ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –89-போற்றரும் சீலத்து இராமானுச– இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

போற்றுவன் -என்று புகழ்வதாக ஒருப்பட்டவர் -அது நிமித்தமாக
தமக்கு உண்டான பலத்தை ஸ்ரீ எம்பெருமானார் தமக்கு விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே
வேத ப்ரதாரகராய் -லோகத்தார் எல்லாரையும் விபரீத ஞானராக பிரமிப்பித்து
நசித்துப் போந்த குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை -பக்னர் ஆக்குக்கைக்கு அவதரித்த -வலி மிக்க சீயமான
ஸ்ரீ எம்பெருமானாரை -ஸ்துதிக்கிறேன் என்று ஸ்வ அத்யாவசாயத்தை ஆவிஷ்கரித்து –
இதிலே –தம்முடைய
பூர்வ வ்ர்த்ததை அனுசந்தித்துக் கொண்டு -புகழ்ந்து தலைகட்ட வரிதான சீல குணத்தை உடையரான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து -மகா பிரபாவம் உடைய தேவரீரை –
அத்யந்த அதமனான நான் ஸ்துதிக்கை தேவரீருக்கு அவத்யமாய் தலைக் கட்ட கடவது ஆகையாலே
ஸ்துதியாது ஒழிகையே தேவரீருக்கு அதிசயம் இறே –
ஆனாலும் ஸ்தோத்ரம் பண்ணாது ஒழியில் என் மனசு ஆறி இராது –
இப்படி ஆன பின்பு -மூர்க்கு பேசுகின்றான் இவன் -என்று தேவரீர் திரு உள்ளத்தில் என்ன வோடுகிறதோ என்று
நான் அத்தை நினைத்து எப்போதும் பீதனாய் நின்றேன் என்று விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

போற்ற முற்பட்டவர் -தகுதி யற்ற நான் புகழின்-தேவரீர் புகழ் மாசூணாதோ என்று தவிர்ந்து புகழின்
ஏற்றத்தை நிலை நிறுத்தலே நல்லது என்று தீர்மானித்தாலும் -என் மனம் தாங்குகிறது இல்லை .
போற்றியே யாக வேண்டி இருக்கிறது –
தேவரீர் நினைப்பு இவ் விஷயத்தில் எத் தகையதோ -என்று பயமாய் இருக்கிறது -என்று
தம் நிலையை ஸ்ரீ எம்பெருமானார் இடத்தில் விண்ணப்பம் செய்கிறார்

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

பத உரை –
போற்றரும் சீலத்து -துதித்து தலைக் கட்ட அரிதான சீல குணத்தை உடைய
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
நின் புகழ்-தேவரீருடைய கல்யாண குணங்களை
தெரிந்து -சீரியவை என்று பகுத்து அறிந்து
சாற்றுவனேல்-நாடறியப் பேசினால்
அது -அவ்விதம் பேசுவது
தாழ்வு -தேவரீர் குணங்களுக்கு இழிவாகும்
அது -அங்கனம் பேசுவதை
தீரில்-தவிர்ந்தால்
உன் சீர் தனக்கு -தேவரீர் கல்யாண குணங்களுக்கு
ஓர் ஏற்றம் -ஒரு சிறப்பு
என்றே -என்பதாகவே
கொண்டு -எண்ணிக் கொண்டு
இருக்கிலும் -துதிக்காமல் இருந்தாலும்
என் மனம் -என்னுடைய உள்ளம்
ஏத்தி அன்றி -துதி செய்து அல்லது
ஆற்றகில்லாது -தவிக்க மாட்டாதாய் உள்ளது
இதற்கு-இவ்விஷயத்தை பற்றி
என் நினைவாய் என்றிட்டு -என்ன நினைத்து அருளுகிறீர் என்பதை முன்னிட்டு
அஞ்சுவன் -பயப்படுகிறேன்

வியாக்யானம் –
நாளும் என் புகழ்கோ வுன சீலம் -ஸ்ரீ திருவாய் மொழி -9- 3-10 – -என்னுமா போலே –
புகழ்ந்து தலைக் கட்ட-வரிதான சீலகுணத்தை உடையவரே –
தேவரீருடைய கல்யாண குணங்களை விவேகித்து லோக பிரசித்தமாம்படி பேசுவேன் ஆகில் –
வசிஷ்ட குணங்களை சண்டாளன் வர்ணித்து பேசுகை -அவற்றுக்கு அவத்யமாய்த் தலைக் கட்டுமா போலே –
அது இழிவாக நிற்கும் ..
அப்படி பேசுகிறதைத் தவறில் -தேவரீர் குணங்கள் தனக்கு உத்கர்ஷமாய் இருக்கும் என்று கொண்டே-இரா நிற்கச் செய்தேயும் –
என்னுடைய மனச்சானது -தேவரீர் குணங்களை ஸ்தோத்ரம் பண்ணி ஒழிய தரிக்க மாட்டுகிறது இல்லை –
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும் என் நாவினுக்கு ஆற்றேன் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5 1-1 – –
என்னுமா போலே யிரா நின்றது -என்னுடைய தசை –
இதுக்கு தேவரீர் ஏது திரு உள்ளம் பற்றுகிறது என்று -பீதனாகி நின்றேன் –

சாற்றுதல்-பிரகாசமாக சொல்லுதல்-

அனைத்து உலகும் உய்ய வந்த ஸ்ரீ ராமானுசா -உய்ய ஒரே வழி ஸ்ரீ உடையவர் திருவடி –
ஆவியையை அரங்க மாலை –அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மை இல்லாத -தொண்டனேன் பாட
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அஞ்சுவன் என் வசம் அன்று -ஸ்ரீ பெரிய ஆழ்வார்-
மாதவா சொன்னதும் வாக்கு தூய்மை பெற்றது பாடினேன் என்றார் இவர்
திருவடி பற்றினாரை தம்மைப் போலே ஆக்கும் சீர் –
த்ருணீக்ருதி ஸ்ரீ அச்சுதன் -திருவடி உமக்கு -உமது திருவடி உம் அடியார்க்கு

போற்றரும் சீலத்து இராமானுச –
எத்தனையேலும் தரம் உடையார்க்கும் ஸ்துத்துதித்து தலைக் கட்ட அரிதான –சீல குணத்தை உடைய ஸ்ரீ எம்பெருமானாரே –
இவருடைய சௌசீல்யம் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் – ஊமை -முதலானவர்கள் இடத்தில் காணப்பட்டது இறே –
நாளும் என் புகழ் கோ வுன சீலமே -என்றும் சீல ஏஷா -என்றும் சொல்லப்படுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
உடைய சீல குணத்தை புகழ்ந்து தலைக் கட்டிலும் –
இவருடைய சீல குணத்தை புகழ்ந்து தலைக்கட்ட அரிதாய் இருக்கும் என்று காணும் என்பதே -இவர் திரு உள்ளத்தில் ஓடுகிறது –

போற்றரும் –இராமானுச –
சீலம் எல்லை இல்லாதவர் ஆதலின் -அக்குணம் புகழ்ந்து தலைக் கட்ட அரிதாய் ஆயிற்று –
ஸ்ரீ ஆழ்வானும் ஆசைப் படும் வகையில் -ஊமை ஒருவனோடு பழகி -தம் தாளை அவன் மத்தகத்திலே வைத்து –
உய்வித்த வரலாற்றினால் -ஸ்ரீ எம்பெருமானார் சீலம் -எல்லை கடந்தமை அறியலாம் –
ஸ்ரீ பகவானுடைய சீல குணத்தை -நாளுமென் புகழ் கோ உன சீலமே – என்று ஸ்ரீ நம் ஆழ்வார் போற்ற அரிதாக கூறினார் –
ஸ்ரீ பகவான் மனிசர் பிறவி யிற்றொன்றி கண் காண வந்ததை –
சீல க ஏஷ-இது என்ன சீலமோ -என்று போற்ற அரிதாக கூறினார் ஸ்ரீ ஆழ்வான்
அவர் சரண் கூடிய ஸ்ரீ அமுதனாரோ ஸ்ரீ எம்பெருமானார் சீலத்தை போற்ற அரிதாக அருளிச் செய்கிறார் .

போற்றரும் சீலத்து ராமானுச-
நேராக முகத்தை பார்த்து அருளும் படி உள்ள சீல குணம்

நின் புகழ் தெரிந்து சாற்றுவனேல் –
தத்வே ந யஸ்யம ஹி மார்ணவ ஸீ கராணுஸ் சக்யோ நமாதுமபிசர்வ பிதா மஹாதயை – என்றும் –
யச்யாச்தேமே ஹிமானமாத்மான இவ த்வத் வல்லோ பிப்ரபு -நாலம் மாது மியத்தயா –என்றும் சொல்லப்படுகிற
தம் பதங்களைப் போலே –
சேஷோவா சைன்ய நாதோவா ஸ்ரீ பதிர் வேத்தி சாத்விகை விதர்க்யாய – என்கிறபடியே
ஸ்ரீ அநந்த அவதாரர் ஆகையாலே பெரு மதிப்பை உடையராய் –
நமத் ப்ரணம மண்டனம் நவ காஷாயா கண்டாம்பரம் த்ரிதண்ட பரிமண்டிதம் த்ரிவித தத்வ நிர்வாஹம்
த்யாஞ்சித த்ர்கஞ்சவம் தனிதவாதி வாக்வைபாவம் சமாதிகுண சாகரம் சரணமேமி இராமானுஜம் –என்கிறபடியே
சர்வோத்தாரகரான தேவரீர் உடைய சௌசீல்ய சொவ்லப்யாதி கல்யாண குணங்களை
நன்றாக தெளிந்து அவற்றை எல்லாரும் அறியும்படி பிரகாசமாய் ஸ்துதிப்பேன் ஆகில் –

தேர்தல் -ஆராய்தல் –
சாற்றுதல்-பிரகாசமாக சொல்லுதல் –

அது தாழ்வு –
வசிஷ்டர் குணங்களை சண்டாளன் வர்ணித்துப் பேசினால் அது அவனுக்கு அவத்யமாய் தலைக் கட்டுமா போலே –
நான் பண்ண ஒருப்பட்ட அந்த ஸ்துதி தேவரீருக்கு அவத்யமாய் தலைக் கட்டும் –
இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ண நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -உன் பெருமை
மாசூணாதோ மாயோனே -என்று பிரதம பர்வத்தில் ஸ்ரீ ஆழ்வாரும் இப்படி அருளிச் செய்தார் இறே –

ஹந்தத்வதக்ரமகம நஸ்ய யதீந்திர நார்ஹா -என்று ஸ்ரீ ஜீயரும் வ்யதிரேக முகேன இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இறே –

நின் புகழ் தெரிந்து –அது தாழ்வு ––
புகழ்-குணங்கள்
தெரிதல்-புகழின் தனித் தன்மையை விவேகித்து பார்த்தல்
ஸ்ரீ எம்பெருமான் புகழினும் -ஸ்ரீ எம்பெருமானார் புகழின் வீறுடமை யை உணர்ந்து பேசினேன் ஆயின்
அது அக் குணங்களுக்கு தாழ்வாய் தலைக் கட்டும் -என்றபடி .
தூயவர் குணங்களை வாக்கு தூய்மை இல்லாத தீயவனாகிய நான் பேசிடில் என் சம்பந்தத்தினாலே
அக் குணங்களும் சிறப்பினை இழந்து இழிவுறுமன்றோ – –
சாற்றுவனேல் என்பதனால் சாற்றுதலில் உள்ள அருமை தோற்றுகிறது –
சாற்றுதல்-பறை சாற்றுதல் என்பது போல உலகு அரிய சொல்லுதல் .
ஏகாந்தமாய் சொல்லிடில் பிறர் அறியாமையாலே குணங்கள் இழிவுறா-
சாற்றிடிலோ இழிவுறுதல் தப்பாது -என்பது கருத்து –

சாற்றுவனே-பறைதல்- லோகம் எல்லாரும் தெரியும் படி ஸ்ரீ பிரபன்ன காயத்ரியாக பாட வந்தேனே-
புலிங்க விருத்தாந்தம் புலி வாய் மாமிசம் சாப்பிட்டு கொண்டே பறவை சாகாசம் பண்ணாதீர் என்று சொல்வது போல-
மனம் செய் ஞானத்துன் பெருமை மாசூணாதோ மாயோனே-என்றால் போலே-

அது தீரில் –
உமக்கு அவத்ய அவஹமான அந்த ஸ்துதியை நான் பண்ணாது ஒழியில் –
தீருகை -தவிருகை –

உன் சீர் தனக்கு ஓர் ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதய –ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலி ந-என்கிறபடி
ஸ்வ ஆஸ்ரிதரான சேதனரை-
ததிரராணி த்ர்னாயமேனே- என்னும்படியான தேவரீர் தம்முடைய சாம்யத்தை கொடுக்கக் கடவ –
மகா பிரபாவத்தை உடைத்தான தேவரீர் உடைய கல்யாண குணங்களுக்கு ஓர் அதிசயமாய் இருக்கும் என்று
இவ்வர்த்ததிலே வ்ய்வசிதனாய் இருந்தேன் ஆகிலும்

அது தீரில் —கொண்டிருக்கிலும்
நான் துதிப்பதனால் குணங்களுக்கு ஏற்றம் ஏற்படப் போவதில்லை
துதிப்பதை விட்டு விட்டால் இழிவினின்றும் தப்பி அவைகட்கு ஒரு மேன்மை உண்டாகும்
என்று துதிக்காமல் இருந்தாலும் -என்றபடி –
கொண்டிருத்தல்-கருத்துக் கொண்டு வாழா இருத்தல்-
மெய் வார்த்தை ஸ்ரீ விட்டு சித்தர் கேட்டு இருப்பார்–கேட்டு அதன் படி அனுஷ்ட்டிப்பர்–
அது போல இங்கும்- ஏற்றம் என்று கொண்டு இருக்கிலும்-வாழா இருக்கிலும் என்று கொள்ள வேண்டும்.

என் மனம் ஏத்தி யன்று ஆற்ற கில்லாது –
சஞ்சலம் ஹி மன -என்றும் –
நின்றவா நில்லா நெஞ்சு -என்றும் சொல்லுகிறபடியே
அதி சஞ்சலமாய் அதி சபலமாய் -தேவரீர் உடைய பிரபாவத்தை உள்ள படி அறிய மாட்டாத என் மனசானது –
நாம் இவ்விஷயத்தை புகழுகை -உபசாரா பதேசெனப் பண்ணும் அபசாரம் என்று அறிய மாட்டாதே –
தேவரீர் உடைய குணங்களை அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணி ஒழிய தரிக்க மாட்டுகிறது இல்லை –

என் மனம் –ஆற்றகில்லாது
நான் துதிப்பதை விட்டு விட்டாலும் என் மனம் துதிக்காமல் இருப்புக் கொள்ள மாட்டாதாய் உள்ளது .
தேவரீர் இடம் ஈடுபட்டு -துதிக்க முற்படும் என் மனத்தை என்னாலேயே கட்டுப் படுத்த முடியவில்லை –
அத்தகைய முறையில் -பள்ள மேடையில் நீர் பாய்வது போலே -என் மனம் தேவரீர் விஷயத்தில் பாய்கிறது என்பது கருத்து .
குணங்களுக்கு ஏற்படும் இழிவு கருதி துதியினின்றும் மீளுகிறேன் –
துதித்தால் அன்றித் தரியாத மனம் என்னால் அடக்க ஒண்ணாமையின் மீண்டும் துதியில் மூளுகிறேன்
என் கருவி மனம் -என் வசத்தில் இல்லை –
கருவியின் வசத்திலேயே நான் உள்ளேன் என்கிறார் .

இதற்க்கு என் நினைவாய் என்று இட்டு –
இப்படிப்பட்ட என்னுடைய சாஹாச உத்தியோகத்துக்கு தேவரீர் திரு உள்ளத்தில் என்னதாக நினைப்பு இடுகிறதோ என்று கருத்து –

அஞ்சுவனே –
தேவரீர் உடைய மேன்மையையும் -என்னுடைய தண்மையையும் அடைவே பார்த்து அஞ்சா நின்றேன் –
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவினுக்கு ஆற்றேன் – என்னுமா போலே இரா நின்றது
என்னுடைய தசை –
இதுக்கு தேவரீர் ஏது திரு உள்ளம் பற்றுகிறதோ என்று பீதனாக நின்றேன் என்றது ஆய்த்து –

இதற்கு என் நினைவாய் –அஞ்சுவனே
வேண்டாம் என்று இருப்பினும் மனம் கட்டுக்கு அடங்காமையாலே நான் பேச முற்படுவதான உண்மை நிலை நெஞ்சில் படாது –
சாற்றுவனேல் அது தாழ்வு -என்பதும் –
ஏத்தி இன்றி என் மனம் ஆற்ற கில்லாது -என்பதும் முரண்பட்ட பேச்சுக்கள்
இவை மூர்க்கத் தனத்தினால் பேசுபவை என்று கருதி முனிதரோ என்று பயபடுகின்றேன் என்றபடி –
ஸ்ரீ பெரியாழ்வார் வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்-
நாக்கு நின்னை யல்லால் லறியாது நனதஞ்சுவன் என் வசமன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும் என் நாவினுக்கு ஆற்றேன் — 5-1 1-என்று
அருளிச் செய்தது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது —

சிறகுகின் கீழ் அடங்காத பெண்ணை பெற்றேன்-ஸ்ரீ பராங்குச நாயகி தாயார் புலம்ப -பெண் அவன் பின்னே போனாள் அங்கு-
ஸ்ரீ ராமன் பின் சென்றது ஸ்ரீ தசரதன் கண்களும்
அது போலே ஸ்ரீ அமுதனாரும் மனமும் போனது ஸ்ரீ எம்பெருமானார் சீல குணங்களின் பின்னே–
போற்ற அரியவனே-மூவர் அனுபவம் -பெண் / கண் / மனஸ் பின்னே போனதே–

—————–

வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1 1-

ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருளு செய்யும் பிரானே -5 1-8 –

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –11-

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –13-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே–1-5-2-

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக் கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம் பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்–4-3-9-

யானும் ஏத்தி, ஏழ் உலகும் முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்திலும், தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்?
தேனும் பாலும் கன்னலும் அமுது மாகித் தித்திப்ப,
யானும் எம்பிரானையே ஏத்தினேன்,யான் உய்வானே–4-3-10-

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதி யாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்த வா
மாநீர் வெள்ளி மலை தன் மேல் வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே—8-5-4-

சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப் பாதம்
எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என் னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழு துண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே–8-5-5-

தாள தாமரையான் உன துந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன் னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உன சீலமே–-திருவாய் மொழி-9-3-10-

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு –மூன்றாம் திருவந்தாதி—21-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: