ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –92-புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்- இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

சேதனர் இவ் விஷயத்தில் அல்ப அனுகூல்யத்தாலே உஜ்ஜீவிக்கலாய் இருக்க —
ஜென்மாதி துக்கங்களை அனுபவிக்கிறபடியையும் -இவர்களுக்கு உஜ்ஜீவன அர்த்தமாக -ஸ்ரீ எம்பெருமானார் செய்த
க்ருஷியையும் அனுசந்தித்தார் -கீழ் -இரண்டு பாட்டாலே –
இப்பாட்டில் –தாம் அறிய ஒரு ஹேது அன்றிக்கே -இருக்க -தம்மை அங்கீ கரித்து அருளுகைக்கும் –
அங்கீகரித்து அருளி பாஹ்யாப் யந்தர கரண விஷயமாய் -எழுந்து அருளி இருக்கிறபடியையும்-
அத்தை அனுசந்தித்து -வித்தராய் -இதுக்கு காரணம் இன்னது என்று –அருளிச் செய்ய வேணும் –என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரியாத கர்ப்ப நிர்பாக்யரை நிந்தித்தும் சமயக் ஞான ஹீனராய்-நிஷித்த மார்க்க நிஷ்டர் ஆனவர்களுடைய
துர் உபதேசத்தாலே அவசன்னராய் போந்த சேதனருடைய-அஞ்ஞானத்தை மாற்றி சர்வருக்கும் ஸ்ரீ ய பதியே சேஷி என்று உபதேசித்த
பரம தார்மிகர் ஸ்ரீ எம்பெருமானார்-என்று சொல்லிப் போந்தார் கீழ் இரண்டு பாட்டுக்களிலும் –
இதிலே
ஸ்ரீ எம்பெருமானார் உடைய திருமுக மண்டலத்தைப் பார்த்து -அடியேன் இவ்வளவும் நான் அறிந்ததாக ஒரு சத் கர்மமும் பண்ணினேன் அல்லேன் –
அப்படியே உத்தாரகமாய் இருப்பதோர் சூஷ்மமான விசேஷார்த்தத்தை கேட்பதாக பிரசங்கிப்பித்தும் செய்திலேன் –
இது என் ரீதியாய் இருக்கச்
சாஸ்திர ப்ரவர்த்தகரானவர்களுக்கும் தொகை இட்டு சொல்ல வரிதான குணவத்தா-பிரதையை உடையரான
தேவரீர் இவ்வளவும் வெறுமனே இருந்து -இன்று என்னுடைய சமீபத்திலே பிரவேசித்து
உட் கண்ணுக்கும் கட் கண்ணுக்கும் விஷயமாய் நின்றீர் -இதுக்கு ஹேது தேவரீரே சொல்ல வேணும் என்று-விண்ணப்பம் செய்கிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

தம்மிடம் உள்ள மூன்று கரணங்களுள் -ஏதேனும் ஓன்று கொண்டு -எளிதில் மாந்தர் உய்வுற வழி இருந்தும் –
பிறப்பிற்குள்ளாகி வருந்துவதையும் -அத்தகையோரும் உய்வதற்காக ஸ்ரீ எம்பெருமானார் அருள் சுரந்து –மெய்ப் பொருள் சுரந்து –
உபகரித்ததையும் -கீழ் இரண்டு பாட்டுக்களாலே அனுசந்தித்தவர் –
இப்பாட்டில் –
தாமறியத் தம்மிடம் ஒரு ஹேதும் இல்லாத போது – தம்மை ஏற்று அருளுகைக்கும் -பின்னர்
கண் என்னும் வெளிக் கரணத்திற்கும் -நெஞ்சு என்னும் உட் கரணத்திற்கும் விஷயமாய் -நிலை நின்று எழுந்து அருளி இருப்பதைக் கண்டு –
மிக்க ஈடுபாட்டுடன் -இதனுக்கும் காரணம் -இன்னது என்று -அருளிச் செய்ய வேணும் என்று -ஸ்ரீ எம்பெருமானார் இடமே கேட்கிறார் .

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92– –

புண்ணிய நோன்பு -நல்லதொரு விரதத்தை
புரிந்தும் இலேன் -அனுஷ்டிப்பதும் செய்திலேன்
அடி போற்றி செய்யும் -திருவடிகளை ஆஸ்ரயித்து- மங்களா சாசனம் செய்வதற்கு உறுப்பாகும்
நுண் அரும் கேள்வி-சூஷ்மமாய் அருமைப் பட்ட கேள்வி யறிவைப் பற்றி
நுவன்றும் இலேன் -பேச்சு எடுப்பதும் செய்திலேன்
செம்மை நூல் புலவர்க்கு -செம்மை வாய்ந்த சாஸ்திர வடிவில் கவி இயற்றும் வல்லமை படைத்தவர்களுக்கும்
எண் அரும் கீர்த்தி இராமானுச -இவ்வளவு என்று என்ன இயலாத புகழ் படைத்த ஸ்ரீ எம்பெருமானாரே
நீ -தேவரீர்
இன்று -எதிர்பாராத -இன்றைய நாளிலே
புகுந்து -தாமாகவே உள்ளே வந்து
எண் கண்ணுள்ளும் -அடியேனுடைய கண்ணுக்குள்ளேயும்
நெஞ்சு உள்ளும் -நெஞ்சுக்கு உள்ளேயும்
நின்ற -புலனாய் எழுந்து அருளி இருக்கிற
இக்காரணம் -இந்தக் காரணத்தை
கட்டுரை -இன்னது என்று -அருளிச் செய்ய வேணும் .

வியாக்யானம் –
இப் பேற்றுக்கு உறுப்பாக ஒரு புண்ய வ்ரதத்தை யனுஷ்டிப்பதும் -செய்திலேன் –
திருவடிகளை யாஸ்ரயிக்கைக்கு உறுப்பான சூஷ்ம மாய்-துர்லபமான ஸ்ரவணத்தை ஸ்ரவியாத-அளவு அன்றிக்கே –
ஸ்ரவிக்க வேணும் என்று பிரசங்கிப்பதும் செய்திலேன் –
அநந்ய-ப்ரயோஜனராய் -சாஸ்திர ரூபமான -கவிகளை சொல்ல வல்லவர்களுக்கு பர்ச்சேதிக்க வரிதான-கீர்த்தியை உடையவரே –
இப்படி நிரதிசய -பிரபாவரான தேவரீர் அநாதி காலம் செய்யாமல்-இன்று புகுந்து –
என்னுடைய கட் கண்ணுக்கும் உட் கண்ணுக்கும் விஷயமாய் –நின்ற இதில்-ஹேதுவைத் தேவரீர் தாமே அருளிச் செய்ய வேணும் .

கட்டுரை -என்றது -சொல்ல வேணும் -என்றபடி-
கட்டுரை என்று -ஒரு முழுச் சொல்லு –
புரிதல்-செய்தல்
நுவல்தல் -சொல்லுதல்
செம்மை-செவ்வை –இத்தால் அநந்ய பிரயோஜ நதையை சொன்னபடி .
பகர்தல் -கட்டுரைத்தல் —கட்டுரைக்கில் தாமரை –ஒவ்வா —
நுவன்றுமிலேன் –ஆச்சார்ய அபிமானம் உத்தாராகம் -சொல்பவர்கள் இடம் கேட்க ஆசையும் இல்லாமல் –
இன்று -பொருளாக்கி வைத்தாய் அன்று புறம் போக்க வைத்தாய் -உரிமையுடன் கேட்ப்பார்கள்
பெற்ற பேற்றுக்கு சத்ருசமாக ஒன்றும் செய்ய வில்லையே என்றே கருத்து –

18 -தேவரீர் நடந்தது போலே இல்லையே -செம்மை நூலுக்கும் புலவருக்கு -தெளிவு படுத்தும் –அனன்யா பிரயோஜனர் –
நிர்ஹேதுக கிருபையால் செய்தீரே –குற்றம் இன்றும் முன்பும் -விலக்காமையே வாசி -என்றபடி –
கண் நெஞ்சு -வாக்குக்கும் உப லக்ஷணம் -பிரபந்தம் செய்து அருளுகிறார் –
கேள்வி -அரும் கேள்வி -நுண் அரும் கேள்வி-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதே நுண் அரும் கேள்வி
செம்மை நூல்-எளிய தெளிந்த நூல் -செம்மை புலவர்கள் -எளிய -தெளிந்த ஆர்ஜவம் –
அநந்ய பிரயோஜனர் -க்யாதி லாபம் பூஜைக்கு என்று இல்லாமல் –
இரண்டுக்கும் எண்ணரும் கீர்த்தி -செம்மை நூல் புலவர்க்கும் -சிறப்பு உம்மை தொக்கி -மறைந்து –
வர்ணாஸ்ரமம் – பகவத் ஆராதனம் – பிரிய கைங்கர்யம் -அடியார்களுக்கு செய்யும் கைங்கர்யம் -இப்படி மூன்றையும் -புண்ணியம் -/
நெஞ்சுள்ளான் கண்ணுள்ளான் -பிரதமபர்வத்தில் க்ரமத்தால்-நினைந்த பின்பு தானே பார்ப்போம் – –
இங்கு நீ புகுந்து -அக்ரமமாக கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் –

புண்ணிய நோன்பும் புரிந்தும் இலேன் –
புண்ணியமாவது -1-ஐஹிக ஆமுஷ்மிக சுக துக்க ஹேதுவாய்-சாஸ்த்ரீயமான வர்ணாஸ்ரம நியதமான கர்ம விசேஷம் –
இப்படிப்பட்ட வ்ருத்தத்தை பண்ணினேன் அல்லேன் –
புரிதல் -செய்தல் -நோற்ற நோன்பிலேன் -ந தர்ம நிஷ்டோச்மி -என்னக் கடவது இறே –
புண்யா நாம பி புண்யோ ஸௌ-என்கையாலே –

புண்ய சப்தம்-2- பகவத் வாசகமாய் அந்த பகவானை உத்தேசித்து தத் ஆராதன ரூபமாய்-பண்ணப்படும் சத் கர்மத்தை என்னுதல் –
யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் -என்கிறபடியே -சர்வேஸ்வரனுக்கு பிரிய தமமாய் –
மமபக்த-பக்தேஷூ ப்ரீதிராப்யதி காபவேத் -தஸ்மாத் மத்பக்த பக்தாச்ச பூஜா நீயா விசேஷதே – என்று–3-அவன் தன்னால்
நியமிக்கப்பட்ட ததீய விஷயமான கிஞ்சித் காரத்தை -என்னுதல் –
அடியேன் இடத்தில்-இப்படிப்பட்ட நோன்பு ஒன்றும் இல்லை-மூன்று அர்த்தங்கள் -புண்ணியத்துக்கும் நோன்புக்கும் –

புண்ணிய –நுவன்றுமிலேன் –
தேவரீரே தாமாக ஏற்றருளி-கண்ணுக்கும் நெஞ்சுக்கும் புலனாய் நிற்பதற்கு எவ்வளவு புண்ணியம்-பண்ணி இருக்க வேண்டும் –
நான் ஒரு புண்ணியமும் பண்ண வில்லையே -இப் பெரும் பேறு-எனக்கு எங்கனம் கிடைத்தது என்று -வியப்புறுகிறார் –
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வினிதால் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி – 56- என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார்-திவ்ய ஸூக்தியை இங்கே நினைவு கூர்க-
புண்ணிய நோன்பு என்பதனை –
இருபெயரொட்டு பண்புத் தொகையாக மட்டும் கொள்ளாமல் -புண்ணியனாகிய ஸ்ரீ கண்ணனைப் பற்றிய நோன்பு என விரித்து –
பகவத் ஆராதன ரூபமான நல்ல காரியத்தைக் கூட செய்தேன் இல்லை -என்று உரைப்பதும் உண்டு –

அடி போற்றி செய்யும் நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் –
தேவரீர் உடைய திருவடிகளை ஆஸ்ரயியைக்கு உறுப்பாய் -சூஷ்மம் என்றும் -சர்வம் குஹ்ய தமம் பூரா-ப்ரவஷ்யாமி என்றும்
நசா ஸூ ஸ்ருஷவே வாச்யம் -என்றும் சொல்லுகிறபடியே –
ஸூ சூஷ்மமாய்-பரம ரகஸ்யமாய் -அநாதிகாரிகளுக்கு உபதேசிக்க அரிதான மந்த்ரத்தை ஸ்மரிக்கை அன்றிக்கே –
ஸ்மரிக்கை வேணும் என்று பிரசங்கிப்பதும் செய்திலேன் என்னுதல் –

தேவரீர் பதினெட்டு தரம்-ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி பக்கலிலே சென்று சார தமமாக சரம ஸ்லோக அர்த்தத்தை யாசித்தால் போலே–
(ஸ்ரீ எம்பெருமானார் சென்றது ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் பெற -ஸ்ரீ நம்பி அருளியது ஸ்ரீ திருமந்த்ரார்த்தம் -மீண்டு ஒரு தடவை நம்பி
ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் அருளி – அத்தை ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கும் ஸ்ரீ முதலியாண்டானுக்கும் தரக் கூடாது –
சிச்ருஷை பெற்று அதிராமம் பெற்ற பின்பே அருள வேணும் என்றாரே )-

அடியேன் யாசித்தேன் அல்லேன் -என்னுதல் –
(ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் சரம உபாய நிஷ்டை -ஸ்ரீ எம்பெருமானார்க்கு அருளிச் செய்தார் –
சந்தனம் மஞ்சள் -சமர்ப்பித்து -சர்வத்தையும் கொள்ளை கொள்ள தந்தீரோ என்றாராம் -)-

நுவலுதல் -அபேஷித்தல்-

நுண்ணறிவிலேன் -ந சாத்மவேதி -என்னக் கடவது இறே –

ஸ்ரீ நம் ஆழ்வாரைப் போலே பேற்றுக்கு உடலாக -நோற்ற நோன்பிலேன் -என்றவர் –
அவர் போலவே நுண்ணறிவு தமக்கு இல்லாமையை அடுத்து –-
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் -என்கிறார் –

அடி போற்றி செய்தல்-
ஆசார்யன் திருவடிகளை ஸ்வயம் பிரயோஜனமாக அடைந்து -பொங்கும் பரிவாலே -அவற்றுக்கு மங்களா சாசனம் செய்தல் –
ஆசார்யன் திருவடிகளை அணுகிப் பேணி-மங்களா சாசனம் செய்தல் –
சகல சாஸ்த்ரங்களின் தாத்பர்ய பொருளாதலின் அது-நுண்ணியதாக அருமைப் பட்டதாய் -கேள்வி அறிவின் முதிர்ச்சியினால்
வருவது என்பது தோன்ற –நுண்ணரும் கேள்வி -என்றார் –
தேவரீர் திருவடிகளை ஆஸ்ரயித்து வாழ்த்துப் பாடுகைக்கு-உறுப்பாக கேள்வி அறிவும் எனக்கு இல்லையே -என்கிறார் .
கேள்வி அறிவு இல்லாதது -கேளாமையினால் மாத்ரம் அன்று –
கேட்க வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமையினால் அதனைப் பற்றிய பேச்சே இல்லாமையினாலே-
என்னும் கருத்துப் பட –நுவன்றுமிலேன் -என்றார் –

செம்மை நூல் புலவர்க்கு எண்ணரும் கீர்த்தி –
பிரதம பர்வம் என்றால் சிலர்-ச குணம் என்றும் -சிலர் -நிர்க்குணன் என்றும் -சிலர் ஹரி என்றும் சிலர் ஹரன் என்றும் –
இப்படி அவர் அவர்-புத்திக்கு அநு ரூபமாக சொல்லுககைக்கு உறுப்பாக இருக்கும் –
இது சரம பர்வம் ஆகையாலே அந்த தோஷங்கள் ஒன்றும் இன்றிக்கே இருந்தது என்று -அநந்ய பிரயோஜனராய் கொண்டு –
அநேக பிரகாரமாக சாஸ்திர ரூபமான-கவிகளை சொல்ல வல்ல வித்வாக்களுக்கு –
(செம்மை நூல் புலவருக்கும் பாடுவதே ஸ்வயம் புரயோஜனமாக கொண்ட )-
இவ்வளவு ஏவம் விதம் என்று பரிசேதித்து சொல்ல தலைக் கட்ட-அரிதான கீர்த்தியை உடையரான

செம்மை நூல் புலவர்க்கு எண்ணரும் கீர்த்தி –
நூல் -சாஸ்திரம்-மேலே கீர்த்தி பேசப் படுவதால் -கீர்த்தியைப் பற்றிய சாஸ்திரமாய் அமைந்த கவி வடிவிலான-
பிரபந்தங்களை அது கருதுகிறது .
நூற் புலவர் -நூலை யாக்கும் புலவர்
ஏனைய கவி வாணர்கள் போலக் கவி பாடிப் பரிசில் பெறுவார் அல்லர் இப் புலவர் –
வேறு பயன் கருதாது கவி பாடுதலையே பயனாக கருதுமவர் இவர் .
அது தோன்ற –செம்மைப் புலவர் -என்றார் .

செம்மையாவது –
வேறு பயனைக் கருதாது மனம் கவி பாடுதலிலேயே ஈடு பட்டு இருத்தல் -இத்தகைய மனப் பான்மை யினால்
கீர்த்தியை ஆராய்வதிலேயே நோக்கம் கொண்ட புலவர்க்கும்-எண்ணிக் கணக்கிடுவதற்கு அரிய கீர்த்தி –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய கீர்த்தி -என்கிறார் .

இனி செம்மையை நூலோடு இயைத்தலுமாம்-
நூலுக்கு செம்மையாவது –
கருதிய பொருளை அருமை யின்றி ஸ்வ ரசமாய் காட்டும் சொற்களோடு-பொருள் விளங்கு நடையாய் அமைந்து இருத்தல்
இத்தகைய நூல்களை யாக்கும் அறிவாளரும்-எண்ணுதற்கு இயலாதது ஸ்ரீ எம்பெருமானார் கீர்த்தி -என்றபடி .
ஆள் அற்றமையின் என்னை நீர் ஏற்று அருளுனீர்-என்று நினைப்பதற்கு இடம் இல்லை
பல புலவர் தேவரீரை போற்றுவராய் உள்ளனர் –
இனி என்னை ஏற்பதனால் கீர்த்தி பெருகும் என்று நினைத்து -என்னை ஏற்றீர் என்னவும் ஒண்ணாது –
அது இயல்பாகவே எண்ணற்றதாய் உள்ளது ..
புலவர்க்கு -சிறப்பும்மை தொக்கியது

இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –

செம்மை -செவ்வை -இத்தால் அநந்ய-பிரயோஜநதையை சொன்னபடி –
நூல் -சாஸ்திரம்
புலவர் -வித்வாக்கள் –

இன்று நீ புகுந்து –
இத்தனை நாளும்-காணா கண் இட்டு இருந்து இப்போதாக தேவரீர் அடியேன் உடைய சமீபத்தில் பிரவேசித்தது-

என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இக்காரணம் கட்டுரையே –
நித்ரா பிரமாத கலுஷீக்ர்தமா ந சஸ்ய தத்ராபி சக்திரிஹமேன-என்கிறபடியே
இவ்வளவும் தேவரீர் கண் வட்டத்தில் இருந்தும்-ஆநு கூல்யம் இல்லாத தோஷத்தால் வணங்கா முடியாய் போந்த அடியேன் உடைய
பாஹ்ய கரணங்களுக்கும்-அந்த கரணத்துக்கும் இலக்காய் –
இந்த வீட்டில் இருப்புக்கு ஒரு ஹேதுவை தேவரீரே விசாரித்து-அருளிச் செய்ய வேண்டும் –

கண்ணுள்ளும் என்றது வாக்காதிகளுக்கும் உப லஷணம் –
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நிற்கை யாவது -கண்ணுக்கும் நெஞ்சுக்கும் விஷயம் ஆகை –

கட்டுரை என்றது-சொல்ல வேணும் என்றபடி –கட்டுரை –என்று ஒரு முழு சொல்லு –

நீ –
இத்தகைய மேன்மை வாய்ந்த தேவரீர்

இன்று புகுந்து –
இத்தனை நாளும் இல்லாது -எண் வேண்டுகோளை வேண்டாது -தாமாகவே என்னிடம் புகுந்து –
வர வேணும் என்று வரவேற்க வில்லை- சமயம் பார்த்து உள்ளே நுழைந்தார் –
இதனால் தம்மை ஸ்ரீ எம்பெருமானார் அங்கீ கரித்ததை சொன்னபடி –

எண் கண்ணுள்ளும் –கட்டுரை
புகுந்தவர் வெளியே போக வில்லை-உள்ளேயே இடம் பிடித்துக் கொண்டு விட்டார்
கண்ணுக்கு உள்ளேயே நிற்கிறார் -அதாவது –
எப் பொழுதும் அவர் என் கண்ணுக்கு தோற்றம் அளிக்கிறார் –
நேரே அவரைக் காணாத போதும் -உரு வெளிப்பாட்டினாலே அவர் கண் எதிரிலேயே தோன்றுகிறார் –
அங்கனம் தோன்றுதற்கு காரணம் நெஞ்சிலே உறைந்தமை -நெஞ்சுள்ளும் நிலையாக நிற்கிறார் அவர் .

என் கண்ணுள்ளும் –
உலகியல் இன்பத்தில் நாட்டம் கொண்ட எண் கண்ணுக்கும் என் நெஞ்சுக்கும்-தன்னை விஷயமாகக் காட்டி அருளுவதே -என்கிறார் .
கமலக் கண்ணன் என்கண்ணின் உளான் -ஸ்ரீ திருவாய் மொழி – 1-9 8- –
மாயன் என் நெஞ்சின் உள்ளான் -ஸ்ரீ திருவாய் மொழி -1 9-5 – – என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவம்
ஸ்ரீ அமுதனாருக்கு-ஸ்ரீ எம்பெருமானார் விஷயத்தில் கிடைக்கிறது .

இன்று புகுதலுக்கும் -கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நிற்றலுக்கும் காரணம் எனக்கு தெரிய வில்லை –
தேவரீர் தான் அருளிச் செய்ய வேண்டும் -என்கிறார் .
கட்டுரை –
காரணம் இல்லாமையின் சொல்ல இயலாது என்னும் கருத்துடன் தேவரீர் தான் சொல்ல வேணும் -என்கிறார் –
திருமாலே கட்டுரையே -ஸ்ரீ திருவாய் மொழி – 3-1 1- – என்பது போலே இதனையும் கொள்க –
நிர் ஹேதுகமான தேவரீர் கிருபை தவிர வேறு காரணம் இல்லை -என்பது கருத்து –

இன்று என்னை பொருள் ஆக்கி –அன்று புறம் போக வைத்தது என்-

என் நெஞ்சில் திகழ்வதே–திரு மால் வந்து நெஞ்சுள் புகுந்தான்–வரவாறு என்–
வரவாறு ஓன்று இல்லையேல்-வெறிதே அருள் செய்வார் செய்வார்களுக்கு உகந்து-
கோர மாதவம் செய்தனன் கொல்-
வெறிதே-சகாயம் இன்றி –1-தானே -அனுக்ரகம்-2-பாரமாய -பழவினை பற்று அறுத்து வேரோடு-வாசனை இன்றி—
3-என்னை தன் வாரமாக்கி வைத்தான்–ஹாரம் அருகிலே—4- வைத்தது அன்றி-என் உள் புகுந்தான்-
நான்கு பெருமைகள்–

சாத்திய ஹ்ருத்ச்யனாயும் சாதனம் ஒருக்கடிக்கும் தாய பதி- திரு கடித்தானும் என் உடைய சிந்தையும்–
நின்றதும் இருந்ததும் -கிடந்ததும் என் நெஞ்சு உள்ளே-

———————

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-
அவன் என் அருகலிலானே–1-9-2-
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9-4-
ஈசன் மாயன் என் நெஞ்சி னுளானே–1-9-5-
என்னுடைத் தோளிணையானே–1-9-6-
என்னுடை நாவினுளானே–1-9-7-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியல் நால் தடந் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணி னுளானே–1-9-8-

கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் மவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி என் நெற்றி யுளானே–1-9-9-

எனது உச்சி யுளானே–1-9-10-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–

முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ !
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ !
படிச் சோதி ஆடை யொடும் பல் கலனாய் நின் பைம்பொன்
கடிச் சோதி கலந்ததுவோ ! திருமாலே ! கட்டுரையே–3-1-1-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா;
சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது;
ஒட்டுரைத்து இவ் உலகுன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ!–3-1-2-

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட் டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே–5-7-1-

கருளப் புட்கொடி சக்கரப் படை வான நாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–-பெரிய திருவந்தாதி-56—

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்––நான்முகன் திருவந்தாதி–18-

என் நெஞ்சமேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: