ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –68– ஆரெனக்கின்று நிகர் சொல்லில் – இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணத்துக்கு மடைத்தேற்றலாயும் (அடைத்து ஏற்றலாவது — கொண்டம் கட்டி நீர் பாய்ச்சுதல் -என்றவாறு )
ஆஸ்ரயித்தார்கள் ஆகில் அவ்வளவில் சுவறிப் போரக் கடவதான (சரம பர்வ நிஷ்டை இல்லாமல் )-வித் தேசத்தில் –
என்னாத்மாவும் மனசும் ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்து இருக்கும் அவர்கள் குணங்களிலே சென்று பிரவணம் ஆயிற்று –
ஆன பின்பு எனக்கு சத்ருசர் இல்லை –என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானாருடைய ஜ்ஞான பிரதான வைபவத்தையும் -மோஷ பிரதான-வைபவத்தையும் –
இந்திரிய பரவசரான சேதனரைக் குறித்து அவருடைய யதாவசிதித்த பிரகாரத்தை தெளிவித்து –
மகாபாரத சமரத்திலே -திருத் தேர் தட்டிலே உபதேசித்த ஸ்ரீ பகவத் கீதைக்கு எதாவச்த்திதார்த்தத்தை அருளிச் செய்த
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்த-சத்துக்களுடைய கல்யாண குணங்களிலே -என்னுடைய பிராணனும் மனசும்
த்வரித்துப் போய் -அங்கே கால் தாழ்ந்தது –
ஆன பின்பு இப்போது வ்யபிதிஷ்டரை கணிசித்து சொல்லத் தொடங்கி
எனக்கு சத்ர்சர் லோகத்தில் யார் உளர் -என்று தமக்கு உண்டான அதிசயத்தை சொல்லுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இப்படி தம் கரணங்களை ஸ்ரீ கண்ணன் தனக்கே உரியவை ஆக்குவாரும் அரியராய் –-அங்கனம் ஆக்கினார் உளராயினும்
அவர்கள் அளவோடு ஆளாதல் சுவறிப்போமதமான இந்நிலத்திலே என்னுடைய ஆத்மாவும் மனமும்
ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றினவர்களுடைய-குணங்களிலே நோக்குடன் சென்று ஈடுபட்டு விட்டது ..
ஆகவே எனக்குச் சமமானவர் எவருமே-இல்லை என்று களிப்புடன் கூறுகிறார் .
தன் சம்பந்தி -அடியார்க்கு அடியார் அளவும் சரம பர்வத்தில் – நிலை நிறுத்திய பின்பு யார் எனக்கு நிகர் என்கிறார் இதில்.

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

பத உரை –
மாயன் -வியக்கத் தக்க தன்மை வாய்ந்த ஸ்ரீ கண்ணன்
அன்று -அந்தக் காலத்திலேயே
ஐவர் -பஞ்ச பாண்டவர்களுடைய
தெய்வத் தேரினில் -தெய்வத் தன்மை வாய்ந்த திருத் தேரிலே இருந்து
செப்பிய -அருளிச் செய்த
கீதையின் -ஸ்ரீ கீதையினுடைய
செம்மை பொருளை-நேரிய பொருளை
தெரிய -தெளிவாக தெரிந்து கொள்ளும்படி
பாரினில் -பூமியில்
சொன்ன -ஸ்ரீ கீதா பாஷ்யம் அருளிச் செய்த
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
பணியும் -பற்றி இருக்கும்
நல்லோர் -நல்லவர்களுடைய
சீரினில் -கல்யாண குணங்களில்
என் ஆவியும் -என் ஆத்மாவும்
சிந்தையும்-மனமும்
சென்று -நோக்குடையதாக சென்று
பணிந்தது -ஆழ்ந்து ஈடுபட்டது
சொல்லில்-சொல்லப் போனால்
இன்று -இக் காலத்தில்
ஆர் எனக்கு நிகர் -எவர் எனக்கு ஒப்பாவார் –

வியாக்யானம் –
பார்த்தம் ரதி நம் ஆத்மானம் ச சாரதிம் சர்வ லோக சாஷிகம் சகாரா -கீதா பாஷ்யம் அவதாரிகை -என்கிறபடியே –
சாரத்திய வ்ருத்தாந்தாலே தன்னுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை-ஜகத் பிரசித்தம் ஆக்கின ஆச்சர்ய பூதன் –
விஸ்ருஜ்ய சசரம் சாபம் சோக சம்விக்ன மானச -கீதை –1 47- -என்கிறபடியே
ரதியான அர்ஜுனன் கையில் வில்லையும் பொகட்டு சோகாவிஷ்டனாய்-
சிஷ்ய ஸ்தேஹம் சாதிமாம் த்வாம் பிரபன்னம் -கீதை -7-2 – -என்கிற
அக்காலத்திலே பாண்டவர்களுடையதாய் தன்னுடைய திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே திவ்யமாய் இருந்துள்ள
ஸ்ரீ திருத் தேர்த்தட்டிலே -நின்று அருளிச் செய்த -ஸ்ரீ கீதையினுடைய ஸ்வ ரசமான அர்த்தத்தை –
ஸூவ்யக்தமாம் படி -தேரிலே அர்ஜுன ஏக விஷயமாக அவன் அருளிச் செய்தால் போல் அன்றிக்கே –
பாரிலே சர்வ விஷயமாக அருளிச் செய்த ஸ்ரீ எம்பெருமானாரை
ஆஸ்ரயித்து இருக்கும் விலஷணரானவர்கள் உடைய கல்யாண குணங்களிலே இவ் வருகு ஒன்றில் கால் தாழாதே சென்று
என்னாத்மாவும் மனசும் அத்தை விடில் முடியும் என்னும்படி ப்ரவணமாய் விட்டது .
சொல்லுமளவில் யார் தான் எனக்கு இன்று சத்ருசர்

செம்மை-செவ்வை / பணிதல்-தாழ்தல்/ சிந்தை-ஹ்ருதயம்–
தன்னை வணங்க வைத்த கரணங்கள் -அவன் பக்த பக்த அடியார்கள் இடம் பிரவணம் ஆயின -ஸ்ரீ ஸ்வாமி கிருபா பிரவாகத்தால் –
யார் எனக்கு நிகர் -முன்பு நீசனேன் நிரை ஒன்றும் இலேன் என்றவர் -சரம பர்வ நிஷ்டையால் வந்த சாத்விக அஹங்காரத்தால்
அருளிச் செய்கிறார் –நல்லோர் -ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் -போல்வார் -ஆவியும் சிந்தையும் தனித்தனியே சென்றது –
பிராணன் மனஸ் இரண்டும் -அக்கார அடிசில் நாடி

மாயன் –
மாயாத் யஷேனே பர்க்ர்திஸ் ஸூ ச சராசரம் அஹம் சர்வச்ய பிரபவ -என்கிறபடியே
சர்வ ஜகத் காரண பூதம் அன்றிக்கே -சைசவா அவஸ்தையில் இருந்தும் பூதன சகட யமளார்ஜுநாதி சம்ஹாரங்களும் –
கோவத்ச கோபால ஸ்ருஷ்டியும் கோவர்த்தன உத்தாரணமும் -யசோதா அக்ரூர தார்த்தராஷ்ட அர்ஜுன உதங்காதிகளுக்கு
விஸ்வரூப பிரதர்சனமும் முதலான -ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்னுதல் —இப்படிப் பட்ட ஸ்ரீ கிருஷ்ணனும் –

அன்று –
தத்ர தாவத் பாண்டவானாம் குருநாம்ச யுத்தே ப்ராரப்தே பகவான் புருஷோத்தம சர்வேஸ்வர ஜகதுபக்ர்திமர்த்ய –
பார்த்தம் ரதி நமாத் நமாத்மானம் ச சாரதிம் சர்வ லோக சாஷிகம் சகாரா -என்கிற சமயத்திலே –

மாயன் அன்று செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரிய –
சாரதிஸ் சர்வ நேதா -எல்லாவற்றையும் நடாத்துபவன் -அர்ஜுனன் சொற்படி நடக்கும் தேரோட்டி யானவன் -என்றபடி
சர்வ நியந்தா தேசம் அறிய வோர் சாரதியாய் நின்று தனது
ஆஸ்ரித பாரதந்த்ரிய குணத்தை உலகில் வெளிப்படுத்தின வியப்பை நினைத்து –
மாயன்-என்கிறார் . –

அன்று –
போர்க்களத்தில் பகைவர் திறத்தில் உறவினர் என்ற பாசம் மேலிட்டு -அவர்கள் இறந்து விடுவரே என்று வருந்தி –
வில்லும் அம்பும் சோர -போர் புரியகிலேன் என்று தேர்த்தட்டில் உட்கார்ந்து –
ஸ்ரீ கண்ணன் பேச்சினால் கலக்கம் மிக்கு தர்ம நிர்ணயம் செய்து கொடுப்பதற்காக ஸ்ரீ கண்ணன் திருவடிகளில் –
சரண் அடைந்து சிஷ்யனாய் அர்ஜுனன் கேட்ட அன்று –

ஐவர் தெய்வத் தேரினில் –
பஞ்ச பாண்டவர்களுக்கு விஜயம் கொடுக்கைக்காக —
தெய்வத் தேர் –என்கிறது
அர்ஜுனனுக்கு தேவதா ப்ரசாதத்தாலே வந்த தேர் -என்னுதல் –
அன்றிக்கே
தேவ தேவனான கிருஷ்ணனுடைய ஸ்ரீ பாத ஸ்பரசத்தால் வந்த அதிசயத்தை இட்டு சொல்லுதல் –
இப்படிப் பட்ட திரு தேர் தட்டிலே –

ஐவர் தெய்வத் தேரினில் –
தேர் அர்ஜுனனுக்கு மட்டும் சொத்தாயினும் -அதனில் சாரதியாய் ஸ்ரீ கண்ணன் அமர்ந்தது
பஞ்ச பாண்டவர்களின் விஜயத்தை கருதியே யாதலின் –ஐவர் தேர் -என்றார் –

தக்க ஐவர் தமக்காய்- அன்று ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்புக்க நல் தேர்த் தனிப் பாகா -ஸ்ரீ திரு வாய் மொழி -8 5-8 – -என்று
ஸ்ரீ நம் ஆழ்வார் ஐவர்க்கு கையாளாய் ஸ்ரீ கண்ணன் தேர்ப்பாகன் ஆனதாக அருளிச் செய்து-இருப்பது இங்கே அறியத் தக்கது .

அக்நி தேவனால் அர்ஜுனனுக்கு கொடுக்கப் பட்ட தேர் ஆதலின் -தெய்வத் தேர் -என்கிறார்
தெய்வம்-தேவ சம்பந்தம் பெற்றது -வடசொல் –
இனி
தேவனான ஸ்ரீ கண்ணன் திருவடி சம்பந்தம் பெற்ற பீடுடைமை பற்றி -தெய்வத் தேர் -என்றார் என்னலுமாம் .
மஹதி சயந்தனே ஸ்த்திதவ்-என்று ஸ்ரீ கீதையில் இத் தேரை மஹத்தானது என்று
குறிப்பிடப் பட்டு இருப்பது -கவனிக்கத் தக்கது .
ஸ்ரீ கண்ணன் திருவடி சம்பந்த்தாலே வந்த தெய்வத் தன்மையால் அன்றோ –
அவன் சாரதியாய் அமர்ந்த வரை ஆக்னேயாஸ்த்ரம்-இந்த தேரை அளிக்க இயலாது –பின்னரே எரிக்க வல்லதாயிற்று —

செப்பிய –
கார்ப்பன்யோ தோஷோபஹத ஸ்வ பாவ பர்ச்சாமித்வா தர்ம தம்மூட சேதா-யச் ஸ்ரேயச்யான் நிச்சிதம்
ப்ரூஹிதந்மே சிஷ்யச்தே ஹம்சாதிமாம் த்வாம் பிரபன்னம் -என்று பிரபன்னனான அர்ஜுனனைக் குறித்து –

நத்வே வாஹம் ஜாது நா சம்நத்வம் நேமே ஜநாதிபா-ந சைவ ந பவிஷ்யாம சர்வே வயமதம் பரம் -என்று
ஜீவ ஈஸ்வர பேதமும் –
ஜீவ பரஸ்பர பேதமும் உபக்ரமித்து –

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி –
என்று அபய பிரதானம் பண்ணின ஸ்லோகம் அளவும் மோஷ சாஸ்த்ரமாக உபதேசித்த –

கீதையின் –
ஸ்ரீ பகவத் கீதையினுடைய

செம்மை –
செவ்வை -ஆர்ஜவம் –
ஆதி மத்திய அவசானங்களிலே-கரூபத சங்கர ஸ்ரீ தர ஆனந்த தீர்த்தாதிகள் போலே
தத்தவத்தை உபதேசிக்க வேணும் என்று உபக்ரமித்து –
நடுவே தம்முடைய குதர்ஷ்டி பஷத்துக்கு அனுரூபமாக சில அர்த்தங்களை கலந்து -பூர்வோத்தர விருத்தமாக சொல்லுகை அன்றிக்கே –
யதாவச்தித்தார்த்த வபோதகமாய்–உபநிஷத்துகளோடு ஏக வாக்ய தாபன்நமான-

பொருள் –
ஸ்ரீ கீதா பாஷ்யத்தை –

தெரியப் பாரினில் சொன்ன –
லோகத்தில் தத்வ விவேக சூன்யரான ஜனங்களுக்கு தத்வ ஹித புருஷார்த்தங்களை விசதமாகத் தெளியும்படி
ஸ்ரீ பாஷ்யத்தை பண்ணின

தேரினில் செப்பிய கீதை–
அரசன் சிம்ஹாசனத்தில் இருந்து செப்பியது போலே ஸ்ரீ கண்ணன் தெய்வத் தேர்த்தட்டில்-இருந்து
செப்பிய ஸ்ரீ கீதையும் தப்பாது என்க –
இனி ஐவர் தேரினில் சரண் அடைந்த பக்தனும் -நண்பனுமான அர்ஜுனனை நோக்கி
செப்பிய ஸ்ரீ கீதை என்னலுமாம் –

செம்மை பொருள்-
ஸ்வ ரசமான அர்த்தம்

தெரியப் பாரினில் —நல்லோர் –
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ கீதா பாஷ்யம் அருளிச் செய்வதற்கு முன்பு பாரில் உள்ளோர்
ஸ்ரீ கீதையின் செம்மைப் பொருள் தெரிகிலராய் இடர்ப்பட்டனர்
ஏனையோர் செய்த பாஷ்யங்கள் தங்கள் கொள்கையினைப் புகுத்தி வலியுறுத்துவனவாய் இருந்தனவே அன்றி –
ஸ்ரீ கீதையின் நேரிய பொருளை உரைப்பனவாய் இல்லை
அக் குறை தீர ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் சீர்மையை உணர்ந்து –
அவ் வுபகாரத்துக்குத் தோற்று-நல்லவர்கள் அவரைப் பணிகின்றனர் -என்க ..

ஸ்ரீ கண்ணன் தேரினில் அர்ஜுனன் ஒருவனை நோக்கிச் சொன்னான் ஸ்ரீ கீதையை –
ஸ்ரீ எம்பெருமானாரோ-அதன் செம்மைப் பொருளைப் பாரினில் அனைவரையும் நோக்கி அருளிச் செய்தார் –

ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ கீதை செப்பினானே யன்றி -கேட்ட அர்ஜுனன் தெரிந்து கொள்ளும்படி செப்பிலன் .
வ்யாமிச்ரேணை வவாக்யே ந புத்திம் மோஹயஸீவமே –என்று
கலந்து கட்டியான வாக்யத்தினாலே என் புத்தியை மயக்குகிறாய் போல் இருக்கிறது -என்று
கேட்கும் அர்ஜுனனே கூறுவது காண்க –

ஸ்ரீ எம்பெருமானாரோ அனைவரும் தெரிந்து கொள்ளும்படி ஸ்ரீ கீதையின் செம்மைப் பொருளைச் சொன்னார் .

அகல் ஞாலத்தவர் அறிய நிறை ஞானத்தொரு மூர்த்தியான கண்ணன்
நெறி எல்லாம் எடுத்து உரைத்ததாக ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்து இருந்தாலும் –
அவனே எடுத்து உரைப்பினும் கேட்டு புரிந்து கொள்ளும் தகுதி அற்றோர் திறத்து
தன் வடிவு அழகாலே குறிய மாணுருவாகி வலுக் கட்டாயமாக அவர்களைத்
தனக்கு ஆக்கிக் கொள்வதாக அவர் அங்கேயே -ஸ்ரீ திருவாய் மொழி -4 8-6 – – கூறி இருப்பதும் இங்கு அறியத் தக்கது –

அகல் ஞாலத்தவர் அறிந்து கொள்வதற்காக ஸ்ரீ கண்ணன் செப்பியது ஸ்ரீ கீதை
அறிவிக்க கேளாதவரை அவன் வலுக்கட்டாயமாக தனக்கு ஆக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று

ஸ்ரீ எம்பெருமானார் சொன்ன செம்மைப் பொருளோ பாருக்கு எல்லாம் தெரியும் படியாக அமைந்து இருத்தலின் –
எவர் திறத்தும் வலுக்கட்டாயம் செய்ய வேண்டுவது அவசியமில்லை -என்க ..

தேரினில் உள்ள அர்ஜுனன் ஸ்ரீ கண்ணன் இடம் கேட்ட ஸ்ரீ கீதையை மறந்தான் .
அவனுக்கு இன்னாப்புடன் மீண்டும் ஸ்ரீ கீதையைச் சொல்ல வேண்டிய நிலைமை தவிர்க்க ஒண்ணாதாயிற்று ஸ்ரீ கண்ணனுக்கு

பாரினில் உள்ளாரோ மறக்க ஒண்ணாதபடி தெரியச் செம்மைப் பொருளை ஸ்ரீ எம்பெருமானார்
உரைத்து இருப்பதனால் மீண்டும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுவதற்கு வழியே இல்லை -என்க –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

பணியும் நல்லோர் –
ஸ்ரீ ராமானுஜச்ய சரணவ் சரணம் ப்ரபத்யே – என்று ஆஸ்ரயித்த சத்துக்கள் –
ஸ்ரீ ஆழ்வான்-முதலானவர்கள் -என்றபடி –

சீரினில் –
அவருடைய கல்யாண குணங்களில் –

சென்று பணிந்தது –
ஒரு பகல் ஆயிரம் ஊழி -என்றும் –
ஷண மாத்ரம் கல்ப சமம் மந்வானா -என்னும்படி அவருடைய கல்யாண குண சந்தானம் இன்றிக்கே இருக்க மாட்டாத
ப்ராவண்யத்தாலே த்வரித்து சென்று – அந்த கல்யாண குணங்களிலே -மொழியைக் கடக்கும்-பெரும் புகழான்
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் ஸ்ரீ கூரத் ஆழ்வான் -என்று ஆழம் கால் பட்டது –

யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்-
கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம் -என்று ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
அது எது என்றால் –

என் ஆவியும் சிந்தையுமே –
இவ்வளவாக என்னுடைய ஹிதத்தை தெரியாதே சம்சரித்துப் போன என்னுடைய பிராணனும் மனசுமே
இப்படி ரசஞ்சமாய் இருந்தது —

ஆர் எனக்கின்று நிகர் சொல்லில் –
ஸ்ரீ கண்ணனை வணங்குவாரே இல்லாத இந் நிலத்திலே –
ஸ்ரீ இராமானுசனை பணியும் நல்லோர் சீரினில் சென்று பணியும் ஆவியும் சிந்தையும் எனக்கு-ஒப்பார் ஆவாரை
தேடித் பார்த்து சொல்லப் புக்கால் எவர் தான் ஒப்பாவார் -என்று தமது ஒப்பற்ற-சிறப்பை களிப்புடன் கூறுகிறார் .

ஸ்ரீ பாகவத சேஷத்வத்தின் எல்லை நிலையில் இருப்பவன் -நான் என்னும்
சாத்விக அகங்காரத்தால் வந்த களிப்பாதலில் இது குற்றமாகாது -என்று உணர்க –

பணியும் நல்லோர் –
ஆஸ்ரயித்து இருக்கும் நல்லவர்கள் -ஸ்ரீ கூரத் ஆழ்வான் போன்றவர்கள் -என்க –

சீரினில் –ஆவியும் சிந்தையுமே –
சீர் -நற்குணங்கள்
பணிந்து -விடில் முடியும் படியான மிக்க ஈடுபாடு கொண்டது
ஆவி -ஆத்மா
சிந்தை -மனம்
பணிந்தன என்று பன்மையில் கூறாது ஒருமையில் கூறினார் .
ஒன்றை ஓன்று எதிர்பாராது -தனித் தனியே ஈடுபட்டமை தோற்றற்கு-
ஆவியும் பணிந்தது /சிந்தையும் பணிந்தது-என்று தனித் தனியே கூட்டி உரைக்க –

சென்றது என்பதோடு அமையாமல் சென்று பணிந்தது -என்றமையால்
சீரினை விட்டு பிரிய இயலாமை தோற்றுகிறது –
பணிதல்-தாழ்தல்
சென்று என்ற இது- இடையே வேறு ஒன்றினில் கண் செலுத்தாது ஒரே நோக்காக சீரினில் ஈடுபட்டமை தோற்ற

என் ஆவியும் சிந்தையும்-எங்கோ திரிந்த என்–பணிந்த பின்பு யார் எனக்கு நிகர்–ஆனந்தமாக அருளுகிறார்-
எதையோ விட்டு தரிக்காத மனசு இப்பொழுது ஸ்ரீ ஆழ்வான் போல்வாரின் சீரை விட்டு தரிக்காது-
ஆவிக்கு தனி சிறப்பு சிந்தை தனியாக சென்றது-ஓன்று ஒன்றுக்கு சகாயம் இன்று சென்று பணிந்தன-
நோக்கி ஏக சிந்தையாய் சென்றதாம்-
மாறு உளதோ இம் மண்ணின் மிசையே
யார் எனக்கு நிகர் இல்லை
எனக்கு எதிர் இல்லை –சாத்விக அகங்காரம் இவை –

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் -நான்முகன் திருவந்தாதி-–71–

போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே -திருவாய்மொழி–4-6-1-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் -5-10-1-

வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-

—————-———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: