ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–16- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-
இப்படி தோஷ பாஹுள்யத்தையும்-தோஷ பூயிஷ்டரான தமக்கு உஜ்ஜீவன உபாயம் ஸ்ரீ எம்பெருமானார் கிருபையே
என்னும் அத்தையும் இவர் அருளிச் செய்தவாறே
ஸ்ரீ எம்பெருமானார் இவரை விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி உமக்கு அபேக்ஷிதம் என் என்று கேட்டு அருள
கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும் பிரார்த்தித்த அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும்
இஸ் ஸ்லோகத்தில் பூர்வ உத்தர அர்த்தங்களாலே பிரார்த்தித்து அருளுகிறார்

கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும்-
அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லை என்று இவர் தம்முடைய
அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்தவாறே -உமக்கு நாம் செய்ய வேண்டுவது என் என்ன-
கீழ் வாசோ -இத்யாதியால் நாம் பிரார்த்தித்த ப்ராப்யத்தினுடைய சரமாவதியை
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக செய்து அருள வேணும் என்கிறார் –
சப்தாதி போக விஷயா ருசிரஸ்–இத்யாதியாலே – –

சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா
நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ்
தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –16-

விஷயங்களின் உள்ள எங்கள் ஆசை யதீந்த்ரே! தேவரீரின் கிருபையால் இங்கே அடியோடு அழியட்டும்..
தேவரின் தாஸ தாஸ தாசன் என்று கடைப் படியில் உள்ளவருக்கு ஆட்பட்டு அடிமை புரிவதில் இன்புறும் தன்மை நீங்காமல் இருக்க வேண்டும்

சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா-நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்ருதீய பதத்தில் சொன்ன அநந்ய போக்யத்துக்கு சப்தாதி அனுபவம் இறே விரோதி யாகையாலே
அவித்யா நிவ்ருத்தியை அபேஷியாமல் விஷய ப்ராவண்ய நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
இந்த ருசியால் அன்றோ அநாதி காலம் ஸ்வரூப அனுரூப புருஷார்த்தத்தை இழந்தது என்று
அதன் பேர் சொல்லவும் அஸஹ்யமாய் இருக்கிறதாய்த்து –

யாது சததா விநாசம் -என்னுமா போலே உருக்காண ஒண்ணாத படி நசிக்க வேணும்
தேக அவசா நத்திலே தன்னடையே நசியாதோ என்ன

இஹ –நஷ்டா பவத்
இஸ் சரீரத்தோடு இருக்கிற இப்பொழுதே நசிக்க வேணும்

அன்றிக்கே
பேர் அளவு உடையவர்களையும் தன் கீழ் ஆக்கி சப்தாதிகள் தனிக் கோல் செலுத்துகிற இவ்விபூதியிலே என்னவுமாம்
அநாதி காலமே பிடித்துக் கரம்பேறிக் கிடக்கிற இது நசிக்கும் போதைக்கு ஒரு ஹேது வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார்

சப்தாதி போக விஷயா ருசி –
நிதித்யாசிதவ்ய -ப்ருஹதா -4-4-5- என்றும் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
தேவம் இவ ஆசார்யம் உபாசீத -என்றும்
அதிதி தேவோ பவ -என்றும் –
குரு பாதாம் புஜம் த்யாயேத் –என்றும் –
ஆகதம் வைஷ்ணவம் சாஷாத் விஷ்ணு ரித்யபி சிந்தயேத் தத் க்ருபா தத்த சரனௌ மூர்த்த்னி பாலே
த்ருசோர்ஹ்ருதி வின் யஸ்ய பக்தி பூர்வந்து ஹாள யேத் கந்த வாறினம் -இத்யாதி பிரமாணங்களால்

ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத ஸ்ரீ ஆசார்ய விஷயங்களிலே அபிஹிதையான பக்தியானது அடியேனுக்கு
விஷச்ய விஷயாணாஞ்ச தூரம் அத்யந்த மந்த்ரம் உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி-என்கிறபடியே
உபபுக்தமான விஷம் போலே சரீர மாத்ர நாசகம் அன்றிக்கே ஸ்மரண மாத்ரத்தாலே அச்சேத்யமான
ஆத்ம ஸ்வரூபத்துக்கும் நாசகங்களாய் இருக்கிற சப்தாதி விஷய அனுபவங்களில் கிடீர் பிரவணமாய்த்து என்கிறார் –

சப்தாதி போக விஷயா ருசி –
சப்தாதி விஷய அனுபவத்தை இட்டு தன்னை நிரூபிக்கும் படி யாய்த்து ருசி —
ருசி சப்தாதி விஷயங்களிலே பிரவணமாய்த்து என்கிறார் –
விஷய பிரகாச புரஸ் சரமாக விறே-ஜ்ஞானம் பிரகாசிப்பது -ருசி தானும் ஜ்ஞான விசேஷம் இறே
ருசி தான் தனக்கு விஹிதமான விஷயத்தை விட்டு அவிஹிதங்களான சப்தாதி விஷய அனுபவத்தில்
பிரவணம் ஆகைக்கு அடி என் என்ன

அஸ் மதீயா-
ருசியானது ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –
தத் ஜ்ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87- என்றும் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் -திரு 67- என்றும் சொல்லுகிறபடியே
பிராப்த விஷயத்திலே மண்டி இருக்குமது அவ்விஷயத்தை விட்டு சப்தாதி விஷயங்களில் பிரவணம் ஆகைக்கு அடி –
ஸ்வத வருவதொரு ஹேது இல்லாமையாலே –
இனி சேதனன் உடைய கர்மம் அடியாக வேண்டுகையாலே அடியேனுடைய சம்பந்தமே அதுக்கு காரணம் என்கிறார் –
இனி செய்ய வேண்டுவது என் என்ன

நஷ்டா பவது-
அது இருந்த இடம் தெரியாதே ஸ்வரூபேண நசிக்க வேணும் என்கிறார் –
இவர் தாம் ஆன்ருசம்சய பிரதானர் ஆகையாலே உபாசகரைப் போலே தம் புண்ய பாபங்கள் அடைய
அந்ய சங்கரமணத்தை சஹிக்க மாட்டார் இறே –
ஆகையாலே வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்றோ கண்டிலமால் -பெரிய திரு -54–என்கிறபடியே
போனவிடம் தெரியாமல் போக வேணும் என்கிறார் –

இத்தால்
பிரபன்னனுடைய புண்ய பாப ரூப கர்மத்துக்கு ஸ்வரூபேண நாசம் ஒழிய அந்ய சங்க்ரமணம் இல்லை என்கிறது –
இங்கு இப்படி ருசி ஸ்வரூப நாசத்தை பிரார்த்தித்தார் ஆகில் –

தத் தாஸ தைகர சதா அவிரதாமமாஸ்து-என்று
அது தன்னையே பிரார்த்திக்க கூடுமோ என்னில்
இங்கு விஷய அனுபவத்தை இட்டாய்த்து ருசியை நிரூபித்தது –
நிரூபகத்தை ஒழிய நிரூப்ய சித்தி இல்லாமையாலே நிரூபகமான விஷய அனுபவம் நசிக்கவே
தந் நிரூபிதையான ருசி தன்னடையே நசித்ததாம் இறே –
ச்வர்க்கீத் வாஸ்த-என்றும் உண்டு இறே –
மேல் பிரார்த்திக்கப் படுகிறது தாச்யைக நிரூபிதையான ருசியாகையாலே கூடும் –
விசேஷண பேதம் கொண்டு விசிஷ்ட பேதம் சொல்லுகை சர்வ சம்மதம் இறே

இஹ
அங்கன் இன்றிக்கே இத் தேசத்திலே யாக வேணும் –
சப்தாதி விஷய அனுபவத்துக்கு ஏகாந்தமான இத் தேசத்திலே அவ்விஷய அனுபவத்தை காற்கடைக் கொண்டு
வகுத்த விஷயத்திலே சரம அவதி தாச்யத்திலே பிரவணமாய் இருக்கை யன்றோ
தேவரீர் சம்பந்திகளுக்கு உள்ள வை லஷண்யம் என்று கருத்து —

கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி யாடி யுழி தரக் கண்டோம் -5-2-1- என்கிறபடியே
ஸ்ரீ தேவரீரும் ஸ்ரீ தேவரீராலே லப்த சத்தாகரான ஸ்ரீ தேவரீர் சம்பந்திக்களுமாக உலாவுகிற இத் தேசத்திலே என்னவுமாம் –
இத்தால் த்வதீய அனுபவ விரோதியான விஷய அனுபவ ருசியை போக்கி யருள வேணும் என்று கருத்து-

இதுவோ தேசத்தைப் பார்த்தாலும் உம்மைப் பார்த்தாலும் விஷயங்களைப் பார்த்தாலும் துஷ்கரம் –
தேசமோ
புண்ய பாபங்களுடைய பலமான ஸூக துக்க அனுபவத்துக்கு ஏகாந்தமான தேசம் அன்றிக்கே
புண்ய பாபம் விருத்தி அடையும் தேசம் –
உம்மைப் பார்த்தால்
ஏவம் காலம் நயாமி -என்னும்படி பாபம் செய்கையிலே கை ஒழியாதவர்
விஷயங்களைப் பார்த்தால் –
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம்புலன்கள் இவை -7-1-6- என்கிறபடியே
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஈஸ்வரனுக்கு அடிமை செய்வாரையும் பாதிக்க வல்ல
மிடுக்கு உடையவைகள் -ஆகையாலே துஷ்கரம் என்ன

பவத் தயயா –
ஸ்ரீ ஈஸ்வரன் தயை போலே சேதன கர்ம ப்ரதிபந்தகம் அன்றிக்கே -பர துக்கம் போக்கி யல்லது
தரிக்க மாட்டாத ம்ருது பிரக்ருதியான
ஸ்ரீ தேவரீருடைய கிருபையாலே செய்து அருள வேணும் என்கிறார் –

பர துக்க ஏக நிரூபணியையான தேவரீர் கிருபையாலே என்னவுமாம்

நிரூபகமான துக்கம் அடியேன் இடத்திலே கிடைக்கையாலே அடியேன் தேவரீர் கிருபைக்கு விஷயம் என்கிறார்
இரண்டு ஆகாரத்தாலும் தேவரீர் தயா குணம் ஒன்றையுமே பார்த்து அடியேனுடைய
விஷய அனுபவ ருசியைப் போக்கி யருள வேணும் -என்கிறார்

பவத் தயயா
அநிஷ்ட நிவ்ருத்திக்காக வாதல் -இஷ்ட பிராப்திக்காவாதல்
அடியேனுக்கு ஒரு கைம் முதல் இல்லை -இரண்டும் தேவரீர் உடைய கிருபையாலே யாக வேணும் என்கிறார்
தயை யுண்டாகிலும் சக்தி இல்லாவிடில் செய்வது என் என்ன

யதீந்திர
இந்த்ரியங்களை ஜெயித்தவர்களில் தலைவர் அன்றோ ஸ்ரீ தேவரீர் என்கிறார் –
இந்த்ரியங்களை ஜயிக்கை யாவது -அவற்றை சப்தாதி விஷயங்களில் நின்றும் மீட்டு பகவத் விஷயத்திலே பிரவணம் ஆக்குகை-
இத்தால் இந்த்ரிய வச்யதை தவிர்ந்து இந்த்ரியங்களை ஸ்வ வசமாக்கிக் கொள்ளும் விரகு அறியும் ஸ்ரீ தேவரீரே அடியேனுடைய
இந்த்ரிய வச்யதையைத் தவிர்த்து அருள வேணும் என்கிறார் என்று கருத்து –
இவ்வளவேயோ உமக்குச் செய்ய வேண்டுவது -மற்றை ஏதேனும் உண்டோ என்ன –
உண்டு என்கிறார்

த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ் தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –
நமக்கு சேஷமாய் வைத்து இவ்வஸ்து இவ்விஷயங்களின் காலிலே துகை யுண்வதே
இதன் கையில் இவன் இனி நலிவு படாமல் ஒழிவான் என்று ஸ்ரீ தேவரீர் கிருபை பண்ணில் பிழைக்கலாம் அத்தனை –
கிருபா மாத்திரம் கொண்டு விஷய ருசியைத் தவிர்க்கப் போமோ என்ன
அருளிச் செய்கிறார்

யதீந்த்ர -என்று –
விஷயங்களை திரஸ்கரிக்கும் சக்திமான்களான யதிகளுக்கு தலைவரான தேவரீருக்கு முடியாதது உண்டோ –
இவ்வளவோ மற்றும் வேறே அபேக்ஷிதம் உண்டோ என்ன
இது ஆனு ஷங்கிகம் வேறே ஒரு பிரயோஜனம் உண்டு என்று தமக்கு அபேக்ஷித்தமான
புருஷார்த்தத்தையே அபேக்ஷிக்கிறார் –

த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ் தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –
ஸ்ரீ தேவரீர் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகமாக உடைய சேஷ பூதருடைய பரம்பரையில் எல்லை நிலத்தில்
நிற்கிறவர்கள் யாவர் ஒருவர் அவர் திருவடிகளில் சேஷத்வம் ஒன்றிலுமே ஒருபடிப்பட்ட ரசத்தை யுடையனாகையே
இடைவிடாமல் எனக்கு நடக்க வேணும் –

மமாஸ்து
இதுவே புருஷார்த்தம் என்று அறுதி இட்டு இருக்கிற எனக்கு இது உண்டாவதாக
இந்த புருஷார்த்தத்தில் ருசி இல்லாதவர்கள் இழந்தார்கள் என்று ருசி யுடைய எனக்கும் இழக்க வேணுமோ –

விஷயங்களின் உள்ள எங்கள் ஆசை யதீந்த்ரே! தேவரீரின் கிருபையால் இங்கே அடியோடு அழியட்டும்..
தேவரின் தாஸ தாஸ தாசன் என்று கடைப் படியில் உள்ளவருக்கு ஆட்பட்டு அடிமை புரிவதில்
இன்புறும் தன்மை நீங்காமல் இருக்க வேண்டும்..

த்வத் தாஸ தாஸ -இத்யாதியாலே –
அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –3-7-10-என்றும்
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -7-1-1- என்றும்
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யச்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோக நாத -ஸ்ரீ முகுந்த மாலை – 27-என்றும்
பரமாசார்யரான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ பகவத் விஷயத்திலே பிரார்த்தித்தால் போலே இவர் இவ்விஷயத்திலே பிரார்த்திக்கிறார்

விஷய ப்ரேமம் தலை எடுத்தால் சம்பந்தி சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் இறே-
இப்படி யாகாத வன்று பிரேமத்துக்குக் கொத்தையாம் இறே
ஸ்ரீ தேவரீர் சம்பந்த சம்பந்திகளுடைய பரிகணனா சரமாவதி யாகையாலே யாவனொருவன் –
இவ்வூருக்கு இது எல்லை என்னுமா போலே -இவ்வளவாய்த்து ஸ்ரீ எம்பெருமானார் பரம்பரா சம்பந்தம் இருப்பது
என்னலாம் படி இருப்பான் யாவன் ஒருவன் -அவனுக்கு அடிமையாய் இருக்கையாலே-

ஏக ரசதா –
கலப்பற்ற ப்ரீதியை உடைத்தாய் இருக்கை யாவது –
கலப்பறுகை யாவது -பகவத் விஷயத்தில் பாதியும் பாகவத விஷயத்தில் பாதியும் ஆகை யன்றிக்கே –
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானைப் போலே ததீய விஷயத்திலே யாய் இருக்கை –
ஸ்ரீ பெருமாள் இடத்தில் பக்தியும் சௌந்தர்யமும் இறே ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு
அகத்வேநவும் நித்ய சத்ருத்வே நவும் கழி யுண்கிறது –

அவிரதா ம மாஸ்து –
இச் சரமாவதி தாஸ்ய ருசியாவது -தமக்கு அத்யந்தம் போக்யமாய் இருக்கையாலே அவிச்சின்னமாக வேணும் என்கிறார்

மம-
ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் -7-1-10- என்கிறபடியே
இந்த்ரியங்களால் போர நெருக்குண்ட அடியேனுக்கு -என்னுதல்
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் -ஸ்ரீ இராமானுச -நூற்றந்தாதி -84-என்கிறபடியே
அதிலே ஆசை யுடைய அடியேனுக்கு என்னுதல்

மமாஸ்து –
த்ருஷார்த்தன் -தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே தாம் தரிக்கைக்கு தாஸ்யம் வேணும் என்கிறார் –
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை இறே
சித்தத்துக்கு பிரார்த்தனை வேணுமோ என்னில் ரசம் உண்டாலும் தத் ஏக ரசம் இல்லாமையாலே வேணும்

அவிர தாஸ்து
ஆகில் செய்கிறோம் என்றவாறே -விஷய அனுபவத்தால் உண்டான உறாவுதல் தீர்ந்து தரித்தாராய்-
இனி ஒருக்காலும் விஷய அனுபவம் நடையாடாத படி இதுக்கு ஒரு விச்சேதம் இன்றிக்கே நித்யமாகச் செல்ல வேணும் என்கிறார்

மம
அதின் வாசி அறியும் அடியேனுக்கு என்னவுமாம்

அஸ்து
அடியேனுக்கு உள்ளது பிரார்த்தனை இறே
இது ஸ்வரூப அந்தர்கதம் ஆகையாலே சாதனம் ஆக மாட்டாது -ஆகில் சாதனம் என் என்னில்

பவத் தயயா-
என்று கீழ்ச் சொன்னதுவே சாதனம் —
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்னக் கடவது இறே

மம விர தாஸ்து –
சப்தாதி போக நிரத-என்று சப்தாதி விஷய அனுபவத்தை இட்டு நிரூபிக்கும் படியான அடியேனுக்கு
இவனையோ சப்தாதி விஷய பிரவணன் என்னாலாவது -என்னும்படி தாஸ்யமே நிரூபகமாக வேணும் என்கிறார்
வந்தேறி கழிந்தால் தாஸ்யம் ஸ்வரூபமாய் தோற்றும் இறே –

——————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: