ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–ஸ்லோகங்கள்–1-60-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —

ஸ்ரீ பராசர பட்டர் திருக் கோஷ்ட்டியூரில் இருந்து ஸ்ரீ ரெங்கம் திரும்பி வரும் போது
திருக் காவேரி தொடக்கமாக
ஸ்ரீ ரெங்கத்தை வருணித்த படி எழுந்து அருளினார்

பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள்
உத்தர சதகம் -105-ஸ்லோகங்கள்

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே

ஸ்ரீ பராசர பட்டார்யா -ஸ்ரீ ஆளவந்தார் திரு உள்ளபடி ஸ்ரீ உடையவர் சாத்தி அருளிய திரு நாமம்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர் இளையவர் என்பதால் இவருக்கு பெரிய பட்டர் என்றும் திரு நாமம் உண்டே
ஸ்ரீ ரெங்கேச புரோஹித-புராணம் வாசிக்கும் கைங்கர்யம்

ஸ்ரீ வத் சாங்க ஸூதா -திரு மறு மார்பன் -அவனே -எம்பெருமான் திருக்குமாரர் என்றும் –
அந்த திரு நாமம் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வாருடைய திருக்குமாரரும் -அபிமான புத்திரர் என்று பிரசித்தம் அன்றோ

இவரது சிஷ்யர் ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
வான் இட்ட கீர்த்தி வளர் கூரத்தாழ்வான் மகிழ வந்த
தேனிட்ட தார் நம் பெருமாள் குமாரர் பட்டர் -என்று அருளிச் செய்கிறார்-

இவரே தாமே தம்மை ஸ்ரீ ரெங்கராஜ கமலா பத லாலி தத்வம் -என்று
இதில் -17-ஸ்லோகத்தில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ மாந் -ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ பூர்ணருமான-அந்தரிஷகத ஸ்ரீ மான் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -சாது நாகவர ஸ்ரீ மான் போலவே –

திரிபுவன வீர தேவ ராய அரசன் இடம் நம் பெருமாளுடைய அஞ்சல் என்ற திருக் கை மறித்தாலும்
அவர் திரு வாசல் ஒழிய வேறே போக்கிடம் உண்டோ என்றவர் அன்றோ –

ஸ்ரயசே மேஸ்து பூயஸே-அடியோமுக்கு மிகுந்த ஸ்ரேயஸ்ஸை அளிக்கட்டும்

————

ஸ்ரீ பகவான் திரு உள்ளம் உகப்பாக ஸ்தோத்ரம் —
கிருதயுகத்தில் தியானமும் –
த்ரேதா யுகத்தில் யஜ்ஞ யாகங்கள் செய்வதும் –
த்வாபர யுகத்தில் அர்ச்சனையும் –
கலி யுகத்தில் ஸ்தோத்ரமும் -என்னக் கடவது இறே

ஸ்தோத்ரம் சர்வாதிகாரம் –
அதுவும் பூர்வர்கள் ஸ்ரீ ஸூக்தி யில் அமைந்த ஸ்தோத்திரங்கள் அவனுக்கு பெரு உகப்புக்கு உபாயமாகும் –
இதற்காகவே ஸ்ரீ ஆளவந்தார் முதல் நம் பூர்வர்கள் அமுதிலும் இனிய ஆற்ற
பல ஸ்தோத்திரங்கள் அருளிச் செய்து அருளினார்கள்

வானிட்ட வளர் கீர்த்தி ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய திருக்குமாரரால் ஸ்ரீ ரெங்கநாதனின் மேல் உள்ள
பக்தி பெருக்காலேயே வெளிவந்த ஸ்லோகம் இது

சாஸ்த்ரார்த்தங்களை அவலீலையாக எடுத்து உரைக்கும் ஸ்லோகம் –

சப்த பிரகாரங்களில் ஆறாவது பிரகாரமான திரு விக்ரமன் திரு வீதி திரு மதில் ஜீரணமாகி சரிந்து விழ
அத்தைச் சீர் படுத்திக் கட்டுவிக்கத் தொடங்கிய வீர ஸூந்த்ர ப்ரஹ்ம ராயன் -ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்-
இவர் ஸ்ரீ கூரத்தாழ்வானின் சிஷ்யர் -திருமாளிகை குறுக்கிட்டு இருப்பது கண்டு முன் போலே மதிலை
ஒதுக்கிக் காட்டாமல் அத்தை இடித்து கட்டுவிக்க முயல –

இவருடைய மங்களா சாசனம் காப்பு -முன்பு நான்காம் பிரகாரம் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் காட்டும் பொழுது
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை சேர்க்கிற அடைந்தை நடந்தை பூஞ்சோலை நேர்பட ஒதுக்கி கட்டினாரே-போன்ற
உபதேசம் செய்ய

அத்தை உபேக்ஷித்து திரு மதிலை கட்டுவித்தான் -மனஸ்தாபம் மேலிட
ஸ்ரீ ரெங்கத்தில் வாசம் செய்யாமல் ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூருக்கு எழுந்து அருளினார் –

இங்கு இருக்கும் பொழுதும் கரு மணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள்
என்று கொலோ களிக்கும் நாளே -என்று கொலோ உருகும் நாளே -என்று அலற்றினால் போலே-

கதாஹம் காவேரீ தட பரிஹரே ஸ்ரீ ரெங்க நகரே -போன்ற ஸ்லோகங்களைக் கொண்டு அலற்றிக் கொண்டு இருந்தார்

இங்கனம் இருக்க அந்த வீர ஸூந்தரன் இறந்து போக -ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் அந்த செய்தியை
ஸ்ரீ கோயிலில் இருந்து ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூருக்கு எழுந்து அருளி தெரிவிக்க
அது கேட்டு மகிழாமல் -அபராத ஷாமணம் செய்து கொள்ளாமல் நல் கதி இழந்தானே என்று சிந்தித்து
ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளும் காலத்தில்
திருக் காவேரி முதலாக தம் அனுபவத்தை வெளியிடும் முறையில்
அமைந்த ஸ்லோகங்கள் இவை

ஸ்ரீ பஞ்ச ஸ்தவங்கள் வெளிவர அந்த சோழன் உபத்திரவம் போலே
இந்த ஸ்தவம் வெளிவர இவனது உபத்ரவமும் இருந்ததே –
இவ்வகையில் இவர்களும் நமக்கு உபாகாரகர்களே

பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய பூர்வ வாக்ய விவரணம்
உத்தர சதகம் –105-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய உத்தர வாக்ய விவரணம் –

ஸ்ரீ ஆச்சார்ய பரம்பரா ஸ்துதி முன்னாக இழிந்து மங்களா சரணம் செய்து
அவை அடக்கம் கூறி -திருக் காவேரியில் நீராடியதையும் பேசி-திருச் சோலைகளின் வளப்பத்தை அனுபவித்து –
திருவரங்க மா நகரின் சிறப்பையும் பேசி
நகர பரிபாலர்களை வணங்கி –
அங்குள்ள அகில சராசரங்களும் நித்ய முக்தர்களாகவே பாவித்து வணங்கி –
அங்குள்ள திருக் கோபுர பிரகாரங்களோடே கூடின ஸ்ரீ பெரிய கோயிலை வர்ணித்து -திரு மதில்களைத் தொழுது –

திருச் சந்நிதி த்வார பாலர்களை வணங்கி –
ஆயிரக்கால் திரு மண்டபத்தை மங்களா சாசனம் செய்து –
திருச் சந்த்ர புஷ்காரணியில் நீராடி –
ஆழ்வார்கள் பதின்மரையும் இறைஞ்சி –
ப்ரணவாகார விமானத்தைக் கை தொழுது –
ஸ்ரீ மேட்டு அழகிய சிங்கரை மேவி வணங்கி

திருப் புன்னை மரத்தை தாழ்ந்து சேவித்து
ஸ்ரீ சேனை முதலியாரையும் ஸ்ரீ பெரிய திருவடியையும் பரிவாரங்களுடன் சேவித்து
ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்கள் ஸ்ரீ திருவடி ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இவர்களையும் வாழ்த்தி
திரு பிரம்பரையும் ஸ்ரீ திரு மணத் தூணையும் வழி பட்டு
கர்ப்ப க்ருஹத்தையும் அனுபவித்து
ஸ்ரீ திருவடி வருடும் ஸ்ரீ பிராட்டி மார்களையும் சாமரம் பரிமாறும் மங்கைமார்களையும் ஸ்துதித்து
ஆக இவ்வளவு அனுபவங்களையும் -62-ஸ்லோகங்களால்
ஸ்ரீ த்வயத்தில் ஸ்ரீ நாராயண பதத்தில் உள்ள நாரா சப்தார்த்தங்களை அருளிச் செய்து

மேலே இவற்றுக்கு அயனமான
ஸ்ரீ மந் நாராயணனுடைய திருவடிகளை சரணம் புகுகிறேன்
என்பதாக -63-ஸ்லோகம் தொடக்கமாக
ஸ்ரீ அழகிய மணவாளன் அனுபவத்தை அருளிச் செய்து
பூர்வ சதகத்தை தலைக்கட்டி அருளுகிறார்

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய
புருஷகாரத்வ
உபேயத்வ உபயோகிகளான கல்யாண குணங்களை
ஸ்ரீ குண ரத்ன கோசத்தில் வெளியிட்டு அருளி

இதில் ஸ்ரீ நாராயணாதி சப்தார்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார்

அதில் முந்துற முன்னம் குரு பரம்பரா அனுசந்தானம் –

————-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந மிஸ்ரேப்ய நம உக்தீம் அதீ மஹே
யத் உக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம் –1-

யத் உக்தயஸ்-யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வானுடைய ஸ்ரீ ஸூக்திகளானவை
த்ரயீ கண்டே -ஸ்ரீ வேத மாதாவின் திருக்கழுத்திலே -வேதாந்தம் -என்றவாறு –
மங்கள ஸூத்ரதாம் –திரு மாங்கல்யமாகவே இருக்கும் தன்மையை
யாந்தி -அடைகின்றனவோ –
சகல துர் மதங்களையும் நிரசித்து பரத்வ நிர்ணயம் பண்ண வல்ல ஸ்ரீ ஸூக்திகள் இவரது –
(தேப்ய )ஸ்ரீ வத்ஸ சிஹ்ந மிஸ்ரேப்ய-அந்த பரம பூஜ்யரான ஸ்ரீ ஆழ்வான் பொருட்டு –
மிஸ்ர பூஜ்ய வாசகம் –
நம உக்தீம்-நம -என்ற சொல்லை–சேஷத்வ -பாரதந்தர்ய ஸூசக வாசகம் அன்றோ நம –
அதீ மஹே–ஒதுகின்றோம் -மாநஸகமும் காயிகமாகவும் இல்லா விடிலும் யுக்தி மாத்திரமே அமையும் –
ஸ்ரீ எம்பார் சாஷாத் ஆச்சார்யர் -ஸ்ரீ கூரத்தாழ்வானும்
எண் பெருக்கு அந்நலத்து –வண் புகழ் நாரணன் -பாசுர வியாக்யானம் திரு மந்த்ரார்த்தம் பிரசாதித்து அருளியது பிரசித்தம்
வந்தே கோவிந்த தாதவ்-என்று இருவரையும் சேர்த்து -உபய சம்பந்தத்தையும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யத்தில் அருளிச் செய்தார் –

—————–

ஸ்ரீ ராமானுஜ பதச் சாயா கோவிந்த ஆஹ்வா அநபாயிநீ
தத் ஆயத்த ஸ்வரூபா சா ஜீயாத் மத் விஸ்ரமஸ்த் தலீ-2-

ஸ்ரீ ராமானுஜ பதச் சாயா -ஸ்ரீ எம்பெருமானாருடைய திருவடி நிழலாயும்-இதுவே இவருக்கு அசாதாரணமான திரு நாமம்
கோவிந்த ஆஹ்வா ஸ்ரீ கோவிந்த பட்டர் என்னும் திரு நாமத்தை உடையவராய் இருக்கிற
அநபாயிநீ-ஸ்ரீ பெருமாளுக்கு ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே -ஒரு பொழுதும் விட்டு நீங்குதல் இல்லாத வராயும்
தத் ஆயத்த ஸ்வரூபா-அத்திருவடிகளுக்கு வசப்பட்ட ஸ்வரூபத்தை யுடையவராயும்
சா-அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பார் ஸ்வாமியே
மத் விஸ்ரமஸ்த் தலீ–தாப த்ரய தப்தமான எனக்கு இளைப்பாறும் இடம்
எம் பார்– எம்முடைய இருப்பிடம் என்றவாறு –
ஜீயாத்–பொலிக பொலிக பொலிக

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு––பெரிய திருவந்தாதி–31—பிரதம பர்வ நிஷ்டை ஆழ்வார்

——————-

ஸ்ரீ ராமானுஜ முனி ஜீயாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரத
கலி கோலாஹல கிரீடா முதாக்ரஹம் அபாஹரத்–3-

ஸ்ரீ ராமானுஜ முனி ஜீயாத் -ஸ்ரீ பகவத் குண மனன சீலரான அந்த ஸ்ரீ எம்பருமானார் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு –
யோ ஹரேர் பக்தி யந்த்ரத–யாவர் ஒரு ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ எம்பெருமான் இடத்து பக்தியாகிற யந்த்ரத்தினாலேயே
யந்த்ரத -யந்த்ரித-யந்த்ரிதாத் -பாட பேதங்கள்
கலி கோலாஹல கிரீடா முதாக்ரஹம்
கலி புருஷனுடைய கோலாஹலத்தில் விளையாட்டாகிற பாழும் பிசாசை
அபாஹரத்–துரத்தினாரோ
கலியும் கெடும் கண்டு கொண்மின்

ஸ்ரீ இராமானுசன் மறை தேர்ந்து உலகில் புரியும் நல் ஞானம் பொருந்தாதவரை போரும் கலியே

ஸ்ரீ ராமானுஜன் இத்தலத்து உதித்து ஆனது செம்மை அற நெறி பொய்மை அறு சமயம் போந்தது பொன்றி இறந்தது வெங்கலி —

கலவ் கிருதயுகம் தஸ்ய கலீஸ் தஸ்ய கருத்தே யுகே -ஹ்ருதயே யஸ்ய கோவிந்தோ யஸ்ய சேதசீ நாஸ்யுத–என்று
எவன் உடைய உள்ளத்தில் எம்பருமான் ஸூ பிரதிஷ்டமாக நித்ய வாசம் செய்து அருளுகிறானோ அவனுக்கு கலியுகம் க்ருத யுகம் –
எவன் நெஞ்சில் இல்லையோ அவனுக்கு கிருதயுகம் கலியுகம் -என்றவாறு –

————————-

விதாய வைதிகம் மார்க்கம் அகௌதஸ் க்ருத கண்டகம்
நே தாரம் பகவத் பக்தேர் யாமுநம் மநவாமஹை -4-

விதாய வைதிகம் மார்க்கம் -வைதிக நெறியை செய்து அருளி

அகௌதஸ் க்ருத கண்டகம் விதாய -தூர்வாதிகள் ஆகிற முள் அற்றதாக செய்து அருளி
சித்தி த்ரயம் -ஆகம பிராமண்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் இத்யாதி திவ்ய பிரபந்தங்களைச் செய்து அருளி -என்றவாறு
குத குத அது என் இது என் என்று துர் ஆக்ஷேபங்கள் செய்து கொண்டு இருக்கும் தூர்வாதிகளே கௌதஸ்குதர்-

நே தாரம் பகவத் பக்தேர் -ஸ்ரீ பகவத் பக்தியை தழைத்து ஒங்கச் செய்து அருளிய
யாமுநம் மநவாமஹை -ஸ்ரீ ஆளவந்தாரை த்யானிக்கக் கடவோம்

வேதமார்க்க பிரதிஷ்டாபன ஆச்சார்யரான ஸ்ரீ யமுனைத் துறைவனை சிந்திக்கக் கடவோம் என்றதாயிற்று

குண அனுபவத்தால் தமக்கு பிறந்த நாநா பாவத்தால் ஸ்வ கீயரையும் கூட்டிக் கொண்டு பஹு வசனம் –

———————-

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் பக்தி அவக்ரஹே
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –5-

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் -ஸ்ரீ நாதமுனிகள் என்ற பிரசித்தமான மேகத்தை ஸ்துதிக்கிறேன்
பக்தி அவக்ரஹே-பக்தியாகிற தீர்த்தம் அருமைப்பட்டு இருந்த துர் பிஷ காலத்தில்
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –பகவத் வியதிரிக்த விஷயாந்தரங்களில் விரக்தியில் என்ன –
பகவத் ஞான பக்திகள் என்ன ஆகிய இவற்றை எங்கும் வர்ஷிக்க வல்ல

———————————————

ரிஷிம் ஜூஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சஹஸ்ர சாகரம் ய அத்ராஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் –6-

ய–யார் ஒரு நம்மாழ்வார்
சஹஸ்ர சாகரம் ய த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்-ஆயிரம் பாசுரங்களுடைய தமிழாலாகிய ஸ்ரீ திருவாய் மொழி
ஆகிற உப நிஷத்தை –ஒவ் ஒரு பாசுரமும் ஒரு சாகை தானே –
அத்ராஷீத் -சாஷாத்கரித்தாரோ-ஸ்ரீ எம்பெருமான் இவரைக் கொண்டு பிரவர்த்திப்பித்தான் என்றவாறு
இத்தால் ஸ்ரீ திருவாய் மொழியின் பிரவாஹதோ நித்யத்வம் காட்டப்படுகிறது
தம் -அப்படிப்பட்டவராய்
உதிதம் -உரு எடுத்து வந்த
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவ
ஸ்திதம்–ஸ்ரீ எம்பெருமான் திறத்து காதலின் உண்மை போன்றவரான
ரிஷிம் ஜூஷாமஹே –ஸ்ரீ நம்மாழ்வாரை சேவிக்கிறோம் –

இத்தால் ஸ்ரீ பட்டருக்கு
ஸ்ரீ நம்மாழ்வார் இடத்திலும்
ஸ்ரீ திருவாய் மொழி இடத்திலும் அமைந்துள்ள
அத்புதமான பக்தி வை லக்ஷண்யம் அழகிதாகப் புலப்படும் –

———————————-

நம ஸ்ரீ ரெங்க நாயக்யை யத் ப்ரூ விப்ரம பேதத
ஈச ஈஸிதவ்ய வைஷம்ய நிம்ந உந்நதம் இதம் ஜகத் -7-

இதம் ஜகத் -இந்த உலகமானது
யத் ப்ரூ விப்ரம பேதத-எந்த ஸ்ரீ பெரிய பிராட்டியாரின் புருவ நெரிப்பின் வாசியாலேயே
ஈச ஈஸிதவ்ய வைஷம்ய நிம்ந உந்நதம் –மேற்பட்டவர்கள் கீழ்ப்பட்டவர்கள் என்னும்படியான பேதங்களினால்
வேறுபாடு கொண்டு மேடு பள்ளமாய் இருக்கின்றதோ
தஸ்ய – ஸ்ரீ ரெங்க நாயக்யை
நம-அந்த ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு வல்லபையான ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு நமஸ்காரங்கள் –

இவளது நிக்ரஹ அனுக்ரஹங்களே இவற்றுக்குக் காரணம் -என்றவாறு –

————–

ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ ஸ்தந ஆபரணம் -ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –
எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க
தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே
அநந்த போகிந –ஸ்ரீ ஆதி சேஷனுடைய
உத்ஸங்கே –திரு மடியிலே
உத்வாந்தம்-கக்கப்பட்ட
சிந்தாமணிம் இவை –சிந்தாமணி போன்றதும்
தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

ஸ்ரீ குரு பரம்பரா பிரதம குருவான -ஸ்ரீ லஷ்மீ நாதனுக்கு ஸ்தோத்ரம் –
தேஜஸாம் ராசி மூர்ஜிதாம்-குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு அன்றோ –
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா –மணியே மணி மாணிக்கமே மது ஸூதா —
ஜகத் உபாதானமாய் இருபத்தொரு சிந்தாமணியை உமிழ்ந்து இத்தை யாரேனும் ஒருவர் இறாஞ்சிக் கொள்ளில் செய்வது என்
என்று தன் மடியில் வைத்துக் காண்டகம் இட்டுக் கொண்டு கிடக்கிறான் அன்றோ
வெறும் மணி என்னாது -சிந்தா மணி என்றது -சிந்தித்த அபீஷ்டங்களை எல்லாம் அருளும் மணி என்பதால் –

————————————-

அஸ்தி வஸ்து இதம் இத்தந்த்வ பிரசங்க்யாந பராங்முகம்
ஸ்ரீ மதி ஆயதநே லஷ்மீ பத லாஷா ஏக லக்ஷணம் –9-

இதம் இத்தந்த்வ பிரசங்க்யாந பராங்முகம்-இன்னது என்றும் இத்தகையது என்றும் அறுதி இடக் கூடாததாய்
லஷ்மீ பத லாஷா ஏக லக்ஷணம் –ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடியில் இட்ட செம்பஞ்சுச் சாறு
தன்னையே அடையாளமாக உடைத்தான
வஸ்து -பரம் பொருளானது
ஸ்ரீ மதி ஆயதநே அஸ்து –ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலிலே உள்ளது –

வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபி துரசி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி-
சர்வ ஸமாச்ரயணீயம் ஆகைக்காக திருவவதரித்து நித்யம் சத்தை பெற்ற வஸ்து அன்றோ –

—————

லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே –10-

லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கற்பகக் கொடியில் உள்ள
உன்னதமான திரு முலைத் தடமாகிற பூங்கொத்தில் சுழலமிடா நின்ற
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் அன்றோ
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே –ஸ்ரீ ரெங்கநாதனாகிற வண்டு அடியேனுடைய நெஞ்சு ஆகிற
தாமரைப் பூவில் உகந்து வாழ்ந்திடுக

வண்டு தாமரை மலரைக் கண்டால் உள் புகுந்து அதி மோகத்தோடே ரமியா நிற்குமே –
எனவே -ஸ்தபக சஞ்சல–என்றும் –
அம்புஜே ரமதா -என்றும் சொல்லிற்று –

—————————–

ஸ்வஸ்தி ஸ்ரீஸ்தந கஸ்தூரீ மகரீ முத்ரித உரச
ஸ்ரீ ரெங்கராஜாத் சரதஸ் சதம் ஆஸாஸ் மஹேதமாம் –11-

ஸ்ரீஸ்தந கஸ்தூரீ மகரீ முத்ரித உரச–ஸ்ரீ பெரிய பிராட்டியின் திரு முலைத் தடங்களில் கஸ்தூரியினால் இயற்றப்பட்ட
மகரிகா பத்ரங்களினால் முத்திரை செய்யப்பட திரு மார்பை யுடைய
கஸ்தூரியைக் குழைத்து சுறா மீன் வடிவமாக காண்கையில் எழுதும் அலங்கார விசேஷம் அழுந்த அணைக்கும் பொழுது
திரு மார்பில் இலச்சினை படுமே -அப்படிப்பட்ட இலச்சினை யுடைய

ஸ்ரீ ரெங்கராஜாத் –ஸ்ரீ ரெங்கநாதன் இடம் இருந்து
ஸ்வஸ்தி -நன்மையை
சரதஸ் சதம் -நீடூழி காலம்
ஆஸாஸ் மஹேதமாம் –-மிகவும் விரும்புகின்றோம் –

விச்சேதம் இல்லாத மிதுன கைங்கர்ய பிரார்த்தனை

——————————————

பாது ப்ரணத ரஷாயாம் விலம்பம் அஸஹந் இவ
சதா பஞ்சாயுதீம் பிப்ரத் ச ந ஸ்ரீ ரெங்க நாயக—12-

ப்ரணத ரஷாயாம்–ஆஸ்ரிதர்களை காப்பாற்றுவதில்
விலம்பம் அஸஹந் இவ-கால தாமதத்தை ஸஹிக்க மாட்டாதவர் போல்

சதா பஞ்சாயுதீம் பிப்ரத் ச ந ஸ்ரீ ரெங்க நாயக—பாது —

எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி –
எப்பொழுதும் ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களை —
திருவாழி -திருச்சங்கு -திருக்கதை -திருச் சார்ங்கம் -திரு உடை வாள் –ஏந்திக் கொண்டு இருக்கும் அந்த ஸ்ரீ ரெங்கநாதர் –
அகிஞ்சனரான -நம்மைக் காத்து அருளட்டும் –

விரோதிகளைப் போக்கி ஆள் செய்யும் இஷ்ட பிராப்தியை அருளட்டும் –

————————–

இது முதல் ஏழு ஸ்லோகங்களால்-தமக்கு ஸ்துதிக்க அதிகாரம் இல்லை என்று சங்கித்து
அதிகாரம் உண்டு என்று தலைக் கட்டுகிறார் –

அமதம் மதம் மதம் அத மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜம் உதஜூ குஷத் த்ரயீ ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும –13-

அமதம்–பர ப்ரஹ்மம் அறியப் படாதது என்று எண்ணப் பட்டால்
மதம்-பவதி -அப்போது அது அறியப் பட்டதாகிறது –

அத -பின்னையும்
மதம் அத மதம் பவதி -பர ப்ரஹ்மம் அறியக் கூடியது என்று கருதப் பட்டால் அறியப் படாதது ஆகிறது

ஸ்துதம்-பர ப்ரஹ்மம் ஸ்துதித்து முடிக்கத் தக்கது என்று கருதப் பட்டால்
பரி நிந்திதம் பவதி -அது இகழப் பட்டதாகிறது

நிந்திதம்– உள்ளபடி ஸ்துதிக்க முடியாது என்று கருதப் பட்டால்
ஸ்துதம் பவதி -ஸ்துதிக்கப் பட்டதாகிறது

இதி த்ரயீ -என்று இவ்விதமாக விதமானது
உதஜூ குஷத்-எம்பெருமான் இடத்தில் முறையிட்டுக் கிடக்கிறது

இப்படி இருக்க
தம் ரெங்கராஜம்–அந்த ஸ்ரீ ரெங்கராஜனை
வயம்-அறிவிலிகளான நாம்-சக்தியும் பக்தியும் இல்லாத நாம்-பஹு வசனம் கவி மரபு –
ஸ்துத்ய அநதி காரம் சர்வ சாதாரணம் என்பதால் பஹு வசனம் என்றுமாம் –

கிம் இதி -என்ன வென்று
ஸ்துமஹே-ஸ்துதிக்க இழிகிறோம்
ந சக்நும –ஸ்துதிக்க வல்லோம் அல்லோம் –

யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -வேத ஸ்ருதியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் -பெரிய திருவந்தாதி -2-

ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும் பாலும்
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –திருவாய் -3-1-2-

மா சூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மா சூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மா சூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மா சூணா யுன பாத மலர்ச்சோதி மழுங்காதே -3-1-8-

ஸ்வம் சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தைர் பாந்தம் -என்று இவரே மேலே அருளிச் செய்கையாலே
த்ரயீ என்றது உபய வேத வாசகமாகக் கொள்ளக் குறை இல்லையே

—————————————

யதி மே சஹஸ்ர வதந ஆதி வைபவம் நிஜம் அர்ப்பயேத் ச கில ரெங்க சந்த்ரமா
அத சேஷவத் மம ச தத்வத் ஏவ வா ஸ்துதி சக்தி அபாவ விபவே அபி பாகிதா -14-

ச ரெங்க சந்த்ரமா-அந்த ஸ்ரீ ரெங்கநாதன்
நிஜம் –தன்னுடையதான
சஹஸ்ர வதந ஆதி வைபவம்–ஆயிரம் வாயுடைமை முதலான வைபவத்தை
மே -அடியேனுக்கு
அர்ப்பயேத் யதி -தந்து அருள்வானே யாகில்
அத சேஷவத்-அதற்குப் பிறகு ஆதி சேஷனுக்குப் போலவோ
அல்லது
தத்வத் ஏவ வா -அந்த எம்பெருமான் தனக்குப் போலவேயோ
இவனுக்கும் சஹஸ்ர சீர்ஷா சஹஸ்ர பாத் சஹஸ்ர அஷாதிகள் உண்டே -இவற்றையும் தந்து அருளுவான் ஆகில்
மம ச -அடியேனுக்கும்
ஸ்துதி சக்தி அபாவ விபவே அபி–ஸ்தோத்ரம் செய்வதில் சக்தி இல்லாமை யாகிற ஒரு பெருமையிலும்
பாகிதா –ஸ்யாத் –பங்கானது உண்டாகும் –

கீழே -ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும –13-என்றவர் இதில்
அப்படி வார்த்தை சொல்வதற்கும் அடியேனுக்கு யோக்யதை இல்லை என்கிறார் —

ப்ரஸக்தஸ்யைவ ஹி ப்ரதிஷேதஸ் -நியாயம் -வேதம் ஓத எனக்கு சக்தி இல்லை என்று சொல்வான் ஆகில்
முன்பு வேத அத்யயனம் பண்ண அதிகாரம் இருக்க வேண்டுமே

அதே போலே ஆதி சேஷனைப் போலே ஆயிரம் வாய் கொண்டும்
ஸ்ரீ ரெங்க நாதனைப் போலே சஹஸ்ர முகங்களையும் கொண்டும்
இருந்தேனாகில் ஸ்தோத்ரம் பண்ண என்னால் ஆகாது என்று சொல்ல ப்ரஸக்தி உள்ளது என்று சொன்னார் ஆயிற்று

ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே

தனக்கும் தன் தன்மை அறிய அரியன் -என்றபடி
சர்வஞ்ஞனுக்கும் எட்டாத ஸ்ரீ பகவத் வைபவம் அன்றோ

—————————–

ஸ்துதிக்க சக்தியும்
அதிகாரமும் இல்லை என்றார் கீழ் இரண்டாலும் –

இதில் தம்மிடம் ஞான சப்த அர்த்த தோஷங்கள் இருந்தாலும் அன்பும் பரிவும் கொண்டு –
இளைய புன் கவியாய் இருந்தாலும் இனியவாறே கொள்கிறான்-

முதலில் சக்தி இல்லை என்றார்
அடுத்து சக்தி இல்லை என்பதற்குக் கூட தமக்கு அதிகாரம் இல்லை என்றார் –

ஸ்ரீ பகவத் விஷயம் அபரிச்சின்னம் ஆகையால் -சப்த தோஷத்தாலும் அதுக்கு ஹேதுவான ஞான தோஷத்தாலும்
அர்த்த தோஷத்தாலும் எனக்கு ஸ்தோத்ரத்தில் அதிகாரம் இல்லையாய் இருக்க
ஸ்ரீ பெரிய பெருமாள் நிரங்குச ஸ்வாதந்தர்யத்தாலே தம்மை ஸ்துதிப்பிவித்துக் கொண்டு
தம் ஐஸ்வர்யத்தை மறைத்து வேதத்துக்கும் சந்தேகிக்கும் படியாய் யாகிறார் என்கிறார்

ச அங்க வேத யதிவா ந கிலேதி வேத சந்தேக்தி அநர்க்க விதம் ஆத்மநீ ரங்க நாதம்
ஸ்த்தாநே தத் ஏஷ கலு தோஷ மலீம ஸாபி மத் வாக்பி ஐசம் அதி சாயநம் ஆ வ்ருணோதி –15-

வேத-விதமானது –
ச அங்க யதிவா ந வேத இத-அந்த எம்பெருமான் தானும் தனது பெருமையை அறிந்தானோ இல்லையோ என்று சொல்லி
அநர்க்க விதம் ரங்க நாதம்–சிறந்த ஞானத்தை யுடைய சர்வஞ்ஞரான ஸ்ரீ பெரிய பெருமாளைக் குறித்தும்
சந்தேக்தி ஆத்மநீ -தனக்குள்ளே ஸந்தேஹப்படா நின்றது –

அஸ்யாத் யஷ பரம வ்யோமத்ஸோ அங்க வேத யதி வா ந வேத -என்ற சுருதி
யாவன் ஒரு எம்பெருமான் இந்தப் பிரபஞ்சத்துக்கு சர்வேஸ்வரனாய்க் கொண்டு ஸ்ரீ பரமபதத்தில் வாழ்கிறானோ
அவன் தானும் தனது பெருமையை அறிந்தானோ அல்லது அறிந்திலனோ என்று உள்ளதே

தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை என்ற ஸ்ரீ அருளிச் செயல் போலவே –

ஸ்த்தாநே தத்-அப்படி சந்தேகிப்பது தகுமே-
ஏஷ-இந்த ஸ்ரீ பெரிய பெருமாள்
கலு தோஷ மலீம ஸாபி -தோஷங்களால் அழுக்கு ஏறின
மத் வாக்பி-எனது சொற்களைக் கொண்டு
ஐசம்-தனது பரந்த ஐஸ்வர்யத்துக்கு உரிய
அதி சாயநம் ஆ வ்ருணோதி –அதிசயத்தை மறைத்துக் கொள்கிறார்

—————————————-

யானை குளித்து வரும் பொழுது புழுதியை மேலே போட்டுக் கொள்ளுவது போலே
ஸ்ரீ ரெங்கன் எனது புன்சொற்களையும் போக்யமாகக் கொள்கிறான்

ஸ்வம் சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தை பாந்தம் மத் உக்தை மலிநீ கரோதி
ஸ்ரீ ரெங்க கம்ர கலபம் க ஏவ ஸ்நாத்வா அபி தூளீ ரசிகம் நிஷேத்தா –16-

ஸ்ரீ ரெங்க கம்ர–ஸ்ரீ ரெங்க திவ்யதேசத்தில் நித்ய வாசத்தில் விருப்பமுடைய ஸ்ரீ பெரிய பெருமாள்
சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தை –வடமொழி தென் மொழி வேத ஸ்ரீ ஸூக்திகளாலே
பாந்தம்-விளங்கா நிற்கிற
ஸ்வம் -தம்மை

மத் உக்தை-எனது உக்திகளினால்
மலிநீ கரோதி-மலினமாக்கிக் கொள்கிறார்
என்னுடைய இளைய புன் கவிதைகளால் தன்னை மாசு ஏறும்படி செய்து கொள்கிறானே-

ஸ்நாத்வா அபி –-ஸ்நாநம் பண்ணின பின்பும்
தூளீ ரசிகம் –புழுதி அளைவதில் ஆசை கொண்ட
கலபம்–யானையை

க ஏவ நிஷேத்தா-எவன் தான் தடை செய்ய வல்லான்

பால கஜம் போலே நிரங்குச ஸ்வ தந்த்ரன் செய்வன செய்து கொள்ளட்டும் –
நம்மால் விலக்கப் போகாதே —
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்றவாறு

—————————–

தமது குல பெருமையும் -திவ்ய தம்பதிகளால் -ஸ்வீ காரம் பெற்றதாலும் -இவ்வாறு ஸ்திதிக்கப் பண்ணிற்று-

கிந்து பிரபத்தி பல தாரித விஷ்ணு மாய மத் வம்சய ராஜ குல துர் லலிதம் கில ஏவம்
ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி சாஹசே அஸ்மின் –17-

கிந்து பிரபத்தி பல–ஆனாலும் பிரபத்தியின் மிடுக்காலே
தாரித விஷ்ணு மாய-தாண்டுவிக்கப்பட்ட எம்பெருமானுடைய மாயையை யுடையவர்களான
மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –

மத் வம்சய ராஜ குல துர் லலிதம்–எனது முன்னோர்களுடைய சிறந்த குலத்தினில் பிறந்ததனால் உண்டான செருக்கு
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடத்தும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு வம்ச பிறப்பால் வந்த செருக்கு
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ எம்பெருமானார் முதலான முன்னோர்களைக் கடாக்ஷித்துத் தம்மை க்ஷமிக்கக் கூடும்
என்ற தைர்யத்தால் என்றபடி

துர் லலிதம்-துஷ்ட சேஷ்டிதம் என்றவாறு
கில ஏவம்-இப்படி ஸ்தோத்ரத்தில் கை வைக்கும்படி யாயிற்று அன்றோ –

யத்வா-அல்லது
ஸ்ரீ ரெங்க ராஜ –ஸ்ரீ ரெங்க நாதன் என்ன
கமலா -ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்ன –
இவர்களுடைய
பத லாலி தத்வம்–திருவடிகளில் சீராட்டி வளர்க்கப் பெற்றமை –
புத்ர ஸ்வீகாரம் செய்து கொண்டு சீராட்டி வளர்த்ததால்
எனது மழலைச் சொற்கள் இனிதாக அவர்களுக்கு இருக்குமே -இதனால் உண்டான ப்ரேம அதிசயத்தாலோ

மம -எனக்கு உண்டான
ஸ்துதி சாஹசே அஸ்மின் –-இந்த ஸ்தோத்ரம் ஆகிற துணிந்த ஸாஹஸச் செயலிலே
அபராத்யதி-குற்றவாளி யாகின்றது –

————————————-

நாதஸ்ய ச ஸ்வ மஹிம அர்ணவ பாரத்ருஸ்வ
விஞ்ஞான வாக் விலஸிதம் ஸஹதே ந வேத
ஆபேஷிகம் யதி தத் அஸ்தி மாம் அபி தேந
ஸ்ரீ ரங்கிண ஸ்துதி விதவ் அஹம் அத்யகார்ஷம் -18- ஸ்துதிக்க அதிகாரம் பெற்றேன் என்கிறார்-

வேத ச நாதஸ்ய -வேதமும் ஸ்ரீ எம்பெருமானுக்கு

ஸ்வ மஹிம அர்ணவ பாரத்ருஸ்வ விஞ்ஞான வாக் விலஸிதம் ஸஹதே ந -தனது வைபவ கடலில் கரை கண்ட
ஞானம் இருப்பதாக சொல்ல மாட்டாமல் நிற்கிறது

ஆபேஷிகம் யதி தத்-அவனை விட இவன் சக்தன் என்னும்படியான சக்தி விசேஷம் அங்கு உண்டு என்னில்
தத் அஸ்தி மாம் அபி-அது எனக்கும் உண்டு

தேந ஸ்ரீ ரங்கிண –அதனால் ஸ்ரீ பெரிய பெருமாளை
ஸ்துதி விதவ் அஹம் அத்யகார்ஷம் -ஸ்தோத்ரம் செய்வதில் அடியேன் அதிகாரி ஆனேன் –
ஸ்துதிக்க அதிகாரம் பெற்றேன் என்கிறார்-

குறை அற பரி பூர்ணமாக ஸ்துதிக்க முடியாமை வேத புருஷனோடு என்னோடு வாசியற எல்லாருக்கும் ஒக்குமே
யத்வா ஸ்ரமாவதி–இத்யாதி ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது போலவே இங்கும் அருளிச் செய்கிறார் –

சக்தி அநு குணமாக ஸ்துதித்து சத்தை பெறலாமே –
அதனால் அவனுக்கு ஒரு தோஷமும் வராதே -என்றபடி

———————————-

மழை துளிகள் கடலில் விழுந்து ஸ்வரூபம் பெறுமா போலே வேதங்கள் ஸ்துதித்து ஸ்வரூபம் பெறுமே-
அதே போலே நானும் ஸ்துதிக்கிறேன்

அந் யத்ர அதத் குண யுக்தி பகவதி ந தத் உத்கர்ஷ ஸுவ்ர்யை பரேஷாம்
ஸ்துத் யத்வாத் யாவத் அர்த்தா பணிதி அபி ததா தஸ்ய நிஸ்ஸீமகத்வாத்
ஆம்நாயாநாம் அசீம் நாம் அபி ஹரி விபவே வர்ஷ பிந்தோ இவ அப்தவ்
சம்பந்தாத் ஸ்வாத்ம லாப நது கபளநத ஸ்தோது ஏவம் ந கிம் மே –19-

அந் யத்ர -எம்பெருமான் தவிர மற்ற வியக்திகளில் ஆகும்
அதத் குண யுக்திஸ் – ஸ்துதிக்கத் தக்கவன் இடத்தில் இல்லாத குணங்களை ஏறிட்டுச் சொல்வதாகிற ஸ்தோத்ரமாவது –
பகவதி –குணக் கடலான எம்பெருமான் இடத்தில் அது அசம்பாவிதம் –
ஏன் என்றால்

ந தத் உத்கர்ஷ ஸுவ்ர்யை பரேஷாம் ஸ்துத் யத்வாத்–அந்த எம்பெருமானுடைய பெருமைகளைக் களவு செய்து
மற்றையோரை ஸ்துதிக்க வேண்டி இருக்கையாலே

யாவத் அர்த்தா பணிதி அபி -பெருமைகள் உள்ள அளவும் சொல்லி முடிக்கையாகிற ஸ்தோத்ரமும்
ததா-எம்பெருமான் இடத்தில் அசம்பாவிதம் –
ஏன் என்றால்

தஸ்ய நிஸ்ஸீமகத்வாத்-எம்பெருமான் இடத்தில் அப்பெருமை எல்லை அற்றதாகையாலே

ஆகில் வேதங்கள் பகவத் குணங்களை எங்கனம் ஸ்துதித்தது என்னில்
அசீம் நாம்-அளவிறந்த
ஆம்நாயாநாம் அபி -வேதங்களும்
அபி ஹரி விபவே வர்ஷ பிந்தோ இவ அப்தவ் சம்பந்தாத் ஸ்வாத்ம லாப–மழைத் துளி கடலில் விழுந்து அதன் சம்பந்தத்தால்
தான் சத்தை பெறுவது போலே பகவத் வைபவம் சொல்வதில் அந்வயிப்பதனால் மாத்திரம் தான் நிறம் பெறும் அத்தனை அன்றி

நது கபளநத-பகவத் வைபவத்தை விளாக்கொலை கொள்வதனால் அன்று

ஸ்தோது ஏவம் ந கிம் மே –ஸ்தோத்ரம் பண்ணப் புகுந்த எனக்கும் இப்படி சம்பந்தத்தால் ஸ்வ ஆத்ம லாபம் ஆகாதோ –

எனது ஸ்வரூப லாபத்துக்காக ஏதோ சிலவற்றை ஸ்தோத்ரம் பண்ணப் புகுகிறேன் என்றவாறு –

———————

கீழ் எல்லாம் உபோத்காதம்
வழி அடையே பேசுகிறார் -இது முதல் ஐந்து ஸ்லோகங்களால் திருக் காவேரி வர்ணனம்

ஸ்ரீ வைஷ்ணவர்கள் எங்கு நீராடினாலும் இந்த ஐந்தையும் அனுசந்திப்பது நியமம் –

ஸ்ரீ கோயிலுக்குச் செல்லும் மார்க்கமே அர்ச்சிராதி –
ஸ்ரீ ரெங்க மந்திரமே ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ ரெங்க நாதனே ஸ்ரீ பர வாஸூ தேவன் என்ற
காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்த்ரம் ச வாஸூ தேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ஸ்ரீ விரஜைக்கு உள்ள அணைத்து குணங்களுக்கும் திருக் காவேரிக்கு குறைவற்று உள்ளன என்கிறார் இதில் –

லோக உஜ்ஜீவன காவேரியே விரஜா –தீர்த்த தமம்–திருவாராதன தீர்த்தமும் கொடுக்கும் –
இவனே பர வாஸூதேவன் கல்யாண சீர் வரிசைகளை அழகிய மணவாளனுக்கு கொணர்ந்து –
திருக் காவேரியை ஸ்துதிக்கிறார்

காவேரீம் அவகாஹிஷீய பகவன் போக அந்தராயீ பவத்
கர்ம கிலேச பல ஆசய பிரசமந உத்வேல அமல ஸ்ரோதசம்
ஜந்தோ சம்சரத அர்ச்சிராதி சரணி வ்யாசங்க பங்காய யா
லோகே அஸ்மின் விரஜா இவ வேல்லிதஜலா ஸ்ரீ ரெங்கம் ஆலிங்கதி–20-

பகவன் போக அந்தராயீ பவத்-எம்பெருமானுடைய அனுபவத்துக்கு இடையூறாய் இருக்கின்ற
கர்ம–புண்ய பாப ரூப கர்மங்கள் என்ன
கிலேச–அவித்யாதி கஷ்டங்கள் என்ன
பல -கர்ம பலன்கள் என்ன
ஆசய–வாசனை என்ன –
ஆகிய இவற்றை எல்லாம்
பிரசமந-போக்குகின்றதும்

உத்வேல-கரையை மீறி இருப்பதும்
அமல -நிர்மலமாக இருக்கும்
ஸ்ரோதசம்–பிரவாகத்தை யுடைத்தான
காவேரீம் அவகாஹிஷீய -காவேரியை குடைந்து ஆடக் கடவன் –

ஜந்தோ சம்சரத அர்ச்சிராதி சரணி வ்யாசங்க பங்காய யா-யாதொரு திருக் காவேரியானது சம்சாரியான பிராணிக்கு
அர்ச்சிராதி மார்க்கத்தில் அலைச்சல் படுவதை போக்குவிப்பதுக்காக

லோகே அஸ்மின் விரஜா இவ வேல்லிதஜலா ஸ்ரீ ரெங்கம் ஆலிங்கதி–இவ்வுலகில் அலைக்கப்பட்ட தீர்த்தத்தை யுடைய
விராஜா நதி போன்று திருவரங்கத்தை அணைத்துக் கொண்டு இரா நின்றதே

—————

கடல் நதிகளின் பதி -திருப்பாற்கடலில் வெளிப்பட்ட பிராட்டிக்கு தாய் அன்றோ இவள்
மருமகனான அழகிய மணவாளானுக்கு-சாமரங்கள் -பச்சைக் கற்பூரம் -சந்தன மரங்கள் -மாணிக்கங்கள் -முத்துக்கள் –
இவற்றை அலைகளாகிய கைகளால் ஏந்தி வர -அரங்கன் தொண்டில் ஈடுபட்ட காவேரியை
அனைவரும் நாடி வணங்கி நீராட வேண்டும்-

துக்த அப்தி ஜெநநோ ஜெநநீ அஹம் இயம் ஸ்ரீ ஏவ புத்ரீ வர
ஸ்ரீ ரெங்கேஸ்வர ஏதத் அர்ஹம் இஹ கிம் குர்யாம் இதி ஏவ ஆகுலா
சஞ்சத் சாமர சந்த்ர சந்தன மஹா மாணிக்யா முக்தா உத்கராந்
காவேரீ லஹரீ கரைஸ் விதததீ பர்யேதி சா சேவ்யதாம் —21-

துக்த அப்தி ஜெநநோ–திருப் பாற் கடலானது தந்தை
அஹம் ஜெநநீ -அக்கடலின் மனைவியாகிய நான் தாய்
இயம் ஸ்ரீ ஏவ புத்ரீ-ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகள்
வர ஸ்ரீ ரெங்கேஸ்வர–ஸ்ரீ அழகிய மணவாளன் மணவாளப் பிள்ளை

ஏதத் அர்ஹம் இஹ-இப்படி இருக்கையில் இந்த மகளுக்கும் மணவாளப் பிள்ளைக்கும் தகுதியாக
கிம் குர்யாம்–என்ன சிறப்பு செய்யக் கடவோம்
இதி காவேரி -என்று திருக் காவேரி யானவள்
ஏவ ஆகுலா சஞ்சத்-வியாகுலப் பட்டவள் போலே விளங்கா நின்றுள்ள

சாமர–சாமரங்கள் என்ன
சந்த்ர –பச்சைக் கற்பூரங்கள் என்ன
சந்தன -சந்தன மரங்கள் என்ன
மஹா மாணிக்யா -சிறந்த ரத்தினங்கள் என்ன
முக்தா உத்கராந்-முத்துக்கள் என்ன -இவற்றின் குவியல்களை

காவேரீ லஹரீ கரைஸ் –காவேரீ அலைகளாகிற கைகளினால்
விதததீ சதீ பர்யேதி-ஏந்திக் கொண்டு பெருகுகின்றது
சா சேவ்யதாம் —அப்படிப்பட்ட திருக் காவேரீ-சேவிக்கத் தக்கது –
ஜனங்களால் நீராடப்பட வேணும்

இன்னார் இனையார் என்று பாராமல் எல்லாரும் ஓக்க திருக் காவேரியைப் பற்றுங்கோள் என்று பர உபதேசம் –

தெளிவிலாக் கலங்கள் நீர் சூழ் திருவரங்கம்-கலங்கி பெருகுவதற்கு ஒரு ஹேதுவை உத்ப்ரேஷிக்கிறார்
தம் பெண்ணுக்கு புக்க இடமும் பிறந்த இடமும் சீரியதாக இருப்பதால் அதுக்குத் தக்கபடி
என்ன சிறப்பு செய்ய வல்லோம் என்ற கலக்கம் –

ஆளரியால் அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு
பொன்னி மலைப்பண்டம் அண்டத் திரை யுந்து -என்றும்

சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவேரி
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவேரி -என்றபடி

———————

தீர்த்த தமம் –நந்தவன போஷகம் –திருவீதிகளையும் நனைத்து -திரு மஞ்சனம் திரு ஆராதனம் தீர்த்தமும் கொடுத்து –
கைங்கர்யங்களில் ஈடுபட்டு உகந்து நுரைகளாகிற புன்னகை காட்டும் –
ஒரு க்ஷண ஸ்ரீ பாத சம்பந்தத்தால் பெருமை வாய்ந்தது என்று அஹங்கரித்து இருக்கும் கங்கையிலும் சீரியவள் அன்றோ காவேரி –
இப்படிப்பட்ட காவேரி நம் பாபங்களைப் போக்கட்டும்

தீர்த்தம் கந்ததி பாதி நந்தன தரூன் ரத்த்யா அங்கணாநி உஷதி
ஸ்நாநீய அர்ஹண பாநவாரி வஹதி ஸ்நாத புநீதே ஜனான்
ஸ்யாமம் வேதரஹ வ்ய நக்தி புவிநே பேநைர் ஹசந்தீ இவ தத்
கங்காம் விஷ்ணு பதீத்வ மாத்ரமுகராம் ஹேம ஆபகா ஹந்து அகம் –22-

ஹேம ஆபகா–பொன்னி என்ற திருக் காவேரி
தீர்த்தம் கந்ததி–தீர்த்தம் என்று பெயர் பெற்ற புண்ய ஜலங்களை பரிசுத்தம் ஆக்குகின்றது
துலாக் காவேரி மஹாத்ம்யத்தில் ஐப்பசி மாதத்தில் சகல புண்ய தீர்த்தங்களும் இங்கு அவகாஹித்து
பாபிஷ்ட ஜனங்கள் தீண்டியதால் உள்ள பாபங்களைப் போக்கிக் கொள்வதாக உண்டே

பாதி நந்தன தரூன் –திரு நந்தவனத்தில் உள்ள மரங்களைக் காப்பாற்றுகின்றது
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -ஸ்ரீ கோயிலைச் சூழ்ந்த சோலைகளை வளர்க்கின்றது –

ரத்த்யா அங்கணாநி உஷதி-திரு வீதிகளையும் நால் சந்திகளையும் நனைக்கின்றது –

ஸ்நாநீய அர்ஹண பாநவாரி வஹதி –திருமஞ்சனத்துக்கும் திரு ஆராதனத்துக்கும் அமுது செய்வதுக்கும்
யோக்கியமான தீர்த்தத்தை வஹித்து இரா நின்றது

ஸ்நாத புநீதே ஜனான்-நீராடும் ஜனங்களை ஸூத்தி செய்கின்றது –

ஸ்யாமம் வேதரஹ–நீல நிறத்ததாய் -வேதாந்த ரஹஸ்யமான ஸ்ரீ எம்பெருமானை
வ்ய நக்தி புவிநே-தனது மணல் குன்றிலே சேவை சாதிப்பிக்கின்றது –
வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்காகிய கரு மணியை கோமளத்தை தன் நடுவு பாடே சேவை சாதிக்கின்றதே –

தத்-ஆகையால்
கங்காம் விஷ்ணு பதீத்வ மாத்ரமுகராம் -ஸ்ரீ திருவிக்ரமன் திருவடியில் நின்றும் பிறந்தோம் என்கிற மாத்திரத்தாலே
அஹங்காரம் கொண்டு கர்ஜிக்கின்ற கங்கையை

பேநைர் ஹசந்தீ இவ -நுரைகளினால் சிரிப்பது போன்று இரா நின்ற திருக் காவேரி ஆறானது

ஹந்து அகம் –நமது பாபங்களைப் போக்கடிக்கக் கடவது –

கங்கையில் புனிதமாய் காவேரி -பாசுர விவரணம்
தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருடி நித்ய சம்பந்தம் உண்டே

————————-

கர்ம பலனாக ஸ்தாவரங்கள் –பிராயச்சித்தம் செய்யத் தகாதவை –
அவற்றுக்கும் தாய் பாலூட்டுமா போலே நீர் மூலம் மகிழ்ச்சி யூட்டும்-
நம்பெருமாள் கருணை போலே எங்கும் சூழ்ந்து இருக்கும் -குளிர்ந்த இனிமையான
காவேரி நம்மை தூய்மைப்படுத்தட்டும் –

அ கணித குண அவத்யம் சர்வம் ஸ்திரத்ரஸம் அப்ரிதிக்ரியம்
அபி பயஸ் பூரைஸ் ஆப்யா யந்தீ அநு ஜாக்ரதீ
ப்ரவஹதி ஜகத் தாத்ரீ பூத்வா இவ ரங்க பதே தயா
சிசிர மதுர அகாதா சா ந புநாது மருத் வ்ருதா–23-

அ கணித குண அவத்யம்-குண தோஷங்களை ஆராயாத படி யதா ததா
சர்வம் ஸ்திரத்ரஸம் அப்ரிதிக்ரியம்-பிராயச்சித்த யோக்யதை கூட இல்லாத ஸ்தாவர ஜங்கமப் பொருள்களை எல்லாம்
காயிக பாப பலன்களை அனுபவிக்க கல்லாகவும் மரமாகவும் ஸ்தாவரமாகவும்

அபி பயஸ் பூரைஸ் ஆப்யா யந்தீ அநு ஜாக்ரதீ-ஜல ப்ரவாஹங்களாலே திருப்தி படுத்தா நின்று கொண்டும்
கூடவே விழித்து இரா நின்று கொண்டும்

ப்ரவஹதி ஜகத் தாத்ரீ பூத்வா இவ ரங்கபதே தயா-ஸ்ரீ அழகிய மணவாளனுடைய திரு வருள் போலே
உலகுக்கு எல்லாம் உபமாதாவாகி வெள்ளம் இடா நின்றதோ

சா -அப்படிப்பட்ட
சிசிர மதுர அகாதா ந புநாது மருத் வ்ருதா–குளிர்ந்தும் மதுரமாயும் ஆழமாயும் உள்ள திருக் காவேரியானது
நம்மைப் பரிசுத்தப் படுத்துக

மருத் வ்ருதா-காற்று அடிக்க அடிக்க காவேரி நீர் பெருக்கு அபி விருத்தி அடையும் என்பதால்
இந்த பெயர் திருக் காவேரிக்கு –

———————————-

சோலைகளில் மெதுவாக மோத–மலர்க் கொத்துக்கள் அசைந்தாட -வண்டுகள் இனிமையாக உறங்க –
மகரந்தம் பெருகும்படி செய்கிறது
கநக நாம்நீ-பொன்னி -நம் பாபங்களை கழுவட்டும்

தரள தனு தரங்கை மந்தம் ஆந்தோளியமாந
ஸ்வ தட விட பிராஜீ மஞ்ஜரீ ஸூப்த ப்ருங்கா
ஷிபது கநக நாம்நீ நிம்நகா நாளிகேர
க்ரமு கஜ மகரந்தை மாம்ச லாபா மதம்ஹ–24-

தரள தனு தரங்கை -சஞ்சலமாயும் சிறிதாயும் இருக்கிற அலைகளால்

மந்தம் ஆந்தோளியமாந-மெல்ல அலைக்கப்படா நின்ற

ஸ்வ தட விட பிராஜீ-தன் கரையில் உள்ள சோலைகளிலுடைய

மஞ்ஜரீ ஸூப்த ப்ருங்கா-பூக் கொத்துக்களில் உறங்குகின்ற வண்டுகளை யுடையதும்

நாளிகேர க்ரமு கஜ மகரந்தை -தெங்குகளில் நின்றும் பாக்குகளில் நின்றும் உண்டான மகரந்தங்களினால்

மாம்ச லாபா-நிரம்பிய நீரை யுடைத்தான

கநக நாம்நீ-பொன்னி என்கிற
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் -திருமங்கை ஆழ்வார்
ஹேமாபகா -என்றதும் இது பற்றியே –

நிம்நகா-காவேரி நதியானது

ஷிபது மத் அம்ஹ–என்னுடைய பாபத்தைத் தொலைத்திடுக –

——————————-

வாழை -மகிழ -நாவல் -பாக்கு -மரங்களின் கழுத்து அளவு -பார்க்கும் பொழுது மேகங்கள் தாக சாந்திக்காக
வந்து நிற்பது போலும் இருக்குமே மரங்கள்
சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கம் நம்மை ரக்ஷிக்கட்டும்

திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத் திருவரங்கம் -என்றபடி
ஆராமம் சூழ்ந்த திருவரங்கத்தை
மேல் இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

கதள வகுள ஜம்பூ பூக மாகந்த கண்ட்ட
த்வயஸ சரஸ நீராம் அந்தரா ஸஹ்ய கன்யாம்
பிரபல ஜல பிபாசா லம்பமநா அம்புத ஒக
பிரமகர தரு பிருந்தம் வந்த்யதாம் அந்த ரீபம் –25-

கதள–வாழை மரங்கள் என்ன
வகுள -மகிழ் மரங்கள் என்ன
ஜம்பூ -நாவல் மரங்கள் என்ன
பூக -பாக்கு மரங்கள் என்ன
மாகந்த–தேன் மா மரங்கள் என்ன

கண்ட்ட–த்வயஸ–கழுத்து அளவாக உள்ளதும்

சரஸ நீராம்-மாதுர்யத்தோடும் கூடினதுமான தீர்த்தத்தை யுடைத்தான

அந்தரா ஸஹ்ய கன்யாம்–திருக் காவேரியின் நடுவே

பிரபல ஜல பிபாசா-அதிகமான தாகத்தினால்

லம்பமநா அம்புத ஒக–கீழே இறங்கி இருக்கின்ற மேக சமூகத்தினுடைய

பிரமகர-பிரமத்தை உண்டு பண்ணா நின்ற

மேல் பாகம் மட்டும் கருப்பாக தோன்றுவதால் மேக சமூகத்துக்கு ஒப்பு
வந்த விடாய் கெட நீர் பருகும் மேகங்களுக்கு ஒப்பு என்றவாறு

தரு பிருந்தம் வந்த்யதாம் அந்த ரீபம் –-சோலைகளை யுடைத்தான தீவானது வணங்கப் படட்டும் –

இத்தால் ஸ்ரீ கோயிலினுடைய
நிரதிசய போக்யதை சொல்லிற்று ஆயிற்று

—————-

முக்தாத்மா செல்லும் பரம பதம் போலே மணல் குன்று -முக்குணங்கள் அற்றது –
எப்போதும் கண்டு மகிழும்படி இருக்க வேண்டும் –

யத் விஷ்ணோ பதம் அதம பரோ ரஜஸ் அக்ர்யம்
முக்தா நாம் அநு விரஜம் விதீப்ரம் ஆஹு
தத் புண்யம் புளிநம் இதந்த்யா அந்ய மத்யே
காவேரி ஸ்ப்புரதி தத் ஈஷிஷீய நித்யம் –26-

அநு விரஜம்-விரஜா சமீபத்தில்
யத் விஷ்ணோ பதம்–யாதொரு ஸ்ரீ பரம பதத்தை

அதம பரோ ரஜஸ் அக்ர்யம்-தமோ ரஜோ குணங்கள் அற்றதும் ஸ்ரேஷ்டமுமான
முக்தா நாம் விதீப்ரம் ஆஹு–முக்தர்களுக்கு விளங்குவதாக வைதிகர்கள் சொல்லுகிறார்களோ

தத் புண்யம் புளிநம்-அந்த புனிதமான விரஜா நதியின் மணல் குன்றானது
இதந்த்யா அத்ய–இந்த சம்சார தசையிலும் இதம் என்று ப்ரத்யக்ஷமாகக் காட்டலாம் படி

மத்யே காவேரி ஸ்ப்புரதி–திருக் காவேரியின் நடுவே விளங்கா நின்றது

தத் ஈஷிஷீய நித்யம் –அப்படிப்பட்ட இவ்விடத்தை இடைவிடாமல் கண்டு கொண்டு இருக்கக் கடவேன்–

ஸ்ரீ கோயிலையே சதா பஸ்யந்தீ பண்ணக் கடவேன் –

————————–

சோலைகளின் வர்ணனை தொடக்கம் –

த்ரய்யந்த ப்ரஹதி மதீஷு வைஷ்ணவாநாம்
ப்ராப்யஸூ பிரசுர பவ ஸ்ரம அபஹாஸூ
காவேரீ பரிசரதாஸூ பாவநீஷு
ஸ்ரீ ரெங்க உபவன தடீ ஷூ வர்த்திஷீய –27-

த்ரய்யந்த ப்ரஹதி மதீஷு –உபய வேதாந்தங்கள் நிரந்தரமான அப்யாசங்களை யுடையவையாயும்

வைஷ்ணவாநாம்-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு

ப்ராப்யஸூ -புகலிடமாயும் –

கோயிலில் வாழும் வைஷ்ணவர்கள் -என்று
இங்கு வாழ்வதே வாழ்ச்சியாகக் கொள்ளுமவர்கள் அன்றோ

பிரசுர பவ ஸ்ரம அபஹாஸூ–பிரபலமான சம்சார தாபங்களை ஆற்றுமவையாயும்

வெறும் நதி மத்யத்தில் ஆழ்ந்தால் தேக தாபம் மட்டுமே தீரும் –
இங்கு ஆத்யாத்மீக ஆதி பவ்திக ஆதி தைவிக ரூப தாபத் த்ரயங்களும் போகுமே –

காவேரீ பரிசரதாஸூ–திருக் காவேரியின் அலைக் காற்று முதலியவற்றால் கிஞ்சித் கரிக்கப் பெற்றவையாயும்

பாவநீஷு–பரிசுத்தங்களாயும்

ஸ்ரீ ரெங்க உபவன தடீ ஷூ வர்த்திஷீய –இருக்கிற ஸ்ரீ கோயில் புறச் சோலைகளில் வர்த்திக்கக் கடவேன் –

பிரபன்னருக்கு ஸ்ரீ பரம பதம் போலே அன்றோ இங்குற்ற வாசம் –

———————

பெரிய மீன்கள் துள்ள -அவை மோதி இளநீர் பொழிய -அதுவே விளைநீராக வளரும்
பாக்கு பலா வாழை மரங்கள் சூழ்ந்து -கறுத்த இனிமையான சோலைகள்

ஸ்ப்புரித சபர தீர்யத் நாளிகேரீ குளுச்ச ப்ரஸ்ருமர
மது குல்யா வர்த்தித அநோக ஹாநி
ரதிம் அவிரதி ரங்க ஆராம் ரம்ய ஸ்த்தலாநி க்ரமுக
பனச மோஸா மேஸகாநி க்ரியாஸூ –28-

ஸ்ப்புரித சபர தீர்யத்–துள்ளிப் பாய்ந்த மீன்கள் பட்டு உடைந்த

நாளிகேரீ குளுச்ச–தென்னங்குலைகளில் நின்றும்

ப்ரஸ்ருமர மது குல்யா–பெருகின இளநீர் நிறைந்த வாய்க் கால்களினால்

வர்த்தித அநோக ஹாநி–போஷிக்கப் பட்ட மரங்களை யுடையனவும்

க்ரமுக-பாக்கு மரங்கள் என்ன
பனச-பலா மரங்கள் என்ன
மோஸா –வாழை மரங்கள் என்ன
ஆகிய இவற்றால்

மேஸகாநி-கறுத்து இருப்பவையுமான

ரங்க ஆராம் ரம்ய ஸ்த்தலாநி-ஸ்ரீ கோயிலைச் சூழ்ந்த ஆராமங்களின் அழகிய நிலங்கள்

க்ரியாஸூ –ரதிம் அவிரதி–இடைவீடு இன்றி மகிழ்ச்சியை செய்யக் கடவன –

————————

மூன்று ஸ்லோகங்களால் திருவரங்க வர்ணனை –
பரம பதம் அயோத்யா அபராஜிதை –போன்றதே
திருவரங்கம் காவேரியின் மணல் கரையில் வந்து நின்றது –

அதி பரம பதம் புரீம் அயோத்யாம் அம்ருத வ்ருதாம் அபராஜிதாம் உசந்தி
புளிநம் உபரி ரங்கராஜ தாநீ பிசித த்ருஸாம் அபி சா புரஸ் ஸகாஸ்தி–29-

அதி பரம பதம் –ஸ்ரீ பரம பதத்தில்

அம்ருத வ்ருதாம்-விராஜா நதியால் சூழப்பட்டதாய் –
அல்லது நித்ய முக்த ஸமூஹங்களால் பரி வருத்தமாய்
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதேநா வ்ருதாம் புரீம் -என்று சொல்லுகிறபடி –

புரீம் அயோத்யாம் அபராஜிதாம் உசந்தி–அயோத்யா என்றும் அபராஜிதா என்றும் பெயர் யுடைத்தாய்
தேவா நாம் பூர் அயோத்யா புரீம் ஹிரண்ய மயீம் ப்ரஹ்ம விவசா அபராஜிதா -என்று சொல்லுகிறபடி –
யாதொரு பட்டணத்தை உள்ளதாக வைதிகர்கள் சொல்லுகிறார்களோ

சா -அந்த திவ்விய நகரியானது

புளிநம் உபரி ரங்கராஜ தாநீ -திருக் காவேரி சைக்கதத்திலே ஸ்ரீ ரெங்க நகரியாகி

பிசித த்ருஸாம் அபி சா புரஸ் ஸகாஸ்தி–மாம்சக் கண்ணினர்களான நம் போல்வாருக்கும் கண் எதிரே விளங்குகின்றதே

இத்தால்
திரு அயோத்யையே ஸ்ரீ கோயிலாக திருவவதரித்துள்ளது என்றதாயிற்று –

———————

உயர்ந்த மாட மாளிகைகள் -ரத்தினங்கள் பாதிக்கப்பட்ட மேல் தளங்கள் –
உபய விபூதியையும் இணைக்கும் –
ஸ்ரீ ரெங்கராஜன் செங்கோல் கொண்டு ஆளும் நகரம்-

பவ பதம் அபி திவ்ய தாம கர்த்தும் தத் உபய தந்த்ரித ஹர்ம்ய மாலிகா இவ
பவந மணி தலை விஜ்ரும்ப மாணா ஜயதி தராம் இஹ ரெங்க ராஜ தாநீ –30-

பவ பதம் அபி–சம்சார மண்டலத்தையும்

திவ்ய தாம கர்த்தும் இவ -நித்ய விபூதியாக பண்ணுவதற்குப் போலே

தத் உபய தந்த்ரித–அந்த உபய விபூதிகளிலும் ஒருங்கே சம்பந்திக்கப் பெற்ற

ஹர்ம்ய மாலிகா –மாட மாளிகைகளை திரளாகக் கொண்டு

பவந மணி தலை –திரு மாளிகைகளின் -ரத்தினங்கள் இழைத்த மேல் தளங்களினால்

விஜ்ரும்ப மாணா –விருத்தி அடையா நிற்கிற

ஜயதி தராம் இஹ ரெங்க ராஜ தாநீ –ஸ்ரீ திருவரங்க மா நகர் இவ் விபூதியில் மிகவும் சீர்மை பெற்று விளங்கா நிற்கின்றது –

———————————–

மாளிகைகளில் மகர தோரணங்கள் –அவை கட்டப்பட்ட கொடிக் கம்பங்கள் கைகள் போலே —
ஸ்ரீ ரெங்கநாச்சியார் விளையாடி மகிழ –
ஸ்ரீ ரெங்கம் என்ற பெண் சந்திரனில் உள்ள மாய மானைப் பிடிக்கும் வலை போலே உள்ளன –
நம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய படி

மணி மகரருஸீ விதத்ய பாஸாந் விஸ்ரு மரகேது
கரைஸ் ம்ருகம் ஹிமாம்சோ
ஸ்ரீ ய இவ நவ கேளயே ஜிக்ருஷு
ஸூக யதி ரங்க புரீ சகாசதீ ந –31-

மணி மகரருஸீ விதத்ய பாஸாந்–ரத்ன மயங்களான மகர தோரணங்களின் காந்திகளை வலைக் கயிறாகப் பரப்பி

விஸ்ரு மரகேது கரைஸ்-மேலே பரவி இருக்கின்ற த்வஜங்கள் ஆகிற கைகளினால்

ம்ருகம் ஹிமாம்சோ–சந்திரனுடைய மானை

ஸ்ரீ ய இவ நவ கேளயே–ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய அபூர்வமான விளையாட்டுக்காக

ஜிக்ருஷு இவ–பிடிக்க விரும்பினது போலே

சகாசதீ–விளங்கா நின்றுள்ள

ஸூக யதி ரங்க புரீ ந –ஸ்ரீ திருவரங்க மா நகர் சப்தாதி பிரவணரான நம்மையும் மகிழ்விக்கின்றது –

———————

குமுதாதி கண நாதர்கள்–ஆயுதங்கள் பரிவாரங்கள் -வாகனங்கள் உடன்
ரக்ஷணத்தில் மும்முரமாக உள்ளனர் –

ஜன பத சரித் அந்தரீப புஷ்யத் புர பரி பாலந நித்ய ஜாக ரூகாந்
ப்ரஹரண பரிவார வாஹந ஆட்யாந் குமுத முகாந் கண நாயகாந் நமாமி –32-

ஜனபத சரித் அந்தரீப புஷ்யத்–ஜனங்களுக்கு வாசஸ் ஸ்தானமாய்க் கொண்டு காவேரீ த்வீபத்திலே வளர்கின்ற

புர பரிபாலந நித்ய ஜாக ரூகாந்–ஸ்ரீ ரெங்க நகரத்தைக் காப்பதில் இடைவிடாது நோக்கம் யுடையவர்களாயும்

ப்ரஹரண பரிவார வாஹந ஆட்யாந் –திவ்ய ஆயுதங்களோடும் திவ்ய பரிஜனங்களோடும் வாஹனங்களோடும் கூடினவர்களாயும் இருக்கிற

குமுத முகாந் கண நாயகாந் நமாமி –ஸ்ரீ குமுதன் முதலிய கண நாதர்களை வணங்குகிறேன்

குமுதன் -குமுதாஷன் -புண்டரீகன் -வாமனன் -சங்க கர்ணன் -சர்ப்ப நேத்ரன் -ஸூமுகன்- ஸூபிரதிஷ்டன் -முதலான
கணாதிபர்களை ஆயுதங்களோடும் பரிஜனங்களோடும் வணங்கும் முகத்தால்
அவர்கள் நியமனம் பெறுகிறார்

———————-

நித்யர் முக்தர் முமுஷுக்கள் அனைவரும் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம பிறவி ஏற்று
இங்கே கைங்கர்யம் செய்கிறார்கள்
அவர்களுக்கு நமஸ்காரங்கள்-

அஹ்ருத சஹஜ தாஸ்யா ஸூரயா ஸ்ரஸ்த பந்தா
விமல சரம தேஹா இதி அமீ ரங்க தாம
மஹித மனுஜ திர்யக் ஸ்த்தாவரத் வா சந்த
ஸூ நியதம் இதிஹ ஸ்ம ப்ராஹு ஏப்ய நம ஸ்தாத் –33-

அஹ்ருத சஹஜ தாஸ்யா –இயற்கையான சேஷத்வம் -கைங்கர்யம் -குன்றாத
ஸூரயா-நித்ய ஸூரிகளும்

ஸ்ரஸ்த பந்தா-சம்சார பந்தம் கழலப் பெற்ற முக்தரும்

விமல சரம தேஹா –பாபங்கள் எல்லாம் தொலைந்து இனி மேல் அடுத்த தேஹ பரிக்ரகம் இல்லை என்று
உறுதியாக இருக்கும் முமுஷுக்களும்

இதி அமீ–ஆகிய இவர்கள்

மஹித மனுஜ திர்யக் ஸ்த்தாவரத் வா சந்த–மானிடப் பிறவியையும் பசு பக்ஷி ஜங்கமப் பிறவியையும் ஸ்தாவரப் பிறவியையும்
விரும்பியவர்களாய்க் கொண்டு

ரங்க தாம–ஸ்ரீ திருவரங்கத்தை

ஸூ நியதம் ஸ்ரயந்தே –எப்போதும் பற்றி இருக்கிறார்கள்

இதிஹ ஸ்ம ப்ராஹு –என்று பவ்ராணிகர்கள் சொல்லி வைத்தார்கள்

ஏப்ய நம ஸ்தாத் –இப்படிப்பட்ட மனுஷ்ய ஜங்கம ஸ்தாவரங்களின் பொருட்டு நமஸ்காரம் ஆகுக –

இப்படி சொன்ன அவர்களுக்கு நமஸ்காரம் என்றுமாம் –

இதிஹ–ஐதிக்யம் என்ற சொல் இதனாலே பிறந்தது –

———————————

திரு மதிள்கள் பெரிய திருவடி சிறகுகளை விரித்து
ஸ்ரீ ரெங்கம் பெரிய கோயிலை மறைத்து ரக்ஷிப்பது போல் உள்ளது –
இந்த பெரிய கோயிலை நாம் பற்றுக் கொம்பாகக் கொள்வோம்–

ஸ்ரீ ரெங்க திவ்ய பவனம் புவி கோபுராணாம்
பிரகாரி தேந நிகரேண கருத்மதா இவ
பார்ஸ்வ பிரசாரித பதத்ர புடேந பக்த்யா
நாநாத நூபி உப கூடம் உபக்நயாம –34-

ஸ்ரீ ரெங்க திவ்ய பவனம் புவி பிரகாரி தேந -இரு பக்கங்களிலும் திரு மதிள்களைக் கொண்டு இருக்கிற

கோபுராணாம் நிகரேண -கோபுரங்களின் சமூகத்தினால்
சூழப் பட்டு இருப்பதைப் பார்த்தால்

பார்ஸ்வ பிரசாரித பதத்ர புடேந–இரண்டு பக்கங்களிலும் விரிக்கப் பட்ட சிறகுகளை யுடைய
கருத்மதா–ஸ்ரீ பெரிய திருவடியினால்

பக்த்யா புவி நாநாத நூபி–பக்தியோடு பூ லோகத்தில் பல வடிவுகளைக் கொண்டு

கீழ் ஸ்லோகத்தில் அருளிச் செய்ததற்கு ஒரு உதாஹரணம் அருளிச் செய்கிறார் இதில்

ஸ்ரீ கோபுரம் -ஸ்ரீ பெரிய திருவடி என்றும் –
திரு மதிள்கள் அவனது சிறகுகள் என்றும் –
ஸ்ரீ திருவரங்க செல்வனை பாலனம் செய்து அருளுகிறார்

உப கூடம் இவ ஸ்திதம்– மறைத்துக் காக்கப் பட்டுள்ள்ளது போன்று உள்ள

ஸ்ரீ ரெங்க திவ்ய பவனம் -ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலை

உபக்நயாம –பற்றுக்கோடாகக் கொள்கிறோம் –
நமக்கு ரக்ஷகமாகக் கொள்வோம் என்றபடி –

———————

ஏழு த்வீபங்கள் –ஏழு சமுத்திரங்கள் -மஹா மேரு இவற்றுடன் கூடிய
ஸ்ரீ பூமிப் பிராட்டியே இங்கே தரிசிக்க வந்தாள் போலும்
பிரகாரங்களே சமுத்திரங்கள் –
இணைக்கும் பகுதிகள் த்வீபங்கள் –
கோபுர மண்டபங்களே மேரு –

பிராகார மத்யே அஜிர மண்டபே உக்த்யா ச த்வீப ரத்நாகர ரத்ன சைலா
சர்வம் சஹா ரங்க விமாந சேவாம் ப்ராப்தா இவ தத் மந்திரம் ஆவி ரஸ்து–35-

யத்ர-யாதொரு ஸ்ரீ ரெங்க மந்திரத்தில்

பிராகார மத்யே அஜிர மண்டபே உக்த்யா –திரு மதிள்கள் -இடை கழி–திரு மண்டபங்கள் என்னும் வியாஜத்தினால்-

ச த்வீப ரத்நாகர ரத்ன சைலா-சப்த த்வீபங்களோடும் -சப்த சாகரங்களோடும்-மஹா மேருவுடனும் கூடின
திரு மதிள்களை சமுத்ரமாக உருவகம் செய்து இருப்பது நால் புறமும் சூழ்ந்து இருப்பதால் –

சர்வம் சஹா -ஸ்ரீ பூமிப் பிராட்டியானவள்

ரங்க விமாந சேவாம் ப்ராப்தா இவ–ஸ்ரீ ரெங்க விமான சேவையை அடைந்தாள் போலும்
தனது பரிவாரங்களுடன் சேவையைப் பெற்று இருக்கிறாள்

தத் மந்திரம் ஆவி ரஸ்து–அந்த ஸ்ரீ ரெங்க மந்த்ரம் கண் எதிரே காட்சி தருகின்றதே

————————-

ஜைனாதி பாஹ்யர்களுக்கு யமன் போலே
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வாதத்தால் ஜெயித்து
அவர்கள் விக்ரஹங்களையும்
வைதிகமாக மாற்றவே மதில்களையும் மண்டபங்களையும் அமைத்தார்

ஜித பாஹ்ய ஜின ஆதி மணி ப்ரதிமா அபி வைதிகயந் இவ ரங்க புரே
மணி மண்டப வப்ர கணாந் விதநே பர கால கவி ப்ரணமே மஹி தாந் —36-

பர கால கவி-ஸ்ரீ திருமங்கை மன்னன் –

ஜித பாஹ்ய ஜின ஆதி மணி ப்ரதிமா அபி-தம்மால் ஜெயிக்கப் பெற்ற வேத பாஹ்யரான
ஜைனர் முதலானவர்கள் ஸ்வர்ண விக்ரஹங்களையும்

மணி ப்ரதிமா -பஹு வசனம் பலவற்றை அபகரித்து திருப்பணியில் அந்வயிப்பித்தமை தோற்றும்
மணி சப்த பிரயோகம் ஸ்வர்ணத்துக்கும் உப லக்ஷணம்

வைதிகயந் இவ–வைதிகங்களாகச் செய்பவர் போன்று
திரு ஆழி திருச் சங்கு திரு மண் காப்பு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணங்கள் -இலச்சினை -இவற்றுக்கும் உண்டே

ரங்க புரே-ஸ்ரீ திரு வரங்க மா நகரில் –

மணி மண்டப வப்ர கணாந்–சிறந்த திரு மண்டபங்களையும் திரு மதிள்களையும்-

விதநே-நிர்மாணம் செய்தார்

ப்ரணமே மஹி தாந்–அந்த மண்டப பிரகாரங்களை வணங்கக் கடவோம் –

கர்த்ரு வைலக்ஷண்யமும் உண்டே இவற்றுக்கு என்றபடி –

—————————–

கோரைப் பற்களாலும் புருவ நெறிப்பாலும் அடியார் விரோதிகளை அச்சம் கொள்ளச் செய்கின்றனர்
தெற்கு வாசல் –பத்ரன் -ஸூபத்ரன்
வடக்கு வாசல் -தாத்ரு –விதாத்ரு –
மேற்கு வாசல் -ஜெயன் விஜயன்
கிழக்கு வாசல் -சண்டன் -ப்ர சண்டன்-

ஸ்மேர ஆநந அஷி கமலை நமத புநா நாந்
தம்ஷ்ரா கதா ப்ருகுடிபிர் த்விஷத துநாநாத்
சண்ட ப்ரசண்ட முகத ப்ரணமாமி ரங்க
த்வார ஆவளீஷு சதஸ்ருஷு அதிகார பாஜ –37–

ஸ்மேர ஆநந அஷி கமலை -விகசித்த தாமரை போன்ற முகங்களினாலும் கண்களினாலும்

நமத புநா நாந்–ஆஸ்ரிதர்களைப் புனிதமாக்குபவர்களும்

தம்ஷ்ரா கதா ப்ருகுடிபிர்- கோரைப்பற்கள் தடிகள் புருவ நெரிப்புக்கள் இவற்றால்

த்விஷத துநாநாத்–பகவத் பாகவத விரோதிகளை நடுங்கச் செய்பவர்களாயும் –

ரங்க த்வார ஆவளீஷு சதஸ்ருஷு –ஸ்ரீ கோயில் திருவாசல் நான்கிலும்
சண்ட ப்ரசண்ட முகத ப்ரணமாமி அதிகார பாஜ –திருவாசல் காக்கும் அதிகாரம் பெற்றவர்களாக சண்டன் பிரண்டன் முதலிய
த்வார பாலர்களை வணங்குகிறேன்

சண்ட பிரசாண்டர்சை சொல்வதால்
கீழ் வாசல் வழியாக உள்ளே புகுந்து
அடுத்த ஸ்லோகத்தில்
முந்துறத் தென்படும் ஆயிரம் கால் திரு மண்டப மங்களாசாசனம் –

———————————-

பரந்த திரு மா மணி மண்டபம் -ஆயிரம் கால் மண்டபத்தை அடைவேன் –

சர்வ ஆத்ம சாதாரண நாத கோஷ்ட்டி
பூரே அபி துஷ்பூர மஹாவகாசம்
ஆஸ்த்தாநம் ஆனந்த மயம் சஹஸ்ர
ஸ்தூணாதிநா ஆம் நாதம் அவாப்நவானி –38-

சர்வ ஆத்ம சாதாரண நாத கோஷ்ட்டி பூரே அபி –ஆத்மாக்கள் அனைவருக்கும் பொதுவான ஸ்ரீ ரெங்கநாதனுடைய
கோஷ்டியாலே நிரப்பப் பார்த்தாலும்

துஷ்பூர மஹாவகாசம்-நிரப்ப முடியாத மிகுந்த அவகாசம் உடையதும்

தேவா நாம் தாநவாநாஞ்ச சாமான்யம் அதி தைவதம் –
திருமால் அடியார்கள் அனைவரும் புகுந்தாலும் அவகாசம் மிக்கு இருக்குமே

இன்றும் பெரிய திரு நாள் உத்சவத்தில் எண் திசையில் இருந்தும் அடியவர் குழாங்கள் வந்து புகுந்தாலும் அவகாசம் மிக்கு
இருப்பதைக் கண் கூடாகப் பார்க்கிறோமே –

இங்கு திரு ஓலக்கத்தில் இருப்பது சர்வாதிகாரம் –
அதிக்ருதாதிகாரம் இன்றிக்கே –

சஹஸ்ர ஸ்தூணாதிநா ஆம் நாதம் -சஹஸ்ரஸ் தூணே என்கிற பதத்தை ஆதியிலே யுடைய உபநிஷத் வாக்கியத்தினால்
ஓதப்பட்டதும் -அங்குள்ள திரு மா மணி மண்டபமே –

சஹஸ்ர தூணே விததே த்ருட உக்ரே யத்ர தேவா நாம் ஆதி தேவ ஆஸ்தே -உபநிஷத் வாக்கியம்-
ஆயிரம் தூண்கள் உடையதும் –
விஸ்தாரமானதும் –
உறுதி யுடையதும் –
கண் கொண்டு பார்க்க முடியாததுமான
திரு மா மணி மண்டபத்தை தேவாதி தேவன் வீற்று இருக்கிறான் –

ஆஸ்த்தாநம் ஆனந்த மயம் அவாப்நவானி –ஆனந்தமே வடிவெடுத்ததான ஆயிரம் கால் மண்டபத்தை அடையக் கடவேன்

சின் மயம் -ஆனந்த பிரசுர மயம் -அன்றோ –

———————————-

அடுத்து இரண்டு ஸ்லோகங்களால் சந்த்ர புஷ்கரணி மங்களா சாசனம்
அடியவர் ஹ்ருதய தாமரையில் வீற்று இருந்த களைப்பு தீர
பிராட்டியுடன் சந்த்ர புஷ்கரணியில் ஜலக்ரீடை –
மலர்கள் குடை போலவும் -லீலைக்கும் -அலங்காரத்துக்கும் இங்குள்ளன –
அவன் களைப்பையும் தீர்க்க வல்லதான சந்த்ர புஷ்கரணியை அடைவோம்-

விஹரதி ஹரவ் லஷ்ம்யா லீலா ஆதபத்ர பரிஷ்க்ரியா
விநிமயவிதா ஸூநா ஸூநிக்ரியா சபல உத்பலாம்
அத முனி மந பத்மேஷு அப்ஜா ஸஹாய விஹாரஜ
ஸ்ரமஹர தடீம் யாம தாம் ஜந்தவீம் அரவிந்திநீம் –39-

விஹரதி சதி ஹரவ் லஷ்ம்யா ஸஹ–ஸ்ரீ ரெங்கராஜன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருடன் ஜலக்ரீடை பண்ணும் அளவில்

லீலா ஆதபத்ர-லீலார்த்தமாக குடையாக இருப்பதனாலும்

பரிஷ்க்ரியா–கர்ண பூஷணம் முதலான அலங்காரங்களாக இருப்பதனாலும்

விநிமயவிதா-ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்வதற்கு உறுப்பாய் இருப்பதனாலும்

ஸூநா ஸூநிக்ரியா-புஷ்ப யுத்தம் பண்ண உறுப்பாய் இருப்பதனாலும்

சபல உத்பலாம்-சாபல்யம் அடைந்த நெய்தல் மலர்களை யுடைத்தாய்

அத-அன்றியும்

முனி மந பத்மேஷு –மஹா ரிஷிகளின் -ஸ்ரீ பரங்குசாதி திவ்ய ஸூரிகளின் -ஹிருதய புண்டரீகங்களில்-

அப்ஜா ஸஹாய விஹாரஜ–ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூடி விளையாடிதானால் உண்ட விடாயை

ஸ்ரமஹர தடீம்–தீர்க்க வல்ல கரையை யுடைத்தான

யாம தாம் ஜந்தவீம் அரவிந்திநீம் –சந்த்ர புஷ்கரணியை அடைகிறோம் –

சந்திரனின் தோஷத்தைப் போக்கி அருளினது போலே நம் தாப த்ரயங்கள் தீரப் பெறுவோம் –

———————————

சந்திரன் ஷயம் நீங்கப் பெற்றது போலே
நாமும் தாபத்ரய வேதனையைப் போக்கி கொள்ள நீராடுவோம்-

தாப த்ரயீம் ஜந்தவ புஷ்கரண்யாம் நிமஜ்ஜ்ய நிர்வாபயிதாஸ்மி
அப்யாஸத அபாம் அகமர்ஷ்ணீனாம் சந்த்ரஸ் ஸூதா தீதிதிதாம் அவாப –40-

தாப த்ரயீம் ஜந்தவ புஷ்கரண்யாம் –தாப த்ரயத்தை சந்த்ர புஷ்கரணியில்

நிமஜ்ஜ்ய நிர்வாபயிதாஸ்மி-குடைந்து நீராடி தாபத்தைத் தணித்துக் கொள்வேன்

அப்யாஸத அபாம் அகமர்ஷ்ணீனாம்–பாப ஹரமான தீர்த்தத்தினுடைய பரிசய அதிசயத்தினாலே

சந்த்ரஸ் ஸூதா தீதிதிதாம் அவாப –-சந்திரன் அம்ருத கிரணனாகை அடைந்தானோ –

——————–

கிழக்கு கரையில் ஆழ்வார்கள் சேவை பெறுவோம்

பூர்வேண தாம் தத்வத் உதார நிம்ன பிரசன்ன சீத ஆசய மக்ந நாதா
பராங்குச ஆத்யா ப்ரதமே புமாம்ச நிஷே திவாம்ச தச மாம் தயேரந்–41-

பூர்வேண தாம்–அந்த சந்த்ர புஷ்கரணிக்கு கிழக்கே

நிஷே திவாம்ச-எழுந்து அருளி இருப்பவர்களாய்

தத்வத்-அந்த புஷ்கரணியைப் போலவே

உதார நிம்ன பிரசன்ன சீத ஆசய மக்ந நாதா–உதாரமும் கம்பீரமும் தெளிந்ததும் குளிர்ந்ததுமான ஹ்ருதயத்தில்
அமர்ந்த எம்பெருமானை யுடையவர்களாய்

ஆசயம் என்று உட் புறம்–
ஆழ்வார்கள் பக்ஷத்தில் அவர்கள் ஹிருதயம் –
சந்த்ர புஷ்கரணி பக்ஷத்தில் உள் நிலம்
நான்கு விசேஷணங்கள் –

அவப்ருத ஸ்நானம் கண்டு அருளுவதால் ஆசய மக்நநாதத்வம் சந்த்ர புஷ்கரணிக்கும் உண்டே

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளன் என்றும்

திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் -என்றும்

உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்தக்கம் -என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ –

பராங்குச ஆத்யா ப்ரதமே புமாம்ச தச மாம் தயேரந்–ஸ்ரீ நம்மாழ்வார் முதலான ஆழ்வார்கள் பதின்மரும்
அடியேன் மீது கிருபை பண்ணக் கடவர்கள்

பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கக் கடவர்கள் –

—————————————–

அடுத்த நான்கு ஸ்லோகங்கள் ஸ்ரீ ரெங்க விமான அனுபவம் –
பகவத் சக்தி -அதன் மேல் ப்ரக்ருதி மண்டலம் —
கூர்மம் -ஆதிசேஷன் -படங்கள் மேல் பூமி -அதன் மேல் சமுத்திரம் -அதன் மேல் எட்டு தள தாமரை –
அதன் மேல் ஸ்ரீ ரெங்க விமானம் -ஸ்துதிப்போம்–

ஆதார ஸக்திம் உபரி ப்ரக்ருதிம் பரேண தாம் கூர்மம் அத்ர பணிநம் ப்ருத்வீம் ப்பணாஸூ
ப்ருத்த்யாம் பயோதிம் அதிதத் நளிநம் நிதாய ஸ்ரீ ரெங்க தாம ஸூநிவிஷ்டம் அபிஷ்டவானி -42-

ஆதார ஸக்திம் உபரி–ஆதார சக்தியின் மீது

ப்ரக்ருதிம் நிதாய-ப்ரக்ருதி மண்டலத்தை வைத்து

பரேண தாம்-அந்த பிரகிருதியின் மீது

கூர்மம் நிதாய-கூர்மத்தை வைத்து

அத்ர பணிநம் நிதாய -அந்த கூர்மத்தின் மீது ஆதி சேஷனை வைத்து

ப்ருத்வீம் ப்பணாஸூ நிதாய -அந்த ஆதி சேஷனுடைய படங்களின் மீது பூமியை வைத்து

ப்ருத்த்யாம் பயோதிம் நிதாய-பூமியின் மீது சமுத்ரங்களை வைத்து

அதிதத் நளிநம் நிதாய-அதன் மேல் அஷ்டதள பத்மத்தை வைத்து

ஸ்ரீ ரெங்க தாம ஸூநிவிஷ்டம் அபிஷ்டவானி -அதன் மீது ஸூபிரதிஷ்டமாய் இருக்கும் ஸ்ரீ ரெங்க விமானத்தை ஸ்துதிக்க கடவேன் –

சகலத்தையும் தரிக்க வல்ல ஆதார சக்தி அவனுக்கு உண்டே –

ஸ்ரீ உடையவர் நித்ய கிரந்தத்தில்
ஸ்ரீ பீட அர்ச்சனை -ஓம் ஆதார சக்த்யை நம– ஓம் பிரகிருதி நம -என்று தொடங்கி
அருளிச் செய்தவை அனுசந்தேயம் –

——————————–

பரேண நாகம் புரி ஹேம மய்யாம் ய ப்ரஹ்ம கோச அஸ்தி அபராஜிதா ஆக்க்ய
ஸ்ரீ ரெங்க நாம்நா தம் அபவ்ருஷேயம் விமான ராஜம் புவி பாவயானி –43-

பரேண நாகம்-ஸ்வர்க்க லோகத்துக்கு மேம்பட்டதாய் –
பரேண நாகம் நிஹிதம் குஹாயம் -தைத்ரியம்

புரி ஹேம மய்யாம் ய ப்ரஹ்ம கோச அஸ்தி அபராஜிதா ஆக்க்ய–பொன்னுலகு எனப்படும் -ஹிரண்ய மயமான பட்டணத்தில்
யாதொரு அபராஜிதா என்ற திரு நாமமுடைய ஸ்ரீ பர ப்ரஹ்ம ஸ்தானமானது இருக்கின்றதோ

புரம் ஹிரண்மயீம் ப்ரஹ்ம விவேச அபராஜிதா –தைத்ரியம்

ப்ரஹ்மண கோசோசி மேதயா அபிஹீத -சுருதி

பிரணவமே ப்ரஹ்ம கோசம் எனப்படும் -ஸ்ரீ ரெங்க விமானம் ப்ரணவாகார விமானம் தானே –

ஸ்ரீ ரெங்க நாம்நா தம் அபவ்ருஷேயம் விமான ராஜம் புவி பாவயானி –மனிதரால் செய்யப்படாத -அந்த சிறந்த விமானத்தை
இந் நிலத்திலே ஸ்ரீ ரெங்க விமானம் என்னும் திரு நாமத்தோடு திரு வவதரித்ததாக பாவிக்கக் கடவேன்

திரு நாமம் மாத்ர பேதமே ஒழிய வஸ்து பேதம் இல்லை என்றவாறு

——————————

வேதங்கள் போலவே ஸ்ரீ ரெங்க விமானமும் – அபவ்ருஷேயம்–மோக்ஷ ப்ரதம்–
ஸ்ரீ ரெங்கனையே காட்டிக் கொடுக்கும் -இத்தையே புகலிடமாகக் கொள்வோம்-

அநாதி ஆம்நாதத்வாத் புருஷ ரஸநா தோஷ ரஹிதம்
ஜனே தாம்ஸ்தாந் காமாந் விததத் அபி சாயுஜ்ய ஹ்ருதயம்
அசந்தேஹ அத்யாஸம் பகவத் உப லம்ப ஸ்த்தலம் அமீ
ப்ரதீம ஸ்ரீ ரெங்கம் சுருதி சத சமாநருத்தி சரணம் –44-

அநாதி ஆம்நாதத்வாத் புருஷ ரஸநா தோஷ ரஹிதம்-ஸ்வயம் வ்யக்தமாய் ஓதப்பட்டு இருப்பதால்
மனிதர்களால் நிர்மாணம் செய்தால் வரக்கூடிய தோஷம் ஒன்றும் இல்லாததாய்

ஜனே தாம்ஸ்தாந் காமாந் விததத் அபி–ஜனங்கள் இடத்திலே பலவகைப்பட்ட ஆசைகளை உண்டு பண்ணா நின்றாலும்
அல்லது –
பிரஜா காம பசு காம அன்ன காம ஸ்வர்க்க காம இத்யாதி -பலவகைப்பட்ட புருஷார்த்தங்களைக் கொடுப்பதாய் இருந்தாலும் –

வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு பிரதி ஒளஷதம் இடுமா போலே
எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் இவனும் ருசிக்கு ஈடாக
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டும் அன்றோ

ஆஸ்திக்ய விவேகம் –
அந்ய சேஷத்வ –
ஸ்வ ஸ்வா தந்தர்ய -நிவ்ருத்தி
பரதந்தர்யங்களை உண்டாக்கின வழி –

சாயுஜ்ய ஹ்ருதயம்–மோக்ஷத்திலே கருத்தை யுடையதும்

அசந்தேஹ அத்யாஸம் பகவத் உப லம்ப ஸ்த்தலம்–சம்சயம் விபர்யயம் அற்றதான-எம்பெருமான் விளங்கும் இடமாய் இருப்பதான
அத்யாசமாவது ஆரோபம் -விபர்யயம் என்று பர்யவசிக்கும்-வேதம் எம்பருமானுக்கு உறைவிடமாக இல்லாது இருந்தால்
அதில் அவன் நாம் இருப்பதாக நான் கிரஹிப்பது அத்யாசமாகும் -அப்படிக்கு இல்லை என்றபடி
அதனாலேயே

ஸ்ரீ ரெங்கம் சுருதி சத சமாநருத்தி –அநேக வேதங்களோடு ஒத்த அதிசயத்தை யுடைய ஸ்ரீ ரெங்க விமானத்தை

அமீ சரணம் ப்ரதீம–இவ்வடியோங்கள் புகலிடமாக விஸ்வசிக்கிறோம்

———————-

ஸ்ரீ ரெங்க விமானம் -ஆதிசேஷன் ஸ்வரூபம் -வெண்ணிறம் –
ஆயினும் மரகத அழகிய மணவாளன் உள்ளே இருப்பதால்
கடல் நீர் முழுவதும் பருகிய கறுத்த மேகம் போன்று உள்ளது –
கண்களுக்கு குளிர்ந்து மயிர்க் கூச்சல் எடுக்க வைக்கும்-

அபி பணி பதி பாவாத் சுப்ரம் அந்த சயாளோ மரகத ஸூகுமாரை ரங்க பர்த்து மயூகை
சகல ஜலதி பாந ஸ்யாம ஜீமுத ஜைத்ரம் புளக யதி விமானம் பாவநம் லோசநேந–45-

அபி பணிபதி பாவாத் சுப்ரம் அந்த சயாளோ -ரங்க பர்த்து–இந்த விமானத்தின் ஸ்வரூபம்
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்று அனைத்து கைங்கர்யங்களையும் செய்து கொண்டு இருக்கும்
திரு அநந்த ஆழ்வானாகவே இருக்கையினாலே –
வெண்ணிறமாய் இருந்தாலும்
தன்னுள்ளே சயனித்து இரா நின்ற அழகிய மணவாளனுடைய

மரகத ஸூ குமாரை மயூகை–மரகத மணியின் ஒளி போன்று அழகிய காந்திகளாலே

சகல ஜலதி பாந ஸ்யாம ஜீமுத ஜைத்ரம்–கடல் நீர் முழுவதையும் குடித்து அதனால் கறுத்து இரா நின்ற மேகத்தை வென்று
வீறு பெற்று இரா நின்ற

புளக யதி விமானம் பாவநம் லோசநேந–பரம பவித்ரமான ஸ்ரீ ரெங்க திவ்ய விமானமாவது நம்முடைய கண்களை
மயிர்க் கூச்சு எறியப் பண்ணுகின்றது

கீழே ஸ்ரீ ரெங்க விமான உபாய பாவ அனுபவம் –

இதில் அதன் போக்யதா அதிசய அனுபவம்

ஆஸ்ரிதற்கு இஷ்ட பிரதமாயும்
சேவிப்பவருக்கு அதிசயத்தை விளைவிப்பதாயும் இருக்கிறது என்றதாயிற்று –

————————

மேட்டு அழகிய சிங்கர் -அனுபவம்
இதிலும்
அடுத்தும் –

வ்யாபி ரூபம் அபி கோஷ்பத யித்வா பக்த வத்ஸல தயா உஜ்ஜீத வேலம்
தத் த்விஷந்த ரூப ந்ரூ கேசரி ரூபம் கோபுர உபரி விஜ்ரும்பிதம் ஈடே –46-

வ்யாபி ரூபம் அபி–மிகப் பெரியதான வடிவையும் –
மஹா விஷ்ணும் என்றும் திவிஸ் ப்ருசத் காயம்-என்றும்
சொல்லப்படும் பெரிய திவ்ய ரூபம் அன்றோ –

கோஷ்பத யித்வா–சிறியதாக்கிக் கொண்டு –
கோஷ் பதம்–மாட்டின் குளம்பு – போல் ஆக்கி

கோபுர உபரி விஜ்ரும்பிதம்–கோபுரத்தின் மீது விளங்கா நின்றுள்ளதும்

பக்த வத்ஸல தயா உஜ்ஜீத வேலம்-பக்தனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கல் உள்ள வாத்சல்யத்தினால் வரம்பை மீறி
திடீர் என்று விலக்ஷணமான திவ்ய ரூபத்துடன் திரு அவதரித்ததும்

கர்ப்ப வாசம் பண்ணாமல் –
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய பொறுப்பிலனாகி தூண் புடைப்பை –

அங்கு அப்போதே அவன் வீயத் தோன்றிய

தத் -பரம விலக்ஷணமுமான

த்விஷந்த ரூப ந்ரூ கேசரி ரூபம் ஈடே –சத்ருவான ஹிரண்யனை தொலைக்க வல்ல ஸ்ரீ நரசிம்ம
திருக் கோலத்தை ஸ்துதிக்கிறேன்

ஸமஸ்த பதமாக்கி ப்ரஹ்லாதனுக்கு சத்ரு என்றுமாம்

——————————

அஹம் அலம் அவலம்ப சீததாம் இதி அஜஸ்ரம் நிவஸத் உபரிபாகே கோபுரம் ரங்க தாம்ந
க்வசந ந்ரு பரிபாடீ வாசிதம் க்வாபி ஸிம்ஹ க்ரம ஸூரபிதம் ஏகம் ஜ்யோதி அக்ரே ஸகாஸ்தி –47-

அஹம் அலம் அவலம்ப சீததாம் இதி–சம்சாரத்தில் துளங்குகின்றவர்களுக்கு நானே போதுமான கைப் பிடிக்கும்
துணைவன் என்று தெரிவிப்பது போன்று –

அஜஸ்ரம் நிவஸத் உபரி பாகே கோபுரம் ரங்க தாம்ந-ஸ்ரீ ரெங்க மந்திரத்தினுடைய கோபுரத்தின் மேல் புறத்தில் எப்போதும் வசிப்பதும்

க்வசந ந்ரு பரிபாடீ வாசிதம்–கழுத்துக்குக் கீழ் பட்டதான ஒரு பக்கத்தில் மனுஷ்ய வடிவோடு பொலிந்து இருப்பதும்

க்வாபி ஸிம்ஹ க்ரம ஸூரபிதம்-கழுத்துக்கு மேல் பட்ட ஒரு பாகத்தில் சிங்க வடிவோடு பொலிந்து இருப்பதான

வாசிதம் -ஸூர பிதம்–என்றது
சர்வ கந்த -பரிமள பிரசுரமாய் இருப்பது பற்றியே –

ஏகம் ஜ்யோதி அக்ரே ஸகாஸ்தி –-ஒரு பரஞ்சோதி கண் எதிரே விளங்கா நின்றது –

மற்ற எம்பெருமான்களைப் போலே கீழ் நிலத்தில் இல்லாமல்
மேட்டு நிலத்தில் –
ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று துலங்கும் சம்சாரிகளுக்கு நானே கைப்பிடித்து உய்விக்க வல்லேன் என்று
சகலரும் காணும் படி நர கேசரி திவ்ய ரூபத்தைக் காட்டி அருளுகிறார் ஸ்ரீ மேட்டு அழகிய சிங்கப் பெருமாள் –

————————

பூர்வாச்சார்யர்களை அடியேனை கடாக்ஷித்து கைங்கர்யத்துக்கு ஏற்ற பாத்திரமாக ஆக்கி அருளினார்கள் –
அவர்கள் திருவடிகளை சரணமாகப் பற்றி வலம் வருவோம் –

சம்சோத்ய பாவந மநோ ஹர த்ருஷ்ட்டி பாதை தேவாய மாம் அபி நிவேதயதாம் குரூணாம்
சவ்ய உத்தரே பகவதஸ் அஸ்ய கடாக்ஷ வீஷா பங்க்திம் பிரபத்ய பரித பரித பவேயம் —48-

மாம் அபி–நீசனான அடியேனையும்

சம்சோத்ய பாவந மநோ ஹர த்ருஷ்ட்டி பாதை -பரி சுத்தமான அழகிய கடாக்ஷங்களினால் பரிசுத்தனாக்கி

தேவாய நிவேதயதாம் -எம்பெருமானுக்கு உரியனாம் படி செய்து அருள் செய்கின்றவர்களும்

சவ்ய உத்தரே பகவதஸ் அஸ்ய சதாம் –இந்த எம்பெருமானுடைய இடதான வட புறத்திலே எழுந்து அருளி இருப்பவர்களுமான

குரூணாம்–ஆச்சார்யர்களுடைய

கடாக்ஷ வீஷா பங்க்திம் பிரபத்ய பரித பரித பவேயம் —திருக் கண் நோக்கங்களைத் தஞ்சமாகப் பற்றி
அவர்களைப் பிரதக்ஷிணம் செய்யக் கடவேன்–

ஸ்ரீ உடையவர் ஸ்ரீ நித்ய கிரந்தத்தில்
யோக பீடஸ்ய பச்சிம உத்தர திக் பாகே ஓம் அஸ்மாத் குருப்யோ நம இதி குரூன் கந்த புஷ்ப தூப தீபைஸ் அப்யர்ச்சிய
ப்ரணம்ய அநு ஞாப்ய பகவத் யாகமாரபேத–என்றத்தை அநு சரித்து இந்த ஸ்லோகம் –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து

——————————

புன்னை மர அனுபவம் –
அரங்கன் கிளையை வளைக்க பிராட்டி மலர் கொய்யும் படியும் –
திருவாய் மொழி நறுமணம் பரவியும் உள்ளதே –
ஸ்துதிப்போம்-

ஸ்ரீ ரெங்கராஜ கர நம்ரித சாகி காப்யஸ் லஷ்ம்யா ஸ்வ ஹஸ்த கலித ஸ்ரவண அவதம்சம்
புந்நாக தல்லஜம் அஜஸ்ர சஹஸ்ர கீதீ ஸேக உத்த்த திவ்ய நிஜ ஸுவ்ரபம் ஆமநாம –49-

ஸ்ரீ ரெங்கராஜ கர நம்ரித சாகி காப்யஸ் –ஸ்ரீ ரெங்க நாதனுடைய திருக் கைகளினால் வளைக்கப்பட்ட கிளைகளில் நின்றும் –

லஷ்ம்யா ஸ்வ ஹஸ்த கலித ஸ்ரவண அவதம்சம்-ஸ்ரீ பெரிய பிராட்டியாரால் -தனது திருக் கையினால் பறித்துக் கொள்ளப் பட்ட
கர்ண பூஷண புஷ்பத்தை யுடையதும்

அஜஸ்ர சஹஸ்ர கீதீ ஸேக –எப்போதும் உண்டான ஸ்ரீ திருவாய் மொழிப் பெருக்கினால்

ஸ்ரீ திருவாய் மொழி உருச் சொல்வாரும் –
அர்த்தங்களை ஆராய்ச்சி செய்வாரும் -ஓய்தல் ஓன்று இன்றி பலரும் உண்டாகையாலே
நறு மணம் இந்த திருப் புன்னை மரத்திலே கமழும்-

உத்த்த திவ்ய நிஜ ஸுவ்ரபம் –உண்டான விலக்ஷணமான பரிமளத்தை யுடையதான

புந்நாக தல்லஜம் ஆமநாம –சிறந்த திருப் புன்னை மரத்தை ஸ்துதிக்கிறோம் –

தல்லஜ-சப்தம் ஸ்ரேஷ்ட வாசகம் –

ஆதமாம பாட பேதம் -வணங்குகிறோம் என்றவாறு

————————–

ஸ்ரீ விஷ்வக் சேனரை ஸ்துதிக்கிறார்-

ஸ்ரீ ரெங்க சந்த்ர மசம் இந்திரியா விஹர்த்தும் விந் யஸ்ய விஸ்வ சித் அசித் நயன அதிகாரம்
ய நிர்வஹதி அநிசம் அங்குளி முத்ரயா ஏவ ஸேநாந்யம் அந்ய விமுகா தம் அசிச் ரியாம -50-

யா–யாவர் ஒரு சேனை முதலியார்

ஸ்ரீ ரெங்க சந்த்ர மசம்–ஸ்ரீ ரெங்க நாதனை

இந்திரியா விஹர்த்தும்–ஸ்ரீ பெரிய பிராட்டியாருடன் திரு விளையாடல் செய்யும் படியாக

விந் யஸ்ய–சேஷ சயனத்தில் அமர்த்தி –

விஸ்வ சித் அசித் நயன அதிகாரம்–ஸமஸ்த சேதன அசேதனங்களையும் நியமிக்கும் அதிகாரத்தை

ய நிர்வஹதி அநிசம் அங்குளி முத்ரயா –எப்போதும் தனது திரு விரல் முத்ரையைக் கொண்டே நிர்வகிக்கிறாரோ

அங்குளி முத்திரை -ஸ்ரீ விஷ்வக் சேனருடைய திருக்கோலங்களிலே காணலாமே –

ஏவ ஸேநாந்யம் அந்ய விமுகா தம் அசிச் ரியாம -அந்த ஸ்ரீ சேனை முதலியாரை -வேறு புகலிடம் நோக்கு
அற்றவர்களாகக் கொண்டு அடி பணிந்தோம் –

ஸூ தர்சன சதகத்தில் முடிவில்
யஸ்மின் விந்யஸ்ய பாரம் விஜயினி ஜெகதாம் ஜங்கம ஸ்தாவராணாம் லஷ்மீ நாராயணாக்யம் மிதுனம்
அநு பவதி அத்யுதாராந் விஹாராந் –என்று ‘
ஜகத் நிர்வஹண பரங்களை ஸ்ரீ திரு ஆழி ஆழ்வான் பக்கல் என்று காட்டியது

அந்தரங்க பலரும் கூறு கொண்டு நோக்க வேண்டும் படி அன்றோ அவனது விபூதி விஸ்தாரம் –

———————————-

ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதீம் ஆஸீஸ்ரியம்
ஸ்ரீ பத லாஷா லாஞ்ச்சித சேவா ப்ரோத லசத்தோர் வல்லி விலாசம் –51- ஸ்ரீ ஸூத்ரவதி தேவியை ஸ்துதிக்கிறார்

ஸ்ரீ பத லாஷா லாஞ்ச்சித சேவா ப்ரோத லசத்தோர் வல்லி விலாசம் –ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடிகளில் சாத்தின
செம்பஞ்சுச் சாறு தன்னால் அடையாளம் இடப்பெற்ற கைங்கர்ய அர்த்தமான ப்ரேரத வஸ்திரத்தினால்
விளங்கா நின்ற கொடி போன்ற கையின் அழகை யுடையவளும்

ப்ரோத வஸ்திரம்–திரு ஒற்று வாடைக்கு பெயர் -பரிசர்ய உபகரணம் -ப்லோத-பாட பேதம் –

ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதீம் ஆஸீஸ்ரியம்-ஸ்ரீ சேனை முதலியாரின் பிரிய பத்னியுமான
ஸ்ரீ ஸூத்ரவதி தேவி என்கிற தாயாரை ஆஸ்ரயித்தேன்

————————–

கஜானனன்-ஜயத் ஸேநன்-ஹரி வக்த்ரன் -கால ப்ரப்ருதி –நால்வரும் நமக்கு நன்மை அளிக்கட்டும்-

விததது ஸூகம் விஷ்வக்ஸேனஸ்ய தே ப்ரதமே படா
கரி முக ஜயத்ஸேநவ் காலாஹ்வ ஸிம்ஹ முகவ் ச ந
ஜகதி பஜதாம் தத் தத் ப்ரத்யூஹதூல தவாநலா
திசி திசி திவா ராத்ரம் ஸ்ரீ ரெங்க பாலந கர்மடா –52-

ஜகதி பஜதாம் தத் தத் ப்ரத்யூஹதூல தவாநலா-இவ்வுலகில் தம்மை அடைகின்றவர்களுடைய பலவகையான
இடையூறுகளான பஞ்சுகளுக்குக் காட்டுத் தீ போன்றவர்களும் –

திசி திசி திவா ராத்ரம் ஸ்ரீ ரெங்க பாலந கர்மடா –இரவும் பகலும் திசைகள் தோறும் ஸ்ரீ கோயிலை காப்பதுவே
நித்ய கர்மமாக யுடையவர்களும் –
ஸ்ரீ ரெங்க பாலனமே இவர்களுக்கு நித்ய நைமித்திக கர்மம்

விஷ்வக்ஸேனஸ்ய தே ப்ரதமே படா–ஸ்ரீ சேனை முதலியாருடைய பிரதான பிரசித்த சேவகர்களான

கரி முக ஜயத்ஸேநவ் காலாஹ்வ ஸிம்ஹ முகவ் ச -கஜானனன்-ஜயத் ஸேநன்-ஹரி வக்த்ரன் -கால ப்ரப்ருதி
என்கிற –நால்வரும் நமக்கு நன்மை அளிக்கட்டும்

ந விததது ஸூகம்–நமக்கு ஸூகத்தை செய்வார்களாக

உடையவரும் நித்ய கிரந்தத்தில் ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரணாமத்துக்கு பின்பு இந்த நால்வருக்கும்
நமஸ்காரம் அருளிச் செய்கிறார் –

————————————————–

ஸ்ருதி மயம் அதி ஹர்ஷ ப்ரசர்ய ஸ்மேர வக்த்ரம்
மணி முகுரம் இவ அக்ரே மங்களம் ரங்க தாம்ந
சரணம் அபிகதா ஸ்ம யத்ர ரூப ஸ்வரூப
ஸ்வ குண மஹிம தர்சீ மோததே ரங்க ஸாயீ–53-பெரிய திருவடியை ஸ்துதிக்கிறார்

யத்ர–யாவர் ஒரு பெரிய திருவடியின் இடத்தில்

ரங்க ஸாயீ–அழகிய மணவாளன்
ரெங்க நாத என்று சொல்லாமல் ரெங்க சாயி –சயனிப்பவர் எதிரே கண்ணாடி வைத்து சயனிக்கும் வழக்கம் உண்டே –

ரூப ஸ்வரூப ஸ்வ குண மஹிம தர்சீ –திவ்ய மங்கள விக்ரஹம் -திவ்யாத்மா ஸ்வரூபம் –
திருக் கல்யாண குணங்கள் ஆகிய இவற்றின் வை லக்ஷண்யத்தை சாஷாத் கரியா நின்று கொண்டு

மோததே–ஆனந்தப்படுகிறானோ

ரங்க தாம்ந அக்ரே-ஸ்ரீ ரெங்க நாதனுடைய திரு முன்பே

மணி முகுரம் இவ ஸ்திதம் மங்களம்–மங்களகரமான ரத்னக் கண்ணாடி போன்று இருப்பவரும்

அதி ஹர்ஷ-நிரம்பின சந்தோஷத்தாலும்
எம்பெருமானுடைய ஸ்வரூபாதிகள் இவன் இடமும் பிரகாசிக்கும் -தன்னையே ஓக்க அருள் செய்பவன் அன்றோ –

ப்ரசர்ய-விநயத்தாலும்

ஸ்மேர வக்த்ரம்-விகசித்துள்ள திரு முக மண்டலத்தை யுடையவரும்

ஸ்ருதி மயம்- வேத ஸ்வரூபியுமான–வேதாத்மா விஹகேஸ்வர –

தம் -அந்தத் திருவடியை

சரணம் அபிகதா ஸ்ம -அரணாக பற்றினவர்களாகிறோம் –

ஸூபர்னோசி கருத்மான் -சுவர்ணன்-என்ற திரு நாமங்களும் உண்டே –

————————-

ஸூகீர்த்தி- ருத்ரை -பெரிய திருவடியின் தேவிமார்கள் ஸ்துதி

தார்ஷ்ய பக்ஷ திவத் தஸ்ய வல்லபாம் ருத்ராய ஸஹ ஸூகீர்த்திம் அர்ச்சயே
ஹர்ஷ பாஷ்யம் அபி கீர்த்திம் அர்த்திதாம் யந் முகேந கமலா கடாக்ஷயேத்–54-

ஹர்ஷ பாஷ்யம் அபி கீர்த்திம் அர்த்திதாம் யந் முகேந கமலா கடாக்ஷயேத்– ஸ்ரீ பெரிய பிராட்டியார் அபேக்ஷகர்களுக்கு
ஆனந்த பாஷ்யத்தையும் கீர்த்தியையும் எந்த பெரிய திருவடியின் பத்னிகளுடன் மூலமாக கடாக்ஷித்து உண்டாக்குவாரோ

ருத்ரா -ஆனந்த பாஷ்யம் பெறுகச் செய்பவள்

ஸூகீர்த்தி -சிறந்த கீர்த்தி அளிப்பவள்
இருவரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நேத்ர ஸ்தாநீயர்கள் –

தார்ஷ்ய பக்ஷ திவத் தஸ்ய வல்லபாம் -ஸ்ரீ பெரிய திருவடியின் பஷ மூலம் போல் காதலியான
நிரந்தரமான ஆலிங்கனத்துக்கு உரியவர்கள் என்கை –

ருத்ராய ஸஹ ஸூ கீர்த்திம் அர்ச்சயே-ஸூ கீர்த்தி என்பவளை ருத்ரை என்பவளுடன் பூஜிக்கிறேன்

ஸ்ரீ வேதாந்த தேசிகரும் ஸ்ரீ கருட தண்டகத்தில் -ருத்ரா ஸூகீர்த்தி ஸ்தநா போக காடோப கூட -என்றது காண்க –

—————–

ஸ்வ அஸ்த்ர ரூப ஸ்ப்புரத் மௌலி மா சப்த இதி உத்துநாநாம் ஸூராந் தர்ஜநீ முத்ரயா
நாத நித்ரா உசித உந்நித்ர தாம்ர ஈஷணாம் சஞ்சரந்தீம் ஸ்தும தாம் ச பஞ்சாயுதீம் –55- பஞ்சாயுத ஸ்துதி-

ஸ்வ அஸ்த்ர ரூப ஸ்ப்புரத் மௌலி -தங்கள் அஸ்திரமாய் இருக்கும் தன்மை தங்கள் முடிகளில் விளங்கும்படியாக

மா சப்த இதி உத்துநாநாம் ஸூராந் தர்ஜநீ முத்ரயா-தேவதைகளை சப்தம் செய்ய வேண்டாம் என்று
ஆள்காட்டி விரலை இட்டுக் காட்டுவதனால் நடுங்கச் செய்கின்றதும்

நாத நித்ரா உசித உந்நித்ர தாம்ர ஈஷணாம்–ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருக் கண் வளர்த்திக்குத் தகுதியாக
உறக்கம் அற்று இருப்பதனால் சிவந்து இருக்கிற கண்களை யுடையதும்

சஞ்சரந்தீம் ஸ்தும தாம் ச பஞ்சாயுதீம் –உலாவிக் கொண்டே இருப்பதுமான ஸ்ரீ பஞ்சாயுதங்களை ஸ்துதிக்கிறேன்

பக்தர்களுக்கு ஆனந்த பாஷ்பம் அளிக்கும் ருத்ரா தேவியை ஸ்துதித்த பின்பு
விரோதிகளுக்கு சோக பாஷ்பம் அளிக்கும் ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்களை ஸ்துதிப்பது பிராப்தம் இறே

சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கைகள் –
சங்கு சக்கரம் நாந்தகம் என்னும் வாள் -சார்ங்கம் என்னும் வில் கௌமோதகீ என்னும் தண்டு –
இவர்கள் நித்ய ஸூரிகளாய் இருக்க-கண் உறங்க ப்ரசக்தியே இல்லையே -இருந்தாலும் –
நாத நித்ரா உசித உந்நித்ர தாம்ர ஈஷணாம்-என்றது ப்ரேம பிரகர்ஷம் –

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே–
பள்ளி அறைக் குறிக் கொள்மின்

ஸ்ரீ ரெங்க நாதனுக்கு நித்திரை உண்மையாகில் இவை எல்லாம் உண்மையாகும் –

—————————

சக்கரத்தாழ்வார் ஸ்துதி -கடாக்ஷ அம்ருதம் சதா பருகி மதம் கொண்டு நர்த்தனம் பண்ணுகிறான்
இரத்தக் கறை கொண்ட திருமேனி -கொழுந்து விட்டு எறியும் ஜ்வாலை –

அஸ்த்ர க்ராம அக்ரேசரம் நாத வீஷா சீது ஷீப உத்வேல ந்ருத்த அபிராமம்
சக்ரம் தைத்யச்ஸேத கல்மாஷித அங்கம் பிராம்யத் ஜ்வாலா மாலபாரி ப்ரபத்யே –56-

நாத வீஷா சீது–ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருக் கண் நோக்கம் ஆகிற மது பானத்தால்

ஷீப உத்வேல ந்ருத்த அபிராமம்-மதம் கொண்டதாகி அளவில்லாத நர்த்தநத்தாலே அழகியதும்

தைத்யச்ஸேத கல்மாஷித அங்கம் -அசுரர்களைச் சேதிப்பதனால் கறை பெற்ற மேனியை யுடையதும்
உடல்களை சேதிப்பதே பணியாகையாலே கறை கழுவ கால அவகாசம் இல்லையே –

பிராம்யத் ஜ்வாலா மாலபாரி–சுழல்கின்ற ஜ்வாலைகளின் சமூகங்களை வஹித்துக் கொண்டு இருப்பதும்

அஸ்த்ர க்ராம அக்ரேசரம் -சக்ரம் -ப்ரபத்யே –அஸ்திர வர்க்கங்களின் தலைமை பெற்றதுமான
திரு வாழி ஆழ்வானை சரணம் புகுகிறேன் –

——————————

ஹநுபூஷ விபீஷணயோ ஸ்யாம் யதமவ் இஹ மோக்ஷம் உபேஷ்ய
ரகு நாயக நிஷ்க்ரய பூதம் புவி ரங்க தனம் ரமயதே–57-திருவடி விபீஷண ஸ்துதி–

யதமவ் இஹ மோக்ஷம் உபேஷ்ய-எவர்கள் இந்த விபூதியில் மோக்ஷத்தை வெறுத்து
இங்கேயே சிரஞ்சீவிகளாக கைங்கர்யம் செய்து

ரகு நாயக நிஷ்க்ரய பூதம் புவி ரங்க தனம் ரமயதே–ஸ்ரீ ராமபிரானுடைய மூலதனமாய் இருக்கும் திருவரங்கச் செல்வனாரை
கைங்கர்ய ஸ்ரீ யால் உகப்பிக்கின்றனரோ -அந்த

ஹநுபூஷ விபீஷணயோ ஸ்யாம் -திருவடிக்கும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் உரியனாகக் கடவேன் –

ஸப்தமீ த்வி வசனமாகக் கொண்டு இவர்களில் ஒருவனாக ஜனிக்கக் கடவேன் என்றுமாம் –

—————————-

இத பஹி பஞ்ச பராஞ்சி கானி ப்ரத்யஞ்சி தானி ஸ்யு இத அந்த இத்த்தம்
ஓவ்பாதி கேப்ய நிருபாதி போக்யே ப்ரத்யாஹரத் வேத்ரவரம் வ்ரஜாமி –58-

இத பஹி பஞ்ச பராஞ்சி ஸ்யு-பஞ்ச இந்திரியங்கள் இவ்விடத்துக்கு அப்பால் வெளி விஷயங்களைப்
பற்றினவைகளாக ஆகக் கடவன

கானி ப்ரத்யஞ்சி தானி ஸ்யு இத அந்த இத்த்தம்-அந்த பஞ்ச இந்திரியங்கள் இவ்வருகே ப்ரத்யக் பதார்த்தமாகிய
ஸ்ரீ ரெங்க நாதனைப் பற்றியவைகளாக ஆகக் கடவன என்று

ஓவ்பாதி கேப்ய நிருபாதி போக்யே ப்ரத்யாஹரத் வேத்ரவரம் வ்ரஜாமி –சாமான்ய வஸ்துக்களில் நின்றும்
ஸ்வயம் போக்யனான ஸ்ரீ ரெங்க நாதன் இடத்தில் இந்திரியங்களைக் கொண்டு சேர்க்கிற திரு பிரம்பை சரணம் புகுகிறேன் –

இதுவரை திருக் கோபுர திரு மண்டபாதிகளில் ஸ்வாமி யுடைய இந்திரியங்கள் ஈடுபாடு
இவை அனைத்தும் அவனது என்ற உபாதி அடியாகவே –

இனி இந்த பராக்குக்களும் அற்று ஸ்ரீ பகவத் அனுபவத்தில் ஈடுபட்டமையை அருளிச் செய்கிறார்
ஸ்ரீ ரெங்க நாதனோ – நிருபாதிகம் அன்றோ – -உபாதி ஒன்றுமே இல்லாமல் நிருபாதிக போக்யன்

———————–

திரு மணத் தூண்களே பற்றுக் கோலாக அழகு வெள்ளத்தில் ஆழ்ந்து உள்ள நாம் தரித்து நிற்போம்-

சேஷசய லோசந அம்ருத நதீ ரய ஆகுலித லோலமாநாநாம்
ஆலம்பம் இவ ஆமோத ஸ்தம்ப த்வயம் அந்தரங்கம் அபியாம -59-

சேஷசய லோசந அம்ருத நதீரய–அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் அரங்கனுடைய கடாக்ஷமாகிற
அமுத ஆற்றின் உடைய ப்ரவாஹ வேகத்தினால்

ஆகுலித லோலமாநாநாம்-அசைக்கப் பட்டவர்களாய்க் கொண்டு தத்தளிக்கின்றவர்களுக்கு

ஆலம்பம் இவ ஆமோத ஸ்தம்ப த்வயம் அந்தரங்கம் அபியாம -அணுகின கைப்பிடி போன்றுள்ள
திரு மணத் தூண்கள் இரண்டையும் அடைகிறோம் –

ஆமோத ஸ்தம்பம் -திரு மணத் தூண்கள் -சர்வ கந்த வஸ்துவின் பரிமளம் இவ்வாறு வடிவு கொண்டன–
அவனுடைய சவுந்தர்யமே இவ்வாறு வடிவு கொண்டன என்றுமாம் –

கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் மாயோனை மணத் தூணே பற்றி நின்று
என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே

அந்தரங்கம் -ஆலம்பத்துக்கும் ஸ்தம்ப த்வயத்துக்கும் விசேஷணம்

கீழ் ஸ்லோகத்தில் அருளிச் செய்த படியே இந்த திரு மணத் தூண்கள் பஹிர்ப் பூத விஷயங்களில் சேர்ந்தது அல்லவே –

—————————

மூல ஸ்தான ஸ்துதி -ஆதி சேஷன் -உபய நாச்சியார் சமேத நம் பெருமாள் –
ஸ்ரீ ரெங்க நாச்சியாரின் திறந்து வைக்கப்பட்டுள்ள திரு ஆபரண பெட்டி போன்ற கர்ப்ப க்ருஹம்

ஸ்ரீ ரெங்க அந்தர் மந்திரம் தீப்ர சேஷம் ஸ்ரீ பூமி தத் ரம்ய ஜாமாத்ரு கர்ப்பம்
பஸ்யேம ஸ்ரீ திவ்ய மாணிக்ய பூஷா மஞ்ஜூ ஷாயா துல்யம் உந் மீலி தாயா -60-

தீப்ர சேஷம்–திருவனந்த ஆழ்வான் விளங்கப் பெற்றதும்

ஸ்ரீ பூமி தத் ரம்ய ஜாமாத்ரு கர்ப்பம்–திரு மடந்தை என்ன மண் மடந்தை என்ன -அந்த அழகிய மணவாளன் என்ன
இவர்களை உள்ளே உடையதும்

உந் மீலி தாயா -கதவு திறந்து இருக்கப் பெற்ற

ஸ்ரீ திவ்ய மாணிக்ய பூஷா மஞ்ஜூ ஷாயா துல்யம் –ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய சிறந்த திரு ஆபரணப் பெட்டிக்கு நிகரானதுமான

ஸ்ரீ ஸ்தந ஆபரண தேஹ -8-ஸ்லோகத்தில் ஸ்ரீ ரெங்க நாதனை ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடத்தின்
திவ்ய ஆபரணமாக -ஸ்லாக்யமான மாணிக்க பூஷணமாக -அருளிச் செய்தார் –

ஸ்ரீ ரெங்க அந்தர் மந்திரம் பஸ்யேம–ஸ்ரீ ரெங்க விமானத்தின் கர்ப்ப க்ருஹத்தை சேவிப்போம் –

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

2 Responses to “ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–ஸ்லோகங்கள்–1-60-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —”

 1. கங்கையில் புனிதமாய – திருமாலை – Vaishnavism Says:

  […] ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–ஸ்… […]

 2. vivek Says:

  Dear Sir,
  where can I find the below sloka?
  கலவ் கிருதயுகம் தஸ்ய கலீஸ் தஸ்ய கருத்தே யுகே -ஹ்ருதயே யஸ்ய கோவிந்தோ யஸ்ய சேதசீ நாஸ்யுத
  Regards,
  Vivek seshadri

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: