ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–15- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

இவ்வளவு அன்றிக்கே
பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ கூரத்தாழ்வானும் அவருடைய திரு மகனாகிய ஸ்ரீ பட்டரும்
தாம் தாம் அருளிச் செய்த ப்ரபந்தங்களிலே ப்ரதிபாதித்த தோஷங்கள் அடைய எனக்கு ஒருவனுக்குமே உண்டான பின்பு
தேவரீர் கிருபையே எனக்கு உபாயம் -என்கிறார்
தோஷம் கனக்க கனக்க ஸ்ரீ எம்பெருமானார் கிருபை தம் அளவில் முழுமடை கொள்ளும் என்று இருக்கிறார்-

ஸ்ரீ கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரமே ஷோ அஹமேவ -என்று இவர் விண்ணப்பம் செய்தவாறே –
இவ்வளவேயோ உமக்கு உள்ள நைச்யம் -மற்றவர்கள் அனுசந்தித்தது உமக்கு இல்லையோ என்ன –
அடியேன் ஸ்ரீ ஆழ்வானை உப லஷணமாகக் கொண்டு விண்ணப்பம் செய்தேன் இத்தனை போக்கி -அவ்வளவிலே பர்யவசிதனன்று –
அனைவரும் ஸ்வ கதமாக அனுசந்தித்த நைச்யம் எல்லாம் குறைவறக் கிடப்பது
அடியேன் இடத்தில் என்கிறார்-ஸூ த்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத –இத்யாதியாலே —

ஸூ த்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத
பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்
அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே
தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே –15-

ஸூ த்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்-
பரி ஸூத்த அந்தக்கரணரான ஸ்ரீ ஆளவந்தார் -ஆச்சார்ய உத்தமரான ஸ்ரீ கூரத்தாழ்வான் -அவர் திரு மகனாரான ஸ்ரீ பட்டர்
இவர்கள் ஸ்வ ஸ்வ ப்ரபந்தங்களிலே
அமர்யாத–ஸூய்வாப நோப-அதி க்ரம அஞ்ஞானம் – இத்யாதிகளில் அருளிச் செய்த எல்லா நைச்சியமும்

திக ஸூசிமவி நீதம் நிர்தயம் மாமலஜ்ஜம் -ஸ்தோத் ரத் -47–என்றும் –
அபராத சஹஸ்ர பாஜனம்-48–என்றும்
அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர் அஸூயாப்ரசவபு –62- என்று ஸ்ரீ ஆளவந்தாரும்

ஹா ஹந்த ஹந்த ஹத கோ அஸ்மி கலோஸ்மி திங்மாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -84- என்றும்
அத்யாபி நாஸ்த் யுபரதிஸ் த்ரிவித அபசாராத் -அது மானுஷ -59 -என்றும்
ஹை நிர்பயோ அஸ்ம்யோவிநயோ அஸ்மி –ஸ்ரீ வரத ஸ்தவம் -74-என்றும்
வித்வேஷா மான மதராக விலோப மோஹாத் யாஜான பூமி -ஸ்ரீ வரத ஸ்தவம் -76-என்றும் ஸ்ரீ ஆழ்வானும்

அதிக்ரா மன்னாஜ்ஞாம் தவ விதி நிஷேத பவ தேப்ய பித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி ரபி பக்தாய சத்தம் அஜானன் ஞானன் வாப
வாபவத சஹ நீயாக சிரத -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-91-என்றும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் இறே

ஸூத்தாத்ம –
ஆத்ம சப்தம் மநோ வாசியாய் ஸூத்தமான திரு உள்ளத்தை உடையவர்களாய் –

திரு உள்ளத்துக்கு ஸூத்தியாவது –
தேஹத்திலும் – தேஹ அநு பந்திகளிலும் ஆத்மாவிலும் ஆத்ம அனுபந்திகளிலும் சக்தம் அன்றிக்கே
ஸ்ரீ ஈஸ்வரன் இடத்திலும் தத் அனுபந்திகள் இடத்திலும் சக்தமாய் இருக்கை –

இது இறே ந காம கலுஷம் சித்தம் மம தே பாத யோஸ் ஸ்திதம் காமயே வைஷ்ணவத் வந்து
சர்வ ஜன்ம ஸூ கேவலம் -ஜிதந்தே 13-என்றும் ‘
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -இத்யாதிகளிலே சொல்லப் படுகிறது

யாமுன –
முற்காலத்திலே ஸ்ரீ மன் நாத முனிகள் -ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்ரீ யமுனா தீரத்திலே பெண்கள் படித் துறையைக் காக்கையாலே
அதுவே நிரூபகமாய் ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ கண்ணனை சேவித்துக் கொண்டு இருக்கையாலே
அவர் இடத்திலே ப்ரேமம் தலை எடுத்து -அவர் திரு நாமம் சாத்தத் திரு உள்ளமாய் ஸ்ரீ ஈஸ்வர முநிகளைக் குறித்து
உமக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார் -அவருக்கு ஸ்ரீ யமுனைத் துறைவர் என்று திரு நாமம் சாத்தும் என்று நியமித்து அருள
அவரும் அப்படியே செய்து அருளுகையாலே ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ ஆளவந்தாராலும்-

குரூத்தம கூர நாத –
ஸ்வ உபதேசாதிகளாலே -ஸ்வ ஆஸ்ரித அஜ்ஞான நிவர்த்தகரான ஆசார்யர்களில் தலைவரான ஸ்ரீ ஆழ்வானாலும்-
இவர்க்கு அஜ்ஞான நிவர்த்தகரில் தலைமை யாவது –
ஸ்ரீ உடையவர் தமக்கு உட்பட்ட அசிஷணீயரான ஸ்ரீ அமுதனாரை தாம் அனுவர்த்தித்து
வசீகரித்து ஸ்ரீ உடையவர்க்கு ஆளாக்குகை-
ஆகை இறே ஸ்ரீ அமுதனாரும் -மொழியைக் கடக்கும் -என்று அருளிச் செய்தது –

பட்டாக்ய தேசிக வர –
ஸ்ரீ விஷ்ணு பரத்வ ஸ்தாபாகமான ஸ்ரீ விஷ்ணு புராண பிரவர்த்தகர் ஆகையாலே மஹா உபாகாரகரான ஸ்ரீ பராசரர் இடத்தில்
உபகார ஸ்ம்ருதியாலே அவர் திரு நாமம் சாத்தத் திரு உள்ளமாய் –
அது செய்யப் பெறாதே ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளின ஸ்ரீ ஆளவந்தார் குறை தீர ஸ்ரீ உடையவராலே இவரும்-
ஸ்ரீ பராசர பகவான் போல்வார் ஒருவர் என்று திரு உள்ளம் பற்றி ஸ்ரீ பராசர பட்டர் என்று சாத்தப் பட்ட
திரு நாமம் உடையராய் இவ்விபூதியில் இருந்தே அவ்விபூதியில் அனுபவத்தை அனுபவிக்கும்
அவர்களில் ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பராசர பட்டராலேயும்

இவருக்கு தேசிகரில் ஸ்ரைஷ்ட்யம் ஆவது –
ஸ்ரீ பட்டர் திருவவதரித்த பின்பு ஸ்ரீ பரம பதத்துக்கும் லீலா விபூதிக்கும் இடைச் சுவர் இல்லை என்னும் படியாய் இருக்கை –

உக்த –
ஸ்வ ஸ்வ பிரபந்தங்களில் ஸ்வ கதமாக அனுசந்திக்கப் பட்டதாய் –
இத்தால் இவர்கள் ஸூத்தாத்மாக்கள் ஆகையாலே அவர்களுக்கு நைச்சயமே இல்லை யாகிலும் அவர்கள்
ஸ்வ கதமாக நைச்யத்தை அனுசந்திக்கிறது –
ஸ்வ சம்பந்தியான அடியேன் -நைச்சயமே ஸ்வ நைச்யம் என்னும் அபிப்ப்ராயத்தாலே -என்கிறது –

திக ஸூசிமவி நீதம் நிர்தயம் மாமலஜ்ஜம் -ஸ்தோத் ரத் -47–என்றும் –
அபராத சஹஸ்ர பாஜனம்-48–என்றும்
அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர் அஸூயாப்ரசவபு –62- என்று ஸ்ரீ ஆளவந்தாரும்

ஹா ஹந்த ஹந்த ஹத கோ அஸ்மி கலோஸ்மி திங்மாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -84- என்றும்
அத்யாபி நாஸ்த் யுபரதிஸ் த்ரிவித அபசாராத் -அது மானுஷ -59 -என்றும்
ஹை நிர்பயோ அஸ்ம்யோவிநயோ அஸ்மி –ஸ்ரீ வரத ஸ்தவம் -74-என்றும்
வித்வேஷா மான மதராக விலோப மோஹாத் யாஜான பூமி -ஸ்ரீ வரத ஸ்தவம் -76-என்றும் ஸ்ரீ ஆழ்வானும்

அதிக்ரா மன்னாஜ்ஞாம் தவ விதி நிஷேத பவ தேப்ய பித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி ரபி பக்தாய சத்தம் அஜானன் ஞானன் வாப
வாபவத சஹ நீயாக சிரத -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-91-என்றும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் இறே

சமஸ்த –
அகிலமான என்னுதல்-
ஒன்றோடு ஓன்று பிணைத்துக் கொண்டு இருக்கிற என்னுதல் –
இத்தால் தனித் தனியே விபஜித்து அறிய ஒண்ணாது என்கிறது

நைச்யம்
ஒரு விசேஷம் சொல்லாமையாலே ஏக வசனம் ஜாதி அபிப்ராயமே -நைச்யத்வா வச்சின்னம் எல்லாம் என்கிறது

அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே-தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே-
இந்த லோகத்தில் இக்காலத்தில் நான் ஒருவன் பக்கலிலுமே சுருக்கமற உண்டாகா நின்றது என்பது யாதொன்று –
ஆகையால் தேவரீர் கிருபையே எனக்கு உஜ்ஜீவன உபாயம் –

இஹ லோகே
லோகாந்தரங்களில் உண்டாகில் தெரியாது

அத்யா
காலாந்தரத்தில் உண்டாகில் தெரியாது

அ சங்குசிதம்-
உண்டாகில் இப்படிக் குறைவற உண்டாகக் கூடாது -ஆகையால் இங்கனம் ஒத்த விஷயம்
ஸ்ரீ தேவரீர் கிருபைக்கு வேறே எங்கும் எப்பொழுதும் இல்லை –
அடியேனுக்கும் தேவரீர் கிருபை ஒழிய வேறே புகல் இல்லை என்றபடி -இல்லை

இத்தால்
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை –
அருட்க்கும் அஃதே புகல் 46–என்றத்தைச் சொன்னபடி –

அத்ய
ஸ்ரீ தேவரீரை சரணம் அடைகிற இக்காலத்திலே -ஸ்வ தோஷத்தை முன்னிட்டு இறே சரணம் புகுகிறது –
ராவணஸ்ய அநுஜோ பிராதா விபீஷண இதி ஸ்ருத –என்று ஸ்வ தோஷத்தை முன்னிட்டு இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுந்தது –
சரணாகத்ய அநந்தரம்-நிர்தோஷம்-சாத்த்வத ஸம் – என்கையாலே நைச்யம் கிடையாது என்று கருத்து –

அத்ய இஹ லோகே
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பான் விண்ணின் தலை நின்று இம் மண்ணின் தலத்து உதித்து -95- என்கிறபடியே
சர்வ சேதனரையும் உத்தரிப்பிக்க தேவரீர் திரு வவதரித்து அருளின இத் தேசத்திலே என்னுதல் –
இக் கர்ம பூமியிலே என்னுதல் –

இஹ மயி –
சரணம் அடைகிற அடியேன் இடத்திலே என்னுதல்
கத்யந்தர ஸூந்யனான அடியேன் இடத்திலே என்னுதல்

அகில நைச்ய பாத்ரம் ஏஷ அஹமேவ – என்று
தன் நெஞ்சு உணர பாபங்களைச் செய்து அது தன்னையே
தன் வாயாலே சொல்ல வல்லனான அடியேன் இடத்திலே என்னுதல்

இஹாத்ய மய்யஸ்தி
இத் தேசத்துக்காக இக்காலத்துக்காக அடியேன் இடத்திலே உண்டு

அசங்குசித மே வாஸ்தி-
நைச்யம் குறைவற வேணுமாகில்-சங்கோசம் இன்றிக்கே அடியேன் இடத்திலே உண்டு என்கிறார்

அசங்குசிதம் நைச்யம் மய்யத்யை வாஸ்தி –
உத்தர காலத்தில் ஸ்யாத்-என்று பிரார்த்தித்தாலும் கிடையாது

மயி இஹை வாஸ்தி
அடியேன் இடத்தில் நைச்யம் உள்ளது இவ்விபூதியிலேயே –
மேல் கந்தவ்ய தேசம் ஸ்ரீ தேவரீர் திருவடிகள் ஆகையாலே நைச்யம் கிடையாது என்கிறார்

மய்யேவ நைச்யம் அசங்குசிதம்
அசங்குசித மாய் உள்ளது அடியேன் இடத்திலேயே
மற்றையார் இடத்தில் உண்டாகில் சங்குசித மாயக் காணும் உள்ளது
அசங்குசிதமாகை யாவது –
குறைத்தல் இன்றிக்கே இருக்கை –குறைத்தலாவது நைச்யத்தில் சிறிது அம்சம் இல்லாமை
அது உண்டாவது ஆஸ்ரயாந்தரம் உண்டாகில் இறே –
புறம்பு ஆஸ்ரயாந்தரம் இல்லாமையாலே நைச்ய சப்த வாச்யம் எல்லாம் குறைவறக் கிடப்பது அடியேன் இடத்திலேயே என்கிறார்

இஹாத்ய மய்யஸ் த்யேவ-
தேசமோ இருள் தரும் மா ஞாலமான இத் தேசம் –
காலமோ சாத்தவ விரோதியான கலி சாம்ராஜ்யம் பண்ணும் காலம்
பாத்ரமோ -ஸோ அஹம் ஷூத்ரதயா -என்கிறபடியே அதி ஷூத்ரனான அடியேன்
ஆகையாலே இவன் இடத்தில் குறைவற நைச்யம் உண்டோ இல்லையோ என்று சம்சயிக்க வேண்டாத படி
அவசியம் உண்டு என்கிறார்

இஹாத்ய -என்று
தேச காலங்களை விசேஷிக்கையாலே தேசாந்த்ரே காலாந்த்ரே தம்மளவில் அசங்குசித நைச்யம் இல்லாமை யாதல் –
ஆஸ்ரயாந்தரத்தில் உண்டாகை யாதல் தோற்றும் இறே -அத்தை வ்யாவர்த்திக்கிறது ஏவ காரம்
அது எங்கனே என்னில்
தேசாந்தரத்தில் ஓர் ஆஸ்ரயம் உண்டாய் இங்கு சிறிது விஜாதீய நைச்யம் உண்டாகில் இவர் இடத்தில்
நைச்யம் அசங்கு சிதமாகக் கூடாது –
காலாந்தரத்தில் ஓர் ஆஸ்ரயம் உண்டாய் அங்கும் சிறிது விஜாதீய நைச்யம் உண்டாகக் கூடுமாகில்
அது இவருக்கு இப்போது இல்லாமையாலே இவர் இடத்தில் நைச்யம் அசங்கு சிதமாகக் கூடாது

ஆகையால் தேசாந்த்ர காலாந்தரங்களிலும் அடியேனை ஒத்த நைச்ய ஆஸ்ரயம் இல்லை என்னும்
இவ்வர்த்தத்தை ஏவ காரம் தோற்றுவிக்கிறது –

தஸ்மாத்-
இத் தேசத்தில் இக்காலத்தில் இன்றிக்கே -தேசாந்தரத்திலும் காலாந்தரத்திலும் அடியேனை ஒத்த
நைச்ய ஆஸ்ரயம் கிடையாமையாலே

தே கருணா து மத் கதிர்வ –
இவனத்தனை நீசர் இல்லை என்னுமவனை கடாஷிக்கத் திரு உள்ளம் பற்றி இருக்கிற ஸ்ரீ தேவரீருடைய சம்பந்தி நியாய –
ஸ்ரீ ஈஸ்வர கருணை போலே ஸ்வா தந்த்ர்ய பராஹதி கந்த சம்சயமாதல் –
ரஷ்ய அபேஷா ப்ரதீஷை யாதல் அன்றிக்கே விலஷணையான கருணை யானது –
அருட்கும் அக்தே புகல்-48- என்கிறபடியே
அடியேனையே விஷயமாக உடைத்தாகா நின்றது –
கருணை ஜீவிப்பது அபராதிகள் இடங்களிலே யானால் அது பூரணமான இடம் அதுக்கு மிகவும் ஜீவனம் ஆகையாலே
அசங்கு சித அபராதியான அடியேனே அதுக்கு புகலிடம் என்கிறார்

மத்யே -யதீந்த்ரே -என்றது
இவர் தம்மோடு ஒத்த நீசர் இல்லை என்று விண்ணப்பம் செய்தவாறே இவர் தம்மை அங்கீ கரித்தோமாம்
விரகு ஏதோ என்று திரு உள்ளத்தில் ஓடுகிற படி தோற்ற இருக்கக் கண்டு –
ஸ்ரீ யதீந்திர -என்று சம்போதிக்கிறார்
இத்தால் அடியேனை அங்கீ கரிக்கும் இடத்தில் கருணை ஒழிய மற்ற ஒரு விரகு இல்லை என்று கருத்து

தஸ்மாத் மத் கதிஸ்து தே கருணைவ –
நிகரின்றி நின்ற வென் நிசதைக்கு நின் அருளின் கண் இன்றி புகல் ஓன்று இல்லை -46- என்கிறபடியே
தீரக் கழிய அபராதங்களைப் பண்ணி -அனுதாபமும் இன்றிக்கே
ஸ்ரீ ஈஸ்வர அங்கீ காரத்துக்கும் அவ்வருகான அடியேனுக்கு புகலிடம் தாபத்ரய அபி பூதராய் சம்சாரிகள் படும் அலமாப்பைக் கண்டு
அபேஷா நிரபேஷராய் கிருபை பண்ணும் தேவரீருடைய கருணை ஒழிய மற்று ஓன்று இல்லை என்கிறார்

தத ஹம்த்வத் ருதே ந நாத வான் மத்ருதே தவம் தயநீய வான் ந ச -ஸ்ரீ ஸ்தோத் ரத் -51- என்று
ஸ்ரீ பெரிய முதலியார்
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அனுசந்தித்தால் போலே இவரும் இவ்விஷயத்திலே அனுசந்திக்கிறார் —

———————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: