ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –60–உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும்- இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை இவர் அருளிச் செய்ய கேட்டவர்கள்-
அவர் தம்முடைய பக்தி வைபவம் இருக்கும்படி என் -என்ன –
ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத விஷயங்களிலும்
தத் உபய வைபவ பிரதிபாதிகமான ஸ்ரீ திருவாய் மொழியிலும்
அவர்க்கு உண்டான ப்ரேமம் இருக்கிற படியை அருளிச் செய்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் எல்லாம் ஸ்ரீ எம்பெருமானாருடைய வேத மார்க்க பிரதிஷ்டாப நத்தையும் –
பாஹ்ய மத-நிரசன சாமர்த்த்யத்தையும் -வேதாந்தார்த்த பரி ஜ்ஞானத்தையும் –
அந்த ஜ்ஞானத்தை உலகாருக்கு எல்லாம் உபதேசித்த படியையும் அருளிச் செய்து –
இதிலே அந்த ஜ்ஞான பரிபாக ரூபமாய்க் கொண்டு ஸ்ரீ பகவத் விஷயத்திலும் –
அவனுக்கு நிழலும் அடிதாருமாய் உள்ள ஸ்ரீ பாகவதர் விஷயத்திலும் –
தத் உபய வைபவ பிரதிபாதகமான ஸ்ரீ திருவாய் மொழியிலும் –
இவருக்கு உண்டாய் இருக்கிற நிரவதிகப் பிரேமத்தையும்-
இம் மூன்றின் உடைய வைபவத்தையும் சர்வ விஷயமாக உபகரிக்கைக்கு உடலான
இவருடைய ஔதார்யத்தையும் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை கேட்டு அறிந்தவர்கள் –
ஸ்ரீ பக்தி வைபவத்தையும் கேட்டு அறிய விரும்புகிறோம் என்ன –
ஸ்ரீ பகவான் இடத்திலும் -ஸ்ரீ பாகவதர்கள் இடத்திலும் –
அவ் இருவர் பெருமையும் பேச வந்த ஸ்ரீ திருவாய் மொழி இடத்திலும் –
அவருக்கு உண்டான ப்ரேமம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் .

இனி புக்கு நிற்கும் என்பதனை –
வினை முற்றாக்கி -பிறருக்கு உபதேசிப்பதாக கொள்ளாது –
நிற்கும் குணம் என்று பெயர் எச்சமாக கொண்டு –
ஞான வைபவம் பேசினதும் தாமே பக்தி வைபவம் பேசி ஈடுபடுகிறார் என்னலுமாம் –

பக்தி -கலக்கம் -சரண் அடைவது மூன்று வகை பட்டவர்களும்-
அஞ்ஞானத்தாலே அஸ்மத்-நம் போல்வார்– பக்தி பாரவச்யத்தால் ஆழ்வார்கள் -ஞான ஆதிக்யத்தால் ஆச்சார்யர்கள்
ஸ்வாமி ஆழ்வார் பரம்பரைக்கும் ஆச்சார்யர் பரம்பரைக்கும் பாலம் போல இருந்தவர்-
அந்த பக்தி விஷயத்தை இதில் அருளுகிறார்..

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

பத உரை
குணம் திகழ்-நற் குணம் விளங்கும்
கொண்டல்-மேகம் போன்ற வன்மை வாய்ந்தவரும்
எம் குலக் கொழுந்து -எங்கள் குலத்திற்கு தலைவருமான
இராமானுசன்-ஸ் ரீஎம்பெருமானார்
உணர்ந்த -அறிய வேண்டியவற்றை அறிந்து கொண்ட
மெய்ஞ்ஞானியர் -உண்மை அறிவாளிகளினுடைய
யோகம் தோறும் -கூட்டம் தோறும்
திரு வாய் மொழியின் -திரு வாய் மொழி என்னும் திவ்ய பிரபந்தத்தின் உடைய
மணம் தரும் -வாசம் வீசும்
இன் இசை-இனிய இசை
மன்னும் -நிலைத்து நடை பெறும்
இடம் தோறும் -இடங்கள் தோறும்
மா மலராள்-ஸ்ரீ பெரிய பிராட்டியார்
புணர்ந்த -கூடி நிற்கிற
பொன் மார்பன்-அழகிய மார்பை உடையவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
பொருந்தும் -உகந்து அருளிப் பொருந்தி உள்ள
பதி தோறும் -திவ்ய தேசம் தோறும் –
அவை அவைகளில் அனுபவிக்கையில் உள்ள ஆசை யாலே
புக்கு -புகுந்து
நிற்கும் -அவற்றில் ஈடுபட்டு நிற்பார்
இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும்படி என்பது கருத்து .

வியாக்யானம் –
ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்ம குணங்கள் தன்னை சர்வ விஷயமாக உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் –
எங்கள் குலத்துக்கு தலைவரான ஸ்ரீ எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் –
யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் –
ஸ்ரீ திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி
வர்த்திக்கும் ஸ்ரீ திருப்பதிகள் தோறும் –
அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு நில்லா நிற்பர்-
இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி என்று கருத்து .

அன்றிக்கே
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை பேசின அநந்தரம் -அவருடைய பக்தி வைபவத்தை
தாமே அனுசந்தித்து -ஏவம் பூத குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-
பரம ஔதாரரான ஸ்ரீ எம்பெருமானார் எம் குலக் கொழுந்து என்கிறார் ஆகவுமாம் ..
யோகம்-கூட்டுரவு–இத்தால் கூட்டத்தை சொன்னபடி-
கொழுந்து -தலை
அதவா
என் குலக் கொழுந்து -என்றது எங்கள் குலம் வேராய்-தாம் கொழுந்தாய் கொண்டு
வேரிலே வெக்கை தட்டினால் -கொழுந்து முற்பட வாடுமா போலே –
இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில்-முற்படத் தாம் முகம் வாடி இருக்கும் அவர் என்றுமாம் .
இசை மணம் தருகை யாவது -செவ்விப் பாட்டை உடைத்தாய் இருக்கை –

தாஸ்யத்வம் – சேஷத்வம் -அவன் இடம் இல்லாததை சமர்ப்பிக்க வேண்டும் -அதற்காக பக்தி உத்தி அருளினார்
ஸ்ரீ ஆழ்வார் கோஷ்ட்டியில் – ஸ்ரீ அருளிச் செயல் கோஷ்ட்டியில் -ஸ்ரீ ராமாயணம் கேட்க திருவடி போலே –
ஸ்ரீ திவ்ய தேசங்கள் -பொருந்தி நின்ற பதிகள்–சாத்துப்பொடி இத்யாதி சாத்தி –
வேதாந்தி ஒரு பக்கம் –பத்தி தோறும் -எல்லா திவ்ய தேசங்களிலும் புக்கு -கைங்கர்யங்கள் ஏற்பாடு செய்து –
நிற்கும் -இவை செய்த பின்பே நிற்பார் –
ஸ்ரீ கீதை -ஸ்ரீ ரெங்க விலாஸ் மண்டபம் -ஸ்ரீ திருவாய் மொழி -ஸ்ரீ பெரிய மண்டபத்தில் —
ஸ்ரீ பெருமாள் ரிஷிகள் குடிலில் -ஸ்ரீ கிருஷ்ணன் -முந்தானை -மஞ்சளை உரசிப் பார்க்க போவான் –
உணர்ந்த -நாயகி பாவம் -பல்லாண்டு பாடும் –பத்திமை நூலுக்கு வரம்பு இல்லையே –
பொன் மார்ப -ஸ்ரீ பிராட்டி வாசத்தால் -மாதவா பக்தவத்சலன்–அவள் அடியாக –
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் -பொருந்தும் ஸ்ரீ திருப்பதி –
ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -ரமயா -அது பொருந்தாத ஸ்ரீ திருப்பதி அன்றோ –

உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தோறும் –
பக்தி யாகிறது ஞான விகாச விசேஷம் ஆகையாலே ஸ்ரீயபதியான சர்வேஸ்வரன் சர்வ சேஷி என்று முந்துற தெளிந்து –
அது சமஸ்த கல்யாண குணாத்மகனாய் –ஆனந்த மயனாய் -சர்வ கந்த சர்வ ரச -என்கையாலே
சர்வவித போக்யனானவனை -விஷயீ கரிக்கையாலே
ஸ்வயம் ப்ரீதி ரூபாபன்னமாய்-பக்தி என்கிற பேரை உடைத்தானதாய் இருக்கிறது –

ஆக உணர்வு
என்றது பக்தி என்றபடி – இப்படிப் பட்ட பக்தி யாகிற
மெய் ஞானம் –
யாத வஸ்த்தித ஜ்ஞானம் –பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை கட்டடங்க அனுபவித்த –
மயர்வற மதி நலம் -என்றபடி –
அப்படிப் பட்ட பக்தி ரூபாபன்ன ஞானத்தை உடையரான ஆழ்வார்களுடைய குழாம் எங்கே எங்கே இருக்கிறதோ
அந்த இடங்கள் தோறும் –

யோகம்-கூட்டரவு-பரிஷத்து -என்றபடி –
பக்தரான ஸ்ரீ ஆழ்வார்கள் அனைவரும் அடியிலே மயர்வற மதிநலம் அருளப் பெற்று -பரிபூர்ண ஞானராய் –
தத்வ த்ரயத்தையும் உள்ளபடி அனுசந்தித்து –அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம் -என்னும்படி
பரம போக்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் பக்கலிலே ஈடுபட்டு
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் –என்று பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து –
பெண்ணுடை உடுத்தும் – தூது விட்டும் -மடல் எடுத்தும் -நிரவதிக பிரேம யுக்தரகளாய் இருந்தார்கள் இறே –
ஆகையால் உணர்ந்த மெய் ஞானியர் என்று ஆழ்வார்களை சொல்லக் குறை இல்லை –

உணர்ந்த ..யோகம் தோறும் –
உணர்ந்த ஞானியர்-
ஸ்வ ஞானம் பிராபக ஞானம் ப்ராப்ய ஞானம் முமுஷூபி ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்ய கிஞ்சன -என்று
முக்தியை பெரும் விருப்பம் உள்ளவர்களால் தன்னைப் பற்றிய அறிவும் –
உபாயத்தை பற்றிய அறிவும் –
உபேயத்தை பற்றிய அறிவும் –
ஆன மூன்று அறிவுகளுமே கைக் கொள்ளத் தக்கன –
இவற்றைத் தவிர வேறு ஒன்றும் தேவை இல்லை -என்றபடி உணர்ந்து
கொள்ள வேண்டியவைகளை உணர்ந்து கொண்டு விட்டவர் என்னும் கருத்துப்பட -உணர்ந்த ஞானியர் -என்கிறார் –

உணர்ந்த மெய் ஞானம்-
ஞான த்ரயம் அர்த்த பஞ்சகம்- பக்தி ஞான விகாசம்-படிப் படியாக உணர்த்து –
ஸ்ரீய பதி சர்வ சேஷி- சமஸ்த கல்யாண குண மயன்- ஆனந்த மயன்–சர்வ கந்த சர்வ ரச –
ஸூயம் போக்கியம் –பரத்வன் அவன் ஒருவனே என்று உணர்ந்து சுலபம் மெய் ஞானம்–
ததீய நிலை ஒவ் ஒன்றிலும் -அர்த்த பஞ்சகம்-உணர்ந்து மெய் ஞானம்
ஸ்வரூபம் ரூப குண விபூதி சேஷ்டிதங்கள் அனைத்தையும் கட்டடங்க அனுபவித்த ஞானியர் –

மெய் ஞானியர்
அங்கன் உணர்ந்ததும் உள்ளது உள்ளபடியே என்பார் மெய் ஞானியர் .என்கிறார் .

இனி
ஸ்ரீ திருவாய் மொழியைப் பற்றி எடுத்துப் பேசுவதால் -ஸ்ரீ திரு வாய் மொழியின் பொருளை-அதாவது
மிக்க இறை நிலையும்-என்றபடி அர்த்த பஞ்சகத்தை -உணர்ந்த மெய் ஞானியர் -என்னலுமாம் –

உண்மையான மெய் ஞானி என்று
ஸ்ரீ ஆழ்வார்களைச் சொல்ல குறை இல்லை-
ஸ்ரீ குறையல் பிரான் அடி கீழ் ஸ்வாமி எழுந்து அருளி இருக்கிறார் இன்றும் நாம் சேவிக்கும் படி-
ஸ்ரீ ஆழ்வார் உடன் சேர்த்தி திரு மஞ்சனம் இன்றும் சேவிக்கலாமே ஸ்ரீ திரு குருகூரில்-

யோகம்-கூறும் இடம்
வசந்தி வைஷ்ணவா யத்ர தத்ர சந்நிஹிதோ ஹரி –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எங்கு வாசம் செய்கின்றனரோ அங்கு ஸ்ரீ இறைவன் சாந்நித்யம் கொள்கிறான்
என்பது போலே மெய் ஞானியர்கள் கூடும் இடம் எல்லாம் புக்கு நிற்கிறார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க-

ஸ்ரீ அணி அரங்கன் திரு முற்றத்தார் -அடியார் தங்கள்-இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும்-இசைந்துடனே
என்று கொலோ இருக்கும் நாளே –என்று ஸ்ரீ குலசேகர பெருமாளும்
அவனடியார் நனிமா கலவியின்பம் நாளும் வாய்க்க நங்கட்கே -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும்
இந்நிலையினை பெரும் பேறாக பெற அவாவுவது காண்க .

சம்சாரம் ஆகிற விஷ வ்ருஷத்திலே பழுத்து அமுதம் போலே இனிப்பது அன்றோ பாகவத சஹாவாசம் .
சத்பிரேவ சஹாசீத சத்பி குர்வீத சங்கமம் சத்பிர் விவாதம் மைத்ரஞ்ச நா சத்பி கிஞ்சிதா சரேத்-என்று
நல்லவர் உடனே இரு -நல்லவர் உடனே சேர் -நல்லவர் உடனே விவாதம் செய் .நட்பும் பூணுக
கேட்டவர்கள் உடன் ஒன்றும் செய்யாதே-என்று சத்சங்கத்தின் சீர்மை சொல்லப் பட்டு இருப்பது காண்க .

ஸ்ரீ திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் –
ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரிலும் வைத்துக் கொண்டு பிரதாநரான ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்யப்பட
சப்த ராசியான ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தினுடைய
சர்வ கந்த -என்கிற விசேஷத்தை பிரதிபாதிக்கையாலே -தானும் பரிமளிதமாய் அநு சந்தாதாக்களுக்கு
அவ் விஷயத்தைக் கொடுக்கக் கடவதாய் –
யாழினிசை வேதத்தியல் -என்றும் –
தொண்டர்க்கு அமுதம் -என்றும் சொல்லுகிறபடியே
போக்ய தமமாய் இருக்கிற அனுசந்தான கான ரூபமான இசையானது –
எந்த எந்த ஸ்தலத்திலே நடையாடி ஸூ ப்ரதிஷ்டமாய் இருந்ததோ அவ்வவ ஸ்தலங்கள் தோறும்-

திருவாய் மொழியின் –இன்னிசை மன்னும் இடம் தொறும் –
ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரியும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வார் ஸ்ரீ திரு வாய் மொழியை-
இனிமையாக இசைக்கும் இடங்களில் எல்லாம் -ஸ்ரீ எம்பெருமானார் -புக்கு நிற்கிறார் -என்க .

பண்ணார் பாடல் -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரே அருளிச் செய்தமைக்கு ஏற்ப –
திருவாய் மொழியின் இன்னிசை -என்கிறார்

ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய ஏனைய திவ்ய பிரபந்தங்களும் இயற்பா ஆதலின்
இசைப்பாவான ஸ்ரீ திருவாய் மொழியின் இன்னிசை என்கிறார்

இசை மணம் தருகை யாவது –
செவ்வி உடைத்தாய் இருத்தல்-
எங்கு எங்கு எல்லாம் ஸ்ரீ ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்
மத்தகதிடை கைகளைக் கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்
ஸ்ரீ திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் புக்கு நிற்கிறார் என்க
இன்பம் பயக்க எழில் மாதர் தன்னோடும் அவனே இனிது கேட்பானே–
ஸ்ரீ ஸ்வாமி கேட்க கேட்க வேண்டுமா -மிதுனமே அங்கே இருக்க –
ஸ்ரீமத் பாகவதம் பாடும் இடம் எல்லாம் கன்று குட்டி -தாய் பசு போல கண்ணன் போவது போல–

ஸ்ரீ திருவாய் மொழி பாடி அனுபவிக்கும் ரசத்துக்கு ஜகத் காரண பூதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய
நிரதிசய ஆனந்தமும் ஈடாகாது என்று –
நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- – என்று
தொடங்கும் பாசுரத்தில் பேசியதற்கு ஏற்ப -ரசித்து ஸ்ரீ திருவாய் மொழி பாடும் இடங்கள் எல்லாம்
பரம ரசிகரான ஸ்ரீ எம்பெருமானாரும் புக்கு நிற்கிறார் என்றது ஆயிற்று-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் –
சர்வ பிரகார விலஷனமான பத்மத்தை தனக்கு இருப்பிடமாக உடையாளான-ஸ்ரீ பெரிய பிராட்டியார் சம்ச்லேஷிக்கும்படி –
ஸ்ப்ர்ஹநீயமான திரு மார்வை உடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –

பொருந்தும்-பதி தோறும் –
உகந்து அருளி வர்த்திக்கிற ஸ்ரீ திருப்பதிகள் தோறும் –
ஸ்ரீ பேர் அருளாளர் வழித் துணையாக தாமே சேர்த்து-அருளின ஸ்ரீ பெருமாள் கோயிலிலும் –
ஸ்ரீ பெரிய பெருமாள் நியமனத்தாலே ஸ்ரீ நம் பெருமாள் கோயிலிலும் –
காளகஸ்தியில் நின்றும்-சைவர் வந்து ஷூத்ர உபத்ரவம் பண்ணின போது ஸ்ரீ திருப்பதியிலும் –
வேத பாஹ்யரை நிரசிக்கைக்காக-ஸ்ரீ திரு நாராயண புரத்திலும் –
மற்றும் ஸ்ரீ திரு நகரி ஸ்ரீ திரு மால் இரும் சோலை தொடக்கமான ஸ்ரீ திவ்ய தேசங்கள் தோறும் –

புக்கு நிற்கும் –
அவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே அவ்வவ ஸ்ரீ திவ்ய தேசங்களில் பல படியாக-பிரவேசித்ததும் –
அவற்றை அடைவே நிஷ்கண்டகமாக நிர்வஹித்து -புநர் விஸ்லேஷ பீருத்வ ரூபமான பரம பக்தியாலே ஆழம் கால் பட்டும் –
மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற

மா மலராள் பொருந்தும் ….பதி தொறும்
மாண்புடையதும்-மலர்ததுமான தாமரையை இடமாக கொண்ட ஸ்ரீ பெரிய பிராட்டியார் -அதனை விட்டு விரும்பி வந்து
அணைந்து இருக்கும் படியான அழகிய மார்பை உடையவன் -என்றபடி .

அழகுத் தெய்வமும் ஆசைப் படத்தக்க பேர் அழகு பெருமான் திரு மார்புக்கு –
பொன் -பொன் போலே விரும்பத்தக்க பேர் அழகு
பொன் மார்பன்-உவமைத் தொகை –
இனி பொன் நிறம் ஆதலுமாம் .
மலராள் புணர்ந்தமையின் பொன் மார்பு ஆயிற்று
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றது காண்க .
மலராள் புணர்ந்த பொன் மார்பன் ஆதலின் இந்நில உலகின் குற்றம் தோற்றாது-
ஸ்ரீ திருப்பதிகளிலே-வாத்சல்யத்துடன் அவன் பொருந்தி எழுந்து அருளி இருக்கிறான் -என்று அறிக .

மாதவோ பக்த வத்சல – என்றபடி5
ஸ்ரீ மாதவன் ஆதலின் பக்தர்கள் இடத்திலும் அவர்களை பெறுவதற்கு சாதனமான ஸ்ரீ திருப்பதிகள் இடத்திலும்
ஸ்ரீ எம்பெருமான் வாத்சல்யத்துடன் விளங்குகிறான் -என்க .

பொருந்தும் பதி –
எனவே பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-
அந்த பொருந்தா பதியே -ஸ்ரீ பரம பதம் என்க –
அல்லலுறும் சம்சாரி சேதனரை நினைந்து உள் வெதுப்புடன் ஸ்ரீ பரம பதத்தில் பொருந்தாமல்
இருப்பது போல் அல்லாமல் இந்நிலத்தில் உள்ள ஸ்ரீ திருப்பதிகளில் பொருந்தி உகந்து அருளி இருக்கிறான் ஸ்ரீ எம்பெருமான் -என்க

அவன் மேவி உறை கோயில் -என்னும் இடத்தில் –
அவன் ஸ்ரீ பரம பதத்தில் உள் வெதுப்போடே போலே காணும் இருப்பது
சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து -இவை என் படுகின்றனவோ என்கிற திரு உள்ளத்தில் வெதுப்போடே
யாயிற்று அங்கு இருப்பது -4 10-2 — – என்னும் ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்தியை இங்கு நினைவு கூர்க-

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்றும்
த்யக்த்வா வைகுண்ட முத்தமம் -என்னும் பரம பதத்தில் வைராக்கியம் பிறந்து -அதனை விட்டு
ஸ்ரீ திருப்பதிகளிலே உகந்து அருளி பொருந்தி உள்ளமைக்கு ஹேது-
மலராள் புணர்ந்த பொன் மார்பினன் ஆனதால்
திவ்ய தம்பதிகள் இங்கேயே இமயத்து ஸ்ரீ பரம பதத்தை துறந்து மறந்து ஒழிந்தனர்-என்க

ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த ஸ்ரீ திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-ஸ்ரீ எம்பெருமானார் -என்க –
ஸ்ரீ ரங்கம்-ஸ்ரீ கரிசைலம் -ஸ்ரீ பெருமாள் கோயில் -ஸ்ரீ அஞ்சன கிரி -ஸ்ரீ திரு வேம்கடம் -முதலிய
ஸ்ரீ திருப்பதிகளில் -புக்கு நின்று ரமிப்பது பிரசித்தம் –

ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு தனியே புகுமூர் திருக் கோளூர் ஒன்றே –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் என்னும் மட மானுக்கு –
கரியான் ஒரு காளையோடு புகுமூர் அணியாலி ஒன்றே –
ஸ்ரீ எம்பெருமானாருக்கோ ஸ்ரீ திருப்பதிகள் அனைத்தும் பரிவாரத்துடன் புகுமூர் ஆயின –
மூவரும் பிரகிருதி சம்பந்தத்தால் உள்ள நசை தீர்ந்து -ஸ்ரீ பகவானை அனுபவிப்பதில் உள்ள -ஆசையாலே புகுவார் ஆயினர்

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் அருளி செய்த -பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திரு மொழி -7 1-7 – –
என்பது ஸ்ரீ எம்பெருமானாரையும் அவர் கோஷ்டியையும் கருதியே போலும் .

யோகம் தொறும்
இன்னிசை மன்னும் இடம் தொறும் பதி தொறும்
அவற்றை அனுபவிக்க அவாவிப் புகுந்து நிற்கிறார் ஸ்ரீ எம்பெருமானார் .
நிற்றல்-
ஈடுபட்டு மெய் மறந்து நிற்றல்-
இனி
இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார் -என்னலுமாம் .
இதனால் ஸ்ரீ எம்பெருமானாருடைய பக்தி வளம் விளக்கப் பட்டதாயிற்று .

உணர்ந்த மெய் ஞானியர் –
என்கிற விலஷண பிரமாதாக்களிலும் ப்ரீதி மிகுதியாய் இருக்கையாலே
அம் மூன்றையும் இறையும் அகலகில்லாதே அவற்றிலே தானே ஆழம் கால் பட்டு இருப்பர் -என்றபடி –

குணம் திகழ் கொண்டல் –
இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் –
தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று பிரகாசிக்கவே -முகச் சோதி வாழியே -என்கிறபடியே
தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –
அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் –
அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும் –
அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் –
மையல் ஏற்றி மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே –
சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடு3-த்தும் உபதேசித்தும் உபகரித்து அருளும் பரமோதாரான

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

குணம்-
அறிவு முதலிய ஆத்ம குணம்
கொண்டல்-
வள்ளன்மையால் வந்த ஆகு பெயர் .
மேகம் போலே ஆத்ம குணங்களை அனைவருக்கும் வழங்கும் வள்ளல் -என்றபடி .

இனி நிற்கும் –
என்பதை பெயர் எச்சமாக கொள்ளும் போது புக்கு நிற்கும் குணம் எனபது பக்தி ஆகிறது
புக்கு நிற்கும் பக்தியை வழங்கும் வள்ளன்மை படி கொண்டல் என்று ஸ்ரீ எம்பெருமானார்
அப்பொழுது கொண்டாடப் படுகிறார் -என்க .

நிற்கும் குணம் திகழ் கொண்டலான இராமானுசன் எம் குலக்கொழுந்து -என்று முடிக்க –
கொழுந்து -தலைவர்
இனி கொழுந்து -என்று உருவகமாய் –குலம் -வேராய்
தாம் கொழுந்தாய் வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில் முற்படத் தம் முகம் வாடி இருக்குமவர் என்றுமாம் .

எம் குலக் கொழுந்தே –
எங்குலம்-ஸ்ரீ வைஷ்ணவ குலம் –
அதுக்கு கொழுந்து -என்றது –
வ்ர்ஷமாய் பலிக்கைக்கும் -கொடியாய் படர்ந்து பலிக்கைக்கும் –
மூலம் கொழுந்து ஆகையாலே -எங்கள் குலத்துக்-கு எல்லாம் மூலமானவர் -என்ற படி –
கொழுந்து-தலை –
அன்றிக்கே –
எங்குலக் கொழுந்து -என்றது –
எங்கள் குலம் அடங்கலும் ஒரு வேராய் –அதுக்கு எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு –
வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்கும் அவர் என்னவுமாம் –

குணம் திகழ் கொண்டலாய் -எங்கள் குலக் கொழுந்தான -ஸ்ரீ இராமானுசன் –
ஸ்ரீ பதி தோறும்-புக்கு நிற்கும் -என்று இங்கனே யோஜிக்கவுமாம் –

குலம்-ஞான குலம்-பிரபன்ன குலம் -என்க .
இப்பாசுரத்திலே முறையே
பிரமாதாக்களும் –
பிரமாணத்தை கொண்டு அறிபவர்கள்-பிரமாணமும் –
ப்ரமேயங்களும் -பிரமாணத்தால் அறியப்படும் அவைகளும் – பேசப்பட்டு –
அவற்றில் எம்பெருமானாருக்கு உள்ள பக்தி வளம் கூறப்பட்டது காண்க —

புக்கு நிற்கும்–
நின்று புக்கார் புகுந்தால் தான் தரித்து நிற்பார் புகுந்த படியால் தான்–
அவனுக்கு ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் போலே ஸ்வாமிக்கு இந்த மூன்று ஆகாரங்கள் –
உணர்ந்த மெய் ஞானி விட ப்ரீதி அதிகம் –அவர்கள் கலங்கி பாடி விட்டு போக- இவர் தானே ரஷித்து நிர்வகித்து இருந்தார்
மூன்றையும் இறையும் அகலகில்லாதே ஆழம் கால் பட்டு இருக்கும் குணம் திகழ் கொண்டல்
தூ முறுவல் வாழி சோறாத துய்ய செய்ய முக சோதி வாழியே
ஞான பக்தி வைராக்யம்- பிர மாத வைபவம்- பிர மாணம் வைபவம்–

————

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —முதல் திருவந்தாதி––47–

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன்–2-3-5-

மா நிலமா மகள் மாதர் கேள்வன்-3-3-2-

இசை காரர் பத்தர் பரவும் ஆயிரத்தில் 1-5-11-
இசை கூட்டி வண் சடகோபன் சொல் அமை பாட்டு ஓர் ஆயிரத்து -2 -4-11–
இசையோடும் பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே -2-6-11-
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே -2-7-13-
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து -2-8-11-
சொல் இசை மாலை ஆயிரத்துள் -3-2-11-/ -4-8-11-
பண் கொள் ஆயிரத்து -3-6-11-/-6-2-11-
குழலில் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் 5-8-11-
இசையோடும் நாத் தன்னால் நவில யுரைப்பார்க்கு இல்லை நல்குரவே -6-2-11-
இசையோடும் வல்லார் ஆதுமோர் தீதிலராகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே -8-2-11-
பண்ணார் தமிழ் ஆயிரம் -9-8-11-
பாட்டாயா தமிழ் மாலை ஆயிரத்துள் 10-6-11-
சொல் சந்தங்கள் ஆயிரத்து -10-9-11-

——————-———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: