Archive for April, 2020

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–10- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களை அநு வர்த்திகைக்கு உண்டான மநோ வாக் காய ரூப கரண த்ரயத்தையும் கொண்டு
அவ்விஷயங்களை பரிதவித்து -அதில் ஒரு பயமும் இன்றிக்கே விலக்ஷணர் நடுவில் அனுவர்த்தியாத மாத்திரம் அன்றிக்கே
அநவரதம் அபராதமே பண்ணிக் கொண்டு போருகையால் உண்டான வியஸன அதிசயத்தால் அருளிச் செய்கிறார் –

தேவரீர் சம்பந்திகளை வஞ்சிக்கும் மாத்ரம் அன்றிக்கே தேவரீர் தம்மையும் வஞ்சிக்கப் பெற்றேன் என்கிறார் –
ஹா ஹந்த ஹந்த-இத்யாதியால் –

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோ அஹம் சராமி சததம் த்ரிவித அபசாரான்
ஸோஅஹம் தவா ப்ரியகர ப்ரியக்ருத் வதேவ
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –10-

ஸ்ரீ யதி ராஜனே… ஆ ஆ ஐயோ ஐயோ.. நான் மனத்தாலும் செய்கையாலும் சொல்லாலும் சர்வ காலத்திலும் மூன்று வித
அபசாரங்களையும் செய்து கொண்டு உமக்கு பிரியத்தை செய்பவன் போல நடித்திக் கொண்டு
கால ஷேபம் செய்து கொண்டு இருக்கிறேன் ..ஆகையால் நான் மூர்க்கன் .

ஹா ஹந்த ஹந்த மநஸா
பகவத் பாகவத ஆச்சார்யர்களை அனுசந்திக்கக் கண்ட மனஸ்ஸூ படும் பாடே

ஹா ஹந்த ஹந்த-
வீப்சையால் விஷாதிசயம் தோற்றுகிறது-
தாம் அத்தலையில் கரண த்ரயத்தாலும் பண்ணுகிற அபராதங்களையும் வஞ்சனைகளையும் பார்த்து –
அவற்றை விண்ணப்பம் செய்வதற்கு முன்பே துக்கம் இரட்டித்து ஐயோ என்கிறார் –
அபராதங்களைச் செய்வது உபகாரக விஷயத்திலே யாகையாலே பொறுக்க மாட்டிற்று இலர்

க்ரியயா
க்ரியா சப்தத்தால் க்ரியா ஹேதுவான காயத்தை லஷிக்கிறது –

ச வாசா
உத்தேஸ்யங்களைக் குறித்து அஞ்சலி பிரணாமாதி அனுகூல விருத்தி பண்ணுகைக்கும் –
தத் குணங்களைப் புகழுகைக்குமாகக் கண்ட காயமும் வாக்கும் அபராதங்கள் பண்ணி அநர்த்தப்படுவதுக்கு உறுப்பாவதே –

மநஸா க்ரியயா ச வாசா –
சகாரம் சமுச்சயார்த்தகம் -அது தானும் ஒரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் செய்யப் பெற்றேன்

மநஸா க்ரியயா ச
பிரமாதிகமாக அன்றிக்கே சங்கல்ப பூர்வமாயிற்றுச் செய்வது

வாசா
நினைத்த போதே சொல்லில் அறிந்து பரிஹரிப்பார்கள் என்று நினைத்து செய்த பின்பாயிற்று சொல்லுவது

வாசா
அது தானும் கூட மாயோ -பிறர் அறிந்ததும் என் வாயாலே காணும்

மநஸா க்ரியயா ச வாசா –
வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் -என்கிறதுக்கு
எதிர் தட்டாய் கிடீர் அடியேன் செய்து இருப்பது –

சததம் –
ஸ்வரூப அனுரூபமான விருத்தியில் அந்வயித்தவருக்கு கால விசேஷத்தில் விச்சேதம் வருகை
அஸஹ்யமானால் போலே யாய்த்து அந்த அபதார கரணத்திலும் கால விசேஷத்தால் உண்டான விச்சேதம் அஸஹ்யமான படி –

சராமி –
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே சர்வ அவஸ்தையிலும் அபராதம் அனுவர்த்திக்கிறபடி –

யோ அஹம் –
பாபிஷ்ட ஷத்ர பந்துச -என்கிறபடியே பாபம் செய்கையிலே பிரசித்தனான அடியேன் —
யோ வஜ்ர பாத -இத்யாதிகளாலே
ய சப்தம் பிரசித்த பராமர்சி இறே

யோ அஹம் –
இப்பிரசித்தியை இட்டு நிரூபிக்கும் படி காணும் அடியேன் இருப்பது

சராமி –
அனுதாபம் பிறந்து க்லேசிக்கிற தசையிலும் அபராதங்களை செய்கையை தவிருகிறிலேன்

சததம் –
தம்தாம் பிரசித்தியை ஒரு நாளும் கை விடார்கள் இறே –
அபராதங்கள் தான் எவை என்ன –

த்ரிவித அபசாரான்
ஓர் ஒரு விஷயத்தில் அபராதமே அதி க்ரூரமாய் இருக்க மூன்று அபராதங்களிலும் அந்வயித்த படி –
அது தான் கதி பய அபதாரத்திலே ஸூவறுகை அன்றிக்கே-நாநா வியாபாரங்களிலும் அந்வயித்த படியைப்
பற்ற பஹு பவன பிரயோகம் பண்ணுகிறது
அஹம் சர்வம் கரிஷ்யாமிக்கு எதிர் தட்டு இருக்கிறபடி

த்ரிவித அபசாரான்-
மூன்று வகைப் பட்டு இருந்துள்ள அபசாரங்களைக் காணும் அபராதங்கள் இருப்பது என்கிறார் –
அவை யாவன -அக்ருத்ய கரண க்ருத்ய அகரண -பகவத் அபசாரமும் -பாகவத அபசாரமும் -அசஹ்ய அபசாரமும் -என்று –

நிஷித்தங்களை நாலு விதமாகச் சொல்லா நிற்க இங்கு அபராதங்களை மாத்ரம் சொல்லுகிறது –
விதி நிஷேதங்கள் இரண்டும் பகவத் ஆஜ்ஞா ரூபங்கள் ஆகையாலே
தத் அதிக்கிரமம் பகவத் அபசாரத்திலே சேரும் என்னும் அபிப்ப்ராயத்தாலே யாதல்
அக்ருத்ய கரணாத்ய பேஷயா பகவத் அபசாராதிகள் க்ரூரங்கள் ஆகையாலே அவற்றினுடைய அனுஷ்டானத்தைச் சொன்ன போதே
தத் அனுஷ்டானம் கிம்புனர் நியாய சித்தம் இறே என்னும் அபிப்ராயத்தாலே யாதல் –

அங்கன் அன்றிக்கே
மனசேத்யாதிக்கு சேர கரண பேத நிபந்தனமான கார்ய பேதத்தை திரு உள்ளம் பற்றி த்ரிவித அபசாரம் என்கிறார் ஆகவுமாம்
அப்போதைக்கு ஒரொரு அபசாரங்களை கரண த்ரயத்தாலும் அனுஷ்டித்தேன் என்று பொருளாகக் கடவது-

ஸோஹம்
அபராத பண்ணின கையில் அராத இந்த பாபிஷ்டன்

ஸோஅஹம் –
கீழ்ச் சொன்னபடியே அபராதங்களைச் செய்யா விடில் சத்தை பெறாத அடியேன்

தவா ப்ரியகர
ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அன்வயித்து வாழ வேணும் என்று இதுக்கு கிருஷி
பண்ணிக் கொண்டு போகும் தேவரீருக்கு
பண்ணின கிருஷியைப் பாழாக்கி அநிஷ்ட கரனாய்ப் போருமவன்-

ப்ரியக்ருத் வதேவ
அர்த்த சித்தி இதுவாய் இருக்க -பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் இவன் அத்தனை
ப்ரேமம் உடையாரும் கைங்கர்ய ருசி உடையாரும் இல்லை -ஆன பின்பு இவனே நமக்குப் பிரிய கரன் -என்று
தேவரீரும் நினைக்கும்படி யாய்த்து வர்த்திப்பது –

தவ-
1-சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குருர் -ச ஏவ சர்வ பூதா நாம் உத்தர்த்தா நாஸ்தி சம்சய -என்கிறபடியே
சர்வ உத்தாரகரான தேவரீருக்கு என்னுதல்-

2-வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித –என்கிறபடியே
பர துக்கம் பொறுக்க மாட்டாத ம்ருது பிரக்ருதிகரான தேவரீருக்கு என்னுதல்

அப்ரியகர –
உபகாரத்தைப் பார்த்தாலும் -சௌகுமார்யத்தைப் பார்த்தாலும் பிரியமே செய்யத் தக்க விஷயத்தில் அப்ரியத்தைச் செய்யா நின்றேன் –
சிஷ்யன் ஆசார்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் என்கைக்கு எதிர்தட்டாய் யாயிற்று அடியேன் நிலை என்கிறார்

அப்ரியகர-
நெஞ்சாலும் அபிரியம் நினைக்க ஒண்ணாத விஷயத்தில் கிடீர் அடியேன் அபிரியத்தை காயிகமாகச் செய்வது என்கிறார்
ஆகில் நம் முன் நிற்கும் விரகு என் என்ன

ப்ரியக்ருத் வத் –
தேவரீர் திரு உள்ளம் அறிய தேவரீருக்கு அபிரியம் செய்தேனே யாகிலும் -அது தேவரீர் திரு உள்ளத்தில் தட்டாத படி
தேவரீர் திரு உள்ளத்தாலே பிரியம் செய்வான் போலே வர்த்தித்தேன் –
அது கொண்டு தேவரீர் திரு முன்பே நிற்கலாய்த்து என்கிறார் –
ராவணன் சந்நியாசி வேஷத்தைக் கொண்டு பிராட்டியை வஞ்சித்தால் போலே அடியேன் சாத்விக வேஷத்தைக் கொண்டு
தேவரீரையும் வஞ்சித்தேன் என்று கருத்து

ஏவம் காலம் நயாமி
இப்படி க்ரித்ருமமான பரிமாற்றத்தால் காலத்தைக் கழியா நின்றேன்

ஏவம் காலம் நயாமி –
இப்படி ஆசார்ய அபசாரம் பண்ணாது ஒழியில் அடியேனுக்கு காலம் செல்லாது என்கிறார்

கால மேவம் நயாமி
குணானுபவ கைங்கர்யங்களே போது போக்கு ஆகையும்-முமுஷுப்படி -என்கிறபடியே குணானுபவ கைங்கர்யங்களாலே
போக்கத் தக்க காலத்தைக் கிடீர் அடியேன் அவ் விஷயங்களை வஞ்சித்து அதுவே யாத்ரையாகப் போக்குகிறது என்கிறார் –

யதிராஜ ததோஸ்மி மூர்க்க
ரக்ஷண சாமர்த்தியமும் உடைய தேவரீரும் சன்னிஹிதராய் இருக்க இவ் வஸ்து அபராதத்திலே கை கழிகையாலே
என்னத்தனை மூர்க்கர் இல்லை என்கிறார் –

யதி ராஜ-
இவர் இப்படி விண்ணப்பம் செய்தவாறே இவர் செய்த அபராதங்களை தம் திரு உள்ளத்திலே தட்டாமல்
ஸ்வ அபராதங்களை அறிந்து அனுபவித்து பிராப்த விஷயத்தில் அவற்றை விண்ணப்பம் செய்யும் படி ஓர் அதிகாரியும் உண்டாவதே -என்று
இவர் திரு உள்ளம் உகந்து இருக்கும் படி இருக்கும் இருப்பைக் கண்டு -யதி ராஜ -என்று சம்போதிக்கிறார்-

அன்றிக்கே –
இவர் அனுதாபத்தைக் கண்டு இவர் இவ் வபசார கரணத்தில் நின்றும் மீண்டாராகும் விரகு ஏதோ வென்று
தம் திரு உள்ளத்தில் ஓடுகிற படி தோற்ற இருக்கும் இருப்பைக் கண்டு ஆஸ்ரித விஷயத்தில் உஜ்ஜீவன யத்னமே யன்றோ
தேவரீருக்கு புகர் என்று -ஸ்ரீ யதி ராஜ -சப்தத்தாலே சம்போதிக்கிறார் ஆகவுமாம் –

இப்படி சாநுதாபமாக ஸ்வ அபராதங்களை விண்ணப்பம் செய்த பின்பும் அபசாரங்களிலே அன்வயிக்கிற படியைக் கண்டு –
அபசாரங்கள் என்று அறிந்து வைத்து அவற்றில் அன்வயிக்கப் பெறுவதே என்று
ததோஸ்மி மூர்க்க —
ஆகாது என்று அறிந்து வைத்து அவை தன்னையே செய்கையால் இறே அடியேன் மூர்க்கன் ஆகிறது என்கிறார் –

————————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–9- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 30, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

கீழும் மேலும் ஸ்வ கதமாக அனுசந்திக்கிற வஞ்சநாதி தோஷங்களுக்கு எல்லாம் நிதானத்தை விண்ணப்பம் செய்கிறார் –
நித்யம் த்வஹம் இத்யாதியால்
அன்றிக்கே –
இவர் மித்யாசராமி -என்றவாறே -நீர் பிறர் விஸ்வசிக்கும் படி மித்ரா வேஷத்தை தரித்து திரியா நின்றீர் யாகில்
உமக்கு குரு மந்திர தேவதைகளில் விஸ்வாசம் இருக்கும் படி எங்கனே என்ன –
ஐயோ அடியேனுக்கு இவ் விஷயங்களில் விஸ்வாசம் இல்லாமை மாத்ரம் அன்றிக்கே
அவ் விஷயங்களை பரிபவியா நின்றேன் -என்கிறார் –

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத்தேவதா மபி ந கிஞ்சித ஹோபி பேமி
இத்தம் சடோப்ய சடவத் பவதீய சங்கே
ஹ்ருஷ்டஸ் சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –9-

ஸ்ரீ யதி ராஜனே நான் நித்ய காலமும் ஆச்சர்யனையும் மந்தரத்தையும் மந்தர ப்ரதிபாத்யமான தேவைதயும் அவமதிக்கிறேன் .
சிறிதும் அச்சம் படுவது இல்லை..இது என்ன விந்தை –இப்படி ஏமாற்றும் குணம் உடையவன் ஆனாலும் உம் அடியவர் திரளில்
மோசக்காரர் அல்லாதவர் போல சந்தோஷமாக நடிக்கிறேன் –ஆகையால் நான் மூர்க்கன்–

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்-
அஹேதுகமாக அங்கீ கரித்து -ஸ்வ உபதேசத்தால் தத்வ ஞானத்தைப் பிறப்பித்து –
ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரகாசகமான திரு மந்திரத்தையும் சார்த்தமாக ப்ரசாதித்து அருளி ஸ்வரூப விருத்தங்கள் புகுராதபடி
இரவு பகல் அவஹிதனாய் நோக்கிக் கொண்டு போரும் ஆச்சார்யன் அருளிச் செய்தபடி அனுஷ்டியாமையாலும் –
தத் உபதிஷ்ட மந்த்ர ரஹஸ்யங்களை அநதி காரிகளுக்கு உபதேசிக்கையாலும்
சர்வ காலமும் பிரதி க்ஷணம் பரிதவியா நின்றேன் –

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம் –தத்தேவதாமபி
யாவதாத்மா பாவியாக ஸ்லாக நீயமான விஷயங்களை கிடீர் அடியேன் நித்தியமான பரிபவிப்பது

அஹம் து
என்று பரிபவிக்கிற தம்முடைய வை லஷண்யத்தைச் சொல்லுகிறார் –
அதாவது சம்சாரிகளிலும் முமுஷூக்களிலும் வேறு பட்டு இருக்கை-
அதாவது சம்சாரிகள் ஸ்வரூப ஜ்ஞ்ஞர் அல்லாமையாலே குரு மந்திர தேவதைகளை பரிபவிப்பார்கள்
முமுஷூக்கள் ஸ்வரூப ஜ்ஞ்ஞர் ஆகையாலே ஸ்லாகியா நிற்பார்கள்
அடியேன் ஸ்வரூப ஜ்ஞனாய் இருந்து வைத்து பரிபவியா நிற்பன் என்கிற இதுவாய்த்து அடியேன் வை லஷண்யம் –

நித்யம் து பரிபவாமி
உச்சி வீடு விடுமா போலே அல்ப கால விச்சேதமும் இன்றிக்கே பரிபவியா நின்றேன்

அஹம் து நித்யம் பரிபவாமி
லோகத்தில் உள்ளவர்கள் ப்ரம ப்ரமாதிகளாலே காதா சித்கமாக பரிபவிப்பார்கள் ஆகில் அடியேன் அப்படி இன்றிக்கே புத்தி பூர்வகமாக
யாவத் காலமும் பரிபவியா நின்று கொண்டு அதில் நின்றும் கை வாங்குகிறிலேன்

அஹம் து நித்யம் பரிபவாமி
லௌகிகரும் கூட நித்யமாக ஆதரிப்பார்கள் ஆகில் அடியேன் நித்யமாக பரிபவியா நிற்பன் என்கிறார்

து சப்தம்
ஏவ காரார்த்தமாய் அடியேனைப் போலே நித்தியமாய் பரிபவிப்பார் மற்று ஒருவர் இல்லை என்கிறார் ஆகவுமாம் –
இப்படி பரிபவிக்கிறது தான் எவற்றை என்னில்

அவ்வளவும் இன்றிக்கே
மந்த்ரம் பரிபவாமி
அனுசந்தாக்களுக்கு ரக்ஷகமாய் இருக்கையாலே -மந்த்ர ஸ்வ பாவமாய் -சகல வேதாந்த சாரமான திரு அஷ்டாக்ஷரத்தையும்
ஆச்சார்யர் அதுக்கு அருளிச் செய்த யதார்த்தத்தையும் மறக்கையாலும்-அயதார்த்தத்தை அதுக்கு அர்த்தமாக நினைக்கையாலும்
அதின் சீர்மை குன்றும்படி பரிதவியா நின்றேன் –
அவ்வளவும் இன்றிக்கே –

தத்தேவதா மபி-நித்யம் – பரிபவாமி
அந்த மந்திரத்துக்கு சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வ வேஷத்தாலே ப்ரதிபாத்யனான ஸ்ரீ எம்பெருமானையும்
தத் ஸமாச்ரயணத்தைப் பற்ற ஸ்ருஷ்டங்களான கரண த்ரயத்தையும் தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காமையாலும் –
தத் இதர விஷயங்களில் ப்ரவணம் ஆக்குகையாலும் பரிதவியா நின்றேன் –

குரும் ச மந்த்ரம் தத்தேவதாமபி –
ஸ்வ உபதேசாதிகளால் தேஹாத்மா அபிமானம் முதலான அஜ்ஞ்ஞானத்துக்கு நிவர்த்தகனாய் –
ந குரோர பரஸ் த்ராதா-என்கிறபடியே
இவன் தனக்கு சர்வ வித ரஷகனான ஸ்ரீ ஆசார்யனையும் –

மந்தாரம் த்ராயதே இதி மந்திர -என்கிறபடியே
ஸ்வார்த்த பிரகாச நத்வாரா -இவன் தனக்கு ஸ்வ ஆச்சார்ய உபதேஷ்டார்த்தங்களில் விஸ்ம்ருதியும்-
தத் அனுரூபமான அனுஷ்டான ப்ரஸ்யுதியும் வாராமல்
ரஷகமான மந்தரத்தையும்

அம் மந்த்ரத்துக்கு உள்ளீடாய் ஸ்வ ஆசார்யனாலே இவ்வாத்ம வஸ்துவுக்கு ப்ராப்த சேஷியாக உபதேசிக்கப் பட்ட ஸ்ரீ தேவதையையும்
கிடீர் அடியேன் பரிபவிப்பது -என்கிறார் –

சகாரம்
சமுச்சாயார்தமாய் -குரு மந்திர தேவதைகளையும் என்று சமுச்சயிக்கிறது

அபி சப்தம்
விரோதார்த்தமாய் –
யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ–ஸ்வேதா -6-23-என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர ப்ரதே குரௌ பத்ரிஷூ பக்திஸ் சதா கார்யா சாஹி பிரதம சாதனம் –ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
இச் சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு பிரதம காரணமாக விதிக்கப் பட்ட பக்திக்கு விஷயமான குரு மந்திர தேவதைகளையும்
அதுக்கு எதிர் தட்டாக பரிபவியா நின்றேன் -என்னும் இவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது –

இதில் குரு பரிபவமாவது –
கேட்ட அர்த்தத்தின் படி நடவாது ஒழிகையும்-அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் –

மந்திர பரிபவமாவது –
அதின் அர்த்தங்களின் விஸ்ம்ருதியும் -விபரீதார்த்த பிரதிபத்தியும்

தேவதா பரிபவமாவது –
கரண த்ரயத்தையும் தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காது ஒழிகையும் -இதர விஷயங்களில் பிரவணம் ஆக்குகையும் –
இவை இறே அடியேனுக்கு உள்ளது -என்று கருத்து –

தத்தேவதா மபி ந கிஞ்சித ஹோபி பேமி-
எப்போதும் உத்தேச்யமாகவே அநு சந்தித்து கௌரவிக்கத் தக்க குரு மந்த்ர தேவதைகளை அநவரதம் பரிபவித்து
இதுவே யாத்ரையாய்ப் போரா நின்றால்-இதிலே ஒரு சுற்றும் பயம் இன்றிக்கே இரா நின்றேன்

இத்தம் ச ஸோபி
மேல் எழவென்றிக்கே உள்ளூற ஆராய்ந்து பார்த்தால் சக்தனாய் இருக்கச் செய்தேயும்

அசடோப்ய அசடவத்–சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி —
ஆச்சார்ய விஷயத்திலும் -அவன் உபகரித்த மந்த்ர விஷயத்திலும் -தத் ப்ரதிபாதிதமான தேவதா விஷயத்திலும்
யுக்த கிரமம் தப்பாமல் யதா பிரதிபத்தியோடே வர்த்திக்குமவர்களாய்
தேவரீருடைய திருவடிகளில் சம்பந்தத்தை இட்டே நிரூபிக்கப் படுபவர்களான மஹாத்மாக்கள் நடுவே
குரு மந்த்ர தேவதைகள் அளவில் இவன் அத்தனை ப்ரேம அதிசயம் உடையவர்கள் இல்லை என்று தோற்றும்படி
நிரதிசய ஹர்ஷ யுக்தனாய்க் கொண்டு ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு இதஸ் ததஸ் சஞ்சரியா நின்றேன்

இப்படி இருந்து பரிபவிக்கையில் பயம் தான் இல்லையோ என்ன
ந கிஞ்சித ஹோபி பேமி –
ந கிஞ்சித்
அல்பாம்சமும் பயப்படுகிறது இல்லை –
லோகத்தில் புராண வைராக்கியம் போலே -ஸ்ரவண தசையில் பயம் உண்டாகலாம் இறே –
அதுவும் இல்லை அடியேனுக்கு என்கிறார்

அஹோ –
தம்முடைய நிலை தமக்கு ஆச்சர்யமாகத் தோற்றுகையாலே-அஹோ -என்கிறார்
அன்றிக்கே –
இப்படி பிராப்த விஷயங்களைப் பரிபவித்தாலும் பரிபவித்தோம் என்கிற பயம் அல்பாம்சமும் இல்லாது ஒழிவதே
என்று வியசனப் படுகிறார் என்றுமாம்

கிஞ்சித் அபி ந பிபேமி -என்ன வேண்டி இருக்க –
முன்னே ந கிஞ்சித் -என்கிறது –
நிஷேத்யமான பய லேசத்தினுடைய அத்யந்தா பாவத்தைப் பற்ற

மத்யே -அஹோ -என்று பிறந்த ஆச்சர்ய விஷாதங்கள் உள் அடங்காமையாலே –
நீர் இப்படி குரு மந்திர தேவதைகளை பரிபவிப்பது தான் பிறர் அறியும்படியாயோ என்ன கூடமாய்க் காணும் என்கிறார்

இத்தம் சடோப்ய –
கீழ்ச் சொன்ன படியே குரு மந்திர தேவதைகளை கூடமாய் பரிபவித்து பய லேசமும் இன்றிக்கே இருந்தேனே யாகிலும்

அசடவத் –
அது பிறர் நெஞ்சில் தட்டாத படி கரண த்ரயத்தாலும் தேவரீர் திரு உள்ளத்துக்கு அபிமதம் செய்பவன் போலே வர்த்தித்தேன் –
அது கொண்டு –

பவதீய சங்கே –
தேவரீருடைய சம்பந்தமே நிரூபகமாய் இருக்குமவர்கள் அடியேனை பாவ பரிஷை பண்ணாமல் ஸ்வ கோஷ்டியில் புகுர விட்டார்கள்

ஹ்ருஷ்டஸ் –
இவர்களை வஞ்சித்து இவர்கள் சங்கத்தில் புகுந்தேனாவது எப்போதோ என்று இருந்த அடியேன்
அது பெற்றவாறே மனஸ் சந்தோஷம் உடையவனாய்

சராமி –
நிவாரகர் இல்லாமையாலே யதேச்சமாக சஞ்சரியா நின்றேன்

பவதீய சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி
இவ்வஞ்சனை தான் புறம்பே செய்யப் பெற்றதோ
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே -86- என்கிறபடியே –
இவ்வாத்ம வஸ்துவுக்கு ப்ராப்த சேஷியான தேவரீர் சம்பந்திகள் திறத்தில் கிடீர் செய்யப் பெற்றது -என்கிறார்

அன்றிக்கே –
அடியேனுக்கு ஸ்வ வஞ்சனத்தால் பிறந்த ஹர்ஷத்தை அவர்கள் ஸ்வ கோஷ்டியில் புகுருகையால்
வந்தது என்னும் படி காணும் -என்கிறார் ஆகவுமாம்

யதிராஜ
அடியேனுக்கு இந்த்ரிய நிக்ரஹத்திலே ருசியை உண்டாக்கி அன்றோ தேவரீர் ஸ்ரீ யதிராஜராக வேண்டியது என்கிறார் –
ரஞ்ஜ நாத் ராஜா விறே

பவதீய சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி யதிராஜ
இந்த்ரிய நியமனத்தால் புகர் பெரும் தேவரீருக்கு -அடியேன் இந்த்ரிய வச்யனாய் தேவரீர் சம்பந்திகளை வஞ்சித்து திரிவதே -என்கிறார்
அறிந்து வைத்து வஞ்சிப்பான் என் என்ன

ததோஸ்மி மூர்க்க–
இப்படி குரு மந்த்ராதிகளை பரிஹரித்து அதில் ஒன்றும் பயமும் இன்றிக்கே -விலக்ஷணர் நடுவே புக்கு –
நானும் அவர்களில் ஒருவன் என்று கண்டவர்களுக்குத் தோற்றும் படி மசக்குப் பரலிட்டு களித்துத் திரியா நின்றேன் –
என்பது யாது ஓன்று உண்டோ அத்தாலே என் அத்தனை மூர்க்கர் இல்லை –

ததோஸ்மி மூர்க்க —
கீழ்ச் சொன்னவை எல்லாம் ஸ்வரூப விரோதிகள் என்று அறிந்து இருக்க பய லேசமும் இன்றிக்கே
அவற்றை விட மாட்டாமையால் செய்கையாலே மூர்க்கன் ஆகிறேன் –

மூர்க்கோஸ்மி-
அடியேனுக்கு மௌர்க்க்யம் யாயிற்று சத்தை என்கிறார் –
கீழ் கருதி நோபி –என்றும் –
சிஷ்ட ஜநௌக மத்யே -என்றும் சாமான்யேன சொன்னதை –
பவதீய சங்கே -என்று ஒரு விசேஷத்திலே பர்யவசிப்பிக்கிறார் –
இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்திகள் யாய்த்து சாஸ்தரார்த்த வித்துக்களும் தத்தர்த்த பிராமாண்ய வாதிகளும் என்கிறது –

—————————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–8- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

நீர் சரணாகதர் அன்றோ -உமக்கு ஆநு கூல்யாதிகள் இல்லையோ -அவை ஜ்ஞான கார்யங்கள் அன்றோ என்ன
அவை விபரீதமாய்க் காணும் இருப்பது என்கிறார் -துக்கா வஹோ அஹம்-இத்யாதியால் –

துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட
சப்தாதி போக நிரதஸ் சரணா கதாக்ய
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே
மித்யாசராமி யதிராஜ ததோ அஸ்மி மூர்க்க –8-

ஸ்ரீ யதி ராஜனே நான் அல்லும் பகலும் துஷ்ட வ்யாபாரங்களை செய்பவன்
உமக்கு துக்கத்தை தருபவன்
சரணாகதன் என்று பெயர் வைத்து கொண்டு விஷயங்களின் போகத்தில் ருசியோடு அனுபவித்துக் கொண்டு
சாதுக்களாய்-பெரியோர்கள் நடுவில் உமது திருவடிகளில் பக்தி உடையவன் போல்
பொய்யாக- வேஷம்- நடிக்கிறேன் பொல்லாதவன் ஆகிறேன்..

துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட–
தேவர் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகமாம்படியான ஸ்வரூபத்தை யுடைய நான் இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியான
தேவரீருக்கு இடைவிடாமல் ஹர்ஷாவாஹனாய்ப் போர வேண்டி இருக்க –
அது செய்யாத அளவன்றிக்கே
தத் விருத்த்யமாக துக்காவஹோமானாய்க் கொண்டு போரா நின்றேன் –
இது என்னுடைய பிரதம பார்யா நிஷ்டை இருந்தபடி –

துஷ்ட சேஷ்ட
தயாதி குண பூர்ணரும் ஏறிட்டுப் பார்க்க அருவருக்கும் படி துர் விருத்தியே யாய்த்து செய்து போருவது-

துக்கா வஹோ அஹம் –
இது வாய்த்து அடியேனுடைய ஆனுகூல்ய சங்கல்ப்பம் –
சர்வ பிரகாரத்தாலும் ஆனுகூல்ய சங்கல்பம் செய்கைக்கு யோக்யமான விஷயத்தில்
ப்ராதி கூல்யம் செய்கை மாதரம் அன்றிக்கே
ப்ராதி கூல்ய கரணத்தால் உண்டான துக்கத்தை தேவரீர் அனுபவிக்கும் படி பண்ணினேன் -என்கிறார் –

துக்கா வஹோ அஹம் –
ஆனுகூல்யம் செய்கையை இட்டு நிரூபிக்கை தவிர்ந்து துக்காவஹன் என்றாய்த்து அடியேனுக்கு நிரூபகம் இருக்கும் படி

அஹம் –
இப்படியானது தான் மற்று ஆரேனும் ஒருவன் என்று ஆறி இருக்கலாமோ
ஸ்ருஷ்டச்த்வம் வன வாசாய -என்கிறபடியே
தேவரீர் திருவடிகளிலே சமஸ்த வித கைங்கர்யங்களையும் செய்கைக்கு
இட்டுப் பிறந்த அடியேன் காணும் துக்காவஹன் என்னலாம் படி யாவது –

அநிசம் –
இது தான் ஒரு காலத்தில் அன்றிக்கே ஸ்வரூபம் உள்ளதனையும் இதுவே யாத்ரை யாய்த்து என்கிறார்
இப்படி துக்கவஹனாய் இருந்தது யாருக்குத் தான் என்னில்

தவ
மற்றை யாரேனும் விஷயத்திலே யாகில் ஆறி இரேனோ –
காமாதி தோஷ ஹரம்-என்று கீழ்ச் சொன்னபடியே ஆஸ்ரயித்து துக்க நிவர்த்தகரான தேவரீர்
விஷயத்திலே கிடீர் அடியேன் துக்கத்தைச் செய்வது

தவ துக்கவஹா –
இதுவாய்த்து அடியேன் செய்யும் பிரத்யுபகாரம் என்கிறார் –
அன்றிக்கே –
ரிபூணாமபி வத்சலா என்கிறபடியே
குற்றம் செய்தவர்கள் திறத்திலும் வத்சலரான தேவரீருக்கு என்னுமாம் –

துஷ்ட சேஷ்ட
இப்படி உபகாரகர் விஷயத்தில் துக்கம் செய்வது மாநசிகமாக வன்றிக்கே
காயத்தாலும் துர்வ்யாபாரங்களை செய்தாயிற்று துக்கத்தை உண்டாக்குவது என்கிறார் –
அவை யாவன -தேவதாந்திர பஜநாதிகள்

துஷ்ட சேஷ்ட
மானசிகமாகவும் துக்கம் செய்ய நினைக்க ஒண்ணாத விஷயத்தில் அடியேன் காயிகமாக துர்வ்யாபாரங்களை
செய்தாய்த்து துக்கத்தைச் செய்வது என்கிறார்
இது தனக்கு அடி என் என்ன

சப்தாதி போக நிரதஸ்
தேவரீர் திருவடிகளில் கைங்கர்யத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து அதுக்கு விருத்தமான சப்தாதி விஷய அனுபவத்தில்
ஒரு சர்வ சக்தியாலும் விடுவிக்க ஒண்ணாத படி மிகவும் பிரவணனாய்ப் போருகிறவன்

சரணா கதாக்ய-
சரணாகதன் என்கிற பேர் மாத்திரம் உள்ளது -அதிலும் நிஷ்டை இல்லை என்கை –
இத்தால் மத்யம பதார்த்த நிஷ்டா ஹானி சொல்கிறது

சப்தாதி போக நிரதஸ்-என்கையாலே
த்ருதீய பதார்த்த நிஷ்டை இல்லை என்னும் இடம் சொல்லிற்று –

இதர விஷய ப்ரவணனாய் துஷ்ட வேஷ்டானாகையாலே இவனைக் கைக் கொள்ளப் போகிறது இல்லை –
சரணாகதன் என்றும் பேர் இட்டு இருக்கையாலே கை விடப் போகிறது இல்லை
இப்படி தள்ளவும் கொள்ளவும் போகாது இருக்கிற இவனை நாம் என் செய்வது என்று புண் படும் படி இருக்கையாலே
நித்யம் துக்காவாஹனாயே இருக்கை என்கை –

சப்தாதி போக நிரத-
அனுதபிக்கைக்கு மனஸ்ஸூ தான் இல்லை –
அது சப்தாதி விஷயங்களில் மிகவும் ஆசக்தமாகைக்கு த்வாரமாய்த்து என்கிறார் –
ரதி -மன கார்யம் இறே
நீர் சப்தாதி விஷய பிரவணராய் நிந்திதங்களைச் செய்தீர் ஆகில் நமக்கு துக்கா வஹம் ஆகும் படி எங்கனே என்ன –

சரணாக தாக்ய-
சரணாகதன் தன் குறை சரண்யனது அன்றோ –
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்றும் –
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம -என்றவனோடு பழகினவன் அன்றோ தேவரீர்

சரணா கதாக்ய –
பிரசித்தி மாத்ரமே யாய்த்து உள்ளது

சரணா கதாக்ய –
தேவரீர் துக்கப் படுக்கைக்கு போரும் -அதில் வ்யுத்பத்தி இல்லை என்கிறார் ந நாம்நி வ்யுத்பத்தி இறே

உமக்கு சிஷ்ட பரிக்ரஹம் உண்டே -அது ஆனுகூல்யாதிகளிலே ஏக தேசம் அன்றோ என்ன
அது அடியேனுடைய வஞ்சன சாமர்த்தியத்தால் உண்டான இத்தனை போக்கி தத்யம் அன்று என்கிறார் மேல் –
வஞ்சித்த படி தான் எங்கனே என்ன

த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே-மித்யாசராமி யதிராஜ —
நம்படி இதுவானால் -நமக்கும் இவ்விஷயத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு என்று நடுங்கிக் கடக்க வர்த்திக்க வேண்டி இருக்க
அது செய்யாதே தேவரீர் திருவடிகளில் ப்ரேம பரிபூர்ணரரைப் போலே க்ருத்ரிமமாக வரியா நின்றேன் –

தவ பாத பக்த இவ –
அடியேனை சிஷ்டர் பரிக்ரஹிக்கைக்கு அடியேன் அனுஷ்டித்த உபாயம் –
தேவரீர் திருவடிகளிலே ப்ரீதி உள்ளவன் போலே வர்த்தித்தது –
தத் பின்னத்வே சதி தத் கத பூயோ தர்மம் இ றே -சாத்ருச்யம்

தத் பேதம் –
பக்தி இல்லாமை -தத் கத பூயோ தர்மம் -பக்திமான்கள் செய்யும் செயல்கள் –
அவை யாவன ஸ்வர நேத்ராங்க விக்ரியாதிகள்

சிஷ்ட ஜனக மத்யே –
ஈவ்வநுகார மாத்ரத்தாலே பிரமாண பரதந்த்ரரானவர்கள் அடியேனை மெய்யே தேவரீர் சம்பந்தியாக
பிரதிபத்தி பண்ணி ஸ்வ கோஷ்டியிலே புகுர விட்டார்கள் –

மித்யா சராமி –
அவ்வளவிலும் ஒரு விசேஷம் இன்றியே அக் கோஷ்டியின் நடுவே கோமுக வ்யாக்ரம் போலே
அவர்கள் மேல் மேலும் விஸ்வசிக்கும் படி அன்ருதத்தையே அனுஷ்டியா நின்றேன் –
அதாவது பூர்வ அநு காரத்தை விடாது ஒழிகை –

சிஷ்ட ஜநௌக மத்யே மித்யாசராமி –
ஒருவர் இருவர் அன்றிக்கே மஹா சங்கமான சிஷ்ட ஜனங்கள் உடைய நடுவில் அடியேன்
அன்ருத்தத்தையே அனுஷ்டியா நின்றேன் என்கிறார் –
இத்தால் மஹா ஜனோ யேன கதஸ் ஸ் பந்தா –வன பர்வம் -313-17-என்கிற மார்க்கத்தையும் தப்பினேன் -என்கிறது –
அதாவது பாவ பந்தம் இல்லாமை –

யதிராஜ
இக்கோஷ்டிக்கு நிர்வாஹகர் தேவரீர் என்று அறிந்து வைத்துச் செய்யும் வஞ்சனத்தை தவிருகிறிலேன்-

அன்றிக்கே –
தேவரீர் இக் கோஷ்டியின் நடுவே இந்த்ரிய ஜயத்தால் புகர் பெற்று சஞ்சரிக்குமா போலே யாய்த்து
அடியேன் வஞ்சனத்தால் புகர் பெற்று சஞ்சரிக்கும் படி என்கிறார் ஆகவுமாம்

அங்கனும் அன்றிக்கே –
தேவரீர் இக் கோஷ்டியின் நடுவே சத்யத்தை ஆச்ரயித்து புகர் பெறுமா போலே யாய்த்து
அடியேன் மித்யா சரணத்தாலே புகர் பெறும்படி என்கிறார் ஆகவுமாம் –

நம்மை இக் கோஷ்டிக்கு நிர்வாஹகராக அறிந்து வைத்து பயமும் இன்றிக்கே இப்படி வஞ்சனத்தை செய்வான் என் என்ன

ததோ அஸ்மி மூர்க்க —
நிஸ் ஸ்நேஹனாய் இருக்கச் செய்தே ஸ்நேஹ யுக்தரைப் போலே அனுகூல கைங்கர்யங்களை ஆசைப்படுவது –
அர்த்திப்பதாய்க் கொண்டு க்ருத்ரிமமாக வர்த்தியா நின்றேன் என்பது யாது ஒன்றாலே –
அத்தாலே மூர்க்கனாகா நின்றேன் என்கிறார் –

ததோ அஸ்மி மூர்க்க –
ஆகை இறே அடியேன் மூர்க்கன் ஆகிறேன் -என்கிறார்

மூர்க்கோ அஸ்மி
இம் மௌர்க்யம்-மூர்க்கம்- அடியேனுக்கு ஸ்வரூபம் என்கிறார் –
ஹித அஹித விவேகம் இன்றிக்கே பிடித்தது கை விடாமல் இருக்குமவனே
மூர்க்கனாவது -மூர்க்க வைதேய பாலிஸா -என்று இறே அமர கோசம் –

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–7- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் ஹேதுவான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்தித்தவர்
மீளவும்
பத த்ரய நிஷ்டா விரோதிகளாய் அநாதி காலமே பிடித்துப் பண்ணிப் போந்த
அக்ருத்ய கரண பகவத் பாகவத அபராதிகளையும் –
இப்போது பண்ணிப் போகும் ஸூத்ர மந்த்ர ஸூத்ர தேவாந்தர பஜனாதிகளையும் –
இவை தொடக்கமானவற்றையும் அனுசந்தித்து –
இப்படி தோஷ பூயிஷ்டமான நான் தேவரீர் முன்னே கூசாதே நின்று இதை விண்ணப்பம் செய்கிறேன் என்று பீதராய்
தம்முடைய முஃயத்தை அனுசந்தித்து அருளுகிறார்
மேல் நான்கு ஸ்லோகங்களால் –

கீழ் இவர் இப்படி நிர்பந்திக்கையாலே-நீர் மனுஷ்யர் அல்லீரோ –
ஆஸ்திக்யாதிகளை உண்டாக்கிக் கொள்ளலாகாதோ என்ன
அடியேன் சரீர மாத்ரத்தாலே மனுஷ்யன் –
வ்ருத்தியாலே பஸூ சஜாதீயனும் பஸூ வ்யாவ்ருத்தனும் -என்கிறார் –
வ்ருத்த்யா பஸூர்-இத்யாதியாலே

வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம்
இத்யாத ரேண க்ருதி நோ அபி மித ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ –7-

ஸ்ரீ யதிகட்க்கு இறைவரே நான் நடைத்தையால் சீலத்தால் மிருகம் போலும்
சரீரத்தால் மனுஷ்ய ஜந்து போலும் இருந்தும்
என்னை ஆச்ரயித்து பக்தியோடும் அன்போடும் விஸ்தாரமாய் புகழ்ந்து
இந்த பாவன புண்ய ஸ்ரீ அரங்க ஷேத்ரத்தில் உம்முடைய ஆச்சர்ய பீட ஸ்தானத்தில் இப்பொழுதும் நடந்து வருகிறேன்–

ஸாஸ்த்ர அப்யாசிகளுக்கு யோக்கியமான மனுஷ்ய ஜென்மத்தில் பிறக்கையாலும்
தத் விருத்தமான க்ருத்யாதிகளிலே தடையற நடக்கையாலும்
நர சாம்யமும் பசு சாம்யமும் தமக்கு உண்டாக அனுசந்திக்கிறார்

வ்ருத்தயா பஸூர்
என்னுடைய விருத்தியைப் பார்த்தால் ஜன்ய ஜனக விபாகமற வர்த்திக்கும் பஸூ விருத்தியோடே ஒக்கும்

நர வபு
எடுத்த உடம்பைப் பார்த்தால் ஸாஸ்த்ர வஸ்யமான மனுஷ்ய சரீரமாய் இருக்கும்

து சப்தத்தால்
மனுஷ்ய சரீர பரிக்ரஹம் பண்ணி வர்த்திக்கிற அல்லாதாரில் தமக்கு உண்டான
வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார்

மீத் ருஸோ அபி
கீழ்ச் சொன்னபடியே யுடையனாய் இருக்கச் செய்தேயும் -தம்முடைய தோஷ பரப்புக்கு பாசுரம் இடப் போகாமையாலே –
இப்படிப்பட்டவன் என்கிறார் –
நம்முடைய தோஷம் இதுவான பின்பு நாம் இவ்விஷயத்தை கிட்டுகை அயுக்தம் என்று கை வாங்க வேண்டி இருக்க
அது செய்யாத அளவன்றிக்கே-இவனைப் போலே ஆத்ம குண பூர்ணன் இல்லை –
ஆகையால் இவ்விஷயத்தை கிட்டிப் பரிமாறுகைக்கு இவன் அத்தனை அதிகாரிகள் இல்லை -என்று
அறிவில் தலை நின்றார்கள் எல்லாரும் தங்களில் ஏக கண்டராய் ப்ரீதிக்குப் போக்கு வீடு இட்டுப் புகழும் படி அன்றோ
இப்போதும் வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் கொண்டு வர்த்தியா நின்றேன்

யதீந்திர –
ரோக நிவர்த்தகனான பிஷக்கைப் பற்றி இருக்கச் செய்தேயும் நோயின் கையிலே துகையுண்ணும் வியாதி க்ரஸ்தனைப் போலே
ஆஸ்ரித தோஷங்களைக் கழிக்கைக்கு சக்தரான தேவரீரைப் பற்றி இருக்கிற அடியேன்
இத் தோஷ சாகரத்தில் கிடந்து அழுந்துகை பிராப்தமோ பிரானே என்கிறார்-

வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
து சப்தம் -வ்யாவ்ருத்யர்த்தமாய் –
அஹம் து -என்று தம்முடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறார் –
அதாவது தம்முடைய மனுஷ்யத்வம் லோக விலஷணம் என்கை-அத்தை விவரிக்கிறார் –
அடியேன் வ்ருத்தியாலே பஸூ என்னவுமாய் -சரீரத்தாலே மனுஷ்யன் என்னவுமாய் இருப்பான் ஒருவன் என்கிறார் –
பஸூத்வே நரத்வம் லோக விலஷணம் இறே –
இத்தால் அடியேனுக்கு உள்ளது பஸூவுக்கு போலே ஆஹார நித்ரா பயமைதுந நிமித்தமான பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஒழிய
ஸ்வ ஆத்ம உஜ்ஜீவன ரூபமான பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் இல்லை -என்கிறது

ஆகில் உமக்கு வருத்தி யன்றோ சிஷணீயை-அத்தை சத்துக்களை அனுவர்த்தித்து சிஷித்துக் கொள்ள லாகாதோ என்ன –
அடியேன் அவர்களை வஞ்சித்துக் கொண்டு இருப்பது அவர்கள் என் பக்கல் தாங்கள் வ்ருத்தி சிஷை பண்ணி
வைத்துக் கொள்ளும் படி காணும் என்கிறார் –

ஈத்ருசோ அபி –
இப்படி நர பஸூவாய் இருந்தேனே யாகிலும் -பிறர் அடியேனைக் கண்டால்
ஐயோ -இவன் மனுஷ்யனாய் இருந்து வைத்து தத் அநு ரூபமான சாஸ்திர வச்யதா ஜ்ஞானம் இன்றிக்கே ஒழிவது என்று
தயை பண்ணும்படி வர்த்தித்தேனோ -அதுவும் இல்லை –
அவர்கள் இவன் சர்வஜ்ஞன் என்னும் படி காணும் என்னும் படி வர்த்தித்தது -என்கிறார்

ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம் -இத்யாத ரேண க்ருதி நோ அபி மித ப்ரவக்தும் -அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ
நித்ய நிர்தோஷமாய்-ஸ்வத பிரமாணமாய் -என்றும்
ஒக்க -குரு முக ஸ்ரவண சித்தமான ஸ்ருதியாலும்-
தத் உப ப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராண தர்ம சாஸ்த்ரங்களாலும்-
சாந்தோ தாந்தோ -ப்ருஹத -6-4-23-இத்யாதிப்படியே
சம்சய விபர்யயம் அற பிரதிபாதிக்கப் படா நின்றுள்ள சமஸ்த ஆத்ம குணங்களுக்கும் வகுத்த இடம் இவன் என்று அறுதி இட்டு

இந்தளத்தில் தாமரை பூத்தால் போலே இருள் தரும் மா ஞாலமான இவ் விபூதியிலே இப்படி இருப்பான் ஒருவன் உண்டாவதே என்று
ப்ரீதியுடனே அல்பஜ்ஞ்ஞர் அன்றிக்கே –
கீழ்ச் சொன்ன ஸ்ருத்யாதிகள் அடைய அர்த்தங்களை யாதாவாக அறியும்படியான
ஜ்ஞான சக்த்யாதிகளை யுடையவர்களும் தங்களிலே தாங்கள் விஸ்வாச பூர்வகமாகச் சொல்லுகையே பிரயோஜனமாக
ஸ்வ வ்ருத்தியை தேவரீர் சந்நிதியிலே விண்ணப்பம் செய்யும் தசையிலும் பர வஞ்சனத்திலே
அத்யாதர விசிஷ்டனாய்க் கொண்டு இவ்விபூதியில் வர்த்தியா நின்றேன் –

வஞ்சன பர –
அவர்கள் அடியேனுடைய பாஹ்யாகாரத்தில் ஆதாரத்தைப் பண்ணுமாபோலே யாய்த்து அடியேன் அவர்களை
வஞ்சிக்கையில் பண்ணும் ஆதாரமும் -என்கிறார் –

அத்யாபி வஞ்சன பர –
இப்படி விண்ணப்பம் செய்கிறதும் ஒரு வஞ்சனா விசேஷம் என்கிறார்

வஞ்சன பர –
இதுவாய்த்து வ்ருத்தியால் யுண்டான பஸூவில் வ்யாவ்ருத்தி -இதுக்கு ஹேது ஏது என்ன

அத்ர –
இவ்விபூதியில் இருப்பாய்த்து -என்கிறார் –

யதீந்திர –
ஜிதேந்த்ரியரில் தலைவராகைக்கும் அடியேன் பர வஞ்சன பரனாகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு என்கிறார்
அன்றிக்கே –
இத்தால் பெற்ற பலம் ஏது என்ன
அத்ர வர்த்தே –
பத்தும் பத்தாக சம்சாரத்துக்கு ஆளானேன்

யதீந்திர வர்த்தே-
தார்மிகர் கரையில் இருக்க பெருக்க்காற்றில் மூழ்கிப் போவார் கூவுமா போலே
தாம் சம்சார ஆர்ணவ நிமக்னராய் -தத் உத்த்ரண ரக்ஷகரான – ஸ்ரீ எம்பெருமானாரைக் கண்டு –
தேவரீர் சந்நிஹதராய் இருக்க அடியேன் இப்படி சம்சார சாகர நிமக்னன் ஆவதே என்று கூப்பிடுகிறார் –

ப்ரவக்தும் வஞ்சன பர –
சாஸ்த்ரார்த்தங்களை அறிந்து வைத்து -அனுஷ்டியாமல் பர வஞ்சனம் பண்ணுகிற அடியேன் நாஸ்திகன் ஆகையாலே
அடியேனை ஒரு நாளும் திருத்தலாகாது -என்று கருத்து –
அன்றிக்கே –
து -சப்தம் –
வ்யாவ்ருத்யர்த்தமாய் -அஹம் து -என்று தம்முடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறார் –
அதாவது மனுஷ்யன் என்கிற பிராந்தி விஷயனான அடியேன் மனுஷ்யன் அன்று என்கை –
ஆனால் பின்னை யார் என்னில்

பஸூ –
பஸூ என்கிறார்

உம்மிடத்தில் தத் வ்யாவ்ருத்தி தோற்றா நின்றதே என்ன
நர வபு பஸூ
அது தன்னிலும் விஜாதீய பஸூ என்கிறார் –
அதாவது பாஹ்யமான சதுஷ் பாதத்வம் இல்லை யாகிலும் ஆந்தரமான அஜ்ஞ்ஞானம் உண்டு என்கை –
ஜ்ஞா நேன ஹீன பஸூபிஸ் சமான -என்கிறபடியே த்விபாத்வ பஸூவும் உண்டு என்கிறார் ஆகவுமாம் –
இத்தால் பிரயோஜக ஜ்ஞான பாவ பஸூத்வம் அடியேன் இடத்தில் உண்டு என்கிறார் –

அஹம் நர வபு பஸூ –
பஸூவான வடியேன் த்விபாத் பஸூ வாகையாலே –
கேவல நரனும் அன்று -கேவல பஸூ வும் அன்று -உபய வ்யாவ்ருத்தன் என்கிறார்

இத்தால் கேவல நரனைப் போலே சாஸ்திர வச்யனும் அன்றிக்கே
கேவல பஸூவைப் போலே கட்டவும் விடவுமாம் படி பர வச்யனும் அன்றிக்கே –
ஸ்வேச்சாரியாய் இருப்பான் ஒருவன் என்கிறது

இத்தால் சாத்ய சித்த உபாயங்களுக்கு அநதிகாரி என்கிறது -ஆகில் உமக்கு ஜ்ஞானம் அன்றோ வேண்டுவது –
அத்தை சத்துக்களை அநு வர்த்தித்து உண்டாக்கிக் கொள்ள லாகாதோ என்ன –
அடியேன் வ்ருத்தியாலே அவர்களை வஞ்சித்துக் கொண்டு இருப்பது
அவர்கள் தாங்கள் அஜ்ஞ்ஞான நிவ்ருத்தி அடியேன் பக்கல் பண்ணி வைத்துக் கொள்ளலாம் படி காணும் என்கிறார் மேல்

ஈத்ருசோ அபி
இப்படி நர பஸூ வ்யாவ்ருத்தனாய் ஜ்ஞான அபாவ நிபந்தனமான பஸூத்வம் உடையேனாய் இருந்தேனே யாகிலும்
தத் அநு ரூபமான பாஹ்ய ஆகாரத்தோடு வர்த்தித்தேனோ -அதுவும் இல்லை –
தத் விருத்தமாய்க் காணும் வர்த்தித்தேன் என்கிறார் –

வ்ருத்த்யா
கேவல பாஹ்ய ஆகாரத்தாலே கிடீர் அவர்கள் இப்படி சாரஜ்ஞ்ஞர் என்று தாங்கள் விஸ்வாச பூர்வகமாக சொல்லும் படி
காணும் அவர்களை வஞ்சித்தேன் -என்கிறார் –

வ்ருத்த்யா அத்யாபி வஞ்சன பர –
இப்படி தேவரீரை அனுவர்த்தித்துப் போருகிறதும் வஞ்சனா விசேஷம் என்கிறார்

அத்ர யதீந்திர வர்த்தே –
தேவரீர் இவ்விபூதியிலே ஜிதேந்த்ரியரில் தலைவராய் வர்த்திக்குமா போலே
அடியேன் வஞ்சகரில் தலைவனாய் வர்த்திக்கும் படி என்கிறார் –

யதீந்திர வர்த்தே –
தேவரீருக்கு இந்த்ரிய ஜயத்தால் பிறந்த ஐஸ்வர்யம் தேவரீர் சம்பந்திகளுக்கும் போரும்படி இருக்க
அடியேன் இந்த்ரிய பரவசனாய் சம்சாரத்துக்கு ஆளாவதே என்கிறார் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–6- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

ப்ராப்ய ருசியை யுடையராய் -புறம்புள்ள போக்யங்களில் நசையற்ற ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் அன்றோ
நம்மை அனுபவிப்பவர்களாகச் சொன்னீர் -உமக்கும் இரண்டும் உண்டோ-என்ன –
ஏகதேசமும் ப்ராப்ய ருசி அற்று இருக்கிறபடியையும் –
இதர விஷய ருசி கொழுந்து விட்டு வளருகிற படியையும் விண்ணப்பம் செய்து
இவ்விரண்டுக்கும் அடியான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

கீழ் சரணம் என்று பிரஸ்துதமான உபாய க்ருத்யம் இஷ்ட ப்ராபணமும் அநிஷ்ட நிவாரணமும் யாகையாலே
இஷ்டத்தை மூன்று ஸ்லோஹங்களாலே விண்ணப்பம் செய்து-

மேல் ஸ்லோஹ சப்தகங்களாலே
நிவர்த்த நீயமான அநிஷ்டத்தை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும்
தோஷ பூயஸ்வத்தையும் விண்ணப்பம் செய்கிறார் –

அதில் பிரதமத்தில்
நீர் திரு மந்த்ரத்தினுடைய பத த்ரயார்த்த நிஷ்டையை பிரார்த்தியா நின்றீர் –
உமக்கு இதில் பிரேமமும்-தத் இதரங்களில் அருசியும் உண்டோ என்ன -அடியேனுக்கு இவை இரண்டும் இல்லை
தேவரீரே இவற்றையும் உண்டாக்கித் தர வேணும் என்கிறார்
அன்றிக்கே –
அஷ்டாஷாக்ரய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய -என்றவாறே
உமக்கு இது இல்லையோ என்ன
இல்லை என்கிறார் ஆகவுமாம் –

அல்பா அபி மே ந பவதீயபதாப்ஜ பக்தி
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா
மத் பாபமேவ ஹி நிதான மமுஷ்ய நாந்யத்
தத் வாரயார்ய யதிராஜ தயைக சிந்தோ –6-

கருணை ஒன்றே நிரம்பிய சமுத்திரமே–உத்தம ஆச்சர்யரே–ஸ்ரீ யதி தலைநாதனே
எனக்கு தேவருடைய திருவடி தாமரைகளில் பக்தி எனபது கொஞ்சம் கூட இல்லை
புலன் விஷயங்களில் ஆசை தினம் தோறும் வளர்கிறது –என் செய்கேன் பாபியேன்
என் பாபம் தான் மூல காரணம் -மற்று வேறு காரணம் இல்லை தேவரீர் தடுத்து தகைய வேணும்..

அல்பா அபி மே ந பவதீயபதாப்ஜ பக்தி-
தேவரீர் திருவடித் தாமரைகளில் பூர்ண பக்தி இல்லாத மாத்திரம் அன்றிக்கே அத்யல்ப பக்தியும்
இதர விஷய ப்ரவணனான எனக்கு இல்லை –
ஆனுகூல்ய லேசம் இல்லை என்றாலும் பிரதிகூல நிவ்ருத்தி தான் உண்டாக வேணும் இறே –
அதுவும் எனக்கு இல்லை என்கிறார் –

அல்பாபீத்யாதி
பிராப்தியையும் -போக்யதையும் விசாரித்தால் பரி பூரணமாக ப்ரேமம் செய்ய வேண்டும் விஷயத்தில்
அடியேனுக்கு அல்பாம்சமும் பிரேமம் இன்றிக்கே ஒழிவதே என்று இன்னாதாகிறார்
அல்பாபி
அப்ராப்த விஷயங்களில் பரி பூரணமான பிரேமத்தைச் செய்யும் அடியேனுக்கு
பிராப்த விஷயத்தில் ப்ரேமம் அல்பாம்சமும் இன்றிக்கே ஒழிவதே என்கிறார்

மே-
அப்ராப்தனாய் இருந்து வைத்து செய்யாது ஒழிந்தேனோ –
பிராப்தனாய் இருந்து வைத்து காணும் செய்யாது ஒழிந்தது காணும் -என்கிறார்
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே –ஸ்ரீ பகவச் சாஸ்திரம் -இறே

மே –
தேவரீர் திருவடிகளிலே நிரவதிகமான ப்ரேமம் செய்யக் கடவ வம்சத்தில் பிறந்த அடியேனுக்கு என்னுமாம்

பவதீய –
அடியேனுடைய உஜ்ஜீவனத்தில் கிருஷி பண்ணுகிற தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்–
பிராப்தரான தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்-

உபகாரகர் அன்று என்று ஆறி இருக்கலாமோ –
அப்ராப்தர் என்று ஆறி இருக்கலாமோ -என்கிறார்

பதாப்ஜ பக்தி –
ஸ்வரூப அனுரூபமான திருவடித் தாமரைகளில் பக்தியானது –
பதாப்ஜ-
போக்யதை இல்லை என்று ஆறி இருக்கலாமோ என்கிறார்

நாஸ்தி –
இத்தால் பக்தியில் ஸ்வல்ப அம்சமும் இல்லை என்று பக்தி சப்த வாச்யத்தினுடைய த்வம்ச பிராக பாவங்களை
சொல்லுகை யன்றிக்கே அத்யந்தா பாவத்தை சொல்லுகிறது

அன்றிக்கே –
பவதீய பஜாப்ய பக்தி –
நல்லார் பரவும் -44- என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே
கரண த்ரயத்தாலும் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும்
சமஸ்த வித கைங்கர்யங்களைப் பிரார்த்திதுச் செய்ய வேண்டும் விஷயமாய்
தேவரீர் சம்பந்திகளான ஸ்ரீ ஆழ்வான் முதலானோர் திருவடிகளில் பக்தியானது
அடியேனுக்கு அல்பாம்சமும் இல்லை என்னவுமாம்
ஆக பிரதம பாதத்தால் பிரதம பதார்த்தம் இல்லை என்கிறது –

சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா-
தேவரீர் திருவடிகளில் அனுபவத்துக்கு விரோதியான சப்தாதி விஷய அனுபவ ரஸ்யதை
வர்த்திஷ்ணுவாய்ச் செல்லா நின்றது –
இத்தால் த்ருதீய பதார்த்த நிஷ்டா விரோதி சொல்லிற்று –
இவ்விரண்டும் அடி எது என்ன

இவர் இப்படி சாநுதாபமாக விண்ணப்பம் செய்தவாறே –
உமக்கு நம்மிடத்தில் பக்தி இல்லையாகில் உண்டாக்கித் தருகிறோம்
இதர விஷயங்களில் அருசி தான் உண்டோ என்ன -அதுவும் இல்லை என்கிறார் மேல்
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா -என்று
சப்தாதி விஷய அனுபவத்தில் கிடீர் அடியேனுக்கு ப்ரேமம் உண்டாகிறது -என்கிறார் –

போக ருசி –
விஷயம் போலே தானும் ஸ்லாக்யமாய் இருக்கை-அஸ்லாக்யமாக இருந்தாலும் –

அன்வஹம் –
அது தன்னில் ஒரு கால் உண்டாய் கழிகை யன்றிக்கே தினம் தோறும் உண்டாகா நின்றது -என்கிறார்

ஏததே-
அது தன்னிலும் -ஒருபடிப் பட்டு இருக்கை யன்றிக்கே ஸ்வயம் பிரயோஜனமாக
அபி விருத்தம் ஆகா நின்றது என்கிறார் –

அல்பா அபி மே ந பவதீயபதாப்ஜ பக்தி சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா –
விரோதி வாசனையும் இல்லாமையாலே சப்தாதி விஷயத்தில் பிரேமமானது அகுதோபயமாக அநு தினம்
அபிவிருத்தமாகா நின்றது என்கிறார்

அன்வஹம் ஏ ததே –
அஹோ ராத்ரங்களை இரண்டையும் சொல்லாமல் அஹஸ் சை மாத்ரம் சொன்னது
பகல் முப்பதும் ஆசையை வளர்த்து
இரா முப்பதும் அனுபவித்தாலும் விடிய விடிய ஆசை வளரா நிற்கையாலே –

ஹா
பிராப்த விஷயத்தில் ருசி அல்பாம்சம் இல்லாமையையும் –
அப்ராப்த விஷயத்தில் அநு தினம் அபிவிருத்தம் ஆகிறபடியையும் நினைத்து ஐயோ என்று கிலேசிக்கிறார் —
இத்தால் சரம பதார்த்தம் இல்லை என்கிறது –

மத் பாபமேவ ஹி நிதானம் அமூஷ்ய நாந்யத்
ப்ராப்த விஷய ப்ராவண்ய அபாவத்துக்கும் அப்ராப்த விஷய ப்ராவண்யத்துக்கும் காரணம்
பாபியான என்னுடைய துஷ்கர்மம் இறே
அவதாரணத்தாலே ஹேத்வந்தரத்தைக் கழிக்கிறது

ஹி-சப்தம்
இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியைச் சொல்கிறது

நாந்யத் –
ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் இதுக்கு ஹேது அன்று –
அவன் உஜ்ஜீவனத்துக்கு ஹிருஷீ பண்ணுகிறவன் ஆகையால் –

உம்முடைய கர்ம தோஷத்தால் வந்ததாகில் நம்மால் செய்யலாவது உண்டோ என்ன
என் செய்யலாவது இல்லையோ –
அத்தை அடியேன் அளவில் கிட்டாதபடி தகைந்து அருள வேணும்
நாம் அதுக்கு சக்தரோ என்ன

நீர் இப்படி கிலேசிப்பான் என்-இவை இரண்டுக்கும் அடி ஆராய்ந்து பரிஹரிக்கலாகாதோ என்ன –
அது பிரசித்தம் அன்றோ என்கிறார் –
மத் பாபமேவ ஹி நிதான மமுஷ்ய –
இவை இரண்டுக்கும் அடி அடியேன் பண்ணி வைத்த பாபமே யன்றோ என்கிறார்
மத் பாபம் என்று
தாம் அறிந்ததாகச் சொல்லுகையாலே ப்ராமாதிகத்தை வ்யாவர்த்திக்கிறது
ஏவ காரத்தாலே –
த்விஷந்த பாப க்ருத்யாம்-ஷாட்யாயன ஸ்ருதி -என்கிறபடியே -ப்ராப்தமான சந்க்ராந்த பாபத்தை வ்யாவர்த்திக்கிறது
மத் பாபம் -என்று தாம் அறிந்ததாகவும் -தாம் செய்ததாகவும் தோற்றுகையாலே-அவை இரண்டும்
சந்திக்தம் -தள்ளி ஏவ காரத்திலே வ்யவச்சேதிக்கப் படுகிறது –

பாபமாகில் பிராயச் சித்த விநாச்யமாய் யன்றோ இருப்பது –
நீர் பிராயச் சித்தங்களைப் பண்ணி போக்கிக் கொள்ளலாகாதோ என்ன
அடியேனுக்கு கர்த்ருத்வம் உள்ளது பாபங்களிலே யாகையாலே பிராயச் சித்தங்களிலே அன்வயிக்க அவசரம் இல்லை என்று
பிராயச்சித்த அந்வய அநவகாசம் ஆகவுமாம் –
இத்தால் பிராயச்சித்த அந்வய அவகாச அசஹமான பாபமே காரணம் -என்கிறது –

மத் பாபம் என்கையாலே
லௌகிக பாபம் போலே அனுபவ விநாச்யமாதல் பிராயச்சித்த விநாச்யமாதல் அன்றிக்கே
ஸ்வ ப்ரவ்ருத்தி சாமான்யத்துக்கு காரணமாய் -அனுபவ அநு தின வர்திஷ்ணுவாய் இருக்கும்
பாபம் என்று
பாப வைஷண்யத்தைச் சொல்லவுமாம் –

அன்றிக்கே –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ் தின சம்சய -சுந்தர -38-46-என்கிறபடியே ஜ்ஞாதாம்சம் அல்பமாய்
அஜ்ஞ்ஞாதாம்சம் பஹூவாய் இருக்கும் பாபம் என்னவுமாம் –

ஹி-
இவ்வர்த்தம் அடியேன் சொல் கொண்டு அறிவது அன்றிக்கே ஜகத் விதிதமாய் யன்றோ இருப்பது -என்கிறார்

நிதானம் –
பாப சேஷத்தால் பிறந்த பாபம் அன்றிக்கே பாபங்களுக்கு எல்லாம் மூலமான பாபம் -என்கிறார் –
நிதா நந்தவாதி காரண -அமரம் -இறே

அமூஷ்ய –
இம் மகா அனர்த்தத்துக்கு-இது ஒழிய மற்று ஓன்று காரணமோ என்கிறார்
பாப விஜாதீயமான ஸ்ரீ ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் ஆனாலோ என்ன

நாந்யத்-
ஸ்ரீ ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் -அன்று -என்கிறார் –
பரம தயாளுவான ஸ்ரீ ஈஸ்வரனுக்கு பர அனர்த்த அவஹமாய் இருப்பதொரு ஸ்வா தந்த்ர்யம் உண்டோ என்று கருத்து –
இத்தால் மத்யம பதார்த்தம் இல்லை என்கிறது –
ஆகில் நிலை நிற்குமே என்ன -நிவாரகர் இல்லாமையோ நிலை நிற்பது -என்ன -ஆகில் நிவாரகர் ஆர் என்ன –

தத் வாரயார்ய யதிராஜ தயைக சிந்தோ –
ஆர்ய-
செய்யும் விரகு அறிகைக்குத் தக்க அறிவு இல்லையோ

யதி ராஜ
அறிந்தபடி செய்ய வல்ல சக்தி இல்லையோ
ஜிதேந்த்ரியர்களான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆகையால் அபிமான அந்தர் பூதருடைய பாபத்தைப்
போக்குதற்கு சக்தியில் குறை இல்லை

தயை ஏக சிந்த்யோ
அந்த ஞான சக்திகளை ரக்ஷண உபயோகியாக நடத்தும் கிருபைக்கும் சங்கோசமும் உண்டோ
அஸ்ய தயை ஏக சிந்த்யோ -என்று விசேஷஜ்ஞர் ஆழங்கால் படும்படி அன்றோ கிருபா பிராஸூர்யம்
ஏக சப்தத்தால்
காரணாந்தரங்களை தடவிப் பிடிக்க வேண்டும் படி சொல்கிறது-

தத் வாரய-
பிராயச் சித்த அனுபவங்களால் நசிக்கை யன்றிக்கே -அநு தின வர்திஷ்ணுவாய் பிரசித்தமான
அப் பாபத்தை தேவரீரே போக்கி யருள வேணும் -என்கிறார்

வாரய –
தேவரீருக்கு அசக்யமானது ஓன்று உண்டோ என்று விதிக்குத் தாத்பர்யம் -என் கொண்டு இந் நிர்பந்தம் என்னில்

ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ –
1-பாபத்தைப் போக்கும் விரகு அறிகைக்கு தேவரீர் சர்வஜ்ஞ்ஞர் அல்லீரோ –
2-அஸூத்தரையும் ஸூத்தராக்க வல்ல சக்தி உடையீர் அல்லீரோ
3-இது இஷ்டமாய் இருக்குமவர் அல்லீரோ –
4-பர துக்கம் பொறுக்கைக்கு கிருபை உடையீர் அல்லீரோ
அடியேன் பாபத்தைப் போக்கி யருளாமைக்கு -என்கிறார் –

ஆர்ய –
அடியேன் பாபத்தைப் போக்கும் விரகு அறிகைக்கு போரும்படி சர்வஜ்ஞ்ஞர் ஆனவரே -என்கிறார்

யதிராஜ –
அறிந்தபடி செய்கைக்கு தக்க சக்தியை உடையவராய் -அத்தாலே விளங்குமவரே என்கிறார்
பிரகாசம் இஷ்ட சித்தி அதீநம் ஆகையாலே இது இஷ்டமாய் இருக்குமவர் என்கிறார்

தயைக சிந்தோ –
ஜ்ஞான சக்திகள் இரண்டும் கார்யகரமாம் படி தயா குணம் உடையவரே -என்கிறார்

தயைக சிந்தோ –
ஸ்ரீ ராம பாணம் போலே தயை குறி யழியாமல் கிடப்பது தேவரீர் இடத்திலே என்கிறார்
தயைக சிந்தோ
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை -25-என்கிறபடியே அபரிச்சின்னமான தயா குணம் உடையவரே என்கிறார்
இதில் த்ருதீய பாதத்தாலே ஆகிஞ்சன்யத்தைச் சொல்லுகிறது –

—————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–5- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

ஸ்ரீ எம்பெருமானே சேஷியும் உபாயமும் உபேயமும் என்று சாஸ்திரங்கள் சொல்லா நிற்க –
நீர் நம்மையும் நம் உடையாரையும் சேஷிகளும் உபாய பூதராகவும் சொல்லா நின்றீர்-
அது என் கொண்டு நீர் சொல்லுகிறது என்று ஸ்ரீ எம்பெருமானார் நினைவாக
சகல ஸாஸ்த்ர ரூபமான ஸ்ரீ திருமந்திரம் இதுக்கு மூல பிரமாணம் –
அதில் பிரதிபாதிக்கிற அர்த்தத்துக்கு அனுரூபமான நிஷ்டையையும்
தத் பலமான தேவரீர் திருவடிகளில் அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று அபேக்ஷிக்கிறார் –

கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே-
தாம் பிரார்த்தித்த அர்த்தங்களுக்கு பிரமாணமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை ப்ரசக்தி பண்ணி-
தாம் பிரார்த்தித்த அர்த்தங்கள் ஸ்ரீ திரு அஷ்டாஷரத்தின் பத த்ரயார்த்தங்கள் யாகையாலே –
தந் நிஷ்டையை அடியேனுக்கு பிரசாதித்து அருளி
அடியேன் புத்தியானது தேவரீர் திருவடிகளை அனுபவித்து ஹ்ருஷ்டமாம் படி செய்து அருள வேணும் என்கிறார் –

கீழ் ஸ்லோகத்தாலே
பிரதம பாதத்தாலே -ப்ரணவார்த்தமும் –
வாக் குண கீரத்தநே அசௌ -என்றத்தாலே வாத்சல்யாதி குண கீர்த்தனத்திலே என்ற போதே –
அக் குணங்கள் உபாய குணங்கள் ஆகையாலே மத்யம பதார்த்தமும்
த்ருதீய பாதத்தாலே -சரம பதார்த்தமும் –
சதுரத்த பாதத்தாலே -பிரதம சரம பத ஸ்தான அந்வித நமஸ் சப்தார்த்தமும் சொல்லப் பட்டது இறே

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த
நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே
ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –5-

ஸ்ரீ யதிகளுக்குள் ஸ்ரேஷ்டரே –ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்கு ஸ்வாமியே
ஸ்ரீ திரு மந்தர பொருள்களில் வழுவாத நிஷ்டையை எனக்கு இப்பொழுதே தானம் செய்ய வேண்டும்
என்னுடைய புத்தி சிஷ்டர்களால் நெருங்கி சேவிக்க தக்க உம்முடைய திருவடி இணையை
எக்காலமும் அனுபவித்து ஓயாமல் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்..

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே -நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –
இத் அஷ்டாக்ஷரம் மனு ஸ்வசகாய த்ரீ வேதி -என்று
ஸ்ரீ திருமந்திரம் எட்டு திரு அக்ஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் என்னும் இடம் சுருதி சித்தம் –

மனு சப்தம் -மந்த்ர வாசி
மனு ராஜம் -என்றது மந்த்ர ராஜம் என்றபடி –
ஸ்ரீ திரு மந்திரத்துக்கு ராஜாவாகையாவது –
1-வேதங்களும் ரிஷிகளும் வைதிக புருஷர்களும் ஏக கண்டமாக பரிக்ரஹிக்கையாலும் –
2-அர்த்த பூர்த்தியாலும் –
3-தானே ஸ்வ தந்திரமாய்க் கொண்டு சகல பலன்களையும் கொடுக்க வற்றாகையாலும் –
4-உபாயாந்தார சஹகாரியாகையாலும் –
5-தன்னை ஒழிந்த வியாபக அவியாபக சகல பகவன்-மந்திரங்களிலும்
உத்க்ருஷ்டமாய் இருக்கை–

பத த்ரயங்களின் அர்த்தமாவது –
ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -இவைகளும்
தத் பிரதிகோடியான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்களும் –

அநந்யார்ஹ சேக்ஷத்வாதி ஆகாரத் த்ரயமும் தத் விஷயத்தில் போலே ததீய விஷயத்திலும் உண்டாய் இறே இருப்பது
ஆகை இறே ஸ்ரீ திருமந்திரம் கற்ற ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்-
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று அருளிச் செய்தது –

இப்படி சாமான்யேன ததீயருக்கு எல்லாம் தத் சம்பந்தம் மூலமாக சேஷித்வாதிகள் உண்டாகையாலே
ததீய விஷயமாக நிர்ஹேதுகமாக அடியிலே தன்னை அங்கீ கரித்து அருளி
இவ்வவஸ்யா பன்னனான ஸ்வாச்சார்ய விஷயத்திலும் சேஷித்வாதிகள் அனுசந்திக்கக் குறையில்லை –

அஷ்டாஷராக்ய –
ஏதத்வை நாராயணஸ் யஷ்டாஷரம் பதம் -என்றும்
எட்டு எழுத்தும் ஓதுவார் -என்றும்
கதிர் அஷ்டாஷரோ ந்ரூணாம்-என்றும்
மந்த்ரம் அஷ்டாஷரம் வித்யாத் -என்னும் இத்யாதி பிரமாணங்களாலே-
ஸ்ரீ அஷ்டாஷரம் -என்று பிரசித்தமான -என்னுதல்-
ஸ்ரீ அஷ்டாஷரம் என்ற திரு நாமம் உடைய என்னுதல்

மநுராஜ –
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
ராஜாதி ராஜ சர்வேஷாம் -என்றும்
வானோர் இறை என்றும்
அமரர்கள் அதி பதி -என்றும்
தேவ தேவேச -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வாச்யனான ஸ்ரீ ஈஸ்வரன்
ஸ்வ அபேஷயா நியாமகாந்தர ஸூந்யனாய்-தான் சர்வ நியந்தாவாய் இருக்குமா போலே வாய்த்து
வாசகமான ஸ்ரீ திரு அஷ்டாஷரமும்

மந்த்ராணாம் பரமோ மந்திர -என்றும்
ந மந்த்ரோ அஷ்டாஷராத் பர -என்றும் சொல்லுகிறபடியே
பகவன் மந்த்ரங்களில் ஸ்வ அபேஷயா அதிசயித மந்த்ராந்திர ரஹீதமாய்
தான் பிரதானமான படியும்
ஈஸ்வரனை ஒழிந்தவர்களுக்கு ரஷகத்வம் உண்டாம் போதாய்த்து மந்த்ராந்தங்களுக்கு மந்த்ரத்வம் உள்ளதும் –
ஆக இப்படி
பகவத் மந்த்ரங்களில் பிரதானமான ஸ்ரீ திரு மந்த்ரத்தினுடைய –
அவனுடைய பிரதாந்யம்-குண பௌஷ்கல்யாதி நிபந்தனம்-
இதனுடைய பிரதானம் அர்த்த பௌஷ்கல்யாதி நிபந்தனம்-

பத த்ரயார்த்த –
பிரணவ -நமோ -நாராயணாய -என்கிற பத த்ரயத்தினுடைய
அனந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரணத்வ -அநந்ய போக்யத்வங்கள் ஆகிற அர்த்தங்களிலே

நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
ஆகையால் பத த்ரயத்திலும் சொல்லுகிற அர்த்தங்களில் சரம பர்வ பர்யந்தமான நிஷ்டையை –
இதில் அபேக்ஷை உடைய அடியேனுக்கு
இவ்வர்த்தத்தில் ருசி உடையாரைக் கிடையாத இவ்விபூதியிலே இப்பொழுதே தந்து அருள வேணும் –
பெரு விடாய்ப் பட்டு -தண்ணீர் தண்ணீர் -என்று துடிக்கிறவனுக்கு இவ்விடத்தில் இப்பொழுதே விடாய் தீர்க்க வேணும் இறே –
நீர் நம்மை அபேக்ஷித்தால் இப்படி உமது அபேக்ஷை செய்ய வேணும் ஹேது என் என்ன சொல்கிறது மேல்

நாத – என்று –
இத்தலையில் சொல்லலாவதொரு ஹேது இல்லை -இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியான தேவர் –
இது நம்முடைமை அன்றோ -என்று இச் சம்பந்தமே ஹேதுவாக செய்து அருள வேணும் -என்கை –

நிஷ்டாம்-
அவிசால்யமான இருப்பை –
அர்த்த ஸ்திதியில் அவிசால்யத்வமாவது –
விரோத்யுத யாஸஹிஷ்ணுத்வம் -அதாவது –
அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான அந்ய சேஷத்வத்தினுடையவும் –
அநந்ய சரணத்வ விரோதியான உபாயாந்தர சம்பந்தத்தினுடையவும் –
அநந்ய போக்யத்வ விரோதியான உபேயாந்தரங்களுடையவும் உதயத்தை பொறாது ஒழிகை
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் ஸ்வார்த்ததா புத்தி தவிர்கை யாக்கவுமாம் –
இது இறே நமஸ் சப்தத்தாலே
பூர்வ உத்தர பதங்களோடு காகாஷி ந்யாயத்தாலே அன்வயித்து கழி யுண்கிறது

அஸ்ய மம-
உண்டியே உடையே உகந்தோடும் -என்கிறபடியே அன்ன வஸ்த்ராதி விஷயார்ஜன லோலனான அடியேனுக்கு என்னுதல்-
அதில் ஆசா லேசம் இல்லாத அடியேனுக்கு என்னுதல் –

மேலே -விதர -என்றதுக்கு அனுகுணமாக மஹ்யம் -என்ன வேண்டி இருக்க
மம -என்கிறது சம்பந்த சாமான்ய அபிப்ப்ராயத்தாலே
அன்றிக்கே –
அஸ்ய மம -அதில் ஆசை உடைய அடியேனுக்கு -என்னுதல்

விதர –
பிராசாதித்து அருள வேணும் -என்கிறார் –
தேவரீர் தரப் பார்க்கில் அத்தை இப்போதே தர வேணும் என்ன –
தேச விசேஷத்திலே யாகிறது -என்ன

அத்ர-
இருள் தரு மா ஞாலமான இத் தேசத்திலேயாக வேணும் என்கிறார் –
தேவரீர் சம்பந்திகளுக்கு இதுவன்றோ அசாதாரண லஷணம்-
ஆகில் தருகிறோம் –பொறுத்து இரும் என்ன

அத்ய –
அபேஷையுடைய இக்காலத்திலேயாக வேணும் -என்கிறார் –
நின்றவா நில்லா நெஞ்சு இறே
அன்றிக்கே –
உமக்கு இப்படி ஸ்வரூப அனுரூபங்களான அர்த்தங்களில் ஆசை இல்லாமைக்கு அடி என் என்ன

அத்ராத்ய –
இருள் தரும் மா ஞாலமான இத்தேசமும் –
சத் அனுஷ்டான விரோதியான இக்காலமும் -என்கிறார்
காலம் கலி இறே –
தேச கால -பாத்ரங்களைப் பாராமல் தேவரீர் இந்த சம்பந்தமே ஹேதுவாக செய்து அருள வேணும் என்கிறார்
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டுவது –
ஆசை யுடையார்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் -என்று
அத்தலையில் நினைவு அறிந்து இறே இவர் அருளிச் செய்தது
இப்படி அநதிகாரயாய் இருந்து வைத்து நம்மை நிர்பந்திக்கிறது என் என்ன

யதீந்திர –
நம் குறை ஆராயும்படி யன்றோ தேவரீர் பூர்த்தி –
தேவரீருக்கு உள்ள சம தம யாத்ம குணங்கள்
தேவரீர் சம்பந்திகளுக்கும் போரும்படி இறே தேவரீர் மதிப்பு –
ஆகில் உமக்கு என் என்ன –

நாத
தேவரீர் இத்தலைக்கு ஸ்வாமி யன்றோ நாம் கார்யம் செய்யாமைக்கு என்கிறார் –
யாசித்தும் பிறர் கார்யம் செய்யுமவர்க்கு பிரார்த்தனை மிகை யன்றோ என்கிறார் –
ஸ்வாமி யானமையை நீ என் கொண்டு அறிந்தீர் என்ன –

சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –
சிஷ்டர் ஆகிறார் –
ஞான அனுஷ்டான பூர்ணராய் கண்ணழிவு அற்ற ப்ராப்ய ருசியை உடையவர்கள் –
அவர்களுக்கு அக்ர சரண்யர் ஆகிறார்
ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் -இப்படி இருந்தவர்களால் நிரந்தரம்
அனுபவிக்கப்படா நிற்பதாய் இருக்கிற வகுத்த சேஷியான தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளை –
இந்த ப்ராப்யம் பெறா விடில் தரியாத படியான இந்த என்னுடைய சிந்தையானது
யதா மநோ ரதம் அனுபவித்துக் களிப்பதாக
உனது அடிப்போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின் பால் அதுவே போந்தது
என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு- என்ற ஐஸ்வர்யத்தைப் பிரார்த்தித்த படி –

சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய
பிரமாணங்களில் பிரதானமான சிஷ்டாசாரம் கொண்டு அறிந்தேன் -என்கிறார் –
தர்மஜ்ஞ சமய பிரமாண-இறே –
வேத பிரமாண்ய வாதிகளிலே முதல் எண்ணத் தக்கவர்களான ஸ்ரீ கூரத் ஆழ்வான்-ஸ்ரீ முதலி யாண்டான் –
முதலான சிஷ்ட ஜனங்களாலே சேவிக்கத் தகுதி யானவரே என்று சம்போதிக்கிறார்-
இவர்கள் ஆஸ்ரயிக்கும் போது-பிராப்த விஷயமாக வேணும் என்று அறிந்தேன் என்று கருத்து –

அன்றிக்கே –
சிஷ்டாக்ரகண்யருடைய சம்பந்தி ஜனங்களால் சேவிக்கத் தகுந்தவரே என்னவுமாம் –
அப்போது அவர்கள் தந்தாமைப் பற்றினவர்களுக்கு ப்ராப்த விஷயம் என்று உபதேசித்துக் காட்ட –
அவர்களும் கண்டு ஆஸ்ரயிக்கை யாலே தேவரீர் ஸ்வாமி யானயமையை அறிந்தேன் என்று கருத்து

ஆகில் தருகிறோம் என்று இவர் பிரார்த்தித்த படியே பிரதம பர்வதத்தை வெளிச் சிறப்பிக்க –
அடியேனுக்கு இவ்வளவால் போராது-
இதினுடைய எல்லை நிலமான தேவரீர் திருவடிகளை அனுபவித்து
அடியேனுடைய புத்தியானது ஹ்ருஷ்டமாக வேணும் என்கிறார் –

ஆசார்ய கைங்கர்யம் பகவத் கைங்கர்யத்தினுடைய சரம அவதி யானமை எங்கனே என்னில்
ப்ராப்யத்துக்கு பிரதம பர்வம் ஆசார்ய கைங்கர்யம் -என்று தொடங்கி-
சரம பர்வம் பாகவத கைங்கர்யம் -என்று அருளிச் செய்து
அதுக்கு அர்த்தம் ஆசார்யன் உகப்புக்காக பண்ணும் பகவத் கைங்கர்யம் ஆசார்ய கைங்கர்யம் என்று தொடங்கி –
பாகவதர்கள் உகப்புக்காக பண்ணும் ஆசார்ய கைங்கர்யம் பாகவத கைங்கர்யம் -என்று ஆசார்ய கைங்கர்யத்தை
சரம பர்வமாக அருளிச் செய்தார் இறே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் –

ஸ்ரீ ஆசார்யன் ஸ்ரீ திரு மந்த்ரத்தை உபதேசித்து அதுக்கு அர்த்தமாக ஸ்ரீ பகவத் தாதர்த்தமாக உபதேசிக்க
ஸ்ரீ பகவானும் –மத பக்த ஜன வாத்சல்யம் -என்று தொடங்கி -ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் என்றும்
தத் உச்சிஷ்டம் ஸூ பாவனம் -என்று பாகவத தாதர்யத்தை உபதேசிக்கையாலே
அவர்களுடைய ஆசார்ய சம்பந்தத்தை யிட்டு இவனை அங்கீ கரித்து
பதி வ்ரதைகள் பதி வ்ரதைக்கு பாதி வ்ரத்யத்தை உபதேசிக்குமா போலே
குருரேவ பர ப்ரஹ்ம-இத்யாதிகளாலே ஆசார்ய தாதர்யத்தை உபதேசிக்கையாலே ப்ராப்யத்தில்
சரம பர்வம் ஆசார்ய கைங்கர்யம் என்கிறது –
இத்தை இறே-திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்று
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்தது

ஸ்ரீ பகவத் கைங்கர்யத்தில் ஸ்ரீ ஆசார்யன் உகப்புண்டு —
ஸ்ரீ பாகவத கைங்கர்யத்தில் ஸ்ரீ ஆசார்ய ஸ்ரீ பகவத் ப்ரீதி உண்டு
ஸ்ரீ ஆசார்ய கைங்கர்யத்தில் ஸ்ரீ ஆசார்ய ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவதர்கள் உகப்பு உண்டு –
ஆகையால் ஸ்ரீ ஆசார்ய கைங்கர்யம் ததீய கைங்கர்ய கர்ப்பமாய் இருக்கும்
ஆகையால் ஸ்ரீ ஆசார்ய கைங்கர்யமே ஸ்ரீ திரு அஷ்டாஷரத்துக்கு பிரதான ப்ரமேயமாகக் கடவது

அன்றிக்கே
சிஷ்டேத்யாதி-க்கு
இப்படி சம்பந்த மாத்ரம் கொண்டு நாம் ஆருக்கு அதிகாரம் உண்டாக்கி உதவினோம் என்ன
சிஷ்டேத்யாதி –
சாஸ்திர விஸ்வாச சாலிகளான ஜனங்கள் உண்டு -ஸ்ரீ யாதவ பிரகாச ஸ்ரீ யஜ்ஞ மூர்த்தி யாதிகள் -அவர்களாலே
சேவ்யர் ஆனவரே -என்றுமாம் –
அவர்களை அதிகாரிகள் ஆக்கி யன்றோ தேவரீர் ஸ்ரீ திரு மந்த்ரார்த்தை உதவி யருளிற்று –

அன்றிக்கே –
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய -என்று இரண்டும் சம்போதனம் ஆகவுமாம் —
அப்போது நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -என்றும்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -என்றும் சொல்லுகிறபடியே
சகல சாஸ்திர தாத்பர்யமான ஆன்ரு சம்சய பிரதானரில் முதல் எண்ணத் தக்கவர்
ஆகையாலே சர்வ ஜனங்களாலும் சேவிக்கத் தக்கவர் என்று பொருள் –

இவருக்கு ஆன்ரு சம்சய பிரதானரில் அக்ர கண்யத்வம் ஆவது –
முன்புள்ள முதலிகள் க்யாதி லாப பூஜா நிரபேஷராய்-ஆன்ரு சம்சய பிரதானராய்
பர அநர்த்தம் பொறுக்க மாட்டாதே ஆஸ்திக்யாதி பரிஷை பண்ணி ஹிதம் அருளிச் செய்வார்கள் ஆகில் –
இவர் அங்கன் அன்றிக்கே
பர அனர்த்தமே பற்றாசாக ஆஸ்திக்யாதர பரிஷை பண்ணாமல் ஹிதம் அருளிச் செய்து போருகை
ஸ்ரீ ஆழ்வானை மாச உபவாசம் கொண்டது ஸ்ரீ நம்பி நியமனத்துக்காக –

அன்றிக்கே –
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய -என்கிறது பதாப்ஜ விசேஷணம் ஆகவுமாம் -அப்போது
ஸ்ரீ ராமானுஜச்ய சரனௌ சரணம் பிரபத்யே -என்றும் –
ஸ்ரீ ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலித -என்றும்
ஸ்ரீ இராமானுசன் தன் இணை யடியே –உதிப்பன உத்தமர் சிந்தையுள் -என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வான் முதலான சிஷ்ட ஜனங்களால் சேவிக்கத் தகுதியான பதாப் ஜங்கள் -என்கிறது –
இத்தால் தாம் அயோக்யர் என்கிறது –

பவத் பதாப்ஜே-
பரம பிராப்யரான தேவரீருடைய பரம போக்யங்களான திருவடித் தாமரைகளை –

அனுபூய ஹ்ருஷ்டாஸ்து-என்ன வேண்டி இருக்க முதலில் ஹ்ருஷ்டாஸ்து என்றது திருவடிகளுடைய போக்யதாதிசயம்
அனுபவ உன்முகமாகும் தசையிலும் அனுபவ ஜனித ஆனந்தத்தை உண்டாக்கவற்று என்னும் அபிப்ராயத்தாலே

நித்யம் –
அனுபாவ்ய வஸ்துவோபாதி-அனுபவமும் ரசித்து இருக்கையாலே இது நித்யமாக வேணும் என்கிறார் –
அன்றிக்கே –
ஹ்ருஷ்டா அனுபூயாஸ்து-
திருவடிகளினுடைய போக்யாதிசயத்தைக் கண்டு அலாப்யங்களான இத் திருவடிகள் நமக்கு
அனுபாவ்யங்களாகக் கடவது என்று ஹ்ருஷ்டமாய் அனுபவித்து தான் சத்தை பெறக் கடவது என்கிறார் ஆகவுமாம் —
முன்பு அசந்நேவ -இறே-

அன்றிக்கே –
அனுபூயாஸ்து ஹ்ருஷ்டஸ்து-அனுபவித்து தான் உளதான மாத்ரம் அன்றிக்கே –
ஸ்வ தர்மமான ஆனந்த ரூபத்தையும் அடைந்ததாக வேணும் என்கிறார்
நித்யம் அனுபூய ஹ்ருஷ்டஸ்து –
இவ் வனுபவம் போக்யமாய் இருக்கையாலே கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்து அனுபவ ஜனிதமான ஹர்ஷம்
புறம்பு ஒசிந்து காட்டும்படியாக வேணும் என்கிறார்

ஏன் தான் என்னில் –
மமாஸ்து புத்தி –
நிரூபகம் முன்னாக நிரூப்ய சித்தி யாகையாலே நிரூபகமான அனுபவத்தை முன்னே சொல்லி
அநந்தரம் நிரூப்யமான தம்மை அனுசந்திக்கிறார்

மமாஸ்ய-
தேவரீருடைய திருவடிகளை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகனாம் படியான அடியேன் இப்படி ஸ்வரூப நாசகங்களான
விஷயங்களிலே சபலன் ஆவதே என்கிறார் –
இப்படி விஷய சாபல்யனான அடியேனுடைய -என்னுதல்-
இவ்வளவான மனஸ் ஸ்வ பாவம் உடைய அடியேனுடைய -என்னுதல்

புத்தி-
ஞானமாதல்
மனஸ் ஆதல்

மமாஸ்ய புத்தி –
ஜ்ஞானமாகில் தேவரீரை ஒழிய மற்று ஒன்றில் புகாது –
அது விஷயாந்தரத்தில் புகுருகைக்கு அடி அடியேனுடைய சம்பந்தம் யாய்த்து
இப்படி இருந்துள்ள அடியேனுடைய புத்தி -என்னவுமாம்

அன்றிக்கே –
மமாஸ்ய புத்தி –
தேவரீராலே கொடுக்கப் பட்ட அஷ்டாஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த நிஷ்டையை யுடையனாய்
அதுக்கு இட்டுப் பிறந்த அடியேனுடைய புத்தியானது -என்னவுமாம்

இத்தால் பிரதம பர்வம் அதி விலஷணமாய் இருந்ததே யாகிலும் அதில்
சரம பர்வ நிஷ்டனுடைய புத்தியானது புகாது என்கிறார்
சிஷ்டேத்யாதி–பதாப்ஜ விசேஷணம் ஆன போது-நாத -என்ற அநந்தரம் —
ஆகில் செய்கிறோம் இத்யாதி சங்கதி கண்டு கொள்வது –

——————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–4- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளுக்கு இப்படி அவிநா பூதராய்-
அவரை அல்லது அறியாத ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வாருடைய திருவடிகளில் சேஷத்வத்தையும் பிரார்த்தித்து அருளி –
அவர்கள் அளவில் ஊற்றத்தாலே-அவர்கள் உகந்த விஷயமான
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் கரண த்ரயமும் ப்ரவணமாம் படி பண்ணி அருள வேணும்
என்று அவரைப் பிரார்த்தித்து அருளுகிறார் –

உபகார விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி தமக்கு யாவதாத்மா பாவியாக வேணும் என்று பிரார்த்தித்து
ததுபக்ருதமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே கைங்கர்யம் தம்முடைய கரண த்ரயத்துக்கும்
அநவரத அந்வயம் உண்டாக வேணும் என்று அவர் தம்மையே பிரார்த்திக்கிறார் –
அன்றிக்கே –
பாத அநு சிந்தன பரஸ் சத்தம் பவேயம் -என்று தாம் பிரார்த்தித்த புருஷார்த்தம் தமக்கு அப்போதாக சித்தியாமையாலே
அது தனக்கும் அடியான தத் விஷய ப்ரேமமும் போனதாகக் கொண்டு அது தன்னை பிரார்த்திக்கிறார் ஆகவுமாம் –

நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ்ருதௌ மே
சக்தம் மநோ பவது வாக் குண கீரத்த நே சௌ
க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கரத் வயச்ய
வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரணத்ர யஞ்ச –4-

ஸ்ரீ யதி தலை நாதனே ஒழிவில் காலம் எல்லாம் உம் திரு மேனியின் நினைவில் என் மனம்
ஆசை கொண்டு இருக்க வேண்டும்
இந்த என் வாக்கு உம் குண கீர்த்தனத்தில் ஆசக்தமாய் இருக்க வேண்டும்
இரு கைகளின் செய்கையும் ஊழியம் செய்வதிலே இன்புற வேண்டும்
முக் கரணங்களும் மற்ற வ்யாபரங்களில் கண் எடுத்து பாராமல் இருக்க வேண்டும்..

நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ்ருதௌ மே-சக்தம் மநோ பவது மே மநோ –
தவ திவ்ய வபுஸ்ருதௌ-நித்யம் -சக்தம்-பவது —
அநாதி காலம் இதர விஷயங்களில் பழகிப் போந்த என்னுடைய மனஸ்ஸானது தேவருடைய திவ்ய மங்கள விக்ரஹத்திலே
சர்வகாலமும் மண்டி விஷயாந்தர ஸ்மரணத்துக்கு ஆளாகாத படி நன்றாக எய்வதாகவும் –

உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்கிறபடி
மனஸ்ஸுக்கு ஸூபாஸ்ரயமான அவலம்பனம் தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரகமே யாக வேணும் என்கை –

வாக் குண கீரத்த நே சௌ–பவது –
இதுக்கு முன் பஹுர் விஷயங்களை ஜல்பித்துப் போந்த வாக்கு தேவருடைய கல்யாண குணங்களையே வர்ணித்துக் கொண்டு
பேசுகையில் சகிதமாக வேணும் என்கை –

க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கரத் வயச்ய
அந்ய வ்ஷயங்களுக்கு நிஹீன வ்ருத்தி செய்து போந்த கைகள் இரண்டுக்கும் க்ருத்யம் தேவருடைய நித்ய கைங்கர்யம் ஆவதாக –

நித்யம் யதீந்திர தவதிவ்ய -வபுஸ்ருதௌ-
மேல் தாம் அபேஷிக்கிற ஸ்ம்ருதி தமக்கு அத்யந்தம் போக்யமாய் இருக்கையாலே அத்தை பிரார்த்திப்பதற்கு முன்னே
அதனுடைய அவிச்சேதத்தை பிரார்த்திக்கிறார் -நித்யம் என்று –
ஸ்வ அபேஷிதம் செய்கைக்குத் தக்க சக்தி விசேஷத்தை யொப்பி சம்போதிக்கிறார்-யதீந்திர என்று –

அன்றிக்கே
இதர விஷய வைராக்யத்தால் உண்டான பெரு மதிப்புத் தோற்ற இருக்கும் இருப்பு கண்டு
யதீந்திர -என்று சம்போதிக்கிறார் ஆகவுமாம் –

தவ –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும் –
சாஷான் நாராயண தேவ -என்றும் –
ஆசார்யஸ் ச ஹரிஸ் சாஷாத் -என்றும் சொல்லுகிறபடியே பகவத் அவதார விசேஷமான தேவரீருடைய -என்னுதல்-

காருண்யாத் குரு ஷூத்தமோ யதிபதி -என்கிறபடியே க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யரான தேவரீருடைய -என்னுதல்

எந்தை எதிராசர் இவ்வுலகில் எம் தமக்காக வந்துதித்த -என்கிறபடியே
அடியோங்களை உத்தரிப்பிக்க அவதரித்த தேவரீருடைய -என்னுதல்
இவை எல்லா வற்றாலும் பிரார்த்திக்கிறது அத்தலைக்கு அவஸ்ய கர்த்தவ்யம் என்கிறது

திவ்ய –
திவி பவம் திவ்யம் -என்கிற வ்யுத்பதியாலே அப்ராக்ருதம் -என்னுதல் –
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் –104- என்கிறபடியே மிக்க தேஜஸ்சை உடைத்தான என்னுதல் –
ஆதியஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –என்றது ததியர்க்கும் ஒக்கும் இறே-
ஆவிர்பாவைஸ் ஸூர நர சமோ தேவ தேவஸ் ததீயா -என்றும் –
தருனௌரூபா சம்பன்னௌ-என்றும் சொல்லக் கடவது இறே

தவ திவ்ய
ப்ராப்தமானதுவே போக்யமாய் இருக்கும் என்கிறது

வபுஸ் ம்ருதௌ-
திருமேனி ஸ்மரணத்திலே த்யேயம் ஸூபாஸ்ரயம் இறே

வபு –
திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கும் திவ்ய மங்கள விக்ரஹம் போக்யமாய் இருக்கிறது காணும் இவர்க்கு

ஸ்ம்ருதௌ –
விஷயத்தோபாதி ஸ்ம்ருதி தானும் போக்யமாய் இருக்கிற படி

தவ -என்று
ஸ்ரீ பகவத் அவதாரங்களையும் -ஸ்ரீ ஆழ்வார்களையும் வ்யாவர்த்திக்கிறது
திவ்ய என்று
இவர் தம்முடைய விக்ரஹாந்தரங்களையும் வ்யாவர்த்திக்கிறது –

இத்தால் ஸ்ரீ நம்மாழ்வார் –
உயர்வற உயர் நலம் உடையவன் -என்று தொடங்கி-
ஸ்ரீ ஈஸ்வரனுடைய ஆநந்தாதி குணங்களையும்
திவ்யாத்மா ஸ்வரூபத்தையும் –
நிர பேஷா உபாயத்வத்தையும் பரத்வத்தையும் அனுசந்தித்து தாம்
துயர் அறு சுடர் அடி -என்று திருமேனியிலும் சௌந்தர்யாதிகளிலும்-ஈடுபட்டு
தமக்கு அந்தரங்கமான திரு உள்ளத்துக்கு
தொழுது எழு என் மனனே -என்று உபதேசித்தாப் போலே

இவரும் -தவ -என்று
ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தையும்
ஆத்ம குணங்களான க்ருபா சௌலப்யாதிகளையும் அனுசந்தித்து
திவ்ய வபு -என்று
அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானமான திரு மேனியிலே ஈடுபட்டு ஸ்வ சம்பந்தியான மனஸ்ஸூம் திருமேனி ஸ்மரணத்திலே
சக்தமாக வேணும் என்கிறார் என்கிறது –

வபு –
உப்யதே பித்ரேதி வபு -என்கிற வ்யுத்பத்தியாலே –
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ –என்றும் –
தேவ தேவோ ஹரி பிதா -என்றும்
பூதா நாம் யோ அவ்யய பிதா –என்றும் சொல்லுகிறபடியே –
சகல ஜகத் பிதாவான ஸ்ரீ எம்பெருமானாலே கேவலம் ஸ்வ இச்சையாலே சர்வ சேதன விஷயமாக
ஹித பிரவர்த்தன உபயோகி தயா க்லுப்தமாகையாலே-ஜன்ம ஜரா மரணங்களாலே விவர்ஜிதமாய் –
நித்தியமாய் -பகவத் அனன்யார்ஹ சேஷமாய் -ஜ்ஞானானந்த ஸ்வரூப மான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வர்த்தகமான
திருமேனியுடைய ஸ்மரணத்தாலே என்னவுமாம் –
திருமேனி அப்ராக்ருதம் ஆகையாலே ஜ்ஞான வர்த்தகமாய் இறே இருப்பது –

மே –
1-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறித் திரிகிற என்னுடைய -என்னுதல் –
2-திருமேனி ஸ்மரணத்துக்கு இட்டுப் பிறந்த அடியேனுடைய என்னுதல் –
3-திருமேனி ஸ்மரணத்த்தில் போக்யதை அறியும் அடியேனுடைய என்னுதல் –
4-அசௌ-என்றத்தை லிங்க வ்யக்தமாக்கி -அதோ மன -என்று மனஸ் ஸூ க்கு விசேஷணம் ஆக்கி –
இதர விஷயங்களில் சபலமாய் இதன் வாசி அறியும் மனஸ் -என்னுதல் –
5-ஜ்ஞான ப்ரசரண த்வாரமான மனஸ் -என்னுதல்

மே மன –
மனஸ்ஸூ தான் ஜ்ஞான ப்ரசரண த்வாரமே யாகிலும்
அது ப்ராப்த விஷயத்தில் ஆகாமல் அப்ராப்ருத விஷயங்களிலேயாய்த் தடுமாறுகைக்கு அடி
அடியேனுடைய சம்பந்தம் என்கிறார் –

மே மன –
அடியேனுக்கு பவ்யமான மனஸ் -என்கிறார் -இத்தால் ஸ்வ சம்பந்திகளுக்கும் இவை உண்டாக வேணும் என்கிறது –

சக்தம் மநோ பவது –
அப்ராப்த விஷயத்தில் அநவரத சஞ்சரணத்தால் உண்டான உறாவுதல் தீரும் படி தேவரீர் திரு மேனியை நினைக்கையே
தனக்கு ஸ்வரூபமாம் படி யாக வேணும் என்கிறார் –

ஜ்ஞான இந்த்ரியங்களிலே பிரதானமான மனஸ்ஸூக்கு விஷயம் சொன்ன போதே உப லஷண தயா
மற்ற சஷூராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் தத் தர்சன தத் சௌகுமார்ய-தத் குண ஸ்ரவண –
தத் திவ்ய கந்த -தத் தீர்த்த பிரசாத -மாதுர்யாதிகள் விஷயங்களாக வேணும்
என்னுமதுவும் சொல்லப் பட்டது –

மனஸ்ஸூக்கு சேஷம் இறே மற்ற இந்த்ரியங்கள் -குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்னக் கடவது இறே

அசௌ வாக்
நிதியைப் பொழியும் முகில் என்று –மன்னா மனிசரைப் பாடி -இளைத்து இருக்கிற என் நா என்னுதல்
தேவரீருடைய குண கீர்த்தன லுப்தையான என் நா வென்னுதல்

குண கீர்த்தன –
தேவரீருடைய ஆத்ம குணங்களான வாத்சல்யாதிகளுக்கும்
திரு மேனி குணங்களான சௌந்தர்யாதிகளுக்கும் வாசகங்களான
திரு நாமங்களைச் சொல்லுகையாலே –
நித்யம் சக்தா பவது -சொலப்புகில் வாயமுதம் பரக்கும் -என்கிறபடியே
திரு நாம அனுசந்தானம் -உபக்ரமே தொடங்கி போக்யமாய் இருக்கையாலே
இதில் என் நாவானது
அநாதி காலமே பிடித்து விஷயாந்தரங்களை ஸ்துதித்து இளைத்துக் கிடந்த தன்னிளைப்பு எல்லாம் தீரும் படி
என்றும் ஒக்க சக்தமாக வேணும் என்கிறார்

குரோர் நாம சதா ஜபேத் -என்னக் கடவது இறே –
இவ்விடத்தில் குண சப்தத்தாலே திரு நாமத்தை லஷிக்கிறது –
இப் பிரமாண அநு குணமாக குணாவி நாபத்தைப் பற்றவுமாம் –

ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியை சேவிக்க எழுந்து அருளின போது-
அவர் த்யானத்தில் எழுந்து அருளக் கண்டு பின்பு
தண்டன் சமர்ப்பித்து த்யானம் எது மந்த்ரம் எது -என்று கேட்க அவரும் –
த்யானம் ஸ்ரீ ஆளவந்தார் திரு மேனி –
மந்த்ரம் ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் -என்று அருளிச் செய்தார் ஆகையாலே
த்யாநாந்ந்தர பிராப்தி திரு நாமத்துக்கு இறே

பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரச்ய சந்தி தே-அயோத்யா -2-26- என்கிறவிடத்தில் குண சப்தத்தை
திரு நாமத்துக்கு வாசகமாக அருளிச் செய்தார் இறே ஸ்ரீ பெரிய ஜீயர் –

இப்படி மநோ வாக் காயங்களுக்கு விஷயத்தைச் சொல்லி –
மேல் காயிக வியாபாரம் தேவரீர் விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் ஆக வேணும் என்கிறார் க்ருத்யம் -இத்யாதியால்
அன்றிக்கே
காயம் தனக்கு விஷயத்தைச் சொல்லுகிறார் ஆகவுமாம் -விசித்ரா தேஹ சம்பந்தி ஈஸ்வராய விஷ்ணு தத்வம் -விறே

கரத் வயச்ய-
கைங்கர்யம் செய்யும் இடத்தில் மற்றொரு துணை தேட வேண்டாத படி அந்யோந்ய சஹாயமான-கரத் வயத்தினுடைய –

கருத் யஞ்ச –
வியாபாரமும்

தவ தாஸ்ய கரணம் து பவேத் –
தேவரீர் விஷயமாய் -விலஷணமாய் இருக்கிற கைங்கர்யம் ஆக வேணும் என்கிறார்

து -சப்தம் –
வைஷ்ணவ வாசி -கைங்கர்யத்துக்கு வைஷண்யமாவது-இதர விஷய ஸூஸ்ருஷை போலே ஸ்வரூப விரோதியாய்
துக்கோ தர்க்கமாய் இருக்காய் யன்றிக்கே ஸ்வரூப அநுரூபமாய் ஸூ கோதர்க்கமாய் இருக்கை-
அன்றிக்கே –
பகவத் கைங்கர்யம் போலே சாஸ்த்ரைகசமிதி கம்யமாய் இருக்கை யன்றிக்கே தேவரீர் ஸ்ரீ ஸூக்திகளால்
அறியத் தக்கதாய் இருக்கை யாகவுமாம்
அன்றிக்கே –
கரதவயஸ்ய து கர்த்தவ் யஞ்ச -என்று அந்வயித்து-முன்பு எல்லாம் இதர விஷயங்களை ஸூஸ்ருஷித்து அதுவே
யாத்ரையாய்ப் போந்த இந்த கரத்வயத்தினுடைய வ்ருத்தி என்னவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
து சப்தம் -அப்யர்த்தமாய் காயிக வியாபாரமும் தாஸ்ய கரண ரூபமாக வேணும் என்கிறார் ஆகவுமாம்
உபாய வரணாத்மகத்வம் உண்டு இறே அஞ்சலிக்கு –

இத்தால் கரண த்ரயத்துக்கும் உபாய உபேயங்களில் அந்வயம் உண்டு என்கிறது
இத்தால் கர்மாத் யுபாயங்களுக்கு பகவன் நிஷ்ட உபாயத் வாபி வ்யஞ்சகத்வம் ஒழிய சாஷாத் உபாயத்வம் இல்லை என்கிறது
நிதித்யாசிதவ்ய என்கிறதும் இவனுடைய அஜ்ஞ்ஞாதையைப் பற்றி இறே

யத்வா சகாரா துகாரங்கள் இரண்டும் -ஏவகாரார்த்தமாய் -கரண த்வயத்தினுடைய வியாபாரம் தானே
ப்ராப்த விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமே யாக வேணும் -என்கிறார் ஆகவுமாம்

அங்கனும் அன்றிக்கே –
து -சப்தம் -ஏவகாரார்த்தமாய் விஷயாந்தர ஸூஸ்ருஷையை வ்யவச்சேதிக்கிறது ஆகவுமாம் –

அன்றிக்கே
கர த்வயச்ய ச தவ தாஸ்ய கரணந்து க்ருத்யம் பவேத் -என்று யோஜிக்கவுமாம் –
குரோர் வார்த்தாச்ச கதயேத்-என்னக் கடவது இறே –
இவ்விடத்திலே ச காரத்தாலே கைங்கர்யத்தைச் சொல்லுகிறது –
இப்படி கரண த்ரயமும் அநு கூல விஷயங்களில் மண்டி இருந்தாலும் வ்யாபாராந்தரங்களில் ஆனால் கொத்தையாம் இறே –
ஆகையால் கரண த்ரயமும் வ்யாபாராந்தரத்தில் விமுகமாக வேணும் என்கிறார் –

வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரணத்ர யஞ்ச –
தேவரீர் விஷயத்தில் கரண த்ரயமும் அபிமுகமானாலும் விஷயாந்தரங்களில் வைமுக்யம் இல்லாத போது
இது நிலை நில்லாது என்று பார்த்து
புறப் பூதமான வை லக்ஷண்யத்தை யுடைய ஹேய விஷயங்களை நினைக்கை தொழுகை சொல்லுகை யாகிற வியாபாரத்தில்
நின்றும் கரண த்ரயமும் முகம் மாறுவதாக
இத்தனை நையும் மனம் உன் குணங்களை யுன்னி -இத்யாதிப்படியே
கரண த்ரயத்துக்கும் ஸ்ரீ எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யத்தை இதர நிவ்ருத்தி பூர்வகமாக
பிரார்த்தித்து அருளினார் ஆய்த்து –

வ்ருத்யந்தரே அஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச -என்று
இது ஏவ கார பர்யாயமான து சப்தத்தாலே நிரசிக்கப் பட்டது அன்றோ என்னில் –
அத்தாலே தாஸ்யே தரங்கள் யாய்த்து வ்யவச்சேதிக்கப் படுகிறது
இங்கு பகவத் கைங்கர்யம் தாஸ்யம் ஆகையாலே அத்தை வ்யவச்சேதிக்கிறது –
ஆசார்ய நிஷ்டனுக்கு த்வய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யம் விரோதி இறே –

கரண த்ரயஞ்ச வ்ருத்யந்த்ரே விமுக மஸ்து –
து சப்தம் வை லஷண வாசியான போது இங்கு விஷயாந்தரங்களை வ்யாவர்த்திக்கிறது

அன்றிக்கே –
சகாரம் -இவ்வர்த்தமாய் -கரண த்ரயமானது வகுத்த விஷயத்தில் சக்தமானால் போலே தத் இதர விஷயங்களில்
விமுகமாக வேணும் என்கிறார் என்னவுமாம் –
குரோர் அந்யன்ன பாவயேத் -என்னக் கடவது இறே –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–3- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

நம்மைப் பற்றினாருக்கு ப்ராப்ய பிராபகமும் நாமேயாகச் சொன்னீரே –
நம்மைப் பற்றி நிற்கிற உமக்கும் இது ஒவ்வாதோ என்று ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளமாக –
எனக்கு அங்கன் அன்று-
தேவரீர் திருவடிகளையே ப்ராப்யமும் பிராபகமுமாகக் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலாமவர் திருவடிகளே
ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி இருக்குமவனாக வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –

கீழ் இரண்டு ஸ்லோஹத்தாலும் ஸ்ரீ எம்பெருமானாருடைய ஜ்ஞான அனுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்து –
மேல் மூன்று ஸ்லோஹத்தாலே
ப்ராப்ய பிரார்த்தனை செய்து அருளுகிறார் -உபாய வரணம் ப்ராப்ய சேஷம் இறே –

அதில் முதல் ஸ்லோஹத்திலே
கரண த்ரயத்தாலும் ஸ்ரீ தேவரீர் திருவடிகளையே உபாய உபேயங்களாக அத்யவசித்து இருக்கும்
ஸ்ரீ பூர்வாசார்யர்களுடைய திருவடிகளை அடியேன் இடைவிடாமல் நினைத்துக் கொண்டு இருக்க கடவேனாக வேணும் என்கிறார் –

அன்றிக்கே –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -என்று பிரஸ்துதமான உபாய க்ருத்தியம் இஷ்ட பிராப்தியும் அநிஷ்ட நிவாரணமும் ஆகையாலே
அதில் இஷ்டத்தை மூன்று ஸ்லோஹத்தால் அருளிச் செய்கிறார்

அதில் பிரதமத்தில்
ஆசார்ய அன்வயத்துக்கு அவஸ்ய அபேஷிதராய் கரண த்ரயத்தாலும் உண்டான ஸ்வ அனுஷ்டான உபதேசங்களாலே
தத் விஷய ப்ரீதி வர்த்தகரான உபகாரக விஷயத்தில் க்ருதஜ்ஞதை தமக்கு யாவதாத்மபாவியாக வேணும் என்கிறார் –
வாசா -இத்யாதியால் –

வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம் –3-

ஸ்ரீ யதீந்த்ர தலைவனே வாக்காலும் மனத்தாலும் காயத்தாலும் உம் திருவடி தாமரைகளை இடைவிடாமல் உபாசிக்கும்
ஆச்சர்யர்களான ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ திருக் குருகை பிரான் பிள்ளான் முதலிய புருஷர்களின் திருவடிகளை
ஸ்மரிப்பதிலேயே நோக்கோடு சர்வ காலமும் இருப்பேனாக

ப்ரத்யக்ஷ குரவே ஸ்துத்யா -என்கிறபடியே பகவத் விஷயத்தில் உபகரண ஆச்சார்யர்களை
ஸ்துதிக்கைக்கும் ஸ்மரிக்கைக்கும் வணங்குகைக்கும் யாய்த்து இவனுக்கு அடியிலே
வாங் மனஸ் காயங்களை அடியிலே உண்டாக்கிற்று –

விசித்ரா தேக சம்பத்தி-இத்யாதிப்படியே சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு
அந்ய பரராய் திரிகிற இவ்விபூதியிலே பகவத் ஸமாச்ரயண மாத்திரத்தில் துவளுகை அன்றிக்கே
அத்தையும் பிரதம அவதி என்று கழித்து சரம அவதியான ஆச்சார்ய விஷயத்தில் கரண த்ரயத்தையும் விநியோகிக்கும்
படியான ஏற்றத்தை உடைய இவர்கள் சிலரே என்று வித்தராய் அவர்கள் திருவடிகளைப் பற்றுகிறார் –

வாசா
வாய் அவனை அன்றி வாழ்த்தாது -என்று பிரதம பர்வ நிஷ்டர் பகவத் விஷயம் அல்லது மற்ற ஒரு விஷயத்தை
ஏத்தாதாப் போலே இவர்களும் வகுத்த விஷயம் ஒழிய மற்ற ஒன்றை ஏத்தாத படி –
அவர்களுக்கு வ்யாவ்ருத்தம் தேவதாந்த்ரம் –
இவர்களுக்கு பகவத் விஷயம் -நாவ கார்யம் -என்றவர்கள் இறே இவர்கள்

வாசா –
திருவடிகளுடைய போக்யதாதிசயம் நெஞ்சால் நினைப்பதற்கு முன்னே
வாயால் சொல்லலாம் படி காணும் இருப்பது

வாசா -என்ற அனந்தரம்-
யதீந்திர -என்கிறது
இந்த்ரிய நிக்ரஹத்தால் பிறந்த ஐஸ்வர்யம் ஸ்வ சம்பந்திகள் அளவும் சென்று –
அத்தை அறியும்படியாய் இருக்கையாலே –
இத்தால் தம்முடைய கரணங்களையும் நியமிக்க வேணும் என்று கருத்தாகிறது

மநஸா
மந பூர்வோ வாக் உத்தர -என்கிற நியமம் இல்லையாய்த்து இவர்களுக்கு –
வாய் திறக்க இவ்விஷயத்தில் அல்லது வாய் திறக்காதது போலே
நெஞ்சுக்கும் விஷயம் அது அல்லது வேறே இல்லையாய்த்து இவர்களுக்கு –

ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியை -உமக்கு தியானத்துக்கு விஷயம் எது என்று கேட்ட பின்
அவர் அருளிச் செய்த திரு வார்த்தையை நினைப்பது –

வாசா மனசா வபுஷா ச
என்று தம் கரணங்களின் ப்ராவண்ய அதிசயத்தைச் சொல்கிறது –

மநஸா வபுஷா ச –
மனஸ் அடியாக வரும் க்ரமம் குலைந்தது -கரணங்களுடைய பதற்றத்தாலே –
ப்ரேமம் தலை எடுத்தால் க்ரமம் பார்க்க ஒட்டாது இறே

வாங் மன காயை -என்று கூட்டிச் சொல்லாதே பிரித்துச் சொல்லுகையாலே
கரண ஏக தேச சமாஸ்ரயணமும் கார்யகரம் என்கிறது

யுஷ்மத் பாதார விந்த யுகளம் பஜதாம்
இவர்கள் வேப்பங்குடி நீர் இருக்கிற படி-
இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியான தேவரீருடைய நிரதிசய போக்யமாய் சேர்த்தி அழகை யுடைத்தான திருவடிகளை
ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் நிரந்தரமாக ஸேவிக்குமவர்களுடைய-

நித்யம் யதிவர சரணவ் சரணம் மதீயம்-என்று ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும்
ஸ்ரீ பரமாச்சாரியார் அருளிச் செய்தார் இறே

திருவடிகளை வாக்காலே பஜிக்கை யாவது தத் வைலக்ஷண்யத்தை புகழுகை
மனஸ்ஸாலே பஜிக்கையாவது -திருவடிகளை நெஞ்சால் நினைக்கை-
சரீரத்தாலே பஜிக்கையாவது ப்ரணமாமிக்கு விஷயம் ஆக்குகை –

யுஷ்மத் –
ப்ராப்தரான தேவரீருடைய -என்னுதல் –
ஆன்ரு சம்சய பிரதானரான தேவரீருடைய என்னுதல்

பாதார விந்த யுகளம் –
அப்ராப்தமாகிலும் விட ஒண்ணாத போக்யாதிசயத்தை யுடைய திருவடிகளுடைய யுகளத்தை-

யுகளம் என்கையாலே
மற்றொரு துணை தேட வேண்டாத படி நிரபேஷமாய் போந்திருக்கையும் –
சேர்த்தி அழகையும் -சொல்லுகிறது

பஜதாம் –
போக்யதாதிசயத்தாலே இடைவிடாமல் ஆஸ்ரயித்து கொண்டு இருக்குமவர்களாய்-
உபாயமாக ஆஸ்ரயிக்கும் அவர்கள் என்னுதல்
பஜனம் -பக்தி விசேஷம் இறே

குருணாம்-
திருவடிகள் சம்பந்தத்தால் தங்கள் அஜ்ஞ்ஞானம் போகிற மாத்ரம் அன்றிக்கே தாங்களும் ஸ்வ சம்பந்திகளுக்கு
தேஹாத்ம பாவ அஜ்ஞ்ஞா நிவர்த்தகராம் படி யாகிறதும் இவர் திருவடிகளை ஆஸ்ரயித்ததாலே–
அஜ்ஞ்ஞான நிவர்த்தகதவம் இறே குரு சப்தார்த்தம் –

யுஷ்மாத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் –
1-ப்ராப்தமான விஷயத்தை பற்றினவர்கள் ஆகையாலே -அப்ராப்த விஷயங்களிலே ப்ராப்தத்வ புத்தி நிவர்த்தகரான என்னுதல் –
2-பரம போக்யமான விஷயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே -அபோக்ய விஷயத்தில் போக்யதா புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்
3-நிரபேஷ உபாயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே சாபேஷ உபாயங்களிலே உபாயத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல் –
4-க்ருபா மாத்ர பிரசன்னமான விஷயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே -தேஹி மே ததாமி தே-என்கிறபடியே
இத்தலையில் ஏதேனும் ஒன்றை அபேஷிக்கும் விஷயத்தில் க்ருபா மாத்ர பிரசன்னத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்
அன்றிக்கே –
5-பரித்யஜ்ய -வ்ரஜ -மோஷயிஷ்யாமி -என்னும் விஷயத்தில் க்ருபா மாத்ர பிரசன்னத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்

இவருடைய த்யாக ஸ்வீ காரங்கள் இரண்டும் சம்சாரிகளுடைய சம்சார மோஷத்துக்கு இறே
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் விண்ணின் தலை நின்று மண்ணின் தலை உதித்தவர்-95- இறே –

கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம் –
ஸ்வ அவதாரத்தாலே அவ் வூரை சநாதமாக்கி அது தன்னையே தனக்கு நிரூபகமாக உடைய ஸ்ரீ ஆழ்வான் என்ன –
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் உபகார ஸ்ம்ருதியாலே அவர் திரு நாமம் சாற்றத் திரு உள்ளமாய் –
ஸ்ரீ எம்பெருமானாராலே புத்ரத்வேன அபிமதராய் ஸ்ரீ குருகைப் பிரான் என்று சாத்தப் பட்ட திரு நாமத்தை உடைய
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஸ்ரீ பூர்வாச்சார்யர்களுடைய

முக சப்தத்தாலே
ஸ்ரீ முதலியாண்டான் -ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ப்ரப்ருதிகளைச் சொல்லுகிறது –
இவர்களுடைய கரண த்ரய சமாஸ்ரயணமும் அஜ்ஞ்ஞான நிவ்ருத்தி பூர்வாக ஜ்ஞான பிரதத்வமும்
இவர்கள் கிரந்தங்களிலே காணலாம்

பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம்
அவர்கள் தேவரீருடைய பாதாரவிந்தங்களை அநுவரதம் த்யானம் பண்ணுமா போலே
இவ்வநுஸந்தானம் காதாசித்கமாகை அன்றிக்கே நித்தியமாக வேணும் என்கிறது –

அநு விந்தனம்-என்ற பாடமான போது-
அநுஸ் யூதம் விந்தனம் -என்று கொள்ளும் போது சதத சப்தம் சங்கதமாகாது

அநு -ஹித அர்த்தத்திலேயாய் கிருஷ்ண அநு ஸ்மரணம்-என்னும் இடத்தில் போலே
தத் விஷயத்வ சேஷத்வ அனுசந்தானத்தைச் சொல்கிறது –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட் படுத்தே -என்கிற அர்த்தத்தைச் சொல்கிறது –
இவருக்கு இவ்விஷயத்தில் உண்டான பாவ பந்தத்தில் ஊற்றம் அவரவர் திருவடிகளில் பிரார்த்திக்கை
அவர் இடமே பிரார்த்திக்கும் படி யாய்த்து

பாதாநுசிந்தன பரஸ்
இவர்கள் பண்ணின உபகாரங்களை நினைத்து இவர்கள் ஸ்ரீ பாதங்களுடைய அவிச்சின்ன ஸ்ம்ருதியிலே
தாம் ஆசக்தராக வேணும் என்கிறார் –

சததம் –
இது தான் கால தத்வம் உள்ளதனையும் நடக்க வேணும் என்கிறார்

பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம் –
உபகாரக விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி தமக்கு தாரகம் ஆகையாலே அது தமக்கு யாவதாத்மா பாவியாக வேணும் என்கிறார்

பாதாநுசிந்தன பாரோ பவேயம்
வ்யதிரேகத்தில் தாம் உளர் அன்று போலே காணும் -உபேயத்வா பிரதிபத்தி இறே கருதக்நதா பீஜம்
அன்றிக்கே
நாம் ஆதரிக்கைக்கு ஸ்ரீ எம்பெருமானாருடைய சாஷாத் சம்பந்தி சம்பந்தம் வேணுமோ –
அவர்களுடைய சம்பந்தி பரம்பரா சம்பந்தமே அமையாதோ என்கிறார் –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–2- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 29, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

இப்படி தொடங்கின ஸ்தோத்ரம் நிர் விக்னமாகத் தலைக் கட்டுகைக்காக அவர் திருவடிகளை ஆஸ்ரயித்து
அத்தாலே நிறம் பெற்றவராய்க் கொண்டு ஸ்ரீ எம்பெருமானாருடைய பகவத் பாகவத ப்ரேம புஷ்கல்யத்தையும்-
ஆஸ்ரித ஜனங்களுக்கு சரம ப்ராப்யராய் இருக்கும் படியையும் சொல்லி சாதரமாக ஏத்துகிறார் –

உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதிர்
ததைவ ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தமம் -என்கிறபடியே
ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் பகவத் பிராப்தி சாதனமாக சாஸ்திர விஹிதம் ஆகையாலே
கீழ் ஸ்லோஹத்திலே இவருடைய ஜ்ஞான பூர்த்தியைச் சொல்லி
இஸ் ஸ்லோகத்திலே தத் அனுகுணமான
அனுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்கிறார் –ஸ்ரீ ரங்கேத்யாதியாலே

ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே –2-

ஸ்ரீ ரெங்கராஜனின் திருவடி தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்சமும்
ஸ்ரீ பராங்குசர் திருவடி தாமரைகளில் மது பானம் செய்து ரீங்காரத்துடன் வட்டம் இடும் வண்டை ஒத்தவரும்
ஸ்ரீ பட்டார் பிரான் பர காலர் இவர்களின் திருமுகங்களுக்கு மலர்ச்சி தரும் சூரியனாகவும் மித்ரராயும்
ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கு அடைக்கலமாகவும் உள்ள ஸ்ரீ யதி ராஜரை துதிக்கிறேன் —

ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்

ஸ்ரீ பகவத் விஷயத்தில் வந்தால் வெளிறான அம்சத்தைக் கழித்து சாரமான அம்சத்திலே யாயத்து இருப்பது –
பர வ்யூஹங்கள் நித்ய முக்தருக்கும் முக்த பிராயருக்கும் முகம் கொடுக்கும் இடமாகையாலும்
விபவ அந்தர்யாமிகள் புண்யம் பண்ணினாருக்கும் உபாசகருக்கும் முகம் கொடுத்து நிற்கிற நிலையாகையாலும்
அவ்வோ நிலைகளுக்கு ஓரொரு குறைகள் உண்டு

அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ -என்று பரத்வாதிகளுக்கு ஆளாகாத பிற்பாடாருக்கும் முகம் கொடுத்து நிற்கும்
அர்ச்சாவதாரத்துக்கு சொல்லலாவது குறை ஒன்றும் இல்லையே
இப்படி நீர்மைக்கு எல்லை நிலமான அர்ச்சா ஸ்தலங்களுக்கு எல்லாம் வேர் பற்றான ஸ்ரீ கோயில் நிலையிலே யாயத்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆழங்கால் பட்டு இருப்பது –
ஆகையால் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் மிக்க போக்யதையை அனுசந்தித்து
சரஸ சஞ்சரணம் பண்ணும் படி சொல்கிறது –

பரமபத ஐஸ்வர்யத்தையும் சிராங்கிக்கும் படியான விபவ ஐஸ்வர்யத்தை யுடைத்தாய் –
ரதிங்கத-என்கிறபடியே சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனையும் ஸ்வ போக்யத்தையாலே ஆழங்கால் படுத்தும் படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவரங்கத் திருப்பதியை –
அரங்கமாளி-என்கிறபடியே –
ஸ்வ அதீனமாக ஆண்டு கொண்டு போருகையாலே வந்த பெருமையை யுடைய
ஸ்ரீ அரங்கத்தம்மான் திருக்கமலப் பாதத்தில் அலையெறிகிற மது ப்ரவாஹத்திலே சிறகு அடித்துக் கொண்டு வர்த்திக்கிற
ஹம்ஸ ஸ்ரேஷ்டராய் உள்ளவரை -என்கை –

பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன் –என்னும்படி இறே
இவ்விஷயத்தில் இவருக்கு உண்டான ப்ராவண்யம் –

ஸ்ரீ ரங்க-
ஈச்வரனே உபாயம் என்று இருக்குமவர்க்கு ஜ்ஞான அனுஷ்டானங்களை கொண்டு பிரயோஜனம் என் என்னில்
இவருக்கு இவற்றால் வருவதொரு பிரயோஜனம் இல்லை யாகிலும் இவை தான்
ஸ்வரூப அநு பந்திகள் ஆகையாலே விட அரிதாய் இருக்கும்
ஸ்வரூப அநு பந்தங்கள் யாய்த்து கைங்கர்ய ரூபங்கள் யாகையாலே –
ரஜ்யதே அநேநேதி ரங்கம்-
ரஜ்யதே அஸ்மின் இதி ரங்கம் என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும்
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும் சர்வ சேதனரும் தன்னை ஆஸ்ரயிக்கையால் வந்த ப்ரீதிக்கு காரணம் ஆகையால்
அவர் தமக்கே ப்ரீதி விஷயமான தேசம் என்கிறது

அதுக்கு மேலே ஸ்ரீ மத்வம் ஆகிறது-
தேசாந்தரகதோ வா அபி த்வீபாந்தர கதோ அபி வா ஸ்ரீ ரெங்கா முகோ பூத்வா ப்ரணீபத்ய ந்சீததி
மரங்கம் ரங்கமதி ப்ரூயாத் ஷூத் ப்ரசகல நாதி ஷூ ப்ரஹ்ம லோகம் அவாப்நோதி சத்யா பாபஷயன் நர பி
இத்யாதியில் சொல்லுகிறபடியே
இதுக்கு உண்டான பகவத் அங்கீகார பலத்தாலே தான் இந்த திக்கை நோக்கி தண்டம் சமர்பித்தல்
பேரைச் சொல்லுதல் செய்வார் என்ன –
அவ்வளவாலே அவர்களுக்கு உண்டான சமஸ்த துரிதங்களையும் போக்கி அபிமத பல விசேஷத்தையும்
கொடுக்கைக்கு ஈடான சக்தி விசேஷமாதல்

ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமாநம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கிறபடியே
ஸ்வயம் வ்யக்த தேசங்களில் பிரதான்யமாதல் –
ஸ்ரீ சப்தம் பூஜ்ய வாசியாகையாலே பகவத் சம்பந்தத்தால் உண்டான பூஜ்யதையைச் சொல்லவுமாம்-

அன்றிக்கே
ஸ்ரியா ரங்கம் -ஸ்ரீரங்கம் என்கிற வ்யுத்பத்தியாய் –
அத்தாலே ஔதார்ய காருணிக தாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ சர்வம் அதிசாயிதம் அதர மாத -ஸ்ரீ குண ரத்ன கோசம் – 57-
என்கிறபடியே ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய ஔதார்யாதி குணங்களுக்கு பிரகாசகமான தேசம் -என்னவுமாம்-

ராஜ –
1-அத்தேசத்துக்கு நிர்வாஹகன் ஆகையாலே வந்த ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல்-
2-தன்னுடைய சௌலப்யாதி குணங்களுக்கு பிரகாசகமான தேசத்தைப் பெறுகையாலே வந்த
ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல்
3-ஸ்ரீ பெரிய பிராட்டியார் தன்னைத் தனக்கு கொடுக்கைக்கு பாங்கான தேசத்தைப் பெறுகையாலே வந்த
ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல் –

ஸ்ரீ ரங்க ராஜ –
உபய விபூதி ஐஸ்வர்யத்தைக் காட்டில் இவ்வைஸ்வர்யம் இவனுக்கு விலஷணமாய் காணும் இருப்பது என்கிறார் –

ஸ்ரீ ரங்க ராஜ –
அவன் ஒன்றை அபிமாநிப்பது அது தனக்கு நிரூபகமாக இறே அபிமாநிப்பது

சரணாம் புஜ –
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகளுக்கு உபமானம் நேர் இல்லாமையாலே
உபமேயம் தன்னையே உப மானமாகச் சொல்லுகிறது

ஸ்ரீ ராஜ ஹம்சம் –
அத திருவடித் தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்சம் காணும் இவர் என்கிறார் —
1-அதாவது ராஜ ஹம்சதுக்கு தாமரை விஹார ஸ்தானம் ஆகிறாப் போலே
இவருக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் விஹார ஸ்தானம் ஆன படியும் என்கை
ரமந்தே யோகி நோசனந்தே சத்யா நந்தே சிதாத்மநி -என்னக் கடவது இறே -ஆகையாலே
அத்ரைவ ஸ்ரீ ரங்க ஸூ க மாஸ்வ-என்று ஸ்ரீ பெரிய பெருமாள் அனுக்ரஹித்ததும்

அன்றிக்கே
2-தாமரைக்கு ராஜஹம்சம் பிரகாசகம் ஆனாப் போலே இவரும் திருவடிகளுக்கு பிரகாசகர் -என்னவுமாம்
சேஷ சேஷிகள் ஒருவருக்கு ஒருவர் பிரகாசகர் இறே

அன்றிக்கே –
3-கபர்த்திமத கர்தமம் -யதிராஜ சப்ததி -38 இத்யாதியில் சொல்லுகிறபடியே
ஸ்ரீ பகவத் தத்வத்துக்கு பாஹ்ய குத்ருஷ்டிகளால் உண்டான அப்ரகாசதையைப் போக்கி அந்த தத்வத்தை
ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களால் பிரகாசிப்பிக்குமவர் என்னவுமாம்

பகவத் தத்வம் ஸ்வயம் பிரகாசகமாய் யன்றோ இருப்பது -இவர் பிரகாசகராவது என் என்னில் –
அது ஸ்வயம் பிரகாசகமே யாகிலும்
தத் விஷய ஜ்ஞானம் இல்லாதவர்க்கு அபிரகாசமாய் யன்றோ இருப்பது –
அவர்களுக்கும் தத் விஷய ஜ்ஞானத்தை உண்டாக்கி அத்தை
பிரகாசகமாம் படி பண்ணுகை-ஆகையால் ஈஸ்வரர் சேதனர் இருவருக்கும் உபகாரகர் என்கிறது
இவ்வுபகாரம் சேஷி முக விகாச ஜனகம் ஆகையாலே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமாய் இருக்கும்

ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்-

இனி பாகவத விஷயத்தில் வந்தாலும் -ஸ்வ யத்னத்தால் ஸ்ரீ ஈஸ்வரனைப் பெறப் பார்க்கும் ப்ரபத்தியிலே
அன்வயித்து இருக்கச் செய்தே தங்கள் ஸ்வீ காரத்தை சாதனமாக கொள்ளுமவர்களையும்
அவனே உபாயமாகக் கொள்ளா நிற்கச் செய்தேயும் பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இருக்கிறவர்களையும்
மகிழ்ந்து ப்ராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்கிறதை அத்யவசித்து -இப்போதே பெற்று அனுபவிக்க வேணும்
என்னும் அபிநிவேசத்தாலே கண்ணும் கண்ணீருமாய் யாய்த்து இருக்கும்படியான ஆர்த்தியை உடையராய்

பர வ்யூஹாதி ஸ்தலங்களில் காட்டில்-கண்டியூர் அரங்கம் -இத்யாதிப்படியே
ஸ்ரீ கோயில் முதலான ஸ்ரீ அர்ச்சா ஸ்தலங்களில் ஆழங்கால் பட்டு இருக்கும்
ஸ்ரீ ஆழ்வார்கள் அளவிலே யாய்த்து திரு உள்ளம் ஊன்றி இருப்பது

ஆகையால் கைங்கர்ய அபிநிவேசம் ஆகிற ஸ்வரூப அனுரூபமான சம்பத்தை உடையவராய்
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஸ்ரீ ஈஸ்வரனையும்
ஈஸ்வரோஹம் என்று இருக்கும் சம்சாரிகளையும்
ஸ்வ ஸூக்தி விசேஷங்களாலே வசீக்ருதராய் தலை சீய்க்கும் படி பண்ணுகையாலே ஸ்ரீ பராங்குசர் என்னும்
திரு நாமத்தை யுடையராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார்களில் தலைவரான ஸ்ரீ நம்மாழ்வாருடைய பரம போக்யமான திருவடிகளில்
போக்யதா அனுசந்தானமே நித்ய ஜீவனமாய் யுடையவர் என்கை –

கீழே பராங்குச பாத பக்தம்-என்று
அவர் பக்கல் ப்ரேமத்தை உடையவர் என்கிற மாத்திரம் சொல்லிற்று –
இங்கு அந்த ப்ரேம அனுரூபமாக
அவர் திருவடிகளில் போக்யத்தையுள் புக்கு அனுபவிக்கும் படி சொல்கிறது –

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களில் காட்டில் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உண்டான வ்யாவ்ருத்தி தோற்ற அவர்களோடே கூட அநுஸந்திக்குமது
மாத்திரம் போராது என்று தனியே முற்பட அனுசந்தித்தார்
இப்போது அவர்களோடு கூட அனுசந்தித்து அருளுகிறார் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாரை அல்லாத நாய்ச்சிமாரோடு கூட அநுஸந்தியா நிற்கச் செய்தேயும் முந்துறவே
ஸ்ரீ யபதி -என்று அவள் வ்யாவ்ருத்தி தோற்ற உடையவர் அனுசந்தித்து அருளினால் போலே
அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களில் இவருக்கு அவயவ பூதர் என்னும்படி இறே இவருடைய ஏற்றம் –

கீழ் இவருக்கு உண்டான பகவத் அங்கீகாரத்துக்கு நிதானத்தைச் சொல்லுகிறது -மேல் –
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
இவருக்கு ஸ்ரீ மத்வமாவது –
1-சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று
அடைந்த வண் குருகூர்ச் சடகோபன் -என்கிறபடியே ஸ்ரீ ஈஸ்வரனை சர்வ வித பந்துவாகப் பற்றின சீர்மை யாதல்
2-உண்ணும் சோற்றில் படியே அவன் தன்னையே தாரக போஷக போக்யங்களாகப் பற்றின சீர்மையாதல் –
3-ஒழிவில் காலப்படியே சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சமஸ்த வித கைங்கர்யங்களையும் தாம் ஒருவருமே
செய்ய வேணும் என்கிற மநோ ரதமாதல் –
அன்றிக்கே
4-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி தம்படி
ஸ்வ சம்பந்தி பரம்பரைக்கும் உண்டாம்படி பண்ணுகை யாதல்

பராங்குச
இப்படிகளாலே பாஹ்ய குத்ருஷ்டிகளை வசீகரிக்க வல்லரான ஸ்ரீ ஆழ்வாருடைய

பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
அத திருவடித் தாமரைகளின் மதுவைப் புஜித்து-மதுபான மத்தமாய் சுழன்று திரிந்து விளங்குகின்ற ப்ருங்க ஸ்ரேஷ்டரான
இத்தால் பிரமரமானது தாமரையின் மதுவை உண்டு தன் குறை தீர்ந்தற்று அன்றிக்கே மதுபான மத்தமாய் சுழன்று திரியுமா போலே
இவர் ஸ்ரீ மாறன் அடி பணிந்து கவியமுதுண்டு களித்து குமதி க்ருதிகளை மதியாதே பூ மண்டலம் எங்கும்
விஜய யாத்ரையாய் சஞ்சரிக்குமவர் என்கிறது

ப்ருங்கத்துக்கு மது ஜீவனம் ஆனாப் போலேயும்
ராஜ ஹம்சத்துக்கு தாமரை விஹார ஸ்தானம் ஆனாப் போலேயும்
இவருக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் தாரகமாயும் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் விஹார ஸ்தானமாயும் இருக்கும் என்கிறது
ஆசார்யவான் புருஷோ வேத -என்கிறபடியே ஸ்ரீ ஆசார்ய ஆதீனம் இறே உஜ்ஜீவனம் –
சிஷ்யன் பிரதம பர்வத்தில் இழிகிறதும் அவன் உகந்த விஷயம் என்றாய்த்து

ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்-

மங்களா சாசன ரூபமாக ஐஸ்வர்யத்தை உடையவராய் ப்ராஹ்மண உத்தமரான ஸ்ரீ பெரியாழ்வாருடையவும்
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற பிரதிபக்ஷங்களுக்கு ம்ருத்யு பூதரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருடையவும்
திருமுக மண்டலம் ஆகிற தாமரையை அலர்த்தும் ஆதித்யன் -என்கை –

ஆளுமாளார் -என்கிறவன் தனிமை தீர ஆள்கள் சேர்த்து அருளுகையாலும்
பாஹ்ய குத்ருஷ்டிகளைக் கிழங்கு எடுத்துப் பொகடுகையாலும் இவரைக் கண்ட போதே அவர்கள் திரு முகம் அலர்ந்த படி –

இனி இவர் ததீய விஷயத்தில் கிஞ்சித் கரித்த படியைச் சொல்லுகிறது மேல்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் –

ஸ்ரீ சப்தம்
1-பூஜ்யதையைச் சொல்லுகிறதாதல்-
2-ஸ்ரீ மத்வத்தை சொல்லுகிறதாதல்

இவர்களுக்கு ஸ்ரீமத்வமாவது –
1-ஸ்ரீ மாலா காரரைப் போலே திரு நந்தவனம் செய்து திருமாலை சமர்ப்பிக்கையும்
2-பரமத நிரசன பூர்வகமாக ஸ்ரீ மன் நாராயணன் ஆகிற தத்தவத்தை ஸ்தாபித்து அவன் தன்னை சாஷாத் கரித்து-
தம்மைப் பேணாதே அத்தலைக்கு மங்களா சாசனமே பண்ணுகையும்-
3-ஸ்ரீ கோபுர ஸ்ரீ பிரகார நிர்மாணம் முதலிய கைங்கர்ய கரணங்களும் ப்ராப்யத்வமாதல் –
ஆக இப்படி ஸ்ரீ மான்களாய் இருந்துள்ள

பட்ட நாத
ப்ராஹ்மண ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பெரியாழ்வார் என்ன
இவருக்கு -ப்ராஹ்மணரில் ஸ்ரைஷ்டைமாவது –
மந்திர ப்ரஹ்மண ஸ்ரீ திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தாலே சொல்லப் படுகிற
ஸ்வரூப அநு ரூபமான மங்களா சாசனமும் –
அஸ்தானே பய சங்கையும்
மேன் மேலும் மங்களா சாசனமும் –

பரகால
சத்ரு ம்ருத்யுவான ஸ்ரீ திரு மங்கை யாழ்வார் என்ன –
இவருக்கு சத்ருக்கள் பகவத் விட்டுக்கள்-அவர்கள் ஆகிறார் ஆத்மைக்யம் -இத்யாதியில்
சொல்லப் படுகிற ஆத்மைக்ய வாதிகள் முதலானவர்கள் -இவர்களுடைய

முகாப்ஜ
திரு முக மண்டலங்கள் ஆகிற தாமரைகளுக்கு -முகத்தை தாமரையாகச் சொல்லுகிறது –
தாமரை உடைய சௌகுமார்யம் ஸ்பர்சஹம அன்றிக்கே இருக்குமா போலே
திரு முக மண்டலமும் பர துக்கம் பொறுக்க மாட்டாத சௌகுமார்யத்தை உடையது என்கிறது

மித்ரம்
ஸூர்யனாய் இருக்குமவராய்-
அதாவது ஆதித்யன் ஸ்வ உதயத்தாலே தாமரையை அலர்த்துமா போலே
இவரும் பரமத ஷேபாத்ய அநேக வித கைங்கர்யங்களாலே இவர்களுக்கு அபிமதமான ஸ்ரீ பெரிய பெருமாளை உகப்பிக்கை –

அன்றிக்கே –
முக சப்தம் -ஆதி சப்த பர்யாயமாய் –
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திரு மங்கை யாழ்வார் முதலான ஸ்ரீ ஆழ்வார்கள் ஆகிற
தாமரைகளுக்கு மித்ரரானவர் என்னவுமாம்
அப்போதைக்கு அவர்கள் உகந்த விஷயம் என்று ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் அனந்த கைங்கர்யங்களையும் செய்து
அருளுகையாலே அவர்கள் திருமுக மண்டலத்துக்கு விகாசகர் என்கிறது

ஆக கீழ் ஸ்லோஹத்தில்-பூர்வார்த்தத்தில் சொல்லப் படுகிற இவருடைய ததீய சேஷத்வ பர்யந்தமான தத் சேஷத்வ ஜ்ஞானத்துக்கு
குணமான பர்வ த்ரய கிஞ்சித் காரம் சொல்லிற்று யாயிற்று

ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே

கீழே -காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம்-என்று சாமாந்யேந திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு
உபாய பூதர் என்னும் இடம் சொல்லிற்று –
இங்கு அவர்கள் எல்லாரும் ஒரு தட்டும் தாம் ஒரு தட்டுமாம் படியான ஏற்றத்தை யுடையராய்
சிஷ்ய வர்க்க க்ரமத்துக்கு சீமா பூமியான ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு
ப்ராப்ய -பிராபகங்களாக இரண்டுமே தாமேயாக இருக்கும் படி சொல்கிறது

யதிராஜமீடே-
இப்படி ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்த விஷயமான ஸ்ரீ பெரிய பெருமாள் அளவிலும்
ஸ்ரீ முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்த ஸ்ரீ ஆழ்வார்கள் விஷயத்திலும்
தத் தத் விஷய அனுரூபமான ப்ரேம பூர்த்தியை யுடையராய்
ஆஸ்ரிதருக்கு ப்ராப்ய ப்ராபக பூதருமாய் இருக்குமவர் என்று ஸ்துதிக்கிறேன் என்கிறார்

இனி ஆஸ்ரித விஷயத்தில் இவர் இருக்கும் இருப்பைச் சொல்கிறது
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன அம்ச பூதராகையாலே ஸ்ரீ வத்ஸ சிஹ்னர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கு
ஸ்ரீ ராமானுஜச்ய சரனௌ சரணம் பிரபத்யே –ஸ்ரீ வை ஸ்தவம் -1- என்று
தம் வாயாலே சொல்லலாம் படி உபாய பூதராய்-ஸ்ரீ ஆழ்வான்- இறே –

ந சேத ராமானுஜேத் யேஷா சதுரா சதுரஷரீ -என்று வ்யதிரேகத்திலும்
ஸ்ரீ ராமானு ஜாங்கரி சரணோஅஸ்மி -என்று அன்வயத்தாலும் இவருடைய உபாயத்வத்தை அருளிச் செய்தார்
ஆகையாலே -ஸ்ரீ வத் சிஹ்ன சரணம்-என்கிறார் -இது எல்லாருக்கும் ஒக்குமாகையாலே உப லஷணம்-

கீழ் ஸ்லோஹத்திலே காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதா நாம் -என்கிற விடத்தில் தாத்பர்ய விதையா தோற்றுகிற உபாயத்வம்
இங்கு ஸ்ரீ வத் சிஹ்ன சரணம்-என்று சரண சப்தத்தாலே வியாக்யானம்

யதிராஜம்
கீழ்ச் சொன்ன ஆகாரங்களால் உண்டான ஸ்வ உத்கர்ஷம் நெஞ்சிலே தட்டாத படியான
வைராக்கியம் உடைய ஸ்ரீ எம்பெருமானாரை

அன்றிக்கே –
கீழ்ச் சொன்ன ஏற்றங்களுக்கு எல்லாம் நிதானமான வைராக்கியம் உடைய எம்பெருமானாரை என்னவுமாம்
இவ் வைராக்யம் இறே இவருக்கு பிரகாச ஹேது –

ஈடே –
வாக் இந்த்ரியம் படைத்த பலம் பெற்றோம் என்று ஸ்தோத்ரத்தில் பிரவ்ருத்தர் ஆகிறார்
ஈடே
கீழே மூர்த்நா ப்ரணமாமி -என்று காயிகமான கைங்கர்யத்தைச் சொல்லி
இதுலே ஈடே என்று
வாசிகமான அடிமையைச் சொல்லுகிறது

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி போலே குணா ஜிதர்க்கு ஸ்தோத்ரம் இறே க்ருத்யமாவது –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி -பிரவேசம்–/ ஸ்லோகம்–1- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

April 28, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

பிரவேசம்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே பூ ஸூரர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
போக்யமாக திருவதரித்த ஸ்ரீ திருவாய் மொழியிலே அவகாஹித்து
அதில் சாஸ்த்ரார்த்த ரசம் பாவ ரசம் இவற்றை அனுபவித்து தத் ஏக நிஷ்டராய் -தத் வ்யதிரிக்த சாஸ்திரங்களை
த்ருணவத் பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே ஸ்ரீ திருவாய் மொழி அமுத தாத்பர்ய அர்த்தத்தையே தமக்கு நிரூபகமாக உடையராய்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யமே அனவரதும் செய்து கொண்டு போரும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை
ஸ்ரீ திருப் பாதத்தில் ஆஸ்ரயித்து

ஸ்ரீ திராவிட வேத அங்க உப அங்கங்களான ஸமஸ்த திவ்ய பிரபந்த தாத்பர்யங்களையும் அவர் உபதேசத்தால் லபித்து
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருளான சரம பர்வத்தில் நிஷ்டராய்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை இடம் அன்வயித்து தத் ஏக நிஷ்டராய்
எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயரை
ஸ்ரீ பிள்ளை தாமே உகந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளில் காட்டிக் கொடுக்கையாலே
அவர் திருவடிகளில் மிகவும் பிரவணராய் தத் குண வேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கும் படியான தசை பிறந்து
தத் வைபவத்தைப் பேசுகிற இவர்

சரம உபாய நிஷ்டரான சரம அதிகாரிகளுக்கு அநவரதம் அநுசந்தேயங்களான சரம அர்த்தங்களை
இப்பிரபந்த முகேந வெளியிடா நின்று கொண்டு
ஸ்வ அபேக்ஷித்ங்களையும் அவர் திருவடிகளில் அபேக்ஷித்துத் தலைக் கட்டுகிறார் –

ஸ்ரீ யபதியாய் -பரம காருணிகரான-ஸ்ரீ சர்வேஸ்வரன் அந்தமில் பேரின்பமான த்ரிபாத் விபூதியிலே
ஸ்ரீ வைகுண்டாக்ய திவ்ய நகரத்திலே சஹஸ்ர ஸ்தம்ப சோபிதமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே –
சஹஸ்ர பணா மண்டல மண்டிதமான ஸ்ரீ திரு வனந்த ஆழ்வான் ஆகிற கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே –
திருமகள் மண்மகள் ஆயர் மகள் -திருவாய் -1-9-4 -ஸ்ரீ லஷ்மீ பூமி நீளா சமேதனாய்
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

க்ருஹீத்ய அனந்த பரிசார சாதநைர்தி ஷேவ்யமாணாம் சசிவைர்ய சோசிதம்-என்கிறபடியே
சத்ர சாமர தாஸ வ்ருத்தாத்ய ஏக கைங்கர்ய உபகரண சோபித ஹஸ்தரான-அயர்வறும் அமரர்களாலே
அனவரத பரிசர்யமாண சரண விதனாய்க் கொண்டு –

ஏதத் சாம காயத் நாஸ்தே –
சாம வேத கீதனாய –திருச் சந்த -14-
தன்னை இன் கவி பாடின ஈசனை -திருவாய் -7-9-1- என்றும்
யானாய் தன்னைத் தான் பாடி தென்னா வென்னும் என்னம்மான் -திருவாய் -10-7-5-என்கிறபடியே
சஹஸ்ர சாக உபநிஷத் மயமான திருவாய் மொழி கேட்டு அருளா நிற்க

ச ஏகாகி ந ரமேதே -என்றும்
ஆற்றல் மிக்காளும்-4-5-4-
நாதிஸ் வஸத மகா -என்கிறபடியே
தேசாந்தர கதனான புத்ரன் இடத்தில் பித்ரு ஹிருதயம் செல்லுமா போலே சம்சாரி சேதனன் இடத்தில் திரு உள்ளம் குடி புகுந்து
உண்டது உருக்காட்டாதே சம்பந்தம் ஒத்து இருக்க இவர்கள் இவ்வனுபவத்தை இழந்து இருக்கிறது
தம் தாமை யறியாமையால் யன்றோ போர நொந்து திரு உள்ளம் இரங்கி

இனியாகிலும் இவர்கள் உஜ்ஜீவிக்கும் விரகு யாம்படி என்-என்று விசாரித்து
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமும் –
நிவாசாய சய்யா ஆசன பாதுகா -இத்யாதிப்படியே
தம் திருவடிகளிலே ஒழிவில் காலத்தில் படியே எல்லா அடிமைகளும் தாம் ஒருவருமே செய்வதாகப் பாரித்துக் கொண்டு இருக்கிற
ஸ்ரீ திரு வனந்த ஆழ்வானைக் கடாஷித்து அருள

அவனும் ததஸ்த இங்கிதம் தஸ்ய ஜாதன் நேஷம்ஜகத்திதே -என்றும்
தஸ்மின் தாம்நி புரே புநராவாத் -பூத்வோ பூயோவர வர முனிர் யோகி நாம் சார்வ பௌம-என்கிறபடியே
பாவஜ்ஞ்ஞன் ஆகையாலே
சம்சாரிகள் இருக்கும் இவ்விடத்திலேயே ஸ்ரீ மாறன் மறை பயிலுமவர் ஆகையாலே
ஸ்ரீ ஆழ்வார் திருவவதார ஸ்தலமான ஸ்ரீ திரு நகரியிலே ஸ்ரீ அழகிய மணவாள மா முநிகளாய் திருவவதரித்து
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை சீர் அருளாலே

யதிவரதத்த்வ வித்தமராய் சம்சாரிகள் துர்கதியைக் கண்டு திரு உள்ளம் இரங்கி
இவர்கள் ரஷ்யம் அபேஷம் ப்ரதீஷதே -என்கிறபடியே
ரஷ்ய அபேஷ ப்ரதீஷரான பகவத் விஷயத்துக்கு ஆளாகாமையைத் திரு உள்ளம் பற்றி

இனி இவர்களுக்கு காரேய் கருணை இராமானுசா -25-என்கிறபடியே
கிருபா மாத்ர பிரசன்னாசார்யாரான ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் இன்றி
மற்று ஒரு உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று அறுதியிட்டு

உபதேசாதிகளாலே அறிவிக்கப் பார்க்கில் ஸ்வ உத்கர்ஷாதிகளையிட்டு அத்யவசிப்பார்கள் அன்று
யத் யதாசரதி ஸ்ரேஷ்ட –என்கிற நியாயத்தை திரு உள்ளம் பற்றி ஸ்வ அனுஷ்டானத்தாலே
திருத்தப் பார்க்கிறார் இப்பிரபந்தத்தில்

அனுசந்தித்தார் விஷயத்தில் ஸ்ரீ எம்பெருமானார்க்கு கிருபை பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத படியான
இப் பிரபந்தத்தை அருளிச் செய்கிறார் என்னவுமாம் –

ஸ்ரீ எம்பெருமானாருடைய உபாயத்வமாய்த்து பிரதிபாதிக்கப் படுகிறது உபக்கிரம உபசம்ஹாரங்களில்
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராபகத்வம் பர்யந்தமாகத் தோற்றுகையாலே-
எங்கனே என்னில் –

உபக்ரமத்தில் –
ஸ்ரீ மாதவாங்கரி ஜலஜத்வய நித்ய சேவா -பிரேம ஆவிலாசய பராங்குச பாத பக்தம் -என்று ததீய பர்யந்தமான
பகவத் கைங்கர்யத்தை பிரசக்தி பண்ணி –
மேல்
காமாதி தோஷ ஹர மாத்மபதார்ஸ்ரிதா நாம் -என்று
தத் விருத்தங்களான காமாதி தோஷங்களுக்கு நிவாரகர் என்கையாலும்-
முடிவில் –
தாமன்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தய த்வம்–என்கையாலும்
உபாயம் ஸ்ரீ எம்பெருமானாரே -என்கிறது

ஸ்ரீ த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களாலே உபாய உபேயங்களுடைய ஐக்யம் சொல்லப் படா நிற்க -இங்கு
உபாயம் ஸ்ரீ எம்பெருமானாரும் உபேயம் ஸ்ரீ எம்பெருமான் என்கையும் சேருமோ என்னில் சேரும்
அங்கும் திருவடிகளை உபாயமாகவும் ஸ்ரீ யபதியை உபேயமாகவும் சொல்லிற்று இறே-
அங்கு திருவடிகள் அதத் யங்கள் யன்றோ என்னில் –
இவர் தாமும் திருவடிகள் ஆகையாலே அதத் யங்கராகக் குறையில்லை -ஆகையாலே இறே –
விஷ்ணுஸ் சேஷதீ -என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியதாக
ஸ்ரீ வைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப் பட்ட ஸ்லோஹம் திருவவதரித்தது
அன்றிக்கே
இவர் தாமே உபாயமும் உபேயமாகவும் -ஐக்யம் என்னவுமாம்
சரம உபாய உபேயங்கள்-பிரதம உபாய உபேயங்களுக்கு சேஷங்கள் ஆகையாலே பிரபத்தி சாஸ்திர விரோதம் இல்லை

இனி உபாயத்துக்கு வேண்டுவது
விஷய பூர்த்தியும் -அபராத பூயஸ்தவமும் -ஆகிஞ்சன்யமும் -அநந்ய கதித்வமும் -உபாய உபேய பிராத்தனையும் ஆகையாலே

அதில் முதல் இரண்டு ஸ்லோஹத்தாலே விஷய பூர்த்தியையும் –

மேல் ஸ்லோஹ த்ரயத்தாலே பிராப்ய பிரார்த்தனையும் –

மேல் ஸ்லோஹ சப்தகங்களாலே தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் -தம்முடைய தோஷ பூயஸ்தவத்தையும்-

மேல் ஒரு ஸ்லோஹத்தாலே விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனையையும் –

மேல் இரண்டு ஸ்லோகங்களாலே தம்முடைய அநந்ய கதித்வத்தையும் –

மேல் ஒரு ஸ்லோஹத்தாலே விரோதி நிவ்ருத்தி பூர்வக பிராப்ய சரமாவதி பிரார்த்தனையையும் –

மேல் ஒரு ஸ்லோஹத்தாலே அத்தலையில் கார்யகரத்வ உபயோகியான சக்தி விசேஷத்தையும் –

மேல் ஒரு ஸ்லோஹத்தாலே எம்பெருமானாருடைய ஸ்வ சம்பந்தி பரம்பரா விஷயமாக பிரவ்ருத்தமான
பகவத் ஏக உபாயத்வ பிரார்த்தனையே தத் சம்பந்திகளுக்கு ரஷகம் என்னுமத்தையும் –

மேல் ஒரு ஸ்லோஹத்தாலே ஆச்சார்ய ருசி பரிக்ரக்ருஹீதமாமதுவே தத் சம்பந்திகளுக்கு பிராப்யம் என்னுமத்தையும் அருளிச் செய்து –

நிகமத்தில் அடியேனுடைய அஜ்ஞாநாதிகளைக் கடாஷித்து இவன் அநந்ய கதிகன் என்று திரு உள்ளம் பற்றி
இப்பிரபந்த ரூபமான அடியேன் விண்ணப்பத்தை அங்கீ கரித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து தலைக் கட்டுகிறார் –

இதில் பிரதி ஸ்லோஹமும்-ஸ்ரீ எம்பெருமானாரை -ஸ்ரீ யதிராஜ -ஸ்ரீ யதீந்திர -என்று சம்போதிக்கிறது-
யத்த இதி -யச்சதீதி யதி -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் சொல்லப் படுகிற
ஸ்ரீ ப்ரஹ்ம பிராப்தி பர்யந்தமும் -இதர விஷய வைராக்யமுமே இவருக்கு பிராப்ய ஹேதுவாகையாலே என்றாதல்
ஸ்வார்த்த பிரயத்யத்தையும் இதர விஷயத்தோடு சேர்த்து அதில் நின்றும் வ்யாவ்ருத்தராய் –
பரார்த்த ஏக பிரயத்தராய் இருக்குமதுவே தத் சம்பந்திகளுக்கு பற்றாசு என்று இருக்குமவர் யாகையாலே என்றாதல் –
இதுவே இங்குத்தைக்கு அசாதாரணமான குணம் –

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி ஸ்ரீ திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாம் போலேயும் –
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை ஸ்ரீ குரு பரம்பரா சங்க்ரஹமாம் போலேயும்-
இப்பிரபந்தம் ஸ்ரீ பிரபன்ன காயத்ரி சங்க்ரஹமாக இருக்கும் –

———–————

இதில் முதல் ஸ்லோகத்தாலே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ப்ரேம புஷ்கல்யத்தையும்-
ஸ்வ அபிமான அந்தர் ஹுதருடைய ஸ்வ பாவங்களைப் போக்கி ரஷிக்கும் படியையும் பேசா நின்று கொண்டு
தொடங்கின ஸ்தோத்ரம் தடையற நடக்கத் தக்கதாக ஸ்ரீ உடையவர் திருவடிகளில் விழுகிறார்-

ஸ்ரீ எம்பெருமானாருடைய ஜ்ஞான பூர்த்தியையும் –
அதினுடைய சம்ப்ரதாய ப்ராப்தியையும் –
அத்தால் இவர் பெற்ற நன்மையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு –
ப்ராரீப்சிதக்ரத்ன பரிசமாப்த்யர்த்தம் ஸ்ரீ ஆசார்ய அபிவாத ரூப மங்களத்தை செய்து அருளுகிறார் –

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
பிரேம ஆவிசாஸய பராங்குஸ பாதபக்தம்
காமாதி தோஷ ஹர ஆத்மபத ஆஸ்ரிதாநாம்
ராமாநுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா —-1-

மிதுனத்தில் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை ரசத்தில் மையல் ஏறிய
ஹ்ருதய கமலத்தை உடைய ஸ்ரீ பராங்குசன் திரு அடிகளை நிரந்தரம் பிரீதி சேவை செய்பவரும்
தம்முடைய திரு அடிகளை அடைந்தவரின் காமம் போன்ற தோஷங்களை நீக்குபவருமான
யதிகட்க்கு இறைவன் ஸ்ரீ ராமானுசனை தலையால் வணங்குகிறேன் ..

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்-என்கிறபடியே மிதுன சேஷத்வமே ஸ்வரூபம் ஆகையால்
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் மிதுன விஷய கைங்கர்யமாகவே இருக்கும் –
திருமாற்கு அரவு –சென்றால் குடையாம்-என்று நித்ய ஸூரிகளில் தலைவரான ஸ்ரீ திருவனந்த வாழ்வான்
அவனும் அவளுமான சேர்த்தியிலே கிஞ்சித்க் கரிக்கும் என்று சொல்லிற்று –

அந்த கருந்தலையில் வாசனையால் இறே-தொடர்ந்து குற்றேவல் செய்யப் போந்த இடத்திலும் –
பாவாம்ஸ்து சக வைதேஹ்யா-என்றும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்றும் அவர் அவரைப் பார்த்து பிரார்த்தித்தது

அப்படியே ஸ்ரீ ஆழ்வாரும் –
அடிமை செய்வார் திருமாலுக்கே என்றும்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட என்றும்
மிதுனமே கைங்கர்ய பிரதி சம்பந்தியாக அருளிச் செய்தார் இறே

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
ஸ்ரீ –
1-ஸ்ரீ மாயாதவ -மாதவ -என்கிற வ்யுத்பத்தியாலே
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மாதவ சப்தத்துக்கு விசேஷணம் ஆகையாலே –
ஸ்ரீ சப்தம் ஸ்ரீ யபதியினுடைய –
திருவுக்கும் திருவாகிய செல்வா –
கஸ் ஸ்ரீஸ் ஸ்ரிய– ஸ்ரியஸ் ஸ்ரியம்-என்றும் சொல்லுகிறபடியே
சர்வ மங்கள அவஹையான ஸ்ரீ பெரிய பிராட்டிக்கும் மங்களா வஹம் என்கிற மேன்மையைச் சொல்லுகிறது

அன்றிக்கே –
2-ஸ்ரீ சப்தம் லஷணையாக ஸ்ரீமத் வாசகமாய் மேல் சொல்லப் படுகிற ஸ்ரீ பிராட்டி சம்பந்தத்தாலே தலை எடுத்த
வாத்சல்யாதி குண சம்ருத்தம் ஸ்ரீ யபதி என்னுமத்தைச் சொல்லுகிறது –

அதுவும் அன்றிக்கே
3-ஸ்ரீ சப்தம் மா சப்தத்துக்கு விசேஷணமாய் ஸ்ரீ மான் மா என்று பிராட்டியுடைய பிராப்யத்வ புருஷகாரத்வ
உபயோகிகளான சேவ்ய சேவதாதி பாவங்களையும்
ஜ்ஞான ஸ்வரூப ஜ்ஞான குணகத் வாதிகளையும் சொல்லுகிறது –

அங்கனும் அன்றிக்கே –
4-ஸ்ரியா மாதவா -என்ற வ்யுத்பத்தியாய் -ஸ்ரீ சப்தத்தாலே –
யதிதம் சௌந்தர்ய லாவண்யா யோ -ஸ்ரீ ஸ்தவம் -7- என்கிறபடியே
சௌந்தர்ய சௌகுமார்யாதி குண சம்ருத்தியைச் சொல்லி அத்தாலே ஸ்ரீ பிராட்டிக்கு வல்லபன் என்னுமத்தைச் சொல்லுகிறது

அங்கனும் அன்றிக்கே –
5-மாதவ சப்தம் ரூட்யா பகவத் வாசகமாய் -ஸ்ரியா யுக்தோ மாதவ -என்று மத்யம பத லோப சமாசமாய்
ஸ்ரீ யபதியினுடைய –என்றுமாம் –

அங்கனும் அன்றியே
6-ஸ்ரீ சப்தம் அங்க்ரி த்வய சப்தத்துக்கு விசேஷணமாய் -திருவடிகளுடைய பரஸ்பர
சாஹித்யத்வத்தால் வந்த போக்யதாசிசயத்தைச் சொல்லவுமாம்

மாதவ –
மாதவ -சப்தத்தாலே த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களில் ஸ்ரீ மச் சப்தார்த்தமும் குண சம்ருத்தி வாசகமான ஸ்ரீ சப்தத்தாலே
பூர்வ உத்தர கண்டங்களில் நாராயண சப்தார்த்தமும் சொல்லப் பட்டது –
ஆக
சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீயபதியினுடைய என்கையாலே பிராப்யமும் பிராபகமும் ஒரு மிதுனம் என்கிறது –

அங்க்ரி ஜலஜ-
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்யாதிகளாலே தாமரைக்கு ஒரு போலியான திருவடிகளுடைய
மாதவங்க்ரி -என்கையாலே -திருவடிகளினுடைய உத்தேச்யத்வமும்
ஜலஜ சாம்யத்தாலே அனுத்தேச்யமாய் இருந்ததே யாகிலும் விட ஒண்ணாத போக்யாதிசயமும் சொல்லப் படுகிறது –

த்வய –
த்வய-இரண்டினுடைய -இத்தால் -சஹாயாந்தர நைரபேஷயமும் சத்ருசாந்தர ராஹித்யமும்
பரஸ்பர ராஹித்யத்தால் வந்த சோபாதிசயமும் சொல்லப்படுகிறது

அங்க்ரி ஜலஜத்வயம் என்கையாலே
சரண சப்தமும் த்வி வசநார்த்தமும் சொல்லப்படுகிறது –

நித்ய
நித்ய -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி –
சர்வேஷூ தேச காலேஷூ சர்வ அவஸ்தாச சாஸயுத கிங்கரோஸ்மி-என்கிறபடியே
சர்வ தேச சர்வகால சர்வ அவஸ்தைகளிலும் உளதான —
நித்யோ நித்யானாம் –
ஒண் பொருள் ஈறில-என்கிறபடியே
ஸ்வரூபம் நித்யமானதால் தன் நிரூபக தர்மமும் நித்தியமாய் செல்லும் இறே

சேவா
சேவா -தாஸ்ய பர்யாயமான சேவா சப்தத்தாலே –
வழு விலா வடிமை -என்கிறபடியே ஸ்வ போக்த்ருத்வ கந்த ரஹிதமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது

இது தான் சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீ யபதி விஷயத்திலே செய்யுமதாகையாலே
ஸூக ரூபமாயும்
ஸ்வரூப அநு ரூபமாயும் இருக்கும் –

இத்தால்
ஸ்ரீ த்வயத்தில் பூர்வ கண்டத்தில் சரணம் பிரபத்யே என்கிற பதங்களினுடைய அர்த்தமும்
உத்தர கண்டத்தில் நமஸ் சப்தார்த்தோடு கூடின சதுர்த்தி யர்த்தமும் சொல்லப் படுகிறது –
பஜன பர்யாயமான சேவா சப்தம் உபாய வாசி இறே –
இது தானும் ஸ்ரீ ஈஸ்வர கிருஷி பலமாகையாலே ப்ராப்ய யந்தர்கதமாய் இறே இருப்பது –

ஆக இவ்வளவால் ஸ்ரீ த்வயார்த்தம் சொல்லப் படுகையாலே –
உபாசகனுக்கு ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே உபாசனம் அத்யந்த பிரியம் ஆகிறாப் போலே
பிரபன்ன அதிகாரிகளுக்கு ஸ்ரீ த்வயம் அத்யந்த பிரியம் என்கிறது –
பிரபன்ன ஜன கூடஸ்தர் இறே ஸ்ரீ ஆழ்வார்
பஜன பர்யாயமான சேவா சப்தம் உபாய வாசி இறே –

பிரேம ஆவிசாஸய பராங்குஸ பாதபக்தம்
ஆகையால் ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமான் திருவடித் தாமரைகளில் நித்ய கைங்கர்யத்தில் ஆசையால் கலங்கின
திரு உள்ளத்தை உடையரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ப்ரேமமே தமக்கு நிரூபகமாய் உடையவராய் இருக்குமவர் என்கிறது –
மாயா வசஸ் வத்தாலே ஸ்ரீ யபதித்தவம் ஸ்ரீ யமாகையாலே ஸ்ரீ சஸ்தம் ஓவ்பவாரிகம்
சீ மாதவன் கோவிந்தன் என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை உட் கொண்டாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது

ஸ்ரீ உடையவருக்கு வைபவம் சொல்லுகிற அளவில் ஞான பக்தி வைராக்யங்களை இட்டுச் சொல்லுகை அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் சம்பந்தத்தையே இட்டுச் சொல்லுகைக்கு அடி –
ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று ஸ்ரீ பிள்ளை அமுதனார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தி ஆய்த்து –

அங்க்ரி சப்தத்தால்
திவ்ய மங்கள விக்ரஹ யோகம் சொல்கிறது –
ஜலஜ சப்தத்தால்
திருவடிகளின் போக்யதையைச் சொல்கிறது –
உன் இணை அடித் தாமரைகள் -என்கிறபடி இரண்டு தாமரைப் பூவை ஒழுங்கு படி நிரைத்து வைத்தால் போலே
இருக்கிற சேர்த்தி அழகைச் சொல்கிறது
சேவா சப்தத்தால்
சேஷ விருத்தியைச் சொல்கிறது

நித்ய சப்தத்தால்
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிறபடி யாவதாத்மா பாவி என்னும் இடம் சொல்கிறது
இது தான் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்று சொன்ன
சர்வ தேசத்திலும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தைகளிலும் பண்ணக் கடவ சர்வவித கைங்கர்யங்களுக்கும் உப லக்ஷணம்

ஏவம்விதமான கைங்கர்யத்தைப் பெற வேணும் என்னும் ப்ரேம பாரவஸ்யத்தாலே யாயத்து
சிந்தை கலங்கி திருமாலே என்று அழைப்பன்-என்று இவர் கூப்பிட்டது
நாடு அடங்க அன்ன பாநாதிகளுக்கு வாய் புலற்றிக் கூப்பிடா நிற்க கைங்கர்யத்தால் அல்லது செல்லாமல் கூப்பிட்டு
அலமாக்கிற இவர் படி உபய விபூதியிலும் வ்யாவருத்தமாய் இருக்கையாலே
இப்படி இருக்கிற ஸ்ரீ ஆழ்வாருடைய ஸ்வ பாவத்தில் வித்தராய்
இவருடைய திருவடிகளில் நிரவதிக ப்ரேம யுக்தராய் யாயத்து ஸ்ரீ எம்பெருமானார் இருக்கும் படி

பிரேம
பிரேம-சப்தத்தாலே -பிராப்தமுமாய் -போக்யமுமாய் -ஸ்வரூப அனுரூபமுமான நித்ய கைங்கர்யத்திலே
பிரேமை இல்லாவிடில் தரிக்க மாட்டாத படியான பிரேமத்தைச் சொல்லுகிறது –
இத்தால் ப்ராப்ய த்வராதிசயத்தைச் சொல்லுகிறது

ஆவிசாஸய –
ஆவிச -ஆசயமாவது-கலங்கின ஆசயததை உடையரான
ஆவிசாஸய -ஆசயமாவது -அபிப்ராயம் -அதாவது திவ்யாத்மக ஜ்ஞானம் –
இத்தால் ஸ்ரீ ஈச்வரனே உபாய உபேயங்கள் என்கிற அத்யாவசாயத்தைச் சொல்கிறது
ஆவிசமாவது -பிராப்ய த்வரை அதிசயத்தாலே அநந்ய உபாயத்வ விரோதியான மடல் எடுக்கை
முதலிய ஸ்வ யத்னத்திலே அன்வயிக்கை –

ஆனால் இது கூடுமோ என்னில் –
ஸ்வ ஸ்வரூபத்தைப் பற்றி வரும் கலக்கமாய்த்து த்யாஜ்யம் ஆகிறது –
அத்தலையில் வை லஷண்யம் அடியாக வருமவை எல்லாம் பிராப்யாந்தர்கதமாகையாலே கூடும் –
ஆக இப்படி கலங்கின ஆசயததை உடையரான

பராங்குஸ
ஸ்ரீ பராங்குஸ-
பரர்கள் உண்டு -ஸ்ரீ ஈஸ்வரனுக்கு குணம் இல்லை -விக்ரஹமும் இல்லை -விபூதி இல்லை –
முதலிலே அவன் தானும் இல்லை என்னும் குத்ருஷ்டிகளும் ஸூந்யவாதிகளும் –
அவர்களுக்கு அங்குசம் ஆகையாவது –
மத்த கஜத்தின் தலையிலே அங்குசத்தை நாட்டி -மதத்தை நிரசித்து -அத்தை ஸ்வ வசமாக்கிக் கொள்வாரைப் போலே
ஸ்ரீ ஈஸ்வரனை இவரை இட்டு குமதிகளுடைய துர்மதத்தைப் போக்கி ஸ்வ வசமாகக் கொள்ளுகைக்கு சாதனமாய் இருக்கை-

இவர் தாம்
உயர்வற உயர் நலம் -என்று தொடங்கி-
குண விக்ரஹ விபூதி விசிஷ்ட ஸ்ரீ ஈஸ்வரனை அவன் மயர்வற மதி நலம் அருளக் கண்டு அனுபவித்து
பிறர்க்கும் உபதேசித்து –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே ஆக்கினார் இறே -ஆகையால் அங்குசம் என்னக் குறையில்லை –

அன்றிக்கே –
பரன் -என்று -ஸ்ரீ ஈஸ்வரன் –
அவனுக்கு அங்குசமானவர்-என்றுமாம் –
அப்போதைக்கு அங்குசம் ஆவது -ஆனையின் தலை மேலே தான் இருந்து தன் ஸ்துதியாலே அத்தை ஸ்வீகரிக்குமா போலே
இவரும் தம்முடைய ஜ்ஞான பக்தி வைராக்யங்களாலே ஸ்ரீ ஈஸ்வரனை தலை துலுக்கும் படி –
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் கேசவன் தமர் –என்று தம் வாயாலே சொல்ல வல்லராம் படி பண்ணி வசீகரித்தவர் என்கிறது

ஆக ஸ்ரீ ஈஸ்வர சேதனர் இருவரையும் வசீகரித்த ஸ்ரீ ஆழ்வாருடைய –
ஸ்ரீ ஈஸ்வரர் சேதனர் இருவரையும் வசீகரித்து ஒருவரோடு ஒருவர் சேர விடுபவர் இறே ஸ்ரீ ஆசார்யர் –
இவர் தாம் ஸ்ரீ பரமாச்சார்யார் இறே

பாத பக்தம்
பாத பக்தம் -திருவடிகள் விஷயமான பக்தியே தமக்கு நிரூபகமாய் இருக்குமவராய் –

இத்தால்
ஸ்ரீ பரமாச்சார்யரான ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் பிரேமம் நிரூபகமாம் போலேயும்
ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே பக்தி யாய்த்து நிரூபகம் என்கிறது
பக்தம் -என்று
சாமான்யமாகச் சொல்லுகையாலே ஈஸ்வர விஷயத்தில் ஆழ்வாருக்கு உண்டான பர பக்தி பர ஞானம் பரம பக்தி
ரூப அவஸ்தய த்ரய விசிஷ்டையான பக்தி இவர் தமக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே என்கிறது —
இவர் தான் ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர் இறே

ஆக பூர்வார்த்தத்தாலே
ஆச்சார்யஸ்ய ஜ்ஞாத வத்தாதுமாய -என்றும் –
ஜ்ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் –என்றும் சொல்லுகிறபடியே
சஹேதுகமாக இவனுடைய ஜ்ஞான பூர்த்தியையும் அதினுடைய சம்ப்ரதாய பரம்பரா பிராப்தியையும் அருளிச் செய்தாராய்த்து

காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா —–
பகவத் கைங்கர்ய விரோதியான சப்தாதி ரூப ப்ராவண்ய விஷயமான காமமும்
ஆதி சப்தத்தாலே
சங்க்ருஹீதைகளான பகவதேக ரஷ்ய விரோதியான அர்த்த திருஷ்ணையும்
தத் ஏக சேஷத்வ விரோதியான அகங்காரமும் முதலான துர் குணங்களை –
தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு
ஸ்வ உபதேச அனுஷ்டங்களாலும் ஸ்வ கடாக்ஷ விசேஷங்களாலும் ச வாசனமாகப் போக்குமவர் -என்கை

ராமானுஜம்
ந சேத் ராமாநுஜேத் ஈஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஸா–என்று
அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர் என்கை –

யதி பதிம்
ஜிதேந்த்ரியரான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆனவர் என்கை –
இத்தால் கீழ்ச் சொன்ன ஆச்ரித தோஷ நிவர்த்தகத்துக்கு அடியான குண யோகம் சொல்லுகிறது

ப்ரணமாமி -என்கிற மாத்திரமே அமைந்து இருக்க
ப்ரணமாமி மூர்த்நா
என்கிறது விஷய வைபவத்தை அனுசந்தித்து மாநஸமான பிரணவ மாத்திரத்தில் நிற்கை அன்றிக்கே
தம்முடைய ஆதார அதிசயத்தாலே நிர்மமராய் திருவடிகளில் தலையை மடுக்கிறார் என்னும் இடம் தோற்றவே-

ஸ்வ ஆஸ்ரித விஷயத்தில் இவர் செய்யும் உபகாரத்தைச் சொல்லுகிறது மேல்
காமாதி தோஷ ஹர மாதமபதாஸ் ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –
காமமாவது –
அபேஷ்யக ஜ்ஞானம் -அதாவது –
விஷயாந்தர ஸ்ப்ருஹை-அத்தை அடியாக உடைத்ததான தோஷங்கள் உண்டு
அதாவது குரோத லோப மோஹ மத ஆஸ்ரயங்கள்-அவைகளைப் போக்குமவர் என்னுதல்-

காமத்தை ஸ்வ காரணமாக உடைத்தான தோஷங்கள் உண்டு குரோத லோபாதிகள் -அவற்றைப் போக்குமவர் என்னுதல் –
காமம் அடியாக விறே குரோத லோபாதிகள் உண்டாகுவது –
அவற்றுக்கு அடியான காமத்தைப் போக்கவே அவை எல்லாம் தன்னடையே போக்கினவையாம் இறே

காமம் உப லஷணமாய்-
அத்தாலே அபிஷட் வர்க்கத்தைச் சொல்லி ஆதி தோஷ சப்தங்களாலே அஹங்காரத்தை சொல்லி –
ஹரம் என்று அத்தை போக்குமவர் -என்னுதல் –
இவை எல்லாவற்றாலும் அஹங்கார மமகார நிவர்த்தகர் -என்கிறது

கீழ் நித்ய சேவா -என்று பகவத் கைங்கர்யத்தைச் சொல்லி
பராங்குச பாத பக்தம் -என்று அதின் வ்ருத்தி ரூபமான ததீய கைங்கர்யத்தைச் சொல்லி
காமாதி தோஷ ஹரம் என்று தத் பிரதிபந்தக நிவர்த்தகர் என்கையாலே
கீழ்ச் சொன்ன ததீய பர்யந்தமான பகவத் கைங்கர்யத்துக்கு இவரே பிராபகர் -என்கிறது –

இப்படிச் செய்கிறது தான் ஆருக்கு என்னில்
ஆதமபதாஸ் ரிதாநாம் –
தம் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு என்கிறார் –
பதாஸ்ரிதாம் -என்று
திருவடிகள் சம்பந்தத்தையே நிரூபகமாகச் சொல்லுகையாலே -வர்ணாஸ்ரமாதி நியதிகள் இல்லை -என்கிறது
இத்தால் –
பிரதம பர்வமோபாதி சரம பர்வமும் சர்வாதிகாரம் என்கிறது –

ஆத்ம பத –
தம் திருவடிகளை –

ஆஸ்ரிததாம் –
மாதா பிதா இத்யாதிப் படியே சர்வ பிரகார ப்ராப்யமாய்ப் பற்றினவர்களுக்கு –
ததேவ லோகாந்தமனனம் -அயோத்யா -32-5–இத்யாதிப்படியே
தத் விருத்தமான காமாதி தோஷங்களுக்கு நிவாரகர் என்னவுமாம் –
அப்போது சேவையும் பக்தியும் இவருக்கு நிரூபகங்கள் –
இத்தால் இவர் தாமே உபாயமும் உபேயமும் -என்கிறது –

இவ்விடத்தில் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் ஆகிறது –
ஸ்ரீ எம்பெருமானாருடன் சாஷாத் சம்பந்தமும் –
அவராலே ஸ்ரீ ஆசார்ய பதத்திலே நியுக்தரான எழுபத்து நாலு சிம்ஹாசனஸ்தர் உடைய சம்பந்த பரம்பரையிலே தானும் ஒருவனாகை-
இத்தாலே நியுக்தருடைய சம்பந்தி பரம்பரா சம்பந்தமே கார்யகரம் என்கிறது –
இவர் தமக்கு வாசகமான திரு நாமம் ஏது என்ன

ராமானுஜம் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு அல்லாத திரு நாமங்களும் கிடக்க ஸ்ரீ கோவிந்தன் -என்கிற திரு நாமம் –
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸிதம் என்கிறபடியே- பிரதானாம் ஆனாப் போலே –
ந சேத ராமானுஜேத் யேஷா -என்னும்படி
இவ்வதாரத்துக்கு பிரதானமாய்க் காணும் ஸ்ரீ ராமானுஜன் என்கிற திரு நாமம் இருப்பது

யதி பதிம் –
ஜிதேந்த்ரியரில் தலைவரான ஸ்ரீ எம்பெருமானாரை —
ஜிதேந்த்ரியராவார் -சஷூராதி இந்த்ரியங்களை ரூபாதி விஷயங்களில் நின்றும் மீட்டு பகவத் விஷயத்திலே சேர்க்குமவர்கள்-
அவர்களில் தலைவராகை யாவது –
சர்வ இந்த்ரியாப்யாயகமான பகவத் அனுபவமே தமக்கு புருஷார்த்தம் என்று இருக்கை யன்றிக்கே
அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யத்தால் உண்டான அத்தலையில் முக விலாசமே தமக்கு புருஷார்த்தம் என்று இருக்கை –

யதி பதிம் –
ஆஸ்ரித பிரத்யஸா அபேஷர் அன்றிக்கே தாமே மேல் விழுந்து ரஷிக்கும் ஸ்வ பாவரான ஸ்ரீ எம்பெருமானாரை -என்னுமாம்

ராமானுஜம் யதி பதிம்
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே
சர்வாங்க ஸூத்தரான ஸ்ரீ பெருமான் இடத்தில் திரு உள்ளத்தை வைத்து திருவவதரித்தவர் ஆகையாலே
இதர விஷய விரக்தரான ஸ்ரீ எம்பெருமானாரை என்னவுமாம் –

த்வயி கிஞ்சித் சமா பத்தே கிம் கார்யம் சீதயா மம–என்றும்
அபிஷிச்ய ச லங்கா யம் ராஷசேந்த்ரம் விபீஷணம் க்ருத்க்ருத்யயஸ்தத -ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ – என்று
அவன் ஸ்வார்த்த நிரபேஷனாய் பரார்த்த ஏக பரனாய் இருக்குமா போலே யாய்த்து
அவனை அனுசரித்து திருவவதரித்த இவர் ஸ்வார்த்த நிரபேஷராய் பரார்த்த ஏக பரராய் இருக்கும் படி என்னவுமாம் –

அன்றிக்கே
இவர் ஆஸ்ரிதர்க்கு இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களை செய்யும் படி எங்கனே என்ன –
ராமானுஜம் –
அதுவோ திரு நாமத்தாலே அறியலாம் -என்கிறார் –
ராமம் அநு ஸ்ருத்ய ராமானுஜ -என்று வ்யுத்பத்தியால் அத்தால்
நாரீணாம் உத்தமியான ஸ்ரீ பிராட்டியை அனுசரித்து திருவவதரித்தவர் ஆகையாலே –
ஸ்ரீ பிராட்டி ராவணனுக்கு ஹிதம் சொல்லியும் ஏகாஷீ ஏக கரணி முதலான எழுநூறு ராஷசிகளுக்கு
தம் கிருபையாலே தாமே பவேயம் சரணம் ஹி வ -என்றா ல்போலே –
இவரும் சம்சாரிகள் படும் அலமாப்பைக் கண்டு பொறுக்க மாட்டாதே தாமே மேல் விழுந்து இவர்களுக்கு ஹிதம் செய்வது
தம் கார்யத்துக்காக வன்றி அவர்கள் உஜ்ஜீவிக்கையே பிரயோஜனமாகை என்கை –

ராமானுஜ யதி பதிம்
இராமானுஜன் என்னும் மா முனியே -16-என்கிறபடியே ஸ்ரீ ராமானுசன் என்னும் திரு நாமம் உடைய ஸ்ரீ எம்பெருமானாரை

யதி பதிம் –
ஸ்வ அனுஷ்டானத்தாலே ஸ்வ ஆஸ்ரித ரஷகரான ஸ்ரீ எம்பெருமானாரை -என்னவுமாம்
கீழே பாத பக்தம் -என்று சொல்லி வைத்து –
இங்கே யதி பதிம் -என்கையாலே இவருடைய ஞான பக்தி வைராக்யங்கள் சொல்லப் பட்டன –

பிரணமாமி மூர்த்த்நா-
கீழ்ச் சொன்ன படியே இவர் செய்து அருளிய மகா உபகாரகங்களைக் கண்டு
ஸ்ரீ பெருமாள் விஷயத்தில் ஸ்ரீ பிராட்டி சிரஸா சாபி வதாயா -என்றாப் போலே
தாமும் இவ்விஷயத்தில் தலையால் வணங்குகிறார் –

மூர்த்த்நா-பிரணமாமி –
க்ருதஜ்ஞ்ஞாதிசயம் இருந்த படி என் தான் -நினைவும் சொல்லும் பிற்படும்படி காயம் தானும் முற்பட்டபடி –
அன்றிக்கே –
மூர்த்த்நா–என்று காயிகத்தை முற்படச் சொல்லி
மேல் பிரணமாமி -என்றதுக்கு பூர்வ பாவியான வாசகத்தைச் சொல்லி
உப லஷணதயா இரண்டுக்கும் அடியான மானசிகத்தைத் சொல்லுவதாகவுமாம் –
ஆக கரண த்ரயத்தாலும் சேவிக்கிறார் என்னவுமாம் –

அன்றிக்கே
தத் விஜ்ஞாதார்த்தம் குருமேவ அபி கச்சேத்-என்றும் –
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும் சொல்லுகிறபடி
சிஷ்யனுக்கு ஜ்ஞான லாபம் ஸ்ரீ ஆசார்யனாகையாலே ததார்த்தமாக அவர் தம்மையே சரணமாகப் பற்றுகிறார் என்றுமாம்

பிரணமாமி
நமாமி -என்று ந நமேயம் -என்று இருக்கும்படி பண்ணுகிற அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லி
பர -என்ற உபசர்க்கத்தாலே அதினுடைய நிச்சேஷ நிவ்ருதியை சொல்லுகிறது

இத்தால்
ஆத்ம ரஷணத்தில் தனக்கு ஒரு அன்வயம் இன்றிக்கே அவன் இட்ட வழக்காய் இருக்கும் படியைச் சொல்லுகிறது
சிஷ்ய லாபம் ஸ்ரீ ஆசார்யனுக்கு புருஷார்த்தம் இறே-
ஆத்ம லாபாத் பரம் கிஞ்சித் அத்யத்தாஸ்தீதி நிச்சயாத் அங்கீ கர்த்தும் இவ பிராப்தம் அகிஞ்சதமிமம் ஜதம்ய -என்று
ஸ்வ அங்கீ காரத்தை அத்தலைக்கு புருஷார்த்தமாக விறே அருளிச் செய்தது –

யதிபதிம் மூர்த்நா ப்ரணமாமி
அவர் மேன்மைக்கு எல்லை நிலமானவோ பாதி இவர் தாழ்மைக்கு எல்லை நிலமாகிறார் –
அவர் ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
இவர் ஸ்ரீ யதீந்திர மூர்த்நா ப்ரணமாமி-
இத்தால் ஸ்ரீ ஆச்சார்ய அபிவாத ரூப மங்களத்தைச் செய்து அருளுகிறார் –

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –