடர் மறந்து விடுகின்றனர்.
‘இதற்கு – அதாவது, பகவத் கீதைக்கு – சங்கரர், ராமானுஜாசாரியார், மத்வாசாரியார் என்ற மூன்று மத ஸ்தாபகாசாரியரும்
வியாக்கியானமெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கற்களில் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள்’ என்பதை இந்த மூடர் அறிகின்றிலர்.
கொலைக்குத் தூண்டும் நூலென்றுக்கு சங்கராச்சாரியார் பாஷ்யம் எழுதுவதென்றால், அஃது எத்தனை விநோதமாக இருக்குமென்பதைக்
கருதித் தம்மைத் தாமே நகைக்குந் திறமையிலர்.

கொலை எவ்வளவு தூரம்! பகவத்பாத சங்கராசாரியார் எவ்வளவு தூரம்!

மேலும், நாம் மேலே கூறியபடி, பகவத் கீதையைக் கொலை நூலென்று வாதாடுவோர்,
அதில் முகவுரை மாத்திரம் படித்தவர்களேயன்றி, நூலின் உட்பகுதியில் நுழைந்து பார்த்தவரல்லர் என்பதில் சந்தேகமில்லை.

ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே,
பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம்,
இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.

—————-

10.

இங்ஙனம் மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு – ஒரே சத்துரு – அவனுடைய சொந்த மனமேயாம்.
‘தன்னைத்தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன்.
இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.

தன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் தனக்குப் பிறிதில்லை. தன்னையொழியத் தனக்குப் பகையும் வேறு கிடையாது.
ஒருவன் தனக்குத்தான் நட்பாகியபோது, உலக முழுதும் அவனுக்கு நட்பாய் விடுகிறது. அங்ஙனமின்றித் தான் கட்டியாளாமல்
தனக்குத் தான் பகையாக நிற்போனுக்கு வையகமெல்லாம் பகையாகவே முடிகிறது. உள்ளப் பகையே பகை, புறப் பகை பகையன்று.
உள்ளப் பகையின் வௌஒத் தோற்றமே புறப் பகையாவது. உள்ளப் பகையை களைந்து விட்டால், புறப்பகை தானே நழுவிப் போய்விடும்.

புறத்தே எல்லாம் கடவுளாகப் போற்றத் தக்கது. உள்ளப் பகையாகிய அஞ்ஞானம் –
அதாவது வேற்றுமை உணர்ச்சி – ஒன்று மாத்திரமே அழித்தற்குரியது.

வேற்றுமையுணர்ச்சியை நீக்கி, நம்மைச் சூழ நடைபெறும் செயல்களெல்லாம் ஈசன் செயல்களென்றும்,
தோன்றும் தோற்றங்களெல்லாம் ஈசனுடைய தோற்றங்களென்றும் தெரிந்து கொள்ளுமிடத்தே பய நாசம் உண்டாகிறது.

“சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே?
‘சொல்’லென்று ஹரண்யன் தான் உறுமிக்கேட்க நல்லதொரு மகன் சொல்வான்
‘தூணி லுள்ளான், நாராயணன் துரும்பினுள்ளா’ னென்றான், வல்லமை சேர் கடவுளிலா இடமொன்றில்லை,
மகா சக்தி யில்லாத வஸ்து இல்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை, அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ ?”

‘தன் மனமே தனக்குப் பகையென்பது பேதைமையன்றோ? எல்லாம் கடவுளாயின், என் மனமும் கடவுள் அன்றோ?
அதனைப் பகைவனாகக் கருதுமாறென்னே?’ எனில் – தன்னைத்தான் வென்று தனக்குத்தான் நன்மை செய்யும்போது,
தன்னுடைய மனம் தனக்குத்தான் தன்மையுடையாதாகக் கருதிப் போற்றத் தக்கது. மற்றப் போது பகையாம்.

எல்லாம் கடவுளாயின், மனம் தீமை செய்யும்போது கடவுளாகுமன்றோ? ‘எப்பொருள் யாது செய்யுமோயினும் அப்பொருள் கடவுள்,
அதன் செய்கை கடவுளுடைய செய்கை’ யென்றும், விதி மாறாதன்றோ? எனில் – அவ்வுரை மெய்யே. எனினும்,
நமக்கு லோகானுபவம் மறுக்கத்தகாத பிரமாணமாகும். லோகானுபவத்தில் மனம் நமக்குத் தீமை செய்கிறது.
அதை வென்று நன்மை செய்யத் தக்கதாகப் புரிதல் சாத்தியம்.

அங்ஙனம் செய்யும் பொருட்டாகவே, சாஸ்திரங்களும், வேதங்களும் எண்ணிறந்தனவாச் சமைக்கப் பட்டிருக்கின்றன.

மனம் துன்பமிழைப்பதையும், அதனால் உயிர்கள் கோடானு கோடியாக மடிவதையும் நாம் கண் முன்பு காணும்போது,
அதை ஒரேயடியாக மறந்து விடுவதில் பயனில்லை.

மனம் இயற்கையாலும், தீய சகவாசத்தாலும் ஆத்மாவுக்குத் துன்பமிழைத்தல் பிரத்திய

எல்லாம் கடவுளுடைய செயலென்பது பொது உண்மை. பரம சத்தியம். ஆயினும் மனிதனுக்குத் துன்பமுண்டு,
எல்லாம் கடவுளுடைய வடிவமென்பது பரம சத்தியம். எனினும், ஜீவர்கள் துயரப்படுவதைப் பிரத்தியக்ஷமாகக் காணுகிறோம்.

அதாவது, கடவுளுக்கு எல்லாம் ஒன்றுபோலவேயாம், எத்தனை கோடி உயிர்கள் வாழ்ந்தாலும், எத்தனை கோடி உயிர்கள் மடிந்தாலும்,
கடவுளுக்கு யாதொரு பேதமுமில்லை. அகண்ட கோடிகள் சிதறுகின்றன. பூகம்பமுண்டாய்த் தேசங்களழிகின்றன.

சூரிய கோளங்கள் ஒன்றோடொன்று மோதித் தூளாகின்றன. இவையனைத்தும் புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப் பொருள்கள் –
கோடியா? ஒரு கோடியா? கோடி கோடியா? கோடி கோடி கோடிகோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடியா? அன்று. அநந்தம்.
எண்ணத் தொலையாதன. எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணத்தோறும் தோன்றுகின்றன. எண்ணத் தொலையாத பொருள்கள்
க்ஷணத்தோறும் மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரே மாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு.
அவருடைய சரீரமாகிய ஜகத் ஓயாமல் சுழன்று கொண்டிருத்தல் இயற்கை. இதனால் அவருக்கு அசைவில்லை. அவருக்கு அழிவில்லை.

கடவுள் எங்குமிருக்கிறார், எப்போதுமிருக்கிறார், யாதுமாவார். எனினும், தனி உயிருக்கு இன்பமும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம்.
ஜீவர்கள் அஞ்ஞானத்திலேதான் துன்பங்களேற்படுத்திக் கொள்ளுகிறார்களென்பது மெய்யே. அவர்களுக்கு யதார்த்தத்தில் தீமைகளேனும்
துன்பங்களேனும் இல்லை என்பது மெய்யே.

ஆனாலும், அந்த அஞ்ஞானம் ஒரு தீங்குதானே? அதைத் தொலைக்கத்தானே வேண்டும்? மனத்தைக் கட்டுதல், மனத்தை வெல்லுதல்
என்பதெல்லாம் அஞ்ஞானத்தைத் தொலைத்தல் என்ற பொருளன்று வேறு பொருள் இலதாம்.

————-

11.

அஞ்ஞானம் கடவுள் மயந்தானே? அதை ஏன் தொலைக்க வேண்டும்? என்று கேட்டால் –
நீ ‘எல்லாம் கடவுள், ஞானமும் கடவுள், அஞ்ஞானமும் கடவுள்’ என்பதை உண்மையாகத் தெரிந்த அளவில்
உன்னைப் பரம ஞானம் எய்திவிட்டது. உனக்கு அஞ்ஞானமும் நீங்கிப் போய்விட்டது. அஞ்ஞானமும் அதனாலாகிய துன்பமும்
கடவுள் மயம் என்பது மெய்யே எனில் பின்னர் அவை நீங்கி, நீ ஞானமும் இன்பமும் எய்தியும் கடவுள் செயலென்பதை மறந்து விடாதே.
அவ்விடத்து அஞ்ஞானம் நீங்கியது பற்றி வருத்தப் படாதே.

———

12.

கடவுளை உபாஸனை செய்தவற்குரிய வழி எங்ஙனமெனில் :- ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் –
‘நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர்
என்னை வழிபடுகிறார்கள்’ (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)

எந்த ஜந்துவுக்கும் இம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார்,
எந்த ஜீவனையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருததத்தகார். மாமிச போஜனம் பண்ணுவோர்
கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார்.

‘அஹிம்ஸா பரமோ தர்ம’ :- ‘கொல்லாமையே முக்கிய தர்மம்’ என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம்.
கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது.
மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.

இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம்.
இதனை, ஆங்கிலேயர் ‘common sense’ என்பர். சுத்தமான – மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.

சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில்
அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள்.
சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன.
சாதாரண ஞானத்தில் தௌஒவான கொள்கை யாதெனில், ‘நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால்,
நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்’ என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.

நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல்
சகல ஜீவர்களின் இயற்கையா இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது.

நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி
பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம்
பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டு மிருப்போமாயின் – அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும்,
பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் – நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.

——–

13.

இனி, வேறு சிலர் பகவத் கீதையை சந்நியாச நூலென்று கருதுகிறார்கள். அதாவது பெண்டாட்டி பிள்ளைகளைத் துறந்து,
தலையை மொட்டையிட்டுக் கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு எழுதப்பட்ட நூலென்று நினைக்கிறார்கள்.
இதைக் காட்டிலும் ஆச்சரியாமான தப்பிதம் நாம் பார்த்ததே கிடையாது. கீதையைக் கேட்டவனும் சந்நியாசியல்லன்,
சொல்லியவனும் சந்நியாசியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர். குடும்ப வாழ்விலிருந்தோர்.
‘ஆகா! அஃதெப்படிச் சொல்லலாம்? அர்ஜுனன் ஜீவாத்மாவென்றும், கண்ணன் பரமாத்மா வென்றும் மேலே கூறிவிட்டு,
இங்கு அவர்களை உலகத்து மன்னர்களாக விவரிப்பதற்கு நியாயமென்ன? எனில் – வேண்டா; அதனை விட்டுவிடுக.

பரமாத்மா ஜீவாத்மா இருவருமே உலக காரியங்களில் தளைப்பட்டுத் தானிருக்கிறார்கள். கீர்த்தி பெற்ற வங்க கவியாகிய
ஸ்ரீமான் ரவீந்திரநாத் தாகூர் கடவுளை நோக்கி ‘ஐயனே, நீயே சம்சார வலையில் அகப்பட்டிருக்கிறாயே?
யான் இதினின்றும் விடுதலை வேண்டும் பேதைமையென்னே?’ என்று பாடியிருக்கிறார். சம்சார விருத்திகள் கடவுளுடைய விருத்திகள்
செயலெல்லாம் சிவன் செயல். ‘அவனன்றி ஓரணுவு மசையா’ தெனும் பெரிய ஆப்தர் மொழியுண்டு கண்டீர்.

கீதையிலே பகவான் சொல்லுகிறான் – ”அர்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்ய வேண்டியதென மிஞ்சி நிற்கும்
செய்கையொன்றும் எனக்குக் கிடையாது, ‘அடையத் தக்கது, ஆனால், என்னால் அடையப் படாதது, எனவொரு பேதமில்லை எனினும்,
நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன்” என.

ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் – ”நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும்.
அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும்.
அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன்’ என.

கடவுள் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும்
அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன்.
அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்;
மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து
ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது.
எண்ணற்ற விலங்குகளும்,பறவைகளும், ஊர்வனவுமாகிய ஜீவர்களும்,மரம், செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருள்களும்
அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக் கொண்டு, அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து
அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை பண்ணுகிறான்.
மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும்
ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை.
ஆனால், ‘கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடும் நன்றே’ என்று முன்னோர் குறிப்பிட்டபடி,
கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிக கஷ்டமாக்கக்கூடிய மனிதரும் இருக்கக் கூடுமென்பது மெய்யே.
ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது. பொது விதியை ஸ்தாபனம் செய்வதாகிய விதிவிலக்கென்றே கருதத் தகும்.

கதையை வளர்த்துப் பயனில்லை. பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன்
முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இஃதே ஸ்ரீபகவத் கீதையில் உபதேசிக்கிற கொள்கை.

பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடையய
இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். ஜன சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான்.
குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.

துறவிகளுக்குள்ளே பட்டினத்துப் பிள்ளை சிறந்தவரென்று தாயுமானவர் பாடியுள்ளார். அந்தப் பட்டினத்துப் பிள்ளை என்ன சொல்லுகிறார்?

“அறந்தா னியற்றும் அவனிலுங் கோடியதிக மில்லந்
துறந்தான் அவனிற் சதகோடி யுள்ளத் துறையுடையான்
மறந்தா னறக் கற்றறிவோ டிருந்திரு வாதனையற் நிறந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியே கம்பனே”

இல்லத் துறவைக் காட்டிலும் உள்ளத் துறவு சககோடி மடங்கு மேலென்று மேலே பட்டினத்தடிகள் சொல்லுகிறார்.
பட்டினத்தடிகள் தாம் துறவியாதலால்
இங்ஙனம் கூறினார். உள்ளத் துறவு செய்தற்குரியதென்றும் மனைத் துறவு செய்யவொண்ணாததொரு பாவமென்றும் நான் சொல்லுகிறேன்.

பாவமாவது யாது? புண்ணியமென்பதெனனை?

தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம்
விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும்.

ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.

‘இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை = கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே
இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலையன்று.
வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடுத்ததொரு முழையிலே கடவுளைக் காணமாட்டான்.

கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்.

“அங்கமே நின் வடிவமான சுகர்கூப்பிட நீ
எங்கும் ‘ஏன்? ஏன்?’ என்ற தென்னே பராபரமே?”–என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

எங்ஙனமேனும், கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற பேராவலுடன், சுகப் பிரம்மரிஷி காட்டு வழியே,
‘கடவுளே, கடவுளே யோ!’ என்று கதறிக்கொண்டுபோயினராம்.
அப்போது அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி, ஓடை, மரம், செடி, கொடி, இலை, மலர், பறவை, விலங்கு –
எல்லாப் பொருள்களும் ‘ஏன்? ஏன்?’என்று கேட்டனவாம்.

எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். ‘ஸர்வமிதம் ப்ரஹ்ம’ – உலகமெல்லாம் கடவுள் மயம் என்று
வேதம் சொல்லும் கொள்கையையே மேற்படி கதை விளக்குகிறது.

இங்ஙனமாகையில் வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம்
தானும் பூஜித்துக்கொண்டு,
கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களினின்றும் விடுபட்டு, ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழியா?
அல்லது, காட்டிலே போய், உடம்பை விழலாக வற்றடித்து மடித்தும், புலி, பாம்பு முதலிய துஷ்ட ஜந்துக்களுக்கிரையாய் மடிந்தும்,
கடவுளைத் தேட முயலுதல் சிறந்த உபாயமா?

சூரியனைக் காணவில்லையென்று ஒருவன் தன் கைப்பெட்டிக்குள்ளே சோதனை போடுதலொக்குமன்றோ,
ஒருவன் கடவுளைக் காணவேண்டிக் காடுகளிலும் இருண்ட முழைகளிலும் புகுந்து வாழ்தல்?

‘இல்லற மல்லது நல்லறமில்லை’ தாயுமானஸ்வாமி, தாம் உயர்ந்த துறவு பூண்டிருந்த போதிலும்,
இதைனப் பின்வரும் பாடலில் அங்கீகாரம் செய்கிறார். அதாவது, முற்றிலும் அங்கீகாரம் புரிய வில்லை.
துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்ததென்று அவர் தௌஒவு பட உரைத்துவிடவில்லை.
முக்திக்கு இரண்டும் சமசாதனங்கள் என்கிறார். தாயுமானவர் சொல்லுகிறார் –

”மத்த மத கரி முகிற் குல மென்ன நின்றிலகு
வாயிலுடன் மதி யகடு தோய்
மாடகூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த
மணிமேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கத்துடன் முத்து நகையார்களொடு
முத்து முத்தாய்க் குலாவி
மோகத் திருந்து மென்? யோகத்தினிலைநின்று
மூச்சைப் பிடித் தடக்கிக்
கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு
கரடி நுழை நூழை கொண்ட
கான மலை யுச்சியிற் குகை யூடிருந்து மென்?
கர தலாமலக மென்ன
சத்த மற மோன நிலை பெற்றவர்களுய்வர் காண்!
ஜனகாதி துணிவி தன்றோ?
சர்வபரிபூரண அகண்டதத்துவமான
சச்சிதானந்த சிவமே”

இதன் பொருள் யாதெனில் =

‘மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில்,
சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா
விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ் பாட்டுக்கும்
நாட்டியங்களுக்கு மிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன?
அஃதன்றி, யோக வாழ்விலே சென்று மூச்சை அடக்கிக் கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய
புலி, சிங்கம், கரடி முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன?
உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம்.
‘சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்’ இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடுபாவது?
எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே?’

இங்ஙனம், இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும்,
கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல்லாமல், இரண்டும் ஒருங்கே மோக்ஷத்துக்குச் சமமான சாதனங்கள் என்று சொல்லியதே
நமக்குப் பெரிய ஆறுதலாயிற்று. சம்சார சுகங்கள் கூடத் துன்பங்களுக்கே வழிகாட்டுகின்றன வென்றும்,
ஆகவே எல்லா வகையினும் இகலோக வாழ்க்கை துன்பத்தைத் தவிர வேறில்லையென்றும் சொல்லிச் சில பிற்காலத்துத் துறவிகள்,
‘வீட்டையும் பெண்டு பிள்ளைகளையும் துறந்து விட்ட மாத்திரத்திலேயே ஒருவன் இகலோக வாழ்வைத் துறந்துவிட்டானாகிறான்’ என்ற
பிழைக் கருத்து கொண்டவர்களாய், ஊர்தோறும் சுற்றிக்கொண்டு, வீடு, வாயில் சுற்றம் துணை இனம் ஏதும் இல்லாதவர்களாய்,
பிச்சையெடுத்து வயிறு வளர்க்கிறார்கள். இக் கூட்டத்தாரின் வாழ்க்கை மகா பரிதாபமானது.
இந்தக் கூட்டத்தாரில் இடையிடையே சிற்சில இடங்களில் சிற்சில மகான்கள் அளவற்ற பக்தியுடையோராகவும்,
வரம்பற்ற ஜீவ காருண்யமுடையோராகவும் தோன்றுகிறார்கள். மற்றும் அவர்களில் பெரும்பான்மையோருக்கு
ஒரு விதமான முக்தித் தேட்டம் இருக்கத்தான் செய்கிறது. எனினும், இவர்களில் மிகப் பெரிய மகான்கள் கூட,
உலகத்தில் மானுடர் எய்தற்குரியதாகிய பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தனர் எனக் கூறத் தகாது.

வேதகாலத்தில் இந்தத் துறவு வழி ஹிந்துக்களுக்குள்ளே கிடையாது.
வேத காலத்தில், சந்நியாசம் நமக்குள்ளே இருப்பதாக சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.
வசிஷ்டர், வாமதேவர் முதலிய வேதரிஷிகள் அத்ததை பேரும் மணம் புரிந்துகொண்டு, மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர்.
புலன்களை அடக்கியாளும் பொருட்டாக, அக்காலத்து ரிஷிகள் பிரம்மசாரிகளாக இருந்து நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்ததுண்டு.
ஆனால், குறிப்பிட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாழ்க்கையுட் புகுதலே மகரிஷிகளுக்குள்ள வழக்கமாக நடைபெற்றுவந்தது.
மஹாபாரதத்திலும் மற்றப் பூர்வ பூராணங்களிலும் வேதரிஷிகளைப் பற்றிய கதைகளும் சரித்திரங்களும் ஒரே சித்தாந்தமாக
வேத ரிஷிகளுக்குத் துறவறம் என்ற விஷயமே இன்னதென்று தெரியாது என்ற என் வார்த்தையை நிலைநிறுத்துகின்றன.
மேலும் சுவாமி விவோகாநந்தர் வேதத்தின் பிற்சேர்க்கைகளாகிய உபநிஷத்துக்களையே முக்கியமாகப் பயின்றவர்.
இந்த உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம் இவை வேத ரிஷிகளால் சமைப்பட்டனவல்ல.
பிற்காலத்தவரால் சமைப்பட்டன. ஸம்ஹிதைகள் என்று மந்திரங்கள் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள்.
அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன.
உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம்.
ஆனால், பச்சை வேதமென்று மந்திரம் அல்லது ஸம்ஸிதை எனப்படும் பகுதியேயாம்.

இந்த மந்திரங்கள் அல்லது ஸம்ஹிதைகள் பழைய மிகப் பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன.
அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும்
உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன.

ஆனால், இந்த உவமானம் முற்றிலும் பொருந்ததாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே.
ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் – அதாவது, ஸம்ஹிதை அல்லது மந்திரம் மாத்திரம் –
தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது.
உபநிஷத்தில் சில, மிகச் சில பகுதிகளில், விசேஷமாக வேத மந்திரங்களை மீட்டுமுரைக்குமிடத்தே, வேத பாஷையைக் காணலாம்.
மற்றபடி உபநிஷத்துக்கு முழுவதும் பிற்காலத்துப் பாஷையிலேயே சமைந்திருக்கிறது.

இங்ஙனமிருக்கப் பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும்
உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர்.

இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன்.
முதலாவது காரணம்,வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது.
நிருத்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் சுற்ற பின்னரே,
ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்டமான நூல்.
அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வோர மிக மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் சாயணரென்ற
வித்தியாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருத்தத்தையுமே ஆதாரமாகவுடையது.
பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப் பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன.
நிருத்தத்திலே என்றால் பெரும்பாலும் வேதப் பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில்
அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கிறது.

வேத மந்திரங்களுக்குச் சரியான அர்த்தம் கண்டி பிடிக்க வேண்டுமென்று தற்காலத்திய ஐரோப்பாவிலும் இந்தியாவிலும்
அநேக பண்டிதர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில வருஷங்களுக்கு முன்னே காலஞ்சென்ற வராகிய சுவாமி தயாநந்த சரஸ்வதி
வேதத்துக்கு தாம் எப்போதுமில்லாத புதிய அர்த்தமொன்று கற்பித்து
அதற்கிணங்க ‘ஆரிய சாமஜம்’ என்ற புது மதக் கொள்கையொன்று ஸ்தாபித்தார்.

ஆனால், சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும்,
பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹிந்து வைதிகர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கும்
சாயணபாஷ்யமே பூர்வ வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும், தௌஒவாகவும், உண்மையாகவும் அமைந்திருக்கிறது.

சாயண பாஷ்யமில்லாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்குப் பயன்படாமலே போயிருக்கும். சரியான சமயத்தில் சாயணர் வேதங்களுக்கு
பாஷ்யம் எழுதி வைத்தார். எனினும், சாயணாச்சாரியர் கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம் கர்ம நூலென்று கருதிவிட்டார்.
அதனால் அது ஹிந்து மதத்துக்கு ஆதிவேர் என்பதை இந்த ஆசாரியர்களால் மறுக்க முடியாவிடினும்,
அதற்கு ஞானநெறியில் எவ்விதப் பிரமாணமுமில்லை யென்று அவர்கள் தவறாக எண்ணும்படி நேர்ந்து விட்டது.
ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றும் நூலாகக் கருதிய இவர்கள் கர்மங்களென்ற இடத்தே யாகங்களைக் கருதிக் கூறினர்.
அதாவது,யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படும் நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களெனப் பொருள் கொண்டு
இவர்கள் வேதத்தைக் கர்ம காண்டம் என்றார்கள்.

மேற்படி யாகங்களே பெரும்பாலும் பல வதைகளும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாப் பாராட்டிய
கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோக்ஷத்துக்கு வழியென்ற போலி வைதிகரைப் பழிசூட்டி,
அந்தக் கொலைச் சடங்குளால் மனிதன் நரகத்துக்குப் போவான் என்பதை நிலை நாட்டிய புத்த பகவானும்,
அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும் இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்திவிட்டார்கள்.
அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்று ஹிந்து தர்மத்தை நிலை நாட்ட சங்கராசாரியர் அவதரித்தார். அவர் புத்தமதக்
கருத்துக்களைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் செய்து கொண்டார்.
ஷண்மத ஸ்தாபகராகியராய், சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம்
என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமான ஞானத் திறமையாலும் கல்வி வலிமையினாலும் மீள உயிர்ப்பித்து
அதற்கு அழியாத சக்தி ஏற்படுத்தி விட்டுப் போனார். தம்மாலே வெட்டுண்ட புத்த மதம் என்ற விருக்ஷத்தின் கிளைகள் பலவற்றை
ஹிந்து தர்மமாகிய மரத்துக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்படி எருவாகச் செய்து போட்டார்.
இங்ஙனம் புத்த மதக் கொள்கைகள் பலவற்றை ஹிந்து தர்மத்துக்கு ஆதரமாகச் சேர்த்துக்கொண்டது பற்றியே,
சங்கராச்சாரியாரை அவருடைய எதிர்க்கட்சியார் பலர் ‘பிரசன்ன பௌத்தர்’ (மறைவு பட்ட பௌத்தர்) என்று சொன்னார்கள்.
எனினும் அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலோர் அவரைப்
பரமசிவனின் அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள்.

பௌத்த மதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சில மனிதர் துறவிகளாகவும்
சில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத்தவராகவும் இருந்தனர்.

துறவிகள் மடங்களை இத்தனை தாராளமாகவ,ம் இத்தனை வலிமையுடையனவாகவும் செய்ய வழி காட்டியது பௌத்த மதம்.
எங்கே பார்த்தாலும் இந்தியாவை அம்மதம் ஒரே சந்நியாசி வெள்ளமாகச் சமைத்துவிட்டது. பாரத தேசத்தை அந்த மதம்
ஒரு பெரிய மடமாக்கி வைத்துவிட்டது. ராஜா, மந்திரி, குடி, படை – எல்லாம் மடத்துக்குச் சார்பிடங்கள்.
துறவிகளுக்குச் சரியான போஜனம் முதலிய உபகாரங்கள் நடத்துவதே மனித நாகரிகத்தின் உயர் நோக்கமாக கருதப்பட்டது.
துறவிகள் தாம் முக்கியமான ஜனங்கள்! மற்ற ஜனங்களெல்லாரும் அவர்களுக்குப் பரிவாரம்! மடந்தான் பிரதானம். ராஜ்யம் அதற்குச் சாதனம்.

பாரத தேசத்தில் புத்த மதம் ஜீவகாருண்யம், சர்வ ஜன சமத்துவம் என்ற இரு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும்படி செய்தது.
ஆனால், உலக வாழ்க்கையாகிய ஜகத்தில் ஔஒ போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து,
அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்து உலகமெல்லாம் பொய் மயம் என்றும், துக்க மயம் என்றும் பிதற்றிக் கொண்டு
வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்கு உண்டு.
அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளிவிட்டது. பின்னிட்டுப் புத்த தர்மத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும்
புத்த மதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.
பிற்காலத்தில் பௌத்த வழியைத் தழுவி, பலமான மட ஸ்தாபனங்கள் செய்த ரோமன் கத்தோலிக்க மதத்திலும் குருக்களுடைய சக்தி
மிஞ்சிப் போய் மனித நாகரிகத்துக்குப் பேராபத்து விளையும் போலிருந்தது. அதை ஐரோப்பிய தேசத்தார்கள் பல புரட்சிகளாலும்,
பெருங் கலகங்களாலும், யுத்தங்களாலும் எதிர்த்து வென்றனர். அது முதல் ஐரோப்பாவில் மடாதிபதிகளுக்கு ராஜ்யத்தின்
மீதிருந்த செல்வாக்கும் அதிகாரமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றன. இது நிற்க.

ஹிந்து தர்மம் புத்த மதத்தை ஜெயிக்கவில்லை யென்றும், பௌத்த மதமே ஹிந்து மதத்தை ஜெயித்து விட்டதாகவும்
சில மாதங்கள் முன்பு, காரைக்குடியில் ஒரு நண்பர் என்னிடம் தாக்கினார். சரித்திரத்திலும் பிரத்யக்ஷத்திலும் ஐயமற புத்த மதமழிந்து,
ஹிந்து மதம் வெற்றி பெற்று நிற்கும் செய்தி விளங்குகையில், பட்டப் பகலை இரவென்று கூறுதல் போல்,
மேற்படி காரைக்குடி நண்பர் சொல்லியது பச்சைப் பொய்யை இங்கெடுத்துச் சொல்லவந்த முகாந்தரம் யாதெனில்
அவர் சொல்லியது பச்சைப் பொய்யன்று. அதில் சிறிதளவு உண்மையும் கலந்திருக்கிறது.
எங்ஙனமெனில், பௌத்த மார்க்கத்தை களைத்தெறிந்து மிஞ்சி நின்ற ஹிந்து மதம் பல அம்சங்களில் பௌத்த மதக் கொள்கைகளை
முழுமையாகவும் பல அம்சங்களிற் சற்றே மாற்றியும் தன்னுள்ளே சேர்த்துக் கொண்டுவிட்டது.
ஆகவே பௌத்த மதம் இந்நாட்டில் இருந்த இடம் தடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் மடிந்து போகவில்லை.
அதன் கொள்கைகளில் பல ஹிந்து மதக் கொள்கைகளுடன் கலந்து இந்நாட்டில் வழங்கி வருகின்றன.

இந்தச் செய்தியையே அந்தக் காரைக்குடி நண்பர் மிகவும் அதிச யோகதியாக மேற்கண்டவாறு பச்சைப் பொய் வடிவத்தில் கூறினார்.
புனர் ஜன்மக் கொள்கை, புலால் மறுத்தல் – இவை இரண்டுமே பௌத்த மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்குள் நுழைந்த கொள்கைகளில்
முக்கியமானவை என்று கருதப் படுகின்றன. ஆனால், இக்கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்துதான் ஹிந்து மதத்துக்குள்
புகுந்தனவென்று கூறுவதற்குப் பலமான ஆதாரங்களில்லை. புனர் ஜன்ம கொள்கை பூர்வ புராணங்களிலேயே இருந்தது.
பௌத்த மதம் அக்கொள்கையை அறிஞர் கண்டு நகைக்கத்தக்க படியாக, வரம்பு மீறி வற்புறுத்திற்று.
பிற்கால ஹிந்து மதத்தில் அக்கொள்கை அளவுக்கு மிஞ்சி, நிரார்த்தகமாக ஏறிப்போய் இப்போது ஹிந்து நம்பிக்கையிலுள்ள
குறைகளிலொன்றாக இயல்கிறது. சாதாரணமாக ஒருவனுக்குத் தலை நோவு வந்தாலுங்கூட,
அதற்குக் காரணம் ‘முதல்நாள் பசியில்லாமல் உண்டதோ, அளவு மீறித் தூக்கம் விழித்ததோ, மிகக் குளிர்ந்த அல்லது மிக அசுத்தமான நீரில்
ஸ்நானம் செய்ததோ என்பதை ஆராயும் முன்பாகவே அது பூர்வ ஜன்மத்தின் கர்மப் பயனென்று ஹிந்துக்களிலே
பாமரர் கருதக்கூடிய நிலைமை வந்துவிட்டது. உலகத்து வியாபார நிலைமையையும், பொருள் வழங்கும் முறைகளையும்
மனித தந்திரத்தால் மாற்றி விடலாம் என்பதும், அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வ மிகுதியாலும் செல்வக் குறைவாலும்
மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும், அவமானங்களையும், பசிகளையும், மரணங்களையும் நீக்கிவிடக் கூடும்
என்பதும் தற்காலத்து ஹிந்துக்களிலே பலருக்கு தோன்றவே இடமில்லை. பிறர் சொல்லிய போதிலும்
அது அவர்களுக்கு அர்த்தமாவது சிரமம். ஏனென்றால், மண விஷயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும்,
தார தம்மியங்களையும், பாரபக்ஷங்களையும் கண்டு, அதற்கு நிவக்ஷணம் தேட வழி தெரியாத இடத்திலேதான்,
பெரும்பாலும் இந்தப் பூர்வ ஜன்ம கர்ம விஷயம் விசேஷமாகப் பிரஸ்தாபத்துக்கு வருகிறது.
அற்பாயுள், நீண்ட ஆயுள், நோய், நோயின்மை, அழகு, அழகின்மை, பாடத் தெரிதல், அது தெரியாமை, படிப்புத் தெரிதல்,
அது தெரியாமை முதலிய எல்லாப் பேதங்களுக்கும் பூர்வ ஜன்மத்தின் புண்ய பாவச் செயல்களையே முகாந்தரமாகக் காட்டினார்களெனினும்,
பண விஷயமான வேறுபாடுகளே இவையெல்லாவற்றைக் காட்டிலும் மனிதர்களுக்கு உள்ளக் கொதிப்பையும் நம்பிக்கைக் கேட்டையும் விளைத்து,
அவர்களை இந்த ஜன்மத்தின் துக்கங்களுக்குப் பூர்வ ஜன்மத்திலே காரணம் தேடுவதும்,
அடுத்த ஜன்மத்திலே பரிகாரந் தேடுவதுமாகிய விநோதத் தொழிலிலே தூண்டின.

எனவே, இந்தப் பூர்வ ஜன்ம சித்தாந்தத்தைப் பௌத்த மதம் நமது தேசத்தில் ஊர்ஜிதப்படுத்தியது
பற்றி நாம் அதற்கு அதிக நன்றி செலுத்த இடமில்லை.

பௌத்த மதத்தால் நாம் அடைந்த நன்மைகளிலே உண்மையான நன்மை ஒன்றுதான்.
அதாவது, விக்கிரக ஆராதனையை பௌத்த மதம் ஊர்ஜிதப்படுத்திற்று.
புதிதாக உண்டாக்கவில்லை. ஏற்கனவேயிருந்த வழக்கத்தை மிகவும் விஸ்தாரமாக்கி ஊர்ஜிதப்படுத்திற்று.
பௌத்தர்கள் மனிதருக்கேற்படுத்திய சிலைகளை நம்மவர் தம்முடைய அற்புத ஞான சக்தியின் விரிவாலும்
கற்பனைச் சக்தியின் தௌஒவாலும் தேவர்களுக்குச் சமைத்துக் கொண்டனர். தேவர்களைச் சிலைகளில்
வைத்து வணங்குதல் முக்திக்கு மகத்தான சாதனங்களிலொன்றாம். ஆனால் உண்மையான பக்தியுடன் வணங்க வேண்டும்.

இனி, புத்த மதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பிவிட்டது.
உபநிஷத்துக்களிலும் வேதத்திலும் ‘மாயா’ என்ற சொல் பராசக்தியை குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய்யென்றதொரு
வாதம் உண்டாயிற்று. இதனால், ஜகத் பொய்; தேவர்கள் பொய்; சூரிய நக்ஷத்திராதிகள் பொய்; மனம் பொய்; சைதந்யம் மாத்திரம் மெய்.
ஆதலால், இந்த உலகத்துக் கடமைகளெல்லாம் எறிந்துவிடத் தக்கன. இதன் இன்பங்களெல்லாம் துறந்துவிடத் தக்கன,
என்றதொரு வாதம் எழுந்தது. ‘இவ்வுலக இன்பங்களெல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம்;
இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையும் தேடப் புகுதல் மடமையாகும்.
எனவே எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமாகும்’ என்ற கட்சி ஏற்பட்டது.

ஆனால், இவர்கள் எல்லா இன்பங்களையுந் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி, இவர்கள் அங்ஙனம் உண்மையிலே துறக்கவில்லை.
இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறிகளாகத் திரதல் சாத்தியம்.
அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்க வில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா?
சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத்
தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. ஸ்நானவின்பத்தைத் துறக்கவில்லை.
தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை.
வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் முக்கியஸ்தர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை.
இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை.
பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி.
இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன.
சரணாகதியால் – கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள்.
அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.

இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுப்ரமணிய பாரதியார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.