ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –93-கட்டப் பொருளை மறைப் பொருளென்று – இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

அவர் இதுக்கு ஒன்றும் அருளிச் செய்யாமையாலே –நிர்ஹேதுகமாகாதே -என்று தெளிந்து-
என் பிரபல கர்மங்களை தம்முடைய கிருபையாலே அறுத்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் –ஒருவர் அபேஷியாது இருக்க –
தாமே வந்து -குத்ருஷ்டி மதங்களை நிராகரித்தவர் அன்றோ –
அவர் செய்யுமது வெல்லாம் நிர்ஹேதுகமாக வன்றோ -விருப்பது -என்கிறார்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீஎம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து இத்தனை-நாளும் என்னை அங்கீ கரிக்கையில்
கால் கண்டித்து கொண்டு இருந்த தேவரீர் -இப்போது அடியேன் பக்கல்-ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க –
இப்படி அங்கீ கரிக்கைக்கு ஹேது ஏது-அத்தை சொல்லிக் காணீர்-என்று இவர் மடியைப் பிடித்தாலும் –
அதுக்கு அவர் மறு உத்தரம் சொல்லாதே கவிழ்ந்து தலை இட்டு இருந்தவாறே –
இப்படி நிர்ஹேதுகமாக கண்டிடுமோ என்று நினைத்து இதிலே —
என்னுடைய பிரபல பாதகங்களை வாசனையோடு கூட தம்முடைய கிருபை யாகிற கட்கத்தை-சங்கல்பம் ஆகிற-உறையில் –
நின்றும் உருவி அத்தாலே சேதித்து பொகட்டு பிரபன்ன குலத்துக்கு எல்லாம் ஒக்க உத்தாரகரான-ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்வ அஞ்ஞான விஜ்ர்ம்பிதமான அபார்த்தங்களை எல்லாம் வேதார்த்தங்கள் என்று-பரம மூடரான குத்ருஷ்டிகள் சொலுகிற
ப்ராமக வாக்யங்களை நிவர்ப்ப்பித்த பரம உபாகரர் ஆகையாலே
அவர் செய்வது எல்லாம் நிர்ஹேதுகமாக அன்றோ இருப்பது என்று தெளிந்து தம்மிலே தாமே சமாஹிதராய்-சொல்லுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

தாம் கருதிய படியே பதில் கிடையாமையாலே -தம் வினைகளை வேரற களைந்து தம்மை ஏற்று அருளியது –
ஹேது வற்றது-என்று தெளிந்து -அத்தகைய ஸ்ரீ எம்பெருமானார்
எவருமே வேண்டாது இருக்க தாமாகவே வந்து -குத்ருஷ்டி மதங்களை களைந்து – உலகினர்க்கு உதவினவர் அன்றோ –
அவர் செய்யும் அவை யாவையும் -கருணை யன்றி வேறொரு-காரணம் அற்றவைகளாய் அல்லவோ -உள்ளன -என்கிறார் .

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

பத உரை –
கிட்டி -நெருங்கி வந்து
கிழங்கோடு -அடிக் கிழங்கோடு
தன் அருள் என்னும் -தம்முடைய கிருபை என்னும்
ஒள் வாள் உருவி -பளபளத்து விளங்குகிற வாளை -உறையினின்றும் -வெளியே எடுத்து
வெட்டிக் களைந்த -வெட்டி வீசி எறிந்த
இராமானுசன் என்னும் -ஸ்ரீ எம்பெருமானார் என்கிற
மெய்த்தவன் -ஆத்மாவுக்கு உண்மை நிலையாய் அமைந்த சரணாகதி செய்தவர்
கட்டப் பொருளை -கஷ்டமான அர்த்தங்களை
மறைப் பொருள் என்று -வேதத்தினுடைய நேரிய பொருளாகும் என்று
கயவர் -கீழ்பட்ட மக்கள் -குத்ருஷ்டிகள்-
சொல்லும் பெட்டை -சொல்லுகிற ஏமாற்று பேச்சுக்களை
கெடுக்கும் -தூஷித்து தொலைக்கும்
பிரான் அல்லனே -உபகாரகர் அல்லரோ .

வியாக்யானம் –
இண்டைத் தூறு போலே அண்ட ஒண்ணாதபடி யிருக்கிற என்னுடைய மகா பாபங்களைக் கண்டு -பிற்காலியாதே –
வந்து கிட்டி மீளவும் கிளருகைக்கு உறுப்பாய் இருக்கிற வாசனையாகிற கிழங்கோடு கூடத் தம்முடைய கிருபை யாகிற
தெளியக் கடைந்த வாளை- அங்கீகார அவசரம் வரும் தனையும் புறம் தோற்றாதபடி
மறைத்துக் கொண்டு இருக்கிற தம்முடைய சங்கல்பமாகிற உறையை கழற்றி சேதித்து பொகட்ட –
பிரபன்ன ஜன கூடஸ்தரான ஸ்ரீ எம்பெருமானார்
பரம் ப்ரஹ்மை வாஜ்ஜம் பிரம பரிகதம் சம்ஸ்ரதி-இத்யாதிப் படியே -நிஹீதரமான அர்த்தங்களை-வேதார்த்தங்கள் என்று –
கயவரான குத்ருஷ்டிகள் -சொல்லுகிற ப்ராமக வாக்யங்களைப் போக்கின-உபகாரகர் அன்றோ –
அவர் செய்து அருளுவது எல்லாம் நிர் ஹேதுகமாக இருப்பதன்றோ -என்று கருத்து –

கட்டம் -கஷ்டம்
பெட்டு -ப்ராமக வாக்கியம்
மெய்த்தவனே -ஸ்வரூப அநு ரூபமாகையாலே -யதாவாய் இருந்துள்ள சரணாகதி ரூப தபஸ்ஸை வுடையவன் என்கை –
தஸ்மான் நியாச மோஷான் தபஸா மதி ரிக்த மாஹூ-தைத்தி-நாரா – 5- என்று
தபச்சுக்களில் மிக்க தபச்சாக சொல்லிற்று இறே-சரணா கதியை –

அருள் -கருணை கதி -உறை -சங்கல்ப ரூபம் –சர்ப்ப தோஷம் செல்வம் -இத்தனைக்கும் கிட்ட -அருளி
மோக்ஷம் தருவார் தெரிய வேண்டாம் -உறை –விசுவாசம் பிறப்பித்து –மீண்டும் மீண்டும் சேவித்து –
அருள் ஒள் வாள் உருவி -வினைகளை போக்கி -பொழுதே பல காலும் போயின என்று அஞ்சி அழும் படி அன்றோ பண்ணுவார்-
வாள் வீசும் பரகாலன் -அணைத்த வேலும் – தன் அருள் -பிரதம பர்வத்தில் அவர் வீச வேண்டும் –
இங்கு நம் கார்யம் ஒன்றுமே இல்லையே -சங்கல்பமே உறை- மரம் சாகைகள் -துஷ்கர்ம ரூபம் மரம் -விஷ செடி -வெட்டி களைந்து –

என் பெய் வினையைக் கிட்டி –
இவ்வளவும் விமுகனாய் போந்த என்னால் -உண்டாக்கப்பட்டதாய் –அனுபவ ப்ராயாசித்தங்களால் நிவர்திப்பிக்க அரியதாய் –
சாகோபசாகமாய்-பணைத்துப் போருகிற-துஷ் கர்ம ரூப விஷ வ்ர்ஷத்தை -இண்டைத் தூறு போலே ஒருவருக்கும் அண்ட ஒண்ணாதபடி-
இருந்ததே ஆகிலும் கௌரவ சேனையை -காலோச்மி லோகே ஷயக்ர்த்த ப்ரவர்த்த -என்று சொல்லா நின்ற ஸ்ரீ கிருஷ்ணன் –
சென்று கிட்டினால் போலே தாமே சென்று கிட்டி –
அவித்யா தரு -(அஹங்காரம் மமகாரங்கள் கொண்ட வேர்கள் )-என்ன கடவது இறே –

வினையை கிட்டி என்றது-
வினையேனைக் கிட்டி என்றபடியாய்-ஆளை இட்டு கார்யம் கொள்ளுகை அன்றிக்கே
நேர் கொடு நேரே தாமே வந்து கிட்டினார் –காணும் -என்கிறார்-

கிழங்கோடு –
மீளவும் கிளருகைக்கு உறுப்பாய் இருக்கிற துர் வாசனை யாகிற கிழங்கோடு கூட

என் பெருவினையை –மெய்த்தவன்
என் பெரு வினை -சிறியவனாகிய நான் செய்த பெரிய வினை -ஜாதி ஒருமை –
பிறர் இடம் இருந்து வந்தது அன்று -என்னது -அனுபவித்தோ பரிகரித்தோ போக்க ஒண்ணாதது -ஆதலின்-பெரிது
வினையை வெட்டி என்ன அமைந்து இருக்க -கிட்டி -என்றது -இண்டைத் தூறு போலே-அண்ட ஒண்ணா-
இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் பிற்காலியாத-துணிவு புலப் படுகிறது –

என் பெரு வினை–
நானே முயன்று சம்பாதித்தவை/வினைகள் என்று பன்மை யில் சொல்லாமல் வினை என்றது-ஜாதி ஒருமை

கிழங்கோடு வெட்டி –
கிழங்கு என்பது கர்ம வாசனையை –
அஃது இருப்பின் மீண்டும் கர்மம் தலை தூக்கும் அன்றோ –
அதனுக்கு இடம் இன்றி வாசனையோடு கர்மத்தை ஒழித்து அருளினார் என்க -.

தன் அருள் என்னும் –
சித்திர் பவதி வானேதி சம்ச யோச்யூத சேவிநாம் -என்ற அவன் அருள் அன்றிக்கே
ந சம்சயச்து தத் பக்த பரிசார்யா ரதாத்மனாம் -என்று சொல்லப்படுகிற தம்முடைய அருளாகிற –

ஒள் வாள் உருவி –
அழகியதான வாள் ஆயுதத்தை -தன் சங்கல்பம் ஆகிற உறையில் நின்றும் பிடுங்கி –
ஒள் -அழகு
ஒள் வாள் -ஒளியை-உடைத்தான வாள் –கூரிய வாள் என்னுதல் –

வெட்டிக் களைந்த-
எடுத்துப் பொகட்ட – செடியை வெட்டி வேரைக் களைந்து-விட்டால் இந்நிலத்திலே இச் செடி முற் காலத்தில் இருந்ததோ
என்று தோற்றுமா போலே -இவன் இடத்தில் இப் பாபங்கள்-இருந்ததோ என்று தோற்றும் படியாக காணும் –
இவர் வேரைக் களைந்து விட்ட படி –

தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி –
என் கர்மத்தை ஒழிக்கும் சாதனம் என்னிடம் இல்லை -ஸ்ரீ எம்பெருமானார் இடமே உள்ளது .
அவரது அருளே அதனை வெட்டி ஒழிப்பதற்கு சாதனம் .
ஸ்ரீ எம்பெருமானது அருளும் அதனை ஒழிப்பதற்கு சாதனமாகாது –
ஸ்வா தந்த்ரியத்தால் அவனது அருளும் ஒரு கால் ஒளி மங்கி மழுங்கியும் போகக் கூடும்
ஸ்ரீ எம்பெருமானார் உடைய அருளோ -அங்கனம் ஒரு காலும் ஒளி மங்கி மழுங்காத சாணை பிடித்த-வாளாய் –
அதனை ஒழித்துக் கட்டியே தீரும் –
அது தோன்ற –தன் அருள் என்னும் ஒள் வாள் –என்றார் .

உருவி -என்றமையால் –
அவ்வாள் இதுகாறும் வெளிப்படாமல் உறையில் இடப் பட்டமை தெரிகிறது –
சமயம் வரும்போது -அது வெளிப்படுகிறது –
ஸ்ரீ அமுதனாரை ஆட் கொள்ளும் சமயம் வரும் அளவும்-அதனை வெளிக் காட்டாது -மறைத்துக் கொண்டு இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானார் உடைய சங்கல்பம்-என்கிற உறையில் இருந்து உருவப் பட்டது -அருள் என்னும் ஒள் வாள் -என்க .

ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ பெரிய திருவந்தாதியில் – 26-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்-
கானும் மலையும் புகக் கடி வாள் -தானோர்-இருளன்ன மா மேனி எமமிறையார் தந்த-அருளென்னும் தண்டால் அடித்து -என்று
ஸ்ரீ எம்பெருமான் தந்த அருளைத் தண்டாகக் கொண்டு வல் வினையை அடித்துத் துரத்துவதாக கூறினார் .

ஸ்ரீ திரு மங்கை மன்னன் ஸ்ரீ பெரிய திரு மொழியில் – 6-2 –4- –
நீ பணித்த அருள் என்னும் ஒள் வாளுருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர -என்று
எம்பெருமான் பணித்த அருளை ஒள் வாளாக கொண்டு ஐம்புலன்களின் இடர் தீர எறிந்ததாக-கூறுகிறார்

ஸ்ரீ நம் ஆழ்வார் வாள் ஏந்தாது அந்தணர் போல் சாந்தமாய் இருப்பவர் ஆதலின்-அவருக்கு அருள் தண்டாக கிடைத்தது
ஸ்ரீ திரு மங்கை மன்னனோ ஷத்ரிய வீரர் போன்று-
மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் — 3-9-10- – ஆகையாலே அவருக்கு அருள் வாளாக கிடைத்தது .
அவர்கள் இருவரும் முறையே அடிப்பவர்களையும் எறிபவர்களாயும் தாமே யாயினர் .

ஸ்ரீ அமுதனார்க்கோ அங்கன் அன்றி ஸ்ரீ எம்பெருமானாரே தம் அருள் என்னும் வாள் கொண்டு
பெருவினையை வெட்டிக் களையும் படியான பெருமை கிடைத்தது ..
கிருபா -கிருபாணமாக-வாளாக -வெளிப்பட அதனைக் கொண்டு கிட்டுதற்கு அரிய-
என் கொடு வினைத் தூற்றை அடியோடு வெட்டிக் களைந்து-
எனக்கு கர்ம பந்தத்தில் இருந்து-விமோசனம் தந்தருளினார் -ஸ்ரீ எம்பெருமானார் -என்றார் ஆயிற்று –
எல்லாப் பாபங்களில் இருந்தும் விடுவிக்கும் வல்லமை ஸ்ரீ கண்ணனுக்கே உள்ளது ஓன்று அன்றோ –

மெய்த்தவன்
சத்யமான-தபஸை உடையவர் –
ஆத்மா யாதாம்ய ஞான ரூபமாய் சரணாகதி ரூபமான தபசை உடையவர் –
தஸ்மான் நியாச-மேஷாம் தபஸாமதிக்ர்தமா ஹூ -என்கிறபடியே
சர்வேஷாம் தபஸாம் உத்க்ர்ஷடையான பிரபத்தியிலே நிஷ்டர் என்றபடி
இந் நிஷ்டயாலே காணும் இவர் பிரபன்ன குல உத்தேச்யர் ஆனதும் பிரபன்ன ஜன கூடஸ்தர் ஆனதும்

இராமானுசன்
இப்படிப் பட்ட ஸ்ரீ எம்பெருமானார் –

அது ஸ்ரீ எம்பெருமானாருக்கு எங்கனம் வந்தது என்பாருக்கு விடை இறுக்கிறது-மெய்த்தவன் -என்பது-
மெய்த்தவன் -மெய்யான தவம் உடையவர் .
தவம் -சரணாகதி
ந்யாசம் எனப்படும் சரணாகதியை சிறந்த தவமாக வேதமும் ஓதிற்று –
சரணாகதி ஏனைய உபாயங்கள் போல் அல்லாது -ஸ்ரீ எம்பெருமானுக்கு மிகவும் பாரதந்திரமாய் உள்ள
ஆத்ம ஸ்வரூபத்துக்கு இயைந்ததாய் அமைந்து இருத்தலாலே-அதுவே ஆத்மாவின் உண்மை நிலை –என்பது தோன்ற –
மெய்த்தவம் -எனப்படுகிறது –
சரணாகதி நிஷ்டையை தவிர மற்றைய உபாயங்களில் கொள்ளும் நிஷ்டை -பரதந்த்ரமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஏலாமையின் –
அது பொய்யான நிஷ்டை -என்க.
சேராததை தனக்கு சேர்ந்ததாக காட்டுவது பொய்யே யன்றோ –
யாவதாத்மா நியத த்வத் பாரதந்த்ர்யோசிதா -ஆத்ம உள்ளவரையில் தப்பாது நிலையாய் உள்ள
பகவத் பாரதந்த்ர்யத்துக்கு இயைந்தது -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகனும்

இங்கனம் உண்மையான சரணாகதி நிஷ்டையை உடையவராகிய ஸ்ரீ எம்பெருமானார் -தம்மைச் சார்ந்தவர் அனைவரையும் –
வினைகளின் நின்றும் விடுவிக்க வல்லவர் ஆனார் –
சேர்ந்த அனைவருடைய பாபங்களையும் பொறுத்து அருளுமாறு -ஸ்ரீ பெருமாள் இடம் சரணாகதி செய்து –
வரம் பெற்று உள்ளமையால் அத்தகைய வல்லமை -அவருக்கு வந்தது என்க –
அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பந்தத்தை முன்னிட்டு பிரபன்னர்களாகி வினையினின்றும் விடுபடுகிறோம் –
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப்படுகிறார்
நம் கூடஸ்தர் நமக்கு வைத்து இருக்கும் சொத்து சரணாகதி –-அதுவே நமக்கு உஜ்ஜீவனம்

தம்மை ஏற்று அருள வினைகளை வெட்டிக் களைந்தது போலே
மறைப் பொருளைக் கொண்டு உலகினைக் காக்க குத்ருஷ்டிகளின் பெட்டைக் கெடுத்ததும்-
காரணம் இன்றி ஸ்ரீ எம்பெருமானார் செய்த பேருபகாரம் என்று கருத்து–

கட்டப் பொருளை மறைப் பொருள் என்று
பரம் ப்ரஹ்மை வாஞ்சம் ப்ரம பரிகதம் சம்சரதி-தத்பரோ பாத்ய லீடம் -இத்யாதி படியே
உப ப்ரஹ்மண விருத்தங்களாயும் -ஸூத்திர விருத்தங்களாயும் -ப்ரத்யஷ விருத்தங்களாயும் இருக்கையாலே
நிஹீன தர்மமான அர்த்தங்களை-வேதார்த்த அர்த்தங்கள் என்று –
கட்டம் -கட்டு –

கயவர் சொல்லும் –
மாயாவாதம சஸ்சாஸ்திரம் பிரச்சன்னம் பௌத்த முச்ச்யதே –மாயா சகதிதம் தேவி கலவ் ப்ராஹ்மன ரூபிணா-என்கிறபடியே
ஜகத் பிரதாரகராய் கொண்டு சுபாஸ்ரயமான விக்ரகம் இல்லை -என்றும்
ஸ்வா பாவிகமான-கல்யாண குணங்கள் இல்லை என்றும் –
பாதோச்ய விஸ்வா பூதானி த்ரிபாதஸ் யாம்ர்தம் திவி -என்கிற விபூதி-இல்லை என்றும்
ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யவ் -என்கிற ஸ்ரீய பதித்வம் இல்லை என்றும்
இப்படிப்பட்ட விருத்தார்த்தங்களை எல்லாம் வேதாந்த வாக்யங்களுக்கும் வேதாந்த ஸூத்தரங்களுக்கும்-
தாத்பர்யமாக சொல்லுகிற சங்கராதி குத்ர்ஷ்டிகளை பரக்க சொல்லா நின்றுள்ள –
கயவர் -துர்மார்க்கர் –

பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே
ப்ராமக வாக்யங்களை நிவர்திப்பித்த உபகாரகர் அன்றோ
பெட்டு -ப்ராமக வக்க்யம் –
பெட்டை கெடுக்கை யாவது -பன்காந்தரித குஞ்சென சங்கரோத்யர்த்த பல்யதா-என்னும்படி
அதி நீஹீனங்களாய் துஸ் தர்க்க ஜடிலங்களாய் கொண்டு அவர்கள் பிரபந்தீகரித்த துஷ் பிரபந்தங்களை –
யதீந்திர மத சூக்த்யர்த்த ஸ்வஸ் சந்தகதி ரத் நவத் -என்று கொண்டாடப் படுமவையாய்
சிரந்த ந சரஸ்வதி சிகுரபந்த சைரந்திகா -என்று வேதாந்தங்களினுடைய சிடுக்கை அவிழ்க்க கடவனாய் இருக்கிற-
சத் தர்க ஜடிலங்களான ஸ்ரீ பாஷ்யாதி-சத் பிரபந்தங்களாலே நிரசித்தார் -என்றபடி

இது ஒருவர் அர்த்திக்கச் செய்தது அல்லாமையாலே இவர் செய்தது எல்லாம்
நிர்ஹேதுகமாக இருப்பது ஓன்று அன்றோ என்று சமாஹிதர் ஆனார் ஆய்த்து–

கட்டப் பொருளை –பிரான் அல்லனே –
கட்டம்-கஷ்டம் என்னும் வடமொழிச் சொல் இங்கனம் ஆயிற்று –
கட்டப் பொருள் -கஷ்டமான பொருள்-செம் பொருளாய் அல்லாமல் வலிந்து உரைக்கும் பொருள் -என்றபடி –
க்லிஷ்ட அர்த்தம் -என்பர் வடநூலார் –

இதுவே மறையின் கருத்தில் உள்ள பொருள் என்கின்றனர் கயவர் .
அது உலகத்தாரை மயக்கச் செய்யும் பேச்சு -என்கிறார் ஸ்ரீ அமுதனார் –

பெட்டு -மயங்கச் செய்யும் பேச்சு
தாம் கூறுவது செம்மைப் பொருள் அன்று -கட்டப் பொருளே என்பது கயவர் நெஞ்சுக்கு தெரியும் –
ஆயினும் அதுவே மறைப் பொருள் என்று -உலகத்தை ஏமாற்றுகின்றனர் .
இனி கஷ்டத்தை உண்டு பண்ணும் பொருள் கட்டப் பொருள் -என்றதாகவுமாம்-
விஷயம் அறிந்தவர்களுக்கு -அவர்கள் கூறும் பொருள் கஷ்டத்தை உண்டு பண்ணுகிறது -என்க-

கப்யாச-ஸ்ருதிக்கு யாதவ பிரகாசன் கூறிய பொருள் ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்துக்கு-கஷ்டத்தை உண்டு பண்ண –
அவன் எதிரிலேயே கண்ணீர் வடித்ததை இதனுக்கு-உதாஹரணமாகக் கொள்ளலாம் –
ப்ரஹ்மத்துக்கும் சேதன அசேதன பொருள்களுக்கும் -இயல்பாக பேதமும் -அபேதமும் உண்டு என்னும்-யாதவ பிரகாசனுடைய மதத்தை –
அபேதத்தையும் இயல்பாக கொண்டமையின் –
அசேதனப் பொருள்கள் இடம் உள்ள வடிவம் மாறுபடும் நிலையும் –
சேதனப் பொருள்கள் இடம் உள்ள துக்கத்துக்கு உள்ளாகும் நிலையும் –
ப்ரஹ்மத்துக்கு தவிர்க்க ஒண்ணாதவைகள் ஆகி விடுமே -என்று மனம் புழுங்கி –
ப்ரஹ்ம -அக்ஜ்னாபஷா தபி பாபி யான் அயம் பேத அபேத பஷ-என்றும்

ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞானம் உண்டாகிறது என்று கூறும் சங்கரர் பஷியினும் மிக்க பாபத் தன்மை-வாய்ந்தது
இந்த பேத அபேதக் கஷி-என்று ஸ் ரீவேதார்த்த சந்க்ரஹத்திலே அருளிச் செய்து இருப்பதையும்-உதாஹரணமாகக் கொள்ளலாம் –

இதனால் ப்ரஹ்மத்துக்கு -ஞான ஸ்வரூபத்துக்கு -அஞான சம்பந்தம் கூறும் கஷியும் பாபத் தன்மை-வாய்ந்ததே –
பேத அபேத கஷியோ அதனினும் மிக்க பாபத் தன்மை வாய்ந்தது -என்று குத்ருஷ்டிகள்-அனைவரும் கூறும் பொருள்கள்
மனக் கஷ்டத்தை உண்டு பண்ணினமை புலனாகிறதன்றோ-

பெட்டைக் கெடுக்கும் பிரான் –
உண்மைப் பொருளையும் -அவர்கள் கூற்றில் உள்ள குற்றங்களையும் காட்டித் தாமாகவே வந்து-
உலகினுக்கு உபகரித்தவர் -என்றபடி –

பிரான் அல்லனே –
ஸ்ரீ இராமானுசன் என்னும் மெய்த்தவன் பிரான் அல்லனே -என்று இயைக்க –

———————–

யானும் என்நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம்மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து -பெரிய திருவந்தாதி—26-

நெடு விசும்பு அணவும் பன்றியாய் அன்று பாரதம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-4-

மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள்
தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

இவற்றை விட்டு நீ திருவாய் மலர்ந்து அருளின சரம ஸ்லோகத்தைப் பற்றினேன் -நீ பணித்த அருள்
ஒள் வாளுருவி -சரம ஸ்லோகம் ஒள் வாள்

ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன்
பொய்யனேன் பொய்யனேனே -திருமாலை-33-

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருள் கொண்டு
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -8-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர் -திரு விருத்தம்-33-

தேவார் கோலத்தோடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனோடும் ஆனானே -5-1-9-

சித்திரத் தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய் –7-8-3-

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிறக் கண்ணபிரான் திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர் திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே -8-9-6-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: