ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –70-என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து- இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

எம்பெருமானார் செய்து அருளின உபகாரத்தை அனுசந்தித்து வித்தரானார் கீழ் .
அநந்தரம்-
செய்த அம்சத்தில் காட்டிலும் செய்ய வேண்டும் அம்சம் அதிசயித்து இருக்கிற படியை
அனுசந்தித்து -அவருடைய திரு முகத்தைப் பார்த்து
ஸ்வ அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் பாட்டிலே எம்பெருமானார் தமக்கு பண்ணி யருளின உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டராய் –
இதிலே –
என்னையும் என்னுடைய துர்வ்ரத்தத்தையும்-தேவரீருடைய அப்ரதிமப்ரபாவத்தையும் -ஆராய்ந்து பார்த்தால் –
என்னை விஷயீ கரித்து கைக் கொள்ளுகையே நல்லது – இது ஒழிய நான் தீரக் கழியச் செய்த அபராதங்களைப் பத்தும் பத்துமாக
கணக்கிட்டு மீளவும் ஆராயும் அளவில் என்னிடத்தில் நன்மை என்று பேரிடலாவது ஒரு தீமையும் கூடக் கிடையாமையாலே-
என்னைக் கைவிட வேண்டி வருகையாலே –சர்வோத்தரான தேவரீருடைய நிர்ஹேதுக கிருபையை –
தேவரீர் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் என் சொல்வார்களோ என்று நேர் கொடு நேர் விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

எம்பெருமானார் செய்து அருளின உதவியினும்
இனிச் செய்து அருள வேண்டிய உதவி மிகுதியாய் இருத்தலை நினைந்து-மேலும் விடாது -அருளல் வேண்டும் ..-என்று
தம் கோரிக்கையை திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பிக்கிறார் .

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

பத உரை –
என்னையும்– தேவரீர் எடுத்த பின்னரும் பண்டைய பழக்கமே தலை தூக்கும் தன்மை வாய்ந்த என்னையும்
பார்த்து -ஆராய்ந்து
என் இயல்வையும் -பண்டைய பழக்கத்திற்கு ஏற்ப உலகியல் இன்பங்களிலே மண்டித் திரியும் எனது கெட்ட நடவடிக்கையையும்
பார்த்து -ஆராய்ந்து
எண் இல் -எண்ணிக்கை அற்ற
பல்-பலவகைப்பட்ட
குணத்த -குணங்கள் வாய்ந்த
உன்னையும் -தேவரீரையும்
பார்க்கில் -ஆராய்ந்து பார்த்தால்
அருள் செய்வதே -முன்பு அருள் செய்தது போலே மேல் செய்ய வேண்டியவைகளையும்-
எனது வேண்டுகோள் இன்றி அருள் செய்வதே
நலம் -நல்லது
அன்றி -அவ்வாறு இல்லாமல்
பின்னையும் -மறுபடியும்
பார்க்கில்-ஆராய்ந்து பார்த்திடில்
என் பால்-என்னிடம்
நலம்-ஒரு நன்மை
உளதே -இருக்கிறதா
இராமானுச -எம்பெருமானாரே
நலம் உண்டேல் கருணை புரிவேன் என்று தேவரீர் திரு உள்ளம் கொள்ளில்
உன்னைச் சார்ந்தவர் -தேவரீரை ஆஸ்ரயித்தவர்கள்
உன் பெரும் கருணை தன்னை -தேவரீர் உடைய பெருமை வாய்ந்த கருணையைப் பற்றி
என் பார்ப்பார் -என்ன வென்று பார்ப்பார்கள் –
குறைவாக நினைக்க மாட்டார்களா -என்றபடி

வியாக்யானம் –
அநாதி காலம் சம்சாரத்திலே சப்தாதி விஷயங்களிலே பழகி –
ராமாநுஜார்ய விஷயீ க்ருத மப்ய ஹோமாம் பூய பிரதர்ஷா யதிவை ஷயிகோ விமோஹா-
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -88 – என்கிறபடியே –
தேவரீர் அங்கீகரித்து அருளின பின்பும்
துர்வாசன ப்ராபல்யத்தாலே -விபரீத ருசி பூயிஷ்டனாய் இருக்கிற என்னையும் பார்த்து அருளி –
அந்த ருஸ்ய அனுகுணமாக விஷயாந்தரங்களிலே மண்டித் திரிகிற -என்னுடைய துர்விருத்தத்தையும் –
பார்த்து அருளி –
தோஷமே பச்சையாக அங்கீகரிக்கைக்கு ஈடாய் இருந்துள்ள –
அசங்கயேயமான அநேக குணங்களை உடைய தேவரீர் தம்மையும் பார்த்து அருளில் –
இதுக்கு முன்பு செய்தவோபாதி மேலுண்டான அம்சத்துக்கும் நிர்ஹேதுகமாக கிருபை பண்ணி-அருளுகையே நல்லது .
இது ஒழிய மீளவும் ஆராயும் அளவில் என் பக்கல் ஒரு நன்மை உண்டோ –
நன்மையே உண்டாய் கார்யம் செய்ய வேணும் என்னில் தேவரீர் திருவடிகளை
ஆஸ்ரயித்து இருப்பார் தேவரீருடைய நிரவதிக கிருபை தன்னை என்னாகக் காண்பார்கள் ?-
குறையக் காணார்களோ-என்று கருத்து .
குறையக் காண்கை யாவது -இதுவும் இத்தனையோ என்று நினைக்கை
இயல்வு -வ்ருத்தம்
என்பால் என்றது -என்னிடத்தே என்றபடி –

பெரும் கருணை –மோக்ஷம் பர்யந்தம் -குற்றங்களை பார்க்காமல் – காருணீகன் -பரம காருணீகன் –
எண்ணில்- எண்ண முடியாத பல் கல்யாண குணங்கள் நிறைந்த உன்னையே பார்த்து —
சேர்க்கும் பொழுது உள்ள குற்றங்களையும் சேர்ந்த பின்பு பிராமாதிகமான வரும் குற்றங்களையும் பொறுத்து அருளி –
பின்னையும் பார்க்கில் -சம்சாரத்தில் இருப்பதால் அறியாதனத்தால் வரலாமே அதற்கும் வருந்த வேண்டுமே –
ராமனை பாதுகை விட்டதே -பக்தன் -ஆஸ்ரித பரதந்த்ரன் -பாதுகை -தாசாரதி -இப்பொழுது பார்த்து –
மன்னித்து ஏற்றுக் கொண்டார் கூட வருவாரே -அற்புதமான அர்த்தம் –
எண்ணில்லாத –சாம்யம் நமக்கும் ஸ்வாமிக்கும் -தீமைகள் இங்கும் கல்யாண குணங்கள் அங்கு
குற்றம் செய்தவர்களில் சாம்ராஜ்யம் நான் -குற்றம் பொறுப்பதிலே நீர் அரசர்
ஈன்ற தந்தை கீழே சொல்லி -வளர்த்த தந்தை இதில் -சொல்கிறார் -ஞான ஜென்மம் கொடுத்து மேலும் அபிவிருத்தி –
ருசி வாசனையையும் போக்க வேண்டுமே -சம்சாரத்தில் இருப்பதால் -கருணை பலம் இவற்றை விட பெரியது அன்றோ –

என்னையும் பார்த்து –
சர்வஞ்ஞரான தேவரீர் இவ்வளவும் என்னை நிர்ஹேதுகமாக பரிக்ரகித்து
பஹூ பிரகாரமாக சிஷித்து உபதேசித்து -சத் பதத்திலே நடப்பித்து -உபகரித்தாலும்
அவற்றை எல்லாம் – அகிஞ்சித் கரமாம்படி -பண்ணக் கடவதாய் -அநாதி கர்ம ப்ரவர்த்தானந்த அக்ர்த்ய கரணாதி பாப வாசனா தூஷிதன்
ஆகையாலே விபரீத ருசி பூயிஷ்டனாய் இருக்கிற என்னையும் பார்த்து –

என்னையும் பார்த்து
எண்ணில் பல் குணத்த உன்னையும் என்பதற்கு ஏற்ப
எண்ணில் பல் குற்றத்த என்னையும் என்றும்
என் இயல்வையும் என்பதற்கு ஏற்ப
உன் இயல்வையும் என்றும் சொற்களை வருவித்து பொருள் கொள்க.
எண்ணில் பல் குற்றங்கள் ஆவன –
எம்பெருமானார் -வந்து -எடுத்த பின்னரும் -அநாதி காலமாய் தொடரும் வல்வினையால் வந்த வாசனா பலத்தால் –
சப்தாதி போக விஷயத்தில் தலை தூக்கி வளரும் ருசிகளாம்.

பண்டைய பழக்கத்தாலே உண்டாகும் ருசிகள் எண் கடந்தன -பல் திறத்தன –
இத்தகைய எண்ணில் பல் குற்றத்த என்னையும் பார்த்து -என்றபடி –
தேவ -த்வதீய சரண ப்ரணய ப்ரவீண ராமாநுஜார்ய விஷயீ க்ருத பப்ய ஹோமாம் பூய
பிரதர்ஷயதி வைஷயிகோ விமோஹா மத் கரமண கதரதத்ர சமானசாரம் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -90 – என்று
தேவனே -தேவரீருடைய திருவடிகளில் பக்தி செலுத்துவதில் நிபுணரான எம்பெருமானாராலே ஏற்கப் பட்டு இருப்பினும் –
என்னை சப்தாதி விஷயங்களைப் பற்றிய மயக்கம் மிகவும் அடர்த்து ஆட் கொள்கிறது
இவ் உலகில் என் கர்மத்துக்கு நிகரான வலிமை வாய்ந்தது எது தான் ஆகும் –
என்று தமாசார்யான ஆழ்வான் நைச்ய அனுசந்தானம் செய்ததை தாமும் பின்பற்றி –
அமுதனார்-இங்கனம் அருளிச் செய்கிறார் ..
விஷயீ கரித்த பின்னும் பழைய படியே விஷய ப்ரவணனான என்னையும் பார்த்து – என்றது ஆயிற்று .

என் இயல்வையும் பார்த்து –
ராமாநுஜார்ய விஷயீ க்ர்தம ப்யஹோமாம் பூயம் ப்ரதர்ஷயதி வை ஷ யிகோ விமோஹா-என்கிறபடி –
தேவரீர் அங்கீகரித்து அருளின பின்பும்-துர்வாசனாவசத்தாலே அந்தருச்ய அனுகுணமாக துர்விஷயங்களிலே
மண்டித் திரிகிற என்னுடைய வர்த்தியையும் பார்த்து –
இயல்வு -பிரவ்ருத்தி

என் இயல்வையும் பார்த்து –
இயல்வு-செய்கை -நடவடிக்கை என்றபடி
ருசிக்கு ஏற்ப சப்தாதி விஷயங்களிலே மண்டிக் கண்டவர் திரியும் -எனது நடவடிக்கையும் பார்த்து என்றது ஆயிற்று .

எண்ணில் பல் குணத்த உன்னையும் பார்க்கில் –
அசங்கயேயங்களாய் -அநேகங்களாய் -கல்யாண தமங்களாய்-
தோஷங்களையே பச்சையாக அங்கீகரிக்கைக்கு உடலான சௌசீல்ய வாத்சல்யாதி குணங்களை உடையராய் –
சேஷோவா சைன்ய நாதோவா ஸ்ரீ பதிர் வேத்தி சாத்விகை விதர்க்யாய மகாப்ராக்ஜை என்னும்படியான
பிரபாவத்தை உடைய தேவரீர் தம்மையும் நன்றாக பார்த்தால் –
மதி ஷயான் நிவர்த்தந்தே நகோவிந்த குண ஷயாத் –என்கிறபடியே –
பகவத் குணங்களுக்கு தொகை உண்டாகிலும் இவருடைய குணங்களுக்கு தொகை இல்லை-என்று காணும்
அமுதனார் திரு உள்ளத்தில் ஓடுகிறது –

அருள் செய்வதே நலம் –
பரம காருணி கோ நபவத்பர பரம சொச்யதமோ நஹிமத்பர -இதி விசித்ய த்ய ஹ்ர்தாமயி கிங்கரே யதுசிதம்
ரகுவீர ததா குரு -என்கிறபடியே
தேவரீர் பரம காருணிகர் -அடியேன் அத்யந்த பாபிஷ்டன் –
அஹம் அஸ்ய அபராத சக்ரவர்த்தி கருணெத் வஞ்ச குனேஷூ-சார்வ பவ்மி-விதுஷி ஸ்தித மீத்ர்செச்வயம்
மாம் வர்ஷா சைலேச்வர பாதசாத் குருத்வம் -என்றும்
த்வயாபிலப்தம் பகவன் நிதா நீ மநுத்தமம் பாத்ரமிதம் தயாயா – என்கிறபடி
வாத்சல்யாதி குணங்களுக்கு எல்லாம் உத்தீபகமான தேவரீர் உடைய கிருபா குணத்துக்கு பூர்ண விஷயமான அடியேனை –
வாத்சல்ய நிதியான தேவரீர் உபேஷிக்கலாமோ-
தேவரீருக்கு அலாப்ய லாபம் அன்றோ அடியேனை அங்கீகரிக்கை–
என்னைப் போன்ற பாபிஷ்டனை ரஷிக்கை தேவரீர் உடைய கல்யாண குணங்களுக்கு ஒரு பரபாகம் பெறுகை அன்றோ –
ஆக இதுக்கு முன்பு செய்தவோபாதி மேலுண்டான அம்சத்துக்கும் நிர்ஹேதுகமாக கிருபை பண்ணி யருளுகையே ஸ்ரேஷ்டம் –
நாலூரான் விஷயமாக ஆழ்வான் பணித்த வார்த்தை –
தேவரீருடைய விஷயீ கார தார்ட்யம் அன்றோ-என்று அபிப்ராயமாய் -இப்படி சொல்லுகிறார் காணும் இவர் –

இராமானுசா –
எம்பெருமானாரே –

அன்றி –
இது ஒழிய வேறு ஒன்றை ஆராயும் அளவில் –

என் பால் –
இப்படிப் பட்ட அடியேன் விஷயமாக –

பின்னையும் பார்க்கில் –
இது ஒழிய திரும்பியும் ஆராய்ந்து பார்க்கும் அளவில் –

நலமுளதே-
ஒரு நன்மை உண்டோ
நன்மை கொண்டு ஒரு கார்யம் செய்ய வேண்டுவது என் என்னில் –

உன்னைச் சார்ந்தவரே –
தேவரீர் உடைய திருவடிகளை ஆஸ்ரயித்து விஸ்வசித்து இருக்கும் ஞானாதிகர் எல்லாரும்-

உன் பெரும் கருணை தன்னை என் பார்ப்பர் –
மகா பிரபாவரான தேவரீருடைய நிரதிசய கிருபை தன்னை என்னாகக் கண்டு இருப்பர் –
இதுவேயோ என்று குறையக் காணார்களோ என்றபடி –
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ-அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ-எதிராசா நீ இரங்க வேண்டுவது –
நீயும் அதிகாரிகளுக்கே இரங்கின் என் செய்வோம் யாம் -என்று இவ் வர்த்தத்தை ஜீயரும் அருளிச் செய்தார் இறே —

எண்ணில் பல் குணத்த உன்னையும் பார்த்து –
செய்த குற்றம் நற்றமாக கொள்கைக்கு உறுப்பான எண் கடந்த பல் திறத்த குணங்கள் வாய்ந்த தேவரீரையும் பார்த்து

உன் இயல்வையும் பார்த்து
கீழ்க் கூறிய குணங்களுக்கு ஏற்ப -விஷயாந்தரங்களிலே மண்டித் திரிவாரையும் விட்டுக் கொடாமல்
காமாதி தோஷங்களை நீக்கித்
திருவடிகளில் பிணைக்கும்
தேவரீரது விஷயீ கரித்தல் ஆகிய செயலையும் பார்த்து -என்றது ஆயிற்று .

சார்ந்தவர் குற்றம் நற்றமாக தோன்றுதற்கு ஈடான குணங்கள் எம்பெருமானார் இடம் உள்ளன .
அமுதனார் இடம் உள்ள குற்றங்கள் பிரக்ருதி ப்ராக்ருதப் பொருள்கள் இடம் உள்ள தோஷத்தை போக்யமாகப் பார்ப்பதற்கு உடலானவை
எம்பெருமானார் குணங்கள் அன்டினவரையும் உய்விப்பன
அமுதனாருடைய குற்றங்கள் அவருக்கே நாசத்தை விளைவிப்பன

எண்ணிறந்து பலவாய் இருக்கும் தன்மை -குணங்களுக்கும் குற்றங்களுக்கும் பொதுவானது –
பிரகிருதி தோஷத்தை குணமாகப் பார்த்து எனக்கே நாசத்தை தேடிக் கொண்ட என்னை –
விஷயீ கரித்த என்னிடம் -உள்ள தோஷத்தை குணமாகக் கொண்டு உய்விப்பதற்கு தக்கனவாய்
இருத்தலின் தாமாகவே வந்து எடுத்து அருளினது போலே -மேலும் அருள் செய்வதே நல்லது -என்கிறார் .
அருளினால் தான் தேவரீர் குணங்கள் விளக்கம் உறும் என்று கருத்து

என்னையும் எண் இயல்வையும் பார்த்து -என்னாது
தனித் தனியே பார்த்து -என்றது -ஒவ் ஒன்றே அருள் செய்வதற்கு போதுமானது -என்று தோற்றற்கு-என்க .
இயல்வையும் என்ன அமைந்து இருக்க -என் இயல்வையும் -என்றது
தன் நடவடிக்கையின் கொடுமையைக் காட்டற்கு -என்க-

அன்றி என்பால் பின்னையும் பார்க்கில் நலம் உளதே –
அருள் செய்வதே நலம் என்றார் கீழே .
செய்யாவிடின் வரும் கேடு கூறப்படுகிறது மேலே .
பெரும் பாவியாகிய என்னை என்பால் நலம் பாராது தாமே வந்து பெரும் கருணையினால் முன்பு எடுத்து அருளினீர்
பின்பு இப் பொழுது நலம் ஆராய்ந்து அருளப் புகின் இல்லாத நலம் புதிதாய் முளைத்து விடுமா -என்று வினவுகிறார் -அமுதனார் .

உன்னைச் சார்ந்தவர் பெரும் கருணை தன்னை என் பார்ப்பார் –
அரங்கன் தராதையும் தந்து சம்சாரப் படு குழியில் இருந்து பெரும் பாவியான என்னை
எடுத்தலின் எம்பெருமானாறது கருணை பெரும் கருணை யாயிற்று .

என்பால் நலம் கண்டு அருளப் புகின் பெரும் கருணைக்கு அது பெரும் குறை யாகும் அன்றோ –
ஆகவே தேவரீரைச் சார்ந்தவர்கள் தேவரீர் கருணையை பெருமை வாய்ந்ததாக மதிப்பார்களோ ?
குறைவுடையதாக அன்றோ அவர்கள் மதிப்பர் -என்கிறார் .

முன் பாசுரத்தில் ஞானப் பிறப்பிற்கு ஹேதுவான தந்தையாகக் கூறப் பட்டார் எம்பெருமானார் .
இந்தப் பாசுரத்தில் அவர் -பெற்றவனை வளர்க்கும் வளர்ப்புத் தகப்பனாராகக் கருதப்படுகிறார் .
ஈன்ற முதல் தாய் வளர்த்த இத தாய் போல-

————-

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?––ஸ்ரீ திருவாய் மொழி–1-4-7-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: