ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–17- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

இஷ்டங்களைக் கொடுக்கையும் அநிஷ்டங்களைப் போக்குகையும் உபாய பூதனான ஈஸ்வரன் கிருத்யம் அன்றோ –
நம்மால் அது செய்து தலைக்கட்டப் போமோ என்ன
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பான் –விண்ணின் தலை நின்று -மண்ணின் தலத்து உதித்து
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க சாயியாய் இருக்கிற தேவரீருக்கு முடியாதது உண்டோ –
ஆகிலும் அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக சர்வேஸ்வரன் தலையில் ஏறிட்டு அருளினீர் ஆகிலும்
அந்த ஸ்ரீ ஈஸ்வரன் தானும் ஸ்ரீ தேவரீருக்கு வஸ்யன் அன்றோ-
ஆன பின்பு ஆஸ்ரிதர் பாப விமோசனத்தில் சக்தி ஸ்ரீ தேவரீருக்கே உள்ளது என்கிறார் –

நீர் இப்படி நம்மை நிர்பந்திக்கிறது என் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் ஸ்ரீ ஈஸ்வரன் அன்றோ கடவன் -அது நமக்கு பரமோ என்ன
அவனும் ஸ்ரீ தேவரீருக்கு சொல்லிற்று செய்யும்படி வச்யனாய் யன்றோ இருப்பது –
ஆகையாலே ஸ்ரீ தேவரீரே சக்தர் என்கிறார் —
ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப-இத்யாதியாலே

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப
ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
வச்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம்–17-

ஸ்ரீ யதிராசனே ச்ருதிகளின் சிரசாக இருக்கும் உபநிஷத்துகளால் அறிய வேண்டிய
தன் ஸ்வாபாவிக திவ்ய குணங்களையும் ஸ்வரூபத்தையும் நம்முடைய கண்களால் காணும்படி அருகே வந்து இருக்கிற
ஸ்ரீ அரங்கத்தம்மான் உமக்கு எப்பொழுதும் வச்யராக இருக்கிறார் .
ஆகையால் உம்மை சேர்ந்த ஜனங்களின் பாபத்தை போக்குவதில் நீர் சக்தி உள்ளவராய் இருக்கிறீர்–

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ-திவ்ய குண ஸ்வரூப-
அபவ்ருஷேயமாய் -நித்ய நிர்தோஷமான வேதாந்தத்தில் வேத்யமான தன்னுடைய கல்யாண குண விசிஷ்டமான
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை யுடையவன் -ஸ்வரூப குணங்களை யுடையவன் –
ஸ்வரூப குணங்களைச் சொன்ன இது ரூப விபூதிகளுக்கும் உப லக்ஷணம்

திவ்ய குண ஸ்வரூப-என்று
கல்யாண குண விசிஷ்டமாக ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
வஸ்து நிர்குணம் என்பாருக்கு நா எடுக்க இடம் அறும்படியாக நலமுடையவன் -என்னுமா போலே
நிர்க்குணம் நிரஞ்சனம் இத்யாதிகளில் தோற்றுகிற குண சாமான்ய நிஷேபம்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் விதிக்கப்பட்ட கல்யாண குண வ்யதிரிக்த ஹேய குண விசேஷம் என்று
தோற்றுகைக்காக-திவ்ய குண ஸ்வரூப -என்கிறார் –
இத்தால் அவனுடைய பரத்வம் சொல்லிற்று-

ஸ்ருத் யக்ர –
என்றும் ஒக்க சர்வராலும் குரு முகேன கேட்கப் படா நின்ற ஸ்ருதிகள்

ஸ்ருதிகள் யாவன –
ருக் யஜூஸ் சாம அதர்வண ரூபேண நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதங்கள்

அவைகளுடைய அக்ரங்கள் உண்டு -வேதாந்தங்கள் –
அவை யாவன -புருஷ ஸூக்த-நாராயண அனுவாகாதிகள் -அவற்றாலே
சஹஸ்ர சீர்ஷா புருஷ சஹஸ்ராஷஸ் சஹஸ்ர பாத் -என்றும்
புருஷ ஏவேதம் சர்வம் -என்றும் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் ஆத்மா குஹாயாம் நிஹி தோஸ்ய ஜந்தோ -என்றும்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தரா-என்றும்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா -என்றும்
சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -என்றும்
பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி -என்றும்

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்
பேர்கள் ஆயிரத்தாய் -8-1-10- என்றும்
ஆமவை யாயவை நின்றவர் அவரே –1-1-4-என்றும்
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் -1-1-10- என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான் – 8-8-2-
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-10- என்றும்
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -10-10-10- என்றும்
மூ வுலகும் வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தார்-8-7-9- -என்றும்
அவை முழுதுண்ட பரபரன் -1-1-8–என்றும்
குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1- என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -1-1-1- என்றும்
அமரர்கள் ஆதிக் கொழுந்தை -1-7-4- என்றும்
படர் பொருள் முழுவதுமாய் யவை யவை தொறும் உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7- என்றும்
பரிவதில் ஈசனை -1-6-1- என்றும்
பரஞ்சோதி -3-1-3- என்றும்
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -3-3-3- என்றும்
வண் புகழ் நாரணன் -1-2-10- என்றும்
வாழ் புகழ் நாரணன் –10-9-1- என்றும்
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது -1-2-7-இத்யேவ மாதிகளாலே —

வேத்ய –
அறியத் தக்கவைகளாய்-வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேதே -ஸ்ரீ கீதை -15-15- என்னக் கடவது இறே
இத்தால் வேதங்கள் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம பரங்கள் என்கிற பஷம் நிரஸ்தம்

நிஜ –
தொல் புகழ் -3-3-3- என்றும்
ஸ்வாபாவகீ ஜ்ஞான பல க்ரியா ச –என்றும்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கனௌக மஹார்ணவ-என்கிறபடியே ஸ்வ கீயங்களாய்-
இத்தால் உபாசன தசையில் குணங்கள் ஸ்ரீ ப்ரஹ்ம நிஷ்டங்களாய்த் தோற்றுகிறது இத்தனை போக்கி
ஸ்வத ப்ரஹ்மத்தில் குணங்கள் இல்லை என்கிற பஷம் வ்யுதஸ்தம்

திவ்ய –
ஹேய ப்ரத்ய நீகங்களான-என்னுதல் –
ஸ்வரூப விக்ரஹ பிரகாசகங்கள் என்னுதல்

குண ஸ்வரூப –
இவ்விரண்டும் மற்றை இரண்டுக்கும் உப லஷணமாய்-ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையனாய் என்கிறது

குணங்களாவன –
ஜ்ஞானானந்த அமலத்வாதிகளும் -ஜ்ஞான சக்த்யாதிகளும் வாத்சல்ய சௌசீல்யாதிகளும் –
சௌந்தர்ய சௌகுமார் யாதிகளும் –

ஸ்வரூபம் ஆவது
குண விக்ரஹ விபூதிகளுக்கு அபாஸ்ரயமாய்-
பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய -என்றும் –
பரஞ்சோதி நீ பரமாய் -3-1-3- என்றும் சொல்லுகிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமான திவ்யாத்ம ஸ்வரூபம்

விக்ரஹங்கள் ஆவன –
அஜாய மா நோ பஹூதா விஜாயதே -என்றும்
ச உஸ்ரேயான் பவதி ஜாயமான -என்றும்
இச்சாக்ருஹீதாபி மதோரு தேக -ஸ்ரீ விஷ்ணு புரா-6-7-84- என்றும்
பிறப்பிலியாய் -திரு நெடும் -1- என்றும்
சன்மம் பல பல செய்து -3-10-1- என்றும்
சூழல் பல பல வல்லான் -1-9-2- என்றும் சொல்லுகிறபடியே
கர்மத்தால் அன்றியே தம் திரு உள்ளத்தாலே பரிக்ருஹீதங்களான அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானங்கள்

விபூதிகள் ஆவன –
போக லீலா அசாதாரணங்களான நித்ய விபூதியும் லீலா விபூதியும்

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப–என்கையாலே பரத்வம் சொல்லப் பட்டது –
வேதாந்த வேத்யன் இறே பரனாகிறான்

ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
இப்படி என்றும் சாஸ்திரங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே -கண்ணாலே கண்டு எல்லாரும் அனுபவிக்கலாம் படி
ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளினை ஸுவ்லப்யத்தைச் சொல்கிறது

ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
என்றேனும் கட்கண்ணால் காணாத தன் வடிவை கண்ணுக்கு விஷயம் ஆக்கின படி –
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -என்பாரைப் போலே தன் வடிவில் வாசி அறிந்து ஈடுபடுவார் இல்லாத சம்சாரத்திலே
கிடீர் தம் வடிவை ப்ரத்யஷிப்பித்தது –

ரங்க ராஜ
வி சத்ருசமான தேசத்திலே வந்தால் தன் வைபவம் குன்றுகை அன்றிக்கே துடித்த படி
பரம சாம்யா பன்னருக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற இருப்பிலும் இங்கே வந்து ஈரரசு தவிர்ந்த பின்பு
யாய்த்து சேஷித்வம் தலை நின்றது-

ப்ரத்யஷ தாமுபகத –
என்றும் ஒக்க ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
கண்ணுக்கு விஷய பூதனான

உபகத -என்கையாலே
தூரத்தில் சமுதாய தர்சனம் யாகாமல் யாவதவயவ சோபையையும்-தனித் தனியே கண்டு அனுபவிக்கும் படி
சந்நிஹிதனாய் கண்ணுக்கு விஷயமான படியைச் சொல்லுகிறது
இது தான் பரம சாமா பன்னரான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கோ என்னில்

இஹ –
இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்திலே -கிடீர் அவன் சகல மனுஜ நயன விஷய தாங்கதனான படி -என்கிறார்
இத்தால் சௌலப்யமும் வாத்சல்யமும் சௌசீல்யமும் சொல்லப் படுகிறது
இன்னார்க்கு என்று விசேஷியாமையாலே இத் தத்வம் சர்வ சமாஸ்ரயணீயம் என்கிறது –

பிரத்யஷதாம் உபக தஸ்து
வேதாந்த வேத்யனாய் -சர்வ ஸ்மாத் பரனானவன் காணும் இத் தத்வத்துக்கு சௌலப்யமே நிரூபகம் என்னும் படி
அனைவரும் கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ப்ரத்யஷ விஷயமானது என்கிறார்

ரங்க ராஜ –
ஸ்ரீ பரம பதத்தில் நின்றும் சம்சாரி சேதனர்க்கு காட்சி கொடுக்கைக்காக -அவர்கள் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
ஸூலபனாய் ஸ்ரீ திரு வரங்கத்திலே சாய்ந்து அருளுகையாலே வந்த புகரை உடையவன் என்னுதல் –
ரங்க ராஜ –
அவன் ஒன்றை அபிமாநிப்பது தனக்கு நிரூபகம் என்னலாம் படி காணும் என்கிறார் –
ரங்க ராஜ –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆனவர்

வச்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்–சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம்–-
இப்படி மேன்மை நீர்மை இரண்டாலும் பூரணமான ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ தேவரீருக்கு எப்போதும் வஸ்யர் அன்றோ –
நம் சேவகனார் மருவிய கோயில் என்றபடி -ஆஸ்ரிதருக்கு கை இலக்காகவே பவேவிக்கும் அவன் அன்றோ
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ தேவரீருக்குத் தந்த படி –

நாம் பல பிறப்புப் பிறந்து திருத்தப் பார்த்த இடத்திலும் திருந்தாத சம்சாரிகள் முருடைத் தீர்த்து நமக்கு ஆளாம்படி
திருத்தித் தருகைக்கு இவர் ஒருவரைப் பெற்றோமே என்று நிரதிசய வ்யாமோஹத்தைப் பண்ணி-
ஒரு காரியத்தில் எப்போது இவர் நம்மை நியமிப்பது என்று -அவசர பிரதீஷராய்க் கொண்டு சர்வகாலமும்
இங்குத்தைக்கு விதேயராய்ப் போரா நின்றார் என்பது யாது ஓன்று

வச்யஸ் சதா பவதி
இப்படி ஆஸ்ரித பரதந்த்ரராய் -அத்தாலே சத்தை பெற்ற படி
ஆத்மா நாம் நாதி வார்த்தேயா -என்றும்
தேவும் தன்னையும் -என்னக் கடவது இறே

நிரங்குச ஸ்வதந்த்ரனானவன் ஒருக்காலாக இசைந்து நிற்கிலோ என்ன
வச்யஸ் சதா பவதி-என்கிறார்
ஸ்வ தந்திரத்தால் தன் சத்தை இன்றிக்கே தன் ஸ்வரூப ஸ்திதி அழியக் கார்யம் பார்க்குமோ –
தேவரீர் அளவிலே வ்யாமோஹத்தாலே பர தந்தரனாகை அன்றிக்கே
தன் ஸ்வரூப ஸ்திதிக்காகப் பர தந்திரனாகையாலே எப்போதும் இஸ் ஸ்வ பாவத்துக்கு குலைத்தலில்லை

தஸ்மாத்
ஆகையால் தேவரீர் ஆஸ்ரித ஜனங்களின் பாபத்தைப் போக்குகைக்கு சக்தர் அன்றோ -என்கிறார் –

வச்யஸ்-
சஞ்ஜோஹம் த்வத் பிரதீ ஷோஸ்மி-என்கிறபடி சொல்லிற்றுச் செய்கையாலே -க்ருத சங்கல்பனாய் –
எதிர்த்தலையில் நியமனத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் படி காணும் வச்யராகிறார்

சதா –
இது தான் ஒரு கால விசேஷத்திலே அன்றிக்கே சர்வ காலமும் என்கிறார்

பவதி –
இப்படி வச்யராய் இருக்கை அவருக்கு சத்தை பெற்றால் போலே காணும் இருப்பது என்கிறார் –

வச்யஸ் சதா பவதி –
இவ்வச்யதைக்கு ஷண கால விச்சேதம் வரிலும் அவனுக்கு சா ஹானி இத்யாதியில் சொல்லுகிறபடியே சத்தை
குறையும்படி காணும் இருப்பது என்கிறார் –
பக்தா நாம் -ஜிதந்தே -1- என்று இறே அவன் இருப்பது
இது தான் ஆருக்கு என்னில்

தே -யதிராஜ தஸ்மாத் –
மற்றை யாரேனுக்கும் யானால் அடியேனுக்கு பிரயோஜனம் என்
உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணறு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினர் –41-என்கிறபடியே
ஸ்வ அவதார மாத்ரத்தாலே சகல சேதனரையும் பவதீயர் ஆக்க வல்ல சக்தியை உடைய தேவரீர்க்கு என்னுதல்

தர்ச நாதே வ சாதவ -இறே -அநாரத்தம் ஆர்த்ரம் -என்றது ததீய அவதாரத்துக்கும் ஒக்கும் இறே
ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18- என்கிறபடியே
ஸ்ரீ எம்பெருமானாலே தமக்கு தாரகராக அபிமானிக்கப்பட்ட ஸ்ரீ தேவரீர்க்கு என்னுதல்

ரங்க ராஜஸ்து தே வஸ்யோ பவதி –
முன்பு எல்லாம் பரத்வாதிகளை இட்டு நிரூபிக்கலாம் படி இருந்தவன் -இப்போது ஸ்ரீ தேவரீர்க்கு வச்யனாகிறது
முன்பும் இவனுக்கு இதுவே ஸ்வரூபம் என்னும் படி காணும் என்கிறார்
அன்றிக்கே –
தே -என்று சதுர்தியாய் இவன் இப்படி வச்யனாகிறது ஸ்வார்த்தம் அன்றிக்கே
ஸ்ரீ தேவரீர் முக விகாசமே பிரயோஜனமாக என்னுமாம் –

யதி ராஜ
அவனுடைய ராஜத்வம் போலேயோ தேவரீருடைய ராஜத்வம் –
அவனுடைய ராஜத்வம் ரங்க நிரூபிதம் –தேவரீருடைய ராஜத்வம் ஜிதேந்த்ரிய நிரூபிதம் -அன்றிக்கே
யதி ராஜ
இதுவன்றோ ஸ்ரீ தேவரீர் இந்த்ரிய ஜயத்தால் பெற்ற ராஜத்வம் –

நிரபேஷம் முநிம் சாந்தம் நிர்வைரம் சம தர்சனம்
அநு வ்ரஜாம் யஹம் நித்யம் பூயயே தங்கரி ரேணுபி-என்கிறபடியே
இதர விஷயத்தில் ஸ்ப்ருஹை இல்லாதவனாய் -அத ஏவ பகவத் விஷய மனன சீலனாய் –
அத ஏவ சப்தாதி விஷய பிரவண ரஹிதனாய்-
நிரபேஷம் -சாந்தம் என்கிற இரண்டு விசேஷணங்களாலும்
அந்தர இந்த்ரிரிய பாஹ்ய இந்த்ரிய நிக்ரஹங்களைச் சொல்லுகிறது

அத ஏவ குரோத ரஹிதனாய் வாஸூ தேவஸ் சர்வம் -ஸ்ரீ கீதை -7-19-என்கிறபடியே
ததீயத்வேன ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தமான சமஸ்த வஸ்துக்களிலும் சம தர்சனம் உடையானாய் இருக்கும் அதிகாரியை –
அவனுடைய திருவடிகள் சம்பந்திகளான பராகங்களாலே தான் பவித்ரனாகக் கடவேன் என்று
சர்வ நியந்தாவான தான் என்றும் ஒக்க அனுசரித்து நடவா நின்றேன் என்று அவன் தானே சொல்லும் படி
அவனை வசீகரிக்கும் படியாய் இருக்கை

தஸ்மாத்
சர்வ ஸ்மாத் பரனான பெரிய பெருமாள் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் தேவரீருக்குக் கொடுத்து
பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்கிறபடியே ஸ்ரீ தேவரீருக்கு பர தந்த்ரராய் இருக்கும் படியாலே

சக்த –
சமர்த்தராகிறார்
ஸ்ரீ தேவரீருக்கு சக்தி இல்லாமையாலே தவிர வேண்டுவது இல்லை என்று கருத்து -எதிலே என்னில்

ஸ்வகீய ஜன பாப விமோசநே –
ஸ்ரீ தேவரீர் திரு உள்ளத்தாலே மதீயன் என்று அபிமானிக்கப் பட்ட ஜனத்தினுடைய ப்ராப்தி பிரதிபந்தக
சகல பாப விமோசனத்தில் -என்கிறார்
ஸ்ரீ தேவரீர் மதீயன் என்று அபிமானிக்க -ஸ்ரீ தேவரீருக்கு பவ்யனான ஈஸ்வரன் இவன் இடத்தில் மிகவும்
அனுக்ரஹத்தை பண்ணுமாகையாலே-
தந் நிக்ரஹ ரூபமான பாபம் தன்னடையே போம் –
ஸ்ரீ தேவரீர் அபிமானியா விடில் செய்வது என் என்று கருத்து –

குருணா யோ அபி மன்யேத குரும் வா யோபிஸ் மந்யதே தாவு பௌ பரமாம் சித்திம்
நியமாதுப கச்சத -என்னக் கடவது இ றே

த்வம்-
க்ருபயா நிஸ் ச்ப்ருஹ-என்கிறபடியே க்யாதி லாப பூஜா நிரபேஷராய்-க்ருபா பிரதானரான ஸ்ரீ தேவரீர் கிருபை
இல்லா விடில் செய்வது என்-என்று கருத்து

த்வம் பாப விமோசனே சக்த –
கடாதி பதார்த்தங்களுக்கு கம்பு க்ரீவாதி மத பதார்த்தங்களிலே சக்தி யாகிறாப் போலே ஸ்ரீ தேவரீருக்கு
பாப விமோசனத்திலே இறே சக்தி
குருரிதி ச பதம் பாதி நான் யத்ர-என்னக் கடவது இறே –
இத்தால் இவருக்கு பாப விமோசகத்வம் ஸ்வரூபம் என்கிறது

தஸ்மாச் சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம் –
சக்தி இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –
ஸ்வரூபம் இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –
கிருபை இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –

ஆகையாலே அடியேனுடைய சப்தாதி விஷய அனுபவ ருசியைப் போக்கி –
ஸ்ரீ தேவரீர் சம்பந்தி சம்பந்திகளுடைய சரமாவதி தாஸ்ய ருசியை உண்டாக்கித் தர வேணும் -என்கிறார் –

—————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: