ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -15–குண-தோஷங்களைப் பற்றிய விளக்கம்-

ஶ்ரீபகவான் உவாச
ய ஏதான் மத்பதோ2 ஹித்வா ப4க்தி ஞான க்ரியாத்மகான |
க்ஷுத்ரான் காமான்ஶ்சலை: ப்ராணௌர்ஜுஷந்த: ஸமஸரந்தி தே || 1 ||

என்னால் உபதேசிக்கப்பட்டது பக்தி-ஞான-கர்ம யோகங்கள். மனிதர்களுக்காக நான் இந்த மூன்று பாதைகளை வகுத்துக் கொடுத்து இருக்கிறேன்.
யார் இந்தப் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்களோ அவர்கள் மிகக்குறைந்த காலம் இன்பத்தைக் கொடுக்கின்ற விஷய சுகங்களை
புலன்களின் மூலமாக அனுபவித்துக் கொண்டு காலத்தை வீணடித்து கொண்டிருப்பார்கள்.
மேலும் சம்சாரத்திலேயே இருந்து கொண்டு துயரப்படுவார்கள்.
ஹித்வா – விலகிச் செல்லுதல்
ஶ்சைலைஹி ப்ரணைஹி – நிரந்தரமாக எந்த இன்பத்தையும் அனுபவிக்கும் சக்தியற்ற புலன்களால்
ஜிஷந்தஹ – அத்தகைய இன்பங்களையே அனுபவிப்பதிலேயே மனிதர்கள் ஈடுபடுகிறார்கள்
தே ஸம்ஸரந்தி – இப்படிப்பட்டவர்கள் சம்சாரத்திலேயே சுழன்று கொண்டிருப்பார்கள்

ஸ்வே ஸ்வேऽவேதி4காரே யா நிஷ்டா ஸ கு3ண: பரிகீர்தித: |
விபர்யயஸ்து தோஷ: ஸ்யாதுப4யோரேஷ நிஶ்சய: || 2 ||

நல்லது கெட்டது என்பது பொருட்களில் கிடையாது. அதை பயன்படுத்தும் மனிதர்களின் தகுதியை பொறுத்து அமைகின்றது.
அவரவர்களுக்கு எது கடமையாக இருக்கிறதோ அவைகள் அவனுக்கு செய்து கொண்டிருப்பது நல்லதையும்,
செய்யாமல் இருப்பது கெட்டதையும் கொடுக்கும். இதுதான் நிச்சயமான நியதியாகும்.
அதாவது குண-தோஷம் என்ற பிரிவினை ஒருவனுடைய தகுதியை அனுசரித்துச் செய்யப்படுகின்றதே தவிர
வஸ்துவை அனுசரித்து செய்யப்படுவதில்லை..

ஶுத்3தயஶுத்3தி4 விதீ4யேதே ஸமானேஷ்வபி வஸ்துஷு |
வ்யஸ்ய விசிகித்ஸார்த2ம் கு3ணதோ3ஷௌ ஶுபா4ஶுபௌ || 3 ||

எல்லா பொருட்களும் சமமாக இருந்தாலும் அவைகள் நல்லதா, கெட்டதா என்று பரிசோதிப்பதற்காக சந்தேகத்தை உருவாக்கப்படுகிறது.
அவைகளில் சுத்தி-அசுத்தி, குணம் – தோஷம், சுபம்-அசுபம் என்ற பாகுபாடுகள் சாஸ்திரம் வைத்திருக்கிறது.

த4ர்மார்த2ம் வ்யவஹார்ர்த2ம் யாத்ரார்த2மிதி சானக4 |
த3ர்ஶிதோऽயம் மயாऽऽசாரோ தர்ம்முத்3வஹதாம் து4ரம் || 4 ||

பாவங்களற்ற உத்தவா! ஜீவர்களாகிய நமக்கு புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும், பாவத்தை விலக்க வேண்டும் என்பதற்காக
செயல்களில், உணவு வகைகளில், வசிக்கும் இடங்களில் சுத்தம்-அசுத்தம், நல்லது-கெட்டது என்று சாஸ்திரம் பிரித்தி வைத்திருக்கிறது
வியவஹாரார்த2ம் – சமூக விவகாரங்கள் ஒழுங்காக நடைபெறுவதற்காக நல்லது, கெட்டது என்று பிரிக்கப்பட்டிருக்கிறது
மயா – ஈஸ்வரனாகிய என்னால்
அயக் ஆசார த3ரிஶிதஹ – இங்கு வழிமுறைகளை காட்டப்பட்டிருக்கிறது
தர்ம உத்3வஹதாம் து4ரம் – தர்மத்தை பின்பற்றி வாழ விரும்புபவர்களுக்கு இது கொடுக்கப்பட்டிருக்கிறது.

பூ4ம்யம்ப்3வக்3ன்யனிலாகாஶா பூ4தானாம் பஞ்சதா4தவ: |
ஆப்3ரஹமஸ்தா2வராதீ3னாம் ஶாரீரா ஆத்மஸம்யுதா: || 5 ||

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் என்கின்ற இந்த பஞ்ச பூதங்கள் எல்லா ஜீவராசிகளின் உடலுக்கு காரணமாகின்றது.
தேவர்கள், பிரம்ம தேவன் முதற்கொண்டு மலை, தாவரங்கள் அனைத்தும் இவைகளால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த எல்லா உடல்களுக்குள்ளும் இருக்கின்ற ஆத்மா ஒன்றுதான்.

வேதே3ன நாம ரூபாணி விஷமாணி ஸமேஷ்வபி |
தா4துஷூத்3த4வ கல்பயந்த ஏதேஷாம் ஸ்வார்தஸித்3தயே || 6 ||

உத்தவா! எல்லா உடல்களும் பஞ்சபூதங்களின் அடிப்படையில் ஒன்றுதான். இருந்த போதிலும் வேதத்தின் மூலம் நாம-ரூப
வேற்றுமைகளினால் கற்பணையாக ஜீவர்களை பிரித்திருக்கிறது. ஜீவர்கள் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்கின்ற
புருஷார்த்தமான இலக்கை அடைவதற்காக இந்த வேற்றுமைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தே3ஶகாலதி3பா4வானாம் வஸ்தூனாம் மம ஸத்தம |
கு3ணதோ3ஷௌ விதீ4யேதே நியமார்த2ம் ஹி கர்மணாம் || 7 ||

உத்தவா! தேச, காலம், பொருட்கள், கர்த்தா (நல்லவன், கெட்டவன்), செயல்கள், மந்திரங்கள் ஆகிய இவைகளில்
நல்லது, கெட்டது என்று பிரித்து வைத்திருக்கிறோம்.
தேஶகாலதிபாவானாம் – தேசம், காலம், போன்றவற்றில்
மம ஸத்தம – உத்தமமான உத்தவா என்னால்
நியமார்த2ம் ஹி கர்மாணாம் – மனிதர்களிடமிருந்து வெளிப்படும் செயல்களை நெறிப் படுத்துவதற்காக இந்த பிரிவு விதிக்கப்பட்டிருக்கின்றது

அக்ருஷ்ணஸாரோ தே3ஶானாமப்3ரஹமண்யோऽஶுசிர்ப4வேத் |
க்ருஷ்ணஸாரோऽப்யஸௌவீரகீகடாஸம்ஸ்க்ருதேரிணம் || 8 ||

நற்குணங்கள் பொருந்திய மனிதர்கள் வாழும் இடங்கள் நல்ல இடங்களாகும். க்ருஷ்ணஸாரம் என்ற மான்கள் இல்லாத இடங்கள் அசுத்தமானவை.
இந்த மான்கள் இருந்தாலும் நல்ல மனிதர்கள் இல்லாத இடம் தூய்மையற்றது. நல்லவர்களை மதிக்காத இடம் தூய்மையற்றது.
சம்ஸ்காரங்கள் செய்யப்படாத இடமும், பாலைவனமும், தூய்மை அற்ற இடங்களாகும்.
இடங்களில் பொதுவாக நல்லது, கெட்டது என்பது கிடையாது.

கர்மண்யோ கு3ணவான் காலோ த்ரவ்யத: ஸ்வத ஏவ வா |
யதோ நிவர்ததே கர்ம ஸ தோஷோऽகர்மக: ஸ்ம்ருத: || 9 ||

குணவான் காலஹ – நல்ல காலம் என்பது
கர்மண்ய – எந்தக் காலத்தில் நல்ல காரியங்கள் செய்வதற்கேற்றதோ அதுவே மங்களகரமான செயல்களுக்கு அனுகூலமான காலம், நல்ல காலம்
த்ரவ்யதஹ – எந்தக் காலத்தில் தேவையான பொருட்கள் கிடைக்கின்றதோ அதுவே நல்லகாலமாகும்
ஸ்வதஹ ஏவ வா – பவித்திரமான காலம் நல்ல காலம். சில காலங்கள் எப்பொழுதுமே நல்ல காலம்தான்
அவைகள் விடியற்காலை, பிரம்ம முகூர்த்தம், சந்தியா காலம்.
யதஹ கர்ம நிவர்ததே ஸஹ தோஷஹ – எந்த காலங்களில் நற்காரியங்களை செய்யக்கூடாதோ அது கெட்ட காலமாகும்
ஸம்ருதஹ – என்று கருதப்படுகிறது
அகர்மஹ – கெட்ட காலத்தில் சாஸ்திரிய கர்மங்களையும், நல்ல கர்மங்களையும் செய்யக்கூடாது

த்ரவ்யஸ்ய ஶுத்3த்4யஶுத்3தி4 ச த்ரவ்யெண வசனேன ச |
ஸம்ஸ்காரேணாத2 காலேன ஸஹத்வால்பதயாத2 வா || 10 ||

நாம் பயன்படுத்தும் பொருட்களில் நல்லது, கெட்டது என்று பிரித்து வைத்திருக்கிறோம். இவைகள் சில காரணங்களால் இவ்வாறு
பிரிக்கப்பட்டிருக்கிறது. எந்தவொரு பொருளும் சுத்தம்-அசுத்தம் என்று சொல்வது இனி சொல்லப்போகின்ற சில காரணங்களால் ஆகும்
த்ரவ்யேன – வேறொரு பொருட்களின் சேர்க்கை, சேர்க்கையின்மையை வைத்து முடிவு செய்யலாம்.
அரிசியோடு கல் சேர்ந்திருத்தல், நீரில் நனைந்த சந்தனக்கட்டை நாறும்.
வசனேன ச – மேலும் மகான் ஒருவர் இது நல்லது என்று சொல்லிவிட்டால் அது நல்லதாகி விடும்,
வேதத்தில் நல்லது என்று சொல்லிவிட்டால் அது நல்லதாக இருக்கும்.
ஸம்ஸ்காரேணா – மந்திரங்கள் சொல்லி நீர் தெளித்து (புரோக்ஷணம்) ஒரு பொருளை சுத்தப்படுத்தலாம்
காலேன – காலத்தினால் நல்லது, கெட்டது என்று முடிவு செய்யப்படுகிறது. காயை பழமாக மாற்றுவதற்கு காலம்தான் தேவைப்படுகிறது.
இதே பழம் இன்னும் சில காலங்கள் சென்றால் அதுவே அழுகி போய்விடும்.
மஹத்தவ அல்பதயாத2 வா – பொருட்கள் அதிகமாக இருந்தால் நல்லது குறைவதாக இருந்தால் அசுத்தம் என்று பிரிக்கப்படுகிறது.
ஆற்று நீரில் தோஷம் கிடையாது. நீர் குறைவாக இருக்கும் குவளை நீரில் தோஷம் ஏற்படலாம்.

ஶக்த்யாஶக்த்யாத2 வா பு3த்3த்4யா ஸம்ருத்3த்4யா ச யதா3தமனே |
அக4ம் குர்வந்தி ஹி யதா2 தேஶாவஸ்தானுஸாரத: || 11 ||

ஸக்த்யா அஶக்த்யாத2 – அவரவர்களின் உடலிலுள்ள சக்தியின் அளவுக்கேற்றபடி நல்லது, கெட்டது பிரிக்கப்படுகிறது
பு3த்3த்4யா – அறிவின் அடிப்படையில் நல்லது,கெட்டது பிரிக்கப்படுகிறது. தந்தையின் மரணம் பற்றி தெரியாத வரையில் மகன்
நல்ல காரியங்களான வைதீக காரியங்கள், கோயிலுக்கு செல்லுதல் ஆகியவற்றை செய்யலாம்.
ஆனால் தெரிந்துவிட்டால் அவைகளை செய்யக்கூடாது. அதற்கேற்ற நியமங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
ஸம்ருத்3த்4யா(செழுமையான) – செல்வத்தின் அளவுக்கேற்ப தானம் செய்வதில் நல்லது, கெட்டது என்று பிரிக்கப்படுகிறது.
செல்வந்தன் குறைவாக தானம் செய்தான் அது பாவம், ஏழை சிறிதளவு தானம் செய்தாலும் அது நல்லதாக கருதப்படும்.
யத ஆத்மனி அக4ம் குர்வந்தி – எனவே ஒருவன் சுத்தமானதை பயன்படுத்தினால் புண்ணியம், அசுத்தமானதை பயன்படுத்தினால் பாவம் கிடைக்கும்
யதா2 தேஶ வஸ்து அனுஸாரத: – தேசம், காலம், வஸ்து இவைகளின் அடிப்படையிலும், சூழ்நிலைகளின் அடிப்படையிலும்
நல்லது, கெட்டது தீர்மானிக்கப்படுகிறது.

தா4ன்யதார்வஸ்தி2தந்தூனாம் ரஸதைஜஸசர்மணாம் |
காலவாய்வக்3னிம்ருத்தோயை: பார்தி2வானாம் யுதாயுதை: || 12 ||

காலவாய அக்னிம்ருத்தோயை – பொருட்கள் காலத்தினாலும், நீரினாலும், காற்றாலும், மண்ணாலும் தூய்மைப்படுத்தப்படுகின்றது
தா4ன்ய – சாப்பிடக்கூடிய தானியங்கள்
தார் – மரங்கள்
அஸ்தி – யானைத் தந்தம்
தந்தூனாம் – உடைகள்; ரஸ – எண்ணெய் பொருட்கள்
தைஜஸ – உலோகங்கள்; சர்மணாம் – விலங்குகளின் தோல்
பார்தி2வானாம் – மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள்
யுதாயுதை: – இவைகளை எந்த பொருட்களுக்கு தூய்மைப்படுத்த வேண்டுமோ, அதை பயன்படுத்தி தூய்மைப்படுத்தலாம்

அமேத்4யலிப்தம் யத்3யேன க3ந்த4லேபம் வ்யபோஹதி |
ப4ஜதே ப்ரக்ருதிம் தஸ்ய தச்சௌ2சம் தாவதி3ஷ்யதே || 13 ||

தஸ்ய – ஒரு பொருளுக்கு
ப்ரக்ருதிம் ப4ஜதே – அதனுடைய இயற்கையான தன்மையுடன் இருக்கிறதோ
தாவத் தத் சௌசம் இஷ்யதே – அதுவரை அது தூய்மையுடன் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது
யத் அமேத்4ய லிப்தம் – எந்த பொருள் அழுக்குப் பிடித்து துர்நாற்றத்துடன் இருந்தால், அதன் மீதுள்ள அழுக்கை நீக்கிவிட்டு
அத்னுடைய உண்மை தன்மையை அடைந்து விட்டால், அது உடனேயே தூய்மையானதாக மாறி விடுகிறது

ஸ்னானதா3னதபோऽவஸ்தா2 வீர்யஸம்ஸ்காரகர்மபி4: |
மத்ஸ்ம்ருத்யா சாத்மன: ஶௌசம் ஶுத்3த4: கர்மாசரேத்3த்3விஜ: || 14 ||

சுற்றுப்புறம், வீடு, உடை, உடல் இவைகளை தூய்மையாக வைத்திருப்பவன், தானம் செய்து கொண்டிருப்பவன்,
தபஹா – எல்லாவிதத்திலும் எளிமையுடனும், ஒழுக்கத்துடனும் இருப்பவன்;
அவஸ்தா – அவர்களுடைய ஆசிரம வாழ்க்கை நெறிகளை முறையாக, தவறாமல் கடைப்பிடித்து கொண்டிருப்பவன்
வீர்யம் – உடல், மனம் இவைகள் பலத்துடன் இருப்பவன், பயமின்மையுடன் இருப்பவன், தைரியம்
ஸம்ஸ்கார கரம – நம்மை தூய்மைப்படுத்தும் கர்மங்களை செய்பவன்
ச ஆத்மனஹ – அந்த ஜீவாத்மா
ஶௌசம் – தூய்மையானவன்
மத்ஸ்ம்ருத்யா – என்னை நினைத்தாலே போதும் தூய்மையாக்கப்படுவாய்
த்விஜ – சாதகன்
ஶுத்3த4 – இவ்விதம் தன்னை தூய்மைப்படுத்தியவனாக இருந்து கொண்டு
கர்மா சரேத் – செயல்களை செய்ய வேண்டும்.

மந்த்ரஸ்ய ச பரிஞானம் கர்மஶுத்4தி4ர்மதர்பணம் |
த4ர்ம: ஸம்பத்3யதே ஷட்3பி4ரத4ர்மஸ்து விபர்யய: || 15 ||

மந்த்ரஸ்ய ச பர்க்ஞானம் – மந்திரத்தை குருமுகமாக பெற்று அதன் பொருளையும் தெரிந்து பயன்படுத்துவதால்
புண்ணியம் கிடைக்கும், தூய்மை அடையலாம்
கர்மஸுத்தி மதர்பணம் – நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்களை ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு செய்வது தூய்மையான கர்மங்கள்.
மேற்கூறிய ஆறுவிதமாக தூய்மை செய்யப்பட்ட செயல்களை செய்பவன் தர்மத்தை சம்பாதிக்கிறான்.
எதிர்மறையாக கடைப்பிடித்தால் அதர்மமாகும், பாவத்தை சேர்த்துக் கொள்வான்

க்வசித்4கு3ணோऽபி தோஷ: ஸ்யாத்3தோ3ஷோऽபி விதி4னா கு3ண: |
கு3ணதோஶார்த2னியமऽத்4பி4தாமேவ பா3த4தே || 16 ||

க்வசித் – சில சூழ்நிலைகளில், காலங்களில், சில மனிதர்கள் செய்யும் செயல்கள்
குண அபி தோஷ ஸ்யாத் – நல்லது கூட கெட்டதாக மாறிவிடும்.
தோ3ஷ: அபி விதி4னா குண: – கெட்டது கூட விதிவசத்தால் நல்லதாகி விடும்.
குண: தோஷ அர்த2 நியமஹ – இந்த நல்லது, கெட்டது என்று மாறிக்கொண்டிருக்கின்ற விதியானது
தத்3 பி4தா2மேவ பா3த4தே – இந்த பிரிவே, பாகுபாடே பொய்யானது, மித்யாவாகும். ஒரு பொருளை, இடத்தை, காலத்தை
நல்லது, கெட்டது என்று பிரித்து வைத்தல் என்பது பொய்யாகின்றது, பொய்யாக்கப்படுகின்றது

ஸமானகர்மாசரணம் பதிதானாம் ந பாதகம் |
ஔத்பத்திகோ கு3ண: ஸங்கோ3 ந ஶயான: பதத்யத4: || 17 ||

பதிதானாம் – மிகவும் கீழான வேலை செய்பவர்கள்
ஔத்பத்திகஹ குண – அவனுடைய இயற்கையான குணம்
ஸங்கஹ – இந்த செயலில் ஈடுபட வைக்கிறது
ஸமான கர்மாசரணம்- அவர்கள் இழிந்த செயல்களை செய்தாலும்
ந பாதகம் – பாவத்தைக் கொடுக்காது, கெடுதலைக் கொடுக்காது
ஶயான: பதத்யத4:- எப்படி தரையில் படுத்திருப்பவன் கீழே விழமாட்டானோ அதுபோல.

யதோ யதோ நிவர்தேத விமுச்யேத ததஸ்தத: |
ஏஷ த4ர்மோ ந்ருணாம் க்ஷேம: ஶோகமோஹப4யாபதஹ: || 18 ||

யதோ யதோ நிவர்தேத – எந்தெந்த விஷயங்களிடமிருந்து பற்றற்று இருக்கிறாயோ
ததஹ ததஹ விமுச்யதே – அவைகளிலிருந்து துயரத்தை அடைவதில்லை, அந்தந்த பொருட்களிலிருந்து வரும் துயரத்திலிருந்து விடுபடுகிறான்.
ந்ருணாம் ஏஷ தர்மஹ – மனிதனுக்கு இதுதான் தர்ம மார்க்கம்
க்ஷேமம் – நன்மையானது, மோட்சத்தை தரக்கூடியது
ஶோக மோஹ ப4ய அபதஹ – சோகம், மோகம், மதிமயக்கம், பயம் இவைகளிலிருந்து விடுதலை அடைவதுதான் க்ஷேமம்.

விஷயேஷு கு4ணாத4யானாத்பும்ஸ: ஸங்கऽதோ ப4வேத் |
ஸங்3காத்தத்ர ப4வேத்காம: காமாதே3வ கலிர்ந்ருணாம் || 19 ||

விஷயேஷு குண த்4யானாத் பும்ஹ: – புலனுகர் போகப்பொருட்களில் உள்ள தற்காலிகமான பாதுகாப்பு,
மற்றும் சுகத்தக் கொடுக்கும் பகுதியை மட்டும் நினைத்துக் கொண்டிருப்பதால் மனிதனுக்கு
ஸங்கஹ தத் பவேத் – அந்தப் பொருட்கள் மீது உணர்வு பூர்வமான மதிப்பு ஏற்படுகின்றது
ஸங்காத் தத்ர பவேத காம – அதன்பிறகு அதை அடைய வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது.
அந்தப்பொருளோடு நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம்
காமாதேவ கலிர் ந்ருணாம் – இந்தப்பற்றுக்களால் சண்டை, சச்சரவு, போன்ற தீய உணர்ச்சிகள் ஏற்படுகிறது.

கலேர்து34விஷஹ: க்ரோத4ஸ்தமஸ்தமனுவர்ததே |
தமஸா க்3ரஸ்யதே பும்ஸ்ஶ்சேதனா வ்யாபினீ த்ருதம் || 20 ||

இவ்வாறு மனதில் உருவாகின்ற தீய உணர்ச்சியால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் ஏற்படுகிறது. கோபம் தன்னையும்,
தன்னைச் சார்ந்தவர்களையும் துன்பப்படுத்தக் கூடியது. கோபத்தினால் நல்லது, கெட்டது என்ற அறிவு ஏற்படுவதில்லை.
பிறகு செயல்பாடுகளை திட்டமிடும் சிந்தனா சக்தியும் மறைந்துவிடுகின்றது. புத்தியானது மோகத்தின் வசத்தில் மாட்டிக் கொள்கிறது.

தயா விரஹித: ஸாதோ4 ஜந்து: ஶூன்யாய கல்பதே |
ததோऽஸ்ய ஸ்வார்தவிப்4ரம்ஶோ மூர்ச்சி2தஸ்ய ம்ருதஸ்ய ச || 21 ||

உத்தவா! இவ்வாறு விவேக சக்தியை இழந்து விட்டவன் விலங்குத்தன்மையை அடைந்து சூன்யமாகிவிடுகிறான்.
அவனுடைய இறுதி லட்சியமான புருஷார்தத்தை இழந்து விடுகிறான். எந்த லட்சியத்தையும் அடைய மாட்டான்.
விரும்பியது எதையும் அடைய மாட்டான். மயக்க நிலையிலோ அல்லது மரணமடைந்தவன் போன்று ஒன்றும் செய்ய முடியாத நிலையை அடைகிறான்.

விஷயாபி4னிவேஶேன நாத்மானம் வேத3 நாபரம் |
வ்ரிக்ஷஜீவிகயா ஜீவன் வ்யர்த2ம் ப4ஸ்த்ரேவ ய: ஶ்வஸன் || 22 ||

புலனுகர் போகப்பொருட்களையே சிந்தித்து கொண்டிருப்பதால் அதன் மீதுள்ள பற்றின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது (அபினிவேஶம்).
ஒரு ஜீவன் தன்னை அறிவதில்லை, இறைவனையும், பிரம்மத்தையும் அறியமாட்டான். பட்ட மரத்தைப் போல ஒரு ஜடமாக
வீண் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பான். மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் இயந்திரத்தைப் போல இயங்கிக் கொண்டிருப்பான்.
கொல்லன் பட்டறையிலுள்ள துருத்தியைப் போல மூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருப்பான்.

ப2லஶ்ருதிரியம் ந்ருணாம் ந ஶ்ரேயோ ரோசனம் பரம் |
ஶ்ரேயோ விவக்ஷயா ப்ரோக்தம் யதா2 பை4ஷஜ்யரோசனம் || 23 ||

விவக்ஷா – உள்நோக்கம்
மனிதர்களுக்கு காம்ய கர்மங்களையும், அதை செய்வதனால் அடையும் பலன்களை பற்றி உபதேசிக்கின்ற வேதத்தின் பகுதியே கர்ம காண்டம் (ப2லஶ்ருதி).
அவைகள் முழுமையான நன்மையையோ, மோட்சத்தையோ, முழுமையான மனநிறைவையோ கொடுப்பதற்காக சொல்லப்படவில்லை.
பரம் ரோசனம் – தர்மத்தில் விருப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இவைகள் சொல்லப்பட்டு இருக்கிறது
ஶ்ரேய விவக்ஷயா – வேதத்தின் உள்நோக்கம் மோட்சத்தை நோக்கி நம்மை அழைத்து செல்வதுதான்
யதா2 ப4ஷஜ்யரோசனம் – எவ்வாறு மருந்தைக் கொடுப்பது நோயை குணப்படுத்துவதற்குதான் அதை சுவைப்பதற்காக அல்லவோ
அது போல கர்மகாண்டம் நம்மை அடுத்த நிலைக்கு தயார் படுத்துவதற்காகத்தான் இவ்வாறு சொல்லியிருக்கிறது.

உத்பத்த்யைவ ஹி காமேஷு ப்ராணேஷு ஸ்வஜனேஷு ச |
ஆஸக்தமனஸோ மர்த்யா ஆத்மனோऽனர்த2ஹேதுஷு || 24 ||

இயல்பாகவே மனிதர்கள் பற்றுடன் கூடிய மனதுடன்தான் இருக்கிறார்கள். பொருட்களிடத்தும், மனிதர்களிடத்திலும்,
உடல், உயிர், உற்றார், உறவினர்கள் மீதும் பெரும் பற்று உண்டாகின்றது.
இந்த பற்றானது ஆன்மீக முன்னேற்றத்திற்கும், மோட்சத்தை அடைவதற்கும் இடையூறாகவே இருக்கும்.

ந தானவிது3ஷ: ஸ்வார்த2ம் ப்4ராம்யதோ வ்ருஜினாத்4வனி |
கத2ம் யுஞ்ஜ்யாத்புனஸ்தேஷு தாம்ஸ்தமோ விஶதோ பு3த4: || 25 ||

பு3த4ஹ – வேதமானது
ஏற்கனவே சம்சாரமான இருளில் சென்று கொண்டிருப்பவனை எப்படி மீண்டும் அதே இருளான சம்சாரத்தில் விழ வைக்கும்.
தன்னை ஏற்றுக் கொண்டவனை, நம்புபவனை தன்னுடைய உண்மையான லட்சியத்தை தெரியாமல் அலைந்து கொண்டிருப்பவன்
சம்சார பாதையில் உழன்று கொண்டிருப்பவனை மீண்டும் எப்படி சம்சாரத்திலே தள்ளும்.

ஏவம் வ்யவஸிதம் கேசித3விக்ஞாய குபு3த்3த4ய: |
ப2லஶுருதிம் குஸுமிதாம் ந வேத3க்ஞா வத3ந்தி ஹி || 26 ||

இவ்விதம் இருக்கும்போது பலர் இந்த உண்மையை உணராமல், இது அவர்கள் புத்தியில் உள்ள குறையினால் இவ்வாறு
தவறாக வேதத்தை புரிந்து கொள்கிறார்கள். பரலோக, இகலோக இன்பத்தை மிகவும் அழகாக புகழ்ந்து கொண்டிருப்பதை
வேதத்தின் பலனாக அவர்கள் நினைக்கிறார்கள். வேதத்தின் உண்மையான கருத்தை அறிந்தவர்கள் இவ்வாறு சொல்வதில்லை.

காமின: க்ருபணா லுப்3தா4 புஷ்பேஷு ப2லபு3த்3த4ய: |
அக்3னிமுக்3தா4 தூ4மதாந்தா: ஸ்வம் லோகம் ந வித3ந்தி தே || 27 ||

விஷயபோகங்களில் சிக்கித் தவிக்கும் தீனர்கள், எதையும் தியாகம் செய்யத் தயாராக இல்லாதவர்கள்,
மனதுக்குள் அதிக ஆசைகளுடன் இருப்பவர்கள், மனதால் ஏழையாக இருப்பவர்கள்.
லுப்தா4: – சில ஆசைகளுக்கு, உறவுகளுக்கு, பொருட்களுக்கு, சூழ்நிலைகளுக்கு அடிமைபட்டு இருப்பவர்கள்
புஷ்பேஷு ப2லபு3த4ய: – மலர்களைப் போன்று மதிமயக்கும் அனாத்மா விஷயத்தைப் புகழ்ந்து பேசுகின்ற சில
வேத வாக்கியங்களை தங்களது இறுதியான லட்சியமாக நினைப்பவர்கள்
அக்னி முக்3தா4: – கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட யாகங்களில் மூழ்கியிருப்பவர்கள்
தூ4மதாந்தா – சொர்க்கத்தை இலக்காகக் கொண்டு அதை நோக்கி செல்பவர்கள்.
இவர்களெல்லாம் தன்னைப்பற்றிய உண்மையை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்

ந தே மாமங்க3 ஜானந்தி ஹ்ருதி3ஸ்த2ம் ய இத3ம் யத: |
உக்த2ஶஸ்த்ரா ஹயஸுத்ருபோ யதா2 நீஹாரசக்ஷுஷ: || 28 ||

உத்தவா! இப்படிபட்டவர்கள் என்னை அறிவதில்லை, புரிந்து கொள்வதில்லை. ஆனாலும் நான் அவர்கள் இதயத்திற்குள்ளேயே இருக்கிறேன்.
அதையும் உணர்வதில்லை. இந்த உலக வடிவமாகவே நான் இருக்கிறேன் என்பதையும், இந்த உலகம் என்னால் படைக்கப்பட்டுள்ளது
என்பதையோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள, வர்ணிக்கப்பட்டுள்ள கர்மங்களில் மயங்கி
புலன்களால் அடைகின்ற இன்பத்தில் மட்டும் திருப்தி அடைகிறார்கள்.
இவ்வாறு எவ்வாறு கண்புரை நோயினல் பொருட்களை சரியாக பார்க்க முடியாதோ அதுபோன்ற நிலையை உடையவர்கள்

தே மே மதமவிக்ஞாய பரோக்ஷம் விஷயாத்மகா: |
ஹிம்ஸாயாம் யதி3 ராக3: ஸ்யாத்3யக்ஞ ஏவ ந சோத3னா || 29 ||

ஒருவேளை ஒரு ஜீவனை வதம் செய்து அதனிறைச்சியை உண்பதில் விட முடியாத ஆசை இருந்தால் அவைகளை
தேவதைகளுக்கு படைத்துவிட்டு பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்.
ந சோதனா – இதை ஒரு விதியாக சொல்லவில்லை. யாகம் செய்யும்போது இவ்வாறு செய்யலாம் என்றுதான் கூறியிருக்கிறது.
என்னுடைய (வேதத்தினுடைய) ரகசியமான, மறைமுகமான கருத்தை புரிந்து கொள்ளாதவர்கள், விஷய சுகத்தை அனுபவிக்க விரும்புபவர்கள்.

ஹிம்ஸாவிஹாரா ஹயாலம்3தை4: பஶுபி4: ஸ்வஸுகே2ச்ச2யா |
யஜந்தே தே3வதா யக்ஞை: பித்ருபூ4தபதீன் க2லா: || 30 ||

ஹிம்சையில் இன்பம் காண்பவர்கள், துயரத்தை காணாதவர்கள், விலங்குகளை பலி கொடுப்பது தன்னுடைய ஆசை
நிறைவேற்றிக் கொள்வதற்காக மட்டுமேதவிர வேறெந்த நல்ல விஷயத்திற்காக அல்ல.
இந்த புலால் உணவை தாமஸமான தேவதைகளுக்கு, பித்ருக்களுக்கு படைத்து பூஜித்து பின் அதை உட்கொள்கிறார்கள்

ஸ்வப்னோபமமமும் லோகமஸந்தம் ஶ்ரவணப்ரியம் |
ஆஶிஷோ ஹ்ருதி3 ஸங்கல்ப்ய த்யஜந்த்யர்தா2ன் யதா2 வணிக் || 31 ||

இந்த உலகமும் மற்ற மேலுலகங்களும் கனவு காட்சியை போன்றவை. உண்மையில் அவைகள் இல்லை.
அவைகளைப் பற்றிய விவரங்கள் கேட்பதற்கு மட்டுமே இனிமையாக இருக்கின்றன. இந்த கற்பணை இன்பத்தை அடைவதற்கு
தன்னிடத்தில் இருக்கின்ற செல்வம், உடல்நலம், புண்ணியம் இவைகளையும் இழந்து விடுகிறான்.
எவ்வாறு வியாபாரிகள் அதிக லாபத்திற்கு பேராசைப்பட்டு மூலதனத்தையே இழந்து விடுகிறார்களோ அதுபோலவேதான் இதுவும்

ரஜ:ஸத்த்வதமோ நிஷ்டா ரஜ: ஸத்த்வதமோஜுஷ: |
உபாஸத இந்த்ரமுக்2யான் தே3வாதீன் ந யதை2வ மாம் || 32 ||

எல்லா ஜீவனும் ஏதாவது ஒரு குணத்தை பிரதானமாக கொண்டுதான் செயல்பட்டுக் கொண்டு இருப்பான்.
இந்த குணங்களுக்கு அதிஷ்டானமான, தேவதைகளை வழிபட்டுக் கொண்டு இருப்பார்கள்.
இந்திரன் முதலிய தேவதைகள் சிறப்பாக வழிபடுகிறார்கள். சம்சாரியாக இருக்கிறார்கள்.
அவ்வளவு ஆழமான ஈடுபாட்டுடன் என்னை வழிபடுவதில்லை, என்னை அடைய முயற்சி செய்வதில்லை.

இஷ்டஹ தேவதா யக்ஞைர்க3த்வா ரம்ஸ்யாமஹே தி3வி |
தஸ்யாந்த இஹ பூ4யாஸ்ம மஹாஶாலா மஹாகுலா: || 33 ||

விதவிதமான யாகங்களில் விதவிதமான தேவதைகளையெல்லாம் வழிபட்டு இறந்த பிறகு சொர்க்கம் போன்ற நல்லுலகங்களுக்கு சென்று
போகங்களையெல்லாம் அனுபவிக்கலாம் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அங்கு சென்றாலும் புண்ணியம் தீர்ந்தவுடன்
மீண்டும் பூலோகத்தில்தான் வந்து பிறக்க வேண்டும். ஆனால் அவர்கள் செல்வம் நிறைந்த சூழ்நிலையிலோ, மேலான குலத்திலோ பிறப்பார்கள்.

ஏவ்ம் புஷ்பிதயா வாசா வ்யாக்ஷிப்தமனஸாம் ந்ருணாம் |
மானினாம் சாதிஸ்தப்3தா4னாம் மத்3வார்தாபி ந ரோசதே || 34 ||

இவ்விதம் கர்மகாண்டத்தில் வர்ணிக்கப்பட்ட வேதவாக்கியங்களினால் சஞ்சலமடைந்த மனதை உடையவர்கள், அகங்காரத்துடன் இருப்பவர்கள்,
பிடிவாத குணத்துடன் இருப்பவர்கள், நான் நினைப்பதுதான் சரியானது, நான் புரிந்து கொண்டதுதான் சரியானது என்று மனதை
பிடிவாதமாக வைத்திருப்பவர்கள் என்னுடைய சொற்களைக் கூட விரும்ப மாட்டார்கள். என்னைப் பற்றி பேசினால் கூட பிடிக்காது.

வேதா3 ப்3ரஹ்மாத்மவிஷயாஸ்த்ரிகாண்டவிஷயா இமே |
பரோக்ஷவாதா3 ருஷய: பரோக்ஷம் மம ச ப்ரியம் || 35 ||

வேதமானது கர்ம காண்டம், உபாஸனா காண்டம், ஞான காண்டம் என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
கர்ம காண்டம் கர்மத்தை தர்மத்துடனும், யோகத்துடனும் செய்வதற்கு வழிகாட்டும்.
உபாஸனா காண்டம் மனதை பலப்படுத்த உதவுகிறது.
ஞான காண்டம் ஜீவன்,ஈஸ்வரன் இவர்களுடைய உண்மை ஸவரூபத்தை பற்றிய அறிவைக் கொடுக்கிறது.
தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகத்துக்கு மாறாத அழியாத ஆதாரமாக இருக்கிறது. உலகத்தின் மாற்றத்திற்கு காரணமாக இருப்பது மாயை.
மாறுகின்ற உடலுக்கு மாறாத ஆதாரமாக இருப்பது ஆத்மா. இந்தக் கருத்தை ரிஷிகள் மறைமுகமாகத்தான் கூறியிருக்கிறார்கள்.
நேரிடையாக உபதேசிப்பதில்லை. மேலும் இப்படி மறை முகமாக உபதேசம் செய்வதுதான் எனக்கு விருப்பமானது,
அந்த முறையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஶப்3தப்ரஹ்ம ஸுதுர்போ3த4ம் ப்ராணேந்திரியமனோமயம் |
அனந்தபாரம் க3ம்பீ4ரம் து3ர்விகா3ஹயம் ஸமுத்ரவத் || 36 ||

வேதம் என்பது அறிவைக் கொடுக்கும் கருவி, இதையே பிரமாணம் என்றும் கூறுகிறார்கள். இது ஒரு சப்த பிரமாணம்.
இதை புரிந்து கொள்வது மிகக்கடினம். இதை சப்த பிரம்மம் என்றும் கூறுவர். இது கடலைப்போன்றது,
சமுத்திரத்தைப் போன்று அதன் கரை காண முடியாது. இது கம்பீரமாகவும் இருக்கிறது. கடலின் ஆழத்தையும் கண்டறிய முடியாது.
இதேபோல வேதம் கொடுக்கும் அறிவை வேறெதிலிருந்தும் அடைய முடியாது. வேதத்தின் அமைப்பு கம்பீரமாக இருக்கிறது,
ஆழமான கருத்துக்களை உடையது.
ப்ராண இந்திரிய மனோமயம்
காரண நிலையில் இருக்கும் சப்தத்திற்கு பரா என்றும், அடுத்த நிலைக்கு பஶ்யந்தி என்றும்,
மூன்றாம் நிலையான சப்தம் கொடுக்க வேண்டும் என்று மனதில் தோன்றும் எண்ணம் அதுவே மத்யமா எனவும்,
கடைசி நிலை வெளிவந்துவிட்ட சப்தம் இதை வைகரி அல்லது ஸ்தூல சப்தம் என்று கூறப்படுகிறது.
இந்த நான்கு நிலைக்கும் நம் உடலில் உள்ள ஒரு இருப்பிடத்தை குறிக்கிறது.
முதல் நிலை நாபியிலும், இரண்டாவது நிலை இதயத்திலும், மூன்றாவது நிலை கண்ட3கம், தொண்டை,
நான்காவது நிலையின் இருப்பிடம் நாக்கு. ஈஸ்வரனான நானே எல்லா நிலைகளிலும் இருக்கிறேன்.
பரா என்பது பிராணமயத்தையும், பஶ்யந்தி என்பது இந்திரிய மயத்தையும், மத்யமா மனோமயமாகவும், அழைக்கப்படுகிறது.
நாம-ரூப ஜபமே பகவான்தான். நாமத்தை ஜபிக்கும்போது இறைவன் நம்மை நோக்கி வருகிறார்.

மயோபம்ப்3ருஹிதம் பூ4ம்னா ப்ரஹ்மணானந்தஶக்தினா |
பூ4தேஷு கோ4ஷரூபேண பி3ஸேஷூர்ணேவ லக்ஷ்யதே || 37 ||

மயா உப ப்ருஹிதம் – ஸ்வரூபமான என்னுடைய ஆதாரத்தினால்
பூம்னா – பூரணமான (ஸத்-சித்-ஆனந்த ஸ்வரூபமான)
ப்ரஹ்மனா – பரபிரம்மனாகவும் இருக்கின்ற என்னிடத்தில் உள்ள
அனந்த ஶக்தினா – அளவிடமுடியாத மாயா என்ற சக்தியினால் ஜகத் படைக்கப்பட்டிருக்கிறது
படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் சப்தம் ஊடுருவி இருக்கிறது. சப்தமும், அர்த்தமும் ஒன்றையேதான் குறிக்கிறது.
தாமரைத் தண்டுக்குள் இருக்கும் நூல்போல் சப்தமும் அர்த்தமும் இருக்கிறது. நான் இந்த இரண்டுமாக இருக்கிறேன்

யதோ2ர்ணனாபி4ர்ஹ்ருதயாதூ3ர்ணாமுத்3வமதே முகா2த் |
ஆகாஶாத்3கோ4ஷவான் ப்ராணோ மனஸா ஸ்பர்ஶரூபிணா || 38 ||

எவ்வாறு சிலந்தி பூச்சியானது தன் இதயத்திலிருந்து நூலையெடுத்து வாய்மூலமாக வலையைப் பின்னுகிறதோ அதுபோல
ஈஸ்வரன் பரா நிலையிலிருந்து, பஶ்யந்தி நிலைக்கு சென்று, மத்யமா என்ற நிலைக்கு வந்து பிறகுதான் சப்த-அர்த்த ரூபத்தை படைத்தார்.
தன்னிடத்திலிருந்து மாயா என்ற சக்தியின் துணைக் கொண்டுதான் இவைகளை படைத்தார்

ச2ந்தோ3மயோऽம்ருதமய: ஸஹஸ்ரபத3வீம் ப்ரபு4: |
ஓங்காராத்3வ்யஞ்ஜிதஸ்பர்ஶஸ்வரோஷ்மாந்தஸ்த2 பூ4ஷிதாம் || 39 ||

வேத ஸ்வரூபமாகவும், சப்தரூபமாகவும், என்றும் அழியாதவராகவும், அனைத்திற்கும் தலைவராகவும் இருக்கின்ற இறைவன்
ஆயிரக்கணக்கான எழுத்துக்களின் சேர்க்கையை உடைய சப்தத்தை படைத்தார். சப்தங்கள் ஓங்காரத்திலிருந்து ஆரம்பித்து
விதவிதமாக பிரிவுகளான் எழுத்துக்கள் தோன்றின. உயிரெழுத்துக்கள் மூன்று “ ச “ வகைகளான ச1, ச2, ஶ மெல்லின பிரிவாகவும் இருக்கிறது

விசித்ரபா4ஷாவிததாம் ச2ந்தோபி4ஶ்சதுருத்தரை: |
அனந்தபாரம் ப்3ருஹதீம் ஸ்ருஜத்யாக்ஷிபதே ஸ்வயம் || 40 ||

விதவிதமான மொழிகள் தோன்றின. செய்யுள், ஸ்லோக வடிவமாகவும் தோன்றி உள்ளன. நான்கு-நான்கு எழுத்துக்களாக
வளர்ந்து செல்லும் சந்தஸ் இருக்கின்றது. இறுதியாக விசித்திரமான மொழிகள் தோன்றின.
அது விஸ்தாரமடைந்திருக்கிறது இவ்வாறாக சப்த உலகத்திற்கும், லயத்திற்கும் பகவானே காரணமாகின்றார்

கா3த்ர்யுஷ்ணிக3னுஷ்டுப ச ப்3ருஹதீ பங்க்திரேவ ச |
த்ரிஷ்டுப்3ஜக3த்யதிச்ச2ந்தோ3 ஹயத்யஷ்ட்யதிஜக3த்3விராட் || 41 ||

காயத்ரி என்ற 24 உயிரெழுத்துக்களுடன் கூடிய செய்யுள் அமைப்பு, உஷ்ணிக என்பது 28 உயிரெழுத்துக்கள் கொண்ட செய்யுள் அமைப்பு,
அனுஷ்டூப், ப்ருஹதீ, பங்க்தீ, த்ருஷ்டூப், ஜகதீ, அதிச்சந்தஸ், அத்யஷ்டி, அதிஜகதீ, விராட் என்கின்ற செய்யுள் அமைப்புக்களாகவும் பகவான் இருக்கிறார்.

கிம் வித4த்தே கிமாசஷ்டே கிமனூத்3ய விகல்பயேத் |
இத்யஸ்யா ஹ்ருதயம் லோகே நான்யோ மத்3வேத3 கஶ்சன || 42 ||

வேதத்திலுள்ள கர்மகாண்டத்தில் என்னென்ன கருத்துக்கள் கூறப்பட்டிருக்கிறது. உபாஸனா காண்டத்தில் எந்த தேவதைகளுக்கு
எந்த மந்திரங்களை சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஞான காண்டத்தில் எதைக்கூறி பிறகு நீக்குகின்றது என்பதை
அதன் மறைப்பொருளை என்னைத்தவிர வேறு யாராலும் சுலபமாக அறிந்து கொள்ள முடியாது

மாம் வித4த்தே பி4த4த்தே மாம் விகல்ப்யாபோஹயதே த்வஹம் |
ஏதாவான் ஸர்வ்வேதா3ர்த2: ஶப்3த3 ஆஸ்தா2யா மாம் பி4தா3ம் |
மாயாமத்ரமனூத்3யாந்தே ப்ரதிஷித்4ய ப்ரஸீத3தி || 43 ||

எல்லா வேதங்களும் கர்ம காண்டத்தில் யக்ஞஸ்வரூபியான என்னைப் பற்றியே பேசுகின்றன.
உபாஸனா காண்டத்தில் நானே தியானத்திற்குரிய விஷயமாக இருக்கிறேன்.
ஞான காண்டத்தில் அத்யாரோப அபவாதமும் என்னை மையமாக வைத்தே உபதேசிக்கறது.
என்னிடத்தில் இருக்கும் மாயா அம்சத்தை நீக்கி என்னை காட்டுகிறது.
வேதமானது இவ்விதம் என்னை அனைத்திலும், மையமாக வைத்தே உபதேசிக்கின்றது.
பி4தாம் மாயாமாத்ரம் – உலகத்தில் நாம் காணும் வேற்றுமைகளனைத்தும் வெறும் மித்யா என்று
அந்தே ப்ரதிஶித்4ய – இறுதியில் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு
அனூத்ய – உபதேசிக்கின்றது. பிறகு
ப்ரஸீத3தி – சாந்தியை அடைகின்றது, அமைதியாகி விடுகிறது
ஏதாவான் ஸர்வ வேதா3ர்த2ஹ – இவ்வளவுதான் வேதத்தின் செயல்பாடுகள், உபதேசங்கள்

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: