Archive for May, 2020

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –84-கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை- இத்யாதி —

May 29, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

மேல் பெரும் அம்சம் கிடக்கச் செய்தே இதுக்கு முன்பு தான் பெற்றவை தனக்கு
ஒரு அவதி உண்டோ -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே பிரதம பர்வ கோஷ்டியிலே அந்வயியாதே இருக்கிற என்னை சரம பர்வமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை
பரம ப்ராப்யமாக இவர் அத்யவசித்து இருக்கிறார் என்று லோகத்தார் எல்லாரும்அறியும் படி பண்ணி யருளினார் என்று சொல்லி –
இதிலே –
எனக்கு வகுத்த சேஷியான ஸ்ரீ எம்பெருமானாரை கண்ணாரக் கண்டு -அந்த காட்சி கொழுந்து விட்டு ஓடிப் படர்ந்து –
ததீய பர்யந்தமாக வளருகையாலே-
அவர்கள் திருவடிகளில் அடிமைப் பட்டு அதி குரூரமான துஷ் கர்மங்களை கட்டடங்க விடுவித்துக் கொண்டு –
அவருடைய கல்யாண குணாம்ர்தத்தை வாயார அள்ளிக் கொண்டு பருகா நின்ற நான் –
இன்னமும் பெற்றவற்றை சொல்லப் புக்கால் –
மேல் பெற வேண்டுமவற்றுக்கு ஒரு தொகை இன்றிக்கே இருக்கச் செய்தே
இவை தன்னை ஒரு வாசகம் இட்டு என்னால் சொல்லித் தலைக் கட்டப் போகாது என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை ஒரு புறம் இருக்க –
இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ – என்கிறார் .

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

பத உரை –
எம் இராமானுசன் தன்னை -எங்கள் ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானாரை
கண்டு கொண்டேன் -உள்ள படி கண்டு கொண்டேன்
காண்டலுமே -கண்ட வுடனேயே
அவன் தொண்டர் பொன் தாளில் -அவருடைய அடியார்களின் விரும்பத் தக்க திருவடிகளில்
தொண்டு கண்டேன் -அடிமை பட்டேன்
என் தொல்லை வெந்நோய் -என்னுடைய பண்டைய கொடிய கர்மங்களை
விண்டு கொண்டேன் -நீக்கிக் கொண்டேன்
அவன் சீர் வெள்ள வாரியை -அவருடைய குண பிரவாஹம் ஆகிய சமுத்ரத்தை
வாய் மடுத்து -கையினால் அன்றி வாயை மடுத்து
விடாயர் விடாய் தீர மடுவிலே வாய் மடுத்து பருகுவது போலே
இன்று உண்டு கொண்டேன் -இப்பொழுது அனுபவித்துக் கொண்டேன்
இன்னம் -இன்னமும்
உற்றன -நான் பெற்றவைகளை
ஓதில் -சொன்னால்
உலப்பு இல்லை -முடிவே இல்லை

வியாக்யானம் –
இவர் நம்மோடு சஜாதீயர் அல்லர் –
நம்மை உத்தரிப்பிக்க வந்தவர் என்று
அஸ்மத் ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானாரை உள்ளபடி கண்டு கொண்டேன் .
(ஜென்ம கர்மம் மே திவ்யம் யோ வேத்தி தத்வதக -உண்மையாக )
இப்படி தர்சித்த அளவிலே -அவர் தம் அளவிலே -நின்று விடாதே
அவர்க்கு அநந்யார்ஹர் ஆனவர்களுடைய அழகிய திருவடிகளிலே அடிமைப்பட்டேன் –
என்னுடைய அநாதியாய் -அதிக்ரூரமான கர்மங்களை நீக்கிக் கொண்டேன் –
அவருடைய குண பூரமாகிற சமுத்ரத்தைப் பெரு விடாயர் மடுவிலே வாய் மடுத்து
பருகுமா போலே பெரிய அபிநிவேசத்தொடே இன்று புசித்து கொண்டேன்-
(வெள்ள வாரியை குடிக்க வேண்டுமே -புசித்தல் என்றது -எல்லை -தெரியாது -த்ரவ்யமா கடின பொருளா தெரியாதே –
குணங்களை எப்படி என்று அறியேன் என்பதற்கு த்ருஷ்டாந்தம் இந்த சொல் -பெற்ற பாக்யம் ஒன்றே அறிவேன் என்றவாறு )
இன்னமும் நான் பெற்றவற்றை சொல்லில் அதுக்கொரு முடிவு இல்லை

காண்டலுமே -என்றது கண்ட அளவிலே என்றபடி
தொண்டு கொண்டேன் -என்று ஒரு முழுச் சொல்லு -அடிமையைக் கைக் கொண்டேன் என்னுதல்
விள்ளுதல்-நீங்குதல்
வாரி -சமுத்ரம்
உலப்பு -முடிவு–

நான்கு விஷயங்கள் -கண்டு -தொண்டு பட்டு -வினைகள் கழிந்து -கல்யாண குணங்கள் பருகி –
நான்கு படிகள் -அறம் பொருள் இன்பம் வீடு இல்லை -இந்த நான்கும் -குண அனுபவமே புருஷார்த்தம் –
சேஷவா –விஷ்வக் சேனரோ —
வெள்ள வாரி -பாலே போல் சீர் –கூடிய சமுத்திரம் -அர்ச்சை – அருளி செயல்- சமைத்த மடு-
அதிலே தேங்கின மடு போல அர்ச்சா அவதாரம்–அருளி செயல் – சாய் கரம்-கொட்டிண்டே இருக்கும்–

கண்டு கொண்டேன் –
காஷாய ஸோபி கமநீய சிகா நிவேசம் தண்டத்ரய யோஜ்வலகரம் விமலோபவீதம் -உத்யத்தி நேச நிப முல்லச
தூர்த்த்வ புண்டரம் ரூபம் தவாஸ்து யதிராஜ திரிசோர் மம அக்ரே –
பத்மம் என திகழும்– தமிழ் பாசுரம் போலே -என்று
பிரார்த்தித்து பெற வேண்டிய வடிவு அழகை ஆகஸ்மிகமாக கண்ணாரக் கண்டு கொண்டேன் –-
கண்டோம் கண்டோம்-கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -இத்யாதிப் படியே-
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ததீயரைக் கண்டால் போலே சாஷாத் கரித்தது என்றபடி-

நீர் தாம் கண்ட பிரகாரம் எது என்னில் –
என் இராமானுசன் தன்னை –
கலவ் ராமானுஜஸ் ச்ம்ர்த -என்றும்
சேஷோவா சைன்ய நாதோவா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை விதர்க்காய மகா ப்ராஜ்ஜை எதிராஜாயா -என்று சொல்லுகையாலே
இவர் நம்முடைய கோடியிலே ஒருவர் அல்லர் –என்னை சம்சாரத்தில் நின்றும் உத்தரிக்கைக்காக பரம பதத்தில் நின்றும் –
நான் இருந்த இடம் தேடி -வந்தவர் என்று அத்யவசித்துக் கொண்டு –
அஸ்மத் ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானாரை உள்ளபடி கண்டேன் என்றபடி —

கண்டு கொண்டேன் எம்மிராமானுசன் தன்னை–
இவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்லர் -நம்மை உய்விப்பதற்காக விண்ணின் தலை ஸ்ரீ பரம பதத்தில் -நின்றும்
மண்ணின் தலத்து உதித்தவர் என்று உள்ளபடி கண்டு கொண்டேன் -என்றபடி .

காண்டலுமே தொண்டு கொண்டேன் அவர் தொண்டர் பொற்றாளில் –
இப்படி தர்சித்த அளவிலே -அந்த ப்ரீதியானது மேன்மேலும் பெருகி வந்து தம்மளவில் சுவறிப் போகாதே –
அவருக்கு அனந்யார்ஹரான ததீயரைத் தொடர்ந்து –
அவர்களுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளில் எல்லா அடிமைகளும் செய்வதாக அடிமைப் பட்டேன் –
காண்டலுமே -என்றது -கண்ட அளவிலே -என்றபடி –
தொண்டு கொண்டேன் -என்றது –தொண்டு பட்டேன் என்று ஒரு முழுச் சொல்லு -அடிமையை கொண்டேன் என்னுதல் –
த்வத் தாஸ தாஸ கண நா சரமாவதவ் யஸ் த்வத் தாசதைகர சதா விரதாமமச்து -என்று ஸ்ரீ ஜீயரும் அபேஷித்து அருளினார் இறே –

காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன் -என்கிறார் .

என் தொல்லை வெந்நோய் விண்டு கொண்டேன் –
இப்படி தாச்யத்திலே அந்வயிக்கவே
அநாதி கால ஆர்ஜிதங்களாய்-ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய– ஷிபாமி -ந ஷமாமி -க்கு உடலாய் அதி க்ரூரங்களான
கர்மங்களினுடைய பலமான என்னுடைய ஆத்யாத்மிகாதி துக்கங்களை எல்லாம் கட்டடங்க விடுவித்துக் கொண்டேன்
விள்ளுதல் -நீங்குதல் –

என் தொல்லை விண்டு கொண்டேன் –
எனது அநாதியான கொடிய பாபங்கள் நீங்கப் பெற்றேன் .
நோய் -நோய்க்கு காரணமாக கர்மத்தைக் கூறுகிறது உபசார வழக்கு .
விள்ளுதல்-நீங்குதல்
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே யொழிந்த வினையாயின எல்லாம் – ஸ்ரீதிருவாய் மொழி -10 4-9 – – என்று
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு பிரதம பர்வத்தில் ஏற்பட்ட அனுபவம் இங்கு நினைவிற்கு வருகிறது .

அவன் சீர் வெள்ள வாரியை –
அந்த ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் ஆகிற மகா சமுத்ரத்தை
பிரவஹியா நிற்கிற சமுத்ரத்தை -என்றபடி –
அவருடைய கல்யாண குணங்கள் அசங்க்யேயங்கள் ஆகையாலே அவற்றுக்கு நிஸ் சலமாய் கொண்டு பரித்ர்சயமானமான
சமுத்ரத்தை போலியாக சொல்ல ஒண்ணாது என்று கரை புரண்டு பிரவஹியா நிற்கிற சமுத்ரத்தை போலியாக சொல்கிறார் –
(அபூத உவமை அக்காரக்கனி போலே -சக்கரை விதையாக வைத்து வளர்ந்த மரத்தில் கனி போலே )-
விஷயம் அனுபூதமாய் இருக்கிறாப் போலே இதுவும் அனுபூதமாய் காணும் இருப்பது –

அன்றிக்கே –
அவருடைய கல்யாண குண பூரமாகிற சமுத்ரத்தை-என்னுதல் –
வாரி -சமுத்ரம் –

வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் –
ஆதித்ய கிரணங்களாலே தப்தனாய் –
த்ர்ஷார்த்தனானவன் மடுவிலே புக்கு வாய் மடுத்து அந் நீரை பருகுமா போலே
ஸ்ரீ அமுதனாரும் இவருடைய விஷயீ காரத்தை பெரும் அளவும் சம்சாரிக்க துக்க தாபதப்தர் ஆகையால் அந்த விடாய் எல்லாம் தீரும்படி
இவருடைய விஷயீ காரத்தை பெற்று –
இவர் தம் அருகே சென்று அந்த கல்யாண குணாம்ர்த்தத்தை பெரிய அபிநிவேசத்தொடே வாய் மடுத்து அனுபவித்து களித்தேன் என்கிறார் –
ஷீராதி ரஸ்ய பதார்த்தங்கள் நமக்கு ரசித்து இருக்கிறாப் போலே காணும் –
பாலேய் போல் சீர்- என்னும்படியான அவருடைய கல்யாண குணங்கள் இவருக்கு ரசிக்கிறபடி –

வாய் மடுத்து உண்கையாவது –
வாயைத் திறந்து அவற்றுக்கு வாசகமான சப்த ராசியை இட்டு அவை தன்னையே ஸ்துதிக்கை-
(இதுதானே இந்த ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி பிரபந்தம் )

அவன் சீர் —உண்டு கொண்டேன்
சீர் -குணம் அது வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து கடலாய் தோற்றுகிறது –
விடாய் தீர அக்குணக் கடலையே வாய் மடுத்து உண்டு கொண்டேன் என்கிறார் –
சீர்க் கடலை உட் பொதிந்த சிந்தனையேன் -என்று ஸ்ரீ நம் ஆழ்வார் திரு மால் குணக் கடலை- உண்டதாகக் கூறினார் ..

வாய் மடுத்து உண்டு கொண்டேன்
அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேனே -ஸ்ரீ திருவாய் மொழி -2 -3 -9 -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
உடலுருகி வாய் திறந்து மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன் -ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5 -4 -4 -என்று
அருளிச் செய்து இருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது .

இன்னம் உற்றன –
இவ்வளவும் சொல்லிப் போந்த இவை அன்றிக்கே இன்னமும் அவர் தம்மாலே நான் பெற்ற பேற்றை –

ஓதில் –
சொல்லப் புக்கால் –

உலப்பு இல்லை –
முடிவு இல்லை –
நான் பெற்றவற்றுக்கு ஒரு தொகை இல்லாமையாலே கணக்கிட்டு சொல்ல மாட்டிற்று இலேன் என்கிறார் –
உலப்பு -முடிவு –

இன்னம் -உலப்பு இல்லையே
இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு முடிவே இல்லை -என்கிறார் –

உலப்பிலானை எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி உலப்பு-எல்லை-

——————–

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –ஸ்ரீ பெரிய திருமொழி–1-1-1-

தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்—-1-1-2–

காமனார் தாதை நம்முடை அடிகள் தம்மடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்யக் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-3–

பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1–4–

செம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-6–

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-9-

கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-4-

அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-5-

இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-7-

இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே-2-5-9-

திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-

திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-

தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே —4-3-5–

செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6–

செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7–

செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5-

அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6-

அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே -7–6-7-

அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே —7-6-8-

ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை–7-10-10-

கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-2-

கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4-

உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-5-

குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-

செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7-

செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8-

விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-

மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–திருக் குறும் தாண்டகம் –1-

கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –
கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் – இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

தலைப் பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம் அகலக்
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிரே–3-2-10-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1-

இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி—இரண்டாம் திருவந்தாதி67-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –83-சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் – இத்யாதி —

May 28, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

பொருவற்ற கேள்வியனாக்கி -நின்றேன் -என்ன-
உம்முடைய ஸ்ருதத்துக்கு வ்யாவ்ருத்தி எது -எல்லார்க்கும் ஒவ்வாதோ சரணாகதி -என்ன –
நான் பிரபத்தி பண்ணி ஸ்ரீ பரமபதம் பெறுவார் கோடியில் அன்று –
தேவரீர் திருவடிகள் ஆகிற மோஷத்தை -தேவரீர் ஔதார்யத்தாலே பெருமவன் – என்கிறார் —

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் இவர் தம்முடைய ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் – என்று சொன்னவாறே –
அத்தைக் கேட்டருளி –உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடையனாம்படி பண்ணி யருளினார் என்று நீர் நம்மை ச்லாகித்தீர் –
உம்மை ஒருவரையோ நாம் அப்படி பண்ணினது –ஒரு நாடாக அப்படி பண்ணி பரம பத்தில் கொண்டு போகைக்கு
பக்த கங்கணராய் அன்றோ நாம் அவதரித்தது –
(இன்றும் கங்கணம் திருக்கையிலே சேவிக்கிறோம் -முக்தியே சிலரது சொத்து என இருக்கையில் -அனைவருக்கும் அருளி –
தரணி தவம் பெற்றதே உம்மால் -)-ஆகையாலே உமக்கும் உம்மை ஒழிந்தாருக்கும் தன்னிலே வ்யாவ்ருத்தி ஏது என்று –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு திரு உள்ளமாக –இவர் அவர் திரு முக மண்டலத்தைப்-பார்த்து
நான் என்னை ஒழிந்தார் எல்லாரையும் போலே ஸ்ரீ பகவத் சரணாகதியைப் பண்ணி ஸ்ரீ பரம பதத்தை பிராப்பிப்போம்
என்று இருந்தேன் அல்லேன் காணும் –
தேவரீர் திருவடிகளாகிற மோஷத்தை தேவரீர் ஔதார்யத்தாலே கிருபை-பண்ணப் பெறக் கடவேன் -என்று நேரே விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் –ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன –
ஏனையோர் கேள்வி அறிவு பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -ஸ்ரீ பகவானிடம் பிரபத்தி பண்ணி
ஸ்ரீ பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் –
அவர் கூட்டத்தில் சேராது –
தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு –அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் –
இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை -என்கிறார்

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83- –

பத உரை –
இராமானுசா -ஸ்ரீ எம்பெருமானாரே –
சீர் கொண்டு -சமம் தமம் முதலிய நன்மைகள் உடையவர்களாய் கொண்டு
பேர் அறம் -பெரிய தர்மமாகிற ப்ரபத்தியை
செய்து -பண்ணிக் கொண்டு
நல் வீடு -நல்ல மோஷத்தை
செறிது என்னும் -சேருவோம் என்னும்
பார் கொண்ட -பூமியை தனக்குள் கொண்ட
மேன்மையர் -பிரபாவம் வாய்ந்த பகவத் பிரபன்னர்களுடைய
கூட்டன் அல்லேன் -கூட்டத்தில் சேர்ந்தவன் அல்லேன்
உன் பத யுகமாம் -தேவரீருடைய திருவடி இணையாகிற
ஏர் கொண்ட -அழகு – வீறுடைமை-வாய்ந்த
வீட்டை -மோஷத்தை
எளிதினில் -சுலபமாக
எய்துவன் -அடைவேன்
அதுக்கு ஹேது
உன்னுடைய -தேவரீருடைய
கார் கொண்ட -மேகத்தை வென்ற
வண்மை -வள்ளல் தன்மையாம்
இது -இவ் விஷயத்தை
கண்டு கொள் -தேவரீர் கண்டு கொள்ள வேணும் –
நான் சொல்ல வேணுமோ -என்று கருத்து .

வியாக்யானம் –
சமதமதாதிகள் -ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்கள் ருசி விச்வாசங்கள் -ஆகிய ஸ்வபாவ விசேஷங்களை வுடையராய் –
பரம தர்மம் ஆகிற ப்ரபத்தியை பண்ணி –ஆத்மா அனுபவம் மாத்ரமான கைவல்யம் போல் அன்றிக்கே –
பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ப்ராப்பிப்போம் என்னும் பூமி எங்கும் வ்யாப்தமான பிரபாவத்தை உடைய
ஸ்ரீ பகவத் பிரபன்னருடைய திரளுக்கு உட்பட்டவன் அல்லேன் –
தேவரீருடைய திருவடிகள் இரண்டும் ஆகிற சர்வ விலஷணமான மோஷத்தை – அநாயாசேன ப்ராபிப்பேன் -அதுக்கு ஹேது –
சர்வ விஷயமாக சர்வ காலத்திலும் உபகரிக்கையாலே – மேகத்தை ஜெயித்து இருக்கும் தேவரீருடைய ஔ தார்யம் .
இது நான் சொல்ல வேணுமோ ?
அனுஷ்டனத்தால் கண்டு கொள்ள மாட்டீரோ ?

நல் வீடு பெறுதும்-என்றும் பாடம் சொல்லுவார்கள் –
பார் கொண்ட மேன்மை -விசேஷஜ்ஞ்ஞாரோடு அவிசேஷஜ்ஞ்ஞாரோடு வாசி யற பூமியில்-உள்ளார் எல்லாராலும்
கைக் கொள்ளப் பட்ட உத்கர்ஷம் என்னவுமாம் .

ஏர் கொண்ட வீட்டில் -என்ற பாடமான போது –
தேவரீர் திருவடிகள் இரண்டுமாகிற விலஷண மோஷத்திலே-அநாயாசேன சேர்வன் -என்றபடி –
ஏர் -அழகு
கொள்கை -உடைத்தாகை
திருவடிகளை மோஷமாக சொல்லிகிறது -ஆனந்தாவஹத்வத்தாலே –
முக்திர் மோஷோ மகா நந்த -என்னக் கடவது இறே –

ஸ்ரீ பெருமாளை பற்றி -பிரயோஜனாந்தரங்கள் – கைவல்யம்- இல்லாமல் அவனையே பற்றுவது பிரதம பர்வ நிஷ்டை
ஸ்ரீ ஆச்சார்யன் பற்றி அவனை அடையாமல் ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளில் -சரம பர்வ நிலை
நல் வீடு –பிரதம பர்வம் —சீர் கொண்ட பேர் அறம் செய்ய வேண்டும் -ஆனால் இங்கே
ஏரார் இடை -ஏர் கொண்ட வீடு -சரம பர்வ -எளிதினில் எய்துவேன் -உம் வண்மை பிரத்யக்ஷம் -கண்ணாடியில் கண்டு கொள்ளும்
இருப்பிடம் –வைகுந்தம் -அனைவரும் உம் திரு உள்ளம் -உம்மை உம்மால் பெற்றால் -வேறே என்ன-வேண்டும் –
நிர்ப்பயம் நிர்ப்பரம்–இங்கே தானே –
சபரி பாத மூலம் -அடைவேன் -உன் பாதம் பெற்று கொடுத்த என் ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகள் -மதங்கரை அடைந்தாள்
இவரே இங்கேயே எளிதில் கொடுக்க -வேறே வேண்டுமோ-
மேன்மையர் கூட்டனல்லேன்-ஸ்ரீ வடுக நம்பி -ஒப்பாக்கலாமோ என்னில் நல்லவர் -நானோ நீசன் -நிறை ஒன்றும் இலேன் –
பெறக் கடவன் -பெற்றேன் என்று சொல்ல வில்லை –

சீர் கொண்டு –
சாந்தோதாந்த -இத்யாதிகள் சொல்லப்படுகிற சம தம தாதிகள் என்றும் –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்றும் –
என் நான் செய்கேன் யாரே களை கண்-என்னை என் செய்கின்றாய் -என்றும் சொல்லப்படுகிற
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்கள் என்ன –
பிரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் -என்றும்
ரஷிஷ்ய தீதி விஸ்வாச -என்றும் சொல்லப்படுகிற ருசி விச்வாசங்கள் என்ன –
இது தொடக்கமான அதிகாரி விசேஷ ஸ்வ பாவங்களை உடையவராய் –

கொள்கை -உடைத்தாகை –
பேர் அறம் செய்து -நியாச மேஷாம் தபஸா மதி ரிக்த மாஹூ -என்றும் –
சர்வ குஹ்ய தமம் பூத -என்றும் சொல்லுகிறபடியே
பரம குஹ்ய தமமாய் -பரம தர்மமாய் -ஸ்வ ரூப-அனுரூபமான ப்ரபத்தியை பண்ணி -அதாகிறது –
ந்யச்யத்வத் பாத பத்மேவாத நிஜ பரம் நிர்ப்பரோ நிரபயோச்மி-என்கிறபடியே
ஆத்மா ஆத்மீயங்கள் உடைய ரஷண பரத்தை-அவன் பக்கலிலே பொகட்டு-ஸ்த நந்த பிரஜையோபாதி நிர்ப்பரராய் இருக்கை –

(பரந்யாசம் -சொல்ல வில்லை -அதற்காக த்ருஷ்டாந்தம் -பால் குடிக்கும் குழந்தை -சொல்லிவிட்டு பேசாமல் கிடக்குமா –
பேசாமல் கிடக்குமா -அதே போலே நாமும் -)-
பலத்துக்கு-ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுவது -என்று பிள்ளையும் (பிள்ளை லோகாச்சார்யார் )-
(விலக்காமை -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு )அருளிச் செய்தார் இறே-பேர் –

பெருமை
அறம் -தர்மம் –

நல் வீடு செறிதும் என்னும் –
வீடு -மோஷம் -ப்ராப்ய ஸ்தானம் -அதாவது -ஸ்வாத் மா நு பூதிரிதி யாகில
முக்திருக்தா -என்கிறபடியே கைவல்யமும் மோஷம் யாகையாலே -தத் வ்யாவ்ர்த்யர்த்தமாக –நல்வீடு -என்று அத்தை விசேஷிக்கிறார் –
வீட்டுக்கு நன்மையாவது –
ஸ்வ ஆத்ம மாத்திர அனுபவமான கைவல்யம்போலே அல்பமாயும் ஸ்வார்த்தமாயும் இருக்கை யன்றிக்கே –
நலம் அந்தமில்லதோர் நாடு – என்கிறபடியே அபரிமித ஆனந்த ரூபமாய் –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்கிறபடியே பகவத் ஏக போகமாய் இருக்கை –

செறிதும் என்னும் –
இப்படிப் பட்ட பரம புருஷார்த்த லஷணமான மோஷத்தை ப்ராபிப்போம் என்னும் —

நல் வீடு பெறுதும் -என்றும் பாடம் சொல்வார்கள் – –
ஆகிலும் அர்த்த பேதம் இல்லை –
யோகிநாம் மிர்தம் ஸ்தானம் -என்றும்
யத்வை பஸ்யந்தி சூரய -என்று ஸ்வ ஆத்ம அனுபவரூப கைவல்ய மோஷத்தையும் –
ஸ்ரீ பகவத் ப்ராப்தி ரூபா பரம புருஷார்த்த லஷண மோஷத்தையும் –
ஸ்தான-பரம -சப்தங்களாலே பசித்து ஸ்ரீ கீதாசார்யனும் அருளிச் செய்தான் இறே –

சீர்கொண்டு –கூட்டன் அல்லேன்
நல் வீடு செறிதலுக்காக செய்யும் பேரறம் என்பது இங்கு பிரபத்தியை -என்று உணர்க .
பக்தி யோகமும் நல் வீடு செறிதலுக்கு கைக் கொள்ளப் படுவதாயினும் -அதனை பேரறம் ஆகாது என்று விலக்குக–
ந்யாசம்-எனப்படும் பிரபத்தியே -தனக்கு மேல் இல்லாத அதிரிக்தமான தபசாக ஓதப்படுதலின் பிரபத்யே பேரறம் ஆகும் -என்க –

மேலும் ஸ்ரீ எம்பெருமானார் கோஷ்டியில் பக்தி மார்க்கத்தைக் கைக் கொண்டு
நல் வீடு செறிதும் என்று இருப்பார் எவருமே இலர் ஆதலின் – அவர்கள் கூட்டத்தில் சேர்ந்தவன் அல்லேன் -என்று
தம்மை ஸ்ரீ அமுதனார் சொல்லிக் கொள்வது பொருந்தாது .
ஸ்ரீ எம்பெருமானார் தாமும் பிரபத்தி செய்து -மற்றவர்களையும் அதனை கைக் கொள்ளுமாறு செய்தலின் அந்த பிரபத்தியினாலே
நல் வீடு செறிதும் என்று இருப்பார் பலர் உண்டு .
அந்தக் கோஷ்டியில் தான் சேர்ந்தவன் அல்லேன் என்பது நன்கு பொருந்துகிறது –

பேரறமாகிய பிரபத்தி -மாமேகம் சரணம் வ்ரஜ –என் ஒருவனையே உபாயமாகப் பற்று -என்றபடி –
ஸ்ரீ கண்ணனையே உபாயமாய் வரிப்பதாக அமைந்து இருத்தலின் -தான் உபாயமாக மாட்டாது –
ஆதலின் அதனைச் செய்வதற்கு வேறு எதனையும் அங்கமாகக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை .
ஆயின் சீர் கொண்டு பேரறம் செய்து -என்று
ஸ்ரீ அமுதனார் கூறுவதன் கருத்து யாதோ -எனின் –
பிரபத்தி செய்வோருக்கு சில நல்லியல்புகள் தாமே அமைந்து இருக்கும் –
அச் சீரிய இயல்புகளை உடையவர்களாய்-பேரறம் செய்கிறார்கள் -என்கிறார் ஸ்ரீ அமுதனார் என்று கொள்க .

அவ்வியல்புகளாவன-
சமம் தமம் முதலியனவும் –
அகிஞ்சந்ய -வேறு வழி இல்லாமை -அநந்ய கதித்வம் -வேறு புகல் இல்லாமைகளும் –
ருசி-பேற்றினில் வேட்கை -விஸ்வாசம் -பேறு தப்பாது -என்ற துணிபு போன்றவைகளும் –
சமம்-மனத்தை அடக்குதல் தமம் -வெளி இந்திரியங்களை அடக்குதல் –மாறிக் கொள்வதும் உண்டு .
இவ் இயல்புகள் பிரபத்தி செய்வதற்கு உறுப்பாக வந்தவைகள் அல்ல –
பிரபத்தி செய்வோரிடம் நேரிடும் இயல்புகள் என்றுணர்க –

இனி –சீர் கொண்டு -என்பதற்கு
மற்ற உபாயங்களை கை கொண்டோரினும் சீர்மை உடையவராய் கொண்டு -என்று பொருள் உரைத்தலுமாம் .
நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி -பிரபத்தி செய்தவனுடைய சீர்மையில்
கோடியில் ஒரு பங்கு கூடப் பெற மற்ற உபாயங்களை கைக் கொண்டவர்கள் தகுதி அற்றவர்கள் –என்பது காண்க –-

பார் கொண்ட மேன்மையர் –என்னும் இடத்தில் –
உலகு எங்கும் பரவின பிரபாவம் பேசப்படுகிறது -இங்கே உபாயாந்தரங்களை கைக் கொண்டவர்களினும் பிரபத்தி செய்வோருடைய
சீர்மை செப்பப் படுகிறது .
பிரபத்தி செய்த பிறகு -பேற்றுக்கு செய்ய வேண்டியது யாதொன்றும் இல்லாமையினால்
நல் வீடு பெறப் போகின்றோம் என்று -அதனை எதிர் நோக்கி நிற்கின்றனர் –பேரறம் செய்தோர் –
அவர்கள் எதிர்பார்ப்பது -நல்ல வீட்டை –
புல்லிய வீட்டை அன்று .
புல்லிய வீடு-கைவல்யம் எனப்படும் மோஷம் ஆகும் .
சிறிய மின்மினி பூச்சி போலே மிளிரும் அணுவான தன் ஆத்மா ஸ்வரூபத்தை தேக சம்பந்தம் அறவே நீங்கின ஜீவாத்மா
தானே அனுபவித்து -அவ்வளவோடு ப்ரஹ்ம அனுபவத்தை இழந்து நிற்றல் கைவல்யம் எனப்படும் .
ப்ரஹ்ம அனுபவத்தையும் அதன் விளைவான கைங்கர்யத்தையும் கோரி பிரபத்தி செய்பவர்கள் ஆதலின் –
நல் வீடு செறிதும் -என்று இருக்கிறார்கள் –
நல் வீடு -என்று கைவல்யத்தை விலக்குவதனால் கைவல்யத்துக்கும் மோஷம் வீடு -என்னும் வழக்கு உண்டு என்று தெரிகிறது –
ஸ்வ ஆத்மா அநுபூதி ரீதி யாகில முக்தி ருக்தா -தன் ஆத்மாவைத் தானே அனுபவித்தல் என்னும் யாதொரு முக்தி கூறப் பட்டதோ –
என்று ஆழ்வான் கைவல்யத்தை முதி என்னும் சொல்லால் வழங்குதல் காண்க
நல் வீடு பெறுதும் -என்றும் பாடம் உண்டு

பார் கொண்ட மேன்மையர் –
பூமி எங்கும் ஒக்க-வ்யாப்தமான பிரபாவத்தை உடையவர் -என்னுதல் –
விசேஷஞ்ஞாரோடு அவிசேஷஞ்ஞாரோடு வாசி அற பூமியில் உள்ள எல்லாராலும் கைக் கொள்ளப்பட்ட
உத்கர்ஷத்தை உடையவர் என்னுதல் –

கொள்கை –
வ்யாபிக்கையும் ஸ்வீகரிக்கையும் –

கூட்டன் அல்லேன் –
இப்படி பட்ட ஸ்ரீ பகவத் பிரபன்னருடைய கோஷ்டியிலே உள்பட்டவரில் ஒருவனாய்-இருக்கிறவன் அல்லேன் –
ஆகில் உம்முடைய படி எங்கனே என்ன சொல்லுகிறார் –

பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லன் –
பாரினை யடங்கக் கொண்ட மேன்மை-பூமி எங்கும் பரவின மேன்மை -என்றபடி –
இனி பாரில் உள்ள மேலோர் கீழோர் அனைவரும் கைக் கொண்ட மேன்மை என்னலுமாம் –
இத்தகைய பேரறம் செய்வோர் மேன்மை பாரடங்க பரவி இருப்பினும் அன்றி –
பாரில் உள்ளோர் அனைவரும் கைக் கொண்டு இருப்பினும் –
அம் மேன்மையில் மயங்கி -நான் அவர்கள் கூடத்தில் சேர்ந்து விட வில்லை -என்று தமது உறுதிப்பாட்டினை காண்பிக்கிறார் –
பேரறம் செய்து நல் வீட்டினை எதிர் பார்க்கின்றனர் அவர்கள் .
நானோ யாதொன்றும் செய்யாது -அந் நல் வீட்டினும் வீறுடைய பரம விலஷணமான வீட்டினை எளிதில் அடைபவனாய் உள்ளேன் –
நான் அவர்கள் கூட்டத்தில் எங்கனம் சேருவேன் ?-என்கிறார் மேல் .

உன் பத யுமாம் ஏர் கொண்ட வீட்டை-
தேவரீர் திருவடிகள் இரண்டும் ஆகிற விலஷண மோஷத்தை –
குருரேவ பராயணம் -குருரேவ பராகதி –பாத மூலம் கமிஷ்யாமி யாநகம் பர்யசாரிஷம் –
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் -என்றும்-சொல்லுகிறபடியே –
சர்வ பிரகார லஷணமான மோஷத்தை –
ஏர் -அழகு -எளிதினில் எய்துவன் -வருத்தம் அற ப்ராபிப்பேன் –

உன்பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டில் -என்ற பாடமானபோது-
தேவரீர் திருவடிகள் இரண்டும் ஆகிற விலஷண மோஷத்தில் என்றபடி –
இவர் இப் பெறாப்பேறு பெற்ற-பின்பு -ஸ்ரீ பகவல் லாபத்தையும் ஒரு பொருளாக நினைக்க மாட்டார் காணும் –
திருவடிகளை-மோஷமாக சொன்னது ஆனந்த அவஹத்வத்தாலே –
இப்படி சொன்னால் உமக்கு இந்த ப்ராப்யம் எத்தாலே-அத்தை சொல்லி காணீர் என்ன –

உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் –
தேவரீருடைய திருவடிகள் இரண்டுமே கீழ்ச் சொன்ன நல் வீட்டிலும் விலஷணமான மோஷமாக அடியேனுக்கு அமைந்து உள்ளன –
முக்திர் மோஷோ மகா நந்த -என்னும் நிகண்டுவின் படி பேரின்பமே மோஷம் ஆதலால் தாஸ்ய மகா ரசத்தை தருதல் பற்றி –
பேரின்பம் தரும் வைகுண்டத்தை மோஷம் என்பது போலே தமக்கு பேரின்பம் விளைவிக்கும் திருவடிகளை மோஷமாகவே கூறினார் .
ஏர் –அழகு -இங்கே வீறுடைமை-

ஏர் கொண்ட வீட்டில் என்பதும் ஓர் பாடம் –
அப்பொழுது தேவரீர் திருவடிகள் இரண்டுமாகிற வீறுடைய வீட்டில் எளிதில் சேர்வேன் -என்று பொருள் ஆகிறது .
ஸ்ரீ ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கினவர்-பகவான் இடம் பிரபத்தி பண்ணினவர்கள் போலே
ஸ்ரீ பகவானது தாளிணைக் கீழே வாழ்ச்சியை ஒரு பேறாக மதிக்காது -ஸ்ரீ ஆசார்யர் பொன்னடியை மேவி நிற்பதையே தாம்
பெரும் பேறாக மதிப்பவர் ஆதலின் ஸ்ரீ எம்பெருமானார் பத யுகத்தை
ஏர் கொண்ட வீடு -என்கிறார் .
ஸ்ரீ சபரி எந்த ஸ்ரீ ஆசார்யருக்கு நான் பணிவிடை புரிந்தேனோ அவன் திருவடி வாரத்துக்கு தான் போவதாக மோஷம் அடையும் போது
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை நோக்கிக் கூறியதை இங்கு நினைவு கூர்க-
இம்மையிலும் மறுமையிலும் ஸ்ரீ ஆசார்யன் திருவடிகளே சரணம் –உபாயமும் உபயமும் –என்றார் ஸ்ரீ ஆள வந்தாரும் –

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -பகவானை ஏத்துமவர்களை விட ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்ட்டர் சீரியர் என்பதனை –
மாறாய தானவனை -என்னும் பாசுரத்தில் -ஸ்ரீ நான் முகன் திருவந்தாதி -18 – அருளிச் செய்தார் .
வேறாக ஏத்தி இருப்பார் ஸ்ரீ பெரியாழ்வார் போல்வார் –
சாத்தி இருப்பார் ஸ்ரீ ஆண்டாள் போல்வார் -என்பது அவ்விடத்தில் வியாக்யானம் .

பழுதாக ஓன்று அறிந்தேன் -ஸ்ரீ நான் முகன் திருவந்தாதி -89 – என்னும் பாசுரத்தில் ஸ்ரீ ஆசார்யனைப் பற்றினவன்
விண் திறந்து வீற்று இருப்பார் மிக்கு -90-என்று வீறு கொண்ட பேற்றினை பெறுதல் அந்த
ஸ்ரீ திரு மழிசைப் பிரானாலேயே அருளிச் செய்யப் பட்டு இருப்பதும் இங்கு அறியத் தக்கது .

ஸ்ரீ ஆசார்யனை தானே பற்றுகிறவனுக்கும்
ஸ்ரீ ஆசார்யனாலே நம்முடையவன் என்று அபிமானப் படுகிறவனுக்கும்
பேற்றிலே எத்தகைய வேறு பாடும் இல்லை என்று உணர்க .
யாதொரு முயற்சி இன்றி ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவதற்கு ஹேது என் -என்ன விடை இறுக்கிறார்

உன்னுடைய கார் கொண்ட வண்மை –
அதுவும் அவனது இன்னருளே -என்றபடி-தேவரீர் ஔதார்யமே அதுக்கு சாதனம் என்கிறார் –
கார் கொண்ட வண்மை – -நீரே உம்மை அருள வேணும் –
விசேஷணத்தாலே மேகத்தில் நின்றும்-கிருபைக்கு உண்டான வ்யாவ்ர்த்தியை சொல்லுகிறார் –
மேகமானது நாலு மாசம் வர்ஷிக்க கடவதாய் -அப்போதும் அபேஷித்த இடங்களில் வர்ஷியாதே –
சமுத்ரத்திலும் பர்வதத்திலும் அரண்ய பிரதேசத்திலும்-வர்ஷிக்கும் -இவருடைய ஒவ்தார்யம் அப்படி இன்றிக்கே —
கொள்ள குறைவற்று இலங்கி கொழுந்து-விட்டு ஓங்கி இருப்பதாகையாலே –
சர்வ காலத்திலும் -சர்வர்க்கும் -சர்வ பலங்களையும் -கொடுத்துக்-கொண்டு இருந்து –
மகா வ்ர்ஷம் போல் இருக்கிற மகா மேகத்தை பராஜிதமாக்கி -என்னை ஸ்வா தீனமாக-எழுதிக் கொண்டது -என்றபடி –
இப்படிப் பட்ட தேவரீர் உடைய பரம கிருபா பூர்வகமாக இந்த ஒவ்தார்யம்-ஒன்றுமே அந்த பலத்துக்கு பிராபகம் என்றபடி —

இராமானுச –
எம்பெருமானாரே –

இது கண்டு கொள்ளே –
இது-தான் சொல்ல வேணுமோ –
கை இலங்கு நெல்லிக் கனி போல் இருக்கிற இவ் அர்த்தத்தை தேவரீர் கண்டு கொள்ள-மாட்டீரோ –
அடியேன் சொல்ல கேட்டருள வேணும் என்னும் ஒரு நிர்பந்தம் உண்டோ –

ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாசதே பத்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தமன்வேஷ தேஷி தவ்-என்னக் கடவது இறே –

உன்னுடைய கார் கொண்ட வண்மை
தேவரீர் வள்ளல் தனத்தினால் வழங்க -நான் அதனை அடைய எளிதாய் முடிந்தது என்கிறார் .
ஸ்ரீ எம்பெருமானாருடைய வண்மை கார் கொண்டது -அதாவது மேகத்தை வென்றது –
சிலருக்கு சில காலத்திலே மழை பொழிவது கார்
எல்லாருக்கும் எல்லா காலத்திலும் பயன் படுவது வண்மை-ஆதலின் காரை வென்றது வண்மை

இது கண்டு கொள்
தேவரீர் வழங்க நான் பெற்றமை -வழங்கின தேவரீருக்கு தெரியாதோ –
ஏற்றம் என் வாயாலே சொல்லிக் கேட்க வேணுமா என்கிறார் .
நான் கேள்வியினால் பிரபத்தி செய்து ஸ்ரீ பகவானை அடைவார்கள் கூட்டத்தில் சேர்ந்திலேன்-
பொருவற்ற கேள்வியினால் ஸ்ரீ ஆசார்யனுடைய அபிமானத்திற்கு பாத்ரமாகி ஸ்ரீ எம்பெருமானார்-திருவடிகளையே பெரும் பேறாக
பெறுமவன் ஆனேன் –என்பது கருத்து –

தேவரீர் ஒவ்தார்யத்தாலே பெருமவன் நான் என்கிறார் –
இவ் வார்த்தை கொண்டு—இரு கரையர் -என்று ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ ஆழ்வான் இருவரையும் பரிகசிப்பார் -ஸ்ரீ வடுக நம்பி-
நம்மை நம் பையல் என்று ஒதுங்குவது மூன்றாம் நிலை-ஸ்ரீ பெருமாளை பற்றும் பொழுது
பர கத ச்வீகாரம் ஏற்றம் ஸ்ரீ ஈஸ்வரன் திரு உள்ளத்தில் மகிழ்வானாம்-
உன் அபிமானத்தில் ஒதுங்கி உன் திருவடி அடைந்தேன் –என்கிறார்-உணர்வினில் நிறுத்தினேன் அதுவும் அவனின் இன் அருளே -போலே-

————–

நல் வீடு -ஏர் கொண்ட வீடு -மிக்க நல் வீடு அன்றோ –

உம்முயிர் வீடுடையான் இடம் வீடு செய்ம்மினே -1-2-1-
ஒளி வரும் முழு நலம் முதலில கேடில வீடாம் –1-3-2-
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -2-2-1–
கனிவார் வீட்டு இன்பமே-2-3-5-
நல்லமுதம் பெறர்கு அறிய வீடுமாய்-2-5-9–
இணைவனாம் எப்பொருட்க்கும் வீடு முதலாம் -2-8-1–
துயரில்லா வீடு முதலாம் 2-8-2–
சேண் பாலா வீடோ -2-8-2-
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் 2-8-10-
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் 2-9-1–
சிறப்பில் வீடு சுவர்க்கம் -2-9-5-
இப்பத்தும் கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே -2-9-11–
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -3-3-7-
நாடு நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன் மூ உலகுக்கும் தரும் ஒரு நாயகமே -3-10-11-
எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே -4-10-6-
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் 5-6-10–
பொன் உலகு ஆளீரோ-6-8-1–
ஏற்ற யரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு -7-6-10-
பசை அற்றால் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே 8-8-6-
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறி –
எதுவே தானும் பற்றி இன்றி ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே-8-8-7–
நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு-8-10-6-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –82-தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது- இத்யாதி —

May 28, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி யின்று பெறுத்தும் -என்று கீழ்ச் சொன்ன
பேற்றுக்கு உடலாக தமக்கு பண்ணின உபதேசத்தை அனுசந்தித்து – வித்தராய் –
ஸ்ரீ எம்பெருமானார் என்ன தார்மிகரோ -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமானுச –என்று
கீழ் பிரஸ்த்துதமான பரம புருஷார்த்தத்துக்கு உறுப்பாக சம்சார ப்ரவ்ருத்திகளிலே மண்டி இருந்து
சம்ய ஜ்ஞ்ஞானத்தை பெற மாட்டாதே -அதி குரூரமான துஷ் கர்மத்தாலே தேகாத்மா அபிமானியாய் கொண்டு –
ஒன்றிலும் ஒரு நிலை இன்றிக்கே தட்டித் திரிகிற என்னை –
ஆண்டுகள் நாள் திங்கள் -என்றால் போல் சிர காலம் கூடி இன்றி அன்றிக்கே-
1- ஒரு ஷண மாத்ரத்திலே-2- தானே நிஸ் சம்சயமாக -3-தத்வ ஹித புருஷார்த்தங்களை-தத் யாதாம்யத்தளவும் உபதேசித்து –
4-உபமான ரஹீதமான ஸ்ருதயத்தை உடையேனாம் படி பண்ணி-
5-சர்வ விஷயமாக வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் என்னலாம் படி –
பரம உதாரரான ஸ்ரீ எம்பெருமானார்-என்ன தார்மிகரோ என்று அனுசந்தித்து வித்தார் ஆகிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் ஸ்ரீ எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

பத உரை –
தெரிவுற்ற -விவேகத்தில் ஊன்றி நின்ற
ஞானம் -அறிவை
செறியப் பெறாது -அடையப் பெறாது
வெம் தீ வினையால்-மிக கொடிய பாவத்தினால்
உரு அற்ற -உருப்படாத
ஞானத்து -அறிவை உடையவனாய்
உழல்கின்ற என்னை -ஒன்றிலும் நிலை கொள்ளாமல் தடுமாறுகின்ற என்னை
ஒரு பொழுதில் -ஒரே வேளையில்
பொருவற்ற -ஒப்பற்றதான
கேள்வியன் -கேள்வி ஞானத்தை உடையவனாக
ஆக்கி-பண்ணி
நின்றான் -செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டதாக கால் பாவி நின்றார்
தெரிவுற்ற -உலகத்தினர் அனைவருக்கும் தெரிந்து உள்ள –
கீர்த்தி -புகழை உடைய
என்னும்-என்று வள்ளன்மையினால் சொல்லப்படும்
சீர் முகில்-சீர்மை வாய்ந்த மேகம்
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
என்ன புண்ணியனோ -என்ன தருமம் செய்கிறவரோ –

வியாக்யானம் –
சத் அசத் விவேகத்தில் ஊற்றத்தை உடைத்தாய் இருக்கும் ஜ்ஞானத்தை சேரப் பெறாதே –
அதிக்ரூரமான கர்மத்தாலே ஒரு வஸ்து பூதமாய் கொண்டு -வடிவு பட்டு இராத ஜ்ஞானத்தைப் பற்றி –
ஒன்றிலும் ஒரு நிலை யற்றுத் தட்டித் திரிகிற என்னை –
சிரகாலம் கூடி யன்றிக்கே –
ஒரு ஷண காலத்திலே-உபமான ரஹீதமான -ச்ருதத்தை உடை யேனாம் படிபண்ணி –
ஒரு படி திருவடிகள் பூமியிலே நற்றரித்து தரித்து நின்றார் .
திக்குற்ற கீர்த்தி – -26 -என்கிறபடியே .
விசேஷஜ்ஞ்ஞர் அவிசேஷஜ்ஞ்ஞர் என்னும் விபாகம் அற எல்லார்க்கும் பிரகாசித்து
இருந்துள்ள குணவத்தா பிரதையை வுடையராய்-
குணம் திகழ் கொண்டல் – 60- என்னும்படியே
பரம உதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ !

உருவற்ற ஞாலத்து -என்று பாடமான போது –
உரு வென்று அழகாய் -அதாவது நன்மையாய் –
அது அறுகை யாவது -இன்றிகே ஒழிகையாய்-நன்மை என்பது ஓன்று இல்லாத ஜகத்திலே -என்கை ..
அப்போது தெரிவுற்ற ஞானம் -இத்யாதிக்கு –
சத் அசத் விவேகத்தில் ஊற்றம் உடைய ஞானத்தை ப்ராபிக்கப் பெறாதே -பிரபல கர்மத்தாலே –
ஒரு நன்மை இன்றிக்கே -ஹேயமாய் இருந்துள்ள ஜகத்திலே –
ஈண்டு பல் யோனிகள் தோர் உழல்வோம் -31 -என்கிற படியே –
நானாவித யோநிகளில் ஜநிப்பது-மரிப்பதாய் -தட்டித் திரிகிற -என்னை என்று பொருளாக கடவது .

தெரிவு-விவேகம்
உறுதல்-ஊற்றம்
அன்றிக்கே
தெரிவுற்ற ஞானம் -என்று பிரகாச யுக்தமான ஜ்ஞானம் என்றாய்
தத்த்வஸ்த்தியை யதா தர்சனம் பண்ணுகைக்கு உறுப்பான –விசத ஜ்ஞானம் –என்னவுமாம் –

தெரிவுற்ற கீர்த்தி -பிரகாச யுக்தமான கீர்த்தி
சீர் முகில் -சீரிய முகில் -அழகிய முகில் என்னவுமாம் .

தர்ம ஸ்தாபனம் வேத -பிரவார்த்தாச்சார்யார் –ஒரு பொழுதிலே மாற்றி –
ஸ்ரீ வாதி கேசரி மணவாள ஜீயர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -உலக்கை கொழுந்து -முசலை கிலேசயம் -எழுத வைத்து –
ஸ்ரீ பன்னீராயிரப்படி எழுத வைக்கும் சக்தி-
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திரு அவதாரம் ஸ்ரீ மன்னார் கோயில் -அம்பா சமுத்திரம் பக்கம் –
இங்கே தான் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் திருவரசும் உள்ளது

நின்றான் -நிலை பெற்று முகம் மலர்ந்து -நம்மை -அவனுக்கு அன்னம் ஆக்கிய பின்பு
புண்ணியம் ஈஸ்வர திரு முக மலர்த்தி -ஸ்ரீ அமுதனார் திருந்தக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீ ரெங்கன் -இதையே புண்ணியன் என்கிறார் இங்கு
நீசனான என்னை -ஷணப் பொழுதில் -கடாக்ஷம் வீக்ஷணத்தாலே அனைத்தையும் அருளி –
நல்ல தெளிவுற்ற ஞானம்-சரம உபாயம் ஆச்சார்ய நிஷ்டை அன்றோ – -நிகர் அற்றவனாக்கி -திருத்தி -இப்படி நான்கும் –
பொருவற்ற கேள்வியனாக்கி அருளிய புண்ணியன்

பூண்ட நாள் சேர்க்க கடலை யுட்கொண்டு திரு மேனி நன்நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்த காரராய் எங்கும் திரிந்து
ஞான ஹரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி வாழ நிதி சொரிந்து -கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து ஒளித்து
கண்டு உகந்து பர ஸம்ருத்தியே பேறான அன்பு கூரும் அடியவர் -உறையில் இடாதவர் -புயல் கை அருள் மாரி-
குணம் திகழ் கொண்டால் -போல்வாரை மேகம் என்னும் -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -155-சூர்ணிகை–

தெரிவுற்ற ஞானம் தெரியப் பெறாது –
தெரிவு -விவேகம் -அதாவது -ஆத்மா அநாத்மா விஷயமாய் இருந்துள்ள புத்தி விசேஷம் –
ஆத்ம வஸ்து உபாதேயம் என்றும் அநாத்மாவான அசித் வஸ்து த்யாஜ்யம்-என்றும் விவேகிக்கை என்றபடி –

உற்ற ஞானம் –
அதிலே ஊற்றத்தை உடைத்தாய் இருக்கிற ஞானம் –
உறுதல் -ஊற்றம் -அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத -என்று ஸ்ருதியும் சொல்லிற்று இறே –
1-அமாநித்வ-2- மடம்பித்வ-3- மஹிம்சா 4-ஷாந்தி –5-ரார்ஜவம் -6-ஆசார்யோபாசனம்-7- ஸௌசம் (சுத்தி )-8-ஸ்தைர்யம்-
9- ஆத்மாவி நிக்ராஹ் -10-இந்திரியார்தேஷூ வைராக்கியம் -11-மநோஹன்கார ஏவச
12- -ஜன்ம ம்ர்த்யு ஜரா வியாதி துக்க தோஷ அநுதர்சனம் -13–அசக்திர 14-னபிஷ்வங்க புத்திர தாரா க்ர்ஹாதி ஷூ-
15- நித்யம் ஸ சம சித்தத்வம்-16- இஷ்டா நிஷ்டோப பத்தி ஷூ–
17-மயிச அநந்ய யோகே ந பக்தி ரவ்யபிசாரிணீ-18-விவிக்த தேச -தனியாக இருந்து – அரதி -கூட்டம் சேர ஆசை இல்லாமல் –
19- அத்யாத்மஜ்ஞான நிஷ்டத்வம் 20-தத்வ ஞானார்த்த சிந்தனம்–– ஆக -20-ஸ்ரீ கீதையில் காட்டி –
ஏதத் ஞான மிதிப்ரோக்த மஜ்ஞ்ஞானம் யததொன்யதா -என்றும்
சாவித்யாயா விமுக்தே -என்கிறபடியே –சத் அசத் விவேசன விஷயக பரிபூர்ண ஞானம் என்றபடி –

அன்றிக்கே தெரிவுற்ற ஞானம் என்றது –
பிரகாசோபா யுக்த ஞானம் என்றதாய் தத்வஸ்த்தியை யதா தர்சனம் பண்ணுக்கைக்கு உறுப்பான ஞானம் என்னவுமாம் –
தெரிவு -பிரகாசம் –உறுதல் -பொருந்துதல் –செறிய பெறாதே -பிராபிக்க பெறாதே –

தெரிவுற்ற ஞானம் —உழல்கின்ற என்னை
தெரிவு -நல்லதையும் அல்லாத்தையும் பகுத்து காணும் உணர்வு –
அதனில் ஊற்றம் பெற்ற ஞானம் தெரிவுற்ற ஞானம் –
உறுதல்-ஊற்றம் பெறுதல்
செறிதல் -சேர்த்தல்-அடைதல்-
தெரிவுற்ற ஞானத்தை நான் அடைய முடிய வில்லை
நேர்மாறாக உருவற்ற ஞானமே என்னை வந்து அடைந்தது .

ஞானத்திற்கு உருவற்றமை யாவது –
அறிவுக்கு புலனாகும் பொருள்களில் அந்தர்யாமியா எழுந்து அருளி -இருக்கும் இறைவன் அளவும் அவ் அறிவு
சென்று முழு வடிவம் பெறாது அரை குறையாய் உருப்பட்டு யாகாது இருத்தல்
நல்லதும் கொள்ளத்தக்கதுமான ப்ரஹ்மத்தைப் பற்றும் அளவும் -அறிவு வளர்ச்சி வுறின்
அவ்வறிவு முழு வடிவம் பெற்று -உருப்படியாய் நிலை குலையாமல் -அஃது உடையானை உய்விக்கும் .
இத்தகைய அறிவு இதுகாறும் எனக்கு கிடைக்காமல் போயிற்றே -என்னும் குறைபாடு தோன்ற –
தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது -என்றார் –

உய்யச் செய்யும் அறிவு இல்லாததோடு -உழலச் செய்யும் அறிவே என்னிடம் குடி இருந்தது -என்கிறார் .
உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை -என்று —
உருப்படியான ஞானம் இல்லை -உருவற்ற ஞானமே இருந்தது என்றார் –
நல்லதை பற்றிய அறிவு என்னிடம் இல்லை -அல்லதை பற்றிய அறிவே என்னிடம் இருந்தது என்கிறார் –
அல்லதும் தள்ளத் தக்கதுமான பொருளைப் பற்றியதாக அறிவு இருப்பின் -அது முன்னம் –
இனிய பொருளைப் பற்றியதாக தோன்றி -கன்மத்திற்கு ஏற்ப -பின்னர் இன்னாப் பொருளாக மாறுபடும் –
அப்பொருளைவிட்டு -வேறு பொருளை நாடி -அலையும் -நாடிய பொருளுக்கும் -இதே நிலை தான் ஆதலின் –
மற்று ஒன்றை தேடா நிற்கும் -இங்கனம் அவ்வறிவு ஒன்றிலும் -நிலை நில்லாது –

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67 – என்றபடி
ப்ரஹ்மத்தை பற்றியது ஆகாமையாலே முழுமை பெறாது சிதைந்து உருவற்றதாகி விடுகிறது .
இத்தகைய ஞானத்தை உடையவனாய் இருத்தலினால் ஒன்றிலும் கால் பாவி நிற்க மாட்டாது
தட்டித் தடுமாறி உழன்ற்றதாகக் கூறுகிறார் .

இனி –தெரிவு உற்ற ஞானம் -என்பதற்கு
தெளிவை -பிரகாசத்தை -அடைந்த ஞானம் என்று உரைத்தலுமாம் –
அப்பொழுது -தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது-தத்துவத்தை உள்ளபடி காணும் தெள்ளிய அறிவு
செறியப் பெறாது -என்றது ஆயிற்று –

வெந்தீ வினையால் –
அநாதி காலம் பிடித்து இவ்வளவாக நித்ய சம்சாரியாய் போந்த நான் தீரக் கழியச் செய்த
அக்ருத்ய கர்த்தவ்யங்களால்-
வெம் -தீ -என்கிற மீமிசையால் அதினுடைய அதி க்ரௌர்யம் தோற்றுகிறது –

ஞானம் முழுமை பெறாது சிதைந்து உருவற்றுப் போவதற்கு ஹேது – வெந்தீ வினை -என்க –
பாபம் ப்ரஜ்ஞாம் நாசயதி -பாபம் அறிவை நாசம் ஆக்குகிறது -என்றபடி –
வெந்தீ வினை-ஞானத்தை உருப்பட ஒட்டாமல் -உருவற்றதாகி விடுகிறது என்க –
வெம் தீவினை –வெம்மையும் தீமையும் சேர்ந்து வினைக் கொடுமையின் மிகுதியைக் காண்பிக்கின்றன –

உருவற்ற ஞானத்து –
உரு மாய்ந்து கிடக்கிற ஞானத்தோடு -ஞானத்தோட சத்தை எல்லாம் போயிற்று என்றபடி –
அஞ்ஞானம் அதோன்யதுக்தம் -என்கையாலே இவ் விஷயங்களை அவஹாகிக்கிற ஞானம் எல்லாம்
உருவற்ற ஞானம் இத்தனை இறே –
உரு -வடிவாகையாலும்-
அர்த்தேனைவ விசெஷோஹி நிராகாரத்யாதியாம் -என்கையாலே அதுக்கு வடிவு விஷயம் ஆகையாலும்
சந்தம் -என்கையாலே அவ விஷயாந்தரமும் ஸ்ரீயபதி யாகையாலே ததரிக்த விஷயங்களை அவகாஹிக்கிற ஞானம் எல்லாம் –
உருவற்ற ஞானம் -என்னக் குறை இல்லை இறே-

உழல்கின்ற என்னை –
பக்தி பிரபத்தி முதலான-ஹிதங்களிலே ஊன்றி இலேன் ஆகிலும்
ஒரு நிஷ்டை இன்றிக்கே கொண்டிப் பசு போலே ச்வைரசம்சாரயாய் தட்டித்-திரிகிற அடியேனை –

உருவற்ற ஞாலத்து என்ற பாடம் ஆன போது –
உரு -என்று அழகாய் -நன்மையாய் –
அறுகையாவது-இன்றிக்கே ஒழிகை -நன்மை என்பது ஒன்றும் இல்லாத ஜகத்திலே-
ஈண்டு பல் யோநிகள் தோறும் உழல்வோம் -என்றபடியே –
நாநா வித யோநிகளில் ஜனிப்பது மரிப்பது தட்டித் திரிகிற என்னை -என்று பொருளாக கடவது

ஒரு பொழுதில் –
சமித் பரணிஸ் ஸ்ரோத்ரியம் பிரம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வா நுபசன்னாய சம்யக்ப்ரசாக்த
சித்தாய சமான் விதாய ஏகாஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாசதாம் தத்வதோ பிரம வித்யாம் -என்றும் —
கூப்பின்ன கை -நம் பூர்வார் -சமித்துக்களை கொண்டு போவது மட்டும் இல்லை –
தத்வித்தி பிரணிபாதென பரிப்ரச்நேன சேவையா -உபதேஷ்யந்தி தேஜ்ஞானம் ஜ்ஞானி நச்தஸ் வதர்சின
சம்வத்சரம் ததர்தம்வா மாசத்ரயமதா பிவா பரிஷ்ய விவிதோ பறை க்ருபயா நிச்ப்ர்ஹோவதேத் -என்றும்

1-சத்புத்திஸ்சா2-துசேவிசமுசித3- சரிதஸ் 4-தத்வபோதா பிலாஷீ -5-சூஸ்ருஷூ 6-ச்த்யக்தமான -7-பிரணிபாதன
8-பரப்ரச்னகால பிரதீஷ-9-சாந்தோ-10- தாந்தோ -11-ந சூயஸ்-12- சரண முபகதஸ் 13-சாஸ்திர விஸ்வாச சாலீ சிஷ்ய ப்ராப்த
14-பரிஷாம்க்ர்த-15- விதபிமதம் தத்வாஸ் சிஷின்ய -என்றும் -15 லக்ஷணங்கள் -பஹூ பிரகாரமாக
சிஷ்யனுடைய மனசை பரிஷித்தே உபதேசிக்க-வேணும் என்று சாஸ்திரம் சொல்லா நிற்கச் செய்தேயும் –
உபதேசத்துக்காக தான் திருக்கோட்டியூர் நம்பி சன்னதிக்கு பதினெட்டு தரம் எழுந்து அருளி நிற்க்கச் செய்தேயும் –
அவற்றை எல்லாம் -தம்முடைய ஔதார்யத்தாலெ காற்கடை-கொண்டு என்னை கடாஷித்த அந்த ஷணத்தில் தானே –

பொருவற்ற கேள்வியனாக்கி –
சாஸ்த்ரார்த்தை உட் கொண்டு உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடையனாம் படி பண்ணி அருளி –
பொரு -உபமானம் –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸாம் த்ரிக்த மாஹூ -என்றும்
சத் கர்ம நிரச்தாஸ் சூத்த சாங்க்ய யோக விதஸ்ததா–நார்ஹந்தி சரணச்தச்ய கலாம் கோடி தமீமாபி -என்றும்
தேனே தேனா ப்யதே தத் தத் நியாசே நைவ மகா முனே -என்றும் சொல்லுகிறபடியே –
சர்வோத்தமையான ப்ரபத்தியை உபதேசித்து –பிரபன்னனாம் படி பண்ணி அருளி என்றபடி –

பொருவற்ற கேள்வியன் –
சாஸ்திரத்தின் மிகச் சீரிய உட் பொருளை என் நெஞ்சிலும் பதியுமாறு பரப்பற சாரமாக ஒரு நொடியில்
உபதேசித்து -என்னை ஒப்பற்ற கேள்வி ஞானம் உடையவனாகச் செய்து அருளினார் -என்றபடி –
ஒப்பற்றமை கேள்விக்கு சரம பர்வதத்தை பற்றினமையால் -என்க-

ஒரு பொழுதில் –
நெடும் காலம் கூடிச் செய்ய வேண்டிய பணியை மறு பொழுதுக்கு கூட வைத்துக் கொள்ளாது –
அந்த ஷணத்திலே செய்து நிறைவு கொண்டாரே -என்று வியக்கிறார் –

நின்றான் –
அபிஷிச்யச லங்காயாம் ராஜ சேந்த்ரம் விபீஷணம் க்ர்த்கர்தாச்ய ததா ராமோ விஜுவரம் பிரமுமோதஹா-என்றல் போலே
க்ர்த்கர்தராய் இந்த பூமியிலே தனிக் கோல் செலுத்திக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –
அவ்வளவும் -நாதி ஸ்வ ஸித்த மனா -என்னும்படி இருந்தார் காணும் –

ஆக்கி நின்றான் –
என்னைக் கேள்வி யறிவு உடையவனாக்கிய பின்னரே –கால் பரவி தரித்து இருந்தார் –
முன்னர்க் கால் பாவித் தரித்து நிற்க கிலாது -என்னைக் கேள்வியன் ஆக்குவதிலேயே
கண்ணும் கருத்துமாய் இருந்தார் -என்று கருத்து .
அதனால் ஸ்ரீ அமுதனாரை பொருவற்ற கேள்வியன் ஆக்குவதை ஸ்ரீ எம்பெருமானார் தம் பேறாகக் கருதினமை- புலனாகின்றது –

தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே –
திக்குற்ற கீர்த்தி என்கிறபடியே
விசேஷ்ஜ்ஞ்ஞர் அவிசேஷஜ்ஞ்ஞர் என்னும் விபாகம் அற எல்லார்க்கும் பிரகாசியா நின்றுள்ள –
குணவத்தா பிரதையை உடையவராய் –
குணம் திகழ் கொண்டல் –என்கிறபடியே என்றும் ஒக்க பரம உதாரரான ஸ்ரீ எம்பெருமானார் –

தெரிவுற்ற கீர்த்தி –
பிரகாச யுக்தையான கீர்த்தி –

சீர் முகில் –
சீரிய முகில் -முகிலுக்கு சீர்மை யாவது-ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கை –

என்ன புண்ணியனோ –
என்ன தார்மிகரோ -யத் த்வத் ப்ரியம் ததிஹ புண்யம் -என்கிறபடி ஸ்ரீ சர்வேஸ்வரன் முக மலர்திக்காக –
அவரை இப்படி திருத்தி அங்குத்தைக்கு ஆளாம்படி பண்ணி யருளினார்-என்றது ஆய்த்து –

என்ன புண்ணியனோ –
தம்மிடம் யாதொரு பயனையும் எதிர்பாராது –தம் பேறாக -கேள்வி அறிவை தமக்கு உபகரித்த
ஸ்ரீ எம்பெருமானார் உடைய வள்ளன்மையை கண்டு -இது என்ன தருமம் புரியும் -இயல்போ என்று ஈடுபட்டு பேசுகிறார் .

தெரிவுற்ற கீர்த்தி –
இன்னாருக்கு தெரிவுற்ற என்னாமையாலே -பூமி எங்கும் உள்ள பண்டிதர் பாமரர் என்கிற
வேறுபாடு இன்றி -எல்லோருக்கும் தெரிந்த கீர்த்தி -என்க –
திக்குற்ற கீர்த்தி – 26- என்றார் கீழும்

இராமானுசன் என்னும் சீர் முகில்
சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக
சீர் -இங்கே வள்ளன்மை குணம்
வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் ஸ்ரீ இராமானுசன் -என்க
குணம் திகழ் கொண்டல் – 60- என்று கீழும் முகிலாக ஸ்ரீ எம்பெருமானார் கூறப் பட்டுள்ளமை காண்க .
சீரிய முகில் -சீர் முகில் -சீர் -அழகாகவுமாம் .

இரண்டாம் அடியில் உருவற்ற ஞாலத்து -என்றும் பாடம் உண்டு –
அப்பொழுது –உரு -என்பது அழகைச் சொல்கிறது .
ஞாலத்திற்கு -உலகத்திற்கு அழகாவது நன்மை வுடைமை –
ஆக –உருவற்ற ஞாலத்து -என்பதற்கு -நன்மை என்பது ஒன்றும் இல்லாத உலகத்திலே என்னும் பொருள் ஆகிறது .
இத்தகைய ஞாலத்தில் உழலுவதாவது -ஈண்டு பல் யோனிகள் தோறு உழல்வோம் – 38- என்றபடி .
பல வகைப் பட்ட பிறவிகள் எடுப்பதும் மடிவதுமாக தட்டித் தடுமாறுகை —
வெந்தீ வினை இங்கனம் தட்டுத்-தடுமாறுகைக்கு ஹேது -என்று அறிக –

ஆக பகுத்துணர்வில் ஊற்றம் கொண்ட ஞானத்தை அடையப் பெறாது –
மிக கொடிய கர்மத்தினால்-நன்மையின்மையால் கைவிடத் தக்க உலகிலே பிறப்பதும் இறப்பதும் ஆக
உலவுகின்ற என்னை-என்றது ஆயிற்று .

—————–

தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே –

முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே -6-
இன்று கண்டு உயர்ந்தேன் –இராமானுசன் என்னும் கார் தன்னையே -24-
காரேய் கருணை இராமானுச -25-
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையால் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை -26-
உன் வள்ளல் தனத்தால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் -27-
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -37-
வாமனன் சீலன் இராமானுசன் -40-
மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன் -54-
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்து அருளும் கொண்டலை -55-
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமானுசனை -56-
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் எம் குலக் கொழுந்தே -60-
உன் பெரும் கருணை தன்னை -70-
வன்மை இராமானுச எம் பெரும் தொகையே-71-
நிறை புகழோருடனே வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே-72-
கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன் -74-
தன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் -77-
இராமானுச இனி யுன் சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு -81-
கார் கொண்ட வண்மை இராமானுச -83-
இராமானுசன் –சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் -84-
உணர்வில் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி இராமானுசன் -87-
போற்ற யரும் சீலத்து இராமானுச -89-
புலவர்க்கு எண்ணரும் கீர்த்தி இராமானுச -92-
அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த இராமானுசன் -93-
உன் அடிப்போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி -100-
கடல் புடை சூழ் வையம் இதனில் உன் வண்மை என் பால் வளர்ந்ததுவே -102-
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –இராமானுச என் செழும் கொண்டலே -104-
இன்புற்ற சீலத்து இராமானுச -107-
பொங்கிய கீர்த்தி இராமானுசர் உன் அடிப் பூ மன்னவே -108-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –81-சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால் சார்வின்றி நின்ற வெனக்கு- – இத்யாதி —

May 28, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தி சம்பந்திகளுக்கே சர்வ சேஷ வ்ருத்திகளும்
பண்ணுவேன் என்றார் கீழே .
இந்நிலைக்கு -முன்பு இசையாத தமக்கு இந்த ருசி உண்டாயிற்று -ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தாலே ஆகையாலே –
தமக்கு அவர் செய்த உபகாரத்தை -அவர் தம்மைக் குறித்து விண்ணப்பம் செய்து –
தேவரீர் உடைய கிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் சர்வோத்தமரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய சம்பந்தி சம்பந்திகளுக்கே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சர்வ கரணங்களாலும் சர்வ வித கைங்கர்யங்களும் செய்யக் கடவேன் என்று
அவர்கள் பக்கலிலே தமக்கு உண்டான ஊற்றத்தை சொல்லி –
இதிலே –
ஸ்ரீ எம்பெருமானார் திரு முக மண்டலத்தைப் பார்த்து
இவ்வளவும் தேவரீருக்கு சேஷ பூதராய் இருக்கிறவர்கள் திறத்திலே அடிமை தொழில் செய்ய இசையாத என்னை –
தாம் உகந்தாரை தமக்கு அந்தபுர பரிகரமாக்குகிறவர்கள் விஷயத்தில் அடிமை படுத்துகைக்கு உத்தேசிக்கலாய்
தன் அடியார்க்கு அடிமை படாதே இருக்கிறவர்களுக்கு அந்த திருவடிகளை கொடுக்க இசையாது
இருக்கிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடிகளில்–
(ஸ்ரீ பாகவத சேஷத்வத்தால் ஸ்ரீ அரங்கனுக்கு கைங்கர்யம் -காரண கார்ய பாவம் -)
சேர்த்து அருளின தேவரீர் உடைய பரம கிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் அடியார் அடியார் கட்கே -எல்லா அடிமைகளும் செய்வேன் என்றார் கீழே –
இதனில்
இந்நிலை ஏற்படுவதற்கு முன்பு ஏனைய சம்சாரிகள் போலே -இவ் விஷயத்தில் இசைவில்லாமல் இருந்த தமக்கு –
ஸ்ரீ எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை -நேரே அவரை நோக்கி –
விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை -என்கிறார் .

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

பத உரை –
சோர்வின்றி -பிரிவில்லாமல்
உன் தன் -தேவரீர் உடைய-வகுத்த சேஷி திட அத்யாவசாயத்துக்காக
உன் தன் -சம்பந்தம் போக்யதை இரண்டும் உண்டே –
துணை அடிக் கீழ் -ஒன்றுக்கு ஓன்று அழகு உடைமையின் துணையாக அமைந்த திருவடிகளின் கீழே –
தொண்டு பட்டவர் பால் -அடிமை பட்டவர்கள் இடத்தில்
சார்வு இன்றி நின்ற எனக்கு -பொருந்துதல் இன்றி நின்றவனான எனக்கு
அரங்கன் -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
செய்ய -சிவந்த
தாளிணைகள் -அழகினில் இணைந்த திருவடிகளை
பேர்வு இன்றி -நீங்குதல் இல்லாமல் –
இன்று -இக்காலத்தில்
பெறுத்தும் -பெறும்படி செய்யும்
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
இனி -ஸ்ரீ அரங்கன் திருவடிகளைப் பெறுவித்த பிறகு
உன் -தேவரீருடைய
சீர் ஒன்றிய -மகத்துவம் பொருந்திய
கருணைக்கு -கிருபைக்கு
தெரிவு உறில் -ஆராயப் புகில்
மாறு-ஒப்பு
இல்லை -கிடையாது –

வியாக்யானம் –
வேறொரு விஷயத்தில் மனச்சு பிரிவின்றிக்கே தேவரீருடைய சேர்த்தி அழகை உடைத்தான
திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும் போலே சேஷமாய் இருக்குமவர்கள் -பக்கல்-
ஒரு பொருத்தம் இன்றிக்கே நின்ற எனக்கு –
அவர்களுக்கே அனந்யார்ஹசேஷம் என்னும் நினைவை பிறப்பிக்கையாலே –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -அமலனாதி பிரான் – 1-என்றும்
அடியார்க்கு ஆட்படுத்தாய் -திருப் பள்ளி எழுச்சி – 10- என்றும் சொல்லுகிறபடியே
தாமுகந்தாரை ஸ்வகீயர் அளவிலே சேர்க்கும் ஸ்வபாவராய்
பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டுப் பேராத நிலை இல்லையாம்படி இருக்கும் –
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு -பரபாகமான சிவப்பையும்
சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படியாக இன்று
பெறுவித்து அருளினவரே !
இப்படியான பின்பு
தேவரீர் உடைய கௌரவ யுக்தையாய் இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை .

அதவா –
சோர்வின்றி -இத்யாதிக்கு
அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி -உன் தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு -இன்று பெறுத்தும் இராமானுச -என்று அந்வயித்து –
பகவத் சேஷத்வத்துக்கு இசைகையாலே ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளை விடாமல் உறைக்கப் பற்றி –
(அதனாலேயே ) துர்மானத்தாலே ஸ்ரீ பாகவத சேஷத்வத்துக்கு இசையாமல் -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பார் பக்கல்
சேராமல் நின்ற வெனக்கு -அத்தை இன்று லபிப்பித்து அருளின தேவரீர் கிருபைக்கு ஒப்பு இல்லை என்னவுமாம் .

பேர்தல்-நீங்குதல்
சீர்-கனம்-அழகாகவுமாம் –
ஒன்றுதல்-கூடுதல்
மாறு-ஒப்பு
தெரிவுறுதல் -ஆராய்தல்–

பிடித்தார் பிடித்தாரை பற்றி குறை இல்லாமல் இருப்போம் –
ஸ்ரீ அரங்கன் திருவடி பிடித்த செருக்கால் -இருந்தேன் -அடியார் அடியாரை பிடிக்காதவரை அரங்கன் விரும்பானே –
இப்பொழுதோ -ஸ்ரீ ஆழ்வான் திருவடி சம்பந்தம் பெற்ற பின் ஸ்ரீ அரங்கன் விரும்பி மேல் விழுகிறான் —
ஸ்ரீ பாகவதர் திருவடிகளை பெற்றுக் கொடுத்தீர் -ஸ்ரீ அரங்கன் திருவடிகளை பெற்றுக் கொடுத்தீர் –
சிர் ஒன்றிய கருணைக்கு ஒப்பு இல்லை -இப்படி அருளிய ஸ்ரீ ஸ்வாமியின் இன்னருளுக்கு எதுவுமே ஒப்பு இல்லையே –
ஸ்ரீ ஆட் கொண்ட வல்லி சீயர் ஐதீகம் –பாகவத சேஷத்வம் அறியாமல் பண்டே பல காலும் போயின என்று அழுதேன் –
சோர்வின்றி -மனம் வாக் காயம் ஒருப்பட்டு –பதச்சாயை -தண்டம் பவித்ரம் -போல்வார் இடம் -பொருந்தப் பண்ணின கிருபை –
விரகு அறிந்து ஸ்ரீ ஸ்வாமி அருளினார் –ஸ்ரீ அரங்கன் திருவடிகளை ஆச்சார்ய முகேன -இதுவே –மருந்து
கிடைக்கவே –ஸ்ரீ பக்த ஸ்ரீ பக்த திருவடிகள் விருந்து பெற்றேன் என்றபடி-
ஸ்ரீ சுக்ரீவன் -ஸ்ரீ இளைய பெருமாள் அருளால் -ஸ்ரீ பெருமாள் உதவியது போலே
நாயகனாய் –வாசல் காப்பான் கோயில் காப்பான் காலிலே விழுந்தால் போலே -நீ நேசக் கதவம் நீக்கு –
ந சம்சய தத் பக்த பரிசரியா–

சோர்வின்றி உன் தன் துணை அடிக் கீழ்–
மயிசா நன்ய யோகே நபக்திரவ்யபிசாரிணி –என்று ஸ்ரீ கீதாசார்யன் அருளிச் செய்தபடியே –
வேறு ஒரு விஷயத்திலும் மனசு பிரிந்து போகை அன்றிக்கே –
க்ர்த்வாமர்த்ய மயீம் த நு ம் மக் நா நுத்தர தேலோகா ந் காரருன்யாஸ் சாஸ்த்ரபாணினா-என்று
சர்வோத்தரரான தேவரீர் உடைய சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளின் கீழே

தொண்டு பட்டவர் பால் –
நிழலும் அடி தாறும் போலே சேஷமாய் இருக்குமவர் பக்கல் –
யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் -கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம் -என்று சொல்லப்பட்ட
மகத்துக்கள் விஷயத்தில் என்றபடி –

சார்வின்றி நின்ற –
சேருதல் இன்றிக்கே இருக்கிற -எனக்கு –
அநாதி காலமே தொடங்கி ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கும் அளவும் –
தஸ்மாத் மத் பக்த பக்தாஸ் பூஜ நீயா விசேஷத -என்கிற வர்த்தத்தை அறியாதே
ந நமேயம் -என்று பிரதி கூலனாய் போந்த அடியேனுக்கு –

அரங்கன் செய்ய தாள் இணைகள் –
ஜீவன ஹேதுவாய் போக்யமுமாயும் இருக்கிற சோற்றிலே -ரோகோல் பணத்தாலே அருசி பிறந்தவனுக்கு
விரகனான வைத்தியன் கையில்-காட்டிக் கொடுக்கும் மாதாவைப் போலே –

( பாகவத சேஷத்வம் -அன்னம் -/அஹங்காரம் துர் அபிமானம் அஜீரண வியாதி-/ தாயார் ராமானுஜர் -/ பிள்ளை -அமுதனார் /
வைத்தியர் -அரங்கன் /-மருந்து -பாகவத சேஷத்வம் இல்லாதவனுக்கு உதவோம்
அடியார்க்கு அடியாரை பின் தொடர்ந்து அருளுவேன் போன்ற -என்று உள்ள ஸ்ரீ ஸூக்தி என்றவாறு )

மமமத் பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காவபெத் -என்றும் -அடியார்க்கு
என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் -என்றும் சொல்லுகிற படி –
ஸ்வ ஆஸ்ரிதர் பக்கல் அதி வ்யாமுக்த்தராய் -தாம் உகந்தாரை தம் அடியார்க்கு –ஏழாட்காலும் அடிமைப்படுத்தும்
பரிமாற்றம்-அறியும் விரகராய் –
செடியார் வினைகள் தீர் மருந்தே -என்றும் –
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு -என்றும் சொல்லுகிறபடியே –
பகவத் சேஷத்வத்துக்கும் பாகவத சேஷத்வத்துக்கும் இசையாது ஒழிகை யாகிற துஷ் கர்மங்கள் அடங்கலும் நசிக்கும்படி
கடாஷித்து அருளும் ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு பரபாகமாய் சிவப்பையும் சேர்த்தி-அழகையும் உடைய
திருவடிகளை காட்டிக் கொடுத்த வற்றை

பேர்வின்றி –
ஒருக்காலும் விட்டு நீங்காத படியாக-
பேர்தல் -நீங்குதல் –

இன்று பெறுத்தும் –
இப்போது நிழலும் அடி தாறும் போலே சேஷ பூதனாய் இருக்கிற இந்த மகா பலத்தை பெறுவித்து -பலிப்பித்து அருளின –

சோர்வின்றி –எனக்கு –
இதனால் தனது பழைய நிலையினை நினைக்கிறார்
உன் தன் -என்று வகுத்த ஆச்சார்ய சம்பந்தமும் –
துணையடி -என்று போக்யதையும் -திருவடிகளுக்கு காட்டப் பட்டன –
திருவடிக் கீழ்த் தொண்டு என்னவே – நிழலும் அடி தாறும் -பாத ரேகை -பாதுகை -போலே-அடிமைப் பட்டமை புலனாகிறது .
பாத ரேகையும் பாதுகையும் அடிகளின் கீழ் இருப்பதையே இயல்பாக கொண்டு –

பயன் வேறின்றி –
மற்று ஒன்றுக்கு உபயோகப் படாதது போலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிக் கீழ் இருத்தல் என்னும் வாழ்ச்சியே தம் இயல்பாகக் கொண்டு அதனைத் தவிர
வேறு பயன் இன்றி மற்று ஒன்றுக்கு ஆளாகாதவர்கள் -ஸ்ரீ எம்பெருமானார் அடியார்கள் -என்க .

இத்தகைய அடியார்கள் ஆதலின் -வேறொரு விஷயத்தில் நெஞ்சை செலுத்தாமல் –
மனப்பூர்வமாய் ப்ரீதி உடன் தொண்டினைச் செய்வது தோன்ற –சோர்வின்றி தொண்டு பட்டவர் –என்கிறார் –
சோர்வு -பிரிவு -அது இங்கே மனத்தின் பிரிவைச் சொல்கிறது .
மனத்திற்கு பிரிவாவது வேறு விஷயத்தில் அதனை செலுத்துதல் –
மனப் பூர்வமான ப்ரீதியினாலே விளைந்தமை தோற்ற –
தொண்டு செய்பவர் -என்னாது -தொண்டு பட்டவர் -என்கிறார்
ப்ரீதி காரிதமான கைங்கர்யம் உடையவர்கள் -என்றபடி –
தொண்டு பட்டமையே அவர்களுக்கு நிரூபகம் .குல கோத்ராதிகள் அல்ல –
அத்தகையோர்களை சார்ந்து இருக்கும் தற்கால நிலை முன்பு இல்லையே என்று பழைய நிலையை
நினைத்து –சார்வின்றி நின்ற எனக்கு -என்கிறார் .

சார்தல் -பொருந்துதல் –
சார்ந்த இரு வல் வினைகள் -ஸ்ரீ திருவாய்மொழி -1 5-10 – – எனபது காண்க .
இங்கனம் பாகவத சேஷத்வத்தின் சுவை யறியாது கீழ் நாள்கள் எல்லாம் வாளா இருந்து ஒழிந்த எனக்கு –
எல்லா விடத்திலும் -எத் தொழும்பும் -அந்தப் பாகவதர்களுக்கே செய்யும் நிலை ஏற்படும் படியாக
பிறர்க்கு அன்றி -அந்த பாகவத்ர்க்கே உரிமை பட்டது – இவ் ஆத்மா -என்னும் உணர்வை உண்டு பண்ணி யருளினார் ஸ்ரீ எம்பெருமானார் .
அதன் பயனாக ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அழகிய அடிகளை அடியேன் விட்டு நீங்காதபடி-பெற முடிந்தது என்கிறார் மேற் பகுதியினாலே –

அரங்கன் –பெறுத்தும் இராமானுச
ஸ்ரீ பெரிய பெருமாள் இடம் குறிக் கொள்ளத் தக்க இயல்புகள் உண்டு –
தமக்கு எவரிடம் ப்ரீதி உள்ளதோ அவரைத் தம் அடியார்க்கு ஆட்படும்படி செய்தல் அவற்றுள்-ஓர் இயல்பாகும் ..
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்று ஸ்ரீ திருப் பாண் ஆழ்வாரும்
அடியார்க்கு ஆட படுத்தாய் -என்று ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் அருளிச் செய்து இருப்பது காண்க –

ஸ்ரீ பாகவத சேஷத்வத்திலே ஊன்றி இருப்பவர்களுக்கே தம் திருவடிகளை விட்டுப் பிரியாத நிலையையும் –
மற்றவர்களுக்கு தம் திருவடிகளை விட்டு பிரியாத நிலை இல்லை -என்னலாம் படியான நிலையையும் –
விளைவித்தாலும் -அவனிடம் காணும் இயல்புகளே –
இந்த இயல்புகள் என் திறத்து இன்று புலப்படா நிற்கின்றன –
அடியார்க்கு ஸ்ரீ அரங்கனால் ஆட்படுத்தப் பட்டேன் –
ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகள் என்னை விட்டு பிரியாது பேர்வின்றி நின்றன .

இங்கனம் அடியார்க்கு ஆட்படுதலும் –
பேர்வின்றி அரங்கன் தாளிணைகளைப் பெறுதலும் –
இன்று எனக்கு ஸ்ரீ பாகவத சேஷத்வத்திலே விருப்பம் உண்டாம்படி திருப்பத்தை ஏற்படுத்தின-
ஸ்ரீ எம்பெருமானார் திருவருளால் கிடைத்த பேறுகள்-என்கிறார் .

ஸ்ரீ பாகவதர்க்கே உரிமைப் பட்டது ஆத்மா -என்று ஸ்ரீ எம்பெருமானார் உண்டு பண்ணின உணர்வு-
அடியாராகிய ஸ்ரீ ஆழ்வானுக்கு ஸ்ரீ அரங்கனால் ஆட்படுத்தப் பட்டு -ஸ்ரீ அரங்கன் தாளிணைகளை-பேர்வில்லாமல்-பெறும்படி
செய்வதனால் -உரம் பெற்று நின்றது -என்க .

ஸ்ரீ பாகவத சேஷத்வத்தை உணர்த்தி -அருளினதாக கூறாது –
அவ் உணர்வில் நிற்பார் பேர்வின்றி பெரும் ஸ்ரீ அரங்கன் தாளிணைகளை பெறுவித்ததாக-கூறுவதனால்
அவ் உணர்வு உரம் பெற்று மிளிருவது காண்க –

அரங்கன் செய்ய தாளிணைகள் –
தாளிணைகள் சிவந்தன –
ஸ்ரீ அரங்கன் பச்சை பசும் தேவன்
இந்நிறச் சேர்த்தியின் அழகை அனுபவிக்கிறார் .

இராமானுச –
எம்பெருமானாரே –

இனி உன் சீர் ஒன்றிய கருணைக்கு –
உபாயே நது யச்சக்யம் நதசக்யம் ப்ராக்ரமை -என்னும்படி -விரகாலே –
த்வத் தாஸ தாஸ கண ந சரமாதவ்ய ஸ்தத் தாஸைத கா சதா விரதாமமாஸ்து -என்று
அத்யந்த ப்ரார்த்தநீயமான சரம பர்வ நிஷ்டர்க்கு ஊற்றுவாயான பிரதம பர்வத்தில் நிற்கும்படி திருத்தி அருளிய பின்பு –
இப்படி கிருஷி பண்ணி அருளின தேவரீர் உடைய மகா ப்ரபாபவதியாய் இருக்கிற கிருபைக்கு –

சீர் –
அழகும் மகத்வமும் –

ஒன்றுதல்-
கூடுதல் –

தெரிவுறில்-
ஆராய்ந்து பார்க்கும் அளவில்
தெரிதல்-ஆராய்தல்

மாறு -இல்லை
ஒப்பு இல்லை –
சித்திர் பவதி வா நேதி சம்சயோச்யுத சேவி நாம் – என்கையாலே –
தென் அரங்கர் சீர் அருளும் இது தனக்கு ஒப்பாக மாட்டாது என்று காணும் இவருடைய திரு உள்ளத்தில் ஓடுகிறது –
ந சம்சயஸ்துதத் பக்த பரிசர்யாரதாத்மனாம் -என்று சொல்லுகையாலே
இவ்வர்த்தம் சம்ப்ரதிபன்னம் இறே –

மாறு -ஒப்பு -அன்றிக்கே —அரங்கன் செய்ய தாள் இணைகள் -பேர்வின்றி – சோர் வின்றி -வுன் தன் துணை அடிக்
கீழ் தொண்டு பட்டவர் பால் சர்வின்றி நின்ற எனக்கு -இன்று பெறுத்து
இராமானுச -உன் சீர் ஒன்றிய கருணைக்கு –தெரிவுறில் -மாறு இல்லை -என்று அந்வயித்து-
ஸ்ரீ பகவத் சேஷத்வத்துக்கு இசைகையாலே -ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருவடிகளில் சக்தனாய் –
அந்த கர்வத்தாலே ததீயர் உடைய ப்ரபாபவத்தை அறியப் பெறாதே -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பவர் பக்கல்
சேராது ஒழிந்த எனக்கு அத்தை இன்று லபித்தது அருளின தேவரீர் உடைய அப்ரதிம பிரபாவதியான கிருபைக்கு –
ஆராய்ந்து பார்க்கில் – ஒருவரும் சத்ர்சர் இல்லை என்று பொருள் சொல்லவுமாம் –

இனி யுன் –தெரிவுறல் –
இனி -இங்கனம் ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்த பிறகு
சீர் ஒன்றிய கருணை –மகிமை பொருந்திய கருணை
சீர் -மகிமை -ஒன்றுதல்-பொருந்துதல்

உன் கருணை –
ஸ்ரீ அரங்கன் கருணை அன்று -உன் கருணை சீர் ஒன்றியது
ஸ்ரீ அரங்கன் கருணை சீர் ஒன்றாதது -ஸ்வா தந்த்ர்யம் கலந்து இருத்தலின் -அது சீர் ஒன்றாதது
அக் கலப்பு இல்லாமையின் இது சீர் ஒன்றியது –
ஒன்றவே ஸ்ரீ அரங்கன் கருணையும் -ஒரு கால் ஸ்வா தந்த்ர்யத்தால் பயன் இன்றி போவதாய் இருத்தலின் –
என்றும் பயன் குன்றாத ஸ்ரீ எம்பெருமானார் கருணைக்கு ஒப்பாகாது என்கிறார் .

மாறு -ஒப்பு
இது வெறும் புகழ் உரை அன்று -ஆராய்ந்து பார்த்தால் இவ் உண்மை புலப்படும் என்னும்-கருத்துடன் –
தெரிவுறில்-என்கிறார் –தெரிவுறில் -ஆராயின் –

இனி-
ஸ்ரீ பாகவத சேஷத்வத்தின் பயனாக ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல்
நேரே ஸ்ரீ பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் –
அப்பொழுது ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி -சோர்வின்றி உன் தன் துணை அடிக்கீழ்
தொண்டு பட்டவர் பால் சார்வு இன்றி நின்ற எனக்கு இன்று பெறுத்தும் இராமானுச -என்று
கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளல் வேண்டும் —

ஸ்ரீ பாகவத சேஷத்வத்துக்கு இசையாது
ஸ்ரீ பகவானுக்கு சேஷப் பட்டு இருத்தலை மட்டும் இசைகையாலே –
ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகளை நீங்காது பற்றித் தேவரீர் திருவடிகளின் கீழே சோர்வின்றி
தொண்டு பட்டவர்கள் இடம் –செருக்கினால்-பொருந்தாமல் -பாகவத சேஷத்வத்துக்கு புறம்பாய் நின்ற எனக்கு –
இன்று அந்தப் பாகவத சேஷத்வத்தை பெறும்படி -அதாவது தொண்டர் பட்டவர் பால் சார்வு
ஏற்படும்படி செய்த ஸ்ரீ எம்பெருமானாரே -என்று பொருள் கொள்க –

முந்தின பொருளில் நேரே -ஸ்ரீ பாகவத சேஷத்வம் பேசப்படுவதில்லை –
அதன் பயனாக தாளிணைகள் பேர்வின்றி பெருத்தாலே பேசப் பட்டுள்ளது .
பிந்தின பொருளில் அது நேரே கூறப்படினும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டிய இடர்ப்பாடு உள்ளது —

ஸ்ரீ அனந்த் ஆழ்வானை ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவடி சேர்த்தார்-
ஸ்ரீ அமுதனாரை ஸ்ரீ கூரத் ஆழ்வான் இடம்
ஸ்ரீ பட்டரை ஸ்ரீ எம்பார் இடம் -சேர்த்தது ஸ்வாமி தனி சிறப்பு-

இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் –
வரவே வராது இந்த நிலை-ஸ்ரீ மா முனிகள்-

ஸ்ரீ தென் அரங்கன் திரு அருளும் ஈடு இல்லை-இது மொட்டு போல
இந்த சம்சயம் இல்லை ஸ்ரீ பக்த பக்தன் அடி பற்றிவனுக்கு-இது மொட்டு புஷ்பிதம் ஆகி பழம் ஆனது போல –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –நின் திரு எட்டு எழுத்தும் கற்ற பின் -மற்று எல்லா பேசினும்-ஸ்ரீ கலியன்-
இப் படியான பின்பு ஸ்ரீ தேவரீர் உடைய கௌரவ யுக்தியே இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை-

————–

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே–39-

மேல் ஆறு பாட்டும் இந்த ஜ்ஞானம் உடையார் உடைய ராஜகுலம் சொல்லுகிறது –
இவருடைய பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை — இருக்கிறபடி –

பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே–42-

அடியனை அளியன் என்று அருளி யுன்னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே -11-

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -1-

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே––பெருமாள் திருமொழி-2-1-

ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

அரங்கனுக்கு அடியார்களாய் நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர் நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே–3-7-2-

பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர் ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே–3-7-3-

திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர் இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே–3-7-4-

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் மடியார் எம் அடிகளே–3-7-9-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப் படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-

நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே—8-10-1-

சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3-

தனி மாத தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தாமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10-

பகவத் பக்தியின் எல்லை நிலமே பாகவத பக்தி -பகவத் பக்தியின் உறைப்பையே பாகவத பக்தி வெளிப்படுத்தும் –
ஆழ்வார் உடைய பக்திப் பெரும் காதலே -பாகவதர்களே உத்தேச்யம் என்னப் பண்ணுகிறது –
மேலே திருச் சேறை திருப் பதியை மங்களா சாசனம் -கண் சோர வெங்குருதி -திரு மொழியிலும்
இந்த பாகவத நிஷ்டை அருளிச் செய்யப் படும்

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே—2-6-1-

கடல் மல்லைத் தல சயனம் ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே—2-6-2-

தல சயனத்துறை கின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே –2-6-3-

தல சயனத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியேநினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே—2-6-10-

ஸ்ரீ சார நாத பெருமாள் -திருச்சேறை திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –
இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை —
பாகவத சேஷத்வம் -பகவத் சேஷத்வத்தின் காஷ்டை –
எம்பெருமான் இடம் அளவிறந்த பக்திப் பெரும் காதலை வெளியிட்டு அருளுகிறார் –
கீழே -நண்ணாத வாளவுணர் -திருப்பதிகம் போலே –

பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-

தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

இராமானுச இனி யுன் சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே –

சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே -16-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை இன்று அவமே போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா இராமமானுச நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே -38-

மா மலராள் நாயகன் எல்லா வுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42-

நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின்னருள் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்க்கும் அஃதே புகல்–48-

பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்து அருளும் கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே -55-

கட்டப்பொருளை மறைப்பொருள் என்று கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கோடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே -93-

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டாலே -104-

——————-

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு–

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்தொழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா! இனி எம்மைச் சோரேலே–2-1-10-

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–2-1-11-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –80-நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம்- இத்யாதி —

May 27, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இவ்விஷயத்தை ஆஸ்ரயிக்க இசையாத சம்சாரிகள் நிலையைக் கண்டு இழவு பட்டார் கீழ் –
உம்முடைய நிஷ்டை தான் இருக்கும் படி என் -என்ன –
இவ்விஷயமே உத்தேச்யம் என்று இருப்பாரை உத்தேச்யம் என்று இருக்கும் அவர்களுக்கே-
ஒழிவில் காலத்தில் -திரு வாய் மொழி – 3- 3-1 – படியே நான் அடிமை செய்வேன் -என்கிறார் —

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில்
ஸ்ரீ எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணியும் -பிரமாணிகமாக வேத மார்க்க பிரதிஷ்டாபநம் பண்ணியும் இருக்கச் செய்தே
அஜ்ஞான பிரசுரமான இந்த பூ லோகத்திலே இருந்துள்ள சேதனர் அவரை ஆஸ்ரயிக்க இசையாதே –
வேறொரு ரஷகாந்தரம் உண்டோ என்று தேடித் தடுமாறி திரிந்து – அவசன்னராய் விட்டாட்கள் என்று அவர்கள் படியை சொல்லி –
இதிலே –
அவர்களை போல் அன்றி -அவர்களைக் காட்டில் அத்யந்த விலஷணராய் ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமத்தையே
விஸ்வசித்து இருக்கும் மகாத்மாக்கள் இடத்தில் பக்த ஸ்நேகராய் -ஒருக்காலும் அவர்களை விஸ்மரியாதே
இருக்குமவர்கள் யாவர் சிலர் -அந்த ததீயர்க்கே
1-சர்வ தேச -2-சர்வ கால–3-சர்வ அவச்தைகளிலும் -4–சர்வ வித கைங்கர்யங்களையும் -5–சர்வ கரணங்களாலும்-
6-சர்வரும் அறியும்படி -பண்ணக் கடவேன் என்று தம்முடைய நிஷ்டையை சொல்லுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி உய்வுறாதவர்களும்-சொன்னாலும் -அதனுக்கு இசையாதவர்க்களுமான
சம்சாரிகள் நிலையைக் கண்டு தாம் இழவு பட்டார் கீழே –
சம்சாரிகள் நிலை கிடக்கட்டும் -உம்முடைய நிலை எவ்வாறு உள்ளது -?என்பாரை நோக்கி-
ஸ்ரீ எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் .

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 –

பத உரை
நல்லார் -நல்லவர்கள்
பரவும் -ஏத்தும்
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய
திரு நாமம் -திரு நாமத்தை
நம்ப வல்லார் -தஞ்சமாக -நம்பிக் கொண்டு இருக்கிற திறமை வாய்ந்தவர்களுடைய
திறத்தை-நன்மையை
மறவாதவர்கள் -மறந்து போகாமல் என்றும் நினைந்த வண்ணமாய் இருப்பவர்கள்
யவர்-யாவர்களோ
அவர்க்கே -அவர்களுக்காகவே
எல்லா இடத்திலும் -சர்வ தேசங்களிலும்
என்றும் -சர்வ காலங்களிலும்
எப்போதிலும் -சர்வ அவஸ்தை -நிலைகளிலும்
எத் தொழும்பும் -எல்லா அடிமைகளும்
சொல்லால்-வாக்கினாலும்
மனத்தால்-நெஞ்சினாலும்
கருமத்தினால்-சரீரத்தாலும்
சோர்வு இன்றி -தனித்து இன்புறும் நிலை இல்லாமல்
செய்வன்-செய்வேன்

வியாக்யானம் –
நல்லார் நவில் குருகூர் நகரான் -திரு விருத்தம் -100 என்னுமா போலே
சத்துக்கள் அடங்கலும்-இருந்த இடங்களிலே ப்ரேம பரவசராய் ஏத்தும் படியான ஸ்ரீ எம்பெருமானாருடைய திரு நாமத்தை –
ந சேத் ராம்னுஜே-த்யேஷாசதுரா சதுரஷரீ காமவஸ்த்தாம் பிரபத்யன்னே ஜன்தவோ ஹந்தமாத்ருசா -ஸ்ரீ ஆழ்வான் முத்தகம் — என்கிறபடியே –
தங்களுக்கு தஞ்சமாக விஸ்வசித்து இருக்கிற-வல்லவர்களுடைய பிரகாரத்தை அனுவரத அனுசந்தானம் பண்ணி இருக்குமவர்கள் யாவர் சிலர் –
அவர்களுக்கே -சர்வ தேசத்திலும் -சர்வ காலத்திலும் -சர்வ அவச்தைகளிலும் – சர்வ சேஷ வ்ருத்திகளும் –
வாக்காலும் மனச்சாலும் காயத்தாலும் –
தனக்கேயாக -திருவாய் மொழி -2 9-4 – – என்கிறபடியே-ப்ருதக்ரசம் அறச் செய்வன் .

வல்லார் திறத்தை மதியாதவர்கள் -என்று பாடமான போது
மதித்தல் -அளவிடுதலாய் -அவர்கள் படியை பரிச்சேதியாதவர்கள் -என்று பொருளாக கடவது –
நம்புதல் -விஸ்வசித்தல்-விரும்புதலுமாம்
திறம் -பிரகாரம்
தொழும்பு -அடிமை
சொல் -கருமம் -என்கிற வற்றால் தத் தத் கரணங்களான வாக் காயங்களை லஷிக்கிறது
சோர்வு -பிரிவு–

சோர்வு -ஆயாசம் -பிரிவில்லாமல் கைங்கர்யம் செய்ய -சேர ஒட்டாமல் பிரகிருதி பண்ணுமே –
சததம் கீர்த்தயந்த –பக்திக்கு -பிரியாது ஆடச்செய்ய -ஈன துழாயானை வழுவா வகை அறிந்து வைகல் தொழ வேண்டுமே –
நல்லார் நவில் குருகூர் -அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -நல்லார் வாழ் நளிர் அரங்கம் —
சர்வ தேச -சர்வ அவத்தைகளிலும் -சர்வ காலத்திலும் –சர்வ சேஷ விருத்தியும் –முக்கரணங்களால் சோர்வின்றி –
சர்வரும் அறியும் படி கைங்கர்யம் செய்ய –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –சித்ர கூடம் -கடல் கரையில் -கங்கை மந்தாகினி கோதாவரி ஆற்றங்கரைகளிலும்-கைங்கர்யம் –
நல்லார் -ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ பவிஷ்யத்கார-ஆச்சார்யர் -கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
பொலிக பொலிக பொலிக –கலியும் கெடும் கண்டு கொண்மின் – தீர்த்தவாரி உத்சவம் ஆனபின்பு இன்றும் எழுந்து அருளி –
ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே -ஸ்ரீ எம்பெருமானாரை அடைந்தேன் -என்கிறார் ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் -ஸ்ரீ ஆழ்வார் சொல் கேட்டே ஆச்ரயித்தார்கள் –
ஸ்ரீ பாகவத ஸ்ரீ நாரத புராணம் -அநந்தம் பிரதம யுகம் –கலவ் ராமானுஜ –
அர்வாஞ்சோ–கூர நாத -ஞான அனுஷ்டான பிரகாரம் -ஸ்ரீ ராமானுஜ நாமம் சொல்லி கைங்கர்யம் செய்வதே உபாதேயம்
வார்த்தா மாலை பொக்கிஷம் -அனுபவிக்க அனுபவிக்க -கைங்கர்யம் பெருகும் – நமக்கு ஸ்ரீ அமுதனார் போல்வார் –
மறவாதவர்கள் எவர் -மதியாதவர்கள் -விடாமல் உள்ள சத்துக்களுக்கே கைங்கர்யம் –
அவர்களுக்கே குடிக்குடி ஆடச்செய்யும் நல்ல கோட்ப்பாடு -சொல்லால் மனத்தால் கருமத்தினால் –
ஒவ் ஒன்றினாலும் எல்லா காலத்திலும் -தேசத்திலும் -அவஸ்தைகளிலும் —ஒன்பதை சொல்லவே பொறுமை இல்லையே நமக்கு —
சோர்வின்றியே கைங்கர்யம் செய்ய வேண்டுமே -பண்ணப் பண்ண ஆர்வம் மிக்கு ஆரோக்யம் கிட்டும் –

நல்லார் பரவும் இராமானுசன் –
நல்லார் நவில் குருகூர் நகரான் -என்று ஸ்ரீ திரு நகரியிலே வசிக்கும் சத்துக்களாலே விரும்பப்படும் –
1-நம் ஆழ்வாரைப் போலே -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று அவர் தம்மாலும் –
2-மேவினேன் அவன் பொன்னடி -என்று அவர்க்கு அந்தரங்கரான ஸ்ரீ மதுரகவிகளாலும் –
3-அவர் தம்முடைய பிரசாதத்தாலே பவிஷ்யாதசார்யா விக்ரகத்தை பெற்று தத் ஆராதனா முகேன ஸ்ரீ மன் நாத முநிகளாலும் –
4-ஆ முதல்வன் -என்று தத் வம்ச்யரான ஸ்ரீ ஆள வந்தாராலும் விரும்பப்பட்ட்ட ஸ்ரீ எம்பெருமானாருடைய
இவர்கள் எல்லாரும் இப்புடைகளாலே ஸ்ரீ எம்பெருமானார் உடைய வைபவத்தை முந்துற முன்னம்-
இந்நானிலத்தே வந்து நாட்டினான் -என்று வெளி இட்ட பின்பு –

அத்தைக் கண்டு -தெளிந்து இறே ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான்-தொடக்கமானவர் அவர் தம்மை பரவத் தொடங்கினது
அநந்தம் பிரதமம் ரூபம் லஷ்மணஸ் துதப்புரம் -பல பத்ரஸ்-த்ர்தீயஸ்து கலவ் ராமானுஜஸ் ஸ்மர்த்த -என்று
ஸ்ரீ நாரத புராண உக்த வசனத்தை சத்துக்கள் வாசித்துக் கொண்டு-போருவர்கள் இறே –

அர்வாஞ் சோயத் பத சரசி ஜத்வந்த்வ மாஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா யச்யாந்வயமுபகதா தேசிகா-முக்த்திமாபு
சோயம் ராமானுஜ முநிரபி -என்கிறபடி சத்துக்கள் அடங்கலும் இருந்த இடங்களிலே பிரேம பரவசராய் கொண்டு ஏத்தும்படியான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய –

நல்லார் பரவும் இராமானுசன் –
நல்லார் நவில் குருகூர் நகரான் -திரு விருத்தம் -100 என்று ஸ்ரீ நம் ஆழ்வார் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கிறார் .
அதனை ஸ்ரீ எம்பெருமானார் திறத்திலும் அனுசந்திக்கிறார் ஸ்ரீ அமுதனார் .
நல்லவர்கள் அனைவரும் எந்த தேசத்தில் இருப்பினும் -எந்தக் காலத்தில் இருப்பினும் –
அன்பிற்கு வசப்பட்டு -ஸ்ரீ எம்பெருமானாரை ஏத்துகின்றனராம்-

தற் காலத்தில் அன்றி – முற் காலத்தில் இருந்த முனிவரும் . -ஸ்ரீ ஆழ்வாரும் முறையே –
கலவ் கச்சித் பவிஷ்யதி -என்றும் –
கலி காலத்தில் ஒருவர் -எம்பெருமானார் – பிறக்கப் போகிறார் -என்றும் –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -திருவாய் மொழி -5 2-1 – – என்று
இவர் பெருமையை உணர்ந்து ஏத்திப் பேசி இருப்பது காண்க .

திரு நாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர்
ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமத்தில் நம்பிக்கை கொள்ளும் அளவில் அறிவில் தெளிவும் –
அதனில் நிலை நிற்கும் ஆற்றலும் –வாய்ந்தவர்கள் -ஸ்ரீ ஆழ்வான் போல்வார்கள் .
நசேத் ராமானுஜெத்யேஷா சதுரா சதுரஷரீ காமவஸ்த்தாம் பிரபத்யன்னே ஜன்தவோ ஹந்த மாத்ருசா -என்று –
ஸ்ரீ ராமானுஜ -என்னும் இந்தத் திறமை வாய்ந்த நான்கு அஷரங்கள் கொண்ட மந்த்ரம்
இல்லை எனில் -என்னைப் போன்ற பிராணிகள் அந்தோ எந்த நிலையை அடைந்து இருக்கும் -என்று
ஸ்ரீ ஆழ்வான் இந்த திரு நாமத்தின் சீர்மையை -நன்கு உணர்ந்து அதன் பால் மகா விசுவாசம் கொண்டு பேசி இருப்பது -காண்க

ஸ்ரீ ராம ஸ்ரீ ராம என்று அயோதியை வாசிகள் புலம்புவது போல
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஆழ்வார் என்று சொல்வார்களாம் ஸ்ரீ குருகூர் வாசிகள்-
பரவும்-
இருந்த இடத்திலே பிரேம பரவசராய் ஏத்தும் படியான ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு நாமத்தை-
கும்பிடு நட்டம் இட்டு ஆடி–
ந சேத ராமானுஜேத் ஏஷா சதுரா சதுர் அஷரீ காமவச்த்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹன்தம் ஆத்ருசா-ஸ்ரீ ஆழ்வான்

சதுரஷரியான திரு நாமங்கள் இரண்டு வகை –
அவை பிரதம பர்வமான ஸ்ரீ நாராயண நாமமும் -சரம பர்வமான ஸ்ரீ ராமானுஜ நாமமும் .ஆகும் .
அவற்றில் ஸ்ரீ நாராயணா என்னும் சதுரஷரியினின்றும்-சிறப்புடைமையின் வேறு பாட்டைக் காண்பிப்பதற்காக –
ஸ்ரீ ராமானுஜ -என்னும் சதுரஷரிக்கு -சதுரா -என்னும் அடைமொழி இடப்பட்டு இருக்கிறது .
வீட்டின்பத்தையும் சம்சார பந்தத்தையும் -தருவது ஸ்ரீ நாராயண சதுரஷரீ .
வீட்டின்பமொன்றினையே தர வல்லது ஸ்ரீ ராமானுஜ சதுரஷரி –
இதனால் இது சாதுர்யம் வாய்ந்தது -என்க –
சதுரஷரி என்றமையின் ஸ்ரீ ராமானுஜ மந்த்ரம் ஏற்றம் தோற்றுகிறது –
ஸ்ரீ நாராயண மந்த்ரம் போலே ஸ்ரீ ராமானுஜ மந்த்ரமும் பிரபன்னர்கள்-அவர்களிலும் -சரம பர்வ நிஷ்டர்கள்-
அனுசந்திக்க வேண்டிய மந்த்ரம் என்று நல்லார்கள் சொல்லா நிற்பர்கள்.
நம்புதல்-விஸ்வாசம் கொள்ளுதல் -விரும்புதலுமாம் .

திரு நாமம் நம்ப வல்லார் திறத்தே –
நசேத் ராமானுஜேத் ஏஷா சதுராசதுரஷரீ-காம வஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ர்சா-என்றும் –
ஸ்ரீ ராமானுஜ திவாகர –என்றும் –
ஸ்ரீ ராமானுஜ பதாம் போஜ-சமாசரயண சாலி ந -என்றும் –
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா -என்றும் –
தஸ்மை ராமானுஜார்யாய நமம் பரம யோகினே -என்றும் –
ஸ்ரீ ராமானுஜார்யம் நமதேத்யவாதீத் -என்றும் –
தஸ்மின் ராமானுஜார்யே -என்றும் –
ஸ்ரீ ராமானுஜ்ச்ய சரணமஸ்து-என்றும்-
ஸ்ரீ ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று சதுரஷரியான ஸ்ரீ ராமானுஜா என்கிற திரு நாமத்தினுடைய
வ்யதிரேகத்தில்தரியாமையை ஏறிட்டு கொண்டு -அத்தையே தங்களுக்கு தஞ்சமாக விஸ்வசித்து த்ரட அத்யாவச்ய யுக்தராய் இருக்கும் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ எம்பார் முதலிய முதலிகளுடைய பிரகாரத்தை-
நம்புதல் -விஸ்வசித்தல்-திறம் -பிரகாரம்

பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்கள் உடைய வசனமும் அனுஷ்டானமும் என்று இப்படி
பிரமாண-சகஸ்ரத்தாலே பிரதிபாதிக்கப்பட்ட -சிஷ்டர் உடைய ஞான அனுஷ்டான பிரகாரத்தை -என்றபடி –

மறவாதவர்கள் யவர் –
ஸ்வாத்யாயன் மாப்ரமத -ஆசார்ய பிரியம் தனம் ஆஹர்த்த்ய பிரஜாதந்தும்-அவ்யவத் சேத் ஸீ-சத்யான்ன
பிரமதி தவ்யம் தர்மான்ன பிரமதி தவ்யம் -என்கிறபடியே
விச்வாச்ய மாந்த்யத்தாலே அதை மறந்து போகை அன்றிகே அனவரதம் அனுசந்தித்து கொண்டு இருக்கிறவர்கள்-சிலர் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய திரு நாமத்தை –
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்கிறபடியே முதல் அடியில் தாம் அனுசந்தித்தும் –
ஸ்ரீ இராமானுசன் என்று சொல்லுமினோ -என்று லோகத்தார்க்கு எல்லாம் உபதேசித்தும் –
சயம் தரு கீர்த்தி இராமானுச முனி தாளினை மேல் உயர்ந்த குணத்து திருவரங்கத்து
அமுது ஓங்கும் அன்பால் இயம்பும் கலித் துறை அந்தாதி ஓத -என்கிறபடியே –
பிரபன்னர்க்களுக்கு எல்லாம் நித்ய அபிஜப்யமாம் படி கிரந்தீகரித்தும் போருகைக்கு உறுப்பான–
இவ் வதிகாரம் உண்டாகும்படி -கரும் தறையான என்னைத் திருத்தி அருளின ஸ்ரீ ஆழ்வான் போல்வர் என்றபடி –

நம்ப வல்லார் திறத்தை மதியாதவர்கள் என்ற பாடமான போது –
மதித்தல் –விடுதலாய் -அவர்கள் படியை பரிச்சேதியாதவர்கள் என்று பொருளாக கடவது –

நம்ப வல்லார் திறத்தை மறவாதவர் –
எவராயினும் சரி -அவர்களுக்கே நான் எல்லா அடிமையும் செய்வேன் என்கிறார் .
குலம் கோத்ரம் பற்றி ஆராய வேண்டியதில்லை –
ஸ்ரீ ராமானுஜ மகா மந்த்ரத்தில் மகா விஸ்வாசம் கொண்டு இருப்பவர்களுடைய பிரகாரத்தை மறவாது -என்றும்
அனுசந்திதுக் கொண்டு இருப்பவர்களே இருந்தால் போதும் .
அவர்க்கே எல்லா அடிமையும் செய்வேன் என்கிறார் .
உனக்கே நாமாட் செய்வோம் -எனபது போலே அவர்க்கே செய்வேன் என்கிறார் .
ஸ்ரீ நம் ஆழ்வார் -திருமால் திருப்பேர் வல்லாரடிக் கண்ணி சூடிய மாறன் -திரு விருத்தம் – 100- என்று தம்மை
சொல்லிக் கொள்கிறார்
இவரோ ஸ்ரீ இராமானுசன் திரு நாமம் நம்ப வல்லாரை மறவாதவர்க்கு அடிமை செய்பவன் நான் -என்று
மேலும் ஒரு படி விஞ்சி தம்மை சொல்லிக் கொள்கிறார் .எல்லா இடத்திலும்

அவர்க்கே –
அவர்களுக்கு முக மலர்த்தி உண்டு என்றும்
எனக்கு உஜ்ஜீவனம் உண்டு என்றும் இருவருக்கும் கூட பொதுவாக பண்ணுகை தவிர்ந்து –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்கிறபடி அவர்கள் முக மலர்த்தியே புருஷார்த்தம் என்று அத்யவசித்து நின்று –
அவர்க்கே -என்ற
அவதாரணத்தாலே -இவ் வர்த்தம் தோற்றுகிறது இறே –

எல்லா இடத்திலும் என்றும் எப்போதும் –
சர்வேஷூ தேச காலேஷூ சர்வாவச்தாஸ் வாவிச்யுர்மம-என்று சொல்லுகிற படியே
பிரதம நிஷ்டர் விஷயத்திலே ஈடுபட்டால் போலே –
தஸ்மாத் பக்த பக்தாச்ச பூஜ நீயா விசேஷத – மத்பக்தைஸ்சஹசம்வாச – என்றும்
தஸ்மை தேயம் ததொக்ராஹ்யம் சச பூஜ்யோயதாஹ்யஹம் -என்றும் -அவன் தான் அருளிச் செய்தான் ஆகையாலே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் -எல்லா இடத்திலும் -சர்வ தேசங்களிலும் -இடம் -தேசம் -என்றும் –
காலோப லஷிதமாய் இருந்துள்ள -சகல அவச்தைகளிலும் என்றபடி -எப்போதிலும் -சர்வ காலங்களிலும் –

சொல்லால் மனத்தினால் கருமத்தினால் –
இம் மூன்றிலும் -மனோ வாக் காயங்கள் மூன்றிலும் -சொல்லால் கருமத்தினால் – என்கிற இவற்றால்
தத் காரணங்களான வாக் காயங்களை லஷிக்கிறது –

எத் தொழும்பும் –
சர்வ பிரகார தாஸ்யமும்
தொழும்பு -அடிமை –

எப்பேர்பட்ட என்ற படி –
சோர் வின்றியே –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பிரார்த்தித்தபடியே அவிச்சின்னமாக –
சோர்வு -பிரிவு
செய்வன் -செய்யக் கடவன் –
அம் மூன்றிலும் வைத்துக் கொண்டு ஒவ் ஒன்றிலும் தானே
சர்வ கரணங்களாலும் சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணக் கடவேன் என்கிறார் –

வாசா யதீந்திர மனசா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்-கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம்
பாதாநுசிந்தன பரஸ் சத்தம் பவேயம் -என்று ஸ்ரீ ஜீயரும் பிரார்த்தித்து அருளினார் இறே –
நன்றும் திரு வுடையோம் நானிலத்தில் எவ் உயிர்க்கும் ஒன்றும் குறை இல்லை ஓதினோம் –
குன்றம் எடுத்தான் அடி சேர் ராமானுசன் தன் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி -என்னும்படியாக
ஸ்வ அத்யாவச்யத்தை வெளி இட்டு அருளினார் ஆய்த்து –

எல்லா இடத்திலும் —சோர்வு இன்றியே
ஸ்ரீ நம் ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் ….அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
ஸ்ரீ பகவத் விஷயத்தில் கூறியதை –
இவர் ஸ்ரீ இராமானுசர் அடியார் திறத்து கூறுகிறார் .

எப்போதிலும் –
சர்வ அவச்தைகளிலும் என்றபடி .
கீழ் சர்வ தேச சர்வ காலங்கள் சொல்லப்படவே இங்கு சர்வ அவஸ்தை -எல்லா நிலைகள்-சொல்லப்படுகின்றன –
எந்த நிலையில் இருக்கும் போதும் -என்றது ஆயிற்று –
சொல் என்பதும் கருமம் என்பதும் அவற்றுக்கு காரணங்களான வாக்கினையும் உடலினையும் ஆகு பெயராகக் குறிக்கின்றன –

சோர்வின்றி செய்வன் –
சோர்வு -பிரிவு
அடிமை செய்வதில் பிரிதல் ஆவது -அடிமை இன்பத்தை தன்னது என தான் வேறு படுத்தி தனித்து அனுபவித்தல்
அங்கன் இன்றித் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்றபடி
கொள்ளுகிறவர் இன்பம் தவிர தான் தன் இன்பத்தை கருதாது அடிமை செய்தல் சோர்வின்றி செய்வதாம் –

ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் இயல் சாத்து பாசுரம்-
நன்றும் திரு வுடையோம் நானிலத்தில் எவ் உயிர்க்கும்-ஒன்றும் குறை இல்லை ஓதினோம் –
குன்றம்-எடுத்தான் அடி சேர்- ராமானுசன் தாள்-பிடித்தார் பிடித்தாரைப் பற்றி-

—————–

செய்வன் சோர்வின்றியே-

இராமானுசன் என்னைச் சோர்விலனே -14-
சோராத காதல் பெரும் சுழிப்பால்-15-
சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால் சார்வின்றி நின்ற வெனக்கு–81-

நல்லார் பரவும் இராமானுசன்-திரு நாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள்

இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர் -9-
மேகத்தை மேவும் நல்லோர் -26-
மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் -37-
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பி -44-
நல் தவர் போற்றும் இராமானுசனை -57-
இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என்நாவியும் சிந்தையுமே -68-
நல் வேதியர்கள் தோளும் திருப்பாதம் இராமானுசன் -105-
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் -106-

முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே –திரு விருத்தம்-39-

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – – – 84-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100- –

அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 8-

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தனைக்
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?–4-5-7-

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே-1-2-8-

கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -3-5-1-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-

வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து -நான்முகன் திருவந்தாதி -11

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான் தனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1–

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –79-பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமானுசன்- இத்யாதி —

May 27, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் யதார்த்த ஜ்ஞானத்தை கொடுக்கையாலே அயதார்த்தங்கள்
தமக்கு பொருந்தாத படியாயிற்று என்று ஸ்வ நிஷ்டையை யருளிச் செய்தார் கீழ் –
உஜ்ஜீவன ருசியும் உண்டாய் இருக்க -அருமந்த ஜ்ஞானத்தை இழந்து –
இவ்விஷயத்துக்கு அசலாய் போருகிற லௌகிகர் படியை அனுசந்தித்து–இன்னாதாகிறார் இதில் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில்
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய மனோ தோஷத்தைப் போக்கி –அது தன்னைத் திருத்தி –சம்யஜ்ஞ்ஞானத்தை பிறப்பித்து
ஸ்ரீயபதிக்கு சேஷம் ஆக்கின பின்பு -என்னுடைய மனசு வேறு ஒன்றைத் தேடித் போமோ-
என்று தம்முடைய அத்யாவச்ய தார்ட்யத்தை அருளிச் செய்து –
இதிலே –
அந்தப்படியே சம்சாரி சேதனருக்கும்-அத்யாவசிக்க ப்ராப்தமாய் இருக்க -அது செய்யாதே –
ஆத்மாவினுடைய தேக பரிமாண த்வம் -ஷணிகத்வம் தொடக்கமான வேதார்த்த விருத்தார்ந்தகளை வாய் வந்த படி
பிரலாபிக்கிற பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய மத-ப்ரேமேயத்தை வாசனையோடு ஒட்டி விட்ட பின்பு –
அந்த மறைக் குறும்பாலே வ்யாப்தமான பூ லோகத்திலே-சத்யமான அர்த்தத்தை –
ஸ்ரீ எம்பெருமானார் இருக்கச் செய்தேயும்
சஜாதீய புத்தியாலே அவரை விட்டு அகன்று வேறு ஒரு தேவதை நம்மை ரஷிக்க-கடவது உண்டோ என்னும் உள் வெதுப்பாலே
சுஷ்கித்துப் போய் வ்யர்த்தமே சம்சயாத்மாக்களாய் நசித்துப்-போகிறவர்கள் படியைக் கண்டு இன்னாதாகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் உண்மை யரிவை உபதேசித்தமையால் எனக்குப் பொய்ப் பொருள்-பொருந்தாத நிலை ஏற்பட்டதென்று –
தன் நிலை கூறினார் கீழே-
உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து உஜ்ஜீவிப்பிக்க
காத்திருக்கும் ஸ்ரீ எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ் வருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் -இப்பாசுரத்தில்

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

பத உரை .

பொய்யை -உண்மை கலப்பு இல்லாத பொய்யான விஷயத்தை
சுரக்கும் -மேன்மேலும் எடுத்துக் கூறும்
பொருளை -பிற மதத்து அர்த்தத்தை
துரந்து -நிலை நிற்க ஒட்டாமல் ஒட்டி
இந்த பூதலத்தே -இந்தப் பூதலத்தே
மெய்யை -பொய் கலப்பில்லாத சத்யமான விஷயத்தை
புரக்கும் -காத்து அருளும்
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
நிற்க -தம்மிடம் வருவரை எதிர்பார்த்து காத்து நிற்க
உய்ய -உஜ்ஜீவிக்கும்படி
நம்மைக் கொள்ள வல்ல -நம்மை ஏற்றுக் கொள்ள திறமை வாய்ந்த
வேறு தெய்வம்-மற்றொரு தெய்வம்
இங்கு -இங்கே
யாது என்றே -எது என்றே தேடி அலைந்து
உலர்ந்து -உடல் வாடி
நல் அறிவு -நல்ல மெய் உணர்வை
இழந்து -பெறத் தக்க நிலையில் இருந்தும் பெறாமையால் நஷ்டம் அடைந்து
உய்யும் வழி இதுவே என்று உணர்ந்திடினும்
வையத்து உள்ளோர் -பூமியில் உள்ளவர்கள்
அவமே -வீணாக
ஐயப்படா நிற்பர் -சந்தேகப் பட்டுக் கொண்டு இருப்பார்கள்

வியாக்யானம் –

ஆத்மாவினுடைய தேக பரிமாணத்வ ஷணிக ஜ்ஞானரூபத்வ ஜடத்வாதிகள் என்ன –
ப்ரஹ்மத்தினுடைய மாயா சபளிதத்வ உபாதி மிஸ்ரத்வ விகாரித்வாதிகள் என்ன –
சுத்த அசத்யமாய் இருப்பதொன்றை மேன்மேலும் உபபாதியா நிற்கும் பாஹ்ய குத்ருஷ்டி மதத்தை ஒட்டி
இந்த பூமியிலே யதார்த்தத்தை பரிபாலித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானார் –
ஆரொருவர் வருவார் என்று வழி பார்த்து நிற்கச் செய்தே –
சஜாதீய புத்தியாலே -இவரை உபேஷித்து-
வேறு நம்மை உஜ்ஜீவிப்பிக்க வல்ல தேவதை இங்கே ஏதென்று தேடி -மன -க்லேசத்தாலே உடம்பு உலர்ந்து –
இவ்விஷயமே -நமக்கு உத்தேச்யம் என்று பற்றி உஜ்ஜீவித்துப் போருகைக்கு உறுப்பான யதார்த்த ஜ்ஞானத்தை லபிக்க பெறாதே –
உங்களுக்கு உஜ்ஜீவனகரம் இவ் விஷயம் என்றாலும் பூமியில் உள்ளார் வ்யர்த்தமே சம்சயப்படா நின்றார்கள்
ஐயோ இவர்கள் நிலை இருந்தபடி -என் -என்று கருத்து –

பொய்யைச் சுரக்கும் -இத்யாதிக்கு
உத்பத்தி வினாசாதி யோகத்தாலே அசத்திய சப்த வாச்யமான தேஹத்தை ஜன்ம பரம்பரையாலே
மேன்மேல் உண்டாக்கும் தேஹத்மா அபிமான ஸ்வா தந்த்ரர்யாத் யர்தங்களை ஸ்வ உபதேசத்தாலே யோட்டி விட்டு –
இந்த பூதலத்திலே சதைக ரூபதயா சத்யா சப்த வாச்யமான ஆத்மாவை
ரஷித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானார் நிற்க -என்று பொருள் ஆகவுமாம் .

துரத்தல்-ஒட்டுதல் /புரத்தல்-காத்தல் /ஐயம் -சம்சயம்
தெய்வமிங்கியாது-என்ற இடத்தில் இகரமும் குற்றியலிகரம் ஆகையாலே
உமக்கியான் 49- –என்கிற இடத்தில் சொன்ன ந்யாயத்தாலே கழித்து
பூர்வாபர பாதங்களுக்கு ஒக்கப்-பதினாறு எழுத்தாக எண்ணக் கடவது .

ஸ்ரீ வேத வியாசர் திரு உள்ளம் –விசிஷ்டாத்வைதம் -தொன்மை -ஸ்ரீ புராண ரத்னம் -ஸ்ரீ பராசரர் -இடம் வந்ததே —
வேதாந்தம் வீறு கொண்டு எழுந்தது ஸ்ரீ ஸ்வாமியாலே –சொத்துக்களை ஸ்ரீ ஸ்வாமியிடம் சேர்த்து அருள –
செய்த உபகார பரம்பரைகள் -ஸ்ரீ பெரிய பெருமாள் பொறுப்பை ஸ்ரீ உடையவர் இடம் விட்டு கிடக்க –
ஸ்ரீ இராமா னுசன் நிற்க –திருப்பாவை சாத்து முறை கூட நித்யம் ஸ்ரீ உடையவர் சந்நிதியில் இருக்க –
லோகத்தார் அலர்ந்து ஐயப் படா நிற்கிறார்கள் —

அவமே -வீணாக –பொய்யைச் சுரக்கும் -பொருள் –மலை முகடு -மூக்கு நுனியை பெரிசாக்கி
பார்க்கும் பார்வையில் தப்பு -வஸ்து இல்லாதது இல்லை -பார்த்த முறை தப்பு –
சாஸ்திரத்தை விளக்கி –அசன்னேவ ச பவதி –தேக பரிமாணம் ஆத்மா ஒருமதம் – பர ப்ரஹ்மமத்துக்கு அஞ்ஞானம் -மாயாவாதம் –

ஏழு வித அனுபவத்தி –உபாதி பட்டு ஆத்மாக்களாக பிரதிபலிக்கும் -பிம்மம் என்பர் -விகாரத்வாதிகள்
வேதார்த்த பரமான பொய்யைச் சுரக்கும் -சித்துக்கு அசித்தின் அபாவம் வராது -அச்சித்தின் பாவம் சித்திக்கு வாராது –
ஸ்வபாவம் தேகத்துக்கு வேறு ஆத்மாவுக்கு வேறு -தேகத்தை நன்பொருள் என்னும் பொய்யைப் போக்கினார் என்றுமாம் –

மெய் சரீரம் என்று நினைக்கும் பொய் என்றவாறு –பொய் நின்ற ஞானம் மித்யை இல்லை -மாறிக் கொண்டே -இருக்குமே –
அஹங்காரம் -நான் அல்லாததை நான் என்கிறது -ஜாபாலி -வாதம் –
மூளை செயல்பாடு -ஞானம் -மனஸ் -தொட்டுப் பார்க்க முடியாதே –செயல்பாடு மறுத்த சரீரத்தில் இல்லையே –

சரீரம் விட வேறே -அதுக்கு பெயர் ஆத்மா அப்புறம் வைக்கலாம் -தேக விலக்ஷணம் சைதன்யம் –
நான் அறிவு -இல்லை –சொல்லாமல் -நான் அறிவுடையவன் –என்கிறோமே –
எனக்கு கை வலி–ஸூக துக்கம் அனுபவிப்பவன் நான் -சரீரம் இருப்பதால் தான் வலி –ஷேத்ரஞ்ஞன் -க்ஷேத்ரம் –

ப்ரஹ்மம் மாயை மறைக்கிறது ஓவ்வாதே-சாஸ்திர விருத்தம் ஆகுமே —அவிகாராய -தத்வம் அன்றோ காட்டி அருளி
மெய்யை நிர்வகித்து –த்ரிவித பரிச்சேத ரஹிதன் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –
திருமேனி ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –உபய விபூதி நாதன் -ஸ்ரீ பூ நீளா தேவி நாயகன் –
பஹுஸ்யாம் –சங்கல்ப ஞானத்தால் அருளால் ஸ்ருஷ்டித்து -அந்தரப்பிரவேசித்து – -சத் சம்ப்ரதாயம் –
அனைத்து -ஜீவ ராசிகள் நன்மை வேத சித்தம் -வியாபித்து –ஸமஸ்த திவ்ய தேச நிலையன் -சீரார் திருவேங்கடமே இத்யாதி
யாதாத்ம்ய பர ஜீவ ஸ்வரூபம் காட்டி அருளி -பொய் -சரீரம் — மெய் ஆத்மா -இவற்றை பற்றியவை என்றுமாம் –

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து –
பொய் என்று அசத்யம் –
சுரக்கும் பொருளை -இத்தையே மேன்மேலும் உபபாதியா நிற்கிற- பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய மத பிரக்ரியையை –
அசந்னேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத் -என்கிறபடியே
அஞ்ஞான அந்யதாஞான விபரீத ஞான விஷயங்களை -என்றபடி -அவை யாவன –

ஆத்மாவினுடைய தேக பரிமாண த்வ -ஷணிகத்வ -விஞ்ஞான ரூபத்வ ஜடத்வாதிகளும் –
ப்ரஹ்மத்தின் உடைய மாயாசபளிதத்வ உபாதி மிஸ்ரத்வ விகாராதிவாதிகளும் –
ஜகத்தினுடைய மித்யாத்வ அவித்யா கார்யத்வாதிகளும்
இப்படி அசத்யங்களாய் வேத விருந்தங்களான அர்த்தங்களை என்றபடி –

அன்றிக்கே
பொய்யைச் சுரக்கும் பொருளை
நாசதோ வித்யா தேபாவ -என்கிறபடி –
உத்பத்தி விநாசாதி யோகத்தாலே-அசத் சப்த வாச்யமான தேகத்தை
ஜன்ம பரம்பரையாலே மேன்மேலும் உண்டாக்கும் தேகாத்ம அபிமானம் –
ஸ்வ ஸ்வாதந்த்ர்யம்-தொடக்கமான அர்த்தங்களை -என்றுமாம்

பொருளைத் துரந்து –
இப்படி பட்ட அசத்தியமான அர்த்தங்களை-திரு நாராயண புரத்திலும் – சரஸ்வதீ பண்டாரத்திலும்
கோவாச ஷூரி தஞ்சயே தபிபு ரச்சோடோ பதர்க்கச் சடா-சஸ்த்ரா ஸஸ் த்ரிவிகார சம்ப்ரதரணா ஸ்வா தேஷு ந -என்கிறபடியே
கரை கட்டா காவேரி போலே நடையற பெருகி வருகிற சத் அர்த்தங்களாலே –
பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு கண் விழிக்க ஒண்ணாதபடி -அவர்களோடு பஹூ முகமாக பிரசங்கித்து –

சரீரமே ஆத்மா வாகில் மிர்த சரீரத்திலும் சைதன்யம் உண்டாக வேண்டி வரும் -என்றும்

ஆத்மா ஷணிகம் ஆனால் –
பூர்வ ஷணது பூதங்களான சுக துக்கங்களுக்கு உத்தர ஷணத்தில் பிரதிசந்தானம் வாராமல் போக வேண்டி வரும் என்றும் –

ஜ்ஞானமே ஆத்மா வாகில் -நான் அறிவேன் என்று இருக்க வேண்டும் ஒழிய நான் அறிந்தேன் -என்று ஞாத்ர்த்வேன
பிரதி சந்தானம் கூடாது என்றும் –

ஆத்மா ஜடம் என்றால் -எதத்யோ வேத்திதம் ப்ராகூ ஷேத்ரஜ்ஞ இதி தத்வித -என்கிறபடியே –
பாதமே வேத நா சிரசிமேசுகம் -என்றும்

விஜ்ஞா நகந -என்று ஜ்ஞான ஸ்வரூபமாக சொல்ல கூடாது என்றும் –

ப்ரஹ்மம் மாயாசபளிதமானாலும் -நிஷ்களம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரந்ஜ்னம் -என்கிறபடி
நிர்மல-ஆனந்த ஏக ஸ்வரூபம் ஆகையாலே -நான் ஜீவன் என்றும் ஈஸ்வரன் என்றும் -பிரமிக்கக் கூடாது என்றும் –
அப்படி-பிரமித்தால் –ஏகோ தேவஸ் சர்வ பூதேஷு கூடி -என்கிறபடியே
அத்விதீயனான அவனுக்கு ப்ரம நிவர்தகர் இல்லாமையாலே சர்வதா பிரமித்தே போக வேண்டி வரும் என்றும் –

ப்ரஹ்மம் விகாரி என்றால் -நிர்விகாரி என்கிற-ஸ்ருதியோடு விரோதம் பிரசங்கிக்கும் என்றும் –

அவர்களைக் குறித்து பஹூ முகங்களாக பிரதி கூல அர்த்தங்களை-சொல்லி -அவர்களை சிஷித்து பராஜிதராக்கி –
இந்த மகா பிருத்வியில் இருக்க கூடாமல் கடலில் புகும்படி-ஒட்டி விட்ட –
துரத்தல் –ஒட்டுதல் –

இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கும் –
யதா ஜ்ஞ்ஞானத்தை இந்த பூதலத்தில் பரிபாலித்து அருளும் –
சுஷ்க தர்க்க வாதிகளை ஒட்டி விட்டு –

பிரமாணம் வேதாஸ் ஸ-என்றும்
ஆதவ் வேதாம் பிரமாணம் – என்றும் -சொல்லுகிற படியே
சகல பிரமாணமான வேதத்தில் வைத்துக் கொண்டு –
சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மம் – என்கையாலே சர்வேஸ்வரன் -ஸ்வரூப விகாரத்வ ஜடத்வ த்ரிவித பரிச்சேத ரஹீதன் என்றும்

கப்யாசம்புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்றும்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்கையாலே –சுபாஸ்ர்ய திவ்ய ரூபன் என்றும் –

பராஸ்ய சக்திர் விவைதைவஸ் ருயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல கிரியஸா -என்கையாலே சமஸ்த கல்யாண குணாத்மகன் என்றும் –

பாதோச்ய விஸ்வ பூதானி த்ரிபாதஸ் யாம்ர்தம் திவி -என்கையாலே உபய விபூதி நாதன் -என்றும் –

ஹரீஷ் சதே லஷ்மீஸ் ஸ பத்ன்யவ் -என்கையாலே திவ்ய மகிஷி வல்லபன் என்றும்

யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும் –
யத்ர ருஷய பிரதமஜாயே புராணா -என்றும் –
ஏதத் சாமா காயான் நாஸ்தே -என்கையாலே ஸூரி ப்ரந்த பரிசார்யமாணன் என்றும்

ததை ஷத பஹூச்யாம் பிரஜா யேயேதி -என்றும்
தத் ஸ்ரஷ்ட்வா ததேவ அனுப்ராவிசத் தது அனுப்ரவச்ய சத் சத்யஸ்-சா பவத் -என்கையாலே
சூஷ்மசித் அசித் விசிஷ்டனாய் கொண்டு ஜகத் காரண பூதன் என்றும் –

ஏஷ சர்வ பூதாந்தராத்ம அபகதபாப்மா திவ்யா தேவ ஏகோ நாராயணா -என்கையாலே சர்வ அந்தர்யாமி என்றும் –

அம்பச்ய பாரே புவநச்ய மத்யே நாகச்ய ப்ர்ஷ்டே மகதோ மகீயான் -என்கையாலே வ்யூஹ ரூபேண வஸ்த்திதன் -என்றும் –

ப்ரஹ்மன்யோ தேவகி புத்ரோ ப்ரஹ்மன்யோ மது ஸூதனம் -என்றும்-
அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்கையாலே அநந்த அவதார கந்தன் என்றும் –

சயச்ய்யாயம் புருஷே யாச்சா சாவாதித்யே என்றும் –
ய யஷோந்தராதித்யே ஹிரண்மயீம் புருஷ -என்கையாலே சமஸ்த திவ்ய தேச நிலையன் என்றும் –

நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு பிரசோதயாத் -என்கையாலே
விஷ்ணு நாராயண வாசுதேவன் சப்த வாச்யன் என்றும் –

பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்கையாலே சர்வ ஸ்மாத் பரன் என்றும் –

ஏஷ அணுராத்மா புருஷம் உபைதி திவ்ய-என்றும்-

(ஆக -12-மெய்ப்பொருள்கள் அருளி -ஆத்மாவுக்கு -6-/ பிரக்ருதிக்கு -3-அருளிச் செய்கிறார் –
தத்வ த்ரயம் -அர்த்த பஞ்சகம் -பரத்வாதி பஞ்சகம் -அனைத்தையும் ப்ரமாணங்களால் காட்டி அருளி )

ஆராக்ர மாத்ரோ ஹ்யவரேபிதர்ஷ்டா-என்கையாலே பிரத்யகாத்மா அணுவாய் இருப்பான் என்றும் –

நித்யானாம் சேதனானாம் -என்கையாலே நித்யனாய் இருப்பான் என்றும் –

போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா –என்கையாலே போக்தா என்றும் –

ப்ர்தகாத்மானாம் ப்ரேரிரதம் சமத்வ -என்கையாலே ஸ்ரீ சர்வேச்வரனில் வேறுபட்டு இருப்பான் என்றும் –

தயோரன்யம் பிப்பலம் ஸ்வாத்வத்தி – என்கையாலே கர்ம பல போக்தா என்றும் –

ப்ரஹ்மணே த்வா மகச ஒமித்யாத்மானம் புஞ்ஜீத -என்கையாலே பகவத் அனந்யார்க்க சேஷ பூதன் என்றும் –

தமேவம் வித்வானம்ர்த்த இஹ பவதி -என்கையாலே தாதர்ச ஜ்ஞானத்தை கொண்டு
பரம புருஷார்த்த லஷண மோஷத்தை-பெறக் கடவன் என்றும்

சமானம் வ்ர்ஷம் பரிஷஸ்வ ஜாதே -என்கையாலே அசித் ஈஸ்வரனுக்கு கிரீடா பரிகரமாய்- இருக்கும் என்றும் –

ஆகாசாத் வாயு வாயு ரோர் அக்னி அக்னேராப அத்ப்ய ப்ர்த்வி-என்கையாலே சதுர்விம்சதி தத்வாத்கமாய் பரிணமிக்கும் என்றும் –

ம்ர்த்தி கேத்ய வசத்யம் -என்கையாலே துச்ச வ்யாவர்த்தமாய் இருக்கும் என்றும் –

இப்படி தத்வ த்ரயத்தினுடையவும் ஸ்வரூப ஸ்வ பாவாதிகளை -இந்த அஞ்ஞான வர்த்தகமான பூ லோகத்திலே
யதாவாக உபதேசித்து உபகரித்து -என்று –
புரத்தல் -காத்தல் –

அன்றிக்கே இரண்டாம் யோஜனைக்கு அனுகுணமாக
பொருளைத் துரத்தி இந்த பூதலத்தே மெய்யை சுரக்கும் -என்றதுக்கு
ஸ்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை ஸ்வ உபதேசத்தாலே ஒட்டி விட்டு இந்த பூதலத்தில்
சதைக ரூபனாய் சத்ய சப்த வாச்யனாய் ஆத்மாவை ரஷித்து அருளினார்-என்று பொருளாக கடவது

இராமானுசன் நிற்க
ஸ்ரீ எம்பெருமானார் -வேத மார்க்க பிரதிஷ்டாப நாச்சார்யராய் –உபய வேதாந்தாசார்யராய் –
திருத்துக்கைக்கு யாரேனும் ஆளுண்டோ என்று எதிர் சூழல் புக்கு வழி பார்த்து-நிற்கச் செய்தே –

பொய்யை –நிற்க –
வேதப் பிரமாணத்தை ஏற்காத புற மதங்களும் -அதனை ஏற்கும் குத்ருஷ்டிகளும் பொய்யான விஷயங்களையே
புகட்டி மேலும் மேலும் அவைகளையே விளக்கி வலியுறுத்துவனாய் உள்ளன
இம்மதங்கள் சுரக்கும் பொய்களில் ஒன்றுக்கு ஓன்று வேற்றுமை காணப் படினும் பொய்யான விஷயத்தை சுரத்தல்
என்னும் அம்சத்தில் சிறிதும் வேற்றுமை இல்லை .

புற மதமாகிய ஜைன மதம் ஆத்மா தத்துவம் தேகத்தின் அளவினது என்னும் பொய்யை சுரக்கின்றது .
பௌத்த மதம் ஆத்மா தத்தவத்தின் ஷணிக விஞ்ஞானம் எண்ணம் பொய்யை சுரக்கிறது .
குத்ருஷ்டி மாதமாகிற ந்யாய மதம் ஆன்ம தத்வம் விழ அது அறிவுடைமை யதே யாயினும்
வடிவம் அறிவன்று என்னும் பொய்யை சுரக்கிறது .
மாயாசபளி தமான ப்ரஹ்மம் அவித்யையினால் மறைக்கப் பட்டு சம்சரிக்கிறது என்னும்
பொய்யை சுரக்கிறது -மாயி -சங்கர -மதம் .
சத்யமான உபாதியினால் ப்ரஹ்மம் கர்மத்துக்கு வசப்படுகிறது என்னும் பொய்யை சுரக்கிறது-பாஸ்கர மதம்
ப்ரஹ்மம் அசேதனப் பொருளோடும் -சேதனப் பொருளோடும் இயல்பான பேதமும் அ பேதமும் கொண்டதாலின்-
ப்ரஹ்மமே ஜீவன் அசேதனப் பொருள்களின் மாறுபடும் இயல்பும் -பரிணாம ஸ்வபாவமும் –
சேதனர்களின் அபுருஷார்த்த அந்வயமும்-துக்கப் படும் இயல்பும் -ப்ரஹ்மத்துக்கு இவர்கள் பஷத்தில் தவிர்க்க ஒண்ணாதவை
என்னும் பொய்யைச் சுரக்கிறது யாதவ பிரகாச மதம் –

இங்கனம் பொய்யைச் சுரக்கும் மதங்களின் அர்த்தங்களை நிலை நிற்க ஒட்டாமல் துரத்துகிறார் ஸ்ரீ எம்பெருமானார் .
துரத்தல் -ஒட்டுதல்
துரந்து-பிறவினையின் கண் வந்த தன்வினை -துரத்தி -என்றபடி –
வெளிச்சம் உள்ள இடத்தில் இருள் இருப்பு கொள்ள மாட்டாது ஓடுகின்றன -என்க.

பொய்ப் பொருள்களை பரவுவதற்கு பாங்கான இந்த பூதலத்திலே -மெய்ப் பொருளைப் பரப்புவதின் மூலம் –
அவற்றைத் துரத்தி அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் –

1-ஜீவாத்மா ஸ்வரூபம் அணு ஸ்வரூபமானது .
2-அது நித்தியமாய் -ஞான ஸ்வரூபமாய் உள்ளது –
3-ஞானத்தை தன் குணமாகக் கொண்டதும் ஆதலின் -அது அறிவு வடிவில்லாத பொருளாகாது .
4-அது திருமகள் கேள்வனுக்கு சேஷப்பட்டது –
5-ப்ரஹ்மமும் ஈஸ்வரனும் ஒன்றே-ப்ரஹ்மம் மாயா சபளிதமாய் -ஈச்வரனாவதும் -அவித்யையினால்
ப்ரஹ்மம் மறைக்கப் படுவதும் பொருந்துவன அல்ல –
6-ஜீவனும் ப்ரஹ்மமும் என்றும் வேறு பட்ட பொருள்களே .
7-ப்ரஹ்மம் சேஷி -ஜீவன் சேஷ பூதன்
8-எனவே சத்யோபாதியினால் ஜீவ ப்ரஹ்ம பேதம் ஏற்படுவதாக கூறுவதும் ஏற்புடைதாகாது-
9-நிர் விகாரமாக -மாறுபாடு அற்றதாக -ஓதப்படும் ப்ரஹ்மத்துக்கு -அசேதனப் பொருள்களின் மாருபாடுமியல்பும் –
10-சேதனர்களின் துக்கப்படும் நிலையும்-நினைத்தற்கும் ஒண்ணாத மகா பாபங்களாகும் என்று-கருதுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் .

இங்கனம் வேத நூல் ஒத்கின்ற உண்மைப் பொருள்களை பாதுகாப்பதன் மூலம்
பொய்யைச் சுரக்கும் பிற மதப் பொருள்களை கண்டித்து –
தாம் பாது காத்த மெய் அறிவை உய்வதற்காக பெற விரும்பி –தன் பால் வருவார் யாரேனும் உண்டோ
என்று வழியிலே விழி வைத்து எதிர்பார்த்து ஸ்ரீ எம்பெருமானார் எழுந்து அருளி இருக்க-
உய்யும் வழி உணராது உலகத்தார் உழல்கின்றனரே என்று வருந்துகிறார் .

இனி -பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து -என்பதற்கு
பொய்யான தேஹத்தை பிறவிகள் தோறும் மேன்மேலும் உண்டாக்கிக் கொண்டு இருக்கும் பொருளான
தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வ த்ந்த்ரிய அபிமானத்தையும் ஒட்டி என்றும் –
மெய்யைப் புரக்கும் -என்பதற்கு மெய்யான ஆத்ம ஸ்வரூபத்தை காப்பாற்றும் என்றும் உரை கூறலுமாம் .

பொய் -என்பது பிறப்பு இறப்புகள் வாய்ந்தது -என்றுமொருபடி பட்டு இராது மாறுபடும் இயல்பினதாக தேஹத்தை சொல்லுகிறது
இன்று தேஹம் என்னும் பேர் வாய்ந்து -பிறந்தது ஒரு படிப்-பட்டு இராமல் மாறுபட்டுக் கொண்டே வந்து
இறுதியில் அழிந்து சாம்பலாகி விடுகிறது அன்றோ – ஆதலின் அது பொய் ஆயிற்று –
அத்தகைய தேஹத்தை பிறவித் தொடரிலே மேன்மேலும் சுரப்பான
தேகாத்ம அபிமானமும் ஸ்வ தந்த்ர்யா அபிமானமும் ஆகும் .
அநாத்மன் யாத்மா புத்திர்யா அச்வே ஸ்வ மிதியா மதி –
அவித்யா தரு சம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்த்திதம் –என்று
ஆத்மா அல்லாத தேகத்தில் ஆத்மா என்னும் எண்ணமும்
தனக்கு உரிய சொத்து அல்லாத ஆத்மா தத்துவத்தில் தனக்கு உரிய சொத்து என்னும்
ஸ்வா தந்த்ரிய எண்ணமும் –
அவித்யை-சம்சாரம் -என்னும் மரம் உண்டாவதற்கு விதையாம்-
இந்த விதை கீழ்க் கூறியவாறு இரு பிரிவாக உள்ளது .-எனபது காண்க –

இங்கனம் உடல் எடுத்து சம்ஸ்ரிப்பதற்க்கு காரணமான -தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வா தந்த்ர்யா அபிமானத்தையும் –
அந்ய சேஷத்வ அபிமானத்தையும் -ஒட்டி என்றபடி
இவ் அபிமானங்களை தம் உபதேசத்தால் ஒட்டி இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கிறார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க .

மெய் என்பது -பிறப்பு இறப்புகள் இன்றி -என்றும் ஒருபடி பட்டு -மாறுபாடு அற்று -விளங்கும் ஆத்ம தத்துவத்தை –
மெய் போலே என்றும் குலையாமல் இருத்தலின் -ஆத்ம ஸ்வரூபத்திற்கு மெய் எனபதுஆகு பெயர் ஆயிற்று –
மாறுபடும் அசேதன பொருள்களை பொய் -அந்ருதம் -என்றும் –
மாறு படாத சேதனப் பொருள்களை மெய் -சத்யம் -என்றும் உபநிடதம் -ஓதி இருப்பதும் இங்கு உணரத் தக்கது .

தம் உபதேசத்தால் தொடர்ந்து உடல் எடுத்து சம்சரிப்பதற்க்கு காரணமாக தேகாத்ம அபிமானாதிகளை ஒழித்து
இவ் உலகில் ஆத்ம ரஷணம் பண்ண ஸ்ரீ எம்பெருமானார் காத்து நிற்கும் போது –
இவ் வையத்தில் உள்ளோர் உய்யும் வழி உணராது -உழல்கின்றனரே -என்று வருந்துகிறார் .

வேறு நம்மை உய்யக் கொள்ள தெய்வம்-
அநாதி பாப வாசனா தூஷித சேஷி ஷேமுஷீகராய்
அவர் பக்கல் சஜாதீய புத்தியைப் பண்ணி -அவர் உபதேசத்துக்கு இசையாதே –
எங்களை உஜ்ஜீவிப்பைக்கு சமர்தமான-வேறு ஒரு தெய்வம் –

இங்கி யாதென்று உலர்ந்து –
இந்த பூமியிலே ஏதோ வென்று தேடித் தேடித் தடுமாறி -அப்படி-பட்ட தெய்வத்தை லபியாதே –
மிகவும் உடம்பு உலர்ந்து கிலேசித்து –

அவமே ஐயப்படா நிற்பர் –
இவ் விஷயம் எனக்கு-உத்தேச்யம் என்று பற்றி உஜ்ஜீவித்து போகைக்கு உறுப்பான யதா ஜ்ஞானத்தை லபிக்க பெறாதே
உங்களுக்கு உஜ்ஜீவனகரம் இல்லை என்று சொன்னாலும் வ்யர்தமே –
இனி நமக்கு ரஷகர் ஆவார் ஒருவரும் இல்லை என்று சம்சயப்படா நின்றார்கள் –
ஐயம் –சம்சயம் –

வையத்து உள்ளார் நல்லறிவு இழந்தே
பூ லோகத்தில்-இருக்கிற சேதனர்கள் நல்ல பரி சுத்த ஜ்ஞானத்தை இழந்து போனார்களே –
அத்தால் நம்முடையுபதேசமும் வெறிதே தலைக் கட்டிற்று –
சம்சயாத்மா விநச்யதி -என்று இவர்கள் நசித்துப் போனார்களே ஐயோ -என்று சர்வ பூத ஸூஹ்ருதர்
ஆகையாலே அவர்களுக்காக ஸ்ரீ அமுதனார் அவசாதப் படுகிறார் காணும் –

வேறு நம்மை –நல்லறி விழந்தே
ஸ்ரீ இராமானுசன் உய்யக் கொள்ள வல்ல தெய்வமாக காத்து இருக்க -வையத்து உள்ளோர் வேறு தெய்வத்தை தேடுவது –
அவரது மகிமையை அறியாது தம்மிலே அவரும் ஒருவர் தானே -என்னும் எண்ணத்தாலே –
அவரை உபஷித்தமை யினாலேயே என்க
தேடும் உய்யக் கொள்ள வல்லதான தெய்வம் வேறின்மையின் கிடைக்கப் பெறாமையின் –
மனக்கிலேசம் மிக்கு உடம்பு உலர்ந்தது -என்க –

தாம் உய்யும் படியாக தம்மைக் கொள்ள வல்ல தெய்வத்தை தேடுவதால் -தமது உஜ்ஜீவனத்தில்
வையத்தில் உள்ளோருக்கு நாட்டம் இருப்பது புலனாகிறது
ருசி இருந்தும் இழக்கின்றனரே -என்று வருந்துகிறார் .

நல் அறிவை -உண்மை ஞானத்தை -தருமவர் காத்து நிற்கிறார் .-
உய்யும் வேட்கைக்கும் குறை இல்லை
நல் அறிவைத் தரும் ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி -நல் அறிவைப் பெற்று -உய்வுறாமல் இழக்கின்றனரே என்று இரங்குகிறார்
அவமே ஐயப்படா நிற்பார் –
தாமாக அறிந்து பற்றுகின்றிலர் ஆயினும் -ஸ்ரீ எம்பெருமானாரை பற்றுவதாலேயே நீங்கள் உய்வுற முடியும் –
என்று அறிவுறுத்தினால் -அதனையும் நம்பகில்லாது –ஐயப்படா நிற்பர்–
தமக்கும் தெரியாது
சொன்னாலும் புரியாது .
இவ் வையத்தில் உள்ளோர் நிலை இருந்த படி ஏன் ! என்கிறார் .

ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -திருவாய்மொழி -4 10-1 – – என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் .
மெய்யைப் புரக்கும் ஸ்ரீ இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்று
உழலுகிறீரே என்கிறார் ஸ்ரீ அமுதனார் .
உடல் கொடுக்கும் -படைக்கும் -அவனே தெய்வம் என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் .
நல் அறிவு கொடுக்கும் ஆத்ம ரஷணம் பண்ணுமவனே தெய்வம் என்கிறார் ஸ்ரீ அமுதனார்
தெய்வமிங்கியாது-என்னும் இடத்தில் இகரம் குற்றியலிகரம் ஆகையால் – 43- பாசுரத்தில் போலே அலகிடாது
கழிக்கவே முன் பின் அடிகளில் போலே பதினாறு எழுத்துக்கள் அமைகின்றன -என்று அறிக –

—————-

மறஞ்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
அறஞ்சுவர் ஆகி நின்ற வரங்க னார்க்கு ஆட்செய்யாதே
புறஞ்சுவர் கோலம் செய்து புட் கவ்வக் கிடக்கின்றீரே–திரு மாலை-6-

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7-

வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே—8-

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–9-

கெருட வாகனுனும் நிற்க சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே -10-

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–-ஸ்ரீ திருவாய் மொழி-4-10-1-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே–4-10-3-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?–4-10-4-

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்––ஸ்ரீ திருவாய் மொழி-5-2-1-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே–5-2-4-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –78-கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி- இத்யாதி —

May 26, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி செய்த உபகாரங்களை யனுசந்தித்த அநந்தரம் –
தம்மைத் திருத்துகைக்காக-அவர் பட்ட வருந்தங்களைச் சொல்லி –
இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உத்தேச்ய-விஷயத்துக் உறுப்பாக்கின பின்பு
வேறொரு அயதார்த்தம் என் நெஞ்சுக்கு-இசையாது -என்கிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே –
லோகத்தை எல்லாம் பிரமித்து அளித்த குத்ருஷ்டிகளை பிரபல பிரமாணங்களாலே நிரசித்து –
தம்முடைய பாபங்களை எல்லாம் போக்கி -இன்னும் அதுக்கு மேலே சிறிது கொடுக்க வேணும் என்று நினைத்தார்
என்று ஸ்ரீ எம்பெருமானார் செய்த உபகார பரம்பரையை அடைவே அனுசந்தித்து –
இதிலே –
தரிசு கிடந்த தரையை செய் காலாகும் படி திருத்தும் விரகரைப் போலே –
இவ்வளவும் விஷயாந்தர ப்ரவணனாய் போந்த என்னைத் திருத்துகைக்காக –
படாதன பட்டு -அரியன செய்து -திருத்தி -தேவரீருக்கு வகுத்த விஷயமான ஸ்ரீயபதிக்கு ஆளாகும்படி பண்ணி அருளின பின்னும்-
வேறு சில அயதார்த்தங்களை என்னுடைய மனசில் வலிய பொருத்திலும் – பொருந்தாதே இருப்பன் -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இங்கனம் தமக்கு செய்து அருளிய உபகாரங்களை அனுசந்தித்த பிறகு –
தம்மைத் திருத்துவதற்காக அவர் பட்ட வருத்தங்களைச் சொல்லி –இப்படி என்னைத் திருத்தி –
தேவரீருக்கு உகந்த விஷயமான ஸ்ரீ திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-
வேறு ஒரு பொய்ப் பொருளை என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் .

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

பத உரை –

எம் இராமானுச -எங்களுடைய ஸ்ரீ எம்பெருமானாரே
கருத்தில் -அடியேன் மனத்தில்
புகுந்து -வந்து
உள்ளில் -உள்ளத்தில் இருக்கிற
கள்ளம் -களவை
கழற்றி -போக்கி
கருதரிய -வேறு எவருக்கும் நெஞ்சால் நினைப்பதற்கும் இயலாத
வருத்தத்தினால்-பிரயாசத்தினால்
மிக வஞ்சித்து -நான் அறியில் தப்பி விடுவேன் என்னும் நினைவாலே எனக்கு தெரியாமல் மிகவும் மறைத்து
நீ -தேவரீராகவே
திருத்தி -திருத்தமுறச் செய்து
இந்த மண்ணகத்தே -இந்த உலகத்திலே
திரு மகள் கேள்வனுக்கு -ஸ்ரீயபதியான ஸ்ரீ சர்வேச்வரனுக்கு
ஆக்கிய பின் -ஆளாக்கியதற்கு பிறகு
என் நெஞ்சில் -திருத்தப்பட்டு திருந்தியவனாகிய என்னுடைய மனசிலே
மற்று -தேவரீர் உபதேசித்த மெய்ப் பொருளைத் தவிர வேறு பட்ட
ஒர் பொய்ப் பொருள் -ஒரு பொய்யான பொருளும்
பொருத்தப் படாது -வலியப் பொருத்தும்படி புகுத்தினாலும் பொருந்த மாட்டாது –

வியாக்யானம்

நெடும் கை நீட்டாக இருக்கில் -இவன் நெஞ்சைத் திருத்தப் போகாதென்று நெஞ்சு தன்னிலே-வந்து புகுந்து –
குடியிருக்குமவர்கள் செடியறுக்குமா போலே-உள்ளுண்டான ஆத்மபஹாரத்தைப் போக்கி-
வேறு சிலர்க்கு நெஞ்சால் நினைக்கவும் கூட அரிதாய் இருந்துள்ள வருத்தத்தாலே –
நான் அறியில் செய்த கிருஷி தன்னையும் அழித்து கொள்வன் என்று-எனக்கு ஒன்றும் தெரியாதபடி மிகவும் மறைத்து –
தேவரீர் தாம் அறிந்ததாக யத்நித்து -தரிசு கிடந்த தரையை செய் காலாம் படி திருத்துவாரைப் போலே-திருத்தி –
இந்த லோகத்திலே தேவரீருக்கு உத்தேச்ய விஷயமான ஸ்ரீய பதிக்கு-அந்தப்புர விநியோகத்துக்கு ஆளாம்படி -பண்ணின பின்பு –
இப்படி தேவரீர் திருத்த -திருந்தின என் மனச்சிலே தேவரீர் அறிவித்த யதார்த்தம் ஒழிய-
அதுக்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தம் வலியப் பொருத்திலும் பொருந்தாது –

இந்த மண்ணகத்தே -என்று
இருள் தரும் மா ஞாலமான -திருவாய் மொழி -10 4-1 –
இந்த லோகத்திலே திருத்துகையில் உண்டான அருமையைச் சொல்லிற்றாகவுமாம்-
கருத்தென்று –
மனோ வருத்தி வாசியான சப்தத்தாலே மனசை சொல்லுகிறது .சிந்தை என்னுமா போலே .

வருத்தம் -ஆயாசம் /பொருந்துதல்-இசைத்தல்

இந்த மண்ணகத்தே -திரு மகள் கேள்வனுக்கு ஆக்கி –
1-கருத்தில் புகுந்து –2-உள்ளில் கள்ளம் கழற்றிக் –3-கருதரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து–
4- நீ யிந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய உபகாரகங்கள்
உள்ளே புகுந்து திருத்தி –
பட்டத்து அரசியான-பிராட்டியாரின் அந்தப் புரத்திலும் உபயோகப் படத் தக்க முறையில்
அந்தரங்க கைங்கர்யம் செய்யும்படி ஆளாக்கினமை தோற்றுகிறது–
நிர்ஹேதுகமாக அவர் பேறாக செய்து அருளி -தயைக சிந்து –மெய்ப்பொருள் -சேஷி சேஷி பாவம் –
அருகில் வந்து புகுந்தான் பெற்ற பாவிக்கு விட போகாது-
அஞ்ஞான- ஒன்றும் தெரியாத-அன்யதாஞ்ஞான-குணம் மாறி-விபரீத ஞானம் -பொருளை மாற்றி-.மூன்றையும் வாசனை உடன் ஒழித்து
பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்-போல ஆத்மா அபகாரம் தோஷம் போக்கி
மற்ற ஓர் பொய் பொருளும் -மற்றவர்களுடைய பொய் பொருள்களும் நெஞ்சில் புகாது என்றபடி
நெடும் கை நீட்டு என்று மட்டும் கூடாது என்று -கூரத் தாழ்வான் ஸ்வாமிக்கு தஷினோ பாஹு –
போதாது என்று நெஞ்சில் புகுந்து –
கருத்து -ஆகு பெயர் -நெஞ்சுக்கு -ஆத்ம பாவ -கீதையில் பிரகரணத்துக்கு சேர கருத்து என்றே அர்த்தம் ஸ்வாமி அங்கே சாதிக்க –
இங்கே கருத்து -மனஸ் நெஞ்சு என்றபடி -மேலே உள்ளில் கள்ளம் கழற்றுகிறார் அன்றோ –
அடியேனுக்கு உத்தேச்யமான திருமகள் -சொல்லாமல் தேவரீருக்கு உத்தேச்யம் –என்று மதுரகவி நிஷ்டை -என்றபடி –

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி –
தேஷாமேவானுகம் பரர்த மஹா மஜ்ஞ்ஞான ஜந்தம நாஸ யாம்யா மமபாவச்தோ ஜ்ஞானதீ பேகபாச்வதா – என்றும் –
என்னை தீ மனம் கெடுத்தாய்-என்றும் சொல்லுகிறபடி-
நெடும் கை நீட்டாக இருக்கில் இவன் நெஞ்சைத் திருத்த பணிப்படும் என்று கொண்டு நெஞ்சு தன்னில்
தானே வந்து புகுந்து –
குடி இருக்கிறவர்கள் அங்கு இருக்கிற செடிகளை அறுக்குமா போலே –
உள்ளில் உண்டான அஜ்ஞ்ஞான அந்யதாஞ்ஞான விபரீத ஜ்ஞான ரூபமான தோஷங்களை எல்லாம் –
வாசனையோடு துடைத்து –
கிம் தேன நக்ர்தம் பாபம் சோரேண ஆத்மபஹரினா -என்னும்படியான
ஆத்மா அபஹராதி தோஷங்களை கட்டடடங்க போக்கி என்றபடி –

கருத்து -என்று
மனோ வ்ருத்தி வாசியான சப்தத்தாலே பிரகரண அனுகுண்யத்துக்காக மனசை சொல்லுகிறது –
சிந்தை என்னுமா போலே –

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி –
மனத்தின் கண் உண்டாகும் -எண்ணத்தைக் கூறும் கருத்து என்னும் சொல்-எண்ணம் உண்டாகும்
இடமாகிய மனத்தைக் குறிக்கிறது
இனி ஆத்மபாவச்த்த -ஸ்ரீ கீதை -10 11- -என்னும் இடத்தில் போலே –
மநோ வ்ருத்திக்கு-விஷயமாதலை கூறுவதாக கொள்ளலாகாதோ எனின் –
புகுந்து என்னும் சொல்லமைப் புக்கு-அது ஒவ்வாதாதலினும் -புகுந்த உள்ளத்திலே கள்ளம் களற்றுவதாக மேலே கூறுவதற்கு
ஏற்ப உடைத்தாய் இருத்தலாலும் -மனத்திற்கு கருத்து என்பதை ஆகுபெயராகக்-கொள்ளுதலே நேரியது -என்க .

நான் அவர் எழுந்து அருளி உள்ள இடத்திற்கு சென்று பிரார்த்தித்தேன் அல்லேன் –
அவர் தாமாகவே வந்து -என் மனத்தில் புகுந்தார் –
புகுந்தால் இசையேன் என்கைக்கு இடம் இல்லாதபடி அறிவுக்கு வாய்த் தலையான-நெஞ்சிலே வந்து புகுந்தார் –
என் நெஞ்சைத் திருத்துவதற்கு நெடும் தொலைவில் இருந்தால் இயலாமல் போகும் என்று-நெஞ்சத்திலே வந்து புகுந்தார்-
திருத்துவதற்கு அங்கேயே இருத்தல் தேவைப் படுதலின் குடியிருப்போர் அங்குள்ள-குப்பை கூழங்கள் ஆகிய குற்றங்களை
அகற்றி விடுவது போலே -உள்ளத்தில் உள்ள-கள்ளம் கழலுமாறு செய்து அருளினார்

கள்ளமாவது -ஆத்மபஹாரம் –
யோன்யதாசந்த மாத்மானம் அந்யதா ப்ரதிபத்யதே கிம் தேன நக்ருதம் பாபம் சோரேனாத் மாபஹாரினா –
எவன் வேறு விதமாய் இருக்கும் ஆத்மாவை வேறொரு விதமாக பார்க்கிறானோ –ஆத்மபஹாரம் பண்ணுமவனான
அந்தத் திருடனாலே எந்தப் பாபம் செய்யப் படவில்லை -என்று ஆத்மபஹாரம் களவாக கூறப்பட்டு இருத்தல் காண்க –
ஸ்ரீ எம்பெருமானுக்கே உரியதாய் -பர தத்ரமான ஆத்மாவை தனக்கு உரியதாய் -அதாவது-ஸ்வ தந்த்ரிமாக கொள்ளுதல்
ஆத்மபஹாரம் எனப்படும் -அதுவே களவு -பிறர் பொருளைத்-தன்னதாகக் கருதுவது களவாகும் அன்றோ –
அந்தத் திருட்டுப் புத்தியாகிய ஸ்வா தந்திரப் புத்தியை போக்கடித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் -என்றபடி –

கருதரிய வருத்தத்தினால் –
வேறு சிலருக்கு நெஞ்சால் நினைக்கவும் கூட அரிதாய் இருந்துள்ள-வருத்தத்தினாலே –
வருத்தம் -பிரயாசம் –

கருதரிய வருத்தத்தினால் –
ஆக்கிய பின்-களவிலே தகனேறின என்னை விட்டு -அடியோடு -களவு தொலையும்படி -செய்தது முதல்–
திருமகள் கேள்வனுக்கு ஆளாக்குதல் ஈறாக -எனக்கு தெரியாமல் மறைத்து தாமே செய்து-முடிப்பது என்பது –
எவ்வளவு செயற்கு அரிய செயல் –
வேறு எவர்க்கும் இது நெஞ்சாலும்-நினைத்துப் பார்க்க முடியாத செயல் அன்றோ –
அத்தகைய செயலைச் செய்வதற்கு எவ்வளவு-பிரயாசப் பட்டு இருக்க வேண்டும் -என்கிறார் .

மிக வஞ்சித்து –
நான் அறியில் செய்த க்ர்ஷி தன்னையும் அழித்து கொள்வன் என்று -இரா மடம் ஊட்டுவாரைப் போலே –
எனக்கு ஒன்றும் தெரியாத படி மறைத்து –

மிக வஞ்சித்து –
எனக்கு தெரிந்து விடில் -என் காரியத்தை நானே கெடுத்துக் கொள்வேன் என்று –
என் காரியம் முடியும் வரையிலும் தொடர்ந்து எனக்கே மறைத்து வந்தமையின் –மிக வஞ்சித்து -என்கிறார் –
இந்த வஞ்சனை தாய் குழந்தையை வஞ்சிப்பது -போன்று-இவருக்கு நல்ல பயனை அளித்தலின் –
குற்றம் அன்று -குணமேயாம் -என்க .

நீ இந்த மண்ணகத்தே திருத்தி –
தேவரீர் தாம் அறிந்ததாக யத்நித்து -இவ்வளவும் நித்ய சம்சாரியாய் விஷயாந்தரங்களில் மண்டி விமுகனாய் கொண்டு –
இருள் தரும்மா ஞாலத்திலே -ஸ்வைரமாக அபத பிரவ்ர்த்தனாய் போந்தேன் ஆகையாலே கரும் தறையான என்னை –
செயல் நன்றாகத் திருத்தி –
தேஷாம் சத்த யுத்க்தாதாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் ஏனமா முபயாந்திதே -என்கிறபடியே
ஒரு அதிகாரத்தைப் பார்த்து திருத்துகை அன்றிக்கே-நிர்ஹேதுகமாக திருத்தினாய் என்றபடி –

திருத்துகை யாவது-
இவ் வாத்ம வஸ்து சேஷியான ஸ்ரீயபதிக்கு சேஷம் என்னும் இவ் வர்த்தம் நெஞ்சில் படும் படி உபதேசிக்கை –

நீ திருத்தி –
நான் திருந்துகைக்கு என் முயற்சியின் கலப்பு சிறிதும் இன்றி -தானே முயன்று-
தரிசு கிடந்த நிலத்தை பயிரிடத் தக்க நன் செய்யாக வழி தெரிந்தவர்கள் ஆக்குவதைப் போலே-
என்னை பயனுறத்தக்க வகையில் திருத்தி .-

திரு மகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் –
நலமந்த மில்லதோர் நாடு புகுந்த பின்பு வரக் கடவதான இந்த சேஷத்வ ஜ்ஞானத்தை-
இந்த மண்ணகத்தே எனக்கு உபகரித்து -தத் பலமாகக் கொண்டு –
பூ மகளார் தனிக் கேள்வன் -என்கிறபடியே
ஸ்ரீ தேவி யாகிற பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அந்தப்புர விநியோகத்துக்கு ஆளாம்படி பண்ணின பின்பு –
எனக்கு ஜ்ஞானத்தை பிறப்பித்தவனுக்கு என் உயிரை அறவிலை செய்து எழுதிக் கொடுத்த பின்பு –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்கிறபடி
ஞானத்தை எனக்கு உபகரித்து அருளி –
என்னை பகவத் அனந்யர்ஹா சேஷ பூதனனாம் படி கடாஷித்து அருளின பின்பு -என்றபடி –

இந்த மண்ணகத்தே திரு மகள் கேள்வனுக்கு ஆக்கிய பின்–
இந்த உலகத்தில் -தேவரீருக்கு உத்தேச்யனான ஸ்ரீ திரு மகள் கேள்வனுக்கு என்னை-ஆளாக்கிய பிறகு –
திரு மகள் கேள்வன் -என்றமையின்
பட்டத்து அரசியான-ஸ்ரீ பிராட்டியாரின் அந்தப் புரத்திலும் உபயோகப் படத் தக்க முறையில்
அந்தரங்க கைங்கர்யம் செய்யும்படி ஆளாக்கினமை தோற்றுகிறது .

ஸ்ரீ அச்சுதன் தீர்ந்த அடியவர்களை திருத்தி தனக்கு பணி கொள்ள வல்லவனானான் –
ஸ்ரீ குருகூர் நம்பி தகுதி அற்றோரையும் நன்றாகத் திருத்தி தாம் பணி கொள்ள வல்லவரானார் –
ஸ்ரீ எம்பெருமானார் அங்கனம் திருத்தி -தாம் பணி கொள்ளாது -ஸ்ரீ திரு மகள் கேள்வனுக்கு ஆளாக்குகின்றார் .

தன் வாசி தெரியாது எதிரம்பு கோப்பாருள்ள இம்மண்ணகத்தே –
தான் மாதரம் அன்றி-ஸ்ரீ திருமகளும் தானுமாய் -ஸ்ரீ திருமகள் கேள்வன் எழுந்து அருளி இருக்கிற போது –
அவனிடத்தில்-பரிவுடையராய் -ஆளுமாளார் -திரு வாய் மொழி – 8-3 3- -என்றபடி –
அவனைக் காப்பார்-யாரும் இலரே என்று அவனைப் பரிந்து நோக்கி -காப்பதற்காக –
அவனுக்கு ஆளாக்குகின்றார் ஸ்ரீ எம்பெருமானார் என்னலுமாம் –

இங்கு -அல்லாதவர்களைப் போலே கேட்கிறவர்களுடையவும் –சொல்லுகிறவர்கள் உடையவும் தனிமையைத் தவிர்க்கை
யன்றிக்கே –ஆளுமாளார் -என்கிறவனுடைய-தனிமையை தவிர்க்கைக்காக யாயிற்று
ஸ்ரீ பாஷ்ய காரரும் இவரும் உபதேசிப்பது -ஸ்ரீ வசன பூஷணம் – 255- –என்னும்
ஸ்ரீ பிள்ளை உலகாசிரியர் ஸ்ரீ ஸூக்தி அனுசந்திக்கத் தக்கது

இனி –இந்த மண்ணகத்தே -என்பது –
ஸ்ரீ திரு மகள் கேள்வனுக்கு -என்பதோடு இயையாமல்-திருத்தி -என்பதோடு இயைதலுமாம்
அப்பொழுது இவ் இருள் தரும் மா ஞாலத்திலே-திருத்துதலில் உள்ள அருமை தோற்றுகிறது

என் நெஞ்சில் பொருத்தப் படாது –
இப்படி தேவரீர் படாதன பட்டு திருத்த திருந்தின என் மனசிலே இசையாது –

எம் இராமானுசா –
அஸ்மத் குரோ -என்கிறபடி –
எனக்கு அஞ்ஞா தாஜ்ஞாபனம் பண்ணி உபகரித்து அருளின எம்பெருமானாரே –

மற்றோர் பொய்ப் பொருள் –
தேவரீர் அறிவித்த யதார்த்த ஜ்ஞானம் ஒழிய அதற்க்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தமான அர்த்தத்தையும் –

பொருத்த படாது –
வலியப் பொருத்தினாலும் பொருந்தாது –
பொருந்துதல் -இசைத்தல் –

இந்த மண்ணகத்தே திருத்தி –என்று –
இருள் தரும் மா ஞாலத்தில் திருத்துகையில் உண்டான அருமையை சொல்லிற்றாகவுமாம் –
தீபம் வியாபித்த இடத்தில் திமிர வ்யாப்திக்கு வழி இல்லாதது போலே
ஞானம் புக்க-இடத்தில் அஞ்ஞானம் புகுர வழி இல்லை என்றது ஆய்த்து –
ஜ்ஞானக் நிஸ சர்வ கர்மாணி பச்ம சாத் குரு தேர்ஜுன -என்னக் கடவது இறே-

என் நெஞ்சில் –பொய்ப் பொருள்-
என் நெஞ்சில் -திருத்தப் பட என் நெஞ்சில்-பொய்ப் பொருள் பொருத்தப் படாது-
மெய்ப் பொருள் புக்க இடத்தே பொய்ப் பொருள் வலியப் புகுத்திடினும் பொருந்தி நிற்க-மாட்டாது அன்றோ

மெய்ப் பொருள் –
ஜீவாத்மா ஸ்ரீ திரு மகளுக்கும் அவள் கேள்வனுக்குமே உரியதாய் இருத்தல் –
பொய்ப் பொருளான
ஜீவாத்மா பர ப்ரஹ்ம ஐக்யமடைதல் -அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் –
பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன-

மற்று ஓர் பொய்ப் பொருள்-
எம் குருவான ஸ்ரீ ராமானுசன் உபதேசித்த சேஷத்வமே மெய்ப் பொருள் –
அவர் உபதேசிக்காத ஒவ் ஒரு பொருளும் பொய்ப் பொருள் -என்றபடி –
இனி மற்றோர் உடைய பொய்ப் பொருள் என்று உரைத்தலுமாம்-

——————-

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார்-பெரியாழ்வார் திருமொழி -5-2-1-

எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பண்ணினோம் காப்பே -5-2-3–

உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்–5-3-3-

உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினையே -5-4-7-

தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-

வடதடமும் வைகுந்தமும் மதில் துவராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5-4-10-

என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த -4-

அத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –பெரிய திருமொழி-7-3-3-

தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீர் –திருவாய் மொழி-2-5-8-

ஊழி ஊழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்ரமனையே -2-7-6-

பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே -2-7-7-

என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே -2-7-8-

எம் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -5-7-3-

முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம்பெருமான் தென்திசைக்கு அணி கொள்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை மீ பால் நின்ற எம்பெருமான் -8-4-3-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –77- ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப் பாய்ந்தனன்- இத்யாதி —

May 26, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

தாம் அபேஷித்த படியே திருவடிகளை கொடுத்து அருளப் பெற்று க்ருத்தார்த்தராய் –
அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து -இவை எல்லாம் செய்த பின்பு-
இனிச் செய்வதாக நினைத்து அருளுவது ஏதோ ?–என்கிறார்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானாரை குறித்து –
தேவரீருடைய திருவடிகளை சர்வதா அனுபவித்துக் கொண்டு இருக்கும் படி எனக்கு தந்து அருள வேணும் -என்ன –
அவரும் உகந்து அருளி-தாம் அபேஷித்த படியே விலஷணமான கிருபையை பண்ணி -திருவடிகளைக் கொடுக்க –
அவரும் க்ர்த்தார்த்தராய் –
வேத பிரதாரகரான குதர்ஷ்டிகளை பிரமாண தமமான அந்த வேதார்த்தங்களைக் கொண்டே நிரசித்தும் –
பூமிப் பரப்பு எல்லாம் தம்முடைய கீர்த்தியை எங்கும் ஒக்க வியாபித்தும் –
என்னுடைய ப்ராப்தி பிரதிபந்தக கர்மங்களை வாசனையோடு ஒட்டியும் –
இப்படி பரமோதாரரான ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு இன்னமும் எத்தை உபகரித்து அருள வேணும் என்று
நினைத்து இருக்கிறார் -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் –
அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து -இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ -என்கிறார் .

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

பத உரை .

ஈயாத -இதற்க்கு முன் எவர்க்கும் கொடுத்திடாத
இனி அருள் -இனிய திருவருளை
ஈந்தனன் -எனக்கு கொடுத்து அருளினார்
எண் இல் -எண்ணிக்கை இல்லாத
மறை குறும்பை -வேதத்தை தம் இஷ்டப் படி பொருள் கூறும் குறும்புத் தனம் வாய்ந்த மதங்களை
அம்மறைப் பல் பொருளால் -அந்த வேதம் கூறும் பல நேரிய பொருள்களைக் கொண்டு
பாய்ந்தனன் -உதைத்து தள்ளி விட்டார்
இப்படி அனைத்தும் -இந்த பூமி முழுவதும்
கீர்த்தியினால் –இசையினால்
ஏய்ந்தனன் -பொருந்தினார் -பரவி நின்றார்
என் வினைகளை -என்னுடைய கர்மங்களை
வேர் பறிய-வேர் போன்ற வாசனை போம் படி யாக
காய்ந்தனன் -போக்கடித்தார்
வண்மை இராமானுசர்க்கு -வள்ளன்மை வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானார்க்கு
இனி -இதற்கு மேல்
கருத்து என் -திரு உள்ளத்தில் நினைப்பு எது ?
இன்னும் செய்யத் தக்கது உண்டோ ? என்பது கருத்து .

வியாக்யானம் –

1-இதுக்கு முன்பு ஒருவர்க்கும் உபகரியாத விலஷணமான அருளை எனக்கு உபகரித்தார் –
2-.எண்ணிறைந்த மறைக் குறும்புண்டு-வேதத்தை மூலையடியே நடத்துகிற குத்ருஷ்டி மதங்கள்–அவற்றை அந்த
வேத ப்ரதிபாத்யமான அநேக அர்த்தங்களைக் கொண்டு தள்ளி விட்டார் –
3-.-இந்த பூமி எல்லாம் கீர்த்தியாலே வ்யாப்தர் ஆனார் .-
4-என்னுடைய கர்மங்களை வாசனையோடு போம் படி ஓட்டினார் –
பரம ஔதாரரான எம்பெருமானார்க்கு இனித் தம் திரு உள்ளத்தில் ஓடுகிறது எது ?-
இன்னும் செய்யத் தக்கது உண்டோ ?-என்று கருத்து .

ஏய்ந்த வண் கீர்த்தியினால் -என்று பாடமான போது –
பூமி எங்கும் பொருந்தப் பட்டுள்ள தம்முடைய விலஷணையான குணவத்தா ப்ரதையாலே-என் கர்மங்களைப் போக்கினார் -என்கை-
அதாவது -இவரோடு அந்வயம் உடையவன் அன்றோ இவன் என்று கர்மம் தானே விட்டுப் போகை –

பாய்தல்-உதைத்தல் -அதாவது -தள்ளுதல்

எய்தல்-பொருந்துதல் –

காய்தல்-கடிதல் .–

அவன் அருள் -ஸ்வாமி இன்னருள் – எண்ணில் மறை -எண்ணில் குறும்பு –

ஈந்தனன் ஈயாத இன்னருள் –
ஈயாத –
மந்த்ரம் யத்நேன கோபயேத் -என்றால் போல்
அஹங்கார யுக்தாஸ் சைமே -என்று சொல்லப்படுகிற ஹர விரிஞ்சாதிகளுக்கும் கூட கொடுக்க ஒண்ணாத படி
பேணிக் கொண்டு போந்த –
இன்னருள் –
விலஷணையான தம்முடைய கிருபையை -நிர்ஹேதுக பரம-கிருபையை -என்றபடி –

ஈந்தனன் –
கொடுத்தார் –
கீழ்ப் பாட்டில் இவர் -தேவரீர் திருவடிகளைக் கொடுத்து அருள வேணும் என்று பிரார்த்தித்த படியே –
அவர் கொடுக்கையாலே அதுக்கு மூலம் –
அவருடைய கிருபா குணம் என்று அனுசந்தித்து –இன்னருள் -என்று -அத்தை கொண்டாடுகிறார் காணும் –
ஈந்தனன் -ஈன்றனன் –
இன்னருள்
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அருளையும் -இவருடைய அருளையும் சேரப் பிடித்து – பார்க்கும் அளவில்
இவருடைய அருளுக்கு உண்டான தன்னேற்றம் வடிவிலே தொடை கொள்ளலாம் படி காணும் இதனுடைய போக்யதை இருப்பது –
ஆஸ்ரயத்துக்கு தகுதியாய் இறே அதினுடைய குணங்கள் இருப்பது –

ஈந்தனன் ஈயாத இன்னருள் –
இது காறும் வேறு யாருக்கும் கிடைக்காத இன்னருள் -தமக்கு கிடத்தமையின் ஈயாத இன்னருள் ஈந்தனன்-என்கிறார்
எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -ஸ்ரீ திருவாய் மொழி -2 7-5 – – என்று ஸ்ரீ நம் ஆழ்வார் கூறியது போலே இவரும் கூறுகிறார்
இவர் இங்கனம் கூறுவது எம்பெருமானார் தம் இணை மலர்த்தாள் தமக்கு தந்தமையை –
பரி பூரணமாக அருளுவது திருவடிகளை கொடுத்தே போலும் –
செழும் பறவை தானேறி திரிவான தாளிணை என் தலை மேலே –ஸ்ரீ திருவாய் மொழி- 10-6 5-
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -ஸ்ரீபெரியாழ்வார் திருமொழி – 5-4 7- -என்பன காண்க

இனி தனக்கு கிடைத்த இன்னருளை பிறருக்கு தான் கொடுக்க ஒண்ணாதபடி -முழுதும் தானே துய்க்கலாம் படியான
சீர்மை வாய்ந்து இருப்பதாகக் கண்டு –ஈயாத இன்னருள் -என்கிறார் ஆகவுமாம்-
தாரேன் பிறர்க்கு உன்னருள் என்னுடை வைத்தாய்-ஆரேனதுவே பருகிக் களிக்கின்றேன் -ஸ்ரீ பெரிய திருமொழி – 7-1 3-என்னும்
ஸ்ரீ திரு மங்கை மன்னன் திவ்ய ஸ்ரீ ஸூக்தி இங்கு அனுசந்திகத் தக்கது .

எண்ணில் மறைக் குறும்பை பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் –
எண்ணிறைந்த மறைக் குறும்புண்டு –
வேதத்தை மூலையடியே நடத்தக் கடவ குதர்ஸ்ர்டி மதங்கள் –தொகையில் இட்டு சொல்ல ஒண்ணாதபடி
அசந்க்யேயராய் -வேதப் பிரதாரகராய் ப்ரமித பிரமாண ப்ரமேய பிரமாத்ர் ஸ்வ ரூபராய் இருந்துள்ள
குதர்ஷ்டி மத நிஷ்டராய் என்றபடி –
அநந்தா வை வேதா – என்கையாலே எண்ணிறந்த மறை என்று யோஜிக்கவுமாம் –

அம் மறைப் பொருளால் –
ஸ்ருதிகளுக்கு -சுத்த அபேத பிரதிபாதனமே பொருள் என்று குறும்பு சொல்லுகிற அந்த குத்ர்ஷ்டி மதநிஷ்டரை அடங்கலும் –
அகிஞ்ச்சித்ஜ்ஞனாய் கர்ம வச்யனான சேதனனுக்கும் –
சர்வஜ்ஞ்ஞனாய் அகர்ம வச்யனான – ஸ்ரீ ஈஸ்வரனுக்கும் –
ஸ்வரூப ஐக்ய பிரதிபாதாகநத்தாலே அவற்றுக்கு தாத்பர்யம் சொல்ல ஒண்ணாமையாலே –
விசிஷ்ட ஐக்யமே அவற்றினுடைய தாத்பர்ய விஷயீ பூதார்த்தம் என்று ஸ்வரூப ஐக்ய பிரதிபாதகனத்துக்கு –
அத்யந்த பிரதி கூலங்களாயும் -விசிஷ்ட ஐக்ய பிரதிபாதாக நத்துக்கு அத்யந்த அனுகூலங்களாயும் -இருந்துள்ள –
போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா – என்றும் –
த்வா ஸூபர்ணா ஸ யுஜா ஸ காயா சமானம் வர்ஷம் ப்ரிஷஸ் வஜாதே -தயோ ரக்ய பிப்பலம்
சாத்வத்தி அனஸ் நன் நன்யோ அபிசாக சீதி -என்றும் –
இமான் லோகன் காமான் நீ காம ரூப்ய நு சஞ்சான்-ஏதத் சாம காயான் நாஸ்தே -என்றும் –
யஸ் யாத்மா சரீரம் யஸ்ய பர்த்வீ சரீரம் -என்றும் -இத்யாதி
பேத சுருதிகளையும் கடக சுருதிகளையும் உபன்யசித்தும் பஹூ முகமாக ப்ரசங்கித்தும்
அந்த ஸ்ருதிகளுடைய தாத்பர்யன்களைக்-கொண்டு தானே பாய்ந்தனன் –
அந்த ஸ்தலத்தில் நின்றும் பலாயனம் பண்ணுவித்தார் –
பாய்தல் -உதைத்தல் –

ததன்ய மத துர்ம் தஜ்வலித சேத சாம்வாதி நாம் சிரஸ் ஸூ நிஹிதம் மயாபத மதஷிணம் லஷ்யதாம் -என்கிறபடியே
அச் செயல்கள் எல்லாம் அவருடைய சம்பந்திகளுக்கு கூட உண்டாக கடவன ஆகையாலே அவருக்கு உண்டாக சொல்ல வேண்டா இறே –
இப்படி அனைத்தும்

எண்ணில் அம்மறைப் பல் பொருளால் –
கட்டுக் கடங்காது தமக்குத் தோன்றின படி -எல்லாம் திரிதல் –குறும்பு -எனப்படும்
மறைக்குறும்பாவது-
வேதத்தின் பொருளைச் சொற்களின் பகுதி விகுதிகளை பிரித்துக் காட்டும்-வியாகரணதிற்கும் –
சம்பந்தத்தை உணர்த்தும் பல சொற்களின் தொகுப்பாகிய வாக்கியத்திற்கும் –
முன் பின் இடங்களுக்கு ஏற்ப அமையும் பிரகரணதிற்கும் –
சொல் அமைந்து இருக்கும்-இடத்திற்கும் பெயருக்கும் ஏற்ப கட்டுப்பட்டு பொருள் கொள்ளாது –
தங்கள் நெஞ்சில் தோன்றினதையே-மறையின் பொருளாக ஆக்குவது மறைக் குறும்பாகும்
இதனால் வேதத்திற்கு அவப் பொருள்களை-தம் தமக்கு தோன்றினவாறே கூறும் குத்ருஷ்டி மதங்கள் கருதப் படுகின்றன –
அவை பலவாதலின் -எண்ணில் குறும்பு -என்கிறார் .

எண்ணில்லாமை மறைக்கு அடையாகவுமாம்-
இங்கு மறை என்னும் சொல்லை வழங்கியது குறிப்பிடத் தக்கது –
இறைவன் பால் பக்தி உணர்வு இல்லாதாருக்கு தம் பொருளைக் காட்டாது மறைப்பது பற்றி-வேதத்திற்கு இப்பெயர் வந்தது-
பக்தி உணர்வு அற்ற மற்றவர்கள் மெய்ப்பொருள் காணாது-தம் தமக்கு தோற்றும் அவப்போருள்கள் கூறி இடர்ப்படுவதற்கு
இதுவே காரணம் என்று உணர்க –
எந்த மறைக்குக் குத்ருஷ்டிகள் அவப்பொருள்கள் கூறினரோ-அந்த மறைக்கே மெய்ப்பொருள்கள்-கூறி
அவற்றின் பலத்தினாலே அந்தக் குத்ருஷ்டிகளை உதைத்து தள்ளி விட்டார் ஸ்ரீ எம்பெருமானார் .

எண்ணிறந்த குறும்புகள் பல் பொருளால் தள்ளப்பட்டன –
வேதத்தில் கூறப்படும் பல பல மெய்ப் பொருள்களால் பல குத்ருஷ்டி மதங்களைத்-தள்ளி
வேதத்தின் உட் பொருள் நெஞ்சுள் நிற்கும் படி தமக்கு எம்பெருமானார் உபகரித்த படியை
அமுதனார் இங்கே அனுசந்திக்கிறார் என்று அறிக .

பாய்தல் -உதைத்தல் / இப்படி அனைத்தும் ஏய்ந்தனன் கீர்த்தியினால் –
இப்பார் முழுதும் போர்த்தனன் புகழ் கொண்டு -என்றார் கீழும் /ஏய்தல்-பொருந்துதல்

ஏய்ந்தனன் கீர்த்தியினால் –
இந்த பூமிப் பரப்பு எல்லாம் கட்டடங்க தம்முடைய குணவத்தா பிரதையாலே ஆக்கிரமித்தார் –
ஏய்தல்-பொருந்துதல் –
தம்முடைய நியமனத்தை சிரசா வகிக்கும்படி வ்யாபித்தார் என்றபடி –

படி அனைத்தும் ஏய்தல் -பூமி எங்கும் வியாபித்தல்
கீர்த்தி -ஈதலினால் வந்த புகழ் வண்மை ஸ்ரீ இராமானுசன் -என்று ஸ்வாமியைக் குறிப்படுவதும் காண்க
தமக்கு புரிந்த உபகாரன்களைப் பேசும் போது இப்படி யனைத்தும் கீர்த்தியினால் ஈய்ந்தமை கூறுவது எங்கனம் பொருந்தும் ?
இஃது இவருக்கு செய்த உபகாரமோ -எண்ணில்
எங்கோ கிடந்தது உழலும் என்னைத் தன் மகிமையை உணரச் செய்து –தன்னருளுக்கு இலக்கு ஆக்குவதற்கு என்றே
கீர்த்தியினால் யேய்ந்ததாக கருதி ஸ்ரீ அமுதனார் இங்கனம் கூறுவது பொருந்தும் -என்க.

தான் கீர்த்தி பெற்று சிறப்புற வேணும் எண்ணம் ஸ்ரீ எம்பெருமானாருக்கு இல்லை
ஸ்ரீ அமுதனார் போல்வார் அதனால் உய்வு பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம்என்று உணர்க –
காரண கார்ய பாவம் என்றவாறு –

என் வினைகள் வேர் பறிய காய்ந்தனன் –
அநாதி காலமே தொடங்கி ஸ்ரீ எம்பெருமானார் உடைய விஷயீ கார பாத்திர பூதனான அளவும் –
நான் தீர கழிய செய்த அக்ர்த்ய கரணாதிகளை சமூலோன் மூலனம் பண்ணி நிவர்ப்பித்தார் –
காய்தல் -கடிதல் –
வேர் கிடந்தால் திரியட்டும் அங்கு உரிக்கும் என்னும் அதி சங்கையால் அத்தோடு கூட அவற்றைப் பிடுங்கிப் போட்டார் என்றபடி –
இவற்றிலே இந்த செடி சில நாள் இருந்து போய்த்து என்று தெரியாதபடி பண்ணினார் என்று வித்தர் ஆகிறார் காணும் –

சும்மனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே -என்றும் வானோ மறிகடலோ மாருதமோ
தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்றும் சொல்லுகிறபடியே பண்ணி அருளினார் என்றபடி –

இப்படி யனைத்தும் மேய்ந்த வண் கீர்தியினார் -என்ற பாடம் ஆன போது –
பூமியிலே எங்கும் ஒக்க வியாபித்து நிற்பதாய் சகல புருஷார்த்த ப்ரதத்வ ரூப ஔதார்யத்தை உடைய கீர்த்தியாலே
என்னுடைய துஷ் கர்மங்களை வாசனையோடு ஓட்டினார் என்று பொருளாக கடவது –
அதாவது இவரோடு அந்வயம் உடையான் ஒருவன் அன்றோ-
இவன் என்று துஷ் கர்மங்கள் எல்லாம் தன்னடையே விட்டுப் போகை –

வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே –
இப்படிப்பட்ட பரம உதாரரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு இன்னும் தம் திரு உள்ளத்தில் ஓடுகிறது ஏதோ –
அடியேனுக்கு இன்னம் எந்த விசேஷார்த்தத்தை கொடுப்பதாக நினைப்பிட்டு இருக்கிறீரோ –
அவரைப் பார்த்தால் இன்னம் சில எனக்கு கொடுக்க வேணும் என்று நினைத்து கொண்டு இருக்கிறாப் போலே இருக்கிறது காணும் என்று
வித்தர் ஆகிறார் –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்னும்படி ஆய்த்து –

என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் –
கீர்த்தியினால் ஏய்ந்ததன் பயன் இதனால் கூறப்படுகிறது
வினைகள்-புண்ணிய பாப ரூபமான கர்மங்கள்
என் வினைகள் –பிறர் உடையவர்களாய் என்னிடம் வந்தேறினவைகள் அல்ல
நானே செய்து என்னிடம் வேரூன்றினவைகள்

வினைகளுக்கு வேராவன வாசனைகள் .அவை அறவே போகும்படியாக வினைகளை ஓட்டினார் –
வேர் பறி போகவே மீண்டும் வினைகள் தலை தூக்க வழி இல்லை யாயிற்று –
ஸ்ரீ அமுதனார் தாமாகப் போக்கிக் கொள்ளில் அன்றோ -வாசனை-ருசிகள்-ஒட்டிக் கொண்டு-கிடந்தது
மீண்டும் வினைகள் தலை தூக்க இயலும்
கருமமும் கரும பலனுமாகிய காரணன் தன்னைக் காயப்படுத்தி வைத்து இருப்பவர் ஆகையாலே –
வினைகளை வேர் பறியக் காயும் திறமை ஸ்ரீ எம்பெருமானாருக்கு உண்டு என்க

இனி ஏய்ந்த வண் கீர்த்தியினால் -என்று பாடமான போது-
இப்பூமி எங்கும் பொருந்திய அழகிய கீர்த்தியினால் என் வினைகளை ஓட்டினார் என்று பொருள் கொள்ளல் வேண்டும்
கீர்த்தியினால் வினைகளை ஒட்டுதலாவது –
நற்குணம் வாய்ந்தவர் என்று பேர் பெற்ற ஸ்ரீ எம்பெருமானாருடைய தொடர்பு உடமையை-நாடறியவே-
பாபத்திற்கு கடவரான நமன் தமரும் -புண்ணியத்திற்கு கடவரான தேவர்களும்-குறுகப் பெறாது விலகுமாறு –
கன்மங்கள் தாமே வலுக்குன்றி ஒழிதலாம்-

வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே –
வள்ளலாகிய ஸ்ரீ எம்பெருமானார் இவ்வளவு உபகரித்ததோடு அமையாமல் மேலும் உதவுதற்கு முற்படுகிறார் –
இவ்வளவுக்கு மேலும் உதவுதற்கு என்ன தான் இருக்கிறதோ – என்றபடி
என்னை முற்றுமுயிர் உண்டு …இன்னம் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே -ஸ்ரீ திருவாய் மொழி – 10-7 3- –
என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்தியையும் –
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக் குறிப்பே –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 5-4 1-என்னும்
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஸூ க்தியையும் இங்கு ஒப்பு நோக்குக .

பாய்தல்– உதைத்தல் -தள்ளுதல்//எய்தல் -பொருந்துதல் /காய்தல் -கடிதல்
ராஜ குல மகாத்மயம்-சம்பந்தம் ஒன்றாலே -வினைகள் போயின —

—————-

ஈந்தனன் ஈயாத இன்னருள்–

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம்மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு
இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை -2-7-10-

மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா கூறு கொண்டு
அவன் குலமகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் -3-1-4-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து -5-8-1-

தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு
நாழிகை ஏழுடன் இருப்ப வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்தவாறு -5-8-9-

ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை
வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி –7-3-4-

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே -11-8-9-

திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருள் கண்டு கொண்மின்கள் கைத்தவமே -6-3-4-

உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு என்
உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே-8-8-3-

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிறக் கண்ணபிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே -8-9-6-

எந்தை திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளால்
வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து -1-

தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப்பிரான்
பிள்ளான் எதிராசர் பேர் அருளால் உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை
அன்று யுரைத்தது இன்பமிகும் ஆறாயிரம் -41-

தஞ்சீரை ஞானியர் தாம் புகழும் வேதாந்தி
நஞ்சீயர் பட்டர் நல்லருளால் எஞ்சாத ஆர்வமுடன்
மாறன் மறைபொருளை ஆய்ந்து
யுரைத்தது ஏர் ஒன்பதினாயிரம் -42-

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட பின்
பெரியவாச்சான் பிள்ளை அதனால்
இன்பா அருபத்தி மாறன் மறைப் பொருளை
சொன்னது இருபத்து நாலாயிரம் -43–

அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாசிரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
புகழ் அல்ல விவ்வார்த்தை மெய் இப்போது -53-

இந்த உபதேச இரத்தின மாலை தன்னை
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார்
எந்தை எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி
சதிராக வாழ்ந்திடுவார் தாம் -73-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –76-நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும்- இத்யாதி —

May 26, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ பகவத் வைலஷண்யம் காணாமையாலே தேவரீரை ஒழிய அறியேன் என்று இருக்கிறேன் அல்லேன் –
கண்ட காலத்திலும் நான் தேவரீரை ஒழிய அறியேன் என்றார் கீழ் .
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே ஸ்ரீ எம்பெருமானார் மிகவும் உகந்து அருளி
இவர்க்கு எத்தைச் செய்வோம் என்னும் இடம் தோற்ற எழுந்து அருளி இருக்கிற படியைக் கண்டு-
தம்முடைய ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அபேஷிக்கிறார் இதில் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் பாட்டில் பும்ஸா சித்த அபஹாரியான ஸ்ரீ சர்வேஸ்வரன் -சமஸ்த திவ்ய பூஷணங்களாலும்-சமஸ்த திவ்ய ஆயுதங்களாலும்
ஒப்புவித்துக் கொண்டு வந்து -என் முன்னே நின்று-உன்னை நான் விடுகிறேன் அல்லேன்
என்று பலாத்காரம் பண்ணினான் ஆகிலும் –
குணைர் தாஸ்யம் உபாகத -என்றால் போலே தேவரீர் உடைய கல்யாண குணங்களிலே ஈடுபட்ட அடியேனை
அக் குணங்கள் தானே தேவரீருக்கு அனந்யார் ஹனாம் படி பண்ணிற்றன என்று விண்ணப்பம் செய்ய கேட்டருளி –
இவருடைய பாவ பந்தம் எங்கனே -என்று மிகவும் உகந்து –
இவருக்கு நாம் எத்தை செய்வோம் என்னும் இடம் தோற்ற – அவர் எழுந்து அருளி இருக்கிற படியைக் கடாஷித்து –
தேவரீருக்கு அபிமதங்களாய் இருந்துள்ள –
தண்ணார் வேங்கடமும் -வைகுந்த மா நகரும் -திருப்பாற்கடலும் -யாதொரு ஆனந்தத்தை விளைக்குமோ
அப்படியே -தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளும் அடியேனுக்கு அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும் –
ஆகையாலே அவற்றைத் தந்தருள வேணும் என்று அபேஷித்து அருளுகிறார் –இப்பாட்டில்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ பகவானது சீர்மையைக் கண்டு அறியாமையாலே தேவரீரை அன்றி வேறு ஒன்றினை அறியாமல் இருக்கிறேன் அல்லேன்
கண்டிடினும் ஸ்ரீ ஆசார்யர் ஆகிய தேவரீரை அன்றிக் கண் எடுத்தும் பாரேன் என்றார் கீழ் .
இதனை உகந்த ஸ்ரீ எம்பெருமானார் இவருக்கு எதனை அளிப்போம் என்னும் கருத்து தோன்ற எழுந்து அருளி இருப்பதை கண்டு –
தமக்கு வேண்டும் பேற்றினை இன்னது என்று முடிவு கட்டிக் கோருகிறார் – இப்பாசுரத்திலே –

ஸ்ரீ வசன பூஷணம்-சிறை இருந்தவள் ஏற்றம் -ஸ்ரீ சீதை பிராட்டி -புருஷார்த்த -வைபவம் ஸ்ரீ ராமாயணம் சொல்லும்-
தூது போனவன் ஏற்றம்- உபாயம் வைபவம் ஸ்ரீ மகா பாரதம் சொல்லும்-
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் 466 சூத்தரங்கள் 450 சூத்திரம் முக்கியம்
இந்த பாசுரம் கொண்டே அருளியது-
ஈஸ்வர ஸௌகார்தம் முதல் -ஆறு படிகள்-யதேச்சா சுக்ருதம்- அடுத்த படி– அத்வேஷம் ஆபி முக்கியம்
விஷ்ணு கடாஷம் கிருபை–ஆச்சர்ய சம்பந்தம் கீழ் படி இந்த ஆறுக்கும்

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

பத உரை .
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
நின்ற -நிலை நின்ற
வண் கீர்த்தியும் -அழகிய புகழும்
நீள் புனலும் -நீண்டு பெருகும் நீரும்
நிறை -நிறைந்துள்ள
வேம்கடப் பொற் குன்றமும் -ஸ்ரீ திருவேம்கடம் எனப்படும் விரும்பத் தக்க ஸ்ரீ திரு மலையும்
வைகுண்ட நாடும் -ஸ்ரீ வைகுண்டம் எனப்படும் ஸ்ரீ திரு நாடும்
குலவிய பாற்கடலும் -கொண்டாடப்படும் ஸ்ரீ திருப்பாற்கடலும்
உன் தனக்கு -தேவரீருக்கு
எத்தனை இன்பம் -எவ்வளவு இன்பத்தை
தரும் -கொடுக்குமோ
உன் இணை மலர்த்தாள் -தேவரீருடைய ஒன்றுக்கு ஓன்று இயைந்துள்ள போக்யமான திருவடிகள்
என் தனக்கும் -அடியேனுக்கும் அது அவ்வளவு இன்பத்தைத் தரும் .
ஆகையால்
இவை -இத்தகைய திருவடிகளை
ஈந்தருள் -அடியேனுக்கு கொடுத்து அருள வேணும் .

வியாக்யானம்
காதா சித்கம் அன்றிக்கே ஒருபடிப்பட்டு நின்ற அழகிய கீர்த்தியும்
வார் புனல் அம் தண் அருவி -திருவாய் மொழி – 3-5 8- – என்னுமா போலே –
ஒழுகுடைய புனலும் நிறைந்து இருப்பதாய் -ஸ்ரீ திருவேம்கடம் என்னும் திரு நாமத்தை உடைத்தாய் –
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ திருமலையும் –
ஸ்ரீ வைகுண்டம் ஆகிற ஸ்ரீ திரு நாடும் –
ஆர்த்தர ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற இடம் என்று விசேஜ்ஞ்ஞர் எல்லாம் கொண்டாடும் ஸ்ரீ திருப்பாற்கடலும் –
தேவரீருக்கு யாதோரளவு ஆனந்தத்தை விளைக்கும் –
தேவரீருடைய -சேர்த்தி அழகை உடைத்தாய் -போக்யமாய் -இருந்துள்ள திருவடிகள் எனக்கும் அவ்வளவான ஆனந்தத்தை உண்டாக்கும் .
ஆன பின்பு தேவரீர் திருவடிகளை எனக்கு தந்து அருள வேணும் .
குலவுதல்-கொண்டாட்டம்
ஈதல் -கொடுத்தல் .

வகுத்த இடமே -பாட்டு கேட்க்கும் இடம்–கூப்பீடு கேட்க்கும் இடம்- குதித்த இடமும் -ஊட்டும் இடம் -வளைத்த இடமும்
திருமலையும் திருப்பாற் கடலில் பைய அரவணை -ஸ்ரீ வைகுண்டம் அனந்த போகினி –
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் கைங்கர்யம் செய்து அருளும் சேஷனே நீர் –
ஈந்து அருளு–பரகத சுவீகாரம் -தான் சென்று பற்றினால் அகங்கார கர்ப்பம்
காலனை கொண்டு மோதிரம் போட்டால் போல-ஆச்சார்ய அபிமானம் உத்தாராகம் -உயிரான கருத்தை வெளியிட்டு அருளுகிறார் இதில்
பகவல் லாபம் ஆச்சார்யனாலே -ஆச்சார்ய லாபம் பகவானால் -ஆச்சார்ய சம்பந்தம் ஈஸ்வரன் ஸுஹார்த்தம் தானே கொடுக்கும் –
பிராப்தி நிஷ்கர்ஷம் -அபேக்ஷிதம் இரண்டும் ஒரே பாசுரத்தில் அருளிச் செய்கிறார் –

நின்ற வண் கீர்த்தியும் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -என்கிறபடியே -காதாசித்கம் அன்றிக்கே –
கால த்ரய வர்த்தியாய் –
அழகியதாய் –
தெழில் அருவித் திரு வேங்கடம் -என்றும் –
பரன் சென்று சேர்-திரு வேங்கட மா மலை -என்றும் –
வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும் –
வில்லார் மலி வேங்கட மா மலை -என்றும் –
ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபடுக்கைக்கு உடலான குணவத்தா ப்ரதையையும் –

நீள் புனலும் –
வார் புனல் தண் அருவி வட திரு வேங்கடம் -என்றும் –
குளிர் அருவி வேங்கடம் -என்றும் –
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் -என்றும் -சொல்லுகிறபடி
அநவரதம் பாயா நின்று உள்ள நீண்ட திரு அருவிகளும் –

நிறை வேங்கடப் பொற் குன்றமும் –
இவை இரண்டாலும் நிறைந்து இருப்பதாய்-
தெள்ளியார் வணங்கும் மலை திரு வேங்கடம் -என்கிறபடியே -ஸ்ரீ திரு வேங்கடம் என்னும் திரு நாமத்தை உடைத்தாய் –
எம்பெருமான் பொன் மலை -என்கிறபடியே அத்யந்த ச்ப்ர்ஹநீயமாய் –
பரன் சென்று சேர் திரு வேங்கடம் –என்கிறபடியே வகுத்த சேஷியான ஸ்ரீ சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலமான ஸ்ரீ திரு மலையும் –

நின்ற —பொற் குன்றமும் –
கீர்த்தியும் நீள் புனலும் நிறைந்தது ஸ்ரீ வேம்கடப் பொற் குன்றம் -என்க.
ஒரு காலத்திலே ஓங்கி நின்று மற்று ஒரு காலத்திலே மங்கிப் பின்னர் மறைந்து விடும்
ஏனைய கீர்த்தி போல் அல்லாது ஸ்ரீ திரு மலையின் கீர்த்தி என்றும் ஒருப்பட்டு இருத்தலின் – நின்ற கீர்த்தி -என்கிறார் .
முக்காகத்திலும் உலகத்தவர் தம் பெருமையைப் பற்றி பேசும் படி நின்றது திருமலை -என்க .

இனி
நிற்கும் நான் மறை -திருவாய் மொழி -6 5-4 – – என்றபடி –
எல்லாக் காலத்திலும் உள்ள ஸ்ருதியில் மலைக்குப் போம் -கிரீன் கச்சத -என்று ஸ்ரீ திருமலையின் சீர்மை ஓதப்பட்டு இருத்தலால்
ஸ்ரீ திருமலையின் கீர்த்தி எல்லாக் காலத்திலும் நிலை நிற்பதாக கூறினார் ஆகவுமாம்.

வண் கீர்த்தி
வண்மை-அழகு .
இனி வள்ளன்மை யாகவுமாம்.
ஸ்ரீ திரு மலையைப் பற்றி சங்கீர்த்தனமே கோரியவை அனைத்தும் கொடுக்க வல்ல இயல்பு உடையதாதலின் –
வண் கீர்த்தி -என்கிறார்
வேறு பயனைக் கோராதவர்க்கு பகவத் ஆபிமுக்க்யம் தொடங்கி-கைங்கர்யம் ஈறாக -தர வல்லது
ஸ்ரீ திரு மலையின் கீர்த்தனமே -என்க

உள்ளத்தில் அல்லாது வாயினால் செய்யும் கீர்த்தனமே -இயல்பான கைங்கர்யத்தில் மனத்தை ஈடுபடுத்தி –
முக்தி பெறுவதற்கு உரிய தகுதியையும் தானே தர வல்லது -என்கிறார் ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –
வெற்பென்று வேம்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண் -நான் முகன் திருவந்தாதி – 40- –
ஸ்ரீ திருமலையின் சீர்மையை யறிந்து ஸ்ரீ வேம்கடம் பாடினேன் அல்லேன் .
அல்லாத மலைகளைச் சொல்வது போல் -ஸ்ரீ வேம்கடத்தை சொல்ல -வீடாக்கி நிற்கும் நிலை எனக்கு ஏற்பட்டது என்கையாலே –
உள்ளத்தில் இல்லாமல் செய்த கீர்தனமே தமக்குப் பயன் பட்டதை ஸ்ரீ திரு மழிசைப் பிரான் உணர்த்துவது உணரத்தக்கது .

இனி மேலே
வீற்று இருந்து அருளும் இடமாகிய ஸ்ரீ வைகுண்ட நாட்டையும் –
பள்ளி கொண்டு அருளும் இடமாகிய ஸ்ரீ திருப்பாற்கடலையும் பேசுதலின் –
இங்கு நின்ற திருக் கோலத்தோடு எழுந்து அருளி இருப்பதை திரு உள்ளத்தில் கொண்டு –
நின்ற வண் கீர்த்தி -என்கிறார் ஆகவுமாம் .

ஸ்ரீ வேம்கடத்தில் திருவேம்கடம் உடையான் நின்ற திருக் கோலம் வல்லார் ஆடினால் போலே -தமக்கு
மிகவும் இனிதாய் இருப்பதாக ஸ்ரீ திரு மங்கை மன்னன் ஈடுபட்டுப் பேசுவது ஈண்டு அறிதற் பாலது .
ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே ஊர்ப் பொதுவான மன்றிலே ஆடி மகிழ்ந்தவன் -உபய விபூதிக்கும் பொதுவான
மன்றாகிய ஸ்ரீ திரு வேம்கடத்திலே ஆடி மகிழும் மைந்தனாய் விளங்குவதாயும் அவரே அருளிச் செய்து இருப்பதும் அறியத் தக்கது
வேம்கடத்தாடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே-பெரியதிரு மொழி -2 1-9 – – என்பதும் –
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் –
வட திரு வேம்கடம் மேயமைந்தா என்றும் -திரு நெடும் தாண்டகம் – 16- – என்பதும் அவருடைய திரு மொழிகள் .

ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ திருமலையில் நின்று அருளிய அழகைக் காட்டி -என்னை இசைவித்து
அவ்வழகிய கோலத்தோடு என் உள்ளத்தில் புகுந்து பிரிக்க ஒண்ணாத படி எழுந்து அருளி இருக்கிறான்
என்று திருவாய் மலர்ந்து அருளி இருப்பதும் இங்கு தெரிதற் பாலது ..
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கலாமை நிச்சித்து இருந்தேனே –திரு வாய் மொழி – 10-4 4-
என்பது -அவர் திரு வாய் மொழி –

ஸ்ரீ கீதாசார்யன் அருளிய ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தத்தை நாட்டிய முத்ரையால் காட்டி அருளுகிறான்-
என் திரு வடி பற்று என்று ஒரு திருக் கரத்தாலும் -பற்றினால் முழங்கால் அளவு நீக்கி-சம்சார ஆர்ணவத்தில் இன்று
நம்மை விடுவிப்பேன் என்றும் இன்னொரு திருக்கரத்தால் காட்டி அருளுகிறான் –

மலைமேல் தான் நின்று மனத்தே வந்து சேர்ந்து நிலை பெற்றான்-

இங்கனம் அடியார்கள் கொண்டாடிப் பேசும் –நின்ற திருக் கோலக் கீர்த்தியை –
நின்ற வண் கீரத்தி –என்கிறார் ஸ்ரீ அமுதனார் .

ஸ்ரீ திரு வேம்கடத்தில் நின்ற நிலை கூறியது –
ஸ்ரீ வைகுந்தத்தில் இருந்த நிலைக்கும் –
ஸ்ரீ திருப் பாற்கடலில் கிடந்த நிலைக்கும் -உப லஷணம் என்று கொள்க –

நீள் புனலும் –
வார் புனல் அம் தண் அருவி வட திருவேம்கடத்து எந்தை –திருவாய் மொழி -3 5-8 – என்றபடி –
நீண்டு ஒழுகும் அருவி நிறைந்தது ஸ்ரீ வேம்கடப் பொற் குன்றம் -என்க ..
அருவி நீர் வேம்கடம் -பெரிய திரு மொழி – 8-2 3- –
வீங்கு நீரருவி வேம்கடம் -சிலப்பதிகாரம் -என்பது காண்க ..

இனி புனிதத் தன்மையில் நீண்ட -பெருமை வாய்ந்த -புனல் என்று ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி முதலிய
புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்தது -ஸ்ரீ வேம்கடப் பொற் குன்றம் -என்னலுமாம்..
இதனால் -தாபத்தை தீர்க்கும் குளிர்ச்சியும் போக்யதையும் -ஸ்ரீ திருமலையில் வாய்ந்து உள்ளமை
காட்டப் பட்டதாயிற்று –

நிறை வேம்கடப் பொற் குன்றமும்
கீர்த்தி -என்றும் குன்றாது புதுமை வாய்ந்து அழகியதாய் வளர்தலானும் –
நீள் புனல் -மாரி மாறாது தண்ணம் மலையாய் இருத்தலானும்
ஸ்ரீ திரு வேம்கடப் பொற் குன்றத்தில் நிறைவு பெற்று உள்ளன -என்று அறிக .

வேம்கடம் –
சர்வ பாபாநி வேம் ப்ராஹா கடஸ் தத்தாஹா உச்சதே -என்று
எல்லா பாபங்களையும் வேம் என்று சொல்லுகிறார்கள் –
அதனை கொளுத்துதல் –கட -என்று சொல்லப்படுகிறது -என்னும் பிரமாணப் படி
பாபங்கள் அனைத்தையும் கொளுத்தி -நாசப் படுத்தலின் –ஸ்ரீ வேம்கடம் -என்று பேர் பெற்ற ஸ்ரீ திரு மலை -என்க –

இனி வேம்கடங்கள் -திருவாய் மொழி – 3-3 6- – என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் திவ்ய சூக்திக்கு ஏற்ப
கடம் -பாபம் –வேம் -வேகும் — என்பது முன்றில் என்பது போலே முன் பின்னாக மாரி வேம்கடம் என்றாயிற்று -என்னலுமாம்
பொருள் ஒன்றே .

பொற் குன்றம்
பொன் போலே சீறியதும் -விரும்பத் தக்கதுமாய் இருத்தலின் -பொற் குன்றம் -என்றார்
எம்பெருமான் பொன் மலை -என்றார் ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் -பெருமாள் திரு மொழி –4 10-

வைகுந்த நாடும் –
யத்ர பூர்வே சாத்த்யாஸ் ஸந்தி தேவா -என்றும் -விஷ்ணோர் யத் பரமம் பதம் -என்றும் –
தேவாநாம் பூரயோத்வா -என்றும் –
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்த்தானம் விஷ்ணோர் மகாத்மன-என்றும் –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹா –
என்றும் -சொல்லுகிறபடியே –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரான நித்ய சூரிகளுக்கு இருப்பிடமாய் – ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு போக விபூதியான –
நலமந்தம் இல்லாதோர் நாடாய்-ஸ்ரீ வைகுண்டம் என்னும் பேரை உடைத்தான ஸ்ரீ பரம பதமும் –

வைகுண்ட நாடும் –
வட மொழியில் ஸ்ரீ வைகுண்டம் எனப்படும் ஸ்ரீ திரு நாட்டை ஸ்ரீ வைகுண்ட நாடு என்கிறார் –
விகுண்டரைச் சேர்ந்த நாடு வைகுண்டம் -எனப்படுகிறது .
குடி கதிப்ரதிகாதே -என்னும் வினையடியில் இருந்து பிறந்த சொல் –குண்ட -என்பது –
இவ்வினையடிக்கு -தடங்கல் -என்பது பொருள் -அது நீங்கப் பெற்றவர்கள் விகுண்டர்கள் –
ஆத்ம ஸ்வரூபத்துக்கு இயல்பாய் அமைந்த அறிவினுக்கு தடங்கலாய் உள்ள கன்மத்தின் தொடர்பு அறவே அற்றவர்களான –
நித்ய சூரிகளைச் சொல்கிறது –விகுண்டர்-என்னும் சொல் –
அவர்களை சேர்ந்தது என்னும் பொருளில் -அண் -பிரத்யயம்-வந்து முதலில் உள்ள இ கரம்
ஐ என்று மாறி வைகுண்டம் என்றாயிற்று
இது ததிதவ்ருதி என்பர் -நித்ய சூரிகளை சேர்ந்த இடம் என்பது பொருள்
தமிழில் ஸ்ரீ வைகுண்டத்தை -ஸ்ரீ வானவர் நாடு -என்பதும்
நித்ய சூரிகளை -விண்ணாட்டவர் -என்பதும் இங்கே அறிதற் பாலான .

குலவிய பாற்கடலும் –
பாற்கடலில் பையத் துயின்ற பரமன் அடி பாடி –என்கிறபடி
ஆஸ்ரிதரான தேவர்கள் உடைய கூப்பீடு கேட்பதாக ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து கண் வளர்ந்து அருளுகிற இடம் என்று
விசேஷஞ்ஜர் எல்லாரும் கொண்டாடும்படியாய் இருந்துள்ள ஸ்ரீ திருப்பாற் கடலும் –
குலவுதல் -கொண்டாட்டம் -இப்படிப் பட்ட உகந்து அருளின நிலங்கள் –

குலவிய பாற்கடலும்
துன்புற்றாரை காப்பதற்காக வந்து கண் வளர்ந்து அருளுகிற இடம் என்று நல் அறிஞர் எல்லாம் கொண்டாடும்
இடம் ஆகிய ஸ்ரீ திருப்பாற்கடலும் .
குலவுதல்-கொண்டாடுதல்

உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் –
ஆநந்த நிலயே சேஷ தல்பே வேங்கட பூதரே -இத்யாதிகளிலும் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவே நிகேதன –நாக பர்யங்க முத்சர்ஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரிம் -இத்யாதிகளிலும்
கௌ ஷீதகீ பிராமணத்தில் பர்யங்க வித்தையிலும் சொல்லுகிறபடியே –
ஸ்ரீ திரு வேங்கடமுடையானுக்கும் ஸ்ரீ திரு பாற்கடல் நாதனுக்கும் -வான் இளவரசு ஸ்ரீ வைகுந்த-குட்டனுக்கும் -பர்யங்கமாய் இருக்கிற
தேவரீருக்கு எவ்வளவு ஆனந்தத்தை கொடுக்கும் –
இப்படி அவ்வவ-ஸ்தலங்கள் தோறும் ஸ்ரீய பதியினுடைய திவ்ய மங்கள விக்ரகத்தாலே வந்த ஆனந்தத்தை அறியுமவர்
இவர் ஒருவருமே இறே –
ரம மணாவ நேத்ராய -என்றிவர் தம் அவதாரத்துக்கு பூர்வ அவதாரமான ஸ்ரீ இளைய பெருமாளுக்கு
அந்த திவ்ய தம்பதிகளுக்கு உண்டான ஆனந்த்ததோடு ஒத்த ஆனந்தம் உண்டாய்த்து என்று சொன்னான் இறே ஸ்ரீ ரிஷியும் –

உன் தனக்கு எத்தனை இன்பம் தரும்
கீழ்க் கூறிய மூன்று இடங்களும் இன்பம் விளைவிப்பன –
ஸ்ரீ வேம்கடப் பொற் குன்றத்தில் நிறைந்த வண் கீர்த்தி வாய்ந்த நின்ற திருக் கோலமும் –
ஸ்ரீ வைகுண்ட நாட்டில் செம் தாமரைக் கண் பிரான் காட்டிய இருந்த திருக் கோலமும் –
ஸ்ரீ பாற்கடலில் -கிடததோர் கிடக்கை -என்று கொண்டாடும் சயனத் திருக் கோலமும் –
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பேரின்பம் தருகின்றன -என்க .

நிற்றல் இருத்தல் கிடத்தல் -என்னும் நிலைமைகள் ஏற்ப
ஸ்ரீ வேம்கடமும் ஸ்ரீ வைகுந்தமும் ஸ்ரீ பாற்கடலும் முறைப்படுத்தப் பட்டு உள்ளன .

பரம ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி ஸ்ரீ வேம்கடப் பொற் குன்றம் முன்னரும் –
ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி ஸ்ரீ வைகுண்ட நாடு அதனை எடுத்தும் –
ஆர்த்தி தீர ஆஸ்ரயிக்கும் இடமாதல் பற்றி ஸ்ரீ திருப்பாற்கடல் அதன் பின்னரும் முறைப்படுத்தப் பட்டன -ஆகவுமாம் .

வைகுந்தம் ப்ராப்யமான -முக்தி பெறுவோர் சேரும் இடமான -தாயினும்
வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேம்கடம் – – திரு வாய் மொழி – 3-3 7- -என்ற படி
வைகுந்தத்தில் உள்ள நித்ய சூரிகள் உட்பட அனைவரும் ஸ்ரீ திரு வேம்கடத்தை நாடி-வருதலின் இது பரம ப்ராப்யம் ஆயிற்று -என்க .

சரீர சம்பந்தம் நீங்கி வெகு தொலைவில் உள்ள ஸ்ரீ வைகுந்தம் அடைந்து அங்கு நின்றும் ஸ்ரீ திரு வேம்கடம் திரும்பி வருவதை விட –
இந்த சரீர சம்பந்த்தோடே இந்நில வுலகத்திலேயே அடையும் படி அண்ணி யதாய் உள்ள ஸ்ரீ திருவேம்கடம் நமக்கு சீரிய ப்ராப்யம் அன்றோ –
சரீர சம்பந்த்ததோடே பெறத் தக்க பரம போக்யமான ஸ்ரீ வேம்கடத்தை கூறிய பின்னரே –
சரீர சம்பந்தம் நீங்கிற பின் பெறத் தக்க ப்ராப்யமான ஸ்ரீ வைகுண்ட நாடு கூறப் பட்டது

அதனை அடுத்து அவற்றுக்கு நிகராய் ஆஸ்ரயிக்கும் இடமாய் உள்ள ஸ்ரீ திருப்பாற்கடல் முறைப்படுத்தப் பட்டது .
உய்யக் கொள்வான் -பகவானாலேயே ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் வருவிக்கப் பட்டு –
அண்ணி யதாய் அவன் நின்ற ஸ்ரீ வேம்கடமும்
பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் பட்டதாயும் -அவ் வேம்கடத்துக்கு மூல ஸ்தானமாயும்
அவன் வீற்று இருக்கும் இடமாயும் -உள்ள ஸ்ரீ வைகுந்தம் முதலில் கூறப்பட்டு –
பிரகிருதி மண்டலத்தின் பால் பட்டு அந்த வைகுந்தத்துக்கு தோள் தீண்டியதாய் -அவன் பள்ளி கொண்டு அருளும்
ஸ்ரீ பாற்கடல் பின்னர் கூறப்பட்டது -என்க –

வழுவிலா அடிமை செய்து முக்த அநுபூதியைப் பெறுவதற்கு பாங்காய் அமைந்து இருப்பதால்
ஸ்ரீ வேம்கடம் ஸ்ரீ எம்பெருமானார்க்கு இன்பம் தருகிறது -என்க

கன்மத்துக்கு என்றும் உட்படாத -நித்ய சூரிகளால் சேவிக்கப் படும் மேன்மை உடையவன்
புன்னகை பூத்து அழைத்து -தன் திருவடித் தாமரை தலை மீது வைப்பதனால் அமுதக் கடலுக்குள்
நன்கு மூழ்கும்படி செய்தலின் -ஸ்ரீவைகுந்தம் இன்பம் தருகின்றது -என்க .

விழுமிய முனிவர்களான சனகாதியர் நுகர்ந்து குலவும்படியான இனிமை வாய்ந்து –
பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதன் -தான் கிடக்கும் பண்பினால் –
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்னும்படி பரவசம் ஆக்குதலின் ஸ்ரீ பாற்கடல் இன்பம் தருகின்றது -என்க-

இம் மூன்று இடங்களிலும் ஸ்ரீ எம்பெருமானைத் தன் மீது கொண்ட ஆதி சேஷனாய் இருத்தலின் ஸ்ரீ எம்பெருமானாருக்கு –
ரம மாணாவ நேத்ராய –ஸ்ரீ இராமன் ஸ்ரீ சீதை ஸ்ரீ லஷ்மணன் மூவரும் கானகத்தில் ரமித்தனர் –
என்றபடி திவ்ய தம்பதிகள் போல ஆனந்தம் உண்டாவதாக ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் பணிப்பர்

உன் இணை மலர்த் தாள் –
அநந்தம் பிரதமம் ரூபம் -இத்யாதிகளில் படியே –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைய சோதியிலே -வான் இள வரசு வைகுந்த குட்டன் விஷயமாக –
நிவாஸா சய்யாசன பாதுகாம் ஸூ கோ பதா ந வர்ஷாதப வாரணாதிபி-சரீர பேதைஸ் தவ சேஷ
தாங்கதைர்ய தோசிதம் சேஷ இ தீரி தேஜ நை -என்கிறபடியே அநேக சேஷ வ்ருத்திகளிலும் அந்வயித்து –
சேஷன் -என்னும் திரு நாமத்தை உடையராய் –

பால்யாத் ப்ரப்ர்தி ஸூ ஷ் நிக்த -என்கிறபடியே அவதார தசையிலும்
பால்யம் தொடங்கி பெருமாள் திருத் தொட்டிலோடு-இணைத் தொட்டில் இடாத போது பள்ளி கொண்டு அருளாதே –
அவர் பக்கலிலே அதி வ்யாமுக்தராய் –
முஹூர்த்தம்-அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்ய விவேர்த்த்ர்ரௌ-என்று பிரியில் தரியாமையை விண்ணப்பம் செய்து
மகா ஆரண்யமான-தண்ட காரண்யத்தில் சென்று –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பிரார்தன பூர்வகமாக வழு இலா அடிமைகள் செய்து-

ஸ்ரீநம்பி மூத்த பிரானாக அவதரித்த தசையிலும் அவனை அனுவர்த்திதுக் கொண்டு போந்து –
அங்குத்தைக்கு அந்தரங்கராய் -இருந்துள்ள தேவரீர் உடைய
பாவநத்வ போக்யத்வங்களுக்கு ஒன்றுக்கு ஓன்று போலியாய் -சேர்த்தி அழகை உடைத்தாய்-புஷ்பஹாச ஸூ குமாரமாய்
பரம போக்யமாய் இருந்துள்ள திருவடிகள் –

என் தனக்கும் அது –
கீழ் சொன்னபடியே அந்தரங்கராய்-சர்வஜஞ்ராயிருக்கிற தேவரீருக்கு அவ்வவ விஷயங்களிலே எத்தனை ப்ரீதி உண்டோ –
அப்படியே இவ்வளவும் விமுகனாய்-அஞ்ஞனாய்ப் போந்த அடியேனுக்கு ஸ்வ விஷயமாய் இருந்துள்ள அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும் –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய-ஆனந்தம் பிரதம பர்வ விஷயம் ஆகையாலே -அரையாறு பட்டு –
ஸ்ரீ அமுதனார் உடைய ஆனந்தம் சரம பர்வ விஷயம் ஆகையாலே கரை புரண்டு காணும் இருப்பது –

உன் இணை மலர்த்தாள் என் தனக்கும் அது
தேவரீருக்கு இம்மூன்றும் கூடத் தோன்றும் இன்பம் எவ்வளவோ
அவ்வளவு -அடியேனுக்கு தேவரீருடைய அழகிய திருவடி ஒன்றினாலேயே உண்டாகுகின்ற இன்பம் என்கிறார் .
வகுத்த சேஷியான தேவரீரது ஆதலின் -உரியதும் -ஒன்றுக்கு ஓன்று நிகரானத்தில் ஒப்பற்றதும் –
தலை மேல் புனையும் தன்மையில் மலர் போன்று போக்யமானதுமான திருவடி ஒன்றே அடியேனுக்கு அமையும் .
ஸ்ரீ வேம்கடம் முதலிய எல்லாம் அடியேனுக்கு தேவரீர் திருவடியே -என்றபடி

அது –
அத்தனை இன்பம் தருமது
தம் ஆசார்யர் ஆகிய ஸ்ரீ ஆளவந்தாரது பிரிவு ஆற்றாத ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான் -கரமனை ஆற்றம்கரையிலே-
ஸ்ரீ ஆளவந்தாரை சந்த்தித்து -தம் ஆற்றாமை தவிர்ந்தவராய்
ஸ்ரீ திருவனந்த புரத்து திருக் கோபுரம் அதோ தோன்றுகிறது -அங்கே போய் ஆயிரம் பைந்தலைய-அநந்த சயனனை
சேவித்து வாரும் -என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்ய –
இவரும் –என்னுடைய ஸ்ரீ திருவனந்த புரம் எதிரே வந்தது என்று -ஸ்வ ஆசார்யரான ஸ்ரீ ஆள வந்தாரைக்-காட்டி அருளி –
ஸ்ரீ பெருமாள் சேவிக்காமலே திரும்பினதாக கூறப்படும் ஐதிஹ்யம் இங்கு-அனுசந்திக்க தக்கது .

இவ்விடத்தில்
ஏனைவ குருணா யஸ்ய நயாச வித்யா ப்ரதீயதே
தஸ்ய வைகுண்ட துக்தாப்த்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
எந்த ஆசார்யனாலேயே எவனுக்கு சரணாகதி விதியை அளிக்கப்படுகிறதோ
அவனுக்கு அந்த ஆசார்யனே வைகுண்டமும் பாற்கடலும் த்வாரகையும் -எல்லாம் ஆவான் – என்னும் ஸ்லோகமும்

வில்லார் மணி கொழிக்கும் வேம்கடப் பொற் குன்ற முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளா மிருளோடே மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த அவர் -என்னும் ஸ்ரீ ஞான சாரப் பாசுரமும் அனுசந்திக்கத் தகன .

இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –

இவை ஈந்து அருளே –
எனக்கு புருஷார்த்தம் தேவரீர் உடைய-திருவடிகளே யான பின்பு -அவற்றை தேவரீர் தாமே
பரகத ச்வீகாரமாக கொடுத்து அருள வேணும்
ஈதல்-கொடுத்தல் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -நின் செம்மா பாத பற்புத் தலை மேல் சேர்த்து ஒல்லை -கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று பிரதம பர்வத்தில் நம் ஆழ்வாரும் இப்படியே அபேஷித்து அருளினார் இறே –

இவை ஈந்தருளே –
இத்தகைய திருவடிகளைத் தந்து அருள வேணும் -என்று தமது தகுதிக்கு ஏற்ப கோருகிறார் .
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்க்க வேணும்
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ எம்பெருமானைப் பிரார்த்தித்தது போலே
ஸ்ரீ அமுதனார் ஸ்ரீ எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார் -என்க –

ஈந்து அருள்
ஈ என் கிளவி இழிந்தோர் கூற்றே -என்றபடி தம் இகழ்வு தோன்ற இரக்கம் உண்டாகும் படி
இவ்வினைச் சொல்லை வழங்கிய நயம் நினைத்து இன்புறத் தக்கது …

தெழி குரல் அருவித் திருவேங் கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே–3-3-1-

தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே–3-3-3-

தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திரு வேங்கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே–6-10-3-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன மினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-

வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திண் திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேம் கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர்–-ஸ்ரீ பொய்கையார்-37

நின்றதுவும் வேம்கடமே பேரோத வண்ணர் பெரிது–39-

நின்றதுவும் வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே விண்ணவர் தம் வாய் ஓங்கு தொல் புகழான் வந்து–-ஸ்ரீ பூதத் ஆழ்வார்-25

பூம் கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும் வேம்கடமே யாம் விரும்பும் வெற்பு–53-

வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேம்கடத்தான் உள்ளத்தின் உள்ளே உளன்–39-

விரி திரை நீர் வேம்கடம்–ஸ்ரீ பேய் ஆழ்வார்-62-

திரண்டருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து–63-

பொங்கு நீர் செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடம் அடை நெஞ்சமே !–-பெரிய திரு மொழி-1-8-1-

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்
நின்றது எந்தை ஊரகத்து–இத்யாதிகள் அனுசந்தேயம்

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –75-செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்- இத்யாதி —

May 25, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி இவர் தம்குணத்திலே வித்தராகிற படியைக் கண்டு –
நீர் இது செய்வது – ஸ்ரீ பகவத் வைலஷ்ணயத்தைக் காணும் அளவு இறே -கண்டவாறே -நீரே யதிலே தோள்
மாறுகிறீர் என்று ஸ்ரீ எம்பெருமானார்க்குக் கருத்தாக –
ஸ்ரீ எம்பெருமான் தன் அழகோடு பிரத்யஷித்து -உன்னை விடேன் -என்று இருந்தாலும்
தேவரீர் உடைய குணங்களே வந்து என்னை மொய்த்து நின்று அலையா நிற்கும் -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

இப்படி இவர் தம்முடைய குண சேஷ்டிதங்களை அனுசந்தித்து வித்தராய் சொன்ன வார்த்தையை ஸ்ரீ எம்பெருமானார் கேட்டருளி –
இப்பொழுது நீர் அத்யவ அதிசயத்தாலே இப்படி எல்லாம் சொன்னீர் -ஆகிலும்
ஸ்ரீ பகவத் விஷயத்திலே சென்று -அங்கேற வைலஷண்யங்களைக் கண்டு -அவ்விடத்தில் ரசம் அறிந்தீர் ஆகில் –
இந்த ப்ராவண்யம் நிலை நிற்குமோ என்று திரு உள்ளமாய் அருள –
ஸ்ரீ சர்வேஸ்வரன் சங்கு சக்ராதி திவ்ய ஆயுத அலங்க்ர்தனாய் கொண்டு அடியேன் இருந்த இடம் தேடி வந்து
தன் வைலஷ்ண்யத்தை அடியேனுக்கு முற்றூட்டாகக் காட்டி உன்னை நான் விடுவது இல்லை என்று என் முன்னே நிற்கிலும் –
அவன் வைலஷண்யத்தில் ஈடுபடாதே தேவரீர் பக்கலில் தானே ஈடுபடும்படி –தேவரீர் உடைய கல்யாண குணங்கள் கட்டடங்க
வந்து அடியேனை சூழ்ந்து கொண்டு ஆகர்ஷியா நிற்கும் –என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இங்கனம் தம் குணங்களில் ஈடுபடுவதைக் கண்ட ஸ்ரீ எம்பெருமானார் -இவ் ஈடுபாடு ஸ்ரீ பகவானைக் காணும் கண்ணுறும்
அளவு தானே -கண்டதும் இங்கே ஈடுபாடு அங்கே மாறி விடும் அன்றோ -என்று கருதுவதாகக் கொண்டு –
ஸ்ரீ பகவான் தான் அழகு அனைத்தையும் புலப்படுத்திக் கொண்டு கண் எதிரே வந்து -உன்னை விடேன் என்று இருந்தாலும் –
தேவரீர் குணங்களே வந்து போட்டி இட்டு நாலா புறங்களிலும் சூழ்ந்து மொய்த்துக் கொண்டு
என்னை நிலை குலைந்து ஈடுபடும்படி செய்யும் -என்கிறார் .

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

பத உரை .
செய்த்தலை-வயல் ஓரங்களிலே
சங்கம் -சங்குகள்
செழு முத்தம் -செழுமை வாய்ந்த முத்துக்களை
ஈனும் -பிரசவியா நிற்கும்
திருவரங்கர் -ஸ்ரீ திருவரங்கத்திலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ பெரிய பெருமாள்
கைத்தலத்து -திருக் கரங்களிலே
ஆழியும் -திருச் சக்கரத்தையும்
சங்கமும் -திருச் சங்கையும்
ஏந்தி -எடுத்துக் கொண்டு
நம் கண் முகப்பே -நமது கண் எதிரிலேயே
மொய்த்து -அழகு முதலிய குணங்களினாலே மொய்த்துக் கொண்டு
அழைத்து -தேவரீர் இடம் அடியேன் ஈடுபட்டு இருக்கும் நிலையைக் குலைத்து
உன்னை விடேன் என்று -உன்னை நான் விட மாட்டேன் என்று
இருக்கிலும் -சொன்னபடியே நிலை பேராமல் இருந்தாலும்
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
நின் புகழே -தேவரீர் உடைய திருக் குணங்களே
வந்து என்னை முற்றும் மொய்த்து நின்று -வந்து என்னை எல்லாப் பக்கங்களிலும் மொய்த்துக் கொண்டு நின்று
அலைக்கும்-ஈடுபடுத்தும்

வியாக்யானம் –

வயல் தலைகளிலே சங்குகள் ஆனவை அழகிய முத்துக்களை பிரசவியா நின்று உள்ள ஸ்ரீ கோயிலிலே நித்ய வாசம்
பண்ணுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் –
கையினார் சுரி சங்கு அனல் ஆழியர்-அமலனாதி பிரான் – 7-என்கிற படியே
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும் படியான திருக் கையிலே
அணியார் ஆழியும் சங்கமும் ஏந்திக் கொண்டு -திருவாய் மொழி -3 5-8 – என்கிற படியே –
என் கண் வட்டத்திலே சாஷாத் கரித்து.தம்முடைய சௌந்தர்யாதிகளாலே தேவரீர் விஷயமாக வென்னுடைய
நிலை குலைக்கு ஈடான புத்தி பேதத்தை பண்ணி –
உன்னை நாம் விடோம் -என்று பிரதிஜ்ஜை பண்ணிக் கொண்டு ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக இருக்கிலும்
தேவரீர் உடைய கல்யாண குணங்களே வந்து என்னை எங்கும் ஒக்க மொய்த்துக்
கொண்டு நின்று அஹமஹமிகயா ஸ்வ வைலஷ்ணயத்தை காட்டு ஆகர்ஷியா நிற்கும் .
ஆகையால் ஸ்ரீ பகவத் வைலஷ்ண்யம் கண்டாலும் -அதில் தோள் மாறக் கூடாது என்று கருத்து .

மொய்த்தல் -திரளுதல்
அலைத்தல்-நின்ற விடத்தில் நில்லாத படி சலிப்பித்தல்
மெய்த்தலத்து -என்று பாடமான போது
மெய்யான தலத்திலே மெய்ந்நிலத்திலே -என்றபடி –
அதாவது –
நின்னை விடேன் என்று இருக்கிற இருப்பு ஐந்த்ரஜாலிகம் போலே மெய் போலும்-பொய் அன்றிக்கே -சத்யமேயாய் இருக்கை –
சத்தியமாகவே வுன்னை விடேன் என்று கண் முகப்பே இருக்கிலும் என்றபடி ..

செய்களிலே சங்கு நிறைந்த -போக்யதை -ஸ்ரீ அரங்கனின் வண்மை சொல்ல வேணுடுமோ
சங்கமாம் பிரணவ விமானம் செழு முத்தமாய் -ஸ்ரீ முத்தனார் – வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும் திருக்கையில் திவ்யாயுதங்கள்
திரி தந்தாகிலும் போலே ஸ்ரீ அமுதனார் -உருவ வெளிப்பாடு இல்லை–ஸ்ரீ அரங்கன் நான் இருக்கும்மிடம் தேடி வந்து
ஸ்ரீ ஸ்வாமி வந்து கை கொண்டது போல- முற்றூட்டாக காட்டி கொண்டு–
என் அமுதனை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா நிலை-இங்கு ஸ்ரீ அமுதனாருக்கு-
போனால் போகிறது என்று ஸ்ரீ ஆழ்வார் உள்ளம் மகிழ பார்த்து வைத்தேன்.. இவர் இங்கு அதுவும் இல்லை என்கிறார்
இதுவும் தன்னால் இல்லை-உன் கல்யாண குணங்களே என்னை சூழ்ந்து பேராமல் என்னை வைத்தது என்கிறார் ஸ்ரீ அமுதனார்–
ஆழியும் சங்கமும் ஏந்தி -நிறைய பாசுரங்களில் சங்கு சக்கரம் – நம் கண் முகப்பே -ஸ்ரீ ராமாநுஜரையும் கூட்டி என்றுமாம் –
பரதானுஜன் -ஸ்ரீ ராமானுஜன் என்று கூட சொல்லிக் கொள்ளாமல் சத்ருக்கனன் ராமானுஜன்-பரதன் –
புகழ் குணம் மொய்த்த காரணத்தால் -போலே இங்கும் –

செய்த தலைச் சங்கம் –
சூழ் புனல் அரங்கம் -என்றும்
பூகி கண்ட த்வயஸ சரசஸ் நிகக்த நீரோப கண்டாம்–என்றும் சொல்லுகிறபடியே –
திருக் காவிரியில் ஜல சம்ருத்தியாலே கோயில் சுற்றும் இருக்கிற வயல்களுக்கும் திரு நந்தவவ னங்களுக்கும் நீர் பாய்ந்தால்
அந்த வயல் தலையில் ஜலத்தோடே வந்த சங்கங்கள் அங்கே நிற்கும் இறே –அப்படிப்பட்ட சங்கங்கள் ஆனவை –

செழு மித்த மீனும் –
அழகிய முத்துக்கள் பிரவசியா நின்றுள்ள –ஜல சம்ருத்தியை உடைத்தான ப்ரவாஹத்தோடே வந்த சங்கங்கள் ஆகையாலே –
அவற்றுக்கு அழகிய முத்துக்களை ஈனுகையே ஸ்வ பாவமாயிருக்கும் இறே –
இவர் அந்த வைலஷ்ண்யத்தை சதா அனுபவித்து கொண்டு இருந்தவர் ஆகையாலே –
அத்தை இட்டே அந் நகரத்தை வர்ணிக்கிறார் காணும் –

செய்த்தலை ..முத்தம் ஈனும் –
ஈனும் -என்னும் பெயர் எச்சம் ஸ்ரீ திருவரங்கத்தொடு இயையும்-
ஈனும் ஸ்ரீ திருவரங்கத்தை உடையவர் ஸ்ரீ பெரிய பெருமாள் -என்க –
தலை-ஓரம் -ஏழனுருபு என்னலுமாம் –
செழு முத்தம்-பண்புத் தொகை -நல்ல முத்து -என்றபடி –
வெள்ளத்திலே வரும் சங்குகள் வயல்களின் வரப்பு ஓரங்களிலே ஒதுக்கப்பட்டு நல்ல முத்துக்களை அங்கே ஈனுகின்றன -என்றபடி
இதனால்-செழு நீர் திருவரங்கம் -என்றது ஆயிற்று
புள் நந்துழாமே பொருநீர்த் திருவரங்கா -திரு விருத்தம் -28 – என்று ஸ்ரீ நம் ஆழ்வார்
அலை எறியும் நீரும் சங்கமும் திருவரங்கத்தில் உள்ளதாக வருணித்து இருப்பதும் காண்க –
நந்து -சங்கு

திருவரங்கர் –
இப்படிப் பட்ட ஸ்ரீ ரங்க ஸ்தலத்துக்கு – நிர்வாஹரான ஸ்ரீ பெரிய பெருமாள் –

கைத் தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் -என்றும் –
கூரார் ஆழி வெண் சங்கம் ஏந்தி -என்றும் –
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் -என்றும் சொல்லுகிறபடியே –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும் படியான அழகிய ஸ்ரீ திருக் கைகளிலே –
ஸ்ரீ திரு ஆழி ஆழ்வானையும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் தரித்துக் கொண்டு இருந்தால் –
அந்த சேர்த்தி-அழகு -வாக்குக்கு நிலம் அன்று இறே –
திருக் கைகளும் திரு ஆயுதங்களும் தட்டு மாறி ஒன்றுக்கு ஓன்று பரபாகமாய் காணும் இருப்பது –
இப்படி அணியார் ஆழியும் சங்கமும் ஏந்திக் கொண்டு தர்சநீயராய் –

என் கண் முகப்பே –
என் கண் வட்டத்திலே –சாஷாத்கரித்து- மொய்த் தலைத்து –தம்முடைய சௌந்திரயாதிகளாலே
தேவரீர் விஷயமான என்னுடைய அத்யாவச்யத்தை குலைக்கைக்கு ஈடான புத்தி பேதத்தை பிறப்பித்தும்-
நின்ற இடத்தில் நில்லாத படி துடிப்பித்தும் —

கண் முகப்பே வீடேன் என்று இருப்பினும் –
தாம் ஈடுபடாத ஸ்ரீ எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் திருவரங்கத்தை அமுதனார் இங்கனம் வருணித்து இருப்பது
சிறப்பிற்கு உருவாக அன்று –
விடாது ஆட்படுத்தி ஸ்ரீ திருவரங்கர் முற்படுவதை குறிப்பால் உணர்த்தும் நோக்கம் உடையது அஃது என்று உணர்க –
நீர்மையின் பெருக்கினால் ஸ்ரீ திருவரங்க ஷேத்ரத்திலே -செய்யிலே -சங்கமாம் ஸ்ரீ பிரணவ விமானம் —
செழு முத்தமாய் –ஸ்ரீ முத்தனார் -எனப்படும் ஸ்ரீ பெரிய பெருமாளைத் தோற்றுமாறு செய்கிறது -என்பதே
ஸ்ரீ அமுதனார் வருணையின் உட் பொருள் என்று உணர்க

அரும் பொருளாய் நின்ற ஸ்ரீ அரங்கன் தன் நீர்மையின் பெருக்கினால் ஆட் பார்த்து உழி தருமவன்
ஆதலின் -விடேன் என்று கண் முகப்பே இருக்க மாட்டானா ?
செழு முத்தம்-செழுமையான முத்தம் -பண்புத் தொகை -நன் முத்தம் என்றபடி –
முத்தங்கி சாத்திமுத்து மயமாய் தோன்றும் ஸ்ரீ திருவரங்கரே செழு முத்தம்-என்க –

கைத் தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி
தம்மை உள்ளபடி காட்டக் கண்ட ஸ்ரீ திருப்பாண் ஆழ்வாருக்கு –
கையினார் சுரி சங்கு அனல் ஆழியராய் -ஸ்ரீ திருவரங்கர் சேவை சாதித்தது போலே
அடியேனுக்கும் சேவை தரினும் ஈடுபடேன் -என்கிறார் .

ஆழியும் சங்கமும் ஏந்தி என்ன அமைந்து இருக்க
கைத்தலத்து -என்று மிகை பட கூறியது
கைகளும் ஆயுதமுமான சேர்த்தி அழகு தோற்றற்கு -என்க .

கையில் ஆழியும் -என்னாது கைத்தலத்து ஆழியும் -என்றது
கையின் பரப்புடைமை தோற்றற்கு -என்க –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -என்றாள் ஆண்டாளும் .

காதலியின் பால் காதலன் தன்னை அலங்கரித்து செல்வது போலே
ஸ்ரீ திருவரங்கர் என்பால் வேட்கை மீதூர்ந்து தம்மை ஆழியும் சங்கமும் கொண்டு அலங்கரித்து வரினும் –
நான் அவர் இடம் ஈடுபாடு கொள்ள மாட்டேன் -என்கிறார்
எல்லா ஆபரணங்களும் இவைகளே என்னலாம்படியான அணியார் ஆழியும் சங்கமும் எந்துமவர்–திருவாய் மொழி -8 3-6 – –
தம் மனம் சூழ -சுழலும்படி -வருவதாக ஸ்ரீ நம் ஆழ்வார் அதிசங்கைப்படும்
ஸ்ரீ பகவானை ஸ்ரீ அமுதனார் மதிக்க மாட்டேன் என்கிறார் .

மெய்த்தலத்து -என்ற பாடமான போது –
மெய்யான தலத்திலே – மெய் நிலத்திலே -என்றபடி -அதாவது –
நின்னை விடேன் என்று இருக்கிற இருப்பு -ஐந்திர ஜாலிகம் போலே மெய் போலும் பொய் அன்றிக்கே சத்தியமாய் இருக்கை –
மொய்த்தல்-திரளுதல் –அலைத்தல் -நின்ற இடத்தில் நில்லாதபடி துடிப்பித்தல் –
உன்னை விடேன் என்று இருக்கிலும் -உன்னை நாம் விடக் கடவோம் அல்லோம் -என்று பிரதிக்ஜை பண்ணிக் கொண்டு
ஸ்தாவர பிரதிஷ்டியாக அடி பேராது இருக்கிலும்-

நம் கண் முகப்பே –
ஸ்ரீ திருவரங்கர் கூரார் ஆழி வெண் சங்கேந்தி வந்து தன் சௌந்தர்யம் முதலிய குணங்களில் ஈடுபடுத்த முற்படினும்
தாம் நிலை பேராது நிற்றலுக்கு ஸ்ரீ ஸ்வாமியை சாஷியாக சேர்த்து கூறும் நோக்கம் உடையவராய் –
என் கண் முகப்பே -என்னாது –நம் கண் முகப்பே -என்கிறார் .

பிரத்யஷதாமுபகதச்த்விஹா ரங்கராஜ – ஸ்ரீ எதிராஜ விம்சதி -என்றபடி தேவரீருக்கு ப்ரத்யஷமாகத் தோற்றும்
ஸ்ரீ திருவரங்கர் அடியேனுக்கும் கண் முகப்பே தோற்றி தேவரீர் இடம் அடியேன் கொண்ட ஈடுபாட்டினை-குலைக்க முற்படினும்
அடியேன் சிறிதும் நிலை பெயரேன் என்றார் ஆயிற்று .

என் கண் முகப்பே -என்னும் பாடமே இங்கு இருந்து இருக்கலாம் என்று பூர்வர்கள் உரைகளில் இருந்து தெரிகிறது
நம் கண் முகப்பே மாவேகிச் செல்கின்ற மன்னவரும் –இரண்டாம் திருவந்தாதி -69 – என்னும் இடத்தில் போலே
இங்கும் ஓதி ஓதி அந்தப் பாடமே தொடர்ந்து விட்டது என்று தோன்றுகிறது -அறிஞர்கள் ஆராயக .

மொய்த்து அழைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும்
ஸ்ரீ திருவரங்கர் கையும் ஆயுதமுமான அழகுடன் என் கண் வட்டத்திலே சாஷாத்காரம் கொடுத்து-
தம் குணங்களினால் தேவரீர் விஷயத்தில் அடியேன் ஈடுபட்டு நிற்கும் நிலை குலையும்படியாக புத்தியை மாறாடச் செய்து –
உன்னை இனி நாம் விடோம் -என்று பிரதிஜ்ஜை செய்து கொண்டு –அந் நிலையில் சிறிதும் பேராமல் நிலை நிற்பினும் –
அடியேன் அங்கே ஈடுபட கில்லாது –
தேவர் குணங்களே வந்து வலிந்து தம் பால் இழுத்துக் கொண்டு விடும் என்கிறார் .

அலைத்து –
அலையும்படி செய்து–நிலை கொள்ளாது அசைதல்

இங்கு மெய்த்தலைத்துன்னை-என்று பாடம் இருக்கலாம் என்று தோற்றுகிறது .
மெய்த்து -உரு வெளிப்பாடு போல் அல்லாது உண்மையான சாஷாத்காரத்தை கொடுத்து -என்றபடி .
ஆன்றோர்கள் ஆய்ந்து முடிவு கூறுக .
இனி மெய்த்தலத்துன்னை-என்று
மற்று ஒரு பாடம் உள்ளதாக ஸ்ரீ மணவாள மா முனி காட்டி உள்ளார் .
அப்பொழுது மெய்த்தலத்து -என்பதற்கு மெய்யான நிலத்தில் -என்று பொருள் .
அதாவது ஸ்ரீ திருவரங்கர் -உன்னை விடேன் என்று இருக்கும் இருப்பு -இந்திர ஜாலம் போலே
மெய் போன்ற பொய் தோற்றம் அன்று -உண்மையாகவே தோற்றி நிற்றல் -உன்னை விடேன் என்று
உண்மையாகவே கண் முகப்பே இருக்கிலும் -என்றபடி .இங்கனம் அவரே அதனை விளக்கி உள்ளார் .

இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –

நின் புகழே –
ஏய்ந்த பெரும் கீர்த்தி -என்னும்படியான தேவரீர் உடைய கல்யாண குணங்கள்-

வந்து -என்னை முற்றும் நின்று -மொய்த்து அலைக்கும் –
அடியேன் இருந்த இடம் தேடி வந்து விஜாதீயர்க்கு இடம் கொடாதபடி -அடியேனை எங்கும் ஒக்க பரிவேஷ்டித்து கொண்டு நின்று –
பகவத் வை லஷண்யத்தில் கால் தாழ்த்தாத படி -அஹம் அஹம் இகயா ஸ்வ ஸ்வ வை லஷண்யத்தைக் காட்டி
ஆகர்ஷியா நிற்கிறன -ஆகையால்
ஸ்ரீ பகவத் வைலஷண்யத்தை கண்டாலும் அதிலே தோள் மாறக் கூடாது என்று கருத்து –

கச்சதா மாதுலகுலம் பரதே நத தானக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரச்க்ர்த –
சுலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாசதே -ஹச்தச்த முதகம் த்யக்த்வா கனஸ் தமபி வாஞ்சதி -என்னக் கடவது -இறே –

எட்ட இருந்த குருவை இறை அன்று என்று விட்டோர் பரனை விருப்புதல் பொட்டு எனத் தன் கண் செம்பளித்து இருந்து
கைத் துருத்தி நீர் தூவி அம்புதத்தைப் பார்த்து இருப்பான் அற்று-என்று ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானாரும் அருளிச் செய்தார் இறே–

நின் புகழே –முற்றும் நின்றே –
புகழ்-புகழப்படும் குணங்களுக்கு ஆகு பெயர்
மேலே மொய்த்தல் -திரளுதல்-சொல்ல படுவதால்- புகழ் என்பது எல்லா நல் குணங்களையும் கூறுகிறது .
புகழே -ஏ பிரிநிலையின் கண் வந்தது
ஸ்ரீ திருவரங்கர் புகழ்கள் அல்ல -ஸ்ரீ எம்பெருமானாரே ! நின் புகழே அலைக்கும் -என்றபடி
அலைத்தல்-நிலை கொள்ளாதபடி ஈடுபடச் செய்தல் .

ஸ்ரீ திருவரங்கர் ஆழியும் சங்கமும் ஏந்திய கைத்தலத்து அழகு என் திறத்து பயன் பெற வில்லை .
ஸ்ரீ எம்பெருமானார் முக்கோல் ஏந்திய கைத்தலத்து அழகே என்னை ஈடுபடச் செய்கிறது .
சஸ்த்ரம் பிடித்த ஸ்ரீ அரங்கர் கையில் எனக்கு ஈடுபாடு இல்லை .
சாஸ்திரம் பிடித்த ஸ்ரீ எம்பெருமானார் கையில் தான் எனக்கு ஈடுபாடு .
ஸ்ரீ திருவரங்கரே நேரே வந்து தம் அழகைக் காட்டி உன்னை விடேன் என்று நிலை நிற்பினும்
நிலை குலையாதவன் -அடியேன் .
ஸ்ரீ எம்பெருமானார் தாம்நேரே வரா விடினும் அவர் குணங்கள் தாமாகவே வந்து எங்கும் ஒக்க என்னை சுற்றி
நின்று போட்டி இட்டுத் தம் அதிசயத்தை அறிவுறுத்திட அவற்றில் நிலை கொள்ளாது
ஈடுபட்டு நிற்பவன் அடியேன் .

ஸ்ரீ ஆசார்ய விஷயத்தை பற்றினவன் திறத்து ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே மேல் விழுந்து உகப்பின் மிகுதியால்
தன் வடிவைக் காட்டி ஈடுபடுத்த முற்படுவது இயல்பு –
ஆதலின் அவன் அங்கனம் முற்படினும் என் ஸ்ரீ ஆசார்ய நிஷ்டையை குலைக்க ஒண்ணாது என்கிறார் இப் பாசுரத்தில் .
ஸ்ரீ தேவ பிரான் தன் கரிய கோலத் திரு உருவை ஸ்ரீ மதுர கவியாருக்கு தானே மேல் விழுந்து காட்டினான் அன்றோ
ஸ்ரீ மதுர கவியார் கண்டார்
ஸ்ரீ அமுதனாரோ விடேன் என்று தம் அழகைக் காட்டி ஸ்ரீ திருவரங்கர் நிலை நிற்பினும்
கண் எடுத்தும் பாராது ஸ்ரீ எம்பெருமானார் குணங்களிலேயே தாம் ஈடுபட்ட நிலை
குலையாமல் இருப்பதாக பேசுகிறார் ..

ஸ்ரீ பெருமாளோடு இணைத்து வைப்பவளான ஸ்ரீ பிராட்டியைப் பற்றி இருப்பினும் இணைப்பதற்கு
ஸ்ரீ பெருமாளை எதிர் பார்த்தாக வேணும்
ஸ்ரீ ஆசார்யனையே உபாயமாக பற்றிடிலோ ஸ்ரீ பெருமாள் தாமே மேல் விழுந்து தம்மை இவனுக்கு கொடுத்திடுவார் -என்று அறிக .
ஸ்ரீ ஆசார்யனைத் தவிர தேவு மற்று அறியாத நிலை தமக்கு வாய்த்து இருப்பதை
ஸ்ரீ அமுதனார் இந்தப் பாசுரத்தில் விண்ணப்பித்தார் ஆயிற்று –

இதில் மூவர் அனுபவம்- சத்ருக்னன்/ மதுரகவி ஆழ்வார் /தம் –சரம பர்வத நிலையை இங்கு அருளுகிறார்-
உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது -ஒரு வார்த்தை மற்ற ஆழ்வார்கள் சிரித்து இருப்பார்-
நேராக வந்தான்-ஸ்வாமி குணமே வந்தது இங்கே-அவன் நேரில் வந்தால் தான் காரியம் ஆகும்-
நாமம் தூரச்தன் ஆனாலும் காரியம் செய்யும் ஸ்வாமி குணமே காரியம் செய்யும்-
போனால் போகிறது என்று ஆழ்வார் உள்ளம் மகிழ பார்த்து வைத்தேன்..இவர் இங்கு அதுவும் இல்லை என்கிறார்.
இதுவும் தன்னால் இல்லை-
உன் கல்யாண குணங்களே என்னை சூழ்ந்து பேராமல் என்னை வைத்தது என்கிறார் ஸ்ரீ அமுதனார்–

————

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் -பெரியாழ்வார் திருமொழி-–4-1-7-

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் –4-1-7-

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே -நாச்சியார் திருமொழி-–14-8-

இரு கரையர்களாக இருப்பார்கள் உனக்கு ஒப்பார்களோ-
-குற்றத்தையும் குணத்தையும் கணக்கு இட்டு செய்யும் அவர்கள் உனக்கு ஒப்பார்களோ மாட்டார்கள் இறே–
கர்ம அனு குணமாக சிருஷ்டிக்கும் அவன் இறே அவன்
கருதும் இடம் பொருது சக்கரம் -பாஞ்ச சன்யம் திரு ஆபரணம் மட்டும் இல்லை-

கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே -திரு வாய் மொழி–6-9-1-

சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் –7-2-1-

அமர்கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன்–8-10-9-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-