ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -1-

ஸ்ரீ ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவை கொடுப்பது. அதனால் அடையும் பலன் மோட்சம்..

யதா3த்த2 மாம் மஹாபா4க்3 தச்சிகீர்ஷிதமேவ மே |
ப்ரஹ்மா ப4வோ லோகபாலா: ஸ்வர்வாஸம் மேSபி4காங்க்ஷிண: || 1 ||

ஹே உத்தவா! என்னுடைய விஷயத்தில் என்ன பேசினாயோ அது என்னால் விரும்பபட்டதுதான்
(யது குலத்தின் நாசம், அவதார தோற்றத்தை விட்டு விடுதல்). பிரம்மாவும் சிவனும் மேலும் மற்ற தேவர்களான இந்திரன்
போன்ற லோக பாலகர்களும் நான் வைகுண்டத்துக்கு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மயா நிஷ்பாதி3தம் ஹயத்ர தே3வகார்யமஶேஷத: |
யத3ர்த2மவதீர்ணோSஹமம்ஶேன ப்3ரஹமணார்தித: || 2 ||

பூலோகத்தில் என்னால் தேவ காரியங்களும் குறைவில்லாமல் முடிக்கப்பட்டுவிட்டன.
என்னுடைய ஒரு அம்சமான பலராமனுடன் சேர்ந்து, பிரம்ம தேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி
எந்தக் காரணத்திற்காக நான் அவதாரம் எடுத்தேனோ அது முடிவடைந்துவிட்டது.

குலம் வை ஶாப நிர்த3க்3த4ம் நங்க்ஷ்யத்யன்யோன்யவிக்3ரஹாத் |
ஸமுத்3ர: ஸப்தமே ஹயேனாம் புரீம் ச ப்லாவயிஷ்யதி || 3 ||

அந்தணர் சாபத்திற்கு ஆளாகிவிட்ட இந்த யதுகுலம் பரஸ்பர சண்டைகளினால் முற்றிலுமாக அழிந்துவிடப்போகின்றது.
இன்றிலிருந்து ஏழாவது நாளில் சமுத்திரமானது இந்த நகரை மூழ்கடிக்கப்போகிறது.

யஹர்யேவாயம் மயா த்யக்தோ லோகோSயம் நஷ்டமங்க3ல: |
ப4விஷ்யத்யசிராத்ஸாதோ4 கலினாபி நிராக்ருத: || 4 ||

நான் இந்த பூமியை விட்டு சென்ற பிறகு இந்த நகரமானது தர்மத்தை இழந்து விடும்.
இது உடனடியாக நடக்கப்போகிறது. பிறகு உலகமானது கலியினால் வியாபிக்கப் போகின்றது.

ந வஸ்தவ்யம் த்வயைவேஹ மயா த்யக்தே மஹீதலே |
ஜனோSப4த்3ர்ரூசிர்ப4த்3ர ப4விஷ்யதி கலௌ யுகே3 || 5 ||

நான் இந்த பூமியை விட்டு சென்ற பின், நீ இங்கே இருக்கத்தகாது.
ஹே உத்தவா! கலியுகத்தில் மக்கள் அதர்மத்தில் பற்று கொண்டவர்களாக இருப்பார்கள்

த்வம் து ஸர்வம் பரித்யஜ்ய ஸ்னேஹம் ஸ்வஜனப3ந்து4ஷு |
மய்யாவேஶ்ய மன: ஸம்யக்ஸமத்3ருக்3விசரஸ்வ கா3ம் || 6 ||

நீ அனைத்தையும் ( பொருட்களையும், உறவினர்களையும் ) துறந்து விடு, முழுமையாக தியாக செய்துவிடு.
உன்னுடைய உற்றார், உறவினர்களிடம் கொண்டுள்ள பற்றை தியாக செய்து விடு. என்னிடமே மனதை நன்றாக நிலைநிறுத்தி,
எல்லா பிராணிகளிடத்திலும் சமநோக்குடன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிரு.

யதி3த3ம் மனஸா வாசா சக்ஷுர்ப்4யாம் ஶ்ரவணாதி3பி4: |
நஶ்வரம் க்3ருஹ்யமாணம் ச வித்3தி4 மாயாமனோமயம் || 7 ||

யத்3 இத3ம் – நாம் பார்த்து அனுபவிகின்ற இவைகள்
க்3ருஹ்யமாணம் – அனுபவிக்கப்படுகின்றதோ, கிரகிக்கப்படுகின்றதோ
நஶ்வரம் – அழியக்கூடியது
மாயா மனோமயம் – ஜாக்ரத் உலகத்தில் அனுபவிக்கப்படும் பொருட்கள் ஈஸ்வரனின் மாயையினால்
தோற்றுவிக்கப்பட்டு இருக்கிறது.

பும்ஸோSயுக்தஸ்ய நானார்தோ2 ப்4ரம: ஸ கு3ணதோ4ஷபா4க் |
கர்மாகர்மவிகர்மேதி கு3ணதோ3ஷதி4யோ பி4தா3 || 8 ||

பும்ஸஹ – ஜீவனுக்கு;
அயுக்தஸ்ய – சேராதிருப்பவன், ஞானமில்லாதவன், ஆத்ம ஞானத்துடன் இல்லாத ஜீவனுக்கு, அஞானத்துடன் கூடியிருப்பவனுக்கு
நானார்த2: ப்4ரமஹ – அப்ரஹ்மாத்மகமாக ஒன்றுமே இல்லையே
ஸ கு3ணதோ3ஷ பா4க்3 – இது நல்லது, இது கெட்டது என்ற பாகுபாடும் தோன்றுகின்றது
பொருளிடத்தில் குணதோஷம் இருக்கிறதா அல்லது மனதிலிருந்து வருகின்றதா என்று பார்க்கும் போது
இது ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது என்று அறியலாம்.
மனதிலிருந்தால் ராக-துவேஷம் என்றும், பொருட்களிலிருந்தால் அதுவே குண-தோஷம் என்றும் அழைக்கப்படுகின்றது.
கு3ணதோ3ஷதி4யஹ – முக்குண வசப்பட்டு
பி4தா3 – கர்ம – செயலில் ஈடுபடுதல்
அகர்ம – செய்ய வேண்டிய செயல்களை செய்யாமல் இருத்தல்
விகர்ம – செய்யக்கூடாத செயலை தவறாக செய்தல்
புத்தியில் குண-தோஷம் உள்ளவனுக்கு மேலே கூறப்பட்ட செயல் வேறுபாடுகள் தோன்றுகிறது.
செயல்களினால் பாவ-புண்ணியங்களை அடைகின்றோம். இவைகள் சுக-துக்கத்தை கொடுத்துத்தான் தீரும்.
எனவே அதற்கேற்ற உடல் எடுத்தாக வேண்டும். இவ்வாறு பிறப்பு எற்படுகின்றது.
மீண்டும் கர்மம்àபாவ-புண்ணியங்கள்àபிறப்பு இவ்வாறு சம்சார சக்கரத்தில் ஜீவன் சுழன்று கொண்டிருப்பான்

தஸ்மாத3 யுக்தேந்த்3ரியக்3ராமோ யுக்தசித்த இத3ம் ஜகத் |
ஆத்மநீக்ஷஸ்வ விததமாத்மானம் மய்யாதீ4ஶ்வரே || 9 ||

இதில் ஶமஹ (மனக்கட்டுபாடு), த3மஹ – இந்திரியக் கட்டுப்பாடு என்ற சாதனங்களைப் பயன்படுத்தி
ஞானத்தை அடைய வேண்டும் என்று பகவான் கூறுகின்றார்.
தஸ்மாத்3 – ஆகவே, சம்சார சக்கரத்திலிருந்து விடுபட வேண்டும்.
யுக்த இந்திரிய கி3ராமஹ – அனைத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்தியவனாக இரு, உன் வசத்துக்குள் கொண்டு வா.
ஞான இந்திரியங்கள் பிரத்யக்ஷ பிரமாணமாகவும், போகத்தை அனுபவிக்கும் கருவியாகவும் பயன்படுத்துகின்றோம்.
யுக்த சித்த – மனமும் உன் வசத்துக்குள் இருக்க வேண்டும்.
விததம் ஆத்மானாம் – எங்கும் வியாபித்திருக்கின்ற உன்னை
ஆத்மனீக்ஷஸ்வ – உன்னிடத்திலே காண்பாயாக.
மயி அதீ4ஶ்வரே – அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்ற என்னிடத்திலும் பார்.

கனவில் தோன்றியிருக்கும் அனைத்தும் என்னால் தோற்றுவிக்கப்பட்டது. என்னாலே அழிக்கப்பட்டு,
என்னிடத்திலே லயமடைந்திருக்கின்றது. அதேபோல ஜாக்ரத் அவஸ்தையில் இந்த உலகம் பிரம்மனான என்னால் தோற்றுவிக்கப்பட்டது.
என்னாலே அழிக்கப்படும், என்னிடத்திலே லயமடைகின்ற என்ற உணர்வு பூர்வமான அறிவை அடைய வேண்டும்.

ஞானவிக்ஞான ஸம்யுக்த ஆத்மபூ4த: ஶரீரிணாம் |
ஆத்மானுப4வதுஷ்டாத்மா நாந்தராயைர்விஹன்யஸே || 10 ||

ஞான விக்ஞான ஸம்யுக்த – ஞானத்துடனும், விக்ஞானத்துடனும் (ஞான நிஷ்டையில் இருக்கும் நிலை) இருப்பவன்,
ஞான நிஷ்டையை அடைந்திருக்கும் ஞானியானவன்.
ஆத்மபூ4த ஶரீரிணாம் – சரீரங்களையுடைய எல்லா ஜீவராசிகளிடத்திலும் தன்னையே பார்க்கின்றான்
ஆத்ம அனுப4வ துஷ்ட ஆத்மா – ஆத்ம ஞானமே அனுபவமாக கொண்டதினால், ஆத்ம அபரோக்ஷ ஞானத்தை அடைந்திருப்பதால்
மன திருப்தியை அடைந்திருப்பான் ஞானி
ந விஹன்யஸே அந்தராயஹ – பிராரப்தத்தினால் உனக்கு வரும் கஷ்டங்களினாலும், தடைகளாலும் பாதிக்கப்படாமல் இருப்பாய் உத்தவா!

தோ3ஷபு3த்3யோ ப4யாதீதோ நிஷேதா4ன்ன நிவர்ததே |
கு3ணபு3த்3த்4யா ச விஹிதம் ந கரோதி யதா2ர்ப4க: || 11 ||

யதா2 அர்ப4கஹ – ஞானியானவன் சிறு குழந்தையைப் போல
உப4யாதீதஹ – இரண்டையும் கடந்தவன், நன்மை-தீமை, தர்ம-அதர்மம் போன்ற இருமைகளுக்கு அப்பாற்பட்டவன்,
இருமையை கடந்தவன்
தோ3ஷ புத்3தி4 – தோஷ புத்தியினால், அதர்மம், கோபம், வெறுப்பு போன்ற தீயகுணங்களுடைய புத்தியிருப்பதால்
நிஷேதா4த் ந நிவர்த்தே – செய்யக்கூடாததை செய்யாமல் விலகுவதில்லை
குணபுத்3த்4யா – குண புத்தியால், நல்லது, தர்மம்
ச விஹிதம் ந கரோதி – செய்ய வேண்டியதை செய்வதும் இல்லை
இவனுக்கு விதி நிஷேதம் எதுவும் கிடையாது

ஸர்வபூ4தஸுஹ்ருச்சா2ந்தோ ஞானவிக்3ஞான நிஶ்சய: |
பஶ்யன்மதா3த்மகம் விஶ்வம் ந விபத்3யேத வை புன: || 12 ||

ஸுஹ்ருத் – நண்பன் – எதிர்ப்பார்ப்பின்றி நட்புடன் பழகுபவன்
ஸர்வபூத – எல்லா ஜீவராசிகளினுடைய மகிழ்ச்சியினால் மகிழ்ந்திருப்பான்–மனம் சாந்தத்துடன் இருப்பான், மனம் மென்மையாக இருக்கும்
ஶாந்தஹ – அவனுடைய மனம் என்றும் அமைதியுடன் இருந்து கொண்டு இருக்கும். அவனுடைய சித்தமும் அமைதியாக இருக்கும்
ஞான விக்ஞான நிஶ்சய – ஞானத்திலும், ஞான நிஷ்டையிலும் உறுதியை அடைந்து விட்டான்.
பஶ்யன் மதா3த்மகம் விஶ்வம் – இந்த உலகத்தை என் ஸ்வரூபமாகவே பார்க்கின்றான்
ந விபத்3யேத வை புன: – இதனால் சம்சாரத்தில் மீண்டும் வீழ்ந்து விட மாட்டான்

ஶ்ரீஶுக உவாச
இத்யாதி3ஷ்டோ ப3க3வதா மஹாபா4க3வதோ ந்ருப |
உத்3த4வ: ப்ரணிபத்யாஹ தத்3 த்வம் ஜிக்3ஞாஸுரச்யுதம் || 13 ||

ஶ்ரீஶுகர் கூறுகிறார்
கிருப – ஹே பரீக்ஷித் ராஜனே!
இதி ஆதி3ஷ்டஹ – இவ்விதம் உபதேசிக்கப்பட்டபின்
மஹாபாகவதஹ – பரமபக்தரான, பக்தர்களுக்குள் மேலானவரான, மோட்சத்தை அடைய விரும்புகின்ற பக்தனான
உத்தவ – உத்தவர்
தத் த்வம் ஜிக்ஞாஸு – ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்புபவனாக
ப்ரணிபத்யாஹ அச்யுதம் – அச்சுதனான ஸ்ரீகிருஷ்ண பகவானை பணிவுடன் வணங்கிக் கேட்டார்.

ஶ்ரீஉத்3த4வ உவாச
யோகே3ஶ யோகா3வின்யாஸ யோகா3த்மன்யோக3ஸம்ப4வ |
நி:ஶ்ரேயஸாய மே ப்ரோக்தஸ்த்யாக3: ஸன்னயாஸலக்ஷண: || 14 ||

உத்தவர் கேட்கிறார்
யோகே3ஶ – யோகத்திற்கு தலைவரே! எல்லா சாதனங்களுக்கும் பலனை தருபவரே
யோகவின்யாஸ – சாதகர்களை காப்பாற்றுபவர்; பக்தர்களை ரக்ஷிப்பவர்
யோகா3த்மன் – சாதனங்களின் ஸ்வரூபமாக இருப்பவரே
யோக3ஸம்ப4வ – சாதனங்களின் தோற்றத்திற்கும் காரணமானவரே1
ஸந்ந்யாஸ லக்ஷண – சந்நியாஸ ஸ்வரூபமானது
தியாகஹ – தியாகமானது
நிஶ்ரெயஸாய – மோட்சத்தைப் பற்றி, ஆன்மீக மேன்மைக்காக
மே ப்ரோக்தஹ – எனக்கு உங்களால் உபதேசிக்கப்பட்டது

த்யாகோ3Sயம் துஷ்கரோ பூ4மன்காமானாம் விஷயாத்மபி4: |
ஸதராம் த்வயி ஸர்வாத்மன்னப4க்தைரிதி மே மதி: || 15 ||

பூமன் – எல்லையற்றவரே! பிரஹ்ம ஸ்வரூபமாக இருப்பவரே!
காமானாம் விஷயாதமபி4: – புலனுகர் இன்பங்களில் பற்றுக் கொண்டு பற்பல விஷயங்களில் சிக்கியுள்ளவர்களால்
அயம் த்யாக3ஹ – இந்த தியாகத்தை செயல்படுத்துவது மிகவும் கடினம்
த்வயி அபக்தைஹி ஸுதராம் – அதிலும் தங்களிடம் பக்தி செலுத்தாதவர்களுக்கு கண்டிப்பாக மிகவும் கடினம்.
ஸர்வாத்மா – அனைத்துமாக இருக்கின்றவரே!
இதி மே மதி: – இது என்னுடைய கருத்து

ஸோSஹம் ம்மாஹமிதி மூட4மதிர்விகா3ட4ஸ்
த்வன்மாயயா விரசிதாத்மனி ஸானுபந்தே4 |
தத்த்வஞ்தஸா நிக3தி3தம் ப4வதா யதா2ஹம்
ஸம்ஸாத4யாமி ப4க3வன்னனுஶாதி4 ப்4ருத்யம் || 16 ||

ப்4ருத்யம் – உங்கள் சேவகனான எனக்கு
ப4வதா நிக3தி3தம் – உங்களால் உபதேசிக்கப்பட்ட தியாகத்தை
யதா2 அஹம் – எவ்விதம் நான்
அஞ்ஜஸா ஸம்ஸாத4யாமி – உடனடியாக, நன்கு அடையமுடியுமோ
பகவன் அனுஶாதி4 – பகவானே அதை உபதேசித்து அருளுங்கள்
மூ4டமதிஹி – தவறான புத்தியுடையவனாக, அறியாமையுடனும், மோகத்தில் இருக்கின்றேன்
ஸஹ அஹம் – இப்படிபட்ட நான்
அஹம மம இதி = நான் என்னுடையது என்று புத்தியை உடையவனாக, இந்த அனாத்மாவான உடலில்
நான் என்னுடையது என்ற மதிமயக்கத்தில் மூழ்கி இருக்கின்றேன்.
த்வன் மாய்யா விரசித ஆத்மனி – உங்களுடைய மாயையினால் உருவக்கப்பட்ட இந்த சரீரத்தில்
விகா3த4 – மூழ்கி இருக்கின்றேன்
ஸானுப3ந்தே4 – உற்றார்-உறவினர்களிடத்திலும் நான், என்னுடையது என்ற பற்றில் மூழ்கியவனாக இருக்கின்றேன்.

ஸத்யஸ்ய தே ஸ்வத்3ருஶ ஆத்மன ஆத்மனோSன்யம்
வக்தாரமீஶ விபு3தே4ஷ்வபி நானுசக்ஷே |
ஸர்வே விமோஹித்தி4யஸ்தவ மாய்யேமே
ப்3ரஹமாத3யஸ்தனுப்4ருதோ ப3ஹிர்ர்த2பா4வா: || 17 ||

இதில் உத்தவருக்கு பகவானிடத்தல் இருக்கும் சிரத்தையை எடுத்துக் காட்டுகின்றது.
ஈஶ – ஈஶ்வரரே
ஆத்மனஹ – எனக்கு
விபு3தே4ஷ் அபி – தேவர்களுக்குள்ளும் கூட
அன்யம் வக்தாரம் – உங்களைத் தவிர உபதேசிப்பவர் வேறொருவரை
ந அனுசக்ஷே – பார்க்கவில்லை
ஸத்யஸ்ய – என்றும் இருக்கின்ற
ஸ்வத்3ருஶ – சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற சைதன்ய ஸ்வரூபமாக
ஆதமன – ஆத்ம தத்துவமாக இருக்கின்ற பகவானே
மாயயா – உங்களுடைய வசத்தினால்
ஸர்வே விமோஹித தி4ய – எல்லா ஜீவராசிகளும் ஆத்மா-அனாத்மா விஷயத்தில் மோக வசப்பட்டுள்ள புத்தியை
உடையவர்களாக இருக்கிறார்கள்
தனுப4ருதோ – உடலைத் தாங்கியுள்ள
ப்3ரஹ்மாத4யஹ – பிரம்மா முதலிய எல்லோரும்
ப4ஹிரர்த2பா4வா – எல்லா ஜீவராசிகளும் வெளி விஷயத்தையே பார்க்கும் உணர்வு உடையவர்களாக
இயற்கையாகவே இருக்கிறார்கள். யாருமே உட்புறமாக மனதை திருப்பி விசாரம் செய்வதில்லை

தஸ்மாத்3 ப4வந்தமனவத்3யமனந்தபாரம்
ஸர்வக்3ஞமீஶ்வரமகுண்ட2விகுண்ட2தி4ஷ்ண்யம் |
நிர்விண்ணதீ4ரஹமு ஹே வ்ருஜினாபி4தப்தோ
நாராயணம் நரஸக2ம் ஶரணம் ப்ரபத்3யே || 18 ||
ஶரணம் ப்ரபத்3யே – நான் சரணடைகிறேன்.

தஸ்மாத்3 ப4வந்தம் – ஆகவே உங்களை
அனவத்யம் – குற்றமற்றவர், குறையொன்றுமில்லாதவர், வஞ்சகமற்றவர்
அனந்தபாரம் – காலத்தாலும், தேசத்தாலும் வரையறுக்கப்படாதவர், நித்யமானவர். இது குரு அடைந்துள்ள ஞானத்தை குறிக்கின்றது)
ஸர்வஞம் – அனைத்தையும் அறிந்தவர், ஆத்ம தத்துவத்தை உபதேசிக்க தேவையான அனைத்து அறிவையும் கொண்டவர்.
இது பகவானுக்கு பொருந்தாது மற்ற ஸத்குருவிற்கு பொருந்தும்.
ஈஶ்வரம் – பகவானைக் குறிக்கும் போது இது ஸ்துதியாக இருக்கின்றது.
குருவைக் குறிக்கும் போது சாமர்த்தியம் உடையவராக இருப்பதை குறிக்கும்.
மன்னிக்கும் குணமும், பொறுமையும் உடையவர். சிஷயனிடத்தில் இருக்கும் குறைகளை நீக்கி
அரவனைத்து உயர்த்தும் சாமார்த்தியம் உடையவர்
அகுண்ட2விகுண்ட2 த்4ருஷ்ன்யம் – அழிவில்லாத வைகுண்டத்தை இருப்பிடமாக கொண்ட பகவானே!
பிரம்ம நிலையில் குரு இருக்குமிடம் அழியாததாகும். அதாவது பிரம்மனாகவே இருக்கின்றவர்.
நாராயணம் – பகவானை குறிக்கும் போது நீங்கள் நாராயணனாக இருக்கிறீர்கள்.
நாரம் என்ற சொல்லுக்கு மனித சமூகம், அயணம் என்பது இருப்பிடம், லட்சியம் குறிக்கின்றது.
எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கின்ற சாட்சி ஸ்வரூபமாக இருப்பவர்
ஜீவர்கள் அடைய வேண்டிய லட்சியமாக இருப்பவர்
நரஸக2ம் – எல்லா மனிதர்களுக்கும் நண்பராக இருப்பவர், அஜாதசத்ருவாக இருக்கும் தங்களை நான் சரணடைகின்றேன்.
நிர்விண்ணதீ4ரஹம் – நான் துயரமடைந்த மனதுடையவனாக இருக்கின்றேன்
வ்ரஜின அபிதப்தஹ – பாவத்தினால் கூட நான் வாடிக் கொண்டிருக்கின்றேன்.
மனதிலிருக்கும் விருப்பு-வெறுப்பு, பொறாமை போன்ற தீய குணங்களினால் வதைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றேன்.

ஶ்ரீப4கவான் உவாச
ப்ராயேண மனுஜா லோகே லோகதத்த்வ்விசக்ஷணா: |
ஸமுத்3த4ரந்தி ஹயாத்மானமாத்மனைவாஶுபா4ஶயாத் || 19 ||

ஶ்ரீபகவான் கூறினார்.
மனிதர்கள் தம்மைத்தாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒருவருடைய முன்னேற்றத்திற்கு அவனே தான் காரணமாக இருக்கின்றான்.
ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ப்ராயேண – பொதுவாக எப்பொழுதும்
லோகே மனுஜா – இந்த உலகத்திலுள்ள மனிதர்கள்
லோகதத்த்வ விசக்ஷணா: – இந்த உலகத்திலுள்ள விஷயங்களை, தத்துவங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறார்கள்.
அஶுப4 ஆஶயாத் – அவர்களிடத்திலிருக்கும் விஷய, அசுப வாஸனைகளிலிருந்து, எல்லாவித தீய குணங்களிலிருந்து
ஆத்மானாம் ஆத்மனா ஏவ – தன்னை தன்னாலேயே
ஸமுத்3த4ராந்தி – உயர்த்திக் கொள்கிறார்கள்
நிகழ்காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான் வருங்காலத்தில் ஊழ்வினையாக வருகின்றது.
எனவே ஆராய்ந்து அறியும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆத்மனோ கு3ருராத்மைவ புருஷஸ்ய விஶேஷத: |
யத்ப்ரத்யக்ஷானுமானாப்4யாம் ஶ்ரேயோSஸாவனுவிந்ததே || 20 ||

ஆத்மனஹ – ஜீவனான எனக்கு (ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களை உடையவன்)
ஆத்மா ஏவ குரு – புத்தியானது குருவைப்போல உள்ளது. எல்லா பிரமாணங்களுக்கும் பின்னால் மனம்
இருந்து கொண்டு இருக்கின்றது. புத்தியானது அறிவைக் கொடுக்கும் பொதுவான பிரமாணமாக இருக்கின்றது.
யத் – எப்படி குருவாக இருப்பது என்றால்
பிரதியக்ஷ, அனுமானம் இவைகளின் மூலமாக தனக்கு தானே நன்மையை தேடிக் கொள்கின்றான்-
குருவினுடைய கிருபையை பணிவு மூலம் அடைய வேண்டும். சாஸ்திரத்தின் கிருபையை அடைய வேண்டும்.
ஆத்ம கிருபையை அடைய வேண்டும். அதாவது நம்மிடத்தில் நமக்கே கிருபையிருக்க வேண்டும்.
ஈஸ்வர, குரு கிருபை அடைந்தவர்களுக்கு இந்த ஆத்ம கிருபை நிச்சயமாக கிடைக்கும்

புருஷத்வே ச மாம் தீ4ரா: ஸாங்க்2ய்யோக3விஷாரதா3: |
ஆவிஸ்தராம் ப்ரபஶ்யந்தி ஸர்வஶக்த்யுப ப்3ரும்ஹிதம் || 21 ||

இதில் பகவான் மனிதப்பிறவியின் மதிப்பைக் கூறுகின்றார்.
புருஷத்வே – மனிதனுடைய ஜென்மத்தில்தான்
தீ4ரா: – விவேகமுடையவர்கள்
ஸாங்க்2ய யோக3 – சாங்கியத்திலும், யோகத்திலும்
விஶாரதா3: – தேர்ச்சி அடைந்தவர்களாக இருப்பதால்
ஸர்வஶக்த்யுப ப்3ரும்ஹிதம் – அனைத்து ஆற்றலும் கொண்ட பரமாத்வான
மாம் ஆவிஸ்தராம் ப்ரபஶ்யந்தி – என்னை அடைகின்றார்கள்

ஏகத்3வித்ரிசதுஸ்பாதோ3 ப3ஹுபாத3ஸ்ததா2பத3: |
ப3ஹவ்ய: ஸந்தி புர: ஸ்ருஷ்டாஸ்தாஸாம் மே பௌருஷீ ப்ரியா || 22 ||

படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளில் மனிதப்பிறவிதான் எனக்கு பிடித்தமானது.
ஒரு கால்களுடையவைகள், இரண்டு கால்களுடையவைகள், மூன்று கால்களுடையவைகள், நான்கு கால்களுடையவைகள்,
பல கால்களுடையவைகள், கால்களே இல்லாதவைகள் என பலவகைப்பட்ட படைப்புக்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
அவைகளிலே எனக்கு மனித சரீரம்தான் பிடித்தமானது

அத்ர மாம் ம்ருக3யந்த்யத்3தா4 யுக்தா ஹேதுபி4ஶ்வரம் |
க்3ருஹயமாணௌர்கு3ர்ணௌர்லிங்கை3ர் க்3ராஹயமனுமானக்த: || 23 ||

மனித சரீரத்திலிருந்து கொண்டு புத்தியின் துணைக்கொண்டு என்னை அறிகின்றார்கள்.
சரியான பிரமாணத்தை பயன்படுத்தி புத்தியில் என்னை அடையும் வழியை அறிகின்றார்கள்.
வெறும் புலன்களைக் கொண்டு என்னை அறியமுடியாது.

அத்ராப்யுதா3ஹரந்தீம்மிதிஹாஸம் புராதனம் |
அவதூ4தஸ்ய ஸ்ம்வாத3ம் யதோ3ரமித்தேஜஸ: || 24 ||

இந்த விஷயமாக மிகப் பழமையான ஒரு இதிகாசத்தை, கதையை நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றார்கள்.
அது யது மகராஜாவுக்கும், மிகுந்த தேஜஸ்வியான அவதூதருக்கும் இடையே நடந்த உரையாடலாக இருக்கின்றது.

அவதூ4தம் த்3வியம் கஞ்சிச்சரந்தமகுதோப4யம் |
கவிம் நிரீக்ஷ்ய தருணம் யது3: பப்ரச்ச2 த4ர்மவித் || 25 ||

த்3விஜம் – இருபிறப்பாளர் (பிராமணர்), ஞானத்தினால் வேறொரு பிறப்பை எடுத்த
கஞ்சித் சரந்தம் – யாரோ ஒருவர் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்
அகுதோப4யம் – எதனாலும் பயப்படுத்த முடியாதவர்; எதைக் கண்டும் பயப்படாதவர்
கவிம், தருணம் – ஆத்ம ஞானி, அறிவாளி, இளம் வயதுடையவர்
நிரீக்ஷ்ய – இப்படிப்பட்டவரை பார்த்து
த4ர்மவித் – தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருந்த
யது3: – யது3 என்ற அரசன்
ப்ப்ரச்ச2 – கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்

ஶ்ரீயது3ருவாச
குதோ பு3த்3தி4ரியம் ப்3ரஹ்மன்னகர்து: ஸுவிஶாரதா3 |
யாமாஸாத்3ய ப4வால்லோகம் வித்3வாம்ஶ்சரதி பா3லவத் || 26 ||

யது மகராஜன் கேட்டான்.
அவதூ3தர் – சந்நியாஸ ஆசிரமத்தில் இருக்கும் ஒரு வகையினர். இதற்கு நன்கு அனைத்தையும் துறந்து விடுதல் என்று பொருட்படும்.
அ – அக்ஷரத்வாத் – அழியாத ஞானத்தை உடையவர்
வ – வரேன்யாத் – நாடப்பட வேண்டியவர்
தூ3 – தூ3த சம்சாராத் – சம்சாரத்தை விட்டவர்
த – தத்வமஸி என்ற வாக்கியத்தை உணர்ந்தவர்.
குதஹ இயம் ஸுவிஶாரதா3 புத்3தி4 – எங்கிருந்து இந்த மிகமிக நுட்பமான, ஆழ்ந்த, தெளிவான அறிவை அடைந்தீர்கள்?
ப்ரஹமன் ப4வான் – ஹே பிராம்மணரே, தாங்கள்
யாம் ஆஸாத்3ய – எந்த அறிவை அடைந்து
பா4லவத் சரதி – பாலகனைப் போல சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
அகர்து – எந்த செயலையும் செய்யாமல், செயல் எதுவும் செய்வதில்லை, இன்பத்திற்காகவும்,
அறிவை அடைவதற்காகவும் எந்தச் செயலும் செய்வதில்லை
லோகம் வித்3வான் – இந்த உலகத்தின் தன்மை நன்கு அறிந்து கொண்டு, இந்த உலகத்திற்கு இன்பத்தை,
சுகத்தைக் கொடுக்கும் சக்தி கிடையாது- நிலையற்றது என்று தெரிந்தும் சந்தோஷமாக எப்படி இருக்கின்றீர்கள்.

ப்ராயோ த4ர்மா4ர்த2காமேஷு விவித்ஸாயாம ச மானவா: |
ஹேதுனைவ ஸமீஹந்த ஆயுஷோ யஶஸ: ஶ்ரிய: || 27 ||

ப்ராயஹ – பொதுவாக
தர்ம அர்த்த2 காமேஷு – புருஷார்த்தமான அறம், பொருள், இன்பம் இவைகளை அடைவதற்கு,
புண்ணியத்தை அடைவதற்கான தர்மத்தைக் கடைப்பிடித்தும், வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை அடைவதிலும்,
சுகத்திற்கு தேவையான பொருட்களை அடைவதிலும் செயல்படுகிறார்கள்
விவித்ஸா – இவைகளை அடைவதற்கு தேவையான அறிவை நாடுகிறார்கள்
மானவா ஹேதுனா ஏவ – மனிதர்கள் இதற்காகவே
ஸமீஹந்த – முயற்சி செய்கிறார்கள்
ஆயுஶஹ, யஶஹ, ஶ்ரியஹ – நீண்ட ஆயுளோடும், புகழோடும், செல்வ செழிப்போடும்
இருக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். செயலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

த்வம் து கல்ப: கவிர்த3க்ஷ: ஸுப3கோ3 அம்ருதபா4ஷண: |
ந கர்தா நேஹஸே கிஞ்சிஜ்ஜடோ3ன்மத்தபிஶாசவத் || 28 ||

த்வம் து கல்ப: – நீங்கள் செயல்திறன் படைத்தவர், அறிவு திறன் படைத்தவராக இருக்கிறீர்கள்,
சாஸ்திர ஞானமும் இருக்கிறது, சாமர்த்தியம் கொண்டவர்
ஸுப4க3: – பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறீர்கள்
அம்ருதபா4ஷண – நல்ல பேச்சாற்றல் உடையவராக இருக்கிறீர்கள், மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்
பேசும் திறன் உடையவராக இருக்கிறீர்கள்
ந கர்தா – ஆனால் எதையும் செய்வதில்லை
ந ஈஹஸே கிஞ்சித் – எதற்கும் ஆசைப்படாமல் இருக்கிறீர்கள்
ஜ்ட3ம் – உயிரற்ற பொருள் போலவும்
உன்மத்த – சித்தம் கலங்கியவரைப் போலவும்
பிஶாசவத் – தீயசக்தியால் ஆட்கொள்ளப்பட்டவனைப் போலவும், பிசாசைப் போலவும் இருக்கிறீர்கள்.

ஜனேஷு த3ஹயமானேஷு காமலோப3த3வாக்3னினா |
ந தப்யஸேSக்3னினா முக்தோ க3ங்கா3ம்ப4:ஸ்த2 இவ த்3விப: || 29 ||

கங்கையின் நீருக்குள் இருக்கும் யானையானது சுற்றி எரியும் காட்டு நெருப்பால் பாதிக்கப்படாதது போல
இந்த உலகிலிருக்கும் மனிதர்கள் காமம், லோபம், என்கின்ற காட்டுத் தீயினால் எரிக்கப்படுகிறார்கள்.
காமம், கோபம், மதம், மோஹம், மாத்ஸர்யம் போன்ற துன்பத்தைக் கொடுக்க்க்கூடிய உணர்வுகளால், எண்ணங்கள் –
காட்டு தீக்கு உவமையாக கூறப்படுகிறது-ஆனால் இந்த அக்னியால் எரிக்கப்படாமல் முற்றிலும் விடுபட்டவராக நீங்கள் ஆனந்தமாய நிற்கிறீர்கள்.

த்வம் ஹி ந: ப்ருச்ச2தாம் ப்3ரஹ்மன்னாத்மன்யானந்தகாரணம் |
ப்3ரூஹி ஸ்பர்ஶாவிஹீனஸ்ய ப4வத: கேவலாத்மன: || 30 ||

ஹே பிரம்மனே! கேட்கின்ற எங்களுக்கு நீங்கள் உபதேசம் செய்ய வேண்டும்.
உங்களிடத்திலேயே நீங்கள் ஆனந்தமாக இருப்பதற்கும், எந்த பொருட்களில்லாமல் தனிமையிலே இருந்து கொண்டும்,
சுகம் தரும் விஷயங்களை எதுவும் இல்லாமல் இருந்து கொண்டும் எவ்வாறு ஆனந்தமாக இருக்கிறீர்கள்.
எங்களுக்குத் தாங்கள் தயவு செய்து உபதேசித்தருள வேண்டும்.

ஶ்ரீபகவான் உவாச
யது3னைவம் மஹாபா4கோ3 ப்3ரஹ்மண்யேன ஸுமேத4ஸா |
ப்ருஷ்ட: ஸபா4ஜித: ப்ராஹ ப்ரஶ்ரயாவனதம் த்3விஜ: || 31 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
ஹே உத்தவா! வேதத்தையும், குருவையும் மதிக்கின்றவரும், புரிந்து கொள்ளும் ஆற்றலமுடைய யது மன்னனால்
பணிவுடனும், பக்தியுடனும் வணங்கிக் கேட்கப்பட்டதும் அவர் கீழ்கண்டவாறு உபதேசம் செய்யத் தொடங்கினார்.
சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை பகவான் இங்கு குறிப்பால் உணர்ந்து இருக்கின்றார்.

ஶ்ரீப்3ராஹ்மண உவாச
ஸந்தி மே கு3ரவோ ராஜன் ப3ஹவோ பு3த்3த்4யுபஶ்ரிதா: |
யதோ பு3த்3தி4முபாதா3ய முக்தோSடாமீஹ தான்ஶ்ருணு || 32 ||

ஶ்ரீபிராமணர் பதிலளிக்கிறார்.
ஹே அரசே! எனக்கு பல குருமார்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அறிவைப் பெற்றேன்.
இவர்கள் என்னுடைய புத்தியினால் அடையப் பெற்றவர்கள். அந்த குருமார்களிடம் இருந்து ஞானத்தை அடைந்து
இந்த உலகத்தில் முக்தனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அந்த குருமார்களை பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக!

ப்ருதி3வீ வாயுராகாஶமாபோSக்3னிஶ்சந்த்3ரமா ரவி: |
கபோதோSஜகர: ஸிந்து4: பதங்கோ3 மது4க்ருத்3க3ஹ: || 33 ||
மது4ஹா ஹரிணோ மீன: பிங்க3லா குர்ரோSர்ப4க: |
குமாரீ ஶரக்ருத்ஸர்ப ஊர்ணனாபி4: ஸுபேஶக்ருத் || 34 ||

இந்த இரண்டு ஸ்லோகங்களில் அவருடைய குருமார்களாக யார் யார் என்று கூறியிருக்கின்றார்.
நிலம், வாயு, ஆகாஶம், நீர், அக்னி, சந்திரன், சூரியன், புறா(கபோதஹ), மலைப்பாம்பு (அஜகர), ஸிந்து4-கடல்,
பதங்க3-விட்டிற்பூச்சி, மது4க்ருத்-தேனி, க3ஜ-யானை, மது4ஹா-தேனெடுப்பவன், ஹரிண-மான், மீனஹ-மீன்,
பிங்க3லா-வேசி, குரா-ஒருவிதமான பறவை, அர்ப4கஹ-குழந்தை, குமாரீ-இளம்பெண், ஶரக்ருத்-அம்பு தொடுப்பவன்,
ஸர்பஹ-பாம்பு, ஊர்ணநாபி4-சிலந்தி, ஸுபோஶக்ருத்- குளவி.

ஏதே மே கு3ரவோ ராஜன் சதுர்விஶதிராஶ்ரிதா: |
ஶிக்ஷா வ்ருத்திபி4ரேதேஷாமன்வஶிக்ஷமிஹாத்மன: || 35 ||

அரசே! இந்த 24 குருமார்களிடமிருந்து எந்தெந்த அறிவைப் பெற்றேன் என்பதைச் சொல்கிறேன்.
இவைகளின் செயல்களை கவனித்து படிப்பினையைக் கற்றுக் கொண்டேன்.

யதோ யதனுஶிக்ஶாமி யதா2 வா நாஹுஷாத்மஜ |
தத்ததா2 புருஷவ்யாக்4ர நிபோ3த4 கத2யாமி தே || 36 ||

எந்த குருவிடமிருந்து எந்த அறிவை நான் கற்றுக் கொண்டேனோ எவ்விதம் கற்றுக் கொண்டேன்.
ஹே நாஹுஶாத்மஜ! யயாதி மகராஜனின் மகனே! யயாதி குலத்தென்றலே!
அதை அவ்விதம் உனக்கு நான் சொல்லப்போகிறேன். வீரபுருஷனே! கவனமாக கேள்.

பூ4தைராக்ரம்யமாணோSபி தீ4ரோ தை3வ வஶானுகை: |
த்த்3வித்3வான்ன சலேன்மார்காதன்வஶிக்ஷம் க்ஷிதேர்வ்ரதம் || 37 ||

இதில் பூமியிடமிருந்து பொறுமை என்ற பண்பைக் கற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.
பொறுமையானது பலமும், சகிப்புத்தன்மையும் கலந்திருக்கும் ஒரு குணம்.

ஶஶ்வத்பரார்த2ஸர்வேஹ: பரார்தை2காந்தஸம்ப4வ: |
ஸாது4: ஶிக்ஷேத பூ4ப்4ருத்தோ நக3ஷிஷ்ய பராத்மதாம் || 38 ||

மரங்களும், மலைகளும் பரோபகார சிந்தனையைக் கற்பிக்கின்றன. பூமியின் எல்லா செயல்களும் பிறர் நன்மைக்காகவே நடைபெறுகின்றன.
இவ்வாறு மலைகள், மரங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தல் என்கின்ற பண்பைக் கற்றுக் கொடுக்கின்றது

ப்ராணவ்ருத் த்யைவ ஸந்துஷ்யேன்முனிர் நைவேந்த்3ரிய ப்ரியை: |
ஞானம் யதா2 ந நஶ்யேத நாவகீர்யேத வாங்மன: || 39 ||

புலன்களை சந்தோஷப்படுத்தும் உணவை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. \
நம் அறிவுத்திறன் இழந்துவிடாத அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும் வாக்கும், மனமும் அறிவையும், சக்தியையும் இழக்காதவாறு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விஷயேஷ்வாவிஶன்யோகீ3 நானாத4ர்மேஷு ஸர்வத: |
கு3ணதோ3ஶவ்யபேதாத்மா ந விஷஜ்ஜேத வாயுவத் || 40 ||

ஒரு மனிதன், சாதகன் விஷயங்களை அனுபவிக்கும் போது, எதிர்நோக்கும் போது
ஆவிஶன் – விஷயங்களை சந்திக்கும் போது
நானாத4ர்மேஷு – விதவிதமான தர்மத்தையுடைய, குணத்தையுடைய விஷயங்கள்
ஸர்வதஹ – எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்தாலும்
ஆத்மா – அந்தக் கரணம்
குண-தோஷ வ்யபேதா – அந்தந்த விஷயங்களில் உள்ள இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படாமல்
வாயுவத் – காற்றைப் போல
ந விஷஜ்ஜேத – பற்றற்று இருக்க வேண்டும்.
காற்று எல்லா இடங்களிலும் வீசிக் கொண்டிருந்தாலும் எதனுடன் ஒட்டுறவு கொள்வதில்லை.
பிற பொருட்களின் மணத்தை தாங்கிச் சென்றாலும் பிறகு விட்டுவிடுகின்றது.

பார்தி2வேஷ்விஹ தேஹேஷு ப்ரவிஷ்டஸ்தத்3 கு3ணாஶ்ரய: |
கு3ணைர் ந யுஜ்யதே யோகீ3 க3ந்தை4ர்வாயுரிவாத்ம த்3ருக் || 41 ||

இந்த ஸ்தூல சரீரத்தில் நான் என்று அபிமானம் வைக்காமல், இது நான் பயன்படுத்தும் கருவி என்று நினைக்க வேண்டும்.

பார்தி2வேஷு இஹ – பஞ்ச பூதங்களால் உருவான இந்த
தே3ஹேஷு ப்ரவிஷ்டஹ – உடலுக்குள் பிரவேசித்தவர்கள், ஜீவர்கள்
தத்3 குண ஆஶ்ரயஹ – அதனுடைய குணங்களை சார்ந்திருந்தாலும் கூட
க3ந்தை4வாயுஃ இவாதி – காற்று எப்படி வாஸனைகளுடன் எப்படி ஒட்டுவதில்லையோ,
கு3ணைஹி ந யுஜ்யதே யோகீ – யோகியும் நான் என்ற புத்தியை உடல் மீது வைப்பதில்லை
ஆத்ம த்3ருக் – ஆத்மாவை அறிந்த ஞானியும் இதே மாதிரி இருப்பான்
அக்ஞானி உடல் மீது அபிமானம் வைக்கின்றான், சாதகன் அதை ஒரு கருவியாக கருதுகின்றான்.
ஞானிக்கு அதுவே வேடிக்கைப் பொருளாக இருக்கின்றது.

அந்தர்ஹிதஶ்ச ஸ்தி2ர ஜங்க3மேஷு
ப்3ரஹ்மாத்ம பா4வேன ஸமன்வயேன |
வ்யாப்த்யாவ்யவச்சே2த3மஸங்க3மாத்மனோ
முனிர்னப4ஸ்த்வம் விததஸ்ய பா4வயேத் || 42 ||

ஆகாசத்திடமிருந்து ஆத்மாவின் சில லட்சணங்களைக் கண்டு கொண்டார். இதில் ஆத்ம தியானத்தை கூறுகின்றார்.
ஆத்மாவிற்கும், ஆகாசத்திற்கும் பொருந்திவரும் லட்சணங்கள்
அந்தர்யாமி – அனைத்துக்குள்ளும் ஊடுருவி இருப்பது
ப4ரஹ்மன் – பெரியது
வியாபித்தல் – எல்லா இடத்திலும் வியாபித்திருக்கின்றது
பூரணஹ – முழுமையாக இருப்பது
அஸங்காஹ – எதனோடும் ஒட்டாமல் இருப்பது
ஸ்தி2ரஜங்க3மேஷு – அசைவதும், அசையாமல் இருப்பதுமான படைப்புக்கள் அனைத்துக்கும்
அந்தர்ஹிதஹ ச ஆத்மா – உள்ளே வீற்றிருப்பது ஆத்மா;
பிரஹ்மாத்ம பா4வேன – பிரம்ம ஸ்வரூபமாக நான்
ஸமன்வயேன – வெற்றிடம் இல்லாமல் முழுவதுமாக
வ்யாப்த்யா – அனைத்தையும் வியாபிப்பவன்
அவ்யவச்சேதம் – பிளவுப்படாதவன், பூரணமானவன்
அஸங்கம் – எதனுடனும் ஒட்டுதல் இல்லாதது, சம்பந்தப்படாதது
விததஸ்ய ஆத்மா – எங்கும் நிறைந்திருக்கின்ற ஆத்மா
முனி நப4ஸ்த்வம் – ஆகாசத்தின் இந்த லட்சணமாக ஆத்மாவில்
பா4வயேத – இருப்பதாக பாவிக்க வேண்டும்.

தேஜோSப3ன்னமயைர்பா4வைர் மேகா4த்3யைர் வாயுனேரிதை: |
ந ஸ்ப்ருஶ்யதே ந ப4ஸ்த த்3வத்காலஸ்ருஷ்டைர் கு3ணை: புமான் || 43 ||

தேஜோ, ஆப அன்னம் – நீர், நெருப்பு, அன்னம் இவைகளைப் போன்ற பஞ்சபூதங்களை
பா4வைஹி – உருவாக்கப்பட்ட இந்த உடல்
மேகா4த்3யைஹி வாயுனஹ ஈரிதை: – காற்றினால் அலைக்கழிக்கப்படுகின்ற மேகங்கள்
ந ஸ்ப்ருஶ்யதே – ஆகாசத்தில் ஒட்டுவதில்லை
தத்3வத்3 – அதைப்போல
காலஸ்ருஷ்டை கு3ண: – பிராரப்தத்தினால் உருவான உடலினால்
புமான் ந ஸ்ப்ருஶ்யதே – மனிதன் என்று பாதிப்பதில்லை என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்வச்ச2: ப்ரக்ருதித: ஸ்னிக்3தோ4 மாது4ர்யஸ்தீர்த2பூ4ர் ந்ருணாம் |
முனி: புனாத்யபாம் மித்ரமீக்ஷோபஸ்பர்ஶகீர்தனை: || 44 ||

நீருக்குள் நான்கு குணங்களை ஞானியிடத்துப் பார்க்கலாம் என்று கூறுகிறார். அவைகள்
ஸ்வச்ச2: ப்ரக்ருதித – .தூய்மையானது இயற்கையில்
ஸ்னிக்3தோ4 – இணைத்து வைக்கும் குணத்தையுடையது, ஒன்றையொன்றுடன் சேர்க்கும் குணம்,
மாது4ர்யஸ் – இயற்கையிலே சுவையென்ற குணத்தையுடையது
தீர்த2பூ3ர் ந்ருணாம் – மனிதர்களை தூய்மைப்படுத்துவது (ஸம்ஸ்கார ரூபமாக நீரை தூய்மைபடுத்துதல் )
ஈக்ஷணம் – புனித நீரை பார்த்தாலே நம்மிடத்திலே உள்ள பாவங்கள் குறையும்
உப ஸ்பர்ஶ – புனித நீரை தலையில் தெளித்துக் கொள்ளுதல், நீராடினால் புண்ணிய கிடைக்கும்
கீர்த்தனம் – புனித நீரை புகழ்ந்து பாடுதல்,
இவைகள் மூலமாக தூய்மைப்படுத்தப்படுத்தப்படுகின்றது. நீரினுடைய குணங்கள் தன்னிடத்திலே கொண்டுள்ள
ஞானி மக்களை தூய்மைப்படுத்துகிறார்.

ப்ரக்ருதித: – ஞானியானவன் முழுமையாக, சுபாவமாக
ஸ்வச்சஹ – தூய்மை அடைந்தவன். குழந்தையைப் போல யாரையும் வஞ்சிக்காத குணமுடையவன்,
தர்மவான்- யாரிடமும் விருப்பு-வெறுப்பு கொள்ளாதவர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்
நல்ல ஸம்ஸ்காரத்தினால் நல்லவனாக இருப்பவன் கெட்டவனாக மாறிவிடலாம்.
ஆனால் ஞானத்தினால் தூய்மை அடைந்து இருப்பதால் அவன் எப்பொழுதுமே அப்படியேதான் இருப்பான்.
ஸ்னிக்4த4ஹ – இணைப்பது, நட்புணருவுடையவன், யாரிடமும் வெறுப்பு கொள்ள மாட்டான்
மாது4ர்யஹ – சொல்லிலும், செயலிலும் மென்மையானவன், மற்றவர்களை சொற்களாலும், மனதாலும் துன்புறுத்தமாட்டான்.
தீர்த2பூ4ஹு ந்ருணாம் – மற்றவர்களையும் தூய்மைப்படுத்துகிறான்
அபாம் மித்ரம் – நீருக்கு நண்பனாக இருப்பதால் நீரைப்போல மூன்று விதத்தில் மற்றவர்களை தூய்மைப்படுத்துகிறான்.
ஞானியைப் பார்த்தாலே புண்ணியம் கிடைக்கும். அவருடைய ஆசிர்வாததை பெறுவதாலும், தொடுவதாலும், புகழ்வதினாலும் நாம் தூய்மை அடையலாம்.

தேஜஸ்வீ தபஸா தீ3ப்தோ தீ3ப்தோ து3ர்த4ர்ஷோத3ரபா4ஜன: |
ஸர்வப4க்ஷ்யோSபி யுக்தாத்மா நாத3த்தே மலமக்3னிவத் || 45 ||

இனி அக்னியை ஞானியுடன் ஒப்பிட்டு கூறுகின்றார். இதில் நெருப்பினுடைய ஐந்து குணங்களைக் கூறி
அதை ஞானியிடத்து இருக்கும் சில குணங்களோடு ஒப்பிட்டு கூறுகின்றார்.
அக்னியின் 5 குணங்கள்
தேஜஸ்வீ தபஸா = அக்னியிடம் இருக்கும் உஷ்ணத்தன்மை, உஷ்ணத்தால் உருக்கும் தன்மை
தபஸா தீ3ப்தஹ – வெளிச்சம்
து3த4ர்ஷஹ – நெருங்க முடியாது; அருகில் செல்ல முடியாது
உத3ரபா4ஜனஹ – வயிற்றையே பாத்திரமாகக் கொண்டுள்ளது. எரிந்து கொண்டிருக்கும் தீயில் எதைப் போட்டாலும் பொசுக்கி விடும்
ஸர்வ ப4க்ஷ அபி மல மத்3னிவத் நாத3த்தே – யாகத்தில் இருக்கும் அக்னியின் போகும் பொருட்கள் நல்லதாக இருந்தாலும்,
கெட்டதாக இருந்தாலும் அதனால் அக்னிக்கு தோஷம் வராது, அசுத்தம் வராது (மலம் அக்னிவத் ந ஆதத்தே)
ஞானியின் லட்சணங்கள்
தேஜஸ்வீ தபஸா = தவத்தால் வைராக்கியம் உடையவர்; வைராக்கியத்தையே காட்டிக் கொள்ள மாட்டார்
தபஸா தீ3ப்தஹ – விவேகம், ஞானத்தினால் ஓளிர்ந்து கொண்டிருப்பவர்
து3த4ர்ஷஹ – சம்சாரம் ஞானியை நெருங்காது; அசுர குணங்கள் இவனை நெருங்காது, தன்னைத் தானே சந்திக்கும் சக்தி உடையவன்
உத3ரபா4ஜனஹ – அபரிக்ரஹம் – தேவைக்கு மேல் எதையும் வைத்திருக்க மாட்டான்
ஸர்வ ப4க்ஷ்யோ அபி அக்னிவத் – அஸத் ப்ரதிக்ரஹம் தோஷம் – பாவிகளிடம் இருந்து உணவை பெற்றுக் கொண்டால்
வரும் தோஷம் இவருக்கு கிடையாது. அதர்மமான வழியில் சேர்த்து செல்வத்தை பெற்றாலும் தோஷம் வரும்,
தீயவர்கள் கொடுக்கும். உணவும் பாவத்தைக் கொடுக்கும். ஞானிக்கு இப்படிப்பட்ட தோஷங்கள் எதுவும் கிடையாது.

க்வசிச்ச3ன்ன: க்வசித ஸ்பஷ்ட உபாஸ்ய: ஶ்ரேய இச்ச2தாம் |
பு3ங்க்தே ஸ்ர்வத்ர தா3த்ருணாம் த3ஹன்ப்ராகு3த் தராஶுப4ம் || 46 ||

அக்னியின் குணங்கள்
க்வசிச்ச2ன்னஹ – சாம்பலால் மறைக்கப்பட்டிருக்கும் அக்னி
க்வசித ஸ்பஷ்ட – சில இடங்களில் தெளிவாக தெரியும்
உபாஸ்யஹ – வணங்கதக்கது
ஶ்ரேய இச்ச2தாம் – மேன்மையை விரும்புபவர்களால்
தஹன் – எரித்து விடுதல்
ஞானியிடத்து இருக்கும் இந்த குணங்கள்
சில ஞானிகள் தன்னை மறைத்துக் கொள்வார்கள்
சில ஞானிகள் தன்னை உள்ளபடிக் காட்டிக் கொள்வார்கள்
ஞானிகள் வணங்கதக்கவர்கள், யாருக்கு நன்மை வேண்டுமோ அவர்களால் வணங்கத்தக்கவர்கள்
ஞானிக்கும் பிறருடைய பழைய, புதிய, வரப்போகின்ற பாவங்களை எரித்து விடும் சக்தி உடையவர்.
யார் அவரை வணங்குகின்றார்களோ அவர்களுடைய பாவங்களை எரித்து விடுவார்கள்

ஸ்வமாயயா ஸ்ருஷ்டமித3ம் ஸத3ஸல்லக்ஷணம் விபு4: |
ப்ரவிஷ்ட ஈயதே தத்தத் ஸ்வரூபோSக்3னிரிவைதா4ஸி || 47 ||

விபு: – பரமாத்மா, பரம்பொருள்
ஸ்வமாயயா – தன்னிடம் இருக்கின்ற மாயையின் துணைக்கொண்டு
இத3ம் ஸ்ருஷ்டம் – இந்த உலகத்தை படைத்தார்.
ஸத் – புலன்களுக்கு புலப்படுவது, காரியம் – உருவம்
அஸத் – புலன்களுக்கு புலப்படாதது – காரணம் – அருவம்
லக்ஷணம் – தன்மையுடைய
ப்ரவிஷ்டஹ – இந்த உலகத்தினுள் பரமாத்மா நுழைந்திருக்கிறார்
தத் தத் ஸ்வரூப ஈயதே – அந்தந்த உருவமாக இருப்பதாக தோன்றுகின்றது. இந்த உலகமாகவே அவர் இருப்பதாக நினைக்கிறேன்
அக்னி இவ ஏதஸி – அக்னி எந்தப் பொருளோடு சம்பந்தம் வைக்கும்போது அதன் உருவமாக காட்சியளிப்பது போல இருக்கிறது

விஸர்க3த்3யா: ஶ்மஶானாந்தா பா4வா தே3ஹஸ்ய நாத்மன: |
கலானாமிவ சந்த்3ரஸ்ய காலேனாவ்யக்தவர்த்மனா || 48 ||

காலேன – காலத்தினால் இவ்வாறு
கலானாமிவ சந்த்ரஸ்ய – சந்திரனுடைய பகுதிகளாக தோன்றுவது
சந்திரனின் வளர்பிறை; தேய்பிறை இவைகளெல்லாம் நாம் நிலவின் மீது ஏற்றி வைத்திருக்கும் கற்பணையான எண்ணம்.
உண்மையில் நிலவு எப்பொழுதும் முழுமையாகத்தான் இருக்கிறது
அவ்யக்த வர்தமனா – கண்ணுக்கு புலப்படாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதுபோல்

தேஹஸ்ய – இந்த உலகினுடைய
விஸர்கா3த3யா – பிறப்பில் ஆரம்பித்து
ஶ்மஶானாந்தா – மயானத்திற்கு செல்லப்படும் வரையில்
பா4வா – வருகின்ற மாற்றங்கள் (இருத்தல், பிறத்தல், வளர்தல்)
ந ஆத்மனஹ – ஆத்மாவாகிய எனக்கல்ல
நம் உடலுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்கள், மாற்றங்கள் அனைத்தையும் நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
இவைகள் ஆத்மாவான எனக்கு ஒரு சம்பந்தமில்லை என்று தியானம் செய்ய வேண்டும்.

காலேன ஹயோக4வேகே3ன பூ4தானாம் ப்ரப4வாப்யயௌ |
நித்யாவபி ந த்3ருஶ்யேதே ஆத்மனோSக்3னேர்யதா3ர்சிஷாம் || 49 ||

காலேன ஹயோக4வேகேன – கால வெள்ளத்தைப் போல
பூதானாம் – எல்லா ஜீவராசிகளின்
ப்ரப4வாப்யௌ – பிறப்பு-இறப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்
நித்யா அபி – எப்பொழுதும் இருந்தாலும் கூட
ந ஆத்மத்3ருஶ்யதே – ஆத்மாவுக்கு இது சம்பந்தமில்லை
அக்னேர்யதா2ர்சிஷாம் – அக்னியிலிருந்து புறப்படும் ஜுவாலைகள் தோன்றினாலும் மறைகின்றன.
ஆனால் அக்னிக்கு இதற்கு சம்பந்தமில்லை.

கு3ணைர்கு3ணானுபாத3த்தே யதா2காலம் விமுஞ்சதி |
ந தேஷு யுஜ்யதே யோகீ3 கோ3பி4ர்கா3 இவ கோ3பதி: || 50 ||

கோ3பதி – ஒளிப்பொருந்திய சூரியனுடைய
கோ3பி4ஹ – கிரணங்களின் மூலம்
கா3 இவ – நீரை உறிஞ்சி
யதா2காலம் விமுஞ்சதி – தண்ணீரையே சில காலம் கழித்து மழையாக பொழிகிறது
யோகீ3 – அதுபோல ஒரு சாதகன்
குணைஹி – இந்திரியங்களின் மூலம்
குணான் – விஷயங்களை
உபாத3த்தே – அனுபவிக்கின்றோம்
யதா2 காலம் – சரியான நேரத்தில், தேவையான காலத்தில்
விமுஞ்சதி – விட்டுவிட வேண்டும்
ந தேஷு யுஜ்யதே – தன்னிடத்திலே வைத்திருக்க கூடாது

பு3த்4யதே ஸ்வே ந பே4தே3ன வ்யக்திஸ்த2 இவ தத்3 க3த: |
லக்ஷ்யதே ஸ்தூ2லமதிபி4ராத்மா சாவஸ்தி2தோSர்கவத் || 51 ||

நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பயன்படுத்துகின்ற மனிதர்கள், பொருட்கள் மீது பற்று வைக்கக்கூடாது.
அர்கவத் ஆத்மா – சூரியனைப் போல ஆத்மாவானது
வியக்திஸ்த2 – அந்தந்த உடலில் தனித்தனியான உடலில்
ச அவஸ்தி2தஹ – இருந்து கொண்டிருக்கின்றது
இவ தத்3க3தஹ – அதற்குள் இருப்பது போல தெரிகின்றது
லக்ஷ்யதே – இவ்விதம் கருதப்படுகிறது
ஸ்தூ2லமதி பிஹி – ஸ்தூல புத்தியையுடையவர்கள், சூட்சுமமான அறிவில்லாதவர்கள்,
அனுபவத்தை மட்டும் வைத்து முடிவு செய்பவர்கள்.
ஸ்வே ந பே3தே3ன – தானே ஒவ்வொரு உடலிலும் பிளவுபட்டதாக, ஆத்மாவை உடலிலிருந்து வேறுபட்டதாக அறிவதில்லை.

நாதிஸ்னேஹ: ப்ரஸங்கோ3 வா கர்தவ்ய: க்வாபி கேனசித் |
குர்வன்விந்தே3த ஸந்தாபம் கபோத இவ தீ3னதீ4: || 52 ||

அதி ஸ்னேஹம் – அதிகமான பற்றுடைய உறவு
ப்ரஸங்கஹ – ஸ்தூலமாக அது இருக்க வேண்டும் என்று அதிகமன பற்றும்
க்வாபி கேனசித் – எந்த மனிதர்களிடனும், பொருட்களிடனும் ஜடப்பொருளான வீடு, இடம், உறவுகள் மீது வைத்திருக்கும்
அதிகமான பற்று வைக்கக்கூடாது.
குர்வன் – அப்படி வைத்தால்
விந்தே3த ஸந்தாபம் – துயரத்தை அடைவாய்
கபோத இவ – புறாவைப் போல
தீ3னதீ4: – அடிமைப்பட்ட மனதையுடையவன்; தாபத்தை அடைவான்
அஶக்தி – யாரும் என்னைச் சார்ந்தவர்களல்ல என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.
அனபிஷிவங்கஹ – நாமும் யாரையும் சார்ந்திருக்க கூடாது.

கபோத: கஶ்சனாரண்யே க்ருதனீதோ3 வனஸ்பதௌ |
கபோத்யா பா4ர்யா ஸா4த4முவாஸ் கதிசித்ஸமா: || 53 ||

கபோதஹ க்ருதனீடோ3 – காட்டில் ஒரு புறா
கபோத்யா பா4ர்யயா ஸார்த4ம் – மனைவியான பெண் புறாவுடன்
கதிசித்ஸமா: உவாஸ – சிலவருடங்கள் வசித்து வந்தது.

கபோதௌ ஸ்னேஹகு3ணித ஹ்ருதயௌ கு3ஹத4ர்மிணௌ |
த்3ரிஷ்டம் த்3ருஷ்த்யாங்க3மங்கே3ன பு3த்3தி4ம் பு3த்3த்4யா ப3ப3ந்த4து: || 54 ||

நட்பு என்பது மனதளவில் பற்று வைத்திருப்பது.
இரண்டு புறாக்களும் அன்பினால் சேர்ந்துள்ளது. இல்லறத்தில் ஈடுபட்ட அந்த இரண்டு புறாக்களுக்கும் இடையே
அன்பு வளர்ந்து கொண்டே வந்தது. பரஸ்பர மரியாதையுடனும் இருவருடைய ஒரே குறிக்கோளையும்,
இப்படிபட்ட ஒரே பண்புகளூடனும் சேர்ந்து வாழ்ந்து வந்தன.

ஶய்யாஸனாடனஸ்தா2ன வார்தா க்ரிடா3ஶனாதி3கம் |
மிது2னீபூ4ய விஶ்ரப்3தௌ4 சேரதுர்வனராஜிஷு || 55 ||

ஒருவருக்கொருவர் முழு நம்பிக்கையுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். ஒரே கூட்டில் ஒன்றாக படுத்து உறங்கின.
அமர்ந்திருந்தன, பேசிக் கொண்டிருந்தன, சாப்பிடுவார்கள், சுற்றித்திரிந்தன.

யம் யம் வாஞ்ச2தி ஸா ராஜன் தர்பயந்த்யனுகாம்பிதா |
தம் தம் ஸமனயத்காமம் க்ருச்ச்2ரேணாப்யஜிதேந்த்3ரிய: || 56 ||

ஹே ராஜன்! ஆண்புறாவால் அரவனைக்கப்பட்ட ஆண்புறாவை திருப்திபடுத்திய பெண்புறா எதையெல்லாம் விரும்பியதோ
அவைகளனைத்தும் இந்திரிய சுகத்திற்கு அடிமையாகிவிட்ட ஆண்புறா நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
இதிலிருந்து ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலைக்கு சென்று விட்டன. அதில் தர்ம-அதர்மத்தை விட்டுவிட்டார்கள்.

கபோதீ ப்ரத2மம் க3ர்ப4ம் க்3ருஹணந்தீ கால ஆக3தே |
அண்டா3னி ஸுஷுவே நீடே3 ஸ்தபத்யு: ஸன்னிதௌ4 ஸதீ | 57 ||

உரிய காலத்தில் பெண்புறா கருவுற்று ஆண் புறா இருக்கும்போதே முட்டைகளை போட்டது.

தேஷு காலே வ்யஜாயந்த ரசிதாவயவ ஹரே: |
ஶக்திபி4ர்து3ர்விபா4வ்யாபி4: கோமலாங்க3தனூருஹா: || 58 ||

உரிய காலத்தில் அந்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரிந்தன. இறைவனின் சக்தியால் உருவாக்கப்பட்ட உடலுறுப்புக்களுடன்
நம்மால் புரிந்து கொள்ளாத வகையில் குஞ்சுகள் தோன்றின. அவைகள் மென்மையான அங்கங்களையும், இறகுகளுமுடையதான இருந்தன.

ப்ரஜா: புபுஶது: ப்ரீதௌ த3ம்பதீ புத்ரவத்ஸலௌ |
ஶ்ருண்வந்தௌ கூஜிதம் தாஸாம் நிர்வ்ருதௌ கலபா4ஷிதை: || 59 ||

புறாத் தம்பதிகள் தம் குஞ்சுகளிடம் மிகுந்த அன்பு கொண்டு மகிழ்ச்சியோடு சீராட்டி வளர்த்தன.
அவைகளின் குரலைக் கேட்டு கேட்டு மகிழ்ந்தன.

தாஸாம் பதத்ரை: ஸுஸ்பர்ஶை: கூஜிதைர்முக்3த4சேஷ்டிதை: |
ப்ரத்யுத்3க3மைரதீ3னானாம் பிதரௌ முத3மாபது: || 60 ||

புறா பெற்றோர்கள் தன்னையே சார்ந்துள்ள தம்முடைய குஞ்சுகளினுடைய மென்மையான சிறகுகளை தொட்டுப் பார்த்தும்,
கலகலவென்ற மழலை குரலையும், வேடிக்கையான விளையாட்டையும், தத்தி தத்தி நடந்து வருவதைப் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தன.

ஸ்னேஹானு ப3த்3த4 ஹ்ருத3யாவன்யோன்யம் விஷ்ணுமாயயா |
விமோஹிதௌ தீ3னதி4யௌ ஶிஶூன்புபுஷது: ப்ரஜா: || 61 ||

ஸ்னேஹம் – பாசம், பற்று; மோஹம் – தீ3ன பா4வம்

ஏக்த3 ஜக்3மதுஸ்தாஸாமன்னர்த2ம் தௌ குடும்பி3னௌ |
பரித: கானனே தஸ்மின்னர்தி2னௌ சேரதுஶிசரம் || 62 ||

ஒரு நாள் அந்த இரண்டு பறவைகள் குஞ்சுகளுக்கு உணவை தேடி கூட்டை விட்டு, காட்டில் வெகுதூரம் சுற்றித் திரிந்தன.

த்3ருஷ்ட்வா தான்லுப்3த4க: கஶ்சித்3யத்3ருச்சா2தோ வனேசர: |
ஜக்3ருஹே ஜாலமாதத்ய சரத: ஸ்வாலயாந்திகே || 63 ||

ஒரு சமயம் வேடன் ஒருவன் தற்செயலாக புறாக்கூடு இருந்த மரத்தின் பக்கமாக வந்தான். அந்தக் குஞ்சுகளை வலைவீசி பிடித்தான்.

கபோதஶ்ச கபோதீ ச ப்ரஜாபோஷே ஸ்தோ3த்ஸுகௌ |
க3தௌ போஶணமாதா3ய ஸ்வனீட3முபஜக்3மது: || 64 ||

அந்த ஆண்-பெண் புறாக்கள், தம் குஞ்சுகளின் பராமரிப்பில் ஆர்வமுடையதாக இருந்து கொண்டு
அவைகளுக்கு உணவை எடுத்துக் கொண்டு தம் கூட்டுக்குத் திரும்பி வந்தன.

கபோதீ ஸ்வாத்ம ஜான்வீக்ஷ்ய பா3லகான் ஜாலஸம்வ்ருதான் |
தானப்4யதா4வத் க்ரோஶந்தீ க்ரோஶதோ ப்4ருஶ து3:கி2தா || 65 ||

வலையில் சிக்கியிருந்த தன் குஞ்சுகளை கண்ட பெண்புறா முனகிக் கொண்டிருக்கும் அவைகளை
மிகவும் துயரத்துடன் அரற்றிக் கொண்டு ஒடிற்று.

ஸாஸக்ருத்ஸ்னேஹகு3ணிதா தீ3னசித்தாஜமாயயா |
ஸ்வயம் சாப3த்4யத ஶிசா ப3த்3தா4ன்பஶ்யந்த்ய பஸ்ம்ருதி: || 66 ||

பாசக் கயிற்றினால் இறுக்கிக் கட்டப்பட்டதும் பந்த த்தில் வீழ்ந்து கிடக்கும் பெண்புறா, பகவானுடைய மாயையினால்
தன் நினைவு, அறிவை இழந்த துமான பெண்புறா, குஞ்சுகள் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து தானும் வலையில் விழுந்தது.
மோக வலையில் வீழ்ந்து விட்டால் அதுவரை அடைந்த அறிவெல்லாம் நினைவுக்கு வராது.

கபோத: ஸ்வாத்ம ஜான்ப3த்3தா4னாத்மனோSப்யதி4கான் ப்ரியான் |
பா4ர்யாம் சாத்மஸமாம் தீ3னோ வில்லாபாதி து3:கி2த: || 67 ||

தன் உயிருக்கும் மேலான குஞ்சுகளும் தன் உயிருக்கு உயிரான மனைவியும் வலையில் மாட்டிக் கொண்டு விட்டதைப் பார்த்து,
உள்ளம் கலங்கிய ஆண்புறா மிக்க துயரத்துடன் புலம்பத் துவங்கியது.

அஹோ மே பஶ்யதாபாயமல்ப புண்யஸ்ய து3ர்மதே: |
அத்ருப்தஸ்யா க்ருதார்த2ஸ்ய க்3ருஹஸ்த்ரைவர்கி3கோ ஹத: || 68 ||

அய்யோ! எனக்கு வந்த கஷ்டத்தைப் பாருங்கள். நான் அற்பமான புண்ணியத்தை உடையவன். கெட்ட மதியுடையவன்,
அறிவில்லாதவன், வாழ்க்கையில் மனத்திருப்தி ஏற்படவேயில்லை. செய்ய வேண்டியவைகளை செய்யாதவன்.
ஆசைகள் எதுவும் நிறைவேறவில்லை. இல்லற ஆசிரமத்தில் மூன்று லட்சியங்களான தர்ம-அர்த்த-காமம் இவைகள் அழிந்து போய்விட்டதே

அனுரூபானுகூலா ச யஸ்ய மே பதிதே3வதா
பூ4ன்யே க்3ருஹே மாம் ஸந்த்யஜ்ய புத்ரை: ஸ்வர்யாதி ஸாது4பி4: || 69 ||

அனுரூபா – ஒரே மாதிரியாக சிந்திப்பவன், என் விருப்பபடி நடப்பவன்
அனுகூலா – எல்லா வகையில் எனக்கு இணையாக இருந்தாள்
ச யஸ்ய மே பதிதே3வதா – மேலும் என்னுடைய மனைவிக்கு நானே இஷ்ட தேவதை
ஸூன்யே க்3ருஹே மாம் ஸந்த்3யஜ்ய – பாழடைந்த கூட்டில் என்னை தவிக்க விட்டுவிட்டு
புத்ரை: ஸ்வர்யாதி ஸாது4பி4: – நல்ல குஞ்சுகளுடன், அவள் மேலுலகம் செல்லப் போகிறாள்

ஸோSஹம் பூ4ன்யே க்3ருஹே தீ3னோ ம்ருத்தரோ ம்ருதப்ரஜ: |
ஜிஜீவிஷே கிமர்த2ம் வா விது4ரோ து3:க2ஜீவித: || 70 ||

இப்படிபட்ட நான் பாழடைந்த வீட்டில் நான் இப்பொழுது பரிகாபத்திற்குட்பட்டவனாக இருக்கிறேன். மனைவியை பறிகொடுத்தவன்.
குழந்தைகளையும் பறிகொடுத்தவனாக, இனி எதற்காக நான் வாழ வேண்டும் அனாதையாகி விட்டேன். எனது வாழ்க்கையே துயரமாக மாறிவிட்டது.

தாம்ஸ்ததை2வாவ்ருதான்ஶிக்3பி4ர்ம்ருத்யுக்ரஸ்தான்விசேஷ்டத: |
ஸ்வயம் ச க்ருபணா: ஶிக்ஷு பஶ்யன்னப்யபு3தோ4Sபதத் || 71 ||

வலையில் சிக்கிக் கொண்ட புறாக்கள், மரணத்தின் பிடியில் அகப்பட்டு தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தும்,
மதி கேட்டுப் போன ஆண்புறா அறிவை இழந்து வலையில் விழுந்தது.

தம் லப்3த்4வா லுப்3த4க்: க்ரூர்: கபோதம் த்3ருஹமேதி4னம் |
கபோதகான்கபோதீம் ச ஸித்3தா4ர்த2: ப்ரயயௌ த்3ருஹம் || 72 ||

மனைவி குழந்தைகளோடு கூடிய இல்லறத்தில் இருந்த சம்சாரியான அந்த ஆண்புறாவை குரூரமான வேடன்
எடுத்துக் கொண்டு, தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியுடன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர்

ஏவம் குது3ம்ப்3யஶாந்தாத்மா த3வந்த்3வாராம: பத்த்ரிவத் |
புஷ்ணான்குது3ம்ப3ம் க்ருபண: ஸானுப3ந்தோ4Sவஸீத3தி || 73 ||

இவ்வாறுதான் இல்லறத்தில் இருக்கும் மூட மனிதன், மனம், புலன்கள் கட்டுப்பாடு இல்லாதவன் இருமைகளில் மூழ்கியிருப்பவனாக,
புறாக்களைப் போல தன் குடும்பத்தினரின் பராமரித்துக் கொண்டு, சுயநலத்துடன் இருந்து கொண்டு,
குடும்பத்துடன் சேர்ந்து அழிந்து போகிறான். இல்லறத்தில் இருந்து கொண்டு சுயநலவாதியாக இருக்க கூடாது.
மனம் விரிவடைந்திருக்க வேண்டும். தூய்மை அடைந்திருக்க வேண்டும் என்பதுதான் நீதி.

ய: ப்ராப்ய மானுஷம் லோகம் முக்தித்3வாரமபாவ்ருதம் |
க்3ருஹேஷு க2த3வத்ஸக்தஸ்தமாரூட4ச்யுதம் விது3: || 74 ||

இதில் மனிதப்பிறவியின் மகத்துவத்தை கூறுகின்றார்.
மனிதனுடைய உண்மையான இறுதி லட்சியம் எது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றார்.

எவனொருவன் மனித சரீரத்தை அடைந்து, முக்தி அடைவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்றது.
புறாவைப்போல உலகப் பற்றில் ஆழ்ந்திருப்பவர், ஆன்மீக உன்னதப் படிகளில் ஏறி வழுக்கி விழுந்தவர் ஆவார்.
அடைந்த மனித சரீரத்தை வீணாக்கி விட்டவனாக இருக்கிறான்

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: